தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 487
டிசம்பர் 20, 2022
நீ தேவனை விசுவாசிப்பதால், தேவனுடைய எல்லா வார்த்தைகள் மற்றும் அவருடைய எல்லாக் கிரியைகள் மீதும் நீ விசுவாசம் வைக்க வேண்டும். அதாவது, நீ தேவனை விசுவாசிப்பதால், நீ அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். உன்னால் இதைச் செய்ய இயலவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிக்கிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நீ பல வருடங்களாக தேவனை விசுவாசித்தாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய வார்த்தைகளின் பரிபூரணத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமலும், அதற்குப் பதிலாக தேவனை உனக்குக் கீழ்ப்படிந்து, உன் கருத்துக்களின்படி செயல்படுமாறு கேட்டுக்கொள்வாயானால், நீதான் அனைவரைக் காட்டிலும் மிகவும் கலகக்காரன், நீ ஒரு அவிசுவாசி. மனுஷனின் கருத்துக்களுக்கு இணங்காத தேவனுடைய கிரியைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இதுபோன்றவர்கள் எவ்வாறு கீழ்ப்படிய முடியும்? தேவனுக்கு வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பவர்களும் அவரை எதிர்ப்பவர்களுமே எல்லோரைக் காட்டிலும் பெரிய கலகக்காரர்கள். அவர்கள் தான் தேவனுடைய எதிரிகள், அந்திகிறிஸ்துக்கள். அவர்களுடையது எப்போதும் தேவனுடைய புதிய கிரியைக்கு எதிரான விரோதப் போக்காகும்; அவர்களிடம் ஒருபோதும் கீழ்ப்படிவதற்கான விருப்பம் சிறிதளவு கூட இருப்பதில்லை, அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்ததோ அல்லது தாழ்மைப்படுத்திக் கொண்டதோ கிடையாது. அவர்கள் மற்றவர்களுக்கு முன்பாக தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள், ஒருபோதும் யாருக்கும் கீழ்ப்படிவதில்லை. தேவனுக்கு முன்பாக, வார்த்தையைப் பிரசங்கிப்பதில் சிறந்தவர்களாகவும், மற்றவர்களை இயக்குவதில் மிகவும் திறமையானவர்களாகவும் தங்களைக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்களிடமுள்ள "பொக்கிஷங்களை" ஒதுக்கித் தள்ளுவதில்லை, ஆனால் அவற்றைத் தொழுகைக்கான, மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கான குடும்பப் பரம்பரைச் சொத்துக்களாகக் கருதுகிறார்கள், மேலும் அவற்றைப் பார்த்து பிரமிக்கும் முட்டாள்களுக்குப் பிரசங்கிக்க அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். திருச்சபையில் உண்மையிலேயே இது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தலைமுறை தலைமுறையாக தேவனுடைய வீட்டில் தங்கியிருக்கும் "வெல்லமுடியாத கதாநாயகர்கள்" என்று சொல்லலாம். அவர்கள் வார்த்தையை (கோட்பாடு) பிரசங்கிப்பதை தங்களுடைய மிக உயரிய கடமையாக கருதுகிறார்கள். கால காலமாக, தலைமுறை தலைமுறையாக, அவர்கள் தங்கள் "பரிசுத்தமான மற்றும் மீற முடியாத" கடமையைத் தீவிரமாக செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களைத் தொடக்கூட யாரும் துணிவதில்லை; ஒருவர் கூட அவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளத் துணிவதில்லை. அவர்கள் கால காலமாக மற்றவர்களை அடக்கி ஆண்டு வருவதனால் தேவனுடைய வீட்டில் "ராஜாக்கள்" ஆக மாறி கட்டுப்பாடற்றவர்களாக செயல்படுகிறார்கள். இந்த பிசாசுகளின் கூட்டம் ஒன்றாக கைகோர்த்து எனது கிரியையை அழிக்க எத்தனிக்கிறது; இந்த உயிருள்ள பிசாசுகள் என் கண் முன்னே இருப்பதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? பாதி கீழ்ப்படிதல் உள்ளவர்களும்கூட கடைசி வரை தொடர்ந்து பயணிக்க இயலாது. இன்னும் மோசமாக இந்த கொடுங்கோலர்கள் தங்கள் இருதயங்களில் சிறிதளவு கூட கீழ்ப்படிதல் இல்லாமல் இருக்கிறார்கள்! மனுஷன் தேவனை எளிதாக அடைவதில்லை. ஜனங்கள் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தினாலும், அவர்களால் அதில் ஒரு பகுதியை மாத்திரமே அடைந்து, இறுதியில் தங்களை பரிபூரணமாக்க அனுமதிக்க இயலும். தேவனுடைய கிரியையை அழிக்க முற்படும் பிரதான தேவதூதனின் பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்? தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கு அவர்களிடம் சிறிதளவு நம்பிக்கை கூட இல்லையா? ஜெயத்தின் கிரியையைச் செய்வதில் எனது நோக்கம் ஜெயத்தின் நிமித்தமாக ஜெயம் கொள்வது மட்டுமின்றி, நீதியையும் அநீதியையும் வெளிப்படுத்துவதற்காகவும், மனுஷனின் தண்டனைக்கான ஆதாரத்தைப் பெறுவதற்காகவும், துன்மார்க்கரைக் கடிந்துகொள்வதற்காகவும் ஜெயம் கொள்வதாகும், அத்துடன் விருப்பத்துடன் கீழ்ப்படிபவர்களை பரிபூரணமாக்கும் பொருட்டும் ஜெயம் கொள்வதாகும். இறுதியில், எல்லோரும் தங்கள் வகைக்கு ஏற்ப பிரிக்கப்படுவார்கள், மேலும் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் தங்களது எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் கீழ்ப்படிதலுடன் நிறைந்திருப்பார்கள். இதுதான் இறுதியில் நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். இதற்கிடையில், தங்கள் ஒவ்வொரு செயலையும் கலகமாகக் கொண்டிருப்பவர்கள் தண்டிக்கப்பட்டு, நித்திய சாபமான அக்கினியில் எரிக்கப்படுவதற்கு அனுப்பப்படுவார்கள். அந்தக் காலம் வரும்போது, கடந்த காலங்களில் அந்த "வீரதீர, வெல்லமுடியாத கதாநாயகர்கள்" இழிவான மற்றும் புறக்கணிக்கப்பட்ட "பலவீனமான மற்றும் வலுவற்ற கோழைகளாக" மாறிப்போவார்கள். இது மாத்திரமே தேவனுடைய நீதியின் ஒவ்வொரு அம்சத்தையும், மனுஷனால் அவமதிக்கமுடியாத அவரது மனநிலையையும் எடுத்துரைக்க இயலும், மேலும் இதனால் மாத்திரமே என் இருதயத்திலுள்ள வெறுப்பைத் தணிக்க இயலும். இது முற்றிலும் நியாயமானது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவில்லையா?
பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவிப்பவர்கள் அல்லது இந்த ஓட்டத்தில் உள்ள எல்லோராலும் ஜீவனைப் பெற இயலாது. ஜீவன் என்பது சகல மனுஷர்களாலும் பகிரப்படும் ஒரு பொதுச் சொத்து அல்ல, மேலும் மனநிலையின் மாற்றங்களை சகல ஜனங்களாலும் எளிதில் அடைய இயலாது. தேவனுடைய கிரியைக்கு ஒப்புக்கொடுப்பது நிஜமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும், அதன்படி வாழவும் வேண்டும். மேலோட்டமான கீழ்ப்படிதலினால் மாத்திரம் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாது, ஒருவருடைய மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்காமல் தேவனுடைய வார்த்தையின் மேலோட்டமான அம்சங்களுக்குக் கீழ்ப்படிவது தேவனுடைய இருதயத்திற்குப் பிரியமானது அல்ல. தேவனுக்குக் கீழ்ப்படிவதும் தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படிவதும் ஒன்றுதான். தேவனுக்கு மாத்திரமே அடிபணிந்து, அவருடைய கிரியைக்கு கீழ்ப்படியாதவர்களை கீழ்ப்படிதலுள்ளவர்கள் என்று கருத இயலாது, இவர்கள் உண்மையிலேயே கீழ்ப்படியாமல் வெளிப்புறமாக துதிபாடுகிறவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்கு உண்மையிலேயே கீழ்ப்படிகிறவர்கள் அனைவருமே கிரியையின் மூலம் ஆதாயப்படவும், தேவனுடைய மனப்பாங்கையும் கிரியையையும் குறித்த புரிதலைப் பெறவும் இயலும். இதுபோன்றவர்கள் மாத்திரமே தேவனுக்கு உண்மையாக கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்றவர்களால் புதிய கிரியையின் மூலம் புதிய அறிவைப் பெறவும், புதிய மாற்றங்களுக்கு உட்படவும் இயலும். இந்த ஜனங்கள் மாத்திரமே தேவனால் பாராட்டப்படுகிறார்கள், இந்த ஜனங்கள் மாத்திரமே பரிபூரணமாக்கப்படுகிறார்கள், இவர்களுடைய மனநிலைகள் தான் மாறுகின்றன. தேவனால் பாராட்டப்படுகிறவர்கள்தான் தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கிரியைக்கும் மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிகிறார்கள். இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே சரியானவர்களாக இருக்கிறார்கள், இதுபோன்ற ஜனங்கள் மாத்திரமே தேவனை உண்மையாக விரும்புகிறார்கள், தேவனை உண்மையாக நாடுகிறார்கள். தேவன் மீதுள்ள தங்கள் விசுவாசத்தைத் தங்கள் வாய் வார்த்தைகளால் மாத்திரமே பேசிவிட்டு, உள்ளுக்குள் அவரைச் சபிப்பவர்கள் வேடந்தரித்த, பாம்பின் விஷத்தைக் கொண்டிருக்கும் ஜனங்களாக இருக்கிறார்கள். இவர்கள்தான் எல்லோரைக் காட்டிலும் துரோகிகளாக இருக்கிறார்கள். இப்போது இல்லையென்றாலும் ஒருநாள் இந்தக் கயவர்கள் தங்கள் கீழ்த்தரமான வேடங்களைக் களைவார்கள். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை அல்லவா? துன்மார்க்கர்கள் எப்போதும் துன்மார்க்கர்களாகவே இருப்பார்கள், அவர்கள் ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்பு நாளிலிருந்து தப்பிக்க மாட்டார்கள். நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள், தேவனுடைய கிரியை முடிவுக்கு வரும்போது அவர்கள் வெளிப்படுவார்கள். துன்மார்க்கர்களில் ஒருவனும் நீதிமானாக கருதப்படமாட்டான், நீதிமான்களில் ஒருவரும் துன்மார்க்கராகக் கருதப்படமாட்டார்கள். நான் எந்தவொரு மனுஷனையும் தவறாகக் குற்றஞ்சாட்டலாமா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்