அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன

தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண் ரூபத்தில் வந்தார், மேலும் தேவன் இம்முறை வரும்போது, அவருடைய ரூபம் பெண்ணாக இருக்கிறது. இதிலிருந்து, தேவன் தமது கிரியையில் பயன்படுத்துவதற்காகவே ஆண் பெண் இருபாலரையும் படைத்தார் என்பதை நீ பார்க்கலாம், மேலும் அவரிடத்தில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவருடைய ஆவி வரும்போது, அவர் விரும்பும் எந்த மாம்சத்திலும் அவரால் தோன்ற முடியும், மற்றும் அந்த மாம்சம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; ஆணோ அல்லது பெண்ணோ, அது அவரது அவதார மாம்சமாக இருக்கும் வரை அதனால் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இயேசு வந்த போது அவர் ஒரு பெண்ணாகத் தோன்றியிருந்தால், அதாவது, ஓர் ஆண் குழந்தையாக இல்லாமல் ஒரு பெண் குழந்தை பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகியிருந்தால், கிரியையின் அந்தக் கட்டம் அதே போன்றே நிறைவேறி இருக்கும். நிகழ்ந்தது அதுவாக இருந்திருந்தால், கிரியையின் தற்போதைய கட்டம் ஓர் ஆணால் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்திருக்கும், ஆனால் அதே போன்றே கிரியை நிறைவேற்றப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்பட்ட கிரியையானது தனக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது; இருகட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று திருப்பி செய்யப்படவில்லை, அல்லது ஒன்றோடொன்று முரண்படவும் இல்லை. அக்காலத்தில், இயேசு தம் கிரியையை செய்தபோது ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்பட்டார் மேலும் “குமாரன்” என்பது ஆண்பாலை குறிக்கிறது. தற்போதைய நடப்புக் கட்டத்தில் ஒரே பேறான குமாரன் ஏன் குறிப்பிடப்படவில்லை? ஏனெனில் கிரியையின் தேவைகள் இயேசுவின் பாலினத்தில் இருந்து ஒரு மாற்றத்தின் தேவையை உருவாக்கியுள்ளது. தேவனை பொறுத்தவரையில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவர் தாம் விரும்பும் படி தமது கிரியையை நடப்பிக்கிறார், மேலும் அவர் தமது கிரியையை செய்யும் போது எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவதில்லை, ஆனால் குறிப்பாக சுதந்திரமானவராக இருக்கிறார். ஆனால் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டதாக இருக்கிறது. தேவன் இரு முறை மாம்சமானார், மேலும் கடைசி நாட்களில் அவரது அவதாரம் கடைசி முறையானது என்பது பிரத்தியட்சமானதாக இருக்கிறது. தமது கிரியைகள் அனைத்தையும் அறியச்செய்யவே அவர் வந்திருக்கிறார். இந்தக் கட்டத்தில் மனிதன் காணும்படியாகத் தாமே கிரியை புரிவதற்கு மாம்சம் ஆயிருக்கவில்லையெனில், தேவன் ஆணே, பெண்ணல்ல என்ற எண்ணத்தையே மனிதன் பற்றி பிடித்துக்கொண்டு இருந்திருப்பான். இதற்கு முன்னர், மனுக்குலம் யாவும் தேவன் ஆணாக மட்டுமே இருக்க முடியும், மேலும் ஒரு பெண்ணை தேவன் என்று அழைக்க முடியாது என்று நம்பியது, ஏனெனில் மனுக்குலம் யாவும் பெண்ணின் மேல் ஆணுக்கு அதிகாரம் உண்டு எனக் கருதியது. ஆண்கள் மட்டுமே அதிகாரத்தைப் பெற முடியும், ஒரு பெண்ணாலும் முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். மேலும் என்னவென்றால், ஆணே பெண்ணுக்குத் தலைவன், பெண் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் அவனை மிஞ்சக் கூடாது என்றும் கூட அவர்கள் கூறினார்கள். கடந்த காலங்களில், ஆணே பெண்ணின் தலைவன் என கூறப்பட்டபோது, சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளை நோக்கி இது கூறப்பட்டது—ஆதியில் யேகோவாவால் படைக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணிடத்தில் அல்ல. நிச்சயமாக, பெண் கணவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை நேசிக்க வேண்டும், மேலும் ஒரு கணவன் தன் குடும்பத்தைப் போஷித்து ஆதரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவையே மனுக்குலம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக யேகோவாவால் உருவாக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களும் கட்டளைகளும் ஆகும். யேகோவா பெண்ணிடம், “உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார். மனுக்குலம் (அதாவது ஆண் பெண் இருவரும்) இயல்பான வாழ்க்கையை யேகோவாவின் ஆளுகையின் கீழ் வாழ வேண்டும், அதன் மூலம் மனுக்குலத்தின் வாழ்க்கையில் ஓர் அமைப்பு இருக்கும், மேலும் அது தனது தகுந்த ஒழுங்கில் இருந்து குலையாது என்பதற்காக மட்டுமே அவர் இவ்வாறு பேசினார். ஆகவே, ஆணும் பெண்ணும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக யேகோவா பொருத்தமான விதிகளை உருவாக்கினார். இது பூமியில் வாழும் அனைத்து சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கானவை மட்டுமே தவிர தேவனின் அவதார மாம்சத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தம்மால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளைப் போலவே எவ்வாறு தேவன் இருக்க முடியும்? அவரது சிருஷ்டிப்பில் மனுக்குலத்தை நோக்கியே அவரது வார்த்தைகள் பேசப்பட்டன; மனுக்குலம் இயல்பான வாழ்க்கையை வாழவே அவர் ஆணுக்கும் பெண்ணுக்குமான விதிகளை உருவாக்கினார். ஆதியில், யேகோவா மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது அவர் ஆண் பெண் ஆகிய இரு வகை மனிதர்களைப் படைத்தார்; ஆகையால் அவரது அவதார மாம்சங்களில் ஆண் மற்றும் பெண் என்ற பிரிவு உள்ளது. ஆதாம் மற்றும் ஏவாளுடன் பேசிய வார்த்தைகளின் அடிப்படையில் அவர் தமது கிரியையைத் தீர்மானிக்கவில்லை. முதலில் அவர் மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது இருந்த அவரது சிந்தனையின் படியே அவர் இரு முறை மாம்சமானதும் முற்றிலுமாகத் தீர்மானிக்கப்பட்டன; அதாவது, ஆண் மற்றும் பெண்ணை அடிப்படையாகக் கொண்ட அவரது இரு அவதாரங்களின் கிரியையையும் அவை களங்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நிறைவுசெய்துவிட்டார். சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளிடத்தில் யேகோவா பேசிய வார்த்தைகளை மனுக்குலம் அவ்வாறே எடுத்துக்கொண்டு, அவற்றை தேவனின் அவதார கிரியைகளுக்குப் பிரயோகித்தால், இயேசுவும் தமது மனைவியை அவர் நேசிக்க வேண்டிய விதத்தில் நேசிக்க வேண்டும் அல்லவா? இவ்வகையில், தேவன் இன்னும் தேவனாக இருப்பாரா? இது இவ்வாறு இருந்தால், அவரால் தமது கிரியையை இன்னும் நிறைவேற்ற முடியுமா? தேவனின் அவதார மாம்சம் பெண்ணாக இருப்பது தவறு என்றால், தேவன் பெண்ணைப் படைத்ததும் மாபெரும் அளவிலான ஒரு தவறாக அல்லவா இருந்திருக்கும்? தேவன் பெண்ணாக அவதரிப்பது தவறு என்று மக்கள் இன்னும் நம்பினால், திருமணம் ஆகாத காரணத்தால் மனைவியை நேசிக்க முடியாத இயேசுவும் இந்த அவதாரத்தைப் போலவே தவறிழைத்தவராக அல்லவா இருந்திருப்பார்? தற்காலத்தில் தேவ அவதாரத்தின் சத்தியத்தை அளவிட நீ ஏவாளிடத்தில் யேகோவோ பேசிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கிருபையின் காலத்தில் மாம்சமான கர்த்தராகிய இயேசுவை நியாயம் தீர்க்க ஆதாமிடம் யேகோவா கூறிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இவை யாவும் ஒன்றேதான் அல்லவா? சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆணின் படி கர்த்தாராகிய இயேசுவை நீ அளவிடுகிறபடியால், இன்றைய அவதாரத்தின் சத்தியத்தை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் படி நீ நியாயம்தீர்க்க முடியாது. அது நியாயமற்றதாக இருக்கும்! இவ்விதம் நீ தேவனை அளவிடுவது உன் பகுத்தறிவுக் குறைபாட்டை நிரூபிக்கிறது. யேகோவா இருமுறை மாம்சமான போது அவரது மாம்சத்தின் பாலினம் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டது; சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணோடு இணங்க அவர் இருமுறை மாம்சமானார். இயேசுவின் ஆண்தன்மை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமுடையது போன்றது என்று நினைக்க வேண்டாம். அவை இரண்டும் முற்றிலும் தொடர்பற்றவை, அவை இரு வித இயல்புகள் கொண்ட இரு வேறு ஆண்களுடையவை. இயேசுவின் ஆண் தன்மை அவரே எல்லா பெண்களுக்கும் தலைவர் ஆனால் எல்லா ஆண்களுக்கும் அல்ல என்று நிச்சயமாக இருக்க முடியாதல்லவா? அவர் யூதர்களின் அரசர் அல்லவா (ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட)? அவர்தாமே தேவன், அவர் வெறுமனே பெண்ணின் தலைவரோ அல்லது ஆணிண் தலைவரோ மட்டுமல்ல. அவர் சர்வ சிருஷ்டிகளின் கர்த்தர் மேலும் சகல சிருஷ்டிகளின் தலைவர். இயேசுவின் ஆண்தன்மை பெண்ணின் தலைமைக்கான சின்னமாக இருக்கிறது என்று எவ்வாறு உன்னால் தீர்மானிக்க முடியும்? இது தேவ நிந்தனை ஆகாதா? இயேசு களங்கப்படுத்தப்படாத ஓர் ஆண். அவர் தேவன்; அவர் கிறிஸ்து; அவரே கர்த்தர். அவர் எவ்வாறு களங்கமடைந்த ஆதாமைப் போன்ற ஓர் ஆணாக இருக்க முடியும்? தேவனின் மிகப் பரிசுத்தமான ஆவியால் அணியப்பட்ட மாம்சமே இயேசு. அவர் ஆதாமின் ஆண் தன்மையைக் கொண்ட தேவனே என்று உன்னால் எவ்வாறு கூற முடியும்? அப்படி என்றால், தேவனின் அனைத்து கிரியைகளும் தவறாக அல்லவா இருந்திருக்கும்? சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமின் ஆண் தன்மையை இயேசுவுக்குள் யேகோவா ஒருங்கிணைத்திருக்க மாட்டாரா? தற்காலத்தின் அவதாரம் பாலினத்தால் இயேசுவில் இருந்து வேறுபட்ட ஆனால் இயல்பில் அவரைப் போன்ற தேவ அவதாரக் கிரியையின் இன்னொரு நேர்வு இல்லையா? சர்ப்பத்தால் முதலில் வஞ்சிக்கப்பட்டது பெண் என்பதால் பெண் தேவ அவதாரமாக இருக்க முடியாது என்று நீ இன்னமும் சொல்வதற்கு துணிகிறாயா? பெண் மிகவும் அசுத்தமானவளாகவும் மனுக்குலத்தின் சீர்குலைவுக்கு ஆதாரமாகவும் இருப்பதால் தேவன் மாம்சத்தில் ஒரு பெண்ணாக முடியாது என்று நீ இன்னும் துணிந்து கூறுகிறாயா? “பெண் எப்போதும் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும் மேலும் ஒருபோதும் தேவனை வெளிப்படுத்த அல்லது நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது” என்று கூறுவதில் நிலைத்துநிற்கிறாயா? கடந்த காலத்தில் நீ புரிந்துகொள்ளவில்லை, ஆனால் இப்போது நீ தேவனின் கிரியையை, குறிப்பாக தேவனுடைய அவதார மாம்சத்தை தொடர்ந்து தூஷணம் செய்துகொண்டே போவாயா? இது உனக்குத் தெளிவாகவில்லை எனில், உன் நாவை அடக்குவது நல்லது, அல்லது உன் முட்டாள்தனமும் அறிவீனமும் வெளிப்படுத்தப்பட்டு உன் அருவருப்பு வெளிக்கொண்டுவரப்படும். எல்லாவற்றையும் நீ புரிந்துகொள்வதாக எண்ணாதே. என்னுடைய நிர்வாகத் திட்டத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட புரிந்துகொள்ள நீ பார்த்ததும் அனுபவித்ததுமாகிய யாவும் போதுமானதல்ல என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். ஆகவே நீ ஏன் இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளுகிறாய்? உனக்கிருக்கும் சிறு அளவிலான தாலந்தும் சிறு அளவிலான அறிவும் இயேசு தமது கிரியையில் பயன்படுத்த ஒரு நொடிக்குக்கூட போதுமானது அல்ல! நீ உண்மையில் எவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருக்கிறாய்? நீ பார்த்தவை எல்லாம் மற்றும் நீ உன் வாழ்க்கைக் காலத்தில் கேட்டவை எல்லாம் மேலும் நீ கற்பனைசெய்து பார்த்தவை எல்லாம் நான் ஒரு நொடிப்பொழுதில் செய்யும் கிரியையைவிடக் குறைவானவையே! அற்பக் காரியங்களில் கவனம் செலுத்தி நீ குற்றம் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. நீ விரும்பும் அளவுக்கு ஆணவம் கொண்டவனாக இருந்தாலும் ஓர் எறும்புக்கு கூட சமம் இல்லாத ஜந்துவே நீ! உன் வயிற்றுக்குள் நீ வைத்திருப்பதெல்லாம் ஓர் எறும்பின் வயிற்றுக்குள் இருப்பதை விடக் குறைவே! நீ கொஞ்சம் அனுபவங்களையும் மூப்புநிலையையும் அடைந்ததால் மூர்க்கமாக சைகை காட்டிப் பெரிதாகப் பேசலாம் என்று எண்ணாதே. நான் பேசிய வார்த்தைகளின் விளைபொருட்கள் அல்லவா உன் அனுபவமும் மூப்புநிலையும்? அவைகள் எல்லாம் உன் சொந்த வேலைக்கும் உழைப்புக்கும் பதிலாக கிடைத்தவை என்று நீ நம்புகிறாயா? இன்று, நான் மாம்சமாகியிருப்பதை நீ பார்க்கிறாய், அதன் காரணமாக மட்டுமே உன்னில் மிதமிஞ்சிய கருத்துக்கள், மேலும் அவற்றில் இருந்து பிறக்கும் எண்ணங்களுக்கு முடிவே இல்லை. என் அவதாரத்துக்காக இல்லை என்றால், நீ அசாதாரணமான தாலந்துகள் கொண்டவனாக இருந்தாலும், உனக்கு மிக அதிகமான கருத்துக்கள் இருந்திருக்காது; இவற்றில் இருந்தல்லவா உன் எண்ணங்கள் எழுகின்றன? முதல் முறை இயேசு மாம்சமாகாமல் இருந்திருந்தால், அவதாரத்தைப் பற்றி நீ அறிந்தாவது இருப்பாயா? முதல் அவதாரம் உனக்கு அறிவைக் கொடுத்ததனால்தானே, இரண்டாவது அவதாரத்தை நியாயந்தீர்க்க முயலுவதற்கு உனக்கு அகம்பாவம் ஏற்பட்டது? கீழ்ப்படிதலுடன் பின்பற்றுபவனாக இல்லாமல் நீ அதை ஆராய முற்படுவது ஏன்? இந்த நீரோடையில் நீ நுழைந்து அவதார தேவனின் முன்னிலையில் வந்த பின்னர், அவரை ஆராய்ச்சி செய்வதற்கு அவர் உன்னை அனுமதிப்பாரா? நீ உன் சொந்தக் குடும்ப வரலாற்றை ஆராய்ச்சி செய்யலாம், ஆனால் நீ தேவனின் “குடும்ப வரலாற்றை” ஆராய முயற்சி செய்தால், இன்றைய தேவன் அப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்ய உன்னை அனுமதிப்பாரா? நீ குருடன் இல்லை அல்லவா? நீ உன் மேல் அவமதிப்பைக் கொண்டுவர மாட்டாயா?

இயேசுவின் கிரியை மட்டுமே செய்யப்பட்டிருந்தால், கடைசி நாட்களின் இந்தக் கட்ட கிரியை அதை நிறைவுசெய்வதற்காக செய்யப்படவில்லை என்றால், இயேசு மட்டும்தான் தேவனின் ஒரே பேறான குமாரன் என்ற எண்ணத்தை மனிதன் எப்போதுமே விடாமல் வைத்துக்கொண்டிருப்பான், அதாவது தேவனுக்கு ஒரே குமாரன் மட்டுமே உண்டு, மேலும் அதன் பின் இன்னொரு பெயருடன் வரும் யாரொருவரும் தேவனின் ஒரே பேறான குமாரன் இல்லை, கூறப்போனால் தேவனும் இல்லை. பாவ நிவிர்த்தியாகக் கடமையாற்றும் யாரொருவரும் அல்லது தேவனது சார்பாக அதிகாரத்தைப் பெற்று அனைத்து மனுக்குலத்தையும் இரட்சிக்கும் ஒருவர் மட்டுமே தேவனுடைய குமாரன் என்ற எண்ணத்தை மனிதன் கொண்டிருக்கிறான். வருபவர் ஆணாக இருந்து, அவரே தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்றும் தேவனின் பிரதிநிதி என்றும் கருதப்படுவார் என்று நம்பும் சிலரும் உள்ளனர். இயேசுவே யேகோவாவின் குமாரன், அவருடைய ஒரே பேறான குமாரன் என்று கூறுபவர்களும் உள்ளனர். இத்தகைய எண்ணங்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்லவா? கடைசி காலத்தில் இந்தக் கட்ட கிரியை நடத்தப்படாவிட்டால் தேவனைப் பற்றியவைகளில் மனுக்குலம் ஒரு கரும் நிழலால் மறைக்கப்பட்டுவிடும். இது இப்படியாக இருந்தால், ஆண் பெண்ணை விட மேலானவனாகத் தன்னை எண்ணுவான், மற்றும் பெண்கள் ஒருபோதும் தங்கள் தலையை உயர்த்த முடியாது, மற்றும் ஒரு பெண் கூட இரட்சிக்கப்பட முடியாது. தேவன் ஆணே என்றும் மேலும் அவர் எப்போதும் பெண்ணை வெறுக்கிறார் மற்றும் அவளுக்கு இரட்சிப்பை அளிக்க மாட்டார் என்றும் மக்கள் எப்போதும் நம்புகின்றனர், இது இப்படி என்றால், யேகோவாவால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாப் பெண்களும் சீர்கெட்டவர்கள், ஒரு போதும் இரட்சிக்கப்பட வாய்ப்பு அற்றவர்கள் என்பது உண்மையாக இருக்கும் அல்லவா? பின் யேகோவா பெண்ணைப் படைத்ததில் பொருளேதும் இல்லை அல்லவா, அதாவது ஏவாளைப் படைத்ததில்? பெண் நித்தியத்திற்கும் அழிந்துபோக மாட்டாளா? இந்தக் காரணத்திற்காக, கடைசி நாட்களில் இந்தக் கட்டக் கிரியை பெண்ணை மட்டுமல்லாமல் மனுக்குலம் முழுவதையும் இரட்சிப்பதற்காகச் செய்யப்படுகிறது. பெண்ணை இரட்சிப்பதற்கு என்று மட்டுமே தேவன் பெண்ணாக அவதாரம் எடுக்க வேண்டும் என்று யாரொருவராவது நினைத்தால் அத்தகைய நபர் உண்மையிலேயே ஒரு முட்டாளாகத்தான் இருக்க வேண்டும்!

இன்றையக் கிரியை கிருபையின் கால கிரியையை முன்னோக்கித் தள்ளியுள்ளது; அதாவது, முழுமையான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கிரியை முன்னோக்கி நகர்ந்துள்ளது. கிருபையின் காலம் முடிந்துவிட்டாலும், தேவனின் கிரியையில் முன்னேற்றம் இருந்துவருகிறது. கிரியையின் இந்தக் கட்டம் கிருபையின் காலம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் காலத்தின் மேல் கட்டமைகிறது என்று ஏன் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்? ஏனெனில் இந்த நாளின் கிரியை கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தொடர்ச்சியாக இருக்கிறது, மேலும் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்யப்பட்டவற்றின் ஒரு முன்னேற்றமாகவும் உள்ளது. இந்த மூன்று கட்டச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் அடுத்ததோடு நெருக்கமாகக் கட்டப்பட்டு ஒன்றுக்கொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயேசு செய்தவற்றின் மேல் இந்தக் கட்டத்தின் கிரியை கட்டமைகிறது என்று ஏன் நான் கூறுகிறேன்? இந்தக் கட்டம் இயேசு செய்த கிரியையின் மேல் கட்டமையவில்லை என்று வைத்துக்கொண்டால், இந்தக் கட்டத்தில் இன்னொரு சிலுவைமரணம் ஏற்பட வேண்டும், மேலும் முந்திய கட்டத்தின் இரட்சிப்பின் கிரியை மீண்டும் முழுவதுமாகச் செய்யப்பட வேண்டும். இது அர்த்தமற்றதாக இருக்கும். ஆகவே கிரியை முற்றிலுமாக முடிக்கப்படவில்லை, ஆனால் காலம் முன்னோக்கி நகர்ந்துள்ளது மற்றும் கிரியையின் நிலை முன்னை விட கூடுதல் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கிரியை நியாயப்பிரமாண காலம் என்னும் அடித்தளத்தின் மீதும் இயேசுவின் கிரியை என்ற பாறையின் மீதும் கட்டப்படுகிறது என்று கூறலாம். தேவனுடைய கிரியை கட்டம் கட்டமாகக் கட்டமைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கட்டம் ஒரு புதிய தொடக்கம் அல்ல. மூன்று கட்டக் கிரியை மட்டுமே ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் எனக் கருதப்படலாம். கிருபையின் கால கிரியையின் அடித்தளத்தின் மீது இந்தக் கட்டத்தின் கிரியை செய்யப்படுகிறது. இந்த இரு கட்டங்களின் கிரியை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாக இருந்தால், பின்னர் ஏன் இந்தக் கட்டத்தில் சிலுவைமரணம் திரும்பவும் நடைபெறவில்லை? நான் ஏன் மனிதனின் பாவத்தைச் சுமக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் நேரடியாக வந்திருக்கிறேன்? மனிதனை நியாயந்தீர்ப்பதும் சிட்சிப்பதுமான என் கிரியை சிலுவை மரணத்தைப் பின்பற்றவில்லை என்றால், இப்போதைய என் வருகை பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படவில்லை என்றால், பின்னர் மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் எனக்குத் தகுதி இல்லாமல் போயிருக்கும். நான் இயேசுவோடு முற்றிலும் ஒன்றாக இருப்பதால் மனிதனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் நான் நேரடியாக வந்திருக்கிறேன். இந்தக் கட்டத்தின் கிரியை முந்தைய கட்ட கிரியையின் மேல் கட்டமைக்கப்படுகிறது. ஆகவேதான், இந்த வகையான கிரியை மட்டுமே மனிதனைப் படிப்படியாக இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும். இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன. அவர்கள் பாலினத்திலும் தங்கள் மாம்சத்தின் வடிவத்திலும் வேறாக இருந்தாலும், அவர்கள் ஒரே குடும்பத்தில் பிறக்கவில்லை எனினும், ஒரே கால கட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவர்களது ஆவி ஒன்றே. அவர்களுடைய மாம்சங்கள் இரத்தத்தையோ அல்லது எந்த வகையான உடலியல் உறவுகளையோ பகிரவில்லை, அவர்கள் இருவேறு கால கட்டத்தில் தேவனின் அவதார மாம்சங்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவர்கள் தேவனுடைய மனுவுருவான மாம்சங்களாக இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும், அவர்கள் ஒரே இரத்தவழியைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் ஒரே பொது மொழியைக் கொண்டவர்களும் அல்ல (ஒருவர் யூதர்களின் மொழியைப் பேசிய ஓர் ஆண் மற்றும் இன்னொருவர் சீன மொழியை மட்டுமே பேசும் ஒரு பெண்) எனினும் அவர்கள் தேவனின் அவதார மாம்சங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் காரணங்களால் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் பொருட்டு அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்திலும் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், ஒரே சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கும் போதிலும், அவர்களுடைய மாம்சத்தின் புறப்பகுதியில் முழுமையான எந்த ஓர் ஒற்றுமையும் இல்லை. அவர்கள் ஒரே மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்களுடைய மாம்சத்தின் புறத் தோற்றத்தையும் அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளையும் பொறுத்த வரையில் அவர்கள் ஒன்றுபோல் இல்லை. அவர்களுடன் தொடர்புடைய கிரியை அல்லது அவர்களைப் பற்றி மனிதன் கொண்டிருக்கும் அறிவின் மேல் இந்த விஷயங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் இறுதி ஆய்வில், அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், மேலும் ஒருவரும் அவர்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் இரத்த சம்பந்தமான உறவுடையவர்கள் இல்லை என்றாலும், அவர்களுடைய முழு இருப்பும் அவர்களுடைய ஆவியின் கட்டுப்பாட்டில் உள்ளது, அது அவர்களுக்கு வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு கிரியைக்கும், அவர்களுடைய மாம்சங்கள் வெவ்வேறு இரத்தவழிகளைக் கொண்டவையாகும். யேகோவாவின் ஆவி இயேசுவினுடைய ஆவியின் பிதா அல்ல, மற்றும் இயேசுவின் ஆவி யேகோவாவினுடைய ஆவியின் குமாரனும் அல்ல: அவை ஒரே ஆவியாகும். அதுபோலவே, இன்றைய தேவ அவதாரமும் இயேசுவும் இரத்தத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒன்றே, இது ஏனெனில் அவர்களது ஆவி ஒன்றே. இரக்கம் மற்றும் அன்பான கருணையின் கிரியையும், மனிதனை நீதியாக நீயாயந்தீர்த்து கடிந்துகொள்ளுதலையும் மற்றும் மனிதன் மேல் சாபங்களை வரவழைப்பதையும் தேவனால் செய்ய முடியும்; முடிவில் உலகத்தை அழித்துத் துன்மார்க்கரை தண்டிக்கும் கிரியையும் அவரால் செய்ய முடியும். இவற்றை எல்லாம் அவர்தாமே செய்வதில்லையா? இது தேவனின் சர்வவல்லமை அல்லவா? மனிதர்களுக்காக நியாயப்பிரமாணங்களைப் பிரகடனப்படுத்தவும், அவனுக்குக் கட்டளைகளை விதிக்கவும் அவர் வல்லவராய் இருந்தார், மேலும் ஆதி இஸ்ரவேலர்களை பூமியில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த வழிகாட்டவும் அவரால் முடிந்தது, மேலும் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்ட அவர்களை வழிநடத்தவும், அனைத்து இஸ்ரவேலர்களையும் அவரது ஆளுகையின் கீழ் வைக்கவும் அவரால் முடிந்தது. அவருடைய அதிகாரத்தின் நிமித்தமாக அவர் பூமியில் இஸ்ரவேல் மக்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். இஸ்ரவேலர்கள் அவரை எதிர்த்துக் கலகம் செய்யத் துணியவில்லை; அனைவரும் யேகோவாவை வணங்கி அவரது கட்டளைகளைப் பின்பற்றினர். அவரது அதிகாரத்தாலும் அவரது சர்வ வல்லமையாலும் செய்யப்பட்ட கிரியை இவ்வாறாக இருந்தது. பின்னர், கிருபையின் காலத்தில், பாவத்தில் வீழ்ந்த முழு மனுக்குலத்தையும் (இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல) இரட்சிக்க கிருபையின் காலத்தில் இயேசு வந்தார். அவர் இரக்கத்தையும் அன்பின் கருணையையும் மனிதனிடம் காட்டினார். கிருபையின் காலத்தில் மனிதன் கண்ட இயேசு அன்பின் கருணையால் நிரம்பி இருந்தார் மற்றும் எப்போதும் அவர் மனிதனை நேசித்தார், ஏனெனில் பாவத்தில் இருந்து மனுக்குலத்தை மீட்க அவர் வந்தார். அவர் தமது சிலுவை மரணம் வரை மனிதனை அவர்களது பாவத்தில் இருந்து மன்னிக்க முடிந்தது மற்றும் மனுக்குலத்தைப் பாவத்தில் இருந்து முற்றிலுமாக இரட்சித்தார். இக்கால கட்டத்தில் தேவன் மனிதனின் முன்னர் இரக்கம் மற்றும் அன்பின் கருணையோடு தோன்றினார்; அதாவது, அவர் மனிதனுக்காக ஒரு பாவநிவாரண பலியானார் மேலும் மனிதன் எப்போதும் மன்னிக்கப்படத் தக்கதாய் அவர் மனிதனின் பாவத்துக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் இரக்கம் உள்ளவர், பரிவுள்ளவர், பொறுமையுள்ளவர் மற்றும் அன்பானவர். மேலும், கிருபையின் காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய யாவரும் எல்லாவற்றிலும் பொறுமையாகவும் அன்பாகவும் இருக்க முயன்றனர். அவர்கள் துன்பத்திலும் நீடித்த பொறுமையோடு இருந்தனர், மேலும் அடிக்கப்பட்டபோதும், சபிக்கப்பட்டபோதும் அல்லது கல்லெறியப்பட்டபோதும் அவர்கள் ஒரு போதும் எதிர்த்துப் போராடவில்லை. ஆனால் கடைசிக் கட்டத்தில் அது அப்படி இருக்க முடியாது. இயேசுவும் யேகோவாவும் ஆவியில் ஒன்றாக இருந்த போதிலும், அவர்களது கிரியை முற்றிலும் ஒன்று போல் இருக்கவில்லை. யேகோவாவின் கிரியை காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை, ஆனால் காலத்தை வழிநடத்தியது, பூமியில் மனுக்குலத்தின் வாழ்க்கையை வழிநடத்தியது, மேலும் புறஜாதியார் தேசத்தில் ஆழமாக சீர்குலைந்திருப்போரை ஜெயங்கொள்ளுவதும் மற்றும் சீனாவில் இருக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை மட்டுமல்லாமல் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களையும் அனைத்து மனுக்குலத்தையும் வழிநடத்துவதே இன்றைய கிரியை. இந்தக் கிரியை சீனாவில் மட்டுமே செய்யப்படுவதாக உனக்குத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது ஏற்கெனவே வெளிநாடுகளிலும் பரவத்தொடங்கி விட்டது. சீனாவுக்கு வெளியில் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் மெய்யான வழியை நாடுகிறார்கள்? இது ஏனெனில் ஆவியானவர் ஏற்கெனவே கிரியைசெய்ய தொடங்கிவிட்டார், மேலும் இன்று பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சம் எங்கும் உள்ள மக்களை நோக்கிப் பேசப்படுகின்றன. இதனுடன், கிரியையில் பாதி ஏற்கெனவே நடந்துகொண்டு இருக்கிறது. உலக சிருஷ்டிப்பில் இருந்து இன்று வரை, தேவ ஆவியானவர் இந்த மாபெரும் கிரியையை இயக்கத்தில் வைத்துள்ளார், மேலும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தேசங்களின் மத்தியில் அவர் வெவ்வேறு கிரியைகளைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு காலத்தின் மக்களும் அவரது வெவ்வேறு மனநிலைகளைக் காண்கின்றனர், அது அவர் செய்யும் வெவ்வேறு கிரியை மூலம் இயல்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவர் தேவன், இரக்கம் மற்றும் அன்பின் கருணையால் நிறைந்திருப்பவர்; அவர் மனிதனுக்கான பாவநிவாரண பலி மற்றும் மனிதனின் மேய்ப்பன்; ஆனால் அவரே மனிதனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் சாபம். மனிதனை பூமியின் மேல் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ அவரால் வழிநடத்த முடியும், மேலும் சீர்குலைந்த மனிதனை பாவத்தில் இருந்து அவரால் இரட்சிக்கவும் முடியும். இன்று, அவரை அறியாத மனித குலத்தை அவரால் ஜெயங்கொள்ள முடியும், மேலும் அனைவரும் அவருக்குக் கீழடங்கும் வகையில் அவரால் அவர்களைத் தமது ஆளுகையின் கீழ் விழுந்து பணியுமாறும் செய்ய முடியும். தாம் இரக்கமும் அன்பும் கொண்ட ஒரு தேவன் மட்டுமல்ல, ஞானம் மற்றும் அதிசயங்களின் ஒரு தேவன் மட்டுமல்ல, பரிசுத்தமான ஒரு தேவன் மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேல், மனிதனை நியாயந்தீர்க்கும் ஒரு தேவன் என்று அவர்களுக்குக் காட்ட முடிவில், பிரபஞ்சம் முழுவதும் அசுத்தமானவைகளையும் மக்களுக்கிடையில் அநீதியானவர்களையும் சுட்டெரிப்பார். மனுக்குலத்தின் மத்தியில் தீயவர்களுக்கு, அவர் சுட்டெரிப்பு, நியாயத்தீர்ப்பு, மற்றும் தண்டனையாக இருக்கிறார்; பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர்களுக்கு, அவர் உபத்திரவம், சுத்திகரிப்பு, மற்றும் சோதனைகள் மட்டுமல்லாமல் ஆறுதல், பராமரிப்பு, வார்த்தைகளின் வழங்கல், கையாளல் மற்றும் சீரமைப்பு. புறம்பாக்கப்பட்டவர்களுக்கு அவர் தண்டனையும் பழிவாங்கலும் ஆவார். எனக்குக் கூறு, தேவன் சர்வவல்லவர் இல்லையா? அவர் எந்த மற்றும் எல்லாக் கிரியைகளையும் செய்ய வல்லவர், நீ கற்பனை செய்வதுபோல், சிலுவை மரணத்துக்கு மட்டுமல்ல. நீ தேவனைப் பற்றி மிகக் குறைவாக நினைக்கிறாய்! சிலுவை மரணத்தின் மூலம் அனைத்து மனுக்குலத்தையும் இரட்சிப்பது மட்டுமே அவரால் செய்யக்கூடியது, அது மட்டுமே என்று நீ நம்புகிறாயா? மேலும் அதற்குப் பின் நீ அவரைப் பின்தொடர்ந்து பரலோகம் வரை சென்று ஜீவ மரத்தில் இருந்து கனியைப் புசித்து ஜீவ நதியில் இருந்து தண்ணீரைக் குடிப்பாயா? … அது அவ்வளவு எளிதாக இருக்க முடியுமா? என்னிடம் கூறு, நீ எதைச் சாதித்திருக்கிறாய்? உன்னிடம் இயேசுவின் ஜீவன் இருக்கிறதா? நீ உண்மையில் அவரால் மீட்கப்பட்டாய், ஆனால் சிலுவை மரணம் இயேசுவின் சொந்தக் கிரியை. ஒரு மனிதனாக நீ என்ன கடமையை நிறைவேற்றி இருக்கிறாய்? உனக்கு வெளியரங்கமான பக்தி இருக்கிறது, ஆனால் நீ அவரது வழியைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வாறா நீ அவரை வெளிப்படுத்துகிறாய்? நீ தேவனின் ஜீவனை அடைந்திராவிட்டால், அல்லது அவரது நீதியான மனநிலையின் முழுமையை கண்டிராவிட்டால், நீ ஜீவனுள்ள ஒருவனாக உன்னைக் கூறிக்கொள்ள முடியாது, மேலும் பரலோக ராஜ்யத்தின் வாயில் வழியாக நுழையும் தகுதி உனக்கு இராது.

தேவன் ஆவி மட்டும் அல்ல, அவரால் மாம்சமாகவும் முடியும். மேலும் அவர், மகிமையின் சரீரம். இயேசுவை நீ பார்த்திராவிட்டாலும், அக்கால யூதர்களான இஸ்ரவேலர்களால் அவர் பார்க்கப்பட்டவர். முதலில் அவர் ஒரு மாம்ச சரீரமாக இருந்தார், ஆனால் பின்னர் சிலுவையில் அறையப்பட்டார், அவர் மகிமையின் சரீரமானார். அவர் சகலத்தையும் உள்ளடக்கிய ஆவி, மேலும் அவரால் எவ்விடத்திலும் கிரியை செய்ய முடியும். அவரால் யேகோவாவாகவும், இயேசுவாகவும், அல்லது மேசியாவாகவும் இருக்க முடியும். முடிவில், அவரால் சர்வவல்ல தேவனாகவும் முடியும். அவரே நீதி, நியாயத்தீர்ப்பு, மற்றும் சிட்சை; அவரே சாபமும் உக்கிரமும்; ஆனால் அவரே இரக்கம் மற்றும் அன்பின் கருணை. அவர் செய்த கிரியைகள் யாவும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன்கொண்டவை. அவர் எத்தகைய தேவன் என்று நீ கூறுகிறாய்? உன்னால் விளக்க முடியாது. உன்னால் உண்மையில் விளக்க முடியாது என்றால், நீ தேவனைப் பற்றிய முடிவுக்கு வரக்கூடாது. தேவன் ஒரு கட்டத்தில் இரட்சிப்பின் கிரியையை செய்ததனாலேயே, அவர் எப்போதும் இரக்கமும் அன்பின் கருணையும் கொண்ட தேவனாகவே இருப்பார் என்ற முடிவுக்கு வராதே. அவர் இரக்கமும் அன்பின் கருணையும் மட்டும் கொண்ட தேவன் என்பதில் உன்னால் உறுதியாக இருக்க முடியுமா? அவர் இரக்கமுள்ள அன்பின் தேவன் மட்டுமே என்றால் கடைசி நாட்களில் அவர் காலத்தை ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறார். அவர் ஏன் பல பேரிடர்களை கீழே அனுப்புவார்? மக்களின் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளின் படி, மனுக்குலத்தின் கடைசி உறுப்பினர் வரை இரட்சிக்கப்படுவதற்காக தேவன் இறுதி வரை இரக்கமுள்ளவராகவும் அன்பானவராகவும் இருக்க வேண்டும், ஆனால் ஏன், கடைசி நாட்களில், தேவனை எதிரி என்று கருதும் இந்தத் தீய மனுக்குலத்தை அழிக்க, நிலநடுக்கம், வாதை மற்றும் பஞ்சம் போன்ற மகா பேரிடர்களை கீழே அனுப்புகிறார்? இந்தப் பேரிடர்களால் மனிதன் துன்பப்பட அவர் ஏன் அனுமதிக்கிறார்? இதை எண்ணிப் பார்க்கும் போது, இவர் எத்தகைய தேவன், உங்களில் ஒருவனும் கூறத் துணியமாட்டான், மேலும் ஒருவனாலும் விளக்க முடியாது. அவர் ஆவிதான் என்பதில் நீ உறுதியாக இருக்க முடியுமா? அவர் இயேசுவின் மாம்சத்தைத் தவிர வேறல்ல என்று உன்னால் துணிந்து கூற முடியுமா? மனிதனுக்காக என்றென்றும் சிலுவையில் அறையப்படும் தேவனே அவர் என்று உன்னால் துணிந்து கூற முடியுமா?

முந்தைய: மாம்சமாகியதன் மறைபொருள் (4)

அடுத்த: திரித்துவம் என்பது உண்டா?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக