தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 365

ஏப்ரல் 30, 2023

பூமியில், எல்லா விதமான பொல்லாத ஆவிகளும் ஓய்வெடுப்பதற்கான இடத்தை நிரந்தரமாகத் தேடுகின்றன, மேலும் அவை உட்புகக்கூடிய மனுஷ பிரேதங்களை முடிவில்லாமல் தேடுகின்றன. என் ஜனமே! நீங்கள் என் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். ஒருபோதும் கட்டுப்பாடற்றுப்போகாதீர்! ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளாதீர்! எனது வீட்டில் உன் விசுவாசத்தை நீ வழங்கு, விசுவாசத்தினால் மட்டுமே பிசாசின் தந்திரத்திற்கு எதிராக எதிர்குற்றஞ்சாட்ட முடியும். எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் கடந்த காலத்தில், ஒரு காரியத்தை எனக்கு முன்பாகவும், இன்னொன்றை என் முதுகுக்குப் பின்னாலும் செய்ததைப் போலத் தற்போதும் நடந்து கொள்ளாதீர்; இந்த வழியில் செயல்பட்டால், நீங்கள் ஏற்கெனவே மீட்பிற்கு அப்பாற்பட்டவர் ஆவீர்கள். இது போன்ற போதுமான வார்த்தைகளை நான் அதிகமாக உச்சரிக்கவில்லையா? மனுஷரின் பழைய இயல்பைத் திருத்த முடியாது என்பதால், ஜனங்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டல்களை நான் கொடுக்க வேண்டியிருக்கிறது. சலிப்படைய வேண்டாம்! நான் சொல்வது எல்லாம் உங்கள் தலையெழுத்தை உறுதி செய்வதற்காகத்தான்! ஒரு வெறுக்கத்தக்க மற்றும் இழிவான இடம்தான் சாத்தானுக்குத் தேவை; நீங்கள் எந்தளவிற்கு நம்பிக்கையற்ற முறையிலும், ஒழுக்கமற்ற முறையிலும் இருக்கிறீர்களோ, கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிய மறுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அந்த அசுத்த ஆவிகள் உங்களை ஊடுருவுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பெறும். நீங்கள் இந்த நிலைக்கு வந்திருந்தால், உங்கள் விசுவாசம் வெறுமனே உரையாடலைத் தவிர வேறொன்றுமில்லை, அதற்கு எந்தவொரு மெய்மையும் இல்லாமல், அசுத்த ஆவிகள் உங்கள் தீர்மானத்தைத் தகர்த்து அதனை எனது கிரியையைச் சீர்குலைக்கப் பயன்படும் கீழ்ப்படியாமை மற்றும் சாத்தானுடைய சதிகளாக மாற்றுகின்றன. அங்கிருந்து, நீங்கள் எந்த நேரத்திலும் என்னால் அடித்து நொறுக்கப்படுவீர்கள். இந்தச் சூழ்நிலையின் கனம் பற்றி யாருக்கும் புரிவதில்லை; ஜனங்கள் அனைவரும் அவர்கள் கேட்கும் விஷயங்களை நோக்கிச் செவிட்டுக் காதைத் திருப்புகிறார்கள், கொஞ்சமும் எச்சரிக்கையாக இருப்பதில்லை. கடந்த காலத்தில் என்ன செய்யப்பட்டது என்பது எனக்கு நினைவில் இல்லை; மீண்டும் ஒரு முறை நான் "மறப்பேன்" என்றும் அதன்மூலம் உன்னிடம் மென்மையாக இருப்பேன் என்றும் நீ இன்னும் காத்திருக்கிறாயா? மனுஷர் என்னை எதிர்த்திருந்தாலும், நான் அவர்களை எதிர்க்க மாட்டேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் சிறிய சரீர வளர்ச்சி கொண்டவர்கள், ஆகவே நான் அவர்களிடம் அதிகக் கோரிக்கைகளை வைப்பதில்லை. எனக்குத் தேவையானது எல்லாம் அவர்கள் ஒழுக்கங்கெட்டுப் போகக்கூடாது என்பதும், கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதுமே ஆகும். நிச்சயமாக இந்த ஒரு நிபந்தனையைப் பூர்த்தி செய்வது உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டது, இல்லையா? தங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் பல இரகசியங்களை நான் வெளிப்படுத்த வேண்டும் என அநேக ஜனங்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், பரலோகத்தின் அனைத்து இரகசியங்களையும் நீ புரிந்து கொண்டாலும், அந்த அறிவைக் கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்? அது என் மீதான உன் அன்பை அதிகரிக்குமா? என் மீதான உன் அன்பைத் தூண்டுமா? நான் மனுஷரைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை, அவர்களைப் பற்றிய ஒரு முடிவை நான் எளிதாக எடுப்பதுமில்லை. இவை மனுஷரின் உண்மையான சூழ்நிலைகள் இல்லையென்றால், நான் இவ்வளவு எளிதாக அவர்களை அவ்வாறு முடிசூட்ட மாட்டேன். கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள்: நான் உங்களை எத்தனை முறை அவதூறாகப் பேசியுள்ளேன்? நான் உங்களை எத்தனை முறை குறைத்து மதிப்பிட்டுள்ளேன்? உங்கள் உண்மையான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நான் உங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறேன்? முழு மனதுடன் உங்களை வெல்ல என் சொற்கள் எத்தனை முறை தவறியுள்ளன? உங்களுக்குள் ஆழமாக ஒத்ததிர்வு ஏற்படுத்தாமல் நான் எத்தனை முறை பேசியிருக்கிறேன்? உங்களில் யார் என் வார்த்தைகளை அச்சமின்றி, நடுங்காமல் படித்திருக்கிறீர், நான் உங்களைப் பாதாளத்திற்குள் அடித்துத் தள்ளுவேன் என்ற ஆழ்ந்த பயம் யாருக்கு இருக்கிறது? என் வார்த்தைகளிலிருந்து சோதனைகளைத் தாங்காதவர் யார்? என் சொற்களுக்குள் அதிகாரம் இருக்கிறது, ஆனால் இது மனுஷருக்குச் சாதாரண நியாயத்தீர்ப்பை வழங்குவதற்காக அல்ல; மாறாக, அவர்களின் உண்மையான சூழ்நிலைகளை நினைவில் கொண்டு, என் வார்த்தைகளில் இருக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தை நான் தொடர்ந்து அவர்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்பதற்காக. உண்மையில், என் சர்வ வல்லமையுள்ள வல்லமையை என் வார்த்தைகளில் கண்டுணரக்கூடியவர் எவரேனும் இருக்கிறாரா? பசும்பொன்னால் தயாரிக்கப்பட்ட என் வார்த்தைகளைப் பெற யாராவது இருக்கிறார்களா? நான் எத்தனை வார்த்தைகள் பேசியிருக்கிறேன்? யாராவது அவற்றை எப்போதாவது பொக்கிஷமாக்கி இருக்கிறீரா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 10" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க