தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 25

பிப்ரவரி 16, 2023

கிருபையின் யுகத்திலேயே ஜனங்கள் சிக்கிக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் தங்களது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விடுபட மாட்டார்கள், ஒருபுறம் தேவனின் ஆழ்ந்த மனநிலையை மட்டும் தெரிந்துகொள்வார்கள். ஜனங்கள் எப்பொழுதும் ஏராளமான கிருபையின் மத்தியில் ஜீவிக்கிறார்கள், ஆனால் தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்தவோ அனுமதிக்கும் ஜீவவழி இல்லை என்றால், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்திலான விசுவாசத்தில் உண்மையாக எதையும் பெறமாட்டார்கள். இந்த வகையான விசுவாசம் உண்மையில் பரிதாபகரமானது. நீ இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், ராஜ்யத்தின் யுகத்தில் மனுஷனாக அவதரித்த தேவனின் ஒவ்வொரு படியையும் நீ அனுபவித்து முடிக்கும்போது, பல ஆண்டுகளாக நீ கொண்டிருந்த ஆசைகள் இறுதியாக உணரப்பட்டுள்ளன என்பதை நீ உணருவாய். இப்போதுதான் நீ உண்மையிலேயே தேவனை நேருக்கு நேர் பார்த்திருக்கிறாய் என்று நீ உணருவாய்; இப்போதுதான் நீ அவருடைய முகத்தைப் பார்த்திருக்கிறாய், அவருடைய தனிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய், அவருடைய கிரியையின் ஞானத்தைப் பாராட்டியிருக்கிறாய், அவர் எவ்வளவு உண்மையானவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்பதை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாய். கடந்த காலங்களில் ஜனங்கள் பார்த்திராத அல்லது வைத்திருக்காத பல விஷயங்களை நீ பெற்றிருக்கிறாய் என்பதை நீ உணருவாய். இந்த நேரத்தில், தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது என்றால் என்ன, தேவனின் சித்தத்திற்கு இணங்குவது என்றால் என்ன என்பதை நீ தெளிவாக அறிந்து கொள்வாய். நிச்சயமாக, நீ கடந்த காலக் கருத்துக்களுடன் ஒட்டிக்கொண்டு, தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தின் உண்மையை நிராகரிக்கிறாய் அல்லது மறுக்கிறாய் என்றால், நீ வெறுங்கையுடன்தான் இருப்பாய், எதையும் பெறமாட்டாய், இறுதியில் தேவனை எதிர்த்ததற்காக நீ குற்றவாளி என்று அறிவிக்கப்படுவாய். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய கிரியைக்கு அடிபணியக்கூடியவர்கள் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரமான சர்வவல்லவர் என்ற பெயரில் உரிமை கோரப்படுவார்கள். அவர்களால் தேவனின் தனிப்பட்ட வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தையும், உண்மையான ஜீவனையும் அவர்கள் பெறுவார்கள். கடந்த கால ஜனங்களால் இதுவரை கண்டிராதவற்றை அவர்கள் காண்பார்கள்: "அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது" (வெளிப்படுத்தல் 1:12-16). இந்தக் காட்சி தேவனின் முழு மனநிலையின் வெளிப்பாடாகும், மேலும் அவருடைய முழு மனநிலையின் வெளிப்பாடும் அவருடைய தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனுடைய கிரியையின் வெளிப்பாடுமாகும். ஆக்கினைத்தீர்ப்புகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஓட்டங்களில், மனுஷகுமாரன் தனது ஆழமான மனநிலையை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், அவருடைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண அனுமதிக்கிறார், இது யோவானால் காணப்பட்ட மனுஷகுமாரனின் முகத்தின் உண்மையுள்ள சித்தரிப்பு ஆகும். (நிச்சயமாக, இவை அனைத்தும் ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும்.) தேவனின் உண்மையான முகத்தை மனுஷ மொழியைப் பயன்படுத்தி முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஆகவே, தேவன் தம்முடைய ஆழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் வழிகளை மனுஷனுக்குத் தனது உண்மையான முகத்தைக் காட்ட பயன்படுத்துகிறார். மனுஷகுமாரனின் ஆழ்ந்த மனநிலையைப் பாராட்டிய அனைவருமே மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மிகப் பெரியவர், மனுஷ மொழியைப் பயன்படுத்தி அவரை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷன், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் அனுபவித்தவுடன், விளக்குகளின் மத்தியில் மனுஷகுமாரனைப் பற்றிப் பேசிய யோவானின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அவன் அறிந்து கொள்வான்: "அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது." அந்த நேரத்தில், இவ்வளவு சொல்லியிருக்கும் இந்த சாதாரண மாம்சமானது தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் என்பதை நீ சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துக்கொள்வாய். மேலும், உண்மையிலேயே நீ எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர்ந்து, நீயே உன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவாய். இந்த ஆசீர்வாதத்தை ஏற்க நீ தயாராக இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க