ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)

சாத்தானால் மிகவும் ஆழமாகச் சீர்கெட்டுப்போன மனுஷகுலம், தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறியாமல், தேவனை வணங்குவதை நிறுத்திவிட்டனர். ஆதியில், ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டபோது, யேகோவாவின் மகிமையும் சாட்சியமும் எப்போதும் இருந்தன. ஆனால் சீர்கெட்டுப்போன பின், மனுஷன் மகிமையையும் சாட்சியத்தையும் இழந்தான், ஏனென்றால் எல்லோரும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், மேலும் அவரை வணங்குவதைக் கூட முற்றிலும் நிறுத்திவிட்டார்கள். இன்றைய ஜெயங்கொள்ளுதல் கிரியையானது எல்லா சாட்சியங்களையும் எல்லா மகிமையையும் மீட்டெடுப்பதற்கும், மற்றும் எல்லா மனுஷரையும் தேவனை வணங்க வைப்பதற்குமாகும், இதனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களிடையே சாட்சியம் இருக்கும்; இந்தக் கட்டத்தில் செய்ய வேண்டிய கிரியை இதுவே. மனுஷகுலம் எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட வேண்டும்? மனுஷனை முழுமையாக நம்ப வைக்க இந்தக் கட்டத்தின் வார்த்தைகளின் கிரியையைப் பயன்படுத்துவதன் மூலமும்; வெளிப்படுத்துதல், நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற சாபம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை முற்றிலும் இணங்க வைப்பதன் மூலமும்; மனுஷனின் கலகத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமும், அவனது எதிர்ப்பை நியாயந்தீர்ப்பதன் மூலமும் அவன் மனுஷகுலத்தின் அநீதியையும் அசுத்தத்தையும் அறிந்து கொள்ளக்கூடும், இதன்மூலம் இவற்றை தேவனின் நீதியான மனநிலைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாகப் பயன்படுத்தலாம். இந்த வார்த்தைகளின் மூலம்தான் மனுஷன் ஜெயங்கொள்ளப்படுகிறான், முழுமையாக சமாதானமடைகிறான். வார்த்தைகள்தான் மனுஷகுலத்தை இறுதியாக ஜெயங்கொள்வதற்கான வழிமுறையாகும், மேலும் தேவனின் ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தைகளின் பலமான தாக்குதலையும் மற்றும் நியாயத்தீர்ப்பையும் ஏற்க வேண்டும். இன்றைய நாளில் பேசப்படும் செயல்முறையானது துல்லியமாக ஜெயங்கொள்ளுதலின் செயல்முறையாகும். ஜனங்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்? இந்த வார்த்தைகளை எவ்வாறு புசிக்கவும் பருகவும் வேண்டும் என்பதை அறிந்து, அவற்றைப் பற்றிய புரிதலை அடைவதன் மூலம் ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஜனங்கள் எவ்வாறு ஜெயங்கொள்ளப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தவரை, இது அவர்களால் செய்யக்கூடிய ஒன்றல்ல. உன்னால் செய்யக்கூடியதெல்லாம், இந்த வார்த்தைகளை புசித்துப் பருகுவதன் மூலம், உன் சீர்கேடு மற்றும் அசுத்தம், உன் கலகத்தன்மை, உன் அநீதி ஆகியவற்றை அறிந்து, தேவனுக்கு முன்பாக விழுவதே ஆகும். தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட பிறகு, உங்களால் அதைக் கடைப்பிடிக்க முடியும், மேலும் உங்களுக்குத் தரிசனங்கள் இருந்து, இந்த வார்த்தைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தும், எந்தவொரு தேர்வையும் நீங்களே செய்யாவிட்டால், நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்கள்—இது இந்த வார்த்தைகளின் விளைவாக இருக்கும். மனுஷகுலம் ஏன் சாட்சியத்தை இழந்தனர்? ஏனென்றால், தேவன் மீது யாருக்கும் விசுவாசம் இல்லை, ஏனென்றால் ஜனங்களின் மனதில் தேவனுக்கு இடமில்லை. மனுஷகுலத்தை ஜெயங்கொள்வது என்பது மனுஷகுலத்தின் விசுவாசத்தை மீட்டெடுப்பதாகும். ஜனங்கள் எப்போதுமே இம்மைக்குரிய உலகில் கண்மூடித்தனமாக ஓட விரும்புகிறார்கள், அவர்கள் பல நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காக அதிகம் விரும்புகிறார்கள், மற்றும் பல ஆடம்பரமான கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் மாம்சத்தைப் பற்றியே சிந்திக்கிறார்கள், மாம்சத்திற்காகத் திட்டமிடுகிறார்கள், தேவனை விசுவாசிப்பதற்கான வழியைத் தேடுவதில் அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. அவர்களுடைய இருதயங்கள் சாத்தானால் பறிக்கப்பட்டுள்ளன, அவர்கள் தேவன் மீதுள்ள பயபக்தியை இழந்துவிட்டார்கள், அவர்கள் சாத்தான் மீது அளவுக்கு மீறிப் பற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன். இவ்வாறு, மனுஷன் சாட்சியை இழந்துவிட்டான், அதாவது தேவனின் மகிமையை இழந்துவிட்டான். மனுஷகுலத்தை ஜெயங்கொள்வதன் நோக்கம் தேவன் மீதான மனுஷனின் பயபக்தியின் மகிமையை மீட்டெடுப்பதாகும். இதை இவ்வாறும் சொல்லலாம்: ஜீவிதத்தைப் பின்தொடராதவர்கள் பலர் உள்ளனர்; ஜீவிதத்தைப் பின்தொடரும் சிலர் இருந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே. ஜனங்கள் தங்கள் எதிர்காலத்தில் ஆர்வமாக உள்ளனர், அதனால் ஜீவிதத்தில் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை. சிலர் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்கிறார்கள், எதிர்க்கிறார்கள், அவருடைய முதுகுக்குப் பின்னால் அவரை நியாயந்தீர்க்கிறார்கள், சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இந்த ஜனங்கள் இப்போது புறக்கணிக்கப்படுகிறார்கள்; இப்போதைக்கு, இந்த கலகக் குமாரர்களுக்கு எதுவும் செய்யப்படப் போவதில்லை, ஆனால் எதிர்காலத்தில் நீ இருளில் வாழ்வாய், அழுவாய், பற்களைக் கடித்துக்கொள்வாய். நீ வெளிச்சத்தில் ஜீவித்திருக்கும்போது அதன் விலைமதிப்பற்ற தன்மையை நீ உணர்வதில்லை, ஆனால் நீ இருள் சூழ்ந்த இரவில் ஜீவித்திருக்கும் போது அந்த விலைமதிப்பற்ற தன்மையை நீ உணருவாய், அப்போது நீ வருந்துவாய். நீ இப்போது நன்றாக இருப்பதாய் உணர்கிறாய், ஆனால் நீ வருந்தும் நாள் வரும். அந்த நாள் வரும்போது, இருள் இறங்கி வெளிச்சம் எங்கேயும் இல்லாதபோது, மிகவும் தாமதமாக வருத்தப்படுவாய். இன்றைய கிரியையை நீ இன்னும் புரிந்து கொள்ளாததால் தான், இப்போது உனக்கு இருக்கும் இந்த நேரத்தை நீ மதிக்கத் தவறுகிறாய். முழு பிரபஞ்சத்தின் கிரியையும் தொடங்கியவுடன், இன்று நான் சொல்லும் அனைத்தும் நிறைவேறியதும், பலர் தலையைப் பிடித்து, வேதனையால் கண்ணீர் சிந்தி அழுவார்கள். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் அழுதுகொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் இருளில் விழுந்துவிட்டிருப்பார்கள் அல்லவா? உண்மையிலேயே ஜீவிதத்தைப் பின்தொடர்ந்து பரிபூரணமாக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்தப்படலாம், அதே நேரத்தில் பயன்படுத்த தகுதியற்ற கலகக் குமாரர்கள் அனைவரும் இருளில் விழுவார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை இழந்துவிடுவார்கள், எதையும் புரிந்துகொள்ளவும் இயலாது போய்விடும். இவ்வாறு அவர்கள் தண்டனையில் மூழ்கடிக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவார்கள். கிரியையின் இந்தக் கட்டத்தில் நீ நன்கு தயாராக இருந்தால், உன் ஜீவிதத்தில் நீ வளர்ந்திருந்தால், நீ பயன்படுத்த தகுதியுடையவனாக இருப்பாய். நீ தயாராகாமல் இருந்தால், அடுத்தக் கட்டக் கிரியைக்கு நீ வரவழைக்கப்பட்டாலும், நீ பயன்படுத்துவற்குத் தகுதியற்றவனாக இருப்பாய்—இந்தக் கட்டத்தில் நீ தயாராக இருக்க விரும்பினாலும் உனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்காது. தேவன் புறப்பட்டுச் சென்றிருப்பார்; இப்போது உனக்கு முன் இருக்கும் வாய்ப்பைக் கண்டுபிடிக்க உன்னால் எங்கு செல்லமுடியும்? தேவனால் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் பயிற்சியைப் பெற உன்னால் எங்கு செல்ல முடியும்? அதற்குள், தேவன் தனிப்பட்ட முறையில் பேசவோ அல்லது குரல் கொடுக்கவோ மாட்டார்; உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் இன்று பேசப்படும் விஷயங்களைப் படிப்பது மட்டுமே ஆகும்—அப்படியானால் புரிதல் எவ்வாறு எளிதாக வரும்? இன்றைய ஜீவிதத்தை விட எதிர்காலத்தில் இருக்கும் ஜீவிதம் எவ்வாறு சிறப்பாக இருக்கும்? அந்தச் சமயத்தில், நீ அழுதுகொண்டே பற்களைக் கடித்துக்கொண்டு ஒரு நடைபிணமாய்த் துயரப்பட மாட்டாயா? உனக்கு இப்போது ஆசீர்வாதங்கள் வழங்கப்படுகின்றன, ஆனால் அவற்றை எவ்வாறு அனுபவிப்பது என்று உனக்கு தெரியவில்லை; நீ ஆசீர்வாதத்துடன் ஜீவிக்கிறாய், ஆனாலும் நீ அதை அறியாமல் இருக்கிறாய். நீ கஷ்டப்படத்தான் போகிறாய் என்பதை இது நிரூபிக்கிறது! இன்று, சிலர் எதிர்க்கிறார்கள், சிலர் கலகம் செய்கிறார்கள், சிலர் இதையும் அதையும் செய்கிறார்கள், நான் அதை வெறுமனே புறக்கணிக்கிறேன், ஆனால் நீ என்ன செய்யவிருக்கிறாய் என்று எனக்குத் தெரியாது என்று மட்டும் நினைத்திட வேண்டாம். உன் சாராம்சம் எனக்குப் புரியாததா? எனக்கு எதிராக ஏன் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கிறாய்? உன் சொந்த நலனுக்காக ஜீவிதத்தையும் ஆசீர்வாதங்களையும் பின்தொடர நீ தேவனை விசுவாசிப்பதில்லையா? நீ விசுவாசிப்பது உன் சொந்த நோக்கத்திற்காக இல்லையா? தற்போதைய தருணத்தில், நான் ஜெயங்கொள்ளும் கிரியையைப் பேசுவதன் மூலம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன், இந்த ஜெயங்கொள்ளும் கிரியை முடிவுக்கு வந்ததும், உனது முடிவு தெளிவாகத் தெரியும். அதை நான் உனக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா?

இன்றைய நாளின் ஜெயங்கொள்ளும் கிரியையானது மனுஷனின் முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் உள்ளது. இன்றைய ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் கடைசிக் காலத்தின் பெரிய வெள்ளை சிங்காசனத்திற்கு முன்பான நியாயத்தீர்ப்பு என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? நீ இதைக் காணவில்லையா? ஜெயங்கொள்ளும் கிரியை ஏன் இறுதிக் கட்டமாக இருக்கிறது? இது ஒவ்வொரு வகையான மனுஷரும் எந்த வகையான முடிவை சந்திப்பார்கள் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாக இல்லையா? சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது, அவர்களின் உண்மையான வண்ணங்களைக் காட்டவும், பின்னர் அவர்களின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தவும் அனைவரையும் அனுமதிப்பதாக இல்லையா? இது மனுஷகுலத்தை ஜெயங்கொள்கிறது என்று சொல்வதை விட, ஒவ்வொரு வகையினருக்கும் என்ன மாதிரியான முடிவு இருக்கும் என்பதை இது காட்டுகிறது என்று சொல்வது நல்லது. இது ஜனங்களின் பாவங்களை நியாயந்தீர்ப்பது மற்றும் பல்வேறு வகையானவர்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றைப் பற்றியதாகும், இதன் மூலம் அவர்கள் தீயவர்களா அல்லது நீதியுள்ளவர்களா என்பதைத் தீர்மானிப்பதாகும். ஜெயங்கொள்ளும் கிரியைக்குப் பிறகு, நன்மைக்கு வெகுமதி அளிக்கும் மற்றும் தீமையைத் தண்டிக்கும் கிரியை வருகிறது. முழுமையாகக் கீழ்ப்படிந்தவர்கள்—அதாவது முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டவர்கள்—தேவனின் கிரியையை முழு பிரபஞ்சத்திற்கும் பரப்புவதற்கான அடுத்தக் கட்டத்தில் வைக்கப்படுவார்கள்; ஜெயங்கொள்ளப்படாதவர்கள் இருளில் வைக்கப்படுவார்கள், பேரழிவைச் சந்திப்பார்கள். இவ்வாறு மனுஷன் வகையின்படி வகைப்படுத்தப்படுவான், தீயவர்கள் தீமையுடன் குழுவாக இருப்பார்கள், அவர்கள் மீது மீண்டும் சூரியனின் வெளிச்சம் படாது, நீதிமான்கள் நன்மையுடன் குழுவாக இருப்பார்கள், வெளிச்சத்தைப் பெற்று வெளிச்சத்திலேயே என்றென்றும் ஜீவித்திருப்பார்கள். சகலத்திற்கும் முடிவு நெருங்கிவிட்டது; மனுஷனின் முடிவு அவனது கண்களுக்கு தெளிவாகக் காட்டப்படுகிறது, மேலும் சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும். அப்படியானால், ஒவ்வொருவரும் வகைப்படுத்தப்படுவதன் வேதனையிலிருந்து ஜனங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? சகல விஷயங்களுக்கும் முடிவு நெருங்கும் போது மனுஷனின் ஒவ்வொரு வகையினரின் வெவ்வேறு முடிவுகள் வெளிப்படும், மேலும் இது முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது செய்யப்படுகிறது (ஜெயங்கொள்ளுதலின் அனைத்து கிரியைகளும் உட்பட. தற்போதைய கிரியையில் இருந்து தொடங்குகிறது). சகல மனுஷரின் முடிவையும் வெளிப்படுத்துவது நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக, சிட்சையின் போதும், கடைசிக் காலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையின் போதும் செய்யப்படுகிறது. ஜனங்களை வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவது என்பது ஜனங்களை அவர்களின் உண்மையான வகைகளுக்குத் திருப்பி அனுப்புவது இல்லை, ஏனென்றால் சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டபோது, ஒரே மாதிரியான மனுஷர்கள் மட்டுமே இருந்தார்கள், அவர்களிடையே ஆண் மற்றும் பெண் என்ற ஒரே பிரிவு தான் இருந்தது. பல வகையான ஜனங்கள் இருக்கவில்லை. பல ஆயிரம் ஆண்டுகால சீர்கேட்டுக்குப் பிறகுதான், பல்வேறு வகை மனுஷர்கள் உருவாகியிருக்கிறார்கள், சிலர் இழிந்த பிசாசுகளின் ஆதிக்கத்தின் கீழும், சிலர் தீய பிசாசுகளின் ஆதிக்கத்தின் கீழும், சிலர் சர்வவல்லவருடைய ராஜ்யத்தின் கீழ் ஜீவித முறையைத் தொடர்பவர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள். இவ்வாறாக மட்டுமே இனங்கள் படிப்படியாக ஜனங்களிடையே உருவாகின்றன, இதனால் மட்டுமே மனுஷனின் பெரிய குடும்பத்திற்குள் ஜனங்கள் இனங்களாகப் பிரிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் அனைவரும் வெவ்வேறு “பிதாக்களை” கொண்டிருக்கிறார்கள்; எல்லோரும் முற்றிலும் சர்வவல்லவரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறார்கள் என்பதாக இருப்பதில்லை, ஏனென்றால் மனுஷன் மிகவும் கலகக்காரன். நீதியான நியாயத்தீர்ப்பு ஒவ்வொரு வகையான மனுஷனின் உண்மையான சுயத்தையும் வெளிப்படுத்துகிறது, எதையும் மறைப்பதில்லை. எல்லோரும் தங்கள் உண்மையான முகத்தை வெளிச்சத்தில் காட்டுகிறார்கள். இந்தக் கட்டத்தில், மனுஷன் இனியும் அவன் முன்பிருந்ததைப் போலில்லை, அவனுடைய மூதாதையரின் பூர்வ சாயல் நீண்ட காலத்திற்கு முன்பே மறைந்துவிட்டது, ஏனென்றால் ஆதாம் மற்றும் ஏவாளின் எண்ணற்ற சந்ததியினர் நீண்ட காலமாகச் சாத்தானால் கைப்பற்றப்பட்டிருக்கிறார்கள், மீண்டும் ஒருபோதும் பரலோகச் சூரியனை அறிய மாட்டார்கள், ஏனென்றால் ஜனங்கள் எல்லா விதமான சாத்தானின் விஷத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். இதனால், ஜனங்களுக்கு பொருத்தமான போய்சேரும் இடங்கள் இருக்கின்றன. மேலும், அவர்களின் மாறுபட்ட விஷங்களின் அடிப்படையில் தான் அவை வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன, அதாவது அவர்கள் இன்று எந்த அளவிற்கு ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் வரிசைப்படுத்தப்படுகின்றனர். மனுஷனின் முடிவு என்பது உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து முன்தீர்மானிக்கப்பட்ட ஒன்று அல்ல. ஏனென்றால், ஆதியில், ஒரே ஒரு இனம் மட்டுமே இருந்தது, அவர்கள் கூட்டாக “மனுஷகுலம்” என்று அழைக்கப்பட்டனர், மனுஷன் முதலில் சாத்தானால் சீர்கெட்டுப்போகவில்லை, ஜனங்கள் அனைவரும் இருள் சூழப்படாமல் தேவனின் வெளிச்சத்தில் ஜீவித்திருந்தார்கள். ஆனால் மனுஷன் சாத்தானால் சீர்கெட்ட பிறகே, எல்லா வகையான மற்றும் அனைத்து வகையான ஜனங்களும் பூமியெங்கும் பரவியிருக்கிறார்கள்—குடும்பத்திலிருந்து வந்த அனைத்து வகையான ஜனங்களும் கூட்டாக “மனுஷகுலம்” என்று பெயரிடப்பட்ட ஆண்களும் பெண்களும் ஆனவர்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் மூதாதையர்களால் அவர்களின் பழமையான மூதாதையர்களிடமிருந்து விலகிச் செல்ல வழிவகுத்தனர்—இந்த மனுஷகுலத்தில் ஆண், பெண் ஆகியோர் அடங்குவர் (அதாவது ஆதியிலே ஆதாமும் ஏவாளும் அவர்களின் பழமையான மூதாதையர்கள் ஆவர்). அந்த நேரத்தில், பூமியில் வாழ்ந்தவர்களில் இஸ்ரவேலர் மட்டுமே யேகோவாவால் வழிநடத்தப்பட்டனர். முழு இஸ்ரவேலிலிருந்தும் (பூர்வ குடும்ப குலத்திலிருந்து என்று அர்த்தம்) தோன்றிய பல்வேறு வகையான ஜனங்கள் பின்னர் யேகோவாவின் வழிகாட்டலை இழந்தனர். இந்த ஆரம்பகால ஜனங்கள், மனுஷ உலகின் விஷயங்களை முழுமையாக அறியாதவர்கள், பின்னர் தங்கள் மூதாதையர்களுடன் சேர்ந்து அவர்கள் கூறிய பிரதேசங்களில் ஜீவித்திருக்கச் சென்றனர், அது இன்றுவரை தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் யேகோவாவிடமிருந்து எவ்வாறு விலகிச் சென்றார்கள் என்பதையும், எல்லா விதமான இழிவான பிசாசுகள் மற்றும் பொல்லாத ஆவிகளால் அவர்கள் இன்றுவரை எவ்வாறு சீர்கெட்டுப்போயிருக்கின்றனர் என்பதையும் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இப்போது வரை ஆழமாக சீர்கெட்டு விஷத்தை பருகியவர்கள்—மீட்கப்படவே முடியாதவர்கள்—தங்கள் மூதாதையர்களுடன் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களைச் சீர்கெட்டுப்போகவைத்த இழிவான பிசாசுகள்தான் அந்த மூதாதையர்கள். இறுதியில் இரட்சிக்கப்படக்கூடியவர்கள் மனுஷகுலத்தின் பொருத்தமான இடத்திற்குப் போய்ச் சேருவார்கள், அதாவது இரட்சிக்கப்பட்ட மற்றும் ஜெயங்கொண்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முடிவுக்கு போய்ச் சேருவார்கள். இரட்சிக்கப்படக்கூடிய அனைவரையும் இரட்சிக்க சகலமும் செய்யப்படும்—ஆனால் உணர்ச்சியற்ற மற்றும் குணப்படுத்த முடியாதவர்களுக்கு, அவர்களின் ஒரே தேர்வு அவர்களின் மூதாதையர்களைப் பின்தொடர்ந்து ஆக்கினைத்தீர்ப்பு என்னும் பாதாளக் குழிக்குள் செல்வதாகும். உனது முடிவு ஆதியிலேயே முன்குறிக்கப்பட்டது, இப்போதுதான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் நினைக்க வேண்டாம். நீ அவ்வாறு நினைத்தால், மனுஷகுலத்தின் சிருஷ்டிப்பின் போது, தனியாக சாத்தானுடைய இனம் உருவாக்கப்படவில்லை என்பதை நீ மறந்துவிட்டாயா? ஆதாம் மற்றும் ஏவாளால் ஆன ஒரே ஒரு மனுஷகுலம் மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டது (அதாவது ஆணும் பெண்ணும் மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டனர்) என்பதை நீ மறந்துவிட்டாயா? ஆரம்பத்தில் நீ சாத்தானின் சந்ததியாக இருந்திருந்தால், யேகோவா மனுஷனை சிருஷ்டித்தபோது, அவர் ஒரு சாத்தானின் குழுவைத் தமது சிருஷ்டிப்பில் சேர்த்தார் என்று அர்த்தமாகாதா? அவர் அப்படி ஏதாவது செய்திருக்க முடியுமா? அவர் தமது சாட்சியத்திற்காக மனுஷனை சிருஷ்டித்தார்; அவர் தமது மகிமைக்காக மனுஷனை சிருஷ்டித்தார். அவரை வேண்டுமென்றே எதிர்ப்பதற்காக அவர் ஏன் சாத்தானின் வம்சாவளியை வேண்டுமென்றே சிருஷ்டித்திருக்க வேண்டும்? யேகோவா எப்படி அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியும்? அவர் அவ்வாறு செய்திருந்தால், அவர் ஒரு நீதியுள்ள தேவன் என்று யார் கூறுவார்கள்? உங்களில் சிலர் இறுதியில் சாத்தானுடன் செல்வீர்கள் என்று நான் இப்போது கூறும்போது, அது நீ ஆதியில் இருந்தே சாத்தானுடன் இருந்தாய் என்று அர்த்தமல்ல; மாறாக, தேவன் உன்னை இரட்சிக்க முயற்சித்திருந்தாலும், நீ அந்த இரட்சிப்பைப் பெறத் தவறும் வகையில் நீ மிகவும் தாழ்ந்து போய்விட்டாய் என்று அர்த்தம். உன்னைச் சாத்தானுடன் வகைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்குக் காரணம் நீ இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவனாகிவிட்டாய் என்பதுதான், மாறாக, தேவன் உனக்கு அநீதியானவர் என்பதாலும், உன் விதியை வேண்டுமென்றே சாத்தானின் உருவகமாக நிர்ணயித்ததாலும், பின்னர் உன்னைச் சாத்தானுடன் வகைப்படுத்தி, வேண்டுமென்றே உன்னை துயரப்படவைக்க விரும்புகிறார் என்பதால் அல்ல. அது ஜெயங்கொள்ளுதல் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் அல்ல. நீ அவ்வாறாக விசுவாசித்தால், உன் புரிதல் மிகவும் ஒருதலைப்பட்சமானதாகும்! ஜெயங்கொள்ளுதலின் இறுதிக் கட்டம் ஜனங்களை இரட்சிப்பதற்கும், அவர்களின் முடிவுகளை வெளிப்படுத்துவதற்கும் செய்யப்படுவதாகும். இது நியாயத்தீர்ப்பின் மூலம் ஜனங்களின் சீர்கேட்டை வெளிப்படுத்துவதும், இதன் மூலம் அவர்கள் மனந்திரும்புவதற்கும், எழுந்து வருவதற்கும், ஜீவனையும் மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையையும் பின்தொடர வேண்டும் என்பதுமாகும். இது உணர்ச்சியற்ற மற்றும் மனச்சோர்வடைந்த ஜனங்களின் இருதயங்களை எழுப்புவதும், நியாயத்தீர்ப்பின் மூலம், அவர்களின் உள்ளார்ந்த கலகத்தைக் காட்டுவதற்கும் ஆகும். இருப்பினும், ஜனங்கள் இன்னும் மனந்திரும்ப முடியாவிட்டாலும், மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பின்தொடர முடியாவிட்டாலும், இந்தச் சீர்கேடுகளைத் தூக்கிப் போட முடியாவிட்டாலும், அவர்கள் இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள்தான். அவர்கள் சாத்தானால் விழுங்கப்படுவார்கள். தேவனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியத்துவம் இதுதான்: ஜனங்களை இரட்சிப்பதும், அவர்களின் முடிவுகளைக் காண்பிப்பதும்தான். நல்ல முடிவுகள், மோசமான முடிவுகள்—இவை அனைத்தும் ஜெயங்கொள்ளும் கிரியையால் வெளிப்படுகின்றன. ஜனங்கள் இரட்சிக்கப்படுவார்களா அல்லது சபிக்கப்படுவார்களா என்பது அனைத்தும் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது வெளிப்படும்.

சகலத்தையும் ஜெயங்கொள்வதன் மூலம், அவற்றின் வகைகளின்படி வகைப்படுத்தப்படுவதே கடைசிக் காலம் ஆகும். ஜெயங்கொள்வதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொருவரின் பாவங்களையும் நியாயந்தீர்ப்பதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும். இல்லையெனில், ஜனங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? உங்களிடையே செய்யப்படும் இந்த வகைப்படுத்துதல் கிரியை, முழு பிரபஞ்சத்திலும் நடைபெறும் இதுபோன்ற கிரியையின் தொடக்கமாகும். இதற்குப் பிறகு, சகல தேசங்களை சேர்ந்த சகல ஜனங்களும் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொருவரும், நியாயந்தீர்க்கப்பட நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டு, அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளும் இந்த ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது, எந்தவொரு நபரும் அல்லது பொருளும் வகைப்படுத்தப்படாமல் விடுவதில்லை; ஒவ்வொரு மனுஷனும் வகைப்படுத்தப்படுவான், ஏனென்றால் சகலத்தின் முடிவும் நெருங்கி வருகிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அதன் முடிவுக்கு வந்துவிட்டன. மனுஷ வாழ்வின் கடைசிக் காலத்தில் இருந்து மனுஷன் எவ்வாறு தப்பிக்க முடியும்? மேலும், உங்கள் கீழ்ப்படியாமை எவ்வளவு காலம் தொடர முடியும்? உங்கள் கடைசிக் காலம் வந்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா? தேவனை வணங்கி, அவர் தோன்றுவதற்கு ஏங்குகிறவர்கள் தேவனின் நீதி தோன்றும் நாளை எப்படி காணாமல் இருக்க முடியும்? நன்மைக்கான இறுதி வெகுமதியை அவர்கள் எவ்வாறு பெற முடியாதுபோகும்? நீ நன்மை செய்பவனா, அல்லது தீமை செய்பவனா? நீ நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் கீழ்ப்படிகிறவனா, அல்லது நீதியுள்ள நியாயத்தீர்ப்பை ஏற்று அதன்பின்னர் சபிக்கப்படுபவனா? நீ வெளிச்சத்தில் நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக ஜீவிக்கிறவனா, அல்லது இருளுக்கு மத்தியில் பாதாளத்தில் வசிக்கிறவனா? உன் முடிவு வெகுமதிகளில் ஒன்றா, அல்லது தண்டனைகளில் ஒன்றா என்பதை மிகத் தெளிவாக அறிந்தவன் நீ மட்டுமே அல்லவா? தேவன் நீதியுள்ளவர் என்பதை மிகத் தெளிவாக அறிந்தவனும், மிக ஆழமாகப் புரிந்துகொள்பவனும் நீ மட்டுமே அல்லவா? ஆகவே உன் நடத்தையும் இருதயமும் எப்படிப்பட்டவை? இன்று நான் உன்னை ஜெயங்கொள்ளும்போது, உனது நடத்தை நல்லதா அல்லது தீயதா என்பதை நான் சொல்ல வேண்டுமா? நீ எனக்காக எவ்வளவு விட்டுக்கொடுத்திருக்கிறாய்? நீ என்னை எவ்வளவு ஆழமாக வணங்குகிறாய்? நீ என்னிடம் எப்படி நடந்துகொள்கிறாய் என்பது உனக்கு தெளிவாகத் தெரியாதா? நீ இறுதியில் சந்திக்கும் முடிவை மற்றவரை விட நீ நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்! மெய்யாகவே, நான் உனக்குச் சொல்கிறேன்: நான் மனுஷகுலத்தை மட்டுமே சிருஷ்டித்தேன், நான் உன்னை சிருஷ்டித்தேன், ஆனால் நான் உங்களை சாத்தானிடம் ஒப்படைக்கவில்லை; நான் வேண்டுமென்றே உங்களை என்னை எதிர்த்துக் கலகம் செய்யவோ அல்லது என்னை எதிர்க்கவோ செய்யவில்லை, அதன்மூலம் என்னால் நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. இந்த பேரழிவுகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் உங்கள் இருதயங்கள் மிகவும் கடினமாகவும், உங்கள் நடத்தை மிகவும் இழிவானதாகவும் இருப்பதால் தான் அல்லவா? ஆகவே, நீங்கள் சந்திக்கும் முடிவு உங்களால் தீர்மானிக்கப்பட்டது தான் இல்லையா? உங்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை மற்றவர்களை விட உங்களுக்கு, உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா? நான் ஜனங்களை ஜெயங்கொள்வதற்கான காரணம், அவர்களை வெளிப்படுத்துவதும், உனக்கு இரட்சிப்பைக் கொடுப்பதும்தான். இது உன்னை தீமை செய்யச் செய்வதல்ல, அல்லது வேண்டுமென்றே உன்னை அழிவின் நரகத்தில் நடக்க வைப்பதும் அல்ல. நேரம் வரும்போது, உன் பெரும் துன்பங்கள், உன் அழுகை மற்றும் பற்களைக் கடிப்பது—இவை அனைத்தும் உன் பாவங்களால் ஏற்பட்டதாக இருக்காதா? ஆகவே, உனது சொந்த நன்மை அல்லது உனது சொந்த தீமைதான் உனது சிறந்த நியாயத்தீர்ப்பு அல்லவா? உன் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த சான்று அல்லவா?

இன்று, சீனாவில் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களில் அவர்களின் கலகத்தனமான மனநிலையை வெளிப்படுத்தவும், அவர்களின் அனைத்து அசிங்கங்களையும் வெளிப்படுத்தவும் நான் கிரியை செய்கிறேன், மேலும் நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்வதற்கான சூழலை இது வழங்குகிறது. பின்னர், முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையின் அடுத்த கட்டத்தை நான் மேற்கொள்ளும்போது, முழு பிரபஞ்சத்திலும் உள்ள அனைவரின் அநீதியையும் நியாயந்தீர்ப்பதற்கு நான் உங்களது நியாயத்தீர்ப்பைப் பயன்படுத்துவேன், ஏனென்றால் நீங்கள்தான் மனுஷரிடையே இருக்கும் கலகக்காரர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள். முன்னேறிச்செல்ல முடியாதவர்கள் வெறுமனே பிரதிபலிப்புப் படலங்களாகவும், ஊழியம் செய்யும் பொருள்களாகவும் மாறுவர், அதேசமயம் முன்னேறக்கூடியவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். முன்னேறிச்செல்ல முடியாதவர்கள் பிரதிபலிப்புப் படலங்களாக மட்டுமே செயல்படுவார்கள் என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனென்றால், எனது தற்போதைய வார்த்தைகள் மற்றும் கிரியைகள் அனைத்தும் உங்கள் பின்னணியைக் குறிவைக்கின்றன, மேலும் நீங்கள் மனுஷகுலம் அனைத்திலும் கலகக்காரர்களின் பிரதிநிதிகளாகவும், அவர்களின் மாதிரிகளாகவும் மாறிவிட்டீர்கள். பின்னர், உங்களை ஜெயங்கொண்ட வார்த்தைகளை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள ஜனங்களை ஜெயங்கொள்ள அவற்றைப் பயன்படுத்துவேன், ஆனால் நீ அவற்றைப் பெற்றிருக்க மாட்டாய். அது உன்னை ஒரு பிரதிபலிப்புப் படலமாக ஆக்காதா? மனுஷகுலம் முழுவதின் சீர்கெட்ட மனநிலை, மனுஷனின் கலகத்தனமான செயல்கள், மனுஷனின் அசிங்கமான உருவங்கள் மற்றும் முகங்கள்—இவை அனைத்தும் இன்று உங்களை ஜெயங்கொள்ள பயன்படுத்தும் வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேசத்தின் ஜனங்களையும் ஒவ்வொரு பிரிவின் ஜனங்களையும் ஜெயங்கொள்ள நான் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவேன், ஏனென்றால் நீங்கள்தான் ஆதிவகையைச் சேர்ந்த முன்னோடிகளாக இருக்கிறீர்கள். இருப்பினும், நான் உங்களை வேண்டுமென்றே கைவிடவில்லை; நீ உன் முயற்சியில் சிறப்பாக செயல்படத் தவறிவிட்டால், நீ குணப்படுத்த முடியாதவன் என நிரூபிக்கப்பட்டால், நீ வெறுமனே ஒரு ஊழியப் பொருளாகவும் பிரதிபலிப்புப் படலமாகவும் இருக்க மாட்டாயா? சாத்தானின் திட்டங்களின் அடிப்படையில் எனது ஞானம் பயன்படுத்தப்படுகிறது என்று நான் ஒரு முறை சொன்னேன். நான் ஏன் அப்படிச் சொன்னேன்? நான் இப்போது சொல்லும் மற்றும் செய்யும் விஷயங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை அதுவல்லவா? உன்னால் முன்னேற முடியாவிட்டால், நீ பரிபூரணமாக்கப்படாவிட்டால், அதற்குப் பதிலாக தண்டிக்கப்பட்டால், நீ ஒரு பிரதிபலிப்புப் படலமாக மாற மாட்டாயா? உனது காலத்தில் நீ நன்கு துயரப்பட்டிருப்பாய், ஆனால் நீ இன்னும் எதுவும் புரிந்து கொள்ளவில்லை; ஜீவிதத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நீ அறிந்திருக்கவில்லை. நீ சிட்சிக்கப்பட்டு நியாயந்தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும், நீ சிறிதும் மாறவில்லை, உனக்குள் ஆழமாக நீ ஜீவிதத்தைப் பெற்றிருக்கவில்லை. உன் கிரியையைச் சோதிக்க நேரம் வரும்போது, நீ நெருப்பு போன்ற கடுமையான சோதனையை மற்றும் இன்னும் பெரிய உபத்திரவத்தை அனுபவிப்பாய். இந்த நெருப்பு உன்னை சாம்பலாக மாற்றும். ஜீவிதத்தை கொண்டிருக்காத ஒருவனாக, தனக்குள் சிறிதளவு தூய தங்கம் கூட இல்லாத ஒருவனாக, பழைய சீர்கெட்ட மனநிலையுடன் சிக்கிக்கொண்ட ஒருவனாக, ஒரு பிரதிபலிப்புப் படலமாக இருப்பதில் நல்ல வேலையைக் கூட செய்ய முடியாத ஒருவனாக இருக்கும் உன்னை எப்படி புறம்பாக்காமல் இருக்கமுடியும்? ஒரு பைசாவிற்குக்கூட மதிப்பில்லாத, ஜீவனைக் கொண்டிருக்காத ஒருவனால் ஜெயங்கொள்ளுதல் கிரியைக்கு என்ன பிரயோஜனம்? அந்த நேரம் வரும்போது, நோவா மற்றும் சோதோமின் நாட்களை விட உனது நாட்கள் கடினமாக இருக்கும்! உனது பிரார்த்தனைகள் உனக்கு எந்த நன்மையும் செய்யாது. இரட்சிப்பின் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், பின்னர் திரும்பி வந்து புதிதாக உன்னால் எப்படி மனந்திரும்ப முடியும்? இரட்சிப்பின் அனைத்து கிரியைகளும் முடிந்ததும், அதற்கு மேல் எதுவும் இருக்காது; தீயவர்களைத் தண்டிக்கும் கிரியையின் ஆரம்பம் மட்டுமே இருக்கும். நீ எதிர்க்கிறாய், நீ கலகம் செய்கிறாய், நீ தீயவை என்று அறிந்த காரியங்களைச் செய்கிறாய். நீ கடுமையான தண்டனையின் இலக்கு இல்லையா? இதை இன்று உனக்காக உச்சரிக்கிறேன். நீ அதைக் கேட்க வேண்டாம் என்று முடிவுசெய்தால், பின்னர் உனக்கு பேரழிவு நேரும்போது, அப்போது நீ வருத்தப்பட ஆரம்பித்து விசுவாசிக்கத் தொடங்கினால் அது தாமதமானதாக இருக்காதா? இன்று நீ மனந்திரும்ப உனக்கு ஒரு வாய்ப்பை நான் தருகிறேன், ஆனால் நீ அவ்வாறு செய்ய விரும்பவில்லை. நீ எவ்வளவு நேரம் காத்திருக்க விரும்புகிறாய்? ஆக்கினைத்தீர்பிற்கான நாள் வரையிலா? உனது கடந்த கால மீறல்களை நான் இன்று நினைவில் கொள்வதில்லை; நான் உன்னை மீண்டும் மீண்டும் மன்னிக்கிறேன், உனது எதிர்மறையான பக்கத்திலிருந்து விலகி, உனது நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்கிறேன், ஏனென்றால் எனது தற்போதைய வார்த்தைகளும் கிரியைகளும் உன்னை இரட்சிப்பதற்காகவே உள்ளன, மேலும் எனக்கு உன்மீது எந்தவித தீயநோக்கமும் இல்லை. ஆனாலும் நீ பிரவேசிக்க மறுக்கிறாய்; கெட்டதில் இருந்து உன்னால் நல்லதைச் சொல்ல முடியாது, மேலும் உனக்கு தயையை எவ்வாறு புரிந்துகொள்வது என்றும் தெரியவில்லை. அத்தகையவர்கள் வெறுமனே தண்டனை மற்றும் நீதியான தண்டனையின் வருகைக்காகக் காத்திருக்கவில்லையா?

மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவனது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? ஜனங்கள் தங்கள் விசுவாசத்தினால் நிறைய பெற்றிருக்கிறார்கள், அது எப்போதும் ஓர் ஆசீர்வாதம் அல்ல. தாவீது உணர்ந்த மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அவர்கள் பெறாமலிருக்கலாம், அல்லது மோசே செய்ததைப் போல யேகோவாவால் தண்ணீர் வழங்கப்பட்டிருக்கலாம். உதாரணமாக, யோபுவின் விசுவாசத்தினால் அவன் யேகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டான், ஆனால் அவனும் பேரழிவைச் சந்தித்தான். நீ ஆசீர்வதிக்கப்பட்டாலும் அல்லது பேரழிவை அனுபவித்தாலும், இரண்டும் ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வுகள்தான். விசுவாசம் இல்லாமல், இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையை உன்னால் பெற முடியாது, மேலும் இன்று உன் கண்களுக்கு முன்பாக காண்பிக்கப்படும் யேகோவாவின் கிரியைகளை உன்னால் காண இயலாது. உன்னால் பார்க்கவும் இயலாது, பெறவும் இயலாது. இந்தத் துன்பங்கள், இந்தப் பேரழிவுகள் மற்றும் அனைத்து நியாயத்தீர்ப்புகள்—இவை உனக்கு ஏற்படவில்லை என்றால், உன்னால் இன்று யேகோவாவின் கிரியைகளைக் காண முடியுமா? இன்று, விசுவாசமே உன்னை ஜெயங்கொள்ள அனுமதிக்கிறது, மேலும் அது ஜெயங்கொள்ளப்படுவது யேகோவாவின் ஒவ்வொரு கிரியையையும் விசுவாசிக்க அனுமதிக்கிறது. விசுவாசத்தினால்தான் நீ இத்தகைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் பெறுகிறாய். இந்த ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம், நீ ஜெயங்கொள்ளப்பட்டு பரிபூரணமடைகிறாய். இன்று நீ பெறும் ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், உனது விசுவாசம் வீணாகிவிடும், ஏனென்றால் நீ தேவனை அறிய மாட்டாய்; நீ அவரை எவ்வளவு விசுவாசித்தாலும், உன் விசுவாசம் நிலைத்திருக்கும், ஆனால் அது உண்மையில் வெற்று வெளிப்பாடாகத்தான் இருக்கும். உன்னை முழுமையாகக் கீழ்ப்படியச் செய்யும் கிரியையான இந்த ஜெயங்கொள்வதன் கிரியையை நீ பெற்ற பின்னரே, உன் விசுவாசம் உண்மையாகவும், நம்பகமானதாகவும் மாறும், மேலும் உனது இருதயம் தேவனை நோக்கித் திரும்பும். “விசுவாசம்” என்ற இந்த வார்த்தையின் காரணமாக நீ மிகுந்த நியாயத்தீர்ப்பையும் சாபத்தையும் அனுபவித்தாலும், நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருக்கிறாய், மேலும் நீ சத்தியமான, மிகவும் உண்மையான, மிகவும் அருமையான விஷயத்தைப் பெறுகிறாய். ஏனென்றால், நியாயத்தீர்ப்பின் போக்கில் மட்டுமே தேவனின் சிருஷ்டிப்புகள் இறுதியாக போய்சேரும் இடத்தை நீ காண்கிறாய்; இந்த நியாயத்தீர்ப்பில்தான் சிருஷ்டிகர் நேசிக்கப்பட வேண்டும் என்பதை நீ காண்கிறாய்; இத்தகைய ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ தேவனின் கரத்தைக் காண்கிறாய்; இந்த ஜெயத்தில் தான் நீ மனுஷ ஜீவிதத்தை முழுமையாக புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மனுஷ ஜீவிதத்தின் சரியான பாதையைப் பெற்று, “மனுஷன்” என்பதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில் மட்டுமே நீ சர்வவல்லவரின் நேர்மையான மனநிலையையும் அவருடைய அழகான, மகிமையான முகத்தையும் காண்கிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ மனுஷனின் தோற்றத்தைப் பற்றி அறிந்துகொண்டு, மனுஷகுலத்தின் “அழியாத வரலாற்றை” புரிந்துகொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மனுஷகுலத்தின் மூதாதையர்களையும் மனுஷகுலத்தின் சீர்கேட்டின் தோற்றத்தையும் புரிந்து கொள்கிறாய்; இந்த ஜெயத்தில்தான் நீ மகிழ்ச்சியையும் ஆறுதலையும் பெறுகிறாய், அத்துடன் முடிவில்லாத சிட்சை, ஒழுக்கம் மற்றும் சிருஷ்டிகரிடமிருந்து அவர் சிருஷ்டித்த மனுஷகுலத்திற்கு கடிந்துகொள்ளுதல் வார்த்தைகளைப் பெறுகிறாய்; இந்த ஜெயங்கொள்ளும் கிரியையில்தான் நீ ஆசீர்வாதங்களைப் பெறுகிறாய், அதே போல் மனுஷனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் பெறுகிறாய்…. இது உனது சிறிய விசுவாசத்தின் காரணமாகத்தான் அல்லவா? இவற்றைப் பெற்ற பிறகு உனது விசுவாசம் வளரவில்லையா? நீ மிகப்பெரிய அளவிற்குப் பெறவில்லையா? நீ தேவனின் வார்த்தையைக் கேட்டிருக்கிறாய், தேவனின் ஞானத்தையும் கண்டிருக்கிறாய் என்பது மட்டுமல்லாமல், அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நீ தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறாய். உனக்கு விசுவாசம் இல்லையென்றால், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது இந்த வகையான நியாயத்தீர்ப்பையோ அனுபவித்திருக்க மாட்டாய் என்றுகூட நீ கூறலாம். ஆனால் விசுவாசம் இல்லாமல், நீ இந்த வகையான ஆக்கினைத்தீர்ப்பையோ அல்லது சர்வவல்லவரிடமிருந்து இந்த வகையான கவனிப்பையோ பெற முடியாது என்பது மட்டுமல்லாமல், சிருஷ்டிகரைச் சந்திக்கும் வாய்ப்பையும் நீ என்றென்றும் இழக்க நேரிடும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ மனுஷகுலத்தின் தோற்றத்தை ஒருபோதும் அறிய மாட்டாய், மனுஷ ஜீவிதத்தின் முக்கியத்துவத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டாய். உன் சரீரம் மரித்துப்போய், உனது ஆத்துமா புறப்பட்டாலும், சிருஷ்டிகரின் எல்லா கிரியைகளையும் நீ புரிந்து கொள்ள மாட்டாய், மேலும் சிருஷ்டிகர் மனுஷகுலத்தை சிருஷ்டித்தபின் பூமியில் இவ்வளவு பெரிய கிரியைகளைச் செய்தார் என்பதையும் நீ அறிய மாட்டாய். அவர் சிருஷ்டித்த இந்த மனுஷகுலத்தின் உறுப்பினராக, நீ அறியாமலே இவ்வாறாக இருளில் விழுந்து, நித்திய தண்டனையை அனுபவிக்க விரும்புகிறாயா? இன்றைய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீ உன்னை விலக்கிக் கொண்டால், நீ எதைத்தான் சந்திப்பாய்? தற்போதைய நியாயத்தீர்ப்பிலிருந்து நீ விலகியவுடன், இந்த கடினமான ஜீவிதத்திலிருந்து உன்னால் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறாயா? நீ “இந்த இடத்தை” விட்டு வெளியேறினால், நீ சந்திப்பது வலிமிகுந்த துயரம் அல்லது பிசாசால் செய்யப்பட்ட கொடூரமான துஷ்பிரயோகம் என்பது உண்மையாகிவிடாதா? உன்னால் தீர்க்கமுடியாத பகல் மற்றும் இரவுகளைச் சந்திக்க முடியுமா? இந்த நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்ததால், எதிர்கால சித்திரவதைகளை நீ என்றென்றும் தவிர்க்கலாம் என்று நினைக்கிறாயா? உனது பாதையின் குறுக்கே என்ன வரும்? அது உண்மையிலேயே நீ நம்பும் ஷாங்க்ரி-லாவாக இருக்குமோ? நீ இப்போது செய்வது போல யதார்த்தத்திலிருந்து தப்பிச்செல்வதன் மூலம் எதிர்கால நித்திய ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? இன்றைய நாளுக்குப் பிறகு, இந்த வகையான வாய்ப்பையும் இந்த வகையான ஆசீர்வாதத்தையும் மீண்டும் உன்னால் கண்டுபிடிக்க முடியுமா? உனக்குப் பேரழிவு நேரும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? மனுஷகுலம் மொத்தமும் ஓய்வெடுக்கச் செல்லும்போது உன்னால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா? உனது தற்போதைய மகிழ்ச்சியான ஜீவிதமும், உனது இணக்கமான சிறிய குடும்பமும்—அவை உனது எதிர்காலத்தில் போய்ச்சேரும் நித்திய இடத்திற்கு மாற்றாக இருக்க முடியுமா? நீ உண்மையான விசுவாசத்தைக் கொண்டிருந்தால், உனது விசுவாசத்தின் காரணமாக நீ பெருமளவில் பெற்றால், அப்போது அவற்றையெல்லாம் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனான நீ பெற வேண்டும், மேலும் அவற்றை நீ ஆரம்பத்திலேயே பெற்றிருக்க வேண்டும். அத்தகைய ஜெயத்தை விட உனது விசுவாசத்திற்கும் ஜீவிதத்திற்கும் வேறு எதுவும் பயனளிக்காது.

இன்று, ஜெயங்கொள்ளப்பட்டவர்களிடம் தேவன் என்ன கேட்கிறார், பரிபூரணமானவர்கள் உடனான அவருடைய அணுகுமுறை என்ன, நீ தற்போது எதில் பிரவேசிக்க வேண்டும் என்பனவற்றை நீ புரிந்து கொள்ள வேண்டும். உனக்குத் தேவைப்படும் சில விஷயங்களை நீ கொஞ்சம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். சில இரகசிய வார்த்தைகளை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டியதில்லை; அவை ஜீவிதத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்காது, அவற்றை நீ வெறுமனே விரைவாகப் பார்த்தால் மட்டும் போதும். ஆதாம் மற்றும் ஏவாளின் மறைபொருள் போன்ற மறைபொருட்கள் பற்றி நீ படிக்கலாம்: ஆதாமும் ஏவாளும் அப்போது என்ன செய்தார்கள், இன்று தேவன் என்ன கிரியை செய்ய விரும்புகிறார் போன்றவற்றை பற்றி நீ படிக்கலாம். மனுஷனை ஜெயங்கொள்வதிலும், பரிபூரணமாக்குவதிலும், ஆதாமும் ஏவாளும் முன்னர் எப்படி இருந்தனரோ அப்படியே மனுஷனையும் இருக்க வைக்க தேவன் விரும்புகிறார் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். உனது இருதயத்தில், தேவனின் தரத்தை நிறைவு செய்ய அடைய வேண்டிய பரிபூரணத்தின் அளவைப் பற்றி உனக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும், பின்னர் நீ அதை அடைய முயற்சிக்க வேண்டும். இது உனது நடைமுறையுடன் தொடர்புடையது, இது நீ புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இந்த விஷயங்களைப் பற்றிய தேவனின் வார்த்தைகளின்படி பிரவேசிக்க உனக்கு இது போதும். “மனிதகுலம் இன்று இருக்கும் இடத்தை அடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கடந்துள்ளது,” என்று நீ படிக்கும்போது, உனக்கு ஆர்வம் மிகுதியாகிறது, அதனால் நீ சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஒரு பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாய். “மனுஷகுலத்தின் வளர்ச்சி ஆறாயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கிறது என்று தேவன் கூறுகிறார், இல்லையா? அப்படியானால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் என்று ஏன் கூறப்படுகிறது?” இந்தக் கேள்விக்கு விடை காணுவது என்ன பயனைத் தரும்? தேவன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உழைத்து வருகிறாரா அல்லது நூறு மில்லியன் ஆண்டுகளாக உழைத்து வருகிறாரா—இதைப் பற்றி நீ அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புவாரா? ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக நீ இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று அல்ல. இந்த வகையான பேச்சைச் சுருக்கமாக பரிசீலிக்க நீ அனுமதிக்க வேண்டும், அதை ஒரு தரிசனம் போல் புரிந்து கொள்ள முயற்சிக்காதே. இன்று நீ எதனுள் பிரவேசித்து, எதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும், பின்னர் அதைப் பற்றி நீ உறுதியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீ ஜெயங்கொள்ளப்படுவாய். மேற்கூறியவற்றைப் படித்த பிறகு, உனக்குள் ஓர் இயல்பான தாக்கம் இருக்க வேண்டும்: தேவன் பதற்றத்துடன் எரிந்துக் கொண்டிருக்கிறார், அவர் நம்மை ஜெயங்கொண்டு மகிமையையும் சாட்சியத்தையும் பெற விரும்புகிறார், எனவே நாம் அவருடன் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும்? அவரால் முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டு அவருடைய சாட்சியாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்? மகிமையைப் பெற தேவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் அல்லாமல், தேவனின் ஆதிக்கத்தின் கீழ் ஜீவிக்க நம்மை நாம் அனுமதிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இதைத்தான் ஜனங்கள் சிந்திக்க வேண்டும். தேவனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவாக இருக்க வேண்டும். அதுவே உங்களது பொறுப்பு. இந்தத் தெளிவைப் பெற்ற பின்னரே உங்களால் பிரவேசிக்க முடியும், இந்த கிரியையை உங்களால் அறிய முடியும், உங்களால் முற்றிலும் கீழ்ப்படிய முடியும். இல்லையெனில், நீங்கள் மெய்யான கீழ்ப்படிதலை அடைய மாட்டீர்கள்.

முந்தைய: திரித்துவம் என்பது உண்டா?

அடுத்த: ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக