தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 187

மே 2, 2023

அந்தக் காலகட்டத்தில் இயேசு யூதேயாவில் கிரியை செய்தபோது, அவர் அதை வெளிப்படையாகச் செய்தார், ஆனால் இப்போது, நான் உங்களிடையே ரகசியமாகக் கிரியை செய்கிறேன், ரகசியமாகப் பேசுகிறேன். அவிசுவாசிகளுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. உங்களிடையேயான எனது கிரியை, என்னை அறியாதவர்களுக்குத் தெரியாது. இந்த வார்த்தைகள், இந்த சிட்சைகள் மற்றும் நியாயத்தீர்ப்புகள் ஆகியவற்றை நீங்கள் மட்டுமே அறிவீர்கள், மற்றவர்கள் அறியார். இந்தக் கிரியைகள் அனைத்தும் உங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டு உங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன; அவிசுவாசிகளில் எவருக்கும் இது தெரியாது, ஏனென்றால் அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. இங்குள்ள இந்த ஜனங்கள் சிட்சைகளை அனுபவித்தபின் பரிபூரணமாக்கப்படும் நிலையில் இருக்கின்றனர், ஆனால் வெளியில் இருப்பவர்களுக்கு இது எதுவும் தெரியாது. இந்தக் கிரியை அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது! அவர்களுக்கு மாம்சமாகிய தேவன் தம்மை வெளிக்காட்டுவதில்லை, ஆனால் இந்தப் பிரவாகத்தில் இருப்பவர்களுக்கு அவர் வெளிப்படையாக இருக்கிறார் என்று சொல்லலாம். தேவனிடத்தில் சகலமும் வெளிப்படையாக இருந்தாலும், சகலமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், சகலமும் விடுவிக்கப்பட்டிருந்தாலும், இது அவரை விசுவாசிப்பவர்களுக்கு மட்டுமே சத்தியமாக இருக்கிறது; மீதமுள்ளவர்களைப் பொறுத்தவரை, அவிசுவாசிகளைப் பொறுத்தவரை, எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை. உங்களுக்கிடையில் மற்றும் சீனாவில் தற்போது செய்யப்பட்டுவரும் கிரியைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க, அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கிரியையை அவர்கள் அறிந்திருந்தால், அவர்கள் செய்வதெல்லாம் அதைக் கண்டிப்பதும், அதைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவதுமே ஆகும். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். மிகவும் பின்தங்கிய இடமான சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் கிரியை செய்வது எளிதான காரியமல்ல. இந்தக் கிரியை வெளிப்படையாகச் செய்யப்படுமானால், இதைத் தொடர்ந்து செய்வது சாத்தியமற்றதாகிவிடும். இந்தக் கட்டக் கிரியையை இந்த இடத்தில் வெறுமனே செய்ய முடியாது. இந்தக் கிரியை வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டுமானால், அவர்கள் அதை எவ்வாறு முன்னோக்கிச் செல்ல அனுமதிப்பர்? இது கிரியையை இன்னும் பெரிய ஆபத்தில் சிக்க வைக்காதா? இந்தக் கிரியை மறைக்கப்படாமல், இயேசுவின் காலத்தில் அவர் நோயுற்றவர்களை அற்புதமாகக் குணமாக்கி, பேய்களை விரட்டியடித்தது போலத் தற்போதும் நிகழ்ந்திருந்தால், இந்தக் கிரியை வெகு காலத்திற்கு முன்பே பிசாசுகளால் "பிடிக்கப்பட்டிருக்காதா"? தேவன் இருக்கிறார் என்பதை அவர்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா? மனுஷனுக்குப் பிரசங்கிப்பதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும் நான் இப்போது ஜெப ஆலயங்களுக்குள் நுழைந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே துண்டுகளாகிப் போயிருக்க மாட்டேனா? இது நடந்திருந்தால், எனது கிரியை எவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும்? எந்த அடையாளங்களும் அதிசயங்களும் வெளிப்படையாக வெளிப்படுவதில்லை என்பதற்கான காரணம் அவற்றை மறைப்பதற்காகத்தான். எனவே, அவிசுவாசிகளுக்கு, எனது கிரியையைக் காணவோ, அறியவோ, கண்டுபிடிக்கவோ முடியாது. கிருபையின் யுகத்தில் இயேசு செய்ததைப் போலவே கிரியையின் இந்தக் கட்டமும் செய்யப்பட வேண்டும் என்றால், அது இப்போது இருப்பதைப் போலச் சீராக இருந்திருக்க முடியாது. எனவே, இவ்வழியில் ரகசியமாகக் கிரியை செய்வது உங்களுக்கும், கிரியைக்கும் மொத்தமாகப் பயனளிக்கும். பூமியில் தேவனின் கிரியை நிறைவடையும் போது, அதாவது, இந்த ரகசியக் கிரியை நிறைவடையும் போது, கிரியையின் இந்தக் கட்டம் வெளியரங்கமாக வெளிப்படுத்தப்படும். சீனாவில் ஜெயங்கொண்டவர்களின் குழு ஒன்று இருப்பதை அனைவரும் அறிவார்கள்; தேவன் சீனாவில் மாம்சமாகியிருக்கிறார் என்பதையும், அவருடைய கிரியை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் அனைவரும் அறிந்துகொள்வார்கள். அப்போதுதான் அது மனுஷன் மீது விடியும்: சீனா ஏன் இன்னும் தனது வீழ்ச்சியையோ அல்லது தகர்ந்துபோதலையோ வெளிக்காட்டவில்லை? தேவன் தமது கிரியையை சீனாவில் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு வருகிறார், மேலும் ஒரு குழுவினரை ஜெயங்கொண்டவர்களாகப் பரிபூரணமாக்கியிருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (2)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க