தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 184
பிப்ரவரி 17, 2023
அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியிருந்தது. இரட்சிப்பு என்பதற்கு மனுஷன் இயேசுவினால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டான் என்று அர்த்தமல்ல, ஆனால் அந்த மனுஷனிடம் இனி பாவம் இல்லை என்றும், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமாகிறது. நீ விசுவாசித்தால், இனி நீ ஒருபோதும் பாவம் செய்தவனாக இருக்கமாட்டாய். அந்த நேரத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார், ஜனங்களுக்குப் புரியாத பலவற்றை அதிகம் கூறினார். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, அவர் புறப்பட்டுச் சென்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தேயு இயேசுவுக்கு ஒரு வம்ச அட்டவணையை உருவாக்கினார், மற்றவர்களும் மனுஷனின் சித்தத்திற்கு ஏற்ற பல கிரியைகளைச் செய்தனர். இயேசு மனுஷனைப் பரிபூரணமாக்கவும், அவனை ஆதாயப்படுத்தவும் வரவில்லை, ஆனால் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்ய வந்தார், அவை: பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருவதும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிப்பதும் ஆகும். ஆகவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன், அவருடைய கிரியை முழுமையாக முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போதைய கட்டத்தில்—ஜெயங்கொள்வதற்கான கிரியையில்—அதிக வார்த்தைகள் பேசப்பட வேண்டும், அதிகக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் பல செயல்முறைகளும் இருக்க வேண்டும். ஆக இயேசு மற்றும் யேகோவாவின் கிரியையின் மறைபொருட்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், இதன்மூலம் எல்லா ஜனங்களும் தங்கள் விசுவாசத்தில் புரிதலும் தெளிவும் பெறுவர். ஏனென்றால் இது கடைசிக் காலத்தின் கிரியை, கடைசிக் காலம் என்பது தேவனுடைய கிரியையின் முடிவு, கிரியை முடிவடையும் நேரம். கிரியையின் இந்தக் கட்டம் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் மீட்பையும் உனக்குத் தெளிவுபடுத்துகிறது, மேலும் இது தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் முழு கிரியையையும் நீ புரிந்துகொள்வதற்கும், இதன் அனைத்து முக்கியத்துவத்தையும் சாராம்சத்தையும் புரிந்துகொள்ளவும் உனக்கு உதவுகிறது. அதுமட்டுமன்றி, இயேசு செய்த அனைத்துக் கிரியைகளின் நோக்கத்தையும் அவர் பேசிய வார்த்தைகளையும் நீ புரிந்து கொள்ளவும், மேலும் வேதாகமத்தின் மீதுள்ள உன் குருட்டு விசுவாசத்தையும் வணக்கத்தையும் புரிந்து கொள்ளவும் இந்தக் கிரியை உதவுகிறது. இவை அனைத்தையும் நீ முழுமையாகப் புரிந்துகொள்ள இது உனக்கு உதவும். இயேசு செய்த கிரியையையும், தேவனின் இன்றைய கிரியையையும் நீ புரிந்துகொள்வாய்; சத்தியம், ஜீவன் மற்றும் வழி ஆகிய அனைத்தையும் நீ புரிந்துகொள்வாய் மற்றும் காண்பாய். இயேசு செய்த கிரியையின் கட்டத்தில், முடித்துவைப்பதற்கான கிரியையைச் செய்யாமல் இயேசு ஏன் புறப்பட்டுச் சென்றார்? ஏனென்றால், இயேசுவினுடைய கிரியையின் கட்டம் முடித்துவைப்பதற்கான கிரியை அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வார்த்தைகளும் முடிவுக்கு வந்தன; அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவருடைய கிரியை முழுமையாக நிறைவுபெற்றது. தற்போதைய கட்டம் வேறுபட்டது: வார்த்தைகள் இறுதிவரை பேசப்பட்டு, தேவனின் கிரியை முழுவதும் முடிந்த பின்னரே அவருடைய கிரியை நிறைவுபெறும். இயேசுவினுடைய கிரியையின் போது, பல வார்த்தைகள் சொல்லப்படாமல் இருந்தன, அல்லது அவை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும், இயேசு அவர் என்ன செய்தார் அல்லது எதைச் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவருடைய ஊழியம் வார்த்தைகளின் ஊழியம் அல்ல, ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். கிரியையின் அந்தக் கட்டம் முக்கியமாக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இருந்தது, அது தற்போதைய கட்டத்தைப் போன்றது அல்ல. கிரியையின் தற்போதைய கட்டமானது நிறைவு செய்வதற்கும், சுத்திகரிப்பதற்கும், மற்றும் அனைத்துக் கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வார்த்தைகள் அவற்றின் இறுதிவரை பேசப்படாவிட்டால், இந்தக் கிரியையை முடிக்க எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டத்தில் அனைத்துக் கிரியைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், இயேசு மனுஷனுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார். அவர் அமைதியாகப் புறப்பட்டுச் சென்றார், இன்றும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்களது புரிதல் பிழையானது, ஆனால் அது சரியானதுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், தவறு செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முடிவில், இறுதிக் கட்டம் தேவனின் கிரியையை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் அதன் நிறைவையும் வழங்கும். தேவனின் ஆளுகைத் திட்டத்தை அனைவரும் புரிந்துகொண்டு அறிந்து கொள்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் கருத்துக்கள், அவனுடைய நோக்கங்கள், தவறான மற்றும் மூடத்தனமான புரிதல், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய அவனது கருத்துக்கள், புறஜாதியாரைப் பற்றிய அவனது கருத்துக்கள் மற்றும் அவனது பிற விலகிச் செல்லுதல்கள் மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும். மனுஷன், ஜீவிதத்தின் சரியான பாதைகள் அனைத்தையும், தேவனால் செய்யப்பட்ட எல்லாக் கிரியைகளையும், முழு சத்தியத்தையும் புரிந்துகொள்வான். அது நிகழும்போது, கிரியையின் இந்தக் கட்டம் நிறைவுக்கு வரும். உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியை எல்லா இடங்களைக் காட்டிலும் பிரகாசமான இடத்தில் மேற்கொள்ளப்பட்டது, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்யான தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும். எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமாக இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அது மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் என்று சொல்லாமல் போகிறது. எனவே, ஜெயங்கொள்ளப்படுவதற்கான கிரியை சீனாவில் மட்டுமே அர்த்தமுள்ள அடையாளத்தைக் கொண்டுள்ளது. சீனா அந்தகாரத்தின் அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்குகிறது, மேலும் சீன ஜனங்கள் சாத்தானின் மாம்சமாக இருப்பவர்களையும், மாம்சமும் இரத்தமுமாக இருக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் மிகவும் சீர்கெட்டுப்போன சீன ஜனங்கள்தான், தேவனுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், அவர்களின் மனுஷத்தன்மை மிகவும் கீழ்த்தரமானது மற்றும் தூய்மையற்றது, எனவே அவர்கள்தான் சீர்கெட்டுப்போன முழு மனுஷகுலத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இதனால் மற்ற தேசங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது; மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, இந்தத் தேசங்களின் ஜனங்கள் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரை எதிர்ப்பதாகவே இருக்கக் கூடும். யூதர்களும் எதற்காக தேவனை எதிர்த்தார்கள், எதற்காக அவரை மீறினார்கள்? பரிசேயர்களும் ஏன் அவரை எதிர்த்தார்கள்? யூதாஸ் ஏன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? அந்த நேரத்தில், சீஷர்களில் பலருக்கு இயேசுவை தெரியாது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த பின்பும் ஜனங்கள் ஏன் அவரை நம்பவில்லை? மனுஷனின் கீழ்ப்படியாமை அனைத்தும் ஒன்றுபோல் இல்லையா? சீன ஜனங்கள் எடுத்துக்காட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் ஜெயங்கொள்ளப்படும்போது, மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் மாறுகிறார்கள், மேலும் மற்றவர்களுக்கான சான்றாதாரங்களாக இருப்பார்கள். எனது ஆளுகைத் திட்டத்திற்கு நீங்கள் ஒரு துணைப்பொருள் என்று நான் ஏன் எப்போதும் கூறிவந்தேன்? சீர்கேடு, தூய்மையற்ற தன்மை, அநீதி, எதிர்ப்பு, கலகம் ஆகியவை சீன ஜனங்களில் தான் முழுமையாக வெளிக்காட்டப்பட்டு அவற்றின் அனைத்து மாறுபட்ட வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறம், அவர்கள் மோசமான திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், மறுபுறம், அவர்களின் ஜீவிதங்களும் மனநிலையும் பின்தங்கியவையாக இருக்கின்றன, மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், சமூகச் சூழல், பிறந்த குடும்பம் அனைத்துமே மோசமாக மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அவர்களின் அந்தஸ்தும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இடத்திலுள்ள கிரியை அடையாளமாக இருக்கிறது, மேலும் இந்தச் சோதனைக் கிரியை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேவனின் அடுத்தடுத்தக் கிரியைகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடைந்தால், அடுத்தடுத்தக் கிரியைகள் எளிதாக இருக்கும். கிரியையின் இந்தக் கட்டம் முடிந்தவுடன், மகத்தான ஜெயம் முழுமையாகக் கிடைக்கும், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் ஜெயங்கொள்வதற்கான கிரியை முழுமையான முடிவுக்கு வந்திருக்கும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்