Christian Song 2022 | மனிதரின் வாழ்க்கைக்கு தேவன் நிலையாக வழிகாட்டுகிறார் (Tamil Subtitles)

மார்ச் 7, 2022

ஆசீர்வாதமளித்தல், வாழ்க்கைக்கான சட்டங்கள் அல்லது விதிகளை உருவாக்குவது

இவை எதுவாக இருந்தாலும், தேவன் செய்யும் அனைத்துக் காரியங்களும்

ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ மனிதனை வழிநடத்துவதேயாகும்.

தேவனின் விதிகளுக்கு மனிதன் கீழ்ப்படிந்தாலும் அல்லது

அவரது சட்டங்களைக் கடைப்பிடித்தாலும், மனிதனுக்கான தேவனுடைய திட்டம்,

அவன் சாத்தானை ஆராதிப்பதில் விழுந்து விடக்கூடாது மற்றும் சாத்தானால்

பாதிக்கப்படக் கூடாது என்பதேயாகும்.

இது மிக அடிப்படையானது மற்றும் ஆரம்பத்தில் இதுவே செய்யப்பட்டது.

அவரது திட்டங்கள் அவருக்கானவை அல்ல, அவர் செய்யும் அனைத்தும் மனுக்குலத்துக்கானவை,

மனுக்குலத்தைப் பாதுகாப்பதற்காகவும்,

மனுக்குலத்தை வழிதவறிப் போகாமல் காப்பதற்காகவும் மட்டுமே செய்யப்படுகின்றன.

தேவன் எப்போதும் மனிதனுடைய தேவையை சந்திக்கவும், அவனை ஆதரிக்கவும்,

தன்னுடைய வார்த்தைகளையும், தன்னுடைய சத்தியத்தையும்,

தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்துகிறார்.

ஆம், தேவம் மனிதனை சிருஷ்டித்தார், அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துகிறார்.

நீ சத்தியத்தைப் புரிந்துகொள்ளாதபோது தேவன் ஒரு ஒளியைப் பிரகாசிப்பிக்கிறார்,

அதன் மூலம் சத்தியத்துடன் ஒத்துப் போகாதவற்றை உனக்குத் தெளிவாகச் சொல்லி,

பின்னர் நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்குச் சொல்கிறார்.

தேவன் உன்னை வழிநடத்தும்போது,

அவருடைய அரவணைப்பை நீ உணர்கிறாய்.

அவருடைய அன்பை நீ உணர்கிறாய், அவருடைய ஆதரவை நீ உணர்கிறாய்.

கலகம் செய்ததற்காக நியாயந்தீர்க்கும்போது, வார்த்தைகளால் உன்னைக் கண்டிக்கும்போது,

ஜனங்கள், மற்றும் காரியங்கள் மூலமாக அவர் உன்னை ஒழுங்குபடுத்துகிறார்.

தேவன் இதமான, மென்மையான, அன்பான அக்கறையான,

அசாதாரணமான, சரியான முறையில் கிரியை செய்கிறார்.

காரியங்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாத வகையில், கஷ்டப்படுத்துவதில்லை.

தேவன் எப்போதும் மனிதனுடைய தேவையை சந்திக்கவும், அவனை ஆதரிக்கவும்,

தன்னுடைய வார்த்தைகளையும், தன்னுடைய சத்தியத்தையும்,

தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்துகிறார்.

ஆம், தேவம் மனிதனை சிருஷ்டித்தார், அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துகிறார்.

மனிதனிடம் அவர் கொண்டுள்ள அன்பு, மனிதனை மதிப்புடன் கருதுவது,

இவற்றை எளிதில் வெளிப்படுத்த முடியாது.

ஆனால் தேவன் உண்மையான நடைமுறையில் கொடுத்த ஒன்றாகும்;

இது தேவனுடைய சாராம்சத்தின் வெளிப்பாடாகும்.

தேவன் மனிதனுக்கு அளிக்கும் அனைத்தும், தேவனுடைய வார்த்தைகள்,

தேவன் மனிதனிடத்தில் கிரியை செய்யும் பல்வேறு வழிகள்,

தேவன் மனிதனுக்கு என்ன சொல்கிறார், அவனுக்கு என்ன நினைவூட்டுகிறார்,

அவர் என்ன அறிவுறுத்துகிறார், ஊக்குவிக்கிறார் என்பது உட்பட,

இவை அனைத்தும் தேவனுடைய பரிசுத்தம் எனும்

ஒரு சாராம்சத்திலிருந்து உருவாகின்றன.

தேவன் எப்போதும் மனிதனுடைய தேவையை சந்திக்கவும், அவனை ஆதரிக்கவும்,

தன்னுடைய வார்த்தைகளையும், தன்னுடைய சத்தியத்தையும்,

தன்னுடைய ஜீவனையும் பயன்படுத்துகிறார்.

ஆம், தேவம் மனிதனை சிருஷ்டித்தார், அவர்களின் வாழ்க்கையை வழிநடத்துகிறார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க