மாம்சமாகியதன் மறைபொருள் (4)

வேதாகமத்தின் பின்னணியில் உள்ள கதையையும், அது உருவான விதத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குச் சொந்தமானது அல்ல. அவர்களுக்குத் தெரியாது. இந்த விஷயங்களைப் பற்றிய சாராம்சத்தை அவர்களிடம் நீ தெளிவாகக் கூறினால், அவர்கள் இனியும் உன்னிடம் வேதாகமத்தைப் பற்றி விடாப்பிடியாக வாதாடுபவர்களாக இருக்க மாட்டார்கள். இந்த வாக்கு நிறைவேறியதா? அந்த வாக்கு நிறைவேறியதா? என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டதைக் குறித்து அவர்கள் தொடர்ந்து ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள். வேதாகமத்துக்கு இணங்கியே அவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், அவர்கள் வேதாகமத்தின்படி சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள். தேவன் மீதான அவர்களின் விசுவாசம் வேதாகமத்தின் வார்த்தைகளின் மீதே உள்ளது; வேதாகமம் இல்லாமல் அவர்கள் தேவனை நம்ப மாட்டார்கள். வேதாகமத்தை சிறிய ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்கள் ஜீவிக்கும் முறை இதுதான். அவர்கள் மீண்டும் வேதாகமத்தை ஆராய்ந்து உன்னிடத்தில் விளக்கங்களைக் கேட்கும்போது, நீ, “முதலில், ஒவ்வொரு வாக்கையும் சரிபார்க்காமல் இருப்போம். மாறாக, பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதைப் பார்ப்போம். இந்தப் பாதை உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையா என்பதைப் பார்ப்பதற்கு நாம் நடந்து செல்லும் பாதையை சத்தியத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம், அத்தகைய பாதை சரியானதா என்பதை சரிபார்க்க பரிசுத்த ஆவியானவரின் கிரியையை பயன்படுத்துவோம். இந்த வாக்கு அல்லது அந்த வாக்கு முன்னறிவிக்கப்பட்டபடி நிறைவேறியிருக்கிறதா என்று மனுஷரான நாம் அதில் மூக்கை நுழைக்கக் கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும், தேவன் செய்து வரும் சமீபத்திய கிரியைக்கும் பதிலாக பேசுவது நமக்கு நல்லது,” என்று சொல்கிறாய். வேதாகமத்தில் உள்ள தீர்க்கதரிசனங்கள் அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவனால் அனுப்பப்பட்ட வார்த்தைகளாகவும், மற்றும் ஏவுதல் பெற்று தேவன் பயன்படுத்திய மனுஷரால் எழுதப்பட்ட வார்த்தைகளாகவும் இருக்கின்றன; தேவனால் மட்டுமே அந்த வார்த்தைகளை விளக்க முடியும், பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே அந்த வார்த்தைகளின் அர்த்தத்தை அறிய வைக்க முடியும், மேலும் தேவனால் மட்டுமே ஏழு முத்திரைகளை உடைத்து புஸ்தகச்சுருளைத் திறக்க முடியும். நீ சொல்கிறாய்: “நீ தேவன் அல்ல, நானும் தேவன் அல்ல, எனவே தேவனின் வார்த்தைகளை விளக்கத் துணிந்தவர் யார்? அந்த வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? எரேமியா, யோவான் மற்றும் எலியா ஆகிய தீர்க்கதரிசிகள் வந்தாலும், அவர்கள் ஆட்டுக்குட்டியானவராக இல்லாததால் அந்த வார்த்தைகளை விளக்க முயற்சி செய்யத் துணிய மாட்டார்கள். ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே ஏழு முத்திரைகளை உடைத்து புஸ்தகச்சுருளைத் திறக்க முடியும், வேறு எவராலும் அவருடைய வார்த்தைகளை விளக்க முடியாது. தேவனின் நாமத்தைப் பயன்படுத்த நான் துணிவதில்லை, தேவனின் வார்த்தைகளை விளக்கும் முயற்சியும் நான் எடுப்பதில்லை. என்னால் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவனாக மட்டுமே இருக்க முடியும். நீ தேவனா? தேவனின் எந்த சிருஷ்டியினாலும் புஸ்தகச்சுருளைத் திறக்கவோ அல்லது அந்த வார்த்தைகளை விளக்கவோ துணிவதில்லை, எனவே நானும் அவற்றை விளக்க துணிவதில்லை. நீயும் அவற்றை விளக்க முயற்சிக்க வேண்டாம். அவற்றை விளக்க யாரும் முயற்சிக்கக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை பற்றிப் பேசுவோம்; மனுஷனால் செய்ய முடிந்தது இதுவே. யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளை நான் கொஞ்சம் அறிவேன், ஆனால் அத்தகைய கிரியை பற்றி எனக்குத் தனிப்பட்ட அனுபவம் இல்லாததால், அதைப் பற்றி கொஞ்சம் மட்டுமே என்னால் பேச முடியும். ஏசாயா அல்லது இயேசுவின் காலத்தில் பேசிய வார்த்தைகளின் அர்த்தத்தைப் பொறுத்தவரை, நான் எந்த விளக்கமும் அளிக்க மாட்டேன். நான் வேதாகமத்தைப் படிப்பதில்லை, மாறாக தேவனின் தற்போதைய கிரியையைப் பின்பற்றுகிறேன். நீ உண்மையில் வேதாகமத்தைச் சிறிய புஸ்தகச்சுருள் என்று கருதுகிறாய், ஆனால் அது ஆட்டுக்குட்டியானவரால் மட்டுமே திறக்கக்கூடிய ஒன்று அல்லவா? ஆட்டுக்குட்டியானவரைத் தவிர, வேறு யாரால் அதைத் திறக்க முடியும்? நீ ஆட்டுக்குட்டியானவர் அல்ல, நான்தான் தேவன் என்று கூற நானும் துணிவதில்லை, எனவே நாம் வேதாகமத்தைப் பகுப்பாய்வு செய்யவோ அல்லது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தவோ வேண்டாம். பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியையைப் பற்றி விவாதிப்பது, அதாவது, தேவனால் செய்யப்படும் தற்போதைய கிரியை பற்றி விவாதிப்பது மிகவும் சிறந்தது. தேவன் கிரியை செய்யும் கொள்கைகள் என்ன, அவருடைய கிரியையின் சாராம்சம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம், இவற்றைப் பயன்படுத்தி இன்று நாம் நடந்து செல்லும் பாதை சரியானதா என்பதை சரிபார்க்கவும், இவ்வழி சரிதானா என உறுதிப்படுத்தவும் செய்யலாம்.” நீ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்பினால், குறிப்பாக மத உலகில் உள்ளவர்களுக்கு நீ பிரசங்கிக்க விரும்பினால், நீ வேதாகமத்தைப் புரிந்துகொண்டு அதன் உள்ளார்ந்த கதையில் தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில், நீ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வழி இல்லை. நீ நன்கு தேர்ச்சி பெற்றதும், வேதாகமத்தின் மரித்துப்போன வார்த்தைகளை ஒரு சிறிய வழியில் ஆராய்வதை நிறுத்திவிட்டு, தேவனின் கிரியை மற்றும் ஜீவ சத்தியத்தைப் பற்றி மட்டுமே பேசினால், உண்மையான இருதயத்துடன் தேடுபவர்களை உன்னால் ஆதாயப்படுத்த முடியும்.

யேகோவாவின் கிரியை, அவர் வைத்த நியாயப்பிரமாணங்கள் மற்றும் மனுஷர் தங்களது ஜீவிதத்தில் ஜீவித்திருக்க அவர் வழிநடத்திய கோட்பாடுகள், நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் செய்த கிரியையின் உள்ளடக்கம், அவருடைய நியாயப்பிரமாணங்களை அவர் இயற்றியதன் முக்கியத்துவம், கிருபையின் யுகத்தில் அவர் செய்த கிரியையின் முக்கியத்துவம், இந்த இறுதிக் கட்டத்தில் தேவன் செய்யும் கிரியை: இவையே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். கிரியையின் முதல் கட்டம் என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்கான கிரியையாகும், இரண்டாவது கிருபையின் யுகத்திற்கான கிரியையாகும், மூன்றாவது கடைசிக் காலத்திற்கான கிரியையாகும். தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டங்களைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஆதி முதல் அந்தம் வரை மொத்தம் மூன்று கட்டங்கள் உள்ளன. கிரியையின் ஒவ்வொரு கட்டத்தின் சாராம்சம் என்ன? ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டத்திற்கான கிரியை எத்தனை கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன? இந்தக் கட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஏன் அதற்கென குறிப்பிட்ட முறையில் மேற்கொள்ளப்படுகின்றன? இவை அனைத்தும் முக்கியமான கேள்விகளாகும். ஒவ்வொரு யுகத்தின் கிரியைக்கும் பிரதிநிதித்துவ மதிப்பு இருக்கின்றது. யேகோவா என்ன கிரியையை செய்தார்? அவர் ஏன் அந்தக் குறிப்பிட்ட முறையில் அதை செய்தார்? அவர் ஏன் யேகோவா என்று அழைக்கப்பட்டார்? மீண்டும், கிருபையின் யுகத்தில் இயேசு என்ன கிரியையைச் செய்தார், அதை அவர் எந்த விதத்தில் செய்தார்? தேவனுடைய மனநிலையின் எந்த அம்சங்கள் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தாலும் மற்றும் ஒவ்வொரு யுகத்தினாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன? நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவரது மனநிலையின் எந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன? கிருபையின் யுகத்தில் அவரது மனநிலையின் எந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன? இறுதி யுகத்தில் அவரது மனநிலையின் எந்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன? நீங்கள் தெளிவாக இருக்க வேண்டிய இன்றியமையாத கேள்விகள் இவை. தேவனின் முழு மனநிலையும் ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது கிருபையின் யுகத்திலோ, நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ, கடைசிக் காலத்திலோ மட்டும் வெளிப்படுத்தப்படவில்லை. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியையானது நியாயத்தீர்ப்பு, கோபாக்கினை மற்றும் சிட்சை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடைசிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரியைகளால் நியாயப்பிரமாணத்தின் யுகம் அல்லது கிருபையின் யுகத்தின் கிரியைகளுக்கு மாற்றாக முடியாது. இருப்பினும், இந்த மூன்று கட்டங்களும் ஒன்றோடொன்று இணைந்து, ஓர் உட்பொருளை உருவாக்குகின்றன, மேலும் இவை அனைத்தும் ஒரே தேவனின் கிரியைதான். இயற்கையாகவே, இந்தக் கிரியையை நிறைவேற்றும் செயல் தனி யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தொடக்கத்திற்கான கிரியையை செய்ததைப் போல; கிருபையின் யுகத்தில் மீட்பிற்கான கிரியையைச் செய்தது போல; கடைசிக் காலத்தில் சகலத்தையும் இறுதிக்குக் கொண்டுவரும் கிரியை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆறாயிரம் ஆண்டுக்கால நிர்வகித்தல் திட்டத்தினுடைய கிரியைகளின் தரிசனங்களைப் பொறுத்தவரை, யாராலும் நுண்ணறிவு அல்லது புரிதலைப் பெற முடியாது, இந்தத் தரிசனங்கள் கடைசிவரை புதிராகவே இருக்கும். கடைசிக் காலத்தில், ராஜ்யத்தின் யுகத்தை முன்னெடுப்பதற்காக வார்த்தையின் கிரியை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது சகல யுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. கடைசிக் காலம் என்பது கடைசிக் காலத்தை விடவும், ராஜ்யத்தின் யுகத்தை விடவும் பெரியதாக இல்லை, மேலும் அது கிருபையின் யுகம் அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதாவது கடைசிக் காலத்தில், ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டத்தில் உள்ள அனைத்து கிரியைகளும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவே மறைபொருளின் வெளிப்பாடாகும். இந்த வகையான மறைபொருள் எந்த மனுஷனாலும் வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். மனுஷனுக்கு வேதாகமத்தைப் பற்றி எவ்வளவு பெரிய புரிதல் இருந்தாலும், அது அவனுக்கு வெறும் வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை, ஏனென்றால் மனுஷனுக்கு வேதாகமத்தின் சாராம்சம் புரிவதில்லை. வேதாகமத்தைப் படிப்பதால், மனுஷன் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ளலாம், சில வார்த்தைகளை விளக்கலாம், அல்லது சில பிரபலமான பத்திகளையும் அத்தியாயங்களையும் தனது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தலாம், ஆனால் அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை அவனால் ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது, ஏனென்றால் எல்லா மனுஷரும் மரித்துப்போன வார்த்தைகளைத்தான் காண்கிறார்கள், யேகோவா மற்றும் இயேசுவினுடைய கிரியையின் காட்சிகளை அல்ல, மேலும் இந்தக் கிரியையின் மறைபொருளை கட்டவிழ்க்க மனுஷனுக்கு வழியே இல்லை. எனவே, ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் மறைபொருளே மிகப் பெரிய மறைபொருளாகும், இது மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டதாகவும் மற்றும் முற்றிலும் மனுஷனுக்குப் புரியாததாகவும் இருக்கிறது. தேவன் அதை மனுஷனுக்கு விளக்கி வெளிப்படுத்தாவிட்டால், தேவனின் விருப்பத்தை யாரும் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது; இல்லையெனில், இந்த விஷயங்கள் எப்போதும் மனுஷனுக்கு புதிராகவே இருக்கும், என்றென்றும் மூடிமறைக்கப்பட்ட மறைபொருட்களாகவே இருக்கும். மத உலகில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்; இன்று உங்களுக்குச் சொல்லப்படாதிருந்தால், நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இந்த ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியை தீர்க்கதரிசிகளின் எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட மறைபொருள் மிக்கது. இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய மறைபொருளாக இருக்கிறது, மேலும் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, இதற்கு முன்னர் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த மறைபொருளை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், அதை உங்களால் முழுமையாகப் பெற முடிந்தால், எல்லா மத நபர்களும் இந்த மறைபொருளால் வெல்லப்படுவார்கள். இது மட்டுமே தரிசனங்களில் மிகப்பெரியது; இதையே மனுஷன் புரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறான், ஆனால் அது அவனுக்கு மிகவும் தெளிவாகத் தெரியவில்லை. நீங்கள் கிருபையின் யுகத்தில் இருந்தபோது, இயேசு செய்த கிரியை அல்லது யேகோவா செய்த கிரியை என்னவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. யேகோவா ஏன் நியாயப்பிரமாணங்களை வகுத்தார், ஏன் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்கும்படி அவர் பெருந்திரளான ஜனங்களிடம் கேட்டார் அல்லது ஏன் ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று கேட்டார், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வனாந்தரத்துக்கும் பின்னர் கானானுக்கும் ஏன் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது ஜனங்களுக்கு புரியவில்லை. இந்த விஷயங்கள் இந்த நாள் வரையிலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கடைசிக் காலத்தின் கிரியை என்பது மூன்று கட்டங்களில் இறுதியான கட்டமாகும். இது மற்றொரு புதிய யுகத்தின் கிரியை ஆகும், மேலும் இது நிர்வகித்தலின் முழு கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கட்டத்தாலும் தனியாக மூன்று யுகங்களின் கிரியைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது, ஆனால் ஒட்டுமொத்தத்திலிருந்து ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும். யேகோவா என்ற நாமத்தால் தேவனின் முழு மனநிலையையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் அவர் தமது கிரியையைச் செய்தார் என்பது தேவன் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கவில்லை. யேகோவா மனுஷனுக்காக நியாயப்பிரமாணங்களை வகுத்து, அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்து, ஆலயத்தையும் பலிபீடங்களையும் கட்டியெழுப்பும்படி மனுஷனிடம் கேட்டார்; அவர் செய்த கிரியை நியாயப்பிரமாணத்தின் யுகத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் செய்த இந்தக் கிரியை, மனுஷனை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றச் சொல்லும் தேவன் மட்டுமே தேவன் என்பதை, அல்லது அவர் ஆலயத்தில் இருக்கும் தேவன் என்பதை, அல்லது பலிபீடத்தின் முன் இருக்கும் தேவன் என்று நிரூபிக்கவில்லை. இப்படிச் சொல்வது உண்மைக்குப் புறம்பாக இருக்கும். நியாயப்பிரமாணத்தின் கீழ் செய்யப்படும் கிரியைகள் ஒரு யுகத்தை மட்டுமே குறிக்கும். ஆகையால், தேவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மட்டுமே கிரியையைச் செய்திருந்தால், மனுஷன், “ஆலயத்தில் இருக்கும் தேவனே தேவன், மேலும், தேவனுக்கு ஊழியம் செய்ய நாம் ஆசாரிய உடைகளை அணிந்து ஆலயத்தினுள் நுழைய வேண்டும்,” என்ற வரையறைக்குள் தேவனைக் கட்டுப்படுத்தியிருந்திருப்பான். கிருபையின் யுகத்தில் கிரியைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டிருக்காமலும், நியாயப்பிரமாணத்தின் யுகம் இன்றுவரை தொடர்ந்திருந்தால், தேவன் இரக்கமுள்ளவர், அன்பானவர் என்பதையும் மனுஷன் அறிந்திருக்க மாட்டான். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் கிரியை செய்யப்பட்டிருக்காவிட்டால், அதற்குப் பதிலாகக் கிருபையின் யுகத்தில் மட்டுமே கிரியை செய்யப்பட்டிருந்தால், தேவனால் மனுஷனை மீட்டு மனுஷனின் பாவங்களையும் மன்னிக்க முடியும் என எல்லா மனுஷரும் அறிந்திருப்பர். அவரே பரிசுத்தமானவர், பாவமறியாதவர் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருப்பான், மேலும் மனுஷனுக்காகவே அவர் தம்மைப் பலியாகக் கொடுத்து சிலுவையில் அறைந்துகொள்ள முடியும் என்பதையும் மனுஷன் அறிந்திருப்பான். மனுஷனுக்கு இந்த விஷயங்கள் மட்டுமே தெரியும், ஆனால் வேறு எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியாது. எனவே ஒவ்வொரு யுகமும் தேவனுடைய மனநிலையின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில், கிருபையின் யுகத்தில், மற்றும் தற்போதைய கட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய மனநிலையின் அம்சங்களைப் பொறுத்தவரை: மூன்று கட்டங்களும் ஒரே மாதிரியாக ஒருங்கிணைக்கப்பட்டால்தான் அவற்றால் தேவனின் மனநிலையை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும். மூன்று கட்டங்களையும் மனுஷன் அறிந்தால் மட்டுமே அவனால் அதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். மூன்று கட்டங்களில் எதையும் தவிர்க்க முடியாது. கிரியையின் இந்த மூன்று கட்டங்களையும் அறிந்த பிறகு மட்டுமே உன்னால் தேவனின் மனநிலையை முழுமையாகக் காண முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் தேவன் தமது கிரியையை நிறைவு செய்தார் என்பது அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் தேவன் மட்டுமே என்பதை நிரூபிக்கவில்லை, மேலும் அவர் மீட்பின் கிரியையை நிறைவுசெய்தார் என்பதற்குத் தேவன் மனுஷகுலத்தை என்றென்றும் மீட்பார் என்று அர்த்தமல்ல. இவை அனைத்தும் மனுஷனால் உருவாக்கப்பட்ட முடிவுகள். கிருபையின் யுகம் முடிவுக்கு வந்துவிட்டதால், தேவன் சிலுவையைச் சேர்ந்தவர் என்றும் சிலுவை மட்டுமே தேவனின் இரட்சிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் உன்னால் சொல்ல முடியாது. அவ்வாறு செய்வது தேவனை வரையறுப்பதாகும். தற்போதைய கட்டத்தில், தேவன் முக்கியமாக வார்த்தையின் கிரியையை மட்டுமே செய்கிறார், ஆனால் தேவன் ஒருபோதும் மனுஷனிடம் இரக்கம் காட்டவில்லை என்றும் அவர் கொண்டு வந்ததெல்லாம் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் மட்டும்தான் என்றும் உன்னால் சொல்ல முடியாது. கடைசிக் காலத்தில் செய்யப்பட்ட கிரியைகள் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளையும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும் வெளிப்படுத்துகின்றன, இதனால் மனுஷகுலம் சென்றுசேரும் இடத்தையும் முடிவையும் வெளிப்படுத்தவும், மனுஷரிடையே இரட்சிப்பின் அனைத்துக் கிரியைகளையும் முடிக்கவும் முடியும். கடைசிக் காலத்தினுடைய கிரியையின் இந்தக் கட்டம், சகலத்தையும் முடிவிற்குக் கொண்டுவருகிறது. மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களையும், அவனை அவற்றின் ஆழத்திற்குள் தள்ளவும், அவனது இருதயத்தில் முற்றிலும் தெளிவான புரிதலைக் கொண்டிருக்கவும் மனுஷனை அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷ இனத்தை வகைக்கு ஏற்ப வகைப்படுத்த முடியும். ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முடிந்தபிறகுதான், தேவனின் மனநிலையை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்வான், ஏனென்றால் அவருடைய நிர்வகித்தல் அப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கும். இப்போது நீங்கள் இறுதி யுகத்தில் தேவனின் கிரியையை அனுபவித்திருப்பீர்கள் என்பதால், தேவனின் மனநிலை என்னவென்று தெரியுமா? தேவன் வெறும் வார்த்தைகளை மட்டுமே பேசும் தேவனாக இருக்கிறார் என்று சொல்ல உனக்கு தைரியமா? அத்தகைய முடிவை வழங்க நீ துணிவதில்லை. மறைபொருட்களை வெளிப்படுத்தும் தேவன்தான் தேவன் என்றும், தேவன்தான் ஆட்டுக்குட்டியானவர் என்றும், ஏழு முத்திரைகளை உடைப்பவரும் அவர்தான் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய முடிவை வழங்க யாரும் துணிவதில்லை. மாம்சமாகியவர்தான் தேவன் என்று மற்றவர்கள் சொல்லலாம், ஆனால் இது இன்னும் சரியானதாக இருக்காது. இன்னும் சிலர் மாம்சமாகிய தேவன் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்ய மாட்டார் என்றும் சொல்லலாம், ஆனால் இவ்வாறு பேசுவதற்கு உனக்கு தைரியமில்லை, ஏனென்றால் இயேசு மாம்சமாகி, அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், எனவே தேவனை மிகவும் இலகுவாக வரையறுக்க உனக்கு தைரியம் இருக்காது. ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முழுமைக்கும் செய்யப்பட்ட கிரியைகள் அனைத்தும் இப்போது முடிவடைய இருக்கின்றன. இந்தக் கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்டு மனுஷகுலத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, தேவனின் மனநிலை, அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் எதைக் கொண்டிருக்கிறார் என்பதை மனுஷகுலம் அறிந்து கொள்ளும். இந்தக் கட்டத்தின் கிரியைகள் முழுமையாக முடிந்ததும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், முன்னர் புரிந்து கொள்ளப்படாத அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும், மேலும் மனுஷ இனம் அவர்களின் எதிர்காலப் பாதை மற்றும் அவர்கள் சென்றுசேரும் இடம் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும். இதுவே தற்போதைய கட்டத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைகள் ஆகும். இன்று மனுஷன் நடந்து செல்லும் பாதைதான் சிலுவையின் பாதை மற்றும் துன்பத்தின் பாதை என்றாலும், இன்று மனுஷன் செய்யும் பயிற்சி, இன்று அவன் புசித்துக் குடிக்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள் கிருபையின் யுகத்தில் நியாயப்பிரமாணத்தின் கீழ் மனுஷனிடம் வந்துவிழுந்ததில் இருந்து பெரியளவில் மாறுபட்டவையாகும். இன்றைய நாளில் மனுஷனிடம் கேட்கப்படுவது கடந்த காலத்தைப் போலல்லாதது, மேலும் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனிடம் கேட்டதைப் போலல்லாதது ஆகும். இஸ்ரவேலில் தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனுஷனிடம் நியாயப்பிரமாணத்தின் கீழ் என்ன கேட்கப்பட்டது? மனுஷன் ஓய்வு நாளையும், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. யாரும் ஓய்வுநாளில் வேலை செய்யவோ, யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மீறவோ கூடாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஓய்வுநாளில், மனுஷன் வழக்கம் போல் வேலை செய்கிறான், கூடுகிறான், ஜெபிக்கிறான், அவனுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில் இருப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் உபவாசம் இருக்கவும், அப்பத்தை பிட்கவும், திராட்சைரசம் பருகவும், முக்காடிடவும், அவர்களுக்காக மற்றவர்கள் அவர்களது கால்களைக் கழுவவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்போது, இந்த விதிகள் ஒழிக்கப்பட்டுள்ளன, ஆனால் மனுஷனிடமிருந்து அதைவிட அதிகமான கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன, ஏனென்றால் தேவனின் கிரியை இன்னும் ஆழமாக வளர்ந்து, மனுஷனின் பிரவேசம் உயர்ந்த இடத்தை அடைகிறது. கடந்த காலத்தில், இயேசு மனுஷன் மீது கை வைத்து ஜெபம் செய்தார், ஆனால் இப்போது எல்லாம் சொல்லப்பட்டுவிட்டதால், கைகளை வைப்பதால் என்ன பயன்? வார்த்தைகளால் மட்டுமே முடிவுகளை அடைய முடியும். கடந்த காலங்களில் அவர் மனுஷன் மீது கை வைத்தபோது, அது மனுஷனை ஆசீர்வதிப்பதற்கும், அவனுடைய நோய்களைக் குணப்படுத்துவதற்கும் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் இப்படித்தான் கிரியை செய்தார், ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கும் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, உங்களுக்குச் சொல்லப்பட்டதைப் போலவே அவற்றை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளே அவருடைய சித்தம்; அவர் செய்ய விரும்பும் கிரியைகள் அவை. அவருடைய வார்த்தைகளின் மூலம், அவருடைய சித்தத்தையும், அவர் உன்னை அடையச் சொல்லும் விஷயங்களையும் நீ புரிந்துகொள்வாய், மேலும் கைகளை வைப்பதற்கான எந்த தேவையும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை நீ நேரடியாகக் கடைப்பிடிக்கலாம். சிலர், “உமது கைகளை என்மீது வையும்! உம்முடைய ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்கும், உம்முள் நான் பங்கெடுப்பதற்கும் உமது கைகளை என்மேல் வையும்,” என்று கூறுவர். இவை அனைத்தும் கடந்த காலத்திலிருந்து வந்த காலாவதியான நடைமுறைகள், இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனெனில் யுகம் மாறிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் சீரற்றதாகவோ அல்லது விதிகளை அமைப்பதற்கு இணங்கவோ இல்லாமல் யுகத்துக்கு ஏற்ப செயல்படுகிறார். யுகம் மாறிவிட்டது, மேலும் ஒரு புதிய யுகம் அதனுடன் புதிய கிரியையைக் கொண்டுவருகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் இதுதான் உண்மை, எனவே அவருடைய கிரியை ஒருபோதும் மீண்டும் நிகழ்த்தப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில், இயேசு, நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது, மனுஷனுக்காக ஜெபிக்க தமது கைகளை அவன்மீது வைப்பது, மனுஷனை ஆசீர்வதிப்பது போன்ற குறிப்பிட்ட அளவு கிரியைகளைச் செய்தார். இருப்பினும், இன்றைய நாளில் மீண்டும் அவ்வாறு செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் அவ்வாறாகக் கிரியை செய்தார், ஏனென்றால் அது கிருபையின் யுகம், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபை இருந்தது. அவனிடம் இருந்து எந்தவொரு காசும் கேட்கப்படவில்லை, அவனுக்கு விசுவாசம் இருந்தால், அவன் கிருபையைப் பெறுவான். அனைவரும் மிகவும் கிருபையுடன் நடத்தப்பட்டனர். இப்போது யுகம் மாறிவிட்டதாலும், தேவனின் கிரியை மேலும் முன்னேறியுள்ளதாலும்; சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலமே மனுஷனின் கலகத்தனமும் மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தமான விஷயங்களும் அகற்றப்படும். அந்தக் கட்டம் மீட்பின் கட்டமாக இருப்பதால், மனுஷன் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்கும், கிருபையின் மூலம் அவன் செய்த பாவங்களை மன்னிப்பதற்கும், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபையை காண்பிப்பதற்கும், அவ்வாறாகச் செயல்படுவதற்கும் தேவன் விரும்பினார். இந்தத் தற்போதைய கட்டம், மனுஷனுக்குள் உள்ள அநீதியை சிட்சை, நியாயத்தீர்ப்பு, வார்த்தைகளால் அடித்தல், அத்துடன் ஒழுக்கம் மற்றும் வார்த்தைகளின் வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் அம்பலப்படுத்துவதாகும், இதனால் மனுஷகுலம் பின்னர் இரட்சிக்கப்படலாம். இது மீட்பை விட ஆழமான கிரியை ஆகும். கிருபையின் யுகத்தில் இருந்த கிருபை மனுஷனின் இன்பத்திற்குப் போதுமானதாக இருந்தது; இப்போது மனுஷன் இந்தக் கிருபையை ஏற்கனவே அனுபவித்திருப்பதால், இனி அவன் அதை அனுபவிக்க மாட்டான். இந்தக் கிரியை இப்போது அதன் நேரத்தைக் கடந்துவிட்டது, இனியும் செய்யப்படாது. இப்போது வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனுஷன் இரட்சிக்கப்பட இருக்கிறான். மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவனது மனநிலை மாறுகிறது. இவையெல்லாம் நான் பேசிய வார்த்தைகளால்தான் இல்லையா? ஒவ்வொரு கட்ட கிரியையும் மனுஷ இனம் முழுமைக்குமான முன்னேற்றத்திற்கும் யுகத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது. இந்தக் கிரியை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை, எதிர்காலத்தில் மனுஷகுலத்திற்கு ஒரு நல்ல போய்சேரும் இடம் இருக்கக்கூடும், இறுதியில் மனுஷகுலம் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படலாம் என்பதற்காக இவை அனைத்தும் இறுதி இரட்சிப்பின் பொருட்டு செய்யப்படுகின்றன.

வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகளிலிருந்து எவ்வாறு அவன் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செய்யப்பட வேண்டியதாக இருந்தது. மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான். இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவு தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும்தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்த பின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமான கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணபலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்டத்தின் கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் நிர்வகித்தல் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.

மனுஷனை தேவன் இரட்சிப்பது என்பது ஆவியானவரின் முறையையும், ஆவியானவரின் அடையாளத்தையும் பயன்படுத்தி நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஏனென்றால் ஆவியானவரை மனுஷனால் தொடவோ அல்லது பார்க்கவோ முடியாது, மேலும் மனுஷனால் அவரை நெருங்கவும் முடியாது. ஆவியானவர் தன் வழிமுறையைப் பயன்படுத்தி மனுஷனை நேரடியாக இரட்சிக்க முயன்றால், மனுஷனால் அவனுக்கான இரட்சிப்பைப் பெற முடியாமல் போகும். சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனின் வெளிப்புற வடிவத்தை தேவன் அணிந்திருக்கவில்லை என்றால், மனுஷனுக்கு இந்த இரட்சிப்பைப் பெற வழியே இருந்திருக்காது. ஏனென்றால் எப்படி யேகோவாவின் மேகத்தின் அருகே யாராலும் செல்ல முடியாமல் இருந்ததோ, அதுபோல மனுஷனுக்கு அவரை அணுக வழி இல்லை. சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக மாறுவதன் மூலம் மட்டுமே, அதாவது, அவர் மாறப்போகும் சரீர மாம்சத்தில் அவருடைய வார்த்தையை வைப்பதன் மூலம் மட்டுமே, அவரைப் பின்தொடரும் அனைவருக்கும் அவரால் தனிப்பட்ட முறையில் வார்த்தையால் கிரியை செய்ய முடியும். அப்போதுதான் மனுஷனால் தனிப்பட்ட முறையில் அவருடைய வார்த்தையைக் காணவும் கேட்கவும் முடியும், மேலும் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ளவும் முடியும், இதன் மூலம் மனுஷன் முழுமையாக இரட்சிக்கப்படுவான். தேவன் மாம்சத்தில் வந்திருக்காவிட்டால், மாம்சமும் இரத்தமும் கொண்ட எவராலும் இவ்வளவு பெரிய இரட்சிப்பைப் பெற்றிருக்கவும் முடியாது, ஒரு மனுஷன் கூட இரட்சிக்கப்பட்டிருக்கவும் மாட்டான். தேவனுடைய ஆவியானவர் மனுஷகுலத்தின் மத்தியில் நேரடியாகக் கிரியை செய்தால், சகலவித மனுஷரும் தாக்கப்படுவார்கள், இல்லையெனில், தேவனுடன் தொடர்பு கொள்ள எந்த வழியும் இல்லாமல், அவர்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்படுவார்கள். மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிவுக்கு வந்தபின், கிருபையின் யுகத்திலிருந்து, தேவன் இரட்சிப்பின் கிரியையைத் தொடங்கினார், இது கடைசிக் காலம் வரை தொடர்கிறது, மனுஷ இனத்தை அவர்களின் கலகத்தன்மைக்காக அவர்களை நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சைக்கு உட்படுத்தி, அவர் மனுஷகுலத்தை முழுமையாகச் சுத்திகரிப்பார். அப்போதுதான் தேவன் தம்முடைய இரட்சிப்பின் கிரியையை முடித்துவிட்டு ஓய்வெடுப்பார். ஆகையால், கிரியையின் மூன்று கட்டங்களில், தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே நிறைவேற்ற இரண்டு முறை மட்டுமே மாம்சமாகியிருக்கிறார். ஏனென்றால், கிரியையின் மூன்று கட்டங்களில் ஒன்று மட்டுமே மனுஷரை தங்கள் ஜீவிதத்தை வழிநடத்த வழிகாட்டும், மற்ற இரண்டுமே இரட்சிப்பின் கிரியைகளைக் கொண்டிருக்கும். மாம்சமாவதன் மூலம் மட்டுமே தேவன் மனுஷனுடன் இணைந்து ஜீவிக்கவும், உலகின் துயரங்களை அனுபவிக்கவும், சாதாரண மாம்ச சரீரத்தில் ஜீவிக்கவும் முடியும். இவ்வாறாக மட்டுமே அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களுக்குத் தேவையான நடைமுறைப் பாதையை வழங்க முடியும். மாம்சமாகிய தேவன் மூலம்தான் மனுஷன் தேவனிடமிருந்து முழு இரட்சிப்பைப் பெறுகிறான், அவனுடைய ஜெபங்களுக்கு பதில் பரலோகத்திலிருந்து நேரடியாக வருவதில்லை. ஏனென்றால், மனுஷன் மாம்சமாகவும் இரத்தமாகவும் இருப்பதால், அவனுக்கு தேவனுடைய ஆவியானவரைக் காணவும் வழி இல்லை, அவருடைய ஆவியானவரை அணுகவும் முடியாது. மனுஷன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரே விஷயம் மாம்சமாகிய தேவன் மட்டும்தான், மேலும் இதன் மூலம் மட்டுமே மனுஷன் எல்லா வழிகளையும் எல்லா சத்தியங்களையும் புரிந்துகொண்டு முழு இரட்சிப்பைப் பெற முடியும். தேவன் இரண்டாவது முறை மாம்சமாவது மனுஷனின் பாவங்களை நீக்குவதற்கும் அவனை முழுமையாக சுத்திகரிப்பதற்கும் போதுமானதாக இருக்கும். ஆகையால், தேவன் இரண்டாவது முறை மாம்சமாவதுடன், மாம்சத்தில் தேவனின் முழுக் கிரியையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் முழுமையாக்கப்படும். இதன்மூலம், மாம்சத்தில் தேவனின் கிரியை முற்றிலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவன் இரண்டாவது முறையாக மாம்சமாகியதற்குப் பிறகு, அவர் தமது கிரியைக்காக மூன்றாவது முறையாக மாம்சமாக மாற மாட்டார். அவருடைய முழு நிர்வகித்தலும் முடிவுக்கு வந்திருக்கும். தேவனின் கடைசிக் காலத்திற்கான மாம்சம் அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களை முழுமையாகப் பெற்றிருக்கும், கடைசிக் காலத்தின் மனுஷத்தன்மை அனைத்தும் வகையின்படி வகைப்படுத்தப்படும். அவர் இனியும் இரட்சிப்பின் கிரியையைச் செய்யமாட்டார், எந்தக் கிரியையும் செய்ய மாம்சத்திற்குத் திரும்பமாட்டார். கடைசிக் காலத்தின் கிரியையில், வார்த்தையானது அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் வெளிப்பாட்டை விட வலிமையானது, மேலும் வார்த்தையின் அதிகாரம் அடையாளங்களையும் அதிசயங்களையும் விட அதிகமாக உள்ளது. வார்த்தையானது மனுஷனின் இருதயத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட அனைத்து சீர்கெட்ட மனநிலைகளையும் அம்பலப்படுத்துகிறது. நீயாகவே அவற்றைக் கண்டுணர உனக்கு வழி இல்லை. வார்த்தையின் மூலம் அவை உனக்கு முன் வெறுமனே வைக்கப்படும் போது, நீ இயல்பாகவே அவற்றைக் கண்டுபிடிப்பாய்; உன்னால் அவற்றை மறுக்க முடியாது, மேலும் நீ முற்றிலும் சமாதானம் அடைந்திருப்பாய். இது வார்த்தையின் அதிகாரம் அல்லவா? இன்றைய வார்த்தையின் கிரியையால் அடையப்பட்ட முடிவு இது. ஆகையால், நோயைக் குணப்படுத்துவதன் மூலமும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமும் மனுஷனை அவனது பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சிக்க முடியாது, மேலும் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமும் அவனை முழுமையாக பரிபூரணப்படுத்த முடியாது. நோயைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளை விரட்டுவதற்குமான அதிகாரம் மனுஷனுக்கு கிருபையை மட்டுமே தருகிறது, ஆனால் மனுஷனின் மாம்சம் இன்னும் சாத்தானுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது, மேலும் சீர்கெட்ட சாத்தானின் மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்திகரிக்கப்படாதவை இன்னும் பாவத்திற்கும் அசுத்தத்திற்கும் உரியதாகவே இருக்கின்றன. வார்த்தையின் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே அவனால் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிசுத்தமாக்கப்பட முடியும். பிசாசுகள் மனுஷனிடமிருந்து விரட்டப்பட்டு, அவன் மீட்கப்பட்டபோது, இதன் பொருள் அவன் சாத்தானின் பிடிகளிலிருந்து விலக்கப்பட்டு தேவனிடம் திரும்பினான் என்பதாகும். இருப்பினும், தேவனால் சுத்திகரிக்கப்படாமல் அல்லது மாற்றப்படாமல் இருந்தால் அவன் சீர்கெட்ட மனுஷனாகவே இருப்பான். மனுஷனுக்குள் இன்னும் அசுத்தம், எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மை ஆகியவை இருக்கின்றன; மனுஷன் தேவனுடைய மீட்பின் மூலமாக மட்டுமே அவரிடம் திரும்பியிருக்கிறான், ஆனால் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் இருப்பதில்லை, அவரை எதிர்க்கவும் துரோகம் செய்யவும் வல்லவனாகவே இருக்கிறான். மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாக்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும், சுத்திகரிக்கவும், நியாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தும் முழுமையாக அம்பலப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: “தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!” என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாகச் செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும். மனுஷன் கடந்த காலத்தில் இவ்வாறு கூச்சலிட்டான், ஏனென்றால் அவனுடைய இயல்பான சீர்கெட்ட மனநிலை பற்றி அவனுக்குப் புரிந்திருக்கவில்லை. இவை மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தங்கள். இவ்வளவு நீண்ட நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பு காலம் முழுவதும், மனுஷன் பதற்றமான சூழலில் வாழ்ந்தான். இந்த வார்த்தையின் மூலம் இவை அனைத்தும் அடையப்படவில்லையா? ஊழியம் செய்பவர்களுக்கான சோதனைக்கு முன்னர் நீ மிகவும் உரத்த குரலில் அழவில்லையா? “ராஜ்யத்தில் நுழையுங்கள்! இந்த நாமத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் ராஜ்யத்திற்குள் நுழைவார்கள்! அனைவரும் தேவனில் பங்கெடுப்பார்கள்!” ஊழியம் செய்பவர்களுக்கான சோதனை வந்தபோது, நீ கூக்குரலிடவில்லை. ஆதியில், “தேவனே! நீர் என்னை எங்கு வைத்தாலும், உம்மால் வழிநடத்தப்படுவதற்கு நான் கீழ்ப்படிவேன்,” என்று அனைவரும் கூக்குரலிட்டார்கள். “யார் எமக்கான பவுலாக இருக்க விரும்புவது?” என்ற தேவனின் வார்த்தைகளைப் படித்தவுடன், ஜனங்கள், “நான் தயாராக இருக்கிறேன்!” என்றனர். பின்னர் அவர்கள், “யோபுவின் விசுவாசத்தை யார் ஏற்றுக்கொள்வது?” என்ற வார்த்தைகளைக் கண்டார்கள். அதற்கு அவர்கள், “நான் யோபுவின் விசுவாசத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். தேவனே, தயவுசெய்து என்னைச் சோதனை செய்யும்!” என்றனர். ஊழியம் செய்பவர்களுக்கான சோதனை வந்தபோது, அவர்கள் ஒரே நேரத்தில் சரிந்துவிட்டார்கள், மீண்டும் எழுந்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் இருதயத்தில் உள்ள அசுத்தங்கள் படிப்படியாகக் குறைந்துவிட்டன. இது வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? ஆகவே, நீங்கள் இன்று அனுபவித்திருப்பது வார்த்தையின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் தான், இயேசுவின் அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் மூலம் அடைந்ததை விட இது பெரிதாக இருக்கிறது. நீ பார்க்கும் தேவனின் மகிமையும், நீ காணும் தேவனின் அதிகாரமும் சிலுவையில் அறையப்படுவதன் மூலமாக மட்டுமே இல்லாமல், நோயைக் குணப்படுத்துவதன் மூலமாகவும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமாகவும் காணப்படுகின்றன, ஆனால் அதைவிடவும் அவருடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மூலம்தான் காணப்படுகின்றன. தேவனின் அதிகாரமும் வல்லமையும், அடையாளங்களின் கிரியை, நோயைக் குணப்படுத்துதல் மற்றும் பிசாசுகளை விரட்டுதல் போன்றவற்றை மட்டுமே கொண்டிருக்கவில்லை என்பதை இது உனக்குக் காட்டுகிறது, ஆனால் தேவனுடைய வார்த்தையின் நியாயத்தீர்ப்பானது தேவனின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்த மற்றும் அவரது சர்வவல்லமையை வெளிப்படுத்த சிறந்ததாக இருப்பதை உனக்குக் காட்டுகிறது.

மனுஷன் இப்போது அடைந்திருப்பவை—அவனது தற்போதைய சரீர வளர்ச்சி, அறிவு, அன்பு, விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் நுண்ணறிவு—இவை வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஆகும். நீ விசுவாசத்தைக் கொண்டிருப்பதும், இந்த நாள் வரை தாக்குப்பிடித்திருப்பதும் வார்த்தையின் மூலமாகவே அடையப்பட்டிருக்கின்றன. மாம்சமாகிய தேவனின் கிரியை உண்மையில் அசாதாரணமானது என்பதையும், அதில் மனுஷனால் அடைய முடியாதவை நிறைய உள்ளன என்பதையும், அவை மறைபொருட்களும் அதிசயங்களும்தான் என்பதையும் இப்போது மனுஷன் காண்கிறான். எனவே, பலர் கீழ்ப்படிந்திருக்கின்றனர். சிலர் பிறந்ததிலிருந்து எந்தவொரு மனுஷனுக்கும் ஒருபோதும் கீழ்ப்படிந்ததில்லை, ஆனால் இந்த நாளில் தேவனின் வார்த்தைகளைக் காணும்போது, அவர்கள் அவ்வாறு செய்திருப்பதை அறியாமலேயே முழுமையாகக் கீழ்ப்படிகிறார்கள், மேலும் அவர்கள் வேறு எதையும் ஆராய்வதற்கோ அல்லது சொல்வதற்கோ துணிவதில்லை. மனுஷத்தன்மையானது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, வார்த்தையினுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறது. தேவனுடைய ஆவியானவர் மனுஷனிடம் நேரடியாகப் பேசியிருந்தால், மனுஷகுலம் அனைவரும் அந்தக் குரலுக்கு அடிபணிந்து, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் பவுல் தரையில் விழுந்த விதத்தில், வெளிப்படுத்தும் வார்த்தைகள் இல்லாமல் கீழே விழுந்துவிடுவார்கள். தேவன் இவ்வாறாக தொடர்ந்து கிரியை செய்தால், மனுஷன் ஒருபோதும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் தனது சொந்தச் சீர்கேட்டை அறிந்து கொள்ள முடியாது, அதன் மூலம் இரட்சிப்பையும் அடைய முடியாது. மாம்சமாக மாறுவதன் மூலம்தான் தேவன் ஒவ்வொரு மனுஷனுடைய செவிகளிலும் தனிப்பட்ட முறையில் தனது வார்த்தைகளைச் சொல்ல முடியும், இதனால் செவிகள் உள்ள அனைவருமே அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் பெற முடியும். மனுஷனை அடிபணியச் செய்ய ஆவியானவர் வெளிப்படுவதை விட, அவருடைய வார்த்தையால் அடையப்படும் விளைவு இதுதான். இந்த நடைமுறை மற்றும் அசாதாரணக் கிரியையின் மூலம்தான், மனுஷனின் பழைய மனநிலையை, பல ஆண்டுகளாக ஆழமாக மறைந்திருக்கும் மனநிலையை, முழுமையாக அம்பலப்படுத்த முடியும், இதனால் மனுஷன் அதை அடையாளம் கண்டு அதை மாற்றியமைக்க முடியும். இந்த விஷயங்கள் அனைத்தும் மாம்சமாகிய தேவனின் நடைமுறைக்கான கிரியைகளாகும், அதில், நியாயத்தீர்ப்பை ஒரு நடைமுறைக்கான முறையில் பேசுவது மற்றும் செயல்படுத்துவது ஆகிய முறைகளில், அவர் மனுஷனுக்கான நியாயத்தீர்ப்பின் முடிவுகளை வார்த்தையால் அடைகிறார். இதுவே மாம்சமாகிய தேவனின் அதிகாரம் மற்றும் தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவமும் ஆகும். மாம்சமாகிய தேவனின் அதிகாரத்தை அறிவதற்கும், வார்த்தையினுடைய கிரியையின் மூலம் பெறப்பட்ட முடிவுகளை அறிந்து கொள்வதற்கும், ஆவியானவர் மாம்சத்தில் வந்துள்ளார் என்பதையும், வார்த்தையால் மனுஷனை நியாயந்தீர்ப்பதன் மூலம் அவருடைய அதிகாரத்தை நிரூபிக்கிறார் என்பதைக் காட்டுவதற்கும் இது செய்யப்படுகிறது. அவருடைய மாம்சம் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மனுஷகுலத்தின் வெளிப்புற வடிவம்தான் என்றாலும், அவர் அதிகாரம் மிக்கவர் என்றும், அவரே தேவன் என்றும், அவருடைய வார்த்தைகள் தேவனின் வெளிப்பாடு என்றும் மனுஷனுக்கு காண்பிக்கும் அவருடைய வார்த்தைகள் அடையும் முடிவுகள்தான் அது. இதன் மூலம் மனுஷர் அனைவருக்கும் அவர்தான் தேவன் என்றும், அவர்தான் மாம்சமாக மாறியவர் என்றும், அவர் யாராலும் புண்படுத்தப்படக்கூடாது என்றும், அவருடைய நியாயத்தீர்ப்பை வார்த்தையால் யாராலும் மிஞ்ச முடியாது என்றும், அந்தகாரத்தின் எந்த சக்தியும் அவருடைய அதிகாரத்தைத் தாண்டி மேலோங்க முடியாது என்றும் காட்டப்பட்டுள்ளது. அவர்தான் மாம்சமாகிய வார்த்தை என்பதால், அவரது அதிகாரத்தினால், மற்றும் அவரது வார்த்தையின் நியாயத்தீர்ப்பினால் மனுஷன் அவருக்கு முழுக்க முழுக்கக் கீழ்ப்படிகிறான். அவருடைய மாம்சத்தால் கொண்டுவரப்பட்ட கிரியையே, அவர் வைத்திருக்கும் அதிகாரம் ஆகும். அவர் மாம்சமாகியதன் காரணம் என்னவென்றால், மாம்சத்திற்கும் அதிகாரம் இருக்க முடியும், மேலும் அவரால் மனுஷரிடையே ஒரு நடைமுறைக்குரிய முறையில் கிரியையைச் செய்ய முடியும், அதை மனுஷனுக்குத் தெரியும் வகையிலும் மற்றும் உறுதியான முறையிலும் செய்ய முடியும். எல்லா அதிகாரங்களையும் கொண்ட தேவனின் ஆவியால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையை விட இந்தக் கிரியை மிகவும் யதார்த்தமானது, மேலும் அதன் முடிவுகளும் தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், மாம்சமாகிய தேவனால் ஒரு நடைமுறைக்குரிய வழியில் பேசவும் கிரியை செய்யவும் முடியும். அவருடைய மாம்சத்தின் வெளிப்புற வடிவம் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை, மேலும் மனுஷனால் அதனை அணுக முடியும், அதேசமயம் அவருடைய சாராம்சமானது அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது, ஆனால் அவருடைய அதிகாரம் யாருக்கும் தெரிவதில்லை. அவர் பேசும் போதும், கிரியை செய்யும்போதும், மனுஷனால் அவரது அதிகாரத்தின் இருப்பைக் கண்டுபிடிக்க முடிவதில்லை; இது ஒரு நடைமுறைக்குரிய இயல்புடைய கிரியையை செய்வதற்கு அவருக்கு உதவுகிறது. இந்த நடைமுறைக்குரிய கிரியைகள் அனைத்தாலும் முடிவுகளை அடைய முடியும். எந்தவொரு மனுஷனும் அவரிடம் அதிகாரம் இருப்பதை உணருவதில்லை, அல்லது அவர் இடறலடையப்படக்கூடாதவர் என்பவர் என்பதை, அல்லது அவரது கடுங்கோபத்தைக் காண்கிறான் என்றாலும், அவர் மறைத்து வைத்திருக்கும் அதிகாரம், மறைக்கப்பட்ட கோபம் மற்றும் அவர் வெளிப்படையாகப் பேசும் வார்த்தைகள் ஆகியவற்றின் மூலம் அவன் வார்த்தைகளின் திட்டமிடப்பட்ட முடிவை அடைகிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவருடைய குரல், அவரது பேச்சின் கடினத்தன்மை மற்றும் அவரது வார்த்தைகளில் இருக்கும் அனைத்து ஞானத்தின் மூலமும் மனுஷன் முற்றிலும் சமாதானப்படுத்தப்படுகிறான். இவ்வாறாக, மனுஷன், மாம்சமாகிய தேவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறான், அவனுக்கு அதிகாரமே இல்லை, இதன் மூலம் மனுஷனை இரட்சிப்பதற்கான தேவனின் நோக்கம் நிறைவேற்றப்படுகிறது. இது அவர் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தின் மற்றொரு அம்சமாகும்: இன்னும் யதார்த்தமாக பேசுவதும், அவருடைய வார்த்தைகளின் யதார்த்தம் மனுஷனுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிப்பதும், இதன்மூலம் மனுஷனால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையைக் காணவும்கூடும். எனவே, இந்தக் கிரியை மாம்சமாகிய தேவன் மூலம் செய்யப்பட்டிருக்காவிட்டால், அது சிறிதளவு முடிவுகளைக் கூட அடைந்திருக்காது, மேலும் பாவம் நிறைந்த ஜனங்களை முழுமையாக இரட்சிக்கவும் முடிந்திருக்காது. தேவன் மாம்சமாகி இருக்காவிட்டால், அவர் மனுஷனின் கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவனால் தொட்டுணர முடியாத ஆவியானவராக இருந்திருப்பார். மனுஷன் மாம்சத்திலான சிருஷ்டியாக இருப்பதால், அவனும் தேவனும் இரண்டு வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்தவர்களாக, வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தாலான மனுஷனுடன் இணக்கமில்லாதவராக இருக்கிறார், மேலும் அவர்களுக்கிடையில் உறவுகளை ஏற்படுத்த எந்த வழியும் இல்லை. மனுஷனால் ஒரு ஆவியாக மாற இயலாது. இது அவ்வாறு இருப்பதால், தேவனுடைய ஆவியானவர் அவருடைய உண்மையான கிரியையைச் செய்ய ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக மாற வேண்டும். தேவனால் மிக உயர்ந்த இடத்திற்கு ஏறி, ஒரு மனுஷ ஜீவனாக மாறுவதற்கு தம்மைத் தாழ்த்திக் கொள்ள முடியும், மனுஷரிடையே கிரியை செய்து, அவர்கள் மத்தியில் வாழவும் முடியும், ஆனால் மனுஷனால் உயர்ந்த இடத்திற்கு ஏறி ஒரு ஆவியாக மாற முடியாது, மேலும் மிகவும் தாழ்ந்த இடத்திற்கு இறங்கவும் முடியாது. இதனால்தான் தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அதே அடையாளத்தின் மூலம், தேவன் முதல்முறை மாம்சமாகியபோது, மாம்சமாகிய தேவனின் மாம்சத்தால் மட்டுமே மனுஷனை மீட்டெடுக்க சிலுவையில் அறையப்பட முடியும், அதேசமயம் தேவனுடைய ஆவியானவர் மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக சிலுவையில் அறையப்படுவதற்கு எந்த வழியும் இருந்திருக்காது. மனுஷனுக்கான பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய தேவன் நேரடியாக மாம்சமாகியிருக்க முடியும், ஆனால் தேவன் தனக்காக ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பாவநிவாரணப்பலியை எடுக்க மனுஷனால் நேரடியாக வானத்திற்கு ஏற முடியாது. அப்படியானால், சாத்தியமானதெல்லாம், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் ஒரு சில முறை முன்னும் பின்னுமாக ஓடும்படி தேவனிடம் கேட்பது மட்டுமே, இந்த இரட்சிப்பை எடுக்க மனுஷன் வானத்திற்கு ஏற அல்ல, ஏனென்றால் மனுஷன் விழுந்துவிட்டான், மேலும், மனுஷனால் வெறுமனே வானத்திற்கு ஏற முடியாது, பாவநிவாரணப்பலியைப் பெறவும் முடியாது. ஆகையால், இயேசு மனுஷகுலத்தின் மத்தியில் வந்து மனுஷனால் வெறுமனே செய்ய முடியாத கிரியையை தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் தேவன் மாம்சமாக மாறும்போதும், அது முழுமையாக தேவையற்றதாக இருப்பதில்லை. எந்தவொரு கட்டமும் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், மாம்சமாகும் இழிநிலைக்கு அவர் கீழ்படிந்திருக்க மாட்டார்.

கிரியையின் இந்த இறுதிக் கட்டத்தில், வார்த்தையின் மூலம் முடிவுகள் அடையப்படுகின்றன. வார்த்தையின் மூலம், மனுஷன் பல மறைபொருட்களையும், கடந்த தலைமுறைகளில் தேவன் செய்த கிரியைகளையும் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் பரிசுத்த ஆவியானவரால் தெளிவு பெறுகிறான்; வார்த்தையின் மூலம், கடந்த தலைமுறையினரால் வெளிப்படுத்தப்படாத மறைபொருட்களையும், கடந்த கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் கிரியைகளையும், அவர்கள் கிரியை செய்த கொள்கைகளையும் மனுஷன் புரிந்துகொள்கிறான்; வார்த்தையின் மூலம், மனுஷன் தேவனின் மனநிலையையும், மனுஷனின் கலகத்தன்மையையும் எதிர்ப்பையும் புரிந்துகொள்கிறான், மேலும் அவன் தனது சாராம்சத்தையும் அறிந்துகொள்கிறான். கிரியையின் இந்தக் கட்டங்கள் மற்றும் பேசப்படும் எல்லா வார்த்தைகளின் மூலமும், மனுஷன் ஆவியானவரின் கிரியையையும், மாம்சமாகிய தேவன் செய்யும் கிரியையையும், அதற்கும் மேலாக, அவனுடைய முழு மனநிலையையும் அறிந்துகொள்கிறான். ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தேவனின் நிர்வாகக் கிரியை பற்றிய உனது அறிவும் வார்த்தையின் மூலம் பெறப்பட்டதுதான். உன் முந்தைய கருத்துகளின் அறிவும், அவற்றை ஒதுக்கி வைப்பதில் நீ பெற்ற வெற்றியும் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? முந்தைய கட்டத்தில், இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், ஆனால் இந்தக் கட்டத்தில் எந்த அடையாளங்களும் அதிசயங்களும் இல்லை. தேவன் ஏன் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்தவில்லை என்பதைப் பற்றிய உனது புரிதல் வார்த்தையின் மூலம் அடையப்படவில்லையா? எனவே, இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகள் கடந்த தலைமுறைகளின் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் செய்த கிரியைகளை மிஞ்சியதாக இருக்கின்றன. தீர்க்கதரிசிகள் சொன்ன தீர்க்கதரிசனங்களால் கூட இந்த முடிவை அடைய முடிந்திருக்காது. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களை மட்டுமே பேசினார்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தான் அவர்கள் பேசினார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவன் செய்ய விரும்பிய கிரியையைப் பற்றி பேசவில்லை. மனுஷரின் ஜீவிதங்களில் அவர்களை வழிநடத்தவோ, மனுஷகுலத்திற்கு சத்தியங்களை வழங்கவோ, அல்லது அவர்களுக்கு மறைபொருட்களை வெளிப்படுத்தவோ, ஜீவிதத்தை வழங்கவோ பேசவில்லை. இந்தக் கட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளில், தீர்க்கதரிசனமும் சத்தியமும் இருக்கின்றன, ஆனால் முக்கியமாக இந்த வார்த்தைகள் மனுஷனுக்கு ஜீவனை வழங்க உதவுகின்றன. தற்போதுள்ள வார்த்தைகள் தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களைப் போலல்லாதவை. இது மனுஷனின் ஜீவித மனநிலையை மாற்றுவதற்கான மனுஷனின் ஜீவிதத்திற்கான கிரியையின் ஒரு கட்டமாகும், தீர்க்கதரிசனம் பேசுவதற்காக அல்ல. முதல் கட்டம் யேகோவாவின் கிரியையாக இருந்தது: பூமியில் தேவனை வணங்க மனுஷனுக்கான ஒரு பாதையை உருவாக்குவதே அவருடைய கிரியையாக இருந்தது. பூமியில் கிரியை செய்யத் தொடங்க ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும் ஒரு தொடக்க கிரியையாக அது இருந்தது. அந்த நேரத்தில், யேகோவா இஸ்ரவேலருக்கு ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவும், பெற்றோருக்கு மரியாதை கொடுக்கவும், ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் ஜீவித்திருக்கவும் போதித்தார். ஏனென்றால், அந்தக் கால ஜனங்களுக்கு மனுஷன் எவற்றால் உருவானவன் என்று புரியவில்லை, பூமியில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. மனுஷகுலத்தை அவர்களது ஜீவிதங்களை வழிநடத்துவதற்கு வழிகாட்டுவதே கிரியையின் முதல் கட்டத்தில் தேவனுக்கு அவசியமாக இருந்தது. யேகோவா அவர்களிடம் பேசியதெல்லாம் முன்பு மனுஷகுலத்திற்குத் தெரிந்திருக்கவில்லை அல்லது அவர்கள் வசம் இருந்ததில்லை. அந்த நேரத்தில், தேவன் தீர்க்கதரிசனங்களைப் பேச பல தீர்க்கதரிசிகளை எழுப்பினார், அவர்கள் அனைவரும் யேகோவாவின் வழிகாட்டுதலின் கீழ் அவ்வாறு செய்தனர். இது தேவனுடைய கிரியையில் ஒரு சிறிய விஷயமாக மட்டுமே இருந்தது. முதல் கட்டத்தில், தேவன் மாம்சமாகவில்லை, எனவே அவர் எல்லா கோத்திரங்களுக்கும் தேசங்களுக்கும் தீர்க்கதரிசிகள் மூலம் அறிவுறுத்தினார். இயேசு தம்முடைய காலத்தில் கிரியை செய்தபோது, இன்றைய நாளில் பேசுவது போல் அவர் அப்போது பேசவில்லை. கடைசிக் காலத்தினுடைய வார்த்தையின் கிரியையின் இந்தக் கட்டம் இதற்கு முன்பிருந்த யுகங்களிலும் தலைமுறைகளிலும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஏசாயா, தானியேல் மற்றும் யோவான் ஆகியோர் பல தீர்க்கதரிசனங்களைப் பேசியிருந்தாலும், அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் இப்போது பேசப்படும் வார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. அவர்கள் பேசியது தீர்க்கதரிசனங்கள் மட்டுமே, ஆனால் இப்போது பேசப்படும் வார்த்தைகள் அப்படியாக இல்லை. நான் இப்போது பேசும் அனைத்தையும் தீர்க்கதரிசனங்களாக மாற்றினால், உங்களால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியுமா? நான் பேசியது நான் சென்றபின் நடக்கும் விஷயங்களைப் பற்றியது என்று வைத்துக் கொண்டால், உங்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? வார்த்தையின் கிரியை இயேசுவின் காலத்திலோ அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்திலோ ஒருபோதும் செய்யப்படவில்லை. ஒருவேளை சிலர், “யேகோவா தம்முடைய கிரியையின் போதும் வார்த்தைகளை பேசவில்லையா? இயேசு நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது மற்றும் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்ததைத் தவிர, அவர் கிரியை செய்துகொண்டிருந்த நேரத்திலும் வார்த்தைகளைப் பேசவில்லையா?” என்று கூறுவர். பேசப்படும் வார்த்தைகளுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. யேகோவா சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் என்ன? ஜீவிதத்தில் ஆவிக்குரிய விஷயங்களைத் தொடாத பூமியில் மனுஷர் அவர்களது ஜீவிதங்களை ஜீவித்திருக்க மட்டுமே அவர் வழிநடத்தினார். யேகோவா பேசியபோது, எல்லா இடங்களைச் சேர்ந்த ஜனங்களுக்கும் அறிவுறுத்தவே அவர் பேசினார் என்று ஏன் கூறப்படுகிறது? “அறிவுறுத்தல்” என்ற சொல்லுக்கு வெளிப்படையாகச் சொல்வதும் நேரடியாகக் கட்டளையிடுவதும் என்று அர்த்தம் ஆகும். அவர் மனுஷனுக்கு ஜீவிதத்தை வழங்கவில்லை; மாறாக, அவர் வெறுமனே மனுஷனைக் கையால் எடுத்து, அதிக உவமைகளை பயன்படுத்தாமல், தம்மை எவ்வாறு வணங்குவது என்று மனுஷனுக்குப் போதித்தார். இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியை மனுஷனைக் கையாள்வது அல்லது அவனை ஒழுங்குபடுத்துவது அல்லது அவனுக்கு ஆக்கினை நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் வழங்குவதற்காக செய்யப்பட்டதல்ல, அது அவனுக்கு வழிகாட்டவே செய்யப்பட்டதாகும். வனாந்தரத்தில் மன்னாவைப் பொறுக்கும்படி தம் ஜனங்களிடம் சொல்லும்படி யேகோவா மோசேக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு காலையிலும் சூரிய உதயத்திற்கு முன்பு, அந்த நாளுக்குத் தேவையான அளவிற்கு அவர்கள் மன்னாவைப் பொறுக்குவார்கள். மன்னாவை மறுநாள் வரை வைத்திருக்க முடியாது, ஏனெனில் அது பூசணம் பிடித்துவிடும். அவர் ஜனங்களுக்கு சொற்பொழிவு ஆற்றவில்லை அல்லது அவர்களின் சுபாவங்களையும் அம்பலப்படுத்தவில்லை, மேலும் அவர்களுடைய கருத்துகளையும் எண்ணங்களையும் அவர் வெளிப்படுத்தவில்லை. அவர் ஜனங்களை மாற்றவில்லை, மாறாக அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்த அவர்களுக்கு வழிகாட்டினார். அக்கால ஜனங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள், எதையும் புரிந்து கொள்ளாதவர்களாகவும் ஆனால் சில அடிப்படை இயந்திரத்தனமான இயக்கங்களை மட்டுமே புரிந்துகொள்பவர்களாகவும் இருந்தனர், ஆகவே, யேகோவா பெருந்திரளான ஜனங்களுக்கு வழிகாட்டும் நியாயப்பிரமாணங்களை மட்டுமே கட்டளையிட்டார்.

சுவிசேஷத்தைப் பரப்புவதற்காக, இதன்மூலம் உண்மையான இருதயத்துடன் தேடுபவர்கள் அனைவரும் இந்த நாளில் செய்த கிரியை பற்றிய அறிவைப் பெற்று முழுமையாக நம்புவார்கள் என்பதற்காக, நீ ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்படும் கிரியையின் உள்ளார்ந்த கதை, சாராம்சம் மற்றும் முக்கியத்துவம் பற்றிய தெளிவான புரிதலுக்கு வர வேண்டும். உன் அந்நியோந்நியத்தைக் கேட்பதன் மூலம், மற்றவர்கள் யேகோவாவின் கிரியையையும், இயேசுவின் கிரியையையும், அதற்கும் மேலாக, இன்றைய தேவனின் எல்லா கிரியைகளையும், அத்துடன் கிரியையின் மூன்று கட்டங்களிடையே இருக்கும் தொடர்புகள் மற்றும் வேறுபாடுகளை புரிந்துகொள்ளும்படி செய். அவர்கள் அதைக் கேட்டவுடன், அந்த மூன்று கட்டங்களும் ஒன்றையொன்று சீர்குலைக்கவில்லை, ஆனால் அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை அவர்கள் காணும்படி செய். அவர்கள் வெவ்வேறு யுகங்களில் கிரியை செய்தாலும், அவர்கள் மேற்கொள்ளும் கிரியையின் உள்ளடக்கம் வேறுபட்டவை, அவர்கள் பேசும் வார்த்தைகள் வேறுபட்டவை, ஆனாலும் அவர்கள் கிரியை செய்யும் கொள்கைகள் ஒன்றுதான். இந்த காரியங்கள்தான் தேவனைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய மிகப் பெரிய தரிசனங்களாகும்.

முந்தைய: மாம்சமாகியதன் மறைபொருள் (3)

அடுத்த: அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக