தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 33

ஏப்ரல் 11, 2023

கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த தலைமுறைகளில் தேவன் செய்த கிரியைகளையும் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெறுகிறான்; வார்த்தையின் மூலம், கடந்த தலைமுறையினரால் வெளிப்படுத்தப்படாத மறைபொருட்களையும், கடந்த கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் கிரியைகளையும், அவர்கள் கிரியை செய்த கொள்கைகளையும் மனுஷன் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் தேவனின் மனநிலையையும், மனுஷனின் கலகத்தன்மையையும் எதிர்ப்பையும் புரிந்துகொள்கிறான், மேலும் அவன் தனது சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறான். கிரியையின் இந்தக் கட்டங்கள் மற்றும் பேசப்படும் எல்லா வார்த்தைகளின் மூலமும், மனுஷன் ஆவியானவரின் கிரியையையும், மாம்சமாகிய தேவன் செய்யும் கிரியையையும், அதற்கும் மேலாக, அவனுடைய முழு மனநிலையையும் அறிந்துகொள்கிறான். ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தேவனின் நிர்வாகக் கிரியை பற்றிய உனது அறிவும் வார்த்தையின் மூலம் பெறப்பட்டதுதான். உன் முந்தைய கருத்துகளின் அறிவும், அவற்றை ஒதுக்கி வைப்பதில் நீ பெற்ற வெற்றியும் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? முந்தைய கட்டத்தில், இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், ஆனால் இந்தக் கட்டத்தில் எந்த அடையாளங்களும் அதிசயங்களும் இல்லை. தேவன் ஏன் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்தவில்லை என்பதைப் பற்றிய உனது புரிதல் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? எனவே, இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகள் கடந்த தலைமுறைகளின் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்த கிரியைகளை மிஞ்சியதாக இருக்கின்றன. தீர்க்கதரிசிகள் சொன்ன தீர்க்கதரிசனங்களால் கூட இந்த முடிவை அடைய முடிந்திருக்காது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களை மட்டுமே பேசினார்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தான் அவர்கள் பேசினார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவன் செய்ய விரும்பிய கிரியையைப் பற்றி பேசவில்லை. மனுஷரின் ஜீவிதங்களில் அவர்களை வழிநடத்தவோ, மனுஷகுலத்திற்கு சத்தியங்களை வழங்கவோ, அல்லது அவர்களுக்கு மறைபொருட்களை வெளிப்படுத்தவோ, ஜீவிதத்தை வழங்கவோ பேசவில்லை. இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளில், தீர்க்கதரிசனமும் சத்தியமும் இருக்கின்றன, ஆனால் முக்கியமாக இந்த வார்த்தைகள் மனுஷனுக்கு ஜீவனை வழங்க உதவுகின்றன. தற்போதுள்ள வார்த்தைகள் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களைப் போலல்லாதவை. இது மனுஷனின் ஜீவித மனநிலையை மாற்றுவதற்கான மனுஷனின் ஜீவிதத்திற்கான கிரியையின் ஒரு கட்டமாகும், தீர்க்கதரிசனம் பேசுவதற்காக அல்ல. முதல் கட்டம் யேகோவாவின் கிரியையாக இருந்தது: பூமியில் தேவனை வணங்க மனுஷனுக்கான ஒரு பாதையை உருவாக்குவதே அவருடைய கிரியையாக இருந்தது. பூமியில் கிரியை செய்யத் தொடங்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு தொடக்க கிரியையாக அது இருந்தது. அந்த நேரத்தில், யேகோவா இஸ்ரவேலருக்கு ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவும், பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவும், ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் ஜீவித்திருக்கவும் போதித்தார். ஏனென்றால், அந்தக் கால ஜனங்களுக்கு மனுஷன் எவற்றால் உருவானவன் என்று புரியவில்லை, பூமியில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. மனுஷகுலத்தை அவர்களது ஜீவிதங்களை வழிநடத்துவதற்கு வழிகாட்டுவதே கிரியையின் முதல் கட்டத்தில் தேவனுக்கு அவசியமாக இருந்தது. யேகோவா அவர்களிடம் பேசியதெல்லாம் முன்பு மனுஷகுலத்திற்குத் தெரிந்திருக்கவில்லை அல்லது அவர்கள் வசம் இருந்ததில்லை. அந்த நேரத்தில், தேவன் தீர்க்கதரிசனங்களைப் பேச பல தீர்க்கதரிசிகளை எழுப்பினார், அவர்கள் அனைவரும் யேகோவாவின் வழிகாட்டுதலின் கீழ் அவ்வாறு செய்தனர். இது தேவனுடைய கிரியையில் ஒரு சிறிய விஷயமாக மட்டுமே இருந்தது. முதல் கட்டத்தில், தேவன் மாம்சமாகவில்லை, எனவே அவர் எல்லா கோத்திரங்களுக்கும் தேசங்களுக்கும் தீர்க்கதரிசிகள் மூலம் அறிவுறுத்தினார். இயேசு தம்முடைய காலத்தில் கிரியை செய்தபோது, இன்றைய நாளில் பேசுவது போல் அவர் அப்போது பேசவில்லை. கடைசிக் காலத்தினுடைய வார்த்தையின் கிரியையின் இந்தக் கட்டம் இதற்கு முன்பிருந்த யுகங்களிலும் தலைமுறைகளிலும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஏசாயா, தானியேல் மற்றும் யோவான் ஆகியோர் பல தீர்க்கதரிசனங்களைப் பேசியிருந்தாலும், அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் இப்போது பேசப்படும் வார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. அவர்கள் பேசியது தீர்க்கதரிசனங்கள் மட்டுமே, ஆனால் இப்போது பேசப்படும் வார்த்தைகள் அப்படியாக இல்லை. நான் இப்போது பேசும் அனைத்தையும் தீர்க்கதரிசனங்களாக மாற்றினால், உங்களால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியுமா? நான் பேசியது நான் சென்றபின் நடக்கும் விஷயங்களைப் பற்றியது என்று வைத்துக் கொண்டால், உங்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? வார்த்தையின் கிரியை இயேசுவின் காலத்திலோ அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ ஒருபோதும் செய்யப்படவில்லை. ஒருவேளை சிலர், "யேகோவா தம்முடைய கிரியையின் போதும் வார்த்தைகளை பேசவில்லையா? இயேசு நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது மற்றும் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்ததைத் தவிர, அவர் கிரியை செய்துகொண்டிருந்த நேரத்திலும் வார்த்தைகளைப் பேசவில்லையா?" என்று கூறுவர். பேசப்படும் வார்த்தைகளுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. யேகோவா சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் என்ன? ஜீவிதத்தில் ஆவிக்குரிய விஷயங்களைத் தொடாத பூமியில் மனுஷர் அவர்களது ஜீவிதங்களை ஜீவித்திருக்க மட்டுமே அவர் வழிநடத்தினார். யேகோவா பேசியபோது, எல்லா இடங்களைச் சேர்ந்த ஜனங்களுக்கும் அறிவுறுத்தவே அவர் பேசினார் என்று ஏன் கூறப்படுகிறது? "அறிவுறுத்தல்" என்ற சொல்லுக்கு வெளிப்படையாகச் சொல்வதும் நேரடியாகக் கட்டளையிடுவதும் என்று அர்த்தம் ஆகும். அவர் மனுஷனுக்கு ஜீவிதத்தை வழங்கவில்லை; மாறாக, அவர் வெறுமனே மனுஷனைக் கையால் எடுத்து, அதிக உவமைகளை பயன்படுத்தாமல், தம்மை எவ்வாறு வணங்குவது என்று மனுஷனுக்குப் போதித்தார். இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியை மனுஷனைக் கையாள்வது அல்லது அவனை ஒழுங்குபடுத்துவது அல்லது அவனுக்கு ஆக்கினை நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் வழங்குவதற்காக செய்யப்பட்டதல்ல, அது அவனுக்கு வழிகாட்டவே செய்யப்பட்டதாகும். வனாந்தரத்தில் மன்னாவைப் பொறுக்கும்படி தம் ஜனங்களிடம் சொல்லும்படி யேகோவா மோசேக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு காலையிலும் சூரிய உதயத்திற்கு முன்பு, அந்த நாளுக்குத் தேவையான அளவிற்கு அவர்கள் மன்னாவைப் பொறுக்குவார்கள். மன்னாவை மறுநாள் வரை வைத்திருக்க முடியாது, ஏனெனில் அது பூசணம் பிடித்துவிடும். அவர் ஜனங்களுக்கு சொற்பொழிவு ஆற்றவில்லை அல்லது அவர்களின் சுபாவங்களையும் அம்பலப்படுத்தவில்லை, மேலும் அவர்களுடைய கருத்துகளையும் எண்ணங்களையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அவர் ஜனங்களை மாற்றவில்லை, மாறாக அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்த அவர்களுக்கு வழிகாட்டினார். அக்கால ஜனங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள், எதையும் புரிந்து கொள்ளாதவர்களாகவும் ஆனால் சில அடிப்படை இயந்திரத்தனமான இயக்கங்களை மட்டுமே புரிந்துகொள்பவர்களாகவும் இருந்தனர், ஆகவே, யேகோவா பெருந்திரளான ஜனங்களுக்கு வழிகாட்டும் நியாயப்பிரமாணங்களை மட்டுமே கட்டளையிட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (4)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க