தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 456

டிசம்பர் 2, 2022

இன்று முதல், எந்த மதம் சார்ந்தக் கருத்துக்களும் இல்லாத, தங்களுடைய பழைய சுயத்தை ஒதுக்கி வைக்கத் தயாராக உள்ள, மற்றும் எளிய மனதுடன் கூடிய வகையில் தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களை தேவன் பரிபூரணப்படுத்துவார். தேவனுடைய வார்த்தைகளுக்காக வாஞ்சையாயிருப்பவர்களை அவர் பரிபூரணப்படுத்துவார். இந்த ஜனங்கள் எழும்பி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும். முடிவில்லா செல்வமும், எல்லையற்ற ஞானமும் தேவனில் இருக்கிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்களால் அனுபவிக்கப்படும்படி அவருடைய அற்புதமான கிரியையும் விலைமதிப்பற்ற வார்த்தைகளும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், மதவாதக் கருத்துக்கள் உள்ள, மூத்தநிலையைக் கருத்தில் கொள்கிற, தங்களை விட்டுக்கொடுக்க இயலாதவர்களுக்கு இந்தப் புதிய காரியங்களை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாய் இருக்கும். இந்த ஜனங்களைப் பரிபூரணப்படுத்த ஆவியானவருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. ஒருவன் கீழ்ப்படியத் தீர்மானிக்காமல், தேவனுடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளாமல் இருந்தால் அவனால் இந்தப் புதிய காரியங்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வெறுமனே, மேலும் மேலும் கலகக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் மாறி, தவறான பாதையில் சென்று விடுவார்கள். இப்பொழுது தன்னுடைய கிரியையை செய்துகொண்டிருக்கும் தேவன், தன்னை நேசிக்கிற மற்றும் புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனேக ஜனங்களை எழுப்புவார், மேலும் அவர், தங்களுடைய மூத்தநிலையைக் கருத்தில் கொள்ளுகிற மதத்தலைவர்களை முழுவதுமாக வெட்டிச் சாய்த்து விடுவார். மாற்றத்தைப் பிடிவாதமாக எதிர்ப்பவர்கள் ஒருவரையும் அவர் விரும்புவதில்லை. இந்த ஜனங்களில் ஒருவராக இருக்க நீ விரும்புகிறாயா? நீ உன்னுடைய ஊழியத்தை உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படி செய்கிறாயா அல்லது தேவனுக்கு வேண்டியபடி செய்கிறாயா? இது உனக்கே தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நீ ஒரு மதத்தலைவனா அல்லது தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தையா? உன்னுடைய ஊழியம் எந்த அளவு பரிசுத்த ஆவியால் மெச்சிக்கொள்ளப்படுகிறது? அதில் எந்த அளவு தேவன் நினைவில்கூட வைத்துக்கொள்வதில்லை? உன்னுடைய அனைத்து வருட ஊழியத்தின் விளைவாக உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் உண்டாயிருக்கிறது? இவை அனைத்தையும் பற்றி நீ தெளிவாய் இருக்கிறாயா? நீ உண்மையாகவே விசுவாசத்துடன் இருந்தால், முன்பிலிருந்து உன்னுடைய பழைய மதம் சார்ந்த கருத்துக்களை ஒதுக்கித்தள்ளி, புதிய வழியில் சிறப்பாக தேவனுக்கு ஊழியம் செய்வாய். இப்போதும் எழும்பி நிற்கத் தாமதமாகி விடவில்லை. பழைய மதம் சார்ந்தக் கருத்துக்கள் ஒரு நபரின் முழு வாழ்க்கையையும் பறித்துக் கொள்ளக்கூடும். ஒரு நபர் பெற்றுக்கொள்ளும் அனுபவம், அவர் தேவனிடமிருந்து விலகி, காரியங்களைத் தன் சொந்த வழியில் செய்விக்கக் காரணமாகக் கூடும். நீ இத்தகைய காரியங்களை ஒதுக்கி வைக்காவிட்டால், பின் இவைகள் உன் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறிப்போகும். தேவன் தனக்கு ஊழியம் செய்பவர்களை எப்பொழுதும் பரிபூரணப்படுத்துகிறார். அவர்களைச் சுலபமாக அவர் தூக்கியெறிவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் நீ உண்மையாக ஏற்றுக்கொள்வாயானால், உன்னுடைய பழைய மதம் சார்ந்த நடைமுறைகளையும் விதிகளையும் உன்னால் ஒதுக்கி வைக்க முடியுமானால், மேலும் உன்னுடைய பழைய மதசார்ந்த கருத்துக்களை இன்றைய தேவனுடைய வார்த்தைகளின் அளவுகோலாக உபயோகிப்பதை நிறுத்துவாயானால், அப்பொழுது மட்டுமே உனக்கு எதிர்காலம் இருக்கும். நீ பழைய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவற்றை இன்னும் உயர்வாக மதிப்பாயானால், நீ இரட்சிக்கப்படுவதற்கு ஒரு வழியும் இல்லை. தேவன் அத்தகைய ஜனங்களைக் கவனத்தில் கொள்வதில்லை. நீ உண்மையாகவே பரிபூரணப்பட விரும்பினால், முதலிலிருந்து எல்லாவற்றையும், முழுவதுமாக விட்டுவிட நீ தீர்மானிக்க வேண்டும். முன்பு செய்யப்பட்டவைச் சரியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய கிரியையாக இருந்திருந்தாலும், அப்போதும் அதை ஒதுக்கித் தள்ளி, அதைப் பற்றிக்கொள்வதை நிறுத்துவதற்கு உன்னால் இயல வேண்டும். அது தெளிவாய்ப் பரிசுத்த ஆவியின் கிரியையாய் இருந்திருந்தாலும், பரிசுத்த ஆவியினால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தாலும், இன்றைக்கு அதை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். அதை நீ பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதுவே தேவனுக்குத் தேவையானது. சகலமும் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவனுடைய கிரியையிலும் தேவனுடைய வார்த்தையிலும், முடிந்துபோன பழைய காரியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுவதில்லை, பழைய பஞ்சாங்கத்தை அவர் தோண்டுவதும் இல்லை. தேவன் எப்பொழுதுமே புதியவர், அவர் ஒருபோதும் பழையவரல்ல, அவர் ஆதியிலிருந்த தன்னுடைய சொந்த வார்த்தைகளைக் கூட பற்றிக்கொள்வதில்லை—இது தேவன் எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. எனவே, தேவன் தன்னுடைய பழைய வழிமுறைகளைக் கொண்டு இனி ஒருபோதும் கிரியை செய்யாதபோது, நீ ஒரு மனிதனாக, எப்பொழுதும் கடந்த காலத்துக்குரிய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை விட்டுவிட மறுத்து, அவைகளைச் சூத்திரம் சார்ந்த முறையில் உறுதியாக உபயோகப்படுத்தினால், உன்னுடைய வார்த்தைகளும் செயல்களும் இடைஞ்சலாக இருக்கிறதல்லவா? நீ தேவனுக்குப் பகைவனாய் மாறி விட்டாய் அல்லவா? இந்தப் பழைய காரியங்கள் உன்னுடைய முழு வாழ்க்கையையும் நாசமாக்க, அழிக்க நீ இடங்கொடுக்க விரும்புகிறாயா? இந்தப் பழைய காரியங்கள் உன்னை தேவனுடைய கிரியையைத் தடுக்கும் நபராக மாற்றிவிடும்—நீ அப்படிப்பட்ட நபராகவா இருக்க விரும்புகிறாய்? உண்மையாகவே நீ அதை விரும்பவில்லை என்றால், சீக்கிரமாக நீ செய்துகொண்டிருப்பதை நிறுத்தி, திரும்பி, எல்லாவற்றையும் மீண்டும் தொடங்கு. தேவன் உன்னுடைய கடந்த கால ஊழியத்தை நினைவில்கொள்ள மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க