தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 515

பிப்ரவரி 27, 2023

சுத்திகரிப்பு கிரியையின் நோக்கம் முக்கியமாக ஜனங்களின் விசுவாசத்தைப் பரிபூரணமாக்குவதாகும். இறுதியில் அடையப்படுவது என்னவென்றால், நீ வெளியேற விரும்புகிறாய், ஆனால் அதே நேரத்தில், உன்னால் வெளியேற முடிவதில்லை; மிகச் சிறிய அளவிலான நம்பிக்கை இல்லாதபோதும்கூட சிலரால் விசுவாசிக்க முடிகிறது; மேலும், ஜனங்கள் தங்களது எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி இனி நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் மட்டுமே தேவனுடைய சுத்திகரிப்பு நிறைவடையும். மனிதன் இன்னும் ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் நிலையற்ற நிலையினை அடைந்திருக்கவில்லை, அவர்கள் மரணத்தை ருசிக்கவில்லை. ஆதலால், சுத்திகரிப்பு செயல்முறை இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. ஊழியம் செய்பவர்களின் நிலையில் இருந்தவர்கள்கூட மிகச் சிறப்பாகச் சுத்திகரிக்கப்படவில்லை. யோபு தீவிர சுத்திகரிப்புக்கு உட்பட்டான், அவன் சார்ந்து இருப்பதற்கு அவனுக்கு எதுவும் இருக்கவில்லை. ஜனங்களுக்கு, தாங்கள் நம்பி இருக்க எதுவுமில்லை, சார்ந்து இருப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு அவர்கள் சுத்திகரிப்புகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்—இது மட்டுமே உண்மையான சுத்திகரிப்பாகும். ஊழியம் செய்பவர்களாக இருக்கும் நேரத்தில், உன் இருதயம் எப்பொழுதும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்திருந்தால், அவர் என்ன செய்திருந்தாலும், உனக்காக அவருடைய விருப்பம் எதுவாக இருந்திருந்தாலும், நீ எப்போதும் அவருடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிந்தால், இறுதியில் நீ தேவன் செய்த எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய். நீ யோபுவின் சோதனைகளுக்கு உட்படுகிறாய், அதே சமயம் பேதுருவின் சோதனைகளுக்கும் நீ உட்படுகிறாய். யோபு சோதிக்கப்பட்டபோது, அவன் சாட்சியாக நின்றான். இறுதியில், யேகோவா அவனுக்கு வெளிப்பட்டார். அவன் சாட்சியாக நின்ற பின்னரே தேவனுடைய முகத்தைப் பார்க்க தகுதியானவனாக அவன் இருந்தான். "நான் தீட்டான தேசத்திலிருந்து மறைந்துகொள்கிறேன், ஆனால் என்னை பரிசுத்த ராஜ்யத்திற்குக் காட்டுகிறேன்" என்று ஏன் கூறப்படுகிறது? அதாவது, நீ பரிசுத்தனாகவும், சாட்சியாகவும் நிற்கும் போது மட்டுமே தேவனுடைய முகத்தைக் காணும் மேன்மையை நீ பெற முடியும். அவருக்காக நீ சாட்சியாக நிற்க முடியாவிட்டால், அவருடைய முகத்தைக் காண்பதற்கான மேன்மையை நீ பெற்றிருக்கமாட்டாய். நீ சுத்திகரிப்புகளை சந்திப்பதால் பின்வாங்கினால் அல்லது தேவனுக்கு எதிராகக் குறை கூறினால், அவருக்குச் சாட்சியாக நிற்கத் தவறிவிட்டு, சாத்தானின் கேலிக்குரியவனாக மாறினால், நீ தேவன் தோன்றுவதை ஆதாயம் செய்ய மாட்டாய். சோதனைகளுக்கு மத்தியில் தன் மாம்சத்தைச் சபித்து, தேவனுக்கு எதிராகக் குறை கூறாமல், தனது வார்த்தைகள் மூலம் குறை கூறாமல் அல்லது பாவம் செய்யாமல் தன் மாம்சத்தை வெறுக்க முடிந்த யோபுவைப் போல நீ இருந்தால், நீ சாட்சியாக நிற்பாய். நீ ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சுத்திகரிப்புகளுக்கு உட்பட்டால், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரிடம் நீ பிற கோரிக்கைகளையோ, உனது சொந்தக் கருத்துக்களையோ முன்வைக்காமல், தேவனுக்கு முன்பாக முற்றிலும் கீழ்ப்படிந்து, நீயும் யோபுவைப் போல் இருக்க முடிந்தால், தேவனும் உனக்குத் தோன்றுவார். உன்னுடைய கருத்துக்கள், தனிப்பட்ட பாரபட்சமான எண்ணங்கள், சுயநல எண்ணங்கள், தனிப்பட்ட தேவைகள் மற்றும் மாம்ச ஆர்வங்கள் ஆகியவற்றை நீ கொண்டிருப்பதால் இப்போது தேவன் உனக்குத் தோன்றவில்லை. அவருடைய முகத்தைப் பார்க்க நீ தகுதியற்றவன். நீ தேவனைக் காண நேர்ந்தால், உனது சொந்தக் கருத்துக்களால் நீ அவரை அளவிடுவாய், அவ்வாறு செய்யும்போது, அவர் உன்னால் சிலுவையில் அறையப்படுவார். உனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத பல விஷயங்கள் உன்னிடம் வந்தாலும், அவற்றை நீ ஒதுக்கி வைத்துவிட்டு, இவற்றிலிருந்து தேவனுடைய கிரியைகளைப் பற்றிய அறிவை அடைய முடிகிறது. மேலும், சுத்திகரிப்புகளுக்கு மத்தியில் நீ தேவனை நேசிக்கும் உனது இருதயத்தை வெளிப்படுத்தினால், இதுவே சாட்சியாக நிற்பதாகும். உன் வீடு சமாதானமாக இருந்தால், நீ மாம்சத்தின் இன்பங்களை அனுபவிக்கிறாய், யாரும் உன்னைத் துன்புறுத்துவதில்லை, திருச்சபையில் உள்ள உனது சகோதர சகோதரிகள் உனக்குக் கீழ்ப்படிகிறார்கள், தேவனை நேசிக்கும் உனது இருதயத்தைக் காண்பிக்க முடியுமா? இந்தச் சூழல் உன்னைச் சுத்திகரிக்க முடியுமா? சுத்திகரிப்பு மூலமாக மட்டுமே தேவனை நேசிக்கும் உனது இருதயத்தைக் காண்பிக்க முடியும். மேலும், உனது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத விஷயங்கள் மூலம்தான் நீ பரிபூரணமானவனாக முடியும். பல முரண்பாடான மற்றும் எதிர்மறையான விஷயங்களின் மூலமாக, அனைத்து வகையான சாத்தானின் வெளிப்பாடுகளையும்—அதன் செயல்பாடுகள், குற்றச்சாட்டுகள், தொந்தரவுகள் மற்றும் வஞ்சித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சாத்தானின் அருவருப்பான முகத்தை தேவன் உனக்குக் தெளிவாகக் காண்பிக்கிறார். இதன் மூலம் சாத்தானை வேறுபடுத்தி பார்ப்பதற்கான உனது திறனை நீ பரிபூரணமாக்குகிறாய், இதனால் சாத்தானை வெறுத்து அதனைக் கைவிடுகிறாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணமாக்கப்பட வேண்டியவர்கள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க