ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 3

ஜெயமுள்ள ராஜா தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் மீட்பை நிறைவேற்றியுள்ளார். அவருடைய ஜனங்கள் அனைவரும் மகிமையில் தோன்ற வழிவகுத்துள்ளார். அவர் பிரபஞ்சத்தைத் தமது கரங்களில் வைத்திருக்கிறார். அவர் தமது தெய்வீக ஞானத்தினாலும் வல்லமையினாலும் சீயோனைக் கட்டி எழுப்பி ஸ்திரப்படுத்தியிருக்கிறார். தம்முடைய மாட்சிமையால் அவர் பாவ உலகத்தை நியாயந்தீர்க்கிறார். எல்லா தேசங்களுக்கும், எல்லா ஜனங்களுக்கும், பூமி, கடல்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், அதைப் போலவே ஒழுக்கக்கேடு என்னும் மதுவை அருந்துகிறவர்களுக்கும் அவர் நியாயத்தீர்ப்பை வழங்கியுள்ளார். தேவன் நிச்சயமாகவே அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் நிச்சயமாகவே அவர்கள்மீது கோபப்படுவார். அதிலே தேவனுடைய மாட்சிமையானது வெளிப்படும். அவருடைய நியாயத்தீர்ப்பு உடனடியாக, தாமதமின்றி வழங்கப்படும். அவருடைய கோப அக்கினி நிச்சயமாக அவர்களின் கொடூரமான குற்றங்களை எரித்து, எந்த நேரத்திலும் அவர்களுக்குப் பேரழிவைத் தரும். தாங்கள் தப்பிச் செல்வதற்கான எந்த வழியையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஒளிந்துகொள்ள அவர்களுக்கு இடம் இருக்காது. அவர்கள் அழுது பற்களை நறநறவெனக் கடித்துக்கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைக் கொண்டுவருவார்கள்.

தேவனுக்குப் பிரியமான ஜெயமுள்ள புத்திரர்கள் நிச்சயமாக சீயோனில் தங்கியிருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் விலகிப்போவதில்லை. பல ஜனங்கள் அவருடைய சத்தத்தை உன்னிப்பாகக் கேட்பார்கள். அவர்கள் அவருடைய கிரியைகளைக் கவனமாகக் கவனிப்பார்கள். அவர்களுடைய துதியின் சத்தங்கள் ஒருபோதும் நிற்காது. ஓர் உண்மையான தேவன் தோன்றியிருக்கிறார்! நாம் ஆவியில் அவரைப் பற்றி உறுதியாக இருப்போம். அவரை நெருக்கமாகப் பின்பற்றுவோம். நாம் நம்முடைய முழு வல்லமையுடன் விரைந்து செல்வோம், இனி தயங்க வேண்டாம். உலகத்தின் முடிவு நமக்கு முன்பாக வெளிப்படையாக இருக்கிறது. சரியான திருச்சபை வாழ்க்கையும், நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள், விவகாரங்கள் மற்றும் விஷயங்களும் இப்போது கூட நமது பயிற்சியைத் தீவிரப்படுத்துகின்றன. உலகை மிகவும் நேசிக்கும் நம்முடைய இருதயங்களை அதிலிருந்து விலக்குவதற்கு துரிதப்படுவோம்! மிகவும் தெளிவற்ற நம் பார்வையை நாம் அதிலிருந்து விலக்குவதற்கு துரிதப்படுவோம்! நமது பாதைகளை விட்டு விலகாமல் இருப்போம், இதனால் நாம் நம்முடைய எல்லைகளைத் தாண்டாதிருப்போம். இனி நம்முடைய சொந்த லாபங்களையும் இழப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படாமல், நாம் தேவனுடைய வார்த்தையில் நடக்கும்படி நம்முடைய வாய்களை அடக்குவோம். ஆ, அந்த மதச்சார்பற்ற உலகத்துக்கும் செல்வத்துக்குமான உங்களது பேராசையை விட்டுவிடுங்கள்! ஆ, கணவன், மகள்கள் மற்றும் மகன்களுடனான உங்களது பிணைப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்! ஆ, உங்களது கண்ணோட்டங்களையும் தவறான அபிப்பிராயங்களையும் விட்டுவிடுங்கள்! ஆ, எழுந்திரு. காலம் குறைவாகவே உள்ளது! ஆவிக்குள்ளாக இருந்து கொண்டு மேலே பாருங்கள், மேலே பாருங்கள். தேவனே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளட்டும். என்ன நடந்தாலும், மற்றொரு லோத்தின் மனைவியாக நீங்கள் மாற வேண்டாம். ஒதுக்கப்படுவது எவ்வளவு பரிதாபமனதாகும்! உண்மையில் எவ்வளவு பரிதாபமாகும்! ஆ, எழுந்திரு!

முந்தைய: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 2

அடுத்த: ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்—அத்தியாயம் 5

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கர்த்தரே சகல சிருஷ்டிகளின் தேவன்

முந்தைய இரண்டு யுகங்களின் கிரியைகளில் ஒரு படிநிலை இஸ்ரவேலில் செய்து முடிக்கப்பட்டது, மற்றொன்று யூதேயாவில் செய்து முடிக்கப்பட்டது. பொதுவாகச்...

தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

“மக்களின் திறனை வளர்த்தல்” என்பதற்கு “நீங்கள் உங்களது புரிந்துகொள்ளும் ஆற்றலை மேம்படுத்துதல்” என்று அர்த்தமாகும். இதன் மூலம் உங்களால்...

அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன

தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண்...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக