தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 180
மே 2, 2023
தேவனின் கிரியையை மனுஷனின் கிரியையிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மனுஷனின் கிரியையில் உன்னால் என்ன பார்க்க முடியும்? மனுஷனின் கிரியையில் அவனது அனுபவத்தின் பல கூறுகள் இருக்கின்றன; மனுஷன் அவன் என்னவாக இருக்கிறான் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறான். தேவனின் சொந்தக் கிரியையும் அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது, ஆனால் அவரது இருப்புநிலையானது மனுஷனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. மனுஷனின் இருப்புநிலையானது அவனது அனுபவத்தையும் ஜீவிதத்தையும் குறிக்கிறது (மனுஷன் தனது ஜீவிதத்தில் என்ன அனுபவிக்கிறான் அல்லது எதை எதிர்கொள்கிறான், அல்லது அவனிடமிருக்கும் ஜீவிப்பதற்கான தத்துவங்கள் ஆகியவை), மேலும் வெவ்வேறு சூழல்களில் வாழும் ஜனங்கள் வெவ்வேறு இருப்புநிலைகளை வெளிப்படுத்துகிறார்கள். நீ சமுதாயத்தின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறாயா, நீ உனது குடும்பத்தில் உண்மையில் எப்படி ஜீவிக்கிறாய் என்பதையும் அதற்குள் இருக்கும் அனுபவத்தையும் நீ வெளிப்படுத்தியவற்றில் காணலாம், அதேசமயம் உன்னால் தேவனின் கிரியையில் மாம்சமாகிய தேவனுக்கு சமூக அனுபவங்கள் உள்ளதா என்பதையும் பார்க்க முடியாது. மனுஷனின் சாராம்சத்தை அவர் நன்கு அறிவார், மேலும் அனைத்து வகையான ஜனங்களுக்கும் தொடர்புடைய அனைத்து வகையான நடைமுறைகளையும் அவரால் வெளிப்படுத்த முடியும். மனுஷரின் சீர்கெட்ட மனநிலையையும் கலகத்தனமான நடத்தையையும் வெளிப்படுத்துவதில் அவர் இன்னும் சிறந்தவராக இருக்கிறார். அவர் உலக ஜனங்களிடையே ஜீவிக்கவில்லை என்றாலும், மனுஷரின் சுபாவம் மற்றும் உலக ஜனங்கள் அனைவரின் சீர்கேடுகளையும் அவர் அறிந்திருக்கிறார். இதுவே அவருடைய இருப்புநிலை ஆகும். அவர் உலகத்தைக் கையாள்வதில்லை என்றாலும், உலகத்தைக் கையாள்வதற்கான விதிகளை அவர் அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் மனுஷ சுபாவங்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறார். இன்றைய மற்றும் கடந்த காலங்களில் மனுஷனின் கண்களால் பார்க்க முடியாத மற்றும் மனுஷனின் செவிகளால் கேட்க முடியாத ஆவியானவரின் கிரியையைப் பற்றி அவர் அறிந்திருக்கிறார். இதில் ஜீவிப்பதற்கான தத்துவம் அல்லாத ஞானமும், ஜனங்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும் அதிசயங்களும் அடங்கும். இதுதான் அவருடைய இருப்புநிலை, ஜனங்களுக்குத் தெரியும்படியும் இருக்கிறது, ஜனங்களிடமிருந்து மறைக்கப்பட்டும் இருக்கிறது. அவர் வெளிப்படுத்தும் விஷயங்களானது ஒரு அசாதாரண நபர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருப்பது இல்லை, ஆனால் உள்ளார்ந்த பண்புகள் கொண்ட ஆவியானவர் வெளிப்படுத்தும் விஷயங்களாக இருக்கின்றன. அவர் உலகில் பயணம் செய்வதில்லை, ஆனாலும் அவை எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். அவர் அறிவு அல்லது நுண்ணறிவு இல்லாத "மனுஷக்குரங்கினங்களை" தொடர்பு கொள்கிறார், ஆனால் அறிவை விட உயர்ந்த மற்றும் பெரிய மனுஷருக்கு மேலான வார்த்தைகளை அவர் வெளிப்படுத்துகிறார். அவர் மனுஷத்தன்மை இல்லாத மற்றும் மனுஷகுலத்தின் மரபுகளையும் ஜீவிதத்தையும் புரிந்து கொள்ளாத ஒரு குழப்பமான மற்றும் உணர்ச்சியற்ற ஜனக்கூட்டத்திற்குள் ஜீவிக்கிறார், ஆனால் அவரால் சாதாரண மனுஷத்தன்மையில் ஜீவிக்குமாறு மனுஷகுலத்தை கேட்டுக்கொள்ள முடியும், அதே நேரத்தில் மனுஷத்தன்மையின் அடிப்படையையும் அதன் இழிவான தன்மையையும் அவர் வெளிப்படுத்துகிறார். இவை அனைத்தும் அவருடைய இருப்புநிலை தான், இவை மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபரின் இருப்புநிலையை விட உயர்ந்ததாக இருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் மற்றும் சீர்கெட்ட மனுஷகுலத்தின் சாராம்சத்தை முழுமையாக வெளிப்படுத்தவும் சிக்கலான, தொந்தரவான, மோசமான சமூக ஜீவிதத்தை அனுபவிப்பது தேவையற்றதாக இருக்கிறது. ஒரு மோசமான சமூக ஜீவிதமானது அவருடைய மாம்சத்தை மேம்படுத்துவதில்லை. அவரது கிரியையும் வார்த்தைகளும் மனுஷனின் கீழ்ப்படியாமையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன, மேலும் அவை மனுஷனுக்கு உலகத்தைக் கையாள்வதற்கான அனுபவத்தையும் பாடங்களையும் வழங்குவதில்லை. அவர் மனுஷனுக்கு ஜீவனை வழங்கும்போது சமூகம் அல்லது மனுஷனின் குடும்பத்தை ஆராயத் தேவையில்லை. மனுஷனை வெளிப்படுத்துவதும் நியாயத்தீர்ப்பளிப்பதும் அவருடைய மாம்சத்தின் அனுபவங்களின் வெளிப்பாடாக இருப்பதில்லை; நீண்ட காலமாக மனுஷனின் கீழ்ப்படியாமையை அறிந்த பின்பும், மனுஷகுலத்தின் சீர்கேட்டை வெறுத்த பின்பும் மனுஷனின் அநீதியை அவர் வெளிப்படுத்துவதே அவரது வெளிப்பாடாக இருக்கிறது. அவர் செய்யும் கிரியையானது மனுஷனுக்கு அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதற்கும் அவருடைய இருப்புநிலையை வெளிப்படுத்துவதற்குமே செய்யப்படுகிறது. அவரால் மட்டுமே இந்த கிரியையைச் செய்ய முடியும்; இது மாம்சத்தாலும் இரத்தத்தாலுமான நபர் அடையக்கூடிய ஒன்று இல்லை.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்