தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 464
மார்ச் 13, 2023
மக்கள் என்னை விசுவாசித்தாலும், எனக்கு சாட்சியாக விளங்க அவர்களுக்குத் திறன் இல்லை, அல்லது என்னை நான் தெரியப்படுத்தும் முன் அவர்களால் எனக்காகச் சாட்சி அளிக்க முடியவில்லை. நான் சிருஷ்டிகளையும் எல்லா பரிசுத்த மனிதர்களையும் விஞ்சி இருப்பதை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர், மேலும் நான் செய்யும் கிரியைகளை மனிதர்களால் செய்ய முடியாது என்றும் பார்க்கிறார்கள். இவ்வாறு, யூதர்களில் இருந்து இந்நாளின் மக்கள் வரை எனது மகத்துவமான கிரியைகளை நோக்கிப் பார்க்கும் அனைவருமே என்னைக் குறித்த ஆர்வத்தால் நிறைந்திருக்கிறார்களே ஒழிய ஓர் ஒற்றைச் சிருஷ்டியின் வாயும் என்னைக் குறித்த சாட்சியைப் பகர முடியவில்லை. எனது பிதா மட்டுமே எனக்குச் சாட்சி அளித்தார், மேலும் அனைத்து சிருஷ்டிகளின் மத்தியிலும் எனக்காக ஒரு பாதையை உருவாக்கியிருக்கிறார்; அவர் அவ்வாறு செய்திருக்கவில்லை எனில், நான் எவ்வாறாகக் கிரியை செய்திருந்தாலும், நானே சிருஷ்டிப்பின் கர்த்தர் என்று மனிதன் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டான், ஏனெனில் மனிதன் என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ள மட்டுமே அறிந்திருக்கிறானே தவிர, என்னுடைய கிரியைகளின் நிமித்தம் என்னிடம் விசுவாசம் கொள்ளவில்லை. நான் பரிசுத்தராகவும் எந்த வகையிலும் ஒரு பாவியாக இல்லாமல் இருப்பதாலும், எண்ணற்ற மறைபொருட்களை என்னால் விளக்கமுடியும் என்பதாலும், திரளான மக்களுக்கு மேலானவராக இருப்பதாலும், அல்லது என்னிடம் இருந்து அதிக நன்மைகளைப் பெற்றிருப்பதாலும் மட்டுமே மனிதன் என்னை அறிகிறான், ஆனால் நானே சிருஷ்டி கர்த்தர் என்று ஒரு சிலரே விசுவாசிக்கிறார்கள். இதனால்தான் என் மேல் ஏன் விசுவாசம் வைத்திருக்கிறான் என்று மனிதனுக்குத் தெரியவில்லை என்று நான் கூறுகிறேன்; என்னில் விசுவாசம் வைப்பதன் நோக்கம் அல்லது முக்கியத்துவம் அவனுக்குத் தெரியவில்லை. எனக்குச் சாட்சியாக விளங்க முற்றிலும் தகுதியற்ற அளவுக்கு மனிதனின் உண்மைத்தன்மை குறைவுபட்டதாக உள்ளது. உண்மை விசுவாசம் உங்களிடம் மிகக் குறைவாக உள்ளது, மேலும் நீங்கள் மிகக் குறைவாகவே அடைந்திருக்கிறீர்கள், ஆகவே உங்களிடம் மிகக் குறைந்த அளவே சாட்சி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நீங்கள் மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளுகிறீர்கள் மற்றும் என்னுடைய கிரியைகளுக்குச் சாட்சியளிக்க ஏறத்தாழ தகுதியற்ற அளவுக்கு அதிகக் குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் மன உறுதி உண்மையில் கருத்தில் எடுத்துக்கொள்ளத்தக்கதாகும், ஆனால் தேவனின் சாராம்சத்தைக் குறித்து வெற்றிகரமாக உங்களால் சாட்சியம் அளிக்க முடியும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? நீங்கள் அனுபவித்ததும் பார்த்ததும் எல்லா காலங்களிலும் இருந்த பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை விடவும் மிதமிஞ்சியதாகக் காணப்படுகிறது, ஆனாலும் கடந்த காலத்தின் இந்தப் பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விட பெரிய சாட்சியை உங்களால் அளிக்க முடியுமா? இப்போது நான் உங்களுக்கு வழங்குவது மோசேயை மிஞ்சுவதாகவும், தாவீதை ஒளிமங்கச் செய்வதாகவும் உள்ளது, ஆகவே அதுபோல உங்கள் சாட்சியும் மோசேயை மிஞ்சுவதாகவும் உங்கள் வார்த்தைகள் தாவீதுடையதை விடப் பெரியனவாகவும் இருக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். நான் உங்களுக்கு நூறு மடங்காக அளிக்கிறேன்—ஆகவே அதுபோன்றே அவ்வகையிலேயே நீங்கள் எனக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்று கேட்கிறேன். மனுக்குலத்திற்கு ஜீவனை அருளுவது நான் ஒருவனே என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் நீங்கள்தான் என்னிடம் இருந்து ஜீவனைப் பெறுகிறீர்கள் மற்றும் நீங்கள்தான் எனக்குச் சாட்சிகொடுக்க வேண்டும். இது நான் உங்களிடத்தில் அனுப்பும் உங்கள் கடமையாகும், இதை நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு என் சகல மகிமையையும் வழங்கியிருக்கிறேன், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களான இஸ்ரவேலர்கள் ஒருபோதும் பெறாத ஜீவனை உங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன். அந்த உரிமையின் படி, நீங்கள் எனக்குச் சாட்சிகொடுக்க வேண்டும் மற்றும் உங்கள் இளமையை எனக்குச் சமர்ப்பணம் செய்து உங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். யாருக்கெல்லாம் நான் என் மகிமையை வழங்குகிறேனோ அவர்கள் எனக்கு சாட்சிகளாக இருந்து தங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். இது வெகுகாலத்திற்கு முன்னரே என்னால் முன்குறிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்கு என் மகிமையை வழங்குவது என்பது உங்கள் நல் அதிர்ஷ்டமாகும், மேலும் என் மகிமைக்குச் சாட்சியாக இருப்பது உங்கள் கடமையாகும். ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமே என்னை நீங்கள் விசுவாசித்தால், என் கிரியையின் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கும், மற்றும் நீங்கள் உங்கள் கடமையை நிறைவு செய்யாதவர்களாக இருப்பீர்கள். இஸ்ரவேலர்கள் என் இரக்கம், அன்பு மற்றும் மகத்துவத்தை மட்டுமே பார்த்தார்கள், மற்றும் யூதர்கள் என் பொறுமை மற்றும் மீட்புக்கு மட்டுமே சாட்சியம் அளித்தார்கள். அவர்கள் தங்களால் புரிந்துகொள்ளத்தக்க அளவுக்கே என் ஆவியின் கிரியைகளின் மிக மிக குறைந்ததையே, ஆனால் நீங்கள் கேட்டு அறிந்தவைகளில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியையே கண்டார்கள். நீங்கள் கண்டிருப்பவை அவர்கள் நடுவில் இருந்த பிரதான ஆசாரியர்களை விடவும் கூட மிஞ்சுகின்றன. இன்று நீங்கள் புரிந்துகொள்ளும் சத்தியங்கள் அவர்களுடையவற்றை விட அதிகம்; இன்று நீங்கள் கண்டவை, நியாயப்பிரமாணத்தின் காலத்தையும், கிருபையின் காலத்தையும் விடக் கூடுதலானவை, மேலும் நீங்கள் அனுபவித்திருப்பவை மோசேயையும் எலியாவையும் கூட மிஞ்சுகின்றன. ஏனெனில், இஸ்ரவேலர்கள் புரிந்துகொண்டவை யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யேகோவாவின் பின்புறத்தை மட்டுமே; யூதர்கள் புரிந்துகொண்டது இயேசுவின் மீட்பை மட்டுமே, அவர்கள் பெற்றுக்கொண்டது இயேசுவால் அருளப்பட்ட கிருபையை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யூதர்களின் வீட்டுக்குள் இயேசுவின் சாயலை மட்டுமே. இன்று நீங்கள் காண்பது யேகோவாவின் மகிமையை, இயேசுவின் மீட்பை, மற்றும் இந்நாளின் என்னுடைய அனைத்துக் கிரியைகளையும் ஆகும். அவ்வாறே, என் ஆவியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், என்னுடைய ஞானத்தை அறிந்து போற்றியிருக்கிறீர்கள், எனது அதிசயங்களை அறிந்து கொண்டிருக்கிறீர்கள், மற்றும் என் மனநிலையைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நான் என் ஆளுகைத் திட்டங்கள் எல்லாவற்றையும் உங்களிடம் கூறியிருக்கிறேன். நீங்கள் கண்டிருப்பது வெறும் ஓர் அன்பான மற்றும் இரக்கமுள்ள தேவனை மட்டுமல்ல, நீதியால் நிரம்பிய ஒரு தேவனையுமே. நீங்கள் என் அற்புதக் கிரியைகளை கண்டிருக்கிறீர்கள் மேலும் நான் மகத்துவத்தாலும் உக்கிரத்தாலும் நிரம்பித் ததும்புவதையும் அறிந்திருக்கிறீர்கள். மேலும், ஒருமுறை இஸ்ரவேலரின் வீட்டுக்குள் என் கடுங்கோபத்தைக் கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், மற்றும் அந்த இந்நாள், அது உங்கள் மேல் வந்துவிட்டது. ஏசாயாவையும் யோவானையும் விட அதிகமாகப் பரலோகத்தில் என் இரகசியங்களை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள்; என் சௌந்தரியத்தையும் வணங்கத்தக்கத் தன்மையையும் பற்றி கடந்த காலங்களின் பரிசுத்தவான்களை விடவும் நீங்கள் அதிகமாக அறிவீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் என் சத்தியத்தையும், என் வழியையும், என் ஜீவனையும், மட்டுமல்லாமல் யோவானின் தரிசனத்தை விடவும் பெரிய ஒரு தரிசனத்தையும் ஒரு வெளிப்பாட்டையும் ஆகும். நீங்கள் இன்னும் பல இரகசியங்களைப் புரிந்துகொள்ளுகிறீர்கள், மற்றும் என் உண்மையான முகத்தோற்றத்தையும் நோக்கிப் பார்த்திருக்கிறீர்கள்; நீங்கள் அதிகமான என் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் மேலும் என்னுடைய நீதியான மனநிலையைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கடைசி நாட்களில் பிறந்திருந்தாலும், உங்கள் புரிந்துகொள்ளுதல் முந்தியதையும் கடந்தகாலத்தைப் பற்றியதும் ஆகும், மேலும் இன்றைய நாளின் விஷயங்களையும் அனுபவித்திருக்கிறீர்கள், மற்றும் இவை எல்லாம் என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டவை. நான் உங்களிடம் கேட்பது மிகையானது அல்ல, ஏனெனில் நான் உங்களுக்கு அதிகமாக அளித்திருக்கிறேன், மேலும் நீங்கள் என்னில் அதிகமாகக் கண்டிருக்கிறீர்கள். இவ்வாறு, கடந்த காலத்தின் பரிசுத்தவான்களுக்கு எனது சாட்சியாக இருக்கும்படியாக நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன், மற்றும் இதுவே என் இருதயத்தின் ஒரே விருப்பமாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்