தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 477
மார்ச் 15, 2023
பேதுரு இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியபின் இயற்கையான வெளிப்பாடுகள் நிகழ்ந்தாலும், இயற்கையாகவே, அவன் தொடக்கத்திலிருந்தே பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்துவைத் தேட விரும்பிய ஒருவன் ஆவான். பரிசுத்த ஆவியானவருக்கு அவன் கீழ்ப்படிந்தது தூய்மையானதாகும்: அவன் புகழ்ச்சியையும் செல்வத்தையும் தேடவில்லை, மாறாக, சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் உந்துதல் பெற்றான். கிறிஸ்துவை அறிந்திருக்கிறதைப் பேதுரு மூன்று தடவை மறுதலித்த போதிலும், கர்த்தராகிய இயேசுவை அவன் சோதித்த போதிலும், அத்தகைய சிறிய மனித பலவீனம் அவனுடைய சுபாவத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அது அவனுடைய எதிர்கால நோக்கத்தைப் பாதிக்கவில்லை மற்றும் அவனுடைய சோதனை ஒரு அந்திக்கிறிஸ்துவின் செயல் என்பதை இது நிரூபிக்க முடியாது. சாதாரண மனித பலவீனம் என்பது உலகில் உள்ள அனைவராலும் பகிரப்பட்ட ஒன்று—பேதுரு வேறுபட்டவனாக இருக்கிறான் என்று நீ கருதுகிறாயா? பேதுரு பல முட்டாள்தனமான தவறுகளைச் செய்ததால் அவனைப் பற்றி ஜனங்கள் சில கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லையா? பவுல் செய்த எல்லா கிரியைகள், அவன் எழுதிய எல்லா நிருபங்கள் நிமித்தமாக ஜனங்கள் அவனை ஆராதிக்கிறார்களா? மனிதனின் சாராம்சத்தை மனிதன் எவ்வாறு பார்க்க முடியும்? உண்மையிலேயே உணர்வுள்ளவர்கள் அத்தகைய அற்பமான ஒன்றைக் காண முடியுமா? பேதுருவின் பல வருட வேதனையான அனுபவங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், பேதுருவுக்கு உண்மையான அனுபவங்கள் இல்லை அல்லது பேதுரு பரிபூரணமாக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. தேவனுடைய கிரியையை மனிதனால் எவ்வாறு முழுமையாக புரிந்துகொள்ள முடியும்? வேதாகமத்தில் உள்ள பதிவுகள் இயேசுவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் பிற்கால தலைமுறையினரால் தொகுக்கப்பட்டன. அப்படியானால், வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் மனிதனின் கருத்துக்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்லவா? மேலும், பேதுரு மற்றும் பவுலின் முடிவுகள் நிருபங்களில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஆகவே, மனிதன் பேதுருவையும் பவுலையும் தன் சொந்தக் கருத்துக்களின்படி, அவனது விருப்பங்களின்படி நியாயந்தீர்க்கிறான். பவுல் அநேக கிரியைகளைச் செய்ததால், அவனுடைய "பங்களிப்புகள்" மிகப் பெரியவை என்பதால், அவன் ஜனங்களின் நம்பிக்கையை வென்றான். மனிதன் மேலோட்டமான கருத்துக்களில் மட்டும் கவனம் செலுத்துகிறான் அல்லவா? மனிதனின் சாராம்சத்தை மனிதனால் எவ்வாறு பார்க்க முடியும்? பவுல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராதனைக்குரிய ஒரு பொருளாக இருப்பதால், அவனுடைய கிரியையை கடுமையாக மறுக்க யார் துணிவார்கள்? பேதுரு ஒரு மீனவன். இந்நிலையில் அவனுடைய பங்களிப்பு எவ்வாறு பவுலின் பங்களிப்பைப் போல இருக்கும்? அவர்கள் செய்த பங்களிப்புகளைப் பொறுத்தவரையில், பேதுருவுக்கு முன்பதாகவே பவுலுக்கு வெகுமதி கிடைத்திருக்க வேண்டும். தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற மிகவும் தகுதி பெற்றவனாக அவன் இருந்திருக்க வேண்டும். பவுலைக் கையாளுகையில், தேவன் பவுலுடைய தாலந்துகளின் மூலம் அவனை கிரியை செய்ய மட்டுமே செய்தார், அதேசமயம் தேவன் பேதுருவைப் பரிபூரணமாக்கினார் என்பதை யார் கற்பனை செய்திருக்க முடியும். கர்த்தராகிய இயேசு தொடக்கத்திலிருந்தே பேதுருவுக்கும் பவுலுக்கும் திட்டங்களை வகுத்திருந்தார் என்பது எந்த வகையிலும் இல்லை: மாறாக, அவர்கள் பரிபூரணமாக்கப்பட்டார்களா அல்லது அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களுக்கு ஏற்ப கிரியை செய்ய வைக்கப்பட்டார்களா என்பதைப் பார்க்க வேண்டும். எனவே, ஜனங்கள் பார்ப்பது மனிதனின் வெளிப்புற பங்களிப்புகள் மட்டுமே. அதேசமயம் தேவன் பார்ப்பது மனிதனின் சாராம்சம், மனிதன் தொடக்கத்திலிருந்தே பின்பற்றும் பாதை மற்றும் மனிதனின் நோக்கத்திற்குப் பின்னால் உள்ள உந்துதல் ஆகியனவாகும். ஜனங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களின்படி, ஒரு மனிதனை தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப அளவிடுகிறார்கள். ஒரு மனிதனின் இறுதி முடிவு அவனது வெளிப்புறங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதில்லை. ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நீ எடுக்கும் பாதை ஜெயத்தின் பாதையாகவும், நாட்டத்தை நோக்கிய உன் பார்வை தொடக்கத்திலிருந்தே சரியானதாகவும் இருந்தால், நீ பேதுருவைப் போன்ற ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ நடக்கும் பாதை தோல்வியின் பாதை என்றால், நீ எவ்வளவு விலை கொடுத்தாலும், உன் முடிவு பவுலின் பாதையைப் போலவே இருக்கும். எது எப்படியிருந்தாலும், உன் இலக்கு மற்றும் உன் ஜெயம் அல்லது தோல்வியானது உன் பக்தியையோ அல்லது நீ செலுத்தும் விலைக்கிரயத்தையோ காட்டிலும், நீ தேடும் பாதை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதால் தீர்மானிக்கப்படுகின்றன. பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்கள் மற்றும் அவர்கள் பின்பற்றிய குறிக்கோள்கள் வேறுபட்டவையாகும். மனிதனால் இவற்றைக் கண்டுபிடிக்க இயலாது. அவற்றை தேவனால் மட்டுமே முழுமையாக அறிய முடியும். தேவன் பார்ப்பது மனிதனின் சாராம்சமாகும், அதேசமயம் மனிதனுக்கு அவனது சொந்த சாராம்சத்தைப் பற்றி எதுவும் தெரியாது. மனிதனுக்குள் இருக்கும் சாராம்சத்தை அல்லது அவனது உண்மையான வளர்ச்சியைக் காண மனிதனால் இயலாது. இதனால் பவுல் மற்றும் பேதுருவின் தோல்வி மற்றும் ஜெயத்துக்கான காரணங்களை அடையாளம் காண இயலாது. பெரும்பாலான ஜனங்கள் பேதுருவையல்லாமல் பவுலை ஆராதிப்பதற்கான காரணம், பவுல் பொது கிரியைக்குப் பயன்படுத்தப்பட்டான் மற்றும் மனிதனால் இந்தக் கிரியையை உணர முடிகிறது, எனவே ஜனங்கள் பவுலின் "சாதனைகளை" ஒப்புக்கொள்கிறார்கள். இதற்கிடையில், பேதுருவின் அனுபவங்கள் மனிதனுடைய கண்ணுக்குத் தெரியாதவையாகும். அவன் தேடியது மனிதனால் அடைய முடியாதது ஆகும். எனவே மனிதனுக்கு பேதுருவின் மீது அக்கறை இல்லாமற்போகிறது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்