நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்
எல்லா மக்களிடமும் இருக்கின்ற பொதுவான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதைக் கைக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள். ஏனென்றால், ஒருபுறம், அவர்கள் அதற்கான விலைக்கிரயத்தைக் கொடுக்கத் தயாராக இல்லை, மறுபுறம், அவர்களின் பகுத்தறிவு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது; அன்றாட வாழ்க்கையில் உள்ள பல சிரமங்களை அவர்களால் பார்க்க முடிவதில்லை, அதை எப்படிச் சரியாகப் பயிற்சி செய்வது என்று தெரிவதில்லை. மக்களின் அனுபவங்கள் மிகவும் ஆழமற்றவை என்பதாலும், அவர்களின் திறமை மிகவும் குன்றி உள்ளதாலும், மேலும் அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் அளவு குறைவாக இருப்பதாலும், அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களைத் தீர்க்க அவர்களுக்கு எந்த வழியும் இல்லை. அவர்கள் தேவனை வார்த்தையில் மட்டுமே விசுவாசிக்கிறார்களே தவிர, தேவனைத் தங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டுவர முடிவதில்லை. அதாவது, தேவன் தேவனாக இருக்கிறார், வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கிறது, மக்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் தேவனுடன் எந்த உறவும் இல்லை என்பது போல இருக்கிறது. எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். இவ்வாறு தேவனை விசுவாசித்தால், மக்கள் உண்மையில் அவரால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிபூரணப்படுத்தப்பட மாட்டார்கள். உண்மையில், தேவனின் வார்த்தை முழுமையாக உணரப்படவில்லை என்பதனால் அல்ல, மாறாக, அவருடைய வார்த்தையைப் பெறுவதற்கான மக்களின் திறன் மிகவும் குறைவாக உள்ளது. தேவனின் உண்மையான சித்தத்தின்படி யாரும் செயல்படுவதில்லை என்று ஒருவர் கூறலாம்; மாறாக, தங்களுடைய சொந்த நோக்கங்கள், கடந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த மதக் கருத்துக்கள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான அவர்களின் சொந்த வழி ஆகியவற்றிற்கு ஏற்ப தேவன் மீதான அவர்களுடைய விசுவாசம் இருக்கிறது, தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மறுரூபமாதலுக்கு உள்ளாகி, அவருடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படத் தொடங்குபவர்கள் மிகக் குறைவு. மாறாக, அவர்கள் தவறான நம்பிக்கைகளில் நிலைத்திருக்கிறார்கள். மக்கள் தேவனை விசுவாசிக்கத் தொடங்கும் போது, மதத்தின் வழக்கமான விதிகளின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்கின்றார்கள், மேலும் முற்றிலும் அவர்களுக்குச் சொந்தமான வாழ்க்கைத் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்கிறார்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். பத்துப் பேரில் ஒன்பது பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று கூறலாம். தேவனை விசுவாசிக்கத் தொடங்கியபின், மற்றொரு திட்டத்தை வகுத்து, ஒரு புதிய நிலைக்குத் திரும்புகிறவர்கள் மிகக் குறைவு. தேவனுடைய வார்த்தையைச் சத்தியமாகக் கருத அல்லது அதைச் சத்தியமாக ஏற்றுக் கொண்டு அதைக் கைக்கொள்ள மனிதகுலம் தவறிவிட்டது.
உதாரணமாக, இயேசுவின் மீதான விசுவாசத்தை எடுத்துக்கொள்வோம். யாராவது இப்போதுதான் விசுவாசிக்க ஆரம்பித்திருந்தாலும் அல்லது மிக நீண்ட காலமாக விசுவாசித்திருந்தாலும், அனைவருமே தங்களிடம் இருந்த தாலந்துகளைப் பயன்படுத்தவும், அவர்களிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்தவுமே அவ்வாறு செய்தனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் “தேவன் மீதான விசுவாசம்” என்ற இந்த மூன்று வார்த்தைகளையும் வெறுமெனே சேர்த்தனர், ஆயினும் அவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, தேவன் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் சிறிதளவும் வளரவில்லை. அவர்களின் பின்தொடர்தல் அனலாகவோ குளிராகவோ இல்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவதாகச் சொல்லவில்லை, ஆனால் அனைத்தையும் தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தவும் இல்லை. அவர்கள் ஒருபோதும் தேவனை மெய்யாக அன்புகூர்ந்ததில்லை அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்ததில்லை. தேவன் மீதான அவர்களின் விசுவாசம் என்பது உண்மை மற்றும் போலி ஆகியவற்றின் கலவையாகும், அவர்கள் ஒரு கண்ணைத் திறந்து கொண்டும் மறு கண்ணை மூடிக்கொண்டும் அதை அணுகினர். அவர்கள் விசுவாசத்தைக் கைக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் குழப்பமான நிலையில் தொடர்ந்தனர், கடைசியில் ஒரு குழப்பமான மரணம் அடைந்தனர். அவை எல்லாவற்றினாலும் என்ன பயன்? இன்று, நடைமுறைத் தேவனை விசுவாசிக்க, நீ சரியான பாதையில் நடக்க வேண்டும். நீ தேவனை விசுவாசித்தால், நீ ஆசீர்வாதங்களை மட்டுமே தேடாமல், தேவனை நேசிக்கவும், தேவனை அறிந்து கொள்ளவும் வேண்டும். அவருடைய பிரகாசத்தின் மூலமும், உன் தனிப்பட்ட தேடலின் மூலமும், நீ அவருடைய வார்த்தையைப் புசித்துப் பானம் பண்ணலாம், தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளலாம், மேலும் உன் உள்ளான இருதயத்திலிருந்து வரும் தேவனின் உண்மையான அன்பைப் பெறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மீதான உன் அன்பு மிகவும் உண்மையானதாக இருந்தால், மேலும், அவர் மீது நீ வைத்திருக்கும் அன்பின் வழியை ஒருவரும் அழிக்கவோ அதற்கு எதிராக நிற்கவோ முடியாது, இந்த நேரத்தில் நீ தேவன் மீதுள்ள உன் விசுவாசத்தில் சரியான பாதையில் செல்கிறாய். நீ தேவனுக்குரியவன் என்பதை இது நிரூபிக்கிறது, ஏனென்றால் உன் இருதயம் ஏற்கனவே தேவனின் வசம் உள்ளது, வேறு எதுவும் உன்னை ஆட்கொள்ள முடியாது. உன் அனுபவத்தின் மூலமாகவும், நீ செலுத்திய விலைக்கிரயத்தின் மூலமாகவும், தேவனின் கிரியையின் மூலமாகவும், தேவன் மீது கோரப்படாத அன்பை உன்னால் வளர்த்துக் கொள்ள முடியும். நீ அவ்வாறு செய்யும்போது, நீ சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்வாய். அந்தகாரத்தின் ஆதிக்கத்திலிருந்து நீ விடுபட்டால்தான் நீ தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருக்கிறாய் என்று உன்னால் கூற முடியும். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ இந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். நீங்கள் யாரும் தற்போதைய விவகாரத்தின் நிலைமைகளில் திருப்தி அடையக்கூடாது. தேவனின் கிரியையைக் குறித்து உங்களால் இருமனமுள்ளவராக இருக்க முடியாது, உங்களால் அதை லேசானதாகக் கருதவும் முடியாது. நீங்கள் எல்லா வகையிலும், எல்லா நேரங்களிலும் தேவனைப் பற்றி சிந்திக்க வேண்டும், எல்லாவற்றையும் அவர் பொருட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் பேசும்போதும் அல்லது செயல்படும்போதும், முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களை முன்னிறுத்த வேண்டும். இதன் மூலமாக மட்டுமே உங்களால் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக இருக்க முடியும்.
தேவன் மீதுள்ள விசுவாசத்தில், மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் உதட்டளவில் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையிலோ தேவன் முற்றிலுமாக இல்லை. எல்லா மக்களும், தேவன் இருப்பதை நம்புகிறார்கள், ஆனாலும் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. மக்களின் வாய்கள் தேவனிடம் அநேக ஜெபங்களை ஏறெடுக்கின்றன, ஆனால் தேவனுக்கு அவர்களின் இதயங்களிலோ சிறிதளவே இடமுள்ளது, எனவே தேவன் அவர்களை மீண்டும் மீண்டும் சோதிக்கிறார். மக்கள் தூய்மையற்றவர்களாக இருப்பதனால், அவர்களைச் சோதிப்பதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை, இதனால் அவர்கள் அவமானகரமாக உணரலாம், இந்தச் சோதனைகளுக்கு மத்தியில் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால், மனிதர்கள் பிரதான தூதனின் சந்ததியினராக மாறுவார்கள், மேலும் மிகவும் சீர்கெட்டவர்களாக மாறுவார்கள். தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் செயல்பாட்டில், ஒவ்வொரு நபரும் தேவனின் இடைவிடாத சுத்திகரிப்பின் கீழ் தங்களின் பல தனிப்பட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விலக்குகிறார்கள். இல்லையென்றால், தேவன் யாரையும் பயன்படுத்துவதற்கான வழி இருக்காது, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையை மக்களிடம் செய்வதற்கும் வழி இருக்காது. தேவன் முதலில் மக்களைச் சுத்திகரிக்கிறார், இந்தச் செயல்முறையின் மூலம், அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளலாம், மேலும் தேவன் அவர்களை மாற்றக்கூடும். அப்போதுதான் தேவன் தம்முடைய ஜீவனை அவர்களுக்குள் கிரியை செய்ய வைக்கிறார், இதன் மூலமாக மட்டுமே அவர்களின் இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும். எனவே நான் சொல்கிறேன், தேவனை விசுவாசிப்பது என்பது மக்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. தேவன் அதைப் பார்ப்பதனால், உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து, ஆனால் அவருடைய வார்த்தையை ஜீவனாகக் கொண்டிருக்கவில்லை என்றால், மேலும் நீ உன் சொந்த அறிவுக்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைப்படி வாழவோ முடியாவிட்டால், தேவனை நேசிக்கும் இருதயம் உன்னிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும், உன் இருதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கும், மனிதனின் நாட்டத்தின் குறிக்கோளும் ஆகும். தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் சித்தத்திற்கு இணங்கவும் இருப்பதாகக் கருத முடியும். இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம், ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன, மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காகவும், முதிர் வயது வரை வீணாக வாழ்ந்ததற்காகவும் தங்களை வெறுக்கிறார்கள். அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் சத்தியத்தைக் கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுக்குச் சாட்சிப் பகரவோ முடிவதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும் ஓடுகிறார்கள், ஒரு தேனீ போலச் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், மரணத்தின் விளிம்பில் வைத்துதான் அவர்களிடம் உண்மையான சாட்சியம் இல்லாததையும் அவர்கள் தேவனை அறியவில்லை என்பதையும் இறுதியாகக் காண்கிறார்கள். இது மிகவும் தாமதமானதாக இல்லையா? நீ ஏன் இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ நேசிக்கும் சத்தியத்தைப் பின்பற்றக்கூடாது? நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால் அல்லது அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், மரிக்கும் நேரத்தில் நீ வருத்தப்பட விரும்புகிறாயா? அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? உண்மையாகவே, மக்கள் சிறிதளவு முயற்சி செய்தால், சத்தியத்தைக் கடைப்பிடிக்கலாம், அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தலாம். மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது, மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செயல்படுகின்றனர், இறுதியில் அதைக்காட்ட எதுவும் இருப்பதில்லை. இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும் சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா? இது மாம்சத்தின் சீர்கேடு அல்லவா? நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதில் பயன் என்ன? உன் மாம்சத்திற்காக வாழ்வதன் மூலமும், ஆதாயத்திற்காகவும் புகழுக்காகவும் போராடுவதன் மூலமும் உன்னால் என்ன பெற முடியும்?