தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 39
டிசம்பர் 7, 2022
கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு சாட்சிக் கொடுக்கத் தொடங்கினார், அதற்குப்பின் யேகோவாவின் நாமம் பேசப்படவில்லை; அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர் புதிய கிரியையை இயேசு என்ற நாமத்தை முதன்மையாக வைத்தே மேற்கொண்டார். அவரை விசுவாசித்தவர்களின் சாட்சியம் இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர்கள் செய்த கிரியையும் இயேசு கிறிஸ்துவுக்காகவும் இருந்தன. பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் முடிவானது, யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாகச் செயல்படுத்தப்பட்டக் கிரியைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதைக் குறிக்கின்றது. அதனால், தேவனின் நாமம் இனி யேகோவா அல்ல; அதற்குப் பதிலாக அவர் இயேசு என்று அழைக்கப்பட்டார், இங்கிருந்து பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தை முதன்மையாகக் கொண்டு கிரியைகளைத் தொடங்கினார். ஆகவே, இன்றும் யேகோவாவின் வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பவர்கள், எல்லாவற்றையும் இன்னும் நியாயப்பிரமாண யுகத்தின் கிரியைக்கு ஏற்ப செய்பவர்கள்—நீ விதிகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவில்லையா? நீ கடந்த காலத்திலேயே மாட்டிக் கொள்ளவில்லையா? கடைசிக் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் இப்போது அறிவீர்கள். இயேசு வரும்போது, அவர் இன்னும் இயேசு என்றுதான் அழைக்கப்படுவாரா? மேசியா ஒருவர் வருவார் என்று யேகோவா இஸ்ரவேல் ஜனங்களிடம் சொன்னார், ஆனால் அவர் வந்தபோது, அவர் மேசியா என்று அழைக்கப்படவில்லை, இயேசு என்று அழைக்கப்பட்டார். தாம் மீண்டும் வருவேன் என்றும், தாம் புறப்பட்டுச் சென்றபடியே வருவேன் என்றும் இயேசு கூறினார். இவை இயேசுவின் வார்த்தைகள், ஆனால் இயேசு புறப்பட்டுச் சென்ற விதத்தை நீ பார்த்தாயா? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார், ஆனால் அவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது தான் தனிப்பட்ட முறையில் மனுஷரிடையே திரும்பி வருவாரா? அப்படி வந்தால், அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படமாட்டாரா? இயேசு மீண்டும் வரும்போது, யுகம் ஏற்கனவே மாறியிருக்கும், எனவே அவரை இன்னும் இயேசு என்று அழைக்க முடியுமா? இயேசுவின் நாமத்தால் மட்டுமே தேவனை அறிய முடியுமா? ஒரு புதிய யுகத்தில் அவர் ஒரு புதிய நாமத்தால் அழைக்கப்பட மாட்டாரா? ஒருவரின் உருவமும், ஒரு குறிப்பிட்ட நாமமும் தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? ஒவ்வொரு யுகத்திலும், தேவன் புதிய கிரியைகளைச் செய்கிறார், புதிய நாமத்தால் அழைக்கப்படுகிறார்; எவ்வாறு அவரால் ஒரே கிரியையை வெவ்வேறு யுகங்களில் செய்ய முடியும்? எப்படி அவர் பழைய கிரியைகளையே பற்றிக்கொண்டு இருப்பார்? மீட்பிற்கான கிரியைக்காக இயேசுவின் நாமம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆகவே, கடைசிக் காலத்தில் அவர் திரும்பி வரும்போது அதே பெயரால் அழைக்கப்படுவாரா? அவர் இப்போதும் மீட்பிற்கான கிரியையைத்தான் மேற்கொள்வாரா? யேகோவாவும் இயேசுவும் வெவ்வேறு யுகங்களில் வெவ்வேறு நாமங்களால் அழைக்கப்படும்போது, எதற்காக அவர்கள் ஒருவராக இருக்கிறார்கள்? இது அவர்களது கிரியைகளின் யுகங்கள் வேறுபட்டு இருப்பதால் இல்லையா? தேவனை முழுவதுமாகப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரேயொரு நாமத்தால் முடியுமா? இது அவ்வாறு இருப்பதால், தேவனை வெவ்வேறு யுகத்தில் வெவ்வேறு நாமத்தால் அழைக்க வேண்டும், மேலும் யுகத்தை மாற்றவும், யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் தன் நாமத்தைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு நாமத்தாலும் தேவனை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, மேலும் ஒவ்வொரு நாமமும் ஒரு குறிப்பிட்ட யுகத்தில் தேவனின் மனநிலையின் தற்காலிக அம்சத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; செய்ய வேண்டியதெல்லாம் அவருடைய கிரியையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே. ஆகையால், முழு யுகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த தேவன் தனது மனநிலைக்கு ஏற்ற எந்த நாமத்தையும் தேர்வு செய்யலாம். அது யேகோவாவின் யுகமாக இருந்தாலும் சரி, அல்லது இயேசுவின் யுகமாக இருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு யுகமும் ஒரு நாமத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கிருபையின் யுகத்தின் முடிவில், இறுதி யுகம் வந்திருக்கிறது, இயேசு ஏற்கனவே வந்துவிட்டார். எப்படி அவர் இன்னும் இயேசு என்று அழைக்கப்படுவார்? எப்படி அவரால் மனுஷரிடையே இயேசுவின் உருவத்தை இன்னும் அணிந்திருக்க முடியும்? இயேசுவின் உருவம் ஒரு நசரேயனின் உருவம் தான் என்பதை நீ மறந்துவிட்டாயா? மனுஷகுலத்தின் மீட்பர் இயேசு மட்டுமே என்பதை நீ மறந்துவிட்டாயா? கடைசிக் காலத்தில் அவரால் எவ்வாறு ஜெயங்கொள்ளுதல் கிரியை மேற்கொண்டு மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும்? இயேசு ஒரு வெண்மையான மேகத்தின் மீது புறப்பட்டுச் சென்றார்—இதுதான் உண்மை—ஆனால் எப்படி அவர் மனுஷரிடையே ஒரு வெண்மையான மேகத்தின் மீது திரும்பி வர முடியும், அவர் எப்படி இயேசு என்றே இப்போதும் அழைக்கப்படுவார்? அவர் உண்மையில் ஒரு மேகத்தின் மீது வந்திறங்கினால், மனுஷன் எவ்வாறு அவரை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பான்? உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள மாட்டனரா? அப்படியானால், இயேசு மட்டுமே தேவனாக இருக்க மாட்டாரா? அவ்வாறான நிலையில், தேவனின் உருவம் ஒரு யூதனின் தோற்றமாக இருக்கும், மேலும் அது எப்போதும் அதே மாதிரிதான் இருக்கும். தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு சொன்னார், ஆனால் அவருடைய வார்த்தைகளின் மெய்யான அர்த்தம் உனக்குத் தெரியுமா? அவர் உன்னுடைய இந்தக் குழுவிற்குச் சொல்லியிருப்பாரா? அவர் புறப்பட்டுச் சென்ற மாதிரியே, அதாவது மேகத்தின் மீது சென்றவாறு, திரும்பி வருவார் என்று உனக்குத் தெரியும், ஆனால் தேவன் தமது கிரியையை எவ்வாறு செய்கின்றார் என்று உனக்கு மிசச் சரியாகத் தெரியுமா? உன்னால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடிந்தால், இயேசு பேசிய வார்த்தைகள் மட்டும் எதற்காக விளக்கப்பட வேண்டும்? அவர் சொன்னார்: கடைசிக் காலத்தில் மனுஷகுமாரன் வரும்போது, அதை அவரே அறியமாட்டார், தேவதூதர்கள் அறிய மாட்டார்கள், பரலோகத்திலுள்ள தூதர்கள் அறிய மாட்டார்கள், சகலவித மனுஷரும் அறிய மாட்டார்கள். பிதா மட்டுமே அறிவார், அதாவது ஆவியானவர் மட்டுமே அறிவார். மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உன்னால் கண்டுகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியுமா? நீ உன் கண்களால் கண்டுகொண்டு அறிந்துகொள்ளும் அளவிற்கு வல்லவனாக இருந்தால், இந்த வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டதாக ஆகிவிடாதா? அந்த நேரத்தில் இயேசு என்ன சொன்னார்? "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். … நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." அந்த நாள் வரும்போது, மனுஷகுமாரனே அதை அறியமாட்டார். மனுஷகுமாரன் என்பது ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷரான மாம்சமாகிய தேவனைக் குறிக்கிறது. மனுஷகுமாரனுக்கே தெரியாது, ஆனால் உனக்கு மட்டும் எப்படித் தெரியும்? தாம் புறப்பட்டுச் சென்றபடியே திரும்பி வருவேன் என்று இயேசு கூறினார். அவர் வரும்போது, அவருக்கே அது தெரியாது, ஆனால் அவரால் எப்படி உனக்கு முன்கூட்டியே அறிவித்திருக்க முடியும்? அவருடைய வருகையை உன்னால் பார்க்க முடியுமா? அது நகைச்சுவையல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்