D. சத்தியம் என்றால் என்ன என்பதை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

152. கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனை பெற்றுக்கொள்ளும் வழியாகும். இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளும் ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருளாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சள் புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் ஞானத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள மறைபொருட்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே பரலோகத்திற்குச் சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

153. என் வார்த்தைகள் எப்போதும் மாறாத சத்தியம். நானே மனிதனுக்கு ஜீவனை அளிப்பதுடன் மனிதகுலத்தின் ஒரே வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மதிப்பும் அர்த்தமும் மனிதகுலத்தினால் அவை அங்கீகரிக்கப்படுகின்றனவா அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதனால் அல்ல, ஆனால் வார்த்தைகளின் சாராம்சத்தினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள ஒரு மனிதர் கூட எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, எனது வார்த்தைகளின் மதிப்பும் மனிதகுலத்திற்கு அவற்றின் உதவியும் எந்த மனிதனாலும் மதிப்பிடப்பட முடியாதது. ஆகவே, என் வார்த்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மறுதலிக்கும், அல்லது முற்றிலும் வெறுக்கும் அநேக ஜனங்களை எதிர்கொள்ளும் போது, என் நிலைப்பாடு இது மாத்திரமே: காலமும் உண்மைகளும் எனது சாட்சிகளாகி எனது வார்த்தைகளே சத்தியம், வழி மற்றும் ஜீவன் எனக் காட்டட்டும். நான் கூறியவை எல்லாம் சரி எனவும், இதுவே மனிதனுக்குத் தரப்பட வேண்டும் எனவும், மேலும், மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை காட்டட்டும். என்னைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த உண்மையை நான் தெரியப்படுத்துவேன்: எனது வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளை கடைபிடிக்க முடியாதோர், எனது வார்த்தைகளினால் இலக்கைக் கண்டறிய முடியாதோர் மற்றும் எனது வார்த்தைகளின் நிமித்தமான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டோர், மேலும், எனது இரட்சிப்பை இழந்தோர் ஆகிய இவர்களிடமிருந்து எனது கோல் என்றும் விலகிச் செல்லாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்பதிலிருந்து

154. தேவனே ஜீவனும் சத்தியமுமாக இருக்கிறார், அவருடைய ஜீவனும் சத்தியமும் ஒன்றாக இருக்கின்றன. சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளத் திராணியில்லாதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உதவி ஆகியவை இல்லாமல், நீ எழுத்துக்களையும், கோட்பாடுகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக மரணத்தையும் மாத்திரமே பெற்றுக்கொள்வாய். தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் உள்ளது, அவருடைய சத்தியமும் ஜீவனும் ஒன்றாகவே இருக்கின்றன. உன்னால் சத்தியத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், ஜீவனின் வளர்ச்சியை நீ பெற்றுக்கொள்ள மாட்டாய்; கொடுக்கும் ஜீவனை உன்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், உன்னிடம் நிச்சயமாக எந்தச் சத்தியமும் இருக்காது. ஆகையால், கற்பனைகளையும் கருத்துக்களையும் தவிர, உனது சரீரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் மாம்சமாக இருக்குமே ஒழிய வேறு எதுவுமாக இருக்காது. புத்தகங்களின் வார்த்தைகள் ஜீவனாகக் கருதப்படாது என்பதையும், வரலாற்றுப் பதிவுகளைச் சத்தியமாகப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும், கடந்த கால விதிமுறைகளை தற்போது தேவனால் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் அறிந்துகொள். தேவன் பூமிக்கு வந்து மனுஷர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணியபோது தேவன் வெளிப்படுத்தியது மாத்திரமே சத்தியமாகவும், ஜீவனாகவும், தேவனுடைய சித்தமாகவும் மற்றும் அவருடைய தற்போதைய செயல்பாட்டு முறையாகவும் இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து

155. சத்தியம் என்பது ஜீவனத்தின் பழமொழிகளில் மிகவும் உண்மையாதாகவும், மேலும் சகலம னிதகுலத்திடமும் இதுபோன்ற பழமொழிகளில் மிக உயர்ந்ததாகவும் இருக்கிறது. ஏனென்றால், தேவன் மனிதனை உருவாக்க இது தேவையாய் இருக்கிறது, மேலும் இது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கிரியை, எனவே இது “ஜீவனத்தின் பழமொழி” என்று அழைக்கப்படுகிறது. இது ஏதோவொன்றிலிருந்து சுருக்கமாக உரைக்கப்பட்ட ஒரு பழமொழியும் அல்ல, ஒரு பெரிய மனிதரின் பிரபலமான மேற்கோளும் அல்ல. மாறாக, வானங்களுக்குக்கும் பூமிக்கும் மற்றும் சகல காரியங்களுக்கும் எஜமானனாகியவரிடமிருந்து மனிதகுலத்திற்காக உரைக்கப்பட்ட வார்த்தையாக இது இருக்கிறது; இது மனிதனால் சுருக்கப்பட்ட சில வார்த்தைகள் அல்ல, ஆனால் தேவனின் ஜீவனிலிருந்து இயல்பாகவே வரப்பெற்றவை. எனவே இது “சகல ஜீவன்களின் பழமொழிகளிலும் மிக உயர்ந்தது” என்று அழைக்கப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

156. சத்தியமானது மனிதனின் உலகத்திலிருந்து வருகிறது, ஆனாலும் மனிதர்களிடையே உள்ள சத்தியம் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறது. இது கிறிஸ்துவினிடமிருந்து உருவாகிறது, அதாவது தேவனிடமிருந்தே உருவாகிறது. இது மனிதனால் இயலாத ஒன்று அல்ல. ஆனாலும் கிறிஸ்து சத்தியத்தை மட்டுமே தருகிறார்; சத்தியத்தைத் தேடுவதில் மனிதன் வெற்றி பெறுவானா என்பதை தீர்மானிக்க அவர் வரவில்லை. ஆகவே, சத்தியத்தில் வெற்றி அல்லது தோல்வி அனைத்தும் மனிதனின் பின்பற்றுதலுக்குக் கீழானது என்பதை இது பின்வருமாறு கூறுகிறது. சத்தியத்தில் மனிதன் பெறும் ஜெயம் அல்லது தோல்வியானது ஒருபோதும் கிறிஸ்துவுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை. மாறாக அது அவனுடைய பின்பற்றுதலின் விளைவாகத் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் இலக்கு மற்றும் அவனது ஜெயம் அல்லது தோல்வி ஆகிவற்றை தேவனே தாங்கும்படியாக இருக்கிறார் என்பதாக அவற்றை அவருடைய பொறுப்பில் வைக்க முடியாது. ஏனென்றால், தேவனுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால் தேவனுடைய சிருஷ்டிகள் செய்ய வேண்டிய கடமையுடன் அதற்கு நேரடியாக தொடர்பு இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

157. சத்தியம் சூத்திரமானது அல்ல, அது ஒரு சட்டமும் அல்ல. அது உயிரற்றதல்ல, அதுவே ஜீவனானது, அது ஒரு ஜீவனுள்ள விஷயம், மேலும் அது ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதும், மனிதன் தன் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டியதுமான ஒரு கட்டளையாகும். இது நீ முடிந்தவரை அனுபவத்தின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். நீ உன் அனுபவத்தில் எந்த நிலைக்கு வந்திருந்தாலும், தேவனுடைய வார்த்தையில் இருந்தோ அல்லது சத்தியத்தில் இருந்தோ உன்னைப் பிரிக்க முடியாது, மேலும் தேவனுடைய மனநிலையைப் பற்றி நீ புரிந்து கொள்வதும், தேவனிடத்தில் உள்ளவைகளையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் பற்றி உனக்கு தெரிந்தவைகளெல்லாம் தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகள் சத்தியத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய மனநிலையும், அவரிடம் உள்ளவைகளும், அவர் யாராக இருக்கிறார் என்பதே சத்தியமாகும்; சத்தியம் என்பது தேவனுடைய மனநிலை, அவரிடம் உள்ளவைகள் மற்றும் அவர் யாராய் இருக்கிறார் என்பதின் அதிகாரப்பூர்வமான வெளிப்பாடாகும். அது அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் வலுவாக்குகிறது, மேலும் அவரிடம் உள்ளவைகளையும், அவர் யாராக இருக்கிறார் என்பதையும் குறித்த ஒரு தெளிவான அறிக்கையை உருவாக்குகிறது. அது தேவன் எதை விரும்புகிறார், எதை விரும்புவதில்லை, நீங்கள் எதைச் செய்ய அவர் விரும்புகிறார், அவர் உங்களைச் செய்ய அனுமதிக்காதது எது, எந்த ஜனங்களை அவர் வெறுக்கிறார், எந்த ஜனங்களை அவர் விரும்புகிறார் என்பதை மிக நேரடியாகக் கூறுகிறது. தேவன் வெளிப்படுத்தும் சத்தியங்களுக்குப் பின்னால் ஜனங்கள் அவருடைய இன்பம், கோபம், துக்கம், சந்தோஷம் ஆகியவற்றையும், அவருடைய சாராம்சத்தையும் கூட காணலாம், இதுவே அவருடைய மனநிலையின் வெளிப்பாடாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

158. தேவன் பேசும் வார்த்தைகள் வெளிப்படையானவையாக அல்லது வெளிப்புற தோற்றத்தில் ஆழமாக இருந்தாலும், அவை அனைத்தும் மனிதன் ஜீவனுக்குள் நுழைகையில் இன்றியமையாத சத்தியங்களாக இருக்கின்றன. அவை ஜீவத்தண்ணிரின் நீரூற்று ஆகும். அவை மனிதனை ஆவியில் மற்றும் மாம்சத்தில் ஜீவிக்க உதவுகின்றன. மனிதன் உயிருடன் இருக்க தேவையானதை அவை வழங்குகின்றன. அவனது அன்றாட ஜீவிதத்தை நடத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நம்பிக்கையையும், இரட்சிப்பைப் பெறுவதற்கு அவன் கடந்து செல்ல வேண்டிய பாதை, குறிக்கோள் மற்றும் திசையையும், தேவனுக்கு முன்பாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக அவர் வைத்திருக்க வேண்டிய ஒவ்வொரு சத்தியத்தையும், மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிகிறான், வணங்குகிறான் என்பது பற்றிய ஒவ்வொரு சத்தியத்தையும் அவன் கொண்டிருக்க வேண்டும். அவை மனிதனுடைய ஜீவித்தத்தை உறுதி செய்யும் உத்தரவாதம், அவை மனிதனுடைய அன்றாட அப்பம் மற்றும் அவை மனிதனை வலிமையாகவும் எழுந்து நிற்கவும் உதவும் உறுதியான ஆதரவும் ஆகும். சாதாரண மனிதத்தன்மையின் சத்தியத்தின் யதார்த்தத்தில் அவர்கள் பணக்காரர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் சத்தியத்தால் நிறைந்திருக்கும் அது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மூலம் வாழ்கிறது. இதனால் மனிதகுலம் கேட்டிலிருந்து விடுபட்டு, சாத்தானின் கண்ணிகளுக்குத் தப்பித்து, மனிதகுலத்திற்கு சிருஷ்டிகர் தரும் சளைக்காத போதனை, அறிவுரை, ஊக்கம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றால் நிறைந்திருக்கும். அவை நேர்மறையானவை. அவை, அனைத்தையும் புரிந்துகொள்ள மனிதர்களுக்கு வழிகாட்டும் மற்றும் அறிவூட்டும் கலங்கரை விளக்கமாகும். அவை மனிதர்கள் வெளியே ஜீவிப்பதையும், நீதியான மற்றும் நன்மையான அனைத்தையும் வைத்திருப்பதையும் உறுதி செய்யும் உத்தரவாதம் ஆகும். அவை எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், பொருட்களும் அளவிடும் அளவுகோல் ஆகும். அவை இரட்சிப்பு மற்றும் ஒளியின் பாதையை நோக்கி மனிதர்களை வழிநடத்தும் வழிகாட்டி ஆகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “முகவுரை” என்பதிலிருந்து

159. தேவனின் வார்த்தையை மனுஷனின் வார்த்தையாக மாற்ற முடியாது, மேலும் மனுஷனின் வார்த்தையை தேவனின் வார்த்தையாக மாற்ற முடியாது. தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனானவன் மனுஷனாக அவதரித்த தேவன் அல்ல; மனுஷ அவதாரமான தேவன், தேவனால் பயன்படுத்தப்பட்ட மனுஷன் அல்ல. இதில், ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. ஒருவேளை, இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு, இவை தேவனின் வார்த்தைகள் என்று நீ ஒப்புக் கொள்ள மாட்டாய், ஆனால் மனுஷன் பெற்ற அறிவூட்டலாக மட்டுமே ஒப்புக் கொள்வாய். அவ்வாறான நிலையில், நீ அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறாய். தேவனின் வார்த்தைகள் எப்படி மனுஷன் பெற்ற அறிவூட்டலைப் போலவே இருக்க முடியும்? மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகள் ஒரு புதிய யுகத்தைத் திறக்கின்றன, மனுஷகுலம் முழுவதற்கும் வழிகாட்டுகின்றன, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்றன, மேலும் புதிய யுகத்தில் மனுஷன் செல்ல வேண்டிய திசையையும் காட்டுகின்றன. மனுஷனால் பெறப்பட்ட அறிவூட்டல் என்பது கடைபிடிக்கக் கூடிய அல்லது அறிவுக்கு எளிய வழிமுறைகளாக இருக்கிறது. இதனால் மனுஷகுலம் அனைத்தையும் ஒரு புதிய யுகத்திற்கு வழிநடத்தவோ அல்லது தேவனின் மறைபொருட்களை வெளிப்படுத்தவோ முடியாது. எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, தேவன் தேவனாகவும், மனுஷன் மனுஷனாகவும் இருக்கிறான். தேவனுக்கு தேவனின் சாராம்சம் இருக்கிறது, மனுஷனுக்கு மனுஷனின் சாராம்சம் இருக்கிறது. தேவன் பேசும் வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெறப்படும் எளிமையான அறிவூட்டலாக மனுஷன் கருதினால், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக் கொண்டால், அது மனுஷனின் தவறு.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

முந்தைய: C. சீர்கெட்ட மனுக்குலத்தின் மதக் கருத்துக்கள், மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்துவது குறித்த வார்த்தைகள்

அடுத்த: III. தேவனுடைய தோற்றத்துக்கும் கிரியைக்கும் சாட்சி பகர்தல் குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக