தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 125

ஆகஸ்ட் 5, 2022

நான்காவது சந்தர்ப்பம்: திருமணம்

ஒருவர் வயது வந்த பின்பு, தன் பெற்றோரிடமிருந்தும், தான் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்தும் அதிகத் தொலைவிற்குச் செல்கிறார், அதற்குப் பதிலாக ஜீவிதத்தில் ஒரு திசையைத் தேடத் தொடங்குகிறார் மற்றும் தன் பெற்றோரிடமிருந்து வேறுபட்ட பாணியில் தன் சொந்த ஜீவித இலக்குகளைப் பின்தொடரவும் தொடங்குகிறார். இந்த நேரத்தில், ஒருவருக்கு அவருடைய பெற்றோர் இனி தேவைப்படுவதில்லை. ஆனால், அவருடைய ஜீவிதத்தைச் செலவிட அவருக்கு ஒரு கூட்டாளர் தேவைப்படுகிறார், அதாவது அவருடைய தலைவிதியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள ஒரு மனிதர், அதாவது ஒரு துணை தேவைப்படுகிறது. எனவே, சுதந்திரமானதிற்குப் பிறகு ஜீவிதத்தில் நிகழும் முதல் பெரிய நிகழ்வு திருமணம் ஆகும். இது கடந்து செல்ல வேண்டிய நான்காவது சந்தர்ப்பம் ஆகும்.

1. தனி மனித விருப்பம் திருமணத்திற்குள் பிரவேசிக்காது

எந்தவொரு நபருடைய ஜீவிதத்திலும் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்; இது ஒருவர் பல்வேறு வகையான பொறுப்புகளை ஏற்கவும், படிப்படியாக பல்வேறு வகையான பணிகளை முடிக்கவும் தொடங்கும் நேரம் ஆகும். திருமணத்தை அனுபவிப்பதற்கு முன்பே, அதைக் குறித்து ஜனங்கள் பல மாயைகளை மனதில் வைத்திருக்கிறார்கள். இந்த மாயைகள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. பெண்கள் தங்களது மறுபாதி இளவரசர் சார்மிங்காக இருப்பார்கள் என்று கற்பனை செய்கிறார்கள், ஆண்கள் ஸ்னோ ஒயிட்டை திருமணம் செய்து கொள்வார்கள் என்று கற்பனை செய்கிறார்கள். இந்தக் கற்பனைகளானது ஒவ்வொரு நபருக்கும் திருமணத்தைப் பற்றிய சில தேவைகளும், அவர்களுக்கே உரித்தான கோரிக்கைகளும் தரநிலைகளும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. இந்தத் தீய யுகத்தில், ஜனங்கள், திருமணத்தைப் பற்றிய தவறான செய்திகளால் தொடர்ந்து நிரப்பப்படுகிறார்கள், இது இன்னும் கூடுதலான தேவைகளை உருவாக்கி ஜனங்களுக்கு எல்லா வகையான சுமைகளையும் விசித்திரமான மனநிலைகளையும் தருகிறது என்றாலும், ஒருவர் திருமணத்தை எப்படிப் புரிந்து கொண்டாலும், அதைப் பற்றிய ஒருவருடைய மனப்பான்மை எதுவாக இருந்தாலும், திருமணம் என்பது தனி மனித விருப்பமாக இருக்காது என்று திருமணத்தை அனுபவித்த எந்தவொரு நபருக்கும் தெரியும்.

ஒருவர் தன் ஜீவிதத்தில் பலரைச் சந்திக்கிறார், ஆனால் திருமணத்தில் அவருடைய துணை யார் என்று யாருக்கும் தெரியாது. திருமண விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்களும் தனிப்பட்ட நிலைப்பாடுகளும் இருந்தாலும், உண்மையிலேயே, இறுதியாக அவர்களுடைய மறுபாதியாக யார் மாறுவார்கள் என்று ஒருவராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது மற்றும் இந்த விஷயத்தில் ஒருவருடைய சொந்த யோசனைகளுக்கு மதிப்பொன்றும் இல்லை. நீ விரும்பும் ஒருவரைச் சந்தித்த பிறகு, நீ அந்த நபரைப் பின்தொடரலாம்; ஆனால் அவர்கள் உன்னிடம் ஆர்வமாக இருக்கிறார்களா, அவர்கள் உன் துணையாக மாறமுடியுமா என்பவற்றைப் பற்றி எடுக்கப்படும் முடிவு உன்னுடையது அல்ல. உன் பாசத்தின் நோக்கம் உன் ஜீவிதத்தை நீ பகிர்ந்து கொள்ளக்கூடிய நபராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை; இதற்கிடையில், நீ ஒருபோதும் எதிர்பார்க்காத ஒருவர் அமைதியாக உன் ஜீவிதத்தில் நுழைந்து உன் துணையாக, உன் விதியின் மிக முக்கியமான பகுதியாக, உன் மறுபாதியாக மாறக்கூடும், அவருடன் உன் விதி பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்படக் கூடும். எனவே, உலகில் கோடிக்கணக்கானத் திருமணங்கள் இருந்தாலும், ஒவ்வொன்றும் வேறுபட்டவையாகும்: பல திருமணங்கள் திருப்தியற்றவை, பல திருமணங்கள் மகிழ்ச்சியானவை; பல திருமணங்களில் மணமக்கள் இருவரில், ஒருவர் கிழக்கிலிருந்தும் மற்றொருவர் மேற்கிலிருந்தும் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்கின்றனர், பல திருமணங்களில் மணமக்கள் இருவரில், ஒருவர் வடக்கிலிருந்தும் மற்றொருவர் தெற்கிலிருந்தும் வந்து சந்தித்து திருமணம் செய்துகொள்கின்றனர்; பல திருமணங்கள் சரியான பொருத்தங்களாகும், பல சமமான சமூக அந்தஸ்துள்ளவையாகும்; பல திருமணங்கள் மகிழ்ச்சியாகவும் இணக்கமாகவும் இருக்கின்றன, பல வேதனையும் துக்கமும் பெறுகின்றன; பல திருமணங்கள் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டுகின்றன, பல திருமணங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் முகம் சுளிக்கப்படுகின்றன; பல திருமணங்களில் மகிழ்ச்சி நிறைந்துள்ளது, பல திருமணங்கள் கண்ணீரால் நிறைந்து விரக்தியையும் கொண்டு வருகின்றன…. இந்த எண்ணற்ற வகையான திருமணங்களில், மனிதர்கள் திருமணத்திற்கு விசுவாசத்தையும் ஜீவ காலம் முழுமைக்குமான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் அன்பு, பாசம் மற்றும் பிரிக்க முடியாத தன்மை அல்லது சகிப்புதன்மை மற்றும் புரிந்து கொள்ளமுடியாத தன்மையை வெளிப்படுத்துகின்றனர். சிலர் தங்களது திருமணத்தை ஏமாற்றுகிறார்கள், அல்லது அதை வெறுக்கிறார்கள். திருமணம் மகிழ்ச்சியை தருகிறதா வேதனையை தருகிறதா என்பதல்லாமல், திருமணத்தில் ஒவ்வொருவருடைய நோக்கமும் சிருஷ்டிகரால் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது, அது மாறாது; இந்தப் பணியானது எல்லோரும் முடிக்க வேண்டிய ஒன்றாகும். ஒவ்வொரு திருமணத்திற்கும் பின்னால் இருக்கும் ஒவ்வொரு நபருடைய தலைவிதியும் மாறாது. அது சிருஷ்டிகரால் நீண்டகாலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

2. திருமணம் என்பது இரண்டு துணைகளின் தலைவிதிகளிலிருந்தும் பிறக்கிறது

திருமணம் என்பது ஒரு நபருடைய ஜீவிதத்தில் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். இது ஒரு நபருடைய தலைவிதியின் விளைவு மற்றும் ஒருவருடைய தலைவிதியில் ஒரு முக்கியமான இணைப்பு ஆகும்; இது எந்தவொரு நபருடைய தனிப்பட்ட தேர்விலோ விருப்பங்களிலோ நிறுவப்படவில்லை மற்றும் இது எந்த வெளிப்புறக் காரணிகளாலும் பாதிக்கப்படவும் இல்லை. ஆனால் இரு குடும்பங்களின் தலைவிதிகளாலும், சிருஷ்டிகருடைய ஏற்பாடுகள் மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தம்பதியினராகும் இருவருடைய தலைவிதிகளாலும் முற்றிலும் தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், திருமணத்தின் நோக்கம் மனித இனத்தைத் தொடர்வதே ஆகும். ஆனால் சத்தியம் என்னவென்றால், திருமணம் என்பது ஒருவர் தன் பணியை நிறைவு செய்ய அவர் மேற்கொள்ளும் ஒரு சடங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. திருமணத்தில், ஜனங்கள் அடுத்தத் தலைமுறையை வளர்ப்பதில் மட்டும் பங்கு வகிப்பதில்லை; ஒரு திருமணத்தை நிர்வகிப்பதிலும், ஒருவர் தான் நிறைவேற்ற வேண்டிய பணியை செய்வதிலும் உள்ள பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவருடைய பிறப்பானது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள விஷயங்களால் ஏற்படும் மாற்றங்களைப் பாதிக்கும் என்பதால், ஒருவருடைய திருமணமும் இந்த ஜனங்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் கண்டிப்பாகப் பாதிக்கும் மற்றும் அவை அனைத்தையும் பல்வேறு வழிகளில் மாற்றும்.

ஒருவர் சுதந்திரமாக மாறும்போது, ஒருவர் ஜீவிதத்தில் தனது சொந்த பயணத்தைத் தொடங்குகிறார், இது அவரைப் படிப்படியாக, ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவருடைய திருமணத்துடன் தொடர்பு கொண்டுள்ள விஷயங்களை நோக்கி வழிநடத்துகிறது. அதே நேரத்தில், அந்தத் திருமணத்தில் இருக்கும் மற்ற நபர் படிப்படியாக, அதே ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களை நோக்கி வருகிறார். சிருஷ்டிகருடைய ராஜரீகத்தின் கீழ், தொடர்புடைய தலைவிதிகளைக் கொண்டுள்ள தொடர்பில்லாத இரண்டு நபர்கள், படிப்படியாக ஒரே திருமண பந்தத்திற்குள் நுழைந்து, அதிசயமான முறையில் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள்: "ஒரே கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வெட்டுக்கிளிகளாக இருக்கிறார்கள்." எனவே, ஒருவர் திருமண பந்தத்திற்குள் நுழையும்போது, ஒருவருடைய ஜீவிதப் பயணம் அவருடைய துணையைப் பாதிக்கும், அதைப் போலவே ஒருவருடைய துணையின் ஜீவிதப் பயணமும் அவருடைய ஜீவிதத்தில் அவருடைய சொந்த விதியைப் பாதிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனித விதிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன மற்றும் ஜீவிதத்தில் ஒருவரது பணியை யாராலும் முடிக்கவோ அல்லது மற்றவர்களிடமிருந்து முழுமையான சுதந்திரத்தில் விலகி தன் பங்கை ஆற்ற முடியாது. ஒருவருடைய பிறப்பு ஒரு பெரிய உறவுகளின் சங்கிலியைக் கொண்டுள்ளது; ஒருவருடைய வளர்ச்சியும் ஒரு சிக்கலான உறவுகளின் சங்கிலியை உள்ளடக்கியுள்ளது; அதைப் போலவே, ஒரு திருமணம் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது மற்றும் மனிதத் தொடர்புகளின் பரந்த மற்றும் சிக்கலான வலையில் நிர்வகிக்கப்படுகிறது. அந்த வலையின் ஒவ்வொரு உறுப்பினரையும் உள்ளடக்கி, அதன் ஒரு பகுதியாக இருக்கும் அனைவருடைய தலைவிதியையும் பாதிக்கிறது. திருமணம் என்பது இரு உறுப்பினர்களின் குடும்பங்கள், அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகள், அவர்களுடைய தோற்றங்கள், வயது, குணங்கள், திறமைகள் அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் விளைவு அல்ல; மாறாக, ஒரு பகிரப்பட்ட பணியிலிருந்தும், தொடர்பிலிருக்கும் ஒரு விதியிலிருந்தும் இது எழுகிறது. இதுவே சிருஷ்டிகரால் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மனிதவிதியின் ஒரு விளைவான திருமணத்தின் தோற்றமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க