Gospel Movie | பரலோக ராஜ்யத்தின் விருந்து | A Catholic Priest's Testimony (Tamil Subtitles)

ஆகஸ்ட் 14, 2023

சென் மிங்டே என்பவர் ஒரு கத்தோலிக்க குருவாக இருக்கிறார். கத்தோலிக்கத் திருச்சபை அதிக அளவில் பாழடைந்து, இருளடைந்து வருவதையும், பிஷப்மார்களும் மற்ற குருமார்களும் கூட திரீ செல்ஃப் திருச்சபையில் சேர்ந்து அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டதையும் அவர் காண்கிறார். இது அவருக்கு மிகவும் வேதனையாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக்கொண்ட ஒரு திருச்சபையை அவர் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கையில், ​​அவர் எதிர்பாராத விதமாக சர்வவல்லமையுள்ள தேவனுடைய சுவிசேஷத்தைக் கேட்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகளை அதிக அளவில் வாசித்த பிறகு, அது தேவனுடைய சத்தம் என்பதையும், சர்வவல்லமையுள்ள தேவன் திரும்பிவந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்பதையும் அவர் உணர்ந்து, அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் சென் மிங்டே அதிர்ச்சியடையும் விதமாக, பிஷப்மார்களும் மற்ற குருமார்களும் இதைக் கண்டுபிடித்த பிறகு, அவரைக் கண்டிக்கவும், சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொள்வதிலிருந்து அவரைத் தடுக்கவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அவரை மெய்யான வழியிலிருந்து விலகச் செய்ய முயற்சித்து, அவர் மேற்பார்வையிடும் திருச்சபையை நாசமாக்குவதற்கு ஆட்களையும் கூட அவர்கள் அனுப்புகிறார்கள். பிஷப்மார்கள் மற்றும் குருமார்களின் சத்தியத்தை வெறுக்கிறதும், தேவனை எதிர்க்கிறதுமான, சாத்தானிய முகங்களை சென் மிங்டே காண்கிறார், மேலும் அவர் குருத்துவ பதவியை விட்டுவிட்டு, கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு வெளியேறி, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைத் தீவிரமாகப் பரப்பவும் சாட்சி பகரவும் தொடங்குகிறார். அவர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்திற்குத் திரும்பிவரச்செய்ய அநேகரை வழிநடத்துகிறார், மேலும் அவர் தன்னைப் பற்றி மிகவும் தன்னிறைவு அடையத் தொடங்குகிறார், சகோதர சகோதரிகளின் பாராட்டைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு பணி செய்துள்ளார் என்பதையும், எவ்வளவு துன்பப்பட்டார் என்பதையும் அடிக்கடி பகட்டாகக் காட்டிக்கொள்கிறார். அவரது அகந்தையான மனநிலை மேலும் மேலும் மோசமடைகிறது-அவர் ஆணவத்துடன் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார், தன்னிச்சையாக செயல்படுபவராக மாறுகிறார், எந்த அறிவுரையையும் கேட்பதில்லை. இதன் விளைவாக, அவர் ஒரு கூடுகையில் கைது செய்யப்படுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் கொடூரமான சித்திரவதை மற்றும் மூளைச்சலவைக்கு ஆளான பிறகு, அவர் தன்னைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கத் தொடங்குகிறார். தேவனுடைய வார்த்தைகளின் வெளிப்பாட்டின் மூலமாக, அவர் மிகவும் அகந்தையுள்ளவரும் பகுத்தறிவு இல்லாதவருமாய் இருக்கிறார் என்பதையும், மற்றவர்களின் இருதயங்களில் அவர் ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறார் என்பதையும், மேலும் அவர் அந்திக்கிறிஸ்துவின் பாதையில் சென்றுகொண்டிருப்பதையும் உணர்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் தண்டித்துத் திருத்துதல் இல்லாதிருந்தால், தேவனை எதிர்த்ததற்காக அவர் நிச்சயமாக அழிந்துபோயிருப்பார். சென் மிங்டே தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சுத்திகரிப்பு மூலம் சில சத்தியங்களைக் கற்றுக்கொள்கிறார், மேலும் அவரது சீர்கேடு நிறைந்த மனநிலையில் ஓரளவு சுத்திகரிப்பையும் மாற்றத்தையும் பெற்றுக்கொள்கிறார். அவர் மிகவும் புரிந்துகொண்டதாகவும், உண்மையிலேயே பரலோக ராஜ்யத்தின் விருந்தில் கலந்துகொள்வதாகவும் உணர்கிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க