C. இறுதி காலமாகிய ராஜ்யத்தின் காலம் குறித்து

33. இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனை புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஒரு உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

34. மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷதன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். உண்மையில், இந்தக் கட்டம் ஜெயங்கொள்ளுதல் மற்றும் இரட்சிப்பின் கிரியையின் இரண்டாம் கட்டமாகும். வார்த்தையின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம்தான் மனுஷன் தேவனால் ஆதாயப்படுத்தப்படுகிறான், மேலும் மனுஷனின் இருதயத்திற்குள் இருக்கும் அசுத்தங்கள், கருத்துக்கள், நோக்கங்கள் மற்றும் தனிப்பட்ட ஆவல்கள் அனைத்தையும் சுத்திகரிக்கவும், நீயாயந்தீர்க்கவும், வெளிப்படுத்தவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலமே வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது. உதாரணமாக, தாங்கள் மோவாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஜனங்கள் உணர்ந்தபோது, அவர்கள் குறைசொல்லும் வார்த்தைகளைக் கொண்டு வந்தார்கள், ஜீவிதத்தைத் தொடரவில்லை, முற்றிலும் எதிர்மறையாகிப் போனார்கள். தேவனின் ஆளுகையின் கீழ் மனுஷகுலத்தால் இன்னும் முழுமையாக அடிபணிய முடியவில்லை என்பதை இது காட்டவில்லையா? இது துல்லியமாக அவர்களின் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை அல்லவா? நீ சிட்சைக்கு உட்படுத்தப்படாதபோது, உன் கைகள் மற்றவர்களை விட, இயேசுவின் கைகளை விட, உயரமாக செல்கின்றன. பின்னர் நீ உரத்த குரலில்: “தேவனுடைய அன்பான குமாரனாக இரு! தேவனுடன் நெருக்கமாக இரு! சாத்தானுக்கு வணங்குவதை விட நாம் மரித்துப்போவதே மேல்! பழைய சாத்தானுக்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு எதிராகக் கலகம் செய்! சிவப்பான பெரிய வலுசர்ப்பம் வல்லமையை இழந்துப் பரிதாபமாக விழட்டும்! தேவன் நம்மை பூரணப்படுத்துவார்!” என்று கூக்குரலிட்டாய். உனது அழுகை மற்ற அனைவரையும் விட சத்தமாக இருந்தது. ஆனால் பின்னர் சிட்சிக்கும் காலம் வந்தது, மீண்டும், மனுஷகுலத்தின் சீர்கெட்ட மனநிலை வெளிப்பட்டது. பின்னர், அவர்களின் அழுகை நின்றுவிட்டது, அவர்களின் தீர்மானம் தோல்வியடைந்தது. இதுவே மனுஷனின் சீர்கேடு; பாவத்தை விட ஆழமாக செல்கிறது, இது சாத்தானால் பயிரிடப்பட்டு மனுஷனுக்குள் ஆழமாக வேரூன்றிய ஒன்று. மனுஷன் தன் பாவங்களை அறிந்துகொள்வது எளிதல்ல; அவன் தனக்குள் ஆழமாக வேரூன்றிய சுபாவத்தைக் கண்டுணர வழியே இல்லை, இந்த முடிவை அடைய அவன் வார்த்தையின் நியாயத்தீர்ப்பை விசுவாசிக்க வேண்டும். இவ்வாறுதான் மனுஷனை படிப்படியாக இந்த நிலையில் இருந்து மாற்ற முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

35. வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானியை மனநிலையிலிருந்து எவ்வாறு அவன் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செயல்படுத்தப்படவேண்டியதாக இருக்கும். மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான். இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவுத் தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும் தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பை பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்தபின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமானக் கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணப்பலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்ட கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் ஆளுகைத் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

36. யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது, ஏனெனில் காலம் சமீபமாயிருக்கிறது, மற்றும் தேவனுடைய நாள் வந்துவிட்டது. முடிவுபரியந்தம் தேவனுக்கு விசுவாசமாக இருக்கும் அனைவரையும் அவர் தம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கும்படிக்கு கொண்டுவருகிறார்—அதாவது தேவனுடைய யுகத்திற்குள் கொண்டுவருகிறார். இருப்பினும், தேவனுடைய யுகம் வருவதற்கு முன்பாக, தேவனுடைய கிரியையானது மனிதனின் செயல்களைக் கவனிப்பதோ அல்லது மனிதனுடைய வாழ்க்கையை விசாரிப்பதோ அல்ல, மாறாக மனிதனின் கீழ்ப்படியாமையை நியாயந்தீர்ப்பதேயாகும், ஏனென்றால் தேவன் தம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருகின்ற அனைவரையும் சுத்திகரிப்பார். இந்நாள்வரையிலும் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அனைவருமே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வருபவர்கள்தான், இது இப்படியிருக்க, தேவனுடைய கிரியையை அதன் இறுதிக் கட்டத்தில் ஏற்றுக் கொள்ளுகிற ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய சுத்திகரிப்புக்கான பொருளாக இருக்கிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய கிரியையை அதன் இறுதிக் கட்டத்தில் ஏற்றுக்கொள்ளுகிற அனைவரும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பொருளாக இருக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

37. கடைசி நாட்களில், மனிதனுக்குப் போதிக்கவும், மனிதனின் மெய்யான சாரம்சத்தை வெளிப்படுத்தவும், மற்றும் மனிதனின் வார்த்தைகளையும் செயல்களையும் வேறு வேறாகப்பிரிக்கவும் கிறிஸ்து பலதரப்பட்ட சத்தியங்களைப் பயன்படுத்துகிறார். இந்த வார்த்தைகள், மனிதனின் கடமை, மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மனிதன் எவ்வாறு தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மனிதன் எவ்வாறு சாதாரண மனித வாழ்க்கையை வாழ வேண்டும், அதே போல் ஞானமும் தேவனுடைய மனநிலையும் போன்ற பல்வேறு சத்தியங்களை உள்ளடக்கியதாகும். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனிதனுடைய சாராம்சத்தையும் அவனது சீர்கெட்ட மனநிலையையும் குறிக்கிறது. குறிப்பாக மனிதன் எவ்வாறு தேவனை உதறித் தள்ளுகிறான் என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள், மனிதன் எப்படிச் சாத்தானின் உருவகமாகவும், தேவனுக்கு எதிரான எதிரியின் சக்தியாகவும் இருக்கிறான் என்பது தொடர்பாகப் பேசப்படுகின்றன. தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பின் கிரியையை மேற்கொள்வதில், அவர் மனிதனின் சுபாவத்தை வெறுமனே ஒரு சில வார்த்தைகளால் தெளிவுபடுத்துவதில்லை; அவர் நீண்ட காலத்திற்கு வெளியரங்கமாக்கி, கையாண்டு, சுத்தம் பண்ணுகிறார். வெளியரங்கமாக்குதல், கையாளுதல் மற்றும் சுத்தம் பண்ணுதல் போன்ற இந்த முறைகளைச் சாதாரண வார்த்தைகளால் மாற்றியமைக்க முடியாது, ஆனால் மனுஷனிடம் கொஞ்சமும் இல்லாத சத்தியத்தால் முடியும். இது போன்ற முறைகளை மட்டுமே நியாயத்தீர்ப்பு என்று அழைக்க முடியும்; இந்த வகையான நியாயத்தீர்ப்பின் மூலமாக மட்டுமே மனிதனை அடிபணியச் செய்து தேவனுக்குச் சம்பூரணமாகக் கீழ்ப்படிவதை நம்பச்செய்ய முடியும், மேலும் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் பெற முடியும். நியாயத்தீர்ப்பின் கிரியை என்னத்தைக் கொண்டுவருகிறது என்றால், தேவனுடைய மெய்யான முகத்தைப் பற்றிய மனிதனின் புரிதல் மற்றும் அவனது சொந்தக் கிளர்ச்சியைப் பற்றிய உண்மையுமாகும். தேவனுடைய சித்தத்தையும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தையும், மனிதன் அறிந்துகொள்ள முடியாத மறைபொருட்களையும் அதிகமாகப் புரிந்துகொள்ளத் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியையானது மனிதனுக்கு உதவுகிறது. இது மனிதனின் சீர்கெட்ட நிலையையும் மற்றும் அவனது சீர்கேட்டின் வேர்களையும் அடையாளம் கண்டு அறிந்து கொள்ளவும், மேலும் மனிதனின் அசிங்கத்தைக் கண்டறியவும் உதவுகிறது. இந்த விளைவுகள் யாவும் நியாயத்தீர்ப்பின் கிரியையால் கொண்டுவரப்படுகின்றன, ஏனென்றால் இந்தக் கிரியையின் சாராம்சம் உண்மையில் தேவனுடைய சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் திறக்கும் கிரியையாகும். இந்தக் கிரியையானது தேவனால் செய்து முடிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் கிரியையாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்” என்பதிலிருந்து

38. சாத்தானால் மிகவும் ஆழமாக சீர்கெட்டுப்போன மனுஷகுலம், தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறியாமல், தேவனை வணங்குவதை நிறுத்திவிட்டனர். ஆதியில், ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டபோது, யேகோவாவின் மகிமையும் சாட்சியமும் எப்போதும் இருந்தன. ஆனால் சீர்கெட்டுப்போன பின், மனுஷன் மகிமையையும் சாட்சியத்தையும் இழந்தான், ஏனென்றால் எல்லோரும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள், மேலும் அவரை வணங்குவதைக் கூட முற்றிலும் நிறுத்திவிட்டார்கள். இன்றைய ஜெயங்கொள்ளுதல் கிரியையானது எல்லா சாட்சியங்களையும் எல்லா மகிமையையும் மீட்டெடுப்பதற்கும், மற்றும் எல்லா மனுஷரையும் தேவனை வணங்க வைப்பதற்குமாகும், இதனால் சிருஷ்டிக்கப்பட்டவர்களிடையே சாட்சியம் இருக்கும்; இந்த கட்டத்தில் செய்ய வேண்டிய கிரியை இதுவே. மனுஷகுலம் எவ்வாறு ஜெயங்கொள்ளப்பட வேண்டும்? மனுஷனை முழுமையாக நம்ப வைக்க இந்த கட்டத்தின் வார்த்தைகளின் கிரியையைப் பயன்படுத்துவதன் மூலமும்; வெளிப்படுத்துதல், நியாயத்தீர்ப்பு, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற சாபம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவனை முற்றிலும் அடிபணிய வைப்பதன் மூலமும்; மனுஷனின் கலகத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமும், அவனது எதிர்ப்பை நியாயந்தீர்ப்பதன் மூலமும் அவன் மனுஷகுலத்தின் அநீதியையும் அசுத்தத்தையும் அறிந்து கொள்ளக்கூடும், இதன்மூலம் இவற்றை தேவனின் நீதியான மனநிலைக்கு ஒரு படலமாகப் பயன்படுத்தலாம். இந்த வார்த்தைகளின் மூலம்தான் மனுஷன் ஜெயங்கொள்ளப்படுகிறான், முழுமையாக சமாதானமடைகிறான். வார்த்தைகள் தான் மனுஷகுலத்தை இறுதியாக ஜெயங்கொள்வதற்கான வழிமுறையாகும், மேலும் தேவனின் ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தைகளின் பலமான தாக்குதலையும் மற்றும் நியாயத்தீர்ப்பையும் ஏற்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

39. ராஜ்யத்தின் யுகத்தில், தேவன் புதிய யுகத்தைத் தொடங்கவும், அவர் கிரியை செய்யும் வழிமுறைகளை மாற்றவும், முழு யுகத்தின் கிரியையை மேற்கொள்ளவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். வார்த்தையின் யுகத்தில் தேவன் இந்தக் கொள்கைகளின் மூலமாகவே கிரியையை நடப்பிக்கிறார். மனுஷன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றும் வார்த்தையான தேவனைக் காண்பதற்காகவும், மற்றும் அவருடைய ஞானத்தையும் அதிசயத்தையும் காண்பதற்காகவும் அவர் வெவ்வேறு கோணங்களில் பேசுவதற்காக மாம்ச ரூபமெடுத்தார். மனுஷனை ஆட்கொள்ளுதல், மனுஷனைப் பரிபூரணப்படுத்துதல், மனுஷனை புறக்கணித்தல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காகவே இதுபோன்ற கிரியை செய்யப்படுகிறது, வார்த்தையின் யுகத்தில் கிரியை செய்ய வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பதே இதன் நிஜமான அர்த்தமாகும். இந்த வார்த்தைகளின் மூலம், தேவனின் கிரியை, தேவனின் மனநிலை, மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷன் எதில் பிரவேசிக்க வேண்டும் என்பதை ஜனங்கள் அறிந்துகொள்கிறார்கள். வார்த்தைகளின் மூலம், வார்த்தையின் யுகத்தில் தேவன் செய்ய விரும்பும் கிரியை முழுமையாக பலனைத் தரும். இந்த வார்த்தைகளின் மூலம், ஜனங்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள், அகற்றப்படுகிறார்கள், சோதிக்கப்படுகிறார்கள். ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பார்த்திருக்கிறார்கள், இந்த வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள், இந்த வார்த்தைகள் இருப்பதை அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் தேவனின் பிரசன்னம், தேவனின் சர்வ வல்லமை மற்றும் ஞானம், அதேபோல் தேவனுக்கு மனுஷன் மீதுள்ள அன்பு மற்றும் மனுஷனை இரட்சிப்பற்கான அவரது விருப்பம் ஆகியவற்றை நம்பத் துவங்கியிருக்கிறார்கள். “வார்த்தைகள்” என்கிற சொல் எளிமையானதாகவும் சாதாரணமாகவும் இருக்கலாம், ஆனால் மனுஷ ரூபமெடுத்த தேவனின் வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சத்தை உலுக்குகின்றன, அவை ஜனங்களின் இதயங்களை மாற்றுகின்றன, அவர்களின் கருத்துகளையும் பழைய மனநிலையையும் மாற்றுகின்றன, மற்றும் முழு உலகமும் காட்சியளிக்கும் விதத்தை மாற்றுகின்றன. பல யுகங்களாக, இன்றைய தேவன் மட்டுமே இவ்விதமாக கிரியைகளை மேற்கொண்டுள்ளார், அவர் மட்டுமே இவ்வாறு பேசுகிறார், மனுஷனை இவ்வாறு இரட்சிக்க வருகிறார். இந்த நேரத்திலிருந்து, மனுஷன் தேவனின் வார்த்தைகளின் வழிகாட்டுதலின் கீழ் வாழ்கிறான், அவரது வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறான் மற்றும் வழங்கப்படுகிறான். தேவனின் வார்த்தைகளின் சாபங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜனங்கள் தேவனின் வார்த்தைகளின்படி உலகில் வாழ்கிறார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கீழ் வாழ இன்னும் அதிகமானவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த வார்த்தைகள் மற்றும் இந்த கிரியை அனைத்தும் மனுஷனின் இரட்சிப்புக்காகவும், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவும், பழைய சிருஷ்டிப்பு உலகின் உண்மையான தோற்றத்தை மாற்றுவதற்காகவும் உள்ளன. தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்தி உலகைப் படைத்தார், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களை வார்த்தைகளைப் பயன்படுத்தி வழிநடத்துகிறார், மேலும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை ஆட்கொண்டு இரட்சிக்கிறார். இறுதியில், பழைய உலகம் முழுவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துவார், இதனால் அவருடைய இரட்சிப்பின் திட்டம் முழுவதையும் நிறைவு செய்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து

40. ராஜ்யத்தின் காலத்தின் போது, தேவனின் அவதாரம் தன்னை விசுவாசிக்கிற அனைவரையும் வெல்ல வார்த்தைகளை பேசுகிறார். இது “மாம்சத்தில் தோன்றும் வார்த்தை”. இந்த கிரியையைச் செய்ய தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார், அதாவது, மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றிட அவர் வந்துள்ளார். அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், உண்மைகளின் வருகை அரிதானதாக உள்ளது. இது மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் சாராம்சமாகும், மேலும் தேவனின் அவதாரம் அவருடைய வார்த்தைகளைப் பேசும்போது, இது மாம்சத்தில் உள்ள வார்த்தையின் தோற்றம், மற்றும் மாம்சத்திற்குள் வரும் வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகியது.” இது (மாம்சத்தில் வார்த்தையின் தோற்றத்தின் கிரியை) தேவன் கடைசி நாட்களில் நிறைவேற்றும் கிரியை, இது அவருடைய முழு நிர்வாகத் திட்டத்தின் இறுதி அத்தியாயமாகும், எனவே தேவன் பூமிக்கு வந்து அவருடைய வார்த்தைகளை மாம்சத்தில் வெளிப்படுத்த வேண்டும். அது இன்று செய்யப்படுகிறது, அது எதிர்காலத்தில் செய்யப்படுவது, தேவனால் நிறைவேற்றப்படுவது, இரட்சிக்கப்படுபவர்கள், அழிக்கப்படுபவர்கள் மற்றும் பலராகிய மனிதரின் இறுதி இலக்கு. இறுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த அனைத்துக் கிரியைகள் எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன, மேலும் அவை மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும். நிர்வாக கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பு, அழிக்கப்படுபவர்கள் மற்றும் ஓய்வில் நுழைவோருக்காக முன்பு பிறப்பிக்கப்பட்டவை. இந்த வார்த்தைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். இது தான் கடைசி நாட்களில் தேவனின் அவதாரத்தால் பிரதானமாக நிறைவேற்றப்பட்ட கிரியை ஆகும். தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள், முன்னரே தீர்மானிக்கப்பட்டாதவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவனுடைய ஜனங்களும் புத்திரர்களும் எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள், இஸ்ரேலுக்கு என்ன நடக்கும், எகிப்துக்கு என்ன நடக்கும், எதிர்காலத்தில், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு இருக்கும். தேவனின் கிரியையின் வேகம் துரிதப்படுத்துகிறது. ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்யப்பட வேண்டும், கடைசி நாட்களில் தேவனின் அவதாரம் செய்ய வேண்டியவை, செய்யப்பட வேண்டிய அவருடைய ஊழியம், இந்த வார்த்தையை மனிதனுக்கு வெளிப்படுத்துவதற்கான வழிமுறையாக தேவன் பயன்படுத்துகிறார் மற்றும் இந்த வார்த்தைகள் அனைத்தும் மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றவும் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

41. முதன்மையாக “மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின்” கிரியையை நிறைவு செய்வதற்காகவும், வார்த்தையைப் பயன்படுத்தி மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், வார்த்தையால் நடத்தப்படுவதையும் வார்த்தையால் செம்மைப்படுத்துவதையும் மனிதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவும், இன்று, தேவன் மாம்சமானார். அவருடைய வார்த்தைகளில் அவர் உன்னை வாய்ப்புகளில் பெருகச் செய்து, வாழ்க்கையில் பெருகச் செய்கிறார். அவருடைய வார்த்தைகளில் நீ அவருடைய கிரியைகளையும் செயல்களையும் காணலாம். உன்னை தண்டிக்கவும் சுத்திகரிக்கவும் தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இதனால், நீ கஷ்டங்களை அனுபவித்தால், அதுவும் தேவனுடைய வார்த்தையினாலேயே ஆகும். இன்று, தேவன் உண்மைகளால் அல்ல, வார்த்தைகளால் செயல்படுகிறார். அவருடைய வார்த்தை உன் மீது வந்த பின்னரே பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்பட்டு உனனை வலியை அனுபவிக்கவோ அல்லது இனிமையாக உணரவோ செய்ய முடியும். தேவனுடைய வார்த்தை மட்டுமே உன்னை யதார்த்தத்திற்குள் கொண்டு வர முடியும், மேலும் தேவனுடைய வார்த்தையால் மட்டுமே உன்னை பரிபூரணமாக்க முடியும். எனவே, குறைந்தபட்சம் நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும், கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை என்பது முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதே ஆகும். அவர் செய்யும் எல்லா கிரியைகளும் வார்த்தையின் மூலமே ஆகும். உன்னை தண்டிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் தேவனை எதிர்க்கும் நேரங்களும் உண்டு. தேவன் உனக்கு மிகுந்த அசவுகரியத்தை ஏற்படுத்துவதில்லை, உன் சரீரம் தண்டிக்கப்படுவதில்லை, நீ கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. ஆனால் அவருடைய வார்த்தை உன் மீது வந்து, உன்னை செம்மைப்படுத்தியவுடன், அதை உன்னால் தாங்க முடியாது. அது அப்படியல்லவா? சேவை செய்பவர்களின் காலத்தில், மனிதனை முடிவற்ற குழிக்குள் தள்ளும்படி தேவன் சொன்னார். மனிதன் உண்மையில் முடிவற்ற குழிக்கு வந்தானா? வெருமனே மனிதனைச் செம்மைப்படுத்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம், மனிதன் முடிவற்ற குழிக்குள் நுழைந்தான். ஆகவே, கடைசி நாட்களில், தேவன் மாம்சமாகும் போது, எல்லாவற்றையும் நிறைவேற்றுவும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவும் அவர் முக்கியமாக வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகளில் மட்டுமே அவர் என்றால் என்ன என்று பார்க்க முடியும். அவருடைய வார்த்தைகளில்தான் அவர் தேவன் என்பதை நீ காண முடியும். தேவனின் அவதாரம் பூமிக்கு வரும்போது, அவர் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர வேறு எந்த கிரியையும் செய்யவதில்லை. இதனால் உண்மைகளுக்குத் தேவையில்லை. வார்த்தைகளே போதுமானதாகும். இது ஏனென்றால், அவர், மனிதன் தம்முடைய வல்லமையையும் மேலாதிக்கத்தையும் அவருடைய வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதனை அவர் தம்மை எப்படி தாழ்மையுடன் மறைக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதன் தம் வார்த்தைகளை முழுவதுமாக அறிந்துகொள்ள அனுமதிக்கவும், முக்கியமாக இந்த கிரியையைச் செய்ய வந்துள்ளார். அவரிடம் உள்ள அனைத்தும், அவரின் சாயலும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. அவருடைய ஞானமும் அதிசயமும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. நீ இதில், தேவன் தம்முடைய வார்த்தைகளை பல முறைகளில் பேசுவதைக் காண முடியும். இந்த காலப்பகுதியில் தேவனின் பெரும்பாலான கிரியைகள் மனிதனை வழிநடத்துதல், வெளிப்படுத்துதல் மற்றும் கையாள்வது ஆகும். அவர் ஒரு நபரை எளிதில் சபிப்பதில்லை, அவர் அவ்வாறு செய்யும்போது கூட, அவர் வார்த்தையின் மூலம்தான் அவர்களைச் சபிக்கிறார். ஆகவே, தேவன் மாம்சமாகிய இந்த காலத்தில், தேவன் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதையும், பேய்களை மீண்டும் வெளியேற்றுவதையும் பார்க்க முயற்சிக்காதீர்கள், தொடர்ந்து அடையாளங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை! அந்த அறிகுறிகளால் மனிதனை பூரணப்படுத்த முடியாது! தெளிவாக பேசுவோமானால், இன்று, மாம்சத்தின் உண்மையான தேவன் தானே செயல்படுவதில்லை. அவர் பேச மட்டுமே செய்கிறார். இதுவே உண்மை! அவர் உன்னை பரிபூரணமாக்குவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் உனக்கு போஷிப்பதற்கும் தண்ணீர் பாய்ச்சவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் கிரியை செய்யவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் அவருடைய யதார்த்தத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த அவர் உண்மைகளுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் இந்த கிரியையின் நடைமுறையை நீ உணரக்கூடியவனாக இருந்தால், எதிர்மறையாக இருப்பது கடினம். எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நீ நேர்மறையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் அதாவது, தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமோ இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அல்லது உண்மைகளின் வருகை இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதனை அவருடைய வார்த்தைகளிலிருந்து வாழ்க்கையைப் பெறுவதற்கு ஏற்படுத்துகிறார், இது எல்லா அறிகுறிகளிலும் மிகப்பெரியது. இன்னும் அதிகமாக, இது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான சிறந்த சான்று இதுவாகும், மேலும் இது அறிகுறிகளை விட பெரிய அறிகுறியாகும். இந்த வார்த்தைகள் மட்டுமே மனிதனை பரிபூரணப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

42. கடைசி நாட்களில், மனிதனை பரிபூரணமாக்க தேவன் இந்த வார்த்தையை முக்கியமாக பயன்படுத்துகிறார். அவர் மனிதனை ஒடுக்க, அல்லது மனிதனை சமாதானப்படுத்த அடையாளங்களையும் அதிசயங்களையும் பயன்படுத்துவதில்லை. இது தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்த முடியாது. தேவன் அறிகுறிகளையும் அதிசயங்களையும் மட்டுமே காட்டியிருந்தால், தேவனின் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவது சாத்தியமில்லை, இதனால் மனிதனை பரிபூரணமாக்குவது சாத்தியமில்லை. தேவன் மனிதனை அடையாளங்களாலும், அதிசயங்களாலும் பரிபூரணமாக்குவதில்லை, ஆனால் இந்த வார்த்தையை மனிதனை நீர்ப் பாய்ச்சி மேய்த்திடப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு மனிதனின் முழுமையான கீழ்ப்படிதலும், தேவனைப் பற்றிய மனிதனின் அறிவும் அடையப்படுகிறது. அவர் செய்யும் கிரியையின் மற்றும் அவர் பேசும் வார்த்தைகளின் நோக்கம் இதுதான். மனிதனை பரிபூரணமாக்குவதற்கு அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கும் முறையை தேவன் பயன்படுத்துவதில்லை. அவர் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனை பரிபூரணமாக்க கிரியையின் பலவிதமான முறைகளைப் பயன்படுத்துகிறார். இது வார்த்தைகளைச் செம்மைப்படுத்துதல், கையாளுதல், சீரமைத்தல் அல்லது வழங்குதல் என இருந்தாலும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், தேவனின் கிரியை, ஞானம் மற்றும் அதிசயத்தைப் பற்றியும் மனிதனுக்கு அதிக அறிவைத் தருவதற்கும் தேவன் பல்வேறு கண்ணோட்டங்களில் பேசுகிறார். … கிழக்கிலிருந்து மீண்டவர்களில் ஒரு குழுவினர் ஆதாயப்படுத்தப்பட்டார்கள் என்று நான் முன்பு கூறியுள்ளேன், மீண்டவர்கள் பெரும் உபத்திரவங்களுக்கு மத்தியில் இருந்து வந்தவர்கள். இந்த வார்த்தைகளின் பொருள் என்ன? தீர்ப்பு மற்றும் தண்டனை, மற்றும் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, மற்றும் அனைத்து வகையான சுத்திகரிப்பு ஆகியவற்றிற்கும் பின்னர் மட்டுமே இந்த ஜனங்கள் உண்மையிலேயே கீழ்ப்படிந்ததால் மீட்டுக் கொள்ளப்பட்டார்கள் என்று அவர்கள் அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த ஜனங்களின் விசுவாசம் தெளிவற்றது மற்றும் சுருக்கமானது, ஆனால் உண்மையானது. அவர்கள் எந்த அறிகுறிகளையும் அதிசயங்களையும், எந்த அற்புதங்களையும் பார்த்ததில்லை. அவர்கள் சுருக்கமான வார்த்தைகள் மற்றும் கோட்பாடுகள் அல்லது ஆழமான நுண்ணறிவுகளைப் பற்றி பேசுவதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் யதார்த்தத்தையும், தேவனின் வார்த்தைகளையும், தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உண்மையான அறிவையும் கொண்டுள்ளனர். அத்தகைய குழு தேவனின் வல்லமையைத் தெளிவுபடுத்துவதில் அதிக திறன் கொண்டதல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

43. கடைசி நாட்களின் போது, மாம்சமாகிய தேவன் வார்த்தைகளைப் பேசுவதற்காக பூமிக்கு பிரதானமாக வந்திருக்கிறார். இயேசு வந்தபோது, அவர் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார், மேலும் தாம் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மீட்பின் கிரியையை அவர் நிறைவேற்றினார். அவர் நியாயப்பிரமாண யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து பழையவை அனைத்தையும் ஒழித்தார். இயேசுவின் வருகை நியாயப்பிரமாண யுகத்தை முடித்து, கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தியது; கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனின் வருகை கிருபையின் யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது. அவர் பிரதானமாக அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், ஒளியூட்டி மனிதனை பிரகாசிப்பிக்கச் செய்வதற்கும், மற்றும் மனிதனின் இருதயத்திற்குள் உள்ள தெளிவற்ற தேவனின் இடத்தை அகற்றுவதற்குமே வந்திருக்கிறார். இயேசு வந்தபோது அவர் செய்த கிரியையின் கட்டம் இதுவல்ல. இயேசு வந்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், மற்றும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் மீட்பின் கிரியையைச் செய்தார். இதன் விளைவாக, ஜனங்களின் கருத்துக்களில் தேவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இயேசு வந்தபோது, மனிதனின் இதயத்திலிருந்து தெளிவற்ற தேவனுடைய உருவத்தை அகற்றும் கிரியையை அவர் செய்யவில்லை; அவர் வந்தபோது, பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார் மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஒருபுறம், கடைசி நாட்களின் போது தேவனுடைய மனித அவதாரமானது மனிதனின் கருத்துக்களில் தெளிவற்ற தேவன் வைத்திருந்த இடத்தை நீக்குகிறது, இதன் நிமித்தம் மனிதனின் இதயத்தில் தெளிவற்ற தேவனின் உருவம் இனி இருக்காது. அவரது உண்மையான வார்த்தைகள் மற்றும் உண்மையான கிரியை, எல்லா தேசங்களிலுமுள்ள அவரது செயல்பாடு மற்றும் மனிதர்களிடையே அவர் செய்யும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பான கிரியை ஆகியவற்றின் மூலம், அவர் தேவனுடைய யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்துகிறார், மேலும் மனிதனின் இதயத்தில் உள்ள தெளிவற்ற தேவனின் இடத்தை நீக்குகிறார். மறுபுறம், மனிதனை முழுமையாக்குவதற்கும், எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கும் தேவன் தம்முடைய மாம்சத்தால் பேசப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். கடைசி நாட்களின் போது தேவன் நிறைவேற்றும் கிரியை இதுதான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

44. கடைசி நாட்களின் போது, தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்காக முக்கியமாக வந்திருக்கிறார். அவர் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்தும், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், மற்றும் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசுகிறார்; அவர் வெவ்வேறு வழிகளில் பேசுகிறார், ஒரு காலத்திற்கு ஒரு வழியைப் பயன்படுத்துகிறார், மேலும் மனிதனின் கருத்துக்களை மாற்றவும், தெளிவற்ற தேவனின் உருவத்தை மனிதனின் இதயத்திலிருந்து அகற்றவும் அவர் பேசும் முறையைப் பயன்படுத்துகிறார். இதுதான் தேவனால் செய்யப்படுகிற முக்கியமான கிரியையாகும். பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், அற்புதங்களைச் செய்யவும், மனிதனுக்கு உலகப்பிரகரமான பொருட்களின் ஆசீர்வாதங்களை வழங்கவும் தேவன் வந்திருக்கிறார் என்று மனிதன் நம்புவதால், இதுபோன்றவற்றை அகற்றுவதற்காக தேவன் இந்த கட்ட கிரியையை—அதாவது மனிதனின் கருத்துக்களிலிருந்து இந்த காரியங்களை நீக்குவதற்காகச் சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறார்—இதன்மூலம் தேவனுடைய யதார்த்தத்தையும் மற்றும் இயல்பான தன்மையையும் மனிதன் அறிந்துகொள்ளலாம், இயேசுவின் உருவம் அவனுடைய இருதயத்திலிருந்து அகற்றப்பட்டு, தேவனுடைய புதிய உருவத்தால் மாற்றப்படலாம். மனிதனுக்குள் தேவனுடைய உருவம் பழையதாக மாறியதும், அது ஒரு விக்கிரமாக மாறுகிறது. இயேசு வந்து அந்த கட்ட கிரியையைச் செய்தபோது, அவர் தேவனை முழுவதுமாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர் சில அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், சில வார்த்தைகளைப் பேசினார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். அவர் தேவனுடைய ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். எல்லாமுமாக இருக்கிற தேவனுடைய எல்லாவற்றையும் அவரால் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை, மாறாக தேவனுடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்வதில் அவர் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஏனென்றால், தேவன் மிகவும் பெரியவர், அதிசயமானவர், அவர் புரிந்துகொள்ளப்பட முடியாதவர், ஏனென்றால் ஒவ்வொரு யுகத்திலும் தேவன் தம்முடைய கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே செய்கிறார். இந்த யுகத்தில் தேவன் செய்த கிரியை முக்கியமாக மனிதனின் வாழ்க்கைக்கான வார்த்தைகளை வழங்குவதாகும்; மனிதனின் சீர்கெட்ட மனநிலை மற்றும் மனிதனுடைய இயல்பின் சாராம்சம் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்; மற்றும் மத கருத்துக்கள், நிலப்பிரபுத்துவ சிந்தனை, காலாவதியான சிந்தனை மற்றும் மனிதனின் அறிவு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை நீக்குதல் ஆகும். தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுவதன் மூலம் இந்த விஷயங்கள் யாவும் சுத்திகரிக்கப்பட வேண்டும். கடைசி நாட்களில், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்குத் தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் பயன்படுத்துவதில்லை மாறாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மனிதனை வெளிப்படுத்தவும், மனிதனை நியாயந்தீர்க்கவும், மனிதனை சிட்சிக்கவும், மனிதனை பரிபூரணமாக்கவும் அவர் தமது வார்த்தைகளை பயன்படுத்துகிறார், இதனால் தேவனுடைய வார்த்தைகளில், மனிதன் தேவனுடைய ஞானத்தையும் அழகையும் காண்கிறான், மேலும் தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறான், தேவனுடைய வார்த்தைகளின் மூலம் மனிதன் தேவனின் செயல்களைக் காண்கிறான். நியாயப்பிரமாண யுகத்தின் போது, யேகோவா மோசேயை எகிப்திலிருந்து தனது வார்த்தைகளால் அழைத்துச் சென்றார், இஸ்ரவேலர்களிடம் சில வார்த்தைகளைப் பேசினார்; அந்த காலத்தில், தேவனுடைய செயல்களில் ஒரு பகுதி தெளிவுபடுத்தப்பட்டது, ஆனால் மனிதனின் திறமை மட்டுப்படுத்தப்பட்டதாலும், அவனுடைய அறிவை முழுமையாக்க எதுவும் செய்ய முடியாததினாலும், தேவன் தொடர்ந்து பேசினார் மற்றும் கிரியையைச் செய்தார். கிருபையின் யுகத்தில், மனிதன் தேவனுடைய செயல்களில் ஒரு பகுதியை மீண்டும் ஒரு முறைப் பார்த்தான். இயேசு அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பிசாசுகளை துரத்தவும், சிலுவையில் அறையப்படவும் முடிந்தது, மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு மனிதனுக்கு முன்பாக மாம்சத்தில் தோன்றினார். மனிதனுக்கு தேவனைப் பற்றி இதைவிட வேறு எதுவும் தெரியாது. தேவனால் மனிதனுக்கு எந்த அளவுக்குக் காண்பிக்கப்பட்டதோ அந்த அளவுக்கு மனிதனுக்குத் தெரியும், தேவன் மனிதனுக்கு ஒன்றும் காண்பிக்கவில்லை என்றால், அந்த அளவே தேவனைப் பற்றிய மனிதனின் வரம்பிடுதல் இருந்திருக்கும். இவ்வாறு, தேவன் தொடர்ந்து செயல்படுகிறார், இதனால் தேவனைப் பற்றிய மனிதனின் அறிவு ஆழமடையக்கூடும், இதனால் மனிதன் படிப்படியாகத் தேவனுடைய சாராம்சத்தை அறிந்து கொள்ளலாம். கடைசி நாட்களில், தேவன் மனிதனைப் பரிபூரணமாக்க தனது வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். உன் சீர்கெட்ட மனநிலையானது தேவனுடைய வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் உன் மதக் கருத்துக்கள் தேவனுடைய யதார்த்தத்தால் மாற்றப்படுகின்றன. கடைசி நாட்களில் மாம்சத்தில் அவதரித்த தேவன் “வார்த்தை மாம்சமாகிறது, வார்த்தை மாம்சத்தில் வருகிறது, மற்றும் வார்த்தை மாம்சத்தில் தோன்றுகிறது” என்கிறதான வார்த்தைகளை நிறைவேற்றவே முக்கியமாக வந்துள்ளார், இதைக் குறித்து உங்களுக்கு முழுமையான அறிவு இல்லையென்றால், பிறகு உங்களால் உறுதியாக நிற்கமுடியாமல் போகும். கடைசி நாட்களில், தேவன் முதன்மையாக ஒரு கட்ட வேலையை நிறைவேற்ற விரும்புகிறார், அதில் வார்த்தை மாம்சத்தில் தோன்றும், இது தேவனுடைய ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

45. கடைசிக் காலத்தின் கிரியையில், வார்த்தையானது அடையாளங்கள் மற்றும் அதிசயங்களின் வெளிப்பாட்டை விட வலிமையானது, மேலும் வார்த்தையின் அதிகாரம் அடையாளங்களையும் அதிசயங்களையும் விட அதிகமாக உள்ளது. வார்த்தையானது மனுஷனின் இருதயத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட அனைத்து சீர்கெட்ட மனநிலைகளையும் அம்பலப்படுத்துகிறது. நீயாகவே அவற்றைக் கண்டுணர உனக்கு வழி இல்லை. வார்த்தையின் மூலம் அவை உனக்கு முன் வெறுமனே வைக்கப்படும் போது, நீ இயல்பாகவே அவற்றைக் கண்டுபிடிப்பாய்; உன்னால் அவற்றை மறுக்க முடியாது, மேலும் நீ முற்றிலும் சமாதானம் அடைந்திருப்பாய். இது வார்த்தையின் அதிகாரம் அல்லவா? இன்றைய வார்த்தையின் கிரியையால் அடையப்பட்ட முடிவு இது. ஆகையால், நோயைக் குணப்படுத்துவதன் மூலமும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமும் மனுஷனை அவனது பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சிக்க முடியாது, மேலும் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமும் அவனை முழுமையாக பரிபூரணப்படுத்த முடியாது. நோயைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளை விரட்டுவதற்குமான அதிகாரம் மனுஷனுக்கு கிருபையை மட்டுமே தருகிறது, ஆனால் மனுஷனின் மாம்சம் இன்னும் சாத்தானுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது, மேலும் சீர்கெட்ட சாத்தானிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள் தான் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்திகரிக்கப்படாதவை இன்னும் பாவத்திற்கும் அசுத்தத்திற்கும் உரியதாகவே இருக்கின்றன. வார்த்தையின் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே அவனால் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிசுத்தமாக்கப்பட முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து

46. கிரியையின் இந்தக் கட்டம் யேகோவாவின் நியாயப்பிரமாணத்தையும் இயேசுவின் மீட்பையும் உனக்குத் தெளிவுபடுத்துகிறது, மேலும் இது தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் முழு கிரியையையும் நீ புரிந்துகொள்வதற்கும், இதன் அனைத்து முக்கியத்துவத்தையும் சாரத்தையும் புரிந்துகொள்ளவும் உனக்கு உதவுகிறது. அதுமட்டுமன்றி, இயேசு செய்த அனைத்துக் கிரியைகளின் நோக்கத்தையும் அவர் பேசிய வார்த்தைகளையும் நீ புரிந்து கொள்ளவும், மேலும் வேதாகமத்தின் மீதுள்ள உன் குருட்டு விசுவாசத்தையும் வணக்கத்தையும் புரிந்து கொள்ளவும் இந்தக் கிரியை உதவுகிறது. இவை அனைத்தையும் நீ முழுமையாக புரிந்துகொள்ள இது உனக்கு உதவும். இயேசு செய்தக் கிரியையையும், தேவனின் இன்றையக் கிரியையையும் நீ புரிந்துகொள்வாய்; சத்தியம், ஜீவன் மற்றும் வழி ஆகிய அனைத்தையும் நீ காண்பாய். இயேசு செய்தக் கிரியையின் கட்டத்தில், முடித்துவைப்பதற்கானக் கிரியையைச் செய்யாமல் இயேசு ஏன் புறப்பட்டுச் சென்றார்? ஏனென்றால், இயேசுவினுடைய கிரியையின் கட்டம் முடித்துவைப்பதற்கான கிரியை அல்ல. அவர் சிலுவையில் அறையப்பட்டபோது, அவருடைய வார்த்தைகளும் முடிவுக்கு வந்தன; அவர் சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவருடைய கிரியை முழுமையாக நிறைவுபெற்றது. தற்போதைய கட்டம் வேறுபட்டது: வார்த்தைகள் இறுதிவரை பேசப்பட்டு, தேவனின் கிரியை முழுவதும் முடிந்த பின்னரே அவருடைய கிரியை நிறைவுபெறும். இயேசுவினுடைய கிரியையின் போது, பல வார்த்தைகள் சொல்லப்படாமல் இருந்தன, அல்லது அவை முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆயினும், இயேசு அவர் என்ன செய்தார் அல்லது எதைச் சொல்லவில்லை என்பதைக் குறித்துக் கவலைப்படவில்லை, ஏனென்றால் அவருடைய ஊழியம் வார்த்தைகளின் ஊழியம் அல்ல, ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார். கிரியையின் அந்தக் கட்டம் முக்கியமாக சிலுவையில் அறையப்படுவதற்காகவே இருந்தது, அது தற்போதைய கட்டத்தைப் போன்றது அல்ல. கிரியையின் தற்போதையக் கட்டமானது நிறைவு செய்வதற்கும், அழிப்பதற்கும், மற்றும் அனைத்துக் கிரியைகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. வார்த்தைகள் அவற்றின் இறுதிவரை பேசப்படாவிட்டால், இந்தக் கிரியையை முடிக்க எந்த வழியும் இருக்காது, ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டத்தில் அனைத்துக் கிரியைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்படுகின்றன. அந்த நேரத்தில், இயேசு மனுஷனுக்குப் புரியாத பல கிரியைகளைச் செய்தார். அவர் அமைதியாகப் புறப்பட்டுச் சென்றார், இன்றும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் அநேகர் இருக்கிறார்கள், அவர்களது புரிதல் பிழையானது, ஆனால் அது சரியானது தான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், தாம் தவறு செய்கிறோம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. முடிவில், இந்தத் தற்போதையக் கட்டம் தேவனின் கிரியையை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவரும், மேலும் அதன் நிறைவையும் வழங்கும். தேவனின் ஆளுகைத் திட்டத்தை அனைவரும் புரிந்துகொண்டு அறிந்து கொள்வார்கள். மனுஷனுக்குள் இருக்கும் கருத்துக்கள், அவனுடைய நோக்கங்கள், தவறான புரிதல், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய அவனது கருத்துக்கள், புறஜாதியாரைப் பற்றிய அவனது கருத்துக்கள் மற்றும் அவனது பிற விலகிச் செல்லுதல்கள் மற்றும் பிழைகள் சரிசெய்யப்படும். மனுஷன், ஜீவிதத்தின் சரியான பாதைகள் அனைத்தையும், தேவனால் செய்யப்பட்ட எல்லாக் கிரியைகளையும், முழு சத்தியத்தையும் புரிந்துகொள்வான். அது நிகழும்போது, கிரியையின் இந்தக் கட்டம் நிறைவுக்கு வரும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து

47. கிருபையின் யுகத்திலேயே ஜனங்கள் சிக்கிக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் தங்களது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விடுபட மாட்டார்கள், ஒருபுறம் தேவனின் ஆழ்ந்த மனநிலையை மட்டும் தெரிந்துகொள்வார்கள். ஜனங்கள் எப்பொழுதும் ஏராளமான கிருபையின் மத்தியில் ஜீவிக்கிறார்கள், ஆனால் தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது அவரை திருப்திப்படுத்தவோ அனுமதிக்கும் ஜீவவழி இல்லை என்றால், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்திலான விசுவாசத்தில் உண்மையாக எதையும் பெறமாட்டார்கள். இந்த வகையான விசுவாசம் உண்மையில் பரிதாபகரமானது. நீ இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், ராஜ்யத்தின் யுகத்தில் மனுஷனாக அவதரித்த தேவனின் ஒவ்வொரு படியையும் நீ அனுபவித்து முடிக்கும்போது, பல ஆண்டுகளாக நீ கொண்டிருந்த ஆசைகள் இறுதியாக உணரப்பட்டுள்ளன என்பதை நீ உணருவாய். இப்போதுதான் நீ உண்மையிலேயே தேவனை நேருக்கு நேர் பார்த்திருக்கிறாய் என்று நீ உணருவாய்; இப்போதுதான் நீ அவருடைய முகத்தைப் பார்த்திருக்கிறாய், அவருடைய தனிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய், அவருடைய கிரியையின் ஞானத்தைப் பாராட்டியிருக்கிறாய், அவர் எவ்வளவு உண்மையானவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்பதை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாய். கடந்த காலங்களில் ஜனங்கள் பார்த்திராத அல்லது வைத்திருக்காத பல விஷயங்களை நீ பெற்றிருக்கிறாய் என்பதை நீ உணருவாய். இந்த நேரத்தில், தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது என்றால் என்ன, தேவனின் சித்தத்திற்கு இணங்குவது என்றால் என்ன என்பதை நீ தெளிவாக அறிந்து கொள்வாய். நிச்சயமாக, நீ கடந்த காலக் கருத்துக்களுடன் ஒட்டிக்கொண்டு, தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தின் உண்மையை நிராகரிக்கிறாய் அல்லது மறுக்கிறாய் என்றால், நீ வெறுங்கையுடன் தான் இருப்பாய், எதையும் பெறமாட்டாய், இறுதியில் தேவனை எதிர்த்ததற்காக நீ குற்றவாளி என்று அறிவிக்கப்படுவாய். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய கிரியைக்கு அடிபணியக்கூடியவர்கள் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரமான சர்வவல்லவர் என்ற பெயரில் உரிமை கோரப்படுவார்கள். அவர்களால் தேவனின் தனிப்பட்ட வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தையும், உண்மையான ஜீவனையும் அவர்கள் பெறுவார்கள். கடந்த கால ஜனங்களால் இதுவரை கண்டிராதவற்றை அவர்கள் காண்பார்கள்: “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது” (வெளிப்படுத்தல் 1:12-16). இந்தக் காட்சி தேவனின் முழு மனநிலையின் வெளிப்பாடாகும், மேலும் அவருடைய முழு மனநிலையின் வெளிப்பாடும் அவருடைய தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனுடைய கிரியையின் வெளிப்பாடுமாகும். ஆக்கினைத்தீர்ப்புகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஓட்டங்களில், மனுஷகுமாரன் தனது ஆழமான மனநிலையை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், அவருடைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண அனுமதிக்கிறார், இது யோவானால் காணப்பட்ட மனுஷகுமாரனின் முகத்தின் உண்மையுள்ள சித்தரிப்பு ஆகும். (நிச்சயமாக, இவை அனைத்தும் ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும்.) தேவனின் உண்மையான முகத்தை மனுஷ மொழியைப் பயன்படுத்தி முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஆகவே, தேவன் தம்முடைய ஆழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் வழிகளை மனுஷனுக்கு தனது உண்மையான முகத்தைக் காட்ட பயன்படுத்துகிறார். மனுஷகுமாரனின் ஆழ்ந்த மனநிலையைப் பாராட்டிய அனைவருமே மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மிகப் பெரியவர், மனுஷ மொழியைப் பயன்படுத்தி அவரை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷன், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் அனுபவித்தவுடன், விளக்குகளின் மத்தியில் மனுஷகுமாரனைப் பற்றிப் பேசிய யோவானின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அவன் அறிந்து கொள்வான்: “அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.”

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

48. ஜெயங்கொள்ளும் கிரியை ஏன் இறுதி கட்டமாக இருக்கிறது? இது ஒவ்வொரு வகையான மனுஷரும் எந்த வகையான முடிவை சந்திப்பார்கள் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்துவதாக இல்லையா? ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது, அவர்களின் உண்மையான வண்ணங்களைக் காட்டவும், பின்னர் அவர்களின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தவும் அனைவரையும் அனுமதிப்பதாக இல்லையா? இது மனுஷகுலத்தை ஜெயங்கொள்கிறது என்று சொல்வதை விட, ஒவ்வொரு வகையினருக்கும் என்ன மாதிரியான முடிவு இருக்கும் என்பதை இது காட்டுகிறது என்று சொல்வது நல்லது. இது ஜனங்களின் பாவங்களை நியாயந்தீர்ப்பது மற்றும் பல்வேறு வகையானவர்களை வெளிப்படுத்துவது ஆகியவற்றைப் பற்றியதாகும், இதன் மூலம் அவர்கள் தீயவர்களா அல்லது நீதியுள்ளவர்களா என்பதை தீர்மானிப்பதாகும். ஜெயங்கொள்ளும் கிரியைக்குப் பிறகு, நன்மைக்கு வெகுமதி அளிக்கும் மற்றும் தீமையைத் தண்டிக்கும் கிரியை வருகிறது. முழுமையாகக் கீழ்ப்படிந்தவர்கள்—அதாவது முழுமையாக ஜெயங்கொள்ளப்பட்டவர்கள்—தேவனின் கிரியையை முழு பிரபஞ்சத்திற்கும் பரப்புவதற்கான அடுத்த கட்டத்தில் வைக்கப்படுவார்கள்; ஜெயங்கொள்ளப்படாதவர்கள் இருளில் வைக்கப்படுவார்கள், பேரழிவை சந்திப்பார்கள். இவ்வாறு மனுஷன் வகையின்படி வகைப்படுத்தப்படுவான், தீயவர்கள் தீமையுடன் குழுவாக இருப்பார்கள், அவர்கள் மீது மீண்டும் சூரியனின் வெளிச்சம் படாது, நீதிமான்கள் நன்மையுடன் குழுவாக இருப்பார்கள், வெளிச்சத்தைப் பெற்று வெளிச்சத்திலேயே என்றென்றும் ஜீவித்திருப்பார்கள். சகலத்திற்கும் முடிவு நெருங்கிவிட்டது; மனுஷனின் முடிவு அவனது கண்களுக்கு தெளிவாகக் காட்டப்படுகிறது, மேலும் சகலமும் அவற்றின் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படும். அப்படியானால், ஒவ்வொருவரும் வகைப்படுத்தப்படுவதன் வேதனையிலிருந்து ஜனங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? சகல விஷயங்களுக்கும் முடிவு நெருங்கும் போது மனுஷனின் ஒவ்வொரு வகையினரின் வெவ்வேறு முடிவுகள் வெளிப்படும், மேலும் இது முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையின் போது செய்யப்படுகிறது (ஜெயங்கொள்ளுதலின் அனைத்து கிரியைகளும் உட்பட. தற்போதைய கிரியையில் இருந்து தொடங்குகிறது). சகல மனுஷரின் முடிவையும் வெளிப்படுத்துவது நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக, ஆக்கினைத்தீர்ப்பின் போதும், கடைசிக் காலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையின் போதும் செய்யப்படுகிறது. …

சகலத்தையும் ஜெயங்கொள்வதன் மூலம், அவற்றின் வகைகளின்படி வகைப்படுத்தப்படுவதே கடைசிக் காலம் ஆகும். ஜெயங்கொள்வதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொருவரின் பாவங்களையும் நியாயந்தீர்ப்பதே கடைசிக் காலத்தின் கிரியை ஆகும். இல்லையெனில், ஜனங்களை எவ்வாறு வகைப்படுத்த முடியும்? உங்களிடையே செய்யப்படும் இந்த வகைப்படுத்துதல் கிரியை, முழு பிரபஞ்சத்திலும் நடைபெறும் இதுபோன்ற கிரியையின் தொடக்கமாகும். இதற்குப் பிறகு, சகல தேசங்களை சேர்ந்த சகல ஜனங்களும் ஜெயங்கொள்ளும் கிரியைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், சிருஷ்டிக்கப்படும் ஒவ்வொருவரும், நியாயந்தீர்க்கப்பட நியாயத்தீர்ப்பின் இருக்கைக்கு முன்பாக வரும் முன், அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள். எந்தவொரு நபரும் எந்தவொரு பொருளும் இந்த ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிப்பதில் இருந்து தப்ப முடியாது, எந்தவொரு நபரும் அல்லது பொருளும் வகைப்படுத்தப்படாமல் விடுவதில்லை; ஒவ்வொரு மனுஷனும் வகைப்படுத்தப்படுவான், ஏனென்றால் சகலத்தின் முடிவும் நெருங்கி வருகிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அதன் முடிவுக்கு வந்துவிட்டன. மனுஷ வாழ்வின் கடைசிக் காலத்தில் இருந்து மனுஷன் எவ்வாறு தப்பிக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (1)” என்பதிலிருந்து

49. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாகத் தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனை தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்றத் தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து

50. கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது-தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் முக்கிய நோக்கம் மனுக்குலத்தை சுத்திகரிப்பதும் அவர்களை அவர்களது இறுதி இளைப்பாறுதலுக்கு ஆயத்தம் செய்வதும் ஆகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் அழித்தொழிக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள். பரிசுத்த மனுக்குலம் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் போது, மரித்தவர்களின் ஆவியாக இருந்தாலும் அல்லது மாம்சத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களாக இருந்தாலும், அனைத்து அக்கிரமக்காரரும் மற்றும் இரட்சிக்கப்படாத அனைவரும் அழிக்கப்படுவார்கள். இந்த அக்கிரமஞ்செய்யும் ஆவிகள் மற்றும் மனிதர்களையும், அல்லது நீதிமான்களின் ஆவிகள் மற்றும் நன்மை செய்பவர்களையும் பொறுத்தவரையில் அவர்கள் எந்த யுகத்தில் இருந்தாலும், தீமை செய்யும் அனைவரும் இறுதியாக அழிக்கப்படுவார்கள் மேலும் நீதிமான்கள் அனைவரும் பிழைப்பார்கள். ஒரு நபர் அல்லது ஆவி இரட்சிப்பைப் பெறுமா என்பது கடைசிக் காலத்தின் கிரியையின் அடிப்படையில் முழுவதுமாக தீர்மானிக்கப்பட மாட்டாது; மாறாக, அவர்கள் தேவனை எதிர்த்தார்களா அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். முந்திய யுகத்தில் தீமை செய்து இரட்சிப்பைப் பெற முடியாதவர்கள், சந்தேகமின்றி, தண்டனைக்கு இலக்காவார்கள், மற்றும் தற்போதைய யுகத்தில் தீமை செய்து இரட்சிக்கப்பட முடியாதவர்களும் தண்டனைக்கு இலக்காகவே இருப்பார்கள். மனிதர்கள் அவர்கள் வாழும் யுகத்தைப் பொருத்தல்லாமல், நன்மை தீமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட உடன், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்படுவதில்லை அல்லது அவர்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவதில்லை; மாறாக, தேவன் கடைசி நாட்களில் தமது ஜெயங்கொள்ளுதல் கிரியையை முடித்த பின்னரே தீயோரைத் தண்டிக்கும் மற்றும் நல்லோருக்கு பிரதிபலன் அளிக்கும் தமது கிரியையைச் செய்வார். உண்மையில், மனிதர்களுக்கு மத்தியில் அவர் தமது கிரியையை செய்யத் தொடங்கியது முதல் அவர்களை நல்லவர்கள் மற்றும் தீயவர்கள் என்று பிரிக்கத் தொடங்கிவிட்டார். அவரது கிரியை நிறைவடைந்த பின்னரே அவர் நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்துத் துன்மார்க்கரைத் தண்டிப்பார்; தமது கிரியை முடிவடைந்த உடன் அவர் அவர்களை வகைப்படுத்தி பின்னர் உடனடியாக நல்லவர்களுக்கு பிரதிபலன்களையும் துன்மார்க்கருக்கு தண்டனையும் அளிப்பார் என்பதல்ல. நல்லவர்களுக்குப் பிரதிபலன் அளித்து துன்மார்க்கருக்குத் தண்டனை அளிக்கும் தேவனின் இறுதி கிரியையின் முழு நோக்கமானது எல்லா மனிதர்களையும் முற்றிலுமாக சுத்திகரிப்பதன் மூலம் அவரால் ஒரு தூய்மையான பரிசுத்த மனுக்குலத்தை நித்திய இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுவதற்குத்தான். கிரியையின் இந்தக் கட்டமே மிக முக்கியமானது; அவரது முழுமையான நிர்வாகக் கிரியையின் கடைசிக் கட்டம் இது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து

முந்தைய: B. கிருபையின் காலத்தில் அவருடைய கிரியைப் பற்றிய தேவனுடைய வெளிப்பாடு குறித்து

அடுத்த: II. கடைசி நாட்களில் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை குறித்த வார்த்தைகள்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக