தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 486

டிசம்பர் 20, 2022

தேவனால் செய்யப்படும் கிரியைகள் காலத்திற்கு காலம் மாறுபடும். நீ ஒரு கட்டத்தில் தேவனுடைய கிரியைக்கு மிகுந்த கீழ்ப்படிதலுடன் இருந்து, ஆனால் அடுத்தக் கட்டத்தில் அவருடைய கிரியை மீதான உன் கீழ்ப்படிதல் மோசமாக இருந்தால் அல்லது உன்னால் கீழ்ப்படிய இயலவில்லை என்றால், தேவன் உன்னைக் கைவிடுவார். தேவன் இந்த அடியை எடுத்துவைக்கும்போது அவருடைய வேகத்துக்கு நீ ஈடுகொடுத்தால், அவர் அடுத்த படிக்குச் செல்லும்போது, நீ தொடர்ந்து அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டும்; அப்போதுதான் நீ பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படியும் ஒருவனாக இருப்பாய். நீ தேவனை விசுவாசிப்பதால், உன் கீழ்ப்படிதலில் நீ இடைவிடாமல் நிலைத்திருக்க வேண்டும். வெறுமனே, நீ விரும்பும்போது கீழ்ப்படிந்து விருப்பமற்றபோது கீழ்ப்படியாமல் நீ இருக்கக்கூடாது. இவ்வகையான கீழ்ப்படிதல் தேவனால் பாராட்டப்படுவதில்லை. நான் ஐக்கியங்கொள்ளும் புதிய கிரியையின் வேகத்திற்கு உன்னால் ஈடுகொடுக்க முடியவில்லை என்றால், முந்தைய நீதிமொழிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், உன் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற்றம் காணப்படும்? தேவனுடைய வார்த்தைகளின் மூலம் உனக்குக் கொடுப்பதே தேவனுடைய கிரியையாகும். நீ அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உனக்குள் கிரியை செய்வார். பரிசுத்த ஆவியானவர் நான் பேசுவது போலவே கிரியை செய்கிறார்; நான் சொன்னது போலவே செய்கிறார், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாகக் கிரியை செய்வார். நீங்கள் தற்போதைய ஒளியைக் காண்பதற்கும் அதை உங்களுக்குள் கொண்டுவருவதற்காகவும், ஒரு புதிய ஒளியை வீசச் செய்கிறேன், நீ இந்த ஒளியில் நடக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உனக்குள் உடனடியாக கிரியை செய்வார். சிலர் "நீ சொல்வதை நான் செய்யமாட்டேன்" என்று கூறி, கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில், நீ இப்போது சாலையின் இறுதிக்கு வந்துவிட்டாய் என்று நான் உனக்குச் சொல்கிறேன்; நீ வறண்டு போய்விட்டாய், இனிமேலும் உனக்கு ஜீவன் இல்லை. ஆகவே, உன் மனநிலையின் மாற்றத்தை அனுபவிப்பதில், தற்போதைய ஒளியின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை. தேவனால் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது மட்டுமின்றி, திருச்சபைக்குள்ளும் கிரியை செய்கிறார். அவரால் யாருக்குள்ளும் கிரியை செய்ய இயலும். அவரால் தற்காலத்திலும் உனக்குள் கிரியை செய்யக்கூடும், மேலும் நீ இந்த கிரியையை அனுபவிப்பாய். அடுத்த காலகட்டத்தில், அவர் வேறொருவருக்குள் கிரியை செய்யலாம், இந்த விஷயத்தில் நீ விரைந்து பின்பற்ற வேண்டும்; தற்போதைய ஒளியை நீ எவ்வளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறாயோ, அவ்வளவு அதிகமாக உன் வாழ்க்கை வளர்ச்சியடையும். ஒருவர் எவ்விதமான நபராக இருந்தாலும், அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், நீ பின்பற்ற வேண்டும். அவர்கள் அனுபவித்த விதமாகவே நீங்களும் அனுபவிப்பீர்கள், நீங்கள் இன்னும் மேலான காரியங்களையும் பெறுவீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீ மிக விரைவாக முன்னேறுவாய். இதுதான் மனிதர்களின் பரிபூரணத்துக்கான பாதையாகும், இதன் மூலமாகவே வாழ்க்கை வளர்ச்சியடைகிறது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீ கீழ்ப்படிவதன் மூலமே பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையை அடைகிறாய். உன்னைப் பரிபூரணப்படுத்த தேவன் எந்த வகையான நபரின் மூலம் கிரியை செய்வார் அல்லது எந்த நபர், சம்பவம் அல்லது காரியத்தின் மூலம் அவர் உன் காரியங்களைப் பெறவோ அல்லது பார்க்கவோ அனுமதிப்பார் என்பது உனக்குத் தெரியாது. இந்தச் சரியான பாதையில் நீ அடியெடுத்து வைக்க முடிந்தால், நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவாய் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் முடியவில்லை என்றால், உன் எதிர்காலம் இருண்டும், ஒளியில்லாமலும் காணப்படும் என்பதையே இது காட்டுகிறது. நீ சரியான பாதைக்கு வந்ததும், எல்லா காரியங்களிலும் நீ வெளிப்படுத்துதலைப் பெறுவாய். பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களுக்கு எதை வெளிப்படுத்தினாலும், நீயே காரியங்களை அனுபவிக்க அவர்களுடைய அறிவின் அடிப்படையில் நீ செயல்பட்டால், இந்த அனுபவம் உன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும், மேலும் இந்த அனுபவத்திலிருந்து உன்னால் மற்றவர்களுக்கும் கொடுக்க இயலும். சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வோர் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்; உன் சொந்த உண்மையான அனுபவத்தையும் அறிவையும் பற்றிப் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு, மற்றவர்களின் ஞானம் மற்றும் வெளிச்சத்தின் மூலம் ஒரு நடைமுறை வழியைக் கண்டுபிடிக்க நீ கற்றுக்கொள்ள வேண்டும். இது உன் சொந்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு தேவனிடமிருந்து வரும் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து நீ அனுபவிக்க வேண்டும். நீ சகலத்திலும் தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும், சகலத்திலும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் உன் வாழ்க்கை வளர்சியடையலாம். இதுபோன்ற நடைமுறை மிக விரைவான முன்னேற்றத்தைக் கொடுக்கிறது.

உன் நடைமுறை அனுபவங்கள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் உனக்குப் போதிக்கிறார், மேலும் உன் விசுவாசத்தின் மூலமாக உன்னைப் பரிபூரணப்படுத்துகிறார். நீ உண்மையிலேயே பரிபூரணமடைய விரும்புகிறாயா? நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்பினால், உன் மாம்சத்தை ஒதுக்கி வைக்கும் தைரியத்தை நீ பெறுவாய், தேவனுடைய வார்த்தைகளை உன்னால் நிறைவேற்ற முடியும், மேலும் நீ செயலற்றவனாகவோ பலவீனமானவனாகவோ இருக்க மாட்டாய். தேவனிடமிருந்து வரும் சகலத்திற்கும் உன்னால் கீழ்ப்படிய இயலும், மேலும் பொதுவிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ செய்யப்படும் உன் செயல்கள் அனைத்தும் தேவனுக்கு முன் பணிவானதாக இருக்கும். நீ ஒரு நேர்மையான நபராக இருந்து, சகலத்திலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தால், நீ பரிபூரணப்படுவாய். மற்றவர்களுக்கு முன்னால் ஒரு விதமாகவும், அவர்களுடைய முதுகுக்குப் பின்னால் மற்றொரு விதமாகவும் செயல்படும் அந்த வஞ்சக ஜனங்கள் பரிபூரணமாக்கப்பட விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் நித்திய நாசம் மற்றும் அழிவின் புத்திரர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தேவனுக்கு அல்ல, சாத்தானுக்கே சொந்தமானவர்கள். அவர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் அல்ல! உன் செயல்களையும் நடத்தையையும் தேவனுக்கு முன்பாக வைக்கவோ அல்லது தேவனுடைய ஆவியால் ஏற்றுக்கொள்ளப்படவோ முடியாவிட்டால், உன்னிடம் ஏதோ தவறு உள்ளது என்பதற்கான ஆதாரம் இதுதான். தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் நீ ஏற்றுக்கொண்டு, உன் மனநிலையை மாற்றுவதில் கவனம் செலுத்தினால் மாத்திரமே, நீ பரிபூரணமாக்கப்படும் பாதையில் அடியெடுத்து வைக்க இயலும். நீ உண்மையிலேயே தேவனால் பரிபூரணப்படுத்தப்படவும் தேவனுடைய சித்தத்தைச் செய்யவும் விரும்பினால், ஒரு வார்த்தைகூட குறைகூறாமலும், தேவனுடைய கிரியையை மதிப்பிடவோ அல்லது நியாயந்தீர்க்கவோ முயற்சிக்காமல், நீ தேவனுடைய சகல கிரியைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். இவைதான் தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கான குறைந்தபட்ச தேவைகளாகும். தேவனால் பரிபூரணமாக்கப்பட விரும்புகிறவர்களுக்கான அத்தியாவசியமான தேவை பின்வருமாறு: சகலத்திலும் தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்பட வேண்டும். தேவனை அன்பு செய்யும் இருதயத்துடன் செயல்படுதல் என்பதன் அர்த்தம் என்ன? அதாவது உன் செயல்கள் மற்றும் நடத்தை அனைத்தையும் தேவனுக்கு முன்பாக வைக்க வேண்டும் என்பதாகும். உன் செயல்கள் சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருந்தாலும், உன் நோக்கங்கள் சரியானதாக இருப்பதால், நீ அவற்றை தேவனிடமோ அல்லது உன் சகோதர சகோதரிகளிடமோ காண்பிக்க அஞ்சுவதில்லை, மேலும் நீ தேவனுக்கு முன்பாக சத்தியம் செய்யத் துணிகிறாய். உன் ஒவ்வொரு நோக்கத்தையும், சிந்தனையையும், யோசனையையும் தேவன் பரிசோதிப்பதற்காக நீ அவற்றை அவருக்கு முன்பாக வைக்க வேண்டும்; நீ அதன்படி நடந்து இந்த பாதையில் பிரவேசிப்பாயானால், உன் வாழ்க்கையில் முன்னேற்றம் விரைவாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான இருதயத்துடன் தேவனுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆதாயப்படுத்தப்படுவார்கள்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க