தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 339
ஏப்ரல் 27, 2023
இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறேன், இருப்பினும் நான் உனக்கு சிட்சையைக் கொண்டு "சேவையை" செய்ய மாட்டேன். எனது கிரியையில் நீ என்ன பங்கு வகிக்கிறாய் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னரே நான் திருப்தி அடைவேன். இதற்கு அப்பாற்பட்ட விஷயங்களில், நீ என்னை எதிர்த்தால் அல்லது எனது பணத்தைச் செலவிட்டால், அல்லது யேகோவாவாகிய எனக்கான பலிகளைப் புசித்தால், அல்லது புழுக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் கடித்துக்கொண்டால், அல்லது நாய் போன்ற ஜீவன்களான உங்களுக்குள் மோதல்கள் இருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டால்—இப்படி எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நான் கவலைகொள்வதில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அதன்மூலம் நான் திருப்தி அடைவேன். இவை அனைத்தையும் தவிர, நீங்கள் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அல்லது ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் சண்டையிட விரும்பினால், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல; இதுபோன்ற விஷயங்களில் தலையிட எனக்கு விருப்பமில்லை, மேலும் மனுஷ விஷயங்களில் சிறிதளவிலும் நான் ஈடுபடுவதும் இல்லை. நான் இப்படி இருப்பதற்கு உங்களுக்கிடையேயான மோதல்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று அர்த்தமில்லை; நான் உங்களில் ஒருவன் இல்லை என்பதால் உங்களிடையே நடக்கும் விஷயங்களில் பங்கேற்பதில்லை என்று அர்த்தமாகும். நான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் இல்லை, நான் உலகத்தைச் சேர்ந்தவனில்லை, எனவே ஜனங்களின் பரபரப்பான வாழ்க்கையையும் அவர்களுக்கு இடையேயான குழப்பமான, முறையற்ற உறவுகளையும் நான் வெறுக்கிறேன். நான் குறிப்பாகக் கூச்சலிடும் கூட்டங்களை வெறுக்கிறேன். இருப்பினும், ஒவ்வொரு ஜீவனின் இருதயங்களிலும் இருக்கும் அசுத்தங்களைப் பற்றி எனக்கு ஆழமான அறிவு உள்ளது, நான் உங்களை சிருஷ்டிப்பதற்கு முன்பு, மனுஷ இருதயத்தில் ஆழமாக இருந்த அநீதியை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன், மேலும் மனுஷ இருதயத்தில் இருக்கும் எல்லா ஏமாற்றுத்தனங்களையும் வஞ்சகத்தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால், ஜனங்கள் அநீதியான காரியங்களைச் செய்யும்போது எந்தத் தடயங்களும் காணப்படுவதில்லை என்றாலும், உங்கள் இருதயங்களுக்குள் அடங்கியுள்ள அநீதியானது நான் உருவாக்கிய எல்லாவற்றின் செழுமையையும் மிஞ்சும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பெருந்திரளான ஜனங்கள் என்னும் உச்சத்திற்கு உயர்ந்திருக்கிறீர்கள்; நீங்கள் வெகுஜனங்களின் மூதாதையர்களாக இருக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள், மேலும் நீங்கள் எல்லாப் புழுக்களிடையேயும் வெறிகொண்டு ஓடுகிறீர்கள், எளிதான இடத்தைத் தேடுகிறீர்கள், உங்களை விட சிறியதாக இருக்கும் புழுக்களை விழுங்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் இருதயங்களில் நீங்கள் தீங்கிழைப்பவராகவும் மற்றும் கெட்டவராகவும் இருக்கிறீர்கள், சமுத்திரத்தின் அடிப்பகுதியில் மூழ்கியிருக்கும் பிசாசுகளைக் கூட மிஞ்சிவிடுகிறீர்கள். நீங்கள் குப்பையின் அடிப்பகுதியில் வசிக்கிறீர்கள், புழுக்களுக்கு அமைதி இல்லாமல் போகும்வரை உச்சி முதல் அடி வரை தொந்தரவு செய்கிறீர்கள், ஒருவருக்கொருவர் சிறிது நேரம் சண்டையிட்டுவிட்டுப் பின்னர் அமைதியடைகிறீர்கள். உங்களுக்கு உங்கள் இடம் எதுவென்று தெரிவதில்லை, ஆனாலும் நீங்கள் குப்பையில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறீர்கள். அத்தகைய போராட்டத்திலிருந்து உங்களால் எதை ஆதாயமாகப் பெற முடியும்? உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையிலேயே என்னிடம் பயபக்தியுடன் இருந்தால், என் முதுகிற்குப் பின்னால் நீங்கள் எப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட முடியும்? உங்கள் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் இன்னும் குப்பையில் துர்நாற்றம் வீசும் சிறிய புழு தான், இல்லையா? உங்களால் இறக்கைகள் முளைத்து வானத்தில் புறாவாகப் பறக்க முடியுமா? துர்நாற்றம் வீசும் சிறிய புழுக்களான நீங்கள், யேகோவாவாகிய எனது பலிபீடத்திலிருந்து காணிக்கைகளைத் திருடுகிறீர்கள்; அவ்வாறு செய்யும்போது, உனது கெட்டுப்போன, தோல்வியுற்ற நற்பெயரை மீட்டு இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக மாற முடியுமா? நீங்கள் வெட்கமே இல்லாத மோசமானவர்கள்! பலிபீடத்தின் மீது இருக்கும் அந்தக் காணிக்கைகள் என்னை வணங்குபவர்களின் தர்ம சிந்தனைகளின் வெளிப்பாடாக எனக்கு செலுத்தப்பட்டவை. அவை எனது கட்டுப்பாட்டிற்காகவும் எனது பயன்பாட்டிற்காகவும் உள்ளன, எனவே ஜனங்கள் எனக்குக் கொடுத்த சிறிய காட்டுப்புறாக்களை உன்னால் எப்படிக் கொள்ளையடிக்க முடியும்? யூதாஸாக மாறுவதற்கு நீ பயப்படவில்லையா? உனது தேசம் இரத்தக் களமாக மாறக்கூடும் என்று நீ பயப்படவில்லையா? வெட்கமில்லாத அற்பனே! ஜனங்கள் வழங்கும் காட்டுப்புறாக்களானது புழுவான உனது வயிற்றை வளர்ப்பதற்குத்தான் என்று நீ நினைக்கிறாயா? நான் உனக்குக் கொடுத்தது நான் மனநிறைவுடனும் விருப்பத்துடனும் உனக்கு கொடுத்ததாகும்; நான் உனக்குக் கொடுக்காதது எனது வசம் உள்ளது. நீ எனது காணிக்கைகளைத் திருடக்கூடாது. யேகோவாவும், சிருஷ்டிப்பின் கர்த்தருமான நானே கிரியை செய்பவர், ஜனங்கள் எனக்காகப் பலிகளைக் கொடுக்கிறார்கள். நீ செய்யும் எல்லாவற்றுக்கும் இது பிரதியுபகாரம் என்று நீ நினைக்கிறாயா? நீ உண்மையில் வெட்கமில்லாதவன்! நீ யாருக்காக ஓடுகிறாய்? அது உனக்காக அல்லவா? நீ எதற்காக எனது பலிகளைத் திருடுகிறாய்? எனது பணப்பையில் இருந்து பணத்தை ஏன் திருடுகிறாய்? நீ யூதாஸ்காரியோத்தின் குமாரன் இல்லையா? யேகோவாவாகிய எனக்குச் செய்யப்பட்ட பலிகளானது ஆசாரியர்கள் அனுபவிக்க வேண்டியவை. நீ ஓர் ஆசாரியனா? எனக்கான பலிகளை நீ மனநிறைவுடன் புசிக்கத் துணிகிறாய், மேலும் அவற்றை மேசைமீதும் வைக்கிறாய்; நீ எந்த மதிப்பும் இல்லாதவன்! நீ எதற்கும் பயனற்ற மோசமான ஒருவன்! எனது அக்கினி, அதாவது யேகோவாவின் அக்கினி, உன்னை எரித்துப்போடும்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்