தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 168
மார்ச் 26, 2023
ஈசாக்கு ஆபிரகாமுக்குப் பிறந்ததைப் போலவே, யோவானும் வாக்குத்தத்தத்தினால் பிறந்தான். அவன் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான், அதிகக் கிரியைகள் செய்தான், ஆனால் அவன் தேவன் அல்ல. மாறாக, அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவனாக இருந்தான், ஏனென்றால் அவன் இயேசுவுக்காக வழியை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியையும் மிகச் சிறப்பாக இருந்தது, அவன் ஆயத்தப்படுத்திய பின்னரே இயேசு அதிகாரப்பூர்வமாகத் தனது கிரியையைத் தொடங்கினார். முக்கியமாக, அவன் வெறுமனே இயேசுவுக்காக உழைத்தான், மேலும் அவன் செய்த கிரியை இயேசுவின் கிரியைக்கு ஊழியம் செய்வதாகவும் இருந்தது. அவன் வழியை ஆயத்தப்படுத்திய பிறகே, இயேசு தமது கிரியையைத் தொடங்கினார், அந்தக் கிரியை புதியதாகவும், அதிக உறுதியாகவும் மற்றும் விரிவாகவும் இருந்தது. அந்தக் கிரியையின் ஆரம்பப் பகுதியை மட்டுமே யோவான் செய்தான்; புதிய கிரியையின் பெரும்பகுதி இயேசுவால் செய்யப்பட்டது. யோவானும் புதிய கிரியையைச் செய்தான், ஆனால் அவன் ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியவன் அல்ல. யோவான் வாக்குத்தத்தத்தினால் பிறந்தவன், அவனுடைய பெயர் தேவதூதனால் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில், சிலர் அவனுடைய தகப்பன் சகரியாவின் பெயரைச் சூட்ட விரும்பினர், ஆனால் அவனது தாயார், "இந்தக் குழந்தை அந்தப் பெயரால் அழைக்கப்பட மாட்டான். அவனை யோவான் என்று அழைக்க வேண்டும்," என்று கூறினாள். இது எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் கட்டளைப்படி நிகழ்ந்தது. பரிசுத்த ஆவியானவரின் கட்டளைப்படியே இயேசுவுக்கும் பெயர் சூட்டப்பட்டது, அவர் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிறந்தார், மேலும் பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. இயேசு, தேவன், கிறிஸ்து மற்றும் மனுஷகுமாரனாக இருந்தார். யோவானின் கிரியையும் மிகச் சிறந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஏன் தேவன் என்று அழைக்கப்படவில்லை? இயேசு செய்த கிரியைக்கும் யோவான் செய்த கிரியைக்கும் என்ன வித்தியாசம்? யோவான், இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்தினான் என்பதுதான் ஒரே காரணமா? அல்லது இது தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டதா? யோவான், "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது," என்றும் கூறினான், அவன் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தையும் பிரசங்கித்தான், ஆனாலும் அவனுடைய கிரியை மேலும் வளர்ச்சியடையவில்லை, வெறுமனே ஒரு தொடக்கமாக மட்டுமே அமைந்தது. இதற்கு நேர்மாறாக, இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், அதேபோல் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார், மேலும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தையும் அவர் நிறைவேற்றினார். அவர் செய்த கிரியை யோவான் செய்ததை விடப் பெரியதாக இருந்தது, மேலும் சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் வந்தார்—கிரியையின் அந்தக் கட்டத்தை நிறைவேற்றினார். ஆனால் யோவானைப் பொறுத்தவரை, அவன் வெறுமனே பாதையை மட்டுமே ஆயத்தப்படுத்தினான். அவனுடைய கிரியை சிறப்பானதாக இருந்தாலும், அநேக வார்த்தைகள் கொண்டதாக இருந்தாலும், அவனை ஏராளமான சீஷர்கள் பின்பற்றினார்கள் என்றாலும், அவனுடைய கிரியை மனுஷனுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. மனுஷன் ஒருபோதும் அவனிடமிருந்து ஜீவனையோ, வழியையோ, ஆழமான சத்தியங்களையோ பெறவில்லை, மேலும் தேவனின் சித்தத்தைப் பற்றிய புரிதலையும் அவனிடமிருந்து மனுஷன் பெறவில்லை. யோவான் ஒரு சிறந்த தீர்க்கதரிசி (எலியா), அவன் இயேசுவின் கிரியைக்குப் புதிய தளத்தைத் திறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஆயத்தப்படுத்தினான்; அவன் கிருபையின் யுகத்தின் முன்னோடியாக இருந்தான். இத்தகைய விஷயங்களை அவர்களின் சாதாரண மனுஷத் தோற்றங்களைக் கவனிப்பதன் மூலம் வெறுமனே அறிய முடியாது. யோவானும் மிகவும் கணிசமான கிரியையைச் செய்ததால், மேலும் பரிசுத்த ஆவியானவரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்டதால், மற்றும் அவனுடைய கிரியை பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டதால் இவை அனைத்தும் பொருத்தமாக இருந்தன. இது அவ்வாறு இருப்பதால், அவர்கள் செய்யும் கிரியையின் மூலம்தான் ஒருவன் அந்தந்த அடையாளங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஏனென்றால் ஒரு மனுஷனின் சாராம்சத்தை அவனது வெளிப்புற தோற்றத்தைக் கண்டு சொல்ல எந்த வழியும் இல்லை, அல்லது பரிசுத்த ஆவியானவரின் சாட்சியம் என்ன என்பதை மனுஷன் அறியும் வழியும் இல்லை. யோவானால் செய்யப்பட்ட கிரியையும், இயேசுவால் செய்யப்பட்ட கிரியையும் வேறுபட்டவை, அவை வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருந்தன. இதிலிருந்தே யோவான் தேவனா இல்லையா என்பதை ஒருவன் தீர்மானிக்க முடியும். இயேசுவின் கிரியையானது ஆரம்பிக்க, தொடர மற்றும் முடிவுக்குக் கொண்டுவந்து நிறைவேற்றுவதாக இருந்தது. இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் தேவன் மேற்கொண்டார், அதேசமயம் யோவானின் கிரியை ஒரு தொடக்கத்தைத் தவிர வேறேதுமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில், இயேசு சுவிசேஷத்தைப் பரப்பி, மனந்திரும்புதலுக்கான வழியைப் பிரசங்கித்தார், பின்னர் மனுஷனை ஞானஸ்நானம் செய்யவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும், பிசாசுகளை விரட்டவும் செய்தார். இறுதியில், அவர் மனுஷகுலத்தை பாவத்திலிருந்து மீட்டு, யுகம் முழுவதற்குமான தமது கிரியையை நிறைவு செய்தார். அவர் எல்லா இடங்களுக்கும் சென்று, மனுஷரிடம் பிரசங்கித்து, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார். இந்த விஷயத்தில் அவரும் யோவானும் ஒரே மாதிரியாக இருந்தார்கள், வித்தியாசம் என்னவென்றால், இயேசு ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தினார், மேலும் கிருபையின் யுகத்தை மனுஷனிடம் கொண்டு வந்தார். கிருபையின் யுகத்தில் மனுஷன் எதைக் கடைப்பிடிக்க வேண்டும், மனுஷன் பின்பற்ற வேண்டிய வழி ஆகியவற்றைப் பற்றிய வார்த்தை அவருடைய வாயிலிருந்து வந்தது, இறுதியில், அவர் மீட்பின் கிரியையை முடித்தார். யோவானால் இந்தக் கிரியையை ஒருபோதும் செய்திருக்க முடியாது. ஆகவே, தேவனின் கிரியையைச் செய்தவர் இயேசுதான், அவரே தேவனாகவும் மற்றும் தேவனை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவும் இருக்கிறார். வாக்குத்தத்தத்தினால் பிறந்தவர்கள், ஆவியானவரால் பிறந்தவர்கள், பரிசுத்த ஆவியானவரால் ஆதரிக்கப்படுபவர்கள் மற்றும் புதிய பாதைகளைத் திறப்பவர்கள் என இவர்கள் அனைவருமே தேவன்தான் என்று மனுஷனின் கருத்துக்கள் கூறுகின்றன. இந்தப் பகுத்தறிவின்படி, யோவானும் தேவனாக இருப்பான், மோசே, ஆபிரகாம், தாவீது…, அவர்கள் அனைவரும் தேவனாக இருப்பார்கள். இது ஒரு முழுமையான நகைச்சுவை அல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (1)" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்