தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 175
மே 2, 2023
எல்லா வகையான ஜனங்களின் அனுபவங்களும் அவர்களுக்குள் இருக்கும் விஷயங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. எந்தவொரு ஆவிக்குரிய அனுபவமும் இல்லாத எவரும் சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பற்றியோ, பல்வேறு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான அறிவைப் பற்றியோ பேச முடியாது. மனுஷன் அகத்தில் எப்படி இருக்கிறானோ அதைத்தான் வெளிப்படுத்துகிறான்—இது நிச்சயம். ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய அறிவையும், சத்தியத்தைப் பற்றிய அறிவையும் பெற்றிருக்க நீ விரும்பினால், உனக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும். மனுஷ ஜீவிதத்தில் பொது அறிவு பற்றி உன்னால் தெளிவாகப் பேச முடியாவிட்டால், எப்படி உன்னால் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேச முடியும்? திருச்சபைகளை வழிநடத்தி, ஜனங்களுக்கு ஜீவனை வழங்குகிறவர்களாகவும், ஜனங்களுக்கு அப்போஸ்தலர்களாகவும் இருக்கக்கூடியவர்களுக்கு உண்மையான அனுபவம் இருக்க வேண்டும்; அவர்களுக்கு ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய சரியான புரிதலும், சத்தியத்தைப் பற்றிய சரியான அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும். அத்தகையவர்கள் மட்டுமே திருச்சபைகளை வழிநடத்தும் ஊழியக்காரர்களாக அல்லது அப்போஸ்தலர்களாக இருக்க தகுதியுடையவர்கள். இல்லையெனில், அவர்கள் மிகத் தாழ்ந்தவர்களாக இருந்து பின்பற்ற மட்டுமே முடியும், வழிநடத்த முடியாது, மேலும் ஜனங்களுக்கு ஜீவனை வழங்கக்கூடிய அப்போஸ்தலர்களாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், அப்போஸ்தலர்களின் செயல்பாடு விரைவாக செயல்படுவதோ அல்லது போராடுவதோ அல்ல; ஜீவனுக்கு ஊழியம் செய்யும் கிரியையை செய்வதற்கும் மற்றவர்களை அவர்களின் மனநிலையை மாற்றுவதற்கு வழிவகுக்கும் கிரியையைச் செய்வதும்தான் அப்போஸ்தலர்களின் செயல்பாடாக இருக்கிறது. இந்தச் செயல்பாட்டைச் செய்பவர்கள் ஒரு கனமான பொறுப்பை ஏற்க நியமிக்கப்படுகிறார்கள், இந்தப் பொறுப்பானது யாராலும் தோள்களில் சுமக்க முடியாததாக இருக்கிறது. இந்த வகையான கிரியையை ஜீவனை அறிந்தவர்கள், அதாவது சத்திய அனுபவமுள்ளவர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். வெறுமனே கைவிடக்கூடிய, விரைந்து செயல்படக்கூடிய, அல்லது தங்களையே செலவழிக்க விரும்பும் எவராலும் இதை மேற்கொள்ள முடியாது; சத்திய அனுபவம் இல்லாதவர்கள், கிளைநறுக்கப்படாதவர்கள் அல்லது நியாயந்தீர்க்கப்படாதவர்கள் ஆகியோரால் இந்த வகை கிரியைகளைச் செய்ய இயலாது. எந்த அனுபவமும் இல்லாத ஜனங்களால், யதார்த்தம் இல்லாத ஜனங்களால் யதார்த்தத்தை தெளிவாகக் காண முடிவதில்லை, ஏனென்றால் அவர்களும் இந்த வகையானவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, இந்த வகையான நபரால் தலைமைதாங்கும் கிரியைகளைச் செய்ய இயலாது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் நீண்ட காலம் சத்தியம் இல்லாமல் இருந்தால், அவர்கள் புறம்பாக்கப்பட வேண்டும். நீ வெளிப்படுத்தும் நுண்ணறிவானது நீ ஜீவிதத்தில் அனுபவித்த கஷ்டங்கள், நீ சிட்சிக்கப்பட்டதற்கான விஷயங்கள் மற்றும் நீ நியாயந்தீர்க்கப்பட்டதற்கான சிக்கல்களுக்கு சான்றாக நிற்க முடியும். சோதனைகளுக்கான விஷயங்களுக்கும் இதுதான் உண்மையாக இருக்கிறது: நீ சுத்திகரிக்கப்பட்ட இடத்தில், நீ பலவீனமாக இருக்கிறாய்—இவையெல்லாம் உனக்கு அனுபவமுள்ள பகுதிகள், இவற்றில் உனக்கு ஒரு பாதையும் இருக்கிறது. உதாரணமாக, திருமணத்தில் யாராவது விரக்தியடைந்தால், அவர்கள் பெரும்பாலும், "தேவனுக்கு நன்றி, தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் தேவனுடைய இருதயத்தின் ஆசையை நிறைவேற்றி, அவருக்கு என் முழு ஜீவிதத்தையும் வழங்க வேண்டும், மேலும் எனது திருமணத்தை தேவனின் கைகளில் வைக்க வேண்டும். எனது முழு ஜீவிதத்தையும் தேவனிடம் பிணையம் வைக்க நான் தயாராக இருக்கிறேன்," என்று சொல்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அவன் பேசுவதன் மூலம் நிரூபிக்க முடியும். ஒரு நபரின் பேச்சின் வேகம், அவர்கள் சத்தமாகவோ அல்லது அமைதியாகவோ பேசினாலும்—இதுபோன்ற விஷயங்கள் அனுபவத்தின் விஷயங்களாக இருப்பதில்லை, மேலும் அவற்றில் என்ன இருக்கிறது என்பதையும் அவை என்னவாக இருக்கிறது என்பதையும் அவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியாது. இந்த விஷயங்களால் ஒரு நபரின் குணம் நல்லதா அல்லது கெட்டதா, அல்லது அவர்களின் சுபாவம் நல்லதா அல்லது கெட்டதா என்பதை மட்டுமே சொல்ல முடியும், ஆனால் ஒருவருக்கு அனுபவம் உள்ளதா என்பதை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பேசும்போது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன், அல்லது பேச்சுத் திறமை அல்லது வேகம் என்பது நடைமுறைக்கான ஒரு விஷயமாக இருக்கிறது, இதனால் உனது அனுபவத்தை மாற்ற முடியாது. உனது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி நீ பேசும்போது, நீ முக்கியமானவை என்று கருதும் மற்றும் உனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் நீ பேசுகிறாய். என் பேச்சு நான் இருப்பதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, ஆனால் நான் சொல்வது மனுஷனின் கைகளுக்கு எட்டாததாக இருக்கிறது. நான் சொல்வது மனுஷன் அனுபவிக்கும் விஷயமாக இருப்பதில்லை, அது மனுஷனால் பார்க்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை; இது மனுஷனால் தொடக்கூடிய ஒன்றாகவும் இருப்பதில்லை, ஆனால் அதுதான் நான். நான் அனுபவித்ததை மட்டுமே பேசுகிறேன் என்று சிலர் ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடு என்பதை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. நிச்சயமாக, நான் அனுபவித்த விஷயங்கள் பற்றிதான் நான் சொல்கிறேன். ஆறாயிரம் ஆண்டுகளாக நிர்வாகக் கிரியைகளைச் செய்தது நான் தான். மனுஷகுலத்தின் சிருஷ்டிப்பின் ஆதி முதல் இப்போது வரை அனைத்தையும் நான் அனுபவித்திருக்கிறேன்; என்னால் அதை எப்படி விவாதிக்காமல் இருக்க முடியும்? மனுஷனின் சுபாவத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், நான் அதைத் தெளிவாகக் கண்டிருக்கிறேன்; நான் அதை நீண்ட காலத்திற்கு முன்பே கவனித்தேன். இவ்வாறாக இருப்பின் இதைப் பற்றி என்னால் எப்படித் தெளிவாகப் பேசாமல் இருக்க முடியும்? மனுஷனின் சாராம்சத்தை நான் தெளிவாகக் கண்டதால், மனுஷனை சிட்சிப்பதற்கும் அவனை நியாயந்தீர்ப்பதற்கும் நான் தகுதியானவனாக இருக்கிறேன், ஏனென்றால் மனுஷர் அனைவரும் என்னிடமிருந்து வந்தவர்கள், ஆனால் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறார்கள். நிச்சயமாக, நான் செய்த கிரியையை மதிப்பிடுவதற்கான தகுதியும் எனக்கு உண்டு. இந்தக் கிரியை என் மாம்சத்தால் செய்யப்படவில்லை என்றாலும், இது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவே இருக்கிறது, என்னிடம் இருப்பது இதுதான், நான் என்னவாக இருக்கிறேனோ அதுவும் இதுதான். எனவே, அதை வெளிப்படுத்தவும், நான் செய்ய வேண்டிய கிரியையைச் செய்யவும் நான் தகுதியானவனாக இருக்கிறேன். ஜனங்கள் அவர்கள் அனுபவித்ததை மட்டும்தான் சொல்கிறார்கள். இதைத்தான் அவர்கள் கண்டிருக்கிறார்கள், அவர்களது மனங்கள் அடையக்கூடியது இதுதான், அவர்களின் புலன்களால் கண்டறிய முடிவதும் இதுதான். இதைத்தான் அவர்கள் பேச முடியும். மாம்சமாகிய தேவனால் பேசப்படும் வார்த்தைகளானது ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கின்றன. இதனை மாம்சம் அனுபவித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை, ஆனாலும் அவர் இன்னும் தாம் இருப்பதை வெளிப்படுத்துகிறார், ஏனென்றால் மாம்சத்தின் சாராம்சம் ஆவியானவராக இருக்கிறார், மேலும் ஆவியானவரின் கிரியையைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். மாம்சத்தால் அடையமுடியாத போதிலும், இந்தக் கிரியையானது ஆவியானவரால் ஏற்கெனவே செய்யப்பட்ட கிரியையாக இருக்கிறது. மாம்சமான பிறகு, மாம்சத்தின் வெளிப்பாட்டின் மூலம், தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள அவர் ஜனங்களுக்கு உதவுகிறார், மேலும் தேவனின் மனநிலையையும் அவர் செய்த கிரியையையும் பார்க்க ஜனங்களை அனுமதிக்கிறார். மனுஷனின் கிரியையானது ஜனங்களுக்கு அவர்கள் எதில் பிரவேசிக்க வேண்டும், எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகத் தெளிவைத் தருகிறது; சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் ஜனங்களை வழிநடத்துவதும் இதில் அடங்கும். மனுஷனை நிலைநிற்கச் செய்வதே மனுஷனின் கிரியையாக இருக்கிறது; தேவனின் கிரியையானது மனுஷகுலத்திற்கான புதிய பாதைகளையும் புதிய யுகங்களையும் திறந்து வைப்பது, இறந்துபோகக்கூடியவர்களால் அறியப்படாதவற்றை ஜனங்களுக்கு வெளிப்படுத்துவது, அவருடைய மனநிலையை ஜனங்கள் அறிந்து கொள்ள அனுமதிப்பது ஆகிய விஷயங்களைச் செய்கிறது. மனுஷகுலம் முழுவதையும் வழிநடத்துவதே தேவனின் கிரியையாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்