XIV. மனுஷனுடைய பலனை வரையறுப்பதற்கான தேவனுடைய தரநிலைகள் மற்றும் ஒவ்வொரு வகையான நபருக்கான முடிவு குறித்த வார்த்தைகள்

675. மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், அவர்கள் சத்தியத்தை நம்பினார்களா, அவர்கள் தேவனை அறிந்துள்ளார்களா, மற்றும் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குத் தங்களை அவர்களால் அர்ப்பணிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு வகையான நபரும் தண்டனைக்குரியவரா அல்லது பிரதிபலனுக்குரியவரா என்பது தீர்மானிக்கப்படும். கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்கு ஊழியம் செய்தும் அவரை அறியாமலும் அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருப்பவர்களிடம் சத்தியம் இல்லை. இத்தகைய ஜனங்கள் அக்கிரமக்காரர், மற்றும் அக்கிரமக்காரர் சந்தேகமின்றி தண்டனைக்குரியவர்கள்; மேலும் அவர்கள் தங்கள் துன்மார்க்கத்துக்கு ஏற்பத் தண்டிக்கப்படுவார்கள். தேவன் மனிதர்களின் விசுவாசத்திகுரியவர் மேலும் அவர் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உகந்தவர். தெளிவில்லாத மற்றும் அதரிசனமான தேவனில் விசுவாசம் உள்ளவர்களே தேவனை விசுவாசியாதவர்கள் மேலும் தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாதவர்கள் ஆவர். கண்ணுக்குப்புலனாகும் தேவனின் ஜெயங்கொள்ளும் கிரியை முடியும் போது இந்த ஜனங்களால் இன்னும் அவரை நம்புவதற்கு முடியாமல் போனால், மேலும் மாம்சத்தில் புலனாகும் தேவனுக்குத் தொடர்ந்து கீழ்ப்படியாமல் எதிர்த்தால், பின்னர் இந்த தெளிவற்றவர்கள், சந்தேகமின்றி, அழிவின் பொருளாக மாறுவார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் சிலர் போல—மாம்சமாகிய தேவனை வாயால் அங்கீகரித்தும் மாம்சமாகிய தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும் சத்தியத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள், இறுதியில் அழித்தொழிக்கப்படும் பொருளாவார்கள். மேலும், கண்ணுக்குப்புலனாகும் தேவனை வார்த்தையால் அங்கீகரிக்கும் யாரொருவரும், அவரால் கூறப்படும் சத்தியத்தைப் புசித்து மற்றும் பானம்பண்ணி, அதே நேரத்தில் தெளிவற்ற மற்றும் அதரிசனமான தேவனைப் பின் பற்றினால், வருங்காலத்தில் இன்னும் அதிகமாக அழிக்கப்படும் வாய்ப்புள்வர்கள் ஆவர். தேவனின் கிரியை நிறைவடைந்த பின்னர் வரும் இளைப்பாறுதல் காலத்தில் இந்த ஜனங்களில் ஒருவரும் மீந்திருக்க மாட்டார்கள் அல்லது இத்தகைய ஜனங்களைப் போன்றவர்களில் ஒரு தனி நபர் கூட இளைப்பாறுதல் காலத்தில் மீந்திருக்க மாட்டார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களே பேய்த்தனமான ஜனங்கள்; அவர்களின் சாராம்சம் தேவனை எதிர்ப்பதும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதும் ஆகும், மேலும் அவர்களிடம் அவருக்குக் கீழ்ப்படியும் எண்ணம் சிறிதளவும் இருப்பதில்லை. இத்தகைய ஜனங்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள். உன்னிடம் சத்தியம் இருக்கிறதா மற்றும் நீ தேவனை எதிர்க்கிறாயா என்பது உன் சாராம்சத்தைப் பொறுத்தது, உன் தோற்றத்திலோ அல்லது நீ எப்போதாவது பேசுவதிலோ அல்லது நீ நடந்துகொள்ளும் விதத்திலோ இல்லை. ஒரு தனி நபர் அழிக்கப்படுவானா இல்லையா என்பது ஒருவனின் சாராம்சத்தினால் தீர்மானிக்கப்படும்; ஒருவரின் நடத்தையும் ஒருவர் சத்தியத்தைப் பின்பற்றுவதும் வெளிப்படுத்தும் சாராம்சத்தை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. ஜனங்கள் மத்தியில், கிரியை செய்வதில் ஒருவரைப் போல் ஒருவர் இருப்பவர்களும், ஒரே அளவிலான கிரியையை செய்பவர்களும், மனித சாராம்சம் நல்லதாக இருப்பவர்களும், சத்தியத்தைக் கொண்டிருப்பவர்களுமான ஜனங்களே மீந்திருக்க அனுமதிக்கபப்டுவார்கள், அதே சமயம் யாருடைய மனித சாரம்சம் தீமையானதோ மற்றும் யார் கண்ணுக்குப்புலனாகும் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லையோ அவர்களே அழிவுக்குரிய பொருளாவார்கள். மனுக்குலம் சென்றடையும் இடத்தைப் பற்றிய அனைத்து தேவனின் கிரியை அல்லது வார்த்தைகள் ஒவ்வொரு தனிநபரின் சாராம்சத்தைப் பொறுத்து தகுந்த முறையில் ஜனங்களைக் கையாளும்; ஒரு சிறு தவறும் ஏற்படாது, மேலும் ஒரு சிறு பிழையும் நடைபெறாது. ஜனங்கள் செயலாற்றும் போதே மனித உணர்ச்சி அல்லது அர்த்தம் கலக்கிறது. தேவன் செய்யும் கிரியை மிகவும் பொருத்தமானது; அவர் எந்த சிருஷ்டிக்கும் எதிராகப் பொய்யான கூற்றைக் கொண்டுவர மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

676. பரிசுத்த மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மரித்தவர்களின் ஆவியாக இருந்தாலும் அல்லது மாம்சத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களாக இருந்தாலும், அனைத்து அக்கிரமக்காரரும் மற்றும் இரட்சிக்கப்படாத அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமஞ்செய்யும் ஆவிகள் மற்றும் மனிதர்களையும், அல்லது நீதிமான்களின் ஆவிகள் மற்றும் நன்மை செய்பவர்களையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த யுகத்தில் இருந்தாலும், தீமை செய்யும் அனைவரும் இறுதியாக அழிக்கப்படுவார்கள் மேலும் நீதிமான்கள் அனைவரும் பிழைப்பார்கள். ஒரு நபர் அல்லது ஆவி இரட்சிப்பைப் பெறுமா என்பது கடைசிக் காலத்தின் கிரியையின் அடிப்படையில் முழுவதுமாக தீர்மானிக்கப்பட மாட்டாது; மாறாக, அவர்கள் தேவனை எதிர்த்தார்களா அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முந்திய யுகத்தில் தீமை செய்து இரட்சிப்பைப் பெற முடியாதவர்கள், சந்தேகமின்றி, தண்டனைக்கு இலக்காவார்கள், மற்றும் தற்போதைய யுகத்தில் தீமை செய்து இரட்சிக்கப்பட முடியாதவர்களும் தண்டனைக்கு இலக்காகவே இருப்பார்கள். மனிதர்கள் அவர்கள் வாழும் யுகத்தைப் பொருத்தல்லாமல், நன்மை தீமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட உடன், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் கடைசி நாட்களில் தமது ஜெயங்கொள்ளுதல் கிரியையை முடித்த பின்னரே தீயோரைத் தண்டிக்கும் மற்றும் நல்லோருக்கு பிரதிபலன் அளிக்கும் தமது கிரியையைச் செய்வார். உண்மையில், மனிதர்களுக்கு மத்தியில் அவர் தமது கிரியையை செய்யத் தொடங்கியது முதல் அவர்களை நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார். அவரது கிரியை நிறைவடைந்த பின்னரே அவர் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்துத் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; தமது கிரியை முடிவடைந்த உடன் அவர் அவர்களை வகைப்படுத்தி பின்னர் உடனடியாக நல்லவர்களுக்கு பிரதிபலன்களையும் துன்மார்க்கருக்கு தண்டனையும் அளிப்பார் என்பதல்ல. நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

677. மனிதர்கள் பிற மனிதர்களை மதிப்பிடும் அளவீடு அவர்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது; யாருடைய நடத்தை நல்லதாக இருக்கிறதோ அவர்கள் நீதிமான்கள், அதே சமயம் யாருடைய நடத்தை அருவருப்பானதோ அவர்கள் துன்மார்க்கர். மனிதர்களின் சாராம்சம் அவருக்கு கீழ்ப்படிகிறதா இல்லையா என்பதை அளவீடாய்க் கொண்டு அதன் அடிப்படையில் தேவன் அவர்களை மதிப்பிடுகிறார்; தேவனுக்குக் கீழ்ப்படியும் ஒருவன் ஒரு நீதிமான், கீழ்ப்படியாத ஒருவன் ஒரு விரோதி மற்றும் ஒரு துன்மார்க்கன், இந்த நபரின் நடத்தை நல்லதா அல்லது மோசமானதா மற்றும் அவர்களது பேச்சு சரியானதா அலலது தவறானதா என்பது கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சிலர் நல்ல செயல்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சென்றடையும் இடத்தை வருங்காலத்தில் அடைய விரும்புகிறார்கள், மற்றும் சிலரோ நல்ல சொற்களைப் பயன்படுத்தி ஒரு நல்ல சேருமிடத்தை அடைய விரும்புகிறார்கள். தேவன் அவர்களது நடத்தையைப் பார்த்து அல்லது அவர்களின் பேச்சைக் கேட்டு மக்களின் பலாபலன்களை தீர்மானிப்பதாக ஒவ்வொருவரும் தவறாக நம்புகிறார்கள்; ஆகவே பலர் இதை அனுகூலமாகப் பயன்படுத்தி தேவனை ஏமாற்றி தற்காலிக நன்மைகளைப் பெற விரும்புகின்றனர். வருங்காலத்தில், ஓர் இளைப்பாறுதல் நிலையில் வாழும் மக்கள் எல்லோரும் உபத்திரவ காலத்தை சகித்துக் கொண்டவர்களாகவும் மற்றும் தேவனுக்கு சாட்சியாக நின்றவர்களுமாக இருப்பார்கள்; அவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றியவர்களாகவும் உளமாற தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்பார்கள். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதை தவிர்க்கும் எண்ணத்தோடு மட்டும் ஊழியம் செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவோர் மீந்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு நபரின் பலாபலனுக்கான ஏற்பாட்டிற்காக தேவன் பொருத்தமான அளவீடுகளை வைத்திருக்கிறார்; அவர் ஒருவரின் வார்த்தைகள் மற்றும் நடத்தையை வைத்து மட்டுமே இந்த முடிவுகளை எடுப்பதில்லை அல்லது ஓர் ஒற்றைக் கால கட்டத்தில் ஒருவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை வைத்தும் முடிவெடுப்பதில்லை. கடந்த காலத்தில் ஒருவர் அவருக்குச் செய்த சேவையின் காரணமாக ஒருவரின் பொல்லாத நடத்தை தொடர்பாக அவர் நிச்சயமாக இரக்கம் காட்டுவதில்லை, அல்லது ஒருவர் தேவனுக்காக ஒரே முறை செய்த செலவுக்காக அவர் ஒருவரை மரணத்தில் இருந்து தப்பிக்க விடுவதில்லை. ஒருவரும் தனது பொல்லாங்குக்காகப் பழிவாங்கப்படுதலை தவிர்க்க முடியாது, மேலும் ஒருவரும் தமது தீய நடத்தையை மறைக்க முடியாது மேலும் அதன் மூலம் அழிவின் வேதனையைத் தவிர்க்க முடியாது. மக்கள் தங்கள் சொந்தக் கடமைகளை உண்மையில் நிறைவேற்ற முடியுமானால், அவர்கள் ஆசீர்வாதங்களையோ அல்லது இக்கட்டில் துன்பங்களையோ அடைந்தாலும் பிரதிபலன்களைத் தேடாமல் நித்தியமாக தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆசீர்வாதங்களைக் காணும்போது தேவனிடம் விசுவாசம் உள்ளவர்களாகவும், ஆனால் ஆசீர்வாதங்களைக் காணாதபோது தங்கள் விசுவாசத்தை இழந்தும், முடிவில் தேவனுக்கு சாட்சியாக நிற்க முடியாமல் அல்லது தங்கள் மேல் விழுந்த கடமைகளை அவர்களால் ஆற்ற முடியாமல் போனால், முந்தி ஒருகாலத்தில் அவர்கள் தேவனுக்கு உண்மையுள்ள ஊழியத்தைச் செய்திருந்தாலும் கூட அவர்கள் அழிவிற்கான பொருளாகவே இருப்பார்கள். மொத்தத்தில், துன்மார்க்கர் தப்பி நித்தியத்துக்குள் செல்ல முடியாது, அல்லது இளைப்பாறுதலுக்குள்ளும் அவர்களால் பிரவேசிக்க முடியாது; நீதிமான்கள் மட்டுமே இளைப்பாறுதலின் நாயகர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

678. ஒருவன் ஆசீர்வாதங்களைப் பெறுவதும் அல்லது துரதிர்ஷ்டத்தால் துன்பம் அடைவதும் ஒருவனின் சாரம்சத்தைப் பொறுத்ததே தவிர ஒருவன் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எந்தப் பொது சாராம்சத்தையும் பொறுத்தது அல்ல. அந்த வகையான கூற்று அல்லது விதிக்கு ராஜ்யத்தில் இடமே இல்லை. ஒரு நபரால் மீந்திருக்க முடியுமானால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ததனால்தான், மேலும் இளைப்பாறுதல் காலம் வரை அவர்களால் மீந்திருக்க முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர்கள் தேவனிடம் கீழ்ப்படியாமல் இருந்ததும் தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்யாமல் இருந்ததும்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான போய்ச்சேருமிடம் உண்டு. ஒவ்வொரு தனிநபரின் சாரம்சத்தைப் பொறுத்து இந்தச் சேருமிடங்கள் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் இதற்கும் பிறருக்கும் முழுமையாக சம்பந்தம் எதுவும் இல்லை. ஒரு குழந்தையின் பொல்லாத நடத்தையை, பெற்றொருக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு குழந்தையின் நீதியைப் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒரு பெற்றோரின் பொல்லாத நடத்தையை, குழந்தைக்கு மாற்ற முடியாது மற்றும் ஒரு பெற்றோரின் நீதியைக் குழந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பாவங்களைச் சுமக்கிறார்கள், மேலும் தங்கள் அதிர்ஷ்டத்தை ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள். ஒருவரும் இன்னொருவருக்கான மாற்றாக இருக்க முடியாது; இதுவே நீதியாகும். மனிதனின் கண்ணோட்டத்தில் இருந்து, பெற்றோருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைத்தால், பின் அவர்களது குழந்தைகளும் பெற முடியும், மேலும் குழந்தைகள் தீமை செய்தால், பின் அவர்களுடைய பெற்றோர்கள் அந்தப் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும். இது மனிதனின் ஒரு கண்ணோட்டம் மற்றும் மனிதன் காரியங்களைச் செய்யும் ஒரு வழி ஆகும்; இது தேவனின் கண்ணோட்டம் அல்ல. ஒவ்வொருவரின் நடத்தையில் இருந்து வரும் சாராம்சத்தைப் பொறுத்து அவர்களின் பலாபலன் தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அது எப்போதும் பொருத்தமாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரும் இன்னொருவரின் பாவத்தைச் சுமக்க முடியாது; இன்னும் கூறப்போனால், ஒருவருக்காக இன்னொருவர் தண்டனையை ஏற்க முடியாது. இது முழுமையானது. ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பால் செலுத்தும் மிகையான அன்பு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பதிலாக நீதியின் காரியங்களை ஆற்றலாம் என்பதைக் குறிக்காது அல்லது ஒரு குழந்தை தன் பெற்றோருக்காகச் செய்யும் கடமை சார்ந்த அன்பு தங்கள் பெற்றொருக்காக நீதியின் காரியங்களைச் செய்ய முடியும் என்று அர்த்தமாகாது. “அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் இதுவாகும். பெற்றோர் தீமை செய்யும் தங்கள் குழந்தைகளைத் தாங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பின் அடிப்படையில் இளைப்பாறுதலுக்குள் கொண்டுசெல்ல முடியாது, அல்லது தங்கள் மனைவியை (அல்லது கணவனை) தங்கள் சொந்த நீதியான நடத்தை மூலம் இளைப்பாறுதலுக்குள் கொண்டு செல்ல முடியாது. இது ஒரு நிர்வாக விதி; யாருக்கும் விதிவிலக்கு இருக்க முடியாது. முடிவில், நீதியைச் செய்பவர்கள் நீதியைச் செய்பவர்கள், மற்றும் தீமை செய்கிறவர்கள் தீமை செய்பவர்களே. நீதிமான்கள் இறுதியில் பிழைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள், அதேவேளையில் தீமைசெய்பவர்கள் அழிக்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் அருவருப்பானவர்கள் அல்ல. அருவருப்பானவர்கள் அருவருப்பானவர்களே, அவர்களின் ஒரு பகுதி கூட பரிசுத்தமானது அல்ல. துன்மார்க்கரின் பிள்ளைகள் நீதியான செயல்களைச் செய்தாலும், மற்றும் நீதிமான்களின் பெற்றோர்கள் தீமைசெய்தாலும் அழிக்கப்படப் போகிறவர்கள் யாவரும் துன்மார்க்கரே, பிழைத்திருக்கப்போகிறவர்கள் யாவரும் நீதிமான்களே. விசுவாசிக்கும் கணவனுக்கும் மற்றும் அவிசுவாசியான மனைவிக்கும் இடையில் உறவில்லை, மற்றும் விசுவாசிக்கும் பிள்ளைகளுக்கும் அவிசுவாசிகளான பெற்றோருக்கும் இடையில் உறவில்லை; இந்த இரு வகையான மக்களும் முற்றிலும் இணக்கமற்றவர்கள். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் முன்னர், ஒருவருக்கு உடல்ரீதியான உறவினர்கள் இருப்பார்கள், ஆனால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்த பின்னர், ஒருவருக்கு கூறுவதற்கு என உடல்ரீதியான உறவினர்கள் யாரும் இல்லை. தங்கள் கடமையைச் செய்கிறவர்கள் செய்யாதவர்களுக்கு விரோதிகள்; தேவனை நேசிக்கிறவர்களும் அவரை வெறுப்பவர்களும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்கின்றனர். இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்களும் அழிக்கப்பட போகிறவர்களும் இரு இணக்கமற்ற வகையான சிருஷ்டிகளாக இருக்கின்றனர். தங்கள் கடமையை ஆற்றுபவர்களால் பிழைத்திருக்க முடியும், அதேசமயம் தங்கள் கடமையை ஆற்றாதவர்கள் அழிவிற்கான பொருட்கள் ஆவர்; மேலும் என்னவென்றால், இது நித்தியத்தைக் கடந்து செல்லும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

679. அனைத்து துன்மார்க்கரும் அனைத்து நீதிமான்களும் சிருஷ்டிகளே. தீமை செய்யும் சிருஷ்டிகள் முடிவாக அழிக்கப்படுவார்கள், நீதியான செயல்களைச் செய்யும் சிருஷ்டிகள் பிழைத்திருப்பார்கள். இந்த இரு வகையான சிருஷ்டிகளுக்கும் இதுவே மிகவும் பொருத்தமான ஏற்பாடு. கீழ்ப்படியாமையின் காரணமாக துன்மார்க்கர் தேவனுடைய சிருஷ்டிகளாக இருந்தபோதிலும் அவர்கள் சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர், அதனால் அவர்களால் இரட்சிக்கப்பட முடியாது என்பதை மறுக்கின்றனர். தங்களை நீதியின்படி நடத்தும் சிருஷ்டிகள், அவர்கள் பிழைத்திருப்பார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், தாங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட பின்னரும் இரட்சிப்பைப் பெற்றவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. துன்மார்க்கர் தேவனுக்கு கீழ்ப்படியாத சிருஷ்டிகள்; இந்த சிருஷ்டிகளை இரட்சிக்க முடியாது மேலும் அவர்கள் ஏற்கெனவே முற்றிலுமாக சாத்தானால் பிடிக்கப்பட்டுவிட்டனர். தீமை செய்யும் மக்களும் மக்களே; அவர்கள் மிக அதிகமாக சீர்கெட்டுப்போன மனிதர்கள், மேலும் அவர்களை இரட்சிக்க முடியாது. அவர்கள் சிருஷ்டிகளாக இருப்பது போலவே, நீதியான நடத்தைகொண்ட மக்களும் சீர்கெடுக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் தங்கள் சீர்கெட்ட மனநிலையிலிருந்து தங்களை விடுவிக்க விருப்பம் கொண்ட மனிதர்கள், மேலும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்குத் திறன்கொண்டவர்களாக மாறினார்கள். நீதியான நடத்தை உள்ளவர்களுக்கு நீதி நிரம்பி வழிவதில்லை; மாறாக, அவர்கள் இரட்சிப்பைப் பெற்று தங்கள் சீர்கெட்ட மனநிலைகளை உடைத்து வெளிவந்தவர்கள்; அவர்களால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் முடிவில் உறுதியோடு நிற்பார்கள், இருந்தாலும் இது அவர்கள் ஒருபோதும் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை என்று கூறுவதற்காக இல்லை. தேவனுடைய கிரியை முடிந்த பின்னர், அவருடைய எல்லா சிருஷ்டிகளுக்குள்ளும், அழிக்கப்படுபவர்களும் பிழைத்திருப்பவர்களும் இருப்பார்கள். இது அவருடைய ஆளுகைக் கிரியையின் தவிர்க்க முடியாத ஒரு போக்காகும்; இதை ஒருவரும் மறுக்க முடியாது. துன்மார்க்கர் பிழைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்; தேவனுக்குக் கீழ்ப்படிந்து இறுதிவரை அவரைப் பின்பற்றுபவர்கள் நிச்சயமாகப் பிழைத்திருப்பார்கள். இந்தக் கிரியை மனுக்குலத்தின் ஆளுகையாக இருப்பதால், பிழைத்திருப்போரும் இருப்பார்கள் அழிக்கப்படப் போகிறவர்களும் இருப்பார்கள். வெவ்வேறு வகையான மக்களுக்கான வெவ்வேறு பலன்கள் இவை, மேலும் தேவனின் சிருஷ்டிகளுக்கு இவையே மிகவும் பொருத்தமான ஏற்பாடுகள் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

680. நான் என்னைப் பின்பற்றுபவர்களாக இருக்க பூமியில் பலரைத் தேடினேன். அவர்களுள் ஆசாரியர்கள், வழிநடத்துபவர்கள், தேவ புத்திரர்கள், தேவ ஜனங்கள், மற்றும் ஊழியக்காரர்கள் என் சீஷர்களாக உள்ளனர். அவர்கள் என்னிடம் காட்டும் விசுவாசத்தின் அடிப்படையில் நான் அவர்களை வகுக்கிறேன். அனைத்துமே முறைமையின்படி வகைப்படுத்தப்பட்டிருக்கும் போது, அதாவது, ஒவ்வொரு வகையான ஜனத்தின் தன்மையும் தெளிவுபடுத்தப்பட்டால், நான் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் சரியான வகைக்குள் சேர்த்துக்கொண்டு, மனிதகுலத்துக்கு நான் வழங்க எண்ணும் இரட்சிப்பை அவர்கள் அடைய ஒவ்வொரு வகையான ஜனத்தையும் அதன் பொருத்தமான இடத்தில் வைப்பேன். நான் இரட்சிக்க விரும்புவோரை கூட்டம் கூட்டமாக எனது வீட்டிற்கு அழைக்கிறேன். அதன் பின் அவர்கள் அனைவரும் என்னுடைய கடைசி கால வேலையை ஏற்றுக்கொள்ளச் செய்கிறேன். அதே நேரத்தில், நான் அவர்களை அவரவர் வகைக்கு ஏற்ப பிரித்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்கைக்கு தக்க பலனை அல்லது தண்டனையை வழங்குகிறேன். என் செயலுக்கான வழிமுறைகள் அத்தகையவை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதிலிருந்து

681. நீ என்னை ஏன் விசுவாசிக்கிறாய் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரிகிறதா? என் கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் நீ உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? உன் கடமைகளை உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? என் சாட்சியை உண்மையிலேயே அறிந்துகொள்கிறாயா? நீ வெறுமனே என்னை விசுவாசித்து, ஆனால் உன்னில் என் மகிமை அல்லது சாட்சியின் அடையாளம் இல்லை எனில், முன்னரே நான் உன்னை நீக்கிவிட்டேன் என்றாகிறது. இவைகளை எல்லாம் அறிந்தவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எல்லாம் என் பார்வையில் அதிகமான முட்களே, மற்றும் என் வீட்டில், என் வழிகளில் அவர்கள் தடைகளே அன்றி வேறல்ல, என் கிரியையில் இருந்து முற்றிலுமாக தூற்றப்படவேண்டிய பதர்களே, அவர்களால் பயன் இல்லை, அவர்கள் மதிப்பேதும் அற்றவர்கள், நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே வெறுத்துவிட்டேன். சாட்சி இல்லாத எல்லோர் மேலும் அடிக்கடி என் கோபாக்கினை விழுகிறது, மேலும் ஒருபோதும் என் கோல் அவர்களிடம் இருந்து விலகுவதில்லை. நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே தீயவன் கைகளில் அளித்துவிட்டேன்; என் ஆசீர்வாதம் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள். நாள் வரும்போது, புத்தியில்லாத ஸ்திரீகளைவிட இவர்களுக்கான தண்டனை மிகவும் கடினமானதாக இருக்கும். இன்று, எனது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே நான் செய்கிறேன்; கோதுமை அனைத்தையும் அந்தப் பதர்களோடும் கூட நான் கட்டுகளாகக் கட்டுவேன். இன்று என் கிரியை இதுவே. நான் தூற்றும் காலத்தில் அந்தப் பதர்கள் தூற்றப்பட்டு அகற்றப்படும், பின்னர் கோதுமை மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்படும், தூற்றப்பட்ட அந்தப் பதர்கள் அக்கினியின் நடுவில் வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படும். எல்லா மனிதர்களையும் கட்டுகளாகக் கட்டுவது மட்டுமே இப்போதைய என் கிரியையாகும்; அதாவது, அவர்களை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவதேயாகும். பின் எல்லா மனிதர்களின் முடிவையும் வெளிப்படுத்தத் தூற்றுதலை நான் தொடங்குவேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

682. தற்பொழுது, தேடுபவர்களும் தேடாதவர்களும் இரு முற்றிலும் வேறான வகையான மக்களாக உள்ளனர், அவர்கள் சென்றடையும் இடமும் வேறானவை. சத்தியத்தைப் பற்றிய அறிவை நாடுபவர்களுக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குமே தேவன் இரட்சிப்பைக் கொண்டுவருவார். மெய்யான வழியை அறியாதவர்கள் பிசாசுகள் மற்றும் விரோதிகள்; அவர்கள் பிரதான தூதனின் சந்ததியார் மற்றும் அவர்களே அழிவின் பொருளாவார்கள். தெளிவற்ற தேவனின் பக்தியுள்ள விசுவாசிகள்—அவர்களும் கூட பிசாசுகள் இல்லையா? மெய்யான வழியை அறியாத நல்மனசாட்சி கொண்ட மக்களும் பிசாசுகள்; தேவனை எதிர்ப்பதே அவர்களுடைய சாராம்சம். மெய்யான வழியை ஏற்காதவர்களே தேவனை எதிர்ப்பவர்கள், இத்தகைய மக்கள் அநேக துன்பங்களை சகித்திருந்தாலும் அவர்களும் அழிக்கப்படுவார்கள். உலகத்தைக் கைவிட விருப்பம் அற்ற அனைவரும், தங்கள் பெற்றோரைப் பிரிய முடியாதவர்கள், மாம்சத்தின் பேரில் உள்ள தங்கள் இன்ப அனுபவத்தை விட்டுவிட முடியாதவர்கள் யாவரும் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களே, மற்றும் அவர்கள் அழிவின் பொருட்களே. மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காத எவரும் பேய்த்தனம் கொண்டவர்கள், மற்றும், அவர்கள் அழிக்கப்படுவார்கள். விசுவாசம் இருந்தும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள், மாம்சமாகிய தேவனை விசுவாசிக்காதவர்கள், தேவன் இருக்கிறார் என்பதை விசுவாசிக்காதவர்கள் ஆகியோரும் அழிவிற்குரிய பொருள் ஆவார்கள். துன்பப்படுதல் என்ற புடமிடுதலை அனுபவித்து உறுதியாக நின்ற மக்கள் அனைவரும் மீந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்; இவர்களே உண்மையில் சோதனைகளைச் சகித்துக்கொண்டவர்கள். தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும் ஓர் எதிரி; அதாவது மாம்சமாகிய தேவனை அங்கீகரிக்காத எவனொருவனும்—இந்த பிரவாகத்துக்கு உள்ளே அல்லது வெளியே இருந்தாலும் இல்லாவிட்டாலும்—ஓர் அந்திக்கிறிஸ்துதான். சாத்தான் யார், பிசாசுகள் யார், தேவனை விசுவாசிக்காத எதிர்ப்பாளர்கள் இல்லை என்றால் தேவனின் விரோதிகள் யார்? தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அல்லவா அந்த மக்கள்? விசுவாசம் இருக்கிறது என்று கூறினாலும் சத்தியம் இல்லாமல் இருப்பவர்கள் அல்லவா அவர்கள்? தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியாமல் ஆசிர்வாதத்தை அடைவதற்கு நாடுபவர்கள் அல்லவா அவர்கள்? இன்று நீ இன்னும் அந்த பிசாசுகளுடன் இணைந்தும், அவற்றிடம் மனசாட்சியும் அன்புகொண்டும் இருக்கிறாய், ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் சாத்தானிடம் நல்நோக்கில் நீ இருக்கவில்லையா? நீ பிசாசுகளுடன் கூட்டாளியாக இருக்கவில்லையா? இந்த நாட்களில் மக்களால் நன்மை தீமைக்கு இடையில் வித்தியாசத்தைக் காண முடியாவிட்டால், மற்றும் தேவனுடைய சித்தத்தைத் தேடும் எண்ணம் இல்லாமல் குருட்டுத்தனமாகத் தொடர்ந்து அன்புடனும் இரக்கத்துடனும் இருந்தால், அல்லது தேவனின் எண்ணங்களைத் தங்களின் சொந்த எண்ணங்களாக எந்த வகையிலாவது கொண்டிருக்க முடியாதவர்களாக இருந்தால், பின்னர் அவர்களது முடிவும் மிகவும் இழிவானதாகவே இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

683. தன்னைத் தூஷிக்கும் அல்லது எதிர்க்கும் அல்லது அவதூறாகக் கூட பேசும், வேண்டுமென்றே தாக்கி, அவதூறாகப் பேசி, சபிக்கும் ஜனங்களிடம் தேவன் காணாதவர் போல, கேளாதவர் போல இருப்பதில்லை, மாறாக அவர்களைக் குறித்த தெளிவான ஒரு மனப்பான்மை அவருக்கு உண்டு. அவர் இந்த ஜனங்களை வெறுக்கிறார், மேலும் அவர் அவர்களைத் தன்னுடைய இருதயத்தில் கண்டனம் பண்ணுகிறார். அவர்களுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்கிறார் இதனால் அவரைத் தூஷிப்பவர்களைக் குறித்து, அவருக்குத் தெளிவான மனப்பான்மை உண்டு என்பதை ஜனங்கள் அறிந்து கொள்வார்கள், மேலும் அவர்களுடைய விளைவை அவர் எவ்வாறு தீர்மானிப்பார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். இருப்பினும், இந்தக் காரியங்களைச் சொன்ன பிறகு, அந்த ஜனங்களை தேவன் எவ்வாறு கையாள்வார் என்ற உண்மையை ஜனங்கள் அரிதாகவே காண முடிந்தது, மேலும் தேவன் அவர்களுக்கு வழங்கிய முடிவு மற்றும் தீர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் உள்ள கொள்கைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது, அவர்களைக் கையாள்வதற்கு தேவன் வைத்திருக்கும் குறிப்பிட்ட அணுகுமுறையையும், வழிமுறைகளையும் ஜனங்களால் பார்க்க முடியவில்லை. காரியங்களைச் செய்வதற்கான தேவனுடைய கொள்கைகளுடன் இது தொடர்புடையதாகும். சில ஜனங்களுடைய பொல்லாத நடத்தைகளைச் சமாளிக்க தேவன் உண்மைச் சம்பவங்களைப் பயன்படுத்துகிறார். அதாவது, அவர் அவர்களின் பாவங்களை அறிவிப்பதோ, அவர்களின் முடிவைத் தீர்மானிப்பதோ இல்லை, மாறாக, அவர்களுக்குத் தண்டனையையும், நியாயமான உரிய தண்டனையையும் அளிக்க உண்மையான நிகழ்வுகளை நேரடியாகப் பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வுகள் நிகழும்போது, ஜனங்களுடைய மாம்சம் தண்டனையை அனுபவிக்கிறது, அதாவது மனிதக் கண்களால் பார்க்கக்கூடிய தண்டனையாகும். சிலரின் பொல்லாத நடத்தைகளைக் கையாள்கையில், தேவன் அவர்களை வெறுமனே வார்த்தைகளால் சபிக்கிறார், அவருடைய கோபமும் அவர்கள் மீது கடந்து வருகிறது, ஆனால் அவர்கள் பெறும் தண்டனையானது ஜனங்கள் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆயினும்கூட, இந்த வகையான விளைவானது, தண்டிக்கப்படுதல் அல்லது கொல்லப்படுதல் போன்ற ஜனங்கள் பார்க்கக் கூடிய விளைவுகளை விட மிகத் தீவிரமாக இருக்கலாம். ஏனென்றால், இந்த வகை நபர்களை இரட்சிக்கக் கூடாது, இனி அவர்கள் மேல் இரக்கம் காட்டக்கூடாது அல்லது அவர்களைச் சகித்துக் கொள்ளக் கூடாது மற்றும் அவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்புக்களை கொடுக்கக்கூடாது என்று தேவன் தீர்மானித்த சூழ்நிலைகளில், அவர்களைக் குறித்து அவர் கொண்ட மனப்பான்மை என்னவென்றால், அவர்களை ஒதுக்கி வைப்பதே ஆகும். இங்கே “ஒதுக்கி வைப்பது” என்பதன் அர்த்தம் என்ன? இந்தத் தொடரின் அடிப்படைப் பொருள் என்னவென்றால் “எதையாவது ஒரு பக்கமாக வைத்துவிட்டு, அதன்பின் அதில் கவனம் செலுத்தாமல் இருப்பது” என்பதாகும். ஆனால் இங்கே, தேவன் “ஒருவரை ஒதுக்கி வைக்கும்போது” அதன் அர்த்தத்திற்கு இரண்டு வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன: முதலாவது விளக்கம் என்னவென்றால், அவர் அந்த நபரின் ஜீவனையும் மற்றும் அந்த நபரைக் குறித்த எல்லாவற்றையும் சாத்தான் சமாளிக்கும்படி அவனிடம் கொடுத்துவிட்டார், மேலும் தேவன் அதன்பின் பொறுப்பேற்க மாட்டார், அந்த நபரை இனி நிர்வகிக்க மாட்டார் என்பதாகும். அந்த நபர் பைத்தியமாக அல்லது முட்டாளாக இருந்தாலும் அல்லது அவர்கள் மரித்து அல்லது உயிரோடு இருந்தாலும், அல்லது அவர்கள் தண்டனைக்காக நரகத்தில் இறங்கியிருந்தாலும், இவற்றில் ஒன்றுக்கும்கூட தேவனுடன் எந்த சம்பந்தமும் இருக்காது. அதாவது, இத்தகைய சிருஷ்டிக்கு சிருஷ்டிகருடன் எந்தத் தொடர்பும் இருக்காது என்று அர்த்தமாகும். இரண்டாவது விளக்கம் என்னவென்றால், இந்த நபரைக் கொண்டு தேவன் தன் சொந்தக் கரங்களால் ஏதாவது செய்ய தீர்மானித்துள்ளார் என்பதாகும். இந்த நபரின் சேவையை அவர் பயன்படுத்துவார், அல்லது அவர் அவர்களை ஒரு படலமாகப் பயன்படுத்துவார். இவ்வகையான நபர்களைக் கையாள்வதற்கான ஒரு சிறப்பான வழியை அவர் கொண்டிருப்பார், எடுத்துக்காட்டாக, பவுலிடம் செய்ததைப் போலவே, அவர்களைக் கையாளும்படி ஒரு சிறப்பான வழியைக் கொண்டிருப்பார். தேவனுடைய இருதயத்தில் இருக்கும் இந்தக் கொள்கை மற்றும் மனப்பான்மையைக் கொண்டே இவ்வகையான நபரைக் கையாள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். ஆகையால் ஜனங்கள் தேவனை எதிர்த்து, அவரை அவதூறாகப் பேசி, தூஷிக்கையில், அவருடைய மனநிலையை அவர்கள் தொந்தரவு செய்து அல்லது தேவனை அவரின் சகிப்புத்தன்மையின் எல்லையைத் தாண்ட செய்தால், அதன் பின்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். மிகக் கடுமையான பின்விளைவு என்னவென்றால், தேவன் அவர்களுடைய ஜீவனையும், அவர்களைப் பற்றிய எல்லாவற்றையும் முழுவதுமாக சாத்தானிடம் ஒப்படைப்பதே. அவர்கள் நித்தியத்திற்கும் மன்னிக்கப்பட மாட்டார்கள். அதாவது இந்த நபர் சாத்தானுடைய வாய்க்கு இரையாக, அவன் கரத்தில் பொம்மையாக மாறி விட்டார், மேலும் அப்போதிலிருந்து தேவனுக்கும் அவர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று அர்த்தமாகும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து

684. ஒவ்வொரு மனிதனின் முடிவையும் நான் தீர்மானிக்கும் நேரமாக இருக்கிறது. இது நான் மனிதனிடத்தில் கிரியையைத் தொடங்கும் காலம் இல்லை. நான் என் பதிவு புத்தகத்தில் ஒவ்வொரு நபருடைய வார்த்தைகளையும், செயல்களையும் என்னைப் பின் தொடர்ந்து வந்த பாதைகளையும், அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களையும், அவர்கள் எப்படி முடிவில் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள் என்பதையும் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்விதமாக அவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், ஒருவரும் என் கையிலிருந்து தப்புவதில்லை, அனைவரும் நான் ஒதுக்கும் தங்கள் வகையுடன் சேர்க்கப்படுவார்கள். நான் ஒவ்வொருவருடைய சேருமிடத்தையும் தீர்மானிக்க அவர்களுடைய வயது, அனுபவம், அவர்கள் பட்ட பாடுகளின் அளவு மற்றும் இவை எல்லாவற்றிலும் குறைவாக அவர்கள் பெற்றுக்கொண்ட இரக்கத்தின் அளவு போன்றவற்றை நான் அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்கள் சத்தியத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களா என்பதை அடிப்படையாகக் கொள்கிறேன். இது தவிர நீங்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. தேவனுடைய சித்தத்தின் வழி நடக்காதவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது மாற்றப்படமுடியாத உண்மை. எனவே, தண்டிக்கப்படுகிறவர்கள் எல்லாம் தேவனுடைய நீதியின் நிமித்தமும் மற்றும் தங்கள் பொல்லாத கிரியைகளின் தகுந்த பிரதிபலனாகவும் தண்டிக்கப்படுகிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

685. நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால், நியாயந்தீர்க்கப்படுவதற்கு அடிபணிந்து கீழ்ப்படியும்படி நான் உன்னை அறிவுறுத்துகிறேன், இல்லையெனில் நீ ஒருபோதும் தேவனால் பாராட்டுதலைப் பெறுவதற்கோ அல்லது அவரால் அவருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கோ வாய்ப்பில்லை. நியாயத்தீர்ப்பை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள், ஆனால் ஒருபோதும் சுத்திகரிக்கப்பட முடியாதவர்கள், அதாவது நியாயத்தீர்ப்பின் கிரியைக்கு மத்தியில் தப்பி ஓடுபவர்கள் என்றென்றுமாய் தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள். அவர்களுடைய பாவங்கள் பரிசேயர்களின் பாவங்களை விட ஏராளமானதும் கடுமையானதுமாகும், ஏனென்றால் அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து, தேவனுக்கு விரோதமாக கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படி ஊழியத்தைச் செய்யக்கூட தகுதியில்லாத அத்தகைய நபர்கள் இன்னும் கடுமையான தண்டனையைப் பெறுவார்கள், அதாவது ஒரு நித்தியமான தண்டனையைப் பெறுவார்கள். ஒரு காலத்தில் வார்த்தைகளால் விசுவாசத்தை வெளிப்படுத்திய, ஆனால் அவரைக் காட்டிக் கொடுத்த எந்த துரோகியையும் தேவன் விடமாட்டார். இது போன்றவர்கள் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தின் தண்டனையின் மூலம் தண்டனையைப் பெறுவார்கள். இது தேவனுடைய துல்லியமான நீதியுள்ள மனநிலையின் வெளிப்பாடு அல்லவா? இது மனிதனை நியாயந்தீர்ப்பதிலும், அவனை வெளிப்படுத்துவதிலும் தேவனுடைய நோக்கம் அல்லவா? நியாயத்தீர்ப்பின் போது எல்லா வகையான துன்மார்க்கமான காரியங்களையும் செய்கிற அனைவரையும் தேவன் அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்புகிறார், மேலும் இந்த அசுத்த ஆவிகள் தங்களுடைய சதையுள்ள உடல்களை அவர்கள் விரும்பியபடி அழிக்க அனுமதிக்கிறார், மேலும் அந்த ஜனங்களினுடைய உடல்களின் சடலங்கள் துர்நாற்றம் வீசுகின்றன. இது அவர்களுக்கான பொருத்தமான பதிலடி ஆகும். அந்த விசுவாசமற்ற பொய்யான விசுவாசிகள், பொய்யான அப்போஸ்தலர்கள் மற்றும் பொய்யான ஊழியர்களின் ஒவ்வொரு பாவங்களையும் தேவன் அவர்களின் பதிவு புத்தகங்களில் எழுதுகிறார்; பின்னர், நேரம் சரியாக இருக்கும்போது, அசுத்த ஆவிகள் மத்தியில் அவர்களைத் தூக்கி எறிகிறார், இந்த அசுத்த ஆவிகள் தங்கள் முழு உடல்களையும் விருப்பப்படி தீட்டுப்படுத்த அனுமதிக்கின்றன, இதனால் அவர்கள் ஒருபோதும் மறுஜென்மம் எடுக்கக்கூடாதபடிக்கும், மீண்டும் ஒளியைக் காணமலும் போவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊழியம் செய்துவிட்டு, ஆனால் கடைசிவரை விசுவாசமாக இருக்க இயலாத மாயக்காரர்கள் பொல்லாதவர்கள் கூட்டத்தில் தேவனால் எண்ணப்படுகிறார்கள், இதனால் அவர்கள் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடந்துகொண்டு, ஒழுங்கற்ற கலகத்தின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள்; இறுதியில், தேவன் அவர்களை முற்றிலுமாய் அழிப்பார். ஒருபோதும் கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை அல்லது தங்கள் பலத்தை ஒருபோதும் பங்களிக்காதவர்களை தேவன் ஒதுக்கித் தள்ளுகிறார், யுகத்தை மாற்றும்போது அவர் அனைவரையும் அழிப்பார். அவர்கள் இனி பூமியில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையை அடையவும் மாட்டார்கள். தேவனுக்கு ஒருபோதும் நேர்மையானவர்களாக இல்லாதவர்கள், ஆனால் சூழ்நிலையால் அவரைச் சரியாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், அவருடைய மக்களுக்காக ஊழியம் செய்பவர்கள் கூட்டத்தில் எண்ணப்படுகிறார்கள். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உயிர்வாழ்வார்கள், அதே நேரத்தில் பெரும்பான்மையானவர்கள் ஊழியம் செய்யக் கூட தகுதியில்லாதவர்களுடன் சேர்ந்து அழிந்து போவார்கள். இறுதியில், தேவனைப் போன்ற மனம் படைத்தவர்களையும், தேவனுடைய ஜனங்களையும் மற்றும் தேவனுடைய பிள்ளைகளையும், மற்றும் தேவனால் ஆசாரியர்களாக இருக்கும்படிக்கு முன்குறிக்கப்பட்டவர்கள் அனைவரையும் தேவன் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வருவார். அவர்கள் தேவனுடைய கிரியையின் பலனாக இருப்பார்கள். தேவனால் நிர்ணயிக்கப்பட்ட எந்தவொரு வகையிலும் வகைப்படுத்த முடியாதவர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவிசுவாசிகளாக எண்ணப்படுவார்கள்—மேலும் அவர்களின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் நிச்சயமாக கற்பனை செய்து பார்க்கலாம். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் நான் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நீங்கள் செல்லும் பாதையை தேர்ந்தெடுக்கும் தேர்வு உங்களுடையது மட்டுமே. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான்: தேவனுடைய கிரியை அவருடன் ஒருமித்திருக்க முடியாத எவருக்காகவும் காத்திருக்காது, மற்றும் தேவனுடைய நீதியுள்ள மனநிலை எந்த மனிதனுக்கும் இரக்கம் காண்பிக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

முந்தைய: C. மனுஷனுக்கான தேவனுடைய எச்சரிக்கைகள்

அடுத்த: XV. ராஜ்யத்தின் அழகு மற்றும் மனுக்குலம் சென்று சேருமிடம், மற்றும் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் ஆசீர்வாதங்களை தீர்க்கதரிசனம் உரைப்பது குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக