தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 188

ஜூன் 25, 2022

தேவனை விசுவாசிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இறுதி நாட்களில் தேவனுடைய கிரியையையும் இன்று அவர் உங்களில் நடப்பிக்கிற அவரது திட்டத்தின் செயலையும் பெற்றுக்கொண்டதன் மூலம் நீங்கள் அடைந்த பெரிதான உயர்வையும் இரட்சிப்பையும் நீங்கள் உண்மையில் எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள் என்பதைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும். இந்த பிரபஞ்சம் முழுவதிலும் தேவன் செய்கின்ற அவரது ஊழியத்தின் தனித்த கவனமாக இந்த ஜனக்கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அவர் தனது இதயத்தின் இரத்தம் முழுவதையும் உங்களுக்காகப் பலியாகச் செலுத்தியுள்ளார், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஆவியானவர் செய்த எல்லாக் கிரியையையும் மீட்டு உங்களிடம் கொடுத்துள்ளார். அதனாலேயே நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள். மேலும் அவர் தனது மகிமையை அவர் தேர்ந்தெடுத்த ஜனமான இஸ்ரவேல் மக்களிடமிருந்து எடுத்து உங்களிடம் கொடுத்துள்ளார். அவர் தனது திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக இந்த ஜனக்கூட்டத்தின் மூலமாகவே வெளிப்படுத்துவார். எனவே தேவனின் சுதந்தரத்தைப் பெறப்போகின்றவர்கள் நீங்களே, அது மாத்திரமல்ல தேவனின் மகிமைக்கான வாரிசுகளும் நீங்களே. உங்களுக்கு ஒருவேளை "அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." என்ற வசனம் நினைவுக்கு வரலாம். நீங்கள் அனைவரும் இந்த வார்த்தைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எவருமே அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று உங்களுக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தைக் குறித்து ஆழமான ஒரு தெளிவு உள்ளது. இந்த வார்த்தைகள் தேவனால் இறுதி நாட்களில் நிறைவேற்றப்படும், மேலும்தன் தேசத்தில் சுருண்டு கிடக்கும் அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டவர்களிடம் அது நிறைவேறும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனைத் துன்புறுத்துகின்றது, அது தேவனின் எதிரியாக இருக்கின்றது, எனவே இந்தத் தேசத்தில் தேவனை விசுவாசிக்கின்றவர்கள் யாவரும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவார்கள், இதன் மூலம் இந்த வார்த்தைகள் இந்த ஜனக்கூட்டமாகிய உங்களிடத்தில் நிறைவேறுகின்றது. ஏனென்றால் அது தேவனை எதிர்க்கின்ற ஒரு தேசத்திலேயே இறங்கியிருக்கின்றது. தேவனின் அனைத்து கிரியைகளும் மிகப்பெரிய இடையூறுகளைச் சந்திக்கின்ற காரணத்தால் அவரின் வார்த்தைகளை நிறைவேற்ற அதிகக் காலம் எடுத்துக்கொள்கிறது, அந்தப்படியே மக்கள் தேவ வார்த்தையின் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றார்கள், இதுவும் பாடுகள் அனுபவிப்பதன் ஒரு பங்காகும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தனது கிரியையை நடப்பிப்பது தேவனுக்கு மிகக் கடினமாகும், ஆனால் இந்தக் கடினத்தினூடாகவே தனது ஒரு கட்டக் கிரியையைத் தேவன் செய்கின்றார், அது அவரது ஞானத்தையும் அதிசயமான கிரியைகளையும் வெளிப்படுத்துவதோடு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மக்கள் கூட்டத்தை முழுமையாக்குவதுமாகும். மக்களின் பாடுகளினூடாகவும், அவர்களின் திறமையினூடாகவும் அனைத்து சாத்தானுக்கேதுவான மனநிலைக்கு ஊடாகவுமே தேவன் தனது தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆதாயப்படுத்துதல் பணியைச் செய்கிறார். இதன் மூலம் அவர் மகிமையடைந்து அவரது செயல்களுக்குச் சாட்சி பகர்கின்ற ஜனங்களை அவர் ஆதாயப்படுத்திக்கொள்வார். தேவன் இந்த மக்கள் கூட்டத்திற்கு செய்த அனைத்து தியாகங்களின் முழுமையான முக்கியத்துவம் என்னவெனில் தேவன் தனது ஆதாயப்படுத்தல் கிரியையை அவரை எதிர்க்கின்றவர்களினூடாகாவே செய்கின்றார், அதனூடாகவே தேவனின் மகத்தான வல்லமை வெளிப்படும். இதை வேறுவிதமாய்ச் சொன்னால், தூய்மை இல்லாத தேசத்தில் வாழ்கின்ற மக்கள் மாத்திரமே தேவனின் கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ள பாத்திரராய் இருக்கின்றார்கள், மேலும் இது மாத்திரமே தேவனின் மகத்தான வல்லமையை முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடியது. அதனாலேயே இது தூய்மையற்ற தேசத்திலிருந்து வந்தது, இவ்வாறான ஒரு தேசத்தில் வாழ்கின்ற மக்களிடமிருந்தே தேவனின் மகிமை பெறப்படுகின்றது. இதுவே தேவனின் சித்தம். இயேசுவும் இவ்வாறான ஒரு கட்டத்திலேயே கிரியை செய்தார்: அவரைத் துன்புறுத்திய பரிசேயர் முன்னாலேயே அவர் மகிமையை அடைய முடியும். பரிசேயரின் துன்புறுத்தலோ யூதாசின் காட்டிக்கொடுத்தலோ இல்லாமல் போய் இருந்தால், இயேசு ஏளனத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகியிருக்கமாட்டார், அதைவிட அவர் மிக நிச்சயமாகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார், அதனாலே அவர் மகிமையடைந்திருக்கமாட்டார். எங்கே தேவன் ஒவ்வொரு காலத்திலும் கிரியை செய்கின்றாரோ, அவர் எங்கே தனது கிரியையை மாம்சத்தில் செய்கின்றாரோ, அங்கேயே அவர் தனது மகிமையையும் அவர் ஆதாயப்படுத்த எண்ணுகின்றவர்களையும் பெறுகின்றார். தேவனின் கிரியைக்கான திட்டமும் அதற்கான அவரின் நிர்வகித்தலும் இதுவே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க