தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 501
பிப்ரவரி 25, 2023
தேவனை நேசிப்பவர்கள் சத்தியத்தை நேசிப்பவர்களாவர், மேலும் சத்தியத்தை நேசிப்பவர்கள் அதை அதிகமாகக் கடைப்பிடிக்கும் போது, அவர்கள் அதை அதிகமாகக் கொண்டுள்ளனர்; அவர்கள் சத்தியத்தை எவ்வளவு அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அன்பைப் பெற்றிருப்பார்கள். மேலும் அவர்கள் சத்தியத்தை எவ்வளவு அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நீ எப்பொழுதும் இந்த வழியில் நடந்தால், உன்னைக் குறித்த தேவனின் அன்பு படிப்படியாகப் பேதுரு தேவனை அறிந்து கொண்டதைப் போலவே உன்னைப் பார்க்கும்படியாகச் செய்யும். பேதுரு, தேவனிடம் வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்கும் ஞானம் மட்டுமல்ல, ஆனால், மேலும், மக்களில் உண்மையான கிரியையைச் செய்வதற்கான ஞானமும் அவரிடம் உள்ளது என்று சொன்னார். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதன் காரணமாக மட்டுமல்லாமல், மேலும் மனிதனைப் படைப்பதற்கும், மனிதனை இரட்சிப்பதற்கும், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கும், அவனுடைய அன்பைப் பெறுவதற்குமான அவருடைய திறனின் காரணமாக அவர் ஜனங்களின் அன்பிற்குத் தகுதியானவர் என்று பேதுரு கூறினான். ஆகவே, மனிதனின் அன்பிற்குத் தகுதியானவை அவரிடத்தில் அதிகம் இருப்பதாகப் பேதுரு சொல்லத்தான் செய்தான். பேதுரு இயேசுவை நோக்கி, "வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதே ஜனங்களின் அன்பிற்கு நீர் தகுதியானவராக ஒரே காரணமா? உம்மில் உள்ள அநேக காரியங்கள் அன்புக்குறியவை. நீர் நிஜ வாழ்க்கையில் செயல்படுகிறீர், ஏவுகிறீர், உம் ஆவி என்னை உள்ளே தொடுகிறது, நீர் என்னை ஒழுங்குபடுத்துகிறீர், நீர் என்னை நிந்திக்கிறீர்—இந்த விஷயங்கள் ஜனங்களின் அன்பிற்கு இன்னும் தகுதியானவை." நீ தேவனின் அன்பைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினால், நீ நிஜ வாழ்க்கையில் ஆராய்ந்து தேட வேண்டும், மேலும் உன் சொந்த மாம்சத்தை ஒதுக்கி வைக்க தயாராக இருக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தை நீ எடுக்க வேண்டும். சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் இன்பங்களை விரும்பாமலோ, மாம்சத்திற்காக வாழாமல் தேவனுக்காக வாழ்பவனாகவும் இருந்து, எல்லாவற்றிலும் தேவனைத் திருப்திப்படுத்தக்கூடிய உறுதியான ஒருவனாக நீ இருக்க வேண்டும். நீ தேவனைத் திருப்திப்படுத்தாத சமயங்கள் இருக்கலாம். ஏனென்றால், நீ தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அடுத்த முறை, அதிக முயற்சி தேவை என்றாலும், நீ அவரை திருப்திப்படுத்த வேண்டும் மற்றும் மாம்சத்தைத் திருப்திப்படுத்தக்கூடாது. இந்த வழியில் நீ அனுபவம் பெறும்போது, நீ தேவனை அறிந்து கொண்டிருப்பாய். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் தேவனால் உண்டாக்க முடியும் என்பதையும், அவர் மாம்சமாகிவிட்டார் என்பதையும், அதனால் ஜனங்கள் உண்மையில் அவரைப் பார்க்கவும், அவருடன் உண்மையில் ஐக்கியப்படவும் முடியும் என்பதை நீ கண்டுகொள்வாய். அவர் மனிதர்களிடையே நடக்க முடிகிறது என்பதையும், அவருடைய ஆவியால் நிஜ வாழ்க்கையில் ஜனங்களைப் பரிபூரணமாக்க முடியும் என்பதையும், அவருடைய அருமையைக் காணவும், அவருடைய ஒழுக்கத்தையும், சிட்சையையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் அவர்களை அனுமதிக்கிறது என்பதையும் நீ கண்டுகொள்வாய். நீ எப்போதுமே இந்த வழியில் அனுபவித்தால், நிஜ வாழ்க்கையில் நீ தேவனிடமிருந்து பிரிக்கமுடியாதவனாக இருப்பாய், ஒரு நாள் தேவனுடனான உன் உறவு சாதாரணமாக இருப்பது நிறுத்தப்பட்டால், உன்னால் நிந்தனைக்கு ஆளாகி வருத்தத்தை உணர முடியும். நீ தேவனுடன் ஒரு சரியான உறவைக் கொண்டிருக்கும்போது, நீ ஒருபோதும் தேவனை விட்டு விலக விரும்பமாட்டாய், ஒரு நாள் தேவன் உன்னைத் தாம் கைவிட்டு விடுவதாகச் சொன்னால், நீ பயப்படுவாய், மேலும் நீ தேவனால் கைவிடப்படுவதை விட இறந்துவிடுவது மேல் என்று கூறுவாய். இந்த உணர்ச்சிகளை நீ பெற்றவுடன், உன்னால் தேவனை விட்டு விலக இயலாது என்று நீ உணர்ந்து கொள்வாய், இந்த வழியில், நீ ஒரு அஸ்திபாரத்தைக் கொண்டிருப்பாய், மேலும் தேவனின் அன்பை உண்மையிலேயே அனுபவிப்பாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்