தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 545
டிசம்பர் 21, 2022
தேவன் இப்போது, அவருடன் ஒத்துழைக்க முயற்சிப்பவர்கள், அவருடைய கிரியைக்குக் கீழ்ப்படியக்கூடியவர்கள், தேவன் பேசும் வார்த்தைகள் உண்மை என்று விசுவாசிப்பவர்கள், தேவனின் தேவைகளை நடைமுறைப்படுத்தக்கூடியவர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட ஜனக்குழுவைப் பெற விரும்புகிறார்; அவர்கள் தங்களது இருதயங்களில் உண்மையான புரிதலைக் கொண்டவர்கள், அவர்கள்தாம் பூரணப்படுத்தப்படக்கூடியவர்கள், மேலும் அவர்களால் நிச்சயமாய்ப் பரிபூரணத்தின் பாதையில் நடக்க முடியும். தேவனின் கிரியையைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்கள், தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம் பண்ணாதவர்கள், அவருடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தாதவர்கள், மற்றும் தங்களது இருதயங்களில் தேவனுக்கான எந்த அன்பும் இல்லாதவர்கள் பரிபூரணமாக்கப்பட முடியாதவர்கள் ஆவர். மனுவுருவான தேவனை சந்தேகிப்பவர்கள், அவரைப் பற்றிய நிச்சயமற்றவர்களாகவே இருக்கிறார்கள், அவருடைய வார்த்தைகளை ஒருபோதும் தீவிரமாகக் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் அவரை வஞ்சிக்கிறவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள் மற்றும் சாத்தானுக்குச் சொந்தமானவர்கள் ஆவார்கள்; அத்தகையவர்களைப் பரிபூரணப்படுத்த வழியே இல்லை.
நீ பரிபூரணப்படுத்தப்பட விரும்பினால், நீ முதலில் தேவனால் தயவு பெற வேண்டும். ஏனென்றால், அவரால் தயவு செய்யப்படுபவர்களையும் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களையும் அவர் பரிபூரணப்படுத்துகிறார். தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் நீ இருக்க விரும்பினால், அவருடைய கிரியைக்குக் கீழ்ப்படியும் ஓர் இருதயம் உன்னிடத்தில் இருக்க வேண்டும், நீ சத்தியத்தைத் தொடர முயற்சிக்க வேண்டும், சகலத்திலும் தேவனின் ஆழ்ந்த சோதனையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நீ செய்கிற அனைத்தும் தேவனின் ஆழ்ந்த சோதனைக்கு உட்பட்டதா? உனது நோக்கம் சரியானதா? உனது நோக்கம் சரியாக இருந்தால், தேவன் உன்னைப் பாராட்டுவார்; உனது நோக்கம் தவறாக இருந்தால், உனது இருதயம் நேசிப்பது தேவனை அல்ல, மாம்சத்தையும் சாத்தானையும் என்பதை இது காட்டுகிறது. ஆகையால், சகலத்திலும் தேவனின் ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வழியாக நீ ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ ஜெபிக்கும்போது, நான் உனக்கு முன்னால் நேரில் நிற்கவில்லை என்றாலும், பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கிறார், மேலும் நீ ஜெபிப்பது என்னிடமும் மற்றும் தேவனுடைய ஆவியானவரிடமுமே. இந்த மாம்சத்தை நீ ஏன் நம்புகிறாய்? தேவனின் ஆவியானவரை அவர் கொண்டிருப்பதால் நீ நம்புகிறாய். இந்த மனிதன் தேவனின் ஆவியினைக் கொண்டிருக்காமல் இருந்தால் நீ அவரை நம்புவாயா? இந்த மனிதனை நீ நம்பும்போது, நீ தேவனின் ஆவியை நம்புகிறாய். இந்த மனிதனுக்கு நீ பயப்படும்போது, நீ தேவனின் ஆவிக்குப் பயப்படுகிறாய். தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கை இந்த மனிதன் மீதான நம்பிக்கையும், இந்த மனிதனின் மீதான நம்பிக்கை தேவனின் ஆவியின் மீதான நம்பிக்கையும் ஆகும். நீ ஜெபிக்கும்போது, தேவனுடைய ஆவி உன்னிடத்தில் இருப்பதையும், தேவன் உனக்கு முன்பாக இருப்பதையும் உணர்கிறாய், ஆகவே, நீ அவருடைய ஆவியிடம் ஜெபிக்கிறாய். இன்று, பெரும்பாலான ஜனங்கள் தங்களது செயல்களை தேவனின் முன் கொண்டுவர மிகவும் பயப்படுகிறார்கள்; நீ அவருடைய மாம்சத்தை ஏமாற்றும்போது, அவருடைய ஆவியை நீ ஏமாற்ற முடியாது. தேவனின் ஆழ்ந்த சோதனையைத் தாங்க முடியாத எந்தவொரு விஷயமும் சத்தியத்துடன் முரண்படுகின்றன, அவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும்; வேறு வகையில் செய்வது தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும். ஆகவே, நீ ஜெபிக்கும்போதும், பேசும்போதும், உன் சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படும்போதும், உன் கடமையைச் செய்யும்போதும், உன் தொழிலைக் கவனிக்கும்போதும், எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தை தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும். உன் செயல்பாட்டை நீ நிறைவேற்றும்போது, தேவன் உன்னுடன் இருக்கிறார், உனது நோக்கம் சரியானது மற்றும் தேவனின் வீட்டின் பணிக்காக நீ இருக்கும் வரை, நீ செய்யும் அனைத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார்; உனது செயல்பாட்டை நிறைவேற்ற நீ உண்மையாக உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீ ஜெபிக்கும்போது, உன் இருதயத்தில் தேவன்மீது அன்பு வைத்திருந்தால், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியை நாடினால், இவை உனது நோக்கமாக இருந்தால், உனது ஜெபங்கள் பலனளிக்கும். உதாரணமாக, நீ கூட்டங்களில் ஜெபிக்கும்போது, உனது இருதயத்தைத் திறந்து தேவனிடம் ஜெபம் செய்து, பொய்யைப் பேசாமல் உனது இருதயத்தில் இருப்பதை அவரிடம் கூறினால், உனது ஜெபங்கள் நிச்சயமாகப் பலனளிக்கும். உனது இருதயத்தில் தேவனை நீ ஊக்கமாக நேசிக்கிறாயானால், தேவனிடம் ஆணையிட்டுக்கொடு: "வானத்திலும் பூமியிலும் சகலத்திலும் இருக்கும் தேவனே, நான் உம்மிடம் சத்தியம் பண்ணுகிறேன்: உம்முடைய ஆவியானவர் நான் செய்யும் எல்லாவற்றையும் ஆராய்ந்து, எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்து கவனித்துக்கொள்வதோடு, நான் செய்யும் எல்லாம் உம்முடைய சமூகத்தில் நிற்பதை சாத்தியமாக்கும். என் இருதயம் எப்போதாவது உம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டாலோ அல்லது அது எப்போதாவது உமக்குத் துரோகம் செய்தாலோ என்னைக் கடுமையாக சிட்சித்து சபித்துவிடும். இந்த உலகத்திலோ அல்லது அடுத்த உலகத்திலோ என்னை மன்னிக்க வேண்டாம்!" அத்தகைய ஆணையைச் செய்துகொடுக்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ தைரியமில்லாதவன் என்பதையும், நீ இன்னும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறாய் என்பதையும் இது காட்டுகிறது. இந்தத் தீர்மானம் உன்னிடம் உள்ளதா? இது உண்மையிலேயே உனது தீர்மானமாக இருந்தால், நீ இந்த ஆணையைச் செய்ய வேண்டும். அத்தகைய ஆணையைச் செய்ய உனக்குத் தீர்மானம் இருந்தால், தேவன் உனது தீர்மானத்தை நிறைவேற்றுவார். நீ தேவனிடம்ஆணையிட்டுக் கொடுக்கும்போது, அவர் அதற்குச் செவிகொடுக்கிறார். உன் ஜெபத்தின் அளவையும் உனது கைக்கொள்ளுதலையும் பொறுத்து நீ பாவமுள்ளவனா அல்லது நீதிமானா என்பதை தேவன் தீர்மானிக்கிறார். இது இப்போது உன்னை பரிபூரணப்படுத்துவதற்கான செயல்முறையாகும், மேலும், நீ பரிபூரணமாக்கப்படுவதில் உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருந்தால், நீ செய்யும் எல்லாவற்றையும் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வந்து அவருடைய ஆழ்ந்த சோதனையை ஏற்றுக்கொள்வாய்; நீ ஏதாவது ஒழுக்கக்கேடான கலகத்தைச் செய்தால் அல்லது நீ தேவனுக்குத் துரோகம் செய்தால், அவர் உனது ஆணையை நிறைவேற்றுவார், இதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும், அது அழிவோ சிட்சையோ எதுவாக இருந்தாலும், இது உன் சொந்தச் செயலாகும். நீ ஆணையிட்டுக்கொடுத்தாய், எனவே, நீ அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நீ ஆணையிட்டுக்கொடுத்தும், அதைக் கடைப்பிடிக்காவிட்டால், நீ அழிவை அனுபவிப்பாய். ஆணை உன்னுடையது என்பதால், தேவன் உன் ஆணையை நிறைவேற்றுவார். சிலர் ஜெபித்த பிறகு பயந்து, "எல்லாம் முடிந்துவிட்டது! ஒழுக்கக்கேட்டிற்கான என் வாய்ப்பு போய்விட்டது; துன்மார்க்கமான காரியங்களைச் செய்வதற்கான என் வாய்ப்பு போய்விட்டது; என் உலக ஏக்கங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!" என புலம்புகிறார்கள். இந்த ஜனங்கள் இன்னமும் உலகப்பற்றையும் பாவத்தையும் நேசிக்கிறார்கள், அவர்கள் அழிவை அனுபவிப்பது உறுதி.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவர்களைப் பரிபூரணமாக்குகிறார்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்