தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 479
பிப்ரவரி 23, 2023
பவுல் செய்த கிரியைகள் மனிதனுக்கு முன்பாகக் காட்சிக்கு வைக்கப்படுகையில், தேவன் மீது அவன் கொண்டிருந்த அன்பு எவ்வளவு தூய்மையானது மற்றும் தேவனைத் தன் இருதயத்தின் ஆழத்தில் எவ்வளவாக நேசித்தான் என்பதை மனிதனால் பார்க்க முடியாது. மனிதனால் தான் செய்த கிரியையை மட்டுமே பார்க்க முடியும். அதிலிருந்து, அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டான் என்பதை நிச்சயமாக அறிவான். ஆகவே, பவுல் பேதுருவை விடச் சிறந்தவன் என்றும், அவனுடைய கிரியை பெரிதாக இருந்தது என்றும், அவனால் தம் கிரியையைத் திருச்சபைகளுக்கு வழங்க முடிந்தது என்றும் மனிதன் நினைக்கிறான். பேதுரு தனது தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே பார்த்து, அவ்வப்போது தனது கிரியையின் போது ஒரு சிலரை ஆதாயம் செய்தான். அவனிடமிருந்து அறியப்பட்ட நிருபங்கள் கொஞ்சமாக மட்டுமே உள்ளன. ஆனால் தன் இருதயத்தில் தேவன் மீது அவன் கொண்டிருந்த அன்பு எவ்வளவு பெரியது என்று யாருக்குத் தெரியும்? பவுல் தேவனுக்காக ஒவ்வொரு நாளும் கிரியை செய்தான்: செய்ய வேண்டிய கிரியை இருக்கும் வரை, அவன் அதைச் செய்தான். இவ்வாறு தான் கிரீடத்தைப் பெற முடியும் என்றும், தேவனைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவன் உணர்ந்தான். ஆனாலும் அவன் தனது கிரியையின் மூலமாகத் தன்னை மாற்றிக் கொள்ள வழிகளைத் தேடவில்லை. பேதுருவின் ஜீவிதத்தில் தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யாத எதுவுமே அவனுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இது தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவன் வருத்தப்பட்டிருப்பான் மற்றும் தேவனுடைய இருதயத்தைப் பூர்த்தி செய்ய அவன் முயற்சி செய்யக்கூடிய பொருத்தமான வழியைத் தேடியிருப்பான். அவனுடைய ஜீவிதத்தின் மிகச்சிறிய மற்றும் மிகவும் பொருத்தமற்ற அம்சங்களில் கூட, தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதையே அவன் தன்னிடத்தில் எதிர்பார்த்தான். அவன் தனது பழைய மனநிலையைப் பொறுத்தவரையில் அவன் எந்த குறையுமில்லாமல் இருந்தான், சத்தியத்தில் ஆழமாக முன்னேற வேண்டும் என்ற தனது தேவைகளில் எப்போதும் கடுமையாக இருந்தான். பவுல் மேலோட்டமான நற்பெயரையும் அந்தஸ்தையும் மட்டுமே நாடினான். அவன் மனிதனுக்கு முன்பாக தன்னைக் காட்ட முயன்றான் மற்றும் ஜீவிதப் பிரவேசத்தில் எந்த ஆழமான முன்னேற்றத்தையும் அடைய முயலவில்லை. அவன் அக்கறை காட்டியது உபதேசம் குறித்து மட்டுமே, யதார்த்தத்தை அல்ல. சிலர், "பவுல் தேவனுக்காக இவ்வளவு கிரியை செய்தும், அவன் ஏன் தேவனால் நினைவுகூரப்படவில்லை? பேதுரு தேவனுக்காக ஒரு சிறிய கிரியையைச் செய்தான், ஆனால் திருச்சபைகளுக்குப் பெரிய பங்களிப்பைச் செய்யவில்லை, இந்நிலையில் அவன் ஏன் பரிபூரணமாக்கப்பட்டான்?" என்று கேட்கின்றனர். பேதுரு தேவனை, தேவன் எதிர்பார்த்த ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நேசித்தான். இது போன்றவர்களுக்கு மட்டுமே சாட்சி உண்டு. பவுலின் நிலை என்னவாக இருந்தது? பவுல் தேவனை எந்த அளவுக்கு நேசித்தான்? உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுருவின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுரு அதிகக் கிரியை செய்யவில்லை, ஆனால் அவனுடைய இருதயத்திற்குள் ஆழமாக இருந்தது என்னவென்று உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை திருச்சபைகளுக்கு வழங்கல் மற்றும் திருச்சபைகளின் ஆதரவு ஆகியவற்றுக்கு தொடர்பானது. பேதுரு அனுபவித்தவை அவனுடைய ஜீவித மனநிலையின் மாற்றங்களாக இருந்தன. அவன் தேவனுடைய அன்பை அனுபவித்தான். அவற்றின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகளை இப்போது நீ அறிந்திருக்கிறாய். இறுதியில், யார் தேவனை உண்மையாக விசுவாசித்தார்கள், யார் தேவனை உண்மையாக விசுவாசிக்கவில்லை என்பதை நீ காணலாம். அவர்களில் ஒருவன் உண்மையிலேயே தேவனை நேசித்தான். மற்றவன் உண்மையிலேயே தேவனை நேசிக்கவில்லை. ஒருவன் தனது மனநிலையில் மாற்றங்களைச் சந்தித்தான். மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவன் தாழ்மையுடன் கிரியை செய்தான். ஜனங்களால் எளிதில் கவனிக்கப்படவில்லை. மற்றொருவன் ஜனங்களால் ஆராதனை செய்யப்பட்டான் மற்றும் பெரிய மனிதனானான். ஒருவன் பரிசுத்தத்தை நாடினான், மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. அவன் தூய்மையற்றவனாக இல்லாவிட்டாலும், அவன் தூய்மையான அன்பைக் கொண்டிருக்கவில்லை. ஒருவன் உண்மையான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. ஒருவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் உணர்வைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. பவுல் மற்றும் பேதுருவின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகள் அத்தகையவை. பேதுரு நடந்த பாதை ஜெயத்தின் பாதையாக இருந்தது. இது இயல்பான மனிதத்தன்மையை மீட்டெடுப்பதற்கான மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை மீட்டெடுப்பதற்கான பாதையாகும். பேதுரு ஜெயங்கொள்ளுகிற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் நடந்த பாதை தோல்வியின் பாதையாக இருந்தது மற்றும் தங்களை மேலோட்டமாக சமர்ப்பித்து அர்ப்பணிக்கும் அனைவரையும் தேவனை உண்மையாக நேசிக்காத அனைவரையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் சத்தியத்தைக் கொண்டிராத அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். தேவன் மீதான தனது விசுவாசத்தில், பேதுரு எல்லாவற்றிலும் தேவனைத் திருப்திப்படுத்த முயன்றான் மற்றும் தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் கீழ்ப்படிய முயன்றான். சிறிதும் குறைகூறாமல், அவனால் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே போல் சுத்திகரிப்பு, உபத்திரவம் மற்றும் அவனது ஜீவிதத்தில் எதுவும் இல்லாமல் போவது என இவை எதுவுமே தேவன் மீதான அவனது அன்பை மாற்ற முடியவில்லை. இது தேவன் மீதான நிறைவான அன்பு அல்லவா? இது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின் நிறைவேற்றமல்லவா? சிட்சையிலோ, நியாயத்தீர்ப்பிலோ, உபத்திரவத்திலோ, நீ எப்போதுமே மரணம் வரையில் கீழ்ப்படிதலைக் காட்ட திறனுள்ளவனாய் இருக்கிறாய். இதுதான் தேவனுடைய ஒரு சிருஷ்டியால் அடையப்பட வேண்டும். இதுதான் தேவன் மீதான அன்பின் தூய்மையாகும். மனிதனால் இதை அதிகம் அடைய முடிந்தால், அவனே தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருக்கிறான், மேலும் சிருஷ்டிகரின் விருப்பத்தை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வேறு எதுவும் இல்லை. உன்னால் தேவனுக்காகக் கிரியை செய்ய முடிகிறது, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, தேவனை உண்மையாக நேசிக்க இயலவில்லை என்பதாகக் கற்பனை செய்துகொள். இவ்வாறு, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நிறைவேற்றாமல் போவதோடு மட்டுமல்லாமல், நீ தேவனால் கண்டிக்கப்படுவாய். ஏனென்றால், நீ சத்தியத்தைக் கொண்டிராத, தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாத, தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன். நீ தேவனுக்காகக் கிரியை செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறாய். சத்தியத்தைக் கடைபிடிப்பது பற்றியோ உன்னை அறிந்து கொள்வது பற்றியோ நீ கவலைப்படுவதில்லை. நீ சிருஷ்டிகரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. நீ சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதுமில்லை சிருஷ்டிகரை நேசிப்பதுமில்லை. இயல்பாகவே நீ தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன், எனவே அத்தகையவர்கள் சிருஷ்டிகரால் நேசிக்கப்படுவதில்லை.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்