“ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு

ஆயிரம் வருட அரசாட்சியின் நோக்கத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சிலர் இதைப் பற்றி நிறைய யோசிக்கிறார்கள், அவர்கள் சொல்கிறார்கள்: “ஆயிரம் வருட அரசாட்சி பூமியில் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும், அதனால் திருச்சபையைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்கள் திருமணமாகாதவர்களாக இருந்தால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? எனது குடும்பத்தில் பணம் இல்லை, நான் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டுமா? …” ஆயிரம் வருட அரசாட்சி என்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? ஜனங்கள் அரைக்குருடாக இருக்கிறார்கள் மற்றும் ஒரு பெரிய சோதனையை அனுபவிக்கிறார்கள். உண்மையில், ஆயிரம் வருட அரசாட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. ஜனங்களைப் பரிபூரணமாக்கும் கட்டத்தில், ஆயிரம் வருட அரசாட்சி வராது. தேவனால் பேசப்பட்ட ஆயிரம் வருட அரசாட்சியின் போது, மனிதன் பரிபூரணமாக்கப்பட்டிருப்பான். முன்னதாக, ஜனங்கள் பரிசுத்தவான்களைப் போல இருப்பார்கள் என்றும் சீனீம் தேசத்தில் உறுதியாக நிற்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஜனங்கள் பரிபூரணமாக்கப்பட்டால் மட்டுமே, அதாவது அவர்கள் தேவனால் பேசப்படும் பரிசுத்தவான்களாக மாறினால் மட்டுமே, ஆயிர வருட அரசாட்சி வந்திருக்கும். தேவன் ஜனங்களை பரிபூரணமாக்கும்போது, அவர் அவர்களைச் சுத்திகரிக்கிறார். அவர்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்களோ, தேவனால் அந்த அளவிற்குப் பரிபூரணமாக்கப்படுகிறார்கள். உனக்குள் இருக்கும் தீட்டான குணம், கலகத்தனம், எதிர்ப்பு மற்றும் மாம்சத்தின் விஷயங்கள் ஆகியவை வெளியேற்றப்படும் போது, நீ சுத்திகரிக்கப்படும் போது, நீ தேவனால் நேசிக்கப்படுவாய் (வேறுவிதமாகக் கூறினால், நீ ஒரு பரிசுத்தவானாக இருப்பாய்); நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு பரிசுத்தவானாக மாறும் போது, நீ ஆயிரம் வருட அரசாட்சியில் இருப்பாய். இப்போது ராஜ்யத்தின் காலமாக இருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்தில் ஜனங்கள் ஜீவிக்க தேவனுடைய வார்த்தைகளைச் சார்ந்து இருப்பார்கள், மற்றும் எல்லா தேசங்களும் தேவனுடைய நாமத்தின் கீழ் வரும், அனைவரும் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க வருவார்கள். அந்த நேரத்தில், சிலர் தொலைபேசி மூலம் அழைப்பார்கள், சிலர் தொலைநகல் செய்வார்கள்…அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அணுக எல்லா வழிகளையும் பயன்படுத்துவார்கள், மற்றும் நீங்களும் தேவனுடைய வார்த்தைகளின் கீழ் வருவீர்கள். ஜனங்கள் பரிபூரணமான பிறகு நடப்பது இதுவே. இன்று, ஜனங்கள் பரிபூரணமாக்கப்படுகிறார்கள், சுத்திகரிக்கப்படுகிறார்கள், வெளிச்சமடைகிறார்கள் மற்றும் வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறார்கள்; இது ராஜ்யத்தின் காலம். இது ஜனங்கள் பரிபூரணமாக்கப்படுவதற்கான கட்டமாகும், இதற்கும் ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்தில், ஜனங்கள் ஏற்கனவே பரிபூரணமாக்கப்பட்டிருப்பார்கள் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் சீர்கேடான மனநிலைகள் சுத்திகரிக்கப்பட்டிருக்கும். அந்த நேரத்தில், தேவன் பேசும் வார்த்தைகள் படிப்படியாக ஜனங்களை வழிநடத்தும். சிருஷ்டிப்பின் காலம் முதல் இன்று வரையிலான தேவனுடைய கிரியையின் இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும், மேலும் ஒவ்வொரு காலத்திலும் உள்ள தேவனுடைய செயல்களையும், மற்றும் ஆவிக்குரிய உலகில் உள்ள ஜனங்களை அவர் ஒவ்வொரு நாளும் எவ்வாறு வழிநடத்துகிறார் மற்றும் ஆவிக்குரிய உலகத்தில் அவர் செய்யும் கிரியையும் மற்றும் ஆவிக்குரிய உலகின் வல்லமைகளையும் அவருடைய வார்த்தைகள் ஜனங்களுக்குத் தெரிவிக்கும். அப்போதுதான் அது உண்மையிலேயே வார்த்தையின் காலமாக இருக்கும். இப்போது, அது வளர்ந்து வரும் நிலையில் மட்டுமே உள்ளது. ஜனங்கள் பரிபூரணமாக்கப்படாமலும் சுத்திகரிக்கப்படாமலும் இருந்தால், அவர்களுக்கு பூமியில் ஆயிரம் ஆண்டுகள் ஜீவிக்க வழி இருக்காது. அவர்களுடைய மாம்சம் தவிர்க்க முடியாமல் அழிந்துவிடும்; ஜனங்கள் உள்ளே சுத்திகரிக்கப்பட்டு, அவர்கள் இனி சாத்தானிடமும் மாம்சத்திலும் இல்லாதிருந்தால், அவர்கள் பூமியில் உயிரோடு இருப்பார்கள். இந்தக் கட்டத்தில் நீ இன்னும் அரைக் குருடனாகவே இருக்கிறாய். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் தேவனை நேசிப்பதும், நீங்கள் பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் அவருக்கு சாட்சி பகருவதும் ஆகும்.

“ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பது ஒரு தீர்க்கதரிசனம். இது ஒரு தீர்க்கதரிசியின் முன்னறிவிப்புக்கு ஒப்பானது, அதில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தேவன் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். தேவன் எதிர்காலத்தில் பேசும் சொற்களும் இன்று அவர் பேசும் வார்த்தைகளும் ஒன்றல்ல: எதிர்காலத்தின் வார்த்தைகள் காலத்தை வழிநடத்தும். அதேசமயம், அவர் இன்று பேசும் வார்த்தைகள் ஜனங்களை பரிபூரணப்படுத்துகின்றன, சுத்திகரிக்கின்றன மற்றும் அவர்களைக் கையாளுகின்றன. எதிர்காலத்தினுடைய வார்த்தையின் காலம் இன்றைய வார்த்தையின் காலத்திலிருந்து வேறுபட்டது. இன்று, தேவன் பேசும் எல்லா வார்த்தைகளும், அவர் பேசும் வழிமுறைகளைப் பொருட்படுத்தாமல், ஜனங்களைப் பரிபூரணமாக்குவதற்கும், அவர்களுக்குள் அழுக்காக இருப்பதைத் தூய்மைப்படுத்துவதற்கும், அவர்களைப் பரிசுத்தமாக்குவதற்கும், தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக மாற்றுவதற்கும் சொல்லப்படுகின்றன. இன்று பேசப்படும் வார்த்தைகள், எதிர்காலத்தில் பேசப்படும் வார்த்தைகள் ஆகிய இரண்டும் தனித்தனி விஷயங்கள் ஆகும். ராஜ்யத்தின் காலத்தில் பேசப்படும் வார்த்தைகள், ஜனங்களை எல்லாப் பயிற்சியிலும் நுழைய வைக்கிறது, எல்லாவற்றிலும் ஜனங்களைச் சரியான பாதையில் கொண்டு வருகிறது. அவர்களுக்குள் உள்ள தீட்டான அனைத்தையும் வெளியேற்றுகிறது. இந்தக் காலத்தில் தேவன் செய்வது இதுவே. அவர் ஒவ்வொரு நபரிடமும் தமது வார்த்தைகளுக்கான ஓர் அடித்தளத்தை உருவாக்குகிறார். அவர் தமது வார்த்தைகளை ஒவ்வொரு நபரின் ஜீவனாக்குகிறார். அவர் தொடர்ந்து தமது வார்த்தைகளை அவர்களுக்கு அறிவூட்டவும் வழிகாட்டவும் பயன்படுத்துகிறார். தேவனுடைய சித்தத்தை அவர்கள் கவனத்தில் கொள்ளாதபோது, அவர்களைக் கண்டிக்கவும் ஒழுங்குபடுத்தவும் தேவனுடைய வார்த்தைகள் அவர்களுக்குள் இருக்கும். இன்றைய வார்த்தைகள் மனிதனுடைய ஜீவனாக இருக்க வேண்டும். அவை மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் நேரடியாக வழங்குகின்றன. உனக்குள்ளே இல்லாத அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளால் வழங்கப்படுகின்றன. தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதன் மூலம் வெளிச்சம் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்களை வழிநடத்துகின்றன; இன்று, இந்த வார்த்தைகள் சீனாவில் மட்டுமே பேசப்படுகின்றன மற்றும் அவை முழு உலகத்திலும் பேசப்படுவதைக் குறிக்கவில்லை. ஆயிர வருட அரசாட்சி வரும்போது மட்டுமே தேவன் முழு பிரபஞ்சத்துடனும் பேசுவார். இன்று தேவன் பேசும் வார்த்தைகள் அனைத்தும் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதற்கானவை என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்; இந்தக் கட்டத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் ஜனங்களின் தேவைகளை வழங்குவதற்காக மட்டுமே இருக்கின்றன. இரகசியங்களை அறியவோ அல்லது தேவனுடைய அற்புதங்களைக் காணவோ அவை உன்னை அனுமதிக்காது. அவர் பல வழிகளில் பேசுவது ஜனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே. ஆயிர வருட அரசாட்சியின் காலம் இன்னும் வரவில்லை, தேவனுடைய மகிமையின் நாள் என்று பேசப்படும் ஆயிரம் வருட அரசாட்சியின் காலம் வரவில்லை. யூதேயாவில் இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் தமது கிரியையை சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு மாற்றி மற்றொரு திட்டத்தை உருவாக்கினார். அவர் உங்களிடத்தில் தமது கிரியையின் இன்னொரு பகுதியைச் செய்கிறார். ஜனங்களை வார்த்தைகளால் பரிபூரணமாக்கும் கிரியையைச் செய்கிறார், மற்றும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜனங்களை அதிக வேதனையை அனுபவிக்கச் செய்கிறார், அத்துடன் தேவனுடைய கிருபையையும் அதிகமாக பெறச் செய்கிறார். இந்தக் கட்ட கிரியையானது ஒரு கூட்ட ஜெயங்கொள்ளுபவர்களை உருவாக்கும். அவர் இந்த ஜெயங்கொள்ளுபவர்களின் கூட்டத்தை உருவாக்கிய பிறகு, அவர்களால் அவருடைய கிரியைகளுக்கு சாட்சியளிக்க முடியும், அவர்களால் யதார்த்தமாக ஜீவிக்க முடியும், அவர்கள் உண்மையில் அவரை திருப்திப்படுத்துவார்கள், மரணம் வரையில் அவருக்கு விசுவாசமாக இருப்பார்கள். இவ்வாறு தேவன் மகிமையை அடைவார். தேவன் மகிமையை அடையும் போது, அதாவது, அவர் இந்த ஜனக் கூட்டத்தைப் பரிபூரணமாக்கும் போது, அது ஆயிரம் வருட அரசாட்சியின் காலமாக இருக்கும்.

இயேசு முப்பத்து மூன்றரை ஆண்டுகளாக பூமியில் இருந்தார், சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்யவே அவர் வந்தார். மேலும் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் தேவன் தம்முடைய மகிமையின் ஒரு பகுதியைப் பெற்றார். தேவன் மாம்சத்தில் வந்தபோது, அவர் மனத்தாழ்மையுடனும் மறைவாகவும் இருக்க முடிந்தது மற்றும் மிகுந்த துன்பங்களையும் தாங்க முடிந்தது. அவர் தேவனாக இருந்தபோதிலும், ஒவ்வொரு அவமானத்தையும் ஒவ்வொரு அவதூறையும் அவர் சகித்துக்கொண்டார். மீட்பின் கிரியையை முடிக்க சிலுவையில் அறையப்பட்டதில் மிகுந்த வேதனையை அவர் சகித்தார். இந்தக் கட்ட கிரியை முடிந்தபின், தேவன் மிகுந்த மகிமையைப் பெற்றார் என்பதை ஜனங்கள் கண்டாலும், அது அவருடைய முழுமையான மகிமையாக இருக்கவில்லை; அது அவர் இயேசுவிடம் இருந்து பெற்ற அவருடைய மகிமையின் ஒரே ஒரு பகுதி மட்டுமே. இயேசுவால் ஒவ்வொரு கஷ்டத்தையும் சகித்துக்கொள்ளவும், தாழ்மையாகவும், மறைவாகவும், தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் முடிந்தது என்றாலும், தேவன் தம்முடைய மகிமையின் ஒரு பகுதியை மட்டுமே பெற்றார், மற்றும் அவருடைய மகிமை இஸ்ரவேலில் பெறப்பட்டது. தேவனுக்கு மகிமையின் இன்னொரு பகுதி உள்ளது: அது, நடைமுறையில் கிரியை செய்வதற்கும் ஒரு ஜனக்கூட்டத்தைப் பரிபூரணமாக்குவதற்கும் அவர் பூமிக்கு வருவதாகும். இயேசுவின் கிரியையின் கட்டத்தின்போது சில இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்தார். ஆனால் அந்தக் கிரியை அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைச் செய்வதற்காக மட்டுமே செய்யப்பட்டதல்ல. இயேசு தேவனை நேசித்ததால் பாடுகள் படவும், தேவனுக்காக சிலுவையில் அறையப்படவும் முடிந்தது என்பதையும், மிகுந்த வேதனையை அனுபவிக்க முடிந்தது என்பதையும், தேவன் அவரைக் கைவிட்டாலும், தேவனுடைய சித்தத்திற்காக தம் உயிரைத் தியாகம் செய்ய அவர் இன்னும் தயாராக இருக்கிறார் என்பதையும் முதன்மையாகக் காட்டியது. தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையை முடித்தபின், இயேசு சிலுவையில் அறையப்பட்டபின், தேவன் மகிமை அடைந்தார், மற்றும் அவர் சாத்தானுக்கு முன்பாக சாட்சியளித்தார். சீனாவில் தேவன் எப்படி மாம்சமாகியிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்ததுமில்லை, பார்த்ததுமில்லை, ஆகையால் தேவன் மகிமையை அடைந்திருப்பதை உங்களால் எவ்வாறு பார்க்க முடியும்? தேவன் உங்களுக்குள் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்யும்போது, நீங்கள் உறுதியாக நிற்கும்போது, தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டம் ஜெயமாக இருக்கிறது. இது தேவனுடைய மகிமையின் ஒரு பகுதியாகும். நீங்கள் இதை மட்டுமே பார்க்கிறீர்கள், நீங்கள் இன்னும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை. உங்கள் இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுக்கவில்லை. இந்த மகிமையை நீங்கள் இன்னும் முழுவதுமாகக் காணவில்லை. தேவன் ஏற்கனவே உங்கள் இருதயத்தை ஜெயங்கொண்டுள்ளார் என்பதையும், உங்களால் ஒருபோதும் அவரை விட்டு விலக முடியாது என்பதையும், தேவனை நீங்கள் இறுதிவரை பின்பற்றுவீர்கள் என்பதையும், உங்கள் இருதயம் மாறாது என்பதையும், இது தேவனுடைய மகிமை என்பதையும் மட்டுமே நீங்கள் காண்கிறீர்கள். தேவனுடைய மகிமையை நீங்கள் எதில் காண்கிறீர்கள்? ஜனங்களிடம் காணப்படும் அவருடைய கிரியையின் விளைவுகளில் காண்கிறீர்கள். தேவன் மிகவும் அழகானவர். ஜனங்கள் தங்கள் இருதயத்தில் தேவனைக் கொண்டுள்ளார்கள். அவரை விட்டுவிட விரும்பவில்லை. இது தேவனுடைய மகிமையாகும். திருச்சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் பெலன் பெருகும்போது, அவர்களால் தங்கள் இருதயத்திலிருந்து தேவனை நேசிக்க முடியும், தேவன் செய்த கிரியையின் மிக உயர்ந்த வல்லமையைப் பார்க்க முடியும், அவருடைய வார்த்தைகளின் ஒப்பற்ற வல்லமையையும், அவருடைய வார்த்தைகள் அதிகாரம் கொண்டவை என்பதையும் காணும் போது சீன நிலப்பரப்பின் ஆவி நகரத்தில் அவர் தமது கிரியையைத் தொடங்க முடியும். ஜனங்கள் பலவீனமாக இருந்தாலும், அவர்களுடைய இருதயங்கள் தேவனுக்கு முன்பாக வணங்குகின்றன மற்றும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் பலவீனர்களாகவும் தகுதியற்றவர்களாகவும் இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகள் மிகவும் அன்பானவை என்பதையும், அவற்றின் நேசத்திற்கு அவர்கள் மிகவும் தகுதியானவர்கள் என்பதையும் அவர்களால் காண முடியும். இது தேவனுடைய மகிமையாகும். ஜனங்கள் தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு, அவருக்கு முன்பாக சரணடையும் மற்றும் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் நாள் வரும் போது, அவர்களுடைய வாய்ப்புகளையும் தலைவிதியையும் தேவனுடைய கைகளில் விட்டுவிடக்கூடிய நாள் வரும் போது, தேவனுடைய மகிமையின் இரண்டாம் பகுதி முழுவதுமாக அடையப்பட்டிருக்கும். அதாவது, நடைமுறை தேவனுடைய கிரியை முழுவதுமாக முடிந்ததும், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் அவரது கிரியை முடிவுக்கு வரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் பரிபூரணப்படுத்தப்படும்போது, தேவன் மகிமையை அடைந்திருப்பார். தேவன் தமது மகிமையின் இரண்டாம் பகுதியை கிழக்கிற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆனால் அது மனிதக் கண்ணுக்குத் தெரியவில்லை. தேவன் தமது கிரியையை கிழக்கிற்குக் கொண்டு வந்துள்ளார். அவர் ஏற்கனவே கிழக்குக்கு வந்துவிட்டார். இது தேவனுடைய மகிமையாகும். இன்று, அவருடைய கிரியை இன்னும் நிறைவடையவில்லை என்றாலும், தேவன் கிரியை செய்ய முடிவு செய்திருப்பதால், அது நிச்சயமாக நிறைவேறும். சீனாவில் இந்தக் கிரியையை நிறைவேற்றப் போவதாக தேவன் முடிவு செய்துள்ளார். உங்களைப் பரிபூரணப்படுத்த அவர் தீர்மானித்துள்ளார். ஆகவே, அவர் உங்களுக்கு எந்த வழியையும் கொடுக்கவில்லை—அவர் ஏற்கனவே உங்கள் இருதயங்களை ஜெயங்கொண்டிருக்கிறார், மற்றும் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீ தொடர்ந்து செயல்பட வேண்டும், தேவன் உங்களை ஆதாயம் செய்யும்போது, தேவன் மகிமை அடைகிறார். இன்று, தேவன் இன்னும் முழு மகிமையையும் அடையவில்லை, ஏனென்றால், நீங்கள் இன்னும் பரிபூரணமாக்கப்படவில்லை. உங்கள் இருதயங்கள் தேவனிடம் திரும்பியிருந்தாலும், உங்கள் மாம்சத்தில் இன்னும் பல பலவீனங்கள் உள்ளன, உங்களால் தேவனைத் திருப்திப்படுத்த இயலாது, தேவனுடைய சித்தத்தை உங்களால் கவனத்தில் கொள்ள முடியாது. உங்களை விட்டு விலக்கி வைக்க வேண்டிய பல எதிர்மறையான விஷயங்களை நீங்கள் இன்னும் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் பல சோதனைகள் மற்றும் சுத்திகரிப்புகளுக்கு உட்பட வேண்டும். அவ்விதத்தில் மட்டுமே உங்களுடைய ஜீவித மனநிலைகளால் மாற்றம் பெற முடியும் மற்றும் நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படவும் முடியும்.

முந்தைய: தேவனை நேசிப்பது மட்டுமே தேவனை உண்மையாக விசுவாசிப்பதாகும்

அடுத்த: தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக