தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)

மனந்திரும்புதலுக்கான சுவிசேஷம் கிருபையின் யுகத்தில் பிரசங்கிக்கப்பட்டது, மனுஷன் விசுவாசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். இன்று, இரட்சிப்பிற்குப் பதிலாக, ஜெயங்கொள்ளுதல் மற்றும் பரிபூரணமாக்குதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே இருக்கின்றன. ஒருவன் விசுவாசித்தால், அவனது முழுக் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும் என்றோ, அல்லது ஒரு முறை இரட்சிக்கப்பட்டால் எப்போதும் இரட்சிக்கப்படுவான் என்றோ ஒருபோதும் கூறப்படவில்லை. இன்று, இந்த வார்த்தைகளை யாரும் பேசுவதில்லை, இதுபோன்ற விஷயங்கள் காலாவதியாகிவிட்டன. அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியதிருந்தது. இரட்சிப்பு என்பதற்கு மனுஷன் இயேசுவினால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டான் என்று அர்த்தமல்ல, ஆனால் அந்த மனுஷனிடம் இனி பாவமில்லை என்றும், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமாகிறது. நீ விசுவாசித்தால், இனி நீ ஒருபோதும் பாவம் செய்தவனாக இருக்கமாட்டாய். அந்த நேரத்தில், இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார், ஜனங்களுக்குப் புரியாத பலவற்றை அதிகம் கூறினார். ஏனென்றால், அந்த நேரத்தில் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, அவர் புறப்பட்டுச் சென்ற பல ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தேயு இயேசுவுக்கு ஒரு வம்ச அட்டவணையை உருவாக்கினார், மற்றவர்களும் மனுஷனின் சித்தத்திற்கு ஏற்ற பல கிரியைகளைச் செய்தனர். இயேசு மனுஷனைப் பரிபூரணமாக்கவும், அவனை ஆதாயப்படுத்தவும் வரவில்லை, ஆனால் கிரியையின் ஒரு கட்டத்தைச் செய்ய வந்தார், அவை: பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கொண்டு வருவதும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிப்பதும் ஆகும். ஆகவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டவுடன், அவருடைய கிரியை முழுமையாக முடிவுக்கு வந்தது. ஆனால் தற்போதைய கட்டத்தில்—ஜெயங்கொள்வதற்கான கிரியையில்—அதிக வார்த்தைகள் பேசப்பட வேண்டும், அதிகக் கிரியைகள் செய்யப்பட வேண்டும் மற்றும் பல செயல்முறைகளும் இருக்க வேண்டும். ஆக இயேசு மற்றும் யேகோவாவின் கிரியையின் மறைபொருட்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், இதன்மூலம் எல்லா ஜனங்களும் தங்கள் விசுவாசத்தில் புரிதலும் தெளிவும் பெறுவர். ஏனென்றால் இது கடைசிக் காலத்தின் கிரியை, கடைசிக் காலம் என்பது தேவனுடைய கிரியையின் முடிவு, கிரியை முடிவடையும் நேரம். கிரியையின் இந்தக் கட்டம் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் மீட்பையும் உனக்குத் தெளிவுபடுத்துகிறது, மேலும் இது தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் முழு கிரியையையும் நீ புரிந்துகொள்வதற்கும், இதன் அனைத்து முக்கியத்துவத்தையும் சாராம்சத்தையும் புரிந்துகொள்ளவும் உனக்கு உதவுகிறது. அதுமட்டுமன்றி, இயேசு செய்த அனைத்துக் கிரியைகளின் நோக்கத்தையும் அவர் பேசிய வார்த்தைகளையும் நீ புரிந்து கொள்ளவும், மேலும் வேதாகமத்தின் மீதுள்ள உன் குருட்டு விசுவாசத்தையும் வணக்கத்தையும் புரிந்து கொள்ளவும் இந்தக் கிரியை உதவுகிறது. இவை அனைத்தையும் நீ முழுமையாகப் புரிந்துகொள்ள இது உனக்கு உதவும். இயேசு செய்த கிரியையையும், தேவனின் இன்றைய கிரியையையும் நீ புரிந்துகொள்வாய்; சத்தியம், ஜீவன் மற்றும் வழி ஆகிய அனைத்தையும் நீ புரிந்துகொள்வாய் மற்றும் காண்பாய். இயேசு செய்த கிரியையின் கட்டத்தில், முடித்துவைப்பதற்கான கிரியையைச் செய்யாமல் இயேசு ஏன் புறப்பட்டுச் சென்றார்? ஏனென்றால், இயேசுவினுடைய கிரியையின் கட்டம் முடித்துவைப்பதற்கான கிரியை அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வார்த்தைகளும் முடிவுக்கு வந்தன; அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவருடைய கிரியை முழுமையாக நிறைவுபெற்றது. தற்போதைய கட்டம் வேறுபட்டது: வார்த்தைகள் இறுதிவரை பேசப்பட்டு, தேவனின் கிரியை முழுவதும் முடிந்த பின்னரே அவருடைய கிரியை நிறைவுபெறும். இயேசுவினுடைய கிரியையின் போது, பல வார்த்தைகள் சொல்லப்படாமல் இருந்தன, அல்லது அவை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும், இயேசு அவர் என்ன செய்தார் அல்லது எதைச் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவருடைய ஊழியம் வார்த்தைகளின் ஊழியம் அல்ல, ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். கிரியையின் அந்தக் கட்டம் முக்கியமாக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இருந்தது, அது தற்போதைய கட்டத்தைப் போன்றது அல்ல. கிரியையின் தற்போதைய கட்டமானது நிறைவு செய்வதற்கும், சுத்திகரிப்பதற்கும், மற்றும் அனைத்துக் கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வார்த்தைகள் அவற்றின் இறுதிவரை பேசப்படாவிட்டால், இந்தக் கிரியையை முடிக்க எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டத்தில் அனைத்துக் கிரியைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், இயேசு மனுஷனுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார். அவர் அமைதியாகப் புறப்பட்டுச் சென்றார், இன்றும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்களது புரிதல் பிழையானது, ஆனால் அது சரியானதுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், தவறு செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முடிவில், இறுதிக் கட்டம் தேவனின் கிரியையை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் அதன் நிறைவையும் வழங்கும். தேவனின் ஆளுகைத் திட்டத்தை அனைவரும் புரிந்துகொண்டு அறிந்து கொள்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் கருத்துக்கள், அவனுடைய நோக்கங்கள், தவறான மற்றும் மூடத்தனமான புரிதல், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய அவனது கருத்துக்கள், புறஜாதியாரைப் பற்றிய அவனது கருத்துக்கள் மற்றும் அவனது பிற விலகிச் செல்லுதல்கள் மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும். மனுஷன், ஜீவிதத்தின் சரியான பாதைகள் அனைத்தையும், தேவனால் செய்யப்பட்ட எல்லாக் கிரியைகளையும், முழு சத்தியத்தையும் புரிந்துகொள்வான். அது நிகழும்போது, கிரியையின் இந்தக் கட்டம் நிறைவுக்கு வரும். உலகத்தைப் படைப்பது யேகோவாவின் கிரியையாக இருந்தது, அது ஆதியாக இருந்தது; கிரியையின் இந்தக் கட்டமானது கிரியையின் முடிவாகவும், இதுவே இறுதியானதாகவும் இருக்கிறது. ஆரம்பத்தில், தேவனின் கிரியை இஸ்ரவேலின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது, மேலும் அது எல்லா இடங்களிலும் மிகவும் பரிசுத்தமான ஒரு புதிய யுகத்தின் விடியலாக இருந்தது. உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கும், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அனைத்துத் தேசங்களிலும் மிகவும் தூய்மையற்ற நிலையில் கடைசிக் கட்டக் கிரியைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் கட்டத்தில், தேவனின் கிரியை எல்லா இடங்களைக் காட்டிலும் பிரகாசமான இடத்தில் மேற்கொள்ளப்பட்டது, கடைசிக் கட்டத்தில் எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமான இடத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் இந்த அந்தகாரம் வெளியேற்றப்படும், வெளிச்சம் உள்ளே கொண்டுவரப்படும், ஜனங்கள் அனைவரும் ஜெயங்கொள்ளப்படுவர். எல்லா இடங்களைக் காட்டிலும் மிகவும் தூய்மையற்ற மற்றும் அந்தகார இடத்தைச் சேர்ந்த இந்த ஜனங்கள் ஜெயங்கொள்ளப்பட்டதும், மெய்யான தேவன் என்று ஒரு தேவன் இருக்கிறார் என்பதை ஜனங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டதும், ஒவ்வொருவரும் முற்றிலும் நம்பியதும், ஜெயங்கொள்ளுவதற்கான கிரியையை பிரபஞ்சம் முழுவதும் செயல்படுத்த இந்த உண்மை பயன்படுத்தப்படும். கிரியையின் இந்தக் கட்டம் ஒரு அடையாளமாகும்: இந்த யுகத்தின் கிரியைகள் முடிந்ததும், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகையின் கிரியை முழுமையாக நிறைவுபெறும். எல்லா இடங்களைக் காட்டிலும் அந்தகாரமாக இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன், அது மற்ற எல்லா இடங்களிலும் இருக்கும் என்று சொல்லாமல் போகிறது. எனவே, ஜெயங்கொள்ளப்படுவதற்கான கிரியை சீனாவில் மட்டுமே அர்த்தமுள்ள அடையாளத்தைக் கொண்டுள்ளது. சீனா அந்தகாரத்தின் அனைத்து வல்லமைகளையும் உள்ளடக்குகிறது, மேலும் சீன ஜனங்கள் சாத்தானின் மாம்சமாக இருப்பவர்களையும், மாம்சமும் இரத்தமுமாக இருக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் மிகவும் சீர்கெட்டுப்போன சீன ஜனங்கள்தான், தேவனுக்கு எதிரான வலுவான எதிர்ப்பைக் கொண்டுள்ளனர், அவர்களின் மனுஷத்தன்மை மிகவும் கீழ்த்தரமானது மற்றும் தூய்மையற்றது, எனவே அவர்கள்தான் சீர்கெட்டுப்போன முழு மனுஷகுலத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இதனால் மற்ற தேசங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியாது; மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை, இந்தத் தேசங்களின் ஜனங்கள் நல்ல திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேவனை அறியாவிட்டால், அவர்கள் அவரை எதிர்ப்பதாகவே இருக்கக் கூடும். யூதர்களும் எதற்காக தேவனை எதிர்த்தார்கள், எதற்காக அவரை மீறினார்கள்? பரிசேயர்களும் ஏன் அவரை எதிர்த்தார்கள்? யூதாஸ் ஏன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்? அந்த நேரத்தில், சீஷர்களில் பலருக்கு இயேசுவை தெரியாது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்த பின்பும் ஜனங்கள் ஏன் அவரை நம்பவில்லை? மனுஷனின் கீழ்ப்படியாமை அனைத்தும் ஒன்றுபோல் இல்லையா? சீன ஜனங்கள் எடுத்துக்காட்டுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் ஜெயங்கொள்ளப்படும்போது, மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் மாறுகிறார்கள், மேலும் மற்றவர்களுக்கான சான்றாதாரங்களாக இருப்பார்கள். எனது ஆளுகைத் திட்டத்திற்கு நீங்கள் ஒரு துணைப்பொருள் என்று நான் ஏன் எப்போதும் கூறிவந்தேன்? சீர்கேடு, தூய்மையற்ற தன்மை, அநீதி, எதிர்ப்பு, கலகம் ஆகியவை சீன ஜனங்களில் தான் முழுமையாக வெளிக்காட்டப்பட்டு அவற்றின் அனைத்து மாறுபட்ட வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒருபுறம், அவர்கள் மோசமான திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர், மறுபுறம், அவர்களின் ஜீவிதங்களும் மனநிலையும் பின்தங்கியவையாக இருக்கின்றன, மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள், சமூகச் சூழல், பிறந்த குடும்பம் அனைத்துமே மோசமாக மற்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. அவர்களின் அந்தஸ்தும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இடத்திலுள்ள கிரியை அடையாளமாக இருக்கிறது, மேலும் இந்தச் சோதனைக் கிரியை முழுவதுமாக மேற்கொள்ளப்பட்ட பின்னர், தேவனின் அடுத்தடுத்தக் கிரியைகள் மிகச் சிறப்பாகச் செயல்படும். கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடைந்தால், அடுத்தடுத்தக் கிரியைகள் எளிதாக இருக்கும். கிரியையின் இந்தக் கட்டம் முடிந்தவுடன், மகத்தான ஜெயம் முழுமையாகக் கிடைக்கும், மேலும் பிரபஞ்சம் முழுவதிலும் ஜெயங்கொள்வதற்கான கிரியை முழுமையான முடிவுக்கு வந்திருக்கும். உண்மையில், கிரியை உங்களிடையே வெற்றிகரமாக முடிந்ததும், இது பிரபஞ்சம் முழுவதும் ஜெயம் பெற்றதற்குச் சமமாக இருக்கும். நான் ஏன் உங்களை மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் செயல்படுத்துகிறேன் என்பதன் முக்கியத்துவம் இதுதான். கலகத்தன்மை, எதிர்ப்பு, தூய்மையற்ற தன்மை, அநீதி ஆகிய இவை அனைத்தும் இந்த ஜனங்களிடையே காணப்படுகின்றன, அவர்களில் மனுஷகுலத்தின் கலகத்தன்மை முழுவதும் குறித்துக்காட்டுகின்றன. அவர்களுக்குள் ஏதோவொன்று இருக்கிறது. இவ்வாறு, அவர்கள் ஜெயங்கொள்ளுதலின் மாதிரியாகக் கருதப்படுகின்றனர், மேலும் அவர்கள் ஜெயங்கொள்ளப்பட்டவுடன் அவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுக்கு மாதிரிகளாகவும், விளக்கமாதிரிகளாகவும் மாறுவார்கள். இஸ்ரவேலில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டத்தை விட வேறு எதுவும் அடையாளப்படுத்துவதாக இல்லை: இஸ்ரவேலர்கள் எல்லா ஜனங்களை விடவும் மிகவும் பரிசுத்தமானவர்களாகவும், குறைவாக சீர்கெட்டவர்களாகவும் இருந்தனர், எனவே இந்தத் தேசத்தில் புதிய யுகத்தின் விடியல் மிக முக்கியமானதாக இருந்தது. மனுஷகுலத்தின் முன்னோர்கள் இஸ்ரவேலில் இருந்து வந்தவர்கள் என்றும், இஸ்ரவேல் தேவனுடைய கிரியையின் பிறப்பிடம் என்றும் கூறலாம். ஆரம்பத்தில், இந்த ஜனங்கள் மிகவும் பரிசுத்தமானவர்களாக இருந்தனர், இவர்கள் அனைவரும் யேகோவாவை வணங்கினர், இவர்களிடத்தில் தேவனின் கிரியையால் மிகச் சிறந்த பலனைக் கொடுக்க முடிந்தது. வேதாகமம் முழுவதும் இரண்டு யுகங்களின் கிரியையைப் பதிவுசெய்கிறது: ஒன்று, நியாயப்பிரமாணங்களின் யுகத்தின் கிரியை, மற்றொன்று கிருபையின் யுகத்தின் கிரியை. பழைய ஏற்பாடு, இஸ்ரவேலருக்கு யேகோவா சொன்ன வார்த்தைகளையும், இஸ்ரவேலில் அவர் செய்த கிரியைகளையும் பதிவு செய்கிறது; யூதேயாவில் செயல்படுத்தப்பட்ட இயேசுவின் கிரியைகளைப் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது. ஆனால் வேதாகமத்தில் ஏன் எந்த சீனப் பெயர்களும் இல்லை? ஏனென்றால், தேவனுடைய கிரியைகளின் முதல் இரண்டு பகுதிகள் இஸ்ரவேலில் மேற்கொள்ளப்பட்டன, ஏனென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருந்தனர்—அதாவது யேகோவாவின் கிரியையை முதலில் ஏற்றுக்கொண்டார்கள் அவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் எல்லா மனுஷரை விடவும் மிகக் குறைவாக சீர்கெட்டவர்களாக இருந்தனர், ஆதியில், தேவனைப் பார்த்து அவரைப் போற்றும் மனம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் யேகோவாவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, எப்போதும் ஆலயத்தில் ஊழியம் செய்தார்கள், ஆசாரிய உடைகள் அல்லது கிரீடங்களை அணிந்தார்கள். தேவனை வணங்கிய ஆரம்பகால ஜனங்களும், அவருடைய கிரியையின் ஆரம்பகால இலக்குகளும் அவர்களாகவே இருந்தனர். இந்த ஜனங்கள் மனுஷகுலம் முழுவதற்கும் மாதிரிகளாகவும் விளக்கமாதிரிகளாகவும் இருந்தனர். இவர்கள் பரிசுத்தத்தன்மை மற்றும் நீதிமான்களின் மாதிரிகளாகவும் மற்றும் விளக்கமாதிரிகளாகவும் இருந்தனர். யோபு, ஆபிரகாம், லோத்து, அல்லது பேதுரு, தீமோத்தேயு போன்றவர்கள் அனைவரும் இஸ்ரவேலர்கள், மேலும் மாதிரிகள் மற்றும் விளக்கமாதிரிகளிலேயே இவர்கள்தான் மிகவும் பரிசுத்தமானவர்கள். மனுஷரிடையே தேவனை வணங்கிய ஆரம்பகால தேசம் இஸ்ரவேல்தான், மேலும் வேறு எங்கிருந்தும் விட நீதியுள்ளவர்கள் இங்கிருந்து தான் வந்தார்கள். எதிர்காலத்தில் தேசங்கள் முழுவதும் மனுஷகுலத்தைச் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக தேவன் இவர்களிடத்தில் கிரியை செய்தார். கிருபையின் யுகத்தின் போது இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட ஜனங்களுக்கு இவர்கள் மாதிரிகளாகவும் மற்றும் விளக்கமாதிரிகளாகவும் ஊழியம் செய்ய இவர்கள் செய்த சாதனைகளும், யேகோவாவை தொழுதுகொள்வதில் இவர்களுடைய நீதியான செயல்களும் பதிவு செய்யப்பட்டன; இவர்களின் செய்கைகள் பல ஆயிரம் ஆண்டுகாலக் கிரியைகளை இன்று வரை உறுதிப்படுத்தியுள்ளன.

உலகத்தை சிருஷ்டித்தப் பிறகு, தேவனுடைய கிரியையின் முதல் கட்டம் இஸ்ரவேலில் மேற்கொள்ளப்பட்டது, இதனால் இஸ்ரவேல், பூமியில் தேவனுடைய கிரியையின் பிறப்பிடமாகவும், பூமியில் தேவனுடைய கிரியையின் அஸ்திபாரமாகவும் இருந்தது. இயேசுவினுடைய கிரியையின் எல்லை யூதேயா முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவருடைய கிரியையின் போது, யூதேயாவுக்கு வெளியே இருந்தவர்களில் மிகச் சிலரே அதை அறிந்திருந்தார்கள், ஏனென்றால் அவர் யூதேயாவுக்கு அப்பால் எந்தக் கிரியையும் செய்திருக்கவில்லை. இன்று, தேவனின் கிரியை சீனாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, அது முற்றிலும் இந்த எல்லைக்குள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கட்டத்தில், சீனாவுக்கு வெளியே எந்தக் கிரியையும் தொடங்கப்படவில்லை; சீனாவுக்கு அப்பால் அதன் பரவல் பின்னர் வரும் கிரியையில் இருக்கிறது. கிரியையின் இந்தக் கட்டம் இயேசுவினுடைய கிரியையின் கட்டத்திலிருந்து தொடர்கிறது. மீட்பிற்கான கிரியையை இயேசு செய்தார், இந்தக் கட்டம் அந்தக் கிரியையிலிருந்து தொடரும் கிரியை ஆகும்; மீட்பிற்கான கிரியை நிறைவடைந்துள்ளது, மேலும் இந்தக் கட்டத்தில் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டம், முந்தையக் கட்டத்தைப் போலில்லை, மேலும், சீனா இஸ்ரவேலைப் போலும் இல்லை. இயேசு ஒரு கட்ட மீட்பின் கிரியையைச் செய்தார். மனுஷன் இயேசுவைப் பார்த்தான், சிறிது காலத்திற்குப் பிறகு, அவருடைய கிரியை புறஜாதியினருக்கும் பரவ ஆரம்பித்தது. இன்று, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தேவனை விசுவாசிப்பவர்கள் அநேகர் உள்ளனர், ஆனால் சீனாவில் மட்டும் ஏன் விசுவாசிக்கும் ஜனங்கள் குறைவாக உள்ளனர்? ஏனெனில் சீனா மிகவும் தனிமையான தேசம். எனவே, சீனா தேவனின் வழியைக் கடைசியாகத்தான் ஏற்றுக்கொண்டது, இப்போதுகூட அது ஏற்றுக்கொண்டு நூறு ஆண்டுகள்கூட ஆகவில்லை—அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை விட மிகவும் தாமதமாகத்தான் சீனா ஏற்றுக்கொண்டது. தேவனுடைய கிரியையின் கடைசிக் கட்டம் சீன தேசத்தில் அவரது கிரியையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், அவருடைய எல்லா கிரியைகளும் நிறைவேற்றப்படவும் மேற்கொள்ளப்படுகிறது. இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள் அனைவரும் யேகோவாவை தங்கள் கர்த்தர் என்று அழைத்தனர். அந்த நேரத்தில், அவர்கள் அவரைத் தங்கள் குடும்பத்தின் தலைவராகக் கருதினார்கள், மேலும் இஸ்ரவேல் முழுவதும் ஒரு பெரிய குடும்பமாக மாறியது, அதில் எல்லோரும் தங்கள் கர்த்தராகிய யேகோவாவை வணங்கினர். யேகோவாவின் ஆவி அவர்களுக்கு முன் அடிக்கடி தோன்றியது, அவர் பேசினார், அவருடைய குரலை அவர்களைக் கேட்க வைத்தார், மேகத்தையும் ஒலியையும் தூணாகப் பயன்படுத்தி அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்தினார். அந்த நேரத்தில், ஆவியானவர் இஸ்ரவேலில் நேரடியாகத் தன் வழிகாட்டலை வழங்கினார், ஜனங்களிடம் அவருடைய குரலில் பேசினார், அவர்கள் மேகங்களைக் கண்டார்கள், இடியின் முழக்கத்தைக் கேட்டார்கள், இந்த வழியில் அவர் பல ஆயிரம் ஆண்டுகள் அவர்களின் ஜீவிதங்களை வழிநடத்தினார். இவ்வாறு, இஸ்ரவேல் ஜனங்கள் மட்டுமே எப்போதும் யேகோவாவை வணங்குகிறார்கள். யேகோவாதான் தங்களுடைய தேவன் என்றும், அவர் புறஜாதியினரின் தேவன் அல்ல என்றும் அவர்கள் விசுவாசிக்கிறார்கள். இது ஆச்சரியமல்ல: எல்லாவற்றிற்கும் மேலாக, யேகோவா அவர்களிடையே சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்குக் கிரியை செய்தார். சீன தேசத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகால மந்தமான நித்திரைக்குப் பிறகு, வானங்களும், பூமியும், சகலமும் இயற்கையாகவே உருவாக்கப்படவில்லை, ஆனால் சிருஷ்டிகரால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதை இப்போதுதான் சீர்கெட்டுப்போனவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த சுவிசேஷம் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால், நிலப்பிரபுத்துவ மற்றும் பிற்போக்குத்தனமான மனங்கொண்டவர்கள், இந்த சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று நம்புகிறார்கள், அவர்கள் தங்கள் மூதாதையரான புத்தருக்கு துரோகம் இழைத்த சாபக்கேடானவர்கள் ஆவர். மேலும், இந்த நிலப்பிரபுத்துவ மனங்கொண்டவர்கள் அநேகர், “சீன ஜனங்கள் எவ்வாறு வெளிநாட்டினரின் தேவனை நம்ப முடியும்? அவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு துரோகம் இழைக்கவில்லையா? அவர்கள் தீமை செய்யவில்லையா?” என்று கேட்கிறார்கள். இன்று, யேகோவாதான் தங்களது தேவன் என்பதை ஜனங்கள் நீண்ட காலமாக மறந்துவிட்டிருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக சிருஷ்டிகரை தங்கள் மனதின் பின்னால் புறந்தள்ளியிருக்கின்றனர், அதற்குப் பதிலாக அவர்கள் பரிணாம வளர்ச்சியை நம்புகிறார்கள், அதாவது மனுஷன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்றும், மற்றும் இயற்கையான உலகம் நிச்சயமாக ஒரு பருப்பொருளில் இருந்து வந்தது என்றும் நம்புகிறார்கள். மனுஷகுலம் அனுபவிக்கும் அனைத்து நல்ல உணவுகளும் இயற்கையால் வழங்கப்படுகின்றன, மனுஷனின் வாழ்வுக்கும் சாவுக்கும் ஒழுங்கு இருக்கிறது, மேலும் அதையெல்லாம் ஆளக்கூடிய ஒரு தேவன் என்பவர் இல்லை. மேலும், தேவன் எல்லாவற்றையும் ஆளுவது மூடநம்பிக்கை என்றும், விஞ்ஞானபூர்வமானது அல்ல என்றும் நம்பும் பல நாத்திகர்கள் உள்ளனர். ஆனால் தேவனின் கிரியையை விஞ்ஞானத்தால் மாற்ற முடியுமா? விஞ்ஞானத்தால் மனுஷகுலத்தை ஆள முடியுமா? நாத்திகத்தால் ஆளப்படும் ஒரு தேசத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது எளிதான காரியமல்ல, அதில் பெரும் தடைகள் உள்ளன. தேவனை இவ்வாறாக எதிர்க்கும் அநேகர் இன்றைய தினத்தில் இருக்கவில்லையா?

இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, அநேகர் அவருடைய கிரியையை யேகோவாவின் கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்கள், மேலும் அவை முரண்பாடாக இருப்பதைக் கண்டு, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களால் ஏன் அவர்களின் கிரியைகளுக்கு இடையில் எந்தவிதமான ஒற்றுமையையும் காணமுடியவில்லை? ஏனென்றால் இயேசு புதியக் கிரியையைச் செய்தார், மேலும், இயேசு தம்முடைய கிரியையைத் தொடங்குவதற்கு முன்பு, அவருடைய வம்ச அட்டவணையை யாரும் எழுதியிருக்கவில்லை. யாராவது எழுதியிருந்தால், நன்றாக இருந்திருக்கும், யார்தான் இயேசுவைச் சிலுவையில் அறைந்திருப்பார்கள்? மத்தேயு இயேசுவின் வம்ச அட்டவணையை பல தசாப்தங்களுக்கு முன்னர் எழுதியிருந்தால், இயேசு இவ்வளவு பெரிய துன்புறுத்தல்களை அனுபவித்திருக்க மாட்டார். சரிதானே? இயேசுவின் வம்ச அட்டவணையை ஜனங்கள் படித்தவுடன், அதாவது அவர் ஆபிரகாமின் மகன், தாவீதின் சந்ததி என்று படித்தவுடன், அவர்கள் அவரைத் துன்புறுத்துவதை நிறுத்தியிருப்பார்கள். அவருடைய வம்ச அட்டவணை மிகவும் தாமதமாக எழுதப்பட்டது என்பது பரிதாபமல்லவா? தேவனுடைய கிரியையின் இரண்டு கட்டங்களை மட்டுமே வேதாகமம் பதிவுசெய்கிறது என்பது ஒரு பரிதாபம்: ஒரு கட்டம் நியாயப்பிரமாணத்தின் யுகத்தின் கிரியை, மற்றொரு கட்டம் கிருபையின் யுகத்தின் கிரியை; ஒரு கட்டம் யேகோவாவின் கிரியை, மற்றொன்று இயேசுவின் கிரியை. ஒரு பெரிய தீர்க்கதரிசி இன்றைக்கான கிரியையை முன்னறிவித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். “கடைசிக் காலத்தின் கிரியை” என்ற தலைப்பில் வேதாகமத்திற்குக் கூடுதல் பகுதி ஒன்று இருந்திருக்கும், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா? இன்று மனுஷன் ஏன் இவ்வளவு கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டும்? நீங்கள் அத்தகைய கடினமான நேரத்தை அனுபவித்திருக்கிறீர்கள்! யாராவது வெறுக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்றால், அது கடைசிக் காலத்தின் கிரியையை முன்னறிவிக்காத ஏசாயாவும் தானியேலும் தான். யாரேனும் குற்றம் சாட்டப்படத் தகுதியானவர்கள் என்றால், அது தேவனுடைய இரண்டாவது மாம்ச அவதாரத்தின் வம்ச அட்டவணையைப் பட்டியலிடாதப் புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்கள்தான். அது என்னவொரு அவமானம்! நீங்கள் ஆதாரங்களுக்காக எல்லா இடங்களிலும் தேட வேண்டும், மேலும் சிறிய வார்த்தைகளின் சில துண்டுகளைக் கண்டறிந்த பிறகும் அவை உண்மையிலேயே ஆதாரமா என்பதைச் சொல்ல முடியாது. பெருத்த அவமானம் அல்லவா! தேவன் தனது கிரியை குறித்து ஏன் மிகவும் ரகசியமாக இருக்கிறார்? இன்று, அநேக ஜனங்கள் இன்னும் உறுதியான ஆதாரங்களைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்களால் அதை மறுக்கவும் முடியவில்லை. ஆகையால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்களால் தேவனை உறுதியுடன் பின்பற்ற முடியாது, ஆனாலும் அவர்களால் அத்தகைய சந்தேகத்துடன் முன்னேறிச் செல்லவும் முடியாது. எனவே, அநேக “புத்திசாலியான மற்றும் திறமையான அறிஞர்கள்” தேவனைப் பின்பற்றும்போது “முயற்சி செய்து பாருங்கள்” என்ற அணுகுமுறையைத் தழுவுகிறார்கள். இது மிகவும் சிக்கலானது! மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் எதிர்காலத்தை முன்னறிவித்திருந்தால் விஷயங்கள் அவ்வளவு எளிதாக இருந்திருக்கும் அல்லவா? ராஜ்யத்தில் ஜீவிதத்தின் உள்ளார்ந்த உண்மையை யோவான் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்—அவன் தரிசனங்களை மட்டுமே கண்டான், பூமியில் செயல்பட்ட உண்மையான, பொருள் சார்ந்தக் கிரியைகளைக் காணவில்லை என்பது எவ்வளவு பரிதாபம். இது அத்தகைய ஒரு அவமானம்! தேவனிடம் என்ன தவறு? இஸ்ரவேலில் அவருடைய கிரியை மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட பின், அவர் ஏன் இப்போது சீனாவுக்கு வந்திருக்கிறார், ஏன் அவர் மாம்சமாக மாற வேண்டியிருந்தது, எதற்காக தனிப்பட்ட முறையில் கிரியை செய்து ஜனங்களிடையே வாழ வேண்டும்? தேவன் மனுஷனைப் பற்றி சிந்திக்கவே இல்லை! அவர் முன்கூட்டியே ஜனங்களுக்குச் சொல்லவில்லை என்பது மட்டுமல்லாமல், திடீரென்று அவர் தனது ஆக்கினைத்தீர்ப்பையும், நியாயத்தீர்ப்பையும் கொண்டு வந்தார். உண்மையில் இதில் எந்த அர்த்தமும் இல்லை! முதன்முறையாக தேவன் மாம்சத்தில் வந்தபோது, உள்ளார்ந்த உண்மைகள் அனைத்தையும் முன்கூட்டியே மனுஷனிடம் சொல்லாததன் விளைவாக அவர் அதிக கஷ்டங்களை அனுபவித்தார். நிச்சயமாக அவரால் அதை மறந்திருக்க முடியாது அல்லவா? அப்படியிருக்க இந்த முறை அவர் ஏன் மனுஷனிடம் இன்னும் சொல்லவில்லை? இன்று, வேதாகமத்தில் அறுபத்தாறு புத்தகங்கள் மட்டுமே இருப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது. கடைசிக் காலத்தின் கிரியையை முன்னறிவிக்கும் ஒரு புத்தகமும் இருக்க வேண்டும்! நீ அப்படி நினைக்கவில்லையா? யேகோவா, ஏசாயா, தாவீது கூட இன்றையக் கிரியைகளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர்கள் நிகழ்காலத்திலிருந்து தூரமாக அகற்றப்பட்டு, நாலாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் காலத்தால் பிரிக்கப்பட்டுள்ளனர். இன்றையக் கிரியையை இயேசு முழுமையாக முன்னறிவிக்கவில்லை, அதில் கொஞ்சம் மட்டுமே பேசினார், ஆனாலும் மனுஷன் இன்னும் போதுமான ஆதாரங்களைக் காணவில்லை. இன்றைய கிரியையை நீ முந்தையக் கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டும் எவ்வாறு ஒன்றுக்கொன்று சமன் ஆக முடியும்? யேகோவாவினுடைய கிரியையின் கட்டம் இஸ்ரவேலை நோக்கியிருந்தது, எனவே இன்றைய கிரியையை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்னும் பெரிய முரண்பாடு இருக்கும்; அவை இரண்டையும் ஒப்பிட முடியாது. நீ இஸ்ரவேலராக இருந்தாலும் சரி, யூதனாக இருந்தாலும் சரி; உனக்குத் திறமையும் இல்லை, உன்னைப் பற்றி உனக்கே எதுவும் தெரிந்திருக்கவும் இல்லை, இந்நிலையில் நீ எப்படி உன்னை அவர்களுடன் ஒப்பிடுவாய்? இது சாத்தியமா? இன்று ராஜ்யத்தின் யுகம் என்பதை அறிந்துகொள், இது நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது என்றும் தெரிந்துகொள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஒரு சூத்திரத்தை முயற்சித்துப் பயன்படுத்த வேண்டாம்; அத்தகைய எந்தச் சூத்திரங்களிலும் தேவனைக் காண முடியாது.

இயேசு பிறந்து 29 ஆண்டுகள் அவர் எப்படி ஜீவித்திருந்தார்? அவருடைய குழந்தைப் பருவத்தையும் இளமைக் காலத்தையும் வேதாகமம் பதிவு செய்யவில்லை; அவை எப்படி இருந்தன என உனக்குத் தெரியுமா? அவருக்குக் குழந்தைப் பருவமோ இளமைக் காலமோ இல்லை, அவர் பிறந்தபோதே அவருக்கு 30 வயதாக இருந்திருக்கக் கூடுமோ? நீ மிகக் குறைவாகவே அறிந்திருக்கிறாய், எனவே உன் கற்பனைகளை வெளிப்படுத்துகையில் நீ கவனக்குறைவாக இருக்க வேண்டாம். அது உனக்கு எந்த நல்லதும் செய்யப்போவதில்லை! இயேசுவின் 30 வது பிறந்தநாளுக்கு முன்பு அவர் ஞானஸ்நானம் பெற்றார் என்பதையும், பிசாசின் சோதனையை அனுபவிக்கப் பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதையும் மட்டுமே வேதாகமம் பதிவு செய்திருக்கிறது. நான்கு சுவிசேஷங்கள் அவரது மூன்றரை ஆண்டுகாலக் கிரியைகளைப் பதிவு செய்கின்றன. அவரது குழந்தைப் பருவம் மற்றும் இளமைக் காலம் குறித்து எந்தப் பதிவும் இல்லை, ஆனால் அவருக்குக் குழந்தை பருவமும் இளமைக்காலமும் இல்லை என்பதை இது நிரூபிக்கவில்லை; ஆதியில், அவர் எந்தக் கிரியையையும் செய்யவில்லை, ஒரு சாதாரண மனுஷனாகவே இருந்தார். அப்படியானால், இயேசு இளமைக் காலமோ அல்லது குழந்தைப் பருவமோ இல்லாமல் 33 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று சொல்ல முடியுமா? அவரால் திடீரென்று முப்பத்து மூன்றரை வயதை எட்டியிருக்கத்தான் முடியுமா? இந்த மனுஷன் அவரைப் பற்றி நினைப்பது அனைத்தும் இயற்கைக்கு அப்பாற்பட்டது மற்றும் நம்பத்தகாதது. மாம்சமாகிய தேவன் இயல்பான மற்றும் சாதாரண மனுஷத்தன்மையைக் கொண்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவர் தனது கிரியையை தனது முழுமையற்ற மனிதத்தன்மையோடு, முழுமையான தெய்வீகத்தன்மையுடன் செயல்படுத்துகிறார். இதன் காரணமாகவே இன்றைய கிரியையைப் பற்றியும், இயேசுவின் கிரியையைப் பற்றியும் ஜனங்களுக்கு சந்தேகம் உள்ளது. தேவனின் கிரியை, அவர் மாம்சத்தில் வந்த இரண்டு முறைகளுக்கு இடையே வேறுபட்டிருந்தாலும், அவருடைய சாராம்சம் வேறுபட்டிருக்கவில்லை. நிச்சயமாக, நீ அந்த நான்கு சுவிசேஷங்களின் பதிவுகளைப் படித்தால், அவற்றில் மிகச் சிறந்த வேறுபாடுகளைக் காண்பாய். இயேசுவின் குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் உன்னால் எப்படி அவருடைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்? இயேசுவின் சாதாரண மனுஷத்தன்மையை உன்னால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? இன்றைய தேவனின் மனுஷத்தன்மையைப் பற்றி நீ வலுவான புரிதலைக் கொண்டிருக்கலாம், ஆனாலும் உனக்கு இயேசுவின் மனுஷத்தன்மையைப் பற்றி எந்தவிதமானப் புரிதலும் இல்லை, அதை நீ மிகக் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறாய். இது மத்தேயுவால் பதிவு செய்யப்பட்டிருக்காவிட்டால், நீ இயேசுவின் மனுஷத்தன்மையைப் பற்றி எந்தவிதமான தகவலையும் கொண்டிருக்க மாட்டாய். ஒருவேளை, இயேசுவின் ஜீவிதம் பற்றிய கதைகளை நான் உனக்குச் சொல்லும்போது, இயேசுவின் குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் இருக்கும் உள்ளார்ந்த உண்மைகளை உனக்குச் சொல்லும்போது, நீ உன் தலையை அசைத்து, “இல்லை! அவர் அப்படி இருக்க முடியாது. அவருக்கு எந்த பலவீனமும் இருக்க முடியாது, அவர் குறைந்தளவிலான மனுஷத்தன்மையைக் கொண்டிருக்க மாட்டார்!” என்று சொல்வீர்கள். இல்லை என்று நீ கூச்சலிட்டு அலறுவாய். நீ இயேசுவைப் புரிந்து கொள்ளாததால்தான் நீ என்னைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கிறாய். நீ இயேசு மிகவும் தெய்வீகமானவர் என்று விசுவாசிக்கிறாய், மாம்சத்தின் சாரம் அவரிடம் இருக்காது என்று விசுவாசிக்கிறாய். ஆனால் உண்மைகள் எப்போதும் உண்மைகள்தான். உண்மையான விஷயங்களை மீறி யாரும் பேச விரும்புவதில்லை, ஏனென்றால் நான் பேசுவது உண்மையுடன் தொடர்புடையது; அது ஊகம் அல்ல, தீர்க்கதரிசனமும் அல்ல. தேவன் மிக உயரமாக உயர முடியும் என்பதையும், மேலும், அவரால் மிக ஆழத்தில் மறைந்துகொள்ள முடியும் என்பதையும் அறிந்து கொள். அவர் உனது மனதில் கற்பனை செய்கிற ஒருவர் அல்ல, அவர் சகல ஜீவஜந்துக்களுக்கும் தேவன், ஒரு குறிப்பிட்ட நபரால் கருத்தரிக்கப்பட்ட தனிப்பட்ட தேவன் அல்ல.

முந்தைய: தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (1)

அடுத்த: தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக