VI. வேதாகமம் குறித்த வார்த்தைகள்
240. பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவத்தினுடையது) வேதாகமத்தை வாசிப்பதாக இருந்து வருகிறது; வேதாகமத்திலிருந்து வெளியேறுவது என்பது கர்த்தர் மீதான நம்பிக்கை என்று ஆகிவிடாது, வேதாகமத்திலிருந்து வெளியேறுவது மதங்களுக்கு எதிரான கொள்கையும் வழக்கத்திற்கு மாறான நம்பிக்கையுமாக இருக்கிறது. ஜனங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்கும்போதும், இந்தப் புத்தகங்களின் அஸ்திபாரம் வேதாகமத்தைக் குறித்த விளக்கமாக இருக்க வேண்டும். அதாவது, நீ கர்த்தரை விசுவாசித்தால், நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதாகமத்திற்கு வெளியே வேதாகமத்திற்கு தொடர்பில்லாத எந்த புத்தகத்தையும் நீ ஆராதிக்கக்கூடாது. நீ அவ்வாறு செய்தாயானால், நீ தேவனுக்குத் துரோகஞ்செய்கிறாய். வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாக பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது. ஆகையால், அவர்கள் கர்த்தரை விசுவாசிக்க ஆரம்பித்ததுமே, அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்து, அதை மனப்பாடம் செய்கின்றனர். வேதாமத்தில் அவர்களால் எவ்வளவு அதிகமாக மனப்பாடம் செய்ய முடிகிறதோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள் மற்றும் மாபெரும் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. வேதாகமத்தை வாசித்து, அதை அடுத்தவர்களிடம் பேசக்கூடியவர்கள் எல்லோரும் நல்ல சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் இருக்கின்றனர். இத்தனை வருடங்களாக, கர்த்தர் மீதான ஜனங்களின் விசுவாசமும் நம்பிக்கையும் வேதாகமம் குறித்த அவர்களுடைய புரிதலின் அளவிற்கு ஏற்பவே அளவிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் ஏன் தேவனை விசுவாசிக்க வேண்டும், தேவனை எவ்வாறு விசுவாசிக்க வேண்டும் என்று எதுவும் தெரிவதில்லை, ஆனால் வேதாகமத்தின் அதிகாரங்களைப் புரிந்துகொள்ளவதற்கான குறிப்புகளை கண்மூடித்தனமாக தேடுகின்றனர். ஜனங்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வழிகாட்டுதலைப் பின்தொடர்ந்தே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் வேதாகமத்தை தீவிரமாக வாசித்து ஆராய்ந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை. பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை வேதாகமத்திற்கு வெளியே ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. வேதாகமத்திலிருந்து ஒருவரும் வெளியேறவுமில்லை, அவர்கள் அவ்வாறு செய்யத் துணிவு கொள்ளவுமில்லை. ஜனங்கள் வேதாகமத்தை இத்தனை வருடங்களாக படித்து, பல விளக்கங்களுடன் வந்துள்ளனர், அதற்காகத் தங்கள் கடின உழைப்பைத் தந்துள்ளனர். வேதாகமத்தைக் குறித்த பல கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் கொண்டுள்ளனர், இதை வைத்து முடிவில்லாமல் விவாதிக்கின்றனர், இதன்மூலம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பல்வேறு மதப்பிரிவுகள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் எல்லோரும் வேதாகமத்தில் உள்ள சில விசேஷித்த விளக்கங்களை அல்லது மிகவும் ஆழமான இரகசியங்களைக் கண்டுபிடிக்க விரும்புகின்றனர், அவர்கள் அதை ஆராய விரும்புகின்றனர், மேலும் இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியைக் குறித்த பின்னணியையோ அல்லது யூதேயாவில் இயேசுவின் கிரியைக் குறித்த பின்னணியையோ அல்லது வேறு ஒருவருக்கும் தெரியாத அதிக இரகசியங்களையோ கண்டுபிடிக்க விரும்புகின்றனர். கருத்து மற்றும் விசுவாசம் ஆகியவற்றில் ஒன்றே வேதாகமம் குறித்த ஜனங்களின் அணுகுமுறையாக இருக்கிறது. வேதாகமத்திலுள்ள சம்பவத்தையோ அல்லது சாராம்சத்தையோ பற்றி ஒருவரும் முற்றிலும் தெளிவாக அறிந்திருக்க முடியாது. ஆகையால், வேதாகமம் என்று வரும்போது ஜனங்கள் இன்றும் வேதாகமத்தைப் பற்றி விவரிக்க முடியாத அதிசய உணர்வைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அதைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் மற்றும் அதில் அதிக விசுவாசம் வைத்திருக்கின்றனர். இன்று, எல்லோருமே வேதாகமத்தில் கடைசி நாட்களின் கிரியையைக் குறித்த தீர்க்கதரிசனங்களைக் கண்டறிய விரும்புகின்றனர். மேலும், கடைசி நாட்களில் தேவன் என்ன கிரியை செய்கிறார், கடைசி நாட்களுக்கான என்னென்ன அடையாளங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, அவர்கள் வேதாகமத்தை ஆராதிப்பது மிகவும் தீவிரமாகிறது. மேலும், கடைசி நாட்கள் நெருங்க நெருங்க, வேதாகமத்தைக் குறித்த, குறிப்பாக கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மீது அதிக கண்மூடித்தனமான நம்பிக்கையை வைக்கின்றனர். வேதாகமத்தின் மீது அத்தகைய கண்மூடித்தனமான விசுவாசத்தை, வேதாகமத்தின் மீது அத்தகைய நம்பிக்கையை கொண்டிருப்பதனால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாடுவதில் எந்த விருப்பத்தையும் கொண்டிருப்பதில்லை ஜனங்கள் தங்களுடைய கருத்துக்களில் வேதாகமத்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டுவர முடியும் என்றும், வேதாகமத்தில் மட்டுமே தேவனுடைய தேவனுடைய அடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும், வேதாகமத்தில் மட்டுமே தேவனுடைய கிரியையைக் குறித்த இரகசியங்கள் மறைந்துள்ளன என்றும், வேதாகமத்தைத் தவிர வேறு எந்த புத்தகங்களாலோ அல்லது நபர்களாலோ தேவனைப் பற்றிய அனைத்தையும் மற்றும் அவருடைய கிரியை முழுவதையும் தெளிவுபடுத்த முடியாது என்றும், வேதாகமத்தால் தான் பரலோகத்தின் கிரியையை பூமிக்கு கொண்டுவர முடியும் என்றும், வேதாகமத்தால்தான் காலங்களை ஆரம்பித்தும் முடித்தும் வைக்க முடியும் என்றும் நம்புகின்றனர். இந்த கருத்துக்களைக் கொண்டிருப்பதானால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடுவதற்கு ஜனங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆகையால், கடந்த காலங்களில் வேதாகமம் ஜனங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு ஒரு தடையாகவே மாறியுள்ளது. வேதாகமம் இல்லாமல், வேறு இடங்களிலும் ஜனங்களால் தேவனுடைய அடிச்சுவடுகளைத் தேட முடியும். ஆனாலும் இன்று, அவருடைய அடிச்சுவடுகள் வேதாகமத்தால் உள்ளடக்கி வைக்கப்பட்டுள்ளன, அவருடைய சமீபத்திய கிரியைகளை விரிவுபடுத்துவது இரண்டு மடங்கு கடினமாகவும், மலையளவு பெரிய போராட்டமாகவும் மாறியுள்ளது. வேதாகமத்தின் பிரபலமான அதிகாரங்களும் வசனங்களும் மற்றும் வேதாகமத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் தான் இதற்கெல்லாம் காரணமாகும். வேதாகமம் ஜனங்களுடைய மனதில் ஒரு விக்கிரகமாக மாறியுள்ளது, அவர்களுடைய மூளையில் அது ஒரு புதிராக மாறியுள்ளது. மேலும், வேதாகமத்திற்கு வெளியேயும் தேவனால் கிரியை செய்ய முடியும் என்று நம்புவதற்கு அவர்களால் முடியவில்லை, தேவனை வேதாகமத்திற்கு வெளியேயும் காண முடியும் என்பதை ஜனங்களால் நம்ப முடிவதில்லை, இறுதி கிரியையின்போது தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி புதியதாக ஆரம்பிக்க முடியும் என்பதையும் அவர்களால் நம்ப முடிவதில்லை. இது ஜனங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாகும். அவர்களால் அதை நம்பவும் முடியவில்லை, அவர்களால் அதை கற்பனை செய்துபார்க்கவும் முடியவில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு வேதாகமம் ஒரு பெரிய தடையாகவும், இந்த புதிய கிரியையை தேவன் விரிவுபடுத்துவதில் சிரமமாகவும் மாறியுள்ளது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து
241. வேதாகமம் என்ன வகையான புத்தகம்? பழைய ஏற்பாடானது நியாயப்பிரமாண காலத்தில் தேவன் செய்த கிரியையாகும். நியாயப்பிரமாண காலத்தில் யேகோவா செய்த எல்லா கிரியைகளையும், அவருடைய சிருஷ்டிப்பின் கிரியையையும் வேதாகமத்தின் பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. இவையனைத்தும் யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. மேலும், இது இறுதியாக மல்கியா புத்தகத்துடன் யேகோவா செய்த கிரியையின் கணக்குகளை முடிக்கிறது. தேவன் செய்த இரண்டு கிரியைகளை பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது: ஒன்று சிருஷ்டிப்பின் கிரியையாகும், மற்றொன்று நியாயப்பிரமாணத்தின் கட்டளையாகும். இரண்டுமே யேகோவாவால் செய்யப்பட்ட கிரியையாக இருந்தன. நியாயப்பிரமாணத்தின் காலமானது யேகோவா தேவனின் நாமத்தில் செய்யப்பட்ட கிரியையைக் குறிக்கிறது. இது முக்கியமாக யேகோவா நாமத்தினால் செய்யப்பட்ட முழு கிரியையாகும். இவ்வாறு, பழைய ஏற்பாடு யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கிறது, புதிய ஏற்பாடு பிரதானமாக இயேசுவின் நாமத்தினால் செய்யப்பட்ட இயேசுவின் கிரியையைப் பதிவு செய்கிறது. இயேசுவின் நாமத்தின் முக்கியத்துவமும், அவர் செய்த கிரியையும் பெரும்பாலும் புதிய ஏற்பாட்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டுக் காலத்தின்போது, யேகோவா இஸ்ரவேலில் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டினார். பூமியில் இஸ்ரவேலரின் ஜீவிதத்தை வழிநடத்தி, அவர்கள் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், பூமியில் தாம் தெரிந்துகொண்ட முதல் ஜனக்கூட்டம், தமது இருதயத்திற்கு ஏற்ற ஜனங்கள், தாம் தனிப்பட்ட முறையில் வழிநடத்திய முதல் ஜனக்கூட்டம் என்பதை நிரூபித்தார். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் யேகோவா முதலில் தெரிந்துகொள்ளப்பட்வையாக இருந்தன. ஆதலால், நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவின் கிரியை முடிவடையும் வரையிலும் அவர் எப்போதும் அவர்களிடமே கிரியை செய்தார். இரண்டாம் கட்ட கிரியையானது புதிய ஏற்பாட்டுக் கிருபையின் காலத்தின் கிரியையாக இருந்தன. மேலும், இது யூத ஜனங்களுக்கு மத்தியிலும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு மத்தியிலும் செய்யப்பட்டது. இயேசு மாம்சமாகிய தேவனாக இருந்ததனால் இக்கிரியையின் எல்லை சிறியதாக இருந்தது. இயேசு யூதேயா தேசம் முழுவதும் மட்டுமே கிரியை செய்தார், மூன்றரை ஆண்டுகள் மட்டுமே கிரியை செய்தார். இதனால், புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரியையின் அளவை விட மிஞ்சியதாக இருக்க முடியவில்லை.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து
242. தேவன் நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைச் செய்த பிறகு, பழைய ஏற்பாடு உருவாக்கப்பட்டது, அப்போதுதான் ஜனங்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள். இயேசு வந்ததற்குப் பிறகு, அவர் கிருபையின் காலத்தின் கிரியையைச் செய்தார், அவருடைய அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினர். வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இவ்வாறே உருவாக்கப்பட்டன. இன்றும் கூட, தேவனை விசுவாசிக்கிற எல்லோரும் வேதாகமத்தை வாசித்து வருகின்றனர். வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நிச்சயமாகவே, இது தீர்க்கதரிசிகளின் முன்னறிவுப்புகள் சிலவற்றையும் கொண்டுள்ளது, அத்தகைய முன்னறிவுப்பானது எவ்விதத்திலும் வரலாறு ஆகாது. வேதாகமத்தில் பல பகுதிகள் உள்ளன, அதில் வெறும் தீர்க்கதரிசனம் மட்டுமோ, யேகோவாவின் கிரியை மட்டுமோ, பவுலின் நிருபங்கள் மட்டுமே இல்லை. வேதாகமத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம், யாத்திராகமம்… மற்றும் தீர்க்கதரிசிகள் எழுதிய தீர்க்கதரிசன புத்தகங்களும் உள்ளன. இறுதியில், பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்துடன் முடிவடைகிறது. இது யேகோவாவால் வழிநடத்தப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியையை பதிவு செய்கிறது. இது ஆதியாகமம் முதல் மல்கியா புத்தகம் வரையுள்ள நியாயப்பிரமாண காலத்தின் அனைத்து கிரியைகளையும் பற்றிய விரிவான பதிவாகும். அதாவது, நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவால் வழிநடத்தப்பட்ட ஜனங்கள் அனுபவித்த அனைத்தையும் பழைய ஏற்பாடு பதிவுசெய்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தின்போது, யேகோவா எழுப்பிய ஏராளமான தீர்க்கதரிசிகள் அவருக்காக தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் பல்வேறு கோத்திரங்களுக்கும் தேசங்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர், மேலும் யேகோவா செய்யவேண்டிய கிரியையை முன்னறிவித்தனர். எழுப்பப்பட்ட இந்த ஜனங்கள் அனைவருக்கும் யேகோவாவால் தீர்க்கதரிசன ஆவி வழங்கப்பட்டது: அவர்களால் யேகோவாவிடமிருந்து தரிசனங்களைக் காணவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் முடிந்தது, இவ்வாறு அவர்கள் அவரால் ஏவப்பட்டு தீர்க்கதரிசனத்தை எழுதினர். அவர்கள் செய்த கிரியை யேகோவாவின் சத்தத்தின் வெளிப்பாடாகவும், யேகோவாவின் தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. மேலும், அந்த நேரத்தில் யேகோவாவின் கிரியையானது ஆவியானவரைப் பயன்படுத்தி வெறுமென ஜனங்களை வழிநடத்துவதாக இருந்தது. அவர் மாம்சமாக மாறியிருக்கவில்லை, ஜனங்கள் அவருடைய முகத்தில் எதையும் காணவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையைச் செய்ய பல தீர்க்கதரிசிகளை எழுப்பி, அவர்களிடம் வேதவாக்குகளைக் கொடுத்தார், அவர்கள் அதை இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் குலத்துக்கும் அறிவித்தனர். தீர்க்கதரிசனம் உரைப்பதே அவர்களுடைய கிரியையாக இருந்தது, அவர்களில் சிலர் மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக யேகோவாவின் அறிவுரைகளை எழுதினர். யேகோவாவின் அதிசயத்தையும் ஞானத்தையும் ஜனங்கள் காணும்படியாக, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கும், எதிர்கால கிரியையை அல்லது அந்த நேரத்தில் இன்னும் செய்யப்பட வேண்டிய கிரியையை முன்னறிவிப்பதற்காகவும் யேகோவா இந்த நபர்களை எழுப்பினார். இந்தத் தீர்க்கதரிசன புத்தகங்கள் வேதாகமத்தின் பிற புத்தகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. அவை யேகோவாவிடமிருந்து தரிசனங்கள் அல்லது சத்தத்தைப் பெற்றுக்கொண்டவர்களால் தீர்க்கதரிசன ஆவி வழங்கப்பட்டவர்களால் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாமே யேகோவா தனது கிரியையை செய்து முடித்த பிறகு ஜனங்களால்பதிவு செய்யப்பட்டவைகளாகும். ஆதியாகமம் மற்றும் யாத்திராகமம் ஆகிய புத்தகங்களை ஏசாயா மற்றும் தானியேல் புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது என்பது போலவே, யேகோவா எழுப்பிய தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தையும் இந்த புத்தகங்களால் தவிர்த்து ஒதுக்க முடியாது. கிரியை செய்யப்படுவதற்கு முன்பே தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுவிட்டடன. இதற்கிடையில், கிரியை செய்து முடிக்கப்பட்ட பிறகுதான் மற்ற புத்தகங்கள் எழுதப்பட்டன, இதற்குத்தான் ஜனங்கள் தகுதியானவர்களாக இருந்தனர். அக்கால தீர்க்கதரிசிகள் யேகோவாவினால் ஏவப்பட்டு, சில தீர்க்கதரிசனங்களை உரைத்தனர். அவர்கள் பல வார்த்தைகளைப் பேசினார்கள். மேலும், அவர்கள் கிருபையின் காலத்தின் காரியங்களையும், கடைசி நாட்களில் உலகின் அழிவையும், யேகோவா செய்ய திட்டமிட்ட கிரியையையும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். மீதமுள்ள புத்தகங்கள் அனைத்தும் இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. ஆதலால், நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, யேகோவா இஸ்ரவேலில் செய்ததைப் பற்றியே பிரதானமாக வாசிக்கிறீர்கள். இஸ்ரவேலை வழிநடத்தும் யேகோவாவின் கிரியை, எகிப்திலிருந்து இஸ்ரவேலரை வழிநடத்த மோசேயை அவர் பயன்படுத்தியது, மோசே ஜனங்களை பார்வோனின் பிடிகளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றது, அதன் பிறகு அவர்கள் கானானுக்குள் பிரவேசித்தது, இதைத் தொடர்ந்து கானானில் எல்லாமே அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது ஆகியவற்றையே வேதாகமத்தின் பழைய ஏற்பாடு பிரதானமாக பதிவு செய்கிறது. இது தவிர, எல்லாமே இஸ்ரவேல் முழுவதும் யேகோவாவின் கிரியையைக் குறித்த பதிவுகளால் ஆனதாகும். பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட எல்லாமே இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியையாக இருக்கிறது. அது ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்த தேசத்தில் யேகோவா செய்த கிரியையாகும். நோவாவிற்குப் பிறகு தேவன் அதிகாரப்பூர்வமாக பூமியிலுள்ள ஜனங்களை வழிநடத்தத் துவங்கியது முதல், பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை அனைத்தும் இஸ்ரவேலின் கிரியையாக இருக்கிறது. இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யப்பட்ட எந்த கிரியையும் ஏன் பதிவு செய்யப்படவில்லை? ஏனென்றால், இஸ்ரவேல் தேசமே மனுக்குலத்தின் பிறப்பிடமாக இருக்கிறது. ஆதியில், இஸ்ரவேலைத் தவிர வேறு எந்த தேசங்களும் காணப்படவில்லை. மேலும், யேகோவா வேறு எந்த இடத்திலும் கிரியை செய்யவில்லை. இதனால், வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் அந்த நேரத்தில் இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியையாகும். ஏசாயா, தானியேல், எரேமியா, எசேக்கியேல் ஆகிய தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட வார்த்தைகள் பூமியில் அவருடைய பிற கிரியைகளை முன்னறிவிக்கின்றன. அவை யேகோவா தேவனுடைய கிரியையையே முன்னறிவிக்கின்றன. இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவையாகும். அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தது. மேலும், இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைத் தவிர, மற்ற அனைத்துமே அந்த நேரத்தில் யேகோவாவின் கிரியையைப் பற்றிய ஜனங்களுடைய அனுபவங்களின் பதிவாகும்.
சிருஷ்டிப்பின் கிரியையானது மனுக்குலம் இருப்பதற்கு முன்பே நடந்தது, ஆனால் ஆதியாகமம் புத்தகமானது மனுக்குலம் இருந்த பிறகே வந்தது. இது நியாயப்பிரமாண காலத்தில் மோசே எழுதிய புத்தகமாகும். இது இன்று உங்கள் மத்தியில் நடக்கும் காரியங்களைப் போலவே இருக்கிறது: அவை நடந்த பிறகு, நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் ஜனங்களுக்குக் காண்பிப்பதற்காகவும், எதிர்கால ஜனங்களுக்காகவும் எழுதுகிறீர்கள். நீ பதிவுசெய்தவை கடந்த காலங்களில் நிகழ்ந்தவையாகும், அவை வரலாறே தவிர வேறொன்றுமில்லை. பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட காரியங்கள் இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியையாகும். புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை கிருபையின் காலத்தில் இயேசுவின் கிரியையாகும். தேவன் இரண்டு வெவ்வேறு காலங்களில் செய்த கிரியையை அவை ஆவணப்படுத்துகின்றன. நியாயப்பிரமாண காலத்தின்போது தேவன் செய்த கிரியையை பழைய ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது, ஆதலால் பழைய ஏற்பாடு ஒரு வரலாற்றுப் புத்தகமாகும், அதே நேரத்தில் புதிய ஏற்பாடு கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தயாரிப்பாகும். புதிய கிரியை துவங்கியபோது, புதிய ஏற்பாடும் காலாவதியானது. ஆகையால், புதிய ஏற்பாடும் ஒரு வரலாற்றுப் புத்தகமாகவே இருக்கிறது. நிச்சயமாகவே, புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப் போலவே முறையானதாகவும் இல்லை, அது பல காரியங்களை பதிவு செய்யவும் இல்லை. யேகோவாவால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இயேசுவின் சில வார்த்தைகள் மட்டுமே நான்கு சுவிசேஷங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாகவே, இயேசுவும் அநேக கிரியைகளைச் செய்தார், ஆனால் அது விரிவாக பதிவு செய்யப்படவில்லை. இயேசு எவ்வளவு கிரியை செய்தார் என்பது புதிய ஏற்பாட்டில் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளில் அவர் பூமியில் செய்த கிரியையும், அப்போஸ்தலர்களின் கிரியையும் யேகோவாவின் கிரியையை விட மிகவும் குறைவாகவே இருந்தன. இதனால், பழைய ஏற்பாட்டை விட புதிய ஏற்பாட்டில் குறைவான புத்தகங்களே உள்ளன.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து
243. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருபது முதல் முப்பது ஆண்டுகள் சென்ற பிறகே புதிய ஏற்பாட்டின் சுவிசேஷ புத்தகங்கள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்கள் பழைய ஏற்பாட்டை மட்டுமே வாசித்தனர். அதாவது, கிருபையின் காலத்தின் துவக்கத்தில் ஜனங்கள் பழைய ஏற்பாட்டை வாசித்தனர். புதிய ஏற்பாடானது கிருபையின் காலத்தின் போதே தோன்றியது. இயேசு கிரியை செய்தபோது புதிய ஏற்பாடு கிடையாது. அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்கு ஏறிச் சென்ற பிறகே ஜனங்கள் அவருடைய கிரியையைப் பதிவு செய்தனர். அதன்பிறகுதான் நான்கு சுவிசேஷங்களும் வந்தன, அத்துடன் பவுல் மற்றும் பேதுருவின் நிருபங்களும், வெளிப்படுத்துதல் புத்தகமும் வந்தன. இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்று முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த ஆவணங்களை தேடியெடுத்து தொகுத்தனர், அதன்பிறகுதான் வேதாகமத்தின் புதிய ஏற்பாடு வந்தது. இந்த கிரியை முடிந்த பிறகுதான் புதிய ஏற்பாடு வந்தது. இதற்கு முன்பு அது காணப்படவில்லை. தேவன் அந்த கிரியையை எல்லாம் செய்திருந்தார், பவுலும் பிற அப்போஸ்தலர்களும் பல்வேறு இடங்களிலுள்ள சபைகளுக்கு பல நிருபங்களை எழுதியிருந்தனர். அவர்களுக்குப் பின் வந்தவர்கள் அவர்களுடைய நிருபங்களைத் தொகுத்து, பத்மு என்னும் தீவில் யேவோனால் பதிவு செய்யப்பட்ட மாபெரும் தரிசனத்தை சேர்த்தனர், இந்த தரிசனத்தில்தான் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. ஜனங்கள் இந்த வரிசையை உருவாக்கியுள்ளனர், இது இன்றைய வெளிப்பாடுகளிலிருந்து வேறுபட்டதாகும். இன்று பதிவு செய்யப்படுவது தேவனுடைய கிரியையின் படிகளுக்கு ஏற்ப உள்ளது. இன்று ஜனங்கள் ஈடுபடுவது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கிரியையாகவும், அவரால் தனிப்பட்ட முறையில் உச்சரிக்கப்பட்டட வார்த்தைகளாகவும் இருக்கிறது. மனிதனாகிய நீ தலையிட வேண்டியதில்லை. ஆவியானவரிடமிருந்து நேரடியாக வரும் வார்த்தைகள் படிப்படியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை மனிதனின் பதிவுகளின் வரிசைகளிலிருந்து வேறுபடுகின்றன. அவர்களுடைய கல்வி நிலை மற்றும் மனித திறனுக்கு ஏற்ப அவர்கள் பதிவு செய்தது இருந்தது என்று கூறலாம். அவர்கள் பதிவுசெய்தது மனிதர்களின் அனுபவங்களாகவே இருந்தது. ஒவ்வொன்றும் தனது சொந்த பதிவு செய்யும் முறையையும் அறிவையும் கொண்டிருந்தன, மேலும் ஒவ்வொரு பதிவும் வேறுபட்டதாக இருந்தது. ஆகவே, நீ வேதாகமத்தை தேவனாக ஆராதித்தால், நீ மிகவும் புத்தியீனனாகவும், முட்டாள்தனமானவனாகவும் இருப்பாய்! நீ ஏன் இன்றையத் தேவனுடைய கிரியையை நாடவில்லை? தேவனுடைய கிரியையால் மட்டுமே மனிதனை இரட்சிக்க முடியும். வேதாகமத்தால் மனிதனை இரட்சிக்க முடியாது. பலஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களால் அதை வாசிக்க முடிகிறது, இன்னும் அவர்களுக்குள் சிறிதளவு மாற்றமும் ஏற்படவில்லை. நீ வேதாகமத்தை ஆராதித்தால், நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (3)” என்பதிலிருந்து
244. வேதாகமத்தைப் புரிந்துகொண்டு அதை விளக்க இயலுவதும் மெய்யான வழியைக் கண்டுபிடிப்பதும் ஒன்றுதான் என்று பலர் நம்புகின்றனர், ஆனால் உண்மையிலேயே, காரியங்கள் மிகவும் எளிதானவையா? வேதாகமத்தைக் குறித்த யதார்த்தம் ஒருவருக்கும் தெரியவில்லை. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஒரு ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்த புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா? கடந்த கால காரியங்களை இன்றைக்கு கொண்டுவருவது அவற்றை வரலாறாக்குகிறது. அவை எவ்வளவு உண்மையானதாக அல்லது நிஜமானதாக இருந்தாலும், அவை இன்னும் வரலாறாகவே இருக்கின்றன. வரலாற்றால் நிகழ்காலத்தைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் தேவன் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதில்லை! ஆகவே, நீ வேதாகமத்தை மட்டுமே புரிந்துகொண்டு, தேவன் இன்று செய்ய விரும்பும் கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும் நீ தேவனை விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவில்லை என்றால், தேவனைத் தேடுவது என்றால் என்ன என்பதன் அர்த்தம் உனக்குப் புரியவில்லை. இஸ்ரவேலின் வரலாறை வாசிப்பதற்காகவும், வானத்தையும் பூமியையும் தேவன் சிருஷ்டித்த எல்லா வரலாற்றையும் ஆய்வு செய்வதற்காகவும் நீ வேதாகமத்தை வாசித்தால், நீ தேவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் இன்று, நீ தேவனை விசுவாசித்து, ஜீவனைப் பின்தொடர்ந்தால், மேலும் நீ தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்ந்து, மரித்துப்போன எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் அல்லது வரலாறு பற்றிய புரிதலையும் பின்தொடரவில்லை என்றால், நீ இன்றைய தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும் மற்றும் நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வழிகாட்டுதலை நாட வேண்டும். நீ ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருந்திருந்தால், உன்னால் வேதாகமத்தை வாசித்திருக்க முடியும், ஆனால் உன்னால் முடியாது, நீ தேவனை விசுவாசிக்கிற ஒருவன், மேலும் நீ தேவனுடைய இன்றைய சித்தத்தை சிறப்பாக தேடியிருக்கிறாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)” என்பதிலிருந்து
245. நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக வேண்டியதிருக்கிறது. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யபட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும். நீ ஏன் இன்று வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாய், வேதாகமத்திலிருந்து தனியாக வேறொரு கிரியை ஏன் இருக்கிறது, தேவன் ஏன் புதிய, மிகவும் விரிவான நடைமுறையை வேதாகமத்தில் தேடுவதில்லை, அதற்குப் பதிலாக வேதாகமத்திற்கு வெளியே அதிக வல்லமையான கிரியை இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இதுதான். பழைய மற்றும் புதிய கிரியைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை நீ அறிந்துகொள்ள வேண்டும். நீ வேதாகமத்தை வாசிக்காவிட்டாலும், உன்னால் அதைப் பகுத்தறிய முடிய வேண்டும். இல்லையென்றால், நீ இன்னும் வேதாகமத்தையே ஆராதித்துக் கொண்டிருப்பாய். மேலும், புதிய கிரியைக்குள் பிரவேசிப்பதும், புதிய மாற்றங்களுக்கு உட்படுவதும் உனக்கு கடினமாக இருக்கும். உயர்ந்த வழி இருக்கும்போது, அந்த தாழ்ந்த, காலாவதியான வழியை ஏன் படிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளும் புதிய கிரியையும் இருக்கும்போது, பழைய வரலாற்றுப் பதிவுகளுக்கு மத்தியில் ஏன் ஜீவிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளை உனக்கு வழங்க முடியும், இதுவே புதிய கிரியை என்பதை நிரூபிக்கிறது. பழைய பதிவுகளால் உனக்கு மனநிறைவூட்டவோ அல்லது உனது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது, அவை வரலாறே தவிர, இப்போதைய கிரியை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. மிகவும் உயர்ந்த வழியே புத்தம்புதிய கிரியையாகும். மேலும், புதிய கிரியையைக் கொண்ட கடந்த காலத்தின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது இன்னும் ஜனங்களுடைய பிரதிபலிப்புகளின் வரலாறுதான். மேலும், அதன் மதிப்பு குறிப்பாக இருந்தாலும், அது இன்னும் பழைய வழிதான். இது “புனித நூலில்” பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பழைய வழி என்பது வரலாறுதான். “புனித நூலில்” அது குறித்த எந்தப் பதிவும் இல்லையென்றாலும், புதிய வழியே இன்றைக்குரியதாக இருக்கிறது. இந்த வழியால் உன்னை இரட்சிக்க முடியும். மேலும், இந்த வழியால் உன்னை மாற்ற முடியும். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து
246. நீங்கள் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கிரியை மிகவும் அவசியமானதாகும்! இன்று, நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அதில் புதிதாக எதுவும் இல்லை, அது முற்றிலும் பழையது. வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நீ கிருபையின் காலத்தில் பழைய ஏற்பாட்டை புசித்துக் குடித்திருந்தால் மற்றும் கிருபையின் காலத்தின்போது பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவையானதை நீ கடைப்பிடித்திருந்தால், இயேசு உன்னை புறந்தள்ளி, உன்னை கடிந்துகொண்டிருந்திருப்பார். நீ பழைய ஏற்பாட்டை இயேசுவின் கிரியைக்கு பயன்படுத்தியிருந்தால், நீ ஒரு பரிசேயனாக இருந்திருப்பாய். இன்று, நீ பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை ஒன்றாகச் சேர்த்து புசித்துக் குடித்து, அதன்படி நடந்தால், இன்றைய தேவன் உன்னை கடிந்துகொள்வார். இன்றைய பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் நீ விழுந்து கிடக்கிறாய்! நீ பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் புசித்துக் குடித்தாயானால், நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருக்கிறாய்! இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதை கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாண காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாண காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதை பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்கு பழைய ஏற்பாட்டை பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றி பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். அவர் பழைய ஏற்பாட்டை விளக்கவோ அல்லது அதன் கிரியையை ஆதரிக்கவோ வரவில்லை. நியாயப்பிரமாண காலத்தை தொடர்ந்து வளர அனுமதிப்பதற்காக அவருடைய கிரியை செய்யப்படவில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை வேதாகமத்தை அதன் அடிப்படையாகக் கொண்டிருந்ததா என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இயேசு தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே வந்தார். ஆகவே, அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களை விளக்கவுமில்லை, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண காலத்தின் வார்த்தைகளின்படி அவர் கிரியை செய்யவுமில்லை. அவர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பதை புறக்கணித்தார், அது தமது கிரியையுடன் ஒத்திருக்கிறதா இல்லையா என்று அவர் கவலைப்படவில்லை, மற்றவர்கள் தமது கிரியையைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் அதை எவ்வாறு கண்டித்தார்கள் என்பது குறித்தும் கவலைப்படவில்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பை பலர் கண்டித்தபோதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர் செய்து வந்தார். அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, அதன்படி நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கும் அவரால் வேதாகமத்தின் ஆண்டவராக இருக்க முடியாதா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து
247. யூதர்கள் யாவரும் பழைய ஏற்பாட்டைப் படித்து ஒரு முன்னணையில் ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை முற்றிலுமாக அறிந்திருந்த பின்னும் அவர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்? அது அவர்களது கலக சுபாவத்தினாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த அறியாமையினாலும் அல்லவா? அக்காலத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆண் பிள்ளையைப் பற்றி தாங்கள் அறிந்திருந்ததை விடவும் இயேசுவின் கிரியை வேறாக இருப்பதாக பரிசேயர்கள் நம்பினார்கள், மேலும் மனிதனாகப் பிறந்த தேவனுடைய கிரியை வேதாகமத்தோடு இணக்கமானதாக இல்லை என்பதால் இன்று மக்கள் தேவனை நிராகரிக்கிறார்கள். தேவனிடத்தில் அவர்களுடைய கலகப்புத்தியின் சாராம்சம் ஒரேமதிரியாக இருக்கிறதல்லவா? பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளையும் உன்னால் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால் அதுவே சரியான நீரோட்டம் ஆகும், மேலும் எந்த ஒரு சந்தேகமும் இன்றி நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதை ஏற்க வேண்டும் என்பதை நீ தேர்ந்தெடுக்கக் கூடாது. நீ தேவனிடத்தில் இருந்து அதிக நுண்ணறிவைப் பெற்று அவரைக் குறித்து அதிக கவனமாக இருந்தால், இது தேவையற்றதாக இருந்திருக்கும் அல்லவா? நீ வேதாகமத்தில் இருந்து இன்னும் அதிக ஆதாரத்தைத் தேட வேண்டும்; அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், நீ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நீ தேவனைப் பின்பற்றவே அவரை நம்புகிறாய், மேலும் அவரை நீ சோதித்தறியக் கூடாது. நான் உன்னுடைய தேவன் என்பதை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை நீ தேடக் கூடாது, ஆனால் நான் உனக்கு பயனுள்ளவராக இருக்கிறேனா என்பதை உய்த்துணர்ந்து கொள்ளும் திறனுடையவனாக நீ இருக்கவேண்டும்—இதுவே மிகவும் முக்கியமானதாகும். நீ வேதாகமத்துக்குள் மறுக்கமுடியாத சான்றுகளைக் கண்டறிந்தாலும், அது உன்னை என் முன் முழுமையாகக் கொண்டுவர முடியாது. நீ வேதாகமத்தின் வரையறைக்குள்ளேயே வாழ்கிறாய், எனக்கு முன் அல்ல; என்னை அறிந்துகொள்ள வேதாகமம் உனக்கு உதவமுடியாது, என் பேரில் உனக்குள்ள அன்பையும் அதனால் ஆழப்படுத்த முடியாது. ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைத்த போதிலும், மனிதன் தேவனுடைய கிரியையை அறிந்திருக்கவில்லை என்பதால், ஒருவராலும் யாரைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் இதுவே இயேசுவுக்கு எதிராகப் பரிசேயர்களை நிற்கவைத்தது. என் கிரியை மனிதனின் நலனுக்கானது என்று சிலர் அறிவர், ஆனால் அவர்கள் தொடர்ந்து நானும் இயேசுவும் முற்றிலும் தனியான, ஒருவருக்கொருவர் இணக்கமற்ற இருவர் என தொடர்ந்து நம்புகின்றனர். அக்காலமான கிருபையின் காலத்தில், எவ்வாறு கடைபிடித்து நடப்பது, எவ்வாறு ஒன்றுகூடுவது, எவ்வாறு ஜெபத்தின் போது வேண்டுதல் செய்வது, எவ்வாறு பிறரை நடத்துவது, போன்ற தலைப்புகளில் இயேசு மட்டுமே தமது சீடர்களுக்கு ஒரு தொடர் போதனையை அளித்தார். அவர் செய்த கிரியை கிருபையின் காலத்திற்குரியது, மேலும் அவர் சீடர்களும் தம்மைப் பின்பற்றியவர்களும் எவ்வாறு கடைபிடித்து நடக்கவேண்டும் என்று மட்டுமே விளக்கினார். அவர் கிருபையின் காலக் கிரியையை மட்டுமே செய்தார், மேலும் கடைசி நாட்களின் கிரியை ஒன்றையும் செய்யவில்லை. நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களை யேகோவா விதித்தபோது, பின் ஏன் அவர் கிருபையின் கால கிரியையை ஆற்றவில்லை? கிருபையின் கால கிரியையை முன்கூட்டியே ஏன் அவர் தெளிவுபடுத்தவில்லை? மனிதன் அதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு இது உதவி இருக்குமல்லவா? ஓர் ஆண் குழந்தை பிறந்து ஆளுகை செய்யும் என்று மட்டுமே அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார், ஆனால் அவர் கிருபையின் கால கிரியையை முன்கூட்டியே செய்யவில்லை. தேவனின் கிரியைக்கு ஒவ்வொரு காலத்திலும் தெளிவான எல்லைகள் உள்ளன; அவர் நடப்பு காலத்தின் கிரியையை மட்டுமே செய்கிறார், மற்றும் கிரியையின் அடுத்த கட்டத்தை அவர் ஒருபோதும் முன்கூட்டியே ஆற்றுவதில்லை. இவ்வாறே ஒவ்வொரு காலத்தினுடைய அவரது பிரதிநிதித்துவக் கிரியையை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இயேசு கடைசி நாட்களின் அடையாளங்களைப் பற்றி, எவ்வாறு பொறுமையாக இருப்பது என்பது பற்றி, மற்றும் எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது பற்றி, எவ்வாறு மனந்திரும்பி பாவ அறிக்கை செய்வது என்பது பற்றி மற்றும் எவ்வாறு சிலுவையை எடுத்துக்கொண்டு பாடுகளை சகிப்பது என்பது பற்றி மட்டுமே பேசினார்; கடைசி நாட்களில் எவ்வாறு மனிதன் வருகைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றோ அல்லது அவன் எவ்வாறு தேவ சித்தத்தை திருப்தி செய்ய முயலவேண்டும் என்றோ ஒருபோதும் அவர் பேசவில்லை. இவ்வாறிருக்க, தேவனின் கடைசி நாட்களின் கிரியையை வேதாகமத்தில் தேடுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? வேதாகமத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் மட்டுமே உன்னால் என்ன காண முடியும்? ஒரு வேத விளக்கவுரையாளராக இருந்தாலும் சரி அல்லது ஒரு போதகராக இருந்தாலும் சரி, இன்றைக்கான கிரியையை முன்கூட்டியே யாரால் கண்டிருக்க முடியும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து
248. இன்று, ஜனங்கள் வேதாகமத்தை தேவன் என்றும், தேவனே வேதாகமமாக இருக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஆகவே, வேதாகமத்தின் எல்லா வார்த்தைகளும் தேவன் மட்டுமே பேசிய வார்த்தைகள் என்றும், இவை அனைத்தும் தேவனால் சொல்லப்பட்டவை என்றும் அவர்கள் நம்புகின்றனர். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அறுபத்தாறு புத்தகங்கள் யாவுமே மனிதர்களால் எழுதப்பட்டவை என்றாலும், இவை அனைத்தும் தேவனுடைய ஏவுதலினால் வழங்கப்பட்டவை என்றும், பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளின் பதிவு என்றும் தேவனை விசுவாசிப்பவர்கள் கூட நினைக்கின்றனர். இது மனிதனின் தவறான புரிதலாகும், இது உண்மைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை. உண்மையிலேயே, தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி ஒரு வரலாற்றுப் பதிவாகும். புதிய ஏற்பாட்டின் சில நிருபங்கள் ஜனங்களுடைய அனுபவங்களிலிருந்து வருகின்றன. மேலும், சில பரிசுத்த ஆவியின் அறிவொளியிலிருந்து வருகின்றன. உதாரணமாக, பவுலின் நிருபங்கள் ஒரு மனிதனுடைய கிரியையிலிருந்து தோன்றியவையாகும். இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியின் விளைவாகும். இவை சபைகளுக்காக எழுதப்பட்டவையாகும், மேலும் இவை சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாக இருந்தன. இவை பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல, பவுலால் பரிசுத்த ஆவியானவரின் சார்பாக பேச முடியவில்லை, அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, யோவான் கண்ட தரிசனங்களையும் அவன் பார்க்கவில்லை. அவனது நிருபங்கள் எபேசு, பிலதெல்பியா, கலாத்தியா மற்றும் பிற சபைகளுக்கே எழுதப்பட்டவையாகும். ஆகவே, புதிய ஏற்பாட்டிலுள்ள பவுலின் நிருபங்கள் சபைகளுக்கு பவுல் எழுதிய நிருபங்களாகும், இவை பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல்களும் அல்ல, இவை பரிசுத்த ஆவியானவரின் நேரடி வெளிப்பாடுகளும் அல்ல. இவை அவனுடைய ஊழியத்தின் போது சபைகளுக்கு எழுதிய வெறும் அறிவுரை, ஆறுதல் மற்றும் தேற்றும் வார்த்தைகளாகும். ஆகவே, இவை அந்தக் காலத்தில் பவுலின் பெரும்பாலான கிரியையைப் பற்றிய ஒரு பதிவாகவே இருக்கிறது. அக்கால சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் பவுலின் ஆலோசனையைப் பின்பற்றி கர்த்தராகிய இயேசுவின் மனந்திரும்புதலுக்கான வழியைக் கடைப்பிடிப்பார்கள் என்பதற்காக இவை கர்த்தருக்குள்ளான சகோதர சகோதரிகளுக்காக எழுதப்பட்டன. அக்காலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ சேர்ந்த சபைகளாக இருந்தாலும், அவன் எழுதியவற்றை அனைவரும் புசித்துக் குடிக்க வேண்டும் என்றோ, தனது வார்த்தைகள் அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவை என்றோ பவுல் சொல்லவே இல்லை. அக்கால சபையின் சூழ்நிலைகளின்படி, அவன் சகோதர சகோதரிகளுடன் வெறுமனே உரையாடி, அவர்களை அறிவுறுத்தினான், அவர்களுக்குள்ளாக இருந்த விசுவாசத்தைத் தூண்டினான், மேலும் அவன் ஜனங்களுக்கு பிரசங்கித்தான் அல்லது நினைவுபடுத்தினான் மற்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினான். அவனுடைய வார்த்தைகள் அவனது சொந்த பாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்தன. அவன் இந்த வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆதரித்தான். அவன் அக்கால சபைகளின் ஒரு அப்போஸ்தல கிரியையைச் செய்தான். அவன் கர்த்தராகிய இயேசுவால் பயன்படுத்தப்பட்ட ஒரு ஊழியக்காரனாக இருந்தான். ஆகவே, அவன் சபைகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும், சபைகளின் கிரியையை மேற்கொள்ள வேண்டும், சகோதர சகோதரிகளின் நிலைகளைப் பற்றி அவன் கற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. இதன் காரணமாக, அவன் கர்த்தருக்குள்ளான எல்லா சகோதர சகோதரிகளுக்கும் நிருபங்களை எழுதினான். ஜனங்களுக்கு அறிவுறுத்துதலாகவும், நேர்மறையானதாகவும் அவன் சொன்னது எல்லாமே சரிதான், ஆனால் அது பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளை குறிக்கவில்லை, அது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. ஒரு மனிதனின் அனுபவங்களின் பதிவுகளையும், ஒரு மனிதனின் நிருபங்களையும் சபைகளுக்கு பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகளாக ஜனங்கள் கருதுவது ஒரு தவறான புரிதலும், மாபெரும் தேவதூஷணமுமாகும்! பவுல் சபைகளுக்காக எழுதிய நிருபங்கள் என்று வரும்போது, அது குறிப்பாக உண்மையாக இருக்கிறது. ஏனென்றால், அவனது நிருபங்கள் அக்காலத்திலுள்ள ஒவ்வொரு சபையின் சூழ்நிலைகள் மற்றும் நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில் சகோதர சகோதரிகளுக்காக எழுதப்பட்டன, மேலும் இவை சகோதர சகோதரிகள் கர்த்தராகிய இயேசுவின் கிருபையை பெறும்படிக்கு அவர்களுக்கு அறிவுறுத்துவதற்காகவே எழுதப்பட்டன. அவனுடைய நிருபங்கள் அக்காலத்து சகோதர சகோதரிகளுக்கு தூண்டுதலை ஏற்படுத்துவதற்காகவே இருந்தன. இது அவனது சொந்த பாரம் என்றும், பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு அளிக்கப்பட்ட பாரம் என்றும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் அக்கால சபைகளை வழிநடத்திய ஒரு அப்போஸ்தலனாக இருந்தான், அவன் சபைகளுக்கு நிருபங்களை எழுதி அவர்களுக்கு அறிவுரை வழங்கினான், அது அவனுடைய பொறுப்பாக இருந்தது. அவனுடைய அடையாளம் கிரியை செய்யும் அப்போஸ்தலனின் அடையாளமாக மட்டுமே இருந்தது. அவன் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு அப்போஸ்தலனாக மட்டுமே இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, முன்னறிவிப்பாளனும் அல்ல. அவனைப் பொறுத்தவரை, அவனுடைய சொந்த கிரியையும் சகோதர சகோதரிகளின் ஜீவிதங்களுமே மிகவும் முக்கியத்துவமானவையாக இருந்தன. இதனால், பரிசுத்த ஆவியானவரின் சார்பாக அவனால் பேச முடியவில்லை. அவனுடைய வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் அல்ல, அவற்றை தேவனுடைய வார்த்தைகள் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், பவுல் தேவனுடைய சிருஷ்டியே தவிர வேறில்லை, அவன் நிச்சயமாக தேவனுடைய மனுஷஅவதரிப்பு அல்ல. அவனுடைய அடையாளம் இயேசுவின் அடையாளமாக இருக்கவில்லை. இயேசுவின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளாக இருந்தன, அவை தேவனுடைய வார்த்தைகளாக இருந்தன, ஏனென்றால் அவருடைய அடையாளம் கிறிஸ்துவின் அடையாளமாக இருந்தது அதாவது தேவனுடைய குமாரனின் அடையாளமாக இருந்தது. பவுலால் எப்படி அவருக்கு சமமாக இருக்க முடியும்? பவுல் போன்றவர்களின் நிருபங்கள் அல்லது வார்த்தைகளை ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளாகவே பார்த்து, அவற்றை தேவனாகவே ஆராதித்தால், அவர்களை மிகவும் கண்மூடித்தனமானவர்கள் என்று மட்டுமே கூற முடியும். மிகவும் கடுமையாகப் பேசுவதென்றால், இது தேவதூஷணமாக மட்டுமே இருக்காதா? தேவனுடைய சார்பாக ஒரு மனிதனால் எவ்வாறு பேச முடியும்? அவனுடைய நிருபங்களின் பதிவுகளுக்கும் அவன் பேசிய வார்த்தைகளுக்கும் முன்பாக ஜனங்களால் எவ்வாறு அவற்றை ஒரு புனித நூல் அல்லது பரலோக புத்தகம் போல வணங்க முடிகிறது? ஒரு மனிதனால் தேவனுடைய வார்த்தைகளை சாதாரணமாக உச்சரிக்க முடியுமா? தேவனுடைய சார்பாக ஒரு மனிதனால் எவ்வாறு பேச முடியும்? ஆகவே, நீ என்ன சொல்கிறாய், அவன் சபைகளுக்கு எழுதிய நிருபங்கள் அவனுடைய சொந்தக் கருத்துக்களால் கறைப்படுத்தப்படவில்லையா? அவை மனித கருத்துக்களால் எப்படி கறைப்படுத்தப்படாமல் இருக்க முடியும்? அவன் தனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் தனது சொந்த அறிவின் அடிப்படையில் சபைகளுக்கு நிருபங்களை எழுதினான். உதாரணமாக, பவுல் கலாத்திய சபைகளுக்கு ஒரு நிருபத்தை எழுதினான், அது ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தது. பேதுரு மற்றொரு கருத்தை எழுதினான், அது மற்றொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தது. அவற்றில் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தது எது? ஒருவரும் உறுதியாக சொல்ல முடியாது. இதனால், அவர்கள் இருவருக்கும் சபைகள் மீதான ஒரு பாரம் இருந்தது என்று மட்டுமே கூற முடியும். ஆனாலும், அவர்களுடைய எழுத்துக்கள் அவர்களுடைய வளர்ச்சியைக் குறிக்கின்றன, அவை சகோதர சகோதரிகளுக்கான அவர்களின் ஏற்பாட்டையும் ஆதரவையும், சபைகள் மீதான அவர்களுடைய பாரத்தையும் குறிக்கின்றன. மேலும், அவை மனித கிரியையை மட்டுமே குறிக்கின்றன, அவை முற்றிலும் பரிசுத்த ஆவியானவருடையவை அல்ல. அவனுடைய நிருபங்கள் பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் என்று நீ சொன்னால், நீ அபத்தமானவன், நீ தேவதூஷணம் சொல்கிறாய்! பவுலின் நிருபங்களும் புதிய ஏற்பாட்டின் பிற நிருபங்களும் மிகவும் சமீபத்திய ஆவிக்குரிய நபர்களின் வாழ்க்கை வரலாறுகளுக்கு சமமானவையாகும்: அவை வாட்ச்மேன் நீ புத்தகங்களுக்கோ அல்லது லாரன்ஸின் அனுபவங்களுக்கோ நிகரானவையாகும். சமீபத்திய ஆவிக்குரிய நபர்களின் புத்தகங்கள் புதிய ஏற்பாட்டில் தொகுக்கப்படவில்லை என்றாலும், அவர்களின் சாராம்சம் ஒன்றுதான்: அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டவர்கள், அவர்களால் தேவனை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (3)” என்பதிலிருந்து
249. இன்று, பரிசுத்த ஆவியானவரினால் பயன்படுத்தப்பட்டவர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று உங்களில் யார் சொல்லத் துணிகிறார்கள்? இதுபோன்ற காரியங்களை யாராவது சொல்லத் துணிகிறார்களா? நீ இதுபோன்ற காரியங்களைச் சொன்னால், எஸ்ராவின் தீர்க்கதரிசன புத்தகம் ஏன் நிராகரிக்கப்பட்டது, அந்த பண்டைய கால புனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் ஏன் அதேபோல் செய்யப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்தவை என்றால், நீங்கள் ஏன் இத்தகைய சலன புத்தியுள்ள தேர்வுகளை செய்யத் துணிகிறீர்கள்? பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேர்ந்தெடுப்பதற்கு நீ தகுதியுள்ளவனா? இஸ்ரேலில் இருந்து அநேக கதைகளும் நிராகரிக்கப்பட்டன. மேலும் கடந்த காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று நீ நம்பினால், சில புத்தகங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? அவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்திருந்தால், அவை அனைத்தும் வைக்கப்பட்டிருக்க வேண்டும், சபைகளின் சகோதர சகோதரிகளுக்கு வாசிக்க அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அவை மனிதனின் சித்தத்தால் தேர்ந்தெடுக்கப்படவோ நிராகரிக்கப்படவோ கூடாது. அதைச் செய்வது தவறாகும். பவுல் மற்றும் யோவானின் அனுபவங்கள் அவர்களின் தனிப்பட்ட உள்ளுணர்வுடன் கலந்தன என்று சொல்வதால் அவர்களின் அனுபவங்களும் அறிவும் சாத்தானிடமிருந்து வந்தவை என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் உள்ளுணர்வுகளிலிருந்து வந்த காரியங்களை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர். அவர்களின் அறிவு அந்த நேரத்தில் அவர்களின் நிஜ அனுபவங்களின் பின்னணிக்கு ஏற்ப இருந்தது, இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்று யாரால் விசுவாசத்துடன் சொல்ல முடியும்? நான்கு சுவிஷேசங்களும் பரிசுத்த ஆவியானவரிலிருந்து வந்தவை என்றால், மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஒவ்வொருவரும் இயேசுவின் கிரியையைப் பற்றி ஏன் வித்தியாசமாகச் சொன்னார்கள்? நீங்கள் இதை விசுவாசிக்கவில்லை என்றால், பேதுரு எவ்வாறு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தான் என்ற வேதாகமத்தில் உள்ள விளக்கங்களைப் பாருங்கள். அவை அனைத்தும் வேறுபட்டவை, அவை ஒவ்வொன்றும் அவற்றின் தனித்த பண்புகளைக் கொண்டுள்ளன. அறியாதவர்கள் அநேகர், “மனுஷ ரூபமெடுத்த தேவனும் ஒரு மனிதராவார், ஆகவே அவர் பேசும் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரிடருந்து முழுமையாக வர முடியுமா? பவுல் மற்றும் யோவானின் வார்த்தைகள் மனிதனின் சித்தத்துடன் கலந்திருந்தால், அவர் பேசும் வார்த்தைகள் உண்மையில் மனிதனின் சித்தத்துடன் கலக்கப்படவில்லையா?” இப்படிச் சொல்லும் ஜனங்கள் குருடர்கள் மற்றும் அறிவற்றவர்கள்! நான்கு சுவிஷேசங்களையும் கவனமாக வாசியுங்கள். இயேசு செய்த காரியங்களையும், அவர் பேசிய வார்த்தைகளையும் பற்றி அவர்கள் பதிவுசெய்ததை வாசியுங்கள். ஒவ்வொரு விளக்கமும் மிகவும் வித்தியாசமானது, ஒவ்வொன்றும் அதன் சொந்தக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. இந்த புத்தகங்களின் ஆசிரியர்களால் எழுதப்பட்டவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரிடருந்து வந்தவை என்றால், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஏன் முரண்பாடுகள் உள்ளன? இதைக் காண முடியாத அளவிற்கு மனிதன் மிகவும் முட்டாளானவன் அல்லவா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து
250. புதிய ஏற்பாட்டின் மத்தேயு எழுதிய சுவிசேஷம் இயேசுவின் வம்ச வரலாற்றை ஆவணப்படுத்துகிறது. ஆரம்பத்தில், இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீதின் சந்ததி என்றும், யோசேப்பின் குமாரன் என்றும் அது கூறுகிறது. அடுத்தது, இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார் என்றும், ஒரு கன்னிகைக்குப் பிறந்தவர் என்றும் கூறுகிறது, அதாவது அவர் யோசேப்பின் குமாரன் அல்ல, ஆபிரகாம் மற்றும் தாவீதின் சந்ததி அல்ல. இருப்பினும், இயேசுவை யோசேப்புடன் தொடர்புபடுத்தவே வம்ச வரலாறு வலியுறுத்துகிறது. அடுத்தது, இயேசு பிறந்த செயல்முறையை வம்ச வரலாறு பதிவு செய்யத் தொடங்குகிறது. இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், அவர் ஒரு கன்னிகைக்குப் பிறந்தவர், யோசேப்பின் குமாரன் அல்ல என்று அது கூறுகிறது. ஆனாலும் வம்ச வரலாறில் இயேசு யோசேப்பின் குமாரன் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. மேலும், வம்ச வரலாறானது இயேசுவுக்காக எழுதப்பட்டிருப்பதால், அது நாற்பத்திரண்டு தலைமுறைகளை பதிவு செய்கிறது. அது யோசேப்பின் தலைமுறைக்குச் செல்லும்போது, யோசேப்புதான் மரியாளின் கணவன் என்று அவசரமாகச் சொல்கிறது. இவை இயேசு ஆபிரகாமின் சந்ததி என்பதை நிரூபிக்க கொடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். இது ஒரு முரண்பாடு அல்லவா? வம்ச வரலாறானது யோசேப்பின் வம்சாவளியை தெளிவாக ஆவணப்படுத்துகிறது, இது தெளிவாகவே யோசேப்பின் வம்ச வரலாறாகும், ஆனால் இது இயேசுவின் வம்ச வரலாறு என்று மத்தேயு வலியுறுத்துகிறார். பரிசுத்த ஆவியினால் இயேசு கருத்தரித்ததன் உண்மையை இது மறுக்கவில்லையா? இதனால், மத்தேயு வழங்கிய வம்ச வரலாறு ஒரு மனித யோசனை அல்லவா? இது கேலிக்குரியது! இவ்வாறே இப்புத்தகம் முற்றிலுமாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரவில்லை என்பதை நீ அறிந்துகொள்ளலாம். தேவனுக்கு பூமியில் ஒரு வம்ச வரலாறு இருக்க வேண்டும் என்று நினைக்கும் சிலர் இருக்கின்றனர், இதன் விளைவாக அவர்கள் ஆபிரகாமின் நாற்பத்தி இரண்டாம் தலைமுறையாக இயேசுவை நியமிக்கின்றனர். அது உண்மையில் கேலிக்குரியது! பூமிக்கு வந்த பிறகு, தேவனுக்கு எப்படி ஒரு வம்ச வரலாறு இருக்க முடியும்? தேவனுக்கு ஒரு வம்ச வரலாறு இருப்பதாக நீ சொன்னால், தேவனுடைய சிருஷ்டிகளின் மத்தியில் நீ அவரை வரிசைப்படுத்தவில்லையா? தேவன் பூமியைச் சேர்ந்தவர் அல்ல, அவர் சிருஷ்டிப்பின் கர்த்தர். அவர் மாம்சமானவர் என்றாலும், அவர் மனிதனைப் போன்ற ஒரு சராம்சத்தைக் கொண்டிருக்கவில்லை. தேவனுடைய ஒரு சிருஷ்டியைப் போலவே தேவனும் இருப்பதாக உன்னால் எப்படி வரிசைப்படுத்த முடியும்? ஆபிரகாமால் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. அக்காலத்தில் அவன் யேகோவாவின் கிரியையின் இலக்காக இருந்தான், அவன் யேகோவாவால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையுள்ள ஊழியக்காரனாக மட்டுமே இருந்தான், மேலும் அவன் இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனாக இருந்தான். அவனால் எப்படி இயேசுவின் மூதாதையராக இருக்க முடியும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (3)” என்பதிலிருந்து
251. இன்று, நான் வேதாகமத்தை இவ்விதமாக புறந்தள்ளுகிறேன், அதற்காக நான் அதை வெறுக்கிறேன் என்றோ அல்லது குறிப்புக்கான அதன் மதிப்பை மறுக்கிறேன் என்றோ அர்த்தமல்ல. நீ அந்தகாரத்தில் வைக்கப்படுவதைத் தடுக்க வேதாகமத்தின் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் உருவான விதங்களை உனக்கு விளக்கி, தெளிவுபடுத்துகிறேன். வேதாகமத்தைக் குறித்து ஜனங்களிடமுள்ள பல கருத்துக்களில், பெரும்பாலானவை தவறானவையாகவே இருக்கின்றன. வேதாகமத்தை இவ்விதமாக வாசிப்பது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பெறுவதிலிருந்து அவர்களைத் தடுப்பது மட்டுமின்றி, மிக முக்கியமாக, நான் செய்ய விரும்பும் கிரியைக்கும் தடையாக இருக்கிறது. இது எதிர்கால கிரியையில் பெரிதும் தலையிடுகிறது, மேலும் இது தீமைகளை மட்டுமே வழங்குகிறதே தவிர, நன்மைகளை வழங்குவதில்லை. ஆகவே, நான் உனக்குப் போதிப்பது வேதாகமத்தின் சாராம்சமும் உள் சம்பவமும் மட்டுமேயாகும். நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்றோ அல்லது நீ போய் அது மதிப்பில்லாதது என்று அறிவிக்குமாறோ நான் கேட்டுக்கொள்ளவில்லை. நீ வேதாகமத்தைக் குறித்த சரியான அறிவையும் கண்ணோட்டத்தையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும். மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்காதே! வேதாகமம் மனிதர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புத்தகம் என்கிறபோதிலும், இது பழங்கால பரிசுத்தவான்களும் தீர்க்கதரிசிகளும் தேவனுக்கு ஊழியம் செய்த பல கொள்கைகளையும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் சமீபத்திய அப்போஸ்தலர்களின் அனுபவங்களையும் ஆவணப்படுத்துகிறது. இவை அனைத்தும் உண்மையிலேயே இந்த ஜனங்களால் பார்க்கப்பட்டன மற்றும் அறிந்துகொள்ளப்பட்டன, மேலும் இவை மெய்யான வழியைப் பின்பற்றுவதில் இக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு குறிப்புகளாக செயல்பட முடியும். ஆகவே, வேதாகமத்தை வாசிப்பதன் மூலம் பிற புத்தகங்களில் காண முடியாத பல வாழ்க்கை முறைகளையும் ஜனங்களால் பெற முடியும். இவ்வழிகள் கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் அனுபவித்த பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வாழ்க்கை முறைகளாக இருக்கின்றன. பல வார்த்தைகள் விலையேறப்பெற்றவையாக இருக்கின்றன, மேலும் இவற்றால் ஜனங்களுக்குத் தேவையானவற்றை வழங்க முடியும். ஆகவே, ஜனங்கள் எல்லோரும் வேதாகமத்தை வாசிக்க விரும்புகின்றனர். வேதாகமத்தில் அநேக காரியங்கள் மறைந்துள்ளதால், அதைப் பற்றிய ஜனங்களுடைய பார்வைகள் சிறந்த ஆவிக்குரிய நபர்களின் எழுத்துக்களைப் போல இல்லை. வேதாகமம் என்பது பழைய மற்றும் புதிய காலத்தில் யேகோவாவிற்கும் இயேசுவிற்கும் ஊழியம் செய்தவர்களின் அனுபவங்கள் மற்றும் அறிவின் பதிவு மற்றும் தொகுப்பு ஆகும், ஆகவே பிற்கால தலைமுறையினரால் அதிக அறிவொளி, வெளிச்சம் மற்றும் அதன்படி நடக்கும் பாதைகளைப் பெறுவதற்கான பாதைகளைப் பெற முடிகிறது. எந்தவொரு பெரிய ஆவிக்குரிய நபரின் எழுத்துக்களையும் விட வேதாகமம் உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம் என்னவென்றால், அவர்களுடைய எழுத்துக்கள் அனைத்தும் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும், அவர்களுடைய அனுபவங்கள் அனைத்தும் வேதாகமத்திலிருந்து வந்தவையாகும், அவை அனைத்தும் வேதாகமத்தையே விளக்குகின்றன. ஆகவே, எந்தவொரு பெரிய ஆவிக்குரிய நபரின் புத்தகங்களிலிருந்தும் ஜனங்களால் ஏற்பாட்டைப் பெற முடியும் என்கிறபோதிலும், அவர்கள் இன்னும் வேதாகமத்தையே ஆராதிக்கின்றனர். ஏனென்றால், அது அவர்களுக்கு மிகவும் உயர்ந்ததாகவும் ஆழமானதாகவும் தெரிகிறது! பவுலின் நிருபங்கள் மற்றும் பேதுருவின் நிருபங்கள் போன்ற ஜீவ வார்த்தைகளின் சில புத்தகங்களை வேதாகமம் ஒன்றாகக் கொண்டுவருகின்றபோதிலும், இந்த புத்தகங்களால் ஜனங்களுக்கு வழங்கவும் உதவவும் முடியும் என்கிறபோதிலும், இப்புத்தகங்கள் இன்னும் காலாவதியானவையாகவும், இன்னும் பழங்காலத்திற்குரியவையாகவும் இருக்கின்றன. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை ஒரு காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, நித்தியகாலத்திற்கும் அல்ல. தேவனுடைய கிரியை எப்போதுமே வளர்ந்து கொண்டே இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் காலத்திற்குள் மட்டுமே இதை நிறுத்திவிட முடியாது அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்ட கிருபையின் காலத்திலேயே எப்போதும் நிலைத்திருக்க முடியாது. ஆகவே, இப்புத்தகங்கள் கிருபையின் காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, கடைசி நாட்களின் ராஜ்ய காலத்திற்கு அல்ல. இவற்றால் கிருபையின் காலத்தின் விசுவாசிகளுக்கு மட்டுமே வழங்க முடியும், ராஜ்ய காலத்தின் பரிசுத்தவான்களுக்கு அல்ல. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை இன்னும் காலாவதியானவையாகவே இருக்கின்றன. யேகோவாவினுடைய சிருஷ்டிப்பின் கிரியையும் அல்லது இஸ்ரவேலில் அவர் செய்த கிரியையும் இதுதான்: இந்தக் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது இன்னும் காலாவதியாகிவிடும், அது கடந்து செல்லும் நேரம் வரும். தேவனுடைய கிரியையும் இதேதான்: இது மிகப் பெரியது, ஆனால் இது முடிவடையும் காலம் வரும். இது சிருஷ்டிப்பின் கிரியைக்கு மத்தியிலோ, சிலுவையில் அறையப்படுதலுக்கு மத்தியிலோ எப்போதும் நிலைத்திருக்க முடியாது. சிலுவையில் அறையப்பட்ட கிரியையானது எவ்வளவு நம்பகமானதாக இருந்தாலும், சாத்தானைத் தோற்கடிப்பதில் அது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, கிரியை என்பது இன்னும் கிரியைதான் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, காலங்கள் என்பவை இன்னும் காலங்கள்தான். கிரியை எப்போதும் ஒரே அஸ்திபாரத்தில் இருக்க முடியாது, அல்லது காலங்களை ஒருபோதும் மாற்ற முடியாது. ஏனென்றால், சிருஷ்டிப்பு என்பது இருந்தது, கடைசி நாட்கள் என்பதும் இருக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது! ஆகவே, இன்று புதிய ஏற்பாட்டிலுள்ள ஜீவ வார்த்தைகள், அதாவது அப்போஸ்தலர்களின் நிருபங்களும் நான்கு சுவிசேஷங்களும், வரலாற்றுப் புத்தகங்களாக மாறியுள்ளன. இவை பழைய பஞ்சாங்கங்களாக மாறியுள்ளன, பழைய பஞ்சாங்கங்களால் எப்படி ஜனங்களை புதிய காலத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்? இந்த பஞ்சாங்கங்கள் மக்களுக்கு ஜீவனை வழங்குவதில் எவ்வளவு திறனுள்ளவையாக இருந்தாலும், ஜனங்களை சிலுவைக்கு நேராக வழிநடத்த எவ்வளவு திறனுள்ளவையாக இருந்தாலும், இவை காலாவதியானவை அல்லவா? இவை மதிப்பில்லாதவை அல்லவா? ஆகவே, இந்த பஞ்சாங்கங்களை நீ கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று நான் உனக்குச் சொல்கிறேன். இவை மிகவும் பழமையானவை, இவற்றால் உன்னை புதிய கிரியைக்குள் கொண்டு வர முடியாது, அவற்றால் உனக்கு சுமையை ஏற்ற மட்டுமே முடியும். இவை உன்னை புதிய கிரியைக்குள், புதிய பிரவேசத்திற்குள் கொண்டு வர முடியாமல் போவது மட்டுமின்றி, இவை உன்னை பழைய மதவாத சபைகளுக்கு அழைத்துச் செல்கின்றன. காரியம் இவ்வாறாக இருந்திருந்தால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ பின்வாங்கியிருக்கமாட்டாயா?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “வேதாகமத்தைக் குறித்து (4)” என்பதிலிருந்து
252. நான் மனுஷர்களிடையே அதிகமான கிரியை புரிந்திருக்கிறேன், அந்த நேரத்தில் நான் பல வார்த்தைகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனுஷனை இரட்சிப்பதற்கு உரியவையாகும் மற்றும் அவை மனுஷன் எனக்கு இணக்கமாய் இருக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்தப்பட்டன. இருப்பினும், பூமியில் என்னுடன் இணக்கமாய் இருக்கும் ஒரு சிலரை மட்டுமே நான் ஆதாயப்படுத்தியுள்ளேன், எனவே மனுஷன் எனது வார்த்தைகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவில்லை என்று நான் சொல்கிறேன்—மனுஷன் என்னுடன் இணக்கமாய் இல்லை என்பதே இதற்கு காரணமாகும். இவ்விதமாக, நான் மனுஷன் என்னை தொழுதுகொள்வதற்காக மட்டும் கிரியைப் புரிவதில்லை; மிக முக்கியமாக, மனுஷன் என்னுடன் இணக்கமாய் இருக்க முடியும் என்பதற்காகவே புரிகிறேன். மனுஷன் சீர்கெட்டு, சாத்தானின் வலையில் வாழ்கிறான். எல்லா ஜனங்களும் மாம்சத்தில் வாழ்கிறார்கள், சுயநல ஆசைகளுடன் வாழ்கிறார்கள், அவர்களில் எனக்கு இணக்கமாய் ஒருவரும் இல்லை. என்னுடன் இணக்கமாய் இருப்பதாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அத்தகையவர்கள் அனைவரும் குழப்பமான விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அவர்கள் எனது பெயரை பரிசுத்தமானதாக ஒப்புக் கொண்டாலும், அவர்கள் எனக்கு முரணான ஒரு பாதையில் நடக்கிறார்கள், அவர்களுடைய வார்த்தைகள் ஆணவமும் தன்னம்பிக்கையும் நிறைந்ததாக உள்ளன. ஏனென்றால், அடிப்படையிலேயே, அவர்கள் அனைவரும் எனக்கு எதிரானவர்கள், எனக்கு இணக்கமாய் இராதவர்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் வேதாகமத்தில் எனது அடிச்சுவடுகளை நாடுகிறார்கள், சீரற்ற முறையில் “பொருத்தமான” பத்திகளைக் கண்டுபிடித்து, அவர்கள் முடிவில்லாமல் வாசித்து, வேதங்களாக மனப்பாடம் செய்கிறார்கள். என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டுமென்பதோ அல்லது எனக்கு எதிராக இருப்பதன் பொருள் என்ன என்பதோ அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெறுமனே வேதத்தைக் கண்மூடித்தனமாக வாசிக்கிறார்கள். வேதாகமத்துக்குள், அவர்கள் இதுவரை கண்டிராத, அவர்களால் பார்க்க இயலாத ஒரு வரையறையற்ற தேவனைக் கட்டுப்படுத்துகிறார்கள், மற்றும் அதனை ஓய்வு நேரத்தில் பார்ப்பதற்காக வெளியே எடுக்கிறார்கள். அவர்கள் நான் இருப்பதை வேதாகமத்தின் எல்லைக்குள் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்கள் என்னை வேதாகமத்துடன் ஒப்பிடுகிறார்கள்; வேதாகமம் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் வேதாகமம் இல்லை. அவர்கள் எனது பிரசன்னத்துக்கோ அல்லது கிரியைகளுக்கோ செவிசாய்ப்பதில்லை, மாறாக வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் தீவிரமான மற்றும் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். வேதத்தால் முன்னறிவிக்கப்பட்டிருந்தாலொழிய நான் செய்ய விரும்பும் எதையும் நான் செய்யக்கூடாது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அவர்கள் வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அளவிடுவதற்கும் என்னை நிந்திப்பதற்கும் அவர்கள் வேதாகமத்தின் வசனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு, வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்று கூறலாம். அவர்கள் தேடுவது என்னுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்லது சத்தியத்திற்கு இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்ல, ஆனால், வேதாகமத்தின் வார்த்தைகளுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள், மற்றும் அவர்கள் வேதாகமத்திற்கு இணங்காத எதையும் விதிவிலக்கு இல்லாமல், எனது கிரியை அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அத்தகையவர்கள் பரிசேயர்களின் கடமைப்பட்ட சந்ததியினர் அல்லவா? யூத பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்க மோசேயின் நியாயப்பிரமாணத்தை பயன்படுத்தினர். அவர்கள் அந்தக் கால இயேசுவோடு இணக்கத்தைத் தேடவில்லை, ஆனால் எழுத்துக்களுக்கான நியாயப்பிரமாணத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றினார்கள், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவில்லை என்றும் மேசியாவாக இல்லை என்றும் அவரைக் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்று, அவர்கள் இறுதியில் குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களின் சாராம்சம் என்ன? அவர்கள் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேடவில்லை அல்லவா? எனது சித்தத்திற்கு அல்லது எனது கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளுக்கு செவிசாய்க்கும்போது அவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பற்று வைத்திருந்தனர். அவர்கள் சத்தியத்தை நாடிய ஜனங்கள் அல்ல, மாறாக வார்த்தைகளை திடமாகப் பற்றிக்கொண்ட ஜனங்கள்; அவர்கள் தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் அல்ல, வேதத்தை விசுவாசிப்பவர்கள். அடிப்படையில், அவர்கள் வேதத்தின் கண்காணிப்பாளர்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், வேதாகமத்தின் கெளரவத்தை நிலைநிறுத்துவதற்கும், வேதாகமத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் இரக்கமுள்ள இயேசுவை சிலுவையில் அறையும் அளவுக்குச் சென்றார்கள். வேதாகமத்தைப் பாதுகாப்பதற்காகவும், வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையின் நிலையையும் ஜனங்களின் இதயங்களில் பேணுவதற்காகவும் மட்டுமே அவர்கள் இவ்வாறு செய்தனர். ஆகவே, வேதத்தின் கோட்பாட்டிற்கு இணங்காத இயேசுவிற்கு மரண தண்டனையைக் கொடுப்பதற்காக அவர்கள் தங்கள் எதிர்காலத்தையும் பாவநிவாரணத்தையும் கைவிட விரும்பினர். அவர்கள் அனைவரும் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையின் சேவகர்கள் இல்லையா?
இன்றைய ஜனங்கள் எவ்வாறு இருக்கின்றனர்? கிறிஸ்து சத்தியத்தை வெளிப்படுத்த வந்திருக்கிறார், ஆனாலும் அவர்கள் பரலோகத்திற்குள் நுழைந்து கிருபையைப் பெறக்கூடும் என்பதால் அவரை இந்த உலகத்திலிருந்து துரத்துவார்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் சத்தியத்தின் வருகையை முற்றிலுமாக மறுப்பார்கள், மேலும் வேதாகமத்தின் நித்திய இருப்பை உறுதி செய்வதற்காக, மாம்சத்திற்குத் திரும்பிய கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைவார்கள். மனுஷனின் இதயம் மிகவும் தீங்கிழைப்பதாகவும் மற்றும் அவனது இயல்பு என்னை நோக்கி மிகவும் விரோதமாகவும் இருக்கும்போது அவனால் எப்படி எனது இரட்சிப்பைப் பெற முடியும்? நான் மனுஷனிடையே வாழ்கிறேன், ஆனாலும் எனது பிரசன்னத்தை மனுஷன் அறியவில்லை. நான் மனுஷனின் மீது எனது ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அவன் அப்போதும் எனது பிரசன்னத்தை அறியாமல் இருக்கிறான். நான் மனுஷனின் மீது எனது கோபத்தைக் கட்டவிழ்த்து விடும்போது, அவன் எனது பிரசன்னத்தை இன்னும் அதிக வீரியத்துடன் மறுக்கிறான். மனுஷன் வார்த்தைகளுக்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் வேதாகமத்திற்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் தேடுகிறான், ஆனாலும் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேட ஒருவர் கூட என் முன்னால் வருவதில்லை. மனுஷன் பரலோகத்தில் என்னைப் பார்க்கிறான், பரலோகத்தில் எனது பிரசன்னத்திற்கு குறிப்பாக அக்கறை செலுத்துகிறான், ஆனாலும் மாம்சத்தில் இருக்கும் என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் மனுஷர்களிடையே வாழும் நான் அதிக முக்கியத்துவம் இல்லாதவன். வேதாகமத்தின் வார்த்தைகளுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுகிறவர்கள் மற்றும் தெளிவற்ற தேவனுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுபவர்கள் எனது பார்வைக்கு மோசமானவர்கள். ஏனென்றால், அவர்கள் இறந்த வார்த்தைகளையும், சொல்லப்படாத பொக்கிஷங்களை அவர்களுக்கு வழங்கக்கூடிய தேவனையுமே ஆராதிக்கின்றனர்; அவர்கள் மனுஷனின் தயவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு இல்லாத தேவனை ஆராதிக்கின்றனர். அப்படியானால், அத்தகையவர்கள் என்னிடமிருந்து என்ன பெற முடியும்? மனுஷன் வெறுமனே வார்த்தைகளுக்கு மிகவும் தாழ்ந்தவன். எனக்கு விரோதமாய் இருப்பவர்கள், என்னிடம் வரம்பற்ற கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், என்னை நோக்கி கலகம் செய்பவர்கள்—அவர்களால் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க முடியும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து
253. தேவனே ஜீவனும் சத்தியமுமாக இருக்கிறார், அவருடைய ஜீவனும் சத்தியமும் ஒன்றாக இருக்கின்றன. சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளத் திராணியில்லாதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உதவி ஆகியவை இல்லாமல், நீ எழுத்துக்களையும், கோட்பாடுகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக மரணத்தையும் மாத்திரமே பெற்றுக்கொள்வாய். தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் உள்ளது, அவருடைய சத்தியமும் ஜீவனும் ஒன்றாகவே இருக்கின்றன. உன்னால் சத்தியத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், ஜீவனின் வளர்ச்சியை நீ பெற்றுக்கொள்ள மாட்டாய்; கொடுக்கும் ஜீவனை உன்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், உன்னிடம் நிச்சயமாக எந்தச் சத்தியமும் இருக்காது. ஆகையால், கற்பனைகளையும் கருத்துக்களையும் தவிர, உனது சரீரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் மாம்சமாக இருக்குமே ஒழிய வேறு எதுவுமாக இருக்காது. புத்தகங்களின் வார்த்தைகள் ஜீவனாகக் கருதப்படாது என்பதையும், வரலாற்றுப் பதிவுகளைச் சத்தியமாகப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும், கடந்த கால விதிமுறைகளை தற்போது தேவனால் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் அறிந்துகொள். தேவன் பூமிக்கு வந்து மனுஷர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணியபோது தேவன் வெளிப்படுத்தியது மாத்திரமே சத்தியமாகவும், ஜீவனாகவும், தேவனுடைய சித்தமாகவும் மற்றும் அவருடைய தற்போதைய செயல்பாட்டு முறையாகவும் இருக்கிறது. கடந்த காலங்கள் முதல் இன்றுவரை தேவன் பேசிய வார்த்தைகளின் பதிவுகளை நீ பயன்படுத்தினால், அது உன்னை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக்குகிறது. மேலும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் நிபுணனாக உன்னை விவரிப்பதே சிறந்த வழியாகும். ஏனென்றால், தேவன் கடந்த காலங்களில் செய்த கிரியையின் அடையாளங்களை நீ எப்போதும் விசுவாசிக்கிறாய், அவர் முன்பு மனுஷர்களுக்கு மத்தியில் கிரியை செய்தபோது விடப்பட்ட தேவனுடைய நிழலை மாத்திரமே விசுவாசிக்கிறாய், மேலும் முந்தைய காலங்களில் தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுத்த வழியை மாத்திரமே விசுவாசிக்கிறாய். இன்று தேவனுடைய கிரியையின் திசையை நீ விசுவாசிக்கவில்லை, இன்று தேவனுடைய மகிமையான முகத்தை நீ விசுவாசிக்கவில்லை, தற்போது தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தின் வழியை நீ விசுவாசிக்கவில்லை. ஆகையால் நீ நிச்சயமாகவே நிஜத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத ஒரு பகல் கனவு காண்கிறவனாக இருக்கிறாய். இப்போது மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்க இயலாத வார்த்தைகளையே நீ பிடித்துக்கொண்டிருந்தால், நீ நம்பிக்கையற்ற ஒரு செத்துப்போன மரக்கட்டையாக[அ] இருக்கிறாய். ஏனென்றால் நீ மிகவும் பழமைவாதியாகவும், மிகவும் பிடிவாதமானவனாகவும், பகுத்தறிவுக்கு இடமளிக்காதவனாகவும் இருக்கிறாய்!
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து
254. கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளும் ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருளாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சள் புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் ஞானத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள மறைபொருட்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே பரலோகத்திற்குச் சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து
அடிக்குறிப்பு:
அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.