தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 488

டிசம்பர் 21, 2022

உங்கள் வாழ்க்கை முன்னேறும்போது, நீங்கள் எப்போதும் புதிய அணுகுமுறை மற்றும் புதிய, மிகவும் அதிகமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், இது நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஆழமாக வளர்ச்சியடையும். இதற்குள்தான் சகல மனுஷர்களும் உட்பிரவேசிக்க வேண்டும். உரையாடுதல், பிரசங்கங்களைக் கேட்டல், தேவனுடைய வார்த்தையைத் தியானித்தல் அல்லது சில விஷயங்களைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலம், நீங்கள் புதிய அறிவையும் புதிய ஞானத்தையும் பெறுவீர்கள், மேலும் பழைய மற்றும் பழங்கால விதிகளுக்குள் வாழ மாட்டீர்கள்; நீங்கள் எப்போதும் புதிய ஒளியில் வாழ்வீர்கள், மேலும் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் செல்லமாட்டீர்கள். அதாவது சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதே இதற்குரிய அர்த்தமாகும். சில மேலோட்டமான அளவில் விலைக்கிரயம் கொடுப்பது வேலைக்கு ஆகாது; நாளுக்கு நாள், தேவனுடைய வார்த்தை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கிறது, மேலும் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்கள் தோன்றுகின்றன, மனுஷனும் ஒவ்வொரு நாளும் புதிதான ஒன்றிற்குள் பிரவேசிக்க வேண்டும். தேவன் பேசும்போது, அவர் பேசிய சகலத்திலும் அவர் பலனைக் கொண்டுவருவார், மேலும் உங்களால் பின்பற்ற இயலவில்லை என்றால், நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள். உங்கள் ஜெபங்களில் நீங்கள் ஆழமாகச் செல்ல வேண்டும்; தேவனுடைய வார்த்தையைப் புசித்துக் குடிப்பதில் இடைவெளிவிட்டு நடக்கக்கூடாது. நீங்கள் பெறும் ஞானத்தையும் வெளிச்சத்தையும் ஆழப்படுத்துங்கள், உங்கள் கருத்துக்களும் கற்பனைகளும் படிப்படியாக குறைய வேண்டும். உங்கள் விவேகத்தையும் நீங்கள் பலப்படுத்த வேண்டும், நீங்கள் எதை எதிர்கொண்டாலும், அதைப் பற்றிய உங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் உங்கள் சொந்தக் கண்ணோட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆவியில் சில விஷயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் வெளிப்புற விஷயங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும் மற்றும் எந்தவொரு பிரச்சனையின் மையத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் இந்த விஷயங்கள் இல்லையென்றால், நீங்கள் திருச்சபையை எவ்வாறு வழிநடத்த இயலும்? எந்தவொரு யதார்த்தமும் இல்லாமலும், நடைமுறையில் நடக்காமலும் நீங்கள் எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றி மாத்திரமே பேசுவீர்களேயானால், உங்களால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்க இயலும். புதிய விசுவாசிகளுடன் பேசும்போது இது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படலாம், ஆனால் ஒரு காலத்திற்குப் பிறகு, புதிய விசுவாசிகள் சில உண்மையான அனுபவங்களைப் பெற்றிருக்கும்போது, உங்களால் அவர்களுக்கு அவற்றை இனிமேலும் கொடுக்க இயலாது. பிறகு எப்படி நீங்கள் தேவன் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவராக இருப்பீர்கள்? புதிய ஞானம் இல்லாமல், உங்களால் செயல்பட இயலாது. புதிய ஞானம் இல்லாதவர்கள் உணரத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்றவர்கள் புதிய ஞானத்தையோ அல்லது புதிய அனுபவ உணர்வையோ ஒருபோதும் பெற மாட்டார்கள். மேலும், ஜீவனைக் கொடுக்கும் விஷயத்தில், அவர்களால் தங்கள் செயல்பாட்டை ஒருபோதும் செய்ய இயலாது, அவர்களால் தேவன் பயன்படுத்துவதற்குப் பொருத்தமானவராக மாறவும் இயலாது. இவ்விதமான நபர் ஒன்றிற்கும் பிரயோஜனமில்லாதவர், ஊதாரியாக மட்டுமே காணப்படுகிறார். உண்மையைச் சொன்னால், இதுபோன்றவர்கள் பணியில் தங்கள் செயல்களைச் செய்ய முற்றிலும் தகுதியில்லாதவர்கள், இவர்கள் அனைவரும் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவர்கள். அவர்கள் தங்கள் செயல்பாட்டைச் செய்யத் தவறுவது மட்டுமின்றி, அவர்கள் திருச்சபைக்கு உண்மையிலேயே தேவையில்லாத அதிக சிரமத்தைக் கொடுக்கின்றனர். இந்த "வணக்கத்திற்குரிய வயதானவர்கள்" இனிமேலும் நீங்கள் காணாதவாறு திருச்சபையை விட்டு அவசரமாக வெளியேற வேண்டுமென வலியுறுத்துகிறேன். இதுபோன்ற ஜனங்களிடம் புதிய கிரியையைப் பற்றிய புரிதல் இருப்பதில்லை, அவர்கள் முடிவில்லாத கருத்துக்களால் நிரப்பப்பட்டிருக்கின்றனர். அவர்கள் திருச்சபையில் எந்த செயல்பாட்டையும் செய்வதில்லை; மாறாக, அவர்கள் எல்லா இடங்களிலும் தீங்குகளையே செய்கிறார்கள் மற்றும் எதிர்மறையானவற்றையே பரப்புகிறார்கள், திருச்சபையில் எல்லா விதமான தவறான நடத்தைகளிலும் தொந்தரவுகளிலும் ஈடுபடுகிறார்கள், இதனால் பாகுபாடு இல்லாதவர்களைக் குழப்பத்திற்குள்ளும் சீர்கேடான நிலைக்குள்ளும் தள்ளுகிறார்கள். இந்த உயிருள்ள பிசாசுகள், இந்தப் பொல்லாத ஆவிகள் நிமித்தமாக திருச்சபை பாழாகிவிடாதவாறு விரைவிலேயே திருச்சபையை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் இன்றைய கிரியைக்குப் பயப்படாமல் இருக்கலாம், ஆனால் நாளைய தினத்தின் நீதியான ஆக்கினைக்குப் பயப்படமாட்டீர்களா? திருச்சபைக்குப் பாரமான ஏராளமான ஜனங்களும், தேவனுடைய வழக்கமான கிரியைக்கு இடையூறு செய்ய முற்படும் ஏராளமான ஓநாய்களும் உள்ளனர். இந்த விஷயங்கள் அனைத்தும் பிசாசுகளின் ராஜாவால் அனுப்பப்பட்ட பிசாசுகளாகவும், ஒன்றுமறியாத ஆட்டுக்குட்டிகளை விழுங்க முயற்சிக்கும் பொல்லாத ஓநாய்களுமாக இருக்கின்றன. இந்தப் பெயரளவிலான ஜனங்கள் வெளியேற்றப்படவில்லை என்றால், அவர்கள் திருச்சபையில் ஒட்டுண்ணிகளாகவும் காணிக்கைகளை விழுங்கும் பூச்சிகளாகவும் மாறிப்போவார்கள். இப்பொழுது இல்லாவிட்டாலும், இந்த அருவருப்பான, அலட்சியமான, இழிவான மற்றும் வெறுக்கத்தக்க மாமிசப்புழுக்கள் தண்டிக்கப்படும் ஒரு நாள் வரும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க