தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 483
ஜனவரி 2, 2023
நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள தேவனைப் பற்றி அவர்கள் எப்போதுமே முற்றிலும் மாறுபட்ட இரு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர், இது தேவனுக்குக் கீழ்ப்படிவதற்காக அல்ல, ஆனால் சில நன்மைகளைப் பெறுவதற்காக அல்லது பேரழிவு ஏற்படுத்தும் துன்பங்களிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது; அப்போதுதான் அவர்கள் ஓரளவு கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களின் கீழ்ப்படிதல் நிபந்தனையுள்ளதாகும்; அது அவர்களின் சொந்த வாய்ப்புகளுக்காகவும் அவர்கள் மீது திணிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இது உங்கள் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் உங்கள் தலைவிதிக்காகவும் மட்டுமே இருந்தால், நீங்கள் முற்றிலும் விசுவாசிக்காமலிருப்பதே நல்லது. இவ்வாறான விசுவாசமானது சுய-வஞ்சகம், சுய-நம்பிக்கை, மற்றும் சுய-போற்றுதல் சார்ந்ததாகும். உங்கள் விசுவாசமானது தேவனுக்குக் கீழ்படிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை எனில், அவரை எதிர்த்ததற்காக நீங்கள் இறுதியில் தண்டிக்கப்படுவீர்கள். தங்கள் விசுவாசத்தில் தேவனுக்குக் கீழ்படிதலைத் தேடாதவர்கள் அனைவரும் அவரை எதிர்க்கின்றனர். மக்கள் சத்தியத்தைத் தேடவும், அவருடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளவும், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும், அருந்தவும், மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு அவற்றைக் கடைபிடிக்குமாறும் தேவன் கேட்டுக்கொள்கிறார். இவை உங்களுடைய உண்மையான நோக்கங்களாக இருந்தால், தேவன் நிச்சயமாக உங்களை உயர்த்துவார் மற்றும் உங்களிடம் கிருபையுள்ளவராக இருப்பார். இது சந்தேகிக்க இயலாத மற்றும் மாற்ற முடியாத ஒன்றாகும். உங்கள் நோக்கம் தேவனுக்குக் கீழ்படியாததாக இருந்தால் மற்றும் உங்களுக்கு வேறு நோக்கங்கள் இருக்குமானால், நீங்கள் சொல்வது மற்றும் செய்வது அனைத்தும், அதாவது தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கும் உங்கள் ஜெபங்களும் மற்றும் உங்களுடைய அனைத்துச் செயல்களும் அவருக்கு எதிரானதாக இருக்கும். நீங்கள் மென்மையாகப் பேசுபவராகவும் கனிவான நடத்தையுள்ளவராகவும் இருக்கலாம், உங்களுடைய ஒவ்வொரு செயலும் சொல்லும் சரியானதாகத் தோன்றலாம் மற்றும் நீங்கள் கீழ்ப்படியும் ஒருவராக தோன்றலாம், ஆனால் உங்கள் நோக்கங்களுக்கும், தேவன் மீதான விசுவாசத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கும் வரும்போது, நீங்கள் செய்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதும், நீங்கள் செய்யும் அனைத்தும் தீமையானதுமாகும். ஆடுகளைப் போலக் கீழ்ப்படிந்தவர்களாகத் தோன்றினாலும், இதயத்தில் தீய நோக்கங்கள் கொண்டவர்கள், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாவர். அவர்கள் நேரடியாக தேவனைப் புண்படுத்துகிறார்கள், மேலும் அவர்களில் ஒருவரையும் தேவன் விடமாட்டார். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி வெளிப்படுத்துவார், நயவஞ்சகர்கள் அனைவருமே, நிச்சயமாக, பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள் என்பதை அனைவருக்கும் காண்பிப்பார். கவலைப்பட வேண்டாம். தேவன் அவர்களில் கடைசியில் உள்ளவர் வரை அனைவரையும் சரிக்கட்டி அப்புறப்படுத்துவார்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தினாலே நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்