தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 481

பிப்ரவரி 25, 2023

பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் தயாராக இருந்தான். தேவனுடைய விசுவாசிகளுக்கு இதைவிட பெரிய நாட்டம் இருக்கமுடியாது. பவுல் தேடியவை அவனுடைய மாம்சத்தாலும், அவனுடைய சொந்தக் கருத்துக்களாலும், அவனுடைய சொந்தத் திட்டங்களாலும், யோசனைகளாலும் களங்கப்படுத்தப்பட்டது. அவன் எந்த வகையிலும் தேவனுடைய தகுதியான சிருஷ்டி அல்ல. தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றவன் அல்ல. தேவனுடைய திட்டங்களுக்கு அடிபணிய பேதுரு முயன்றான். அவன் செய்த கிரியை பெரிதாக இல்லை என்றாலும், அவனது பின்தொடரலுக்குப் பின்னால் இருந்த உந்துதலும் அவன் நடந்து வந்த பாதையும் சரியானதுதான். அவனால் பலரை ஆதாயம் செய்ய முடியவில்லை என்றாலும், அவனால் சத்தியத்தின் வழியைப் பின்பற்ற முடிந்தது. இதன் காரணமாக அவன் தேவனுடைய தகுதியான சிருஷ்டி என்று கூறலாம். இன்று, நீ ஒரு ஊழியக்காரன் இல்லையென்றாலும், தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை உன்னால் செய்ய முடியும் மற்றும் தேவனுடைய அனைத்து திட்டங்களுக்கும் நீ கீழ்ப்படிய முற்பட வேண்டும். தேவன் சொல்வதை உன்னால் கடைப்பிடிக்க முடிய வேண்டும் மற்றும் எல்லா விதமான துன்பங்களையும் சுத்திகரிப்புகளையும் அனுபவிக்க முடிய வேண்டும். நீ பலவீனமாக இருந்தாலும், உன் இருதயத்தில் உன்னால் இன்னும் தேவனை நேசிக்க முடிய வேண்டும். தங்கள் சொந்த ஜீவனுக்குப் பொறுப்பேற்கிறவர்கள் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் மற்றும் அத்தகைய மனிதர்களின் பின்தொடருதல் பற்றிய கண்ணோட்டம் சரியானதாகும். தேவனுக்குத் தேவைப்படுகின்ற மனிதர்கள் இவர்கள் தான். நீ அதிகக் கிரியை செய்கிறாய், மற்றவர்கள் உன் போதனைகளைப் பெற்றார்கள், ஆனால் நீயோ மாறவில்லை, எந்த சாட்சியும் பகரவில்லை அல்லது உண்மையான அனுபவமும் இல்லை, அதாவது உன் ஜீவிதத்தின் முடிவில், நீ செய்தவற்றில் எதுவும் சாட்சி பகரவில்லை என்றால், நீ மாறிவிட்டாயா? நீ சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவனா? அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் உன்னைப் பயன்படுத்தியபோது, உன்னுடைய ஒரு பகுதியை அவர் கிரியை செய்யப் பயன்படுத்தினார். உன்னால் பயன்படுத்த முடியாத பகுதியை அவர் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்படும்போது நீ மாற முற்பட்டால், நீ படிப்படியாகப் பரிபூரணமடைவாய். ஆயினும், நீ இறுதியில் ஆதாயம் செய்யப்படுவாயா இல்லையா என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. இது உன் நாட்டத்தின் முறையைப் பொறுத்தது. உன் தனிப்பட்ட மனநிலையில் எந்த மாற்றங்களும் இல்லை என்றால், அதற்குக் காரணம், நாட்டம் குறித்த உன் பார்வை தவறானது என்பதே. உனக்கு எந்த வெகுமதியும் வழங்கப்படாவிட்டால், அது உன் சொந்தப் பிரச்சனையாகும். ஏனென்றால் நீ சத்தியத்தைக் கடைபிடிக்கவில்லை. தேவனுடைய விருப்பத்தை உன்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உன் தனிப்பட்ட அனுபவங்களை விட வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. உன் தனிப்பட்ட பிரவேசத்தை விட வேறு எதுவும் முக்கியமானதாக இல்லை! சிலர், "நான் உமக்காக இவ்வளவு கிரியைகளைச் செய்திருக்கிறேன், நான் எந்தவொரு புகழ்பெற்ற சாதனைகளையும் செய்யவில்லை என்றாலும், நான் இன்னும் எனது முயற்சிகளில் முனைப்புடன் இருக்கிறேன். ஜீவவிருட்சக் கனியைப் புசிக்க என்னைப் பரலோகத்திற்கு உம்மால் அனுமதிக்க முடியவில்லையா?" என்று சொல்வார்கள். நான் எத்தகைய ஜனங்களை விரும்புகிறேன் என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். அசுத்தமானவர்கள் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அசுத்தமானவர்கள் பரிசுத்தமான பூமியை அசுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. நீ பல கிரியைகளைச் செய்திருந்தாலும், பல ஆண்டுகளாக கிரியை செய்திருந்தாலும், இறுதியில் நீ இன்னும் வருந்தத்தக்கதாக அசுத்தமாய் இருந்தால், நீ என் ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புவதைப் பரலோக பிரமாணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது! உலகம் உருவானது முதல் இன்று வரை, என்னிடம் நயங்காட்டுபவர்களை என்னுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க நான் ஒருபோதும் எளிதாக அணுகலை வழங்கியதில்லை. இது பரலோக விதியாகும், ஒருவராலும் அதை மீற முடியாது! நீ ஜீவனை நாட வேண்டும். இன்று, பரிபூரணமாக்கப்படுபவர்களும் பேதுருவைப் போன்றவர்களே: அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தேடுபவர்கள், தேவனுக்கு சாட்சி அளிக்கவும், தேவனுடைய சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இது போன்றவர்கள் மட்டுமே பரிபூரணமாக்கப்படுவார்கள். நீ வெகுமதிகளை மட்டுமே பார்த்து, உன் சொந்த ஜீவித மனநிலையை மாற்ற முற்படவில்லை என்றால், உன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்—இது மாற்ற முடியாத சத்தியமாகும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க