தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 126

ஏப்ரல் 15, 2023

மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் முழு காலத்திற்கும் அவருடைய கிரியையைக் குறிப்பிடுகிறது. இது மனுஷனுடைய கிரியையைப் போல ஒரு குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடுவதில்லை. ஆகையால், அவருடைய கடைசி மனுஷ அவதரிப்பின் கிரியையின் முடிவு என்றால் அவருடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமல்ல, ஏனென்றால் அவர் மாம்சத்தில் செய்யும் கிரியை அவர் மாம்சத்தில் தமது கிரியையைச் செய்யும் காலத்தை மட்டுமே குறிப்பிடாமல், முழுக் காலத்தையும் குறிப்பிடுகிறது. அவர் மாம்சத்தில் இருக்கும் காலத்தில் அவர் முழுக் காலத்திலும் தமது கிரியையை முடிக்கிறார், அதன்பிறகு அது எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. மாம்சமான தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றிய பிறகு, அவர் தமது எதிர்காலக் கிரியைகளைத் தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் ஒப்படைப்பார். ஆகையால், முழுக் காலத்திலும் அவருடைய கிரியை தடையில்லாமல் செய்யப்படும். மனுஷ அவதரிப்பு காலம் முழுவதுக்குமான கிரியையானது முழு பிரபஞ்சத்திலும் பரவிய பிறகே முழுமையானதாகக் கருதப்படும். மாம்சமான தேவனுடைய கிரியை ஒரு புதிய யுகத்தைத் துவக்கி வைக்கிறது. அவருடைய கிரியையைத் தொடருபவர்கள் அவரால் பயன்படுத்தப்படுபவர்கள். மனுஷனால் செய்யப்படும் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய ஊழியத்திற்குள் உள்ளன. இந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. மாம்சமான தேவன் தமது கிரியையைச் செய்வதற்காக வரவில்லை என்றால், மனுஷனால் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கவும் முடியாது. மனுஷனால் செய்யப்படும் கிரியை வெறுமனே மனுஷனால் செய்யக்கூடிய கடமையின் எல்லைக்குள்ளேயே உள்ளது. இது தேவனுடைய கிரியையைக் குறிப்பிடவில்லை. மாம்சமான தேவனால் மட்டுமே அவர் வந்து செய்ய வேண்டிய கிரியையைச் செய்து முடிக்க முடியும். அவரைத் தவிர, அவர் சார்பாக இந்தக் கிரியையை யாராலும் செய்ய முடியாது. நிச்சயமாகவே, நான் மாம்சமான தேவனைக் குறித்தே பேசுகிறேன். இந்த மாம்சமான தேவன் முதலில் மனுஷனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகாத கிரியையின் ஒரு படிநிலையைச் செய்கிறார், அதன் பிறகு அவர் மனுஷனுடைய கருத்துக்களுக்கு இணங்காத அதிக கிரியைகளைச் செய்கிறார். மனுஷனை ஜெயங்கொள்வதுதான் கிரியையின் நோக்கமாகும். ஒருபுறம், தேவனுடைய மனுஷ அவதரிப்பு மனுஷனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போவதில்லை, அது தவிர அவர் மனுஷனுடைய கருத்துக்களுக்கு இணங்காத அதிக கிரியைகளைச் செய்கிறார், ஆகையால் மனுஷன் அவரைப் பற்றி இன்னும் அதிகமான குறைகூறும் கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறான். அவரைப் பற்றி எண்ணற்ற கருத்துக்களைக் கொண்ட ஜனங்கள் நடுவே அவர் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்கிறார். அவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் தமது ஊழியத்தை நிறைவேற்றியதும், எல்லா ஜனங்களும் அவருடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாவார்கள். இந்தக் கிரியையின் உண்மையானது சீனர்களுக்கு மத்தியில் பிரதிபலிப்பது மட்டுமின்றி, மனுக்குலம் முழுவதும் எவ்வாறு ஜெயங்கொள்ளப்படும் என்பதையும் இது குறிப்பிடுகிறது. இந்த ஜனங்கள் மீது அடையப்படும் பலன்கள் மனுக்குலம் முழுவதும் அடையப்படும் பலன்களுக்கு ஒரு முன்னோடியாகும். மேலும், எதிர்காலத்தில் அவர் செய்யும் கிரியையின் பலன்கள் இந்த ஜனங்கள் மீதான பலன்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மிகுந்த ஆரவாரத்துடன் தொடர்புடையதுமில்லை, அது தெளிவற்ற நிலையில் வைக்கப்படுவதுமில்லை. இதுதான் நிஜமானது மற்றும் உண்மையானது. இது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போன்ற வெளிப்படையான கிரியையாகும். இது யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை, இது யாரையும் ஏமாற்றவுமில்லை. நிஜமான மற்றும் உண்மையான காரியங்களையே ஜனங்கள் பார்க்கிறார்கள். உண்மையான சத்தியத்தையும் அறிவையுமே மனுஷன் பெறுகிறான். கிரியை முடிந்ததும், மனுஷன் அவரைப் பற்றிய புதிய அறிவைப் பெற்றிருப்பான். அவரை உண்மையிலேயே பின்தொடர்கிறவர்களுக்கு இனிமேல் அவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் இருக்காது. இது சீனர்கள் மீது அவர் செய்யும் கிரியையின் பலன் மட்டுமின்றி, மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொள்வதில் அவர் செய்த கிரியையின் பலனையும் இது குறிப்பிடுகிறது, ஏனென்றால் இந்த மாம்சம், இந்த மாம்சத்தின் கிரியை மற்றும் இந்த மாம்சத்தைக் குறித்த எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் கிரியைக்கு நன்மைபயக்கக்கூடியது எதுவுமில்லை. இவை இன்று அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கின்றன, எதிர்காலத்திலும் அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். இந்த மாம்சம் மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொண்டு, மனுக்குலம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொள்ளும். மனுக்குலம் முழுவதும் தேவனைப் பார்ப்பதற்கும், அவருக்குக் கீழ்ப்படிவதற்கும், அவரை அறிந்துகொள்வதற்கும் இதைக் காட்டிலும் சிறந்த கிரியை எதுவுமில்லை. மனுஷனால் செய்யப்படும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லையை மாத்திரமே குறிப்பிடுகிறது. தேவன் தமது கிரியையைச் செய்யும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பேசாமல், முழு மனுக்குலத்திடமும், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்களிடமும் பேசுகிறார். அவர் அறிவிக்கும் முடிவு ஒரு குறிப்பிட்ட நபரின் முடிவு அல்ல, முழு மனுக்குலத்திற்குமான முடிவுமாகும். அவர் யாருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிப்பதில்லை, அவர் யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, அவர் முழு மனுக்குலத்திற்காகவும் கிரியை செய்கிறார், பேசுகிறார். ஆகையால், இந்த மாம்சமான தேவன் ஏற்கனவே முழு மனுக்குலத்தையும் வகையின்படி வகைப்படுத்தியுள்ளார். ஏற்கனவே மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்த்திருக்கிறார். முழு மனுக்குலத்திற்கும் பொருத்தமான இடத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். தேவன் தமது கிரியையை சீனாவில் மாத்திரமே செய்கின்றார் என்ற போதிலும், உண்மையில் அவர் ஏற்கனவே முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் தீர்த்து வைத்துள்ளார். அவருடைய வெளிப்பாடுகளையும் ஏற்பாடுகளையும் படிப்படியாகச் செய்வதற்கு முன்பு, அவருடைய கிரியை மனுக்குலம் முழுவதும் பரவும்வரை அவரால் காத்திருக்க முடியாது. அது மிகவும் தாமதமாக இருக்காதா? இப்போது அவரால் எதிர்கால கிரியையை முன்கூட்டியே செய்துமுடிக்க முடிகிறது. கிரியை செய்கிறவர் மாம்சத்திலுள்ள தேவனாக இருப்பதால், அவர் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வரம்பற்ற கிரியையைச் செய்கிறார், அதன் பிறகு மனுஷன் செய்ய வேண்டிய கடமையை மனுஷனைச் செய்ய வைப்பார். இதுவே அவருடைய கிரியையின் கொள்கையாகும். அவரால் மனுஷனுடன் ஒரு காலத்தில் மட்டுமே வாழ முடியும், முழு காலத்தின் கிரியையும் முடிவடையும் வரை அவரால் மனுஷனுடன் இருக்க முடியாது. அவர் தேவன் என்பதால், அவர் தமது எதிர்காலக் கிரியையை முன்கூட்டியே முன்னறிவிக்கிறார். அதன்பிறகு, அவர் தமது வார்த்தைகளால் மனுக்குலம் முழுவதையும் வகைப்படுத்துவார். மனுக்குலம் அவருடைய வார்த்தைகளின்படி அவருடைய படிப்படியான கிரியைக்குள் பிரவேசிக்கும். யாரும் தப்பிக்க மாட்டார்கள், எல்லோரும் இதன்படி நடக்க வேண்டும். ஆகையால், எதிர்காலத்தில் காலம் அவருடைய வார்த்தைகளால் வழிநடத்தப்படும், ஆவியானவரால் வழிநடத்தப்படாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க