தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 27
மார்ச் 28, 2023
கடைசிக் காலத்தின் கிரியையில், வார்த்தையானது அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் வெளிப்பாட்டை விட வலிமையானது, மேலும் வார்த்தையின் அதிகாரம் அடையாளங்களையும் அதிசயங்களையும் விட அதிகமாக உள்ளது. வார்த்தையானது மனுஷனின் இருதயத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட அனைத்து சீர்கெட்ட மனநிலைகளையும் அம்பலப்படுத்துகிறது. நீயாகவே அவற்றைக் கண்டுணர உனக்கு வழி இல்லை. வார்த்தையின் மூலம் அவை உனக்கு முன் வெறுமனே வைக்கப்படும் போது, நீ இயல்பாகவே அவற்றைக் கண்டுபிடிப்பாய்; உன்னால் அவற்றை மறுக்க முடியாது, மேலும் நீ முற்றிலும் சமாதானம் அடைந்திருப்பாய். இது வார்த்தையின் அதிகாரம் அல்லவா? இன்றைய வார்த்தையின் கிரியையால் அடையப்பட்ட முடிவு இது. ஆகையால், நோயைக் குணப்படுத்துவதன் மூலமும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமும் மனுஷனை அவனது பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சிக்க முடியாது, மேலும் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமும் அவனை முழுமையாக பரிபூரணப்படுத்த முடியாது. நோயைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளை விரட்டுவதற்குமான அதிகாரம் மனுஷனுக்கு கிருபையை மட்டுமே தருகிறது, ஆனால் மனுஷனின் மாம்சம் இன்னும் சாத்தானுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது, மேலும் சீர்கெட்ட சாத்தானின் மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்திகரிக்கப்படாதவை இன்னும் பாவத்திற்கும் அசுத்தத்திற்கும் உரியதாகவே இருக்கின்றன. வார்த்தையின் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே அவனால் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிசுத்தமாக்கப்பட முடியும். பிசாசுகள் மனுஷனிடமிருந்து விரட்டப்பட்டு, அவன் மீட்கப்பட்டபோது, இதன் பொருள் அவன் சாத்தானின் பிடிகளிலிருந்து விலக்கப்பட்டு தேவனிடம் திரும்பினான் என்பதாகும். இருப்பினும், தேவனால் சுத்திகரிக்கப்படாமல் அல்லது மாற்றப்படாமல் இருந்தால் அவன் சீர்கெட்ட மனுஷனாகவே இருப்பான். மனுஷனுக்குள் இன்னும் அசுத்தம், எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மை ஆகியவை இருக்கின்றன; மனுஷன் தேவனுடைய மீட்பின் மூலமாக மட்டுமே அவரிடம் திரும்பியிருக்கிறான், ஆனால் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் இருப்பதில்லை, அவரை எதிர்க்கவும் துரோகம் செய்யவும் வல்லவனாகவே இருக்கிறான். மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாக்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நியாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: "தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!" என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாகச் செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும். மனுஷன் கடந்த காலத்தில் இவ்வாறு கூச்சலிட்டான், ஏனென்றால் அவனுடைய இயல்பான சீர்கெட்ட மனநிலை பற்றி அவனுக்குப் புரிந்திருக்கவில்லை. இவை மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தங்கள். இவ்வளவு நீண்ட நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பு காலம் முழுவதும், மனுஷன் பதற்றமான சூழலில் வாழ்ந்தான். இந்த வார்த்தையின் மூலம் இவை அனைத்தும் அடையப்படவில்லையா? ஊழியம் செய்பவர்களுக்கான சோதனைக்கு முன்னர் நீ மிகவும் உரத்த குரலில் அழவில்லையா? "ராஜ்யத்தில் நுழையுங்கள்! இந்த நாமத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் ராஜ்யத்திற்குள் நுழைவார்கள்! அனைவரும் தேவனில் பங்கெடுப்பார்கள்!" ஊழியம் செய்பவர்களுக்கான சோதனை வந்தபோது, நீ கூக்குரலிடவில்லை. ஆதியில், "தேவனே! நீர் என்னை எங்கு வைத்தாலும், உம்மால் வழிநடத்தப்படுவதற்கு நான் கீழ்ப்படிவேன்," என்று அனைவரும் கூக்குரலிட்டார்கள். "யார் எமக்கான பவுலாக இருக்க விரும்புவது?" என்ற தேவனின் வார்த்தைகளைப் படித்தவுடன், ஜனங்கள், "நான் தயாராக இருக்கிறேன்!" என்றனர். பின்னர் அவர்கள், "யோபுவின் விசுவாசத்தை யார் ஏற்றுக்கொள்வது?" என்ற வார்த்தைகளைக் கண்டார்கள். அதற்கு அவர்கள், "நான் யோபுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். தேவனே, தயவுசெய்து என்னைச் சோதனை செய்யும்!" என்றனர். ஊழியம் செய்பவர்களுக்கான சோதனை வந்தபோது, அவர்கள் ஒரே நேரத்தில் சரிந்துவிட்டார்கள், மீண்டும் எழுந்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் இருதயத்தில் உள்ள அசுத்தங்கள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இது வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? ஆகவே, நீங்கள் இன்று அனுபவித்திருப்பது வார்த்தையின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் தான், இயேசுவின் அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் மூலம் அடைந்ததை விட இது பெரிதாக இருக்கிறது. நீ பார்க்கும் தேவனின் மகிமையும், நீ காணும் தேவனின் அதிகாரமும் சிலுவையில் அறையப்படுவதன் மூலமாக மட்டுமே இல்லாமல், நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகவும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமாகவும் காணப்படுகின்றன, ஆனால் அதைவிடவும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மூலம்தான் காணப்படுகின்றன. தேவனின் அதிகாரமும் வல்லமையும், அடையாளங்களின் கிரியை, நோயைக் குணப்படுத்துதல் மற்றும் பிசாசுகளை விரட்டுதல் போன்றவற்றை மட்டுமே கொண்டிருக்கவில்லை என்பதை இது உனக்குக் காட்டுகிறது, ஆனால் தேவனுடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பானது தேவனின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த மற்றும் அவரது சர்வவல்லமையை வெளிப்படுத்த சிறந்ததாக இருப்பதை உனக்குக் காட்டுகிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (4)" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்