தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 183

பிப்ரவரி 23, 2023

இயேசு முப்பத்து மூன்றரை ஆண்டுகளாக பூமியில் இருந்தார், சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்யவே அவர் வந்தார். மேலும் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் தேவன் தம்முடைய மகிமையின் ஒரு பகுதியைப் பெற்றார். தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் மனத்தாழ்மையுடனும் மறைவாகவும் இருக்க முடிந்தது மற்றும் மிகுந்த துன்பங்களையும் தாங்க முடிந்தது. அவர் தேவனாக இருந்தபோதிலும், ஒவ்வொரு அவமானத்தையும் ஒவ்வொரு அவதூறையும் அவர் சகித்துக்கொண்டார். மீட்பின் கிரியையை முடிக்க சிலுவையில் அறையப்பட்டதில் மிகுந்த வேதனையை அவர் சகித்தார். இந்தக் கட்ட கிரியை முடிந்தபின், தேவன் மிகுந்த மகிமையைப் பெற்றார் என்பதை ஜனங்கள் கண்டாலும், அது அவருடைய முழுமையான மகிமையாக இருக்கவில்லை; அது அவர் இயேசுவிடம் இருந்து பெற்ற அவருடைய மகிமையின் ஒரே ஒரு பகுதி மட்டுமே. இயேசுவால் ஒவ்வொரு கஷ்டத்தையும் சகித்துக்கொள்ளவும், தாழ்மையாகவும், மறைவாகவும், தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் முடிந்தது என்றாலும், தேவன் தம்முடைய மகிமையின் ஒரு பகுதியை மட்டுமே பெற்றார், மற்றும் அவருடைய மகிமை இஸ்ரவேலில் பெறப்பட்டது. தேவனுக்கு மகிமையின் இன்னொரு பகுதி உள்ளது: அது, நடைமுறையில் கிரியை செய்வதற்கும் ஒரு ஜனக்கூட்டத்தைப் பரிபூரணமாக்குவதற்கும் அவர் பூமிக்கு வருவதாகும். இயேசுவின் கிரியையின் கட்டத்தின்போது சில இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்தார். ஆனால் அந்தக் கிரியை அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைச் செய்வதற்காக மட்டுமே செய்யப்பட்டதல்ல. இயேசு தேவனை நேசித்ததால் பாடுகள் படவும், தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் முடிந்தது என்பதையும், மிகுந்த வேதனையை அனுபவிக்க முடிந்தது என்பதையும், தேவன் அவரைக் கைவிட்டாலும், தேவனுடைய சித்தத்திற்காக தம் உயிரைத் தியாகம் செய்ய அவர் இன்னும் தயாராக இருக்கிறார் என்பதையும் முதன்மையாகக் காட்டியது. தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையை முடித்தபின், இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், தேவன் மகிமை அடைந்தார், மற்றும் அவர் சாத்தானுக்கு முன்பாக சாட்சியளித்தார். சீனாவில் தேவன் எப்படி மாம்சமாகியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்ததுமில்லை, பார்த்ததுமில்லை, ஆகையால் தேவன் மகிமையை அடைந்திருப்பதை உங்களால் எவ்வாறு பார்க்க முடியும்? தேவன் உங்களுக்குள் ஜெயம் கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, நீங்கள் உறுதியாக நிற்கும்போது, தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டம் ஜெயமாக இருக்கிறது. இது தேவனுடைய மகிமையின் ஒரு பகுதியாகும். நீங்கள் இதை மட்டுமே பார்க்கிறீர்கள், நீங்கள் இன்னும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை. உங்கள் இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுக்கவில்லை. இந்த மகிமையை நீங்கள் இன்னும் முழுவதுமாகக் காணவில்லை. தேவன் ஏற்கனவே உங்கள் இருதயத்தை ஜெயங்கொண்டுள்ளார் என்பதையும், உங்களால் ஒருபோதும் அவரை விட்டு விலக முடியாது என்பதையும், தேவனை நீங்கள் இறுதிவரை பின்பற்றுவீர்கள் என்பதையும், உங்கள் இருதயம் மாறாது என்பதையும், இது தேவனுடைய மகிமை என்பதையும் மட்டுமே நீங்கள் காண்கிறீர்கள். தேவனுடைய மகிமையை நீங்கள் எதில் காண்கிறீர்கள்? ஜனங்களிடம் காணப்படும் அவருடைய கிரியையின் விளைவுகளில் காண்கிறீர்கள். தேவன் மிகவும் அழகானவர். ஜனங்கள் தங்கள் இருதயத்தில் தேவனைக் கொண்டுள்ளார்கள். அவரை விட்டுவிட விரும்பவில்லை. இது தேவனுடைய மகிமையாகும். திருச்சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் பெலன் பெருகும்போது, அவர்களால் தங்கள் இருதயத்திலிருந்து தேவனை நேசிக்க முடியும், தேவன் செய்த கிரியையின் மிக உயர்ந்த வல்லமையைப் பார்க்க முடியும், அவருடைய வார்த்தைகளின் ஒப்பற்ற வல்லமையையும், அவருடைய வார்த்தைகள் அதிகாரம் கொண்டவை என்பதையும் காணும் போது சீன நிலப்பரப்பின் ஆவி நகரத்தில் அவர் தமது கிரியையைத் தொடங்க முடியும். ஜனங்கள் பலவீனமாக இருந்தாலும், அவர்களுடைய இருதயங்கள் தேவனுக்கு முன்பாக வணங்குகின்றன மற்றும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் பலவீனர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகள் மிகவும் அன்பானவை என்பதையும், அவற்றின் நேசத்திற்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்கள் என்பதையும் அவர்களால் காண முடியும். இது தேவனுடைய மகிமையாகும். ஜனங்கள் தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு, அவருக்கு முன்பாக சரணடையும் மற்றும் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் நாள் வரும் போது, அவர்களுடைய வாய்ப்புகளையும் தலைவிதியையும் தேவனுடைய கைகளில் விட்டுவிடக்கூடிய நாள் வரும் போது, தேவனுடைய மகிமையின் இரண்டாம் பகுதி முழுவதுமாக அடையப்பட்டிருக்கும். அதாவது, நடைமுறை தேவனுடைய கிரியை முழுவதுமாக முடிந்ததும், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் அவரது கிரியை முடிவுக்கு வரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் பரிபூரணப்படுத்தப்படும்போது, தேவன் மகிமையை அடைந்திருப்பார். தேவன் தமது மகிமையின் இரண்டாம் பகுதியை கிழக்கிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆனால் அது மனிதக் கண்ணுக்குத் தெரியவில்லை. தேவன் தமது கிரியையை கிழக்கிற்குக் கொண்டு வந்துள்ளார். அவர் ஏற்கனவே கிழக்குக்கு வந்துவிட்டார். இது தேவனுடைய மகிமையாகும். இன்று, அவருடைய கிரியை இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், தேவன் கிரியை செய்ய முடிவு செய்திருப்பதால், அது நிச்சயமாக நிறைவேறும். சீனாவில் இந்தக் கிரியையை நிறைவேற்றப் போவதாக தேவன் முடிவு செய்துள்ளார். உங்களைப் பரிபூரணப்படுத்த அவர் தீர்மானித்துள்ளார். ஆகவே, அவர் உங்களுக்கு எந்த வழியையும் கொடுக்கவில்லை—அவர் ஏற்கனவே உங்கள் இருதயங்களை ஜெயங்கொண்டிருக்கிறார், மற்றும் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீ தொடர்ந்து செயல்பட வேண்டும், தேவன் உங்களை ஆதாயம் செய்யும்போது, தேவன் மகிமை அடைகிறார். இன்று, தேவன் இன்னும் முழு மகிமையையும் அடையவில்லை, ஏனென்றால், நீங்கள் இன்னும் பரிபூரணமாக்கப்படவில்லை. உங்கள் இருதயங்கள் தேவனிடம் திரும்பியிருந்தாலும், உங்கள் மாம்சத்தில் இன்னும் பல பலவீனங்கள் உள்ளன, உங்களால் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது, தேவனுடைய சித்தத்தை உங்களால் கவனத்தில் கொள்ள முடியாது. உங்களை விட்டு விலக்கி வைக்க வேண்டிய பல எதிர்மறையான விஷயங்களை நீங்கள் இன்னும் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் பல சோதனைகள் மற்றும் சுத்திகரிப்புகளுக்கு உட்பட வேண்டும். அவ்விதத்தில் மட்டுமே உங்களுடைய ஜீவித மனநிலைகளால் மாற்றம் பெற முடியும் மற்றும் நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படவும் முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “‘ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது’ என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க