III. தேவனுடைய தோற்றத்துக்கும் கிரியைக்கும் சாட்சி பகர்தல் குறித்த வார்த்தைகள்

165. துதியானது சீயோனுக்கு வந்துவிட்டது. தேவனுடைய வாசஸ்தலம் தோன்றியுள்ளது. எல்லா ஜனங்களும் போற்றும் மகிமையுள்ள பரிசுத்த நாமம் பரவுகிறது. ஆ, சர்வவல்லமையுள்ள தேவனே! பிரபஞ்சத்தின் அதிபதி, கடைசி நாட்களின் கிறிஸ்து—அவர் சீயோன் மலையின் மீது எழுந்திருக்கும் பிரகாசிக்கும் சூரியன். இது பிரபஞ்சம் முழுவதிலும் மாட்சிமையோடும் மேன்மையோடும் உயர்கிறது…

சர்வவல்லமையுள்ள தேவனே! நாங்கள் உம்மை மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம், நாங்கள் ஆடிப் பாடுகிறோம். நீர் உண்மையிலேயே எங்கள் மீட்பர், பிரபஞ்சத்தின் மகா ராஜா! நீர் ஒரு ஜெயம்கொள்ளும் குழுவை உருவாக்கி தேவனுடைய ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர். எல்லா ஜனங்களும் இந்த பர்வதத்திடம் ஓடிவருவார்கள். எல்லா ஜனங்களும் சிங்காசனத்தின் முன் மண்டியிடுவார்கள்! நீர் ஒருவரே உண்மையான ஒரே தேவன். நீர் மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரமானவர். எல்லா மகிமையும், கனமும், வல்லமையும் சிங்காசனத்துக்கு உண்டாவதாக! சிங்காசனத்திலிருந்து ஜீவ ஊற்று பாய்கிறது. எண்ணிலடங்காத தேவ ஜனங்களுக்கு தண்ணீர் கொடுத்து போஷிக்கிறது. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை மாறுகிறது. புதிய வெளிச்சம் மற்றும் வெளிப்பாடுகள் நம்மைப் பின்தொடர்கின்றன, தொடர்ந்து தேவனைப் பற்றிய புதிய புரிதல்களைக் கொடுக்கின்றன. அனுபவங்களுக்கு இடையில், தேவனைப் பற்றிய முழுமையான உறுதிப்பாட்டை நாம் அடைகிறோம். அவருடைய வார்த்தைகள் தொடர்ந்து வெளிப்படுகின்றன. அவை சரியானவர்களுக்குள் வெளிப்படுகின்றன. நாம் உண்மையில் மிகவும் பாக்கியவான்கள்! ஒவ்வொரு நாளும் தேவனை நேருக்கு நேர் சந்திக்கிறோம், எல்லாவற்றிலும் தேவனுடன் தொடர்புகொள்கிறோம் மற்றும் எல்லாவற்றின் மீதும் தேவனுக்கு அதிகாரம் அளிக்கிறோம். தேவனுடைய வார்த்தையை நாம் கவனமாக சிந்திக்கிறோம். நம்முடைய இருதயங்கள் தேவனில் அமைதியாக இருக்கின்றன. இதனால் நாம் தேவனுக்கு முன்பாக வருகிறோம். அங்கு அவருடைய ஒளியைப் பெறுகிறோம். ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை, செயல்கள், சொற்கள், எண்ணங்கள் மற்றும் யோசனைகளில் நாம் தேவனுடைய வார்த்தைக்குள் ஜீவிக்கிறோம். எல்லா நேரங்களிலும் நம்மால் வித்தியாசத்தைக் காண முடிகிறது. தேவனுடைய வார்த்தையானது, ஊசியில் நூல் கோர்ப்பது போல வழிநடத்துகிறது. எதிர்பாராத விதமாக, நமக்குள் மறைந்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. தேவனுடனான ஐக்கியம் எந்த தாமதத்தையும் ஏற்படுத்தாது. நம்முடைய எண்ணங்களும் யோசனைகளும் தேவனால் அப்பட்டமாக வெளிப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தருணத்திலும் நாம் கிறிஸ்துவின் சிங்காசனத்திற்கு முன்பாக ஜீவிக்கிறோம். அங்கே நாம் நியாயத்தீர்ப்புக்கு உட்படுகிறோம். நம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு இடமும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இன்று, தேவனுடைய ஆளுகையை மீட்டெடுக்க, அவருடைய திருச்சபை சுத்திகரிக்கப்பட வேண்டும். தேவனால் முழுமையாக ஆட்கொள்ளப்பட, நாம் ஒரு வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட வேண்டும். நம்முடைய பழைய குணம் சிலுவையில் அறையப்பட்டால்தான் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஜீவன் மிக உயர்ந்ததாக ஆட்சி செய்ய முடியும்.

இப்போதும், நம்முடைய மீட்புக்காக யுத்தம் செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்முடைய ஒவ்வொரு உடல் பாகத்திலும் சக்தியை ஏற்றுகிறார்! நாம் நம்மை மறுக்கவும், தேவனோடு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கும்போதே, தேவன் நிச்சயமாக, எல்லா நேரங்களிலும் நம்மை ஒளிரச் செய்து தூய்மைப்படுத்துவார். மேலும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் தேவனால் முழுமையாக்கப்படும் பொருட்டு சாத்தான் ஆக்கிரமித்துள்ளதை புதிதாக மீட்டெடுப்பார். நேரத்தை வீணாக்காதீர்கள். தேவனுடைய வார்த்தையில் ஒவ்வொரு நொடியையும் வாழுங்கள். பரிசுத்தவான்களுடன் கட்டியெழுப்பப்பட்டு, ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்பட்டு, தேவனோடு மகிமைக்குள் பிரவேசியுங்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 1” என்பதிலிருந்து

166. பிலதெல்பியா சபையானது தேவனுடைய கிருபை மற்றும் இரக்கத்தின் காரணமாக, முற்றிலுமாக உறுதியான வடிவம் பெற்றுள்ளது. ஆவிக்குரிய பயணத்தில் தடுமாறாத எண்ணற்ற பரிசுத்தவான்களின் இருதயங்களில் தேவன் மீதான அன்பு தோன்றுகிறது. ஒரே உண்மையான தேவன் மாம்சமாகிவிட்டார், அவர் பிரபஞ்சத்தின் அதிபதி, அவர் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார் என்ற நம்பிக்கையை அவர்கள் உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள்: இது பரிசுத்த ஆவியானவரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மலைகளைப் போல அசையாதது! இது ஒருபோதும் மாறாது!

சர்வவல்லமையுள்ள தேவனே! இன்று நீர் தான் எங்கள் ஆவிக்குரியக் கண்களைத் திறந்து, குருடர்களைப் பார்வையடையச் செய்கிறீர், முடவனை நடக்க வைக்கிறீர் மற்றும் குஷ்டரோகிகளை சொஸ்தமாக்குகிறீர். நீரே பரலோகத்திற்கான வாசலைத் திறந்து, ஆவிக்குரிய ராஜ்யத்தின் மர்மங்களை உணர வைத்திருக்கிறீர். உம்முடைய பரிசுத்த வார்த்தைகளால் நிரம்பியிருக்கிறோம், சாத்தானால் கெடுக்கப்பட்ட எங்கள் மனிதத்தன்மையிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம், உம்முடைய விவரிக்கமுடியாத பெரிய கிரியையும், உம்முடைய விவரிக்கமுடியாத மிகப்பெரிய இரக்கமும் இத்தகையதாகும். நாங்கள் உம்முடைய சாட்சிகள்!

நீர் நீண்ட காலமாக, தாழ்மையுடன், அமைதியாக மறைந்திருக்கிறீர். நீர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலுக்கும், சிலுவையில் அறையப்படுதலுக்கும், மனித ஜீவிதத்தின் சந்தோஷங்கள் மற்றும் துக்கங்களுக்கும், துன்புறுத்தல் மற்றும் துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளீர். நீர் மனித உலகின் வலியை அனுபவித்து ருசித்திருக்கிறீர் மற்றும் நீர் அந்த யுகத்தினால் கைவிடப்பட்டிருக்கிறீர். மனுஷரூபமெடுத்த தேவனே தேவன். தேவனுடைய சித்தத்திற்காக, நீர் எங்களை குப்பையிலிருந்து இரட்சித்தீர். உம்முடைய வலது கரத்தால் எங்களைப் பிடித்துக் கொண்டு, உம்முடைய கிருபையை எங்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறீர். எந்த வேதனையும் இல்லாமல், உம்முடைய ஜீவனை எங்களுக்குள்ளாக கொடுத்திருக்கிறீர். உம்முடைய இரத்தம், வியர்வை, கண்ணீர் ஆகியவற்றால் நீர் செலுத்திய விலைக்கிரயம் பரிசுத்தவான்கள் மீது பூசப்பட்டிருக்கிறது. நாங்கள் உம்முடைய கடினமான முயற்சிகளின் பலன்களாக[அ] இருக்கிறோம். நாங்கள் நீர் செலுத்திய விலைக்கிரயமாக இருக்கிறோம்.

சர்வவல்லமையுள்ள தேவனே! உமது அன்பும் இரக்கமும், உமது நீதியும், கம்பீரமும், உமது பரிசுத்தமும், மனத்தாழ்மையுமே, எல்லா ஜனங்களும் உமக்கு முன்பாக பணிந்து, உம்மை நித்திய காலத்திற்கும் வணங்க காரணமாக இருக்கின்றன.

இன்று நீர் அனைத்து திருச்சபைகளையும் பிலதெல்பியா சபையாக பரிபூரணமாக்கியுள்ளீர். இதனால் உமது 6,000 ஆண்டு ஆளுகைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளீர். பரிசுத்தவான்கள் தாழ்மையுடன் உமக்கு முன்பாக தங்களைச் ஒப்புக்கொடுக்க முடியும், ஆவியில் இணைத்துக்கொள்ள முடியும், அன்போடு பின்தொடர முடியும் மற்றும் நீரூற்றின் பிறப்பிடத்துடன் இணைந்திருக்க முடியும். ஜீவத்தண்ணீர் இடைவிடாமல் ஓடி, திருச்சபையில் உள்ள அனைத்து சேற்று மற்றும் அசுத்தமான நீரையும் கழுவி தூய்மைப்படுத்துகிறது, மீண்டும் உமது ஆலயத்தை தூய்மைப்படுத்துகிறது. நடைமுறையில் உண்மையான தேவனை நாம் அறிந்திருக்கிறோம், அவருடைய வார்த்தைகளுக்குள் நடந்திருக்கிறோம், நமது சொந்த செயல்பாடுகளையும் கடமைகளையும் உணர்ந்திருக்கிறோம் மற்றும் திருச்சபையின் பொருட்டு நம்மை பயன்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறோம். உம்முடைய சித்தம் எங்களுக்குள் தடைப்படக்கூடாது என்பதற்காக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாங்கள் உமக்கு முன்பாக அமைதியாக எப்போதும் கவனிக்க வேண்டும். பரிசுத்தவான்களிடையே பரஸ்பர அன்பு இருக்கிறது. சிலருடைய பலமானது மற்றவர்களின் தவறுகளுக்கு ஈடுசெய்யும். அவர்கள் எல்லா நேரங்களிலும் ஆவியில் நடக்க முடிகிறது, பரிசுத்த ஆவியானவரால் அறிவொளி பெற்று பிரகாசிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தை புரிந்துகொண்ட உடனேயே அதை கடைபிடிக்கிறார்கள். அவர்கள் புதிய ஒளியுடன் இணைந்து செயல்படுகின்றனர் மற்றும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றனர்.

தேவனுடன் தீவிரமாக ஒத்துழையுங்கள். அவரை நம்மை கட்டுப்படுத்த அனுமதிப்பதுதான் அவரோடு நடப்பதாகும். நம்முடைய சொந்த யோசனைகள், எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் உலகப்பிரகாரமான பிரச்சனைகள் அனைத்தும் புகை போல மெல்லிய காற்றில் மறைந்துபோகின்றன. நாம் தேவனுடன் நடந்து, அவர் நம்முடைய ஆவிகளை ஆட்சி செய்ய அனுமதிக்கிறோம். இதனால் மேன்மை அடைந்து, உலகத்தை ஜெயிக்கிறோம், நம்முடைய ஆவிகள் சுதந்திரமாக பறந்து விடுதலையை அடைகின்றன: இதுவே சர்வவல்லமையுள்ள தேவன் ராஜாவாகும் போது கிடைக்கும் பலனாகும். தேவனைப் புகழ்ந்து ஆடிப் பாடாமலும், துதியின் பலிகளை செலுத்தாமலும், புதிய பாடல்களைப் பாடாமலும் எவ்வாறு இருக்க முடியும்?

தேவனைத் துதிப்பதற்கு உண்மையிலேயே பல வழிகள் உள்ளன: அவருடைய நாமத்தைக் கூப்பிடுவது, அவரிடம் நெருங்கி வருவது, அவரைப் பற்றி சிந்திப்பது, தியானிப்பது, கலந்துரையாடலில் ஈடுபடுவது, சிந்தித்துப் பார்ப்பது, ஆராய்வது, ஜெபிப்பது மற்றும் துதி பாடல்கள் பாடுவது ஆகியனவாகும். இந்த வகையான துதியில் இன்பம் இருக்கிறது, அபிஷேகம் இருக்கிறது. துதியில் வல்லமை இருக்கிறது மற்றும் ஒரு சுமையும் இருக்கிறது. துதியில் விசுவாசம் இருக்கிறது மற்றும் புதிய புரிதல் இருக்கிறது.

தேவனுடன் தீவிரமாக ஒத்துழையுங்கள், ஊழியத்தில் ஒருங்கிணைந்திடுங்கள், ஒன்றுபடுங்கள், சர்வவல்லமையுள்ள தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுங்கள், பரிசுத்த ஆவியானவருடைய சரீரமாக மாறுங்கள், சாத்தானை மிதியுங்கள், சாத்தானின் தலைவிதிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பிலதெல்பியா சபை தேவனுடைய சமூகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருடைய மகிமையில் வெளிப்படுத்தப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 2” என்பதிலிருந்து

167. ஜெயமுள்ள ராஜா தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் மீட்பை நிறைவேற்றியுள்ளார். அவருடைய ஜனங்கள் அனைவரும் மகிமையில் தோன்ற வழிவகுத்துள்ளார். அவர் பிரபஞ்சத்தை தமது கரங்களில் வைத்திருக்கிறார். அவர் தமது தெய்வீக ஞானத்தினாலும் வல்லமையினாலும் சீயோனைக் கட்டி எழுப்பி ஸ்திரப்படுத்தியிருக்கிறார். தம்முடைய மாட்சிமையால் அவர் பாவ உலகத்தை நியாயந்தீர்க்கிறார். எல்லா தேசங்களுக்கும், எல்லா ஜனங்களுக்கும், பூமி, கடல்கள் மற்றும் அவற்றில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், அதைப் போலவே ஒழுக்கக்கேடு என்னும் மதுவை அருந்துகிறவர்களுக்கும் அவர் நியாயத்தீர்ப்பை வழங்கியுள்ளார். தேவன் நிச்சயமாகவே அவர்களை நியாயந்தீர்ப்பார். அவர் நிச்சயமாகவே அவர்கள்மீது கோபப்படுவார். அதிலே தேவனுடைய மாட்சிமையானது வெளிப்படும். அவருடைய நியாயத்தீர்ப்பு உடனடியாக, தாமதமின்றி வழங்கப்படும். அவருடைய கோப அக்கினி நிச்சயமாக அவர்களின் கொடூரமான குற்றங்களை எரித்து, எந்த நேரத்திலும் அவர்களுக்கு பேரழிவைத் தரும். தாங்கள் தப்பிச் செல்வதற்கான எந்த வழியையும் அவர்கள் அறிய மாட்டார்கள். ஒளிந்துகொள்ள அவர்களுக்கு இடம் இருக்காது. அவர்கள் அழுது பற்களை நறநறவெனக் கடித்துக்கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைக் கொண்டுவருவார்கள்.

தேவனுக்குப் பிரியமான ஜெயமுள்ள புத்திரர்கள் நிச்சயமாக சீயோனில் தங்கியிருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் விலகிப்போவதில்லை. பல ஜனங்கள் அவருடைய சத்தத்தை உன்னிப்பாகக் கேட்பார்கள். அவர்கள் அவருடைய கிரியைகளை கவனமாகக் கவனிப்பார்கள். அவர்களுடைய துதியின் சத்தங்கள் ஒருபோதும் நிற்காது. ஒரு உண்மையான தேவன் தோன்றியிருக்கிறார்! நாம் ஆவியில் அவரைப் பற்றி உறுதியாக இருப்போம். அவரை நெருக்கமாகப் பின்பற்றுவோம். நாம் நம்முடைய முழு வல்லமையுடன் விரைந்து செல்வோம், இனி தயங்க வேண்டாம். உலகத்தின் முடிவு நமக்கு முன்பாக வெளிப்படையாக இருக்கிறது. சரியான திருச்சபை வாழ்க்கையும், நம்மைச் சுற்றியுள்ள ஜனங்கள், விவகாரங்கள் மற்றும் விஷயங்களும் இப்போது கூட நமது பயிற்சியைத் தீவிரப்படுத்துகின்றன. உலகை மிகவும் நேசிக்கும் நம்முடைய இருதயங்களை அதிலிருந்து விலக்குவதற்கு துரிதப்படுவோம்! மிகவும் தெளிவற்ற நம் பார்வையை நாம் அதிலிருந்து விலக்குவதற்கு துரிதப்படுவோம்! நமது பாதைகளை விட்டு விலகாமல் இருப்போம், இதனால் நாம் நம்முடைய எல்லைகளைத் தாண்டாதிருப்போம். இனி நம்முடைய சொந்த லாபங்களையும் இழப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படாமல், நாம் தேவனுடைய வார்த்தையில் நடக்கும்படி நம்முடைய வாய்களை அடக்குவோம். ஆ, அந்த மதச்சார்பற்ற உலகத்துக்கும் செல்வத்துக்குமான உங்களது பேராசையை விட்டுவிடுங்கள்! ஆ, கணவன், மகள்கள் மற்றும் மகன்களுடனான உங்களது பிணைப்பிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்! ஆ, உங்களது கண்ணோட்டங்களையும் தவறான அபிப்பிராயங்களையும் விட்டுவிடுங்கள்! ஆ, எழுந்திரு. காலம் குறைவாகவே உள்ளது! ஆவிக்குள்ளாக இருந்து கொண்டு மேலே பாருங்கள், மேலே பாருங்கள். தேவனே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளட்டும். என்ன நடந்தாலும், மற்றொரு லோத்தின் மனைவியாக நீங்கள் மாற வேண்டாம். ஒதுக்கப்படுவது எவ்வளவு பரிதாபமனதாகும்! உண்மையில் எவ்வளவு பரிதாபமாகும்! ஆ, எழுந்திரு!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 3” என்பதிலிருந்து

168. மலைகளும் ஆறுகளும் மாறுகின்றன, சமுத்திரமானது அதன் பாதையில் பாய்கிறது, மேலும் பூமியையும் வானத்தையும் போலவே மனுஷனின் ஜீவிதமும் நீடித்திருப்பதில்லை. சர்வவல்லமையுள்ள தேவன் மட்டுமே நித்தியமானவராகவும் உயிர்த்தெழுப்பப்பட்டவராகவும் இருக்கிறார், இது என்றென்றும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது! எல்லா விஷயங்களும் எல்லா நிகழ்வுகளும் அவருடைய கைகளில் இருக்கின்றன, சாத்தான் அவருடைய காலடியில் இருக்கிறான்.

இன்று, தேவனின் முன்குறிக்கப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் மூலமே அவர் சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறார். அவர்தான் உண்மையிலேயே நமது மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவின் நித்தியமான, உயிர்த்தெழுந்த ஜீவனால் உண்மையில் நமக்குள் கிரியை செய்யப்படுகிறது, நம்மால் உண்மையில் அவரை முகமுகமாய்க் காணவும், அவரைப் புசித்துக் குடிக்கவும், அவரை அனுபவிக்கவும் முடியும் என்பதற்காக தேவனின் ஜீவனோடு இணைவதற்கு கிறிஸ்துவின் ஜீவன் நம்மை விதிக்கிறது. தேவன் தம்முடைய இருதயத்தினுடைய இரத்தத்தின் விலைக்கிரயத்தில் வழங்கிய தன்னலமற்ற காணிக்கை இது.

பருவகாலங்களானது காற்று மற்றும் உறைபனி வழியாக வந்து செல்கின்றன, ஜீவிதத்தின் பல துன்பங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் உபத்திரவங்களையும், உலகின் பல மறுப்புக்கள் மற்றும் அவதூறுகளையும், அரசாங்கத்தின் பல தவறான குற்றச்சாட்டுகளையும் சந்தித்திருக்கின்றன, ஆனாலும் தேவனின் விசுவாசமோ அல்லது அவருடைய தீர்மானமோ சிறிதளவும் குறையவே இல்லை. தேவனின் சித்தம், தேவனின் நிர்வாகம் மற்றும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அவற்றுக்கு முழு மனதுடன் அர்ப்பணித்து, அவர் தமது சொந்த ஜீவிதத்தை ஒதுக்கி வைக்கிறார். பெருந்திரளான தம்முடைய ஜனங்களுக்கு, அவர் எந்த வேதனையையும் கொடுக்காமல், கவனமாக அவர்களுக்கு போஜனமளித்து, பருக தண்ணீர் தருகிறார். நாம் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும், அல்லது எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும், நாம் அவருக்கு முன்பாக மட்டுமே கீழ்ப்படிய வேண்டும், மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனானது நமது பழைய சுபாவத்தை மாற்றிவிடும்…. இந்த முதற்பேறான குமாரர்களுக்காக அவர் போஜனத்தையும் ஓய்வையும் துறந்து அயராது உழைக்கிறார். எவ்வளவு சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் உறைபனி குளிர் ஆகியவற்றின் மூலம் எத்தனை பகலிரவுகள் அவர் சீயோனில் முழு மனதுடன் கண்காணிக்கிறார்.

உலகம், வீடு, கிரியை மற்றும் அனைத்தும் மகிழ்ச்சியுடன், விருப்பத்துடன் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன, மேலும் உலக இன்பங்களுக்கு அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை…. அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நமக்குள் சென்று தாக்கி, நமது இருதயத்தில் ஆழமாக மறைந்திருக்கும் விஷயங்களை அம்பலப்படுத்துகின்றன. நாம்மால் எப்படி நம்பமுடியாமல் இருக்க முடியும்? அவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வாக்கியமும் எந்த நேரத்திலும் நமக்குள் நிறைவேறக்கூடும். அவருடைய பிரசன்னத்திலோ அல்லது அவரிடமிருந்து மறைந்திருந்தோ நாம் எதைச் செய்தாலும், அவருக்கு எதுவும் தெரியாமல் போவதும் இல்லை, அவருக்குப் புரியாமல் போவதும் இல்லை. நம்முடைய சொந்தத் திட்டங்களும் ஏற்பாடுகளும் இருந்தபோதிலும், அனைத்தும் உண்மையில் அவருக்கு முன்பாக வெளிப்படும்.

அவருக்கு முன்பாக அமர்ந்து, எளிமையாகவும் அமைதியாகவும் நம்முடைய ஆவிக்குள் மகிழ்ச்சியை உணர்கிறோம், ஆனால் எப்போதும் வெறுமையாகவும் தேவனுக்கு உண்மையிலேயே கடன்பட்டிருப்பதாகவும் உணர்கிறோம்: இது கற்பனைக்கு எட்டாத மற்றும் அடைய முடியாத ஒரு அதிசயமாகும். சர்வவல்லமையுள்ள தேவன் தான் ஒரே உண்மையான தேவன் என்பதை நிரூபிக்க பரிசுத்த ஆவியானவர் போதுமானவராக இருக்கிறார்! இது மறுக்க இயலாத சான்றாகும்! இந்தக் கூட்டத்தாராகிய நாம் விவரிக்க முடியாத வகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்! தேவனின் கிருபை மற்றும் இரக்கத்திற்காக இல்லாவிட்டால், நாம் கெட்டுப்போய் சாத்தானைத்தான் பின்பற்றவேண்டியதிருந்திருக்கும். சர்வவல்லமையுள்ள தேவனால் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும்!

ஆ! சர்வவல்லமையுள்ள தேவனே, நடைமுறைத் தேவனே! ஆவிக்குரிய உலகின் இரகசியங்களைக் காண எங்களை அனுமதிக்க எங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தது நீர்தான். ராஜ்யத்தின் வாய்ப்புகள் எல்லையற்றவையாக இருக்கின்றன. நாம் காத்திருக்கும்போது விழிப்புடன் இருப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இருக்க முடியாது.

யுத்தத்தின் தீப்பிழம்புகள் சுழல்கின்றன, பீரங்கிப் புகை காற்றை நிரப்புகிறது, வானிலை வெப்பமாக மாறுகிறது, காலநிலை மாறுகிறது, கொள்ளை நோய் ஒன்று பரவுகிறது, மேலும் உயிர்வாழும் நம்பிக்கையில்லாமல் ஜனங்கள் இறக்க மட்டுமே முடிகிறது.

ஆ! சர்வவல்லமையுள்ள தேவனே, நடைமுறைத் தேவனே! நீர் தான் எங்களது அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறீர். நீர் தான் எங்களுக்கு அடைக்கலமாக இருக்கிறீர். நாங்கள் உமது சிறகுகளின் கீழ் தஞ்சமடைகிறோம், பேரழிவு எங்களை அணுக முடியாது. இதுவே உமது தெய்வீக பாதுகாப்பாகவும் பராமரிப்பாகவும் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் பாடலில் எங்கள் குரல்களை உயர்த்துகிறோம்; நாங்கள் துதித்துப் பாடுகிறோம், சீயோன் முழுவதும் எங்களது துதியின் சத்தம் ஒலிக்கிறது! நடைமுறைத் தேவனாகிய சர்வவல்லமையுள்ள தேவன் அந்த மகிமைமிக்க சென்றடையும் இடத்தை நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார். விழிப்புடன் இருங்கள்—ஓ, ஜாக்கிரதையாக இருங்கள்! இன்னும், நேரம் தாமதமாகிவிடவில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 5” என்பதிலிருந்து

170. சர்வவல்லமையுள்ள தேவன்! அவருடைய மகிமையான சரீரம் வெளியரங்கமாகத் தோன்றுகிறது, பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் எழும்புகிறது, அவரே பரிபூரணமான தேவன்! உலகமும் மாம்சமும் மாற்றப்பட்டிருக்கின்றன, மேலும் மலையில் அவரது மறுரூபமாவது தேவனாக இருக்கிறார். அவர் தமது சிரசின் மேல் பொற்கிரீடத்தை அணிந்திருக்கிறார், அவரது அங்கியானது மிக வெண்மையாக இருக்கிறது, அவரது மார்பைச் சுற்றி பொற்கச்சை ஒன்று இருக்கிறது, மேலும் உலகில் இருக்கும் அனைத்தும் அவரது பாதபடியாக இருக்கிறது. அவரது கண்கள் அக்கினிஜுவாலைகள் போன்று இருக்கின்றன; அவர் தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களையும், தமது வாயில் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தையும் ஏந்தியிருக்கிறார். ராஜ்யத்திற்கான பாதையானது எல்லையற்ற பிரகாசத்தைக் கொண்டிருக்கிறது, அவருடைய மகிமை எழும்பிப் பிரகாசிக்கிறது; மலைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றன, சமுத்திரங்கள் சிரிக்கின்றன, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் அவற்றின் ஒழுங்கான ஏற்பாட்டில் சுழல்கின்றன, இவையனைத்தும் தனித்துவமான, மெய்த்தேவனை வரவேற்கின்றன, அவரது வெற்றிகரமான வருகையானது அவரது ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டம் நிறைவடைவதை அறிவிக்கிறது. அனைவரும் குதித்தெழுந்து மகிழ்ச்சியுடன் நடனமாடுங்கள்! மகிழ்ச்சி கொள்ளுங்கள்! சர்வவல்லமையுள்ள தேவன் தம்முடைய மகிமையான சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! பாடுங்கள்! சர்வவல்லவரின் வெற்றிக் கொடி மாட்சிமையான, அற்புதமான சீயோன் மலையின் மீது உயர்த்தப்பட்டிருக்கிறது! எல்லா தேசங்களும் மகிழ்ச்சியடைகின்றன, எல்லா ஜனங்களும் பாடுகிறார்கள், சீயோன் மலை மகிழ்ச்சியுடன் சிரிக்கிறது, மேலும் தேவனின் மகிமையானது எழும்பியிருக்கிறது! தேவனின் முகத்தை நான் காண்பேன் என்று நான் சொப்பனத்திலும் நினைத்ததில்லை, ஆனால் இன்று நான் அதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவருடன் நேருக்கு நேர் சென்று, நான் எனது இருதயத்தை அவரிடம் திறந்து காண்பிக்கிறேன். அவர் ஏராளமான போஜனத்தையும் பானங்களையும் வழங்குகிறார். ஜீவிதம், வார்த்தைகள், செயல்கள், எண்ணங்கள், கருத்துக்கள்—அவருடைய மகிமைமிக்க வெளிச்சம் இவை அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவர் வழிநடத்துகிறார், மேலும் அவருடைய நியாயத்தீர்ப்பானது எந்தவொரு கலகக்கார இருதயத்திற்கும் உடனடியாக வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 15” என்பதிலிருந்து

171. மனுஷகுமாரன் சாட்சிக் கொடுத்திருக்கிறார், மேலும் தேவனே தம்மை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்கிறார். தேவனின் மகிமையானது வெளிப்பட்டு, கொழுந்துவிட்டெரியும் சூரியனைப் போல கடுமையாகப் பிரகாசிக்கிறது! அவரது மகிமையான முகமானது திகைப்பூட்டும் வெளிச்சத்தை வீசுகிறது; யாருடைய கண்களால் அவரை எதிர்க்க முடியும்? எதிர்ப்பு மரணத்திற்கு வழிவகுக்கிறது! உங்கள் இருதயத்தில் நீங்கள் நினைக்கும் எதற்கும், நீங்கள் சொல்லும் எந்த வார்த்தைக்கும், அல்லது நீங்கள் செய்யும் எதற்கும் சிறிதும் இரக்கம் காட்டப்படுவதில்லை. நீங்கள் எதைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொண்டு, அதைக் காண்பீர்கள்—அது எனது நியாயத்தீர்ப்பே தவிர வேறு எதுவும் இல்லை! நீங்கள் எனது வார்த்தைகளைப் புசித்துக் குடிக்க முயற்சிக்காமல், அதற்குப் பதிலாக தன்னிச்சையாகக் குறுக்கிட்டு எனது கட்டுமானத்தை அழிக்கும்போது என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியுமா? இவ்வாறான நபரை நான் கனிவாக நடத்த மாட்டேன்! உனது நடத்தை மிகவும் தீவிரமாக சீர்கெட்டுப்போனால், நீ அக்கினிஜுவாலைகளால் பட்சித்துப்போடப்படுவாய்! சர்வவல்லமையுள்ள தேவன், தலை முதல் பாதம் வரை சிறிதளவு கூட மாம்சத்தாலோ இரத்தத்தாலோ இணைக்கப்படாமல் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் வெளிப்படுகிறார். அவர் பிரபஞ்ச உலகத்தைத் தாண்டிச் சென்று மூன்றாம் வானத்தில் இருக்கும் மகிமையுள்ள சிங்காசனத்தில் அமர்ந்து, எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார்! பிரபஞ்சமும் சகலமும் எனது கரங்களுக்குள் இருக்கின்றன. நான்ஒன்றைச் சொன்னால், அது அப்படியே நடக்கும். நான் ஒன்றை நியமித்தால், அது அப்படியாகவே இருக்கும். சாத்தான் எனது பாதத்திற்குக் கீழே இருக்கிறான்; அவன் பாதாளத்தில் இருக்கிறான்! எனது குரல் வெளிப்படும் போது, வானமும் பூமியும் ஒழிந்து, ஒன்றுமில்லாமற்போகும்! அனைத்தும் புதுப்பிக்கப்படும்; இது முற்றிலும் சரியான மாற்றமுடியாத உண்மையாக இருக்கிறது. நான் உலகத்தையும், பொல்லாத அனைத்தையும் ஜெயங்கொண்டிருக்கிறேன். நான் இங்கே உட்கார்ந்து உங்களுடன் பேசுகிறேன், காதுள்ளவர்கள் அனைவருமே இதைக் கேட்க வேண்டும், ஜீவிக்கும் அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள், அத்தியாயம் 15” என்பதிலிருந்து

173. கிழக்கிலிருந்து மின்னல் வெட்டும் சமயம், நான் என் வார்த்தைகளைப் பேசத் தொடங்கும் தருணமும் அதுவே—மின்னல் வெட்டும்போது, பரலோகம் முழுவதும் ஒளிர்கிறது, அனைத்து நட்சத்திரங்களிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. மனித இனம் முழுவதும் நிவர்த்தி செய்யப்பட்டதைப் போல் இருக்கிறது. கிழக்கிலிருந்து வரும் இந்த வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ், மனுஷர் அனைவரும் அவர்களது உண்மையான வடிவத்தில் வெளிப்படுகின்றனர், அவர்களின் கண்கள் என்ன செய்வது என்று தெரியாமல், மேலும் தங்களது அசிங்கமான அம்சங்களை எவ்வாறு மறைப்பது என்று உறுதியாக தெரியாமல் திகைத்து நிற்கின்றன. அவர்கள் என் வெளிச்சத்திலிருந்து தப்பி மலை குகைகளில் தஞ்சம் புகும் விலங்குகளைப் போல இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட என் வெளிச்சத்திலிருந்து வெளியேற முடியவில்லை. எல்லா மனுஷரும் திகைத்துப்போகிறார்கள், அனைவரும் காத்திருக்கிறார்கள், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; என் வெளிச்சத்தின் வருகையால், அவர்கள் பிறந்த நாளில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள், அதேபோல் அவர்கள் பிறந்த நாளை சபிக்கவும் செய்கிறார்கள். முரண்பட்ட உணர்ச்சிகளை தெளிவாகப் பேசுவது சாத்தியமில்லாதது; சுய-சிட்சையினால் வழியும் கண்ணீர் ஆறுகளாகி, அவை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன, ஒரு நொடியில் தடயமின்றி செல்கின்றன. மீண்டும், என் நாள் அனைத்து மனுஷரையும் நெருங்குகிறது, மீண்டும் மனுஷ இனத்தைத் தூண்டி மனுஷருக்கு மற்றொரு புதிய தொடக்கத்தை அளிக்கிறது. என் இருதயம் துடிக்கிறது, என் இருதய துடிப்பின் தாளங்களைப் பின்பற்றி, மலைகள் மகிழ்ச்சியுடன் குதிக்கின்றன, கடல் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, அலைகள் கற்பாறைகள் மீது மோதுகின்றன. என் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது கடினம். அசுத்தமான எல்லாவற்றையும் என் பார்வையினால் சாம்பலாக எரிக்க விரும்புகிறேன்; கீழ்ப்படியாமையின் மகன்கள் அனைவரும் என் கண்களுக்கு முன்பாக மறைந்து போக நான் விரும்புகிறேன், ஒருபோதும் காலம் தாழ்த்தப்போவதில்லை. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் நான் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தில் புதிய கிரியைகளையும் தொடங்கியிருக்கிறேன். விரைவில், பூமியின் ராஜ்யங்கள் என் ராஜ்யமாக மாறும்; விரைவில், என் ராஜ்யத்தின் காரணமாக பூமியின் ராஜ்யங்கள் என்றென்றும் முடிவிற்கு வரும், ஏனென்றால் நான் ஏற்கனவே வெற்றியை அடைந்துவிட்டேன், ஏனென்றால் நான் வெற்றிகரமாக திரும்பியிருக்கிறேன். பூமியில் எனது கிரியையை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனது திட்டத்தை சீர்குலைப்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டது, ஆனால் அதன் வஞ்சக தந்திரங்களால் என்னால் சோர்வடைய முடியுமா? அதன் அச்சுறுத்தல்களால் அஞ்சி என் நம்பிக்கையை என்னால் இழக்க முடியுமா? பரலோகத்திலோ பூமியிலோ நான் ஒருபோதும் என் உள்ளங்கையில் வைத்திருக்காத ஜீவன் எதுவுமில்லை; இந்தப் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு ஒரு சத்துருவாக செயல்படும் என்பது எந்தளவிற்கு உண்மை? இது என் கைகளால் கையாளப்பட வேண்டிய ஒரு பொருளல்லவா?

மனித உலகில் நான் அவதரித்த போது, மனுஷர் என் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் அறியாமலேயே இன்றுவரை வந்துள்ளனர், அவர்கள் அறியாமலேயே என்னை அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், முன்னோக்கி செல்லும் பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி யாருக்கும் சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை—மேலும் அந்தப் பாதை எந்த திசையில் செல்லும் என்பது பற்றி யாருக்கும் எந்த துப்பும் தெரிந்திருக்கவில்லை. சர்வவல்லவர் அவர்களைக் கவனிப்பதன் மூலம் மட்டுமே எவரும் இறுதியை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க முடியும்; கிழக்கில் வெட்டும் மின்னலால் வழிநடத்தப்பட்டால் மட்டுமே என் ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் வாசலை யாராலும் கடக்க முடியும். மனுஷரிடையே, என் முகத்தைப் பார்த்த ஒருவர், கிழக்கில் மின்னலைக் கண்ட ஒருவர் என ஒருபோதும் எவரும் இருந்ததில்லை; என் சிங்காசனத்திலிருந்து ஒலிக்கும் சொற்களைக் கேட்ட ஒருவர் இருக்கிறாரா? உண்மையில், பண்டைய காலங்களிலிருந்து, ஒரு மனுஷன் கூட எனது ஆள்தத்துவத்துடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை; இன்று மட்டுமே, இப்போது நான் உலகிற்கு வந்திருப்பதால், மனுஷருக்கு என்னைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது கூட, மனுஷர் இன்னும் என்னை அறியவில்லை, ஏனென்றால் அவர்கள் என் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள், என் குரலை மட்டுமே கேட்கிறார்கள், இன்னும் என் அர்த்தத்தை அறியவில்லை. எல்லா மனுஷரும் இப்படிப்பட்டவர்கள் தான். என் ஜனங்களில் ஒருவராக இருப்பதால், என் முகத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஆழ்ந்த பெருமையை உணரவில்லையா? நீங்கள் என்னை அறியாததால் நீங்கள் வெட்கப்படுவதை உணரவில்லையா? நான் மனுஷரிடையே நடக்கிறேன், மனுஷரிடையே வாழ்கிறேன், ஏனென்றால் நான் மாம்சமாகியிருக்கிறேன், மனுஷ உலகத்திற்கு வந்திருக்கிறேன். என் நோக்கம் வெறுமனே என் மாம்சத்தை மனுஷரைப் பார்க்க வைப்பது மட்டுமல்ல; மிக முக்கியமாக, மனுஷர் என்னை அறிந்துகொள்ள வைப்பதற்காகும். மேலும், நான் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், மனுஷர் செய்த பாவங்களை அவர்களுக்கு உணர்த்துவேன்; நான் என் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வென்று அதன் குகையை அழிப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 12” என்பதிலிருந்து

174. நான் பேசுவதற்காக என் முகத்தைப் பிரபஞ்சத்தின் பக்கம் திருப்பும்போது, எல்லா மனிதர்களும் என் சத்தத்தைக் கேட்கிறார்கள், அதன்பிறகு நான் பிரபஞ்சம் முழுவதும் செய்த எல்லாக் கிரியைகளையும் பார்க்கிறார்கள். என் சித்தத்திற்கு எதிராக தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்டவர்கள், அதாவது, மனித காரியங்களால் என்னை எதிர்ப்பவர்கள் என் தண்டனைக்கு உட்படுவார்கள். நான் வானத்தில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களை எடுத்து அவற்றை புதியதாக்குவேன், என் நிமித்தம், சூரியனும் சந்திரனும் புதுப்பிக்கப்படும்—வானம் இப்போது இருந்தபடியே இனி இருக்காது, பூமியில் உள்ள எண்ணற்ற வஸ்துக்கள் புதுப்பிக்கப்படும். என் வார்த்தைகளின் மூலம் அனைத்தும் முழுமையடையும். பிரபஞ்சத்திற்குள் உள்ள பல தேசங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டு என் ராஜ்யத்தால் மாற்றீடு செய்யப்படும், இதனால் பூமியிலுள்ள தேசங்கள் என்றென்றைக்குமாய் மறைந்துவிடும், அனைத்தும் என்னை வணங்கும் ராஜ்யமாக மாறும்; பூமியின் எல்லாத் தேசங்களும் அழிக்கப்பட்டு ஒன்றுமே இல்லாது போய்விடும். பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள், சாத்தானை வணங்குபவர்கள் அனைவரும் என்னுடைய எரியும் நெருப்பால் தாழ்த்தப்படுவார்கள்—அதாவது, இப்போது பிரவாகத்துக்குள் இருப்பவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் சாம்பலாகிவிடுவார்கள். நான் மக்கள் பலரையும் தண்டிக்கும்போது, வேறுபட்ட அளவில் மத உலகில் உள்ளவர்கள், என் ராஜ்யத்திற்குத் திரும்பி, என் கிரியைகளால் வெல்லப்படுவார்கள், ஏனென்றால் பரிசுத்தர் ஒருவர் ஒரு வெண்மையான மேகத்தின் மீது வருகை செய்வதை அவர்கள் பார்த்திருப்பார்கள். மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள். எனக்கு எதிராக நின்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள்; பூமியில் யாருடைய செயல்கள் என்னைக் கஷ்டப்படுத்தவில்லையோ அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தங்களை எவ்வாறு விடுவித்துக் கொண்டார்கள் என்ற காரணத்தால், என் புத்திரர்கள் மற்றும் எனது மக்களின் ஆளுகையின் கீழ் பூமியில் தொடர்ந்து இருப்பார்கள். எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற தேசங்களுக்கும் நான் என்னையே வெளிப்படுத்துவேன், என் சொந்த சத்தத்தால், எல்லா மனிதர்களும் தங்கள் கண்களால் பார்க்கும்படி என் மகத்தான கிரியையை முடித்த விஷயத்தை, பூமிக்கு உரக்கச் சொல்லுவேன்.

எனது சத்தம் தீவிரமாக ஆழம் அடையும்போது, பிரபஞ்சத்தின் நிலையையும் நான் கவனிக்கிறேன். என் வார்த்தைகள் மூலம், படைக்கப்பட்ட எண்ணற்ற வஸ்துக்கள் அனைத்தும் புதியவை ஆக்கப்படும். பூமியைப் போலவே வானமும் மாறுகிறது. மனித குலம் அதன் மூல முதல் வடிவத்திற்கு வெளிப்படுத்தப்படும், மற்றும் மெதுவாக, ஒவ்வொரு நபரும் அவரவர் வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் தங்களையும் அறியாமல், அவர்களது குடும்பத்தின் அரவணைப்புக்கு மீண்டும் வர தங்கள் வழியைக் கண்டுபிடிப்பார்கள். இது என்னைப் பெரிய அளவில் மகிழ்விக்கும். நான் தடைகளிலிருந்து விடுபட்டுள்ளேன், புரிந்துகொள்ள இயலாதவாறு, என் மாபெரும் கிரியை நிறைவேறியது, மேலும் எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்கள் அனைத்தும் மாற்றம் பெற்றுள்ளன. நான் உலகத்தை உருவாக்கியபோது, எல்லாவற்றையும் அவற்றின் வகைக்கு ஏற்ப வடிவமைத்தேன், எல்லாவற்றிலும் அவற்றின் வடிவங்களுடன் அவற்றின் தன்மையை ஒன்றாக இணைத்தேன். எனது நிர்வாகத் திட்டத்தின் முடிவு நெருங்கி வருவதால், படைத்தவற்றின் முந்தைய நிலையை நான் மீட்டெடுப்பேன்; எல்லாவற்றையும் மூல முதலாக இருந்த விதத்திற்கு மீட்டெடுப்பேன், எல்லாவற்றையும் அளவிடமுடியாதவாறு மாற்றுவேன், இதனால் எல்லாமும் எனது திட்டத்தின் அரவணைப்புக்குத் திரும்பும். அதற்கான நேரம் வந்துவிட்டது! எனது திட்டத்தின் கடைசிக் கட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. ஆ, அசுத்தமான பழைய உலகமே! நீ நிச்சயமாக என் வார்த்தைகளுக்குக் கீழே விழுவாய்! என் திட்டத்தால் நீ நிச்சயமாக ஒன்றுமில்லாமல் போவாய்! ஆ, எண்ணற்ற படைக்கப்பட்ட வஸ்துக்களே! நீங்கள் அனைவரும் என் வார்த்தைகளுக்குள் புதிய ஜீவனைப் பெறுவீர்கள்—உங்களை அரசாளும் கர்த்தர் உங்களுக்கு கிடைப்பார்! ஆ, தூய்மையான மற்றும் களங்கமற்ற புதிய உலகமே! என் மகிமைக்குள் நீ நிச்சயமாக மீண்டெழுவாய்! ஆ, சீயோன் மலையே! இனி அமைதியாக இருக்கவேண்டாம்—நான் வெற்றிபெற்றுத் திரும்பியுள்ளேன்! படைப்பின் நடுவிலிருந்து, நான் முழு பூமியையும் ஆராய்ந்து பார்க்கிறேன். பூமியில், மனிதகுலம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி புதிய நம்பிக்கையை வென்றுள்ளது. ஆ, என் மக்களே! என் வெளிச்சத்திற்குள் நீங்கள் எப்படி மீண்டும் உயிர்பெற்று வராதிருக்க முடியும்? என் வழிகாட்டுதலின் கீழ் நீங்கள் எப்படி மகிழ்ச்சியால் குதிக்காமல் இருக்க முடியும்? நிலங்கள் மகிழ்ச்சியால் கூச்சலிடுகின்றன, நீர்நிலைகள் மகிழ்ச்சியான சிரிப்பால் சலசலக்கின்றன! ஆ, உயிர்த்தெழுந்த இஸ்ரவேலே! என்னால் முன்னறுதி செய்யப்பட்டதற்காக நீங்கள் பெருமை கொள்ளாதிருப்பது எங்கனம்? யார் அழுகிறார்கள்? யார் புலம்புகிறார்கள்? பழைய இஸ்ரவேல் இல்லாது போய்விட்டது, இன்றைய இஸ்ரவேல் உலகில் உயர்ந்து, நிமிர்ந்து, எழுந்தது, மேலும் அனைத்து மனிதர்களின் இதயங்களிலும் எழுந்து நிற்கிறது. இன்றைய இஸ்ரவேல் நிச்சயமாக என் மக்கள் மூலமாக இருப்பதற்கான ஆதாரத்தை அடையும்! ஆ, வெறுக்கத்தக்க எகிப்து! நிச்சயமாக நீ இன்னும் எனக்கு எதிராக நிற்கவில்லை, அல்லவா? என் கருணையைப் பயன்படுத்திக் கொண்டு, என் தண்டனையிலிருந்து தப்பிக்க நீ முயற்சி செய்வது எங்கனம்? என் தண்டனையில்லாது நீ போகமுடிவது எங்கனம்? நிச்சயமாக நான் நேசிக்கிறவர்கள் அனைவரும் நித்தியமாக வாழ்வார்கள், நிச்சயமாக எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன். நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், கம்பீரத்துடனும், கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், மனிதர்களின் எண்ணற்ற சேனைகளுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 26” என்பதிலிருந்து

175. திரளான ஜனங்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள், திரளான ஜனங்கள் என்னைப் போற்றுகிறார்கள்; சகல வாய்களும் ஒரே மெய்யான தேவன் என்று அழைக்கிறார்கள், சகல ஜனங்களும் என் கிரியைகளைக் காணக் கண்களை உயர்த்துகிறார்கள். ராஜ்யமானது மனுஷரின் உலகில் இறங்குகிறது, என்னவர் பணக்காரராகவும், ஏராளமானவற்றைக் கொண்டவராகவும் இருக்கிறார். இதைப் பார்த்து யார் தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்? மகிழ்ச்சியின் காரணமாக யார் தான் நடனமாட மாட்டார்கள்? ஓ, சீயோனே! என்னைக் கொண்டாட உன் வெற்றிக் கொடியை உயர்த்து! என் பரிசுத்த நாமத்தைப் பரப்ப உன் ஜெயங்கொண்ட வெற்றிப் பாடலைப் பாடு! பூமியின் முனைகள் வரை இருக்கும் சகல சிருஷ்டிப்புகளே! நீங்கள் உங்களை எனக்கு ஒப்புக்கொடுக்க உங்களை நீங்களே சுத்திகரித்துக் கொள்ளுங்கள்! மேலே வானத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களே! என் வல்லமைமிக்க சக்தியை வானத்தில் காட்ட உங்கள் இடங்களுக்கு விரைந்து செல்லுங்கள்! பூமியில் தங்கள் எல்லையற்ற அன்பையும் பயபக்தியையும் பாடலாக ஊற்றும் ஜனங்களின் குரல்களுக்கு நான் செவிசாய்க்கிறேன்! இந்த நாளில், எல்லா சிருஷ்டிப்புகளும் ஜீவனுக்குத் திரும்பும்போது, நான் மனுஷரின் உலகத்திற்கு வருகிறேன். இந்த தருணத்தில், இதே சந்தர்ப்பத்தில், பூக்கள் அனைத்தும் கட்டுக்கடங்காமல் பூக்கின்றன, சகல பறவைகளும் ஒரே குரலில் பாடுகின்றன, சகலமும் மகிழ்ச்சியுடன் துள்ளுகின்றன! ராஜ்யத்தின் வணக்கத்தின் சத்தத்தில், சாத்தானின் ராஜ்யம் கவிழ்ந்துபோகிறது, மீண்டும் ஒருபோதும் எழாதபடிக்கு ராஜ்ய கீதத்தின் இடி முழக்கத்தால் அழிக்கப்படுகிறது!

பூமியில் யார் எழுந்து எதிர்க்கத் துணிகிறார்கள்? நான் பூமிக்கு இறங்கும்போது, நான் நெருப்பைக் கொண்டுவருகிறேன், கோபத்தைக் கொண்டுவருகிறேன், எல்லா வகையான பேரழிவுகளையும் கொண்டு வருகிறேன். பூமிக்குரிய ராஜ்யங்கள் இப்போது என் ராஜ்யம்! வானத்தின் மேலே, மேகங்கள் கவிழ்ந்து நீர்த்திரை ஆகின்றன; வானத்தின் கீழ், ஏரிகளும் ஆறுகளும் துள்ளியெழுந்து மகிழ்ச்சியுடன் ஒரு கலவையான இன்னிசையை வெளிப்படுத்துகின்றன. ஓய்வெடுக்கும் மிருகங்கள் அவற்றின் குகைகளிலிருந்து வெளிப்படுகின்றன, சகல ஜனங்களும் என்னால் தங்கள் நித்திரையிலிருந்து எழுப்பப்படுகிறார்கள். பன்முக ஜனங்கள் எதிர்பார்த்த நாள் ஒருவழியாக வந்துவிட்டது! அவர்கள் மிக அழகான பாடல்களை எனக்கு ஏறெடுக்கிறார்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், ராஜ்ய கீதம்” என்பதிலிருந்து

176. ராஜ்யத்திற்கான வணக்கம் ஒலிக்கும் போது—இது ஏழு இடி முழங்கும்போதும் கூட—இந்த ஒலி வானத்தையும் பூமியையும் தூண்டி, பரலோகத்தை உலுக்கி, ஒவ்வொரு மனுஷனின் இருதய துடிப்புகளையும் அதிர்வுற செய்கிறது. நான் அந்த தேசத்தை அழித்து என் ராஜ்யத்தை ஏற்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் ராஜ்யத்திற்கான கீதம் சடங்குடன் எழும்புகிறது. அதைவிட முக்கியமாக, என் ராஜ்யம் பூமியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், நான் என் தேவதூதர்களை உலகத்து தேசங்கள் ஒவ்வொன்றிற்கும் அனுப்பத் தொடங்குகிறேன், இதனால் அவர்கள் என் புத்திரர்களையும், என் ஜனங்களையும் மேய்ப்பார்கள்; இது எனது கிரியையின் அடுத்த கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுமாகும். இருப்பினும், நான் தனிப்பட்ட முறையில் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டிருக்கும் இடத்திற்குச் சென்று, அதனுடன் போட்டியிடுகிறேன். மனுஷர் அனைவருமே என்னை மாம்சத்தில் அறிந்துகொண்டு, என் செயல்களை மாம்சத்தில் காண முடிந்தால், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குகை சாம்பலாக மாறி ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடும். …

இன்று, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில் நான் இறங்குவது மட்டுமல்லாமல், முழு பிரபஞ்சத்தையும் எதிர்கொள்ளத் துணிகிறேன், இது முழு பரலோகத்தை நடுங்க வைக்கிறது. எனது நியாயத்தீர்ப்புக்கு உட்படாத ஒரு இடம் ஏதேனும் உள்ளதா? நான் பேரழிவு மழையை பொழியாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா? நான் செல்லும் எல்லா இடங்களிலும், எல்லா வகையான “பேரழிவின் விதைகளையும்” சிதறடிக்கிறேன். இது நான் கிரியை செய்யும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இது மனுஷருக்கான இரட்சிப்பின் செயலுமாகும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் நான் அவர்களுக்கு அதை கொடுப்பதும் ஒரு வகையான அன்புதான். இன்னும் பல ஜனங்கள் என்னைப் பற்றி அறிந்துகொள்ளவும் என்னைப் பார்க்கவும் அனுமதிக்க நான் விரும்புகிறேன், இந்த வழியில், பல ஆண்டுகளாக பார்க்க முடியாத ஆனால் இப்போது மெய்யாகவே பார்க்க முடிகிற ஒரு தேவனைப் போற்றுவதற்காக வாருங்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 10” என்பதிலிருந்து

177. பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த ஜனங்களின் மத்தியில், ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நேரில் காண்பதற்காக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் ஏங்குகிறான். இரட்சகர் திரும்பி வந்து மீண்டும் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டுமெனவும் மனிதன் ஏங்குகிறான். அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஜனங்களிடமிருந்து பிரிந்த இரட்சகராகிய இயேசு திரும்பி வருவதற்கும், யூதர்களிடையே அவர் செய்த மீட்பின் கிரியையை மீண்டும் செய்வதற்கும், மனிதனிடம் இரக்கமுள்ளவராகவும் அன்பாகவும் இருக்க வேண்டும் என்றும் ஏங்குகிறான். மனிதனுடைய பாவங்களை மன்னித்து, மனிதனுடைய பாவங்களைச் சுமந்து, மனிதனுடைய எல்லா மீறுதல்களையும் தாங்கி, மனிதனை பாவத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். மனிதன் எதற்காக ஏங்குகிறான் என்றால், இரட்சகராகிய இயேசு முன்பு போலவே இருக்க வேண்டும் என்று, அதாவது இரட்சகர் அன்பானவராக, கனிவானவராக, மரியாதைக்குரியவராக, மனிதனிடம் ஒருபோதும் கோபப்படாதவராக, மனிதனை ஒருபோதும் நிந்திக்காதவராக, ஆனால் மனிதனுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்பவராக, முன்பு போலவே, மனிதனுக்காக சிலுவையில் மரிப்பவராக இருக்க வேண்டுமென மனிதன் ஏங்குகிறான். இயேசு புறப்பட்டதிலிருந்து, அவரைப் பின்பற்றிய சீஷர்களும், அவருடைய நாமத்தில் இரட்சிக்கப்பட்ட எல்லா பரிசுத்தவான்களும், அவருக்காக மிகுதியாக ஏங்கிக் காத்திருக்கிறார்கள். கிருபையின் யுகத்தில் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் இரட்சிக்கப்பட்ட அனைவருமே, இரட்சகராகிய இயேசு ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி, எல்லா ஜனங்களுக்கும் முன்பாக தோன்றும் அந்த மகிழ்ச்சியான கடைசி நாளுக்காக, ஏங்குகிறார்கள். இன்று, இரட்சகராகிய இயேசுவின் நாமத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரின் ஒருமித்த விருப்பமும் இதுதான். இட்சகராகிய இயேசுவின் இரட்சிப்பை அறிந்திருக்கும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும், இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தாம் திடீரென வந்து நிறைவேற்றுவேன் என்று சொன்னதை நிறைவேற்ற வேண்டுமென ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்: “நான் புறப்பட்டபடியே திரும்பி வருவேன்.” சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு உன்னதமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்க மீண்டும் பரலோகத்திற்குச் சென்றார் என்று மனிதன் விசுவாசிக்கிறான். இதைப் போலவே, இயேசு மீண்டும் ஒரு வெண்மேகத்தின் மீது (இந்த மேகமானது இயேசு பரலோகத்திற்குத் திரும்பியபோது ஏறிச்சென்ற அதே மேகத்தைக் குறிக்கிறது) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்களின் மத்தியில் அதே உருவத்துடனும் யூத வஸ்திரங்களுடனும் இறங்கி வருவார். அவர் மனிதனுக்குத் தோன்றியபின், அவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுப்பார், மேலும் அவர்களுக்காக ஜீவத்தண்ணீரைப் பாயச்செய்வார் மற்றும் மனிதர்களிடையே கிருபையும் அன்பும் நிறைந்த ஒருவராக, தெளிவானவராக மற்றும் உண்மையானவராக ஜீவிப்பார். இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் ஜனங்கள் நம்புகின்றனர். ஆயினும், இரட்சகராகிய இயேசு இதைச் செய்யவில்லை. மனிதன் எண்ணியதற்கு நேர்மாறாக அவர் செய்தார். அவர் திரும்பி வர வேண்டுமென ஏங்கியவர்களிடையே அவர் வரவில்லை. வெண்மேகத்தின் மீது வரும் போது எல்லா ஜனங்களுக்கும் அவர் காட்சியளிக்கவில்லை. அவர் ஏற்கனவே வந்துவிட்டார், ஆனால் மனிதன் அவரை அறியவில்லை. அவரை அறியாதவனாக இருக்கிறான். ஒரு “வெண்மேகத்தின்” மீது (அந்த மேகமானது அவரது ஆவியாகிய மேகம், அவருடைய வார்த்தைகள், அவருடைய முழு மனநிலை மற்றும் அவருடைய எல்லாம்) அவர் இறங்கி வந்துவிட்டார் என்பதையும், கடைசி நாட்களில் தாம் உருவாக்கும் ஒரு ஜெயங்கொள்ளும் கூட்டத்தின் மத்தியில் இப்போது அவர் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாமலேயே, அவருக்காக அவன் காரணமில்லாமல் காத்திருக்கிறான். மனிதனுக்கு இது தெரியாது: பரிசுத்த இரட்சகராகிய இயேசு மனிதனிடம் நேசத்துடனும் அன்புடனும் இருந்தபோதிலும், அசுத்தமான மற்றும் தூய்மையற்ற ஆவிகள் வசிக்கும் அந்த “தேவாலயங்களில்” அவர் எவ்வாறு கிரியை செய்ய முடியும்? மனிதன் அவர் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், பாவிகளுடைய மாம்சத்தை புசிப்பவர்களுடனும், இரத்தத்தைக் குடிப்பவர்களுடனும், அவர்களுடைய வஸ்திரங்களை உடுத்துபவர்களுடனும், தேவனை விசுவாசித்தப் பின்னரும் அவரை அறியாதவர்களுடனும், அவரைத் தொடர்ந்து வஞ்சிப்பவர்களுடனும் அவர் எவ்வாறு இருக்க முடியும்? இரட்சகராகிய இயேசு அன்பு நிறைந்தவர் என்பதையும், இரக்கத்தால் நிரம்பி வழிகிறார் என்பதையும், மீட்பால் நிரப்பப்பட்ட பாவநிவாரண பலி என்பதையும் மட்டுமே மனிதன் அறிந்திருக்கிறான். இருப்பினும், அவர் தான் தேவன் என்பதையும், அவர் நீதியுடனும், மாட்சிமையுடனும், கோபத்துடனும், நியாயத்தீர்ப்புடனும், அதிகாரம் உடையவராகவும், கண்ணியமனவராகவும் இருக்கிறார் என்பதையும் மனிதன் அறியாதிருக்கிறான். ஆகையால், மீட்பர் திரும்பி வர வேண்டுமென மனிதன் ஆவலுடன் ஏங்கினாலும், அவர்களுடைய ஜெபங்கள் பரலோகத்தையே அசைத்தாலும், இரட்சகராகிய இயேசுவை விசுவாசித்தும் அவரை அறியாத மனிதருக்கு அவர் காட்சியளிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

178. நான் என் மகிமையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தேன், பின்னர் அதை எடுத்துக்கொண்டேன், பின்னர் நான் இஸ்ரவேலரையும், மனிதகுலம் அனைத்தையும் கிழக்கிற்குக் கொண்டு வந்தேன். அவர்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்படவும், ஒளியுடன் இணைந்திருக்கவும் அவர்கள் அனைவரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். எனவே, அவர்கள் இனி அதைத் தேட வேண்டியதில்லை. தேடும் அனைவரையும் மீண்டும் ஒளியைக் காணவும், இஸ்ரவேலில் எனக்கு இருந்த மகிமையைக் காணவும் அனுமதிப்பேன்; நான் வெகு காலத்திற்கு முன்பே ஒரு வெள்ளை மேகத்தின் மீது மனிதகுலத்தின் மத்தியில் வந்துள்ளேன் என்பதை அவர்கள் காண அனுமதிப்பேன். எண்ணற்ற வெள்ளை மேகங்களையும், ஏராளமான பழக் கொத்துக்களையும் பார்க்க அவர்களை அனுமதிப்பேன், மேலும், அவர்களை இஸ்ரவேலின் தேவனாகிய யேகோவாவைப் பார்க்க அனுமதிப்பேன். யூதர்களின் எஜமானரையும், எதிர்பார்க்கப்படுகிற மேசியாவையும், யுகங்கள் முழுவதும் ராஜாக்களால் துன்புறுத்தப்பட்ட என் முழு தோற்றத்தையும் அவர்கள் காண அனுமதிப்பேன். முழுப் பிரபஞ்சத்திலும் நான் கிரியை செய்வேன் மேலும் மாபெரும் கிரியையைச் செய்வார். கடைசி நாட்களில் என் மகிமையையும் என் கிரியைகளையும் மனிதனுக்கு வெளிப்படுத்துவேன். எனக்காக பல வருடங்கள் காத்திருந்தவர்களுக்கும், ஒரு வெள்ளை மேகத்தின் மீது வர வேண்டும் என்று ஏங்கியவர்களுக்கும், மீண்டும் ஒரு முறை தோன்ற வேண்டும் என்று ஏங்கிய இஸ்ரவேலுக்கும், என்னைத் துன்புறுத்திய எல்லா மனிதர்களுக்கும் என் மகிமையான முகத்தை முழுமையாகக் காண்பிப்பேன். எனவே நான் நீண்ட காலத்திற்கு முன்பே என் மகிமையைக் கிழக்கிற்கு எடுத்துக்கொண்டு வந்தேன் என்றும் அது யூதேயாவில் இல்லை என்றும் அனைவரும் தெரிந்துகொள்வார்கள். கடைசி நாட்கள் ஏற்கனவே வந்துவிட்டன!

பிரபஞ்சம் முழுவதும் நான் எனது கிரியையைச் செய்கிறேன், கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி, எல்லா நாடுகளையும் மதங்களையும் அசைக்கின்றன. எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது என்னுடைய சத்தம். எல்லா மனிதர்களையும் என் சத்தத்தால் ஜெயங்கொண்டு, இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்வேன். எனக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வேன். ஏனென்றால், நான் நீண்ட காலமாக என் மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து கிழக்கில் புதிதாக வெளியிட்டேன். எனது மகிமையைக் காண விரும்பாதோர் யார்? எனது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்? நான் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்? எனது அன்புக்காக ஏங்காதோர் யார்? வெளிச்சத்திற்கு வராதோர் யார்? கானானின் செழுமையை நோக்காதோர் யார்? மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்? சர்வ வல்லவரை வணங்காதோர் யார்? எனது சத்தம் பூமியெங்கும் பரவுகிறது. நான் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேச விரும்புகிறேன். மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல, எனது வார்த்தைகளை முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் பேசுகிறேன். எனவே, என்னுடைய வாயில் உள்ள வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன. எல்லா மனிதர்களும் என் வார்த்தைகளைப் போஷித்துக்காப்பாற்றுகிறார்கள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது. என்னுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான், அதே நேரத்தில் அவற்றை புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான். எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான். ஒரு புதிதாய்ப் பிறந்த குழந்தையைப் போல, எல்லா மனிதர்களும் என் வருகையை கொண்டாடுவதில் ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். என் சத்தத்தின் மூலம், நான் எல்லா மனிதர்களையும் என் முன் கொண்டு வருவேன். அதன்பின்னர், நான் மனித இனத்திற்குள் முறையாக நுழைவேன், இதன்மூலம் அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள வருவார்கள். எல்லா மனிதர்களும் எனக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும், நான் கிழக்கிலுள்ள “ஒலிவ மலையில்” இறங்கியிருப்பதையும் என் மகிமையின் பிரகாசம் மற்றும் என் வாயின் வார்த்தைகள் ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வேன். யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக நான் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள். ஏனென்றால், நான் உயிர்த்தெழுப்பப்பட்டு, நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று, பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளேன். எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் நானே. இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை நானே. அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள, சர்வவல்லமையுள்ள தேவன் நானே! அனைவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து என் மகிமையின் முகத்தைக் காணட்டும், என் சத்தத்தைக் கேட்கட்டும், என் கிரியைகளைப் பார்க்கட்டும். இதுதான் எனது முழுமையான சித்தமாகும். இது எனது திட்டத்தின் முடிவு மற்றும் உச்சக்கட்டம் மற்றும் எனது ஆளுகையின் நோக்கம் இதுவாகும். ஒவ்வொரு தேசமும் என்னை வணங்கட்டும், ஒவ்வொரு நாவும் என்னை அறிக்கை செய்யட்டும், ஒவ்வொரு மனிதனும் என் மீது விசுவாசம் வைத்துக்கொள்ளட்டும், ஒவ்வொரு ஜனமும் எனக்குக் கீழ்ப்படியட்டும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் சுவிசேஷம் பிரபஞ்சம் முழுவதும் பரவும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் ‘ஏழு இடிகளின் பெருமுழக்கம்’” என்பதிலிருந்து

179. நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பை எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான் தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான் தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானம், பூமி, கடல் என எல்லா உயிரினங்களுக்கும் நான் தான் தேவன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

180. தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வகிப்புத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? நீங்கள் தேவன் தோன்றுவதற்காகக் காத்திருக்கிறீர்களா? நீங்கள் அவருடைய கால்தடங்களை தேடுகிறீர்களா? தேவன் தோன்றுதலுக்காக ஒருவர் எப்படி ஏங்குகிறார்! தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம்! இது போன்ற ஒரு யுகத்தில், இது போன்ற உலகில், தேவன் தோன்றும் நாளைக் காண நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனின் காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேவன் தோன்ற வேண்டுமென்று காத்திருக்கும் அனைவருமே இந்த வகையான கேள்விகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இது குறித்து யோசனை செய்திருப்பீர்கள்—ஆனால் இதன் விளைவு என்ன? தேவன் எங்கு தோன்றுவார்? தேவனின் கால்தடங்கள் எங்கே? உங்களுக்கு பதில் கிடைத்ததா? பலர் இவ்வாறு பதிலளிப்பார்கள்: “தேவன் அவரைப் பின்பற்றுபவர்களிடையே தோன்றுகிறார், அவருடைய கால்தடங்கள் நம் மத்தியில் உள்ளன; இது அவ்வளவு எளிதானது!” யார் வேண்டுமானாலும் ஒரு சூத்திரமான பதிலை வழங்கலாம், ஆனால் தேவன் தோன்றுதல் அல்லது அவருடைய கால்தடங்கள் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குப் புரிகிறதா? தேவன் தோன்றுதல் என்பது அவர் தனது கிரியையை நேரடியாகச் செய்ய பூமிக்கு வருவதைக் குறிக்கிறது. அவருடைய சொந்த அடையாளத்துடனும், மனநிலையுடனும், மற்றும் இயல்பான உள்ளார்ந்த விதத்திலும் ஒரு யுகத்தைத் தொடங்குவதற்கும், ஒரு யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான கிரியையைச் செய்ய அவர் மனிதர்கள் மத்தியில் இறங்கி வருகிறார். இந்த வகையான தோன்றுதல் என்பது ஒரு வகை சடங்கு அல்ல. இது ஒரு அடையாளமோ, படமோ, அதிசயமோ அல்லது ஒருவிதமான பிரமாண்டமான காட்சியோ அல்ல, அதிலும், இது ஒரு வகை மதம்சார்ந்த சம்பிரதாயமும் அல்ல. இது யாராலும் தொடவும், தரிசிக்கவும் முடிகின்ற ஒரு நிஜமான, நிச்சயமான உண்மை. இந்த வகையான வெளிப்படுதல் ஏதோ ஒன்று இயங்கவேண்டும் என்பததற்காகவோ, அல்லது எந்தவொரு குறுகிய கால பொறுப்பினை நிறைவேற்றவோ நடைபெறுவது அல்ல; மாறாக, அவருடைய நிர்வகிப்புத் திட்டத்தில் கிரியையின் ஒரு கட்டம். தேவனின் தோன்றுதல் எப்போதுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், மேலும் அவருடைய நிர்வகிப்புத் திட்டத்துடன் எப்போதும் சில தொடர்பைக் கொண்டிருக்கும். இங்கே “தோன்றுதல்” என்று அழைக்கப்படுவது, தேவன் மனிதனை வழிநடத்தும், அழைத்துச் செல்லும், அறிவூட்டும் “தோன்றுதல்” வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒவ்வொரு முறையும் தன்னை வெளிப்படுத்தும்போது தேவன் தனது மகத்தான கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவேற்றுகிறார். இந்தக் கிரியை வேறு எந்த யுகத்திலிருந்தும் வேறுபட்டது. இது மனிதனால் கற்பனை செய்ய முடியாதது, மனிதனால் ஒருபோதும் அனுபவிக்கப்பட்டிராதது. இந்தக் கிரியை ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும், இது மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான புதிய மற்றும் மேம்பட்ட கிரியையின் வடிவமாகும்; அது மட்டுமல்ல, இது மனிதகுலத்தை புதிய யுகத்திற்கு கொண்டுச் செல்லும் கிரியை. தேவனின் தோன்றுல் இதைத்தான் குறிக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து

181. தேவன் தோன்றுதல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், தேவனின் கால்தடங்களை எவ்வாறு நாட வேண்டும்? இந்தக் கேள்வியை விளக்குவது கடினம் அல்ல: தேவன் எங்கெல்லாம் தோன்றுகிறாரோ, அங்கெல்லாம் நீங்கள் அவருடைய காலடிச் சுவடுகளைக் காண்பீர்கள். அத்தகைய விளக்கம் புரிந்துகொள்ள எளிதானதாகத் தோன்றினாலும், அது நடைமுறையில் அவ்வளவு எளிதானது அல்ல, ஏனென்றால் தேவன் எங்கு தோன்றுவார் என்பது பலருக்குத் தெரியவில்லை, அதிலும் அவர் எங்கு தோன்ற விரும்புகிறார், அவர் எங்கு தோன்ற வேண்டுமென்பது தெரியவில்லை. பரிசுத்த ஆவியானவர் எங்கு தனது கிரியையை மேற்கொண்டாலும், அங்கே தேவன் தோன்றுவார் என்று சிலர் உணர்ச்சிவசப்பட்டு நம்புகிறார்கள். இல்லையெனில் ஆவிக்குரிய உருவங்கள் எங்கிருந்தாலும் அங்கே தேவன் தோன்றுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இல்லையென்றால் உயர்ந்த புகழ் பெற்றவர்கள் எங்கிருந்தாலும் தேவன் அங்கே தோன்றுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போதைக்கு, இதுபோன்ற நம்பிக்கைகள் சரியானதா, தவறானதா என்று பார்ப்பதைத் தள்ளிவைப்போம். அத்தகைய கேள்வியை விளக்க, நாம் முதலில் ஒரு தெளிவான குறிக்கோளைக் கொண்டிருக்க வேண்டும்: நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம். நாம் ஆவிக்குரிய நபர்களைத் தேடவில்லை, அதிலும் நாம் புகழ்பெற்ற நபர்களைப் பின்தொடரவில்லை; நாம் தேவனுடைய கால்தடங்களை பின்தொடர்கிறோம். இந்தக் காரணத்திற்காக, நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம் என்பதால், தேவனுடைய சித்தம், தேவனுடைய வசனங்கள், அவருடைய சொற்களைத் தேடும் கடமையை இது நமக்கு அளிக்கிறது—ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய சொற்கள் பேசப்படுகிறதோ, அங்கு தேவனின் சத்தம் இருக்கும், தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும். தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுவார், தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும். தேவனின் கால்தடங்களைத் தேடுவதில், நீங்கள் “தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்” என்கிற சொற்களை உதாசீனம் செய்துவிட்டீர்கள். எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும், அவர்கள் தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை, அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு! தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது, அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார். தேவன் தனது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும், அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்; மேலும், அவர் தனது சொந்த குறிக்கோள்களையும் தனது சொந்த முறைகளையும் கொண்டிருக்கிறார். அவர் எந்த கிரியையைச் செய்தாலும், அதை மனிதனுடன் விவாதிக்க அல்லது அவனுடைய ஆலோசனையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இல்லை. அதிலும், அவருடைய கிரியை குறித்து ஒவ்வொரு நபருக்கும் தெரிவிக்க வேண்டியதும் இல்லை. இது தேவனுடையமனநிலையாகும், மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். நீங்கள் தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால், நீங்கள் முதலில் உங்கள் சொந்த கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும். தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது, அதிலும் நீ அவரை உன் சொந்த கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், உன் கருத்துக்களுக்கேற்ப தடுக்கவும் கூடாது. அதற்கு பதிலாக, நீங்கள் தேவனின் கால்தடங்களை எவ்வாறு தேட வேண்டும், நீங்கள் தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனின் புதிய கிரியைக்கு நீங்கள் எவ்வாறு அடிபணிய வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டும்: இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். மனிதன் சத்தியம் அல்ல, சத்தியத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால், அவன் அவரை நாட வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து

182. இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார். உன்னால் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், அவை உனக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உன் இயல்புகளை நீ வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் உனக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் தேவனுக்கு முன்பாக நீதிக்காக உண்மையிலேயே பசியும் தாகமும் கொண்டவர்களால் மட்டுமே சத்தியத்தைப் பெற முடியும், உண்மையான பக்தியுள்ளவர்களால் மட்டுமே அவரால் அறிவூட்டப்பட முடியும். சச்சரவு மற்றும் சண்டையுடன் இல்லாமல், நிதானமான அமைதியுடன் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் முடிவுகள் பெறப்படுகின்றன. “இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார்,” என்று நான் கூறும்போது, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். ஒருவேளை இந்த வார்த்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யாமல் போகலாம்; ஒருவேளை நீ அவற்றை வெறுக்கலாம்; அல்லது அவற்றின் மீது உனக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தேவன் தோன்றுவதற்கு உண்மையிலேயே ஏங்குகிற அனைவருமே அந்த உண்மையை எதிர்கொண்டு, அதைப் பற்றிய முடிவுகளுக்குச் செல்வதை விட, அவர்கள் அதனைக் கவனமாகக் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; ஒரு புத்திசாலி செய்ய வேண்டியது அதுதான்.

அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் செய்ய விரும்பும் கிரியையை அவர் வெளிப்படுத்துவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தை கவனிக்கத் தவறுகிறான் என்றால், இது மனுஷன் இருளில் மூழ்கியுள்ளதையும், அவனது அறியாமையையும் காட்டுகிறது. வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு சாராம்சத்தைத் தீர்மானிக்க முடியாது; மேலும், தேவனின் கிரியை ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது. இயேசுவின் வெளிப்புறத் தோற்றம் மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கவில்லையா? அவருடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி எந்த தடயங்களையும் வழங்க அவரது முகம் மற்றும் உடைக்கு முடியவில்லை, இல்லையா? ஆரம்பக்கால பரிசேயர்கள் வெறுமனே இயேசுவின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்த்து, அவருடைய வாயில் உள்ள வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்க்கவில்லையா? தேவன் தோன்றுவதை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் இந்த வரலாற்றுச் சோகத்தை மீண்டும் நிகழ்த்த மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் நவீன காலத்தின் பரிசேயர்களாக மாறி, தேவனை மீண்டும் சிலுவையில் அறையக் கூடாது. தேவனின் வருகையை எவ்வாறு வரவேற்பது என்பதை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியும் ஒருவராக எப்படி இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவான மனம் இருக்க வேண்டும். இயேசு ஒரு மேகத்தின் மீது வருவார் என்று காத்திருக்கும் அனைவரின் பொறுப்பும் இதுதான். நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் அவற்றைத் தேய்க்க வேண்டும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையின் வார்த்தைகளில் நாம் மூழ்கிவிடக்கூடாது. தேவனின் நடைமுறையான கிரியைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், மேலும் தேவனின் நடைமுறையான அம்சத்தைப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து, திடீரென்று உங்களிடையே இறங்கி, அவரை ஒருபோதும் அறியாத அல்லது பார்த்திராத மற்றும் அவருடைய சித்தத்தைச் செயல்படுத்தத் தெரியாத உங்களை அழைத்துச் செல்வார் என்பது போன்ற பகல் கனவுகளில் அந்த நாளுக்காக ஏங்கி உங்களை நீங்களே இழக்க வேண்டாம். மேலும் நடைமுறையான விஷயங்களை பற்றிச் சிந்திப்பது நல்லது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

183. இந்த நேரத்தில், தேவன் ஒரு ஆவிக்குரிய சரீரத்தில் அல்ல, மாறாக மிகவும் சாதாரணமான நிலையில் கிரியையைச் செய்ய வருகிறார். மேலும், இது தேவனுடைய இரண்டாவது மனுஷ அவதரிப்பின் சரீரம் மட்டுமல்ல, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் சரீரமும் கூட. இது மிகவும் சாதாரண மாம்சம். அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் எதையும் உன்னால் பார்க்க முடியாது, ஆனால் நீ அவரிடமிருந்து முன்பு கேள்விப்படாத சத்தியங்களைப் பெறலாம். இந்த அற்பமான மாம்சம்தான் தேவனிடமிருந்து வரும் சத்திய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையை மேற்கொள்கிறது, மேலும் மனிதன் புரிந்துகொள்வதற்காக தேவனுடைய முழு மனநிலையையும் வெளிப்படுத்துகிறது. தேவனைப் பரலோகத்தில் காண்பதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? பரலோகத்திலுள்ள தேவனைப் புரிந்துகொள்வதற்கு நீ பெரிதும் விரும்பவில்லையா? மனிதகுலம் சென்று சேரும் இடத்தைக் காண நீ பெரிதும் விரும்பவில்லையா? இந்த இரகசியங்கள் அனைத்தையும் அவர் உனக்கு சொல்லுவார்—அதாவது எந்த மனிதனும் உனக்குச் சொல்ல முடியாத ரகசியங்களைச் சொல்லுவார், மேலும் நீ புரிந்து கொள்ளாத சத்தியங்களையும் அவர் உனக்குச் சொல்வார். ராஜ்யத்திற்குள் அவரே உன் வாசலாகவும், புதிய யுகத்திற்கான உன் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அத்தகைய ஒரு சாதாரண மாம்சம் பல புரிந்துகொள்ள முடியாத மர்மங்களைக் கொண்டிருக்கிறது. அவருடைய செயல்கள் உனக்கு விவரிக்க முடியாததாக இருக்கலாம், ஆனால் அவர் செய்யும் கிரியையின் முழுக் குறிக்கோளும், ஜனங்கள் நம்புகிறபடி, ஒரு எளிய மாம்சமல்ல என்பதை நீ காண அனுமதிக்க போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால், அவர் தேவனுடைய சித்தத்தையும், கடைசி நாட்களில் மனிதகுலத்தின் மீது தேவன் காட்டிய அக்கறையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். வானங்களையும் பூமியையும் அசைப்பதாகத் தோன்றும் அவரது வார்த்தைகளைக் கேட்கவும், அக்கினி ஜுவாலைகளைப் போல இருக்கும் அவரது கண்களைப் பார்க்கவும், அவருடைய இருப்புக்கோலால் சீர்பொருந்தப் பண்ணுதலை நீ உணரவும் முடியாமல் போனாலும் தேவன் கோபமாக இருக்கிறார் என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து உன்னால் கேட்க முடியும், தேவன் மனிதகுலத்திற்கு இரக்கம் காட்டுகிறார் என்பதையும் நீ அறிந்துகொள்ள முடியும்; தேவனுடைய நீதியான மனநிலையையும் அவருடைய ஞானத்தையும் நீ கண்டுகொள்ளலாம், மேலும், எல்லா மனிதர்கள் மீதான தேவனுடைய அக்கறையை உணரலாம். கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை என்னவென்றால், பூமியில் உள்ள மனிதர்களிடையே வாழும் பரலோகத்திலுள்ள தேவனைக் காண மனிதனை அனுமதிப்பதும், அவன் தேவனை அறிந்துகொள்ளவும், கீழ்ப்படியவும், வணங்கவும், நேசிக்கவும் மனிதனுக்கு உதவுவதுமே ஆகும். இதனால்தான் அவர் இரண்டாவது முறையாக மாம்சத்திற்குத் திரும்பியுள்ளார். மனிதன் பார்ப்பது மனிதனைப் போன்ற ஒரு தேவனாகும், அதாவது மூக்கு மற்றும் இரண்டு கண்களை கொண்ட தேவன், மற்றும் குறிப்பிட்டுக் கூற முடியாத தேவன், இறுதியில், இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் பூமி மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்பதையும்; இந்த மனிதன் ஜீவித்திராவிட்டால், வானம் மங்கலாகிவிடும், பூமி குழப்பத்தில் மூழ்கிவிடும், பஞ்சம் மற்றும் வாதைகளுக்கு மத்தியில் எல்லா மனிதர்களும் வாழ்வார்கள் என்பதையும் தேவன் உங்களுக்கு காண்பிப்பார். கடைசி நாட்களில் தேவன் உங்களை இரட்சிப்பதற்கு வரவில்லை என்றால், தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே எல்லா மனிதர்களையும் நரகத்தில் தள்ளி அழித்திருப்பார் என்பதையும்; இந்த மாம்சம் ஜீவித்திருக்கவில்லை என்றால், நீங்கள் என்றென்றும் பிரதான பாவிகளாக இருந்திருப்பீர்கள் மற்றும் நீங்கள் என்றென்றும் சடலங்களாகவே இருந்திருப்பீர்கள் என்பதையும் அவர் உங்களுக்கு காண்பிப்பார். இந்த மாம்சம் ஜீவித்திராவிட்டால், எல்லா மனிதர்களும் விரும்பத்தகாத பேரழிவை எதிர்கொள்வார்கள் என்பதையும், கடைசி நாட்களில் தேவன் மனிதகுலத்திற்கு அளிக்கும் இன்னும் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த சாதாரண மாம்சம் பிறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் அனைவரும் வாழ முடியாமல் உயிருக்குப் பிச்சை எடுக்கும் ஒரு நிலையில் இருந்திருப்பீர்கள், மரிக்க முடியாமல் மரணத்திற்காக ஜெபிக்கிறவர்களாக இருந்திருப்பீர்கள்; இந்த மாம்சம் இல்லாதிருந்தால், நீங்கள் சத்தியத்தைப் பெற முடியாமல், இன்று தேவனுடைய சிங்காசனத்தின் முன்பாக வரமுடியாமல், மாறாக உங்களுடைய கடுமையான பாவங்களுக்காக நீங்கள் தேவனால் தண்டிக்கப்பட்டிருப்பீர்கள். தேவன் மாம்சத்திற்குத் திரும்பாமல் இருந்திருந்தால், யாருக்கும் இரட்சிப்பின் வாய்ப்பு இருந்திருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மாம்சத்தின் வருகைக்காக, தேவன் நீண்ட காலத்திற்கு முன்பே பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார் அல்லவா? இது அவ்வாறாக இருக்க, தேவனுடைய இரண்டாவது மனுஷஅவதரிப்பை உங்களால் இன்னும் நிராகரிக்க முடியுமா? இந்த சாதாரண மனிதரிடமிருந்து நீங்கள் பல நன்மைகளை பெற முடியும் என்பதால், நீங்கள் ஏன் மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றுக்கொள்ளக் கூடாது?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து

184. தேவனுடைய கிரியை என்பது நீ புரிந்து கொள்ள முடியாத ஒன்று. உன்னுடைய தேர்வு சரியானதா என்பதை உன்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டால், அல்லது தேவனுடைய கிரியை வெற்றிபெற முடியுமா என்பதை உன்னால் அறிய முடியாவிட்டால், பிறகு இந்த சாதாரண மனிதர் உனக்குப் பெரிதும் உதவக்கூடும் என்பதைப் பார்க்கவும் மற்றும் தேவன் உண்மையில் பெரிய கிரியை செய்தாரா என்பதை அறியவும் உன் அதிர்ஷ்டத்தை ஏன் முயற்சி செய்யக்கூடாது? இருப்பினும், நோவாவின் காலத்தில், மனிதர்கள் புசித்தும், குடித்தும், பெண்கொண்டும், பெண்கொடுத்தும் தேவனால் சகிக்கமுடியாத அளவிற்கு இருந்ததை நான் உனக்குச் சொல்லியே ஆக வேண்டும், எனவே அவர் மனிதகுலத்தை அழிக்க ஒரு பெரிய ஜலப்பிரளயத்தை அனுப்பினார், நோவாவின் குடும்பத்திலுள்ள எட்டுபேர் மற்றும் அனைத்து வகையான பறவைகள் மற்றும் மிருகங்களை மட்டுமே தப்பும்படிச் செய்தார். எவ்வாறாயினும், கடைசி நாட்களில், தேவனால் காப்பாற்றப்பட்டவர்கள் அனைவரும் கடைசி வரை அவருக்கு விசுவாசமாக இருந்தார்கள். இரண்டு யுகங்களும் தேவனால் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு பெரும் சீர்கேடு நிறைந்த காலங்களாக இருந்தபோதிலும், இரு யுகங்களிலும் மனிதகுலம் தேவன் தங்களுடைய கர்த்தர் என்பதை மறுதலிக்கும் அளவுக்கு சீர்கெட்டதாக மாறியிருந்தாலும், தேவன் நோவாவின் காலத்திலுள்ள ஜனங்களை மட்டுமே அழித்தார். இரு யுகங்களிலும் மனிதகுலம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது, ஆனாலும் தேவன் கடைசி நாட்களின் மனிதர்களிடம் இப்போது வரை பொறுமையாக இருக்கிறார். இது ஏன்? ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படவே இல்லையா? உங்களுக்கு உண்மையிலேயே தெரியாவிட்டால், நான் உங்களுக்கு சொல்கிறேன். கடைசி நாட்களில் தேவன் ஜனங்களுக்கு கிருபையை அளிக்க முடிந்தது என்பதற்கான காரணம், அவர்கள் நோவாவின் காலத்தில் இருந்தவர்களை விட குறைவான அளவே சீர்கெட்டுப்போயிருந்தார்கள் என்பதற்காக அல்ல, அல்லது அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்புதலைக் காண்பித்திருக்கிறார்கள் என்பதற்காகவும் அல்ல, கடைசி நாட்களில் தேவன் அவர்கள் மேல் அழிவைக் கொண்டுவருவதற்கு முடியாதபடிக்கு தொழில்நுட்பமானது மிகக் குறைவு என்பதனாலும் அல்ல. மாறாக, கடைசி நாட்களில் ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தில் தேவன் செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது, மேலும் தேவன் தனது மனுஷஅவதரிப்பில் இந்த கிரியையைத் தானே செய்ய விரும்புகிறார். மேலும், தேவன் தனது இரட்சிப்பின் பாத்திரங்களாகவும், அவருடைய நிர்வாகத் திட்டத்தின் பலனாகவும் இந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தேர்வுசெய்து, இந்த ஜனங்களை அடுத்த யுகத்திற்கு கொண்டு வர விரும்புகிறார். ஆகையால் தேவன் செலுத்திய இந்த விலையானது எதுவாக இருந்தாலும், அவருடைய அவதரித்த மாம்சம் கடைசி நாட்களில் செய்யும் கிரியைக்கு முற்றிலும் தயாராகி வருகிறது. நீங்கள் இன்று வந்துவிட்டீர்கள் என்ற உண்மைக்கு இந்த மாம்சமே காரணமாக இருக்கிறது. தேவன் மாம்சத்தில் வாழ்கிறார் என்பதால்தான் நீங்கள் ஜீவனோடு வாழ வாய்ப்பு உள்ளது. இந்த சாதாரண மனிதரின் பேரில் இந்த நல்ல அதிர்ஷ்டம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இறுதியில் ஒவ்வொரு தேசமும் இந்த சாதாரண மனிதரை ஆராதிப்பதோடு, இந்த முக்கியமற்ற/சிறப்பற்ற மனிதருக்கு நன்றி செலுத்திக் கீழ்ப்படிவார்கள், ஏனென்றால் எல்லா மனிதர்களையும் இரட்சிக்கும்படியாக அவர் கொண்டுவந்த சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக அது இருக்கிறது, மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான மோதலைத் தளர்த்தியது, இருவருக்கும் இடையேயான தூரத்தையும் குறைத்தது, தேவன் மற்றும் மனிதனுடைய நினைவுகளுக்கு இடையிலான தொடர்பைத் திறந்தது. தேவனுக்காக இன்னும் பெரிய மகிமையைக் கொண்டுவந்தவர் அவரே. இது போன்ற ஒரு சாதாரண மனிதர் உன் நம்பிக்கை மற்றும் போற்றுதலுக்கு தகுதியற்றவரா? அத்தகைய சாதாரண மாம்சம் கிறிஸ்து என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமாக இல்லையா? அத்தகைய சாதாரண மனிதர் மனிதர்களிடையே தேவனுடைய வெளிப்பாடாக மாற முடியாதா? மனிதகுலத்தை பேரழிவிலிருந்து இரட்சித்த அத்தகைய மனிதர், உங்களுடைய அன்பிற்கும், அவரைப் பற்றிக்கொள்ளுவதற்கான உங்கள் விருப்பத்திற்கும் தகுதியற்றவரா? அவருடைய வாயிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்களை நீங்கள் நிராகரித்து, உங்களிடையே அவர் ஜீவிப்பதை வெறுக்கிறீர்கள் என்றால், இறுதியில் உங்களின் நிலை என்னவாக இருக்கும்?

தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகள் யாவும் இந்த சாதாரண மனிதர் மூலமாகவே செய்யப்படுகின்றன. அவர் உனக்கு எல்லாவற்றையும் வழங்குவார், மேலும் என்னவென்றால், உன் தொடர்பான அனைத்தையும் அவரால் தீர்மானிக்க முடியும். குறிப்பிடத் தகுதியற்ற ஒரு மிகவும் எளிமையான ஒரு மனிதர் நீங்கள் விசுவாசிக்கும் இத்தகைய ஒரு மனிதராக இருக்க முடியுமா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய சத்தியம் போதுமானதாக இல்லையா? உங்களை முற்றிலுமாக நம்பவைப்பதற்கு அவருடைய செயல்களின் சாட்சி போதுமானதாக இல்லையா? அல்லது அவர் உங்களை வழிநடத்தும் பாதை நீங்கள் நடக்கத் தகுதியற்றதா? எல்லாவற்றையும் சொல்லி முடித்தவுடன், நீங்கள் அவரை வெறுக்கவும், அவரைத் தூக்கி எறிந்து, அவருக்கு ஒரு பரந்த இடத்தையும் கொடுக்க என்ன காரணம்? இந்த மனிதரே சத்தியத்தை வெளிப்படுத்துகிறார், இந்த மனிதரே சத்தியத்தை அளிக்கிறார், இந்த மனிதரே உங்களுக்கு பின்பற்றத்தக்கதாக ஒரு பாதையை அளிக்கிறார். இந்த சத்தியங்களுக்குள் தேவனுடைய கிரியையின் தடயங்களை உங்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? இயேசுவின் கிரியை இல்லாமல், மனிதகுலம் சிலுவையிலிருந்து இறங்கியிருக்க முடியாது, இன்றைய மனுஷஅவதரிப்பு இல்லாமல், சிலுவையிலிருந்து இறங்குவோர் ஒருபோதும் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவோ அல்லது புதிய யுகத்திற்குள் நுழையவோ முடியாது. இந்த சாதாரண மனிதரின் வருகை இல்லாமல், தேவனுடைய உண்மையான முகத்தைக் காண உங்களுக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை, அல்லது நீங்கள் தகுதி பெறமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அனைவரும் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டிருக்க வேண்டிய பொருட்களாக இருக்கிறீர்கள். தேவனுடைய இரண்டாவது மனுஷஅவதரிப்பின் வருகையால், தேவன் உங்களை மன்னித்து, உங்களுக்கு இரக்கம் காண்பித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, இன்னும், நான் உங்களுக்கு கடைசியில் விட்டுபோக வேண்டிய வார்த்தைகள் இவைதான்: தேவனின் மனுஷஅவதரிப்பாக இருக்கும் இந்த சாதாரண மனிதர் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கிறார். தேவன் ஏற்கனவே மனிதர்களுக்குள்ளே செய்திருக்கிற மிகப் பெரிய காரியம் இதுதான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உனக்குத் தெரியுமா? மனுஷருக்குள்ளே தேவன் ஒரு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார்” என்பதிலிருந்து

185. இரட்சகர் கடைசி நாட்களில் வந்து, இன்னும் இயேசு என்று அழைக்கப்பட்டு, மீண்டும் யூதேயாவில் பிறந்து அங்கே அவருடைய கிரியையைச் செய்திருந்தால், நான் இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே படைத்தேன், இஸ்ரவேல் ஜனங்களை மட்டுமே மீட்டுக்கொண்டேன் என்பதையும் புறஜாதியினருடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இது நிரூபிக்கும். “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவன் நான் என்ற என் வார்த்தைகளுக்கு முரணாக இது இருக்காதா? நான் யூதேயாவை விட்டு புறஜாதியினரிடையே என் கிரியையைச் செய்கிறேன். ஏனென்றால் நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் தேவன். கடைசி நாட்களில் நான் புறஜாதியினரிடையே தோன்றுகிறேன். ஏனென்றால், நான் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய யேகோவா மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேலாக, புறஜாதியினரிடையே நான் தேர்ந்தெடுத்த அனைவரையும் சிருஷ்டித்தவன். நான் இஸ்ரவேல், எகிப்து, லெபனான் ஆகியவற்றை மட்டுமல்ல, இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட அனைத்து புறஜாதி தேசங்களையும் படைத்தேன். இதன் காரணமாக, நான் எல்லா உயிரினங்களுக்கும் கர்த்தராக இருக்கிறேன். நான் என் கிரியையின் தொடக்கப் புள்ளியாக இஸ்ரவேலைப் பயன்படுத்தினேன். யூதேயா மற்றும் கலிலேயாவை எனது மீட்பின் கிரியையின் கோட்டைகளாகப் பயன்படுத்தினேன். இப்போது நான் புறஜாதி தேசங்களைப் பயன்படுத்துகிறேன். அதில் இருந்து முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் இஸ்ரவேலில் இரண்டு கட்ட கிரியைகளைச் செய்தேன் (இந்த இரண்டு கட்ட கிரியைகளும் நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகும்). மேலும், இரண்டு கட்ட கிரியைகளை (கிருபையின் யுகம் மற்றும் ராஜ்யத்தின் யுகம்) இஸ்ரவேலுக்கு அப்பாற்பட்ட நிலங்கள் முழுவதிலும் செய்து வருகிறேன். புறஜாதி தேசங்களிடையே, நான் ஜெயம் பெறும் கிரியையைச் செய்து, யுகத்தை முடிப்பேன். மனிதன் எப்பொழுதும் என்னை இயேசு கிறிஸ்து என்று அழைத்தாலும், கடைசி நாட்களில் நான் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கியிருக்கிறேன், புதிய கிரியையைத் தொடங்கியிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரியவில்லை என்றால், இரட்சகராகிய இயேசுவின் வருகையை மனிதன் தொடர்ந்து எதிர்பார்த்துக் காத்திருந்தால், நான் அந்த ஜனங்களை, என்னை நம்பாதவர்கள் என்றும், என்னை அறியாதவர்கள் என்றும், என் மீது தவறான நம்பிக்கை உடையவர்கள் என்றும் அழைப்பேன். அத்தகையவர்கள் பரலோகத்திலிருந்து இரட்சகராகிய இயேசுவின் வருகையைப் பார்க்க முடியுமா? அவர்கள் எனது வருகைக்காக காத்திருக்கவில்லை, யூதர்களுடைய ராஜாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். இந்த தூய்மையற்ற பழைய உலகத்தை நான் நிர்மூலமாக்க வேண்டுமென அவர்கள் காத்திருக்கவில்லை, மாறாக, அவர்கள் மீட்கப்பட இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஏங்குகிறார்கள். இந்த தீட்டுப்பட்ட மற்றும் அநீதியான தேசத்திலிருந்து மனிதகுலம் முழுவதையும் மீட்க அவர்கள் இயேசுவை எதிர்நோக்குகிறார்கள். அத்தகையவர்கள், கடைசி நாட்களில் எனது கிரியையை முடிப்பவர்களாக எப்படி மாற முடியும்? மனிதனுடைய ஆசைகளால் என் விருப்பங்களை நிறைவேற்றவோ அல்லது என் கிரியையை நிறைவேற்றவோ இயலாது. ஏனென்றால், நான் முன்பு செய்த கிரியையை மனிதன் வெறுமனே போற்றுகிறான் அல்லது மதிக்கிறான் மற்றும் நான் எப்போதும் பழமையாகிப் போகாத புதிய தேவன் என்று அவன் அறியாதிருக்கிறான். நான் யேகோவா, இயேசு என்று மட்டுமே மனிதனுக்கு தெரியும். மனிதகுலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கடைசி நபர் நான் என்பதை அவன் அறியாதிருக்கிறான். மனிதன் ஏங்கும் மற்றும் அறிந்த அனைத்தும் அவர்களுடைய சொந்தக் கருத்துக்களிலிருந்தே வருகின்றன. அது அவர்கள் கண்களால் பார்க்கக்கூடியது மட்டுமே ஆகும். இது நான் செய்யும் கிரியைக்கு ஏற்ப இல்லை, ஆனால் அதனுடன் ஒத்துப்போகமல் இருக்கிறது. என்னுடைய கிரியை மனிதனுடைய கருத்துக்களின்படி நடத்தப்பட்டால், அது எப்போது முடிவடையும்? மனிதகுலம் எப்போது ஓய்வெடுக்கும்? ஏழாம் நாளான ஓய்வு நாளில் நான் எப்படி நுழைய முடியும்? நான் என் திட்டத்தின்படி கிரியை செய்கிறேன், என் நோக்கத்தின்படி கிரியை செய்கிறேன்—மனிதனுடைய நோக்கங்களின்படி கிரியை செய்வதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இரட்சகர் ஏற்கனவே ஒரு ‘வெண் மேகத்தின்’ மீது திரும்பியுள்ளார்” என்பதிலிருந்து

186. நீங்கள் அமெரிக்கராகவோ, ஆங்கிலேயராகவோ, அல்லது வேறு எந்த தேசத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் சொந்தத் தேசத்தின் கட்டுப்பாடுகளைத் தாண்டி வெளியே வர வேண்டும், உங்கள் சுயத்தைக் கடந்து, தேவனின் கிரியையை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் பார்வையில் பார்க்க வேண்டும். இந்த வழியில், நீங்கள் தேவனின் கால்தடங்களில் வரம்புகளை விதிக்க மாட்டீர்கள். ஏனென்றால், இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே தேவன் தோன்றுவார் என்பது கூடாத காரியம் என்று பலர் கருதுகிறார்கள். தேவனின் கிரியையின் முக்கியத்துவம் எவ்வளவு ஆழமானது, தேவன் தோன்றுதல் எவ்வளவு முக்கியமானது! மனிதனின் கருத்துகளுக்கும் சிந்தனைக்கும் இதனை மதிப்பிடுவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? எனவே நான் சொல்கிறேன், தேவன் தோன்றுதலைத் தேடுவதற்கு நீங்கள் தேசியம் மற்றும் இனத்தின் கருத்துக்களை உடைக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே நீங்கள் உங்கள் சொந்தக் கருத்துக்களால் கட்டுப்படுத்தப்பட மாட்டீர்கள்; இதன் மூலம் மட்டுமே தேவன் தோன்றுதலை வரவேற்க நீங்கள் தகுதி பெறுவீர்கள். இல்லையெனில், நீங்கள் நித்திய இருளில் இருப்பீர்கள், ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெற மாட்டீர்கள்.

தேவன் என்பவர் முழு மனிதஇனத்திற்கும் தேவனாயிருக்கிறார். அவர் தன்னை எந்தவொரு தேசத்தின் அல்லது மக்களின் தனிப்பட்ட சொத்தாகக் கருதுவதில்லை, ஆனால் அவர் எந்தவொரு வடிவத்தாலும், தேசத்தாலும், மக்களாலும் கட்டுப்படுத்தப்படாமல், திட்டமிட்டபடி தனது வேலையைச் செய்கிறார். ஒருவேளை நீ இந்த வடிவத்தை ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராமல் இருக்கலாம், அல்லது ஒருவேளை இந்த வடிவத்தை ஒரு வகையில் மறுப்பது உன் அணுகுமுறையாக இருக்கலாம், அல்லது ஒருவேளை தேவன் தன்னை வெளிப்படுத்தும் தேசம் மற்றும் அவர் தன்னை யார் மத்தியில் வெளிப்படுத்துகிறாரோ அந்த மக்கள் ஆகியோர், அனைவராலும் பாகுபாடு காட்டப்படுபவர்களாகவும், பூமியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களாகவும் இருக்க நேரிடலாம். எனினும் தேவனுக்கு அவருடைய ஞானம் இருக்கிறது. அவருடைய மகா வல்லமையினாலும், அவருடைய சத்தியத்தினாலும், அவருடைய மனநிலையினாலும், அவருடைய எண்ணத்துடன் ஒத்துப்போகின்ற ஒரு ஜனக்குழுவையும், அவர் முழுமையாக்க விரும்பிய ஒரு ஜனக்குழுவையும் அவர் உண்மையிலேயே பெற்றுள்ளார்—இது அவரால் வெற்றி கொள்ளப்பட்ட, எல்லா விதமான சோதனைகளையும் இன்னல்களையும், எல்லா விதமான துன்புறுத்தல்களையும் சகித்துக் கொண்டு, அவரை இறுதிவரை பின்பற்ற முடிகின்ற ஒரு ஜனக்குழுவாக இருக்கும். தேவன் தோன்றுவதன் நோக்கமாவது, எந்தவொரு வடிவத்தின் அல்லது தேசத்தின் தடைகளிலிருந்தும் விடுவித்து, அவர் திட்டமிட்டபடி அவரது வேலையைச் செயல்படுத்தி முடிக்கவேண்டும் என்பதாகும். யூதேயாவில் தேவன் மாம்சமானது போலவே இதுவும் உள்ளது: மனித இனம் முழுவதையும் மீட்பதற்காகச் சிலுவையில் அறையப்படும் வேலையை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஆயினும் யூதர்கள் இது தேவனால் கூடாத காரியம் என்று நம்பினர், மேலும் தேவன் மாம்சமாகி, கர்த்தர் இயேசுவின் ரூபத்தை ஏற்பது கூடாத காரியம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்களுடைய “கூடாத காரியம்” அவர்கள் தேவனைக் கண்டித்து எதிர்த்ததற்கான அடிப்படையாக மாறியது, இறுதியில் இஸ்ரவேலின் அழிவுக்கு வழிவகுத்தது. இன்று, பலர் இதே போன்ற பிழையைச் செய்துள்ளனர். தேவனுடைய உடனடி பிரசன்னமாகுதலை அவர்கள் தங்கள் முழு பலத்தோடும் பறைசாற்றுகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் அவருடைய பிரசன்னமாகுதலை கண்டிக்கிறார்கள்; அவர்களுடைய “கூடாத காரியம்” தேவனின் பிரசன்னமாகுதலை அவர்களின் கற்பனையின் எல்லைக்குள் மீண்டும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, தேவனுடைய வசனங்களைக் கேட்ட பிறகு பலர் பலத்த, கடுமையான நகைப்பினால் பரியாசம்பண்ணுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இந்த நகைப்பு யூதர்களின் ஆக்கினையிலிருந்தும், தேவ தூஷணத்திலிருந்தும் வேறுபட்டதா? சத்தியத்தின் முன்னிலையில் நீங்கள் பயபக்தியுடன் இல்லை, அதிலும் குறைவாகவே நீங்கள் ஏக்கத்தின் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்கள். நீ செய்வதெல்லாம் பகுத்தறியாமல் படிப்பது மற்றும் அக்கறையற்ற மகிழ்ச்சியுடன் காத்திருப்பது மட்டுமே. இப்படி படிப்பதிலிருந்தும் காத்திருப்பதிலிருந்தும் நீ என்ன பெற முடியும்? நீ தேவனிடமிருந்து தனிப்பட்ட வழிகாட்டுதலைப் பெறுவாய் என்று நினைக்கிறாயா? தேவனுடைய வசனங்களை நீ நிதானித்து அறிய முடியாவிட்டால், தேவனுடைய பிரசன்னமாகுதலை காண நீ எந்த வகையில் தகுதியுடையவர்? தேவன் எங்கெல்லாம் பிரத்தியட்சமாகிறாரோ, அங்கே சத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது, அங்கே தேவனுடைய சத்தம் இருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களால் மட்டுமே தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியும், மேலும் அத்தகைய ஜனங்கள் மட்டுமே தேவனுடைய பிரசன்னமாகுதலைக் காண தகுதியுடையவர்களாவர். உன் கருத்துகளை விட்டுவிடு! நீங்களே அமைதியாக இருந்து, இந்த வார்த்தைகளைக் கவனமாக வாசி. நீ சத்தியத்திற்காக ஏங்குகிறாய் என்றால், தேவன் உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார், மேலும் நீ அவருடைய சித்தத்தையும் அவருடைய வார்த்தைகளையும் புரிந்துகொள்வாய். “கூடாத காரியம்” பற்றிய உங்கள் கருத்துக்களை விட்டுவிடுங்கள்! எது ஒன்றைக் கூடாத காரியம் என்று மக்கள் அதிகளவு நம்புகிறார்களோ, அது நிகழ்வதற்கான வாய்ப்பு அந்தளவிற்கு அதிகமாக உள்ளது, ஏனென்றால் தேவனின் ஞானம் வானங்களைவிட உயர்ந்தது, தேவனுடைய நினைவுகள் மனிதனின் நினைவுகளை விட உயர்ந்தவை, மேலும் தேவனுடைய கிரியை மனிதனின் நினைவு மற்றும் கருத்துக்களின் வரம்புகளைக் கடந்தது. எது ஒன்று அதிகளவு கூடாத காரியமாக இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக நாடிச்செல்லக்கூடிய சத்தியம் அதில் இருக்கும்; மனிதனின் கருத்துக்களுக்கும் கற்பனைக்கும் அதிகம் அப்பாற்பட்டதாக எது ஒன்று இருக்கிறதோ, அந்தளவிற்கு அதிகமாக அது தேவனுடைய சித்தத்தைக் கொண்டுள்ளது. ஏனென்றால், அவர் தன்னை எங்கு வெளிப்படுத்தினாலும், தேவன் இன்னும் தேவன் தான், அவருடைய தோன்றும் இடம் அல்லது முறை காரணமாக அவருடைய தன்மை ஒருபோதும் மாறாது. தேவனின் மனநிலை அவருடைய கால்தடங்கள் எங்கு இருந்தாலும் மாறாமல் அப்படியே இருக்கும், தேவனின் கால்தடங்கள் எங்கு இருந்தாலும், கர்த்தராகிய இயேசு எப்படி இஸ்ரவேலர்களின் தேவனாக மட்டுமல்லாமல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லா மக்களுக்கும், மேலும் அதற்கும் மேலாக அவர் முழுப் பிரபஞ்சத்திற்கும் ஒரே தேவனாக இருக்கிறாரோ அது போலவே அவர் எல்லா மனித இனத்திற்கும் தேவனாயிருக்கிறார். ஆகவே, தேவனுடைய சித்தத்தை நாடுவோம், அவருடைய வசனங்களில் அவருடைய தோன்றுதலைக் கண்டுபிடிப்போம், அவருடைய காலடிச் சுவடுகளின் வேகத்திற்கு ஈடுகொடுப்போம்! தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார். அவரது வார்த்தைகளும் அவரது தோன்றுதலும் ஒரே நேரத்தில் சந்திக்கின்றன, அவருடைய மனநிலையும் கால்தடங்களும் மனிதகுலத்திற்கு எல்லா நேரங்களிலும் திறந்திருக்கும். அன்புள்ள சகோதர சகோதரிகளே, நீங்கள் இந்த வார்த்தைகளில் தேவனின் தோன்றுதலைக் காண முடியும் என்று நம்புகிறேன், புதிய யுகத்திற்கு முன்னேறிச் செல்கையில் அவருடைய காலடிச் சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கி, தேவன் பிரசன்னமாகுதலுக்காக காத்திருப்பவர்களுக்குத் தேவன் தயார் செய்திருக்கும் அழகான புதிய வானம் மற்றும் புதிய பூமிக்குள் நுழைந்திடுங்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 1: தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “பலன்களாக இருக்கிறோம்” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: D. சத்தியம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

அடுத்த: IV. மாம்சமாதலின் இரகசியங்களை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக