தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 126
செப்டம்பர் 16, 2022
ஐந்தாவது சந்தர்ப்பம்: சந்ததி
திருமணமான பிறகு ஒருவர் அடுத்தத் தலைமுறையை வளர்க்கத் தொடங்குகிறார். ஒருவருக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர், எப்படிப்பட்ட குழந்தைகள் உள்ளனர் என்பதில் அவர் எந்த முடிவும் செய்ய முடியாது; இதுவும் ஒரு நபருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகிறது, இது சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. இது, ஒரு நபர் கடந்து செல்ல வேண்டிய ஐந்தாவது சந்தர்ப்பமாகும்.
யாரோ ஒருவருடைய குழந்தையின் பாத்திரத்தை வகித்து நிறைவேற்றுவதற்காக ஒருவர் பிறந்தால், யாரோ ஒருவருடைய பெற்றோரின் பங்கை நிறைவேற்ற ஒருவர் அடுத்தத் தலைமுறையை வளர்க்கிறார். இந்தப் பங்கு வகிப்புகளின் மாற்றம், வெவ்வேறு கோணங்களில், ஒரு அனுபவத்தை ஜீவிதத்தின் வெவ்வேறு கட்டங்களாக மாற்றுகிறது. இது ஒரு வித்தியாசமான ஜீவித அனுபவத்தையும் தருகிறது, இதன் மூலம் சிருஷ்டிகருடைய ராஜரீகத்தை ஒருவர் அறிந்து கொள்கிறார், இது எப்போதும் ஒரே மாதிரியாக இயற்றப்படுகிறது. மேலும், இதன் மூலம் சிருஷ்டிகரால் முன்தீர்மானிக்கப்பட்டதை யாராலும் மிஞ்சவோ மாற்றவோ முடியாது என்ற உண்மையை இது அறியச் செய்கிறது.
1. ஒருவருடைய சந்ததியால் என்ன நடக்கும் என்பதன் மீது ஒருவருக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது
பிறப்பு, வளர்ச்சி, திருமணம் அனைத்தும் பல்வேறு வகையான மற்றும் வெவ்வேறு அளவுகளில் ஏமாற்றங்களைத் தருகின்றன. சிலர் தங்களது குடும்பங்கள் அல்லது அவர்களுடைய சொந்த உடற்தோற்றத்தில் அதிருப்தி அடைந்துள்ளனர்; சிலர் தங்களது பெற்றோரை விரும்புவதில்லை; சிலர் வளர்ந்த சூழலைப் பற்றி மனக்கசப்பு அல்லது புகார்கள் கொண்டுள்ளனர். இந்த ஏமாற்றங்களுக்கிடையில், பெரும்பாலான ஜனங்களுக்கு, திருமணமே மிகவும் அதிருப்திகரமான ஒன்றாக இருக்கிறது. ஒருவர் தன்னுடைய பிறப்பு, முதிர்ச்சி அல்லது திருமணத்தைக் குறித்து எவ்வளவு அதிருப்தி அடைந்தாலும், இந்த விஷயங்களை அனுபவித்த அனைவருக்கும், அவர்கள் எங்கு, எப்போது பிறந்தார்கள், அவர்கள் எப்படி இருக்கிறார்கள், பெற்றோர் யார், அவர்களுடைய துணை யார் என்பதைக் குறித்து ஒருவர் தேர்வு செய்யமுடியாது என்றும், ஆனால் பரலோகத்தின் விருப்பத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரியும். ஆயினும், ஜனங்கள் அடுத்தத் தலைமுறையை வளர்ப்பதற்கான நேரம் வரும்போது, அவர்கள் தங்களது ஜீவிதத்தின் முதல் பாதியில் உண்மையாக்கத் தவறிய அனைத்து ஆசைகளையும் தங்களது சந்ததியினருக்கு முன் வைப்பார்கள், அவர்களுடைய சொந்த ஜீவிதத்தினுடைய முதல் பாதியின் அனைத்து ஏமாற்றங்களுக்கும் தங்களது சந்ததியினர் ஈடுசெய்வார்கள் என்று நம்புகிறார்கள். ஆகவே, ஜனங்கள் தங்களது குழந்தைகளைப் பற்றிய அனைத்து வகையான கற்பனைகளிலும் ஈடுபடுகிறார்கள்: தங்களுடைய மகள்கள் அசரவைக்கும் அழகிகளாக வளருவார்கள், தங்களுடைய மகன்கள் துணிச்சலும் பண்புமுள்ள மனிதர்களாக இருப்பார்கள்; அதனால் அவர்களுடைய மகள்கள் பண்பட்டவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களுடைய மகன்கள் சிறந்த மாணவர்களாகவும் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்களாகவும் இருப்பார்கள்; அவர்களுடைய மகள்கள் மென்மையானவர்களாகவும், நல்லொழுக்கமுள்ளவர்களாகவும், விவேகமானவர்களாகவும் இருப்பார்கள், அவர்களுடைய மகன்கள் புத்திசாலிகளாகவும், திறமையானவர்களாகவும், உணர்ச்சிகரமானவர்களாகவும் இருப்பார்கள். தங்களது சந்ததியினர், அவர்கள் மகள்களாக இருந்தாலும், மகன்களாக இருந்தாலும், தங்களது மூப்பர்களை மதிப்பார்கள், பெற்றோரை கவனித்துக் கொள்வார்கள், அனைவராலும் நேசிக்கப்படுவார்கள், புகழப்படுவார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்…. இந்தக் கட்டத்தில், ஜீவிதத்துக்கான நம்பிக்கைகள் புதிதாக உருவாகின்றன மற்றும் புதிய உணர்வுகள் ஜனங்களின் இதயங்களில் தூண்டப்படுகின்றன. இந்த ஜீவிதத்தில் அவர்கள் பெலன் அற்றவர்களாகவும் நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், கூட்டத்தில் இருந்து தனித்து நிற்க அவர்களுக்கு இன்னொரு வாய்ப்போ அல்லது நம்பிக்கையோ கிடைக்காது என்பதையும், அவர்களுடைய தலைவிதிகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் ஜனங்கள் அறிவார்கள். எனவே, அவர்கள் தங்களின் நம்பிக்கைகள், அவர்களுடைய நிறைவேறாத ஆசைகள் மற்றும் இலட்சியங்களை அடுத்த தலைமுறையினரிடம் முன்வைக்கிறார்கள், தங்கள் கனவுகளை நனவாக்கவும் தங்கள் மனவிருப்பங்களை உணர்ந்து கொள்ளவும் தங்கள் சந்ததியினர் தங்களுக்கு உதவ முடியும் என்று நம்புகிறார்கள்; அதாவது அவர்களுடைய மகள்களும் மகன்களும் குடும்பப் பெயருக்கு புகழைச் சேர்ப்பார்கள், முக்கியமாவார்கள், பணக்காரராவார்கள் அல்லது பிரபலமாவார்கள் என்று கிறார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், அவர்கள் தங்களது குழந்தைகளின் செல்வங்கள் உயர்வதைப் பார்க்க விரும்புகிறார்கள். ஜனங்களின் திட்டங்களும் கற்பனைகளும் சரியானவையாக இருக்கின்றன; அவர்களிடம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுடைய குழந்தைகளின் தோற்றம், திறமைகள் மற்றும் அதுபோன்ற பலவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்றும், அவர்களுடைய குழந்தைகளின் தலைவிதிகளில் சிறு பகுதி கூட அவர்களுடைய கைகளில் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியாதா? மனிதர்கள் தங்களது சொந்த விதியின் எஜமானர்கள் அல்ல. எனினும், அவர்கள் தங்களின் இளைய தலைமுறையின் தலைவிதியை மாற்றிவிடலாம் என்று நம்புகிறார்கள்; அவர்கள் தங்களது சொந்த விதிகளிலிருந்து தப்பிக்கத் திராணியற்றவர்கள், ஆனாலும் அவர்கள் தங்களின் மகன்கள் மற்றும் மகள்களின் விதிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களை மிகைப்படுத்திக் கொள்ளவில்லையா? இது மனித முட்டாள்தனமும் அறியாமையும் அல்லவா? ஜனங்கள் தங்களது சந்ததியினருக்காக எந்தத் தூரத்திற்கும் செல்வார்கள். ஆனால் இறுதியில், அவருடைய திட்டங்கள் மற்றும் ஆசைகளால் ஒருவருக்கு எத்தனைக் குழந்தைகள் உள்ளன அல்லது அந்தக் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என்று கட்டளையிட முடியாது. சிலர் பணமில்லாதவர்களாக இருக்கிறார்கள், ஆனால் பல குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்; சிலர் செல்வந்தர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஒரு குழந்தைகூட இல்லை. சிலர் ஒரு மகளை விரும்புகிறார்கள், ஆனால் அந்த விருப்பம் மறுக்கப்படுகிறது; சிலர் ஒரு மகனை விரும்புகிறார்கள், ஆனால் ஒரு ஆண் குழந்தையை உருவாக்க இயலாமல் இருக்கிறார்கள். சிலருக்குக் குழந்தைகள் ஒரு ஆசீர்வாதம்; மற்றவர்களுக்கு அவர்கள் ஒரு சாபக்கேடு. சில தம்பதிகள் புத்திசாலிகள், ஆனால் மந்தமான அறிவுடைய குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்; சில பெற்றோர்கள் உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், ஆனாலும் அவர்கள் வளர்க்கும் குழந்தைகள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். சில பெற்றோர்கள் கனிவானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் குழந்தைகள் வஞ்சகமாகவும் தீயவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். சில பெற்றோர்கள் மனதளவிலும் உடலளவிலும் சிறப்பாக இருக்கிறார்கள், ஆனால் ஊனமுற்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். சில பெற்றோர்கள் சாதாரணமானவர்கள் மற்றும் தோல்வியுற்றவர்கள், ஆனால் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் குழந்தைகளைப் பெற்றுள்ளார்கள். சில பெற்றோர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தும் மேன்மையான நிலைக்கு எழும்பும் பிள்ளைகளைக் கொண்டுள்ளனர். …
2. அடுத்தத் தலைமுறையை வளர்த்த பிறகு, ஜனங்கள் விதியைப் பற்றிய புதிய புரிதலைப் பெறுகிறார்கள்
திருமண பந்தத்திற்குள் நுழையும் பெரும்பாலான ஜனங்கள் முப்பது வயதிற்குள் அவ்வாறு செய்கிறார்கள். இது இன்னும் மனித விதியைப் பற்றிப் புரிந்துகொள்ளாத ஜீவிதத்தின் ஒரு காலப்பகுதி ஆகும். ஆனால் ஜனங்கள் குழந்தைகளை வளர்க்கத் தொடங்கும்போது, அவர்களுடைய சந்ததியினர் வளரும்போது, முந்தையத் தலைமுறையின் ஜீவிதத்தையும் அனைத்து அனுபவங்களையும் புதிய தலைமுறையியினர் மீண்டும் வாழ்வதைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய சொந்த கடந்த காலங்கள் அவற்றில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்கும்போது, தங்களது பாதையைப் போலவே, இளைய தலைமுறையினர் நடந்து சென்ற பாதையையும், அவர்கள் திட்டமிடவும் தேர்ந்தெடுக்கவும் முடியாது என்று புரிந்து கொள்கிறார்கள். இந்த உண்மையை எதிர்கொள்வதன் மூலம், ஒவ்வொரு நபருடைய தலைவிதியும் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமற்போகிறது. அதை உணராமல், அவர்கள் படிப்படியாக தங்களது சொந்த ஆசைகளை ஒதுக்கி வைக்கிறார்கள் அவர்களுடைய இருதயங்களில் உள்ள கனவுகள் சிதறி இறந்து போகின்றன…. இந்த காலகட்டத்தில் உள்ளவர்கள், ஜீவிதத்தின் முக்கிய வழித்தடங்களை கட்டாயமான முறையில் கடந்ததால், ஜீவிதத்தைப் பற்றிய ஒரு புதிய புரிதலை அடைந்து, ஒரு புதிய அணுகுமுறையைப் பின்பற்றினார்கள். இந்த வயதிற்குட்பட்ட ஒருவர் எதிர்காலத்தில் இருந்து எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும், அவர்கள் என்ன முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும்? எந்த ஐம்பது வயதான பெண் இன்னும் இளவரசர் சார்மிங்கைக் கனவு காண்கிறாள்? எந்த ஐம்பது வயதான ஆண் இன்னும் தனது ஸ்னோ ஒயிட்டைத் தேடுகிறான்? ஓர் அசிங்கமான வாத்திலிருந்து ஓர் அன்னப் பறவையாக மாற இன்னும் எந்த நடுத்தர வயது பெண் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறாள்? பெரும்பாலான வயதான ஆண்களுக்கு இளைஞர்களைப் போலவே தொழில் உந்துதல் இருக்கிறதா? மொத்தத்தில், ஒருவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இந்த வயது வரை வாழ்ந்த எவருக்கும் திருமணம், குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து ஒப்பீட்டளவில் பகுத்தறிவும், நடைமுறை அணுகுமுறையும் இருக்கக் கூடும். அத்தகைய நபருக்கு அடிப்படையில் தேர்வுகள் எதுவும் இல்லை, விதியைச் சவால் செய்ய எந்தத் தூண்டுதலும் இல்லை. மனித அனுபவம் எவ்வளவாகப் பெருகுகிறதோ, அவ்வளவாக ஒருவர் இந்த வயதை அடைந்தவுடன், இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அவர் வளர்த்துக் கொள்கிறார்: "ஒருவர் விதியை ஏற்கவேண்டும்; ஒருவருடைய குழந்தைகளுக்கு அவர்களுடைய சொந்த செல்வங்கள் உள்ளன; மனித தலைவிதி பரலோகத்தால் நியமிக்கப்படுகிறது." சத்தியத்தைப் புரிந்துகொள்ளாத பெரும்பாலான ஜனங்கள், இந்த உலகத்தின் அனைத்து விசித்திரங்களையும், விரக்திகளையும், கஷ்டங்களையும் எதிர்கொண்ட பிறகு, மனித ஜீவிதத்தைப் பற்றிய அவர்களுடைய உட்பார்வையை இரண்டு சொற்களால் சுருக்கமாகக் கூறுவார்கள்: "அது விதி!" இந்த சொற்றொடர் உலக ஜனங்கள் மனிதவிதியை உணர்ந்து கொள்வதையும் அவர்கள் கண்டுக்கொண்ட முடிவையும் உள்ளடக்கியது என்றாலும், அது மனிதகுலத்தின் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், தெளிவாக மற்றும் துல்லியமானதாக விவரிக்கப்படலாம் என்றாலும், இது சிருஷ்டிகருடைய ராஜரீகத்தைப் புரிந்து கொள்வதிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. இது சிருஷ்டிகருடைய அதிகாரத்தைப் பற்றிய அறிவுக்கு மாற்றானது அல்ல.
வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்