தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 238
ஏப்ரல் 15, 2023
எனது திட்டமிடப்பட்ட கிரியை ஒரு கணம் கூட இயங்குவதில் நிறுத்தம் இன்றி முன்னோக்கி விரைகிறது. ராஜ்யத்தின் காலத்திற்கு நகர்ந்து, என் ஜனங்களாக உங்களை என் ராஜ்யத்திற்குள் கொண்டு சென்றபின், நீங்கள் செய்யவேண்டிய எனது மற்ற கோரிக்கைகள் உள்ளன; அதாவது, இந்த யுகத்தை நான் ஆளுகை செய்வதற்கான சட்டதிட்டங்களின் சாசனத்தை உங்கள் முன் பிரகடனப்படுத்துவேன்:
நீங்கள் என் ஜனங்கள் என்று அழைக்கப்படுவதால், உங்களால் என் நாமத்தை மகிமைப்படுத்த முடியும்; அதாவது, சோதனையின் மத்தியில் சாட்சியம் அளிக்க முடியும். யாராவது என்னை இனிய சொற்களால் ஏமாற்றி, என்னிடமிருந்து உண்மையை மறைக்க முயன்றால், அல்லது என் முதுகுக்குப் பின்னால் அவமானகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அத்தகையவர்கள் எந்த விதிவிலக்கும் இல்லாமல், நான் அவர்களைக் கையாள்வதற்காகக் காத்திருக்கும் படிக்கு, துரத்தப்பட்டு என் வீட்டிலிருந்து அகற்றப்படுவார்கள். கடந்த காலங்களில் என்னிடம் விசுவாசமற்றவர்களாகவும், வாரிசுரிமைக்கு ஒவ்வாதவர்களாகவும் இருந்தவர்கள், வெளிப்படையாக என்னை நியாயந்தீர்க்க இன்று மீண்டும் எழுந்தவர்கள்—அவர்களும் என் வீட்டை விட்டு விரட்டப்படுவார்கள். என் ஜனங்களாக இருப்பவர்கள் தொடர்ந்து என் பாரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதே போல் என் வார்த்தைகளை அறியவும் நாட வேண்டும். இதுபோன்றவர்களுக்கு மட்டுமே நான் பிரகாசத்தைத் தருவேன், அவர்கள் நிச்சயமாக என் வழிகாட்டுதலிலும் பிரகாசத்தின் கீழும் வாழ்வார்கள், ஒருபோதும் சிட்சையை எதிர்கொள்வதில்லை. என் பாரங்களைக் கருத்தில் கொள்ளத் தவறியவர்கள், தங்கள் சொந்த எதிர்காலங்களைத் திட்டமிடுவதில் கவனம் செலுத்துகிறவர்கள்—அதாவது, என் இருதயத்தைத் திருப்திப்படுத்துவதைத் தங்கள் செயல்களின் நோக்கமாகக் கொள்ளாதவர்கள், அதற்கு மாறாக இலவசச் சலுகைகளைத் தேடுவோர்—இந்தப் பிச்சைக்காரர் போன்ற ஜீவன்களைப் பயன்படுத்துவதற்கு நான் முற்றிலும் மறுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் பிறந்த காலத்திலிருந்தே, என் பாரங்களைக் கருத்தில் கொள்வதன் அர்த்தம் என்னவென்று அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் இயல்பான அறிவு இல்லாதவர்கள்; அத்தகைய ஜனங்கள் மூளையின் "ஊட்டச்சத்துக் குறைபாட்டால்" பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் சில "ஊட்டச்சத்துக்காக" வீட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியமாயிருக்கிறது. அத்தகையவர்களால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை. என் ஜனங்கள் மத்தியில், எல்லோரும் என்னை அறிவது ஒரு கட்டாயக் கடமையாகக் கருதப்படுவது முடிவு வரைக்கும் பார்க்கப்படவேண்டும், அதாவது புசிப்பது, உடுத்துவது, மற்றும் தூங்குவது போன்றவை, எப்படி ஒரு கணம் கூட மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ அதுபோல, அதனால் இறுதியில் என்னை அறிவது சாப்பிடுவதைப் போலவே பழக்கமாகிவிடும்—நீங்கள் சிரமமின்றி, நடைமுறையில் கைமுறைப் பழக்கத்தில் அதைச் செய்வீர்கள். நான் பேசும் சொற்களைப் பொறுத்தவரை, ஒவ்வொன்றும் மிகுந்த விசுவாசத்துடன் எடுத்துக்கொள்ளப்பட்டு முழுமையாகத் தன்மயமாக்கப்பட வேண்டும்; அதில் எந்தவொரு ஏனோதானோவென்ற அரை நடவடிக்கைகளும் இருக்க முடியாது. என் வார்த்தைகளில் கவனம் செலுத்தாத எவரும் என்னை நேரடியாக எதிர்ப்பதாகக் கருதப்படுவார்கள்; என் வார்த்தைகளைப் புசிக்காத, அல்லது அவற்றை அறிய முற்படாத எவரும் என்மீது கவனம் செலுத்தவில்லை என்று கருதப்படுவார்கள், மேலும் நேரடியாக என் வீட்டின் கதவுக்கு அப்பால் துடைத்தெறியப் படுவார்கள். இது ஏனென்றால், கடந்த காலத்தில் நான் கூறியுள்ளது போல், நான் விரும்புவது ஏராளமான ஜனங்களை அல்ல, ஆனால் சிறப்பானவர்களையே. ஒரு நூறு பேரில், ஒரே ஒருவர் மட்டுமே என் வார்த்தைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள முடிந்தால், அந்த ஒருவருக்குப் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அளிப்பதில் கவனம் செலுத்தும்படிக்கு மற்ற அனைவரையும் நான் விருப்பத்துடன் தூக்கி எறிந்துவிடுவேன். இதிலிருந்து, அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மட்டுமே என்னை வெளிப்படுத்தி எனக்காய் வாழ முடியும் என்பது உண்மையல்ல என்பதை நீங்கள் காணலாம். நான் விரும்புவது கோதுமையே (விதைகள் முழுமையாக இல்லாவிட்டாலும்) களைகளை அல்ல (விதைகள் போற்றத்தக்க அளவுக்கு முழுமையாக இருந்தாலும்கூட). தேடுவதைப் பொருட்படுத்தாமல், மாறாக மந்தமான முறையில் நடந்துகொள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் விருப்பப்படி வெளியேற வேண்டும்; அவர்கள் தொடர்ந்து என் நாமத்திற்கு அவமானத்தைக் கொண்டுவரக்கூடாது என்பதற்காக நான் அவர்களை இனி பார்க்க விரும்பவில்லை.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 5" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்