ஜீவனுக்குள் பிரவேசித்தல் III

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 444

ஆவியானவர் பற்றிய விவரங்களை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்கிறார்? பரிசுத்த ஆவியானவர் மனுஷனுக்குள் எவ்வாறு கிரியை செய்கிறார்? சாத்தான் மனுஷனுக்குள் எவ்வாறு கிரியை செய்கிறான்? பொல்லாத ஆவிகள் மனுஷனுக்குள் எவ்வாறு கிரியை செய்கின்றன? வெளிப்படுத்துதல்கள் என்னவாக உள்ளன? உனக்கு ஏதேனும் சம்பவிக்கும்போது, அது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகின்றதா, மற்றும் நீ அதற்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது அதைப் புறக்கணிக்க வேண்டுமா? மக்களின் உண்மை நடைமுறையில், மக்கள் எவ்வித வேறுபாடுமின்றிப் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகின்றது என்று நம்புவதே மனிதனுடைய மனவிருப்பத்திலிருந்து உதிக்கிறது. சில விஷயங்கள் பொல்லாத ஆவிகளிடமிருந்து வருகின்றன, இருப்பினும் அவை பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வந்திருப்பதாக மக்கள் இன்னமும் நினைக்கின்றனர், மற்றும் சில வேளைகளில் பரிசுத்த ஆவியானவர் மக்களுக்கு உள்ளாக இருந்து வழிநடத்துகிறார், ஆயினும் உண்மையில் அந்த வழிகாட்டுதல் பரிசுத்த ஆவியின் அறிவூட்டுதலாக இருக்கின்ற போது, இப்படிப்பட்ட வழிகாட்டுதல் சாத்தானிடமிருந்து வருகின்றது என்று மக்கள் பயப்படுகிறார்கள், எனவே கீழ்ப்படியத் துணியாது இருக்கின்றனர். இவ்வாறாக, வேறுபடுத்துதலை ஒருவர் நடைமுறைப்படுத்தாவிட்டால், அவர் தமது நடைமுறை அனுபவத்தை அனுபவிக்க வழியெதுவும் இல்லை; வேறுபடுத்துதல் இல்லாமல், ஜீவனை ஆதாயப்படுத்த வழியெதுவும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கின்றார்? பொல்லாத ஆவிகள் எவ்வாறு கிரியை செய்கின்றன? மனிதனின் மனவிருப்பத்திலிருந்து வருகிறது என்ன? பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலிலும் அறிவூட்டுதலிலும் இருந்து பிறக்கிறது என்ன? மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மாதிரிகளை நீ புரிந்து கொண்டால், பின்பு உன் அன்றாட வாழ்க்கையிலும், உன் நடைமுறை அனுபவங்களின்போதும், உன் அறிவை வளர்த்துக் கொள்ளவும், வித்தியாசங்களை அறிந்துகொள்ளவும் முடியும்; நீ தேவனை அறிந்து கொள்வாய், உன்னால் சாத்தானைப் புரிந்துகொள்ளவும் அவனைப் பகுத்தறியவும் முடியும்; உன் கீழ்ப்படிதலிலோ அல்லது நாட்டத்திலோ நீ குழப்பமடைய மாட்டாய், மற்றும் உன் சிந்தனைகள் தெளிவான நிலையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குக் கீழ்ப்படிகிற ஒருவனாக நீ இருப்பாய்.

செயல்திறனுள்ள வழிகாட்டுதலும், நேர்மறையான அறிவூட்டுதலுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கின்றது. இது ஜனங்களைச் செயலற்றவர்களாக இருக்க அனுமதிக்கிறதில்லை. இது அவர்களுக்கு ஆறுதலைக் கொண்டுவருகிறது, அவர்களுக்கு விசுவாசத்தையும் மன உறுதியையும் தருகிறது, மற்றும் அவர்களை தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கு நாட அவர்களுக்கு உதவுகிறது. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது, ஜனங்கள் செயல்துடிப்புடன் பிரவேசிக்கக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள்; அவர்கள் செயலற்றவர்களாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டவர்களாகவோ இருப்பதில்லை, ஆனால் தங்கள் சுயமுயற்சியில் செயல்படுகின்றனர். பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறபோது, மக்கள் மகிழ்ச்சியாகவும் மனவிருப்பத்துடனும் இருக்கின்றனர், அவர்கள் கீழ்ப்படியும் மனவிருப்பத்துடனும் தங்களையே தாழ்த்துவதற்கு சந்தோஷத்துடனும் இருக்கின்றனர். அவர்கள் உள்ளாக வேதனையுடனும், நொறுங்கக்கூடியவர்களாகவும் இருந்தாலும், ஒத்துழைக்கத் தீர்மானம் கொண்டுள்ளனர். அவர்கள் சந்தோஷத்துடனே உபத்திரவப்படுகின்றார்கள், அவர்கள் கீழ்ப்படியக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள், மற்றும் மனிதனின் மனவிருப்பத்தினால் கறைப்படாதவர்களாயும், மனித சிந்தனையினால் கறைப்படாதவர்களாயும், மற்றும் உறுதியாகவே அவர்கள் மனித இச்சைகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றினால் கறைப்படாதவர்களாயும் இருக்கின்றனர். மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவிக்கும்போது, அவர்கள் விசேஷமாக உள்ளாகப் பரிசுத்தவான்களாய் இருக்கின்றனர். பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பவர்கள் தேவனுடைய அன்பை வெளிக்காட்டி வாழ்ந்து மற்றும் தங்கள் சகோதரர்களையும் சகோதரிகளையும் அன்புகூருகின்றார்கள்; தேவனைப் பிரியப்படுத்தும் விஷயங்களில் அவர்கள் பிரியமாயிருக்கின்றார்கள் மற்றும் தேவன் அருவருக்கிற விஷயங்களை அவர்களும் அருவருக்கின்றார்கள். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினால் தொடப்பட்டுள்ள மக்கள் சாதாரண மனிதத்தன்மையைப் பெற்றுள்ளனர், மற்றும் அவர்கள் சத்தியத்தை நிலையாக நாடித்தேடுகின்றார்கள் மற்றும் மனிதத்தன்மை உடையவர்களாய் இருக்கின்றார்கள். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் கிரியை செய்யும்போது, அவர்களின் நிலை மென்மேலும் மேன்மையாகிறது, மற்றும் அவர்களுடைய மனிதத்தன்மை மேலும் மேலும் சாதாரணமாகிறது, மற்றும் அவர்களின் சில ஒத்துழைப்புகள் மதியீனமானதாக இருந்தாலும், அவர்களின் நோக்கங்கள் சரியானவைகளாய் இருக்கின்றன, அவர்களின் பிரவேசம் நேர்மறையானதாக உள்ளது, அவர்கள் இடையூறுக்குக் காரணமாயிருக்க முயற்சி செய்வதில்லை, மற்றும் அவர்களுக்குள் கொடுங்குணம் எதுவும் இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை இயல்பானது மற்றும் உண்மையானது, பரிசுத்த ஆவியானவர் மனிதனின் இயல்பான வாழ்க்கைச் சட்டங்களின்படி மனிதனுக்குள் கிரியை செய்கிறார், மற்றும் சாதாரண ஜனங்களின் உண்மையான நாட்டத்திற்கு ஏற்ப அவர் ஜனங்களுக்கு அறிவூட்டுதலையும் வழிகாட்டுதலையும் செயல்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் மக்களிடையே கிரியை செய்யும்போது, சாதாரண மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்தி அறிவூட்டுகின்றார். அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு அவர் வழங்குகின்றார், மற்றும் அவர்கள் எதில் குறைவுபடுகின்றார்களோ அதிலும், அவர்களின் குறைவுகளின் படியேயும் அவர் நேர்மறையாக அவர்களை வழிநடத்தி அவர்களுக்கு அறிவூட்டுகின்றார். நிஜ வாழ்வில் மக்களுக்கு அறிவூட்டுவதும் வழிநடத்துவதுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக உள்ளது; அவர்கள் தங்களின் நிஜவாழ்வில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்தால் மாத்திரமே அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் காணக்கூடியவர்களாய் இருப்பார்கள். ஜனங்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில், ஒரு நேர்மறையான நிலையில் இருக்கின்றார்கள் என்றால், மற்றும் அவர்கள் ஆவிக்குரிய வகையில் ஒரு சாதாரண வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கின்றார்கள். அத்தகைய நிலையில், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்கும்போது, அவர்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் ஜெபிக்கும்போது, அவர்கள் ஏவப்படுகின்றார்கள்; அவர்கள் ஏதாவது சிலவற்றிற்கு எதிராக வரும்போது, அவர்கள் செயலற்றவர்களாக இருப்பதில்லை; விஷயங்கள் நடக்கும்போது, அவற்றில் அவர்கள் கற்றுக்கொள்ளும்படியாகத் தேவன் அவர்களிடத்தில் கேட்டுக்கொள்ளும் பாடங்களை அவ்விஷயங்களுக்குள் அவர்கள் காணக்கூடியவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் செயலற்றவர்களாகவோ அல்லது பலவீனமானவர்களாகவோ இருப்பதில்லை, அவர்கள் உண்மையான சிரமங்களைக் கொண்டிருந்தாலும், தேவனுடைய ஏற்பாடுகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிய அவர்கள் மனவிருப்பத்துடன் இருக்கின்றார்கள்.

பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினால் என்ன பலன்கள் கிடைக்கப்பெறுகின்றன? நீ மதியீனமாயிருக்கலாம், மற்றும் நீ பகுத்தறிவற்று இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், உன்னில் விசுவாசம் இருக்கும், மற்றும் நீ தேவனிடத்தில் போதிய அளவு அன்புகூர முடியாது என்று எப்பொழுதுமே உணருவாய். எவ்வளவு பெரிய கஷ்டங்கள் உன்முன் இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைக்க, நீ மனவிருப்பத்துடன் இருப்பாய். காரியங்கள் உனக்கு வாய்க்கும், அவை தேவனிடமிருந்து வருகின்றனவா அல்லது சாத்தானிடமிருந்து வருகின்றனவா என்பது உனக்குத் தெளிவாக தெரியாது, ஆனால் உன்னால் காத்திருக்க முடியும், மற்றும் நீ செயலற்றோ அல்லது கவனக்குறைவாகவோ இருக்க மாட்டாய். இது பரிசுத்த ஆவியானவரின் சாதாரணக் கிரியையாக இருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் உனக்குள்ளாகக் கிரியை செய்யும்போது, நீ இன்னும் உண்மையான சிரமங்களை எதிர்கொள்ளுகிறாய்: சில நேரங்களில் நீ கண்ணீர் சிந்துமளவிற்குக் கொண்டு வரப்படுவாய், மற்றும் சில நேரங்களில் நீ ஜெயங்கொள்ள இயலாத விஷயங்கள் இருக்கும், ஆனால் இவை யாவும் பரிசுத்த ஆவியானவரின் சாதாரணக் கிரியையின் ஒரு கட்டமாக மட்டுமே இருக்கின்றது. நீ அந்தச் சிரமங்களை ஜெயங்கொள்ளவில்லை என்றாலும், அந்த நேரத்தில் நீ பலவீனமாகவும், முறையீடுகள் நிறைந்தும் இருந்தபோதிலும், பின்னர் நீ முழு விசுவாசத்துடன் தேவனை இன்னமும் அன்புகூரக்கூடும். உன் செயலற்ற தன்மை, சாதாரண அனுபவங்களைப் பெறுவதிலிருந்து உன்னைத் தடைசெய்ய முடியாது, மற்றும் பிறர் என்ன சொல்கின்றார்கள், மற்றும் பிறர் உன்னை எவ்வாறு தாக்குகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இன்னும் தேவனை அன்புகூரக்கூடும். ஜெபத்தின்போது, நீ எப்பொழுதுமே, கடந்த காலத்தில் தேவனுக்கு அதிகமாய்க் கடன்பட்டிருந்ததாக உணருகிறாய், மற்றும் இதுபோன்ற விஷயங்களை மீண்டும் எதிர்கொள்ளும் போதெல்லாம் தேவனைத் திருப்திப்படுத்தவும், மாம்சத்தைக் கைவிடவும் நீ தீர்மானம் செய்கிறாய். பரிசுத்த ஆவியானவரின் கிரியை உனக்குள் இருக்கின்றது என்பதை இந்த பெலன் காண்பிக்கிறது. இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய இயல்பான நிலையாக உள்ளது.

சாத்தானிடமிருந்து வரும் கிரியை என்ன? சாத்தானிடமிருந்து வரும் கிரியையில், ஜனங்களுக்குள்ளாக இருக்கும் தரிசனங்கள் தெளிவற்றவை; ஜனங்கள் சாதாரண மனிதத்தன்மை அற்றவர்களாய் இருக்கின்றார்கள், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் தவறானவை, மற்றும் அவர்கள் தேவனை அன்புகூர விரும்பினாலும், அவர்களுக்குள்ளாக எப்போதும் குற்றச்சாட்டுகள் உள்ளன, மற்றும் இந்தக் குற்றச்சாட்டுகளும் எண்ணங்களும் அவர்களுக்குள் நிலையான குறுக்கீட்டிற்குக் காரணமாகின்றன, அவர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முரணாக நின்று, அவர்கள் சாதாரண நிலையில் தேவனுக்கு முன்பாக வருவதைத் தடுக்கின்றன. அதாவது, சாத்தானின் கிரியை ஜனங்களுக்குள் செய்யப்பட்டவுடன், அவர்களுடைய இருதயங்கள் தேவனுக்கு முன்பாக சமாதானத்துடன் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஜனங்கள் தங்களை என்ன செய்வதென்று அறியாதிருக்கின்றார்கள்—ஜனங்கள் ஒன்றுகூடுவதைக் காணும்போது, அவர்கள் புறம்பாக ஓடிப்போக விரும்புகின்றார்கள், மற்றும் பிறர் ஜெபிக்கும்போது அவர்கள் தங்கள் கண்களை மூட இயலாதவர்களாக இருக்கின்றார்கள். பொல்லாத ஆவிகளின் கிரியை மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான இயல்பான உறவைச் சேதப்படுத்துகிறது, மற்றும் ஜனங்களின் முந்தைய தரிசனங்களை அல்லது அவர்களின் முந்தைய வாழ்க்கைப் பிரவேசப் பாதையைச் சீர்குலைக்கிறது; அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் ஒருபோதும் தேவனிடத்தில் கிட்டிச்சேர இயலாது, மேலும் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அவர்களைத் திணற வைக்கும் விஷயங்கள் எப்போதும் நடக்கின்றன. அவர்களுடைய இருதயங்கள் சமாதானத்தைக் கண்டறிய இயலாது, மற்றும் தேவனிடத்தில் அன்புக்கூர எந்தப் பலமும் இன்றி மற்றும் அவர்களின் ஆவிகள் மூழ்கும்படி அவர்கள் விடப்படுகின்றார்கள். இப்படிப்பட்டவை சாத்தானின் கிரியையினுடைய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. சாத்தானின் கிரியையினுடைய வெளிப்பாடுகள்: உன்னுடைய தரையில் நின்று சாட்சியாக நிற்க முடியாதிருத்தல், நீ தேவனுக்கு முன்பாக தவறு செய்கிறவனாகவும், தேவனுக்கு உண்மையற்றவனாகவும் ஆகுதல். சாத்தான் தலையிடும்போது, உனக்குள்ளாக தேவனை நோக்கியிருக்கும் அன்பு மற்றும் பற்றுறுதியை நீ இழக்கின்றாய், தேவனுடனான சாதாரண உறவு அகற்றப்பட்டவனாகின்றாய், நீ சத்தியத்தையோ அல்லது உனது மேம்பாட்டையோ பின்தொடர்வதில்லை; நீ பின்வாங்குகின்றாய் மற்றும் செயலற்றவனாகின்றாய், நீ உன்னைச் சீராட்டுகின்றாய், பாவம் பரவுதலுக்கு இலவச ஆளுகையை நீ தருகின்றாய் மற்றும் பாவத்தைப் பற்றி வெறுப்பு நிறைந்து இருக்கிறதில்லை; மேலும், சாத்தானின் குறுக்கீடு உன்னைக் கரைக்கின்றது; இது உனக்குள் தேவனின் தொடுகை மறையக் காரணமாகிறது மற்றும் நீ தேவனைப்பற்றி குறைகூறவும் அவரை எதிர்க்கவும் வைத்து, தேவனிடத்தில் நீ கேள்வி கேட்கும்படி உன்னை வழிநடத்துகின்றது; நீ தேவனைக் கைவிட்டுவிடும் ஆபத்தும்கூட இருக்கின்றது. இவையாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 445

உன் அன்றாட வாழ்க்கையில் உனக்குச் சில விஷயங்கள் நடக்கும்போது, அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து வந்ததா அல்லது சாத்தானின் கிரியையிலிருந்து வந்ததா என்பதை நீ எவ்வாறு வேறுபடுத்த வேண்டும்? ஜனங்களின் நிலைமைகள் இயல்பானதாக இருக்கும்போது, அவர்களின் ஆவிக்குரிய வாழ்வும் அவர்களின் மாம்சப்பிரகாரமான வாழ்வும் இயல்பானவைகளாக இருக்கின்றன மற்றும் அவர்களின் பகுத்தறிவு இயல்பானதாயும் முறையானதாயும் இருக்கின்றது. அவர்கள் இந்த நிலையில் இருக்கும்போது, அவர்கள் அனுபவிப்பது மற்றும் தங்களுக்குள் தெரிந்துகொள்வது எவையோ அவை பொதுவாகப் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட்டிருத்தலில் இருந்து வந்ததாகக் கூறப்படமுடியும் (மனதினால் அறியும் திறன்கள் கொண்டிருத்தல் அல்லது தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் புசித்து மற்றும் குடிக்கும்போது சில எளிய அறிவு கொண்டிருத்தல், அல்லது சில விஷயங்களில் உண்மை நிறைந்தவர்களாயிருப்பது, அல்லது சில விஷயங்களில் தேவனை அன்புகூருவதற்குப் பலம் கொண்டிருப்பது—இவை யாவையும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகின்றன). மனுஷனுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை விசேஷமாகச் சாதாரணமானதாய் இருக்கின்றது; மனுஷன் அதை உணர முடியாமல் இருக்கிறான், அது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும், அது மனுஷன் மூலமாக வருவதாகவே தோன்றுகிறது. அன்றாட வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவர் பெரியதாகவும் சிறியதாகவும் ஒவ்வொருவருக்குள்ளாகவும் கிரியை செய்கிறார், மற்றும் இந்தக் கிரியையின் அளவு மட்டுமே மாறுபடுவதாக உள்ளது. ஜனங்களில் சிலர் நல்ல திறமையுடன் இருக்கின்றார்கள், அவர்கள் விஷயங்களை விரைவாக புரிந்துகொள்கின்றார்கள், பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதல் அவர்களுக்குள் விசேஷமாகப் பெரிதாயிருக்கின்றது. அதேவேளையில், சிலர் குறைவான திறமையுடன் இருக்கின்றார்கள், அவர்களுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகிறது, ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளாகத் தொடுகின்றார் மற்றும் அவர்களும்கூட தேவனுக்கு உண்மைத்தன்மையுடன் இருப்பதை அடையக்கூடியவர்கள் ஆகின்றனர்—தேவனைத் தேடுகின்ற எல்லாருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கின்றார். அன்றாட வாழ்க்கையில், மக்கள் தேவனை எதிர்க்காமல் அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய நிர்வாகத்திற்கு முரணான காரியங்களைச் செய்யாமல் இருக்கும்போது, மற்றும் தேவனுடைய கிரியையில் தலையிடாமல் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளாகவும் தேவனுடைய ஆவியானவர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிரியை செய்கின்றார்; அவர்களை அவர் தொட்டு, அவர்களுக்கு அறிவூட்டி, அவர்களுக்கு விசுவாசத்தைத் தருகின்றார், அவர்களுக்கு பெலன் தருகின்றார், சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் சந்தோஷங்களை இச்சிக்கின்றவர்களாகவோ இராமல், சத்தியத்தைக் கடைபிடிக்க மனவிருப்பம் கொண்டவர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளுக்காக ஏங்கியிருப்பவர்களாகவும் இருக்கும் நிலைக்குள் செயல்முனைப்புடன் பிரவேசிப்பதற்கு அவர்களை இயக்குகின்றார். இந்தக் கிரியை யாவையும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறது.

ஜனங்களின் நிலை சாதாரணமானதாக இல்லாதபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுகின்றார்கள்; அவர்களுடைய மனதில் அவர்கள் குறைகூறும் வாய்ப்புள்ளவர்களாய் இருக்கின்றனர், அவர்களுடைய நோக்கங்கள் தவறானவைகளாக இருக்கின்றன, அவர்கள் சோம்பேறிகளாக இருக்கின்றார்கள், அவர்கள் மாம்ச இச்சைக்கு இடம் கொடுக்கின்றார்கள், அவர்களுடைய இருதயங்கள் சத்தியத்திற்கு எதிராகக் கலகம் செய்கின்றன. இவை யாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன. ஜனங்களின் நிலைமைகள் சாதாரணமானவையாக இராதபோது, அவர்கள் உட்புறம் இருளாயிருக்கும்போது, மற்றும் அவர்கள் தங்களின் சாதாரண அறிவை இழந்திருக்கிறபோது, பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்பட்டு, தேவனைத் தங்களுக்குள் உணர முடியாதவர்களாய் இருக்கின்றனர், சாத்தான் அவர்களுக்குள் கிரியை செய்யும்போது, இதுதான் நடக்கின்றது. ஜனங்கள் எப்பொழுதுமே தங்களுக்குள் பலம் கொண்டவர்களாகவும், எப்பொழுதும் தேவனை அன்புகூருபவர்களாகவும் இருந்தால், பொதுவாக, அவர்களுக்கு காரியங்கள் நடக்கும்போது, அந்த காரியங்கள் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வருகின்றன, அவர்கள் யாரைச் சந்தித்தாலும், சந்திப்பு என்பது தேவனுடைய ஏற்பாடுகளின் விளைவாக உள்ளது. அதாவது நீ ஒரு சாதாரணமான நிலையில் இருக்கும்போது, நீ பரிசுத்த ஆவியானவரின் மாபெரும் கிரியைக்குள்ளாக இருக்கும்போது, சாத்தான் உன்னை அசைப்பது சாத்தியமில்லை. இதன் அடிப்படையில், எல்லாம் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வருகிறது என்று கூற முடியும், நீ தவறான எண்ணங்கள் கொண்டிருந்தாலும், உன்னால் அவற்றைத் துறக்க முடிகிறது, மற்றும் நீ அவற்றைப் பின்பற்றுவதில்லை. இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து வருகிறது. சாத்தான் தலையிடுகின்ற சூழ்நிலைகள் யாவை? உன் நிலைமைகள் இயல்பானவையாக இராதபோது, நீ தேவனால் தொடப்பட்டிராதபோது மற்றும் நீ தேவனுடைய கிரியை இல்லாமல் இருக்கும்போது, நீ உட்புறத்தில் வறண்டு, தரிசாக இருக்கும்போது, நீ தேவனிடத்தில் ஜெபித்து ஆனால் ஒன்றையும் பெற்றுக்கொள்ளாதபோது, மற்றும் நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தும் குடித்தும் அறிவூட்டப்பட்டிராதபோது அல்லது ஒளியூட்டப்பட்டிராதபோது, உனக்குள் கிரியை செய்வது சாத்தானுக்குச் சுலபமாய் இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நீ பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்பட்டு, நீ தேவனை உணர முடியாமல் இருக்கும்போது, சாத்தானின் சோதனையிலிருந்து வரும் பல விஷயங்கள் உனக்கு நடக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது போலவே, சாத்தானும் எல்லா நேரத்திலும் கிரியை செய்துகொண்டிருக்கின்றான். பரிசுத்த ஆவியானவர் மனிதனின் உட்புறத்தைத் தொடுகிறார், அதே நேரத்தில் சாத்தான் மனிதனுக்குள் தலையிடுகிறான். இருப்பினும், பரிசுத்த ஆவியானவரின் கிரியை தலையாய இடத்தைப் பிடிக்கின்றது, மற்றும் ஜனங்களில் சாதாரண நிலைமைகள் யாருக்கு உள்ளனவோ, அவர்கள் ஜெயங்கொள்ளக்கூடும்; இது சாத்தானின் கிரியையின்மீது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வெற்றியாக இருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கையில், ஜனங்களுக்குள் சீர்கேடான மனநிலை ஒன்று இன்னமும் நிலவுகின்றது. ஆயினும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின்போது, ஜனங்கள் தங்களுடைய கலகம்பண்ணும் தன்மை, நோக்கங்கள் மற்றும் ஒழுக்கக்கேடு ஆகியவற்றைக் கண்டறிதல் சுலபமாக இருக்கின்றது. அதன்பின்புதான் ஜனங்கள் வருத்தப்படுகின்றார்கள் மற்றும் மனந்திரும்புவதற்கான விருப்பத்தில் வளருகின்றார்கள். அவ்விதமாகவே, அவர்களின் கலகமான மற்றும் சீர்கேடான மனநிலைகள் தேவனுடைய கிரியைக்குள்ளிருந்து புறம்பே படிப்படியாகத் தள்ளப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியை விசேஷமாகச் சாதாரணமானதாக இருக்கின்றது; அவர் மக்களுக்குள்ளாகக் கிரியை செய்கையில், அவர்கள் இன்னமும் தொல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் இன்னும் அழுகின்றார்கள், அவர்கள் இன்னமும் பாடுகளை அனுபவிக்கின்றார்கள், அவர்கள் இன்னும் பலவீனமாக இருக்கின்றார்கள் மற்றும் அவர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் இந்த நிலையில் அவர்கள் பின்வாங்கிப்போகாமல் தங்களைத் தாங்களே தடுக்க முடிகிறது, மற்றும் அவர்களால் தேவனை அன்புகூர முடிகிறது, அவர்கள் அழுது துயரம் அடைந்திருந்தாலும், அவர்கள் இன்னும் தேவனைத் துதிக்ககூடியவர்களாக இருக்கின்றனர்; பரிசுத்த ஆவியானவரின் கிரியை விசேஷமாகச் சாதாரணமானதாக இருக்கின்றது, சிறிதளவு கூட இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. பரிசுத்த ஆவியானவர் கிரியைசெய்யத் தொடங்கியவுடன், ஜனங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன மற்றும் அவர்களுக்குக் கணிசமான விஷயங்கள் அகற்றப்படுகின்றன என்று ஜனங்களில் பெரும்பான்மையானவர்கள் நம்புகின்றார்கள். இத்தகைய நம்பிக்கைகள் தவறானவையாக இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் மனுஷனுக்குள்ளாகக் கிரியை செய்யும்போது, மனுஷனின் செயலற்ற விஷயங்கள் இன்னும் அவனுக்குள் இருக்கின்றன, அவனுடைய வளர்ச்சியும் அப்படியே இருக்கின்றது, ஆனால் அவன் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் ஒளியூட்டுதலையும் பெறுகின்றான், எனவே அவனது நிலை அதிகம் செயல்துடிப்பு உடையதாகின்றது, அவனுக்குள்ளாக இருக்கின்ற நிலைமைகள் சாதாரணமாகின்றன, மற்றும் அவன் விரைவாக மாற்றம் அடைகின்றான். ஜனங்களின் உண்மையான அனுபவங்களில், அவர்கள் முதன்மையாகப் பரிசுத்த ஆவியானவர் அல்லது சாத்தானின் கிரியையை அனுபவிக்கிறார்கள், மற்றும் அவர்களால் இந்த நிலைகளைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், பின்பு உண்மையான அனுபவங்களில் நுழைவது கேள்விக்குப் புறம்பானதாக இருக்கின்றது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் கூறுவதற்கில்லை. இப்படிப்பட்ட விஷயங்களின் மூலமாக காணக்கூடியவர்களாய் இருத்தலே தேவனுடைய் கிரியையை அனுபவிக்கும் திறவுகோலாக இருக்கின்றது; இவ்வாறு, இதை அனுபவித்தல் அவர்களுக்குச் சுலபமானதாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 446

பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை நேர்மறையான முன்னேற்றத்தை அடைய அனுமதிக்கிறது, அதேசமயம் சாத்தானின் கிரியையானது அவர்களை எதிர்மறையாகவும், பின்வாங்கவும், தேவனுக்கு விரோதமாக கலகம்பண்ணவும் எதிர்க்கவும், தேவன் மீதான விசுவாசத்தை இழக்கவும், தன் கடமையைச் செய்வதில் மிகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது. பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டலில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் இயற்கையானதாய் இருக்கின்றது; இது உன்மீது வலிந்து திணிக்கப்படுவதில்லை. நீ அதற்குக் கீழ்ப்படிந்தால், நீ சமாதானம் பெற்றிருப்பாய்; நீ அவ்வாறு செய்யாவிட்டால், பிற்பாடு நீ கடிந்துகொள்ளப்படுவாய். பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலுடன், நீ செய்யும் எதுவும் இடையூறு செய்யப்படவோ அல்லது கட்டாயப் படுத்தப்படவோ மாட்டாது; நீ விடுவிக்கப்படுவாய், உன் செயல்களில் பயிற்சி பெற ஒரு பாதை இருக்கும், மற்றும் நீ எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகமாட்டாய், ஆனால் தேவனுடைய சித்தத்தின்படி செயல்படக் கூடியவனாய் இருப்பாய். சாத்தானின் கிரியையானது நீ பல விஷயங்களில் குறுக்கிடக் காரணமாகின்றது; இது உன்னை ஜெபிக்க மனவிருப்பம் அற்றவனாக்குகிறது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் உன்னை மிகவும் சோம்பேறியாக்குகின்றது, மற்றும் சபை வாழ்வை வாழ மனவிருப்பம் அற்றவனாக்குகின்றது, மற்றும் ஆவிக்குரிய வாழ்விலிருந்து உன்னை அந்நியப்படுத்துகின்றது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை மற்றும் உன் சாதாரண ஆவிக்குரிய வாழ்வில் குறுக்கிடுவதில்லை. நீ பல விஷயங்களை அவை நிகழும் வேளையில் பகுத்தறிய இயலாதிருக்கின்றாய், ஆயினும் சில நாட்களுக்குப் பின்பு, உன் இருதயம் மிகுந்த பிரகாசமாகவும் உன் மனம் மிகுந்த தெளிவாகவும் ஆகின்றது. ஆவியானவரின் விஷயங்களைப் பற்றி நீ கொஞ்சம் உணர்ந்தறிதலைக் கொண்டிருக்கின்றாய், மற்றும் ஓர் எண்ணம் தேவனிடத்திலிருந்தா அல்லது சாத்தானிடத்திலிருந்தா, எவரிடமிருந்து வந்துள்ளது என்பதை நீ மெதுவாகப் பகுத்தறிய முடியும். உன்னைச் சில விஷயங்கள் தெளிவாகவே தேவனை எதிர்க்கவும் மற்றும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் வைக்கின்றன, அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிப்பதில் இருந்து உன்னைத் தடுக்கின்றன; இந்த விஷயங்கள் யாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன. சில விஷயங்கள் வெளிப்படையானவைகளாய் இருப்பதில்லை, மற்றும் அவை என்னவென்று இந்த நேரத்தில் உன்னால் சொல்ல முடியாது; பின்னர், நீ அவற்றின் வெளிப்பாடுகளைக் காணலாம், மற்றும் அதன்பின்னர் பகுத்துணருதலைச் செயல்படுத்தலாம். எந்த விஷயங்கள் சாத்தானிடமிருந்து வருகின்றன மற்றும் எவை பரிசுத்த ஆவியானவரால் ஆணையிடப்படுகின்றன என்பதை நீ தெளிவாகப் பகுத்துணர முடிந்தால், அதன்பின்பு நீ அவ்வளவு சுலபமாய் உன் அனுபவங்களில் வழிதவறிச் செல்லும்படி வழிநடத்தப்பட மாட்டாய். சில நேரங்களில், உன் நிலை நன்றாக இராதபோது, அதன்பின்பு நீ உன்னைச் செயல்துடிப்பற்ற நிலையில் இருந்து வெளியே கொண்டுவரும் குறிப்பிட்ட சிந்தனைகளைக் கொண்டிருப்பாய். உன் நிலை சாதகமற்றதாக இருக்கும்போது கூட, உன் சில எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வரக்கூடும் என்பதை இது காண்பிக்கிறது. நீ செயல்துடிப்பற்றவனாக இருக்கும்போது, உன் எண்ணங்கள் அனைத்தும் சாத்தானால் அனுப்பப்படுகின்றன; அது உண்மையாக இருந்தால், நீ எப்போது ஒரு நேர்மறையான நிலைக்கு மாற முடியும்? ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயல்துடிப்பற்ற நிலையில் இருந்ததால், உன்னைப் பரிபூரணப்படுத்தப் பரிசுத்த ஆவியானவர் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்; அவர் உன்னைத் தொடுகிறார் மற்றும் உன்னைச் செயலற்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டு வருகின்றார், மேலும் நீ ஒரு இயல்பான நிலைக்குள் நுழைகிறாய்.

பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்னவாக இருக்கின்றது மற்றும் சாத்தானின் கிரியை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதினால், நீ இவற்றை, உன் அனுபவங்களின் போது உன் சொந்த நிலையுடன் ஒப்பிடமுடியும், மற்றும் இந்த வழியில் உன் அனுபவங்களின் கொள்கையுடன் தொடர்புடைய இன்னும் அதிகமான பல சத்தியங்கள் இருக்கும். கொள்கையைப் பற்றிய இந்த சத்தியங்களை புரிந்துகொண்டதினால், நீ உனது உண்மை நிலையை வெற்றிகொள்ளக் கூடியவனாக இருப்பாய், ஜனங்கள் மற்றும் நிகழ்வுகளிடையே வேறுபடுத்திக் காணக்கூடியவனாக நீ இருப்பாய், மற்றும் நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்வதில் இவ்வளவு முயற்சியைச் செலவழிக்க வேண்டியதில்லை. நிச்சயமாக, இது உன் நோக்கங்கள் சரியாக இருப்பதற்கும், தேடுவதற்கும் பயிற்சி செய்வதற்குமான உன் விருப்பத்தைச் சார்ந்துள்ளது. இது போன்ற மொழி—கொள்கைகளுடன் தொடர்புடைய மொழி—உன் அனுபவங்களில் இடம்பெற வேண்டும். இது இல்லாமல், உன் அனுபவங்கள் சாத்தானின் குறுக்கீடு மற்றும் மதியீனமான அறிவு ஆகியவற்றினால் நிறைந்ததாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கின்றார் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனிடம் எப்படி ஜெபிப்பது அல்லது நீ எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பது உனக்குப் புரியவில்லை, சாத்தான் எவ்வாறு மக்களை வஞ்சிக்கவும் தடை செய்யவும் கிரியை செய்கின்றான் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றால், சாத்தானை நிராகரித்து உங்கள் சாட்சியில் உறுதியாக நிற்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகின்றார், சாத்தான் எவ்வாறு செயலாற்றுகின்றான் என்பவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும், மேலும், இவை தேவனிடத்தில் ஜனங்களுக்கு இருக்கும் விசுவாசத்தில் அனுபவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 447

இயல்பான மனிதத்தன்மை எந்தெந்த அம்சங்களை உள்ளடக்கியது? ஆழமான புரிதல், அறிவு, மனசாட்சி மற்றும் ஒழுக்கம். இந்த அம்சங்கள் ஒவ்வொன்றிலும் நீ சரியான நிலையை அடைந்தால், உனது மனிதத்தன்மை மேம்பாடடையும். நீ ஒரு சாதாரண மனிதனின் சாயலிலேயே இருக்க வேண்டும். நீ தேவனின் விசுவாசியை ஒத்திருக்க வேண்டும். நீ அளவுக்கதிகமாக எதையும் சாதிக்கவோ அல்லது இராஜதந்திரங்களில் ஈடுபடவோ வேண்டியதில்லை. நீ ஒரு சாதாரண மனிதனாக, சாதாரண மனிதனின் உணர்வோடு, எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கும் திறனோடு, ஓரளவுக்காவது ஒரு சாதாரண மனிதனாகவே இருக்க வேண்டும். அதுவே போதுமானதாக இருக்கும். இன்று உன்னிடம் கேட்கப்படும் ஒவ்வொன்றும் உன் திறன்களுக்குள்ளேயே இருக்கிறது; இது அமர்ந்திருக்கும் ஒரு வாத்தை “சூ” என்று சத்தமிட்டு விரட்ட முயல்வது போன்றதல்ல. பயனற்ற வார்த்தையோ பயனற்ற செயலோ உன் மீது செய்யப்படமாட்டாது. உன் வாழ்வில் வெளிப்படுத்தப்பட்ட அல்லது தெரிவிக்கப்பட்ட எல்லா வெறுக்கத்தக்க விஷயங்களும் கண்டிப்பாக விட்டொழிக்கப்பட வேண்டும், நீங்கள் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு சாத்தானின் விஷம் உங்களில் நிரம்பி வழிகிறது. உன்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவதெல்லாம், இந்தச் சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை விட்டுவிட வேண்டும் என்பதே ஆகும். நீ ஒரு உயர்ந்த மனிதனாகவோ, பிரபலமானவனாகவோ அல்லது சிறந்த மனிதனாகவோ திகழவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படவில்லை. அதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்குள் இயல்பாக என்ன உள்ளது என்பதையே உங்களுக்குள் செய்யப்படும் கிரியையானது கருத்தில் எடுத்துக்கொள்கிறது. நான் மக்களிடம் கேட்பது வரம்பிற்குள் வரையறுக்கப்பட்டுள்ளது. புத்திசாலிகள் பேசும் முறையையும் தொனியையும் நீங்கள் கடைப்பிடித்தால், இதைச் செய்யவே முடியாது; உங்களால் அதைச் செய்ய முடியாது. உங்களது திறனைக்கொண்டு குறைந்தபட்சம் நீங்கள் ஞானத்தோடும், சாதுரியத்தொடும் பேசுபவராகவும், தெளிவாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் எல்லாவற்றையும் விளக்கக் கூடியவராகவும் இருக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இவை தான் வேண்டும். குறைந்த பட்சம், நீங்கள் நுண்ணறிவையும் உணர்வையும் பெற்றால், அது போதும். நீங்கள் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை விட்டுவிடுவதே இப்போது மிகவும் அவசியமாகிறது. உன்னிடமிருந்து வெளிப்படும் அருவருக்கத்தக்க விஷயங்களை நீ கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும். இவற்றை நீ விட்டொழிக்காத பட்சத்தில் உன்னால் எப்படிச் சிறந்த ஆழமான புரிதலையும், சிறந்த அறிவையும் பற்றிப் பேச முடியும்? காலமாற்றத்தால் அநேக மக்களிடம் தாழ்மையோ, பொறுமையோ இல்லாமல் போய்விட்டது. அவர்களிடம் அன்போ, பரிசுத்த அலங்காரமோ கூட இல்லாமல் போகலாம். அத்தகைய மக்கள் எவ்வளவு அபத்தமானவர்கள்! அவர்களிடம் இயல்பான மனிதத்தன்மை சிறிதளவேனும் இருக்கிறதா? அவர்களால் சாட்சி கூற இயலுமா? அவர்கள் முற்றிலும் ஆழமான புரிதலோ அல்லது அறிவோ அற்றவர்கள். நிச்சயமாகவே, மக்களிடமிருக்கும் மாறுபட்ட, தவறான சில பழக்கங்களின் அம்சங்கள் நிச்சயமாகச் சரிசெய்யப்பட வேண்டும்; உதாரணமாக அவர்களுடைய முந்தைய வளைந்து கொடுக்காத ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அவர்களுடைய உணர்வற்ற மற்றும் மதிகெட்ட தோற்றம் என இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். மாற்றம் என்பது உன்னைப் பாழாக்கவோ அல்லது மாம்சத்தில் ஈடுபடவோ அனுமதிப்பது மற்றும் நீ விரும்பியதைச் சொல்வது என அர்த்தமல்ல. நீ தாறுமாறாக பேசக்கூடாது. ஒரு சாதாரண மனிதனின் பேச்சையும் நடத்தையையும் கொண்டிருப்பது என்றால் ஒத்திசைவாகப் பேசி, உங்களுக்குச் “சரி” என்று தோன்றும்போது “சரி” என்றும் “தவறு” என்று தோன்றும்போது “தவறு” என்றும் இயல்பாகக் கூறுவதாகும். உண்மைகளுக்கு ஒத்து சரியாகப் பேசுங்கள். ஏமாற்றாதே, பொய் சொல்லாதே. ஒரு சாதாரண மனிதனால் எந்த அளவுக்கு மனிநிலையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் உன்னால் சத்தியத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 448

மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது, உண்மையில், மனுஷனுக்குள் ஆழமாக இருக்கும் அனைத்தையும், அதாவது மனுஷனுக்கு சாத்தியமானதை நிறைவேற்றுவதாகும். அப்போதுதான் அவனது கடமை நிறைவேற்றப்படுகிறது. மனுஷனின் ஊழியத்தின் போது ஏற்படும் குறைபாடுகள் படிப்படியாக முற்போக்கான அனுபவம் மற்றும் அவனது நியாயத்தீர்ப்பின் செயல்முறை மூலம் குறைக்கப்படுகின்றன; அவை மனுஷனின் கடமைக்குத் தடையாகவோ அல்லது அதை பாதிக்கவோ இல்லை. தங்கள் ஊழியத்தில் குறைபாடுகள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தில் ஊழியம் செய்வதையோ அல்லது கீழ்ப்படிவதையோ நிறுத்திவிட்டு பின்வாங்குவோர், அனைவரையும் விட மிகவும் கோழைத்தனமானவர்கள் ஆவர். ஊழியத்தின் போது வெளிப்படுத்த வேண்டியதை ஜனங்கள் வெளிப்படுத்தவோ அல்லது அவர்களுக்கு இயல்பாகவே சாத்தியமானதை அடையவோ முடியாமல், அதற்குப் பதிலாக முட்டாள்தனமாக செயல்பட்டால், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்கு இருக்க வேண்டிய செயல்பாட்டை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் “பிரயோஜனமில்லாதவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்; அவர்கள் பயனற்றவர்கள் ஆவர். அத்தகையவர்களை எவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் என்று முறையாக அழைக்க முடியும்? அவர்கள் வெளியில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆனால் உள்ளே அழுகிப்போன சீர்கெட்ட குணம் கொண்ட ஜீவன்கள் அல்லவா? ஒரு மனுஷன் தன்னை தேவன் என்று அழைத்துக் கொண்டு, தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்தவோ, தேவனின் கிரியையைச் செய்யவோ, அல்லது தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ முடியாவிட்டால், அவன் சந்தேகத்திற்கு இடமின்றி தேவனே அல்ல. ஏனென்றால் அவனிடம் தேவனின் சாராம்சம் இல்லை, மேலும் தேவனால் இயல்பாகவே அடையக்கூடியதும் அவனுக்குள் இல்லை. மனுஷன் அவன் இயல்பாக அடையக்கூடியதை இழந்தால், அவனை இனி மனுஷனாகக் கருத முடியாது, மேலும் அவன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனாக இருக்கவோ அல்லது தேவனுக்கு முன்பாக வந்து அவருக்கு ஊழியம் செய்யவோ தகுதியற்றவன் ஆகிறான். மேலும், அவன் தேவனின் கிருபையைப் பெறவோ அல்லது தேவனால் கவனிக்கப்படவோ, பாதுகாக்கப்படவோ, பரிபூரணப்படுத்தப்படவோ தகுதியற்றவன் ஆகிறான். தேவனிடத்தில் விசுவாசத்தை இழந்த பலர் தேவனின் கிருபையையும் இழக்கிறார்கள். அவர்கள் செய்த தவறான செயல்களை அவர்கள் வெறுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், தேவனின் வழி தவறானது என்ற கருத்தை அவர்கள் வெட்கமின்றி பிரசங்கிக்கிறார்கள், மேலும், கலகக்காரர்கள் தேவன் இருப்பதையே மறுக்கிறார்கள். அத்தகைய கலகத்தனத்தைக் கொண்ட அத்தகைய ஜனங்கள் எவ்வாறு தேவனின் கிருபையை அனுபவிக்கும் உரிமையைப் பெறுவார்கள்? தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுக்கு எதிராக மிகுந்த கலகக்காரர்களாக இருக்கிறார்கள், மேலும் அவருக்குக் கடன்பட்டிருக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் முகந்திரும்பி, தேவன் தவறானவர் என்று கடுமையாகத் திட்டுகிறார்கள். அத்தகைய மனுஷன் பரிபூரணராக ஆவதற்கு எப்படித் தகுதியானவர்? இது புறம்பாக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கான முன்னோடி அல்லவா? தேவனுக்கு முன்பாகத் தங்கள் கடமையைச் செய்யாத ஜனங்கள் ஏற்கனவே மிகக் கொடூரமான குற்றங்களுக்கான குற்றவாளிகள் ஆவர், அந்தக் குற்றங்களுக்கு மரணம் கூட போதுமான தண்டனை அல்ல, ஆனாலும் தேவனுடன் வாக்குவாதம் செய்து அவருக்கு எதிராகத் தங்களை ஒப்பிட்டுக் கொள்ள அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்தகையவர்களைப் பரிபூரணமாக்குவதன் மதிப்புதான் என்ன? ஜனங்கள் தங்கள் கடமையை நிறைவேற்றத் தவறும்போது, அவர்கள் குற்ற உணர்ச்சியையும் கடமை தவறியதையும் உணர வேண்டும்; அவர்கள் தங்கள் பலவீனம் மற்றும் பயனற்ற தன்மை, தங்கள் கலகத்தன்மை மற்றும் சீர்கெட்டத் தன்மை ஆகியவற்றை வெறுக்க வேண்டும், மேலும், தங்கள் ஜீவனைத் தேவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தேவனை உண்மையாக நேசிக்கும் சிருஷ்டிப்புக்களாக இருப்பார்கள், அத்தகையவர்கள் மட்டுமே தேவனின் ஆசீர்வாதங்களையும் வாக்குத்தத்தங்களையும் அனுபவித்து, அவரால் பரிபூரணமாக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். உங்களில் பெரும்பாலோர் யார்? உங்களிடையே வாழும் தேவனை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்? நீங்கள் உங்கள் கடமைகளை அவருக்கு முன்பாக எவ்வாறு செய்தீர்கள்? உங்கள் சொந்த ஜீவிதத்தைப் பணயம் வைத்துக் கூட, நீங்கள் செய்ய அழைக்கப்பட்ட அனைத்தையும் செய்துள்ளீர்களா? நீங்கள் என்ன தியாகம் செய்தீர்கள்? நீங்கள் என்னிடமிருந்து அதிகம் பெறவில்லையா? உங்களால் பகுத்தறிய முடியுமா? நீங்கள் எனக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வாறு ஊழியம் செய்தீர்கள்? நான் உங்களுக்கு எவ்வளவு வழங்கியுள்ளேன், உங்களுக்காக என்னவெல்லாம் செய்துள்ளேன்? அவற்றையெல்லாம் நீங்கள் அளந்திருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் இதை நியாயந்தீர்த்து, உங்களுக்குள் இருக்கும் சிறிய மனசாட்சியுடன் இதை ஒப்பிட்டீர்களா? உங்கள் சொற்களும் செயல்களும் யாருக்குத் தகுதியானவை? உங்களுடைய இத்தகைய சிறிய தியாகம் நான் உங்களுக்கு வழங்கிய எல்லாவற்றிற்கும் ஈடானதா? எனக்கு வேறு வழியில்லாமல் முழு மனதுடன் உங்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன், ஆனாலும் நீங்கள் பொல்லாத நோக்கங்களைக் கொண்டிருக்கிறீர்கள், என்னை நோக்கி அரை மனதுடன் இருக்கிறீர்கள். அதுவே உங்கள் கடமையின் அளவு, உங்கள் ஒரே செயல்பாடு. அப்படித்தானே? ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் கடமையைச் செய்ய நீங்கள் முற்றிலும் தவறிவிட்டீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக எப்படிக் கருதுவது? நீங்கள் எதை வெளிப்படுத்துகிறீர்கள் மற்றும் எவ்வாறு ஜீவிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லையா? நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டீர்கள், ஆனால் நீங்கள் தேவனின் சகிப்புத்தன்மையையும் ஏராளமான கிருபையையும் பெற முற்படுகிறீர்கள். அத்தகைய கிருபை உங்களைப் போன்ற பயனற்றவர்களுக்காகவும், கீழ்த்தரமானவர்களுக்காகவும் தயாரிக்கப்படவில்லை, ஆனால் எதையும் கேட்காமல் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்யாதவர்களுக்காக தயாரிக்கப்பட்டவை. உங்களைப் போன்றவர்கள், உங்களைப்போன்ற பிரயோஜனமில்லாதவர்கள், பரலோகத்தின் கிருபையை அனுபவிக்க முற்றிலும் தகுதியற்றவர்கள். உங்கள் நாட்களில் கஷ்டங்களும் இடைவிடாத தண்டனையும் மட்டுமே இருக்கும்! உங்களால் என்னிடம் உண்மையாக இருக்க முடியாவிட்டால், உங்கள் விதி துன்பங்களில் ஒன்றாக இருக்கும். எனது வார்த்தைகளுக்கும், எனது கிரியைகளுக்கும் உங்களால் பொறுப்பேற்க முடியாவிட்டால், உங்கள் முடிவு தண்டனைகளில் ஒன்றாக இருக்கும். எல்லா கிருபை, ஆசீர்வாதங்கள் மற்றும் ராஜ்யத்தின் அற்புதமான ஜீவிதம் ஆகியவற்றிற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இதுதான் நீங்கள் சந்திக்கத் தக்க முடிவு மற்றும் உங்கள் சொந்த செய்கையின் விளைவும் ஆகும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 449

அறியாமை மற்றும் ஆணவம் உள்ளவர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்யமாட்டார்கள், அல்லது தங்கள் கடமையையும் செய்யமாட்டார்கள், ஆனாலும் அவர்கள் கேட்பதற்குத் தகுதியானவர்கள் போலக் கிருபைக்காகத் தங்கள் கைகளை நீட்டுகிறார்கள். அவர்கள் கேட்பதைப் பெறத் தவறினால், அவர்கள் எப்போதும் உண்மையில்லாதவர்களாக மாறுகிறார்கள். அத்தகையவர்களை எவ்வாறு நியாயமானவர்களாகக் கருத முடியும்? நீங்கள் மோசமான திறமை வாய்ந்தவர்கள் மற்றும் காரணமில்லாதவர்கள், நிர்வாகக் கிரியையின் போது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையை உங்களால் முற்றிலும் நிறைவேற்ற இயலாது. உங்கள் மதிப்பு ஏற்கனவே சரிந்துவிட்டது. உங்களுக்குக் கிருபை காட்டியதற்காக நீங்கள் எனக்குத் திருப்பிச் செலுத்தத் தவறியது ஏற்கனவே தீவிரமான கலகத்தின் செயலாக இருக்கிறது, இதுவே உங்களை கண்டிக்கவும், உங்கள் கோழைத்தனம், திறமையின்மை, கீழ்த்தரம் மற்றும் தகுதியற்ற தன்மையை நிரூபிக்கப் போதுமானது. உங்கள் கைகளை நீட்டிக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அதாவது என் கிரியைக்கு உங்களால் சிறிதளவு கூட உதவியாக இருக்க முடியவில்லை, விசுவாசமாக இருக்க முடியவில்லை மற்றும் எனக்குச் சாட்சி கொடுக்க முடியவில்லை என்பது உங்களது தவறான செயல்கள் மற்றும் தோல்விகள்தான். ஆனாலும் நீங்கள் என்னைத் தாக்குகிறீர்கள், என்னைப் பற்றிப் பொய்களைக் கூறுகிறீர்கள், மேலும் நான் அநீதியானவன் என்றும் குறை கூறுகிறீர்கள். இதுதான் உங்கள் விசுவாசமா? இதுதான் உங்கள் அன்பைக் குறிக்கிறதா? இதைத் தவிர வேறு என்ன கிரியையை உங்களால் செய்ய முடியும்? செய்யப்பட்டுள்ள அனைத்துக் கிரியைகளுக்கும் நீங்கள் எவ்வாறு பங்களித்திருக்கிறீர்கள்? எவ்வளவு செலவு செய்தீர்கள்? உங்களைக் குற்றம் சாட்டாததன் மூலம் நான் ஏற்கனவே மிகுந்த சகிப்புத்தன்மையைக் காட்டியிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் வெட்கமின்றி என்னிடம் சாக்குப்போக்கு கூறி என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குறை கூறுகிறீர்கள். உங்களிடம் மனுஷகுலத்தின் சிறிதளவு சுவடேனும் இருக்கிறதா? மனுஷனின் கடமை மனுஷனின் மனதாலும் அவனது கருத்துக்களாலும் களங்கப்படுத்தப்பட்டிருந்தாலும், நீ உன் கடமையைச் செய்து உனது விசுவாசத்தைக் காட்ட வேண்டும். மனுஷனின் கிரியையில் உள்ள அசுத்தங்கள் அவனது திறனுக்கான ஒரு பிரச்சினையாகும், அதேசமயம், மனுஷன் தனது கடமையைச் செய்யாவிட்டால், அது அவனுடைய கலகத்தனத்தைக் காட்டுகிறது. மனுஷனின் கடமைக்கும், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனா அல்லது சபிக்கப்பட்டவனா என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கடமை என்பது மனுஷன் நிறைவேற்ற வேண்டியது; அது அவனுக்குப் பரலோகம் கொடுத்த கிரியை, மேலும் அது பிரதியுபகாரம், நிபந்தனைகள் அல்லது காரணங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. அப்போதுதான் அவன் தனது கடமையைச் செய்கிறான். ஆசீர்வதிக்கப்படுவது என்பது, யாரோ ஒருவன் பரிபூரணனாகி, நியாயத்தீர்ப்பை அனுபவித்தபின் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறான் என்பதாகும். சபிக்கப்படுவது என்பது, ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்தபின்பும் ஒருவனின் மனநிலை மாறாதபோதும், அவன் பரிபூரணமாக்கப்படுவதை அனுபவிக்காமல் தண்டிக்கப்படும்போதும் வழங்கப்படுவது என்பதாகும். ஆனால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவோ அல்லது சபிக்கப்பட்டவர்களாகவோ இருந்தாலும், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷர் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும், அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும், அவர்களால் செய்ய முடிந்ததைச் செய்ய வேண்டும்; தேவனைப் பின்தொடரும் ஒருவன் செய்ய வேண்டிய குறைந்தபட்ச விஷயம் இது. நீ ஆசீர்வதிக்கப்படுவதற்காக மட்டுமே உன் கடமையைச் செய்யக்கூடாது, மேலும் சபிக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தில் நீ செயல்பட மறுக்கவும் கூடாது. இந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன்: மனுஷனுடைய கடமையின் செயல்திறன்தான் அவனது கடமையின் முக்கிய விஷயமாகும், அவனால் தனது கடமையைச் செய்ய இயலாது என்றால், இதுவே அவனது கலகத்தன்மையாகும். தனது கடமையைச் செய்யும் செயல்முறையின் மூலம்தான் மனுஷன் படிப்படியாக மாற்றப்படுகிறான், மேலும் இந்த செயல்முறையின் மூலம்தான் அவன் தன் விசுவாசத்தை நிரூபிக்கிறான். எனவே, நீ எவ்வளவு அதிகமாக உன் கடமையை செய்கிறாயோ, அவ்வளவு சத்தியத்தை நீ பெறுவாய், மேலும் உன் வெளிப்பாடும் மிகவும் உண்மையானதாகிவிடும். தங்கள் கடமையைச் செய்வதில் வெறுமென சிரத்தையின்றி இருப்பவர்களும், சத்தியத்தைத் தேடாதவர்களும் இறுதியில் புறம்பாக்கப்படுவார்கள், ஏனென்றால் அத்தகையவர்கள் சத்தியத்தின் நடைமுறையில் தங்கள் கடமையைச் செய்ய மாட்டார்கள், தங்கள் கடமையை நிறைவேற்றுவதிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்கள் மாறாமல் இருப்பவர்கள், அதனால் சபிக்கப்படுவார்கள். அவர்களின் வெளிப்பாடுகள் தூய்மையற்றவை மட்டுமல்ல, அவர்கள் வெளிப்படுத்தும் அனைத்தும் பொல்லாதவையும் கூட.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 450

தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவு உனக்கு இல்லையென்றால் நீ தேவனோடு எப்படி ஒத்துழைக்க வேண்டும் என்று அறியமாட்டாய். தேவனுடைய கிரியையைப் பற்றி கொள்கைகளை நீ அறியாமல் இருந்து மற்றும் சாத்தான் எப்படி மனுஷனில் கிரியை செய்வான் என்பதைத் தெரியாமல் இருந்தால், நீ கைக்கொண்டு நடப்பதற்கு எந்தப் பாதையும் இருக்காது. வைராக்கியமான நாட்டம் மட்டுமே தேவனால் கேட்கப்பட்ட முடிவுகளை அடைய உன்னை அனுமதிக்காது. இதுபோன்ற அனுபவத்தின் வழி லாரன்ஸுடன் ஒத்திருக்கிறது: ஏதாகிலும் வித்தியாசத்தைச் செய்யாமல், அனுபவத்தின் மேல் மட்டுமே கவனம் செலுத்தி, சாத்தானின் கிரியை என்ன, பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்ன, தேவனுடைய பிரசன்னம் இல்லாமல் மனுஷனுடைய நிலை என்ன, மற்றும் எந்த வகையான ஜனங்களைத் தேவன் பரிபூரணப்படுத்த விரும்புகிறார் என்பதை முற்றிலும் அறியாமல் இருக்கிறார்கள். வேறுபட்ட ஜனங்ககளைக் கையாழும்போது எந்த கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டும், தற்காலத்தில் தேவனுடைய சித்தத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும், தேவனுடைய மனநிலையை எப்படி அறிய வேண்டும், மேலும் தேவனுடைய இரக்கம், மகத்துவம், நீதி எந்த ஜனங்கள் மேல், சூழ்நிலைகளில், மற்றும் காலத்தில் இயங்கும் என்பதைப் பற்றி அவனுக்கு எந்தப் பகுத்தறிவும் இல்லை. ஜனங்கள் தங்களுடைய அனுபவங்களுக்கு ஓர் அஸ்திபாரமாக பன்மடங்கான தரிசனங்களைக் கொண்டிருக்கவில்லையென்றால், பிறகு வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது, மேலும் அதே அனுபவத்தையே இன்னும் அதிகமாக அனுபவிக்கிறார்கள்; அவர்கள் கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு முட்டாள்தனமாகத் தொடரலாம். இத்தகைய ஜனங்களை பரிபூரணப்படுத்துவது மிகவும் கடினம். மேலே சொல்லப்பட்ட எந்தத் தரிசனங்களும் உன்னிடம் இல்லையென்றால், நீ ஒரு மதிகெட்டவன் என்பதற்கும் நீ இஸ்ரவேலில் எப்போதும் நிற்கும் உப்பு தூணைப் போல் இருக்கிறாய் என்பதற்கும் இதுவே போதிய ஆதாரம் என்று கூறலாம். இதைப்போன்ற ஜனங்கள் உபயோகமற்றவர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள்! சில ஜனங்கள் எப்போதும் கண்மூடித்தனமாக மட்டுமே கீழ்ப்படிகிறார்கள், அவர்களுக்குத் தங்களை எப்போதும் தெரியும், புதிய விஷயங்களைக் கையாளும்போது தங்களை நடத்துவதற்கு அவர்களின் சுய வழிகளை உபயோகிக்கிறார்கள் அல்லது குறிப்பிடுவதற்குத் தகுதியற்ற அற்பமான விஷயங்களைக் கையாளுவதற்கு “ஞானத்தை” உபயோகிக்கிறார்கள். இதைப்போன்ற ஜனங்கள் பகுத்தறிவில்லாதவர்கள், கொடுமைப்படுத்தப்படுவதற்கு தங்களைக் கைவிடுவது அவர்களின் சுபாவமாயிருக்கிறது, மேலும் அவர்கள் எப்போதும் அப்படியே இருக்கிறார்கள்; அவர்கள் ஒருபோதும் மாறமாட்டார்கள். இதுபோன்ற ஜனங்கள் சிறிதளவு பகுத்தறிவு கூட இல்லாத முட்டாள்களாக இருக்கிறார்கள். சூழ்நிலைகளுக்கு அல்லது வேறுபட்ட ஜனங்களுக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க அவர்கள் என்றுமே முயற்சி செய்வதில்லை. இத்தகைய ஜனங்களுக்கு அனுபவம் இல்லை. நான் சில ஜனங்களைப் பார்த்திருக்கிறேன், இவர்கள் தங்களுடைய அறிவுக்குள் கட்டுண்டிருக்கிறார்கள், பொல்லாத ஆவிகளின் கிரியையால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிற ஜனங்களை எதிர்கொள்ளும்போது, எழுந்து நின்று அவர்களைக் கடிந்துகொள்ளத் துணியாமல் அவர்கள் தங்களுடைய தலைகளைத் தாழ்த்தி தங்கள் பாவங்களை அறிக்கையிடுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் தெளிவான கிரியையை எதிர்கொள்ளும்போது, அவர்கள் கீழ்ப்படிவதற்குத் துணிவதில்லை. பொல்லாத ஆவிகளும் தேவனுடைய கரங்களில் இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள், மேலும் எழுந்து நின்று அதை எதிர்ப்பதற்கு சிறிதளவு கூட தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஜனங்கள் தேவனுக்கு அவமானத்தைத் தருகிறார்கள், மேலும் கனமான ஒரு சுமையை அவருக்காகத் தாங்குவதற்கு முற்றிலும் இயலாதவர்களாக இருக்கிறார்கள். இதைப்போன்ற மூடர்கள் எந்த விதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆகையால், இது போன்ற அனுபவத்தின் வழியை நீக்க வேண்டும் ஏனென்றால் தேவனுடைய கண்களுக்கு அது ஏற்றுக்கொள்ளத்தகாததாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அனுபவம் பற்றியவை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 451

தற்போதைய காலகட்டத்தில், தேவனை உண்மையாக நேசிக்கும் அனைவரும் அவரால் பரிபூரணப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் வாலிபர்களாக இருந்தாலும், வயதானவர்களாக இருந்தாலும், தேவனுக்குக் கீழ்ப்படிதலை தங்கள் இருதயங்களில் வைத்து அவரைப் போற்றும் வரை, அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட முடியும். தேவன் மக்களின் வெவ்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்ப அவர்களைப் பரிபூரணப்படுத்துகிறார். நீ உன் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்டிந்து நடக்கும் வரை, நீ அவரால் பரிபூரணப்படுத்தப்படுவாய். தற்போதைய நிலையில், நீங்கள் யாருமே பரிபூரணமானவர்கள் அல்ல. சில நேரங்களில் நீங்கள் ஒருவகைச் செயல்பாட்டைச் செய்யும் திறனுள்ளவர்களாக இருக்கிறீர்கள், மற்ற நேரங்களில் நீங்கள் இருவகை செயல்பாடுகளைச் செய்யும் திறனுள்ளவர்களாக இருக்கிறீர்கள். தேவனுக்காக எந்தளவுக்கு உங்களையே நீங்கள் செலவழிக்க முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் அவரால் பரிபூரணமடைவீர்கள்.

வாலிபர்கள் வாழ்வதற்கு சில தத்துவங்கள் இருக்கின்றன, அவர்கள் ஞானத்திலும் நுண்ணறிவிலும் குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் ஞானத்தையும் நுண்ணறிவையும் பரிபூரணப்படுத்தவே தேவன்வருகிறார். அவருடைய வார்த்தை அவர்களுடைய குறைபாடுகளைச் சரிசெய்கிறது. இருப்பினும், வாலிபர்களின் மனநிலைகள் நிலையற்றதாக இருப்பதால், அவை தேவனால் மறுரூபப்படுத்தப்பட வேண்டும். வாலிபர்களுக்கு மதக் கருத்துக்களும், வாழ்வதற்கான தத்துவங்களும் குறைந்தளவில்தான் உள்ளன; அவர்கள் எல்லாவற்றையும் எளிமையான அர்த்தங்களில் சிந்திக்கிறார்கள், அவர்களுடைய பிரதிபலிப்புகள் சிக்கலானவை அல்ல. இது இன்னும் வடிவம் பெறாத அவர்களது மனிதத்தன்மையின் ஒரு பகுதியாக இருக்கிறது, இது பாராட்டத்தக்கதாகும்; இருப்பினும், வாலிபர்கள் அறியாதவர்களாகவும், ஞானத்தில் குறைவுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். இது தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. தேவனால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட இருப்பது உங்களுக்கு விவேகத்தை வளர்க்க உதவும். ஆவிக்குரிய பல விஷயங்களை உங்களால் தெளிவாகப் புரிந்துகொண்டு, படிப்படியாக தேவனால் பயன்படுத்தக்கூடிய தகுதியான ஒருவராக மாறுவீர்கள். மூத்த சகோதர சகோதரிகளும் அவர்களால் செயல்படுத்தக் கூடிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளனர், அவர்கள் தேவனால் கைவிடப்படுவதில்லை. மூத்த சகோதர சகோதரிகளும் விரும்பத்தக்க மற்றும் விரும்பத்தகாத அம்சங்களைக் கொண்டுள்ளனர். வாழ்வதற்கான தத்துவங்களும், மதக் கருத்துக்களும் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளன. அவர்களுடைய செயல்களில், பல கடுமையான மரபுகளை கடைபிடிக்கின்றனர், இயந்திரத்தனமாகவும் நெகிழ்வுத்தன்மை இன்றியும் பொருந்தும் விதிமுறைகளை விரும்புகின்றனர். இது ஒரு விரும்பத்தகாத அம்சமாகும். இருப்பினும், இந்த மூத்த சகோதர சகோதரிகள் எது நடந்தாலும் அமைதியாகவும் உறுதியுடனும் இருக்கிறார்கள்; அவர்களது மனநிலைகள் நிலையானவை, மேலும் அவர்கள் கொந்தளிப்பான மனநிலைகளைக் கொண்டிருக்கவில்லை. விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் வேண்டுமானால் அவர்கள் தாமதமாக இருக்கலாம், ஆனால் இது ஒரு பெரிய தவறு அல்ல. நீங்கள் உங்களை தேவனிடம் சமர்ப்பிக்கும் வரை; தேவனின் தற்போதைய வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்காமல் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை; நீங்கள் உங்களை அவரிடம் சரணடைய மற்றும் அவரைப் பின்பற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்தும் வரை, தேவனுடைய வார்த்தைகளின்மேல் ஒருபோதும் தீர்ப்பை வழங்காமல் அல்லது அவற்றைப் பற்றிய பிற தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளாத வரை; நீங்கள் அவருடைய வார்த்தைகளை ஏற்று அதன்படி நடந்துகொள்ளும் வரை—என இவ்வாறான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், நீங்கள் பரிபூரணராக முடியும்.

நீங்கள் ஒரு வாலிபரோ அல்லது மூத்த சகோதரனோ அல்லது சகோதரியோ, நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான செயல்பாடு உங்களுக்குத் தெரியும். வாலிபப்பிராயத்தில் இருப்பவர்கள் ஆணவம் கொண்டவர்களும் அல்ல; வயதானவர்கள் செயலற்றவர்களோ அல்லது பின்வாங்குபவர்களோ அல்ல. மேலும், அவர்களால் தங்கள் பலவீனங்களை ஈடுசெய்ய ஒருவருக்கொருவர் பலத்தைப் பயன்படுத்த முடிகிறது, மேலும் அவர்களால் எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் சேவை செய்யவும் முடியும். வாலிப மற்றும் மூத்த சகோதர சகோதரிகளுக்கிடையில் நட்புப் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது, மேலும்தேவனுடைய அன்பின் நிமித்தமாக, உங்களால் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. வாலிப சகோதர சகோதரிகள் மூத்த சகோதர சகோதரிகளை இழிவாகப் பார்ப்பதும் இல்லை, மூத்த சகோதர சகோதரிகள் சுயநீதியுள்ளவர்களும் இல்லை: இது ஓர் இணக்கமான கூட்டு அல்லவா? உங்கள் அனைவருக்கும் அத்தகைய தீர்மானம் இருந்தால், உங்கள் தலைமுறையில் தேவனின் சித்தம் நிச்சயமாக நிறைவேறும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 452

எதிர்காலத்தில், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களா அல்லது சபிக்கப்பட்டவர்களாக இருப்பீர்களா என்பது இன்றைய உங்களுடைய செயல்கள் மற்றும் நடத்தை அடிப்படையில் தீர்மானிக்கப்படும். தேவனால் நீங்கள் பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்றால், அது இப்போதே இந்த சகாப்தத்திலேயே நடக்க வேண்டும்; எதிர்காலத்தில் மற்றொரு வாய்ப்பு இருக்காது. தேவன் உண்மையிலேயே உங்களை இப்போது பரிபூரணப்படுத்த விரும்புகிறார், இது வெறும் பேச்சுக்காக இல்லை. எதிர்காலத்தில், உங்களுக்கு என்ன சோதனைகள் ஏற்படவிருந்தாலும், என்ன நிகழ்வுகள் நடக்கவிருந்தாலும், அல்லது நீங்கள் என்ன பேரழிவுகளை எதிர்கொள்ளவிருந்தாலும், தேவன் உங்களை பரிபூரணப்படுத்த விரும்புகிறார்; இது ஒரு திட்டவட்டமான மற்றும் மறுக்க முடியாத உண்மை. இதை எங்கே காண முடியும்? தேவனுடைய வார்த்தை, யுகங்கள் மற்றும் தலைமுறைகள் கடந்து, இன்று இருப்பதைப் போல முன்பு ஒரு பெரிய உயரத்தை எட்டியிருக்கவில்லை என்ற உண்மையில் காணலாம். இது மிக உயர்ந்த சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்துள்ளது, மனிதகுலம் அனைத்திலும் இன்றளவில் இருக்கும் பரிசுத்த ஆவியின் செயல்பாடு இதற்கு முன் நடக்காதவையாக இருக்கிறது. கடந்த தலைமுறைகளைச் சேர்ந்த எவருக்கும் இதுபோன்ற அனுபவம் இல்லை; இயேசுவின் காலத்தில் கூட இன்றைய வெளிப்பாடுகள் இருக்கவில்லை. உங்களிடத்தில் பேசப்பட்ட வார்த்தைகள், அவற்றிலிருந்து நீங்கள் புரிந்துகொண்டது மற்றும் உங்கள் அனுபவம் என அனைத்தும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சோதனைகள் மற்றும் சிட்சைகளுக்கு மத்தியிலும் கூட நீங்கள் வெளியேறுவதில்லை. இதுவே தேவனுடைய செயலானது முன்னெப்போதும் இல்லாத ஒரு பிரகாசத்தை அடைந்துள்ளது என்பதற்குப் போதுமான சான்று. இது மனிதனால் செய்யக்கூடிய ஒன்று அல்ல, மனிதன் பராமரிக்கப்படும் ஒன்றும் அல்ல; மாறாக, இது தேவனுடைய வேலையாயிருக்கிறது. ஆகவே, தேவனுடைய கிரியையின் பல யதார்த்தங்களிலிருந்து, அவர் மனிதனை பரிபூரணப்படுத்த விரும்புகிறார் என்பதைக் காணலாம், மேலும் அவர் உங்களை நிச்சயமாக முழுமையாக்குவார். நீங்கள் இந்த நுண்ணறிவைக் கொண்டு, இந்தப் புதிய கண்டுபிடிப்பைச் செய்தால், இயேசுவின் இரண்டாவது வருகைக்காக நீங்கள் காத்திருக்க மாட்டீர்கள்; அதற்குப் பதிலாக, தற்போதைய யுகத்திலேயே உங்களை முழுமையாக்க தேவனை அனுமதிப்பீர்கள். ஆகையால், நீங்கள் ஒவ்வொருவரும் எந்த முயற்சியையும் விட்டுவிடாமல், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நீங்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படலாம்.

இப்போது, எதிர்மறையான விஷயங்களுக்கு நீங்கள் கவலைப்படக்கூடாது. முதலில், உன்னை எதிர்மறையாக உணர வைக்கக் கூடிய எதையும் ஒதுக்கி வைத்துப் புறக்கணிக்க வேண்டும். நீ விவகாரங்களைக் கையாளும் போது, தேவனிடம் சரணடையும் இதயத்துடனும், முன்னோக்கிய பாதையை தேடும் மற்றும் உணரும் இதயத்துடனும் அவ்வாறு செய்யவும். நீங்கள் உங்களுக்குள் ஒரு பலவீனத்தைக் கண்டறியும் போதெல்லாம், அது உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள், அது இருந்தபோதிலும், நீங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளைச் செய்யுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு சாதகமான முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். உதாரணமாக, உன்னுடைய மூத்த சகோதர சகோதரிகள் மதக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் உன்னால் தேவனிடத்தில் ஜெபிக்கவும், அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கவும், தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும், பானம்பண்ணவும், பாடல்களைப் பாடவும் முடிகிறது…. இதன் மூலம் நீ அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உன்னால் என்ன செய்ய முடியுமோ, எந்தச் செயல்பாடுகளை உன்னால் செய்ய முடியுமோ அதற்காக உன்னால் முடிந்தளவுக்கு அனைத்து வலிமையையும் ஒன்றுதிரட்டி உன்னையே நீ அர்ப்பணிக்க வேண்டும் என்பதாகும். செயலற்ற முறையில் காத்திருக்க வேண்டாம். உன்னுடைய கடமையின் செயல்பாட்டில் தொடர்ந்து தேவனை திருப்திப்படுத்துவதே உனது முதல் படியாகும். பின்னர், உன்னால் சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடிந்து, தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழைய முடிந்தால், நீ அவரால் பரிபூரணப்படுத்தப்பட்டிருபாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒவ்வொருவரும் அவர்களுடைய செயல்பாட்டைச் செயல்படுத்துதல் மேல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 453

தேவனுக்கு ஊழியஞ்செய்ய தீர்மானித்த ஒவ்வொருவரும் ஊழியம் செய்ய முடியும்—ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் தேவனின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, தேவனுடைய சித்தத்தை புரிந்துகொள்பவர்கள் மட்டுமே தேவனுக்கு ஊழியஞ்செய்ய தகுதியுடையவர்களும், உரிமையுடையவர்களுமாவார்கள். அநேக ஜனங்களும் தாங்கள் ஆர்வத்துடன் தேவனுக்காகச் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும் வரையிலும், தேவனுக்காகப் பயணித்து, தங்களையே பயன்படுத்தி, தேவனுக்காகக் காரியங்களை விட்டுவிடுவது, மற்றும் பலவும், தேவனுக்கு ஊழியஞ்செய்வது என்று நம்புகிறதை நான் உங்களிடையே கண்டுபிடித்தேன். மதம்சார்ந்த பல ஜனங்கள் கூட, தங்கள் கைகளில் ஒரு வேதாகமத்தை வைத்துக்கொண்டு பரபரப்பாய்ச் சுற்றுவதும், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்புவதும், மற்றும் ஜனங்களை மனந்திரும்பவும் அறிக்கையிடவும் செய்து அவர்களை இரட்சிப்படையச் செய்வதும் தேவனுக்கு ஊழியஞ்செய்வது என்று நம்புகிறார்கள். இறையியல் கல்லூரிகளில் மேற்படிப்பையும் பயிற்சியையும் தொடர்ந்து, தேவாலயங்களில் பிரசங்கிப்பதும், வேதவாக்கியங்களை வாசிப்பதின் வாயிலாக ஜனங்களுக்குப் போதிப்பதும் தேவனுக்கு ஊழியம் செய்வதில் அடங்கும் என்று பல மத அதிகாரிகள் நினைக்கின்றனர். மேலும், தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவதும், தங்கள் சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் இருந்து பிசாசுகளை விரட்டுவதும் அல்லது அவர்களுக்காக ஜெபிப்பதும் அல்லது அவர்களுக்கு சேவை செய்வதும் என்று நம்பும் ஜனங்கள் ஏழ்மையான பகுதிகளில் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது தேவனுடைய வார்த்தைகளை உண்பது குடிப்பது, ஒவ்வொரு நாளும் தேவனிடம் ஜெபிப்பது, அத்துடன் எவ்விடத்திலுமுள்ள சபைகளுக்குச் சென்று அங்கு வேலை செய்வது என்று நம்பும் பலர் உங்கள் மத்தியில் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது அல்லது ஒரு குடும்பத்தைக் கட்டுவது மற்றும் தங்களின் முழுமையையும் தேவனுக்கு அர்ப்பணிப்பது என்று நம்புகிற மற்ற சகோதர சகோதரிகளும் உள்ளனர். இருப்பினும், தேவனுக்கு ஊழியஞ்செய்வதின் உண்மையான அர்த்தம் ஒரு சில ஜனங்களுக்குத் தெரியும். வானத்து நட்சத்திரங்கள் பல இருப்பதைப்போல தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அநேகர் இருந்தாலும், நேரடியாக ஊழியம் செய்யக்கூடிய மற்றும் தேவனுடைய சித்தத்திற்கிணங்க ஊழியம் செய்யக்கூடியவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமே. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? “தேவனுக்குச் செய்யும் ஊழியம்” என்கிற சொற்றொடரின் சாராம்சத்தை நீங்கள் புரிந்து கொள்ளாததினாலும், தேவனுடைய சித்தத்தின்படி ஊழியம் செய்வது எப்படி என்பதைக் குறித்து நீங்கள் மிகக்குறைவாகப் புரிந்திருப்பதாலும் நான் இதைச் சொல்கிறேன். எவ்வகையான ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கி இருக்கும் என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஜனங்களுக்கு உள்ளது.

நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய விரும்பினால், எவ்வகையான ஜனங்கள் தேவனுக்குப் பிரியம், எவ்வகையான ஜனங்களை தேவன் வெறுக்கிறார், எவ்வகையான ஜனங்கள் தேவனால் பூரணமாக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் எவ்வகையான ஜனங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியானவர்கள் என்பதை நீங்கள் முதலில் புரிந்துவைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த அறிவை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். மேலும், தேவனுடைய கிரியையின் நோக்கங்களையும், அவர் இப்பொழுது இங்கே செய்யவிருக்கும் கிரியையையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்ட பிறகு, தேவவார்த்தைகளின் வழிநடத்துதலின் மூலம், நீங்கள் முதலில் பிரவேசத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தேவனுடைய கட்டளையை முதலில் பெற்றிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தை நீங்கள் பெற்று, தேவனுடைய கிரியையை நீங்கள் உண்மையாக அறிந்தவுடன், நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியடைவீர்கள். நீங்கள் அவருக்கு ஊழியஞ்செய்யும் போதுதான், தேவன் உங்களின் ஆவிக்குரிய கண்களைத் திறந்து, அவருடைய கிரியையைப் பற்றிய அதிக புரிதலைப் பெறவும், அதை இன்னும் தெளிவாகக் காணவும் உங்களை அனுமதிக்கிறார். நீ இந்த உண்மை நிலைக்குள் நுழையும்போது, உன் அனுபவங்கள் மிகவும் ஆழமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும், மேலும் உங்களில் இப்படிப்பட்ட அனுபவங்களைப் பெற்ற அனைவரும் சபைகள் மத்தியில் கடந்து போகவும், சகோதர சகோதரிகளுக்குத் தேவைகளை வழங்கவும், இதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்தக் குறைபாடுகளை ஈடுகட்ட ஒருவர் இன்னொருவரின் பெலனைப் பெற்றுக்கொள்ளவும், மேலும் உங்கள் ஆவிகளில் வளமான அறிவைப் பெறவும் முடியும். இந்த விளைவை அடைந்த பின்னரே உங்களால் தேவசித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்யவும், உங்கள் ஊழியத்தின் பாதையில் தேவனால் பூரணமாக்கப்படவும் இயலும்.

தேவனுக்கு ஊழியஞ்செய்பவர்கள் அவருக்கு நெருங்கியவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும், தேவனுக்கு மிகுந்த உண்மை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். நீங்கள் தனிமையில் செயல்பட்டாலும் அல்லது வெளிப்படையாக செயல்பட்டாலும், நீங்கள் தேவனுக்கு முன்பாக தேவனுடைய சந்தோஷத்தைப் பெற முடியும், தேவனுக்கு முன்பாக உறுதியுடன் நிற்க முடியும், மற்ற ஜனங்கள் உன்னை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எப்போதும் நீ நடக்க வேண்டிய பாதையில் நடந்து, தேவனுடைய பாரத்தைக் கருத்தில் கொள். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே தேவனுக்கு நெருங்கியவர்கள் ஆவர். அந்த தேவனுக்கு நெருங்கியவர்களால், அவருக்கு நேரடியாகச் சேவை செய்ய முடிகிறது, ஏனென்றால் அவர்களுக்கு தேவனின் பெரிதான கட்டளையும் தேவனுடைய பாரமும் கொடுக்கப்பட்டுள்ளன, அவர்களால் தேவனுடைய இருதயத்தைத் தங்களுடையதாகவும், தேவனுடைய பாரத்தைத் தங்களுடைய சொந்த பாரமாகவும் எடுத்துக்கொள்ள முடியும், மேலும் அவர்கள் தங்களின் எதிர்கால ஆதாயங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை: அவர்களுக்கு எந்த ஆதாயமும் இல்லையென்றாலும், எதையும் பெறுவதற்கு அவர்கள் நிற்கவில்லை என்றாலும், அவர்கள் அன்பான இதயத்தோடு தேவனை எப்பொழுதும் விசுவாசிப்பார்கள். எனவே, இவ்வகையான நபர் தேவனுக்கு நெருக்கமானவர். தேவனுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு நம்பிக்கைக்குரியவர்களும் கூட; தேவனுடைய நம்பிக்கைக்குரியவர்கள் மட்டுமே அவருடைய கவலைகளையும், அவருடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும், அவர்களின் மாம்சம் வேதனை மிகுந்ததாகவும், பலவீனமாகவும் இருப்பினும் அவர்களால் வேதனையைத் தாங்கவும், தேவனைத் திருப்திப்படுத்த தாங்கள் நேசிக்கிறதை விட்டுவிடவும் முடியும். தேவன் இத்தகைய ஜனங்களுக்கு அதிக பாரங்களைக் கொடுக்கிறார். மேலும் இத்தகைய ஜனங்களின் சாட்சி தேவன் செய்ய விரும்புகிறவைகளைத் தாங்கியிருக்கும். இவ்வாறு இந்த ஜனங்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள், இவர்கள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற தேவ ஊழியர்கள், மேலும் இப்படிப்பட்ட ஜனங்கள் மாத்திரமே தேவனோடுகூட ஆளுகை செய்ய முடியும். நீ உண்மையிலேயே தேவனுக்கு நெருங்கியவராகும்போதுதான் நீ சரியாக தேவனோடு கூட ஆளுகை செய்வாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 454

இயேசுவால் தேவனுடைய கட்டளையான முழு மனுக்குலத்தின் மீட்பின் வேலையை நிறைவேற்ற முடிந்தது. ஏனென்றால் அவர் தனக்காக எந்தத் திட்டங்களையும் ஏற்பாடுகளையும் செய்யாமல் ஒவ்வொரு காரியத்தையும் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அதனால் உங்களுக்கு எல்லாம் நன்றாகப் புரிந்துள்ளபடி தேவனான அவரே தேவனுக்கு நெருக்கமானவராக இருந்தார். (உண்மையில், அவரே தேவன், தேவனால் தேவன் என்று சாட்சி பகிரப்பட்டவர். விஷயத்தினை விளக்க இயேசு பற்றிய உண்மையை இங்கு கூறுகிறேன்.) அவரால் எப்போதும் தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை மையப்படுத்த முடிந்தது, மேலும் அவர் எப்போதும் பரலோகப் பிதாவினிடத்தில் ஜெபித்தார், பரலோகப் பிதாவினுடைய சித்தத்தை நாடினார். அவர்: “பிதாவாகிய தேவனே! உம்முடைய சித்தத்தை நிறைவேற்றும், என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய திட்டத்தின்படி செயல்படும். மனிதன் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நீர் ஏன் அவனுக்காகக் கரிசனப்படுகிறீர்? எறும்பைப்போல் உம்முடைய கரத்தில் இருக்கும் மனிதன் உம்முடைய அக்கறைக்கு எப்படி பாத்திரவானாக முடியும்? உம்முடைய சித்தத்தை நிறைவேற்றவும், உம்முடைய விருப்பத்தின்படி என்னில் நீர் எதைச் செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்யும்படிக்கு நான் இருக்கிறேன்” என்று ஜெபித்தார். இயேசு எருசலேமுக்கு போகும் வழியில் மிகுந்த வேதனையில் இருந்தார், அவருடைய இருதயத்தில் ஒரு கத்தி திருகுவது போன்ற வேதனை இருந்தாலும், தன் வார்த்தையைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு சிறிய எண்ணம் கூட அவரிடத்தில் இல்லை; எப்பொழுதும் ஆற்றல் மிக்க ஒரு வல்லமை, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டிய இடத்திற்கு முன்னேற அவரை வலியுறுத்திக் கொண்டே இருந்தது. இறுதியாக, அவர் சிலுவையில் அறையப்பட்டு, பாவ மாம்சத்தின் சாயலாகி, மனுக்குலத்தை மீட்கும் வேலையை செய்து முடித்தார். பாதாளம் மற்றும் மரணத்தின் கட்டுக்களை உடைத்தார். அவருக்கு முன்பாக மரணம், நரகம் மற்றும் பாதாளம் ஆகியவைகள் தங்களின் வல்லமையை இழந்து, அவரால் முறியடிக்கப்பட்டன. அவர் வாழ்ந்த முப்பத்து மூன்று வருடங்களிலும், தேவனுடைய கிரியையின்படி அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தன்னால் இயன்றதைச் செய்து, அவருடைய தனிப்பட்ட ஆதாயத்தையோ இழப்பையோ ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், எப்போதும் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தையே எண்ணிக்கொண்டிருந்தார். இவ்வாறு, அவர் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” என்று தேவன் சொன்னார். தேவனுக்கு முன்பாக இருந்த அவருடைய ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இணங்க இருந்ததால், முழு மனுக்குலத்தை மீட்கும் பெரிய பாரத்தை தேவன் அவர் தோள்களின்மேல் வைத்து, அவர் அதை நிறைவேற்றச் செய்தார். மேலும் இந்த முக்கியமான வேலையைச் செய்து முடிக்கத் தகுதியாகி உரிமையும் பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் அளவிடமுடியாத வேதனையை தேவனுக்காக தாங்கினார், எண்ணற்ற முறை சாத்தானால் சோதிக்கப்பட்டார், ஆனால் ஒருபோதும் அவர் சோர்வடையவில்லை. தேவன் அவரை நம்பியதால், அவரை நேசித்ததால், அவருக்கு இவ்வளவு பெரிய வேலையைக் கொடுத்தார். இதனால் “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” என்று தேவன் தாமே சொன்னார். அந்நேரத்தில் இயேசுவால் மட்டுமே இந்தக் கட்டளையை நிறைவேற்ற முடிந்தது, கிருபையின் காலத்தில் மனுக்குலம் முழுவதையும் மீட்கும்படியான தேவனுடைய கிரியையை அவர் செய்து முடித்ததின் ஒரு நடைமுறை அம்சம் இது.

இயேசுவைப் போல், தேவனுடைய பாரத்தை உங்களால் மிகுதியாய்க் கருத்தில் கொள்ள முடிந்தால், உங்கள் மாம்சத்திற்கு முதுகைக் காண்பிப்பீர்கள் என்றால், தேவன் அவருடைய முக்கிய வேலைகளை உங்களிடத்தில் ஒப்படைப்பார்; இதனால் தேவனுக்கு ஊழியம் செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். இத்தகைய சூழ்நிலைகளில் மட்டுமே நீங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் அவருடைய கட்டளையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் உங்களால் துணிந்து சொல்ல முடியும். அப்போதுதான் தேவனுக்கு நீங்கள் உண்மையாக ஊழியம் செய்கிறீர்கள் என்றும் உங்களால் துணிந்து சொல்ல முடியும். இயேசுவின் உதாரணத்துடன் ஒப்பிடும்போது, நீ தேவனுக்கு நெருக்கமான நபர் என்று சொல்லத் துணிகிறாயா? நீ தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லத் துணிகிறாயா? நீ உண்மையாக தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொல்லத் துணிகிறாயா? இன்று, தேவனுக்கு ஊழியம் செய்வது எப்படி என்று புரிந்து கொள்ளாமல், நீ தேவனுக்கு நெருக்கமான நபர் என்று சொல்லத் துணிகிறாயா? நீ தேவனுக்கு ஊழியம் செய்வதாகச் சொன்னால், நீ தேவனுக்கு விரோதமாய் தூஷணம் சொல்கிறாய் அல்லவா? இதைக்குறித்து யோசிக்கவும்: நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாயா அல்லது உனக்கே ஊழியம் செய்கிறாயா? நீ சாத்தானைச் சேவிக்கிறாய், ஆனாலும் நீ தேவனுக்கு ஊழியம் செய்வதாகப் பிடிவாதமாய்க் கூறுகிறாய்—இதில் நீ தேவனுக்கு விரோதமாக தூஷணம் சொல்லவில்லையா? என் முதுகுக்குப் பின்னால் உள்ள பல ஜனங்கள் பதவியின் ஆதாயங்களை இச்சித்து, பெருந்தீனி உண்டு, தூக்கத்தை விரும்பி, மாம்சத்திற்கு எல்லா வகையான கவனிப்பும் செய்து, மாம்சத்திற்கு வேறு வழியில்லை என்பது குறித்தே எப்போதும் கவலைப்படுகிறார்கள். அவர்கள் தேவாலயங்களில் தங்களுக்குரிய சரியான கடமைகளைச் செய்யாமல் திருச்சபையை வருமானத்திற்காக மட்டும் சார்ந்துகொண்டு அல்லது அவர்களின் சகோதர சகோதரிகளை என்னுடைய வார்த்தைகளைக்கொண்டு கடிந்து கொண்டு, தங்கள் அதிகார பதவிகளிலிருந்து கொண்டு மற்றவர்களின்மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த ஜனங்கள் தாங்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்து கொண்டிருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு, தாங்கள் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று எப்போதும் சொல்கிறார்கள். இது அபத்தமில்லையா? உனக்குச் சரியான நோக்கங்கள் இருந்தும், தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்ய முடியவில்லை என்றால், நீ மதிகேடனாயிருக்கிறாய்; ஆனால் உன்னுடைய நோக்கங்கள் சரியானதாக இல்லாமலிருந்தும், நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்று சொல்வாயானால், நீ தேவனை எதிர்க்கிற ஒரு நபராய், தேவனால் தண்டிக்கப்பட வேண்டிய நபராய் இருக்கிறாய்! அத்தகைய ஜனங்களுக்காக நான் பரிதாபப்படுவதில்லை! அவர்கள் தேவனுடைய வீட்டை வருமானத்திற்காக மட்டும் சார்ந்துகொண்டு, மாம்சத்திற்கான வசதிகளை இச்சித்துக்கொண்டு, தேவனுடைய விருப்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் தங்களுக்கான நலன்களையே நாடி, தேவனுடைய சித்தத்திற்குச் செவிசாய்ப்பதில்லை. அவர்கள் செய்யும் எந்தக் காரியத்திலும் தேவ ஆவியினுடைய கண்காணிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் சூழ்ச்சி செய்து தங்கள் சகோதர சகோதரிகளை வஞ்சித்து, இருமுகங்கள் உடையவர்களாய், திராட்சைத்தோட்டத்தில் உள்ள நரியைப் போல எப்போதும் திராட்சைப்பழங்களைத் திருடி, திராட்சைத்தோட்டத்தை மிதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்க முடியுமா? நீ தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள உகந்த நபரா? உன் வாழ்க்கைக்காக, தேவாலயத்துக்காக எந்த ஒரு பாரத்தையும் நீ எடுத்துக் கொள்வதில்லை, நீ தேவனுடைய கட்டளையைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான நபரா? உன்னைப் போன்ற ஒருவரை யார் நம்பத் துணிவார்கள்? நீ இப்படி ஊழியம் செய்தால், தேவன் உன்னை நம்பிப் பெரிதான வேலையை ஒப்படைப்பாரா? இது கிரியைக்கு தாமதங்களை ஏற்படுத்துமல்லவா?

தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வதற்கு என்ன நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதை நான் சொல்லுகிறேன். நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடாவிட்டால், இயேசுவைப் போல எல்லாவற்றையும் தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்காமல் போனால், நீங்கள் தேவனுடைய நம்பிக்கையைப் பெற முடியாமல், அவரால் நியாயந்தீர்க்கப்படும் நிலை உண்டாகும். ஒருவேளை இன்று, நீங்கள் தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில், அவரை வஞ்சிக்கும் நோக்கத்தை எப்போதும் கொண்டிருந்து, எப்போதும் அக்கறையற்ற விதத்தில் அவரிடம் காரியங்களைக் கையாளலாம். சுருக்கமாக, வேறு எதுவாக இருப்பினும், நீ தேவனை ஏமாற்றினால், இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு உன்மேல் வரும். நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யும் சரியான பாதையில் நுழைந்திருப்பதைப் பயன்படுத்தி, முதலில் உங்கள் இருதயத்தைப் பிளவுபடா விசுவாசத்துடன் தேவனுக்குக் கொடுங்கள். நீ தேவனுக்கு முன்பாக இருந்தாலும் அல்லது மற்ற ஜனங்களுக்கு முன்பாக இருந்தாலும், உன்னுடைய இருதயம் எப்பொழுதும் தேவனை நோக்கித் திரும்பியிருக்க வேண்டும், இயேசு தேவனை நேசித்ததைப் போலவே எப்பொழுதும் தேவனை நேசிப்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விதமாய் தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவார், இதனால் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற ஊழியனாவாய். நீ உண்மையாகவே தேவனால் பூரணப்படுத்தப்பட விரும்பினால், உன்னுடைய ஊழியம் தேவனுடைய சித்தத்திற்கு இசைந்திருக்க வேண்டுமானால், தேவனின் மீதான விசுவாசத்தைக் குறித்த உன்னுடைய முந்தைய கருத்துக்களை மாற்றி, தேவனுக்கு ஊழியம் செய்ய நீ பயன்படுத்தின பழைய வழிகளை மாற்ற வேண்டும். இதனால் உன்னுடைய எல்லாமும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படும். இவ்விதமாய் தேவன் உன்னைக் கைவிடமாட்டார், மேலும் பேதுருவைப் போல, நீ தேவனை நேசிக்கிறவர்களில் முன்னணியில் இருப்பாய். நீ மனந்திரும்பாமல் இருந்தால், யூதாஸின் அதே முடிவைச் சந்திப்பாய். தேவனை விசுவாசிக்கும் அனைவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய சித்தத்திற்கு இணங்க ஊழியம் செய்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 455

பிரபஞ்சம் முழுவதிலும் தன் கிரியையின் தொடக்கத்திலிருந்தே, தேவன் அனைத்துத் தரப்பிலான ஜனங்கள் உட்பட, பல ஜனங்களைத் தனக்கு ஊழியம் செய்வதற்காக முன்குறித்திருக்கிறார். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதும், அவருடைய கிரியையை பூமியில் சுமூகமாக நிறைவேற்றுவதுமே அவருடைய நோக்கமாகும். இதுவே ஊழியம் செய்வதற்காக ஜனங்களைத் தெரிந்துகொள்வதில் தேவனுடைய நோக்கமாகும். தேவனுக்கு ஊழியம் செய்கிற ஒவ்வொருவரும் அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய இந்த கிரியை தேவனுடைய ஞானத்தையும், சர்வவல்லமையையும், பூமியில் அவருடைய கிரியையின் கோட்பாடுகளையும், ஜனங்களுக்கு மேலும் தெளிவாக்குகிறது. தேவன் அவருடைய கிரியையைச் செய்வதற்கும், ஜனங்களோடு ஈடுபட்டு, அதனால் அவருடைய செயல்களை அவர்கள் இன்னும் தெளிவாக அறிந்து கொள்வதற்குமே உண்மையில் இந்த பூமிக்கு வந்திருக்கிறார். இன்றைக்கு, இந்த ஜனக்கூட்டமாகிய நீங்கள் நடைமுறை தேவனுக்கு ஊழியம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் தேவனால் எழுப்பப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குக் கணக்கிட முடியாத ஆசீர்வாதமாகும். தனக்கு ஊழியம் செய்ய ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பதில் தன்னுடைய சொந்தக் கோட்பாடுகள் தேவனுக்கு எப்பொழுதும் உண்டு. தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது, ஜனங்கள் கற்பனை செய்வதுபோல், எவ்வகையிலும் வெறுமனே ஓர் உற்சாகமான விஷயம் அல்ல. இன்றைக்கு தேவனுக்கு முன் ஊழியம் செய்பவர்கள் எல்லாரும் தேவனுடைய வழிநடத்துதல் மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியை தங்களிடத்தில் இருப்பதாலும், சத்தியத்தைப் பின்தொடரும் ஜனங்களாக அவர்கள் இருப்பதாலும் அப்படிச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தேவனுக்கு ஊழியம் செய்கிற அனைவருக்கும் இவை குறைந்தபட்ச நிபந்தனைகளாகும்.

தேவனுக்கு ஊழியம் செய்வது எளிதான வேலை கிடையாது. நேர்மையற்ற மனநிலை மாறாமல் இருக்கிறவர்கள் ஒருபோதும் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியாது. உன்னுடைய மனநிலை தேவனுடைய வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாமலும், தண்டிக்கப்படாமலும் இருந்தால், உன் மனநிலை இன்னும் சாத்தானையே பிரதிபலிக்கிறது. உன்னுடைய சொந்த, நல்ல நோக்கங்களைக் கொண்டு தேவனுக்கு ஊழியம் செய்கிறாய் என்றும், உன்னுடைய ஊழியம் உன்னிலுள்ள சாத்தானின் தன்மையைச் சார்ந்திருக்கிறது என்பதையும் இது நிரூபிக்கிறது. உன்னுடைய இயல்பான குணத்தைக் கொண்டும், உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படியும் நீ தேவனுக்கு ஊழியம் செய்கிறாய். மேலும் என்னவென்றால், நீ செய்ய விரும்புகிற காரியங்கள் தேவனுக்கு மகிழ்ச்சியளிப்பவை என்றும், நீ செய்ய விரும்பாத காரியங்கள் தேவனுக்கு வெறுப்பூட்டுபவை என்றும் நீ எப்போதும் நினைக்கிறாய். முழுவதும் உன்னுடைய சொந்த விருப்பங்களின்படி நீ வேலை செய்கிறாய். தேவனுக்கு ஊழியம் செய்வது என்று இதை அழைக்க முடியுமா? முடிவில் உன்னுடைய வாழ்க்கை நிலையில் சிறிதளவு மாற்றமும் இருக்காது. அதற்குப் பதிலாக, உன்னுடைய ஊழியம் உன்னை இன்னும் அதிகப் பிடிவாதமாக மாற்றும், இப்படி உன்னுடைய நேர்மையற்ற மனநிலை இன்னும் ஆழமாக வேரூன்றும். அதன் காரணமாக தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றிய விதிகள் உனக்குள் உருவாகும். அவைகள் உன்னுடைய சொந்தக் குணத்தையும், உன்னுடைய சொந்த மனநிலையின்படி செய்யப்படும் உன்னுடைய ஊழியத்தில் இருந்து பெற்ற அனுபவங்களையும் முதன்மையாகச் சார்ந்திருக்கும். இவை மனிதனுடைய அனுபவங்களும் பாடங்களுமாகும். இது உலகில் வாழும் மனிதனுடைய தத்துவமாகும். இப்படிப்பட்ட ஜனங்களைப் பரிசேயர்கள் எனவும் மதத்தலைவர்கள் எனவும் வகைப்படுத்தலாம். அவர்கள் விழித்துக்கொண்டு மனந்திரும்பாவிட்டால், அவர்கள் நிச்சயமாகக் கள்ள கிறிஸ்துகளாகவும், கடைசி நாட்களில் ஜனங்களை வஞ்சிக்கும் அந்திக்கிறிஸ்துகளாகவும் மாறிவிடுவார்கள். சொல்லப்பட்ட கள்ளக்கிறிஸ்துகளும், அந்திக்கிறிஸ்துகளும் இப்படிப்பட்ட ஜனத்தின் நடுவிலிருந்து எழும்புவார்கள். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் அவர்களுடைய சொந்தக் குணத்தைப் பின்பற்றி, அவர்களுடைய சொந்தச் சித்தத்தின்படி செயல்பட்டால், அவர்கள் எந்த நேரத்திலும் துரத்திவிடப்படும் அபாயத்தை வருவித்துக் கொள்கிறார்கள். தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக தாங்கள் பெற்றுக்கொண்ட பல வருட அனுபவத்தை மற்றவர்களின் இதயங்களை வெல்வதற்காக, அவர்களைக் கடிந்துகொள்ள, அவர்களைக் கட்டுப்படுத்த, மேலும் உயர்ந்த நிலையில் நிற்க, ஜனங்கள் உபயோகிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களும், மேலும் மனந்திரும்பாதவர்களும் தங்களின் பாவங்களை அறிக்கையிடாதவர்களும், பதவியின் பலன்களை விட்டுக்கொடுக்காதவருமாகிய ஜனங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாக விழுந்து போவார்கள். அவர்கள் பவுலைப் போன்று, தங்களுடைய மூத்தநிலையைக் குறித்து மிதமிஞ்சி எண்ணி, தங்கள் தகுதிகளைப் பறைசாற்றுகிறார்கள். இதுபோன்ற ஜனங்களை தேவன் பரிபூரணத்திற்குக் கொண்டுவர மாட்டார். இதுபோன்ற ஊழியம் தேவனுடைய கிரியையில் தலையிடுகிறது. ஜனங்கள் பழையவற்றைப் பற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் கடந்த நாட்களின் கருத்துக்களைப் பற்றிக்கொள்கிறார்கள். இது அவர்களின் ஊழியத்திற்கு மிகப்பெரிய தடையாகும். உன்னால் அவைகளைத் தூக்கியெறிய முடியாவிட்டால், உன்னுடைய முழு வாழ்க்கையையும் அவைகள் திக்குமுக்காட வைத்து விடும். ஓடுவதால் உன் கால்களை அல்லது உழைப்பினால் உன் முதுகை நீ உடைத்துக்கொண்டாலும்கூட, தேவனுடைய ஊழியத்தில் நீ இரத்தசாட்சியாய் மரித்தாலும்கூட, தேவன் உன்னைச் சிறிதளவுகூட மெச்சிக்கொள்ள மாட்டார். அதற்கு நேர்எதிராக நீ ஒரு பாவி என்று அவர் சொல்வார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 456

இன்று முதல், எந்த மதம் சார்ந்தக் கருத்துக்களும் இல்லாத, தங்களுடைய பழைய சுயத்தை ஒதுக்கி வைக்கத் தயாராக உள்ள, மற்றும் எளிய மனதுடன் கூடிய வகையில் தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களை தேவன் பரிபூரணப்படுத்துவார். தேவனுடைய வார்த்தைகளுக்காக வாஞ்சையாயிருப்பவர்களை அவர் பரிபூரணப்படுத்துவார். இந்த ஜனங்கள் எழும்பி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும். முடிவில்லா செல்வமும், எல்லையற்ற ஞானமும் தேவனில் இருக்கிறது. இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்களால் அனுபவிக்கப்படும்படி அவருடைய அற்புதமான கிரியையும் விலைமதிப்பற்ற வார்த்தைகளும் காத்திருக்கின்றன. இந்த நிலையில், மதவாதக் கருத்துக்கள் உள்ள, மூத்தநிலையைக் கருத்தில் கொள்கிற, தங்களை விட்டுக்கொடுக்க இயலாதவர்களுக்கு இந்தப் புதிய காரியங்களை ஏற்றுக்கொள்வதற்குக் கடினமாய் இருக்கும். இந்த ஜனங்களைப் பரிபூரணப்படுத்த ஆவியானவருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. ஒருவன் கீழ்ப்படியத் தீர்மானிக்காமல், தேவனுடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளாமல் இருந்தால் அவனால் இந்தப் புதிய காரியங்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வெறுமனே, மேலும் மேலும் கலகக்காரர்களாகவும், வஞ்சகர்களாகவும் மாறி, தவறான பாதையில் சென்று விடுவார்கள். இப்பொழுது தன்னுடைய கிரியையை செய்துகொண்டிருக்கும் தேவன், தன்னை நேசிக்கிற மற்றும் புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனேக ஜனங்களை எழுப்புவார், மேலும் அவர், தங்களுடைய மூத்தநிலையைக் கருத்தில் கொள்ளுகிற மதத்தலைவர்களை முழுவதுமாக வெட்டிச் சாய்த்து விடுவார். மாற்றத்தைப் பிடிவாதமாக எதிர்ப்பவர்கள் ஒருவரையும் அவர் விரும்புவதில்லை. இந்த ஜனங்களில் ஒருவராக இருக்க நீ விரும்புகிறாயா? நீ உன்னுடைய ஊழியத்தை உன்னுடைய தனிப்பட்ட விருப்பங்களின்படி செய்கிறாயா அல்லது தேவனுக்கு வேண்டியபடி செய்கிறாயா? இது உனக்கே தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நீ ஒரு மதத்தலைவனா அல்லது தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட புதிதாய்ப் பிறந்த குழந்தையா? உன்னுடைய ஊழியம் எந்த அளவு பரிசுத்த ஆவியால் மெச்சிக்கொள்ளப்படுகிறது? அதில் எந்த அளவு தேவன் நினைவில்கூட வைத்துக்கொள்வதில்லை? உன்னுடைய அனைத்து வருட ஊழியத்தின் விளைவாக உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் உண்டாயிருக்கிறது? இவை அனைத்தையும் பற்றி நீ தெளிவாய் இருக்கிறாயா? நீ உண்மையாகவே விசுவாசத்துடன் இருந்தால், முன்பிலிருந்து உன்னுடைய பழைய மதம் சார்ந்த கருத்துக்களை ஒதுக்கித்தள்ளி, புதிய வழியில் சிறப்பாக தேவனுக்கு ஊழியம் செய்வாய். இப்போதும் எழும்பி நிற்கத் தாமதமாகி விடவில்லை. பழைய மதம் சார்ந்தக் கருத்துக்கள் ஒரு நபரின் முழு வாழ்க்கையையும் பறித்துக் கொள்ளக்கூடும். ஒரு நபர் பெற்றுக்கொள்ளும் அனுபவம், அவர் தேவனிடமிருந்து விலகி, காரியங்களைத் தன் சொந்த வழியில் செய்விக்கக் காரணமாகக் கூடும். நீ இத்தகைய காரியங்களை ஒதுக்கி வைக்காவிட்டால், பின் இவைகள் உன் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் மாறிப்போகும். தேவன் தனக்கு ஊழியம் செய்பவர்களை எப்பொழுதும் பரிபூரணப்படுத்துகிறார். அவர்களைச் சுலபமாக அவர் தூக்கியெறிவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும், சிட்சிப்பையும் நீ உண்மையாக ஏற்றுக்கொள்வாயானால், உன்னுடைய பழைய மதம் சார்ந்த நடைமுறைகளையும் விதிகளையும் உன்னால் ஒதுக்கி வைக்க முடியுமானால், மேலும் உன்னுடைய பழைய மதம்சார்ந்த கருத்துக்களை இன்றைய தேவனுடைய வார்த்தைகளின் அளவுகோலாக உபயோகிப்பதை நிறுத்துவாயானால், அப்பொழுது மட்டுமே உனக்கு எதிர்காலம் இருக்கும். நீ பழைய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவற்றை இன்னும் உயர்வாக மதிப்பாயானால், நீ இரட்சிக்கப்படுவதற்கு ஒரு வழியும் இல்லை. தேவன் அத்தகைய ஜனங்களைக் கவனத்தில் கொள்வதில்லை. நீ உண்மையாகவே பரிபூரணப்பட விரும்பினால், முதலிலிருந்து எல்லாவற்றையும், முழுவதுமாக விட்டுவிட நீ தீர்மானிக்க வேண்டும். முன்பு செய்யப்பட்டவைச் சரியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய கிரியையாக இருந்திருந்தாலும், அப்போதும் அதை ஒதுக்கித் தள்ளி, அதைப் பற்றிக்கொள்வதை நிறுத்துவதற்கு உன்னால் இயல வேண்டும். அது தெளிவாய்ப் பரிசுத்த ஆவியின் கிரியையாய் இருந்திருந்தாலும், பரிசுத்த ஆவியினால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தாலும், இன்றைக்கு அதை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். அதை நீ பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இதுவே தேவனுக்குத் தேவையானது. சகலமும் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவனுடைய கிரியையிலும் தேவனுடைய வார்த்தையிலும், முடிந்துபோன பழைய காரியங்களைப் பற்றி அவர் குறிப்பிடுவதில்லை, பழைய பஞ்சாங்கத்தை அவர் தோண்டுவதும் இல்லை. தேவன் எப்பொழுதுமே புதியவர், அவர் ஒருபோதும் பழையவரல்ல, அவர் ஆதியிலிருந்த தன்னுடைய சொந்த வார்த்தைகளைக் கூட பற்றிக்கொள்வதில்லை—இது தேவன் எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. எனவே, தேவன் தன்னுடைய பழைய வழிமுறைகளைக் கொண்டு இனி ஒருபோதும் கிரியை செய்யாதபோது, நீ ஒரு மனிதனாக, எப்பொழுதும் கடந்த காலத்துக்குரிய காரியங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை விட்டுவிட மறுத்து, அவைகளைச் சூத்திரம் சார்ந்த முறையில் உறுதியாக உபயோகப்படுத்தினால், உன்னுடைய வார்த்தைகளும் செயல்களும் இடைஞ்சலாக இருக்கிறதல்லவா? நீ தேவனுக்குப் பகைஞனாய் மாறி விட்டாய் அல்லவா? இந்தப் பழைய காரியங்கள் உன்னுடைய முழு வாழ்க்கையையும் நாசமாக்க, அழிக்க நீ இடங்கொடுக்க விரும்புகிறாயா? இந்தப் பழைய காரியங்கள் உன்னை தேவனுடைய கிரியையைத் தடுக்கும் நபராக மாற்றிவிடும்—நீ அப்படிப்பட்ட நபராகவா இருக்க விரும்புகிறாய்? உண்மையாகவே நீ அதை விரும்பவில்லை என்றால், சீக்கிரமாக நீ செய்துகொண்டிருப்பதை நிறுத்தி, திரும்பி, எல்லாவற்றையும் மீண்டும் தொடங்கு. தேவன் உன்னுடைய கடந்த கால ஊழியத்தை நினைவில்கொள்ள மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மதம் சார்ந்த ஊழியம் சுத்திகரிக்கப்படவேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 457

கிரியையைப் பொறுத்தவரை, கிரியை என்பது தேவனுக்காக சுற்றித்திரிவது, எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பது மற்றும் அவருக்காகச் செலவு செய்வது என்பதுதான் என்று மனுஷன் விசுவாசிக்கிறான். இந்த விசுவாசம் சரியானதுதான் என்றாலும், இது மிகவும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது; தேவன் மனுஷனிடம் கேட்பது தமக்காகச் சுற்றித்திரிய வேண்டும் என்பது மட்டுமல்ல; இதையும் தாண்டி, இந்தக் கிரியையானது ஊழியம் செய்வது மற்றும் ஆவிக்குள் தேவையானவற்றை வழங்குவது ஆகியவற்றைப் பற்றியும் அக்கறை கொண்டுள்ளதாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகால அனுபவங்களுக்குப் பிறகும், பல சகோதர சகோதரிகள் தேவனுக்காகக் கிரியை செய்வதைப் பற்றி ஒருபோதும் சிந்தித்துப் பார்த்ததில்லை, ஏனென்றால் மனுஷனால் சிந்திக்கப்படும் கிரியையானது தேவன் கேட்டுக்கொள்வதற்கு முரணானதாக இருக்கிறது. ஆகையால், கிரியை விஷயத்தில் மனுஷனுக்கு எந்த ஆர்வமும் இல்லை, மேலும் மனுஷனின் பிரவேசமும் ஒருதலைப்பட்சமாக இருப்பதற்கு இதுவே சரியான காரணமாகவும் இருக்கிறது. நீங்கள் அனைவரும் தேவனுக்காகக் கிரியை செய்வதன் மூலம் உங்கள் பிரவேசத்தைத் தொடங்க வேண்டும், இதன்மூலம் நீங்கள் அனுபவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இதில் தான் நீங்கள் பிரவேசிக்க வேண்டும். கிரியை என்பது தேவனுக்காகச் சுற்றித்திரிவதைக் குறிக்காது, ஆனால் மனுஷனின் ஜீவனும் மனுஷன் ஜீவிக்கிறதும் தேவனுக்கு இன்பத்தை அளிக்க முடியுமா என்பதைக் குறிக்கிறது. தேவனைப் பற்றி சாட்சிக் கொடுப்பதற்கும், மனுஷனுக்கு ஊழியம் செய்வதற்கும் ஜனங்கள் தேவன் மீதுள்ள பக்தியையும், தேவனைப் பற்றிய அறிவையும் பயன்படுத்துவதைத்தான் கிரியை குறிக்கிறது. இதுவே மனுஷனின் பொறுப்பு, எல்லா மனிதர்களும் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான். உங்கள் பிரவேசம்தான் உங்கள் கிரியை என்றும், தேவனுக்காகக் கிரியை செய்யும் போது நீங்கள் பிரவேசிக்க முற்படுகிறீர்கள் என்றும் நீங்கள் கூறலாம். தேவனின் கிரியையை அனுபவிப்பது என்பது அவருடைய வார்த்தையைப் புசித்துக் குடிக்க உங்களுக்குத் தெரியும் என்று அர்த்தமல்ல; மிக முக்கியமாக, தேவனைப் பற்றி எவ்வாறு சாட்சிக் கொடுக்க வேண்டும் என்பதையும், தேவனுக்குச் சேவை செய்வதையும், மனுஷனுக்கு ஊழியம் செய்வதையும் மற்றும் வழங்குவதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம். இது கிரியை மட்டுமல்ல, இது உங்கள் பிரவேசமுமாக இருக்கிறது; ஒவ்வொருவரும் இதைத்தான் செய்துமுடிக்க வேண்டும். தேவனுக்காகச் சுற்றித்திரிவதிலும், எல்லா இடங்களிலும் பிரசங்கிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள் அநேகர் இருக்கின்றனர், ஆனால் அவர்களின் தனிப்பட்ட அனுபவத்தைக் கவனிக்காமல், ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதை அவர்கள் புறக்கணிக்கின்றனர். இதுதான் தேவனுக்குச் சேவை செய்பவர்களை தேவனை எதிர்ப்பவர்களாக மாற வழிவகுத்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக தேவனைச் சேவித்து, மனுஷனுக்கு ஊழியம் செய்து வரும் இந்த ஜனங்கள், கிரியை செய்வதையும் பிரசங்கிப்பதையும் பிரவேசம் என்று வெறுமனே கருதியிருக்கின்றனர், யாரும் தங்களது தனிப்பட்ட ஆவிக்குரிய அனுபவத்தை ஒரு முக்கியமான பிரவேசமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து அவர்கள் பெறும் தெளிவை மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான மூலதனமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரசங்கிக்கும்போது, அவர்களுக்கு பாரம் மிக அதிகமாகி, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுகிறார்கள், இதன் மூலம் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் குரலை வெளியிடுகிறார்கள். இந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது தங்களின் தனிப்பட்ட ஆன்மீக அனுபவமாக மாறியது போல, கிரியை செய்பவர்கள் மனநிறைவுடன் காணப்படுகிறார்கள்; அவர்கள் பேசும் வார்த்தைகள் அனைத்தும் தங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்று அவர்கள் உணர்கிறார்கள், ஆனால் மீண்டும், அவர்களின் சொந்த அனுபவமானது அவர்கள் விவரித்ததைப் போல தெளிவாக இல்லை என்பது போல இருக்கிறது. மேலும், பேசுவதற்கு முன்பு தாங்கள் என்ன பேசப்போகிறோம் என்பது பற்றி அவர்களுக்கு எந்தவிதமான விவரமும் தெரிந்திருக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் கிரியை செய்யும்போது, அவர்களது வார்த்தைகள் ஒரு முடிவில்லாத பிரவாகம் போல வெளியேறுகின்றன. நீ ஒரு முறை அவ்வாறு பிரசங்கித்த பிறகு, உனது உண்மையான வளர்ச்சியானது நீ விசுவாசித்ததைப் போல சிறியதல்ல என்று உணர்கிறாய், மேலும் பரிசுத்த ஆவியானவர் உன்னில் பல முறை கிரியை செய்த சூழ்நிலையில், நீ ஏற்கனவே வளர்ச்சி கண்டவன் என்பதையும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன் சொந்தப் பிரவேசம் என்றும் அது உனக்குச் சொந்தமானது என்றும் நீ தவறாக விசுவாசித்திருக்கிறாய் என்பதையும் உணர்கிறாய். நீ தொடர்ந்து இவ்வாறு அனுபவிக்கும் போது, நீ உனது சொந்தப் பிரவேசத்தில் கண்டிப்புடன் இல்லாமல், அதைக் கவனிக்காமல் சோம்பலாக இருந்து, உன் தனிப்பட்ட பிரவேசத்திற்கு எந்த முக்கியத்துவத்தையும் கொடுப்பதை நிறுத்திவிடுவாய். இந்தக் காரணத்திற்காக, நீ மற்றவர்களுக்கு ஊழியம் செய்யும்போது, நீ உனது வளர்ச்சிக்கும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இது உனது பிரவேசத்தை மேலும் எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், உனது அனுபவத்திற்கு அதிக நன்மையையும் தருகிறது. மனுஷன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தனது தனிப்பட்ட அனுபவமாக எடுத்துக் கொள்ளும்போது, இது சீர்கெடுதலின் ஆதாரமாக மாறுகிறது. இதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் எந்தக் கடமையைச் செய்தாலும், உங்கள் பிரவேசித்தலை ஒரு முக்கிய பாடமாக நீங்கள் கருத வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 458

தேவனின் சித்தத்தை நிறைவேற்றவும், தேவனின் இருதயத்தைப் பின்தொடரும் அனைவரையும் அவர் முன் கொண்டுவருவதற்கும், மனுஷனை தேவனிடம் கொண்டுவருவதற்கும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும் தேவனின் வழிகாட்டுதலையும் மனுஷனுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அதன் மூலம் தேவனுடைய கிரியையின் பலனை நிறைவேற்றுவதற்கும் நீங்கள் கிரியை செய்கிறீர்கள். ஆகையால், நீங்கள் கிரியையின் சாராம்சம் குறித்து முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டியது கட்டாயமாகும். தேவனால் பயன்படுத்தப்படுபவனாக, ஒவ்வொரு மனுஷனும் தேவனுக்காகக் கிரியை செய்ய தகுதியானவன்தான், அதாவது அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், நீங்கள் உணர வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது: தேவனால் நியமிக்கப்பட்ட கிரியையை மனுஷன் செய்யும்போது, தேவனால் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் மனுஷனால் சொல்லப்படுவதும் அறியப்படுவதும் முற்றிலும் மனுஷனின் வளர்ச்சியாக இருப்பதில்லை. நீங்கள் உங்கள் கிரியையின் போது உங்கள் சொந்தக் குறைபாடுகளை நன்கு அறிந்துகொள்வதோடு, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அதிக தெளிவைப் பெறுவதும் நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள் ஆகும். இவ்வாறாக, உங்கள் கிரியையின் போது சிறந்த பிரவேசித்தலைப் பெற நீங்கள் செயல்படுத்தப்படுவீர்கள். தேவனிடமிருந்து வரும் வழிகாட்டுதலை மனுஷன் தனது சொந்தப் பிரவேசம் என்றும் அது தனக்குள்ளேயே இயல்பாக இருக்கும் ஒன்று என்றும் கருதினால், மனுஷனின் வளர்ச்சியானது வளர்வதற்கு எந்த சாத்தியமும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் மனுஷனில் செயல்படுத்தும் தெளிவுபடுத்தும் கிரியையானது அவன் சாதாரண நிலையில் இருக்கும்போதுதான் நிகழ்கிறது; இதுபோன்ற சமயங்களில், ஜனங்கள் பெறும் தெளிவை தங்களது உண்மையான வளர்ச்சியாக அடிக்கடி தவறாகப் புரிந்துகொள்கிறார்கள், ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் தெளிவூட்டும் விதம் மிகவும் இயல்பானதாக இருக்கிறது, மேலும் மனுஷனுக்குள் இருக்கும் உள்ளார்ந்த விஷயத்தையும் அவர் பயன்படுத்துகிறார். ஜனங்கள் கிரியை செய்யும்போதும், பேசும்போதும், அல்லது அவர்கள் ஜெபிக்கும்போதும், ஆவிக்குரிய ஆராதனைகளைச் செய்யும்போதும், ஒரு சத்தியம் திடீரென்று அவர்களுக்குத் தெளிவாகிவிடும். இருப்பினும், உண்மையில், மனுஷன் பரிசுத்த ஆவியானவரின் தெளிவை மட்டுமே பார்க்கிறான் (இயற்கையாகவே, இந்த தெளிவு மனுஷனின் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது), மேலும் இது மனுஷனின் உண்மையான வளர்ச்சியைக் குறிப்பிடுவதும் இல்லை. மனுஷன் சில சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட கால அனுபவத்திற்குப் பிறகு, அத்தகைய சூழ்நிலைகளில் மனுஷனின் உண்மையான வளர்ச்சி தெளிவாகிறது. அப்போதுதான் தனது வளர்ச்சியானது அவ்வளவு பெரியதாக இல்லை என்பதை மனுஷன் கண்டுபிடிப்பான், மேலும் மனுஷனின் சுயநலம், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் பேராசை ஆகிய அனைத்தும் வெளிப்படும். இதுபோன்ற பல அனுபவ சுழற்சிகளுக்குப் பிறகுதான், தங்களது ஆவிகளுக்குள் விழித்துக் கொண்டவர்களில் பலர், கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த விஷயங்கள் தங்களது சொந்த யதார்த்தம் அல்ல என்பதையும், மாறாக பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வந்த ஒரு குறுகிய கால வெளிச்சம்தான் என்பதையும், மனுஷன் இந்த வெளிச்சத்தைத்தான் பெற்றான் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள். பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தைப் புரிந்துகொள்ள மனுஷனுக்குத் தெளிவூட்டும்போது, விஷயங்கள் எவ்வாறு வந்தன அல்லது எங்கு செல்கின்றன என்பதை விளக்காமல், அது பெரும்பாலும் தெளிவான மற்றும் தனித்துவமான முறையில்தான் இருக்கும். அதாவது, மனுஷனின் சிரமங்களை இந்த வெளிப்பாட்டில் இணைப்பதற்குப் பதிலாக, அவர் சத்தியத்தை நேரடியாக வெளிப்படுத்துகிறார். மனுஷன் பிரவேசிக்கும் செயல்பாட்டில் சிரமங்களை எதிர்கொண்டு, அதன்பின்னர் பரிசுத்த ஆவியானவரின் தெளிவூட்டலை இணைத்துக்கொள்ளும்போது, இதுவே மனுஷனின் உண்மையான அனுபவமாகிறது. … ஆகையால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறும் அதே நேரத்தில், உங்கள் பிரவேசத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் கிரியையானது என்ன, உங்கள் பிரவேசம் என்ன என்பதைப் பார்ப்பதுடன், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உங்கள் பிரவேசத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், பரிசுத்த ஆவியானவரால் நீங்கள் இன்னும் பல வழிகளில் பரிபூரணப்படுத்தப்படுவீர்கள், இதன்மூலம் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சாராம்சம் உங்களிடத்தில் செய்யப்படலாம். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிய உங்கள் அனுபவத்தின் போது, நீங்கள் பரிசுத்த ஆவியானவரையும், உங்களையும் அறிந்து கொள்வீர்கள், மேலும், எத்தனை தீவிரமான துன்பங்களை யார் அறிவார்கள் என்பதற்கு மத்தியில், நீங்கள் தேவனுடன் ஓர் இயல்பான உறவை உருவாக்குவீர்கள், உங்களுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் நெருக்கமாக வளரும். கத்தரித்தல் மற்றும் சுத்திகரிப்பின் எண்ணற்ற நிகழ்வுகளுக்குப் பிறகு, நீங்கள் தேவன் மீது உண்மையான அன்பை வளர்ப்பீர்கள். அதனால்தான் வேதனைப்படுதல், துன்புறுத்தல் மற்றும் இன்னல்கள் ஆகியவற்றைக் கண்டு நீங்கள் அஞ்சக்கூடாது என்பதை நீங்கள் உணர வேண்டும்; நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மட்டுமே கொண்டிருந்து, நீங்கள் உங்கள் பிரவேசத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது தான் பயமுறுத்துவதாக இருக்கிறது. தேவனின் கிரியை நிறைவடையும் நாள் வரும்போது, நீங்கள் உழைத்ததற்கான பலனே இருக்காது; நீங்கள் தேவனின் கிரியையை அனுபவித்திருந்தாலும், நீங்கள் பரிசுத்த ஆவியானவரை அறிந்து கொண்டிருக்க மாட்டீர்கள் அல்லது உங்கள் சொந்த பிரவேசத்தைப் பெற்றிருக்க மாட்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் மனுஷனில் கிரியை செய்யும் தெளிவுபடுத்தலானது மனுஷனின் ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அல்ல, ஆனால் மனுஷனின் பிரவேசத்திற்கான பாதையைத் திறப்பதற்கும், அதேபோல் மனுஷனைப் பரிசுத்த ஆவியானவரை அறிந்துகொள்ள அனுமதிப்பதற்கும், மற்றும் இந்த நிலையில் இருந்து தேவனுக்கான பயபக்தி மற்றும் தேவனை வழிபடும் உணர்வுகளையும் வளர்ப்பதற்கும் செய்யப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கிரியையும் பிரவேசித்தலும் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 459

கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்களின் கிரியையில் மிகக் குறைவான விலகலே இருக்கிறது, மேலும் அவர்களுடைய கிரியையின் வெளிப்பாடு மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. கிரியை செய்ய தங்கள் சுபாவத்தை நம்பியிருப்பவர்கள் மிகப் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு ஒரு பெரிய தடையாக இருக்கும் பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியையானது அவர்களின் இயல்புத்தன்மையை அதிகமாக வெளிப்படுத்துகிறது. ஒரு நபரின் திறமை எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய கட்டளையின் கிரியையைச் செய்வதற்கு முன்பு அவர்கள் கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு, நியாந்தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் அத்தகைய நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்காவிட்டால், அவர்களின் கிரியையானது எவ்வளவு சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தாலும், அதனால் சத்தியத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது, அது எப்போதும் அவர்களின் இயல்புத்தன்மை மற்றும் மனுஷனின் நற்குணம் ஆகியவற்றின் விளைவாகவே இருக்கும். கிளைநறுக்கப்படாமல், கையாளப்படாமல் மற்றும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படாதவர்களின் கிரியையை விட கிளைநறுக்கப்பட்டு, கையாளப்பட்டு மற்றும் நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களின் கிரியையானது மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. நியாத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படாதவர்கள், மனுஷ மாம்சம் மற்றும் எண்ணங்களைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்துவதில்லை, அவர்கள் அதிக மனுஷ நுண்ணறிவு மற்றும் உள்ளார்ந்த திறமைகளின் கலவையாக இருக்கிறார்கள். இது தேவனுடைய கிரியைக்கான மனுஷனின் துல்லியமான வெளிப்பாடு இல்லை. அத்தகையவர்களைப் பின்பற்றுபவர்கள் அவர்களுடைய இயல்பான திறமையால் அவர்களுக்கு முன் கொண்டு வரப்படுகிறார்கள். தேவனின் உண்மையான நோக்கத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு, அதிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்லும் மனுஷனின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை அவை அதிகம் வெளிப்படுத்துவதால், இந்த வகை நபரின் கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர முடியாது, ஆனால் அவர்களை மனுஷனுக்கு முன்பாகக் கொண்டுவருகிறது. எனவே, சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிற்கு உட்படுத்தப்படாதவர்கள் தேவனின் கட்டளை கிரியையைச் செய்ய தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். ஒரு தகுதிவாய்ந்த ஊழியக்காரனின் கிரியையால் ஜனங்களைச் சரியான பாதையில் கொண்டு வந்து அவர்களுக்குச் சத்தியத்திற்கு அதிக பிரவேசங்களை வழங்க முடியும். அவனுடைய கிரியையால் ஜனங்களை தேவனுக்கு முன்பாக கொண்டு வர முடியும். மேலும், அவன் செய்யும் கிரியையானது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம், மேலும் இது விதிகளுக்கும் கட்டுப்படாமல் ஜனங்களுக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும், மேலும் ஜீவிதத்தில் படிப்படியாக வளரக்கூடிய திறனையும் அனுமதிக்கிறது, இதனால் சத்தியத்தில் இன்னும் ஆழமான பிரவேசம் இருக்கும். தகுதியற்ற ஊழியக்காரனின் கிரியையானது மிகக் குறைவானதாக இருக்கிறது. அவனது கிரியை முட்டாள்தனமானது. அவனால் ஜனங்களை விதிகளுக்குள் மட்டுமே கொண்டுவர முடியும், மேலும் அவன் ஜனங்களிடம் கோருவதும் மனுஷனுக்கு மனுஷன் வேறுபட்டதாக இருப்பதில்லை; அவன் ஜனங்களின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப கிரியை செய்வதில்லை. இந்த வகைக் கிரியைகளில், பல விதிகள் மற்றும் பல கோட்பாடுகள் இருக்கின்றன, மேலும் இதனால் ஜனங்களை யதார்த்தத்திற்குக் கொண்டு வர முடியாது, அல்லது ஜனங்களை ஜீவித வளர்ச்சியின் சாதாரண நடைமுறைக்கும் கொண்டுவர முடியாது. பயனற்ற சில விதிகளை மட்டுமே கடைபிடிக்க இது ஜனங்களுக்கு உதவும். இத்தகைய வழிகாட்டுதலால் ஜனங்களை வழிதவறி வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். அவன் உன்னை அவனைப்போல் மாற்ற உன்னை வழிநடத்துகிறான்; அவனிடம் என்ன இருக்கிறதோ அதற்கும் மற்றும் அவன் என்னவாக இருக்கிறானோ அதற்கும் உன்னை கொண்டுவர அவனால் முடியும். தலைவர்கள் தகுதியுள்ளவர்களா என்பதைப் பின்பற்றுபவர்கள் கண்டறிய, அவர்கள் வழிநடத்தும் பாதை மற்றும் அவர்களது கிரியைகளின் முடிவுகளைப் பார்ப்பது, மற்றும் பின்பற்றுபவர்கள் சத்தியத்திற்கு ஏற்ப கொள்கைகளைப் பெறுகிறார்களா என்பதையும், மற்றும் அவர்கள் தங்களது மாறுதலுக்கு ஏற்ற நடைமுறை பாதைகளைப் பெறுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். நீ வெவ்வேறு வகையான நபர்களின் வெவ்வேறு கிரியைகளை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; நீ முட்டாள்தனமாக பின்பற்றுபவராக இருக்கக்கூடாது. இது ஜனங்களின் பிரவேசம் பற்றிய விஷயத்தைச் சேர்ந்தது. எந்த நபரின் தலைமையில் பாதை இருக்கிறது, எதில் இல்லை என்பதை உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், நீ எளிதில் ஏமாற்றப்படுவாய். இவை அனைத்தும் உனது சொந்த ஜீவிதத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பரிபூரணமடையாதவர்களின் கிரியையில் அதிகமான இயல்புத்தன்மை இருக்கிறது; இது மனுஷ விருப்பத்துடன் அதிகமாகக் கலந்திருக்கிறது. அவர்கள் இயல்புத்தன்மை கொண்டிருக்கிறார்கள்—அவர்கள் அதனுடன் பிறந்தவர்கள். இது கையாளப்பட்டதற்குப் பிறகான ஜீவிதமோ அல்லது மாற்றப்பட்டதற்குப் பிறகான யதார்த்தமோ இல்லை. அத்தகைய நபரால் ஜீவனைப் பின்பற்றுபவர்களை எவ்வாறு ஆதரிக்க முடியும்? மனுஷனுக்கு உண்மையாக இருக்கும் ஜீவனானது அவனது உள்ளார்ந்த புத்திசாலித்தனம் அல்லது திறமை ஆகியவைதான். இந்த வகையான புத்திசாலித்தனம் அல்லது திறமையானது மனுஷனுக்கான தேவனின் சரியான கோரிக்கைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஒரு மனுஷன் பரிபூரணப்படுத்தப்படாமலும், அவனுடைய சீர்கெட்ட மனநிலை கிளைநறுக்கப்படாமலும், கையாளப்படாமலும் இருந்தால், அவன் வெளிப்படுத்தும் விஷயத்திற்கும் சத்தியத்திற்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி இருக்கும்; அவன் வெளிப்படுத்தும் விஷயங்களானது அவனது கற்பனை மற்றும் ஒருதலைப்பட்ச அனுபவம் போன்ற தெளிவற்ற விஷயங்களுடன் கலக்கப்படும். மேலும், அவன் எவ்வாறு கிரியை செய்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒட்டுமொத்த குறிக்கோளும் இல்லை, எல்லா ஜனங்களின் பிரவேசத்திற்கு ஏற்ப சத்தியமும் இல்லை என்பதை ஜனங்கள் உணர்கிறார்கள். மதில்சுவர்களில் வாத்துகளை உட்கார வைத்திருப்பதைப் போல, ஜனங்களிடம் கோரப்பட்டவற்றில் பெரும்பாலானவை அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இது மனுஷ விருப்பத்திற்கான கிரியையாக இருக்கிறது. மனுஷனின் சீர்கெட்ட மனநிலை, அவனது எண்ணங்கள் மற்றும் அவனது கருத்துக்கள் அவனது உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. மனுஷன் சத்தியத்தை கடைப்பிடிக்கும் உள்ளுணர்வோடு பிறப்பதில்லை, சத்தியத்தை நேரடியாகப் புரிந்து கொள்ளும் உள்ளுணர்வும் அவனுக்கு இருப்பதில்லை. இதனை அந்த மனுஷனின் சீர்கெட்ட மனநிலையுடன் சேர்த்தால்—இந்த வகையான சுபாவம் கொண்ட நபர் கிரியை செய்யும்போது, இது குறுக்கீடுகளை ஏற்படுத்தாதா? ஆனால் பரிபூரணமான ஒரு மனுஷனுக்கு ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சத்தியத்தின் அனுபவமும், அவர்களின் சீர்கெட்ட மனநிலையைப் பற்றிய அறிவும் இருக்கிறது, இதனால் அவனது கிரியையில் உள்ள தெளிவற்ற மற்றும் உண்மையற்ற விஷயங்கள் படிப்படியாகக் குறைந்து, மனுஷக் கலப்படம் குறைந்து, அவனுடைய கிரியையும் சேவையும் தேவனுக்குத் தேவைப்படும் தரங்களுக்கு மிக நெருக்கத்தில் வரும். இவ்வாறு, அவனது கிரியை சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் நுழைந்திருக்கிறது, அது யதார்த்தமாகவும் மாறிவிட்டது. குறிப்பாக மனுஷனின் மனதில் உள்ள எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்கின்றன. மனுஷனுக்கு வளமான கற்பனையும் நியாயமான தர்க்கமும் இருக்கிறது, மேலும் அவன் விவகாரங்களைக் கையாண்ட நீண்ட அனுபவத்தையும் கொண்டிருக்கிறான். மனுஷனின் இந்த அம்சங்கள் கிளைநறுக்கப்பட்டு மற்றும் திருத்தப்படாவிட்டால், இவை அனைத்தும் கிரியை செய்வதற்கான தடைகளாகத்தான் இருக்கும். எனவே, மனுஷனின் கிரியையானது மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது, குறிப்பாக பரிபூரணமாக்கப்படாத ஜனங்களின் கிரியை மிக உயர்ந்த துல்லியத்தை அடைய முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் கிரியையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 460

பரிசுத்த ஆவியானவர் மக்கள் மீது கிரியை செய்யும் போது அவர்கள் இருக்கும் பல்வேறு நிலைகள் குறித்த ஒரு புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தேவனுக்குச் செய்யும் ஊழியத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக இருப்பவர்கள் இந்த நிலைகள் குறித்து இன்னும் அதிகமான அளவில் புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். நீங்கள் அனுபவங்களை அல்லது பிரவேசிப்பதற்குரிய வழிகள் குறித்து மட்டும் அதிக அளவில் பேசுவதாக இருந்தால், அது உங்கள் அனுபவம் அதிக அளவில் ஒருதலைப் பட்சமானதாக இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. உங்கள் உண்மையான நிலையை அறியாமலும், சத்தியத்தின் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாமலும், மனநிலையில் ஒரு மாற்றத்தினை பெற முடியாது. பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் கோட்பாடுகளை அறியாமலும் அல்லது அது எப்படிப்பட்ட கனிகளைத் தருகிறது என்பதை அறியாமலும் இருந்து கொண்டு, பொல்லாத ஆவிகளின் கிரியையினை நீங்கள் தெளிவாக உணருவது என்பது கடினமானதாக இருக்கும். நீங்கள் பொல்லாத ஆவிகளின் கிரியைகளை அம்பலப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மனிதனுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தி அந்த பிரச்சினையின் உள்ளார்ந்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டும்; மக்களின் நடத்தையிலுள்ள பல வழிவிலகல்களையும், தேவன் மீதான விசுவாசத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும், இதனால் அவர்கள் அவைகளை அடையாளம் கண்டுகொள்ளுவார்கள். குறைந்தபட்சம், அவர்கள் தங்களை எதிர்மறையாகவோ அல்லது செயலற்றவர்களாகவோ உணரும்படி நீங்கள் செய்து விடக்கூடாது. ஆனாலும், பெரும்பாலான மக்களுக்கு உண்மையில் கஷ்டங்கள் இருக்கிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், நீ காரணம் அறியாதவனாகவோ அல்லது “ஒரு பன்றியை பாடுவதற்குக் கற்பிக்க முயற்சி செய்பவனாகவோ” நீ இருக்கக்கூடாது; அது முட்டாள்தனமான நடத்தை ஆகும். மக்கள் அனுபவிக்கும் பல கஷ்டங்களைத் தீர்ப்பதற்கு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வல்லமையை நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும்; பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு மக்களிடத்தில் எப்படி கிரியை செய்கிறார் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், மக்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களைச் சந்திக்கின்றனர் என்பதையும் அவர்களது குறைபாடுகளையும் பற்றிய புரிதலை நீ பெற்றிருக்க வேண்டும், எந்தவொரு விலகலோ அல்லது தவறோ செய்யாமல் நீ அந்த பிரச்சினைக்கான முக்கிய காரணங்களை ஆராய்ந்து அதன் மூலக்காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்த வகையான நபர் மட்டுமே தேவனுக்கு செய்யும் ஊழியத்தில் ஒருங்கிணைந்து செயல்படத் தகுதி பெற்றவர் ஆவார்.

முக்கிய பிரச்சினைகளை உன்னால் புரிந்து கொள்ள முடிகின்றதா என்பதும் அனேகமானவற்றைத் தெளிவாக பார்க்க முடிகிறதா இல்லையா என்பதும் உன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களைப் பொறுத்து இருக்கிறது. நீ எப்படிபட்ட விதத்தில் அனுபவிக்கின்றாயோ அதே விதத்தில்தான் நீ மற்றவர்களையும் வழிநடத்துகின்றாய். நீ எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொண்டால், மற்றவர்களை எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் புரிந்து கொள்ள வழிநடத்துவாய். தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை எந்த விதத்தில் நீ அனுபவிக்கின்றாயோ அதே விதத்தில் தான் தேவனுடைய வெளிப்பாடுகள் பற்றிய யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க நீ மற்றவர்களையும் வழிநடத்துவாய். தேவனுடைய வார்த்தைகளில் இருந்து உன்னால் அதிகமான சத்தியங்களைப் புரிந்து கொள்ளவும் அநேக காரியங்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெற்றுக்கொள்ளவும் முடியுமானால், அப்பொழுது உன்னால் மற்றவர்களைச் சத்தியத்திற்குள் வழிநடத்த முடியும், மேலும் நீங்கள் வழிநடத்துபவர்கள் தரிசனங்களைக் குறித்தச் சரியானப் புரிதலைப் பெற்றுக் கொள்வார்கள். நீ இயற்கைக்கு அப்பாற்பட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தினால், நீ வழிநடத்துபவர்களும் அப்படியே செய்வார்கள். நீ கடைபிடிப்பதைப் புறக்கணித்து விட்டு, அதற்குப் பதிலாகக் கலந்துரையாடலை வலியுறுத்தினால், அப்பொழுது நீ வழிநடத்துபவர்களும் கூட கடைப்பிடிக்காமல் அல்லது அவர்களது மனநிலைகளில் எந்த மாற்றத்தையும் பெறாமல் கலந்துரையாடுவதில் கவனம் செலுத்துவார்கள்; அவர்கள் எந்தவொரு சத்தியத்தையும் கடைப்பிடிக்காமல், மேலோட்டமான உற்சாகத்தினை மட்டுமே கொண்டிருப்பார்கள். எல்லா மக்களும் தங்களுக்குள் எதை வைத்திருக்கிறார்களோ அதையே மற்றவர்களுக்கும் வழங்குகிறார்கள். ஒருவர் எப்படிப்பட்ட நபர் என்பது எந்த பாதையில் அவர்கள் மற்றவர்களை வழிநடத்துகிறார்கள் என்பதிலும், மற்றும் எப்படிப்பட்ட மக்களை அவர்கள் வழிநடத்துகிறார்கள் என்பதிலும் தீர்மானிக்கப்படுகிறது. தேவன் பயன்படுத்துவதற்கு உண்மையில் பொருத்தமானவர்களாக இருப்பதற்கு, உங்களில் ஆசை இருந்தால் மட்டும் போதாது, தேவனிடத்தில் இருந்து மிக அதிக அளவில் பிரகாசமும், அவரது வார்த்தைகளில் இருந்து வழிநடத்துதலும், அவர் உங்களோடு இடைபட்ட அனுபவமும், அவரது வார்த்தைகளினால் உண்டாகும் சுத்திகரிப்பும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இதனை ஓர் அஸ்திபாரமாகக் கொண்டு, சாதாரணமான வேளைகளில், நீங்கள் உங்களது கவனிப்புகள், சிந்தனைகள், எண்ணங்கள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்றபடி உள்வாங்கிக் கொள்வதையோ அல்லது நீக்குதலையோ செய்ய வேண்டும். இவை அனைத்தும் யதார்த்தத்திற்குள் நீங்கள் பிரவேசிப்பதற்கான பாதைகளாகும், இவற்றுள் ஒவ்வொன்றும் தவிர்க்க முடியாதவையாகும். இப்படித்தான் தேவன் கிரியை செய்கிறார். தேவன் கிரியை செய்யும் இந்த வழிமுறைக்குள் நீ பிரவேசிப்பாயானால், அவரால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புகளை நீ பெற்றுக் கொள்ள முடியும். எந்த வேளையிலும், உன் சூழ்நிலை கடுமையானதாக அல்லது சாதகமானதாக இருந்தாலும், நீ சோதிக்கபடுவதாக அல்லது சோதனைக்குள்ளாக்கப்படுவதாக இருந்தாலும், நீ உழைப்பவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ தனிநபராக வாழ்க்கையை வாழ்பவனாகவோ அல்லது கூட்டத்தின் ஒரு பகுதியாக வாழ்பவனாகவோ இருந்தாலும் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்குரிய வாய்ப்புகளை நீ எப்பொழுதும் ஒன்றைக் கூட தவறவிட்டு விடாமல் கண்டுபிடித்துக் கொள்வாய். நீ அவை அனைத்தையும் கண்டுபிடித்துக் கொள்வாய்—இந்த விதத்தில், நீ தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான இரகசியத்தைக் கண்டுபிடித்திருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு தகுந்த மேய்ப்பன் என்னவிதத்தில் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 461

இந்நாட்களில், பிறரோடு ஒருங்கிணைந்து செயல்படும்போது எந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் பலரும் எப்போதும் கவனம் செலுத்துவதில்லை. பிறரோடு ஒருங்கிணைந்து செயல்படும்போது உங்களில் பலர் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிவதில்லை என்பதை நான் கண்டுபிடித்திருக்கிறேன்; உங்களில் பலர் உங்கள் சொந்தக் கருத்துக்களிலேயே விடாப்பிடியாக இருக்கிறீர்கள். சபையில் கிரியை செய்யும்போது நீ உனது கருத்தைச் சொல்லுகிறாய் மேலும் இன்னொருவர் அவர் கருத்தைச் சொல்லுகிறார், இவை இரண்டுக்கும் இடையில் சம்பந்தமே இருப்பதில்லை; நீ உண்மையில் ஒத்துழைப்பதே இல்லை. ஜீவனை ஒரு சிறிய வகையிலாவது தேடாமல், நீங்கள் எல்லோரும் உங்கள் சொந்த உள்ளுணர்வுகளைத் தெரிவிப்பதில் அல்லது உங்களுக்குள் இருக்கும் “பாரங்களை” வெளியேற்றுவதில் மட்டுமே மிகவும் கவனம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். வேறு யார் சொல்வதையும் செய்வதையும் கருத்தில் கொள்ளாமல் நீ உன் பாதையிலேயே நடக்க வேண்டும் என்று எப்போதும் நம்பி உன் கிரியையை ஏனோதானோவென்று மட்டுமே செய்வதாகத் தோன்றுகிறாய்; பிறருடைய சூழல்கள் எப்படி இருந்தாலும் சரி, நீ பரிசுத்த ஆவியானவர் வழிகாட்டுவது போலவே ஐக்கியம் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாய். உன்னால் மற்றவர்களின் பலத்தைக் கண்டறிய முடியவில்லை, மேலும் உன்னை நீயே ஆராயும் திறன் உனக்கில்லை. விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுவதும் கூட மிகவும் வேறுபட்டதாகவும் தவறானதாகவும் இருக்கிறது. இப்போதும் கூட நீங்கள் பழைய வியாதிக்குள் திரும்பியது போல், மிக அதிகமான சுயநீதியை வெளிக்காட்டுகிறீர்கள் என்று சொல்லலாம். முழுமையான வெளிப்படைத்தன்மையை அடையும் வகையில் நீங்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ளுவதில்லை. உதாரணமாக, ஒருசில சபைகளின் கிரியைகளிளிலிருந்து என்ன வகையான பலனை அடைந்திருக்கிறீர்கள் என்பதைப் பற்றி அல்லது உன்னுடைய உள்ளார்ந்த நிலைகளின் சமீபத்திய நிலை என்ன என்பது பற்றி, இன்னும் பலவற்றைப் பற்றியது; நீங்கள் இத்தகைய விஷயங்களைப் பற்றி தொடர்பு கொள்ளுவதே இல்லை. உங்கள் சொந்தக் கருத்துக்களை விட்டுவிடுதல் அல்லது உங்களை நீங்களே கைவிடுதல் போன்ற நடைமுறைகளில் உங்களுக்கு முற்றிலுமாக ஈடுபாடு இல்லை. தங்கள் சகோதர சகோதரிகளை எதிர்மறையாக மாறாமல் எப்படி வைத்திருப்பது மற்றும் அவர்களைத் தீவிரமாக பின்பற்றும் படி எவ்வாறு ஆக்குவது என்பவைகளைப் பற்றி மட்டுமே தலைவர்களும் ஊழியக்காரர்களும் யோசிக்கிறார்கள். இருப்பினும், நீங்கள் அனைவரும் தீவிரமாகப் பின்பற்றுவது மட்டுமே போதுமானது என்று நினைக்கிறீர்கள், மேலும் அடிப்படையில், உங்களை அறிவது மற்றும் உங்களை நீங்களே கைவிடுவது என்பதற்கு என்ன அர்த்தம் என்ற புரிதல் உங்களுக்கு இல்லை. அதைவிட, மற்றவர்களோடு ஒருங்கிணைந்து ஊழியம் செய்வதன் அர்த்தம் என்ன என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளுவதில்லை. தேவனது அன்பிற்காக அவருக்கு திரும்பச் செலுத்தும் விருப்பம் உங்களுக்கு இருப்பபதைப் பற்றியும், பேதுருவைப் போல ஜீவிக்கும் விருப்பம் உங்களுக்கு இருப்பதைப் பற்றியும் மட்டுமே நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த விஷயங்ககளைத் தவிர, நீங்கள் வேறொன்றையும் நினைப்பதில்லை. மற்ற ஜனங்கள் என்ன செய்தாலும் சரி, நீ கண்மூடித்தனமாக அடங்கியிருக்க மாட்டாய் என்றும், மற்ற ஜனங்கள் எப்படியாக இருந்தாலும், நீயாகவே தேவனால் பரிபூரணமாக்கப்படுவதைத் தேடுவாய் என்றும், அது போதுமானது என்றும் கூட நீ கூறுவாய். இருப்பினும், உண்மை என்னவென்றால், உனது சித்தம் எந்த வகையிலும் எதார்த்தத்தில் ஒரு திடமான வெளிப்பாட்டை அடையவில்லை. இவை எல்லாம் தற்போது நீங்கள் காண்பிக்கும் நடத்தையின் வகை அல்லவா? உங்கள் உள்நோக்குகளை நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியாகப் பற்றிகொண்டு பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதிக முன்னேற்றம் இல்லாமலேயே நீங்கள் இவ்வளவு நீண்ட காலத்திற்கு ஊழியம் செய்திருப்பதை நான் பார்க்கிறேன்; குறிப்பாக, இணக்கத்தோடு ஒருங்கிணைந்து கிரியை செய்வது என்ற இந்தப் பாடத்தில், நீங்கள் முற்றிலுமாக எதையும் அடையவில்லை! சபைகளுக்குள் செல்லும் போது நீங்கள் உங்கள் வழியில் தொடர்புகொள்ளுகிறீர்கள், மற்றவர்கள் அவர்கள் வழியில் தொடர்புகொள்ளுகிறார்கள். இணக்கமான ஒருங்கிணைவு அரிதாகவே ஏற்படுபடுகிறது, மேலும் உங்களுக்குக் கீழ் இருக்கும் பின்பற்றுபவர்களின் விஷயத்தில் இது இன்னும் அதிக அளவில் உண்மையாக இருக்கிறது. வேறு வகையில் கூறுவது என்றால், தேவனுக்கு ஊழியம் செய்வது என்றால் என்ன, அல்லது ஒருவர் எப்படி தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று உங்கள் மத்தியில் மிக அபூர்வமாகவே யாராவது ஒருவர் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் குழப்பமடைந்து, இந்த வகையான பாடங்களை அற்பமான விஷயங்களாகக் கையாளுகிறீர்கள். சத்தியத்தின் இந்த அம்சத்தை நடைமுறைப்படுத்தத் தவறுவதோடு, அறிந்தே தவறு செய்யும் பலரும் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஊழியம் செய்தவர்கள் கூட சண்டையிட்டு ஒருவருக்கொருவர் எதிராகத் திட்டமிடுகிறார்கள் மற்றும் பொறாமையோடும் போட்டி உணர்வோடும் இருக்கிறார்கள்; அவரவருக்காகவே எல்லோரும் என்பதோடு அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைப்பதே இல்லை. இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுடைய உண்மையான வளர்ச்சியைக் குறிக்கிறதல்லவா? அனுதினமும் ஊழியஞ்செய்யும் ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் ஒவ்வொரு நாளும் தேவாலயத்தில் தேவனுக்கு நேரடியாக ஊழியம் செய்த இஸ்ரவேலர்களைப் போலானவர்கள். தேவனுக்கு ஊழியம் செய்யும் ஜனங்களாகிய நீங்கள் எவ்வாறு ஒருங்கிணைவது அல்லது எவ்வாறு ஊழியம் செய்வது என்பது பற்றிய எண்ணம் இல்லாமல் இருப்பது எப்படி?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இஸ்ரவேலர்கள் செய்ததைப் போல ஊழியம் செய்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 462

இன்று உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால்—ஒன்றிணைந்து நல்லிணக்கத்தோடு கிரியை செய்வதுதான்—இஸ்ரவேலர்களிடம் இருந்து யேகோவா எதிர்பார்த்த ஊழியம் போன்றதுதான்: இல்லாவிட்டால், ஊழியம் செய்வதை நிறுத்திவிடுங்கள். ஏனெனில், நீங்கள் தேவனுக்கு நேரடியாக ஊழியம் செய்பவர்களாகையால், மிகக் குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் ஊழியத்தில் விசுவாசமாகவும் கீழ்ப்படியக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும், மேலும் நடைமுறைக்கு உகந்த வகையில் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் திறனுடையவர்களாகவும் இருக்க வேண்டும். சபைகளில் உங்களோடு ஊழியம் செய்யும், குறிப்பாக உங்களுக்குக் கீழுள்ள சகோதர சகோதரிகளில் யாராவது ஒருவர் உங்களோடு விஷயங்களைக் கையாளத் துணிவார்களா? உங்கள் முகத்துக்கு நேரே யாராவது ஒருவர் உங்கள் தவறுகளைக் கூறத் துணிவார்களா? நீங்கள் ஒவ்வொருவருக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறீர்கள்; நீங்கள் ராஜாக்களைப் போல அரசாளுகிறீர்கள்! இந்தவகையான நடைமுறைக்கு ஏற்ற பாடங்களைப் படிக்கவோ அல்லது அதற்குள் பிரவேசிப்பதோ கூட இல்லை, இருந்தாலும் தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றி இன்னும் பேசுகிறாய்! தற்போது பல சபைகளை வழிநடத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறாய், நீயாகவே விட்டுக்கொடுக்காமல் இருப்பதோடு, உன்னுடைய சொந்தக் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை இன்னும் பற்றிப்பிடித்துகொண்டு, இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறுகிறாய், “இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஏனெனில் நாம் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடாது என்று தேவன் கூறியிருக்கிறார், மேலும் இப்போதெல்லாம் குருட்டுத்தனமாகக் கீழ்ப்படியக் கூடாது.” ஆகையால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த எண்ணங்களின்படி தொடர்கிறீர்கள், மேலும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிவதில்லை. உங்கள் ஊழியம் தடைபட்டு நிற்கிறது என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருக்கிறீர்கள், இருந்தாலும் நீங்கள் கூறுகிறீர்கள், “நான் பார்க்கிறபடி, என்னுடைய வழி ஏறக்குறைய சரியானது. எப்படி இருந்தாலும், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம் இருக்கிறது: நீ உன்னுடையதைப் பற்றி பேசு, மேலும் நான் என்னுடையதைப் பற்றி பேசுவேன்; நீ உன்னுடைய தரிசனத்தைப் பற்றி ஐக்கியப்படு, மேலும் நான் என்னுடைய பிரவேசத்தைப் பற்றி பேசுவேன்.” கையாளப்பட வேண்டிய பல விஷயங்களுக்கு நீங்கள் ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை, அல்லது வெறுமனே நீங்கள் எதையாவது செய்து கொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்தக் கருத்துக்களையே வெளியிட்டுக்கொண்டு மற்றும் உங்கள் அந்தஸ்து, புகழ் அல்லது முகத்தைப் புத்திசாலித்தனமாகக் காப்பாற்றிக் கொள்ளுகிறீர்கள். உங்களில் ஒருவரும் உங்களைத் தாழ்த்திக்கொள்ள விரும்புவதில்லை மேலும் ஜீவிதம் வேகமாக முன்னேறிச் செல்ல ஏதுவாக ஒரு தரப்பார் கூட விட்டுக்கொடுத்து ஒருவருக்கொருவர் குறைபாடுகளையும் நிவிர்த்தி செய்ய முன்முயற்சி எடுப்பதில்லை. நீங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, சத்தியத்தைத் தேடக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் கூறலாம், “சத்தியத்தின் இந்த அம்சம் பற்றி எனக்குத் தெளிவான புரிதல் இல்லை. அதில் உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது?” அல்லது, நீ கூறலாம், “இந்த அம்சத்தைப் பொறுத்த வரையில் என்னை விட உனக்குக் கூடுதல் அனுபவம் உள்ளது; உன்னால் எனக்கு தயவுசெய்து கொஞ்சம் வழிகாட்டுதல் தர முடியுமா?” அதைக் கையாளுவதில் இது ஒரு சிறந்த முறையாக இருக்குமல்லவா? நீங்கள் ஏராளமான பிரசங்கங்களைக் கேட்டுவிட்டீர்கள், மேலும் ஊழியம் செய்வதில் கொஞ்சம் அனுபவமும் உள்ளது. நீங்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்ளாவிட்டால், ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்யாமல், சபைகளில் ஊழியம் செய்யும்போது ஒருவருக்கொருவர் குறைபாட்டை நிவிர்த்தி செய்யாமல் இருந்தால், நீங்கள் எந்த ஒரு பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்ளுவீர்கள்? நீங்கள் எதையாவது ஒன்றை எதிர்கொள்ளும்போது, உங்கள் ஜீவிதங்கள் நன்மை அடையும் வண்ணம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளுங்கள். மேலும், எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்னர், எந்த வகையான விஷயம் பற்றியும் கவனமாக நீங்கள் ஐக்கியப்பட வேண்டும். இப்படிச் செய்வதனால் மட்டுமே வெறுமனே ஏனோதானோவென்று செயல்படாமல் நீங்கள் சபைக்காகப் பொறுப்பேற்கிறீர்கள். எல்லா சபைகளுக்கும் சென்ற பின்னர், நீங்கள் ஒன்று கூடி நீங்கள் கண்டறிந்த எல்லா சிக்கல்கள் மற்றும் உங்கள் கிரியையில் நீங்கள் எதிர்கொண்ட எந்த ஒரு பிரச்சினைகள் பற்றியும் ஐக்கியம் கொள்ள வேண்டும், அதன் பின்னர் நீங்கள் பெற்ற பிரகாசம் மற்றும் வெளிச்சத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டும்—இது ஊழியத்தின் இன்றியமையாத நடைமுறையாகும். தேவனுடைய கிரியையையின் நோக்கத்திற்காகவும் சபையின் நன்மைக்காகவும், அதனால் உங்கள் சகோதர சகோதரிகளை முன்னோக்கி ஊக்குவிக்கவும் நீங்கள் ஒத்திசைவான கூட்டுறவை அடைய வேண்டும். தேவனுடைய சித்தத்தில் கவனம் செலுத்துவதற்காக, ஒவ்வொருவரும் அடுத்தவரைச் சீர்படுத்தி, ஒரு சிறந்த கிரியையின் பலனை அடைந்து, நீ ஒருவரோடு ஒருவர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவே உண்மையான ஒத்துழைப்பு, மேலும் இதில் ஈடுபடுபவர்கள் மட்டுமேஉண்மையான பிரவேசத்தை அடைவார்கள். ஒத்துழைக்கும் போது, நீ பேசும் சில வார்த்தைகள் பொருத்தம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது பரவாயில்லை. அதைப் பற்றி பின்னர் ஐக்கியம் கொள்ளுங்கள், மேலும் அதைப்பற்றி தெளிவான புரிதலை அடையுங்கள்; அதைப் புறக்கணிக்க வேண்டாம். இப்படிப்பட்ட ஐக்கியத்துக்குப் பின்னர், நீ உன் சகோதர சகோதரிகளின் குறைபாட்டை நிவிர்த்தி செய்யலாம். இப்படி உன் கிரியையில் எப்போதும் இல்லாத வகையில் ஆழமாகச் செல்லும் போது மட்டுமே நீ சிறந்த பலனை அடையமுடியும். தேவனுக்கு ஊழியம் செய்பவராக இருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும், வெறுமனே உங்கள் நலன்களை மட்டுமேகருத்தில் கொள்ளாமல், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் சபையின் நலன்களைப் பாதுகாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சிறுமைப்படுத்தி, தனித்தனியாகச் செயலாற்றுவது ஏற்கமுடியாதது. அப்படி நடந்துகொள்ளும் ஜனங்கள் தேவனுக்கு ஊழியம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆவர். இத்தகைய ஜனங்களுக்கு மோசமான மனநிலை இருக்கும்; அவர்களிடம் சிறிதளவு மனிதத்தன்மையும் இருக்காது. அவர்கள் நூறு சதவீதம் சாத்தான்! அவர்கள் மிருகங்கள்! இப்போது கூட, அப்படிப்பட்ட விஷயங்கள் உங்கள் மத்தியில் இன்னும் நடக்கின்றன! ஐக்கியத்தின் போது வேண்டும் என்றே காரணங்களைத் தேடி, அற்பமான விஷயங்களைப் பற்றி விவாதம் செய்யும் போது முகம் சிவக்கக் கோபம்கொண்டு, ஒருவரும் தங்களை ஒதுக்கி வைக்க விரும்பாமல், ஒவ்வொருவரும் தங்கள் அக சிந்தனைகளை மற்றவரிடம் இருந்து மறைத்துகொண்டு, அடுத்தத் தரப்பைத் தீவிரமாகக் கண்காணித்து எப்பொழுதும் கவனமாக இருக்கிறீர்கள். இந்த வகையான மனநிலை தேவனுடைய ஊழியத்துக்குப் பொருத்தமானதா? இத்தகைய உனது கிரியை உனது சகோதர சகோதரிகளுக்கு எதையாவது வழங்க முடியுமா? ஜனங்களை உன்னால் சரியான ஜீவித முறைக்குள் வழிநடத்த முடியாததுடன் நீ உன் சகோதர சகோதரிகளுக்குள் உண்மையில் சீர்கேடான மனநிலையைப் புகுத்துகிறாய். நீ மற்றவர்களைக் காயப்படுத்துகிறாய் இல்லையா? உன் மனசாட்சி மோசமாக இருக்கிறது, மற்றும் அது முற்றிலுமாக அழுகிப்போய்விட்டது! உன்னால் எதார்த்தத்துக்குள் பிரவேசிக்க முடியவில்லை, சத்தியத்தையும் உன்னால் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும், மற்றவர்களுக்கு உன் பிசாசின் இயல்பை வெட்கமின்றி வெளிப்படுத்திக் காட்டுகிறாய். உனக்கு வெட்கமே இல்லை! இந்தச் சகோதர சகோதரிகள் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனாலும்நீ அவர்களை நரகத்துக்குக் கொண்டு செல்கிறாய். மனசாட்சி அழுகிப்போன ஒருவன் அல்லவா நீ? உனக்கு முற்றிலும் வெட்கம் என்பதே இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இஸ்ரவேலர்கள் செய்ததைப் போல ஊழியம் செய்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 463

ஒவ்வொரு யுகத்திலும் அந்த யுகத்தின் முக்கியத்துவத்தைப் பொருத்தமான முறையில் தெரிவிக்கும் மொழியின் மூலம், தேவன் வெளிப்படுத்திய மனநிலையை ஓர் உறுதியான முறையில் உன்னால் தெரிவிக்க இயலுமா? கடைசி நாட்களில் தேவனின் கிரியையை அனுபவிக்கும் உன்னால், தேவனின் நீதிக்குரிய மனநிலையை விரிவாக விவரிக்க முடியுமா? தேவனின் மனநிலையைப் பற்றி உன்னால் தெளிவாகவும் துல்லியமாகவும் சாட்சிக் கொடுக்க முடியுமா? நீதிக்கான பசியும் தாகமும் கொண்டிருந்து, உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று காத்திருக்கும் பரிதாபகரமான, ஏழ்மையான, பக்தியுள்ள மத விசுவாசிகளுக்கு நீ கண்ட மற்றும் அனுபவித்த விஷயங்களை எவ்வாறு தெரிவிப்பாய்? உன்னால் மேய்க்கப்பட வேண்டும் என்று எந்த வகையான ஜனங்கள் காத்திருக்கிறார்கள்? உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? உன் தோள்களின் மீதுள்ள சுமை, உனக்களிக்கப்பட்ட கட்டளை மற்றும் உன் பொறுப்பு குறித்து நீ அறிவாயா? வரலாற்றுப் பணிக்கான உன் உணர்வு எங்கே? அடுத்த யுகத்தில் ஓர் எஜமானராக நீ எவ்வாறு போதுமான அளவிற்கு பணியாற்றுவாய்? உனக்கு எஜமானராக இருக்கவேண்டிய நிலை குறித்த வலுவான உணர்வு இருக்கிறதா? எல்லாவற்றிற்குமான எஜமானரை நீ எவ்வாறு விளக்குவாய்? அது உண்மையில் எல்லா ஜீவஜந்துக்களுக்கும், உலகில் சரீரம் கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் எஜமானரா? அடுத்தக் கட்டப் பணிகளின் முன்னேற்றத்திற்கு நீ என்ன திட்டங்களை வைத்திருக்கிறாய்? தங்களின் மேய்ப்பராக நீ வேண்டும் என எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? உன் பணி கனமானதா? அவர்கள் ஏழைகள், பரிதாபகரமானவர்கள், குருடர்கள், மேலும் நஷ்டத்தால் அந்தகாரத்தில் அழுகிறார்கள்—எங்கிருக்கிறது வழி? பல ஆண்டுகளாக மனுஷனை ஒடுக்கிய அந்தகாரத்தின் படைகளை, திடீரென இறங்கி சிதறடிக்கும் ஒரு விண்கல் போன்ற வெளிச்சத்திற்காக அவர்கள் எப்படி ஏங்குகிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் நம்புகிறார்கள், இதற்காக அவர்கள் இரவும் பகலும் எப்படி ஏங்குகிறார்கள் என்பதை யார் அறிய முடியும்? ஒளி வீசும் நாளில் கூட, ஆழ்ந்து துன்பப்படும் இந்த ஜனங்கள் விடுதலைக்கான நம்பிக்கையின்றி அந்தகார நிலவறைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; எப்போது அவர்கள் இனியும் அழாமல் இருப்பர்? ஒருபோதும் ஓய்வு வழங்கப்படாத இந்தப் பலவீனமான ஆவிகள் பயங்கர துரதிர்ஷ்டவசமானவை, மேலும் இதே நிலையில் அவை இரக்கமற்ற அடிமைகளாகவும் மற்றும் உறைந்த வரலாற்றைக் கொண்டவைகளாகவும் நீண்ட காலமாக கட்டப்பட்டுள்ளன. அந்த ஜனங்கள் அழும் சத்தத்தை யார் கேட்டிருக்கிறார்கள்? அவர்களின் பரிதாப நிலையை யார் கவனித்திருக்கிறார்கள்? தேவனின் இருதயம் எவ்வளவு வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று உனக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படிப்பட்ட வேதனையை, தன் சொந்த கைகளால் சிருஷ்டிக்கப்பட்ட அப்பாவி மனுஷகுலம் அனுபவிப்பதை அவரால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷர் விஷமாக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மனுஷன் இன்றுவரை உயிர் பிழைத்திருந்தாலும், மனுஷகுலத்திற்கு நீண்ட காலமாக தீயவனால் விஷம் கொடுக்கப்பட்டு வருவதை யார் அறிந்திருக்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்பதை நீ மறந்துவிட்டாயா? தேவன் மீதான உனது அன்பின் காரணமாக, இந்த உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற நீ பாடுபடத் தயாராக இல்லையா? தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் போல மனுஷகுலத்தை நேசிக்கும் தேவனுக்குத் திருப்பிச் செலுத்த உங்கள் ஆற்றல் முழுவதையும் அர்ப்பணிக்க நீங்கள் தயாராக இல்லையா? ஒட்டுமொத்தமாக, உன் அசாதாரண வாழ்க்கையை வாழ நீ தேவனால் பயன்படுத்தப்படுவதை எவ்வாறு விளக்குவாய்? ஒரு பக்தியுள்ள, தேவனைச் சேவிக்கும் நபரின் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான உறுதியும் நம்பிக்கையும் உனக்கு உண்மையாகவே இருக்கிறதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உன் எதிர்காலப் பணியை நீ எவ்வாறு செய்ய வேண்டும்?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 464

மக்கள் என்னை விசுவாசித்தாலும், எனக்கு சாட்சியாக விளங்க அவர்களுக்குத் திறன் இல்லை, அல்லது என்னை நான் தெரியப்படுத்தும் முன் அவர்களால் எனக்காகச் சாட்சி அளிக்க முடியவில்லை. நான் சிருஷ்டிகளையும் எல்லா பரிசுத்த மனிதர்களையும் விஞ்சி இருப்பதை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர், மேலும் நான் செய்யும் கிரியைகளை மனிதர்களால் செய்ய முடியாது என்றும் பார்க்கிறார்கள். இவ்வாறு, யூதர்களில் இருந்து இந்நாளின் மக்கள் வரை எனது மகத்துவமான கிரியைகளை நோக்கிப் பார்க்கும் அனைவருமே என்னைக் குறித்த ஆர்வத்தால் நிறைந்திருக்கிறார்களே ஒழிய ஓர் ஒற்றைச் சிருஷ்டியின் வாயும் என்னைக் குறித்த சாட்சியைப் பகர முடியவில்லை. எனது பிதா மட்டுமே எனக்குச் சாட்சி அளித்தார், மேலும் அனைத்து சிருஷ்டிகளின் மத்தியிலும் எனக்காக ஒரு பாதையை உருவாக்கியிருக்கிறார்; அவர் அவ்வாறு செய்திருக்கவில்லை எனில், நான் எவ்வாறாகக் கிரியை செய்திருந்தாலும், நானே சிருஷ்டிப்பின் கர்த்தர் என்று மனிதன் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டான், ஏனெனில் மனிதன் என்னிடம் இருந்து எடுத்துக்கொள்ள மட்டுமே அறிந்திருக்கிறானே தவிர, என்னுடைய கிரியைகளின் நிமித்தம் என்னிடம் விசுவாசம் கொள்ளவில்லை. நான் பரிசுத்தராகவும் எந்த வகையிலும் ஒரு பாவியாக இல்லாமல் இருப்பதாலும், எண்ணற்ற மறைபொருட்களை என்னால் விளக்கமுடியும் என்பதாலும், திரளான மக்களுக்கு மேலானவராக இருப்பதாலும், அல்லது என்னிடம் இருந்து அதிக நன்மைகளைப் பெற்றிருப்பதாலும் மட்டுமே மனிதன் என்னை அறிகிறான், ஆனால் நானே சிருஷ்டி கர்த்தர் என்று ஒரு சிலரே விசுவாசிக்கிறார்கள். இதனால்தான் என் மேல் ஏன் விசுவாசம் வைத்திருக்கிறான் என்று மனிதனுக்குத் தெரியவில்லை என்று நான் கூறுகிறேன்; என்னில் விசுவாசம் வைப்பதன் நோக்கம் அல்லது முக்கியத்துவம் அவனுக்குத் தெரியவில்லை. எனக்குச் சாட்சியாக விளங்க முற்றிலும் தகுதியற்ற அளவுக்கு மனிதனின் உண்மைத்தன்மை குறைவுபட்டதாக உள்ளது. உண்மை விசுவாசம் உங்களிடம் மிகக் குறைவாக உள்ளது, மேலும் நீங்கள் மிகக் குறைவாகவே அடைந்திருக்கிறீர்கள், ஆகவே உங்களிடம் மிகக் குறைந்த அளவே சாட்சி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், நீங்கள் மிகக் குறைவாகவே புரிந்து கொள்ளுகிறீர்கள் மற்றும் என்னுடைய கிரியைகளுக்குச் சாட்சியளிக்க ஏறத்தாழ தகுதியற்ற அளவுக்கு அதிகக் குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறீர்கள். உங்கள் மன உறுதி உண்மையில் கருத்தில் எடுத்துக்கொள்ளத்தக்கதாகும், ஆனால் தேவனின் சாராம்சத்தைக் குறித்து வெற்றிகரமாக உங்களால் சாட்சியம் அளிக்க முடியும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? நீங்கள் அனுபவித்ததும் பார்த்ததும் எல்லா காலங்களிலும் இருந்த பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை விடவும் மிதமிஞ்சியதாகக் காணப்படுகிறது, ஆனாலும் கடந்த காலத்தின் இந்தப் பரிசுத்தவான்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை விட பெரிய சாட்சியை உங்களால் அளிக்க முடியுமா? இப்போது நான் உங்களுக்கு வழங்குவது மோசேயை மிஞ்சுவதாகவும், தாவீதை ஒளிமங்கச் செய்வதாகவும் உள்ளது, ஆகவே அதுபோல உங்கள் சாட்சியும் மோசேயை மிஞ்சுவதாகவும் உங்கள் வார்த்தைகள் தாவீதுடையதை விடப் பெரியனவாகவும் இருக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். நான் உங்களுக்கு நூறு மடங்காக அளிக்கிறேன்—ஆகவே அதுபோன்றே அவ்வகையிலேயே நீங்கள் எனக்குத் திருப்பியளிக்க வேண்டும் என்று கேட்கிறேன். மனுக்குலத்திற்கு ஜீவனை அருளுவது நான் ஒருவனே என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் நீங்கள்தான் என்னிடம் இருந்து ஜீவனைப் பெறுகிறீர்கள் மற்றும் நீங்கள்தான் எனக்குச் சாட்சிகொடுக்க வேண்டும். இது நான் உங்களிடத்தில் அனுப்பும் உங்கள் கடமையாகும், இதை நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டும். நான் உங்களுக்கு என் சகல மகிமையையும் வழங்கியிருக்கிறேன், தெரிந்துகொள்ளப்பட்ட மக்களான இஸ்ரவேலர்கள் ஒருபோதும் பெறாத ஜீவனை உங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன். அந்த உரிமையின் படி, நீங்கள் எனக்குச் சாட்சிகொடுக்க வேண்டும் மற்றும் உங்கள் இளமையை எனக்குச் சமர்ப்பணம் செய்து உங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். யாருக்கெல்லாம் நான் என் மகிமையை வழங்குகிறேனோ அவர்கள் எனக்காகச் சாட்சிகளாக இருந்து தங்கள் ஜீவனை அர்ப்பணிக்க வேண்டும். இது வெகுகாலத்திற்கு முன்னரே என்னால் முன்குறிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுக்கு என் மகிமையை வழங்குவது என்பது உங்கள் நல் அதிர்ஷ்டமாகும், மேலும் என் மகிமைக்குச் சாட்சியாக இருப்பது உங்கள் கடமையாகும். ஆசிர்வாதங்களைப் பெறுவதற்காக மட்டுமே என்னை நீங்கள் விசுவாசித்தால், என் கிரியையின் முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கும், மற்றும் நீங்கள் உங்கள் கடமையை நிறைவு செய்யாதவர்களாக இருப்பீர்கள். இஸ்ரவேலர்கள் என் இரக்கம், அன்பு மற்றும் மகத்துவத்தை மட்டுமே பார்த்தார்கள், மற்றும் யூதர்கள் என் பொறுமை மற்றும் மீட்புக்கு மட்டுமே சாட்சியம் அளித்தார்கள். அவர்கள் தங்களால் புரிந்துகொள்ளத்தக்க அளவுக்கே என் ஆவியின் கிரியைகளின் மிக மிக குறைந்ததையே, ஆனால் நீங்கள் கேட்டு அறிந்தவைகளில் பத்தாயிரத்தில் ஒரு பகுதியையே கண்டார்கள். நீங்கள் கண்டிருப்பவை அவர்கள் நடுவில் இருந்த பிரதான ஆசாரியர்களை விடவும் கூட மிஞ்சுகின்றன. இன்று நீங்கள் புரிந்துகொள்ளும் சத்தியங்கள் அவர்களுடையவற்றை விட அதிகம்; இன்று நீங்கள் கண்டவை, நியாயப்பிரமாணத்தின் காலத்தையும், கிருபையின் காலத்தையும் விடக் கூடுதலானவை, மேலும் நீங்கள் அனுபவித்திருப்பவை மோசேயையும் எலியாவையும் கூட மிஞ்சுகின்றன. ஏனெனில், இஸ்ரவேலர்கள் புரிந்துகொண்டவை யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யேகோவாவின் பின்புறத்தை மட்டுமே; யூதர்கள் புரிந்துகொண்டது இயேசுவின் மீட்பை மட்டுமே, அவர்கள் பெற்றுக்கொண்டது இயேசுவால் அருளப்பட்ட கிருபையை மட்டுமே, மேலும் அவர்கள் கண்டது யூதர்களின் வீட்டுக்குள் இயேசுவின் சாயலை மட்டுமே. இன்று நீங்கள் காண்பது யேகோவாவின் மகிமையை, இயேசுவின் மீட்பை, மற்றும் இந்நாளின் என்னுடைய அனைத்துக் கிரியைகளையும் ஆகும். அவ்வாறே, என் ஆவியின் வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், என்னுடைய ஞானத்தை அறிந்து போற்றியிருக்கிறீர்கள், எனது அதிசயங்களை அறிந்து கொண்டிருக்கிறீர்கள், மற்றும் என் மனநிலையைக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நான் என் ஆளுகைத் திட்டங்கள் எல்லாவற்றையும் உங்களிடம் கூறியிருக்கிறேன். நீங்கள் கண்டிருப்பது வெறும் ஓர் அன்பான மற்றும் இரக்கமுள்ள தேவனை மட்டுமல்ல, நீதியால் நிரம்பிய ஒரு தேவனையுமே. நீங்கள் என் அற்புதக் கிரியைகளை கண்டிருக்கிறீர்கள் மேலும் நான் மகத்துவத்தாலும் உக்கிரத்தாலும் நிரம்பித் ததும்புவதையும் அறிந்திருக்கிறீர்கள். மேலும், ஒருமுறை இஸ்ரவேலரின் வீட்டுக்குள் என் கடுங்கோபத்தைக் கொண்டு வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள், மற்றும் அந்த இந்நாள், அது உங்கள் மேல் வந்துவிட்டது. ஏசாயாவையும் யோவானையும் விட அதிகமாகப் பரலோகத்தில் என் இரகசியங்களை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்கள்; என் சௌந்தரியத்தையும் வணங்கத்தக்கத் தன்மையையும் பற்றி கடந்த காலங்களின் பரிசுத்தவான்களை விடவும் நீங்கள் அதிகமாக அறிவீர்கள். நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் என் சத்தியத்தையும், என் வழியையும், என் ஜீவனையும், மட்டுமல்லாமல் யோவானின் தரிசனத்தை விடவும் பெரிய ஒரு தரிசனத்தையும் ஒரு வெளிப்பாட்டையும் ஆகும். நீங்கள் இன்னும் பல இரகசியங்களைப் புரிந்துகொள்ளுகிறீர்கள், மற்றும் என் உண்மையான முகத்தோற்றத்தையும் நோக்கிப் பார்த்திருக்கிறீர்கள்; நீங்கள் அதிகமான என் நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் மேலும் என்னுடைய நீதியான மனநிலையைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் கடைசி நாட்களில் பிறந்திருந்தாலும், உங்கள் புரிந்துகொள்ளுதல் முந்தியதையும் கடந்தகாலத்தைப் பற்றியதும் ஆகும், மேலும் இன்றைய நாளின் விஷயங்களையும் அனுபவித்திருக்கிறீர்கள், மற்றும் இவை எல்லாம் என்னால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டவை. நான் உங்களிடம் கேட்பது மிகையானது அல்ல, ஏனெனில் நான் உங்களுக்கு அதிகமாக அளித்திருக்கிறேன், மேலும் நீங்கள் என்னில் அதிகமாகக் கண்டிருக்கிறீர்கள். இவ்வாறு, கடந்த காலத்தின் பரிசுத்தவான்களுக்கு எனது சாட்சியாக இருக்கும்படியாக நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன், மற்றும் இதுவே என் இருதயத்தின் ஒரே விருப்பமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 465

நீ என்னை ஏன் விசுவாசிக்கிறாய் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரிகிறதா? என் கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் நீ உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? உன் கடமைகளை உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? என் சாட்சியை உண்மையிலேயே அறிந்துகொள்கிறாயா? நீ வெறுமனே என்னை விசுவாசித்து, ஆனால் உன்னில் என் மகிமை அல்லது சாட்சியின் அடையாளம் இல்லை எனில், முன்னரே நான் உன்னை புறம்பாக்கிவிட்டேன் என்றாகிறது. இவைகளை எல்லாம் அறிந்தவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எல்லாம் என் பார்வையில் அதிகமான முட்களே, மற்றும் என் வீட்டில், என் வழிகளில் அவர்கள் தடைகளே அன்றி வேறல்ல, என் கிரியையில் இருந்து முற்றிலுமாகத் தூற்றப்படவேண்டிய பதர்களே, அவர்களால் பயன் இல்லை, அவர்கள் மதிப்பேதும் அற்றவர்கள், நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே வெறுத்துவிட்டேன். சாட்சி இல்லாத எல்லோர் மேலும் அடிக்கடி என் கோபாக்கினை விழுகிறது, மேலும் ஒருபோதும் என் கோல் அவர்களிடம் இருந்து விலகுவதில்லை. நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே தீயவன் கைகளில் அளித்துவிட்டேன்; என் ஆசீர்வாதம் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள். நாள் வரும்போது, புத்தியில்லாத ஸ்திரீகளைவிட இவர்களுக்கான தண்டனை மிகவும் கடினமானதாக இருக்கும். இன்று, எனது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே நான் செய்கிறேன்; கோதுமை அனைத்தையும் அந்தப் பதர்களோடும் கூட நான் கட்டுகளாகக் கட்டுவேன். இன்று என் கிரியை இதுவே. நான் தூற்றும் காலத்தில் அந்தப் பதர்கள் தூற்றப்பட்டு அகற்றப்படும், பின்னர் கோதுமை மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்படும், தூற்றப்பட்ட அந்தப் பதர்கள் அக்கினியின் நடுவில் வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படும். எல்லா மனிதர்களையும் கட்டுகளாகக் கட்டுவது மட்டுமே இப்போதைய என் கிரியையாகும்; அதாவது, அவர்களை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவதேயாகும். பின் எல்லா மனிதர்களின் முடிவையும் வெளிப்படுத்தத் தூற்றுதலை நான் தொடங்குவேன். மேலும் நீ என்னை திருப்திப்படுத்துவது எவ்வாறு என்பதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டும், மற்றும் என்னில் உனக்கிருக்கும் விசுவாசத்தை சரியான பாதையில் அமைக்க வேண்டும். இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என்னில் நீ வைக்கும் விசுவாசத்தின் கடமை என்னவென்றால் எனக்கு நீ சாட்சி கொடுப்பதும், எனக்கு உண்மையாய் இருப்பதும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிதலுடன் இருப்பதும் தவிர வேறில்லை. என் கிரியையின் அடுத்த படியை நான் தொடங்கும் முன் எனக்கு நீ எவ்வாறு சாட்சிகொடுப்பாய்? எவ்வாறு நீ எனக்கு உண்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவனாய் இருப்பாய்? நீ உன் முழு உத்தமத்தையும் உனது பணிக்கு அர்ப்பணிப்பாயா, அல்லது விட்டுவிடுவாயா? எனது ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் (மரணமாக அல்லது அழிவாக இருந்தாலும்) ஒப்புக்கொடுப்பாயா அல்லது எனது சிட்சைக்கு விலகி நடுவழியில் ஓடிவிடுவாயா? நீ எனக்குச் சாட்சியாக விளங்க வேண்டும் என்றும், எனக்கு உண்மையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் என்றே நான் உன்னை சிட்சிக்கிறேன். மேலதிகமாக, தற்போதைய சிட்சை என் கிரியையின் அடுத்த படியை அவிழ்க்கவும் கிரியை தடைபடாது நடக்கவுமே ஆகும். எனவே, ஞானம் உள்ளவனாக இருந்து உன்னுடைய ஜீவனையும் வாழ்வின் முக்கியத்துவத்தையும் அற்பமான மணலைப் போன்றது என எண்ணி நடந்துகொள்ளாதே என நான் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். வரவிருக்கும் என் கிரியை சரியாக என்னவாக இருக்கும் என்று உன்னால் சரியாக அறிய முடியுமா? வரவிருக்கும் நாட்களில் நான் எவ்வாறு கிரியை செய்வேன் என்பதும் எவ்வாறு என் கிரியை கட்டவிழும் என்பதும் உனக்குத் தெரியுமா? என் கிரியையில் உனக்குள்ள அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மேலதிகமாக, என்னில் இருக்கும் உன் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் நீ அறிய வேண்டும். நான் மிக அதிகமாக செய்துவிட்டேன்; நீ கற்பனை செய்வதுபோல என்னால் எப்படி பாதியில் விட்டுவிட முடியும்? நான் அப்படிப்பட்ட விசாலமான கிரியையைச் செய்திருக்கிறேன். நான் அதை எவ்வாறு அழிக்க முடியும்? உண்மையில், இந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே நான் வந்திருக்கிறேன். இது உண்மையே, ஆனால் மேலும் நான் ஒரு புதிய யுகத்தை, புதிய கிரியையைத் தொடங்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கவும் இனிவரும் காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப ஓர் அடித்தளத்தை அமைக்கவும், எதிர்காலத்தில் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மட்டுமே என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என் கிரியை நீ நினைப்பது போல் மிக எளிதானதும் அல்ல, நீ நம்புவது போல மதிப்பற்றதும் அல்லது அர்த்தமற்றதும் அல்ல. ஆகவே, நான் இன்னும் உன்னிடம் கூறவேண்டியது: நீ உன் ஜீவனை என் கிரியைக்கு அளிக்க வேண்டும், மேலும், நீ என் மகிமைக்கு உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீண்ட காலமாக நீ எனக்கு சாட்சி கொடுக்க வேண்டும் என நான் ஆவலாய் இருந்தேன், மேலும் இன்னும் அதிகமாக நான் நீ என் சுவிஷேஷத்தைப் பரப்ப வேண்டும் என்று ஏங்கினேன். என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 466

உங்கள் விசுவாசம் மிகவும் உண்மையானது என்றாலும், உங்களில் எவராலும் என்னைப் பற்றிய ஒரு முழுமையான விவரத்தையும் கொடுக்க முடியாது, நீங்கள் காணும் அனைத்து உண்மைகளுக்கும் எவராலும் முழு சாட்சியம் அளிக்க முடியாது. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: இன்று, உங்களில் பெரும்பாலோர் உங்கள் கடமைகளைக் கைவிடுவது, அதற்கு பதிலாக மாம்சத்தைப் பின்தொடர்வது, மாம்சத்தைத் திருப்திப்படுத்துவது, பேராசையுடன் மாம்சத்தை அனுபவிப்பது என்று இருக்கிறீர்கள். உங்களிடம் கொஞ்சம் சத்தியம் உள்ளது. அப்படியானால், நீங்கள் கண்ட எல்லாவற்றிற்கும் நீங்கள் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்க முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? இன்று நீ கண்ட எல்லாவற்றிற்கும் உன்னால் சாட்சியமளிக்க முடியாத ஒரு நாள் வந்தால், நீ சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் செயல்பாட்டை இழந்திருப்பாய், மேலும் நீ இதுவரை ஜீவிப்பதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. நீ மனிதனாக இருக்கத் தகுதியற்றவனாய் இருப்பாய். நீ மனிதனாக இருக்க மாட்டாய் என்று கூட சொல்லலாம்! நான் உங்களிடம் அளவிட முடியாத கிரியையைச் செய்துள்ளேன், ஆனால் நீ தற்போது எதையும் கற்றுக்கொள்ளாமல், எதிலும் விழிப்புணர்வில்லாமல், உன் உழைப்பை வீணாக்கியிருப்பதால், எனது கிரியையை விஸ்தரிக்க வேண்டிய நேரம் வரும் பொழுது, நீ புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் வெறித்து, வாயடைத்து, முற்றிலும் உபயோகமற்று இருப்பாய். அது உன்னை எல்லா நேரத்திலும் பாவியாக உருவாக்காது? அந்த நேரம் வரும் பொழுது, நீ ஆழமாக மனஸ்தாபப்படவில்லையா? நீ மனவருத்தத்தில் மூழ்க மாட்டாயா? இன்று எனது கிரியைகள் அனைத்தும் சோம்பலாகவும் மற்றும் சலிப்பாகவும் செய்யப்படவில்லை, ஆனால் எனது வருங்காலக் கிரியைக்கு ஓர் அடித்தளத்தை அமைப்பதாகும். நான் ஒரு முட்டுக்கட்டைக்குள்ளாகி விட்டேன் என்பதல்ல, மேலும் புதியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பதாகும். நான் செய்யும் கிரியையை நீ புரிந்துகொள்ள வேண்டும்; இது தெருவில் விளையாடும் ஒரு குழந்தையால் செய்யப்பட்ட ஒன்று அல்ல, ஆனால் இது என் தந்தையின் பிரதிநிதித்துவத்தில் செய்யப்படும் கிரியை ஆகும். இதையெல்லாம் நானே செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; மாறாக, நான் என் தந்தையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இதற்கிடையில், உங்கள் வேலை உறுதியாக பின்பற்றுவதும், கீழ்ப்படிவதும், மாறுவதும், மற்றும் சாட்சியளிப்பதும் ஆகும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், என்னில் நீங்கள் ஏன் விசுவாசம் கொள்ள வேண்டும்; இது நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி ஆகும். என் பிதா அவருடைய மகிமையின் நிமித்தமாக உலகைச் சிருஷ்டித்த தருணத்திலிருந்து உங்கள் அனைவரையும் எனக்காக முன்குறித்தார். எனது கிரியையின் நிமித்தம், அவருடைய மகிமையின் நிமித்தம், அவர் உங்களை முன்குறித்தார். என் பிதாவினால்தான் நீங்கள் என்னில் விசுவாசம் கொள்கிறீர்கள்; என் பிதாவின் தீர்க்கதரிசனத்தின் காரணமாகவே நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள். இவை எதுவும் உங்கள் சொந்த விருப்பப்படி இல்லை. அதைவிட முக்கியமானது என்னவென்றால், எனக்கு சாட்சியமளிக்கும் நோக்கத்திற்காக, என் பிதா எனக்கு வழங்கியவர் நீங்கள்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அவர் எனக்கு உங்களைக் கொடுத்ததால், நான் உங்களுக்கு வழங்கிய வழிகளையும் அதேபோல் நான் உங்களுக்குப் போதிக்கும் வழிகளையும் மற்றும் வார்த்தைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும், ஏனென்றால் என் வழிகளைக் கடைப்பிடிப்பது உங்கள் கடமையாகும். என் மீதான உங்கள் விசுவாசத்தின் மூல நோக்கம் இதுதான். ஆகையால், நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: நீங்கள் என் வழிகளைக் கடைப்பிடிக்க என் பிதா எனக்கு வழங்கிய ஒரே ஜனங்களாக இருக்கிறீர்கள். எனினும், நீங்கள் என்னில் மட்டுமே விசுவாசம் கொள்கிறீர்கள்; நீங்கள் என்னுடையவர்கள் அல்ல, ஏனென்றால் நீங்கள் இஸ்ரவேல் குடும்பத்தார் அல்ல, அதற்குப் பதிலாக பழைய சர்ப்பத்தைப் போன்றவர்கள். நான் உங்களிடம் கேட்பதெல்லாம் எனக்காகச் சாட்சியம் அளியுங்கள் என்பதுதான், ஆனால் இன்று நீங்கள் என்னுடைய வழிகளில் கட்டாயமாக நடக்க வேண்டும். இவை அனைத்தும் எதிர்கால சாட்சியங்களின் நிமித்தமாக இருக்கிறது. நீங்கள் என் வழிகளைக் கேட்கும் மனிதராக மட்டுமே செயலாற்றினால், நீங்கள் பெறுமதி இல்லாமல் இருப்பீர்கள், என் பிதா உங்களை எனக்கு வழங்கியதன் முக்கியத்துவம் இழக்கப்படும். உங்களிடம் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான்: நீங்கள் என் வழிகளில் நடக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 467

இன்றைய நாட்களில் சபைக்குள் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் கிரியை செய்கிறார்? இந்தக் கேள்வியைக் குறித்து உனக்கு ஓர் உறுதியான புரிதல் உள்ளதா? உங்கள் சகோதர சகோதரிகளின் மிகப் பெரிய கஷ்டங்கள் எவை? அவர்களது பெரும் குறைபாடு என்ன? தற்போது, சோதனைகளுக்கு உட்படும்போது சில ஜனங்கள் எதிர்மறையானவர்களாக மாறிவிடுகிறார்கள், மேலும் சிலர் குறைகூறுகிறார்கள். தேவன் பேசுவதை நிறுத்திவிட்டதால் பிற ஜனங்கள் மேலும் முன்னேறிச் செல்வதில்லை. தேவனை விசுவாசிப்பதில் ஜனங்கள் சரியான பாதையில் செல்லவில்லை. அவர்களால் சுதந்திரமாக வாழமுடிவதில்லை மற்றும் அவர்களால் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பராமரிக்க முடிவதில்லை. சில ஜனங்கள் தொடர்ந்து சென்று உற்சாகத்துடன் பின்பற்றுகிறார்கள், மேலும் அவர்கள் தேவன் பேசும்போது கடைப்பிடிக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் தேவன் பேசாதபோது அவர்கள் முன்னேறிச் செல்வதில்லை. ஜனங்கள் இன்னும் தங்கள் இருதயங்களுக்குள் தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை மேலும் அவர்களுக்கு தேவனிடத்தில் தன்னெழுச்சியான அன்பு இல்லை; கடந்த காலத்தில் வற்புறுத்தப்பட்டதால் அவர்கள் தேவனைப் பின்பற்றினார்கள். தற்போது சில ஜனங்கள் தேவ கிரியைகளில் களைப்படைந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இத்தகைய ஜனங்கள் ஆபத்தில் இல்லையா? சமாளித்துச் செல்லும் நிலையிலேயே அநேக ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேவ வார்த்தைகளைப் புசித்துக் குடித்து அவரை நோக்கி ஜெபித்தாலும், அவர்கள் அதை அரைமனதோடே செய்கிறார்கள். முன்பிருந்த உத்வேகம் அவர்களிடத்தில் இப்போது இல்லை. பெரும்பாலான ஜனங்களுக்கு தேவனின் சுத்திகரிக்கும் மற்றும் பரிபூரணப்படுத்தும் கிரியைகளில் நாட்டம் இல்லை, மற்றும் உண்மையில் அவர்களுக்குத் தொடர்ந்து உள்ளார்ந்த தூண்டுதல் இல்லாதது போலவே காணப்படுகிறது. அவர்கள் மீறுதல்களால் மேற்கொள்ளப்படும்போது தேவனுக்குக் கடனாளிகளாய் இருப்பதை உணர்வதுமில்லை மனஸ்தாபப்படுவதற்கான விழிப்புணர்வும் அவர்களிடத்தில் இல்லை. அவர்கள் சத்தியத்தைத் தேடுவதுமில்லை, சபையை விட்டு விலகுவதுமில்லை, மற்றும் அதற்குப் பதிலாகத் தற்காலிக இன்பங்களையே நாடுகிறார்கள். இந்த ஜனங்கள் புத்தியில்லாதவர்கள், முற்றிலும் முட்டாள்கள்! காலம் வரும்போது அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள், மேலும் ஒருவர்கூட இரட்சிக்கப்படமாட்டார்கள்! ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர்கள் எப்போதுமே இரட்சிக்கப்பட்டவர்கள் என்று நீ நினைக்கிறாயா? இந்த நம்பிக்கை முற்றிலும் மாயையானதே! ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடாத அனைவரும் சிட்சிக்கப்படுவார்கள். பெரும்பாலான ஜனங்களுக்கு ஜீவனுக்குள், தரிசனங்களில் பிரவேசிப்பதில் அல்லது சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில் முற்றிலுமாக நாட்டம் இல்லை. அவர்கள் உள்ளே பிரவேசிக்க நாடுவதில்லை, மேலும் அவர்கள் இன்னும் ஆழமாக உட்பிரவேசிக்க நிச்சயமாக நாடுவதில்லை. அவர்கள் தங்களைத்தாங்களே பழாக்கிக்கொள்ளவில்லையா? தற்போது, ஒரு பகுதி ஜனங்கள் இருக்கிறார்கள், அவர்களது நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. பரிசுத்த ஆவியானவர் அதிகமாகக் கிரியை செய்யும்போது, அவர்கள் அதிக நம்பிக்கையை அடைகிறார்கள்; அதிக அனுபவத்தை அவர்கள் பெறும்போது, தேவ கிரியையின் கூடுதல் இரகசியத்தை அவர்கள் உணர்ந்து கொள்ளுகிறார்கள். ஆழமாக உட்பிரவேசிக்கும்போது அதிகமாகப் புரிந்துகொள்ளுகிறார்கள். அவர்கள் தேவனின் அன்பு மிகவும் பெரியது என்று உணர்கிறார்கள், மேலும் தங்களுக்குள் உறுதியாகவும் பிரகாசமாகவும் உணர்கிறார்கள். அவர்களுக்கு தேவனின் கிரியையைப் பற்றிய ஒரு புரிதல் இருக்கிறது. இந்த ஜனங்களுக்குள்தான் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்து கொண்டிருக்கிறார். சில ஜனங்கள் சொல்லுகிறார்கள்: “தேவனிடத்தில் இருந்து புதிய வார்த்தைகள் இல்லையென்ற போதிலும், நான் சத்தியத்துக்குள் இன்னும் ஆழமாகச் செல்வதை நாடவேண்டும், எனது உண்மையான அனுபவத்தின் எல்லாவற்றையும் பற்றியும் நான் ஆர்வமாக இருக்க வேண்டும் மேலும் தேவ வார்த்தைகளின் உண்மைக்குள் பிரவேசிக்க வேண்டும்.” இத்தகைய ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறார்கள். தேவன் தமது முகத்தைக் காட்டாவிட்டாலும், மேலும் ஒவ்வொரு தனி நபர்களிடம் இருந்தும் மறைந்திருந்தாலும், மற்றும் அவர் ஒரு வார்த்தையையும் கூறாவிட்டாலும், ஜனங்கள் ஒருவகையான உள் சுத்திகரிப்பை அனுபவிக்கும் நேரங்கள் இருக்கின்றன, இன்னும் தேவன் ஜனங்களை முற்றிலுமாக கைவிட்டுவிடவில்லை. ஒரு நபர் நிறைவேற்றவேண்டிய சத்தியத்தைத் தக்கவைக்க முடியவில்லை எனில் அவரிடம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இருக்காது. சுத்திகரிப்பின் காலத்தில், தேவன் தம்மைத்தாமே வெளிப்படுத்தாதபோது, உனக்கு நம்பிக்கை இல்லையெனில் ஆனால் அதற்குப் பதிலாக விலகிச் சென்றால், நீ அவரது வார்த்தைகளை அனுபவிப்பதில் கவனம் செலுத்தாவிட்டால், நீ தேவனின் கிரியையில் இருந்து தப்பி ஓடுகிறாய் என்று அர்த்தம். பின்னர், புறம்பே தள்ளப்பட்டவர்களில் ஒருவனாய் இருப்பாய். தேவ வார்த்தைகளுக்குள் பிரவேசிப்பதை நாடாதவர்கள் அவருக்குச் சாட்சியாக நிற்க முடியாது. தேவனுக்குச் சாட்சியாக நின்று அவரது சித்தத்தைத் திருப்திப்படுத்தும் ஜனங்கள் யாவரும் தேவனின் வார்த்தைகளை நாடும் தங்கள் உந்துதலை முற்றிலும் சார்ந்திருப்பவர்கள் ஆகும். ஜனங்களில் தேவன் நடத்தும் கிரியை முதன்மையாக அவர்கள் சத்தியத்தை அடைவதை அனுமதிப்பதற்காகவே; நீ ஜீவனைத் தேடுவது உன்னைப் பரிபூரணப்படுத்திக்கொள்ளவே, மேலும் இது எல்லாம் தேவனுடைய உபயோகத்துக்காக உன்னை தகுதியுள்ளவனாக்கவே. இப்போது நீ நாடுவதெல்லாம், இரகசியங்களைக் கேட்பதும், தேவ வார்த்தைகளைக் கேட்பதும், கண்களுக்கு விருந்தளிப்பதும், சில புதுமைகள், போக்குகள் இருக்கிறதா என்று சுற்றிலும் பார்ப்பதும், மேலும் இதன் மூலம் உன் ஆர்வத்தைத் திருப்திப்படுத்துவதுமேயாகும். இதுதான் உன் இருதயத்தின் நோக்கம் என்றால், தேவனுடைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதற்கு வகை ஏதும் இல்லை. சத்தியத்தை நாடாதவர்களால் கடைசிவரை பின்பற்ற முடியாது. இப்போது, தேவன் எதுவும் செய்யவில்லை என்பதல்ல, ஆனால் மாறாக ஜனங்கள் அவரோடு ஒத்துழைக்கவில்லை, ஏனெனில் அவர்கள் அவருடைய கிரியைகளில் களைப்படைந்துவிட்டார்கள். ஆசிர்வாதங்கள் அளிக்கும் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கே அவர்கள் விருப்பம் உள்ளவர்களாய் இருக்கிறார்கள் மற்றும் அவரது நியாயத்திர்ப்பு மற்றும் சிட்சிப்பின் வார்த்தைகளைக் கேட்க அவர்கள் மனதாயில்லை. இதற்குக் காரணம் என்ன? இதற்குக் காரணம் என்னவென்றால், ஆசிர்வாதங்களை அடையும் விருப்பம் கொண்ட ஜனங்களுக்கு அவை கிடைக்கவில்லை என்பதால் எதிர்மறையாகவும் பலவீனமானவர்களாகவும் மாறிவிட்டனர். தேவன் வேண்டுமென்றே ஜனங்கள் தம்மைப் பின்பற்றுவதை அனுமதிக்காமல் இல்லை அல்லது அவர் வேண்டுமென்றே மனுக்குலத்தை அடிக்கவில்லை. ஜனங்களின் நோக்கம் முறையற்றதாக இருப்பதால் மட்டுமே அவர்கள் எதிர்மறையாகவும் பலவீனர்களாகவும் மாறுகின்றனர். தேவன் மனிதனுக்கு ஜீவனை அளிக்கும் தேவனாய் இருக்கிறார், மற்றும் அவர் மனிதனை மரணத்துக்குள் கொண்டுவர முடியாது. ஜனங்களின் எதிர்மறை உணர்வும், பலவீனமும் பின்வாங்கிப்போதல் ஆகிய யாவும் அவர்களுடைய சொந்த செயல்களாலேயே உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன.

தேவனின் தற்போதைய கிரியை ஜனங்களுக்குச் சில சுத்திகரிப்பைக் கொண்டுவருகிறது, மேலும் சுத்திகரிக்கப்படும்போது உறுதியாக நிற்கக் கூடியவர்களாலேயே தேவனின் அங்கீகாரத்தைப் பெறமுடியும். பேசாமலோ அல்லது கிரியை செய்யாமலோ அவர் எவ்விதமாகத் தம்மை மறைத்துக்கொண்டாலும் நீ இன்னும் ஆற்றலோடு பின்பற்றலாம். உன்னைத் தள்ளிவிடுவேன் என்று தேவன் கூறினாலும், நீ இன்னும் அவரைப் பின்பற்றலாம். இது தேவனுக்கான நிலைநிற்கும் சாட்சியாகும். தேவன் தம்மை உன்னிடம் இருந்து மறைத்துக்கொள்ளும்போது நீ அவரைப் பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டால், அது தேவனுக்கான நிலைநிற்கும் சாட்சியாகுமா? ஜனங்கள் உண்மையிலேயே உட்பிரவேசிக்காவிட்டால், அவர்களுக்கு உண்மையான வளர்ச்சி இருக்காது, மேலும் அவர்கள் ஒரு பெரும் சோதனையை உண்மையில் எதிர்கொள்ளும்போது தடுமாறி விழுவார்கள். உன் எண்ணப்படி தேவன் பேசாவிட்டால் அல்லது செய்யாவிட்டால் நீ நிலைகுலைந்து போகிறாய். உன் சொந்த எண்ணங்களின்படி தேவன் தற்போது கிரியை புரிந்தால், அவர் உன் சித்தத்தை நிறைவேற்றினால், மற்றும் உன்னால் நிலைநின்று ஆற்றலோடு பின்பற்ற முடிந்தால், பின்னர் நீ எந்த அஸ்திபாரத்தின் மேல் வாழ்கிறாய்? முற்றிலும் மனித ஆர்வத்தை சார்ந்திருக்கும் பாதையில் வாழும் பல ஜனங்கள் இருக்கிறார்கள் என்று நான் சொல்லுகிறேன். அதைப் பின்பற்றுவதற்கு அதை அவர்கள் மெய்யாக இருதயத்தில் முற்றிலுமாக வைத்திருக்கவில்லை. சத்தியத்துக்குள் பிரவேசிப்பதை நாடாமல் தங்கள் வாழ்க்கையின் ஆர்வத்தை சார்ந்திருக்கும் அனைவரும் வெறுக்கத்தக்க ஜனங்கள், மேலும் அவர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்! தேவனால் நடத்தப்படும் பலவகையான கிரியைகள் யாவும் மனிதனைப் பரிபூரணப்படுத்தவே செய்யப்படுகின்றன. இருப்பினும், ஜனங்கள் எப்போதும் ஆவல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் வதந்திகளைப் பற்றி விசாரிக்க விரும்புகிறார்கள், அவர்கள் அயல் நாடுகளின் தற்போதைய செய்திகளைப் பற்றிய அக்கறை உள்ளவர்களாய் இருக்கிறார்கள்—உதாரணமாக, அவர்கள் இஸ்ரவேலில் என்ன நடக்கிறது, அல்லது எகிப்தில் பூகம்பம் ஏற்பட்டதா என்பதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள்—அவர்கள் எப்போதும் சில புதிய செய்திகளுக்காக, தங்கள் சுய விருப்பங்களைத் திருப்தி செய்யும் புதுமையான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் ஜீவனைத் தேடவில்லை, பரிபூரணப்படுத்தப்படுவதை நாடவும் இல்லை. தங்கள் அழகான கனவு நனவாவதற்காகவும், தங்கள் ஊதாரித்தனமான விருப்பங்கள் நிறைவேறுவதற்காகவும் தேவனுடைய நாள் வருவதை மட்டுமே அவர்கள் நாடுகிறார்கள். இத்தகைய நபர் நடைமுறைக்கு உகந்தவர் அல்ல—இவர்கள் முறையற்ற கண்ணோட்டம் உடையவர்கள். தேவனிடத்தில் மனுக்குலத்திற்கு இருக்கும் விசுவாசத்திற்கான அடிப்படை சத்தியத்தைப் பின்பற்றுவது மட்டுமே ஆகும், மேலும் ஜீவனுக்குள் பிரவேசிப்பதை ஜனங்கள் நாடாவிட்டால், அவர்கள் தேவனைத் திருப்திப்படுத்துவதை நாடாவிட்டால், பின்னர் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தேவனின் கிரியையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்களே தண்டனைக்கு ஆளாகக்கூடியவர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 468

தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தில் அவருடன் ஜனங்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும். தேவன் தற்போது ஜனங்களைச் சோதித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு வார்த்தையும் கூறாமல் இருக்கிறார், ஆனால் அவர் தம்மை மறைத்துக்கொண்டிருக்கிறார் மற்றும் ஜனங்களோடு நேரடியாக எந்தத் தொடர்பும் கொள்ளாமல் இருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும்போது அவர் எந்தக் கிரியையும் செய்யாததுபோல் தோன்றுகிறது, ஆனால் உண்மை என்னவென்றால் அவர் இன்னும் மனிதனுக்குள் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார். ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடும் யாரொருவருக்கும் அவர்களது வாழ்க்கையின் தேடலுக்கு ஒரு தரிசனம் இருக்கும், அவர்கள் முழுவதுமாக தேவனுடைய கிரியையை அறிந்துகொள்ளாவிட்டாலும் கூட சந்தேகங்கள் இருக்காது. சோதனைக்குள் பிரவேசிக்கும் போது தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்றும் என்ன கிரியையை அவர் நிறைவேற விரும்புகிறார் என்றும் உனக்குத் தெரியவில்லை என்றாலும், உனக்குத் தெரிய வேண்டியது என்னவென்றால் மனுக்குலத்திற்கான தேவனுடைய நோக்கங்கங்கள் எப்போதும் நன்மையானவையே. நீ அவரை உண்மையான இருதயத்தோடு பின்பற்றினால் அவர் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டார், மேலும் கடைசியில் அவர் உன்னைப் பரிபூரணப்படுத்துவார் மற்றும் ஜனங்களை ஒரு பொருத்தமான சேருமிடத்துக்குக் கொண்டுசேர்ப்பார். தற்போது தேவன் எவ்வாறு ஜனங்களைச் சோதித்தாலும், ஒரு நாள் வரும் அதில் அவர் ஜனங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான விளைவையும் பொருத்தமான பிரதிபலனையும் அளிப்பார். ஜனங்களை ஒரு குறிப்பிட்ட நிலை வரை வழிநடத்திச் சென்றுவிட்டு தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடவோ அல்லது புறக்கணிக்கவோ மாட்டார். இது ஏனென்றால் தேவன் நம்பத்தகுந்தவர். இந்தக் கட்டத்தில், பரிசுத்த ஆவியானவர் சுத்திகரிப்பின் கிரியையைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு தனி நபரையும் சுத்திகரித்துக் கொண்டிருக்கிறார். மரணச் சோதனை மற்றும் சிட்சிப்பின் சோதனை அடங்கிய கிரியையின் கட்டங்களில், வார்த்தையின் மூலம் சுத்திகரிப்பு நடத்தப்படுகிறது. தேவனுடைய கிரியையை ஜனங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் முதலில் அவருடைய தற்போதைய கிரியையையும் மனுக்குலம் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இது ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். தேவன் எதைச் செய்தாலும், அது சுத்திகரிப்பாக இருந்தாலும் அல்லது அவர் பேசவில்லை என்றாலும் கூட, தேவனுடைய கிரியையின் ஓர் அடி கூட மனுக்குலத்தின் எண்ணங்களோடு ஒத்துப்போகாது. அவரது கிரியையின் ஒவ்வொரு அடியும் ஜனங்களின் எண்ணங்களை சிதறடிக்கிறது மற்றும் உடைத்துச் செல்கிறது. இதுவே அவருடைய கிரியை. ஆனால் நீ அதை விசுவாசிக்க வேண்டும், தேவனுடைய கிரியை ஒரு கட்டத்தை அடைந்துவிட்டதால், எதுவாக இருந்தாலும் அவர் மனுக்குலம் எல்லாவற்றையும் மரணத்துக்குட்படுத்த மாட்டார். அவர் மனுக்குலத்துக்கு வாக்குத்தத்தங்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் ஆகிய இரண்டையும் அளிக்கிறார், மேலும் அவரைப் பின்பற்றுகிற யாவரும் அவரது ஆசிர்வாதங்களை அடைய முடியும், ஆனால் பின்பற்றாதவர்கள் தேவனால் புறம்பே தள்ளப்படுவார்கள். இது நீ பின்பற்றுவதைச் சார்ந்திருக்கிறது. வேறு எது எப்படி இருந்தாலும், தேவனுடைய கிரியை முடிந்ததும், ஒவ்வொருவருக்கும் ஒரு பொருத்தமான சேருமிடம் அமையும் என்பதை நீ விசுவாசிக்க வேண்டும். மனுக்குலத்துக்கு தேவன் அழகான பேராவல்களை அளித்துள்ளார். ஆனால் தேடாமல் அவற்றை அடையமுடியாது. உன்னால் இதை இப்போது பார்க்க முடியவேண்டும்—தேவன் ஜனங்களை சுத்திகரிப்பதும் சிட்சிப்பதும்தான் அவரது கிரியை, ஆனால் ஜனங்கள் அவர்களது பங்குக்கு எப்போதும் மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தேட வேண்டும். உன்னுடைய நடைமுறை அனுபவத்தில் முதலில் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்து குடிப்பது எவ்வாறு என்று நீ அறிய வேண்டும்; அவரது வார்த்தைகளுக்குள் நீ எதற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதையும் உன்னுடைய குறைபாடுகளையும் கண்டறியவேண்டும், உன் நடைமுறை அனுபவத்தில் நீ பிரவேசிப்பதை நாட வேண்டும், மற்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவ வார்த்தைகளை எடுத்து அவ்வாறு செய்ய முயல வேண்டும். தேவனுடைய வார்தைகளைப் புசிப்பதும் குடிப்பதும் ஓர் அம்சம் ஆகும். இதனுடன், சபை வாழ்க்கையைப் பராமரிக்க வேண்டும், உங்களுக்கு ஓர் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை இருக்க வேண்டும், மேலும் உங்களது தற்போதைய நிலையை தேவனிடத்தில் உங்களால் ஒப்படைக்க முடிய வேண்டும். அவருடைய கிரியை எப்படி மாறினாலும், உனது ஆவிக்குரிய வாழ்க்கை இயல்பாக இருக்க வேண்டும். உனது இயல்பான பிரவேசத்தை ஓர் ஆன்மீக வாழ்க்கையால் பராமரிக்க முடியும். தேவன் எதைச் செய்தாலும், நீ இடையூறு இல்லாமல் உனது ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடர்ந்து உன்னுடைய கடமைகளைச் செய்ய வேண்டும். இதுவே ஜனங்கள் செய்ய வேண்டியது. இவை எல்லாம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை, ஆனால் இயல்பான நிலையில் இருப்பவர்களுக்கு இது பரிபூரணப்படுத்துதல், அசாதாரண நிலையில் இருப்பவர்களுக்கு இது சோதனை. பரிசுத்த ஆவியானவரின் சுத்திகரிப்புக் கிரியையின் தற்போதைய கட்டத்தில், சில ஜனங்கள் தேவனுடைய கிரியை மகா பெரியது என்றும் ஜனங்களுக்கு சுத்திகரிப்பு முற்றிலும் தேவை என்றும், இல்லாவிட்டால் அவர்களது நிலை மிகக் குறைவாக இருக்கும் மேலும் அவர்களால் தேவ சித்தத்தை அடையும் வழி இல்லை என்றும் கூறுகிறார்கள். இருப்பினும், நல்ல நிலையில் இல்லாதவர்களுக்கு, அது தேவனைப் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணமாகவும், மற்றும் சபை கூடுகைக்குச் செல்லாமல் இருப்பதற்கும் தேவ வார்த்தைகளைப் புசிக்காமலும் குடிக்காமலும் இருப்பதற்கான ஒரு காரணமாகவும் ஆகிறது. தேவனுடைய கிரியையில், அவர் எதைச் செய்தாலும் அல்லது அவர் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தாலும், ஜனங்கள் ஓர் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கைக்கான ஓர் அடிக்கோட்டைப் பராமரிக்கவேண்டும். ஒருவேளை நீ உன் ஆவிக்குரிய வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் தளர்ச்சி இல்லாமல் இருக்கலாம், ஆனால் இன்னும் நீ அதிகமாக அடைந்துவிடவில்லை, மேலும் ஒரு பெரும் விளைச்சலை அறுக்கவும் இல்லை. இந்த வகையான சூழ்நிலையில், நீ இன்னும் விதிகளைப் பின்பற்ற வேண்டும்; உன் வாழ்க்கையில் இழப்பைச் சந்திக்காமல் இருக்க நீ இந்த விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் இதன் மூலம் நீ தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறாய். உனது ஆவிக்குரிய வாழ்க்கை அசாதாரணமானதாக இருந்தால், உன்னால் தேவனின் தற்போதைய கிரியையைப் புரிந்துகொள்ள முடியாது, மேலும் அதற்குப் பதில் அது உன்னுடைய சொந்த எண்ணங்களுக்கு முற்றிலும் இணக்கமானதாக இல்லை என்று எப்போதும் உணர்கிறாய் மற்றும் அவரைப் பின்பற்ற நீ விருப்பத்தோடு இருந்தாலும், உனக்குள் உள்ளார்ந்த உந்துதல் இல்லாமல் போகிறது. ஆகவே, தேவன் தற்போது என்ன செய்துகொண்டு இருந்தாலும், ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும். ஜனங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவரால் தமது கிரியையைச் செய்ய முடியாது, மேலும் ஒத்துழைக்கும் ஓர் இருதயம் ஜனங்களிடம் இல்லையென்றால், அவர்களால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அடைய முடியாது. உனக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை வேண்டுமென்றால், மேலும் நீ தேவனுடைய அங்கீகரத்தை அடைய விரும்பினால், தேவனுக்கு முன்பாக உன்னிடம் ஆதியில் இருந்த பக்தியைப் பராமரிக்க வேண்டும். இப்போது, உனக்கு ஓர் ஆழமான புரிதலோ, ஓர் உயர்ந்த கொள்கையோ, அல்லது அத்தகையப் பிற விஷயங்களோ தேவையில்லை—தேவையானது எல்லாம் நீ தேவனுடைய வார்த்தையை மூல அஸ்திவாரத்தின் மேல் நிலைநிறுத்துவது ஒன்றுதான். ஜனங்கள் தேவனோடு ஒத்துழைக்கவில்லை என்றால் மற்றும் ஆழமான பிரவேசத்தை நாடாவிட்டால், பின் தேவன் ஆதியில் அவர்களுக்கானவைகளாக இருந்தவற்றை எல்லாம் எடுத்துப்போடுவார். உள்ளுக்குள் ஜனங்கள் எப்போதும் தொல்லையில்லாமல் இருப்பதற்குப் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள், மேலும் ஏற்கெனவே இருப்பவைகளையே அனுபவிப்பார்கள். எந்த விலையையும் கொடுக்காமல் அவர்கள் தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடைய விரும்புகிறார்கள். இதுவே மனுக்குலம் வரவேற்கும் ஊதாரித்தனமான சிந்தனைகள். ஒரு விலையைக் கொடுக்காமல் ஜீவனையே அடைவது—ஆனால் ஏதாவது ஒன்று இத்தகைய சுலபமாக இருந்திருக்கிறதா? யாராவது ஒருவர் தேவனை விசுவாசித்து, ஜீவனுக்குள் பிரவேசிப்பதை நாடி தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தை நாடினால், அவர்கள் ஒரு விலையைக் கொடுக்கவேண்டும் மற்றும் தேவன் எதைச் செய்த போதிலும், அவர்கள் எப்போதும் தேவனைப் பின்பற்றும் ஒரு நிலையை அடையவேண்டும். இதுவே ஜனங்கள் செய்யவேண்டிய ஒன்று. நீ இவை எல்லாவற்றையும் ஒரு விதியாகப் பின்பற்றினாலும், நீ எப்போதும் அதை நிலைநிறுத்தவேண்டும், மற்றும் சோதனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், உனக்கு தேவனிடம் உள்ள இயல்பான உறவை விட்டுவிடக் கூடாது. உன்னால் ஜெபிக்கவும், சபை வாழ்க்கையைப் பராமரிக்கவும், மற்றும் உனது சகோதர சகோதரிகளை ஒரு போதும் விட்டுவிடாமல் இருக்கவும் முடிய வேணடும். தேவன் உன்னை சோதிக்கும்போது, நீ இன்னும் சத்தியத்தைத் தேடவேண்டும். இது ஆவிக்குரிய வாழ்க்கைக்கான குறைந்தபட்ச தேவை. எப்போதும் தேடுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருத்தல், மற்றும் ஒத்துழைக்க முயற்சி செய்தல், உனது முழு ஆற்றலையும் பயன்படுத்துதல்—இதைச் செய்ய முடியுமா? ஜனங்கள் இதை ஓர் அஸ்திவாரமாகக் கொண்டால் விவேகத்தை அடைந்து யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும். உன் நிலை இயல்பானதாக இருக்கும்போது தேவ வார்த்தைகளை ஏற்பது எளிதானது; இச்சூழலில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதைக் கடினமானதாக உணரமாட்டாய், மேலும் தேவனுடைய கிரியை சிறப்பானது என்று உணர்வாய். ஆனால் உன் நிலை மோசமாக இருக்கும்போது, தேவனுடைய கிரியை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், ஒருவர் எவ்வளவு அழகாக பேசினாலும், நீ மனதை அதில் செலுத்த மாட்டாய். ஒரு நபருடைய நிலை அசாதரணமாக இருக்கும்போது, தேவனால் அவர்களுக்குள் கிரியை செய்ய முடியாது, மற்றும் அவர்களால் தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைய முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 469

ஜனங்களுக்கு கொஞ்சமும் தன்னம்பிக்கை இல்லை என்றால், இந்தப் பாதையில் தொடர்ந்து செல்வது அவர்களுக்கு எளிதானது அல்ல. தேவனின் கிரியை சிறிதளவும் ஜனங்களின் எண்ணங்களோடும் கற்பனைகளோடும் இணங்காது என்பதை ஒவ்வொருவரும் இப்போது பார்க்கலாம். தேவன் மிக அதிகமான கிரியைகளைச் செய்திருக்கிறார் மற்றும் பல வார்த்தைகளைப் பேசியிருக்கிறார், மேலும் அவைதான் சத்தியம் என்று ஜனங்கள் ஒப்புக்கொண்டாலும், தேவனைப் பற்றிய கருத்துகள் அவர்களிடம் தோன்ற இன்னும் வாய்ப்புள்ளது. ஜனங்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதை அடைய விரும்பினால், அவர்கள் தாங்கள் ஏற்கெனவே பார்த்தவைகளிலும் தங்கள் அனுபவத்தின் மூலம் அடைந்தவைகளிலும் நிலைநிற்கும் தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொண்டிருக்கவேண்டும். ஜனங்களிடத்தில் தேவன் எதைச் செய்தாலும், தங்களிடம் இருப்பவற்றை அவர்கள் நிலைநிறுத்த வேண்டும், தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும், மற்றும் கடைசிவரை அவரிடம் பக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதுவே மனுக்குலத்தின் கடமை. ஜனங்கள் தாங்கள் செய்யவேண்டியதை நிலைநிறுத்த வேண்டும். தேவனிடம் காட்டும் விசுவாசத்துக்கு அவருக்குக் கீழ்ப்படிதலும், அவரது கிரியையின் அனுபவமும் அவசியமாகும். தேவன் அதிகமான கிரியை செய்துள்ளார்—ஜனங்களுக்கு அவை எல்லாம்பரிபூரணப்படுத்துதல், சுத்திகரித்தல், மற்றும் இன்னும் அதிகமாகச் சிட்சை என்று கூறலாம். தேவனுடைய கிரியையின் ஓர் அடிகூட மனித எண்ணங்களுக்கு ஒத்ததாக இல்லை; ஜனங்கள் எதை அனுபவித்தார்கள் என்றால் தேவனின் கண்டிப்பான வார்த்தைகளே. தேவன் வரும்போது, ஜனங்கள் அவருடைய மாட்சிமையையும் அவரது கோபத்தையும் அனுபவிக்கவேண்டும். இருப்பினும், அவரது வார்த்தைகள் எவ்வளவு கண்டிப்பானவைகளாக இருந்தாலும், அவர் மனுக்குலத்தை இரட்சிக்கவும் பரிபூரணப்படுத்தவுமே வருகிறார். சிருஷ்டிகளாக, ஜனங்கள் தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும், மற்றும் சுத்திகரிப்பின் மத்தியில் தேவனுக்குச் சாட்சிகளாக நிற்க வேண்டும். ஒவ்வொரு சோதனையிலும் அவர்கள் அளிக்க வேண்டிய சாட்சியை நிலைநிறுத்த வேண்டும், மேலும் அதை முழுமையாக தேவனுக்காகச் செய்யவேண்டும். இதைச்செய்யும் ஒருவனே ஜெயங்கொள்ளுபவன். தேவன் உன்னை எப்படி சுத்திகரித்தாலும், நீ முழு தன்னம்பிக்கையோடு இருக்கிறாய் மேலும் ஒருபோதும் அவர் மேல் நம்பிக்கையை இழக்கமாட்டாய். மனிதன் என்ன செய்யவேண்டுமோ அதை நீயும் செய். இதுவே மனிதனிடத்தில் இருந்து தேவன் எதிர்பார்ப்பது மேலும் மனிதனின் இருதயம் அவரிடத்தில் முழுமையாகத் திரும்பக்கூடியதாக இருக்கவேண்டும், மேலும் கடந்து போகும் ஒவ்வொரு கணத்திலும் அவரை நோக்கித் திரும்ப வேண்டும். இவனே ஜெயங்கொள்ளும் ஒருவன். “ஜெயங்கொள்ளுகிறவர்கள்” என்று தேவன் குறிப்பிடுகிறவர்கள் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போதும், சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும்போதும், அதாவது அவர்கள் தங்களைத் தாங்களே அந்தகாரத்தின் வல்லமைகளுக்கு மத்தியில் இருப்பதாக காணும்போது, அவர்களால் சாட்சியாக நிற்கவும், தேவன் மீதான தங்கள் நம்பிக்கையையும் பக்தியையும் பராமரிக்கவும் முடிகிறது. தேவனுக்கு முன்பாக உன்னால் இன்னும் ஒரு சுத்த இருதயத்தைக் கொண்டிருக்கவும், என்னவானாலும் தேவன்மீதுள்ள உன் மெய்யான அன்பை உன்னால் பராமரிக்கவும் முடியுமானால், நீ தேவனுக்கு முன்பாகச் சாட்சியாக நிற்கிறாய், இதைத்தான் தேவன் “ஜெயங்கொள்ளுகிறவனாக” இருப்பது என்று குறிப்பிடுகிறார். தேவன் உன்னை ஆசிர்வதிக்கும் போது உன் பின்தொடர்தல் சிறப்பாக இருக்கிறது, ஆனால் அவரது ஆசிர்வாதம் இல்லாதபோது நீ பின்வாங்குகிறாய் என்றால், இது பரிசுத்தமா? இந்த வழி சத்தியமானது என்பதில் நீ நிச்சயமாக இருப்பதால், நீ அதைக் கடைசிவரை பின்பற்ற வேண்டும். தேவனிடத்தில் உன் பக்தியைப் பராமரித்துவர வேண்டும். உன்னைப் பரிபூரணப்படுத்தவே தேவன் தாமே பூமிக்கு வந்ததை நீ பார்த்திருப்பதால், நீ உன் இருதயத்தை முழுமையாக அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் என்ன செய்தாலும், கடைசியாக உனக்காகச் சாதகமற்ற ஒரு பலாபலனை தீமானித்தாலும் கூட உன்னால் அவரைப் பின்பற்ற முடியுமானால் அதுவே தேவனுக்கு முன்பாக உன் பரிசுத்தத்தைப் பராமரிப்பது ஆகும். ஒரு பரிசுத்தமான ஆவிக்குரிய உடலை மற்றும் ஒரு தூய கன்னியை தேவனுக்கு அளித்தல் என்பதற்கு அர்த்தம் தேவனுக்கு முன்பாக ஓர் உண்மையுள்ள் இருதயத்தைக் கொண்டிருத்தல் என்பதாகும். மனுக்குலத்துக்கு உண்மையாக இருப்பதுதான் தூய்மை. தேவனுக்கு உண்மையாக இருக்கும் திறனே தூய்மையைப் பராமரித்தல். இதைத்தான் நீ கடைப்பிடிக்க வேண்டும். ஜெபிக்க வேண்டிய நேரத்தில் நீ ஜெபி; ஐக்கியத்தில் நீ கூடி வரவேண்டியபோது, அதைச் செய்; கீர்த்தனைகளைப் பாடவேண்டியபோது கீர்த்தனைகளைப் பாடு; மாம்சத்தைக் கைவிட வேண்டியபோது மாம்சத்தைக் கைவிடு; நீ உன் கடமையைச் செய்யும்போது அதில் குழப்பம் அடையாதே; நீ சோதனைகளை எதிர்கொள்ளும் போது உறுதியாக நில். இதுவே தேவனிடத்திலான பக்தி. ஜனங்கள் என்ன செய்யவேண்டுமோ அதை நீ நிலை நிறுத்தாவிட்டால், உன் அனைத்து முந்தைய துன்பமும் தீர்மானங்களும் வீணாகப் போய்விடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 470

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும் ஜனங்கள் ஒத்துழைக்கவேண்டிய ஒரு வழி இருக்கிறது. தேவன் ஜனங்களைச் சுத்திகரிப்பதனால் அவர்கள் சுத்திகரிப்படையும் போது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேவன் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதால் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது மற்றும் அவர்கள் விருப்பத்துடன் அவரது சுத்திகரிப்பையும் அவரால் கையாளப்படுவதையும் கிளைநறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஜனங்களுக்கு உள்ளொளியையும் பிரகாசத்தையும் கொண்டுவர தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுக்குள் கிரியைபுரிந்து அவரோடு ஒத்துழைக்கவும் கடைப்பிடிக்கவும் வைக்கிறார். சுத்திகரிப்பின் போது தேவன் பேசுவதில்லை. அவர் தமது வார்த்தையைக் கூறுவதில்லை, ஆனால், ஜனங்கள் செய்யவேண்டிய கிரியை இன்னும் இருக்கிறது. நீ ஏற்கெனவே உன்னிடம் இருப்பதை நிலைநிறுத்த வேண்டும், உனக்கு இன்னும் தேவனிடத்தில் ஜெபிக்கவும், தேவனுக்கு நெருக்கமாக இருக்கவும் மற்றும் அவருக்கு முன்பாக சாட்சியாக நிற்கவும் இயலவேண்டும்; இந்த வகையில் நீ உன்னுடைய சொந்தக் கடமையைச் செய்வாய். தேவன் ஜனங்களின் நம்பிக்கை மற்றும் அன்பைச் சோதிக்கும்போது அவர்கள் தேவனை நோக்கி அதிகமாக ஜெபிப்பதும் அவருக்கு முன் தேவனுடைய வார்த்தைகளை ருசிப்பதும் தேவை என்பதை நீங்கள் அனைவரும் தேவனுடைய கிரியையில் இருந்து தெளிவாகப் பார்க்கவேண்டும். தேவன் உன்னைப் பிரகாசிப்பித்தாலும் அவரது சித்தத்தைப் புரியவைத்தாலும், நீ இவற்றில் ஒன்றையும் கடைப்பிடிக்காவிட்டால், உன்னால் ஒன்றையும் அடையமுடியாது. நீ தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கும்போது, உன்னால் இன்னும் அவரிடத்தில் ஜெபிக்க முடியும், மேலும் அவரது வார்த்தைகளை ருசிக்கும்போது, நீ அவருக்கு முன் வந்து தேடவேண்டும் மேலும் நம்பிக்கை இழப்பு மற்றும் உணர்வற்ற நிலை எதுவும் இல்லாமல் அவரிடம் முழுநம்பிக்கை உடையவனாக இருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் கூட்டங்களில் முழு ஆற்றல் உடையவர்களாக இருக்கிறார்கள், ஆனால் வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் இருளுக்குள் வீழ்கின்றனர். ஒன்றாகக் கூடிவருதலைக்கூட விரும்பாத சிலர் இருக்கின்றனர். ஆகவே, ஜனங்கள் நிறைவேற்றவேண்டிய கடமை என்ன என்பதை நீ தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் தேவனுடைய சித்தம் என்ன என்பதை உன்னால் அறிய முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ உன் கடமைகளைச் செய்யலாம், ஜெபிக்க வேண்டிய நேரத்தில் நீ ஜெபிக்கலாம், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டியபோது கடைப்பிடிக்கலாம், மேலும் ஜனங்கள் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யலாம். நீ உன் ஆதி தரிசனத்தை நிலைநிறுத்தலாம். இந்த வகையில் தேவனுடைய கிரியையின் அடுத்த படியை ஏற்றுக்கொள்ளலாம். தேவன் ஒரு மறைமுகமான வழியில் கிரியைசெய்யும்போது, நீ பின்பற்றாவிட்டால் அது ஒரு பிரச்சினையாக இருக்கும். கூட்டங்களில் அவர் பேசும்போதும் பிரசங்கம் செய்யும்போதும், நீ உற்சாகத்தோடு கேட்கிறாய், ஆனால் அவர் பேசாதபோது உனக்கு உற்சாகம் குறைந்து பின்வாங்கிப்போகிறாய். எந்த வகையான நபர் இவ்வாறு செயல்படுவான்? மந்தைகள் செல்லும் இடம் எல்லாம் பின்பற்றி செல்லுகிற யாரோ ஒருவன் இவன். அவர்களுக்கு ஒரு நிலைப்பாடு இல்லை, சாட்சி இல்லை, தரிசனம் இல்லை! பெரும்பாலான ஜனங்கள் இப்படியே இருக்கிறார்கள். இந்த வழியிலேயே நீ தொடர்ந்து சென்றால், ஒருநாள் நீ ஒரு பெரும் சோதனைக்கு ஆட்படும்போது, தண்டனைக்குள்ளாவாய். ஜனங்களைப் பரிபூரணப்படுத்தும் தேவனுடைய செயல்முறையில் ஒரு நிலைப்பாடு என்பது மிக முக்கியமானதாகும். தேவனுடைய கிரியையின் ஒரு படியைக்கூட நீ சந்தேகப்படவில்லை என்றால், மனிதனின் கடமையை நீ நிறைவேற்றினால், தேவன் உன்னைக் கடைப்பிடிக்க வைத்தவற்றை நீ உண்மையாக நிலைநிறுத்தினால், அதாவது, நீ தேவனுடைய புத்திமதிகளை நினைவுகூர்ந்து, தற்காலத்தில் அவர் என்ன செய்தாலும் நீ அவரது புத்திமதிகளை மறக்காமல் இருந்தால், அவரது கிரியையில் உனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் இருந்தால், உன் நிலைப்பாட்டைப் பராமரித்து, உன் சாட்சியை உயர்த்திப்பிடித்து, வழியில் ஒவ்வொரு படியிலும் ஜெயம்கொண்டாயானால், பின்னர் முடிவில் தேவனால் நீ பரிபூரணப்படுத்தப்படுவாய் மேலும் ஜெயங்கொண்ட ஒருவனாய் உருவாக்கப்படுவாய். தேவனின் சோதனைகளின் ஒவ்வொரு படியிலும் உன்னால் உறுதியாக நிற்க முடியுமானால், இறுதிபரியந்தம் உன்னால் நிலைத்து நிற்கமுடியுமானால், நீ ஜெயங்கொண்டவன், தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட ஒருவனாவாய். உன்னுடைய தற்போதைய சோதனைகளில் உறுதியாக நிற்காவிட்டால், பின் எதிர்காலத்தில் இன்னும் கடினமாகப் போய்விடும். நீ கொஞ்சப் பாடுகளை மட்டுமே அனுபவித்தால் மேலும் சத்தியத்தை நீ பின்பற்றாவிட்டால், முடிவில் நீ ஒன்றையும் அடையமாட்டாய். நீ வெறுங்கையோடு நிற்பாய். தேவன் பேசவில்லை என்று காணும்போது சில ஜனங்கள் தங்கள் தேடலை விட்டுவிடுகிறார்கள், மேலும் அவர்களது இருதயங்கள் நொறுங்கிப்போய்விடுகின்றன. இத்தகைய நபர் ஒரு முட்டாள் இல்லையா? இத்தகைய ஜனங்களிடம் உண்மை இல்லை. தேவன் பேசும்போது, அவர்கள் அங்குமிங்கும் ஓடுவார்கள், வெளிப்புறமாகச் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பதுபோல் காணப்படுவார்கள், ஆனால் இப்போது அவர் பேசாதபோது, அவர்கள் பின்தொடர்வதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய நபருக்கு வருங்காலம் இல்லை. சுத்திகரிப்பின்போது, நீ ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் இருந்து பிரவேசிக்கவேண்டும், மேலும் நீ படிக்க வேண்டிய பாடங்களைப் படிக்க வேண்டும்; நீ தேவனிடத்தில் ஜெபிக்கும்போதும் அவரது வார்த்தைகளை வாசிக்கும்போதும், நீ அவற்றுடன் உன் நிலையை வைத்துச் சீர்தூக்கிப்பார்த்து, உன்குறைபாடுகளைக் கண்டறிந்து, இன்னும் நீ பல பாடங்களைப் படிக்க வேண்டும் என்பதை அறியவேண்டும். சுத்திகரிப்புக்கு ஆட்படும்போது நீ அதிகமாகப் பின்பற்றினால் நீ அதிகமாகப் பற்றாக்குறையுடன் இருப்பதை அறிந்துகொள்வாய். நீ சுத்திகரிப்பை அனுபவிக்கும்போது எதிர்கொள்ளவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கும்; உன்னால் அவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாது, நீ குறைகூறுவாய், நீ உன் சொந்த மாம்சத்தை வெளிப்படுத்துவாய்—இவ்வகையில் மட்டுமே உனக்குள் நீ கொண்டிருக்கும் பல சீர்கெட்ட மனநிலைகளை உன்னால் கண்டறியமுடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 471

தேவனுடைய கிரியைகளுக்குக் கடைசி நாட்களில் மிக அதிக அளவில் நம்பிக்கை தேவைப்படுகிறது, யோபுவுக்கு இருந்ததைவிட அதிகமான நம்பிக்கை தேவைப்படுகிறது. நம்பிக்கை இல்லாமல், ஜனங்களால் தொடர்ந்து அனுபவத்தை அடைய முடியாது மற்றும் தேவனால் அவர்கள் பரிபூரணப்படுத்தப்படவும் முடியாது. பெரும் உபத்திரவங்களின் காலம் வரும்போது ஜனங்கள் சபைகளை விட்டு நீங்குவார்கள்—இங்கே சிலர், அங்கே சிலர். முந்திய காலங்களில் மிகவும் சிறப்பான முறையில் பின்பற்றியவர்கள் சிலர் இருப்பார்கள் மேலும் அவர்கள் இப்போது ஏன் விசுவாசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியாது. உன்னால் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் நடக்கும், மேலும் தேவன் எந்த அடையாளங்களையும், அற்புதங்களையும், இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளையும் வெளிப்படுத்த மாட்டார். நீ உறுதியாக நிற்கிறாயா என்று பார்ப்பதற்குதான் இது—தேவன் ஜனங்களைச் சுத்திகரிக்க உண்மைகளை உபயோகிக்கிறார். நீ இன்னும் அதிகமாகப் பாடுகளை அனுபவிக்கவில்லை. வருங்காலத்தில் பெரும் சோதனைகள் வரும்வேளையில், சில இடங்களில் சபையில் இருக்கும் ஒவ்வொரு தனிநபரும் விட்டுவிலகுவார்கள், நீ நல்ல உறவு வைத்திருப்பவர்களும் விட்டுவிலகி தங்கள் விசுவாசத்தைத் துறப்பார்கள். அப்போது உன்னால் உறுதியாக நிற்க முடியுமா? இதுவரை நீ எதிர்கொண்ட சோதனைகள் சிறியவை, ஒருவேளை உன்னால் அவற்றைக் கஷ்டப்பட்டே சமாளிக்க முடிந்திருக்கும். இந்தப் படியில் வார்த்தைகள் மூலமான சுத்திகரிப்புகளும் பரிபூரணப்படுத்தல்களும் மட்டுமே அடங்கும். அடுத்த படியில், உன்னைச் சுத்திகரிக்க சத்தியங்கள் உன்மேல் வரும், மேலும் நீ அபாயங்களின் மத்தியில் இருப்பாய். அது உண்மையிலேயே கடுமையானதாக மாறும்போது, தேவன் உன்னைத் துரிதப்படுத்தி அகலுமாறு கூறுவார், மேலும் மதவாதிகள் அவர்களோடு வருவதற்கு உன்னை வசப்படுத்துவார்கள். இது உன்னால் பாதையில் தொடர்ந்து செல்ல முடியுமா என்பதைப் பார்க்கவே, மேலும் இந்த விஷயங்கள் எல்லாம் சோதனைகளே. தற்போதைய சோதனைகள் எல்லாம் சிறிய அளவினதே, ஒரு நாள் வரும் அப்போது சில வீடுகளில் பெற்றோர்கள் விசுவாசிக்க மாட்டார்கள், மேலும் சிலவற்றில் குழந்தைகள் விசுவாசிக்க மாட்டார்கள். உன்னால் தொடர்ந்துசெல்ல முடியுமா? நீ மேலும் தொடர்ந்து செல்லும்போது உன் சோதனைகள் இன்னும் அதிகமாகும். ஜனங்களின் தேவைகள் மற்றும் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே தேவன் தமது சுத்திகரிக்கும் கிரியையை நடத்துகிறார். மனுக்குலத்தை தேவன் பரிபூரணப்படுத்தும் கட்டத்தில், ஜனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளருவது சாத்தியமில்லை—அது சுருங்கவே செய்யும். இந்தச் சுத்திகரிப்பின் மூலமே ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியும். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சபிக்கப்பட்டு—இவற்றை எல்லாம் உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? குறிப்பாக ஒரு நல்ல நிலையில் நீ ஒரு சபையைக் காணும்போது, அங்கு சகோதரிகளும் சகோதரர்களும் மிகுந்த உற்சாகத்தோடு பின்பற்றும்போது, நீ ஊக்கப்படுத்தப்படுவதாக உணர்வாய். அவர்கள் அனைவரும் விட்டுவிலகிச் சென்றுவிட்ட நாள் வரும்போது, அவர்களில் சிலர் இனிமேலும் விசுவாசிக்கமாட்டார்கள், சிலர் வியாபாரத்துக்காகவும் திருமணம் செய்துகொள்ளவும் விட்டுவிலகிச் சென்றுள்ளார்கள், மற்றும் சிலர் மதத்தில் சேர்ந்துவிட்டிருக்கிறார்கள்; அப்போதும் உன்னால் உறுதியாக நிற்க முடியுமா? உள்ளுக்குள் பாதிப்படையாமல் உன்னால் இருக்கமுடியுமா? தேவன் மனிதனைப் பரிபூரணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல! அவர் மனிதனை சுத்திகரிக்கப் பல விஷயங்களை உபயோகப்படுத்துகிறார். ஜனங்கள் இதை முறைகளாகக் காண்கிறார்கள், ஆனால் தேவனின் ஆதி நோக்கத்தில் இவைகள் எல்லாம் முறைகளே அல்ல, ஆனால் உண்மைகள். முடிவில், ஒரு கட்டத்துக்கு அவர் ஜனங்களைச் சுத்திகரித்த பின்னர் மேலும் அவர்களுக்கு எந்தக் குறைகளும் இல்லாதபோது, அவரது கிரியையின் இந்தக் கட்டம் நிறைவடையும். உன்னை பரிபூரணப்படுத்துவதே பரிசுத்த ஆவியானவரின் பெரும் கிரியை, மேலும் அவர் கிரியை செய்யாமல் தம்மை மறைத்துக்கொள்ளும்போது, அது இன்னும் உன்னைப் பரிபூரணப்படுத்தும் நோக்கத்துக்கானதே, மேலும் இந்த வகையில் ஜனங்களுக்கு தேவனிடத்தில் அன்பு இருக்கிறதா, அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கை இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது. தேவன் வெளிப்படையாகப் பேசும்போது, நீ தேட வேண்டிய அவசியமில்லை; அவர் மறைந்திருக்கும்போதே தேடி உணர்ந்து உன் வழியைக் கண்டடையும் தேவை ஏற்படுகிறது. ஒரு சிருஷ்டியின் கடமையை நீ நிறைவேற்றத் தக்கவனாய் இருக்க வேண்டும், உனது எதிர்கால விளைவும் உன் இலக்கும் எதுவாக இருந்தாலும் நீ உயிரோடு இருக்கும் நாளளவும் தேவனைப் பற்றிய அறிவையும் அன்பையும் நீ தேடக்கூடியவனாய் இருக்க வேண்டும், மேலும் தேவன் உன்னை எப்படி நடத்தினாலும், குறைகூறுவதைத் தவிர்க்கக்கூடியவனாய் இருக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் கிரியை செய்ய ஒரு நிபந்தனை இருக்கிறது. தேவனுடைய செயல்களைப் பற்றி அவர்கள் அரைமனதோடோ சந்தேகத்தோடோ அல்லாமல் தாகத்துடன் தேட வேண்டும், அவர்கள் தங்கள் கடமைகளை எப்போதும் ஆற்றக் கூடியவர்களாய் இருக்கவேண்டும்; இந்தவகையில் மட்டுமே அவர்களால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் பலனை அடையமுடியும். தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும், மனுக்குலத்துக்கு தேவையானது என்னவென்றால் மாபெரும் நம்பிக்கையும் பின்பற்றுவதற்காக தேவனுக்கு முன்பாக வருவதுமாகும்—தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் ஜனங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் எவ்விதம் கிரியை புரிகிறார் என்பதையும் அனுபவத்தால் மட்டுமே ஜனங்களால் கண்டறிய முடியும். உனக்கு அனுபவம் இல்லை என்றால், நீ உணர்தல் மூலம் அதை அடையாவிட்டால், நீ தேடாவிட்டால், உனக்கு ஒன்றும் கிடைக்காது. நீ உன் அனுபவங்கள் வாயிலாக உணர்ந்து செல்ல வேண்டும், மேலும் உன் அனுபவங்கள் வாயிலாகவே தேவ செயல்களை நீ பார்க்க முடியும் மேலும் அவரது அதிசயத்தையும் புரிந்துகொள்ளமுடியாத தன்மையையும் அறிந்துகொள்ள முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனிடத்திலான உன் பக்தியை நீ பராமரிக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 472

எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும், ஏமாற்றங்களையும், உபத்திரவங்களையும் மற்றும் பல தோல்விகளையும் பின்னடைவுகளையும் கடந்துசெல்ல தேவன் உன்னை அனுமதிக்கிறார். இந்த விஷயங்களின் வழியாகக் கடந்து செல்ல உன்னை அனுமதிக்கும் செயல்பாட்டில், தேவன் சொல்லியிருக்கிறவை அனைத்தும் சரியானவையும் சத்தியமானவையுமாக இருக்கின்றன என்பதை இறுதியில், அவர் உனக்குக் காண்பிப்பார். அதே நேரத்தில், உன் சொந்த நம்பிக்கைகள், கருத்துக்கள், கற்பனைகள், அறிவு, கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் உலகில் நீ கற்றுக்கொண்ட மற்றும் உன் பெற்றோரால் கற்பிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் தவறானவை என்பதையும், இந்த விஷயங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் உன்னை வழி நடத்த முடியாது என்பதையும், மற்றும் சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும் தேவனுக்கு முன்பாக வருவதற்கும் அவைகளால் உன்னை வழிநடத்த முடியாது என்பதையும் அவர் உனக்குக் காட்டுவார். இந்த விஷயங்களை நீ இன்னும் கடைப்பிடித்து வாழ்ந்தால், அப்போது, நீ தோல்வியின் பாதையிலும், அதோடு கூட தேவனை எதிர்க்கும் மற்றும் மறுதலிக்கும் பாதையிலும் நடந்துகொண்டிருக்கிறாய். இறுதியில், தேவன் உன்னை இதைத் தெளிவாகப் பார்க்கும்படி செய்வார். இந்தச் செயல்முறை நீ அனுபவிக்கவேண்டிய ஒன்றாக இருக்கிறது, மேலும் இந்த வழியில் மட்டுமே பலன்களை அடைய முடியும், ஆனால் இதைப் பார்ப்பது தேவனுக்கு ஒரு வேதனையான விஷயமாக இருக்கிறது. ஜனங்கள் கலகக்காரர்களாகவும் சீர்கெட்ட மனநிலையுள்ளவர்களாகவும், இருக்கிறபடியினால் அவர்கள் இந்தச் செயல்முறையைக் கடந்துசெல்ல வேண்டும், அவர்கள் இந்தப் பின்னடைவுகளைக் கடந்துசெல்ல வேண்டும், மேலும் இந்தத் துன்பத்திலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. ஒருவன் சத்தியத்தை உண்மையாக நேசித்து, தேவனால் இரட்சிக்கப்படுவதற்கு உண்மையாகவே ஆயத்தமாக இருந்தால், நியாயத்தீர்ப்பு, சிட்சை, உபத்திரவங்கள் மற்றும் தண்டித்துத் திருத்துதல் போன்ற தேவனின் பல்வேறு வகையான இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருந்தால், ஒருவன் உண்மையாய் துன்பப்படவும் அதற்கான ஒரு விலைக்கிரயத்தைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருப்பான் என்றால், தேவன் உண்மையிலே அவர்கள் அதிகமாய் கஷ்டப்படுவதையும், மேலும் அவர்கள் அநேகப் பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் வழியாகக் கடந்து செல்வதையும் விரும்புவதில்லை. இருப்பினும், ஜனங்கள் மிகவும் கலகக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் சரியானபாதையில் நடக்க இயலாதவர்களாகவோ, அல்லது குறுக்கு வழிகளைத் தெரிந்தெடுக்கிறவர்களாகவோ இருக்கிறார்கள், மற்றும் தங்கள் சொந்த வழியில் செல்வதையே அவர்களால் தெரிந்துகொள்ள முடியும், மேலும் ஜனங்கள் சீர்கெட்டவர்களாக இருக்கிறார்கள். தேவனால் ஜனங்களை சாத்தானிடத்தில் ஒப்புவிக்கவும், தொடர்ந்து ஜனங்களைப் பக்குவப்படுத்துவதற்காக அவர்களைப் பல்வேறு சூழ்நிலைகளுக்குள் வழிநடத்தவும், அவைகளில் இருந்து எல்லா விதமான அனுபவங்களையும் பாடங்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும்படி செய்து, எல்லாவிதமான பொல்லாத காரியங்களின் சாராம்சத்தையும் அவர்களை உணரச்செய்ய மட்டுமே முடியும். அதன்பிறகு, ஜனங்கள் மனந்திரும்பும்போது, தேவனுடைய வார்த்தைகள் சத்தியம் என்பதைக் கண்டறிகிறார்கள், மற்றும் தேவனுடைய வார்த்தைகள் சத்தியம் என்றும், தேவனே எல்லா நேர்மறையான விஷயங்களுக்கும் உரியவர் என்றும், மற்றும் தேவனே ஜனங்களை உண்மையாக நேசிக்கிறவரும், அக்கறையுள்ளவரும் மற்றும் இரட்சிக்கக்கூடியவருமாய் இருக்கிறார் என்றும் அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஜனங்கள் மிக அதிகமாகப் பாடுபடுவதை தேவன் விரும்புவதில்லை, ஆனால் மனுஷர்கள் மிகவும் கலகக்காரர்களாய் இருக்கிறார்கள், மாறுபாடான பாதையில் செல்ல விரும்புகிறார்கள், மேலும் இந்தப் பாடுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். ஜனங்களைத் தொடர்ந்து பக்குவப்படுத்துவதற்கு பல்வேறு சூழல்களில் அவர்களை வைப்பதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை. இறுதியில் ஜனங்கள் எந்த அளவிற்கு பக்குவப்படுத்தப்படுகிறார்கள்? “நான் எல்லா வகையான சூழ்நிலைகளையும் அனுபவித்திருக்கிறேன், இப்போது எனக்குப் புரிகிறது. தேவனைத் தவிர, எனக்கு சத்தியத்தைப் புரியவைக்கும், சத்தியத்தை அனுபவிக்கச் செய்யும், சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கச் செய்யும் எந்த ஒரு நபரோ, காரியமோ, அல்லது பொருளோ இல்லை. தேவனுடைய வார்த்தைகளின்படி கீழ்ப்படிதலுடன் பயிற்சி செய்யவும், மனுஷனுடைய இடத்தில் கீழ்ப்படிதலுடன் இருக்கவும், ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் நிலையிலும் கடமையிலும் நிலைத்திருக்கவும், தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் கீழ்ப்படிதலுடன் ஏற்றுக்கொள்ளவும், மேலும் தேவனிடத்தில் எந்தக் குறைகூறுதலையோ அல்லது ஆடம்பரமான ஆசைகளையோ கொண்டிராமலும், மேலும் சிருஷ்டி கர்த்தருக்கு முன்பாக உண்மையாகக் கீழ்படியவும் மட்டுமே என்னால் முடியும்” என்று நீ சொல்லும் அளவிற்குப் பக்குவப்படுத்தப்படுகிறாய். ஜனங்கள் இந்த நிலையை அடைந்ததும், அவர்கள் உண்மையாகவே தேவனுக்கு முன்பாகத் தலைவணங்குகிறார்கள், மேலும் அவர்கள் அனுபவிக்கும்படி வேறு எந்த சூழ்நிலையையும் உருவாக்க வேண்டிய அவசியம் தேவனுக்கு இல்லை. எனவே நீங்கள் எந்தப் பாதையில் செல்ல விரும்புகிறீர்கள்? யாரும், தங்கள் உள்ளான ஆசைகளில், பாடுகளை அனுபவிக்க விரும்புவதில்லை, மேலும் யாரும் பின்னடைவுகள், தோல்விகள், துன்பங்கள், ஏமாற்றங்கள் மற்றும் கடும் சோதனைகளை அனுபவிக்க விரும்புவதில்லை. ஆனால் வேறு வழியில்லை. ஜனங்கள் சீர்கெட்ட சுபாவங்களை உடையவர்களாய் இருக்கின்றனர், அவர்கள் மிகவும் கலகக்காரர்கள், அவர்களின் எண்ணங்களும் கண்ணோட்டங்களும் மிகவும் சிக்கலானவை, மேலும் ஒவ்வொரு நாளும், அவர்கள் கலக்கமடைந்து, உனக்குள் பின்னிப் பிணைகிறவர்களாகிறார்கள், மற்றும் உனக்குள் தொடர்ந்து போராட்டத்தை உருவாக்குகிறார்கள். நீ சத்தியத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை, உன்னுடைய ஜீவனுக்குள் பிரவேசித்தல் மேலோட்டமானது, மேலும் உன்னுடைய மாம்சத்தின் எண்ணங்கள், கற்பனைகள் மற்றும் சீர்கெட்ட மனநிலையை மேற்கொள்ளும் வல்லமை உனக்கு இல்லை. “நான் களைப்படைந்திருக்கிறேன், எனக்கு சலித்துப்போய்விட்டது, நான் இப்படி வாழ விரும்பவில்லை. இந்தத் தோல்விகளை நான் அனுபவிக்க விரும்பவில்லை, நான் கீழ்ப்படிதலுடன் சிருஷ்டிகரின் முன்பாக வர விரும்புகிறேன். நான் தேவனுடைய வார்த்தைகளைக் கேட்பேன், அவர் சொல்வதைச் செய்வேன். இது மட்டுமே வாழ்க்கையில் சரியான பாதை” என்று நீ சொல்லும் ஒரு நாள் வரும் வரை, தொடர்ந்து தோல்வியையும் விரக்தியையும் அனுபவிப்பதும், தொடர்ந்து கீழே விழுந்துகொண்டிருப்பதும், கஷ்டத்தால் அலைக்கழிக்கப்படுவதும், சகதியில் புரண்டுகொண்டிருப்பதும் ஆகிய வழக்கமான வழியில் மட்டுமே உன்னால் செல்ல முடியும். நீ முழுமையாக நம்பி தோல்வியை ஒப்புக்கொள்ளும் நாளில்தான் நீ தேவனுக்கு முன்பாக வருவாய். இதிலிருந்து தேவனுடைய மனநிலையைப் பற்றி ஏதாவது நீ தெரிந்து கொள்கிறாயா? மனுஷனிடம் தேவனுடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது? தேவன் என்ன செய்தாலும், அவர் மனுஷனுக்கு சிறந்ததையே செய்ய விரும்புகிறார். அவர் எந்தச் சூழலை ஏற்படுத்தினாலும் அல்லது அவர் உன்னிடம் எதைச் செய்யச் சொல்லிக் கேட்டாலும், அவர் எப்போதும் சிறந்த முடிவைக் காண விரும்புகிறார். நீ ஏதோ ஒன்றைக் கடந்து செல்கிறாய் என்றும், பின்னடைவுகளையும் தோல்வியையும் சந்திக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். நீ தோல்வியடைவதையும் பின்னர் எல்லாம் முடிந்துவிட்டது என்று நீயே நினைத்துக்கொள்வதையும், நீ உன் பாதையை மறுபடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பதையும், மேலும் மனச்சோர்வில் மூழ்குவதையும் காண தேவன் விரும்புவதில்லை—இந்த முடிவைக் காண தேவன் விரும்புவதில்லை. தேவன் எதைப் பார்க்க விரும்புகிறார்? இந்த விஷயத்தில் நீ தோல்வியுற்றிருக்கலாம், ஆனால் உன் தோல்விக்கான காரணத்தைக் கண்டறிய உன்னால் சத்தியத்தைத் தேட முடியும்; நீ இந்தத் தோல்வியின் உண்மையை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து ஏதாவது ஒன்றை எடுத்துக்கொள்கிறாய், நீ ஒரு பாடம் கற்றுக்கொள்கிறாய், அவ்வாறு நடந்துகொண்டது தவறு என்பதையும், தேவனுடைய வார்த்தைகளின்படி நடப்பது மட்டுமே சரியானது என்பதையும் நீ உணர்கிறாய். “நான் கெட்டவன், எனக்கு சீர்கெட்ட சாத்தானிய மனநிலைகள் உள்ளன. எனக்குள் கலகத்தன்மை காணப்படுகிறது, தேவன் பேசும் நீதியுள்ள ஜனங்களிடமிருந்து நான் வெகு தொலைவில் இருக்கிறேன், மற்றும் தேவனுக்குப் பயப்படும் ஒரு இருதயத்தை நான் பெற்றிருக்கவில்லை” என்பதை நீ உணர்கிறாய். இந்த உண்மையை நீ தெளிவாகப் பார்த்திருக்கிறாய், இந்த விஷயத்தின் உண்மையை நீ அறிந்திருக்கிறாய், இந்தப் பின்னடைவின் மூலமாகவும், இந்தத் தோல்வியின் மூலமாகவும், நீ உணர்வுள்ளவனாகவும், முதிர்ச்சியடைந்தவனாகவும் ஆகிவிட்டாய். இதைத்தான் தேவன் பார்க்க விரும்புகிறார். முதிர்ச்சியடைதல் என்பது எதைக் குறிக்கிறது? தேவனால் உன்னை ஆதாயப்படுத்த முடியும் என்பதையும், உன்னால் இரட்சிக்கப்பட முடியும் என்பதையும், உன்னால் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதையும், மேலும் நீ தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகும் பாதையில் நடக்க ஆரம்பித்திருக்கிறாய் என்பதையும் குறிக்கிறது. தேவன், ஜனங்கள் சரியான பாதையில் செல்வதைக் காண விரும்புகிறார். தேவன் மிக ஆழமான நோக்கங்களுடன் காரியங்களைச் செய்கிறார், இவை அனைத்தும் அவருடைய மறைவான அன்பாகும், ஆனால் இதைப் பெரும்பாலும் ஜனங்கள் உணர்வதில்லை. ஜனங்கள் குறுகிய மனப்பான்மையும் அற்பத்தனத்தால் நிறைந்தவர்களுமாய் இருக்கிறார்கள். தேவனுடைய கிருபையையும் ஆசீர்வாதத்தையும் அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்ற உடனேயே, அவர்கள் தேவனைக் குறைகூறுகிறார்கள், எதிர்மறையானவர்களாக மாறுகிறார்கள், மற்றும் கோபப்படுகிறார்கள். ஆனால் தேவன் ஜனங்களுடன் வாதிடுவதில்லை, நீ ஒரு அறியாத குழந்தையாய் இருக்கிறாய் என்பதைப் போல அவர் உன்னை நடத்துகிறார், மேலும் உன்னிடத்தில் கடினமாக நடப்பதில்லை. கிருபையும் ஆசீர்வாதங்களும் எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை மனுஷனுக்குத் தெரியப்படுத்தும் சூழல்களையும், மனுஷனுக்குக் கிருபை என்பதன் அர்த்தம் என்ன என்பதையும், அதிலிருந்து மனுஷன் எதைப் பெற முடியும் என்பதையும் புரிந்துகொள்ளும் சூழல்களையும் அவர் வகுத்துள்ளார். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடும்போது, அது உன் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தேவன் கூறும் ஒன்றை நீ சாப்பிட விரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம். நீ செவிசாய்ப்பதில்லை, மாறாக, அதைச் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறாய், மேலும் அந்த விருப்பத்தை சுதந்திரமாகச் செய்ய தேவன் உன்னை அனுமதிக்கிறார். இதன் விளைவாக, நீ நோய்வாய்ப்படுவாய். இதைப் பலமுறை அனுபவித்த பிறகு, தேவனுடைய வார்த்தைகள்தான் சரியானவை என்றும், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்றும், அவருடைய வார்த்தைகளின்படி நடக்க நீ பயிற்சி செய்ய வேண்டும் என்றும் புரிந்துகொள்கிறாய். இதுதான் சரியான பாதை. அதனால் ஜனங்கள் அனுபவிக்கும் இந்தப் பின்னடைவுகளும், தோல்விகளும் மற்றும் பாடுகளும் எப்படி மாறும்? தேவனுடைய ஆழமான நோக்கத்தை நீ பாராட்டுகிறாய், மேலும் தேவனுடைய வார்த்தைகள் சரியானவை என்றும், அவை அனைத்தும் நடைமுறைக்குரியவை என்றும் நீ விசுவாசிக்கிறாய், உறுதியாக இருக்கிறாய்; தேவன் மீதான உன்னுடைய விசுவாசம் வளர்கிறது. வேறொரு காரியமும் உள்ளது: இந்தத் தோல்வியின் காலகட்டத்தை அனுபவிப்பதன் மூலம், தேவனுடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மையையும் துல்லியத்தையும் நீ உணர்ந்துகொள்கிறாய், தேவனுடைய வார்த்தைகள் சத்தியமானவை என்பதை நீ காண்கிறாய், மேலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் கொள்கையை நீ புரிந்துகொள்கிறாய். அதனால், தோல்வியை அனுபவிப்பது ஜனங்களுக்கு நல்லது-அது வேதனையான ஒன்று என்றாலும் கூட, அவர்களைப் பக்குவப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு பக்குவப்படுத்தப்படுவது, இறுதியில் உன்னை தேவனுக்கு முன்பாகத் திரும்பி வரவும், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவும், அவற்றை சத்தியமாக ஏற்றுக்கொள்ளவும் செய்தால், அப்போது, அத்தகைய பக்குவப்படுத்துதலும், பின்னடைவுகளும் மற்றும் தோல்விகளும் வீணாக அனுபவிக்கப்படுவதில்லை. தேவன் காண விரும்புகிற பலன் இதுவேயாகும்.

வார்த்தை, தொகுதி 3. கடைசிக்கால கிறிஸ்துவின் பேச்சுக்களின் பதிவுகள். “பவுலின் சுபாவத்தையும் சாராம்சத்தையும் எவ்வாறு அடையாளம் காண்பது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 473

இந்த வார்த்தைகள் இப்போது பேசப்பட்டிருக்கின்றன என்பதை நீ ஞாபகத்தில் வைக்க வேண்டும்: பின்னர், நீ பெரும் உபத்திரவத்தையும் பெரிய துன்பத்தையும் அனுபவிப்பாய்! பரிபூரணப்படுத்தப்படுவது என்பது ஓர் எளிதான, சுலபமான விஷயம் இல்லை. மிகவும் குறைந்தபட்சமாக நீ யோபின் விசுவாசத்தை, அல்லது அவனைவிட அதிக விசுவாசத்தைக் கூட கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் வரும் சோதனைகள் யோபுவின் சோதனைகளை விடப் பெரிதாக இருக்கும் என்றும் இன்னும் நீ நீண்ட கால சிட்சைக்கு உடபட வேண்டும் என்றும் நீ அறிய வேண்டும். இது ஓர் எளிய விஷயமா? உன் திறன் மேம்படுத்தப்பட வில்லையென்றால், புரிந்துகொள்ளும் உன் திறன் குறைவாக இருந்தால், மேலும் நீ கொஞ்சமாக அறிந்திருந்தால், அந்த நேரத்தில் உனக்கு எந்தசாட்சியும் இருக்காது, ஆனால் அதற்குப் பதிலாக ஒரு வேடிக்கையாகவும் சாத்தானின் ஒரு விளையாட்டுப் பொருளாகவும் போய்விடுவாய். இப்போது உன்னால் தரிசனங்களில் உறுதியாக நிற்க முடியாவிட்டால், அப்போது உனக்கு அஸ்திபாரம் இருக்கவே இருக்காது, மேலும் எதிர்காலத்தில் நீ நிராகரிக்கப்படுவாய்! பாதையின் எந்த ஒரு பகுதியும் நடக்க சுலபமானது அல்ல. ஆகவே இதை எளிதாக எடுத்துக்கொள்ளாதே. இப்போது இதைக் கவனமாக மதிப்பிட்டு, ஆயத்தங்களைச் செய். அப்போதுதான் இந்தப் பாதையின் கடைசிப் பகுதியில் தகுந்தவாறு நீ நடக்கலாம். இதுதான் எதிர்காலத்தில் நடக்க வேண்டிய பாதையாகும். எல்லா ஜனங்களும் நடக்கவேண்டிய பாதையாகும். இந்த அறிவை நீ கேட்காமல் விட்டுவிடக் கூடாது; நான் உன்னிடம் சொல்வதெல்லாம் வீணானது என்று எண்ணாதே. நீ எல்லாவற்றையும் சிறந்த வகையில் பயன்படுத்தும் நாள் வரும்—என்னுடைய வார்த்தைகள் வீணாகப் பேசப்பட முடியாதது. உன்னை நீயே ஆயத்தப்படுத்திக்கொள்ளும் நேரமாகும் இது. எதிர்காலத்துக்கான பாதையை அமைக்கும் நேரமாகும். நீ பின்னர் நடக்கக் கூடிய பாதையை ஆயத்தப்படுத்த வேண்டும்; எதிர்காலத்தில் உறுதியாக நிற்கக் கூடியது குறித்து நீ கவலையோடும் கலக்கத்தோடும் இருக்க வேண்டும். எதிர்காலப் பாதையை நன்றாக ஆயத்தப்படுத்த வேண்டும். பெருந்தீனிக்காரனாகவும் சோம்பேறியாகவும் இருக்க வேண்டாம்! உன்னுடைய நேரத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்த நீ செய்ய வேண்டிய எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய வேண்டும், இதன் மூலம் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நீ பெறலாம். நீ புரிந்துகொள்ளத் தக்கதாக நான் எல்லாவற்றையும் அளிக்கிறேன். மூன்று வருஷங்களுக்குள்ளாக நான் பல விஷயங்களைக் கூறியிருக்கிறேன் மேலும் அதிகக் கிரியையும் செய்திருக்கிறேன் என்பதை நீங்களே உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்கள். நான் இந்த வகையில் கிரியை செய்வதற்கு ஒரு காரணம் ஜனங்கள் மிகவும் குறைபாடு கொண்டவர்களக இருப்பதும், இன்னொரு காரணம் காலம் மிகவும் குறுகியதாக இருப்பதும் ஆகும்; இனிமேலும் இன்னும் தாமதம் இருக்க முடியாது. சாட்சி கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுவதற்கும் முன்னால் முழுமையான உள்ளார்ந்த தெளிவை ஜனங்கள் முதலில் அடையவேண்டும் என்று நீ கற்பனை செய்கிறாய்—ஆனால் அது மிகவும் மெதுவானது அல்லவா? ஆகையால், எவ்வளவு காலத்துக்கு நான் உன்னோடு இருக்கவேண்டும்? வயது முதிர்ந்து முடி வெள்ளையாகும் வரை உன்னோடு நான் இருப்பது என்பது முடியாத காரியம்! பெரிய உபத்திரவத்துக்குட்படுவதனால் எல்லா ஜனங்களுக்குள்ளும் உண்மையான புரிதல் உருவாகும். இதுவே கிரியையின் படிகளாகும். இன்று ஐக்கியப்பட்ட தரிசனங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு நீ உண்மையான வளர்ச்சியை அடைந்தால், எதிர்காலத்தில் எந்தக் கஷ்டங்களை எதிர்கொண்டாலும் அவை உன்னை மேற்கொள்ளாது, மேலும் உன்னால் அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கடைசிப் படிநிலையை நான் முடித்துக் கடைசி வார்த்தைகளைப் பேசி முடிக்கும்போது, எதிர்காலத்தில் ஜனங்கள் தங்கள் சொந்தப் பாதையில் நடக்க வேண்டும். இது முன்னால் பேசிய வார்த்தைகளை நிறைவேற்றும்: ஒவ்வொரு தனி நபருக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஒப்புவிப்பு உண்டு, மேலும் ஒவ்வொரு தனி நபரிலும் செய்யவேண்டிய கிரியை உண்டு. எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு நடக்க வேண்டிய பாதையில் நடப்பார்கள். உபத்திரவத்திற்கு உட்படும்போது யாரால் மற்றவர்களுக்காக அக்கறை கொள்ள முடியும்? ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர்களுடைய துன்பமும் அவரவருடைய வளர்ச்சியும் உண்டு. ஒவ்வொருவரின் வளர்ச்சியும் இன்னொருவரைப் போல் இருக்காது. கணவர்களால் தங்கள் மனைவியரை அல்லது பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பேண முடியாது; எவரும் இன்னொருவரைப் பேணிப் பராமரிக்க முடியாது. ஒருவருக்கொருவரான பராமரிப்பும் ஆதரவும் இன்னும் சாத்தியமாக இருக்கும் இப்போதைப் போல் அது இருக்காது. அந்த நேரத்தில் எல்லா வகையான நபர்களும் வெளிப்படுத்தப் படுவார்கள். அதாவது, தேவன் மேய்ப்பர்களை வெட்டும்போது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும். அந்த நேரத்தில் உங்களுக்கு உண்மையான தலைவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஜனங்கள் பிரிக்கப்படுவார்கள்—ஒரு சபையாக நீங்கள் கூடி வரக்கூடிய இப்போது போல் அது இருக்காது. எதிர்காலத்தில், பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாதவர்கள் தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டுவார்கள். கணவர்கள் தங்கள் மனைவிகளுக்குத் துரோகம் செய்வார்கள், மனைவிகள் தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்வார்கள், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் துரோகம் செய்வார்கள், மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் துன்புறுத்துவார்கள்—மனுஷ இருதயம் புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது! ஒருவர் தன்னிடம் இருப்பதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுவதும், மேலும் பாதையின் இறுதிப் பகுதியில் சரியாக நடப்பதுமே செய்யக்கூடியதாகும். இப்போது, இதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடியாது; நீங்கள் எல்லாரும் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்கிறீர்கள். கிரியையின் இந்தப் படிநிலையை வெற்றிகரமாக அனுபவிப்பது எளிதான விஷயம் இல்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பாதையின் கடைசிப் பகுதியில் நீ எவ்வாறு நடக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 474

பெரும்பாலான ஜனங்கள் தங்கள் எதிர்கால இலக்கிற்காக அல்லது தற்காலிக இன்பத்திற்காக தேவனை விசுவாசிக்கிறார்கள். எந்தவொரு கையாளுதலுக்கும் உட்படுத்தப்படாதவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் தேவனை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவோ அல்லது தேவனுடைய சிருஷ்டியாகத் தங்கள் கடமையைச் செய்வதற்காகவோ அவர்கள் தேவனை விசுவாசிப்பதில்லை. அதாவது, பெரும்பாலான ஜனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காகவோ தேவனை விசுவாசிப்பதில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்காக ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதுமில்லை அல்லது மனிதன் உயிருடன் இருப்பதால், அவன் தேவனை நேசிக்க வேண்டும் என்று விசுவாசிப்பவர்களும் இல்லை. ஏனென்றால் அவ்வாறு செய்யப்படுவதற்காக அது பரலோகத்தால் நியமிக்கப்பட்டு பூமியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது மனிதனின் இயல்பான தொழில். இவ்வாறு, வெவ்வேறு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் குறிக்கோள்களைப் பின்தொடர்ந்தாலும், அவர்களுடைய பின்தொடர்தலின் நோக்கம் மற்றும் அதன் பின்னால் உள்ள உந்துதல் அனைத்தும் ஒரே மாதிரியானவையாகும். மேலும் என்னவென்றால், அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களுடைய வழிபாட்டின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவை ஆகும். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில், பல விசுவாசிகள் இறந்துவிட்டார்கள். பலர் இறந்து மீண்டும் பிறந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு மனிதர்கள் அல்லது ஓராயிரம் அல்லது ஈராயிரம் மனிதர்கள் தேவனைத் தேடுவது மட்டுமின்றி, பெரும்பாலானோர் தங்கள் சொந்த வாய்ப்புகளுக்காகவோ எதிர்காலத்திற்கான அவர்களுடைய மகிமையான நம்பிக்கைகளுக்காகவோ தேவனைப் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவின் மீது பக்தியுள்ளவர்கள் மிகக் குறைவானவர்கள். இன்னும் பல பக்தியுள்ள விசுவாசிகள் தங்கள் வலைகளிலேயே சிக்கி இறந்திருக்கின்றனர். மேலும், ஜெயம்பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இன்றுவரை, ஜனங்களுக்கு அவர்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள் அல்லது அவர்களுடைய ஜெயத்தின் ரகசியங்கள் இன்னும் தெரியவில்லை. கிறிஸ்துவைத் தேடுவதில் வெறித்தனமானவர்களுக்கு இன்னும் திடீர் நுண்ணறிவைப் பெறும் கணம் வரவில்லை. அவர்கள் இந்த இரகசியங்களின் அடிப்புறத்திற்கு இன்னும் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. அவர்கள் தங்கள் பின்தொடர்தல் கடினமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்கள் நடந்து செல்லும் பாதையானது அவர்கள் முன்னோர்கள் முன்பு நடந்து சென்ற தோல்வியின் பாதையாகவே இருக்கிறது. அது ஜெயத்தின் பாதை அல்ல. இவ்வாறு, அவர்கள் எப்படித் தேடுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் இருளுக்கு வழிவகுக்கும் பாதையில் நடக்கிறார்கள் அல்லவா? அவர்கள் பெறுவது கசப்பான பழமல்லவா? கடந்த காலங்களில் ஜெயம் பெற்றவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் இறுதியில் செல்வத்தைப் பெறுவார்களா அல்லது பேரழிவுக்கு வருவார்களா என்று கணிப்பது கடினமாகும். அப்படியானால், தோல்வியுற்றவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலம் தேடும் ஜனங்களின் சிக்கல்கள் எவ்வளவு மோசமானதாக இருக்கும்? தோல்வி அடைவதற்கான இன்னும் பெரிய வாய்ப்பில் அவர்கள் நிற்கவில்லையா? அவர்கள் நடந்து செல்லும் பாதைக்கான மதிப்பு என்னவாக இருக்கிறது? அவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லையா? சுருக்கமாகச் சொல்வதானால், ஜனங்கள் தங்கள் முயற்சியில் ஜெயம் பெறுகிறார்களா அல்லது தோல்வியடைகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் விருப்பம் போல தேடுவதன் மூலம் அவர்களுடைய ஜெயம் அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 475

தேவன் மீதான மனிதனின் விசுவாசத்தின் மிக அடிப்படையான தேவை என்னவென்றால், அவனுக்கு ஒரு நேர்மையான இருதயம் இருக்க வேண்டும், அவன் தன்னையே முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் மற்றும் உண்மையிலேயே கீழ்ப்படிய வேண்டும். மனிதனுக்குக் கடினமான விஷயம் என்னவென்றால், அவன் முழு சத்தியத்தைப் பெறவும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றவும் வைக்கக்கூடிய உண்மையான விசுவாசத்திற்கு ஈடாக தனது முழு வாழ்வையும் வழங்குவதாகும். தோல்வியுற்றவர்களுக்கு இது அடைய முடியாதது ஆகும். கிறிஸ்துவைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் அதை அடைவது இன்னும் கடினமானதாகும். மனிதன் தன்னை முழுமையாக தேவனுக்காக அர்ப்பணிப்பதில் சரியாக இல்லை என்பதாலும், மனிதன் சிருஷ்டிகருக்குத் தன் கடமையைச் செய்யத் தயாராக இல்லை என்பதாலும், மனிதன் சத்தியத்தைக் கண்டுகொண்டாலும், அதைத் தவிர்த்து, தன் சொந்தப் பாதையில் நடப்பதாலும், மனிதன் எப்பொழுதும் தோல்வியுற்றவர்களின் வழியைப் பின்பற்றுவதையே முயற்சிப்பதாலும், மனிதன் எப்போதும் பரலோகத்தை எதிர்ப்பதாலும், மனிதன் எப்பொழுதும் தோல்வியடைகிறான், எப்போதும் சாத்தானின் தந்திரத்துக்குள் விழுகிறான் மற்றும் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்கிறான். மனிதன் கிறிஸ்துவை அறியாததாலும், மனிதன் சத்தியத்தைப் புரிந்துகொள்வதிலும் அனுபவிப்பதிலும் திறமையானவன் அல்ல என்பதாலும், மனிதன் பவுலை அதிகமாக ஆராதிக்கிறான் மற்றும் பரலோகத்தை மிகவும் விரும்புகிறான் என்பதாலும், கிறிஸ்து அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் தேவனுக்கே கட்டளையிட வேண்டும் என்றும் மனிதன் எப்போதும் வலியுறுத்துவதாலும், அந்த பெரிய மனிதர்கள் மற்றும் உலகத்தின் வித்தியாசங்களை அனுபவித்தவர்கள் இன்னும் மரணத்திற்குட்பட்டிருக்கிறார்கள் மற்றும் தேவனுடைய தண்டனையின் மத்தியில் மரிக்கின்றனர். அத்தகையவர்களைப் பற்றி நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அவர்கள் ஒரு துன்பகரமான மரணத்தை அடைகிறார்கள். அவர்களுக்கான விளைவான அவர்களுடைய மரணமானது நியாயப்படுத்தப்படாமல் இல்லை. இன்னும் அவர்களுடைய தோல்வியானது பரலோகப் பிரமாணத்தால் இன்னும் சகிக்க முடியாதது அல்லவா? சத்தியமானது மனிதனின் உலகத்திலிருந்து வருகிறது, ஆனாலும் மனிதர்களிடையே உள்ள சத்தியம் கிறிஸ்துவால் அனுப்பப்படுகிறது. இது கிறிஸ்துவினிடமிருந்து உருவாகிறது, அதாவது தேவனிடமிருந்தே உருவாகிறது. இது மனிதனால் இயலக்கூடிய ஒன்று அல்ல. ஆனாலும் கிறிஸ்து சத்தியத்தை மட்டுமே தருகிறார்; சத்தியத்தைத் தேடுவதில் மனிதன் வெற்றி பெறுவானா என்பதை தீர்மானிக்க அவர் வரவில்லை. ஆகவே, சத்தியத்தில் வெற்றி அல்லது தோல்வி அனைத்தும் மனிதனின் பின்தொடர்தலைப் பொறுத்தது என்பதை இது பின்பற்றுகிறது. சத்தியத்தில் மனிதன் பெறும் ஜெயம் அல்லது தோல்வியானது ஒருபோதும் கிறிஸ்துவுடன் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை, மாறாக அது அவனுடைய பின்பற்றுதலினால் தீர்மானிக்கப்படுகிறது. மனிதனின் இலக்கு மற்றும் அவனது ஜெயம் அல்லது தோல்வி ஆகியவற்றை தேவனே தாங்கும்படியாக இருக்கிறார் என்பதாக அவற்றை அவருடைய பொறுப்பில் வைக்க முடியாது. ஏனென்றால், தேவனுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆனால் தேவனுடைய சிருஷ்டிகள் செய்ய வேண்டிய கடமையுடன் அதற்கு நேரடியாகத் தொடர்பு இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் நாட்டம் மற்றும் இலக்கு பற்றி பெரும்பாலானவர்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறது. ஆனாலும் பேதுரு மற்றும் பவுல் பெற்ற பலன்களைத் தவிர வேறு எதுவும் ஜனங்களுக்குத் தெரியாது. பேதுருவின் ஜெயத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் அல்லது பவுலின் தோல்விக்கு வழிவகுத்த குறைபாடுகள் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இந்நிலையில், அவர்களுடைய பின்பற்றுதலின் சாராம்சத்தை நீங்கள் முழுமையாகப் பார்க்க இயலாது என்றால், உங்களில் பெரும்பாலானோரின் பின்பற்றுதல் இன்னும் தோல்வியடையும். உங்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் ஜெயத்துடன் இருந்தாலும், அவர்கள் பேதுருவுக்குச் சமமாக இருக்க மாட்டார்கள். உன் பின்பற்றுதலின் பாதை சரியானது என்றால், உனக்கு ஜெயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சத்தியத்தைத் தேடுவதில் நீ செல்லும் பாதை தவறானது என்றால், நீ என்றென்றும் ஜெயம்பெற இயலாமல் இருப்பாய். பவுலின் அதே முடிவை நீயும் சந்திப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 476

பேதுரு ஒரு பரிபூரணப்படுத்தப்பட்ட மனிதனாக இருந்தான். சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவித்த பின்னரே, தேவன் மீதான தூய அன்பைப் பெற்று, அவன் முழுமையாக பரிபூரணப்படுத்தப்பட்டான். அவன் நடந்த பாதை பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதையாக இருந்தது. அதாவது, தொடக்கத்திலிருந்தே, பேதுரு நடந்துவந்த பாதை சரியானதாக இருந்தது. தேவனை விசுவாசிப்பதற்கான அவனது உந்துதல் சரியானதாக இருந்தது, எனவே அவன் பரிபூரணமாக்கப்பட்ட ஒருவனாக மாறினான் மற்றும் மனிதன் இதற்கு முன்பு நடந்திராத ஒரு புதிய பாதையில் அவன் நடந்தான். ஆயினும், தொடக்கத்திலிருந்தே பவுல் நடந்துவந்த பாதை கிறிஸ்துவுக்கு எதிரானப் பாதையாக இருந்தது. பரிசுத்த ஆவியானவர் தான் பவுலைப் பயன்படுத்த விரும்பினார். தம்முடைய கிரியைகளுக்காக பவுலுடைய வரங்களையும், எல்லா தாலந்துகளையும் பயன்படுத்திக் கொள்ள அவன் விரும்பியதாலேயே, கிறிஸ்துவுக்காக பல தசாப்தங்களாக பவுல் கிரியை செய்தான். அவன் வெறுமனே பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். இயேசு அவனுடைய மனிதத்தன்மையைப் பார்த்ததனால் அவன் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவனுடைய வரங்களின் நிமித்தமாகப் பயன்படுத்தப்பட்டான். பவுல் தாக்கப்பட்டதால் அவனால் இயேசுவுக்காக கிரியை செய்ய முடிந்தது. அவ்வாறு செய்வதில் தமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று அவன் அவ்வாறு செய்யவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளி மற்றும் வழிகாட்டுதலின் காரணமாக அவனால் அத்தகைய கிரியையைச் செய்ய முடிந்தது. அவன் செய்த கிரியையானது எந்த வகையிலும் அவனது நாட்டத்தையோ அல்லது அவனது மனிதத்தன்மையையோ குறிக்கவில்லை. பவுலின் கிரியை ஒரு ஊழியரின் கிரியையைக் குறிக்கிறது. அதாவது அவன் ஒரு அப்போஸ்தலனின் கிரியையைச் செய்தான். பேதுருவோ வேறுபட்டவன்: அவனும் சில கிரியைகளைச் செய்தான். இது பவுலின் கிரியையைப் போல பெரியதல்ல. ஆனால் தனது சொந்த பிரவேசத்தைப் பின்பற்றும்போது அவன் கிரியை செய்தான். அவனுடைய கிரியை பவுலின் கிரியையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்வதே பேதுருவின் கிரியையாக இருந்தது. அவன் ஒரு அப்போஸ்தலனின் பாத்திரத்தில் கிரியை செய்யவில்லை, ஆனால் தேவன் மீதான அன்பைப் பின்பற்றி கிரியை செய்தான். பவுலின் கிரியையின் போக்கில் அவனது தனிப்பட்ட பின்தொடர்தலும் இருந்தது: அவனுடைய பின்தொடர்தலானது எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் ஒரு நல்ல இலக்குக்கான அவனது விருப்பத்தைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் தனது கிரியையின் போது சுத்திகரிப்பையும் ஏற்கவில்லை, கத்தரித்து கிளைநறுக்கப்படுவதையும் கையாளப்படுவதையும் ஏற்கவில்லை. அவன் செய்த கிரியை எவ்வளவாக தேவனுடைய விருப்பத்தை பூர்த்திசெய்யும் வரை, அவன் செய்ததெல்லாம் தேவனுக்குப் பிரியமாக இருக்கும் வரை, ஒரு வெகுமதி இறுதியில் அவனுக்குக் காத்திருக்கும் என்று அவன் நம்பினான். அவனது கிரியையில் தனிப்பட்ட அனுபவங்கள் எதுவும் இல்லை—அது அனைத்தும் அதன் சொந்த நலனுக்கானவை மற்றும் மாற்றத்தைத் தேடும் பயணத்தில் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. அவனது கிரியையில் உள்ள அனைத்தும் ஒரு பரிவர்த்தனையாக இருந்தது. அதில் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமை அல்லது கீழ்ப்படிதல் எதுவும் இல்லை. பவுலின் கிரியையின் போது, அவனது பழைய மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவனது கிரியை வெறுமனே மற்றவர்களுக்குச் சேவை செய்வதாக இருந்தது மற்றும் அவனது மனநிலையில் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாமல் இருந்தது. பவுல் பரிபூரணமாக்கப்படாமல் அல்லது கையாளப்படாமல் நேரடியாக தனது கிரியையைச் செய்தான். அவன் வெகுமதியால் தூண்டப்பட்டான். பேதுரு வித்தியாசமானவனாக இருந்தான்: அவன் கிளைநறுக்கப்படுதல் மற்றும் கையாளுதலுக்கு உட்பட்டவன் மற்றும் சுத்திகரித்தலுக்கு உட்பட்டவன். பேதுருவின் கிரியையின் நோக்கமும் உந்துதலும் அடிப்படையில் பவுலின் நோக்கங்களுக்கு வேறுபட்டவையாக இருந்தன. பேதுரு பெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை என்றாலும், அவனுடைய மனநிலை பல மாற்றங்களைச் சந்தித்தது. அவன் தேடியது சத்தியமும், உண்மையான மாற்றமும் ஆகும். அவனது கிரியை அந்தக் கிரியைக்காக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை. பவுல் அதிகக் கிரியை செய்த போதிலும், அது பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாக இருந்தது. இந்தக் கிரியையில் பவுல் ஒத்துழைத்த போதிலும், அவன் அதை அனுபவிக்கவில்லை. பேதுரு மிகக் குறைவான கிரியையைச் செய்தான். ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் அவன் மூலமாக அவ்வளவாக கிரியையைச் செய்யவில்லை. அவர்களுடைய கிரியையின் அளவு அவர்கள் பரிபூரணமாக்கப்பட்டிருந்தார்களா என்பதைத் தீர்மானிக்கவில்லை. ஒருவருடைய பின்பற்றுதல் வெகுமதிகளைப் பெறுவதற்கானதும், மற்றவர்களுடையது தேவனுடைய ஒரு நிறைவான அன்பை அடைவதற்கானதும், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றுவதும், தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அழகான ரூபத்தில் ஜீவிப்பதும் ஆகும். வெளிப்புறமாக அவை வேறுபட்டவை மற்றும் அவற்றின் சாராம்சங்களும் வேறுபட்டவையாக இருந்தன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையில் அவர்களில் யார் பரிபூரணமாக்கப்பட்டார்கள் என்று உன்னால் தீர்மானிக்க முடியாது. தேவனை நேசிப்பவருடைய சாயலில் வாழ்பவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிந்த ஒருவனாகவும், கையாளுதலையும் கிளைநறுக்கப்படுதலையும் ஏற்றுக்கொண்ட ஒருவனாகவும், தேவனுடைய சிருஷ்டியாக தனது கடமையை நிறைவேற்றிய ஒருவனாகவும் இருக்க பேதுரு முயன்றான். அவனால் தன்னை தேவனுக்காக அர்ப்பணிக்கவும், தன்னை முழுவதுமாக தேவனுடைய கைகளில் வைக்கவும், மரிக்கும் வரை அவருக்குக் கீழ்ப்படியவும் முடிந்தது. அதைத்தான் அவன் செய்யத் தீர்மானித்தான் மற்றும், அதைத்தான் அவன் நிறைவேற்றினான். கடைசியாக அவனுடைய முடிவு பவுலின் முடிவுக்கு வேறுபட்டதற்கு இதுவே அடிப்படை காரணம். பேதுருவில் பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியை அவனை பரிபூரணப்படுத்துவதற்காகும். பரிசுத்த ஆவியானவர் பவுலில் செய்த கிரியை அவனைப் பயன்படுத்துவதற்காகும். ஏனென்றால், அவர்களுடைய சுபாவங்களும், பின்பற்றுவதற்கான அவர்களுடைய பார்வைகளும் ஒரே மாதிரியாக இல்லை. இருவரிடமும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியை இருந்தது. பேதுரு இந்தக் கிரியையை தன்னிலே அப்பியாசப்படுத்திக் கொண்டான், மற்றவர்களுக்கும் அதை வழங்கினான். இதற்கிடையில், பவுல் பரிசுத்த ஆவியானவருடைய முழு கிரியையையும் மற்றவர்களுக்கு மட்டுமே வழங்கினான், அதிலிருந்து எதையும் தனக்கெனப் பெறவில்லை. இவ்வாறு, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் பல ஆண்டுகளாக அனுபவித்தபின், பவுலில் ஏற்பட்ட மாற்றங்கள் இல்லாதவைகளுக்கு நெருக்கமாக இருந்தன. அவன் இன்னும் இயல்பான நிலையில் இருந்தான். அவன் இன்னும் முந்தைய பவுலாகவே இருந்தான். பல வருட கிரியையின் கஷ்டங்களைத் தாங்கியப் பின்னர், அவன் “கிரியை” செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டான். அவன் சகிப்புத்தன்மையைக் கற்றுக்கொண்டான். ஆனால் அவனது பழைய சுபாவமான அவனது கடுமையான போட்டி மற்றும் கூலிப்படையின் சுபாவம் அவனுடன் இன்னமும் இருந்தது. பல வருடங்கள் கிரியை செய்த பின்னும், அவன் தனது சீர்கேடான மனநிலையை அறிந்திருக்கவில்லை அல்லது தனது பழைய மனநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. அது அவனுடைய கிரியையில் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. அவனிடம் இன்னும் அதிகமான கிரியை அனுபவம் இருந்தது. ஆனால் இதுபோன்ற சிறிய அனுபவம் மட்டுமே அவனை மாற்ற இயலாமல் மற்றும் இருப்பு அல்லது அவனது நோக்கத்தின் முக்கியத்துவம் குறித்த அவனது கருத்துக்களை மாற்ற முடியாமல் இருந்தது. அவன் கிறிஸ்துவுக்காக பல ஆண்டுகள் கிரியை செய்தாலும், கர்த்தராகிய இயேசுவை மீண்டும் ஒருபோதும் துன்புறுத்தவில்லை என்றாலும், அவனுடைய இருதயத்தில் தேவனைப் பற்றிய அறிவில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், அவன் தன்னை தேவனுக்காக அர்ப்பணிப்பதற்காகக் கிரியை செய்யவில்லை, மாறாக அவன் தனது எதிர்கால இலக்குக்காக கிரியை செய்ய நிர்பந்திக்கப்பட்டான். தொடக்கத்தில், அவன் கிறிஸ்துவைத் துன்புறுத்தினான், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவில்லை. அவன் இயல்பாகவே கிறிஸ்துவை எதிர்த்த ஒரு கலகக்காரனாகவும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பற்றி அறியாத ஒருவனாகவும் இருந்தான். அவனுடைய கிரியை ஏறக்குறைய முடிந்ததும், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கவில்லை. பரிசுத்த ஆவியானவருடைய சித்தத்திற்கு சிறிதளவேனும் கவனம் செலுத்தாமல், தனது சொந்த குணாதிசயத்திற்கு ஏற்ப தனது சொந்த விருப்பப்படியே செயல்பட்டான். எனவே அவனுடைய சுபாவம் கிறிஸ்துவுக்கு விரோதமாக இருந்தது. அவன் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. இது போன்ற ஒருவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் கைவிடப்பட்டவன், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அறியாதவன், கிறிஸ்துவை எதிர்த்தவன்—அத்தகைய மனிதன் எவ்வாறு இரட்சிக்கப்படுவான்? மனிதனை இரட்சிக்க முடியுமா இல்லையா என்பது அவன் எவ்வளவு கிரியை செய்கிறான், எவ்வளவு அர்ப்பணிக்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக, பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை அவன் அறிந்திருக்கிறானா இல்லையா, அவனால் சத்தியத்தைக் கடைபிடிக்க முடியுமா இல்லையா மற்றும் பின்பற்றுவதைப் பற்றிய அவனது கருத்துக்கள் சத்தியத்துடன் ஒத்துப்போகின்றனவா இல்லையா என்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 477

பேதுரு இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியபின் இயற்கையான வெளிப்பாடுகள் நிகழ்ந்தாலும், இயற்கையாகவே, அவன் தொடக்கத்திலிருந்தே பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து கிறிஸ்துவைத் தேட விரும்பிய ஒருவன் ஆவான். பரிசுத்த ஆவியானவருக்கு அவன் கீழ்ப்படிந்தது தூய்மையானதாகும்: அவன் புகழ்ச்சியையும் செல்வத்தையும் தேடவில்லை, மாறாக, சத்தியத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் உந்துதல் பெற்றான். கிறிஸ்துவை அறிந்திருக்கிறதைப் பேதுரு மூன்று தடவை மறுதலித்த போதிலும், கர்த்தராகிய இயேசுவை அவன் சோதித்த போதிலும், அத்தகைய சிறிய மனித பலவீனம் அவனுடைய சுபாவத்துடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அது அவனுடைய எதிர்கால நோக்கத்தைப் பாதிக்கவில்லை மற்றும் அவனுடைய சோதனை ஒரு அந்திக்கிறிஸ்துவின் செயல் என்பதை இது நிரூபிக்க முடியாது. சாதாரண மனித பலவீனம் என்பது உலகில் உள்ள அனைவராலும் பகிரப்பட்ட ஒன்று—பேதுரு வேறுபட்டவனாக இருக்கிறான் என்று நீ கருதுகிறாயா? பேதுரு பல முட்டாள்தனமான தவறுகளைச் செய்ததால் அவனைப் பற்றி ஜனங்கள் சில கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லையா? பவுல் செய்த எல்லா கிரியைகள், அவன் எழுதிய எல்லா நிருபங்கள் நிமித்தமாக ஜனங்கள் அவனை ஆராதிக்கிறார்களா? மனிதனின் சாராம்சத்தை மனிதன் எவ்வாறு பார்க்க முடியும்? உண்மையிலேயே உணர்வுள்ளவர்கள் அத்தகைய அற்பமான ஒன்றைக் காண முடியுமா? பேதுருவின் பல வருட வேதனையான அனுபவங்கள் வேதாகமத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், பேதுருவுக்கு உண்மையான அனுபவங்கள் இல்லை அல்லது பேதுரு பரிபூரணமாக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கவில்லை. தேவனுடைய கிரியையை மனிதனால் எவ்வாறு முழுமையாக புரிந்துகொள்ள முடியும்? வேதாகமத்தில் உள்ள பதிவுகள் இயேசுவால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் பிற்கால தலைமுறையினரால் தொகுக்கப்பட்டன. அப்படியானால், வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டவை அனைத்தும் மனிதனின் கருத்துக்களுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்லவா? மேலும், பேதுரு மற்றும் பவுலின் முடிவுகள் நிருபங்களில் வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஆகவே, மனிதன் பேதுருவையும் பவுலையும் தன் சொந்தக் கருத்துக்களின்படி, அவனது விருப்பங்களின்படி நியாயந்தீர்க்கிறான். பவுல் அநேக கிரியைகளைச் செய்ததால், அவனுடைய “பங்களிப்புகள்” மிகப் பெரியவை என்பதால், அவன் ஜனங்களின் நம்பிக்கையை வென்றான். மனிதன் மேலோட்டமான கருத்துக்களில் மட்டும் கவனம் செலுத்துகிறானல்லவா? மனிதனின் சாராம்சத்தை மனிதனால் எவ்வாறு பார்க்க முடியும்? பவுல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராதனைக்குரிய ஒரு பொருளாக இருப்பதால், அவனுடைய கிரியையை கடுமையாக மறுக்க யார் துணிவார்கள்? பேதுரு ஒரு மீனவன். இந்நிலையில் அவனுடைய பங்களிப்பு எவ்வாறு பவுலின் பங்களிப்பைப் போல இருக்கும்? அவர்கள் செய்த பங்களிப்புகளைப் பொறுத்தவரையில், பேதுருவுக்கு முன்பதாகவே பவுலுக்கு வெகுமதி கிடைத்திருக்க வேண்டும். தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற மிகவும் தகுதி பெற்றவனாக அவன் இருந்திருக்க வேண்டும். பவுலைக் கையாளுகையில், தேவன் பவுலுடைய தாலந்துகளின் மூலம் அவனை கிரியை செய்ய மட்டுமே செய்தார், அதேசமயம் தேவன் பேதுருவைப் பரிபூரணமாக்கினார் என்பதை யார் கற்பனை செய்திருக்க முடியும். கர்த்தராகிய இயேசு தொடக்கத்திலிருந்தே பேதுருவுக்கும் பவுலுக்கும் திட்டங்களை வகுத்திருந்தார் என்பது எந்த வகையிலும் இல்லை: மாறாக, அவர்கள் பரிபூரணமாக்கப்பட்டார்களா அல்லது அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களுக்கு ஏற்ப கிரியை செய்ய வைக்கப்பட்டார்களா என்பதைப் பார்க்க வேண்டும். எனவே, ஜனங்கள் பார்ப்பது மனிதனின் வெளிப்புற பங்களிப்புகள் மட்டுமே. அதேசமயம் தேவன் பார்ப்பது மனிதனின் சாராம்சம், மனிதன் தொடக்கத்தில் இருந்தே பின்பற்றும் பாதை மற்றும் மனிதனின் நோக்கத்திற்குப் பின்னால் உள்ள உந்துதல் ஆகியனவாகும். ஜனங்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களின்படி, ஒரு மனிதனை தங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப அளவிடுகிறார்கள். ஒரு மனிதனின் இறுதி முடிவு அவனது வெளிப்புறங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுவதில்லை. ஆகவே, தொடக்கத்தில் இருந்தே நீ எடுக்கும் பாதை ஜெயத்தின் பாதையாகவும், நாட்டத்தை நோக்கிய உன் பார்வை தொடக்கத்திலிருந்தே சரியானதாகவும் இருந்தால், நீ பேதுருவைப் போன்ற ஒருவன் என்று நான் சொல்கிறேன். நீ நடக்கும் பாதை தோல்வியின் பாதை என்றால், நீ எவ்வளவு விலை கொடுத்தாலும், உன் முடிவு பவுலின் பாதையைப் போலவே இருக்கும். எது எப்படியிருந்தாலும், உன் இலக்கு மற்றும் உன் ஜெயம் அல்லது தோல்வியானது உன் பக்தியையோ அல்லது நீ செலுத்தும் விலைக்கிரயத்தையோ காட்டிலும், நீ தேடும் பாதை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதால் தீர்மானிக்கப்படுகின்றன. பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்கள் மற்றும் அவர்கள் பின்பற்றிய குறிக்கோள்கள் வேறுபட்டவையாகும். மனிதனால் இவற்றைக் கண்டுபிடிக்க இயலாது. அவற்றை தேவனால் மட்டுமே முழுமையாக அறிய முடியும். தேவன் பார்ப்பது மனிதனின் சாராம்சமாகும், அதேசமயம் மனிதனுக்கு அவனது சொந்த சாராம்சத்தைப் பற்றி எதுவும் தெரியாது. மனிதனுக்குள் இருக்கும் சாராம்சத்தை அல்லது அவனது உண்மையான வளர்ச்சியைக் காண மனிதனால் இயலாது. இதனால் பவுல் மற்றும் பேதுருவின் தோல்வி மற்றும் ஜெயத்துக்கான காரணங்களை அடையாளம் காண இயலாது. பெரும்பாலான ஜனங்கள் பேதுருவையல்லாமல் பவுலை ஆராதிப்பதற்கான காரணம், பவுல் பொது கிரியைக்குப் பயன்படுத்தப்பட்டான் மற்றும் மனிதனால் இந்தக் கிரியையை உணர முடிகிறது, எனவே ஜனங்கள் பவுலின் “சாதனைகளை” ஒப்புக்கொள்கிறார்கள். இதற்கிடையில், பேதுருவின் அனுபவங்கள் மனிதனுடைய கண்ணுக்குத் தெரியாதவையாகும். அவன் தேடியது மனிதனால் அடைய முடியாதது ஆகும். எனவே மனிதனுக்கு பேதுருவின் மீது அக்கறை இல்லாமற்போகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 478

கையாளுதல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை அனுபவிப்பதன் மூலம் பேதுரு பரிபூரணமாக்கப்பட்டான். அவன், “நான் எப்போதுமே தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். நான் செய்யும் எல்லாவற்றிலும் நான் தேவனுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய மட்டுமே முயல்கிறேன். நான் சிட்சிக்கப்பட்டாலும், நியாயந்தீர்க்கப்பட்டாலும், அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினான். பேதுரு தனக்குரிய அனைத்தையும் தேவனுக்குக் கொடுத்தான், அவனுடைய கிரியை, வார்த்தைகள் மற்றும் முழு ஜீவிதத்தையும் தேவனை நேசிப்பதற்காகவே கொடுத்தான். அவன் பரிசுத்தத்தைத் தேடிய ஒருவன். அவன் எவ்வளவு அதிகமாக அனுபவித்தானோ, அவனுடைய இருதயத்திற்குள் தேவன் மீதுள்ள அன்பு அவ்வளவு அதிகமாக இருந்தது. இதற்கிடையில், பவுல் வெளிப்புறக் கிரியைகளை மட்டுமே செய்தான். அவன் கடினமாக உழைத்தாலும், அவனுடைய உழைப்பு அவனது கிரியையைச் சரியாகச் செய்வதற்கும், அதனால் வெகுமதியைப் பெறுவதற்கும் உரியதாகும். தனக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது என்று தெரிந்திருந்தால், அவன் தனது கிரியையை கைவிட்டிருப்பான். பேதுரு அக்கறை காட்டியது அவனுடைய இருதயத்திற்குள் இருக்கும் உண்மையான அன்பாகும். அது நடைமுறைக்குரியது மற்றும் அடையக்கூடியது ஆகும். அவன் ஒரு வெகுமதியைப் பெறுவானா என்பது பற்றி அவன் கவலைப்படவில்லை. ஆனால் அவனது மனநிலையை மாற்ற முடியுமா என்பது பற்றி கவலைப்பட்டான். பவுல் எப்போதும் கடினமாக உழைப்பதைப் பற்றி அக்கறை காட்டினான். வெளிப்புறக் கிரியை மற்றும் பக்தி பற்றியும், சாதாரண ஜனங்கள் அனுபவிக்காதக் கோட்பாடுகளைப் பற்றியும் அக்கறை காட்டினான். தனக்குள்ளான ஆழமான மாற்றங்கள் மீதோ அல்லது தேவன் மீதான உண்மையான அன்பின் மீதோ அவன் அக்கறைகொள்ளவில்லை. உண்மையான அன்பையும் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவதற்காகவே பேதுருவின் அனுபவங்கள் இருந்தன. அவனுடைய அனுபவங்கள் தேவனோடு நெருங்கிய உறவைப் பெறுவதற்கும், நடைமுறையில் ஜீவிப்பதற்கும் உரியதாகும். பவுலின் கிரியையானது இயேசுவால் அவனிடம் ஒப்படைக்கப்பட்டதாலும், அவன் ஏங்கியவற்றைப் பெறுவதற்காகவும் அதைச் செய்தான். ஆனால் தன்னைப் பற்றியும் தேவனைப் பற்றியும் அவன் அறிந்த அறிவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவனது கிரியை சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிப்பதற்கானதாகும். பேதுரு தேடியது தூய அன்பு மற்றும் பவுல் தேடியது நீதியின் கிரீடம் ஆகும். பேதுரு பரிசுத்த ஆவியானவருடைய பல வருட கிரியைகளை அனுபவித்தான். கிறிஸ்துவைப் பற்றிய நடைமுறை அறிவையும், தன்னைப் பற்றிய ஆழமான அறிவையும் கொண்டிருந்தான். எனவே, தேவன் மீதான அவனது அன்பு தூய்மையானது. பல வருட சுத்திகரிப்பு இயேசுவையும் ஜீவனையும் பற்றிய அவனது அறிவை உயர்த்தியிருந்தது. அவனுடைய அன்பு நிபந்தனையற்ற அன்பு. அது ஒரு தன்னிச்சையான அன்பு. அதற்குப் பதிலாக அவன் எதுவும் கேட்கவில்லை. அவன் எந்த நன்மைகளையும் எதிர்பார்க்கவில்லை. பவுல் பல ஆண்டுகளாக கிரியை செய்தான், ஆனாலும் அவன் கிறிஸ்துவைப் பற்றிய அதிக அறிவைக் கொண்டிருக்கவில்லை, தன்னைப்பற்றிய அறிவும் பரிதாபகரமாக குறைவானதாகவே இருந்தது. வெறுமனே கிறிஸ்துவின் மீது அவனுக்கு அன்பு இல்லை. அவனுடைய கிரியையும், அவன் ஓடிய ஓட்டமும் இறுதி விருதைப் பெறுவதற்கானவையே. அவன் தேடியது மிகச்சிறந்த கிரீடம், தூய்மையான அன்பு அல்ல. அவன் சுறுசுறுப்பாக தேடவில்லை, ஆனால் செயலற்ற முறையில் தேடினான். அவன் தனது கடமையைச் செய்யவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர் அவரைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது. எனவே, அவன் தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டி என்பதை அவனது நாட்டம் நிரூபிக்கவில்லை. தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருந்த பேதுரு தான் தன்னுடைய கடமையைச் செய்தான். தேவனுக்கு பங்களிப்பு செய்பவர்கள் அனைவருக்கும் வெகுமதி கிடைக்க வேண்டும் என்றும், எவ்வளவு அதிகமான பங்களிப்பு இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக தேவனுடைய தயவை அவர்கள் பெற வேண்டும் என்றும் மனிதன் கருதுகிறான். மனிதனின் பார்வையின் சாராம்சம் பரிவர்த்தனைக்குரியதாகும். அவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தனது கடமையைச் செய்ய தீவிரமாக முயற்சிப்பதில்லை. தேவனைப் பொறுத்தவரையில், ஜனங்கள் தேவன் மீதான உண்மையான அன்பையும் தேவனுக்கான கீழ்ப்படிதலையும் எவ்வளவு அதிகமாக நாடுகிறார்களோ, அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்ய எவ்வளவு அதிகமாக முற்படுகிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற முடிகிறது. தேவனுடைய பார்வை என்னவென்றால், மனிதன் தனது மெய்யான கடமையையும் அந்தஸ்தையும் மீட்டெடுக்க வேண்டும். மனிதன் தேவனுடைய ஒரு சிருஷ்டி. ஆகவே மனிதன் தேவனிடம் எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைத்து தன்னை மீறி நடக்கக் கூடாது மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியாக தன் கடமையைச் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. பவுலின் மற்றும் பேதுருவின் இலக்குகள் தேவனுடைய சிருஷ்டிகளாக தங்கள் கடமையைச் செய்ய முடியுமா என்பதைப் பொறுத்து அளவிடப்பட்டன. அவர்களின் பங்களிப்பின் அளவிற்கு ஏற்ப அளவிடப்படவில்லை. அவர்களுடைய இலக்குகள் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் தேடியவற்றின்படி தீர்மானிக்கப்படுகின்றன. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தார்கள் என்பதன் அடிப்படையிலோ அல்லது மற்றவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையிலோ தீர்மானிக்கப்படவில்லை. எனவே, தேவனுடைய சிருஷ்டியாக ஒருவரின் கடமையைத் தீவிரமாகச் செய்ய முற்படுவது ஜெயத்துக்கான பாதையாகும். தேவன் மீதான உண்மையான அன்பின் பாதையைத் தேடுவது மிகவும் சரியான பாதையாகும். ஒருவரின் பழைய மனநிலையில் மாற்றங்களைத் தேடுவது, தேவன் மீதான தூய்மையான அன்பைத் தேடுவது ஆகியவை ஜெயத்துக்கான பாதையாகும். அத்தகைய ஜெயத்துக்கான பாதை மெய்யான கடமையை மீட்டெடுப்பதற்கான பாதை மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் மெய்யான தோற்றம் ஆகும். இது மீட்புக்கான பாதை மற்றும் இது தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தேவனுடைய எல்லாக் கிரியைகளின் நோக்கமாகும். மனிதனுடைய நாட்டமானது தனிப்பட்ட ஆடம்பரக் கோரிக்கைகள் மற்றும் பகுத்தறிவற்ற ஏக்கங்கள் ஆகியவற்றால் களங்கப்பட்டால், அதனால் வரும் விளைவு மனிதனின் மனநிலையில் உள்ள மாற்றங்களாக இருக்காது. இது மீட்பின் கிரியைக்கு முரணானது. இது சந்தேகத்திற்கு இடமின்றி பரிசுத்த ஆவியானவரால் செய்யப்பட்ட கிரியை அல்ல. எனவே இந்த வகையான நாட்டம் தேவனால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. தேவனால் அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 479

பவுல் செய்த கிரியைகள் மனிதனுக்கு முன்பாகக் காட்சிக்கு வைக்கப்படுகையில், தேவன் மீது அவன் கொண்டிருந்த அன்பு எவ்வளவு தூய்மையானது மற்றும் தேவனைத் தன் இருதயத்தின் ஆழத்தில் எவ்வளவாக நேசித்தான் என்பதை மனிதனால் பார்க்க முடியாது. மனிதனால் தான் செய்த கிரியையை மட்டுமே பார்க்க முடியும். அதிலிருந்து, அவன் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டான் என்பதை நிச்சயமாக அறிவான். ஆகவே, பவுல் பேதுருவை விடச் சிறந்தவன் என்றும், அவனுடைய கிரியை பெரிதாக இருந்தது என்றும், அவனால் தம் கிரியையைத் திருச்சபைகளுக்கு வழங்க முடிந்தது என்றும் மனிதன் நினைக்கிறான். பேதுரு தனது தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே பார்த்து, அவ்வப்போது தனது கிரியையின் போது ஒரு சிலரை ஆதாயம் செய்தான். அவனிடமிருந்து அறியப்பட்ட நிருபங்கள் கொஞ்சமாக மட்டுமே உள்ளன. ஆனால் தன் இருதயத்தில் தேவன் மீது அவன் கொண்டிருந்த அன்பு எவ்வளவு பெரியது என்று யாருக்குத் தெரியும்? பவுல் தேவனுக்காக ஒவ்வொரு நாளும் கிரியை செய்தான்: செய்ய வேண்டிய கிரியை இருக்கும் வரை, அவன் அதைச் செய்தான். இவ்வாறு தான் கிரீடத்தைப் பெற முடியும் என்றும், தேவனைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவன் உணர்ந்தான். ஆனாலும் அவன் தனது கிரியையின் மூலமாகத் தன்னை மாற்றிக் கொள்ள வழிகளைத் தேடவில்லை. பேதுருவின் ஜீவிதத்தில் தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யாத எதுவுமே அவனுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இது தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால், அவன் வருத்தப்பட்டிருப்பான் மற்றும் தேவனுடைய இருதயத்தைப் பூர்த்தி செய்ய அவன் முயற்சி செய்யக்கூடிய பொருத்தமான வழியைத் தேடியிருப்பான். அவனுடைய ஜீவிதத்தின் மிகச்சிறிய மற்றும் மிகவும் பொருத்தமற்ற அம்சங்களில் கூட, தேவனுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்வதையே அவன் தன்னிடத்தில் எதிர்பார்த்தான். அவன் தனது பழைய மனநிலையைப் பொறுத்தவரையில் அவன் எந்த குறையுமில்லாமல் இருந்தான், சத்தியத்தில் ஆழமாக முன்னேற வேண்டும் என்ற தனது தேவைகளில் எப்போதும் கடுமையாக இருந்தான். பவுல் மேலோட்டமான நற்பெயரையும் அந்தஸ்தையும் மட்டுமே நாடினான். அவன் மனிதனுக்கு முன்பாக தன்னைக் காட்ட முயன்றான் மற்றும் ஜீவிதப் பிரவேசத்தில் எந்த ஆழமான முன்னேற்றத்தையும் அடைய முயலவில்லை. அவன் அக்கறை காட்டியது உபதேசம் குறித்து மட்டுமே, யதார்த்தத்தை அல்ல. சிலர், “பவுல் தேவனுக்காக இவ்வளவு கிரியை செய்தும், அவன் ஏன் தேவனால் நினைவுகூரப்படவில்லை? பேதுரு தேவனுக்காக ஒரு சிறிய கிரியையைச் செய்தான், ஆனால் திருச்சபைகளுக்குப் பெரிய பங்களிப்பைச் செய்யவில்லை, இந்நிலையில் அவன் ஏன் பரிபூரணமாக்கப்பட்டான்?” என்று கேட்கின்றனர். பேதுரு தேவனை, தேவன் எதிர்பார்த்த ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நேசித்தான். இது போன்றவர்களுக்கு மட்டுமே சாட்சி உண்டு. பவுலின் நிலை என்னவாக இருந்தது? பவுல் தேவனை எந்த அளவுக்கு நேசித்தான்? உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுருவின் கிரியை எதற்காக செய்யப்பட்டது? பேதுரு அதிகக் கிரியை செய்யவில்லை, ஆனால் அவனுடைய இருதயத்திற்குள் ஆழமாக இருந்தது என்னவென்று உனக்குத் தெரியுமா? பவுலின் கிரியை திருச்சபைகளுக்கு வழங்கல் மற்றும் திருச்சபைகளின் ஆதரவு ஆகியவற்றுக்கு தொடர்பானது. பேதுரு அனுபவித்தவை அவனுடைய ஜீவித மனநிலையின் மாற்றங்களாக இருந்தன. அவன் தேவனுடைய அன்பை அனுபவித்தான். அவற்றின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகளை இப்போது நீ அறிந்திருக்கிறாய். இறுதியில், யார் தேவனை உண்மையாக விசுவாசித்தார்கள், யார் தேவனை உண்மையாக விசுவாசிக்கவில்லை என்பதை நீ காணலாம். அவர்களில் ஒருவன் உண்மையிலேயே தேவனை நேசித்தான். மற்றவன் உண்மையிலேயே தேவனை நேசிக்கவில்லை. ஒருவன் தனது மனநிலையில் மாற்றங்களைச் சந்தித்தான். மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவன் தாழ்மையுடன் கிரியை செய்தான். ஜனங்களால் எளிதில் கவனிக்கப்படவில்லை. மற்றொருவன் ஜனங்களால் ஆராதனை செய்யப்பட்டான் மற்றும் பெரிய மனிதனானான். ஒருவன் பரிசுத்தத்தை நாடினான், மற்றவன் அவ்வாறு செய்யவில்லை. அவன் தூய்மையற்றவனாக இல்லாவிட்டாலும், அவன் தூய்மையான அன்பைக் கொண்டிருக்கவில்லை. ஒருவன் உண்மையான மனிதத்தன்மையைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. ஒருவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் உணர்வைக் கொண்டிருந்தான், மற்றொருவன் அவ்வாறு இல்லை. பவுல் மற்றும் பேதுருவின் சாராம்சங்களில் உள்ள வேறுபாடுகள் அத்தகையவை. பேதுரு நடந்த பாதை ஜெயத்தின் பாதையாக இருந்தது. இது இயல்பான மனிதத்தன்மையை மீட்டெடுப்பதற்கான மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை மீட்டெடுப்பதற்கான பாதையாகும். பேதுரு ஜெயங்கொள்ளுகிற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் நடந்த பாதை தோல்வியின் பாதையாக இருந்தது மற்றும் தங்களை மேலோட்டமாக சமர்ப்பித்து அர்ப்பணிக்கும் அனைவரையும் தேவனை உண்மையாக நேசிக்காத அனைவரையும் அவன் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். பவுல் சத்தியத்தைக் கொண்டிராத அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறான். தேவன் மீதான தனது விசுவாசத்தில், பேதுரு எல்லாவற்றிலும் தேவனைத் திருப்திப்படுத்த முயன்றான் மற்றும் தேவனிடமிருந்து வந்த அனைத்திற்கும் கீழ்ப்படிய முயன்றான். சிறிதும் குறைகூறாமல், அவனால் சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அதே போல் சுத்திகரிப்பு, உபத்திரவம் மற்றும் அவனது ஜீவிதத்தில் எதுவும் இல்லாமல் போவது என இவை எதுவுமே தேவன் மீதான அவனது அன்பை மாற்ற முடியவில்லை. இது தேவன் மீதான நிறைவான அன்பு அல்லவா? இது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையின் நிறைவேற்றமல்லவா? சிட்சையிலோ, நியாயத்தீர்ப்பிலோ, உபத்திரவத்திலோ, நீ எப்போதுமே மரணம் வரையில் கீழ்ப்படிதலைக் காட்ட திறனுள்ளவனாய் இருக்கிறாய். இதுதான் தேவனுடைய ஒரு சிருஷ்டியால் அடையப்பட வேண்டும். இதுதான் தேவன் மீதான அன்பின் தூய்மையாகும். மனிதனால் இதை அதிகம் அடைய முடிந்தால், அவனே தேவனுடைய தகுதிவாய்ந்த சிருஷ்டியாக இருக்கிறான், மேலும் சிருஷ்டிகரின் விருப்பத்தை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வேறு எதுவும் இல்லை. உன்னால் தேவனுக்காகக் கிரியை செய்ய முடிகிறது, ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியவில்லை, தேவனை உண்மையாக நேசிக்க இயலவில்லை என்பதாகக் கற்பனை செய்துகொள். இவ்வாறு, நீ தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நிறைவேற்றாமல் போவதோடு மட்டுமல்லாமல், நீ தேவனால் கண்டிக்கப்படுவாய். ஏனென்றால், நீ சத்தியத்தைக் கொண்டிராத, தேவனுக்குக் கீழ்ப்படிய இயலாத, தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன். நீ தேவனுக்காகக் கிரியை செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறாய். சத்தியத்தைக் கடைபிடிப்பது பற்றியோ உன்னை அறிந்து கொள்வது பற்றியோ நீ கவலைப்படுவதில்லை. நீ சிருஷ்டிகரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. நீ சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதுமில்லை சிருஷ்டிகரை நேசிப்பதுமில்லை. இயல்பாகவே நீ தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒருவன், எனவே அத்தகையவர்கள் சிருஷ்டிகரால் நேசிக்கப்படுவதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 480

“பவுல் மிகப்பெரிய கிரியையைச் செய்தான், அவன் திருச்சபைகளுக்காக பெரும் பாரங்களைச் சுமந்து, அவற்றுக்கு மிக அதிகப் பங்களிப்புகளைச் செய்துள்ளான். பவுலின் பதின்மூன்று நிருபங்கள் கிருபையின் காலத்தின் 2,000 ஆண்டுகளை உறுதிப்படுத்தின. அவை நான்கு சுவிசேஷங்களுக்கு அடுத்தபடியாக உள்ளன. அவனுடன் யாரை ஒப்பிட முடியும்? யோவானின் வெளிப்பாட்டை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அதேசமயம் பவுலின் நிருபங்கள் ஜீவனை அளிக்கின்றன. அவன் செய்த கிரியை திருச்சபைகளுக்கு பயனளித்தது. இதுபோன்ற விஷயங்களை வேறு யார் சாதித்திருக்க முடியும்? பேதுரு என்ன கிரியை செய்தான்?” என்று சிலர் சொல்கிறார்கள். மனிதன் மற்றவர்களை அளவிடும்போது, அவர்களுடைய பங்களிப்புக்கு ஏற்ப அவ்வாறு செய்கிறான். தேவன் மனிதனை அளவிடும்போது, மனிதனின் சுபாவத்திற்கு ஏற்ப அவர் அவ்வாறு செய்கிறார். ஜீவனைத் தேடுபவர்களில், பவுல் தனது சொந்த சாராம்சத்தை அறியாத ஒருவன். அவன் எந்த வகையிலும் தாழ்மையானவனோ அல்லது கீழ்ப்படிதலுள்ளவனோ அல்ல. தேவனுக்கு எதிரான அவனது சாராம்சத்தை அவன் அறிந்திருக்கவில்லை. எனவே, அவன் விரிவான அனுபவங்களுக்கு ஆளாகாத ஒருவன். சத்தியத்தைக் கடைபிடிக்காத ஒருவன். பேதுருவோ வித்தியாசமானவன். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக அவனது குறைபாடுகள், பலவீனங்கள் மற்றும் அவனது சீர்கேடான மனநிலை ஆகியவற்றை அவன் அறிந்திருந்தான். எனவே அவன் தனது மனநிலையை மாற்றும் ஒரு நடைமுறைப் பாதையைக் கொண்டிருந்தான். அவன் கோட்பாட்டை மட்டுமே கொண்டிருந்து எந்த யதார்த்தமும் இல்லாதவர்களில் ஒருவனல்ல. மாறும் மனிதர்கள் இரட்சிக்கப்பட்ட புதிய மனிதர்கள். அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றத் தகுதியுள்ளவர்கள். மாறாதவர்கள் இயற்கையாகவே வழக்கற்றுப் போனவர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இரட்சிக்கப்படாதவர்கள். அதாவது தேவனால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் எவ்வளவு பெரிய கிரியை செய்தாலும் அவர்கள் தேவனால் நினைவுகூரப்பட மாட்டார்கள். இதை நீ உன் சொந்த நாட்டத்துடன் ஒப்பிடும்போது, நீ இறுதியில் பேதுரு போன்ற அல்லது பவுல் போன்ற மனிதனாக இருக்கிறாயா என்பதைச் சுயமாக அறிய வேண்டும். நீ தேடுவதில் இன்னும் சத்தியம் இல்லை என்றால், இன்றும் நீ பவுலைப் போலவே திமிர்பிடித்தவனாகவும், இழிவானவனாகவும் இருந்தால், அவனைப் போலவே அகந்தையாகவும் பெருமையாகவும் இருந்தால், நீ தோல்வியுற்ற ஒரு சீர்கெட்டவன் என்பதில் சந்தேகமில்லை. நீ பேதுருவைப் போலவே தேடுவாயானால், நீ நடைமுறைகளையும் உண்மையான மாற்றங்களையும் நாடி, திமிர்பிடித்தவனாகவோ, பிடிவாதமுள்ளவனாகவோ இல்லாமல், உன் கடமையைச் செய்ய முற்பட்டால், நீ ஜெயத்தை அடையக்கூடிய தேவனுடைய ஒரு சிருஷ்டியாக இருப்பாய். தனது சொந்த சாராம்சம் அல்லது சீர்கேடு என்னவென்று பவுலுக்கு தெரியாது. அவனுடைய கீழ்ப்படியாமையை அவன் அறியாதிருந்தான். அவன் ஒருபோதும் கிறிஸ்துவை இழிவுபடுத்தியதைக் குறிப்பிடவில்லை. அதற்கான அதிக வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. அவன் ஒரு சுருக்கமான விளக்கத்தை மட்டுமே வழங்கினான் மற்றும் அவனது இருதயத்தில் ஆழமாக, அவன் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படியவில்லை. அவன் தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் விழுந்தாலும், அவன் தனக்குள்ளே ஆழமாகப் பார்க்கவில்லை. அவன் தொடர்ந்து கிரியை செய்வதில் திருப்தி அடைந்தான். அவன் தன்னை அறிந்துகொள்வதையும் தனது பழைய மனநிலையை மாற்றுவதையும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாகக் கருதவில்லை. வெறுமனே சத்தியத்தைப் பேசுவதில் திருப்தி அடைந்தான். தனது மனசாட்சிக்கு ஒரு அடிமையைப் போல மற்றவர்களுக்காகத் தன்னை வழங்கித் திருப்தி அடைந்தான் மற்றும் தன்னை ஆறுதல்படுத்தவும், கடந்த கால பாவங்களுக்காகத் தன்னை மன்னிக்கவும் இயேசுவின் சீஷர்களை இனி துன்புறுத்தாமல் இருப்பதில் திருப்தி அடைந்தான். அவன் பின்பற்றிய குறிக்கோளானது எதிர்கால கிரீடம் மற்றும் நிரந்தரமற்ற கிரியைகளைத் தவிர வேறொன்றுமில்லை. அவன் பின்பற்றிய குறிக்கோளானது ஏராளமான கிருபையாகும். அவன் போதுமான சத்தியத்தைத் தேடவில்லை. முன்பு புரிந்து கொள்ளாத சத்தியத்தில் ஆழமாக முன்னேற அவன் முயலவில்லை. ஆகவே, தன்னைப் பற்றிய அவனது அறிவு பொய்யானது என்று கூறலாம் மற்றும் அவன் சிட்சையையோ நியாயத்தீர்ப்பையோ ஏற்கவில்லை. அவனால் கிரியை செய்ய முடிந்தது என்பது அவன் தனது சொந்த சுபாவம் அல்லது சாராம்சத்தைப் பற்றிய அறிவைக் கொண்டிருந்தான் என்று அர்த்தமாகாது. அவனது கவனம் வெளிப்புற நடைமுறைகளில் மட்டுமே இருந்தது. மேலும் அவன் பாடுபட்டது, மாற்றத்துக்கானது அல்ல, அது அறிவுக்கானது. அவனுடைய கிரியையானது முற்றிலுமாக தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் இயேசு தோன்றியதன் விளைவாகும். இது அவன் முதலில் செய்யத் தீர்மானித்த ஒன்றல்ல அல்லது அவனது பழைய மனநிலையைக் கத்தரித்து சுத்தம் செய்து கொண்டபின் ஏற்பட்ட கிரியையும் அல்ல. அவன் எவ்வாறு கிரியை செய்திருந்தாலும், அவனுடைய பழைய மனநிலை மாறவில்லை. ஆகவே அவனது கிரியை அவனது கடந்தகால பாவங்களை நிவர்த்தி செய்யவில்லை. ஆனால் அவனது கிரியை அக்கால திருச்சபைகளில் ஒரு குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒருவனுக்கு, அவனது பழைய மனநிலை மாறவில்லை—அதாவது, இரட்சிப்பைப் பெறாத மற்றும் சத்தியம் இல்லாமல் இருந்த ஒருவனால்—கர்த்தராகிய இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக அவன் முற்றிலுமாக மாற இயலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் மீது அன்பும் பயபக்தியும் நிறைந்த ஒருவனும் அல்ல, சத்தியத்தைத் தேடுவதில் திறமையானவனும் அல்ல, மனுவுருவாதலின் இரகசியத்தைத் தேடிய ஒருவனும் அல்ல. அவன் போலியான வாதம் செய்வதில் திறமையானவனாக மட்டுமே இருந்தான். அவன் தன்னை விட உயர்ந்த அல்லது சத்தியம் பெற்ற எவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டான். தனக்கு முரணான அல்லது தன்னுடன் பகைமை கொண்ட மனிதர்கள் அல்லது உண்மைகள் மீது அவன் பொறாமை கொண்டான். ஒரு சிறந்த காட்சியை முன்வைத்து ஆழ்ந்த அறிவைக் கொண்ட திறமையான மனிதர்களையே அவன் விரும்பினான். மெய்யான வழியைத் தேடும், சத்தியத்தைத் தவிர வேறொன்றையும் கவனித்துக்கொள்ளாத ஏழை ஜனங்களுடன் பழகுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக மத அமைப்புகளின் மூத்த மனிதர்களுடனும், கோட்பாடுகளை மட்டுமே பேசும், ஏராளமான அறிவைப் பெற்ற மனிதர்களுடனும் தன்னை இணைத்துக்கொண்டான். பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையைப் பற்றி அவனுக்கு எந்த அன்பும் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய புதிய கிரியையின் செயல்பாட்டில் அக்கறைகொள்ளவில்லை. மாறாக, பொதுவான சத்தியங்களை விட உயர்ந்த அந்த விதிகளையும் உபதேசங்களையும் அவன் விரும்பினான். அவனது உள்ளார்ந்த சாராம்சத்திலும், அவன் தேடியவை முழுவதிலும், சத்தியத்தைப் பின்பற்றிய ஒரு கிறிஸ்தவன் என்றும் தேவனுடைய வீட்டில் உண்மையுள்ள ஊழியக்காரன் என்றும் அழைக்கப்படுவதற்கு அவன் தகுதியற்றவன். ஏனென்றால் அவனுடைய மாய்மாலம் அதிகமாக இருந்தது, அவனுடைய கீழ்ப்படியாமை மிகப் பெரியது. அவன் கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரனாக அறியப்பட்டாலும், பரலோகராஜ்யத்தின் வாசலில் பிரவேசிப்பதற்கு அவன் ஒருபோதும் தகுதியுடையவன் அல்ல. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை அவன் செய்த செயல்களை நீதியுள்ளவை என்று சொல்ல முடியாது. அவன் மாயத்தனமாக அநீதியைச் செய்தவனாக ஆனால் கிறிஸ்துவுக்காக கிரியை செய்தவனாக மட்டுமே பார்க்கப்படலாம். அவனைப் பிசாசு என்று அழைக்க முடியாது என்றாலும், அவனை அநீதியைச் செய்த மனிதன் என்று அழைக்கலாம். அவன் அதிகக் கிரியை செய்தான். ஆனாலும் அவன் செய்த கிரியையின் அளவு குறித்து தீர்மானிக்காமல் அதன் தரம் மற்றும் சாராம்சத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே இந்த விஷயத்தின் அடிப்படையை அடைய முடியும். அவன் எப்போதும் விசுவாசித்தான்: “நான் கிரியை செய்ய வல்லவன், பெரும்பாலான ஜனங்களை விட நான் சிறந்தவன். வேறு யாரைக் காட்டிலும் கர்த்தருடைய பாரத்தைச் சுமக்கக்கூடிய ஒருவனாக என்னைக் கருதுகிறேன். யாரும் என்னைப் போல ஆழமாக மனந்திரும்புவதில்லை, ஏனென்றால், பெரிய ஒளி என் மீது பிரகாசித்தது. நான் பெரிய ஒளியைக் கண்டேன், எனவே என் மனந்திரும்புதல் மற்றவர்களை விட ஆழமானது.” அந்த நேரத்தில், அவன் தனது இருதயத்திற்குள் நினைத்தது இதுதான். பவுல் தனது கிரியையின் முடிவில், “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினான். அவனது போராட்டம், கிரியை மற்றும் போக்கு முற்றிலுமாக நீதியின் கிரீடத்திற்காகவே இருந்தது மற்றும் அவன் தீவிரமாக முன்னேறவில்லை. அவன் தனது கிரியையில் முழுமையடையவில்லை என்றாலும், அவனது தவறுகளைச் சமாளிப்பதற்காகவும், அவனது மனசாட்சியின் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்காகவும் அவனது கிரியை வெறுமனே செய்யப்பட்டது என்று கூறலாம். அவன் தனது கிரியையை முடிப்பான் என்றும், தனது போக்கை முடித்துக்கொள்வான், விரைவில் தனது போராட்டத்தைப் போராடி முடிப்பான் என்று மட்டுமே நம்பினான். இதனால் அவன் தனது நீண்டகால நீதியின் கிரீடத்தை விரைவில் பெற முடியும் என்று நம்பினான். கர்த்தராகிய இயேசுவை அவருடைய அனுபவங்களாலும் உண்மையான அறிவினாலும் சந்திக்காமல், தனது கிரியையை சீக்கிரம் முடிப்பதன் மூலம் கர்த்தராகிய இயேசுவைச் சந்திக்கும் போது, தான் செய்த கிரியையின் பலன்களை அவன் பெற வேண்டும் என்பதற்காக அவன் ஏங்கினான். அவன் தனது கிரியையை தன்னை ஆறுதல்படுத்தவும், எதிர்காலக் கிரீடத்திற்கு ஈடாக வைக்கவும் பயன்படுத்தினான். அவன் தேடியது சத்தியமோ தேவனோ அல்ல, கிரீடம் மட்டுமே. அத்தகைய நாட்டம் எவ்வாறு தரமானதாக இருக்கும்? அவனது உந்துதல், அவனது கிரியை, அவன் செலுத்திய விலைக்கிரயம் மற்றும் அவனது முயற்சிகள் அனைத்தையும்—அவனது அற்புதமானக் கற்பனைகள் அனைத்தையும் நிரப்பியது. அவன் தனது சொந்த ஆசைகளுக்கு ஏற்ப முற்றிலுமாக கிரியை செய்தான். அவனது முழு கிரியையிலும், அவன் செலுத்திய விலைக்கிரயத்தில் சிறிதளவு விருப்பமும் இல்லை. அவன் வெறுமனே ஒரு ஒப்பந்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தான். அவனது கடமையைச் செய்வதற்காக அவனது முயற்சிகள் விருப்பத்துடன் செய்யப்படவில்லை. ஆனால் ஒப்பந்தத்தின் நோக்கத்தை அடைவதற்காக விருப்பத்துடன் செய்யப்பட்டன. அத்தகைய முயற்சிகளுக்கு ஏதாவது மதிப்பு இருக்கிறதா? அவனது அசுத்தமான முயற்சிகளை யாரேனும் பாராட்டுவார்களா? இத்தகைய முயற்சிகளில் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அவனது கிரியை எதிர்காலத்திற்கான கனவுகள் நிறைந்ததாகவும், அற்புதமான திட்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தன. மனித மனநிலையை மாற்றுவதற்கான பாதையை அது கொண்டிருக்கவில்லை. அவனது தயவு மிகவும் பாசாங்கானதாகும். அவனது கிரியை ஜீவனை வழங்கவில்லை. ஆனால் அது ஒரு நாகரிகத்தின் மோசடியாகும். அது ஒரு ஒப்பந்தமாகும். இத்தகையக் கிரியையால் மனிதனை எவ்வாறு மெய்யான கடமையை மீட்டெடுக்கும் பாதையில் செலுத்த முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 481

பேதுரு தேடியதெல்லாம் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றதுதான். அவன் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றான். துன்பங்களையும் இன்னல்களையும் பொருட்படுத்தாமல், தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் தயாராக இருந்தான். தேவனுடைய விசுவாசிகளுக்கு இதைவிட பெரிய நாட்டம் இருக்கமுடியாது. பவுல் தேடியவை அவனுடைய மாம்சத்தாலும், அவனுடைய சொந்தக் கருத்துக்களாலும், அவனுடைய சொந்தத் திட்டங்களாலும், யோசனைகளாலும் களங்கப்படுத்தப்பட்டது. அவன் எந்த வகையிலும் தேவனுடைய தகுதியான சிருஷ்டி அல்ல. தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முயன்றவன் அல்ல. தேவனுடைய திட்டங்களுக்கு அடிபணிய பேதுரு முயன்றான். அவன் செய்த கிரியை பெரிதாக இல்லை என்றாலும், அவனது பின்தொடரலுக்குப் பின்னால் இருந்த உந்துதலும் அவன் நடந்து வந்த பாதையும் சரியானதுதான். அவனால் பலரை ஆதாயம் செய்ய முடியவில்லை என்றாலும், அவனால் சத்தியத்தின் வழியைப் பின்பற்ற முடிந்தது. இதன் காரணமாக அவன் தேவனுடைய தகுதியான சிருஷ்டி என்று கூறலாம். இன்று, நீ ஒரு ஊழியக்காரன் இல்லையென்றாலும், தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை உன்னால் செய்ய முடியும் மற்றும் தேவனுடைய அனைத்து திட்டங்களுக்கும் நீ கீழ்ப்படிய முற்பட வேண்டும். தேவன் சொல்வதை உன்னால் கடைப்பிடிக்க முடிய வேண்டும் மற்றும் எல்லா விதமான துன்பங்களையும் சுத்திகரிப்புகளையும் அனுபவிக்க முடிய வேண்டும். நீ பலவீனமாக இருந்தாலும், உன் இருதயத்தில் உன்னால் இன்னும் தேவனை நேசிக்க முடிய வேண்டும். தங்கள் சொந்த ஜீவனுக்குப் பொறுப்பேற்கிறவர்கள் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் மற்றும் அத்தகைய மனிதர்களின் பின்தொடருதல் பற்றிய கண்ணோட்டம் சரியானதாகும். தேவனுக்குத் தேவைப்படுகின்ற மனிதர்கள் இவர்கள் தான். நீ அதிகக் கிரியை செய்கிறாய், மற்றவர்கள் உன் போதனைகளைப் பெற்றார்கள், ஆனால் நீயோ மாறவில்லை, எந்த சாட்சியும் பகரவில்லை அல்லது உண்மையான அனுபவமும் இல்லை, அதாவது உன் ஜீவிதத்தின் முடிவில், நீ செய்தவற்றில் எதுவும் சாட்சி பகரவில்லை என்றால், நீ மாறிவிட்டாயா? நீ சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவனா? அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் உன்னைப் பயன்படுத்தியபோது, உன்னுடைய ஒரு பகுதியை அவர் கிரியை செய்யப் பயன்படுத்தினார். உன்னால் பயன்படுத்த முடியாத பகுதியை அவர் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தப்படும்போது நீ மாற முற்பட்டால், நீ படிப்படியாகப் பரிபூரணமடைவாய். ஆயினும், நீ இறுதியில் ஆதாயம் செய்யப்படுவாயா இல்லையா என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. இது உன் நாட்டத்தின் முறையைப் பொறுத்தது. உன் தனிப்பட்ட மனநிலையில் எந்த மாற்றங்களும் இல்லை என்றால், அதற்குக் காரணம், நாட்டம் குறித்த உன் பார்வை தவறானது என்பதே. உனக்கு எந்த வெகுமதியும் வழங்கப்படாவிட்டால், அது உன் சொந்தப் பிரச்சனையாகும். ஏனென்றால் நீ சத்தியத்தைக் கடைபிடிக்கவில்லை. தேவனுடைய விருப்பத்தை உன்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, உன் தனிப்பட்ட அனுபவங்களை விட வேறு எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. உன் தனிப்பட்ட பிரவேசத்தை விட வேறு எதுவும் முக்கியமானதாக இல்லை! சிலர், “நான் உமக்காக இவ்வளவு கிரியைகளைச் செய்திருக்கிறேன், நான் எந்தவொரு புகழ்பெற்ற சாதனைகளையும் செய்யவில்லை என்றாலும், நான் இன்னும் எனது முயற்சிகளில் முனைப்புடன் இருக்கிறேன். ஜீவவிருட்சக் கனியைப் புசிக்க என்னைப் பரலோகத்திற்கு உம்மால் அனுமதிக்க முடியவில்லையா?” என்று சொல்வார்கள். நான் எத்தகைய ஜனங்களை விரும்புகிறேன் என்பதை நீ அறிந்துக்கொள்ள வேண்டும். அசுத்தமானவர்கள் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அசுத்தமானவர்கள் பரிசுத்தமான பூமியை அசுத்தப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. நீ பல கிரியைகளைச் செய்திருந்தாலும், பல ஆண்டுகளாக கிரியை செய்திருந்தாலும், இறுதியில் நீ இன்னும் வருந்தத்தக்கதாக அசுத்தமாய் இருந்தால், நீ என் ராஜ்யத்தில் பிரவேசிக்க விரும்புவதைப் பரலோக பிரமாணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது! உலகம் உருவானது முதல் இன்று வரை, என்னிடம் நயங்காட்டுபவர்களை என்னுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க நான் ஒருபோதும் எளிதாக அணுகலை வழங்கியதில்லை. இது பரலோக விதியாகும், ஒருவராலும் அதை மீற முடியாது! நீ ஜீவனை நாட வேண்டும். இன்று, பரிபூரணமாக்கப்படுபவர்களும் பேதுருவைப் போன்றவர்களே: அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களைத் தேடுபவர்கள், தேவனுக்கு சாட்சி அளிக்கவும், தேவனுடைய சிருஷ்டியாக தங்கள் கடமையைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இது போன்றவர்கள் மட்டுமே பரிபூரணமாக்கப்படுவார்கள். நீ வெகுமதிகளை மட்டுமே பார்த்து, உன் சொந்த ஜீவித மனநிலையை மாற்ற முற்படவில்லை என்றால், உன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்—இது மாற்ற முடியாத சத்தியமாகும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 482

ஜீவித உழைப்பைப் பின்பற்றாதவர்கள் அனைவரும் வீணாக இருக்கிறார்கள் என்பதை பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்களின் வேறுபாட்டிலிருந்து நீ புரிந்துக்கொள்ள வேண்டும்! நீ தேவனை விசுவாசிக்கிறாய், தேவனைப் பின்பற்றுகிறாய் மற்றும் உன் இருதயத்தில் நீ தேவனை நேசிக்கிறாய். உன் சீர்கேடான மனநிலையை நீ ஒதுக்கி வைக்க வேண்டும். தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ முயல வேண்டும் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையை நீ செய்ய வேண்டும். நீ தேவனை விசுவாசிக்கிறாய், பின்பற்றுகிறாய் என்பதால், நீ எல்லாவற்றையும் அவருக்கு வழங்க வேண்டும், தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது கோரிக்கைகளை வைக்கக்கூடாது மற்றும் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். நீ சிருஷ்டிக்கப்பட்டதால், உன்னைச் சிருஷ்டித்த கர்த்தருக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், நீ இயல்பாகவே உன் மீது ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறாய். உன் சொந்த விதியைக் கட்டுப்படுத்தும் திறன் உன்னிடம் இல்லை. நீ தேவனை விசுவாசிக்கிற ஒரு மனிதன் என்பதால், நீ பரிசுத்தத்தையும் மாற்றத்தையும் நாட வேண்டும். நீ தேவனுடைய சிருஷ்டி என்பதால், நீ உன் கடமையைக் கடைபிடிக்க வேண்டும். உனக்குத் தகுதியான இடத்தில் இருக்க வேண்டும். உன் கடமையை நீ மீறக்கூடாது. இது உன்னைக் கட்டுப்படுத்துவதற்காகவோ அல்லது உபதேசத்தின் மூலம் உன்னை அடக்குவதற்காகவோ அல்ல. மாறாக இது உன் கடமையை நீ செய்யும் பாதையாகும் மற்றும் அதை நீதியைச் செய்கிற அனைவராலும் அடைய முடியும்—அடைய வேண்டும். பேதுரு மற்றும் பவுலின் சாராம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், நீ எவ்வாறு நாட வேண்டும் என்பதை நீ அறிவாய். பேதுருவும் பவுலும் நடந்த பாதைகளில் ஒன்று, பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதை, மற்றொன்று புறம்பாக்கப்படுவதற்கான பாதை ஆகும். பேதுருவும் பவுலும் இரண்டு வெவ்வேறு பாதைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைப் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியானவருடைய அறிவொளியையும் பிரகாசத்தையும் பெற்றிருந்தாலும், ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுவினால் தங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஒவ்வொருவரிலும் கிடைக்கும் கனி ஒன்றல்ல: ஒருவன் உண்மையிலேயே கனி கொடுத்தான், மற்றொருவன் கனி கொடுக்கவில்லை. அவர்கள் செய்த கிரியை, அவர்களால் வெளிப்புறமாக வெளிப்படுத்தப்பட்டவை மற்றும் அவர்களின் இறுதி முடிவுகள் ஆகியவற்றின் சாராம்சங்களிலிருந்து, நீ எந்தப் பாதையில் செல்ல வேண்டும், எந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெளிவாக இரண்டு வெவ்வேறு பாதைகளில் நடந்தார்கள். பவுலும் பேதுருவும், ஒவ்வொரு பாதையின் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். ஆகவே தொடக்கத்திலிருந்தே இந்த இரண்டு பாதைகளுக்கும் அவர்கள் முன்மாதிரியாக இருந்தார்கள். பவுலின் அனுபவங்களின் முக்கிய கருத்துக்கள் எவை, அவன் ஏன் ஜெயம் பெறவில்லை? பேதுருவின் அனுபவங்களின் முக்கியக் கருத்துக்கள் எவை, அவன் எவ்வாறு பரிபூரணமாக்கப்படுதலை அனுபவித்தான்? அவர்கள் ஒவ்வொருவரும் அக்கறை காட்டியதை ஒப்பிட்டுப் பார்த்தால், தேவன் எந்த வகையான மனிதரை விரும்புகிறார், தேவனுடைய விருப்பம் என்ன, தேவனுடைய மனநிலை என்ன, எந்த வகையான மனிதர் இறுதியில் பரிபூரணமாக்கப்படுவான் மற்றும் எந்த வகையான நபர் பரிபூரணமாக்கப்படமாட்டான், பரிபூரணமாக்கப்படுபவர்களின் மனநிலை என்ன என்பதையும், பரிபூரணமாக்கப்படாதவர்களின் மனநிலை என்ன என்பதையும் நீ அறிந்து கொள்வாய். இந்த சாராம்சத்தின் பிரச்சனைகளை பேதுரு மற்றும் பவுலின் அனுபவங்களில் பார்க்கலாம். தேவன் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், ஆகவே எல்லா சிருஷ்டிப்புகளையும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வந்து தம்முடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படியச் செய்கிறார். எல்லாவற்றையும் அவருடைய கைகளில் இருக்கும்படி அவர் எல்லாவற்றிற்கும் கட்டளையிடுவார். விலங்குகள், தாவரங்கள், மனிதகுலம், மலைகள் மற்றும் ஆறுகள் மற்றும் ஏரிகள் உட்பட தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும். வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவருடைய ஆதிக்கத்தின் கீழ் வர வேண்டும். அவற்றுக்கு வேறு வழியில்லை. அனைத்தும் அவருடைய திட்டங்களுக்கு அடிபணிய வேண்டும். இது தேவனால் ஆணையிடப்பட்டது. இது தேவனுடைய அதிகாரம். தேவன் எல்லாவற்றிற்கும் கட்டளையிடுகிறார், எல்லாவற்றிற்கும் கட்டளையிட்டு வரிசைப்படுத்துகிறார். ஒவ்வொன்றும் வகையின்படி வகைப்படுத்தப்பட்டு, தேவனுடைய சித்தப்படி அவற்றுக்குரிய சொந்த நிலையை ஒதுக்குகிறார். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எந்தவொரு விஷயமும் தேவனை மிஞ்ச முடியாது. எல்லாமே தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்திற்கு ஊழியம் செய்கின்றன. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கவோ தேவனிடம் எந்தவொரு கோரிக்கையையும் வைக்கவோ எந்த ஒரு சிருஷ்டியும் துணிவதில்லை. ஆகவே, மனிதன், தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, தன் கடமையைச் செய்ய வேண்டும். மனிதன் எல்லாவற்றிற்கும் அதிபதியாக அல்லது பராமரிப்பாளனாக இருந்தாலும், எல்லாவற்றிலும் எவ்வளவு உயர்ந்ததாக மனிதனுடைய அந்தஸ்து இருந்தாலும், அவன் தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் ஒரு சிறிய மனிதனாகவே இருக்கிறான். அவன் ஒரு சிறிய மனிதன் மற்றும் தேவனுடைய ஒரு சிருஷ்டி என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவன் ஒருபோதும் தேவனுக்கு மேலே இருக்க மாட்டான். தேவனுடைய ஒரு சிருஷ்டியாக, மனிதன் தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்ய முற்பட வேண்டும். மற்ற தேர்வுகளைச் செய்யாமல் தேவனை நேசிக்க முற்பட வேண்டும், ஏனென்றால் தேவன் மனிதனின் அன்பிற்கு தகுதியானவர். தேவனை நேசிக்க முற்படுபவர்கள் எந்தவொரு தனிப்பட்ட நன்மைகளையும் தேடக்கூடாது அல்லது அவர்கள் தனிப்பட்ட முறையில் ஏங்குகிறதைத் தேடக்கூடாது. இது மிகவும் சரியான வழிமுறையாகும். நீ தேடுவது சத்தியம் என்றால், நீ நடைமுறையில் வைத்திருப்பது சத்தியம் என்றால், நீ அடைவது உன் மனநிலையின் மாற்றமாக இருந்தால், நீ செல்லும் பாதை சரியானதாகும். நீ தேடுவது மாம்சத்தின் ஆசீர்வாதங்கள் என்றால், நீ கடைபிடிப்பது உன் சொந்த கருத்துக்களின் சத்தியம் என்றால் மற்றும் உன் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றால், நீ மாம்சத்தில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை என்பதாகும். நீ இன்னும் தெளிவற்ற நிலையில் ஜீவிப்பதால், நீ தேடுவது நிச்சயமாக உன்னை நரகத்திற்கு அழைத்துச் செல்லும். ஏனென்றால், நீ நடந்து செல்லும் பாதை தோல்வியின் பாதையாகும். நீ பரிபூரணமாக்கப்படுவாயா அல்லது புறம்பாக்கப்படுவாயா என்பது உன் சொந்த நாட்டத்தைப் பொறுத்ததாகும். அதாவது, ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல் II

அடுத்த: ஜீவனுக்குள் பிரவேசித்தல் IV

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக