தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 40
டிசம்பர் 7, 2022
ஒவ்வொரு முறை தேவன் பூமிக்கு வரும்போதும், அவர் தமது நாமத்தையும், பாலினத்தையும், உருவத்தையும், தமது கிரியையையும் மாற்றுகிறார்; அவர் முன்னர் செய்த கிரியையை திரும்பச் செயல்படுத்துவதில்லை. அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. முன்னர் அவர் வந்தபோது, அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார்; அவர் மீண்டும் வரும்போது இந்த முறை அவரை இயேசு என்று அழைக்க முடியுமா? முன்னர் அவர் வந்தபோது, அவர் ஆணாக இருந்தார்; இந்த முறை அவர் மீண்டும் ஆணாக இருக்க முடியுமா? கிருபையின் யுகத்தில் அவர் வந்தபோது அவருக்கான கிரியை சிலுவையில் அறையப்படுவதுதான்; அவர் மீண்டும் வரும்போது, அவரால் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுக்க முடியுமா? அவர் மீண்டும் சிலுவையில் அறையப்படுவாரா? அது அவருடைய கிரியையை மீண்டும் செய்வதாக இருக்காதா? தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? தேவன் மாறாதவர் என்று சொல்பவர்களும் உண்டு. அது சரிதான், ஆனால் அது தேவனின் மனநிலை மற்றும் அவரது சாராம்சத்தின் மாறாத தன்மையைக் குறிக்கிறது. அவருடைய நாமத்திலும் கிரியையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் அவருடைய சாராம்சம் மாறிவிட்டது என்பதை நிரூபிக்கவில்லை; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார், இது ஒருபோதும் மாறாது. தேவனின் கிரியை மாறாது என்று நீ கூறினால், அவரால் தனது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தை நிறைவுசெய்ய முடியுமா? தேவன் எப்போதும் மாறாதவர் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல என்பது உனக்குத் தெரியுமா? தேவனின் கிரியை மாறாமல் இருந்தால், அவர் இன்றுவரை மனுஷகுலத்தை வழிநடத்தியிருக்க முடியுமா? தேவன் மாறாதவர் என்றால், அவர் ஏன் ஏற்கனவே இரண்டு யுகங்களின் கிரியைகளைச் செய்திருக்க வேண்டும்? அவரது கிரியை ஒருபோதும் முன்னேறிச் செல்வதை நிறுத்தாது, அதாவது அவரது மனநிலை படிப்படியாக மனுஷனுக்கு வெளிப்படுகிறது, அவ்வாறு வெளிப்படுத்தப்படுவது அவருடைய ஆழ்ந்த மனநிலையே. ஆதியில், தேவனின் மனநிலை மனுஷனிடமிருந்து மறைக்கப்பட்டது, அவர் ஒருபோதும் தன் மனநிலையை மனுஷனுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை, மேலும் மனுஷனுக்கு அவரைப் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. இதன் காரணமாக, மனுஷனுக்கு தனது மனநிலையைப் படிப்படியாக வெளிப்படுத்த அவர் தனது கிரியையைப் பயன்படுத்துகிறார், ஆனால் இவ்வாறு கிரியை செய்வது என்பது ஒவ்வொரு யுகத்திலும் தேவனின் மனநிலை மாறுகிறது என்று அர்த்தமல்ல. தேவனின் சித்தம் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால், தேவனின் மனநிலையும் தொடர்ந்து மாறுகிறது என்று கருதக்கூடாது. மாறாக, அவர் கிரியை செய்த யுகங்கள் வித்தியாசமாக இருப்பதால், தேவன் தம்முடைய ஆழமான மனநிலையை முழுவதுமாக எடுத்து, படிப்படியாக அதை மனுஷனுக்கு வெளிப்படுத்துகிறார், இதன்மூலம் மனுஷன் அவரை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இது எந்த வகையிலும் தேவன் முதலில் குறிப்பிட்ட மனநிலை எதையும் கொண்டிருக்கவில்லை என்பதற்கோ அல்லது காலப்போக்கில் அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை—அத்தகைய புரிதல் தவறானது. கடந்து செல்லும் யுகங்களுக்கு ஏற்ப தேவன் மனுஷனுக்கு அவரது உள்ளார்ந்த மற்றும் குறிப்பிட்ட மனநிலையை, அதாவது அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்; ஒரு யுகத்திற்கான கிரியையால் தேவனின் முழு மனநிலையையும் வெளிப்படுத்த முடியாது. ஆகவே, "தேவன் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல," என்ற வார்த்தைகள் அவருடைய கிரியையைக் குறிக்கின்றன, மேலும் "தேவன் மாறாதவர்" என்ற வார்த்தைகள் தேவனுக்குள் இயல்பாக இருக்கும் விஷயங்களையும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதையும் குறிக்கின்றன. இருப்பினும், உன்னால் ஆறாயிரம் ஆண்டுகளின் கிரியைகளை ஒரு புள்ளியில் இணைக்கவோ அல்லது மரித்துப்போன வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தவோ முடியாது. இது மனுஷனின் முட்டாள்தனம். மனுஷன் கற்பனை செய்வது போல தேவன் எளிமையானவர் அல்ல, மேலும் அவருடைய கிரியை எந்த ஒரு யுகத்திலும் தாமதமாகச் செயல்படாது. உதாரணமாக, யேகோவா எப்போதும் தேவனின் நாமமாக இருக்க முடியாது; தேவன் தனது கிரியையை இயேசு என்ற பெயரிலும் செயல்படுத்த முடியும். இது தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.
தேவன் எப்போதும் தேவன்தான், அவர் ஒருபோதும் சாத்தானாக மாற மாட்டார்; சாத்தான் எப்போதும் சாத்தான்தான், அவன் ஒருபோதும் தேவனாக மாற மாட்டான். தேவனின் ஞானம், தேவனின் அதிசயம், தேவனின் நீதி, தேவனின் மகத்துவம் ஆகியவை ஒருபோதும் மாறாது. அவருடைய சாராம்சமும், அவரிடம் இருப்பதும், அவர் என்னவாக இருக்கிறாரோ அதுவாக இருப்பதும் மாறாது. எவ்வாறாயினும், அவருடைய கிரியையைப் பொறுத்தவரை, அது எப்போதும் முன்னோக்கிய திசையில் முன்னேறி வருகிறது, எப்போதும் ஆழமாகச் செல்கிறது, ஏனென்றால் அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் அல்ல. ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு புதிய நாமத்தைப் பெறுகிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒவ்வொரு யுகத்திலும் அவர் தனது சிருஷ்டிப்புகளை அவருடைய புதிய சித்தத்தையும் புதிய மனநிலையையும் காண அனுமதிக்கிறார். ஒரு புதிய யுகத்தில், தேவனின் புதிய மனநிலையின் வெளிப்பாட்டை ஜனங்கள் காணத் தவறினால், அவர்கள் அவரை எப்போதும் சிலுவையில் அறைந்தபடியே விட்டுவிட மாட்டார்களா? அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் தேவனை வரையறுக்க மாட்டார்களா? தேவன் ஒரு ஆணாக மட்டுமே மாம்சத்திற்குள் வந்திருந்தால், ஜனங்கள் அவரை ஆணாக, ஆண்களின் தேவன் என்று வரையறுத்திருப்பார்கள், மேலும் அவர் ஒருபோதும் பெண்களின் தேவன் என்று விசுவாசித்திருக்க மாட்டார்கள். தேவன் ஆண் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ஆண் இனத்தின் தலைவர் என்றும் ஆண்கள் கருதுவார்கள்—ஆனால் பெண்களின் நிலை என்ன? இது நியாயமற்றது; இது ஒருதலைப்பட்சமானது அல்லவா? இதுதான் விஷயம் என்றால், தேவனால் இரட்சிக்கப்பட்ட அனைவரும் அவரைப் போன்ற ஆண்களாக இருப்பார்கள், ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாள். தேவன் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபோது, அவர் ஆதாமைப் படைத்தார், ஏவாளைப் படைத்தார். அவர் ஆதாமை சிருஷ்டித்தது மட்டுமல்லாமல், ஆண், பெண் இருவரையும் அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். தேவன் ஆண்களின் தேவன் மட்டுமல்ல—அவர் பெண்களின் தேவனும் கூட. தேவன் கடைசிக் காலத்தில் கிரியையின் ஒரு புதிய கட்டத்தில் நுழைகிறார். அவர் தம்முடைய மனநிலையை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவார், அது இயேசுவின் காலத்தின் இரக்கமும் அன்பும் கொண்டதாக இருக்காது. அவர் கையில் புதிய கிரியை இருப்பதால், இந்தப் புதிய கிரியை ஒரு புதிய மனநிலையுடன் இருக்கும். ஆகவே, இந்தக் கிரியையை ஆவியானவர் செய்திருந்தால்—தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், அதற்குப் பதிலாக ஆவியானவர் நேரடியாக இடி மூலம் பேசியிருந்தால், அதனால் மனுஷனுக்கு அவருடன் தொடர்பு கொள்ள வழி இல்லை என்றால், மனுஷனால் அவருடைய மனநிலையை அறிய முடியுமா? அந்தக் கிரியையை ஆவியானவர் மட்டுமே செய்திருந்தால், தேவனின் மனநிலையை அறிந்து கொள்ள மனுஷனுக்கு வழி இருந்திருக்காது. அவர் மாம்சத்தில் வரும்போது, வார்த்தை மாம்சத்தில் தோன்றும்போது, மற்றும் மாம்சத்தின் மூலம் அவருடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்தும்போதுதான், ஜனங்கள் தங்கள் கண்களால் தேவனின் மனநிலையைப் பார்க்க முடியும். தேவன் உண்மையாக, மெய்யாக மனுஷரிடையே வாழ்கிறார். அவர் தொட்டுணரத்தக்கவர்; மனுஷனால் உண்மையில் அவரது மனநிலையுடன் இணைந்து செயல்பட முடியும், அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறாரோ அதனுடனும் இணைந்து செயல்பட முடியும்; இவ்வாறாக மட்டுமே மனுஷன் அவரை மெய்யாக அறிந்துகொள்ள முடியும். அதே சமயம், "தேவன் ஆண்களின் தேவன், தேவன் பெண்களின் தேவன்," என்ற கிரியையையும் தேவன் நிறைவுசெய்துவிட்டார், மேலும் அவர் செய்த கிரியை முழுவதையும் மாம்சத்தில் நிறைவேற்றினார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்