தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 336
ஏப்ரல் 8, 2023
நீ மாம்சமாகிய தேவனை ஒப்புக்கொள்கிறாய் என்றும், மாம்சத்தில் தோன்றும் வார்த்தையை ஒப்புக்கொள்கிறாய் என்றும் சொல்கிறாய், ஆனாலும் நீ அவருடைய முதுகுக்குப் பின்னால் சில விஷயங்களைச் செய்கிறாய், அவர் உன்னை செய்யச் சொல்வதற்கு எதிரான விஷயங்கள், மேலும் உன் இருதயத்தில் நீ அவரைக் கண்டு பயப்படுவதும் இல்லை. இது தான் தேவனை ஒப்புக்கொள்வதா? அவர் சொல்வதை நீ ஒப்புக்கொள்கிறாய், ஆனால் உன்னால் முடிந்ததை நீ கடைப்பிடிப்பதும் இல்லை, அவருடைய வழியை நீ பின்பற்றுவதும் இல்லை. இதுதான் தேவனை ஒப்புக்கொள்வதா? நீ அவரை ஒப்புக் கொண்டாலும், உனது மனநிலை அவரை நோக்கிப் போர்க்குணத்தோடு மட்டுமே பார்க்கிறது, ஒருபோதும் பயபக்தியுடன் பார்ப்பதில்லை. நீ அவருடைய கிரியையைக் கண்டு, ஒப்புக்கொண்டு, அவர்தான் தேவன் என்று நீ அறிந்திருந்தாலும், நீ சற்றே சூடாகவும், முற்றிலும் மாறாமலும் இருக்கிறாய் என்றால், நீ இன்னும் ஜெயங்கொள்ளப்படாத ஒருவன்தான். ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும், மேலும் அவர்களால் உயர்ந்த சத்தியங்களுக்குள் நுழைய முடியாவிட்டாலும், இந்தச் சத்தியங்கள் அவர்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், இதுபோன்றவர்கள் இதை அடைய தங்கள் இருதயத்தில் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கடைப்பிடிக்கக்கூடியவற்றுக்கு எல்லைகளும் வரம்புகளும் உள்ளன, அதேபோல அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவற்றிற்கும் வரம்புகள் உள்ளன. எவ்வாறாயினும், குறைந்த பட்சம், அவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும், உன்னால் அதை அடைய முடிந்தால், இது ஜெயங்கொள்ளும் கிரியையின் காரணமாக அடையப்பட்ட ஒரு விளைவாக இருக்கும். ஒருவேளை நீ, "மனுஷனால் முன்வைக்க முடியாத பல வார்த்தைகளை தேவனால் முன்வைக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம், அப்படியும் அவர் தேவன் இல்லையென்றால், வேறு யார் தான் தேவன்?" என்று சொல்லலாம். இத்தகைய சிந்தனைக்கு நீ தேவனை ஒப்புக்கொள்கிறாய் என்று அர்த்தமல்ல. நீ தேவனை ஒப்புக்கொண்டால், அதை உனது உண்மையான செயல்களின் மூலம் நீ நிரூபிக்க வேண்டும். நீ நீதியைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும், நீ ஒரு திருச்சபையை வழிநடத்தினால், பணத்திற்கும் செல்வத்திற்கும் ஏங்கினால், திருச்சபையின் நிதியை எப்போதும் நீயே எடுத்துக்கொண்டால், இதுதான் தேவன் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதா? தேவன் சர்வவல்லவர், அவர் பயபக்திக்கு தகுதியானவர். ஒரு தேவன் இருப்பதாக நீ உண்மையாக ஒப்புக் கொண்டால் நீ எப்படி பயப்படாமல் இருக்க முடியும்? நீ இத்தகைய இழிவான செயல்களைச் செய்ய வல்லன் என்றால், நீ அவரை உண்மையிலேயே ஒப்புக்கொள்கிறாயா? நீ தேவனையா விசுவாசிக்கிறாய்? நீ ஒரு தெளிவற்ற தேவனைத்தான் விசுவாசிக்கிறாய்; அதனால்தான் நீ பயப்படுவதில்லை! தேவனை உண்மையாக ஒப்புக்கொண்டு அவரை அறிந்தவர்கள் அனைவரும் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள், அவரை எதிர்க்கும் அல்லது தங்கள் மனசாட்சியை மீறும் எதையும் செய்ய பயப்படுகிறார்கள்; குறிப்பாக, தேவனின் சித்தத்திற்கு எதிரானது என்று அவர்கள் அறிந்த எதையும் செய்ய அவர்கள் பயப்படுகிறார்கள். இது மட்டுமே தேவன் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதாகக் கருத முடியும். உனது பெற்றோர் நீ தேவனை விசுவாசிப்பதைத் தடுக்க முயற்சிக்கும்போது நீ என்ன செய்ய வேண்டும்? உனது விசுவாசமற்ற கணவன் உனக்கு நல்லவராக இருக்கும்போது நீ எவ்வாறு தேவனை நேசிக்க வேண்டும்? சகோதர சகோதரிகள் உன்னை வெறுக்கும்போது நீ எவ்வாறு தேவனை நேசிக்க வேண்டும்? நீ அவரை ஒப்புக் கொண்டால், இந்த விஷயங்களில் நீ சரியான முறையில் செயல்பட்டு யதார்த்தமாக ஜீவிப்பாய். நீ உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், ஆனால் தேவன் இருக்கிறார் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று மட்டுமே கூறினால், நீ வெறுமனே பேசுபவன் மட்டுமே! நீ அவரை விசுவாசிக்கிறாய், அவரை ஒப்புக்கொள்கிறாய் என்று நீ சொல்கிறாய், ஆனால் நீ அவரை எந்த வகையில் ஒப்புக்கொள்கிறாய்? நீ அவரை எந்த வகையில் விசுவாசிக்கிறாய்? நீ அவருக்கு பயப்படுகிறாயா? நீ அவரை பயபக்தியுடன் வணங்குகிறாயா? நீ அவரை உனக்குள்ளே ஆழமாக நேசிக்கிறாயா? நீ மன உளைச்சலுக்கு ஆளாகி, தோள்சாய்வதற்கு யாரும் இல்லாதபோது, தேவனின் அருமையை நீ உணர்கிறாய், ஆனால் அதன் பிறகு நீ அதை எல்லாம் மறந்து விடுகிறாய். அது தேவனை நேசிப்பது இல்லை, தேவனை நம்புவதும் இல்லை! இறுதியில், மனுஷன் எதை அடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்? உனது சொந்த முக்கியத்துவத்தால் ஈர்க்கப்படுவது, புதிய விஷயங்களை நீ விரைவாகப் புரிந்துகொண்டு அறிந்துகொள்வது, மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது, மற்றவர்களைக் குறைத்துப் பார்ப்பது, ஜனங்களை அவர்களின் தோற்றத்தைக் கண்டு தீர்மானிப்பது, கபடற்றவர்களைக் கொடுமைப்படுத்துவது, திருச்சபை பணத்தை விரும்புவது மற்றும் பல என நான் குறிப்பிட்டுள்ள அனைத்து நிலைகளும்—இந்தச் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலைகள் அனைத்தும் பகுதியாக உன்னிடமிருந்து அகற்றப்பட்டால் மட்டுமே, உனது ஜெயங்கொள்ளுதல் வெளிப்படும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்