ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் “ஏழு இடிகளின் பெருமுழக்கம்”
நான் என் கிரியையை புறஜாதியான தேசங்களிடையே பரப்புகிறேன். என் மகிமை பிரபஞ்சம் முழுவதும் பிரகாசிக்கிறது; எல்லாவிதமான ஜனங்களும் தங்களுக்குள் என்னுடைய சித்தத்தைக் கொண்டுள்ளனர், அவர்கள் அனைவரும் என் கரத்தால் இயக்கப்படுகின்றனர் மற்றும் நான் நியமித்த பணிகளை ஆரம்பிக்கின்றனர். இந்தத் தருணம் முதல், நான் ஒரு புதிய யுகத்திற்குள் நுழைந்து, எல்லா மனிதர்களையும் வேறொரு உலகத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். மனிதன் என்னை இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எனது “பிதாவின் வீட்டிற்கு” மீண்டும் சென்றபோது, எனது மெய்யான திட்டத்தில் உள்ள என்னுடைய கிரியையின் இன்னொரு பகுதியைத் தொடங்கினேன். நான் பிரபஞ்சத்தைக் குறித்து முற்றிலுமாக சிந்திக்கிறேன், இதுதான் என் கிரியைக்கு ஒரு சரியான நேரம் என்று காண்கிறேன்[அ]. எனவே, மனிதன் மீதான எனது புதிய கிரியையை நான் முற்றிலும் விரைந்து செய்கிறேன். அனைத்திற்கும் மேலாக, இது ஒரு புதிய யுகம் மற்றும் புதிய ஜனங்களைப் புதிய யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கும், நான் புறம்பாக்க வேண்டிய பலரை நீக்குவதற்கும் நான் புதிய கிரியைகளைக் கொண்டு வந்துள்ளேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில், மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு கட்ட கிரியையை நான் செய்து, அவர்களைக் காற்றிலே ஊசலாடச் செய்திருக்கிறேன். அதன் பிறகு வீசும் காற்றில் பலர் அமைதியாக பறக்கடிக்கப்படுகிறார்கள். உண்மையிலேயே, இது நான் அகற்றப் பயன்படுத்தவிருக்கும் “போரடிக்கும் களம்” ஆகும்; இதற்காகத்தான் நான் வாஞ்சித்துக் காத்திருக்கிறேன், இதுதான் எனது திட்டமும் ஆகும். நான் கிரியை செய்யும்போது பொல்லாதவர்கள் பலர் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், ஆனால் நான் அவர்களைத் துரத்த அவசரப்படவில்லை. மாறாக, சரியான நேரத்தில் நான் அவர்களைச் சிதறடிப்பேன். அதற்குப் பிறகு மட்டுமே நான் ஜீவ ஊற்றாக இருப்பேன். என்னை உண்மையாக நேசிப்பவர்கள் அத்தி மரத்தின் கனிகளையும் லீலிபுஷ்பத்தின் வாசனையையும் என்னிடமிருந்து பெற அனுமதிப்பேன். புழுதியின் நிலமான சாத்தான் தங்கியிருக்கும் தேசத்தில், பசும்பொன் இல்லை, மணல் மட்டுமே உள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்டு, நான் அத்தகைய ஒரு கட்ட கிரியையைச் செய்கிறேன். நான் ஆதாயம் செய்வது மணல் அல்ல, சுத்திகரிக்கப்பட்ட பசும்பொன் ஆகும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். துன்மார்க்கன் என் வீட்டில் எப்படி இருக்க முடியும்? என் பரலோகத்தில், நரிகளை ஒட்டுண்ணிகளாக இருக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? இந்த விஷயங்களைத் துரத்த நான் ஒவ்வொரு சாத்தியமான முறையையும் பயன்படுத்துகிறேன். என் சித்தம் வெளிப்படுவதற்கு முன்பு, நான் என்ன செய்யப் போகிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நான் அந்தப் பொல்லாதவர்களைத் துரத்துகிறேன், அவர்கள் என் சமூகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள். துன்மார்க்கருக்கு நான் இதைத்தான் செய்கிறேன். எனினும், அவர்கள் எனக்குச் சேவை செய்ய, இன்னும் ஒரு நாள் அவர்களுக்காக இருக்கும். ஆசீர்வாதங்களுக்கான மனிதர்களின் விருப்பம் மிகவும் வலுவானது; எனவே, நான் என் சரீரத்தைத் திருப்பி, எனது மகிமையான முகத்தை புறஜாதியினருக்குக் காண்பிப்பேன், இதனால் மனிதர்கள் அனைவரும் தங்கள் சொந்த உலகில் ஜீவித்துத் தங்களைத் தாங்களே நியாயந்தீர்ப்பார்கள். நான் சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சொல்லும்போதே, மனிதர்களுக்குத் தேவையானதை அவர்களுக்கு வழங்குகிறேன். மனிதர்களுக்குப் புத்தி தெளியும் போது, நான் ஏற்கெனவே நீண்ட காலமாக என் கிரியையைப் பரவச் செய்திருப்பேன். நான் என் சித்தத்தை மனிதர்களிடம் வெளிப்படுத்துவேன், மனிதர்களிடம் என் கிரியையின் இரண்டாம் பகுதியைத் தொடங்குவேன். என் கிரியையுடன் எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், அவர்கள் என்னை நெருக்கமாகப் பின்பற்ற அனுமதிப்பேன். நான் செய்ய வேண்டிய என் கிரியையை மனிதர்கள் என்னுடன் இணைந்து செய்ய, மனிதர்களால் செய்ய முடிந்த அனைத்தையும் அவர்களைச் செய்ய அனுமதிப்பேன்.
என் மகிமையை அவர்கள் காண்பார்கள் என்ற விசுவாசம் எவருக்கும் இல்லை. நான் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் என் மகிமையை மனிதகுலத்தின் மத்தியிலிருந்து அகற்றி வேறு உலகத்திற்கு எடுத்துச் செல்கிறேன். மனிதர்கள் மீண்டும் மனந்திரும்பும்போது, நான் என் மகிமையை எடுத்து, அதை இன்னும் அதிகமாக விசுவாசமுள்ளவர்களுக்குக் காண்பிப்பேன். இந்தக் கொள்கையின் படியே நான் கிரியை செய்கிறேன். என் மகிமை கானானை விட்டு வெளியேறும் ஒரு காலமும், என் மகிமை தெரிந்துகொள்ளப்பட்டவர்களை விட்டு வெளியேறும் ஒரு காலமும் இருக்கிறது. மேலும், என் மகிமை பூமி முழுவதையும் விட்டு வெளியேறி, அதை மங்கச்செய்து, இருளில் மூழ்கடிக்கும் ஒரு காலம் இருக்கிறது. கானான் தேசம்கூட சூரிய ஒளியைக் காணாது. எல்லா மனிதர்களும் தங்கள் விசுவாசத்தை இழக்க நேரிடும், ஆனால் கானான் தேசத்தின் வாசனையை விட்டு வெளியேறுவதை எவராலும் தாங்க முடியாது. நான் புதிய வானத்துக்கும் பூமிக்கும் செல்லும்போதுதான், என் மகிமையின் மற்ற பகுதியை எடுத்து, முதலாவதாகக் கானான் தேசத்தில் வெளிப்படுத்துவேன். இதன் மூலம் இரவின் பயங்கரமான இருளில் மூழ்கியிருக்கும் பூமியெங்கும் ஒரு மங்கிய ஒளியைப் பிரகாசிக்கச் செய்வேன். இதனால் பூமியின் எல்லா மனிதர்களும் வெளிச்சத்திற்கு வருவார்கள். பூமியின் எல்லா மனிதர்களும் ஒளியின் வல்லமையிலிருந்து பெலனைப் பெறுவார்கள், என் மகிமை ஒவ்வொரு தேசத்திற்கும் புதியதாகவும் பெரியதாகவும் தோன்ற அனுமதிப்பேன். இதனால் நான் வெகு காலத்திற்கு முன்பே மனித உலகத்திற்கு வந்துள்ளேன் என்பதையும், நீண்ட காலத்திற்கு முன்பே இஸ்ரவேலிலிருந்து கிழக்கிற்கு என் மகிமையை கொண்டு வந்தேன் என்பதையும் மனிதகுலம் முழுவதும் உணர்ந்துகொள்ளும். ஏனெனில், என் மகிமை கிழக்கிலிருந்து பிரகாசிக்கிறது. அது கிருபையின் காலம் முதல் இன்று வரை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரவேலிலிருந்தே நான் புறப்பட்டேன், அங்கிருந்துதான் கிழக்கிற்கு வந்தேன். கிழக்கின் ஒளி படிப்படியாக வெண்மையாக மாறும் போது தான் பூமியெங்கும் உள்ள இருள் வெளிச்சமாக மாறத் தொடங்கும். அப்போதுதான் நான் இஸ்ரவேலில் இருந்து வெகு காலத்திற்கு முன்பே கிழக்கிற்குச் சென்று அங்கு புதியதாக உயர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை மனிதன் கண்டறிவான். ஒருமுறை இஸ்ரவேலில் இறங்கி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டதால், நான் மீண்டும் இஸ்ரவேலில் பிறக்க முடியாது. ஏனென்றால் என் கிரியை பிரபஞ்சம் முழுவதையும் வழிநடத்துகிறது மற்றும் என்னவென்றால், மின்னல் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஒளிர்கிறது. இந்த காரணத்திற்காக நான் கிழக்கில் இறங்கி, கானானை கிழக்கிலிருக்கும் ஜனங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். பூமியெங்கிலும் உள்ள ஜனங்களைக் கானான் தேசத்திற்கு அழைத்து வருவேன். ஆகவே முழுப் பிரபஞ்சத்தையும் கட்டுப்படுத்த, கானான் தேசத்தில் தொடர்ந்து வெளிப்பாடுகளை வெளியிடுகிறேன். இந்த நேரத்தில், கானானைத் தவிர பூமியில் எங்கும் ஒளி இல்லை. எல்லா மனிதர்களும் பசியினாலும் குளிரினாலும் பாதிக்கப்படுகிறார்கள். நான் என் மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தேன், பின்னர் அதை எடுத்துக்கொண்டேன், இதன்மூலம், நான் இஸ்ரவேலரையும், மனிதகுலம் முழுவதையும் கிழக்கிற்குக் கொண்டு வந்தேன். அவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்படவும், ஒளியுடன் இணைந்திருக்கவும் அவர்கள் அனைவரையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். எனவே, அவர்கள் இனி அதைத் தேட வேண்டியதில்லை. தேடும் அனைவரையும் மீண்டும் ஒளியைக் காணவும், இஸ்ரவேலில் எனக்கு இருந்த மகிமையைக் காணவும் அனுமதிப்பேன்; நான் வெகு காலத்திற்கு முன்பே ஒரு வெள்ளை மேகத்தின் மீது மனிதகுலத்தின் மத்தியில் வந்துள்ளேன் என்பதை அவர்கள் காண அனுமதிப்பேன். எண்ணற்ற வெள்ளை மேகங்களையும், ஏராளமான பழக் கொத்துக்களையும் பார்க்க அவர்களை அனுமதிப்பேன், மேலும், அவர்களை இஸ்ரவேலின் தேவனாகிய யேகோவாவைப் பார்க்க அனுமதிப்பேன். யூதர்களின் எஜமானரையும், எதிர்பார்க்கப்படுகிற மேசியாவையும், யுகங்கள் முழுவதும் ராஜாக்களால் துன்புறுத்தப்பட்ட என் முழு தோற்றத்தையும் அவர்கள் காண அனுமதிப்பேன். முழுப் பிரபஞ்சத்திலும் நான் கிரியை செய்வேன் மேலும் மாபெரும் கிரியையைச் செய்வேன். கடைசி நாட்களில் என் மகிமையையும் என் கிரியைகளையும் மனிதனுக்கு வெளிப்படுத்துவேன். எனக்காக பல வருடங்கள் காத்திருந்தவர்களுக்கும், ஒரு வெள்ளை மேகத்தின் மீது வர வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கும், மீண்டும் ஒரு முறை தோன்ற வேண்டும் என்று ஏங்கிய இஸ்ரவேலுக்கும், என்னைத் துன்புறுத்திய எல்லா மனிதர்களுக்கும் என் மகிமையான முகத்தை முழுமையாகக் காண்பிப்பேன். எனவே நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் மகிமையைக் கிழக்கிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன், ஆகவே அது யூதேயாவில் இல்லை என்று அனைவரும் தெரிந்துகொள்வார்கள். கடைசி நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன!
பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்கிறேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? வல்லமையில் பெரியவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேசுவேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையைக் கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள “ஒலிவ மலையில்” இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் ஆகும். அதாவது ஒவ்வொரு தேசமும் என்னை வணங்க வேண்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்ய வேண்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் கொள்ள வேண்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்!
அடிக்குறிப்பு:
அ. மூல உரையில் “காண்கிறேன்” என்ற வார்த்தை இல்லை.