ஜீவனுக்குள் பிரவேசித்தல் II

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 406

மக்கள் தேவனில் விசுவாசம் வைத்து, அவரை நேசித்து, அவரைத் திருப்திப்படுத்தும்போது, அவர்கள் தங்கள் இருதயத்தால் தேவனுடைய ஆவியைத் தொடுகிறார்கள், அதன் மூலம் அவரது திருப்தியைப் பெறுகிறார்கள். தங்கள் இருதயத்தைப் பயன்படுத்தி தேவனுடைய வார்த்தைகளோடு தொடர்புகொண்டு, இவ்வாறு அவருடைய ஆவியால் ஏவப்படுகிறார்கள். நீ ஓர் முறையான ஆவிக்குரிய வாழ்க்கையை வாழ்ந்திடவும், தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்பினால், முதலாவது உனது இருதயத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். உனது இருதயத்தை அவருக்கு முன்பாக அமைதிப்படுத்தி, அவருக்குள் உனது முழு இருதயத்தையும் ஊற்றியதற்குப் பின் மட்டுமே, படிப்படியாக முறையான ஆவிக்குரிய வாழ்க்கையை வளர்த்துக்கொள்ள முடியும். தேவன் மீதான மக்களின் விசுவாசத்தை பொறுத்தமட்டில் அவர்கள் தங்கள் இருதயங்களை அவருக்கு கொடுக்காவிட்டால், அவர்கள் இருதயங்கள் அவரோடு இராவிட்டால், அவர்கள் தேவனின் பாரத்தைத் தங்கள் நுகமாக ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த ஜனங்களின் நடத்தையானது தேவனை ஏமாற்றுவதாக, மதம் சார்ந்த மக்களின் செய்கைக்கு ஒத்திருக்குமே தவிர, அதை தேவன் மெச்சிக்கொள்ளமாட்டார். இப்படிப்பட்ட நபரிடமிருந்து தேவன் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர் தேவனுடைய கிரியைக்குப் பிரதிபலிப்புப் படலமாக மட்டுமே ஊழியஞ்செய்ய முடியும், இவர்கள் தேவனுடைய வீட்டில் அலங்காரங்களைப் போல இருக்கின்றனர், அவர்கள் இடத்தை நிரப்புகிறவராகவும் பிரயோஜமில்லாதவராக மட்டுமே இருப்பார். இப்படிப்பட்டவரை தேவன் பயன்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட நபரில் பரிசுத்த ஆவியானவரின் செயல்பாட்டுக்கு எந்த வாய்ப்பும் இல்லாததோடு, அவர்களைப் பரிபூரணப்படுத்துவதில் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. இப்படிப்பட்டவர் உண்மையான நடைபிணமாவார். பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தக்கூடியவை எதுவும் இப்படிப்பட்டவர்களில் காணப்படாது. அவர்கள் அனைவரும் முற்றிலும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்களாயும், மிகவும் சீர்கெட்டுப்போனவர்களாயும் இருப்பர். இப்படிப்பட்டவர்களை தேவன் புறம்பே தள்ளுவார். இன்று பரிசுத்த ஆவியானவர் மக்களைப் பயன்படுத்தும்போது, காரியங்களை முடிப்பதற்கு அவர்களிலுள்ள விரும்பத்தக்க பகுதிகளை மட்டும் உபயோகப்படுத்துவதில்லை, அவர்களிலுள்ள விரும்பத்தகாத பகுதிகளையும் அவர் மாற்றி பரிபூரணப்படுத்துகிறார். உன்னால் உன் இருதயத்தை தேவனுக்குள் ஊற்ற முடிந்து அதை அவர் முன்பு அமைதிப்படுத்த முடிந்தால், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுவதற்கும், அவர் அருளும் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கும் தகுதிகளையும் வாய்ப்பையும் நீ பெற்றுக்கொள்வாய். அதையும் விட, உனது தப்பிதங்களை பரிசுத்த ஆவியானவர் சீர்செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். நீ உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கும்போது, நேர்மறை பக்கத்தில், ஆழமான பிரவேசத்தைப் பெறவும், புத்தியின் உயர்தளத்தை அடையவும் முடியும். எதிர்மறை பக்கத்தில், உனது சொந்தத் தவறுகள் மற்றும் குறைபாடுகளைப் பற்றிய அதிக அறிவு இருக்கும்; தேவனுடைய சித்தத்தைத் திருப்திப்படுத்த, அதிகமாக ஏங்கவும் நாடவும் செய்வாய்; மேலும், செயலற்றவனாக இல்லாமல், உற்சாகமாகஉள்ளே பிரவேசிக்க முடியும். இது நீ சரியான நபர் என்பதைக் காண்பிக்கிறது. தேவனுக்கு முன்பாக உனது இருதயம் தொடர்ந்து அமைதியாக இருக்க முடியும் என்று வைத்துக்கொண்டால், அப்போது நீ பரிசுத்த ஆவியானவரின் பாராட்டுதலைப் பெறுகிறாயோ இல்லையோ, தேவனைப் பிரியப்படுத்துகிறாயோ இல்லையோ, துடிப்பாக உட்பிரவேசிக்க முடிகிறதா என்பதுதான் முக்கியமான காரியம். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களைப் பிரகாசிப்பித்து செய்து அவரைப் பயன்படுத்தும்போது, அவர் அவர்களை ஒருபோதும் எதிர்மறையாக மாற்றுவதில்லை. ஆனால், துடிப்பாக முன்னேறிச் செல்லவே வைக்கிறார். அவர் அப்படிச் செய்யும் போது, ஜனங்களுக்கு அப்போதும் பெலவீனங்கள் இருக்கும், அவர்கள் அவற்றின்படி வாழமாட்டார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தைத் தள்ளிப் போடுவதில்லை; அவர்கள் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துவதைத் தொடர்ந்து நாடுவர். இது ஒரு தரநிலையாகும். இதை நீ அடைய முடியுமென்றால் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நீ பெற்றுள்ளாய் என்பதை இது நிரூபிக்கிறது. பிரகாசத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரும், தங்களை அறிந்து கொண்ட பின்னரும் எழுந்திருந்து தேவனுடன் இணைந்து செயல்பட இயலாமல் எதிர்மறையாக, செயலற்றவராக ஒருவர் இருந்தால், அப்போது அவர்கள் தேவ கிருபையை மட்டும் அடைந்திருக்கிறார்களே தவிர, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இல்லை. அவர்களின் எதிர்மறை தன்மையானது, அவர்களது இருதயம் தேவனிடமாய்த் திரும்பவில்லை என்றும் அவரது ஆவி தேவ ஆவியினால் ஏவப்படவில்லை என்றும் அர்த்தம். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 407

தேவனுக்கு முன்பாக ஒருவரது இருதயத்தை அமைதியாய் அமர்ந்திருக்கச் செய்வதே மிக முக்கியமானது என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இது மக்களின் ஆவிக்குரிய வாழ்க்கை மற்றும் அவர்களது வாழ்வின் வளர்ச்சியைக் குறித்த பிரச்னையாகும். தேவனுக்கு முன்பாக உனது இருதயம் அமைதியாக இருந்தால் மட்டுமே, நீ சத்தியத்தைப் பின்பற்றுவதும் உனது மனநிலை மாற்றமும் கனி தரும். இது ஏனென்றால், நீ பாரத்தைச் சுமந்தவனாக தேவனுக்கு முன்பு வருகிறாய், பலவிதங்களில் குறைபாடு உள்ளவன் என்றும், அறிந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்கள் இருக்கின்றன என்றும், அனுபவிக்கவேண்டிய உண்மைகள் பல இருக்கின்றன என்றும் மேலும் தேவ சித்தத்தின் மீது முழுவதும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் எப்போதும் நினைக்கிறாய். இந்தக் காரியங்கள் எப்போதும் உன் மனதில் இருக்கின்றன. இவை மூச்சுவிட இயலாமல் எப்போதும் உன்னை அழுத்திக்கொண்டே இருப்பதால், (நீ எதிர்மறை நோக்கில் இல்லையென்றாலும்கூட) இருதயத்தில் பாரத்தை உணர நேரிடும். இப்படி இருக்கும் நபர் மட்டுமே தேவனுடைய வார்த்தையின் பிரகாசத்தை ஏற்றுக்கொள்ளவும் தேவ ஆவியினால் ஏவப்படவும் தகுதியுடையவர். அவர்களது பாரத்தினால், அவர்களது இருதய பாரத்தினால், அவர்கள் செலுத்திய கிரயத்தினால், தேவனுக்கு முன்பாக அவர்கள் அனுபவித்த பாடுகளினால் அவர் அருளும் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அவர்கள் அடைந்தார்கள் என்று கூறலாம். ஏனென்றால் தேவன் ஒருவரையும் பாரபட்சத்துடன் நடத்துவதில்லை. மக்களை அவர் எப்போதும் நீதியுடன் நடத்துகிறார், ஆனால் காரணமில்லாமல் அல்லது நிபந்தனையில்லாமல் அவர் மக்களுக்குக் கொடுப்பதுமில்லை. இது அவரது நீதியுள்ள மனநிலையின் ஓர் அம்சமாகும். நடைமுறை வாழ்வில், இன்னும் அநேகர் இந்நிலையை அடைய வேண்டியதுள்ளது. குறைந்தபட்சம், அவர்கள் இருதயங்கள் இன்னும் முழுமையாக தேவனிடம் திரும்ப வேண்டியுள்ளதால், அவர்களது வாழ்கை மனநிலையில் எந்தப் பெரிய மாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இன்னும் பெற்றுக்கொள்ளாமல், தேவ கிருபையில் மட்டுமே வாழ்கிறார்கள். தேவனால் பயன்படுத்தப்படுவதற்குக் கீழ்க்காணும் கட்டளை விதிகளை மக்கள் பூர்த்தி செய்ய வேண்டும்: அவர்கள் இருதயங்கள் தேவனிடம் திரும்பவேண்டும்; அவருடைய வார்த்தைகளின் பாரத்தை அவர்கள் சுமக்கவேண்டும்; வாஞ்சையுள்ள இருதயங்கள் அவர்களுக்கு வேண்டும்; சத்தியத்தைத் தேடும் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் மக்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்ளவும், அவரின் பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் அடிக்கடி அடையவும் முடியும். தேவனால் பயன்படுத்தப்படும் மக்கள் வெளிப்புறமாக பகுத்தறிவையும், மற்றவர்களுடன் இயல்பான உறவுகளையும் கொண்டிராதவர்களாய்த் தெரிந்தாலும், அவர்கள் மரியாதையுடன் கவனமாகப் பேசுவர், மேலும் அவர்களால் தேவனுக்கு முன்பாக அமைதியான இருதயத்தைக் கொண்டிருக்க முடியும். இப்படிப்பட்ட நபரே சரியாக பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படத் தகுதியானவர். தேவனால் பேசப்படுகிற “பகுத்தறிவற்ற” நபர் மற்றவர்களுடன் இயல்பான உறவுகள் இல்லாதவராகத் தெரிவார், அவர்கள் வெளிப்புற அன்பைப் பற்றியோ அல்லது வெளிப்புற நடைமுறைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை, ஆனால் அவர்கள் ஆவிக்குரிய விஷயங்களைக் குறித்து ஐக்கியம்கொள்ளும்போது, அவர்களால் தங்கள் இருதயங்களைத் திறந்து, தேவனுக்கு முன்பான தங்கள் உண்மை அனுபவங்களிலிருந்து பெற்ற பிரகாசத்தோடும், வெளிச்சத்தோடும் சுயநலமின்றி மற்றவர்களுக்குக் கொடுக்க இயலும். இவ்விதமாகவே அவர்கள் தேவன் மீதான அன்பை வெளிப்படுத்தி தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களை அவதூறாய்ப் பேசி, பரியாசம் பண்ணும்போது, வெளியிலுள்ள மக்களால், விஷயங்களால், அல்லது பொருட்களால் தாங்கள் கட்டுப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பார்கள் மற்றும் தேவன் முன்பாக அமைதியாக இருப்பர். அவர்கள் தங்களுக்கெனத் தனித்துவமான புரிதல் கொண்டவராகக் காணப்படுவார். மற்ற மக்கள் என்ன செய்தாலும், அவர்களது இருதயங்கள் ஒருபோதும் தேவனை விட்டு விலகாது. மற்றவர்கள் பேசிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தாலும், இவர்கள் இருதயங்கள் தேவனுக்கு முன்பாக இருக்கும்; தேவனுடைய வார்த்தையைச் சிந்திக்கும்; தேவனின் நோக்கங்களை நாடி, தங்கள் இருதயங்களுள் அமைதியாக தேவனிடம் ஜெபிக்கும். மற்றவர்களோடு இயல்பாக உறவைப் பேணுவதற்கு அவர்கள் ஒருபோதும் முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள். அவர்கள் வாழ்வதற்கான தத்துவம் ஏதும் இல்லாதவராகக் காணப்படுவார்கள். ஆனால் துடிப்பானவராக, அன்புக்குரியவராக, வெகுளியாகத் தோன்றுவர், ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட அமைதியைக் கொண்டிருப்பார்கள். இதுவே தேவன் பயன்படுத்தும் நபரின் சாயல் ஆகும். வாழ்க்கைக்கான தத்துவங்கள் அல்லது “இயல்பான காரணம்” போன்றவை இப்படிப்பட்ட நபருக்குப் பொருந்துவதில்லை. அவர்கள் தங்கள் முழு இருதயங்களையும் தேவனின் வார்த்தைக்குள் ஊற்றியிருக்கிறார்கள், மேலும் தேவனை மட்டுமே இருதயத்தில் கொண்டவராகக் காணப்படுவார்கள். இப்படிப்பட்ட நபரை தேவன் “பகுத்தறிவற்ற” நபராகக் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட நபரே துல்லியமாக தேவனால் பயன்படுத்தப்படுவார். தேவனால் பயன்படுத்தப்பட்டு வரும் நபரின் அடையாளம் என்னவென்றால், எப்போதும் அல்லது எங்கேயும், அவர்கள் இருதயம் தேவனுக்கு முன்பாக இருக்கும்; மற்றவர்கள் எவ்வளவு ஒழுக்கமற்றவர்களாக இருந்தாலும், அல்லது மற்றவர்கள் எந்த அளவிற்கு இச்சையான, மாம்ச பிரகாரமான செயல்களில் ஈடுபட்டாலும், இவரின் இருதயம் ஒருபோதும் தேவனை விட்டு விலகாமல் இருக்கும்; இப்படிப்பட்டவர்கள் பெரும்பான்மையோரைப் பின்பற்ற மாட்டார்கள். இப்படிப்பட்ட நபரே தேவனால் பயன்படுத்தப்படுவதற்குப் பொருத்தமானவர்; இவரே பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படுகிறார். இந்தக் காரியங்களை உன்னால் அடைய இயலாவிட்டால், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதற்கும் பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணமாக்கப்படுவதற்கும் நீ தகுதி பெறவில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 408

நீ தேவனோடு இயல்பான உறவை வைத்துக்கொள்வதற்கு விரும்பினால், உனது இருதயம் தேவனிடம் திரும்ப வேண்டும். இதை அஸ்திபாரமாகக் கொண்டால், நீ மற்றவர்களிடமும் இயல்பான உறவைக் கொண்டிருப்பாய். தேவனோடு இயல்பான உறவைக் கொண்டிருக்கவில்லையானால், மற்றவர்களோடு உறவைப் பேணுவதற்கு நீ என்ன செய்கிறாய், எவ்வளவு கடினமாய் உழைக்கிறாய், எவ்வளவு ஆற்றலை செலவழிக்கிறாய் என்பதெல்லாம் பொருட்டே அல்ல; அவையனைத்தும் வாழ்க்கைக்கான மனித தத்துவத்தைச் சார்ந்ததாகவே இருக்கும். நீ தேவனுடைய வார்த்தையின்படி மக்களோடு இயல்பான உறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மனிதக் கண்ணோட்டம் மற்றும் மனிதத் தத்துவங்கள் அடிப்படையில் மற்றவர்கள் மத்தியில் உனது ஸ்தானத்தைப் பாதுகாப்பாய். நீ மக்களுடனான உறவில் கவனம் செலுத்தாமல், அதற்குப் பதிலாக தேவனோடு இயல்பான உறவைப் பேணி வந்தாயானால், உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுக்க விரும்பி அவருக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொண்டாயானால், மற்ற மக்களுடனான உனது உறவு தானாகவே இயல்பானதாகிவிடும். பின், இந்த உறவுகள் மாம்சத்தின்மீது கட்டப்படாமல், தேவனுடைய அன்பு என்னும் அஸ்திபாரத்தின்மேல்கட்டப்படும். மற்றவர்களுடன் மாம்சபிரகாரமான எந்த இடைபடுதலும் உனக்குக் கிட்டத்தட்ட இருக்காது, ஆனால் ஆவிக்குரிய நிலையில், ஐக்கியமும், பரஸ்பர அன்பும், ஆறுதலும், ஒருவருக்கொருவர் கொடுத்து உதவுவதும் இருக்கும். தேவனைத் திருப்தியாக்கும் விருப்பத்தை அஸ்திபாரமாகக் கொண்டே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. இந்த உறவுகள் வாழ்க்கைக்கான மனித தத்துவத்தைச் சார்ந்து பேணப்படாமல், தேவனுக்காகப் பாரத்தைச் சுமப்பதன் மூலமாக இயல்பாக உருவாகின்றன. இவற்றுக்கு உன்னிடமிருந்து எந்தச் செயற்கையான, மனித முயற்சியும் தேவையில்லை. தேவனுடைய வார்த்தைகளுடைய கொள்கைகளின் அடிப்படையில் நீ செயல்பட்டால் மட்டும் போதும். தேவ சித்தத்தைக் கருத்தில் கொள்ள விரும்புகிறாயா? அவருக்கு முன்பாக “பகுத்தறிவில்லாத” ஒரு நபராக இருக்க விரும்புகிறாயா? உனது இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுக்கவும், மற்றவர்கள் மத்தியில் உன் நிலையைப் புறக்கணிக்கவும் தயாராக இருக்கிறாயா? உன்னோடு தொடர்பிலிருக்கும் அனைவரிலும், யாரோடு உனது உறவு சிறப்பானதாக இருக்கிறது? யாருடனான உனது உறவு மோசமான நிலையிலுள்ளது? மக்களுடனான உனது உறவு இயல்பாக உள்ளதா? நீ அனைவரையும் சமமாக நடத்துகிறாயா? மற்றவர்களுடனான உனது உறவு வாழ்க்கைக்குரிய தத்துவத்தின்படி பேணப்படுகிறதா அல்லது அவை தேவனுடைய அன்பென்னும் அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டுள்ளதா? ஜனங்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு கொடுக்காதபோது, அவர்களது ஆவிகள் மந்தமானதாக, மரத்துப்போனதாக, உணர்வற்றதாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளை ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள், அவர்கள் தேவனுடன்ஒரு முறையான உறவைக் கொண்டிருக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் மனநிலையில் ஒருபோதும் மாற்றத்தை அடைய மாட்டார்கள். ஒருவரது மனநிலையை மாற்றுவது என்பது ஒருவரது இருதயத்தை முழுவதுமாக தேவனுக்குக் கொடுப்பதற்கான மற்றும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து பிரகாசத்தையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாகும். தேவனுடைய கிரியையானது ஒருவரைத் துடிப்பாக உட்பிரவேசிக்க அனுமதிப்பதோடு தங்கள் எதிர்மறை காரியங்களைக் குறித்த அறிவைப் பெற்றுக்கொண்டு அவற்றை அகற்றுவதற்கும் உதவும். நீ உனது இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தவுடன், உனது ஆவி ஒவ்வொரு முறையும் லேசாக அசையும்போதும் உன்னால் உணர முடியும் மற்றும் தேவனுடைய பிரகாசம், வெளிச்சம் ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதியுயும் அறிந்து கொள்ள முடியும். நீ விடாது முயற்சி செய்யும்போது, படிப்படியாக பரிசுத்த ஆவியானவரால் பரிபூரணப்படுத்தப்படும் பாதைக்குள் பிரவேசிப்பாய். எந்த அளவுக்கு உனது இருதயம் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உனது ஆவி அதிக உணர்வுள்ளதாகவும் மென்மையானதாகவும் இருக்கும், அந்த அளவுக்கு அதிகமாக பரிசுத்த ஆவியானவர் தன்னை ஏவுகிறார் என்பதை அதனால் உணர முடியும், மேலும் அந்த அளவு தேவனுடனான உனது உறவு முறையானதாக மாறும். மக்களுக்கிடையேயான இயல்பான உறவு மனித முயற்சியினால் அல்ல, ஒருவர் இருதயத்தை தேவனுக்குக் கொடுத்தல் என்ற அஸ்திபாரத்தின்மேலேயே நிலைநாட்டப்படுகிறது. ஒருவரின் இருதயத்தில் தேவன் இல்லாவிட்டால், மக்கள் மற்றவர்களுடன் கொண்டிருக்கும் உறவானது மாம்சரீதியானதாகவே இருக்கும். அந்த உறவு இயல்பானதாக அல்ல, இச்சை யான இன்பங்களாகவே இருக்கும். அவற்றை தேவன் வெறுக்கிறார், அருவருக்கிறார். நீ ஆவியில் ஏவுதல் பெற்றதாகக் கூறியும், தேடும்படிக்கு உன்னிடம் வருபவர்களிடம் அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டி, அவர்களுடன் பேச மறுத்து, நீ விரும்புகிற, மதிக்கிற மக்களோடு மட்டும் ஐக்கியம் கொள்ள விரும்பினால், நீ உணர்ச்சியால் ஆளப்படுகிறாய் என்பதற்கும், தேவனோடு சிறிதளவும் முறையான உறவில் இல்லைஎன்பதற்கும் இது இன்னும் கூடுதலான சான்றாகும். நீ தேவனை வஞ்சிக்கவும் உனது சொந்த அவலட்சணத்தை மூடிமறைக்கவும் முயற்சிக்கிறாய் என்பதை இது காட்டுகிறது. உன் அறிவில் சிலவற்றை உன்னால் பகிர்ந்துகொள்ள முடியலாம், ஆனால் உன் நோக்கங்கள் தவறாக இருந்தால், பிறகு நீ செய்யும் ஒவ்வொன்றும் மனிதத் தரத்தின்படி மட்டும் நல்லதாக இருக்கும் மற்றும் தேவன் உன்னைப் புகழ மாட்டார். உன் செயல்கள் தேவனுடைய பாரத்தினால் அல்லாமல், மாம்சத்தினால் இயக்கப்படும். தேவனுக்கு முன்பாக உனது இருதயத்தை அமைதிப்படுத்த முடியுமானால், தேவனை நேசிக்கிற அனைவரோடும் இயல்பாக இடைபட முடியுமானால் மட்டுமே, நீ தேவனால் பயன்படுத்தப்பட தகுதியானவன். உன்னால் அதைச் செய்ய முடிந்தால், நீ மற்றவர்களுடன் எவ்வாறு பழகினாலும், நீ வாழ்வதற்கான தத்துவத்தின்படி நீ செயல்பட மாட்டாய், நீ தேவனுடைய பாரத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு முன்பாக வாழ்வாய். உங்களில் எத்தனை பேர் இதைப் போல் உள்ளனர்? மற்றவர்களுடனான உனது உறவு உண்மையில் இயல்பானதாக உள்ளதா? எந்த அஸ்திபாரத்தின்மேல் அவை கட்டப்பட்டுள்ளன? உனக்குள் வாழ்க்கைக்கான தத்துவங்கள் எத்தனை உள்ளன? நீ அவற்றை புறந்தள்ளி விட்டாயா? உனது இருதயம் முழுமையாக தேவனிடம் திரும்பமுடியாவிட்டால், நீ தேவனுடையவன் அல்ல. நீ சாத்தானிடமிருந்து வந்தாய், முடிவில் சாத்தானிடமே திரும்புவாய். நீ தேவனுடைய ஜனத்தில் ஒருவனாக இருக்கக்கூடிய தகுதி இல்லாதவன். இவை எல்லாவற்றையுமே நீ கவனத்துடன் ஆராய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனோடு ஓர் முறையான உறவை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 409

தேவனை விசுவாசிக்கையில், தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருப்பதிலுள்ள பிரச்சினையையாவது நீங்கள் தீர்க்க வேண்டும். நீங்கள் தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசம் அர்த்தம் இழக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவை ஏற்படுத்துவது என்பது தேவனுடைய சமுகத்தில் அமைதியாக இருக்கும் இருதயத்தால் முற்றிலும் அடையக்கூடியதாக இருக்கிறது. தேவனோடு ஓர் இயல்பான உறவைக் கொண்டிருப்பது என்பது சந்தேகப்படாமல் இருக்கவும், அவருடைய எந்தக் கிரியையையும் மறுக்காமல் இருக்கக் கூடியது மற்றும் அவருடைய கிரியைக்கு ஒப்புக்கொடுக்கக் கூடியது ஆகும். இதன் அர்த்தம், தேவனுடைய சமுகத்தில் சரியான நோக்கங்களைக் கொண்டிருப்பது, உனக்கு நீயே திட்டங்கள் போடாமல் இருப்பது, மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய குடும்பத்தின் நலன்களையே முதலில் கருத்தில் கொள்வது என்பதாகும்; தேவனின் சோதனையை ஏற்றுக்கொள்வதும் தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதும் இதன் அர்த்தமாகும். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தேவனுடைய சமுகத்தில் உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்த உங்களால் முடிய வேண்டும். தேவனின் சித்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும், உங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் உங்கள் திறனுக்கு ஏற்றவாறு நீங்கள் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். தேவனின் சித்தம் உனக்கு வெளிப்படுத்தப்பட்டவுடன், அதைச் செயல்படுத்து, அது மிகவும் தாமதமானதாக இருக்காது. தேவனுடனான உனது உறவு இயல்பாகிவிட்டால், நீயும் ஜனங்களுடன் இயல்பான உறவுகளைக் கொண்டிருப்பாய். தேவனுடன் ஒர் இயல்பான உறவை உருவாக்க, அனைத்தும் தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின்படியும், தேவன் கேட்டுக்கொள்வதன்படியும், உன் கடமையை நீ செய்யக் கூடியவனாக இருக்க வேண்டும், நீ உன் கருத்துக்களைச் சரிசெய்துகொள்ள வேண்டும், மேலும் எல்லா விஷயத்திலும் சத்தியத்தைத் தேட வேண்டும். நீ சத்தியத்தைப் புரிந்து கொள்ளும்போது அதைக் கைக்கொள்ள வேண்டும், உனக்கு என்ன நேர்ந்தாலும், நீ தேவனிடத்தில் ஜெபித்து, தேவனுக்குக் கீழ்ப்படியும் இருதயத்தோடு தேட வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்வதன் மூலம், உன்னால் தேவனுடன் ஓர் இயல்பான உறவைப் பராமரிக்க முடியும். உன் கடமையைச் சரியாகச் செய்யும் அதே நேரத்தில், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஜீவ பிரவேசத்திற்குப் பயனளிக்காத எதையும் செய்யாமல் இருப்பதையும், சகோதர சகோதரிகளுக்கு உதவாத எதையும் சொல்லாமல் இருப்பதையும் கூட, நீ உறுதி செய்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம், உன் மனசாட்சிக்கு விரோதமான எதையும் நீ செய்யக்கூடாது, மேலும் வெட்கக்கேடான எதையும் நீ நிச்சயமாக செய்யக்கூடாது. குறிப்பாக, தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்கிற அல்லது எதிர்க்கிற ஒன்றை நீ நிச்சயமாக செய்யக்கூடாது, மேலும் திருச்சபையின் பணியையோ அல்லது வாழ்க்கையையோ தொந்தரவு செய்யும் எதையும் நீ செய்யக்கூடாது. நீ செய்யும் எல்லாவற்றிலும் நீதியுடனும் நன்மதிப்புடனும் இரு, உனது ஒவ்வொரு செயலும் தேவனுக்கு முன்பாக கனமுள்ளதாய் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள். சில நேரங்களில் மாம்சம் பலவீனமாக இருந்தாலும், தேவனுடைய குடும்பத்தின் நலன்களுக்கு உன்னால் முதலிடம் கொடுக்க இயல வேண்டும், மேலும் தனிப்பட்ட லாபத்திற்காகப் பேராசை இல்லாமல், சுயநலமான அல்லது வெறுக்கத்தக்கதான எதையும் செய்யாமல், உன்னைக் குறித்தே அடிக்கடி சிந்திக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். இதன்மூலம், உன்னால் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக வாழ முடியும், மேலும் தேவனுடனான உனது உறவு முற்றிலும் இயல்பானதாக மாறும்.

நீ செய்யும் எல்லாவற்றிலும், உனது நோக்கங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை நீ ஆராய வேண்டும். தேவனின் தேவைகளுக்கு ஏற்ப உன்னால் செயல்பட முடிந்தால், அப்போது தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கிறது. இது குறைந்தபட்ச தரநிலையாகும். உனது நோக்கங்களைப் பார், தவறான நோக்கங்கள் எழுந்திருப்பதை நீ கண்டால், அவற்றிற்குத் திரும்பி உனது முதுகைக் காட்ட இயலவும், தேவனுடைய வார்த்தைகளின்படி செயல்பட முடியவும் வேண்டும்; இவ்வாறு நீ தேவனுக்கு முன்பாக சரியாக இருக்கும் ஒருவனாக மாறுவாய், இது தேவனுடனான உனது உறவுகள் இயல்பானது என்பதையும், மேலும் நீ செய்யும் அனைத்தும் தேவனுக்காகவே, உனக்காக அல்ல என்பதையும் நிரூபிக்கிறது. நீ செய்யும் அனைத்திலும் மற்றும் நீ சொல்லும் அனைத்திலும், உனது இருதயத்தைச் சரியாக அமைத்து, உனது செயல்களில் நீதியுள்ளவனாக இருக்கக் கூடியவனாக வேண்டும், மேலும் உனது உணர்ச்சிகளால் வழிநடத்தப்படாதே, உனது சொந்த விருப்பப்படி செயல்படாதே. தேவனுடைய விசுவாசிகள் தாங்கள் கைக்கொண்டு நடந்துகொள்ள வேண்டிய கொள்கைகள் இவை. சிறிய விஷயங்கள் ஒரு நபரின் நோக்கங்களையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடும், ஆகவே, ஒருவர் தேவனால் பரிபூரணபடுத்தப்படும் பாதையில் பிரவேசிப்பதற்கு, அவர்கள் முதலில் தங்கள் நோக்கங்களையும் தேவனுடனான அவர்களின் உறவையும் சரிசெய்ய வேண்டும். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும்போதுதான், நீ அவரால் பரிபூரணப்படுத்தப்பட முடியும்; அப்போதுதான் தேவனின் கையாளுதல், கிளை நறுக்குதல், ஒழுக்கம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவை உன்னில் அவை விரும்பிய பலனை அடைய முடியும். அதாவது, மனுஷர்களால் தேவனை தங்கள் இருதயத்தில் வைத்திருக்க முடிந்தால் மற்றும் தனிப்பட்ட ஆதாயத்தைத் தொடரவோ அல்லது தங்கள் சொந்த வாய்ப்புகளைப் (ஒரு மாம்ச அர்த்தத்தில்) பற்றி சிந்திக்கவோ முடியாவிட்டால், ஆனால் மாறாக ஜீவனில் பிரவேசிக்கும் பாரத்தைத் தாங்கி, சத்தியத்தைத் தொடர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, மற்றும் தேவனின் கிரியைக்கு கீழ்ப்படிந்தால்—உன்னால் இதனைச் செய்ய முடிந்தால், நீ நாடும் குறிக்கோள்கள் சரியாக இருக்கும், மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருக்கும். தேவனுடனான உறவை சரியானதாக்குவது ஒருவரின் ஆவிக்குரிய பயணத்தில் நுழைவதற்கான முதல் படி என்று அழைக்கப்படலாம். மனுஷனின் தலைவிதி தேவன் தம்முடைய கரங்களில் இருந்தாலும், தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அது மனுஷனால் மாற்றப்பட முடியாது என்றாலும், நீ தேவனால் பரிபூரணமாக்கப்படக்கூடுமா அல்லது அவரால் ஆதாயப்படுத்தப்பட முடியுமா என்பது தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதைப் பொறுத்தது ஆகும். உன்னில் பலவீனமான அல்லது கீழ்ப்படியாத சில பகுதிகள் இருக்கலாம்—ஆனால் உனது பார்வைகளும் உனது நோக்கங்களும் சரியானதாக இருக்கும்வரை மற்றும் தேவனுடனான உனது உறவு சரியானதாக மற்றும் இயல்பானதாக இருக்கும்வரை, நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட தகுதியுள்ளவனாக இருக்கிறாய். நீ தேவனுடன் சரியான உறவைக் கொண்டிருக்கவில்லை என்றால், மற்றும் மாம்சத்திற்காகவோ அல்லது உனது குடும்பத்தினருக்காகவோ செயல்பட்டால், நீ எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அது ஒன்றுக்கும் பிரயோஜனப்படாது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக இருந்தால், மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும். தேவன் வேறொன்றையும் பார்ப்பதில்லை, ஆனால் தேவன் மீதான உனது விசுவாசத்தில் உனது பார்வைகள் சரியானதா என்பதை மட்டுமே பார்க்கிறார்: நீ யாரை விசுவாசிக்கிறாய், யார் பொருட்டு நீ விசுவாசிக்கிறாய், மற்றும் ஏன் விசுவாசிக்கிறாய். உன்னால் இந்த விஷயங்களைத் தெளிவாகக் காண முடிந்தால் மற்றும் உனது பார்வைகளை நன்கு வெளிப்படுத்தி கடைபிடித்தால், அப்போது நீ உனது வாழ்வில் முன்னேற்றம் அடைவாய், மேலும் சரியான பாதையில் பிரவேசிப்பதற்கும் உனக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். தேவனுடனான உனது உறவு இயல்பானதல்ல, தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகள் மாறுபட்டவை என்றால், மற்றவை அனைத்தும் வீணாகிவிடும், நீ எவ்வளவு திடமாக விசுவாசித்தாலும், நீ எதையும் பெற மாட்டாய். தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மாறிய பின்னரே, நீ மாம்சத்தைக் கைவிட்டால், ஜெபித்தால், துன்பப்பட்டால், சகித்துக்கொண்டால், கீழ்ப்படிந்தால், உனது சகோதர சகோதரிகளுக்கு உதவினால், தேவனுக்காக உன்னை அதிகமாக உபயோகித்தால், மற்றும் பலவற்றைச் செய்தால் நீ அவரால் புகழப்படுவாய். நீ செய்யும் செயலுக்கு மதிப்பு மற்றும் முக்கியத்துவம் உள்ளதா என்பது உனது நோக்கங்கள் சரியானதா, உனது பார்வைகள் சரியானதா என்பதைப் பொறுத்தது ஆகும். இப்போதெல்லாம், ஒரு கடிகாரத்தைப் பார்ப்பதற்குத் தலையை சாய்ப்பது போல் பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள்—அவர்களின் கண்ணோட்டங்கள் கோணலாக உள்ளன, மேலும் அவர்கள் ஒரு திருப்புமுனையால் சரிசெய்யப்பட வேண்டும். இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்பட்டால், அனைத்தும் சரியாகிவிடும்; இல்லையென்றால், அனைத்தும் ஒன்றும் இல்லாததாகிவிடும். சிலர் எனது சமுகத்தில் நன்றாக நடந்துகொள்கிறார்கள், ஆனால் எனது முதுகுக்குப் பின்னால், அவர்கள் செய்வதெல்லாம் என்னை எதிர்ப்பதுதான். இது கபடு மற்றும் வஞ்சகத்தின் வெளிப்பாடு, மற்றும் இந்த வகை மனுஷன் சாத்தானின் வேலைக்காரன்; அவன் தேவனைச் சோதிக்க வந்திருக்கும் சாத்தானின் பொதுவான உருவகம். எனது கிரியைக்கும் எனது வார்த்தைகளுக்கும் உன்னால் கீழ்ப்படிய முடிந்தால் மட்டுமே நீ ஒரு சரியான மனுஷன். உன்னால் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் முடியும் வரை; நீ செய்யும் அனைத்தும் தேவனுக்கு முன்பாக நல்லவையாக இருக்கும் வரை மற்றும் நீ செய்யும் அனைத்திலும் நீ நியாயமுள்ளவனாகவும், நேர்மையுள்ளவனாகவும் இருக்கும்வரை; நீ வெட்கக்கேடான காரியங்களைச் செய்யாத வரை, அல்லது மற்றவர்களின் வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களைச் செய்யாத வரை; நீ வெளிச்சத்தில் வாழும் வரை மற்றும் உன்னைச் சாத்தான் சுரண்ட அனுமதிக்காத வரை, தேவனுடனான உனது உறவு சரியானதாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 410

தேவனை விசுவாசிப்பதற்கு உனது நோக்கங்களையும் பார்வைகளையும் சரியாக வைத்திருக்க வேண்டும்; தேவனின் வார்த்தைகள் மற்றும் தேவனின் கிரியை, தேவன் ஏற்பாடு செய்யும் அனைத்துச் சூழல்கள், தேவன் சாட்சியமளிக்கும் மனுஷன் மற்றும் நடைமுறை தேவன் ஆகியவை பற்றிய சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் சரியான வகையில் நடத்தப்படவும் வேண்டும். நீ உனது சொந்த யோசனைகளின்படி நடக்கக்கூடாது அல்லது உனது சொந்தமான அற்பமான திட்டங்களை வகுக்கக்கூடாது. நீ எதைச் செய்தாலும், உன்னால் சத்தியத்தைத் தேட இயல வேண்டும் மற்றும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனுஷனாக தேவனின் கிரியை அனைத்திற்கும் கீழ்ப்படிய வேண்டும். நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதைத் தொடர விரும்பினால் மற்றும் சரியான வாழ்க்கைப் பாதையில் பிரவேசிக்க விரும்பினால், உனது இருதயம் எப்போதும் தேவனின் சமுகத்தில் வாழ வேண்டும். ஒழுக்கம் கெட்டுப் போகாதே, சாத்தானைப் பின்பற்றாதே, சாத்தான் அவனுடைய வேலையைச் செய்வதற்கு எந்த வாய்ப்புகளையும் அனுமதிக்காதே, மற்றும் சாத்தான் உன்னைப் பயன்படுத்த அனுமதிக்காதே. நீ உன்னை முழுமையாக தேவனுக்குக் கொடுக்க வேண்டும், மற்றும் தேவன் உன்னை ஆளுகை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

நீ சாத்தானின் வேலைக்காரனாக இருக்க விரும்புகிறாயா? நீ சாத்தானால் வசப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவாய் என்பதற்காக, அல்லது நீ தேவனின் கிரியைக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாக மாறுவாய் என்பதற்காக, நீ தேவனை விசுவாசிக்கிறாயா மற்றும் அவரைப் பின்தொடர்கிறாயா? நீ தேவனால் பெறப்பட்ட ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை விரும்புகிறாயா, அல்லது ஒரு பயனற்ற மற்றும் வெற்று வாழ்க்கையை விரும்புகிறாயா? நீ தேவனால் பயன்படுத்தப்பட விரும்புகிறாயா, அல்லது சாத்தானால் வசப்படுத்திக்கொள்ளப்பட விரும்புகிறாயா? தேவனுடைய வார்த்தைகளும் சத்தியமும் உன்னை நிரப்புவதற்கு அனுமதிக்க நீ விரும்புகிறாயா, அல்லது பாவமும் சாத்தானும் உன்னை நிரப்ப அனுமதிக்கிறாயா? இந்தக் காரியங்களை கவனமாகப் பரிசீலனை செய். உனது அன்றாட வாழ்க்கையில், நீ எந்த வார்த்தைகளைச் சொல்கிறாய், எந்தெந்த விஷயங்கள் தேவனுடனான உனது உறவில் இயல்பின்மையை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும், பின்னர் சரியான முறையில் பிரவேசிக்க உன்னைத் திருத்திக் கொள். எல்லா நேரங்களிலும், உனது வார்த்தைகள், உனது செயல்கள், உனது ஒவ்வொரு அசைவு மற்றும் உனது எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்திடு. உனது உண்மையான நிலையைப் பற்றிய ஒரு சரியான புரிதலைப் பெற்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியை செய்யும் முறைக்குள் பிரவேசி. தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருப்பதற்கான ஒரே வழி இதுதான். தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்பதை மதிப்பிடுவதன் மூலம், உன்னால் உனது நோக்கங்களைச் சரிசெய்யவும், மனுஷனின் இயல்பு மற்றும் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவும், மற்றும் உன்னை உண்மையாகப் புரிந்து கொள்ளவும் முடியும், அவ்வாறு செய்யும்போது, உன்னால் மெய்யான அனுபவங்களுக்குள் பிரவேசிக்க முடியும், உன்னையே ஒரு மெய்யான பாதையில் விட்டுவிட முடியும், மற்றும் நோக்கத்துடன் கீழ்ப்படிய முடியும். தேவனுடனான உனது உறவு இயல்பானதா இல்லையா என்பது குறித்த இந்த விஷயங்களை நீ அனுபவிக்கும்போது, நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் பல நிலைகளைப் புரிந்துகொள்ள முடியும். சாத்தானின் பல தந்திரங்களையும் உன்னால் காண முடியும் மற்றும் அவனுடைய சதித்திட்டங்களையும் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாதை மட்டுமே தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கிறது. தேவனுடனான உனது உறவை நீ சரிசெய்யும்போது, நீ அவரின் ஏற்பாடுகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியக்கூடும், மற்றும் நீ மெய்யான அனுபவத்திற்குள் இன்னும் ஆழமாகப் பிரவேசிக்கக்கூடும் மற்றும் இன்னும் அதிகமாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறக்கூடும். நீ தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கடைபிடித்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மாம்சத்தைக் கைவிடுவதாலும், தேவனுடனான உண்மையான ஒத்துழைப்பின் மூலமும் ஜெயங்கொள்ள முடியும். “ஒத்துழைக்கும் இருதயம் இல்லாமல், தேவனின் கிரியையைப் பெறுவது கடினம்; மாம்சம் துன்பப்படாவிட்டால், தேவனிடமிருந்து எந்த ஆசீர்வாதங்களும் கிடைக்காது; ஆவி போராடவில்லை என்றால், சாத்தான் வெட்கப்படுத்தப்பட மாட்டான்” என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீ இந்தக் கொள்கைகளைக் கடைபிடித்து அவற்றை முழுமையாக புரிந்து கொண்டால், தேவன் மீதான உனது விசுவாசம் குறித்த பார்வைகள் சரிப்படுத்தப்படும். உங்களுடைய தற்போதைய நடைமுறைப்படுத்தலில், “பசியைப் போக்க அப்பத்தைத் தேடுவது” என்கிற மனநிலையை நீங்கள் விலக்கிட வேண்டும்; “எல்லாம் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகிறது, ஜனங்களால் தலையிட முடியாது” என்ற மனநிலையை நீங்கள் விலக்க வேண்டும். அவ்வாறு கூறும் ஒவ்வொருவரும், “ஜனங்கள் விரும்பிய எதையும் செய்யலாம், நேரம் வரும்போது, பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையைச் செய்வார். ஜனங்கள் மாம்சத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒத்துழைக்கவோ தேவையில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுவார்கள் என்பதே முக்கியம்” என்று நினைக்கிறார்கள். இந்தக் கருத்துகள் அனைத்தும் அபத்தமானவை. இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், பரிசுத்த ஆவியானவரால் கிரியை செய்யமுடியாது. இந்த மாதிரியான கண்ணோட்டம்தான் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெரிதும் தடுக்கிறது. பெரும்பாலும், பரிசுத்த ஆவியானவரின் கிரியை மனித ஒத்துழைப்பின் மூலம் அடையப்படுகிறது. ஒத்துழைக்காதவர்கள் மற்றும் தீர்க்கப்படாதவர்கள், மெய்யாகவே இன்னும் தங்கள் மனநிலையில் ஒரு மாற்றத்தை அடையவும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையையும், தேவனிடமிருந்து அறிவொளி மற்றும் வெளிச்சத்தைப் பெறவும் விரும்புகிறவர்கள் உண்மையிலேயே வீணான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர். இது “ஒருவரின் சுயத்தில் ஈடுபடுதல் மற்றும் சாத்தானை மன்னித்தல்” என்று அழைக்கப்படுகிறது. அத்தகையவர்கள் தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருக்க மாட்டார்கள். நீ உனக்குள்ளேயே சாத்தானின் மனநிலையின் பல வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்துதல்களையும் கண்டுபிடிக்க வேண்டும் மற்றும் தேவனுக்கு இப்போது தேவைப்படுபவற்றுக்கு மாறாக இயங்கும் எந்தவொரு நடைமுறைகளையும் நீ கண்டுபிடிக்க வேண்டும். உன்னால் இப்போது சாத்தானைக் கைவிட முடியுமா? நீ தேவனுடன் ஓர் இயல்பான உறவை அடைய வேண்டும், தேவனுடைய நோக்கங்களின்படி செயல்பட வேண்டும், புதிய வாழ்க்கையைக் கொண்ட புதிய மனுஷனாக மாற வேண்டும். கடந்த கால மீறுதல்களிலேயே குடியிருக்க வேண்டாம்; தேவையற்ற வருத்தம் கொள்ள வேண்டாம்; எழுந்து நின்று தேவனுக்கு ஒத்துழைக்க முயல வேண்டும், மற்றும் நீ நிறைவேற்ற வேண்டிய உன்னுடைய கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும். இப்படியாக, தேவனுடனான உனது உறவு இயல்பானதாகிவிடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 411

இதனை வாசித்த பிறகு, நீ வெறுமனே இந்த வார்த்தைகளை மாத்திரம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினால், இன்னும் உனது இருதயம் அசைக்கப்படாமல் இருந்தால், மேலும் தேவனுடனான உனது உறவை இயல்பாக்க நீ நாடவில்லை என்றால், தேவனுடனான உனது உறவுக்கு நீ முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. உனது பார்வைகள் இன்னும் சரியாக்கப்படவில்லை என்பதையும், உனது நோக்கங்கள் இன்னும் தேவனால் பெறப்படுவதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் இன்னும் அமைக்கப்படவில்லை என்பதையும் ஆனால் சாத்தானின் சதித்திட்டங்களை மேலோங்க அனுமதித்து, உனது சொந்த இலக்குகளை அடைவதற்கு அமைக்கப்பட்டிருப்பதையுமே இது நிரூபிக்கிறது. இத்தகையவர்கள் தவறான நோக்கங்களையும் தவறான பார்வைகளையும் கொண்டிருக்கிறார்கள். தேவன் என்ன கூறுகிறார் அல்லது எப்படிக் கூறுகிறார் என்பது முக்கியமல்ல, அத்தகையவர்கள் முற்றிலும் அலட்சியமாகவே இருப்பார்கள், குறைந்தபட்ச மாற்றம்கூட ஏற்பட்டிருக்காது. அவர்களின் இருதயங்கள் எந்த அச்சத்தையும் உணராது, அவர்கள் வெட்கப்படுவதில்லை. அத்தகைய மனுஷன் ஆவி இல்லாத மூடன். தேவனின் ஒவ்வொரு வார்த்தையையும் வாசித்து, அவற்றைப் புரிந்துகொண்டவுடன் நீ அவற்றைக் கடைபிடி. உனது மாம்சம் பலவீனமாய் இருந்த தருணங்கள் இருந்திருக்கலாம், அல்லது நீ கலகம் செய்பவனாய் இருந்திருக்கலாம், அல்லது நீ எதிர்த்திருக்கலாம்; கடந்த காலத்தில் நீ எப்படி நடந்திருந்தாலும், இது சிறிய விளைவையே ஏற்படுத்தும், மற்றும் அது உனது வாழ்க்கை இன்று முதிர்ச்சியடைவதிலிருந்து தடுக்க முடியாது. இன்று நீ தேவனுடன் ஓர் இயல்பான உறவைக் கொண்டிருக்கும் வரையில், நம்பிக்கை இருக்கிறது. நீ தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் உன்னில் மாற்றம் ஏற்பட்டால், உனது வாழ்க்கைச் சிறப்பானதாக மாறிவிட்டது என்று மற்றவர்களால் சொல்ல முடியும் என்றால், தேவனுடனான உனது உறவு இப்போது இயல்பானது, இது சரியாக்கப்பட்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. தேவன் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின்படி நடத்துவதில்லை. நீ புரிந்துகொண்டு விழிப்படைந்ததும், நீ கிளர்ச்சி செய்வதையோ அல்லது எதிர்ப்பதையோ நிறுத்திக் கொண்டால், தேவன் உன் மீது இரக்கம் காட்டுவார். உனக்குப் புரிதல் இருந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட தீர்மானித்தால், தேவனுடைய சமுகத்தில் உனது நிலை இயல்பானதாக மாறும். நீ என்ன செய்கிறாய் என்பது முக்கியமல்ல, நீ இதைச் செய்யும்போது பின்வருவனவற்றைக் கவனித்துப்பார்: நான் இதைச் செய்தால் தேவன் என்ன நினைப்பார்? இது எனது சகோதர சகோதரிகளுக்கு பயனளிக்குமா? தேவனின் வீட்டில் செய்யும் வேலைக்கு இது பயனளிக்குமா? ஜெபம், ஐக்கியம், பேச்சு, வேலை, அல்லது மற்றவர்களுடனான தொடர்பு என எதுவாக இருந்தாலும் உனது நோக்கங்களை ஆராய்ந்துபார், மற்றும் தேவனுடனான உனது உறவு இயல்பானதா என்று சரிபார். உனது சொந்த நோக்கங்களையும் எண்ணங்களையும் உன்னால் அறிய முடியாவிட்டால், உனக்குப் பகுத்தறிவு இல்லை என்று அர்த்தம், இது நீ மிகக் குறைவாகவே சத்தியத்தைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறது. தேவன் செய்யும் அனைத்தையும் உன்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால் மற்றும் அவருடைய வார்த்தைகள் என்னும் கண்ணாடி மூலம், அவருடைய பக்கத்தில் நின்று விஷயங்களை உணர முடிந்தால், உனது பார்வைகள் சரியானதாகிவிடும். எனவே, தேவனுடன் நல்ல உறவை நிலைநிறுத்துவது என்பது தேவனை விசுவாசிக்கிற எவருக்கும் மிக முக்கியமானது; ஒவ்வொருவரும் இதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகவும், அவர்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வாகவும் கருத வேண்டும். நீ செய்யும் அனைத்தும், நீ தேவனுடன் இயல்பான உறவைக் கொண்டிருக்கிறாயா என்பதன் மூலம் அளவிடப்படுகிறது. தேவனுடனான உனது உறவு இயல்பானதாக மற்றும் உனது நோக்கங்கள் சரியானதாக இருந்தால், செயல்படுங்கள். தேவனுடன் ஓர் இயல்பான உறவைப் பேணுவதற்கு, உனது தனிப்பட்ட நலன்களில் ஏற்படும் இழப்புகளைப் பற்றி நீ பயப்படக்கூடாது; நீ சாத்தானை மேலோங்க அனுமதிக்கக் கூடாது, உன்னை விலைக்கு வாங்குவதற்கு நீ சாத்தானை அனுமதிக்கக் கூடாது, மேலும் உன்னை நகைப்பிற்குரிய பொருளாக மாற்ற சாத்தானை அனுமதிக்க முடியாது. இத்தகைய நோக்கங்களைக் கொண்டிருப்பது தேவனுடனான உனது உறவு இயல்பானது என்பதற்கான அறிகுறியாகும்—மாம்சத்திற்காக அல்லாமல், மாறாக ஆவியானவரின் அமைதிக்காக, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்காக, மற்றும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக ஆகும். சரியான நிலைக்குள் பிரவேசிக்க, நீ தேவனுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் தேவன் மீதான உனது விசுவாசத்தின் பார்வைகளை சரிப்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், தேவன் உன்னை ஆதாயப்படுத்தக்கூடும், மற்றும் அவர் தமது வார்த்தைகளின் பலனை உன்னிடத்தில் வெளிப்படுத்தி, உனக்கு மேலும் அறிவொளி கொடுத்து வெளிச்சமாக்குவார். இந்த வழியில், நீ சரியான முறையில் பிரவேசித்திருப்பாய். தேவனின் இன்றைய வார்த்தைகளைத் தொடர்ந்து புசித்துப் பானம்பண்ணு, பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியை செய்யும் முறைக்குள் பிரவேசி, தேவனின் இன்றைய கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படு, பழங்கால நடைமுறைகளைக் கடைபிடிக்காதே, காரியங்களைச் செய்ய பழைய வழிகளைப் பற்றிக்கொள்ளாதே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ உடனே இன்றைய கிரியை செய்யும் முறைக்குள் பிரவேசி. இவ்வாறு, தேவனுடனான உனது உறவு முழுவதுமாக இயல்பானதாகிவிடும் மற்றும் நீ தேவன் மீதான விசுவாசத்தில் சரியான பாதையில் இறங்கியிருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 412

தேவனுடைய வார்த்தைகளை மக்கள் எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அவ்வளவு அதிகமாக அறிவொளி பெற்றவர்களாகவும், அவரை அறிந்து கொள்வதில் அவ்வளவு அதிகமாகப் பசியும் தாகமும் கொண்டிருப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்கள் உயரிய மற்றும் மிகவும் ஆழமான அனுபவங்களைப் பெற்றிருக்க திராணியுள்ளவர்காக இருப்பார்கள், மேலும் அவர்கள் மட்டும்தான் எள் மலர்களைப் போன்று தொடர்ந்து வளரக்கூடிய வாழ்வைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஜீவனை நாடும் அனைவரும் இதைத் தங்கள் முழுநேர வேலையாகக் கருத வேண்டும்; “தேவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது; தேவன் இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது; தேவன் இல்லாமல் எல்லாம் வெறுமையாக உள்ளது” என்று அவர்கள் உணர வேண்டும். ஆகவே, “பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் இல்லாமல் நான் ஒன்றும் செய்ய மாட்டேன், தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்றால், நான் எதையும் செய்வதில் அலட்சியமாக இருக்கிறேன்” என்ற தீர்மானத்தை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களைத் தேவையற்றச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். வாழ்க்கை அனுபவங்கள் தேவனுடைய ஞானம் மற்றும் வழிநடத்துதலிலிருந்து வருகின்றன, அவை உங்கள் உண்மையான முயற்சிகளுக்குக் கிடைத்த பலனாகும். நீங்கள் கோர வேண்டியது இதுதான்: “வாழ்க்கை அனுபவம் என்று வரும் போது, எனக்கு நானே ஓர் இலவச நுழைவுச் சீட்டைக் கொடுக்க முடியாது.”

சில நேரங்களில், அசாதாரண சூழ்நிலைகளில், நீங்கள் தேவனுடைய பிரசன்னத்தை இழக்கிறீர்கள், மேலும் நீங்கள் ஜெபிக்கும் போது அவரை உணர முடியாமல் போகிறது. இது போன்ற சமயங்களில் பயப்படுவது இயல்பானதுதான். நீங்கள் உடனடியாக அவரைத் தேட ஆரம்பிக்க வேண்டும். நீ அவ்வாறு செய்யாவிட்டால், தேவனானவர் உன்னிடமிருந்து விலகி இருப்பார், மேலும் நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமில்லாமல் இருப்பாய், மேலும் ஒருநாள், இரண்டு நாட்கள், ஒருமாதம் அல்லது இரண்டு மாதங்கள் வரையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருப்பாய். இந்தச் சூழ்நிலைகளில், எல்லாவிதமான செயல்களையும் நீங்கள் செய்யக்கூடிய அளவிற்கு நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு உணர்ச்சியற்றவர்களாகி, சாத்தானால் மீண்டும் சிறைபிடிக்கப்படுகிறீர்கள். நீங்கள் செல்வத்தின் மீது பேராசைப்படுகிறீர்கள், உங்கள் சகோதர சகோதரிகளை ஏமாற்றுகிறீர்கள், திரைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கிறீர்கள், மஹ்ஜாங் விளையாடுகிறீர்கள், ஒழுக்கமின்றி புகைபிடிக்கிறீர்கள், மது அருந்துகிறீர்கள். உங்களுடைய இருதயம் தேவனைவிட்டு விலகி வெகுதொலைவில் சென்றிருக்கிறது, நீங்கள் இரகசியமாக உங்கள் சொந்த வழியில் சென்றிருக்கிறீர்கள், தேவனின் கிரியை குறித்து நீங்கள் உங்களுடைய தன்னிச்சையான நியாயத்தீர்ப்பை வழங்கி உள்ளீர்கள். சில சந்தர்ப்பங்களில், பாலியல்ரீதியான பாவங்களைச் செய்வதில் மக்கள் எந்த அவமானத்தையும் சங்கடத்தையும் உணராத அளவுக்கு மிகவும் இழிவானவர்கள் ஆகிவிடுகிறார்கள். இந்த வகையான மனிதர் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்பட்டிருக்கிறார்; உண்மையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது நீண்ட காலமாக அத்தகைய மனிதரிடத்தில் இல்லை. தீமையின் கைகள் எப்போதும் அதிகமாக நீண்டு கொண்டே செல்வது போல, அவர்கள் சீர்கேட்டுக்குள் இன்னும் ஆழமாக மூழ்குவதை மட்டுமே ஒருவரால் காண முடியும். இறுதியில், அவர்கள் இந்த வழியில் இருப்பதை மறுக்கிறார்கள், அவர்கள் பாவம் செய்யும் போது சாத்தானால் சிறைபிடிக்கப்படுகிறார்கள். உன்னிடம் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மட்டுமே உள்ளது, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லை என்பதை நீ கண்டறிந்தால், அது ஏற்கனவே ஓர் ஆபத்தான சூழ்நிலையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உன்னால் உணர முடியாத போது, நீ மரணத்தின் விளிம்பில் இருக்கிறாய். நீ மனந்திரும்பாவிட்டால், நீ முற்றிலும் சாத்தானிடம் திரும்பிச் சென்றிருப்பாய், மேலும் நீ புறம்பாக்கப்பட்டவர்களில் ஒருவனாக இருப்பாய். ஆகவே, நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மட்டுமே இருக்கும் நிலையில்தான் நீ இருக்கிறாய் (நீ பாவம் செய்யாமல், உன்னை நீயே கட்டுக்குள் வைத்திருந்து, தேவனுக்கு எதிரான அப்பட்டமான எந்த எதிர்ப்பினையும் செய்யாமல் இருக்கிறாய்), ஆனால் உன்னிடம் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லை (நீ ஜெபிக்கும் போது நீ ஏவப்படுதலை உணருவதில்லை, தேவனுடைய வார்த்தைகளை நீ புசித்துப் பானம்பண்ணும் போது நீ வெளிப்படையான அறிவொளியையோ அல்லது வெளிச்சத்தையோ பெறுவதில்லை, தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதிலும் நீ அலட்சியமாக இருக்கிறாய், உன் வாழ்க்கையில் ஒருபோதும் எந்த வளர்ச்சியும் இருப்பதில்லை, மற்றும் நீ நீண்ட காலமாகவே மாபெரும் வெளிச்சத்தை இழந்து காணப்படுகிறாய்) என்பதை நீ கண்டுபிடிக்கும் இது போன்ற சமயங்களில், நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது, மேலும் உங்கள் சொந்த குணாதிசயத்தை நீங்கள் கடிவாளமின்றி விட்டு விடக் கூடாது. பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் எந்த நேரத்திலும் மறைந்து போகக் கூடும். இதனால் தான் இத்தகைய நிலைமை மிகவும் ஆபத்தானது. நீ இந்த மாதிரியான நிலையில் இருப்பதை அறிந்தால், உன்னால் முடிந்தவரை நிலைமைகளை மாற்ற முயற்சி செய். முதலில், நீங்கள் ஒரு மனந்திரும்புதல் ஜெபத்தைச் சொல்லவேண்டும், மேலும் தேவனானவர் தம்முடைய இரக்கத்தை உங்கள் பேரில் மீண்டும் ஒருமுறை காட்டும்படி கேட்க வேண்டும். மேலும் தேவனின் வார்த்தைகளை அதிகம் புசித்துப் பானம்பண்ணுவதற்கு ஊக்கத்துடன் ஜெபியுங்கள், உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துங்கள். இதன் அடிப்படையில் நீங்கள் ஜெபத்தில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்; பாடுவதிலும், ஜெபிப்பதிலும், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுவதிலும், உங்கள் கடமையைச் செய்வதிலும் உங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்குங்கள். நீ மிகவும் பெலவீனமாக இருக்கும் போது உனது இருதயம் சாத்தானால் மிகவும் எளிதாக ஆட்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நிகழும்போது, உனது இருதயமானது தேவனிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு சாத்தானிடத்திற்குத் திரும்புகிறது, இதனால் நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னமின்றி இருக்கிறாய். இதுபோன்ற சமயங்களில், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் திரும்பப் பெறுவதற்கு இருமடங்கு கடினமாகி விடுகிறது. பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருக்கும் போதே அவருடைய கிரியையைத் தேடுவது சிறந்தது, இது தேவன் உன் மீது அவருடைய அறிவொளியை அதிகமாக அருளச் செய்வதற்கும், அவர் உன்னைக் கைவிடாமல் இருக்கச் செய்வதற்கும் உதவும். ஜெபம் செய்தல், பாடல்களைப் பாடுதல், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுதல் ஆகிய இவை அனைத்தும் சாத்தான் தனது கிரியையைச் செய்வதற்கு வாய்ப்பு அளிக்காமல் பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்வதற்காகவே செய்யப்படுகின்றன. நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையை இந்த வழியில் மீண்டும் பெறாமல் வெறுமனே காத்திருந்தால், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை நீ இழந்திருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட முறையில் உன்னை ஏவாத பட்சத்தில் அல்லது தனிப்பட்ட முறையில் உனக்கு வெளிச்சத்தையும் அறிவொளியையும் வழங்காத பட்சத்தில், பரிசுத்த ஆவியானவருடைய கிரியையைத் திரும்பப் பெறுவது என்பது எளிதாக இருக்காது. ஆகையால், அந்த நிலையினை ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் திரும்பப் பெற முடியாது. சில சமயங்களில் எதையும் திரும்பப் பெறாமலே ஆறு மாதங்கள்கூட கடந்து போகலாம். இது எதனாலென்றால், மக்கள் யாவற்றையும் மிகவும் சுலபமாக அடைய நினைத்து, காரியங்களை இயல்பான வழியில் அனுபவிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள், இதனால் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுகின்றனர். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் திரும்பப் பெற்றாலும், தேவனின் தற்போதைய கிரியை இன்னும் உங்களுக்கு தெளிவாகத் தெரியவில்லை, ஏனென்றால் உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் நீங்கள் பத்தாயிரம் மைல்கள் பின்னால் விடப்பட்டதைப் போல நீங்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறீர்கள். இது ஒரு பயங்கரமான காரியம் அல்லவா? இருப்பினும், அத்தகையவர்களுக்கு மனந்திரும்புவதற்கு தாமதமாகவில்லை, ஆனால் ஒரு நிபந்தனை இருக்கிறது என்று நான் சொல்கிறேன்: நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், சோம்பலில் ஈடுபடக் கூடாது. மற்றவர்கள் ஒரே நாளில் ஐந்துமுறை ஜெபித்தால், நீ பத்துமுறை ஜெபிக்க வேண்டும்; மற்றவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணினால், நீ நான்கு அல்லது ஆறு மணி நேரம் அவ்வாறு செய்ய வேண்டும்; மற்றவர்கள் இரண்டு மணி நேரம் துதிப் பாடல்களைக் கேட்டால், நீ குறைந்தபட்சம் அரைநாள் கேட்க வேண்டும். நீங்கள் ஏவப்படும் வரை, உங்களது இருதயம் தேவனிடம் திரும்பும் வரை, நீங்கள் இனி தேவனிடமிருந்து விலகிச் செல்லத் துணியாமல் இருக்கும் வரை, தேவனுக்கு முன்பாக அடிக்கடி சமாதானமாக இருங்கள், அவருடைய அன்பைப் பற்றி சிந்தியுங்கள், அப்போது தான் உங்கள் நடத்தை பலனளிக்கும்; அப்போது தான் உங்கள் முந்தைய, இயல்பான நிலையை மீட்டெடுக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஓர் இயல்பான நிலைக்குள் பிரவேசிப்பது எப்படி?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 413

தேவனுடைய விசுவாசியின் பாதையில் ஒரு மிகச் சிறிய பகுதியளவு மட்டுமே நீங்கள் நடந்திருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் சரியான வழியில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. ஆகவே தேவனுடைய தரத்தைப் பூர்த்தி செய்வதிலிருந்து நீங்கள் வெகுதொலைவில் உள்ளீர்கள். இப்போது உங்களுடைய வளர்ச்சி தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அளவிற்குப் போதுமானதாக இல்லை. உங்களுடைய திறமையினாலும் சீர்கெட்ட சுபாவத்தினாலும் தேவனின் கிரியையை நீங்கள் எப்போதும் கவனக்குறைவாகவே நடத்துகிறீர்கள். அதைச் சிரத்தையுடன் நடத்துவதில்லை. இது உங்களுடைய மிக மோசமான குறைபாடு ஆகும். பரிசுத்த ஆவியானவர் நடக்கின்ற பாதையை உறுதியாக அறிய ஒருவராலும் இயலாது; உங்களில் அநேகம் பேருக்கு அது புரிவதில்லை; அதனைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. மேலும், உங்களில் பலர் இந்தக் காரியத்திற்கு மனதளவில் கவனம் செலுத்துவதில்லை; அதிலும் இருதயத்திற்குக் கொண்டுச் செல்வதே இல்லை. இவ்வாறாகப் பரிசுத்த ஆவியானவரின் கிரியை குறித்து அறியாமையில் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்றால், தேவனின் விசுவாசியாக நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை பயனற்றதாகிவிடும். ஏனெனில் தேவனின் சித்தத்தை நிறைவேற்ற உங்கள் வல்லமையில் அனைத்தையும் நீங்கள் செய்வது இல்லை, ஏனெனில் நீங்கள் தேவனுக்கு நல்ல ஒத்துழைப்பை நல்குவதில்லை. தேவன் உன் மேல் கிரியை செய்யவில்லை என்பதோ; அல்லது பரிசுத்த ஆவியானவர் உன்னை ஏவவில்லை என்பதோ அல்ல. நீங்கள் எவ்வளவு கவனக்குறைவாக இருக்கின்றீர்கள் என்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. நீங்கள் உடனடியாக இந்த நிலைமையை மாற்றி பரிசுத்த ஆவியானவர் ஜனங்களை வழநடத்துகின்ற பாதையில் நடக்க வேண்டும். இதுவே இன்றைய நாளின் முக்கிய தலைப்பாகும். “பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதை” என்பது ஆவியில் பிரகாசமடைவதை; தேவனின் வார்த்தையைப் பற்றிய அறிவைப் பெறுவதை; எதிர்வரும் பாதை பற்றிய தெளிவைப் பெறுவதை; சத்தியத்திற்குள் படிப்படியாக பிரவேசிக்கும் திறனைப் பெறுவதை; தேவனைப் பற்றிய மாபெரும் அறிவை அடைவதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்ற பாதையானது முக்கியமாக மாற்றுக் கருத்துக்களும் தவறான கண்ணோட்டங்களும் இல்லாமல் தேவனின் வார்த்தையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஒரு பாதையாக இருக்கிறது, இந்தப் பாதையில் நடக்கின்றவர்கள் அதில் நேராக நடக்கின்றார்கள். இதை நீங்கள் அடைய வேண்டுமென்றால் தேவனுடன் நல்லிணக்கத்துடன் செயல்படவேண்டும், பின்பற்றுவதற்குச் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடக்க வேண்டும். இது மனிதனின் ஒத்துழைப்பை உள்ளடக்கியுள்ளது: அதாவது உங்களைப் பற்றிய தேவனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நீங்கள் என்ன செய்ய வேண்டும்; மேலும் தேவன் மீதான சரியான விசுவாசப் பாதையில் பிரவேசிக்க நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிற பாதையில் அடி எடுத்து வைப்பது சிக்கலானதாகத் தோன்றலாம். ஆனால் பின்பற்றும் பாதை உனக்குத் தெளிவாகும் போது, நீ அதனை மேலும் எளிதானதாகக் காண்பாய். உண்மை என்னவென்றால் தேவன் எதிர்பார்ப்பதை எல்லாம் ஜனங்களால் செய்ய இயலும்—இது அவர் பன்றிகளுக்குப் பறக்கக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பது போன்றது அல்ல. எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவன் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் கவலைகளைப் போக்கவும் முற்படுகிறார். நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தேவனைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். தேவனின் வார்த்தைக்கிணங்க பரிசுத்த ஆவியானவர் நடக்கின்ற பாதையில் மக்கள் வழநடத்தப்படுகிறார்கள். ஏற்கனவே கூறியது போல், உங்கள் இருதயத்தை தேவனிடம் கொடுத்துவிட வேண்டும். இதுவே பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அத்தியாவசியமானதாகும். சரியான வழியில் பிரவேசிப்பதற்கு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். ஒருவர் தனது இருதயத்தை உணர்வுபூர்வமாக தேவனுக்குக் கொடுக்கும் வேலையை எவ்வாறு செய்கிறார்? உங்களுடைய தினசரி வாழ்க்கையில் தேவனின் கிரியையை அனுபவித்து அவரிடம் ஜெபிக்கும் போது, நீங்கள் அதை கவனக்குறைவாகச் செய்கின்றீர்கள்—நீங்கள் பணியாற்றும்போது ஜெபிக்கின்றீர்கள். உங்களது இருதயத்தை தேவனுக்கு கொடுப்பதாக இதைச் சொல்ல முடியுமா? நீங்கள் வீட்டு விஷயங்களைப் பற்றியோ மாம்ச காரியங்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் எப்போதும் இரு மனதுள்ளவராக இருக்கின்றீர்கள். தேவனுடைய பிரசன்னத்தில் உங்களது இருதயத்தை அமைதிப்படுத்துவதாக இதைக் கருத முடியுமா? ஏனெனில் உன் இருதயம் எப்போதும் வெளிக் காரியங்களில் ஒன்றித்து நிற்கிறது, மற்றும் தேவனுக்கு முன்பாக திரும்பி வர இயலாமல் உள்ளது. உங்கள் இருதயம் உண்மையாகவே தேவனுக்கு முன்பாக சமாதானத்துடன் இருந்தால், உணர்வுபூர்வமாக ஒத்துழைக்கும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். அதாவது உங்களில் ஒவ்வொருவரும் உங்கள் அனுதின தியானங்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும். அந்த நேரத்தில் ஜனங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் இதர காரியங்களை ஒதுக்கிவிட வேண்டும். உங்கள் இருதயத்தை நிலைப்படுத்தி தேவன் முன் உங்களை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தனிப்பட்ட தியானக் குறிப்பேடுகளை வைத்திருக்க வேண்டும், தேவனுடைய வார்த்தை பற்றிய அவர்களது அறிவையும், அவர்களது ஆவி ஆழமாகவோ அல்லது மேலோட்டமாகவோ ஏவப்பட்டதையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்; அனைவரும் உணர்வுபூர்வமாக தேவனுக்கு முன்பாக அவர்களது இருதயத்தை அமைதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் நீ ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தை உண்மையான ஆவிக்குரிய வாழ்விற்கு அர்ப்பணித்தால், அந்தநாளில் உன் வாழ்வு செழிப்பாகும். உன் இருதயம் பிரகாசமும் தெளிவும் அடையும். நீ தினந்தோறும் இத்தகைய ஆவிக்குரிய வாழ்வை வாழ்ந்தால், உனது இருதயம் தேவனின் ஆட்கொள்ளுதலுக்குள் அதிகமாகத் திரும்ப இயலும். உனது ஆவி மென்மேலும் வலிமை பெறும். உனது நிலைமை தொடர்ச்சியாக முன்னேற்றமடையும்; பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகின்ற பாதையில் நடப்பதற்கு அதிகத் திறன் பெறுவாய். தேவன் உனக்கு அதிகமான ஆசீர்வாதங்களை அளிப்பார். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணர்வுபூர்வமாக பெறுவதே உங்கள் ஆவிக்குரிய வாழ்வின் நோக்கம் ஆகும். சட்டங்களைக் கடைபிடிப்பதோ மதச் சடங்குகளை அனுசரிப்பதோ அல்ல; மாறாக தேவனுடனான உடன்பாட்டுடன் உண்மையாக செயல்படுவதும், உனது சரீரத்தை உண்மையாக கட்டுப்படுத்துவதுமே ஆகும்—இதைத் தான் மனிதன் செய்ய வேண்டும். எனவே நீ இதனை மிகச் சிறந்த முயற்சியுடன் செய்ய வேண்டும். உன்னுடைய ஒத்துழைப்பும் நீ எடுக்கக்கூடிய கூடுதலான முயற்சியும் எவ்வளவு சிறப்பானதாக உள்ளதோ, அந்தளவிற்கு உனது இருதயத்தால் தேவனிடம் திரும்பிவர இயலும் மற்றும் உனது இருதயத்தை தேவன் முன் உன்னால் சிறப்பாக அமைதிப்படுத்த இயலும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தேவன் உனது இருதயத்தை முழுமையாக ஆட்கொள்வார். வேறு யாராலும் உனது இருதயத்தை மாற்றவோ கைப்பற்றவோ இயலாது. நீ முழுமையாக தேவனுக்கு சொந்தமாவாய். நீ இந்தப் பாதையில் நடந்தால் தேவனின் வார்த்தை உனக்கு எந்நேரமும் வெளிப்பட்டு நீ புரிந்து கொள்ளாத அனைத்தையும் தெளிவுபடுத்தும்—இவை அனைத்தையும் உன்னுடைய ஒத்துழைப்பினால் பெற முடியும். இதனால்தான் தேவன் எப்போதும் “என்னுடன் இணக்கமாகச் செயல்படுகிற அனைவருக்கும் நான் இரட்டிப்பாக வெகுமதி அளிப்பேன்” என்று கூறுகிறார். நீங்கள் இந்தப் பாதையைத் தெளிவாகப் பார்க்க வேண்டும். நீங்கள் சரியான பாதையில் நடக்க விரும்பினால், தேவனை திருப்திப்படுத்த உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். ஆவிக்குரிய வாழ்வை அடைய உங்களால் இயன்ற அனைத்தையும் நீங்கள் செய்ய வேண்டும். தொடக்கத்தில் இந்த முயற்சிகளில் சிறப்பான முடிவுகளை நீ அடையாமல் போகலாம். ஆனால் நீ பின்னடைவதற்கோ, எதிர்மறை எண்ணங்களில் புறள்வதற்கோ உன்னை அனுமதிக்கக்கூடாது. நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக நீ ஆவிக்குரிய வாழ்வை வாழ்கிறாயோ, அவ்வளவு அதிகமாக உனது இருதயமும் தேவனின் வார்த்தைகளினால் ஆட்கொள்ளப்படும்; அது எப்போதும் இந்தக் காரியங்களைப் பற்றி அக்கறைப்பட்டுக் கொண்டும், எப்போதும் இந்தப் பாரத்தைச் சுமந்து கொண்டும் இருக்கும். அதன் பிறகு உனது உள்ளத்தின் சத்தியங்களை ஆவிக்குரிய வாழ்வு மூலமாக தேவனிடம் வெளிப்படுத்து. நீ என்ன செய்ய விரும்புகிறாய், நீ எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உனது புரிதலும் கண்ணோட்டமும் என்ன என்பவற்றை அவரிடம் சொல். எதையும் மறைக்காதே, ஒரு சிறிய காரியத்தைக்கூட விட்டுவிடாதே! வார்த்தைகளை உனது இருதயத்தினுள் பேசிப் பயிற்சி செய் மற்றும் தேவனிடம் உனது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்து. அது உனது இருதயத்தில் இருந்தால், எவ்வகையிலாவது அதனைச் சொல்லிவிடு. எவ்வளவு அதிகமாக இந்த வகையில் நீ பேசுகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அருமையை உணருவாய், அவ்வளவு அதிகமாக உனது இருதயம் தேவனை நோக்கி இழுக்கப்படும். இவ்வாறு நடக்கின்ற போது, மற்ற யாரையும் விட அதிகமாக தேவன் உன் அன்புக்குரியவராக இருக்கிறார் என்பதை உணருவாய். எந்நிலையிலும் தேவனின் அருகாமையில் இருந்து நீ விலக மாட்டாய். இத்தகைய ஆவிக்குரிய தியானத்தை நீங்கள் தினமும் பயிற்சி செய்தால், அதை உனது மனதைவிட்டு அகற்றாமல், அதை உனது வாழ்வின் மிக முக்கியமான காரியமாகக் கருதினால், தேவனின் வார்த்தை உனது இருதயத்தை ஆட்கொள்ளும். இதுவே பரிசுத்த ஆவியானவரின் தொடுதல் ஆகும். உனது இருதயம் எப்போதும் தேவனால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதைப் போலவும், நீ நேசிப்பது உனது இருதயத்தில் எப்போதும் இருப்பதைப் போலவும் இருக்கும். அதை யாராலும் உன்னிடமிருந்து பறிக்க முடியாது. இது நிகழ்கின்றபோது, தேவன் உண்மையிலேயே உனக்குள் வாழ்வார். உனது இருதயத்திற்குள் இடம்பிடிப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கை மக்களைச் சரியான வழியில் நடத்திச் செல்கின்றது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 414

ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தை, தேவன் மீதான விசுவாசம் அவசியமாக்குகிறது. இது தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கும் மெய்யான ஜீவனுள் பிரவேசிப்பதற்கும் அடித்தளமாகிறது. தற்போது நீங்கள் செய்துவரும் ஜெபங்களும், தேவனிடம் நெருங்கி வருதலும், பாமாலைப் பாடுதலும், துதித்தலும் தியானம் செய்தலும், தேவனுடைய வார்த்தைகளை ஆராய்தலும் ஒரு “சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்திற்கு” ஈடாகுமா? உங்களில் எவரும் இதை அறிந்ததாய் தெரியவில்லை. ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது பிரார்த்தனை செய்வது, பாமாலைகளைப் பாடுவது, தேவாலய வாழ்க்கையில் ஈடுபடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது, பருகுவது என இவைகளுக்குள் அடங்குவதல்ல. மாறாக, இது புதியதும் உற்சாகமுமான ஆவிக்குரிய ஜீவியத்தை உள்ளடக்கியது. உங்களது நடைமுறையை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்பது அல்ல, உங்கள் நடைமுறை என்ன பலனைத் தருகிறது என்பதே முக்கியம். ஜெபம் செய்வது, பாமலைகளைப் பாடுவது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பது பருகுவது அல்லது அவருடைய வார்த்தைகளைச் சிந்திப்பது போன்ற நடைமுறைகள் உண்மையில் ஏதேனும் விளைவைக் கொண்டிருக்கின்றனவா அல்லது மெய்யான புரிதலுக்கு வழிவகுக்கின்றனவா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தில் இவை அவசியம் என பலரும் நம்புகின்றனர். இந்த ஜனங்கள் தங்கள் முடிவுகளைப் பற்றிய சிந்தனை ஏதும் இல்லாமல் மேலோட்டமான நடைமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்கள்; அவர்கள் மதச் சடங்குகளில் திளைக்கும் ஜனங்கள், திருச்சபைக்குள் வாழும் ஜனங்கள் அல்ல, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தின் ஜனங்களும் அல்ல. அவர்களின் ஜெபங்களும், பாமாலைப் பாடுதலும், தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தலும் பருகுதலனைத்தும் விருப்பத்தினாலோ மனதிலிருந்தோ அல்லாமல் விதிமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன, நிர்ப்பந்தத்தினால் செய்யப்படுகின்றன, மேலும் போக்குகளின்படி தொடர வேண்டுமென செய்யப்படுகின்றன. இந்த ஜனங்கள் எவ்வளவு ஜெபித்தாலும் பாடினாலும், அவர்களின் முயற்சிகள் பலனளிக்காது. ஏனென்றால் அவர்கள் கடைப்பிடிப்பது மதத்தின் விதிகள் மற்றும் சடங்குகள் மட்டுமே; அவர்கள் உண்மையில் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்பதைக் குறித்து தர்க்கம் செய்வதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாகக் கருதுகிறார்கள். அத்தகையவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்வதில்லை. அவர்கள் மாம்சத்தை மகிழ்விக்கிறார்கள், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறார்கள். இம்மத விதிமுறைகளும் சடங்குகளும் தேவனிடமிருந்து வந்தவையல்ல. இவை மனிதனிடமிருந்து தோன்றியவையாகும். தேவன் விதிகளைப் பின்பற்றுவதில்லை. அவர் எந்த சட்டத்திற்கும் உட்பட்டவரும் அல்ல. மாறாக, அவர் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்கிறார், நடைமுறைச் செயல்களை நிறைவேற்றுகிறார். த்ரீ செல்ஃப் சர்ச் போல, ஒவ்வொரு நாளும் காலை ஆராதனைகளில் கலந்துகொள்ளுதல், மாலை நேர ஜெபங்கள் செய்தல் மற்றும் உணவுக்கு முன் நன்றியுணர்வு ஜெபம் செய்தல், எல்லாவற்றிலும் நன்றி செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் எவ்வளவுச் செய்தாலும், எவ்வளவுக் காலம் அதைச் செய்தாலும், அவர்களிடம் பரிசுத்த ஆவியின் கிரியை இருக்காது. ஜனங்கள் விதிகளுக்கு மத்தியில் வாழும்போதும், சம்பிரதாய வழிமுறைகளில் தங்கள் இருதயங்களை நிலைநிறுத்தும்போதும் பரிசுத்த ஆவியானவர் செயல்பட முடியாது. ஏனென்றால் அவர்களின் இருதயங்கள், விதிகள் மற்றும் மனித கருத்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தேவனால் தலையிடவும், அவற்றில் செயல்படவும் இயலாது. மேலும் அவர்கள் தங்கள் சட்டங்களின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே வாழ முடியும். அத்தகையவர்கள் ஒருபோதும் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாது.

ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியமென்பது தேவனுக்கு முன்பாக ஜீவிக்கும் ஜீவியமாகும். ஜெபிக்கும்போது, ஒருவர் தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த முடியும். மேலும் ஜெபத்தின் மூலம் ஒருவர் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தைத் தேடலாம், தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளலாம், தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளலாம். அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதன் மூலமும், பருகுவதன் மூலமும், தேவனின் தற்போதைய கிரியையைப் பற்றி ஜனங்கள் தெளிவான மற்றும் முழுமையான புரிதலைப் பெற முடியும். அவர்கள் நடைமுறையில் பழைய ஜீவிதத்தோடு ஒட்டிக்கொள்ளாமல் ஒரு புதிய பாதையையும் பெற முடியும்; அவர்கள் செய்யும் அனைத்தும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடையச்செய்யும். ஜெபத்தைப் பொறுத்தவரை, சில நல்ல சொற்களைப் பேசுவதோ அல்லது நீங்கள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிப்பதற்காக தேவனுக்கு முன்பாக கண்ணீரோடு ஜெபிப்பதோ ஜெபம் அல்ல. மாறாக, ஒருவர் ஆவியானவர் பயன்படுத்துவதற்காக தன்னை பயிற்றுவிப்பதும், தேவனுக்கு முன்பாக தன் இருதயத்தை அமைதிப்படுத்த அனுமதிப்பதும், எல்லா காரியங்களிலும் தேவனுடைய வார்த்தைகளிலிருந்து வழிகாட்டுதல்களைத் தேடுவதற்கு தன்னைப் பயிற்றுவிப்பதும் தான் அதன் நோக்கமாகும், இதன் மூலம் அவர் இருதயம் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வெளிச்சத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனால் ஒருவர் செயலற்றவராகவோ சோம்பல் உடையவராகவோ இல்லாமல், தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான சரியான பாதையில் காலடி எடுத்து வைப்பார். இக்காலத்தில் பெரும்பாலான ஜனங்கள் பயிற்சி முறைகளில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனாலும் சத்தியத்தைப் பின்தொடரவும், வாழ்க்கை வளர்ச்சி அடையவும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. இங்குதான் அவர்கள் வழிதவறிவிட்டார்கள். புதிய வெளிச்சத்தைப் பெறும் தகுதியுள்ளவர்களும் உள்ளனர், ஆனால் அவர்களின் செயல்பாட்டு முறைகள் மாறாது. இன்றைய தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் பெறப் பார்க்கும்போது, தங்கள் பழைய மதக் கருத்துக்களை அவர்கள் தங்களுடன் கொண்டு வருகிறார்கள். எனவே அவர்கள் பெறுவது இன்னும் மதக் கருத்துக்களால் சாயம்பூசப்பட்ட கோட்பாடாகவே உள்ளது. அவர்கள் இன்றைய வெளிச்சத்தை சாதாரணமாகப் பெறுவதில்லை. இதன் விளைவாக, அவர்களின் நடைமுறைகள் களங்கப்படுத்தப்படுகின்றன. அவை புதிய தொகுப்பில் உள்ள பழைய நடைமுறைகளே. அவர்கள் எவ்வளவு நன்றாகக் கடைபிடித்தாலும், அவர்கள் வெளிவேடக்காரர்களே. ஒவ்வொரு நாளும் ஜனங்கள் புதிய நுண்ணறிவையும் புரிதலையும் பெற வேண்டும் என எதிர்பார்த்தும், தங்கள் பழைய வழக்கங்களுக்குத் திரும்பக்கூடாது மற்றும் செய்ததைத் திரும்பத் திரும்ப செய்யக்கூடாது என எதிர்பார்த்தும், தேவன் ஒவ்வொரு நாளும் புதிய காரியங்களைச் செய்வதற்கு ஜனங்களை வழிநடத்துகிறார். நீங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்திருந்தும், இன்னும் உங்கள் செயல்பாட்டு முறைகள் மாறாமலும், வெளிப்புறக் காரியங்களில் நீங்கள் இன்னும் ஆர்வமாகவும் ஓய்வின்றியும் இருந்து, அவருடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கு தேவன் முன் கொண்டுவர அமைதியான இருதயம் இல்லையெனில், நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள். தேவனின் புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் வித்தியாசமாகத் திட்டமிடவில்லை என்றால், உங்கள் செயல்பாட்டை ஒரு புதிய வழியில் செய்யவில்லை என்றால், புதிய புரிதல்களைப் பெறவில்லை என்றால், மாறாகப் பழையதைப் பற்றிக் கொண்டு, கொஞ்சம் குறைவான புதிய வெளிச்சத்தை மட்டுமே பெற்றுக்கொண்டால், நீங்கள் கைக்கொள்ளும் முறையை மாற்றாமல், வெறும் பெயருக்காக இந்த ஓட்டத்தில் இருக்கும் உங்களைப் போன்ற ஜனங்கள் உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் போக்குக்குப் புறம்பான மத பரிசேயர்கள் ஆவார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 415

ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தை வாழ, ஒருவர் தினமும் புதிய வெளிச்சத்தைப் பெறவும், தேவனின் வார்த்தைகளைப் பற்றிய மெய்யான புரிதலைப் பெறவும் திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒருவர் சத்தியத்தைத் தெளிவாகக் காண வேண்டும், எல்லா காரியங்களிலும் ஒரு நடைமுறைப் பாதையைக் கண்டறிய வேண்டும், ஒவ்வொரு நாளும் தேவனுடைய வார்த்தைகளைத் தியானிப்பதன் மூலம் புதிய கேள்விகளைக் கண்டறிய வேண்டும், மேலும் ஒருவரின் சொந்தக் குறைபாடுகளை உணர வேண்டும். இதனால் ஒருவரை முழுவதுமாக அசைக்கும் ஓர் ஏக்கமும், தேடும் இருதயமும் ஒருவர் பெறக்கூடும், அதனால் விழுந்துவிடக்கூடும் என்ற மிகுந்த பயத்துடன் ஒருவர் எல்லா நேரங்களிலும் தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கக்கூடும். அத்தகைய ஏக்கமுள்ள, தேடும் இருதயம் கொண்ட, தொடர்ந்து கைக்கொள்ள தயாராக உள்ள ஒருவர், ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியான பாதையில் செல்கிறார். பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவர்களும், சிறப்பாகச் செய்ய விரும்புவோரும், தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதை விரும்புவோரும், தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள ஏங்குகிறவர்களும், இயற்கைக்கு அப்பாற்பட்டதை எதிர்பாராமல் மெய்யான விலையை செலுத்துபவர்களும், மெய்யாக தேவ சித்தத்தின் மீது உண்மையாக அக்கறை காட்டுகிறவர்களும், மெய்யான, உண்மையான அனுபவத்தைப் பெற மெய்யாகவே கடைபிடிப்பவர்களும், வெற்று சொற்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றாதவர்களும் அல்லது இயற்கைக்கப்பாற்பட்ட உணர்வைத் தொடராதவர்களும், எந்தவொரு பெரிய ஆளுமையையும் தொழுதுகொள்ளாதவர்களும்தான் சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்தவர்களாவர். அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் ஜீவியத்தில் மேலும் வளர்ச்சியை அடைவதற்கும், அவற்றை ஆவியில் புதியதாகவும், உற்சாகமாகவும் ஆக்குவதற்கும் நோக்கமாக உள்ளன. மேலும் அவர்களால் எப்போதும் தீவிரமாகப் பிரவேசிக்க முடிகிறது. அதை உணராமல், அவர்கள் சத்தியத்தைப் புரிந்துகொண்டு மெய்யான ஜீவிதத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். சாதாரண ஆவிக்குரிய வாழ்வைக் கொண்டவர்கள் ஒவ்வொரு நாளும் ஆவியில் விடுதலையையும் சுதந்திரத்தையும் காண்கிறார்கள். மேலும் அவர்கள் தேவனுடைய திருப்திக்கு ஒரு விடுதலையான வழியில் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளலாம். இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, ஜெபம் செய்வது ஒரு முறையோ நடைமுறையோ அல்ல; ஒவ்வொரு நாளும், ஒரு புதிய வெளிச்சத்தின் வேகத்துடன் தங்களால் ஈடுகொடுக்க முடியும். உதாரணமாக, ஜனங்கள் தங்கள் இருதயங்களை தேவனுக்கு முன்பாக அமைதிப்படுத்த பயிற்சி அளிக்கிறார்கள். அவர்களுடைய இருதயங்கள் மெய்யாகவே தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்க முடியும். மேலும் யாராலும் அவர்களை கலக்கமடையச் செய்ய முடியாது. எந்தவொரு நபரோ, நிகழ்வோ, காரியமோ அவர்களின் இயல்பான ஆவிக்குரிய வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய பயிற்சி, பலன்களைத் தரும் நோக்கம் கொண்டது; இது ஜனங்களை விதிகளைப் பின்பற்ற வைப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இந்த நடைமுறை விதிமுறையைப் பின்பற்றுவதைப் பற்றியது அல்ல, மாறாக மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளாக மட்டுமே பார்த்தால், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் மாறாது. நீங்கள் மற்றவர்களைப் போலவே அதே நடைமுறையில் ஈடுபடலாம். ஆனால் இறுதியில், அவர்கள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செல்ல தகுதி பெறுகையில், நீங்கள் பரிசுத்த ஆவியானவர் செல்லும் பாதையிலிருந்து புறம்பாக்கப்படுகிறீர்கள். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவில்லையா? இந்த வார்த்தைகளின் நோக்கம், தேவனுக்கு முன்பாக ஜனங்கள் தங்கள் இருதயங்களை அமைதிப்படுத்த அனுமதிப்பதும், தங்கள் இருதயங்களை தேவனிடம் திருப்புவதும் ஆகும். இதனால் தேவனுடைய கிரியை தடையின்றி நடந்து, பலனளிக்கலாம். அப்போதுதான் ஜனங்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணங்கியிருக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 416

உங்கள் அனுதின வாழ்க்கையில் நீங்கள் ஜெபத்திற்கு முக்கிய இடமளிப்பதில்லை. ஜெபக்காரியங்களை மனிதன் ஒதுக்கிவிடுகிறான். ஜெபமானது வெறுமனே தேவனுக்கு முன்பாகச் செல்லுகிற ஓர் இயக்கமாகவும், கடமைக்காகச் செய்யப்படுகிற ஒரு செயலாகவும் வழக்கமாகக் காணப்படுகின்றது. ஒருவனும் உண்மையான ஜெபத்தில் தேவனோடு இணைந்து, தன் இருதயத்தை முழுமையாக அர்ப்பணித்ததில்லை. பிரச்சனைகள் எழும்பியபோது மட்டுமே மனிதன் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்தான். இத்தனை காலத்தில், நீ எப்போதாவது தேவனிடம் உண்மையாகவே ஜெபித்ததுண்டா? நீ தேவனுக்கு முன்பாக வேதனையுடன் கண்ணீர் சிந்தி அழுத நேரம் என்று ஒன்று உண்டா? நீ தேவனுக்கு முன்பாக உன்னை நிதானித்து அறிந்த நேரம் என்று ஒன்று உண்டா? நீ எப்பொழுதாவது, தேவனுடைய இருதயத்தோடு இருதயமாக இணைந்து ஜெபித்து இருக்கிறாயா? ஜெபமானது பயிற்சியின் மூலமாக வருகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் வழக்கமாக ஜெபிக்கிற நபராக இல்லை என்றால், நீங்கள் சபையில் ஜெபிக்கும் வாய்ப்பைப் பெற வழியே இருக்காது; மேலும் உங்களுக்குச் சிறிய கூடுகைகளில் ஜெபிக்கிற பழக்கமில்லாதிருந்தால், நீங்கள் பெரிய அளவிலான கூட்டங்களில் ஜெபிக்கத் தகுதியற்றவர்களாகக் காணப்படுவீர்கள். நீங்கள் தேவனுக்கு அருகாமையில் செல்லாமலும், தேவனுடைய வார்த்தையைச் சிந்தித்து, அசை போடாமலும் தொடர்ந்து காணப்படும்போது, ஜெப நேரத்தில் தேவனோடு பேச உங்களுக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை; அப்படியிருந்தும் நீங்கள் ஜெபிக்க முற்படும்பொழுது, நீங்கள் உதட்டளவில் ஜெபம் செய்கிறவர்களாக இருப்பீர்களே தவிர, உங்கள் ஜெபம் உண்மையான ஜெபமாக இருக்காது.

உண்மையான ஜெபம் என்றால் என்ன? உண்மையான ஜெபம் என்பது உங்கள் இருதயத்தில் உள்ளவற்றைத் தேவனிடத்தில் எடுத்துக் கூறுவதாகும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு, தேவனோடு ஐக்கியப்படுவதாகும், தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவருடன் தொடர்பு கொள்வதாகும், குறிப்பாக தேவனுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்வதாகும், அவர் உங்களுக்கு முன் இருப்பதை உணர்ந்து, தேவனிடம் பேசுவதற்கு உங்களிடம் ஏதோ இருப்பதாக நம்புவதாகும். உங்கள் இருதயம் ஒளியால் நிறைந்திருப்பதை உணர்கிறது; மேலும், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் உணர்கிறீர்கள். நீ தேவனிடமாக ஈர்க்கப்படுவதாக உணர்கிறாய்; உன்னிடம் கேட்கிற உன் சகோதர, சகோதரிகளுக்கு உன் வார்த்தைகள் மனநிறைவைக் கொண்டு வருகின்றன. அவர்கள் சொல்ல விரும்பிய, அவர்களுடைய வார்த்தைகள் உன்னுடைய வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருப்பது போல, அவர்கள் தங்கள் மனதில் உள்ள வார்த்தைகளை நீயே பேசி வெளிப்படுத்துவதாக உணர்வார்கள். இதுவே உண்மையான ஜெபமாகும். உண்மையான ஜெபத்தில் நீ தரித்திருக்கும்பொழுது, உன் இருதயம் சமாதானத்துடன் காணப்பட்டு மனநிறைவை அறியும். தேவனை நேசிக்கும் பலம் அதிகரித்து, தேவனை நேசிப்பதைக் காட்டிலும் மிகவும் மதிக்கப்படத்தக்கவை அல்லது வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க சிறந்தவை எதுவுமில்லை என்று உணர்வாய். இவை அனைத்தும் உனது ஜெபம் வல்லமையுள்ளது என்பதை நிரூபிக்கின்றது. இதைப் போல், நீ எப்போதாவது ஜெபித்ததுண்டா?

ஜெபத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? உன் இருதயத்தின் உண்மையான நிலை மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியைக்கு ஏற்றவாறு உன் ஜெபம் படிப்படியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அவர் மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறியவும், அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும், நீ தேவனோடு ஐக்கியம் கொள்ள வருகிறாய். ஜெபத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத் துவங்கும்பொழுது, முதலாவது உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுங்கள். தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், உங்கள் இருதயத்தில் உள்ள வார்த்தைகளை மட்டும் தேவனிடம் பேச முயற்சி செய்யுங்கள். நீ தேவனுக்கு முன்பாக வரும்பொழுது இவ்விதமாகப் பேசு: “தேவனே, நான் உமக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறதை இன்றைக்குத்தான் உணர்கிறேன். நான் உண்மையிலேயே குற்றம் உள்ளவனும் வெறுக்கப்படத்தக்கவனுமாய் இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முதல் நான் உமக்காக வாழ்வேன். நான் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, நீர் திருப்தி அடையும்படி உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவேன். உம்முடைய ஆவி என்னில் எப்பொழுதும் கிரியையை நடப்பித்து, தொடர்ந்து என்னை ஒளிரச் செய்து அறிவூட்டுவதாக. அதனால் நான் உமக்கு முன்பாக உறுதியான மற்றும் மாபெரும் சாட்சி பகருகிறவனாக விளங்கட்டும். எங்களில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிற உம்முடைய மகிமை, உம்முடைய சாட்சி மற்றும் உம்முடைய வெற்றியின் ஆதாரங்களைச் சாத்தான் பார்ப்பானாக.” இவ்விதமாக, நீ ஜெபிக்கும்பொழுது, உன் இருதயம் முழுமையாக விடுதலையைப் பெற்றிருக்கும். இவ்வாறாக ஜெபிக்கும் பொழுது, உன் இருதயம் தேவனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும். இது போன்று அடிக்கடி ஜெபிக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னில் கிரியையை நடப்பிப்பார். இவ்விதமாக நீ எப்பொழுதும் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, உன் தீர்மானங்களை அவருக்கு முன்பாக வைக்கும்பொழுது, உன் தீர்மானங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டு, உன் இருதயமும் உன் முழுமையும் தேவனால் ஆதாயப்படுத்தப்படும். இறுதியில் நீ அவராலே பரிபூரணமாக்கப்படுவாய். உங்களுக்கு ஜெபமானது மிகவும் இன்றியமையாதது ஆகும். நீங்கள் ஜெபித்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக்கொள்ளும் பொழுது, உங்கள் இருதயம் தேவனால் அசைக்கப்படும், மேலும் தேவனை நேசிக்கும்படியான பெலன் உள்ளே இருந்து வெளிப்படும். நீ உன் முழு உள்ளத்தோடு ஜெபிக்காமலும் தேவனோடு ஐக்கியம் கொள்ளும்படி உன் உள்ளத்தைத் திறக்காமலும் இருந்தால், தேவன் உன்னில் கிரியை நடப்பிக்க இயலாது. உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளைத் தேவனிடம் சொல்லி ஜெபித்த பின்பும் தேவ ஆவியானவர் தன் கிரியையை இன்னும் நடப்பிக்கத் தொடங்காமலும், நீ உணர்த்துதல்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அது உன் இருதயத்தில் நேர்மை குறைந்து இருப்பதையும், உன் வார்த்தையில் உண்மை இல்லாத தன்மையையும் மற்றும் இன்னும் தூய்மை இல்லாத தன்மையையும் காட்டுகிறது. ஒருவேளை, ஜெபித்த பின்பு நீ மனநிறைவு அடைந்ததை உணர்வாயேயானால், உன் ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டதாய் காணப்படும். மேலும், தேவ ஆவியானவர் உன்னில் கிரியை செய்து கொண்டு இருக்கிறார். தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்கிற ஒருவனால் ஜெபிக்காமல் இருக்க முடியாது. உண்மையிலேயே நீ தேவனுடனான ஐக்கியத்தை அர்த்தமுள்ளதாகவும், விலைமதிப்புமிக்க ஒன்றாகவும் பார்த்தாயேயானால், நீ ஜெபத்தைக் கைவிட முடியுமா? தேவனுடனான ஐக்கியம் இல்லாமல் ஒருவனும் இருக்க முடியாது. நீ ஜெபிக்காமலிருந்தால் மாமிசத்தில் வாழ்ந்து, சாத்தானுடைய கட்டுகளில் இருப்பாய். உண்மையான ஜெபம் இல்லாத பட்சத்தில், நீ இருளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறாய். என் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொரு நாளும் உண்மையான ஜெபத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இது வெறுமனே விதிகளைக் கைக்கொள்வதைப் பற்றியது அல்ல; மாறாக, ஒரு குறிப்பிட்ட பலனை அடைந்து கொள்வதாகும். ஜெபத்திற்காக அதிகாலையில் எழுந்து, தேவனுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க, உங்களது சிறிது தூக்கத்தையும் சந்தோஷத்தையும் சற்று கைவிட நீங்கள் ஆயத்தமா? நீங்கள் சுத்த இருதயத்துடன் இவ்விதமாக ஜெபம் செய்து, தேவனுடைய வார்த்தையைப் புசித்து, அதைப் பருகும்பொழுது, நீங்கள் அவருக்கு மிகவும் உகந்தவர்களாகக் காணப்படுவீர்கள். தினமும் காலையிலும் நீ இப்படிச் செய்வாயேயானால், ஒவ்வொருநாளும் நீ உன் இருதயத்தைத் தேவனுக்கு அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டும், அவருடன் தொடர்பு கொண்டும், அவரில் ஈடுபாடு கொண்டும் காணப்படுவாயேயானால் தேவனை குறித்ததான உன் அறிவு நிச்சயமாகவே அதிகரிப்பதோடு, நீ தேவ சித்தத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீ தேவனிடம் இப்படியாகக் கூறு: “தேவனே, நான் எனது கடமையைச் செய்து முடிக்க விரும்புகிறேன். என்னை முழுவதும் உமக்காக மட்டுமே பரிசுத்தப்படுத்த முடிகிறது. அதனால், நீர் எங்களிடமிருந்து மகிமை அடைவீராக; மற்றும், நீர் எங்கள் கூட்டத்தினால் உண்டான சாட்சியில் மகிழ்ச்சியடைவீராக. நீர் எங்களுக்குள் கிரியை நடப்பிக்கும்படியாகக் கெஞ்சி மன்றாடுகிறேன்; அதினிமித்தம் நான் உம்மை உண்மையாக நேசித்து, உம்மைத் திருப்திப்படுத்தி, உம்மை என் இலக்காக வைத்துப் பின்தொடரவும் இயலும்.” இவ்வாறு பாரத்துடன் ஜெபிக்கும் பொழுது, தேவன் உன்னை நிச்சயமாகவே பரிபூரணப்படுத்துவார். நீ உனது சுய லாபத்திற்காக மட்டுமே ஜெபிக்கக் கூடாது. தேவனுடைய சித்தத்தைக் கைக்கொள்வதற்காகவும், அவரை நேசிப்பதற்காகவும் கூட நீ ஜெபிக்க வேண்டும். இதுவே, உண்மையான ஜெபம் ஆகும். தேவனுடைய சித்தத்தைக் கைக்கொள்ளும்படியாக ஜெபிக்கிற ஒருவராக நீ இருக்கிறாயா?

கடந்த காலங்களில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருந்ததினால், நீங்கள் ஜெபம் என்ற ஒன்றைப் புறக்கணித்தீர்கள். இப்பொழுதோ, ஜெபத்திற்கு உங்களையே பயிற்றுவிப்பதற்கு, நீங்கள் உங்களாலான மட்டும் சிறப்புடன் செயல்பட வேண்டும். தேவனை நேசிக்க உனக்குள் காணப்படுகிற பலத்தை உன்னால் வரவழைக்க முடியாவிட்டால், எப்படி ஜெபிக்க வேண்டும்? “தேவனே, உம்மை உண்மையாக நேசிக்க என் இருதயத்திற்கு இயலவில்லை. நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு என்னில் பெலன் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நீர் ஏன் ஆவிக்குரிய கண்களைத் திறப்பீராக. மேலும், உம்முடைய ஆவி என் இருதயத்தை அசைக்கட்டும். நான் உமக்கு முன்பாக வரும்பொழுது, எதிர்மறையான எல்லாவற்றையும் எறிந்துவிட்டு, எந்த ஒரு மனிதனாலோ, ஒரு விஷயத்தாலோ அல்லது ஒரு பொருளாலோ நான் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதிலிருந்து நீங்கலாகி, என் இருதயத்தை முற்றிலும் வெறுமையாக்கி, உமக்கு முன்பாக வைக்கிறேன்; என்னை முழுவதுமாக உமக்கு முன்பாக அர்ப்பணிக்கும்படி அப்படி செய்கிறேன். இருப்பினும், நீர் என்னைச் சோதிக்கலாம்; நான் ஆயத்தமாக இருக்கிறேன். இப்பொழுது நான் என் எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொள்வதில்லை; மரணத்தின் நுகத்தின் கீழ் நான் இருப்பதுமில்லை. உம்மை நேசிக்கும் இதயத்துடன் ஜீவ வழியைத் தேட விரும்புகிறேன். ஒவ்வொரு காரியமும் அல்லது எல்லா விஷயங்களும் உம்முடைய கரங்களில் இருக்கின்றன. என் வாழ்க்கையின் விதி உமது கரங்களில் இருக்கின்றது. என் ஜீவனையும் நீர் உமது கரங்களில் வைத்திருக்கிறீர். இப்பொழுதும் நான் உம்மை நேசிக்க நாடுகிறேன். நான் உம்மை நேசிக்க, நீர் என்னை அனுமதிக்கிறீரோ இல்லையோ என்பதைப் பொருட்படுத்தாமல், சாத்தான் எவ்வாறு தலையிடுகிறான் என்பதையும் பொருட்படுத்தாமல், நான் உம்மை நேசிக்கத் தீர்மானித்திருக்கிறேன்.” நீங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, இப்படியாக ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நீ இப்படி ஜெபம் செய்தாயேயானால், தேவனை நேசிக்கும் வலிமை படிப்படியாக உயரும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 417

உண்மையான ஜெபத்திற்குள் ஒருவனால் எப்படி நுழைய முடியும்?

ஜெபிக்கும்பொழுது, தேவனுக்கு முன்பாக அமைதியான ஓர் இருதயம் உங்களுக்குக் காணப்பட வேண்டும். மேலும், உன் இருதயத்தில் நேர்மை காணப்பட வேண்டும். நீ உண்மையாகவே தேவனோடு ஐக்கியங்கொண்டு, ஜெபம் செய்யும்பொழுது, நீ இனிய சொற்களாலாகிய வாக்கியங்கள்மூலம் தேவனை ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஜெபமானது, தேவன் இப்பொழுது நிறைவேற்ற விரும்புகிற ஒன்றை மையப்படுத்தியே காணப்படவேண்டும். தேவன் உனக்கு அதிக ஞான ஒளியையும், பிரகாசத்தையும் கொடுக்கும்படி, அவரிடம் கேள். ஜெபிக்கும்பொழுது உன் உண்மை நிலையையும், உனது பிரச்சனைகளையும், தேவனுக்கு முன்பாக நீ எடுத்த தீர்மானங்களையும் கூட அவருடைய சமூகத்திற்குள் கொண்டுவா. ஜெபம் என்பது வெறுமனே செயல்முறையைக் கைக்கொள்ளுதல் அல்ல; மாறாக, நேர்மையுள்ள இருதயத்துடன் தேவனைத் தேடுகிற ஒரு செயலாகும். உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாக அமைதியோடு காணப்படும்படியாகவும், அவர் உன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்படியாகவும் அவரிடம் வேண்டிக்கொள்; இதனால், அவர் உன்னை வைத்துள்ள சூழலில், நீ உன்னையே அறிந்துகொண்டு, உன்னை வெறுத்து, உன் சுயத்தைக் கைவிட்டுவிட்டு, பின் தேவனுடன் சாதாரண ஓர் உறவைக் கொண்டிருக்கும் படியாக, உன்னை அனுமதித்து, உண்மையிலேயே தேவனை நேசிக்கும் ஒருவராக மாற முடியும்.

ஜெபத்தின் முக்கியத்துவம் என்ன?

ஜெபமானது மனிதன் தேவனுடன் ஒத்துழைக்கும் வழிகளில் ஒன்றாகும். தேவனை மனிதன் கூப்பிடுவதற்கு ஒரு வழியாகும் மற்றும் தேவனுடைய ஆவியினாலே மனிதன் அசைக்கப்படும் ஒரு செயல்முறையாகும். இப்படியாகக் கூறலாம்; ஜெபம் இல்லாதவர்கள், ஆவியில் வெறுமையுடன் காணப்படுகிற மரித்த ஜனங்களாவார்கள். அவர்கள் தேவனால் அசைக்கப்படுவதற்கு மனவலிமை அற்றவர்கள் என்பதை அது நிரூபிக்கின்றது. ஜெபம் இல்லாமல், ஒரு சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்துவது சாத்தியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரின் கிரியை நம்மில் மிகவும் குறைவாகக் காணப்படும். ஜெபம் இல்லாமல் இருப்பது ஒருவன் தேவனுடனான உறவை முறித்துக்கொள்வதாகும். அப்படிப்பட்ட ஒருவன் தேவனிடமிருந்து பாராட்டைப் பெறுவது என்பது சாத்தியமில்லை. தேவனில் விசுவாசம் உள்ளவனாக, அதிகமாக ஜெபிக்கிற ஒருவன்; அதாவது, அதிகமாக ஜெபிக்கிற அவன் தேவனால் அசைக்கப்பட்டிருக்கிறான். அதிகம் ஜெபிக்கிற அவன், தீர்மானங்களால் நிறைந்து காணப்படும்பொழுது, ஓரளவே ஜெபிக்கிற ஒருவன் புதிய ஞான ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு அது உதவுகிறது. அதன் விளைவாக, இப்படிப்பட்ட மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் மிக விரைவாகப் பரிபூரணமாக்கப்படுவார்கள்.

ஜெபம் என்ன பலனை அடைய வேண்டும்?

ஜனங்கள் ஜெபத்தைப் பயிற்சி செய்யலாம் மற்றும் ஜெபத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், ஜெபம் வல்லமையுள்ளதாய் இருப்பது எளிதான விஷயம் அல்ல. ஜெபம் என்பது ஓர் இயக்கத்தின் வழியாகச் செல்வதோ, வழிமுறையைப் பின்பற்றுவதோ அல்லது தேவனுடைய வார்த்தையை மனப்பாடம் செய்து கூறுவதோ அல்ல. வேறுவிதமாகக் கூறினால், ஜெபம் என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதோ மற்றவர்களைப் பின்பற்றுவதோ அல்ல. ஜெபத்தில் ஒருவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு ஒப்படைக்கக்கூடிய நிலையை அடைந்து, தேவனால் அவன் அசைக்கப்படும்படி ஒருவனது இருதயம் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஜெபம் வல்லமையுள்ளதாக இருக்க வேண்டுமானால், அது ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் ஜெபிப்பதன் மூலம் மட்டுமே அதிக அறிவொளியையும், வெளிச்சத்தையும் பெற முடியும். ஓர் உண்மையான ஜெபத்தின் வெளிப்பாடு என்னவென்றால், தேவன் கேட்கிற எல்லாவற்றிற்காகவும் ஏங்குகிற ஓர் இருதயம் பெற்றிருத்தல், மேலும் அவர் என்ன கோரிக்கை வைத்திருக்கிறாரோ, அதை நிறைவேற்றி முடிக்க விரும்புதல்; ஆண்டவர் வெறுப்பதை வெறுத்தல், இவற்றின் அடிப்படையில் இதைப்பற்றிக் கொஞ்சம் புரிந்து கொள்ளுதலைப் பெற்று, தேவன் தெளிவுபடுத்திய உண்மையைக் குறித்த சிறிது அறிவையும், தெளிவையும் பெற்றிருத்தலே ஜெபத்தின் வெளிப்பாடு ஆகும். மன உறுதி, விசுவாசம், அறிவு மற்றும் ஜெபத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்ய ஒரு வழி ஆகியவை இருக்கும்பொழுது மட்டுமே, அது உண்மையான ஜெபம் என்று அழைக்கப்பட முடியும். மேலும், இவ்வகையான ஜெபம் மட்டுமே வல்லமையுள்ளதாகக் காணப்படும். இருப்பினும் ஜெபமானது தேவனுடைய வார்த்தைகளினாலான சந்தோஷத்தின் மீது கட்டப்பட்டதாக இருக்க வேண்டும்; தேவனோடு அவருடைய வார்த்தைகளின் மூலமாகத் தொடர்பு கொள்வதன் அடிப்படையில் அது ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், இதயம் தேவனைத் தேடக் கூடியதாகவும் அவருக்கு முன்பாக அமைதியுடனும் காணப்பட முடியும். இந்த வகையான ஜெபம் தேவனுடனான உண்மையான ஐக்கிய நிலைக்குள் ஏற்கனவே நுழைந்திருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 418

ஜெபத்தைப் பற்றிய மிகவும் அடிப்படையான அறிவு:

1. மனதிற்கு வருவதெல்லாவற்றையும் கண்மூடித்தனமாகச் சொல்லாதீர்கள். உங்கள் இருதயத்தில் நீங்கள் ஒரு பாரம் கொண்டிருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஜெபிக்கும்பொழுது, நீங்கள் ஒரு நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

2. ஜெபம் தேவனுடைய வார்த்தைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அது தேவனுடைய வார்த்தைகளின் மீது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

3. ஜெபிக்கும் பொழுது, நீங்கள் பழைய பிரச்சனைகளுக்குப் புதிய உருவம் கொடுக்கக் கூடாது. உங்கள் ஜெபம் தேவனுடைய தற்போதைய வார்த்தைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். மேலும் நீங்கள் ஜெபிக்கும்பொழுது, உங்கள் உள்ளத்தின் ஆழ்ந்த கருத்துக்களைத் தேவனிடம் எடுத்துக்கூறுங்கள்.

4. குழு ஜெபம் ஒரு மையத்தைக் கொண்டதாக, முக்கியமாக, பரிசுத்த ஆவியின் தற்போதைய கிரியையை மையப்படுத்தி அமைய வேண்டும்.

5. பரிந்துரை ஜெபத்தை எல்லா மக்களும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் தேவனுடைய சித்தத்தைக் கருத்தில் கொள்வதைக் காண்பிக்கும் ஒரு வழியாகும்.

ஜெபத்தைக் குறித்த அறிவு மற்றும் ஜெபத்தின் முக்கியத்துவம் குறித்த புரிந்துகொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டே ஒரு தனிமனிதனின் ஜெப வாழ்க்கை அமைகின்றது. அனுதின வாழ்க்கையில், உங்கள் குறைபாடுகளுக்காக அடிக்கடி ஜெபம் செய்யுங்கள். வாழ்வில் உங்கள் மனநிலையில் மாற்றத்தின் பலனைக் காண ஜெபியுங்கள். மேலும் தேவனுடைய வார்த்தைகளைக் குறித்த உங்கள் அறிவின் அடிப்படையில் ஜெபியுங்கள். ஒவ்வொரு நபரும் தங்களுக்கான ஜெப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை அறிந்து கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும். மேலும் அவர்கள் தேவனின் செயலை அறிந்து கொள்ள நாடி ஜெபிக்கவேண்டும். உங்கள் சொந்த சூழ்நிலைகளை தேவனுக்கு முன்பாக அப்படியே வைத்து, நீங்கள் ஜெபிக்கிற வழியைக் குறித்து கவலைப்படாமல் உண்மையாய் இருங்கள். உண்மையான புரிந்து கொள்ளுதலை அடைவது மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுவதே முக்கிய அம்சமாகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைய முற்படும் ஒருவர் பல வெவ்வேறான வழிகளில் ஜெபிக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அமைதியான ஜெபம், தேவனுடைய வார்த்தைகளின் மீது ஆழ்ந்த தியானம், தேவனுடைய கிரியையைப் பற்றிய அறிவைப் பெறுதல் ஆகிய இவை சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைவதற்கான குறிக்கோளுடன் கூடிய செயலுக்கான உதாரணங்களாகும். இது தேவனுக்கு முன்பாக ஒருவனின் நிலையை மேலும் வளரச் செய்து ஒருபோதும் இல்லாத அளவிற்கு அவனை வாழ்க்கையில் முன்னோக்கி நகர்த்துகின்றது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய வார்த்தையைப் புசித்துப், பருகுவது அல்லது அமைதியாக ஜெபிப்பது அல்லது சத்தமாக அறிவிப்பது ஆகிய இவை அனைத்துமே, நீ தேவனுடைய வார்த்தைகளையும், அவருடைய கிரியையையும் மற்றும் அவர் உன்னில் செய்து முடிக்க விரும்புகிறவற்றையும் தெளிவாகப் பார்க்க உனக்கு உதவுகின்றன. மிக முக்கியமாக, நீ செய்கிற இவை அனைத்தும், தேவன் உன்னிடம் எதிர்பார்க்கிற தரத்தை அடையவும், உன் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு உயர்த்தவும் உதவுகின்றது. தேவன் மனிதனிடம் வைக்கிற மிகக் குறைந்த கோரிக்கை என்னவென்றால், அவன் தன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக திறந்துவைக்க வேண்டும் என்பதாகும். மனிதன் தன் உண்மையான இதயத்தைத் தேவனுக்குக் கொடுத்து, தன் இதயத்தில் உள்ளவற்றை உண்மையாய் எடுத்துக் கூறினால், தேவன் அவனில் கிரியை செய்ய ஆவலாய் இருக்கிறார். தேவன் விரும்புவதெல்லாம் மனிதனின் திருக்குள்ள இருதயம் அல்ல, மாறாகச் சுத்தமும் நேர்மையான இருதயத்தை விரும்புகிறார். மனிதன் தன் இருதயத்திலிருந்து தேவனிடம் பேசாதிருந்தால், தேவனும் அவனுடைய இருதயத்தை அசைக்காமலும் அவனில் கிரியை செய்யாமலும் இருப்பார். ஆகையால், உங்கள் உள்ளத்திலிருந்து தேவனுடன் பேசுதல் உங்கள் குறைபாடுகள் அல்லது கலகத்தனமான மனநிலையைப் பற்றிக் கூறுதல் மற்றும் அவருக்கு முன்பாக உங்களை முழுமையாகத் திறந்து வைத்தல் போன்றவை ஜெபத்தில் மிக முக்கியமான விஷயமாகும். அப்பொழுது மட்டுமே தேவன் உன் ஜெபத்தில் ஆர்வம் உள்ளவராய் இருப்பார். இல்லையெனில் அவர் தன் முகத்தை உன்னிடமிருந்து மறைப்பார். உன் இருதயத்தைத் தேவனுக்கு முன்பாக அமைதியாக காத்துக்கொள்வது மற்றும் அது தேவனை விட்டு விலகாமல் இருக்கச் செய்வதே ஜெபத்தின் குறைந்தபட்ச தகுதி ஆகும். ஒருவேளை இந்தக் கட்டத்தில் புதிய அல்லது உயர்ந்த நுண்ணறிவை நீ பெறவில்லை; எனினும் நீ முன்னிருந்த நிலையைப் பாதுகாத்துப் பராமரிக்க ஜெபத்தைப் பயன்படுத்த வேண்டும். நீ பின்னோக்கி செல்லக்கூடாது. இதுவே மிகக் குறைந்தபட்சம் அடைய வேண்டிய உன் இலக்கு ஆகும். இந்த நிலையைக் கூட நீ அடையத் தவறினால் உன் ஆவிக்குரிய வாழ்க்கை சரியான பாதையில் இல்லை என்பதை அது நிரூபிக்கின்றது. இதன் விளைவாக நீ ஆதியில் கொண்டிருந்த தரிசனத்தைப் பற்றிக்கொண்டு இருக்க முடியாது, தேவன் மீதான விசுவாசத்தை இழந்து உன் மன உறுதி படிப்படியாக சிதறடிக்கப்பட்டுப் போகும். ஆவிக்குரிய வாழ்க்கையில் நீ நுழைந்து இருக்கிறாயா இல்லையா என்பதற்கான அறிகுறி என்னவென்றால்: உன் ஜெபங்கள் சரியான பாதையில் இருக்கின்றனவா என காண்பதாகும். எல்லா ஜனங்களும் இந்த யதார்த்தத்துக்குள் நுழைய வேண்டும். அவர்கள் அனைவரும் ஜெபத்தில் தங்களைத் தாங்களே உணர்வுப்பூர்வமாகப் பயிற்றுவித்துக் கொள்ள அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். செயலற்ற முறையில் காத்திருக்காமல், பரிசுத்த ஆவியினால் தொடர்ந்து அசைக்கப்படும்படி முயற்சிக்க வேண்டும். அப்பொழுது மட்டும்தான் அவர்கள் உண்மையாகவே தேவனைத் தேடுகிறவர்களாகக் காணப்படுவார்கள்.

நீங்கள் ஜெபிக்கத் துவங்கும்பொழுது, ஒரேயடியாக எல்லாவற்றையும் அடைந்துவிட வேண்டும் என்று அதிகக் கற்பனை செய்யாதீர்கள் உன் வாயைத் திறந்தவுடனே பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுதல் அல்லது அறிவொளியும் வெளிச்சமும் பெறுதல் அல்லது தேவன் உன்மீது கிருபையைப் பொழிந்தருளுவார் என்று எதிர்பார்த்தல் போன்ற அதிகப்படியான கோரிக்கைகளை நீ வைக்க முடியாது. அது அப்படி நடைபெறாது. தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. தேவன் ஜனங்களின் ஜெபத்திற்கு அவருடைய சொந்த நேரத்தில் பதிலளிக்கிறார். மேலும், சில சமயங்களில் அவருக்கு முன்பாக நீ உண்மையாய் இருக்கிறாயா இல்லையா என்பதைக் காண்பதற்கு உன் விசுவாசத்தை சோதிக்கிறார். நீ ஜெபிக்கும்பொழுது உனக்கு விசுவாசம் விடாமுயற்சி மற்றும் மன உறுதி இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தங்களைப் பயிற்றுவிக்கத் துவங்கும்பொழுது, பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படுவதைப் பெற முடியாததால் சோர்ந்து போய் விடுகிறார்கள். இது செயல்படாது! நீ விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியால் அசைக்கப்படுவதற்கான உணர்வில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தேடுவதிலும் ஆராய்ந்து அறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீ பயிற்சி செய்யும் வழி சரியானதாக இல்லாமலும் காணப்படும். மேலும் சில சமயங்களில் உன் சொந்த நோக்கங்களும் எண்ணங்களும் தேவனுக்கு முன்பாக நிலைநிற்க முடியாது. ஆகவேதான், தேவ ஆவியால் உன்னை அசைக்க முடிவதில்லை. சிலவேளைகளில், தேவன் நீ உண்மை உள்ளவனா இல்லையா என்பதைக் காண்கின்றார். சுருக்கமாகக் கூறுவதென்றால், பயிற்சியில் நீ மிகுந்த விலைக்கிரயம் செலுத்த வேண்டும். உன் பயிற்சியில் நீ திசை மாற்றம் அடைவதாக உணர்ந்தால் ஜெபம் செய்யும் வழியை மாற்றி அமைக்கலாம். உத்தம இருதயத்துடன் அவரைத்தேடி அவரை அடைய ஏங்கும்பொழுது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னை இந்த உண்மைக்குள் நிச்சயமாகக் கொண்டு வருவார். சில சமயங்களில், நீ உத்தம இருதயத்துடன் ஜெபித்தும், குறிப்பாக நீ அசைக்கப்பட்டதாக உணர்வதில்லை. இப்படிப்பட்ட சமயங்களில் நீ விசுவாசத்தைச் சார்ந்திருந்து, தேவன் உன் ஜெபங்களைக் கவனிக்கிறார் என்று நம்ப வேண்டும். உன் ஜெபங்களில் விடாமுயற்சி வேண்டும்.

ஒரு நேர்மையான நபராக இருந்து, இருதயத்தில் உள்ள வஞ்சகத்திலிருந்து விடுபடத் தேவனிடம் ஜெபித்து, எல்லா நேரங்களிலும் ஜெபத்தின் மூலம் உன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள். தேவ ஆவியினால் அசைக்கப்பட்டு இருப்பாயாக. அப்பொழுது உன் மனநிலை படிப்படியாக மாறும். உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை என்பது ஜெப வாழ்க்கையாகும். அது பரிசுத்த ஆவியானவரால் அசைக்கப்பட்டு இருக்கும் ஒரு வாழ்க்கையாகும். பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டு இருக்கிற செயல்முறை என்பது மனிதனின் மனநிலையில் உண்டான மாற்றத்தைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியினால் அசைக்கப்படாத வாழ்க்கை ஓர் ஆவிக்குரிய வாழ்க்கை அல்ல; மாறாக, அது ஒரு மதச் சடங்கு நிறைந்த ஒரு வாழ்க்கையாக மட்டுமே இருக்கும். அவ்வப்போது பரிசுத்த ஆவியினால் அசைக்கப்பட்டிருக்கிறவர்கள் மற்றும் பரிசுத்த ஆவியினால் அறிவொளியையும், வெளிச்சத்தையும் அடைந்தவர்கள் மட்டுமே ஆவிக்குரிய வாழ்க்கையில் நுழைந்து இருக்கிறார்கள். மனிதனின் மனநிலை அவன் ஜெபிக்கும்பொழுது தொடர்ந்து மாறுகிறது. எவ்வளவுக்கு அதிகமாகப் பரிசுத்த ஆவியானவர் அவனை அசைக்கிறாரோ, அவ்வளவுக்கு அதிகமாக அவன் கிரியை செய்பவனாகவும், கீழ்ப்படிகிறவனாகவும் மாறுகிறான். ஆகவே, இப்படி அவன் இருதயம் படிப்படியாகச் சுத்தப்படுத்தப்பட்டு, அவன் மனநிலை படிப்படியாக மாறுகிறது. இதுவே உண்மையான ஜெபத்தின் பலன் ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 419

தேவனுடைய வார்த்தைகளில் பிரவேசிப்பதற்கு அவரது சமூகத்தில் உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துவதைத் தவிர எந்த நடவடிக்கையும் மிகவும் முக்கியமானது அல்ல. தற்போது சகல ஜனங்களும் பிரவேசிக்க வேண்டிய அவசர தேவையில் உள்ளனர் என்பதற்கு இது ஒரு பாடமாகும். தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதலுக்குள் பிரவேசிப்பதற்கான பாதை பின்வருமாறு:

1. வெளிப்புற காரியங்களிலிருந்து உங்கள் இருதயத்தை விலக்குங்கள். தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருங்கள், தேவனிடம் ஜெபிப்பதில் உங்கள் சிதறாத கவனத்தைச் செலுத்துங்கள்.

2. தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தில் சமாதானத்தோடு, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி அனுபவியுங்கள்.

3. தேவனுடைய அன்பைப் பற்றி தியானம் செய்யுங்கள் மற்றும் சிந்தித்துப் பாருங்கள், உங்கள் இருதயத்தில் தேவனுடைய கிரியையைச் சிந்தித்துப் பாருங்கள்.

முதலில், ஜெபம் என்ற அம்சத்திலிருந்து ஆரம்பியுங்கள். சிதறாத கவனத்துடனும் குறித்த நேரங்களிலும் ஜெபம் பண்ணுங்கள். நீங்கள் நேரத்தின் நிமித்தம் எவ்வளவு நெருக்கம் அடைந்தாலும், உங்கள் வேலையில் எவ்வளவு அலுவலாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு என்ன நேர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் வழக்கமாக ஜெபம் பண்ணுங்கள், தேவனுடைய வார்த்தைகளை வழக்கமாக புசித்துப் பானம்பண்ணுங்கள். தேவனுடைய வார்த்தைகளை நீங்கள் புசித்துப் பானம் பண்ணும் வரை, உங்களை சூழ்ந்திருப்பவைகள் என்னவாக இருந்தாலும், உங்கள் ஆவிக்கு மிகுந்த இன்பம் உண்டாகும், மேலும் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது காரியங்களால் நீங்கள் தொந்தரவில்லாமல் இருப்பீர்கள். உங்கள் இருதயத்தில் தேவனைக் குறித்து இயல்பாகச் சிந்திக்கும்போது, வெளியில் நடப்பது உங்களைத் தொந்தரவு செய்ய முடியாது. வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான அர்த்தம் இதுதான். ஜெபத்துடன் ஆரம்பியுங்கள்: தேவனுக்கு முன்பாக அமைதியாக ஜெபிப்பது மிகவும் பலனளிக்கக்கூடியது. அதன்பிறகு, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுங்கள், தேவனுடைய வார்த்தைகளைக் குறித்துச் சிந்திப்பதன் மூலம் ஒளியைத் தேடுங்கள், பயிற்சி செய்வதற்கான பாதையைக் கண்டுபிடியுங்கள், தேவனுடைய வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் அவருடைய நோக்கத்தை அறிந்துகொள்ளுங்கள், மாறுபாடு இல்லாமல் அவற்றைப் புரிந்துகொள்ளுங்கள். பொதுவாக, நீங்கள் வெளிப்புற காரியங்களால் கலக்கமடையாமல் உங்கள் இருதயத்தில் தேவனிடம் நெருங்கி வரவும், தேவனுடைய அன்பைப் பற்றிச் சிந்திக்கவும், தேவனுடைய வார்த்தைகளைச் சிந்திப்பதற்கும் அது இயல்பாக இருக்க வேண்டும். உன் இருதயம் ஒரு குறிப்பிட்ட அளவிலான சமாதானத்தை அடையும்போது, இறுதியாக உன் இருதயத்தில் துதி ஊற்றெடுக்கும் இடத்தை அடையும் வரை நீ மிக அமைதியாகவும், உனக்குள், தேவனுடைய அன்பைப் பற்றிச் சிந்திக்கவும், உங்களை சூழ்ந்துள்ளவைகளைப் பொருட்படுத்தாமல், உண்மையிலேயே அவரிடம் நெருங்கி வரவும் முடியும், இது ஜெபத்தைக் காட்டிலும் சிறந்தது. அப்போது நீ ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றிருப்பாய். உன்னால் மேலே விவரிக்கப்பட்டுள்ள நிலைகளை அடைய முடியுமானால், உன் இருதயம் தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே சமாதானமாக இருக்கிறது என்பதற்கு இது சான்றாக இருக்கும். இது முதல் அடிப்படைப் பாடமாகும். தேவனுக்கு முன்பாக ஜனங்கள் சமாதானமாக இருக்க முடிந்த பிறகே, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் அறிவூட்டப்பட்டு ஓளியூட்டப்பட முடியும், அப்போதுதான் அவர்களால் தேவனோடு உண்மையான ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும், அத்துடன் தேவனுடைய சித்தத்தையும் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலையும் புரிந்துகொள்ள முடியும். அப்போது அவர்கள் தங்கள் ஆவிக்குரிய ஜீவியங்களில் சரியான பாதையில் பிரவேசித்திருப்பார்கள். தேவனுக்கு முன்பாக ஜீவிப்பதற்கான அவர்களுடைய பயிற்சி ஒரு குறிப்பிட்ட ஆழத்தை அடைந்து, அவர்கள் தங்களையே துறந்து, தங்களையே வெறுத்து, தேவனுடைய வார்த்தைகளில் ஜீவிக்கவும் முடியும் போதுதான், அவர்களுடைய இருதயங்கள் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கும். தன்னையே வெறுக்கவும், தன்னையே சபிக்கவும், தன்னையே துறக்கவும் முடியுமானால் அது தேவனுடைய கிரியையால் அடையப்பட்ட பலனாகும், இதை ஜனங்களால் தாமாகச் செய்ய முடியாது. ஆகவே, தேவனுக்கு முன்பாக ஒருவரின் இருதயத்தை அமைதிப்படுத்தும் பயிற்சியே ஜனங்கள் உடனடியாகப் பிரவேசிக்க வேண்டிய ஒரு பாடமாகும். சிலரால் பொதுவாக தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாது என்பது மட்டுமல்லாமல், ஜெபிக்கும்போது கூட அவர்களால் தேவனுக்கு முன்பாக அவர்களுடைய இருதயங்களை அமைதிப்படுத்த முடியாது. இது தேவனுடைய தரத்தின் நிலைகளுக்கு மிகவும் குறைவானது! உங்கள் இருதயம் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியவில்லை என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட முடியுமா? நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாத ஒருவனாக இருந்தால், யாராவது ஒருவர் வரும்போது அல்லது மற்றவர்கள் பேசும்போது நீ திசைதிருப்பப்படுவதற்குப் பொறுப்பாளியாய் இருப்பாய், மற்றவர்கள் காரியங்களைச் செய்யும்போது உன் மனம் கவனத்தைச் சிதறவிடலாம், இந்தச் சந்தர்ப்பத்தில் நீ தேவனுடைய பிரசன்னத்தில் ஜீவிப்பதில்லை. உன் இருதயம் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருந்தால், வெளி உலகில் நடக்கும் எந்தக் காரியத்தாலோ அல்லது எந்தவொரு நபர், நிகழ்வு அல்லது காரியத்தால் ஆக்கிரமிக்கப்படுவதால் நீ கலக்கமடைய மாட்டாய். நீ இதில் பிரவேசித்தால், அந்த எதிர்மறையான நிலைகளும் எல்லா எதிர்மறையான காரியங்களும், அதாவது மனிதக் கருத்துக்கள், ஜீவிப்பதற்கான தத்துவங்கள், ஜனங்களுக்கிடையிலான வித்தியாசமான உறவுகள் மற்றும் கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் போன்றவை இயற்கையாகவே மறைந்துவிடும். ஏனென்றால் நீ எப்போதும் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறாய், உன் இருதயம் எப்போதும் தேவனிடம் நெருங்கி வருவதோடு, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளால் எப்போதும் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், உன்னை அறியாமலேயே அந்த எதிர்மறையான காரியங்கள் உன்னைவிட்டு விலகிவிடும். புதிய மற்றும் நேர்மறையான காரியங்கள் உன்னை ஆட்கொள்ளும்போது, எதிர்மறையான பழைய காரியங்களுக்கு இடமிருக்காது, அதனால் அந்த எதிர்மறையான காரியங்களில் கவனம் செலுத்தக்கூடாது. அவற்றைக் கட்டுப்படுத்த நீ முயற்சி செய்ய வேண்டியதில்லை. நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும், உன்னால் முடிந்தவரை தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணி, அனுபவிக்க வேண்டும், உன்னால் முடிந்தவரை தேவனைத் துதித்துப் பாடல்களைப் பாட வேண்டும், மேலும் தேவன் உன்னில் கிரியை செய்ய அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும், ஏனென்றால் தேவன் இப்போது மனுக்குலத்தைத் தனிப்பட்ட முறையில் பரிபூரணப்படுத்த விரும்புகிறார், மேலும் அவர் உன் இருதயத்தைப் ஆதாயப்படுத்த விரும்புகிறார். அவருடைய ஆவி உன் இருதயத்தை ஏவுகிறது, பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நீ தேவனுடைய சமூகத்தில் ஜீவிக்க வந்தால், நீ தேவனைத் திருப்திப்படுத்துவாய். நீ தேவனுடைய வார்த்தைகளில் ஜீவிப்பதில் கவனம் செலுத்தி, பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற சத்தியத்தைப் பற்றி அதிக ஐக்கியத்தில் ஈடுபட்டால், அந்த மதக் கருத்துக்கள் மற்றும் உன் சுயநீதி மற்றும் சுய முக்கியத்துவம் எல்லாம் மறைந்துவிடும், தேவனுக்காக உன்னை எப்படி ஒப்புக்கொடுக்க வேண்டும், தேவனிடத்தில் எவ்வாறு அன்பு செலுத்த வேண்டும், தேவனை எவ்வாறு திருப்திப்படுத்த வேண்டும் என்பதை நீ அறிந்துகொள்வாய். உங்களை அறியாமலேயே, தேவனுக்குப் புறம்பான அப்படிப்பட்ட காரியங்கள் உங்கள் உணர்வுநிலையில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 420

தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது தேவனுடைய வார்த்தைகளைப் பற்றி சிந்தித்து ஜெபம் செய்வதே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதற்கான முதல் படியாகும். உன்னால் உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியுமனால், பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலும் வெளிச்சமும் உங்களுடன் இருக்கும். தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதன் மூலம் சகல ஆவிக்குரிய ஜீவியமும் அடையப்படுகிறது. ஜெபத்தில், நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட முடியும். நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கும்போது, நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது நீ அறிவூட்டப்படவும் ஒளியூட்டப்படவும் முடியும், மேலும் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய உண்மையான புரிதலை அடைய முடியும். தியானம் மற்றும் ஐக்கியம் மற்றும் உன் இருதயத்தில் தேவனிடம் நெருங்கி வருதல் போன்ற உன் வழக்கமான செயல்களில், நீ தேவனுடைய சமூகத்தில் சமாதானமாகும்போது, உன்னால் தேவனுடனான உண்மையான நெருக்கத்தை அனுபவிக்கவும், தேவனுடைய அன்பு மற்றும் அவருடைய கிரியை குறித்த உண்மையான புரிதலைக் கொண்டிருக்கவும், தேவனுடைய நோக்கங்களில் உண்மையான சிந்தனையையும் அக்கறையையும் கொண்டிருக்க முடியும். தேவனுக்கு முன்பாக நீ எவ்வளவு அதிகமாகச் சமாதானமாக இருக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக நீ வெளிச்சம் அடைவாய், உன் சொந்தச் சீர்கெட்ட மனநிலையையும், நீ எதில் குறைவுபடுகிறாய், நீ எதில் பிரவேசிக்க வேண்டும், நீ என்ன செயல்பாட்டைச் செய்ய வேண்டும், அதில் உன் குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதன் மூலம் இவை அனைத்தும் அடையப்படுகிறது. தேவனுக்கு முன்பாக உங்கள்சமாதானத்தில் நீங்கள் உண்மையிலேயே ஆழத்தை அடைந்தால், ஆவியின் சில இரகசியங்களை உங்களால் புரிந்துகொள்ள முடியும், தற்போது தேவன் உன்னில் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய ஆழமான புரிதலை கிரகித்துக்கொள்ளவும், தேவனுடைய வார்த்தைகளின் சிறப்பு, தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சம், தேவனுடைய வார்த்தைகளின் இருப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியும், மேலும் நடைமுறையின் பாதையை உன்னால் இன்னும் தெளிவாகவும் துல்லியமாகவும் பார்க்க முடியும். உன் ஆவிக்குள் சமாதானம் அடைவதற்கு போதுமான ஆழத்தை நீ அடையத் தவறினால், நீ பரிசுத்த ஆவியானவரால் சிறிதளவு மட்டுமே ஏவப்படுவாய்; நீ உள்ளே பலப்படுவதை உணருவாய், மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு இன்பத்தையும் சமாதானத்தையும் உணருவாய், ஆனால் ஆழமாக எதையும் நீ புரிந்துகொள்ள மாட்டாய். நான் முன்பு சொல்லியிருக்கிறேன்: ஜனங்கள் தங்கள் பலத்தின் ஒவ்வொரு பகுதியையும் பயன்படுத்தாவிட்டால், அவர்களால் என் சத்தத்தைக் கேட்பதற்கோ அல்லது என் முகத்தைப் பார்ப்பதற்கோ அவர்களுக்குக் கடினமாக இருக்கும். இது தேவனுக்கு முன்பாக ஒருவரின் சமாதானத்தில் ஆழத்தை அடைவதைக் குறிக்கிறது, மேலோட்டமான முயற்சிகளை மேற்கொள்வதை அல்ல. தேவனுடைய சமூகத்தில் உண்மையிலேயே சமாதானமாக இருக்கக்கூடிய ஒரு நபரால் சகல உலக உறவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளவும், தேவனால் ஆட்கொள்ளுதலை அடையவும் முடியும். தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருக்க இயலாத எல்லோரும் நிச்சயமாகவே சீர்கெட்டவர்களாகவும், கட்டுப்பாடற்றவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருக்கக்கூடிய எல்லோருமே தேவனுக்கு முன்பாக பக்தியுள்ளவர்களாகவும், தேவனுக்காக ஏங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பவர்கள் மட்டுமே ஜீவனை மதிக்கின்றனர், ஆவியில் ஐக்கியப்படுவதை மதிக்கின்றனர், தேவனுடைய வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்கின்றனர், மற்றும் சத்தியத்தை நாடுகின்றனர். தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருப்பதை மதிக்காதவர்கள், தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதைப் பயிற்சி செய்யாதவர்கள் வீணர்களாகவும், மேலோட்டமானவர்களாகவும், உலகத்துடன் இணைக்கப்பட்டு, ஜீவன் இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் தேவனை நம்புவதாகச் சொன்னாலும், அவர்கள் உதட்டளவில் மட்டுமே ஆராதனை செய்கின்றனர். தேவன் யாரை இறுதியில் பரிபூரணப்படுத்துகிறாரோ அவர்களே அவருடைய சமூகத்தில் சமாதானமாக இருக்கக்கூடியவர்கள். ஆகவே, தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பவர்கள் பெரிதான ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்படுவார்கள். நாள் முழுவதும் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண அரிதாகவே நேரம் எடுத்துக்கொள்பவர்கள், வெளி விவகாரங்களில் மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்கிற, ஜீவ பிரவேசத்திற்கு சிறிதளவு மதிப்பு கொடுக்கிற எல்லோரும் எதிர்கால வளர்ச்சி குறித்த எதிர்பார்ப்பு இல்லாத மாயக்காரர்கள். தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கக்கூடியவர்களும், தேவனுடன் உண்மையாக ஐக்கியம் கொள்ளுகிறவர்களும் தேவனுடைய ஜனங்களாக இருக்கின்றனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 421

அவருடைய வார்த்தைகளை உன் ஜீவனாக ஏற்றுக்கொள்ள தேவனுக்கு முன்பாக வருவதற்கு, நீ முதலில் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக நீ சமாதானமாக இருக்கும்போதுதான், தேவன் உனக்கு அறிவூட்டுவார், உனக்கு அறிவைக் கொடுப்பார். ஜனங்கள் எவ்வளவு அதிகமாக தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்களால் தேவனுடைய அறிவூட்டுதலையும் வெளிச்சத்தையும் பெற முடிகிறது. இதற்கெல்லாம் ஜனங்கள் பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு மட்டுமே அவர்களால் பரிபூரணமாக்கப்பட முடியும். ஆவிக்குரிய ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கான அடிப்படை பாடம் என்னவென்றால் தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதுதான். தேவனுடைய சமூகத்தில் நீ சமாதானமாக இருந்தால் மட்டுமே, உன் ஆவிக்குரிய பயிற்சி அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும். தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தால் சமாதானமாக இருக்க முடியவில்லை என்றால், உன்னால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற முடியாது. நீ என்ன செய்தாலும், உன் இருதயம் தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருந்தால், அப்போதுதான் நீ தேவனுடைய சமூகத்தில் ஜீவிக்கும் ஒருவனாக இருக்கிறாய். நீ என்ன செய்தாலும், உன் இருதயம் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருந்து தேவனிடத்தில் கிட்டிச் சேர்ந்தால், நீ தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருக்கும் ஒரு நபர் என்பதை இது நிரூபிக்கிறது. நீ மற்றவர்களுடன் பேசும்போது, அல்லது நடக்கும்போது, “என் இருதயம் தேவனிடம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, வெளிப்புற காரியங்களில் கவனம் செலுத்துவதில்லை, என்னால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடிகிறது,” என்று உன்னால் சொல்ல முடிந்தால், நீ தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருக்கக்கூடிய ஒருவன். உன் இருதயத்தை வெளிப்புறக் காரியங்களுக்கு நேராக இழுக்கும் எந்தவொரு காரியத்திலும் அல்லது உன் இருதயத்தைத் தேவனிடமிருந்து பிரிக்கும் நபர்களுடனும் ஈடுபடக் கூடாது. தேவனுடன் நெருக்கமாக இருப்பதிலிருந்து உன் இருதயத்தைத் திசைதிருப்பும் எதையும் ஒதுக்கி வை அல்லது அதிலிருந்து விலகி இரு. இது உன் ஜீவனுக்குப் பெரிதும் நன்மை பயக்கும். பரிசுத்த ஆவியானவரின் மாபெரும் கிரியைக்கான நேரம் துல்லியமாக இப்போது தான் வந்திருக்கிறது, இதுவே தேவன் தனிப்பட்ட முறையில் ஜனங்களை பரிபூரணமாக்கும் நேரமாகும். இந்த நேரத்தில், உன்னால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியவில்லை என்றால், நீ தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக வரக்கூடிய ஒருவன் அல்ல. நீ தேவனைத் தவிர வேறு காரியங்களை நாடினால், நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட வழியே இருக்காது. தேவனிடமிருந்து இத்தகைய பேச்சுகளைக் கேட்டும், இன்று அவருக்கு முன்பாக சமாதானமாக இருக்கத் தவறியவர்கள் சத்தியத்தை நேசிக்காதவர்களாகவும், தேவனை நேசிக்காதவர்களாகவும் இருக்கின்றனர். நீ இந்த நேரத்தில் உன்னைக் கொடுக்கவில்லை என்றால், நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? ஒருவரைக் கொடுப்பது என்றால் தேவனுக்கு முன்பாக ஒருவரின் இருதயத்தை அமைதிப்படுத்துவதாகும். அது ஓர் உண்மையான காணிக்கையாக இருக்கும். இப்பொழுது யாரெல்லாம் உண்மையிலேயே தங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுக்கிறார்களோ அவர்கள் தேவனால் பரிபூரணமாக்கப்படுவது உறுதி. அது எதுவாக இருந்தாலும், எதுவும் உன்னைத் தொந்தரவு செய்ய முடியாது. அது உன்னைக் கிளைநறுக்குவதாக இருக்கட்டும் அல்லது உன்னைக் கையாள்வதாக இருக்கட்டும் அல்லது நீ விரக்தியையோ அல்லது தோல்வியையோ சந்திப்பதாக இருக்கட்டும், உன் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க வேண்டும். ஜனங்கள் உன்னை எப்படி நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல, உன் இருதயம் தேவனுக்கு முன் சமாதானமாக இருக்க வேண்டும். நீ எந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டாலும், நீ இன்னல், துன்பம், துன்புறுத்தல் அல்லது பல்வேறு உபத்திரவங்களால் சூழப்பட்டிருந்தாலும், உன் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன் சமாதானமாக இருக்க வேண்டும். பரிபூரணமாக்கப்படுவதற்கான பாதைகள் இவையே. தேவனுக்கு முன்பாக நீ உண்மையிலேயே சமாதானமாக இருக்கும்போதுதான், தேவனுடைய தற்போதைய வார்த்தைகள் உனக்குத் தெளிவாகத் தெரியும். பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்திற்கும் அறிவூட்டுதலுக்கும் வேறுபாடு இல்லாமல் உன்னால் இன்னும் சரியாகப் பயிற்சி செய்ய முடியும், உன் ஊழியத்திற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலைக் கொடுக்கும் தேவனுடைய நோக்கங்களை மிகவும் தெளிவுடன் புரிந்துகொள்ள முடியும், பரிசுத்த ஆவியானவரின் ஏவப்படுதலையும் வழிகாட்டுதலையும் இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும், மேலும் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் ஜீவிப்பது குறித்து உறுதியாக இருக்க முடியும். உண்மையிலேயே தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதன் மூலம் அடையக்கூடிய பலன்கள் இவைகளே. ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பற்றித் தெளிவில்லாதிருத்தல், பயிற்சி செய்ய பாதை இல்லாதது, தேவனுடைய நோக்கங்களை புரிந்துகொள்ளத் தவறுவது அல்லது நடைமுறைக் கொள்கைகள் இல்லாதது, இவைகளே தங்கள் இருதயங்கள் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இல்லாததற்குக் காரணமாகும். வாஞ்சையோடும் நடைமுறையாகவும் இருப்பதும், தேவனுடைய வார்த்தைகளில் சரிபடுத்தும் தன்மையையும் வெளிப்படைத் தன்மையையும் தேடுவதும், இறுதியாகச் சத்தியத்தைப் புரிந்துகொள்வதும் தேவனை அறிந்துகொள்வதும் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பதன் நோக்கமாகும்.

உன் இருதயம் பெரும்பாலும் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இல்லையென்றால், தேவன் உன்னைப் பரிபூரணமாக்குவதற்கு வழியே இல்லை. மனவுறுதியில்லாமல் இருப்பது இருதயம் இல்லாததற்குச் சமமாகும், இருதயம் இல்லாத ஒருவரால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாது. இத்தகைய நபருக்கு தேவன் எந்த அளவிற்குக் கிரியைச் செய்கிறார், அல்லது அவர் எவ்வளவு பேசுகிறார் என்பதோ அல்லது எவ்வாறு பயிற்சி செய்வது என்பதோ தெரியாது. இவர் இருதயம் இல்லாத ஒரு நபரல்லவா? இருதயம் இல்லாத ஒருவரால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியுமா? இருதயம் இல்லாமல் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவனுக்கு வழியே இல்லை, அவர்கள் பாரம் சுமக்கும் மிருகங்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்லர். தேவன் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசியிருக்கிறார், ஆனாலும் உன் இருதயம் அசையாமல் இருக்கிறது, மேலும் நீ தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியாமல் இருக்கிறாய். நீ ஓர் ஊமையான மிருகம் அல்லவா? தேவனுடைய சமூகத்தில் சமாதானமாக இருப்பதைப் பயிற்சி செய்வதில் சிலர் வழிதவறுகின்றனர். சமைக்கும் நேரம் வரும்போது, அவர்கள் சமைப்பதில்லை, வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, அவர்கள் அவற்றைச் செய்வதில்லை, ஆனால் தொடர்ந்து ஜெபமும் தியானமும் செய்கின்றனர். தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பது என்றால் சமைக்காமல் அல்லது வீட்டு வேலைகளைச் செய்யாமல், அல்லது ஒருவருடைய ஜீவியத்தை ஜீவிக்காமல் இருப்பது என்று அர்த்தமல்ல; மாறாக, எல்லா சாதாரண நிலைகளிலும் தேவனுக்கு முன்பாக ஒருவருடைய இருதயத்தை அமைதிப்படுத்தவும், ஒருவருடைய இருதயத்தில் தேவனுக்கு ஓர் இடத்தைக் கொண்டிருக்கவும் முடிவதாகும். நீங்கள் ஜெபம் செய்யும்போது, ஜெபிக்கும்படி தேவனுக்கு முன்பாக ஒழுங்காக முழங்காற்படியிட வேண்டும். நீங்கள் வீட்டு வேலைகளைச் செய்யும்போது அல்லது உணவைத் தயார் செய்யும்போது, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்தி, தேவனுடைய வார்த்தைகளைச் சிந்தியுங்கள் அல்லது கீர்த்தனைகளைப் பாடுங்கள். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நீங்கள் பயிற்சி செய்வதற்கு உங்களிடம் உங்கள் சொந்த வழி இருக்க வேண்டும், தேவனிடம் நெருங்கி வர உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், மேலும் தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்த உங்கள் முழு பலத்தோடு முயற்சி செய்ய வேண்டும். சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது, ஒருமனதோடு ஜெபம் செய்யுங்கள். சூழ்நிலைகள் அனுமதிக்காதபோது, கையிலுள்ள பணியைச் செய்யும்போது உங்கள் இருதயத்தில் தேவனிடம் நெருங்கி வாருங்கள். உங்களால் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண முடியும்போது, அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுங்கள்; உங்களால் ஜெபம் பண்ண முடியும்போது, ஜெபம் பண்ணுங்கள். உங்களால் தேவனைப் பற்றிச் சிந்திக்க முடியும்போது, அவரைப் பற்றிச் சிந்தியுங்கள். வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், உங்கள் சூழலுக்கு ஏற்ப பிரவேசிப்பதற்கு உங்களைப் பயிற்றுவிக்க உங்களால் முடிந்தவற்றையெல்லாம் செய்யுங்கள். எந்தக் காரியமும் இல்லாதபோது சிலரால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியும், ஆனால் ஏதாவது நடந்தவுடன், அவர்களுடைய மனம் அலைந்து திரிகிறது. அது தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பது அல்ல. அனுபவத்திற்கான சரியான வழி என்னவென்றால்: எந்தச் சூழ்நிலையிலும் ஒருவருடைய இருதயம் தேவனிடமிருந்து விலகாமல் அல்லது வெளி நபர்கள், நிகழ்வுகள் அல்லது காரியங்களால் தொந்தரவடையாமல் இருக்க முடியுமானால், அப்போதுதான் ஒருவர் தேவனுக்கு முன்பாக உண்மையிலேயே சமாதானமாக இருக்கிறார். சபைக் கூட்டங்களில் ஜெபம் செய்யும்போது, தங்கள் இருதயங்களால் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடியும், ஆனால் மற்றவர்களுடனான ஐக்கியத்தில் அவர்கள் தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருக்க முடிவதில்லை, அவர்களுடைய எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகின்றன. இது தேவனுக்கு முன்பாகச் சமாதானமாக இருப்பது அல்ல. இன்று, பெரும்பாலான ஜனங்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றனர், அவர்களுடைய இருதயங்களால் தேவனுக்கு முன்பாக எப்போதும் சமாதானமாக இருக்க முடிவதில்லை. ஆகவே, இந்தப் பகுதியில் உங்களைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும், படிப்படியாக, ஜீவ அனுபவத்தின் சரியான பாதையில் பிரவேசித்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவதற்கான பாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை அமைதிப்படுத்துதல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 422

தேவனுடைய கிரியையும் வார்த்தையும் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கென்றே உள்ளன. அவருடைய குறிக்கோள் வெறுமனே அவருடைய கிரியை மற்றும் வார்த்தையினை நீங்கள் புரிந்து கொள்ள அல்லது தெரிந்து கொள்ள வைப்பது மட்டும் அல்ல. அது போதுமானது அல்ல. நீங்கள் புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கும் ஒரு நபர், எனவே தேவனின் வார்த்தையைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது. ஏனென்றால், தேவனுடைய வார்த்தையின் பெரும்பகுதி மனிதர்களுடைய மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவர் மிகவும் தெளிவாகப் பேசுகின்றார். உதாரணமாக, நீங்கள் எதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதனைக் கற்றுக் கொள்ளும் திறனைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கிறீர்கள்; இது புரிந்துகொள்ளும் மனத்திறன் பெற்றிருக்ககூடிய ஒரு சாதாரண மனிதனால் செய்யக்கூடிய ஒன்றாகும். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கின்றன. மேலும் மக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளாத பல விஷயங்களையும், எல்லா விதமான மனித நிலைகளையும் தேவன் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளன, மேலும் ஒரு முழு நிலவில் இருந்து வரும் வெளிச்சத்தைப் போல தெளிவாக இருக்கின்றன. எனவே இப்போது, மக்கள் பல பிரச்சினைகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் இன்னும் ஏதோ ஒன்று தவறிப் போனதாகத் தெரிகிறது—அது மக்கள் அவருடைய வார்த்தையைக் கடைபிடிப்பதாகும். மக்கள் சத்தியத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக அனுபவிக்க வேண்டும் மற்றும் எது கிடைத்ததோ அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ள காத்திருப்பதற்கும் மேலாக, அதனை மிகவும் விவரமாக தேடி ஆராய வேண்டும்; இல்லாவிட்டால், அவர்கள் ஒட்டுண்ணிகளைக் காட்டிலும் சிறிது மேலானவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்து இருப்பார்கள், ஆனாலும் அதைக் கடைபிடிக்காதவர்களாக இருப்பார்கள். இந்த விதமான நபர் சத்தியத்தை நேசிப்பதில்லை, இறுதியில் முழுமையாக புறம்பாக்கப்படுவர். 1990களின் பேதுருவைப் போல இருக்க, நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க வேண்டும், அது உங்களுடைய அனுபவங்களில் மெய்யாக நுழைந்திருக்க வேண்டும், தேவனோடு கொண்டுள்ள உங்கள் ஒத்துழைப்பில் இன்னும் அதிகமாக மேலும் மேலும் பெரிய அளவில் பிரகாசம் அடைய வேண்டும், இது உங்கள் சொந்த வாழ்க்கையில் எப்பொழுதும் பெரிதும் உதவியாக இருக்கும். நீங்கள் தேவனின் வார்த்தையை அதிகமாக படித்திருக்கிறீர்கள், ஆனால் உரையின் பொருளை மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறீர்கள், உன் நடைமுறை அனுபவங்களின் மூலம் தேவனுடைய வார்த்தையை நேரடியாக அறிந்திருக்கவில்லை என்றால், நீ தேவனின் வார்த்தையை அறிந்துகொள்ள மாட்டாய். உன்னைப் பொறுத்த மட்டிலும், தேவனுடைய வார்த்தை அது வாழ்க்கை அல்ல அது வெறும் உயிரற்ற எழுத்துக்கள். இந்த உயிரற்ற எழுத்துக்களின் சாராம்சத்தைக் கடைபிடித்து மட்டுமே நீ வாழ்ந்தால், உன்னால் தேவனுடைய வார்த்தையின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள முடியாது அல்லது அவருடைய சித்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியாது. நீ அவருடைய வார்த்தையை உன்னுடைய நடைமுறை அனுபவமாக்கிக் கொள்ளும் போது மாத்திரமே, தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய அர்த்தம் அதுவாகவே உனக்கு வெளிப்படுத்தப்படும், மேலும் அனுபவத்தின் மூலம்தான் பல சத்தியங்களின் ஆவிக்குரிய அர்த்தத்தை உன்னால் புரிந்துகொண்டு தேவனுடைய வார்த்தையின் இரகசியங்களை வெளிப்படுத்த முடியும். நீ இதனைக் கடைபிடிக்கவில்லை என்றால், அவருடைய வார்த்தை எவ்வளவு தெளிவாக இருந்தாலும், நீ புரிந்து கொண்டது எல்லாம் வெறும் எழுத்துக்களும் கோட்பாடுகளுமாகவே இருக்கும், இவை உனக்கு ஒரு மத ரீதியான விதிமுறைகளாகியிருக்கின்றன. இதைத்தான் பரிசேயர்களும் செய்தார்கள் அல்லவா? நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடித்து அதை அனுபவிக்கும்போது அது உங்களுக்கு நடைமுறையாகி விடுகிறது; நீங்கள் அதைக் கடைபிடிக்க முயற்சிக்காத போது, தேவனுடைய வார்த்தை உனக்கு மூன்றாம் வானம் என்னும் புராண கட்டுக்கதைக்கு சற்று மேலானதாகவே இருக்கும். உண்மையில், தேவனை விசுவாசிப்பதற்கான செயல்முறையானது, நீங்கள் அவருடைய வார்த்தையை அனுபவிக்கும், அவரால் ஆதாயப்படுத்தப்படும் செயல்முறையாகும், அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால், தேவனை விசுவாசிப்பது என்பது அவருடைய வார்த்தையைப் பற்றிய அறிவையும் புரிதலையும் கொண்டிருப்பதாகும்; அவருடைய வார்த்தையை அனுபவித்து வாழ்வதாகும்; இதுதான் நீங்கள் தேவனிடத்தில் கொண்டுள்ள உங்கள் விசுவாசத்தின் பின்னால் உள்ள யதார்த்தமாகும். நீங்கள் தேவனை விசுவாசித்து, தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க முயற்சிக்காமல் நித்திய ஜீவனை எதிர்பார்த்து, சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசித்தீர்கள் என்றால், நீங்கள் முட்டாள்தனமாகக் காணப்படுவீர்கள். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு விருந்துக்குப் போய் அங்கே இருக்கக்கூடிய ருசியான பதார்த்தங்களைப் பார்த்து அதை மனப்பாடம் செய்துகொண்டேன், ஆனால் அதை நான் ருசி பார்க்கவில்லை என்பது போல் இருக்கிறது, அங்கே எதையும் புசித்துப் பானம்பண்ணாதது போல இருக்கும். அப்படிப்பட்ட நபர் ஒரு முட்டாள் அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 423

மனிதன் வைத்திருக்க வேண்டிய சத்தியம் தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிறது, அதுவே மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாகவும் உதவிகரமானதாகவும் இருக்கும் சத்தியம். இது உங்கள் உடலுக்குத் தேவைப்படும் சத்து மருந்தாகவும் ஆகாரமாகவும் இருக்கிறது, மனிதன் அவனது இயல்பான மனிதத்தன்மைக்குத் திரும்ப வருவதற்கு உதவும் ஒன்றாகவும் இருக்கிறது. இது மனிதன் கொண்டிருக்க வேண்டிய ஒரு சத்தியமாகும். நீங்கள் எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறீர்களோ, உங்களுடைய வாழ்க்கை அவ்வளவு சீக்கிரமாக மலரும், சத்தியமும் அவ்வளவு அதிகமாகத் தெளிவாகும். நீங்கள் வளர்ச்சியடையும்போது ஆவிக்குரிய உலகத்தின் காரியங்களை மிகத் தெளிவாகக் காண்பீர்கள், சாத்தான் மீது நீங்கள் ஜெயங்கொள்ள அதிகமான பெலனையும் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்கும் போது, புரியாதிருந்த அநேக சத்தியங்கள் உங்களுக்குப் புரிய வரும். நடைமுறையில் தங்கள் அனுபவத்தை ஆழமாக்குவதை விட, தேவனுடைய வார்த்தையின் உரையை வெறுமனே புரிந்துகொள்வதிலும், கோட்பாடுகளைக் கொண்டு தங்களைத் தாங்களே ஆயத்தப்படுத்திக் கொள்வதில் தங்கள் கவனத்தைச் செலுத்துவதிலும் பெரும்பாலான மக்கள் திருப்தி அடைகிறார்கள், ஆனால் அது பரிசேயர்களின் வழி அல்லவா? ஆகையால் “தேவனின் வார்த்தை ஜீவனாய் இருக்கிறது” என்ற சொற்றொடர் இவர்களுக்கு எப்படி மெய்யானதாக இருக்க முடியும்? ஒரு மனிதனுடைய வாழ்வு வெறுமனே தேவனுடைய வார்த்தையை வாசிப்பதனால் வளர முடியாது, தேவனுடைய வார்த்தையை அவன் கடைபிடிக்கும் போதுதான் வளர்கிறான். தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வது என்பது வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பெறுவதற்குத் தேவையானது என்பது உனது நம்பிக்கையாக இருந்தால், உனது புரிதல் தவறானதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையை உண்மையாக புரிந்து கொள்வது என்பது நீ சத்தியத்தைக் கடைப்பிடிக்கும்போது நிகழ்கிறது, “சத்தியத்தைக் கடைபிடிப்பதன் மூலமாக மாத்திரமே உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடியும்” என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இன்று, தேவனுடைய வார்த்தையை வாசித்த பிறகு உனக்குத் தேவனுடைய வார்த்தையைத் தெரியும் என்று நீ வெறுமென சொல்லலாம் ஆனால் நீ அதைப் புரிந்துகொண்டதாகச் சொல்ல முடியாது. சிலர் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஒரே வழி முதலில் அதைப் புரிந்துகொள்வதுதான் என்று கூறுகிறார்கள், ஆனால், இது ஓரளவு மட்டுமே சரியானது, நிச்சயமாக அது முற்றிலும் துல்லியமானது அல்ல. நீ சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு முன்பு, நீ அந்தச் சத்தியத்தை அனுபவத்திருக்கவில்லை. நீங்கள் ஒரு பிரசங்கத்தில் இருந்து ஒன்றைக் காதில் கேட்பது மட்டும் மெய்யான புரிந்துகொள்ளுதல் ஆகாது—இது சத்தியம் குறித்த வார்த்தைகளின் வெளிப்படையான அர்த்தத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்வதுதான், ஆனால், அதன் மெய்யான அர்த்தத்தைப் புரிந்து கொண்டதற்கு அது சமம் அல்ல. சத்தியத்தைப் பற்றி ஏதோ மேலோட்டமான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்வீர்களானால் அது நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொண்டீர்கள் அல்லது அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; சத்தியத்தைக் குறித்ததான மெய்யான அர்த்தம் என்பது அதை அனுபவிப்பதிலிருந்தே கிடைக்கிறது. ஆகையால், நீங்கள் சத்தியத்தை அனுபவிக்கும் போது மாத்திரமே உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும் அப்போதுதான் உங்களால் அதன் மறைவான பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அனுபவத்தை ஆழமாக்குவது என்பது அர்த்தங்களைப் புரிந்துகொள்வதற்கும், சத்தியத்தின் சாராம்சத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரே வழியாகும். ஆகையால், உன்னால் சத்தியத்தோடு எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும், ஆனால் உனக்குள் சத்தியம் இல்லாது இருக்குமானால், உன் குடும்பத்தாரையோ, மதம் சார்ந்த மக்களையோ நம்ப வைக்க முயற்சிப்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டாம். உன்னிடம் சத்தியம் இல்லாமல் நீ பனித்துளிகள் பறப்பது போன்று இருக்கிறாய், ஆனால் சத்தியத்தோடு இருந்தால் உன்னால் மகிழ்ச்சியாகவும் விடுதலையோடும் இருக்க முடியும், உன்னை யாரும் தாக்க முடியாது. ஒரு கோட்பாடு எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், அது சத்தியத்தை வெல்ல முடியாது. சத்தியத்தைக் கொண்டு, உலகத்தையே அசைக்கலாம் மற்றும் மலைகளையும் கடல்களையும் நகர்த்தலாம், அதேசமயம் சத்தியம் இல்லாவிட்டால் வலுவான நகரச் சுவர்களும் புழுக்களால் தகர்க்கப்படும். இது ஒரு வெளிப்படையான உண்மை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 424

தற்போதைய நிலையில் சத்தியத்தை முதலில் தெரிந்திருக்க வேண்டியதும், அதன் பிறகு அதைக் கடைபிடித்து, சத்தியத்தின் மெய்யான அர்த்தத்தைக் கொண்டு உங்களை நீங்களே மேலும் ஆயத்தப்படுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் இதை அடைய முயற்சிக்க வேண்டும். உனது சொற்களை மற்றவர்கள் பின்பற்றும்படி செய்வதை விட, உனது நடத்தை அவர்கள் பின்பற்றுவதற்குக் காரணமாக அமைய வேண்டும். இந்த வழியில் மட்டுமே நீங்கள் அர்த்தமுள்ள ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும். உனக்கு எது நேர்ந்தாலும் நீ எப்படிப்பட்டவரைச் சந்திக்க நேர்ந்தாலும் நீ சத்தியத்தைப் பெற்றவனாக எவ்வளவு காலம் இருக்கிறாயோ அவ்வளவு காலம் உன்னால் உறுதியாக நிற்க முடியும். தேவனுடைய வார்த்தை மனிதனுக்கு ஜீவனைக் கொண்டுவருகிறது, மரணத்தை அல்ல. நீ தேவனுடைய வார்த்தையை வாசித்திருந்தும், நீ ஜீவனுள்ளவனாகவில்லை என்றால், இன்னும் நீ மரித்தவனாகவே இருப்பாய். உன்னிடம் ஏதோ தவறு இருக்கிறது. சிறிது காலம் கழித்து நீ தேவனுடைய வார்த்தையின் பெரும்பகுதியைப் படித்த பிறகும், பல நடைமுறைப் பிரசங்கங்களைக் கேட்ட பிறகும், நீ இன்னும் மரித்த நிலையிலேயே இருந்தால், நீ சத்தியத்தை மதிக்காத ஒருவனாக மட்டுமல்லாமல், சத்தியத்தைப் பின்தொடராத ஒருவனாகவும் இருக்கிறாய் என்பதற்கு இது சான்றாகும். நீங்கள் மெய்யாகவே தேவனை அடைய வேண்டும் எனத் தேடுவீர்களேயானால், உங்களைக் கோட்டுபாடுகளால் நிறைத்துக் கொள்வதிலும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்க அந்த உயரிய கோட்டுபாடுகளைப் பயன்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்த மாட்டீர்கள், அதற்கு மாறாக நீங்கள் தேவனுடைய வார்த்தையை அனுபவிப்பதிலும் சத்தியத்தைக் கடைபிடிப்பதிலும் கவனம் செலுத்துவீர்கள். இதுவே நீங்கள் இப்பொழுது பிரவேசிப்பதற்குத் தேடுவதாக இருக்க வேண்டும் அல்லவா?

தேவன் தமது கிரியையை மனிதரிடத்தில் செய்ய குறுகிய காலம்தான் உள்ளது, எனவே நீ அவருடன் ஒத்துழைக்காவிட்டால் என்ன விளைவு நேரும்? நீங்கள் புரிந்து கொண்டவுடன் அவருடைய வார்த்தையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவன் எப்பொழுதும் விரும்புவது ஏன்? அது ஏனென்றால், தேவன் தம்முடைய வார்த்தைகளை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் மேலும் உங்களுடைய அடுத்த படி, நீங்கள் அவற்றைக் கடைபிடிப்பதாகும். நீங்கள் இந்த வார்த்தைகளைக் கடைபிடித்தால், தேவன் பிரகாசிப்பித்தல் மற்றும் வழிநடத்துதல் கிரியையைச் செய்வார். இது இப்படியாகவே செய்யப்பட வேண்டும். தேவனுடைய வார்த்தை, மனிதனை வாழ்க்கையில் மலர அனுமதிக்கிறது, மனிதன் வழி விலகிப் போக அல்லது செயலற்றுப் போகக் காரணமான எந்தக் காரியங்களையும் கொண்டிருக்காது. நீ தேவனுடைய வார்த்தையை வாசித்து அதைக் கடைபிடித்திருக்கிறேன் என்று சொல்கிறாய், ஆனால் நீ இன்னும் பரிசுத்த ஆவியானவரின் எந்த ஒரு கிரியையும் பெற்றுக் கொள்ளவில்லை. உன்னுடைய வார்த்தைகள் ஒரு சிறு குழந்தையை ஏமாற்றி விட முடியும். உன் நோக்கங்கள் சரியானவையா என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்குத் தெரியாது என்று நீ நினைக்கிறாயா? மற்றவர்கள் தேவனுடைய வார்த்தையை எப்படிக் கடைபிடித்துப் பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள், ஆனாலும் நீ அவருடைய வார்த்தையைப் பின்பற்றியும், பரிசுத்த ஆவியானவரின் பிரகாசத்தைப் பெறவில்லையா? தேவனுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றனவா? உனது நோக்கங்கள் உண்மையிலேயே சரியானவையாக இருந்து, நீ ஒத்துழைப்பு தருபவனாக இருந்தால், அப்பொழுது தேவனுடைய ஆவியானவர் உன்னுடன் இருப்பார். சிலர் எப்போதுமே தங்கள் சொந்தக் கொடியை நாட்ட விரும்புகிறார்கள், ஆனால் தேவன் ஏன் அவர்கள் எழுந்து திருச்சபையை வழிநடத்த அனுமதிக்கவில்லை? சிலர் தங்களுடைய சொந்தச் செயல்பாடுகளை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், அவர்களுடைய சொந்தக் கடமைகளை மட்டுமே நிறைவேற்றுகிறார்கள், இதை அவர்கள் அறிந்து கொள்வதற்கு முன்பதாக தேவனுடைய ஒப்புதலை அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்? தேவன் மனிதனின் உள்ளார்ந்த இருதயத்தை ஆராய்கிறார், சத்தியத்தைப் பின்தொடர்பவர்கள் அவ்வாறு பின்தொடர்வதைச் சரியான நோக்கங்களுடன் செய்ய வேண்டும். சரியான நோக்கங்கள் இல்லாதவர்களால் உறுதியாக நிற்க முடியாது. அடிப்படையில் பார்க்கும்போது, உங்கள் குறிக்கோள் தேவனுடைய வார்த்தையை உங்களுக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடித்து அதைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் புரிந்து கொள்ளும் திறன் மோசமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் தேவனின் வார்த்தையைக் கடைபிடிக்கும் போது, இந்தக் குறைபாட்டினை அவரால் சரிசெய்ய முடியும். எனவே நீங்கள் பல சத்தியங்களை அறிந்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றை நீங்கள் கடைப்பிடிக்கவும் வேண்டும். இது புறக்கணிக்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டியதாகும். இயேசு தமது முப்பத்து மூன்றரை வருட காலத்தில் பல அவமானங்களையும், மிகுந்த பாடுகளையும் அனுபவித்தார். மிகுந்த பாடுகளை அனுபவித்ததற்கு அவர் சத்தியத்தைக் கடைப்பிடித்ததும், எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தைச் செய்ததும், தேவனுடைய சித்தத்தில் மட்டும் கவனம் செலுத்தியதுமே காரணமாகும். அவர் சத்தியத்தை அறிந்து அதைக் கடைப்பிடிக்காமல் இருந்திருப்பார் எனில் இப்படிப்பட்டப் பாடுகளை அனுபவித்திருக்க மாட்டார். இயேசு யூதர்களின் போதனைகளையும், பரிசேயர்களையும் பின்பற்றியிருந்தால், அவர் பாடுகளை அனுபவித்திருக்க மாட்டார். தேவனுடைய கிரியை மிகவும் பயனுள்ளதாக எப்பொழுது மனிதனிடம் செயல்படுகின்றது என்றால், அது மனிதனுடைய ஒத்துழைப்பைப் பொறுத்தது என்பதை நீங்கள் இயேசுவின் செயல்களில் இருந்து கற்றுக்கொள்ள முடியும், இது நீங்கள் அங்கீகரிக்க வேண்டிய ஒன்றாகும். இயேசு சத்தியத்தைக் கடைப்பிடிக்காதிருந்தால், அவர் சிலுவையில் பாடுகளை அனுபவித்திருப்பாரா? தேவனுடைய சித்தத்தின்படி அவர் செயல்படாதவராக இருந்திருந்தால் அவ்வளவு வேதனையுள்ள ஜெபத்தை அவர் செய்திருக்க முடியுமா? ஆகையால், நீங்களும் சத்தியத்தைக் கடைபிடிப்பதற்காகத் துன்பப்பட வேண்டும், ஒருவர் அனுபவிக்க வேண்டிய துன்பம் இதுவே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டவுடன், அதன்படி நடக்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 425

நடைமுறையில், கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் சத்தியத்தின்படி செய்தலோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது ஒருவர் சத்தியத்தின்படி செய்ய வேண்டும். சத்தியத்தின்படி செய்யும்போது ஒருவர் கற்பனைகளின் கொள்கைகளை மீறக் கூடாது அல்லது கற்பனைகளுக்கு எதிராகப் போகக் கூடாது; உன்னிடம் தேவன் எதிர்பார்க்கிற எதுவாயினும் அதையே நீ செய்ய வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளுவதும் சத்தியத்திபடி செய்வதுவும் ஒன்றுக்கொன்று இணைந்தவை, அவை முரண்பட்டவை அல்ல. அதிக அதிகமாக நீ சத்தியத்தின்படி செய்யும்போது, கற்பனைகளின் சாரத்தை அதிக அதிகமாய்க் கைக்கொள்ளும் திறன் பெற்றவனாய் நீ மாறுவாய். நீ அதிக அதிகமாய்ச் சத்தியத்தின்படி செய்யும்போது, கட்டளைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தைகளை அதிக அதிகமாய்ப் புரிந்துகொள்வாய். சத்தியத்தின்படி செய்தலும் கட்டளைகளைக் கைக்கொள்ளுவதும் முரண்பட்ட செயல்கள் அல்ல—அவை ஒன்றுக்கொன்று இணைந்துள்ளன. ஆரம்பத்தில், மனுஷன் கட்டளைகளைக் கைக்கொண்ட பிறகே அவனால் சத்தியத்தின்படி செய்து பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து பிரகாசிப்பித்தலை அடைய முடிந்தது, ஆனால் இது தேவனின் உண்மையான எண்ணம் அல்ல. நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுவதை மட்டும் அல்ல, அவரை ஆராதிக்க உன் இருதயத்தை ஊற்றவேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார். இருப்பினும், நீ கட்டளைகளைக் குறைந்தபட்சம் மேலோட்டமாகவாவது கைக்கொள்ள வேண்டும். படிப்படியாக, அனுபவத்தின் மூலம், தேவனைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை அடைந்த பின்னர், ஜனங்கள் அவருக்கு எதிராகக் கலகம் செய்வதையும் எதிர்ப்பதையும் நிறுத்துவார்கள், மேலும் அதன் பிறகு அவரது கிரியையைப் பற்றி அவர்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இருக்காது. கற்பனைகளின் சாரத்த்திற்கு ஜனங்கள் கட்டுப்பட இதுதான் ஒரே வழி. ஆகையால், சத்தியத்தின்படி செய்யாமல் வெறுமனே கற்பனைகளைக் கைக்கொள்ளுதல் என்பது பலனற்றது, மேலும் அது தேவனை உண்மையாகத் தொழுகொள்ளுவதை உள்ளடக்காது, ஏனெனில் நீ உண்மையான வளர்ச்சியை அடையவில்லை. சத்தியம் இல்லாமல் கற்பனைகளைக் கைக்கொள்ளுவது என்பது விதிகளை விறைப்பாகக் கடைப்பிடிப்பது போன்றதாகும். இப்படிச் செய்யும் போது, கற்பனைகள் உன்னுடைய நியாயப்பிரமாணம் ஆகும், அது நீ ஜீவிதத்தில் வளர உதவாது. மாறாக, அவை உனது பாரமாக மாறும், மேலும் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களைப் போலவே உன்னை இறுக்கமாகக் கட்டும், அதன் விளைவாக நீ பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை இழந்துபோவாய். ஆகவே, சத்தியத்தின்படி செய்தால் மட்டுமே உன்னால் சிறந்த முறையில் கற்பனைகளைக் கைக்கொள்ள முடியும், மேலும் நீ சத்தியத்தின்படி செய்வதற்காகக் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறாய். கற்பனைகளைக் கைக்கொள்ளும் செயல்முறையில், நீ இன்னும் அதிகமாக சத்தியத்தின்படி செய்வாய், மேலும் சத்தியத்தின் படி செய்யும்போது, கற்பனைகளின் உண்மை அர்த்தம் என்னவென்பது பற்றி நீ இன்னும் அதிகமான புரிதலை அடைவாய். மனுஷன் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று தேவன் வற்புறுத்துவதன் பின்னணியில் இருக்கும் நோக்கமும் அர்த்தமும் என்னவென்றால், அவன் கற்பனை செய்வது போல் அவனை விதிகளைப் பின்பற்ற வைப்பதற்காகவல்ல; மாறாக அது அவன் ஜீவனுக்குள் பிரவேசிப்பதோடு சம்பந்தப்பட்டதாகும். ஜீவிதத்தில் உன் வளர்ச்சியின் அளவானது எவ்வளவு தூரத்துக்கு நீ கற்பனைகளைக் கைக்கொள்ள முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. கற்பனைகள் மனுஷனால் கைக்கொள்ளப்பட வேண்டியது என்றாலும், மனுஷனின் ஜீவித அனுபவத்தின் வழியாகவே கற்பனைகளின் சாரம் வெளிப்படையாகத் தெரிகிறது. கற்பனைகளைச் சரியாகக் கைக்கொண்டால் அவர்கள் “முற்றிலுமாக தயாராக இருக்கிறார்கள் என்றும் செய்யப்பட வேண்டியதெல்லாம் எடுத்துக்கொள்ளப்படுதல்தான் என்றும்” பெரும்பாலான ஜனங்கள் கருதுகின்றனர். இது நம்பத்தகாத வகையைச் சார்ந்த கருத்து, மேலும் இது தேவனின் சித்தப்படியானதல்ல. இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறுபவர்கள் முன்னேறுவதற்கு விரும்பவில்லை, மற்றும் அவர்கள் மாம்சத்தை இச்சிக்கிறார்கள். இது முட்டாள்தனமானது! இது எதார்த்தத்தின்படியானது அல்ல! உண்மையாகவே கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் சத்தியத்தின் படி செய்தல் மட்டுமே தேவனின் சித்தமல்ல. இதைச் செய்பவர்கள் முடமானவர்கள்; அவர்கள் ஒரு கால் இல்லாதவர்களைப் போன்றவர்கள். விதிகளைக் கடைப்பிடிப்பதுபோல் வெறுமனே கட்டளைகளைக் கைக்கொள்ளுவது, இருப்பினும் சத்தியம் இல்லாமல் இருப்பது—இதனாலும் தேவ சித்தத்தைத் திருப்திப்படுத்த முடியாது; ஒரு கண் இல்லாதவர்களைப் போல, இப்படிச் செய்யும் ஜனங்களும், ஒரு வகை ஊனம் கொண்டவர்களே. நீ கற்பனைகளைச் சரியாகக் கைக்கொண்டு, நடைமுறை தேவனைப் பற்றிய தெளிவான புரிதலை அடைந்தால், நீ சத்தியத்தைக் கொண்டிருப்பாய் என்று சொல்லலாம்; ஒப்பீட்டளவில் பேசினால், நீ உண்மையான வளர்ச்சியை அடைந்திருப்பாய். நீ செய்யவேண்டிய சத்தியத்தைச் செய்தால், நீ கற்பனையையும் கைக்கொள்வாய், மேலும் இந்த இரு விஷயங்களும் ஒன்றுகொன்று முரண்படுவதில்லை. சத்தியத்தின்படி செய்தலும் கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் இரு அமைப்புகள், ஒருவனின் ஜீவித அனுபவத்தில் இரண்டும் முழுமைபெறத் தேவையான பகுதிகள் ஆகும். ஒருவனது அனுபவமானது கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைச் செய்தலும் ஆகியவற்றுக்கு இடையில் ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்க வேண்டுமே தவிரப் பிரிவினையை அல்ல. இருப்பினும், இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையில் வித்தியாசங்களும் இணைப்புகளுமாகிய இரண்டும் இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 426

இந்த நீரோட்டத்தில் இருக்கும் அனைத்து ஜனங்களும், இன்று தேவனுடைய குரலைக் கேட்கும் அனைவரும், ஒரு புதிய காலத்துக்குள் பிரவேசித்துவிட்டனர் என்ற உண்மைக்குப் புதிய காலத்தில் கற்பனைகளின் பிரகடனப்படுத்துதல் ஒரு சாட்சி ஆகும். இது தேவனின் கிரியையில் ஒரு புதிய ஆரம்பம் ஆகும், தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கடைசிப் பாகத்தின் தொடக்கமும் ஆகும். ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும் கொண்ட ராஜ்யத்துக்குள் தேவனும் மனிதனும் பிரவேசித்ததைப் புதிய காலத்தின் கற்பனைகள் குறிக்கின்றன, மேலும், யேகோவா இஸ்ரவேலர்கள் மத்தியில் கிரியை செய்தது போலவும், இயேசு யூதர்களின் மத்தியில் கிரியை செய்தது போலவும், தேவன் அதிகமான நடைமுறைக் கிரியைகளைச் செய்வார், மேலும் பூமியில் இன்னும் அதிகமான மற்றும் இன்னும் பெரிய கிரியையைச் செய்வார் என்பதையும் குறிக்கின்றன. ஜனங்களின் இந்தக் குழுவினர் தேவனிடம் இருந்து அதிகமான பெரிய கட்டளைகளைப் பெறுவார்கள், மற்றும் தேவைகளைப் பெறுவார்கள், போஷிக்கப்படுவார்கள், ஆதரிக்கப்படுவார்கள், பராமரிக்கப்படுவார்கள், மற்றும் ஒரு நடைமுறைக்கு உகந்த வகையில் அவரால் பாதுகாக்கப்படுவார்கள், அவரால் இன்னும் அதிகமான நடைமுறைப் பயிற்சியைப் பெறுவார்கள் மற்றும் கையாளப்படுவார்கள், உடைக்கப்படுவார்கள் மற்றும் தேவனுடைய வார்த்தையால் புடமிடப்படுவார்கள் என்பதையும் அவை குறிக்கிகின்றன. புதிய காலத்தின் கற்பனைகளின் முக்கியத்துவம் மிகவும் ஆழமானது. தேவன் உண்மையிலேயே பூமியில் தோன்றுவார் என்றும், அங்கிருந்து அவர் முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொண்டு, மாம்சத்தில் தமது எல்லா மகிமையையும் வெளிப்படுத்துவார் என்றும் அவை குறிப்பிடுகின்றன. தம்மால் தெரிந்தெடுக்கப்பட்ட அனைவரையும் பரிபூரணப்படுத்துவதற்காக நடைமுறை தேவன் பூமியிலே நடைமுறைக் கிரியையை செய்யப் போகிறார் என்றும் அவை குறிப்பிடுகின்றன. மேலும், பூமியில் தேவன் எல்லாவற்றையும் தம் வார்த்தைகளைக் கொண்டு நிறைவேற்றுவார் மற்றும் “மனுவுருவான தேவன் உன்னதத்துக்கு எழுந்தருளுவார் மேலும் மகிமைப்படுத்தப்படுவார், மற்றும் மகாபெரியவரான அவருக்கு முன்பு எல்லா ஜாதிகளும் வந்து முழங்காலிட்டுப் பணிந்து தேவனைத் தொழுதுகொள்ளுவார்கள்” என்ற ஆணையை வெளிப்படுத்துவார். புதிய காலத்தின் கற்பனைகள் மனுஷன் கைக்கொள்வதற்காக என்றாலும், மற்றும் அப்படிச் செய்வது மனுஷனின் கடமையும் கடப்பாடுமாக இருந்தாலும், அவை குறிக்கும் அர்த்தம் ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் ஆழமானது ஆகும். புதிய காலத்தின் கற்பனைகள், யேகோவாவாலும் இயேசுவாலும் பிரகடனப்படுத்தப்பட்ட பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களையும் புதிய ஏற்பாட்டின் கட்டளைகளையும் பதிலீடு செய்கின்றன. இது ஜனங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு எளிமையான விஷயம் அல்ல, ஒரு மிக ஆழமான பாடமாகும். புதிய காலத்தின் கற்பனைகளுக்கு நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சம் இருக்கிறது: அவை கிருபையின் காலத்துக்கும் ராஜ்யத்தின் காலத்துக்கும் இடையில் ஓர் இடைமுகமாகச் செயல்படுகிறது. புதிய காலத்தின் கற்பனைகள் பழைய காலத்தின் எல்லா நடைமுறைகளையும் கட்டளைகளையும் மட்டுமல்லாமல், இயேசுவின் காலம் மற்றும் அதற்கு முந்தியவைகளில் இருந்து எல்லா நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டுவரும். நடைமுறை தேவனுக்கு முன்பாக அவை மனுஷனைக் கொண்டுவரும். அவரால் தனிப்பட்ட முறையில் பரிபூரணப்படுத்தப்படத் தொடங்கும்படி அவன் அனுமதிக்கப்படுவான்; அவையே பரிபூரணத்தின் பாதைக்கு ஆரம்பமாக இருக்கின்றன. இப்படி, புதிய காலத்தின் கட்டளைகளைப் பொறுத்து, நீங்கள் ஒரு சரியான மனப்பாங்கைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் அவற்றை ஏனோதானோவென்று பின்பற்றவோ அல்லது வெறுக்கவோ கூடாது. புதிய காலத்தின் கட்டளைகள் ஒரு குறிப்பிட்ட கருத்தை மிகவும் வலியுறுத்துகின்றன: மனுஷன் இன்றைய நடைமுறை தேவன் தம்மையே தொழுதுகொள்ள வேண்டும். இதில் மிகவும் நடைமுறைக்கு ஏற்ற வகையில் ஆவியின் சாராம்சத்துக்கு கீழ்ப்படிவது அடங்கும். தேவன் நீதியின் சூரியனாக வெளிப்பட்ட பின்னர் அவர் மனுஷனை குற்றவாளியாகவோ அல்லது நீதிமானாகவோ நியாயந்தீர்க்கும் கொள்கையையும் இந்தக் கட்டளைகள் வலியுறுத்துகின்றன. நடைமுறைப்படுத்துவதை விடவும் இந்தக் கட்டளைகள் புரிந்துகொள்ள எளிதானவை ஆகும். தேவன் மனுஷனைப் பரிபூரணப்படுத்த விரும்பினால், அவர் தமது சொந்த வார்த்தைகளாலும் வழிகாட்டுதலாலும் அவ்வாறு செய்ய வேண்டும் மற்றும் மனுஷன் தனது சொந்த உள்ளார்ந்த அறிவினால் மட்டும் பரிபூரணத்தை அடைய முடியாது என்பதை இதில் இருந்து காண முடியும். மனுஷன் புதிய காலத்தின் கட்டளைகளைக் கைக்கொள்ள முடிவதும் முடியாமல் போவதும் அவனது நடைமுறை தேவனைப் பற்றிய அறிவைப் பொறுத்ததாகும். ஆகவே, உன்னால் கட்டளைகளைக் கைக்கொள்ள முடியுமா அல்லது முடியாதா என்பது சில நாட்களிலேயே தீர்க்க முடிந்த கேள்வியல்ல. இது கற்றுக்கொள்ள வேண்டிய மிக ஆழமான பாடமாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 427

சத்தியத்தின்படி செய்வது என்பது மனிதனின் வாழ்க்கை வளர்ச்சியடையக் கூடிய ஒரு பாதையாகும். நீங்கள் சத்தியத்தின்படி செய்யாவிட்டால் அதன் பின் உங்களிடம் கொள்கை மட்டுமே எஞ்சி இருக்கும் மேலும் உண்மையான ஜீவிதம் இருக்காது. மனித வளர்ச்சிக்கான ஒரு குறியீடு சத்தியம். நீ சத்தியத்தின்படி செய்கிறாயா இல்லையா என்பது உனக்கு உண்மையான வளர்ச்சி இருக்கிதா இல்லையா என்பதுடன் தொடர்புடையதாகும். நீ சத்தியத்தின்படி செய்யவில்லை என்றால், நீதியின்படி நடக்கவில்லை என்றால், அல்லது உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு உன் மாம்சத்தைப் பற்றி மட்டுமே கவனம்செலுத்தினால், அப்போது கற்பனைகளைக் கைக்கொள்வதிலிருந்து நீ மிகவும் தூரம் இருக்கிறாய். இதுவே பாடங்களில் மிகவும் ஆழமானது. ஒவ்வொரு காலத்திலும், ஜனங்கள் பிரவேசிக்கவும் புரிந்துகொள்ளவும் பல சத்தியங்கள் உள்ளன, ஆனால் ஒவ்வொரு காலத்திலும் அந்தச் சத்தியங்களோடு கூட சேர்ந்து பல்வேறு கற்பனைகளும் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தோடு சம்பந்தப்பட்ட சத்தியங்களையே ஜனங்கள் கடைப்பிடிக்கிறார்கள் மற்றும் அவர்கள் கைக்கொள்ளும் கற்பனைகளும் அவ்வாறானதே. ஒவ்வொரு காலங்களும் தனக்குரிய கடைப்பிடிக்கவேண்டிய சத்தியங்களையும் கைக்கொள்ள வேண்டிய கற்பனைகளையும் கொண்டிருக்கின்றன. இருப்பினும், தேவனால் பிரகடனப்படுத்தப்பட்ட பல்வேறு கற்பனைகளைப் பொறுத்து—அதாவது, வெவ்வேறு காலங்களைப் பொறுத்து—சத்தியத்தை மனுஷன் கைக்கொள்ளுவதன் இலக்கும் விளைவும் மாறுபடும். கற்பனைகள் சத்தியத்துக்கு ஊழியம் செய்கின்றன, மேலும் கற்பனைகளைப் பராமரிக்க சத்தியம் இருக்கின்றது எனச் சொல்லலாம். சத்தியம் மட்டுமே இருக்குமென்றால், சொல்லும்படியாக தேவனின் கிரியையில் மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், கற்பனைகளைக் குறிப்பிடுவதன் மூலம், பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் இருக்கும் போக்குகளின் அளவை மனுஷனால் அடையாளம் காணமுடியும், மற்றும் தேவன் கிரியை செய்யும் காலத்தையும் மனிதனால் அறிய முடியும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் ஜனங்களால் கைக்கொள்ளப்பட்ட சத்தியங்களின்படி செய்யும் ஜனங்கள் மதத்தில் பலர் இருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் புதிய காலத்தின் கட்டளைகளைக் கொண்டிருக்கவில்லை, அல்லது அவர்களால் அதைக் கைக்கொள்ளவும் முடியாது. அவர்கள் இன்னும் பழைய வழிகளையே கடைப்பிடித்து ஆதி மனிதர்களாகவே இருக்கின்றனர். அவர்களிடம் கிரியையின் புதிய முறைகள் இல்லை மற்றும் புதிய காலத்தின் கட்டளைகளைக் காண முடியாது. அதனால், தேவனுடைய கிரியை அவர்களிடம் இல்லை. அவர்களிடம் காலியான முட்டைத் தோடு இருப்பது போன்றிருக்கிறது; உள்ளே குஞ்சு இல்லை என்றால், ஆவியும் இல்லை. இன்னும் துல்லியமாகக் கூறுவது என்றால், அவர்களிடம் ஜீவன் இல்லை என்று அர்த்தம். இத்தகைய ஜனங்கள் இன்னும் புதிய காலத்துக்குள் பிரவேசிக்கவில்லை, மேலும் பல அடிகள் அவர்கள் பின்தங்கிவிட்டார்கள். ஆகையால், பழைய காலங்களில் இருந்து சத்தியங்களைக் கொண்டிருந்தும் புதிய காலத்தின் கட்டளைகளைக் கொண்டிராவிட்டால் அது பயனற்றது. உங்களில் பலர் இன்றைய சத்தியங்களின் படி செய்கிறீர்கள் ஆனால் அதன் கற்பனைகளைக் கைக்கொள்வதில்லை. நீங்கள் ஒன்றையும் அடையமாட்டீர்கள், நீங்கள் கடைப்பிடிக்கும் சத்தியம் பயனற்றதும் அர்த்தமற்றதுமாக இருக்கும் மேலும் தேவன் உங்களைப் புகழ மாட்டார். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையின் முறைமையின் அளவுகோல்களுக்குள் சத்தியத்தின்படி செய்ய வேண்டும்; இன்றைய நடைமுறை தேவனின் குரலுக்கு பதில்வினையாக அது செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், அனைத்தும் ஒன்றுமில்லாமல் இருக்கும், இது ஒரு மூங்கில் கூடையில் தண்ணீர் எடுக்க முயற்சிப்பது போன்றதாகும். புதிய காலத்தின் கற்பனைகளைப் பிரகடனப்படுத்தியதன் நடைமுறை அர்த்தமும் ஆகும். ஜனங்கள் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமானால், குறைந்தபட்சம் அவர்கள் மனுவுருவில் தோன்றுகிற நடைமுறை தேவனை குழப்பமின்றி அறிந்திருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஜனங்கள் கற்பனைகளைக் கைக்கொள்ளுவது பற்றிய கொள்கைகளைக் கிரகிக்க வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளுவது என்பது அவற்றை ஏனோதானோவென்று அல்லது தன்னிச்சையாகப் பின்பற்றுவதில்லை, ஆனால் ஓர் அடிப்படையோடு, ஒரு நோக்கத்தோடு, மற்றும் கொள்கைகளோடு கைக்கொள்ளுவது ஆகும். உங்கள் தரிசனங்கள் தெளிவாக இருப்பதே முதலில் அடைய வேண்டிய விஷயம். உனக்குப் பரிசுத்த ஆவியானவரின் தற்காலக் கிரியையில் முழுமையான புரிதல் இருந்தால், மேலும் நீ கிரியையின் இன்றைய முறைகளில் பிரவேசித்தால், பின்னர் நீ கற்பனைகளைக் கைக்கொள்ளுவது பற்றிய தெளிவான புரிதலை இயல்பாகவே அடைவாய். புதிய காலத்தின் கற்பனைகளின் சாரத்தைத் நீ தெளிவாகப் பார்த்து கற்பனைகளைக் கைக்கொள்ளக் கூடிய நாள் வந்தால், அதன் பின் நீ பரிபூரணப்படுத்தப்பட்டிருப்பாய். இதுவே சத்தியத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் கற்பனைகளைக் கைக்கொள்ளுதலின் நடைமுறை முக்கியத்துவம் ஆகும். உன்னால் சத்தியத்தைச் கடைப்பிடிக்க முடியுமா அல்லது முடியாதா என்பது புதிய காலத்தின் கற்பனைகளின் சாரத்தை எவ்வாறு நீ பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தது ஆகும். பரிசுத்த ஆவியானவரின் கிரியை தொடர்ந்து மனுஷனுக்குத் தோன்றும், மேலும் மனிதனிடமான தேவனுடைய தேவைகள் அதிக அதிகமாகும். ஆகையால், மனுஷர் உண்மையாகவே கடைப்பிடிக்கும் சத்தியங்கள் எண்ணிக்கையில் அதிகமாகும், மேலும் பெரியதாகும், மற்றும் கற்பனைகளைக் கைக்கொள்ளுவதன் விளைவுகள் மேலும் ஆழமானதாக மாறும். ஆகவே, நீங்கள் சத்தியத்தின்படி செய்யும் அதே வேளையில் கற்பனைகளையும் கைக்கொள்ள வேண்டும். ஒருவரும் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தக் கூடாது; இந்தப் புதிய காலத்தில் புதிய சத்தியமும் புதிய கற்பனைகளும் ஒரேநேரத்தில் தொடங்கட்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 428

அநேக ஜனங்களால் நடைமுறையைப் பற்றி கொஞ்சம் பேசமுடியும் மற்றும் அவர்களால் அவர்களுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களைப் பற்றி பேசமுடியும் ஆனால் அதில் பெரும்பாலானது மற்றவர்களுடைய வார்த்தைகளிலிருந்து பெற்ற பிரகாசமாக இருக்கிறது. இதில் அவர்களுடைய தனிப்பட்ட நடத்தைகளில் உள்ள எதுவும் உள்ளடங்கவில்லை, அல்லது அவர்களுடைய அனுபவங்களிலிருந்து பார்ப்பவைகளும் உள்ளடங்கவில்லை. முன்னர் நான் இந்தப் பிரச்சினையைப் பகுத்தாய்ந்திருக்கிறேன்; எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்காதீர்கள். நீ வெறும் காகிதப்புலி, ஆயினும் சாத்தானை வெல்வதைப் பற்றியும், வெற்றிகரமான சாட்சிகளைக் கொண்டிருப்பது பற்றியும், மற்றும் தேவனுடைய சாயலில் வாழ்வதைப் பற்றியும் பேசுகிறாய்? இதெல்லாம் முட்டாள்தனம்! இன்று தேவனால் பேசப்படும் எல்லா வார்த்தைகளும் நீ பாராட்டுவதற்காகப் பேசப்படுகின்றன என்று நீ நினைக்கிறாயா? உன் வாய் உங்களுடைய பழைய சுயத்தைக் கைவிட்டுவிட்டு சத்தியத்தின்படி நடப்பதைப் பற்றி பேசுகிறது, ஆயினும் உங்கள் கைகள் மற்ற கிரியைகளைச் செய்கின்றன மற்றும் உங்கள் இருதயம் மற்ற திட்டங்களைத் தீட்டி சதி செய்கிறது—எந்த மாதிரியான ஒரு நபர் நீங்கள்? உங்கள் இருதயமும் உங்கள் கைகளும் ஏன் ஒன்றாக மற்றும் ஒரே மாதிரியாக இல்லை? இவ்வளவு பிரசங்கங்களும் வெறுமையான வார்த்தைகளாகிவிட்டன; இது மனதை நொறுக்கவில்லையா? உன்னால் தேவனுடைய வார்த்தையைக் கடைபிடிக்க இயலவில்லை என்றால், நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் பாதைக்குள் இன்னும் பிரவேசிக்கவில்லை, பரிசுத்த ஆவியானவருடைய கிரியை உன்னிடம் இன்னும் இல்லை மற்றும் அவருடைய வழிநடத்துதலை இன்னும் நீ பெறவில்லை என்பதை இது காட்டுகிறது. உன்னால் தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள மட்டுமே இயலும் ஆனால் அதைக் கடைப்பிடிக்க இயலவில்லை என்று நீ சொன்னால், நீ சத்தியத்தை நேசிக்காத ஒரு நபராக இருக்கிறாய். தேவன் இதைப்போன்ற நபரை இரட்சிக்க வரமாட்டார். பாவிகளை இரட்சிப்பதற்கு, ஏழைகளை இரட்சிப்பதற்கு மற்றும் தாழ்மையான அனைத்து ஜனங்களையும் இரட்சிப்பதற்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவர் மிகப்பெரும் வேதனையை அனுபவித்தார். அவருடைய சிலுவை மரணம் ஒரு பாவநிவாரணப்பலியாக அமைந்தது. உன்னால் தேவனுடைய வார்த்தையின்படி நடக்க முடியவில்லை என்றால், நீ முடிந்த அளவு சீக்கிரமாக விலகிச் செல்லவேண்டும்; தேவனுடைய வீட்டில் ஓர் ஒட்டுண்ணியாகத் தொடர்ந்து இருக்காதே. தேவனைத் தெளிவாக எதிர்க்கும் காரியங்களைச் செய்வதை நிறுத்துவது அநேக ஜனங்களுக்குக் கடினமாகத் தோன்றுகிறது. அவர்கள் மரணத்தைக் கேட்கிறார்கள் இல்லையா? அவர்களால் தேவன் தம்முடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பற்றி எப்படிப் பேச முடியும்? தேவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கு அவர்களுக்குத் துணிவு இருக்கிறதா? தேவன் கொடுக்கிற உணவைச் சாப்பிட்டு, தேவனை எதிர்க்கும் நேர்மையற்ற காரியங்களைச் செய்து, கெட்டவனாக, நயவஞ்சகனாக மற்றும் சதிசெய்கிறவனாக இருந்து, ஆயினும் தேவன் உனக்கு அளித்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க அவர் அனுமதிக்கும்போது—இவற்றைப் பெறும்போது உன் கரங்கள் எரிவதைப்போல் நீ உணரவில்லையா? உன் முகம் சிவப்பாக மாறுவதை நீ உணரவில்லையா? தேவனை எதிர்க்கும் எதையாவது செய்து, “முரட்டாட்டம் பண்ணுவதற்கு” சதி செய்துகொண்டு செல்வது, உனக்கு அச்சுறுத்தலாக இல்லையா? நீ ஒன்றையும் உணரவில்லை என்றால், உன்னால் எந்த எதிர்காலத்தையும் பற்றி எப்படி பேச முடியும்? நீண்ட காலத்திற்கு முன்பே உனக்கு ஏற்கனவே எதிர்காலம் இல்லாமல் போய்விட்டது, அதனால் உனக்கு இன்னும் மேலான எதிர்பார்ப்புகள் எப்படி இருக்க முடியும்? நீ வெட்கங்கெட்ட முறையில் எதையாவது சொன்னாலும், எந்த நிந்தனையையும் உணராவிட்டால் மற்றும் உன் இருதயம் விழிப்புடன் இல்லாவிட்டால், இது நீ தேவனால் ஏற்கனவே கைவிடப்பட்டிருக்கிறாய் என்று அர்த்தம் அல்லவா? பேசுவதிலும் நடப்பதிலும் அதீத விருப்பத்துடனும் கட்டுப்பாடுகள் இன்றியும் இருப்பது உனது சுபாவமாகியிருக்கிறது, உன்னால் இதைப்போல் தேவனால் எவ்வாறு பரிபூரணமாக்கப்பட முடியும்? உலகத்தில் உன்னால் நடமாட முடியுமா? உன்னால் யாரை நம்பச் செய்ய முடியும்? உன்னுடைய உண்மையான சுபாவத்தை அறிந்தவர்கள் தள்ளியே இருப்பார்கள். இது தேவனுடைய தண்டனை அல்லவா? மொத்தத்தில், பேச்சு மட்டும் இருந்து நடத்தை இல்லையென்றால், அங்கே வளர்ச்சி இல்லை. நீங்கள் பேசும்போது பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் கிரியை செய்து கொண்டு இருந்தாலும், நீங்கள் அதன்படி நடக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதை நிறுத்துவார். இதை நீங்கள் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால், உங்களால் எப்படி எதிர்காலத்தைப் பற்றி ஏதாவது பேசவோ அல்லது உங்களுக்குரிய அனைத்தையும் தேவனுடைய கிரியைக்குக் கொடுக்கவோ முடியும்? உன்னை முழுவதுமாக அர்பணிப்பதைப் பற்றி மட்டுமே பேச முடியும், ஆனாலும் நீ உன்னுடைய உண்மையான அன்பை தேவனுக்கு இன்னும் கொடுக்கவில்லை. அவர் உன்னிடம் இருந்து பெறுவது வெறும் உதட்டளவிலான பக்தி மட்டுமே; சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான உன்னுடைய உள்நோக்கத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. இதுவே உன்னுடைய உண்மையான வளர்ச்சியாக இருக்கக்கூடுமா? இதை நீ தொடர்ந்து செய்துகொண்டு இருந்தால், நீ தேவனால் எப்பொழுது பரிபூரணமாக்கப்படுவாய்? உன்னுடைய இருண்ட மற்றும் துயர் மிகுந்த எதிர்காலத்தைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? தேவன் உன்மீது நம்பிக்கையை இழந்துவிட்டதை நீ உணரவில்லையா? அநேகரை மற்றும் புதிய ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் விரும்புகிறார் என்பதை நீ அறியவில்லையா? பழைய காரியங்கள் அவற்றின் பழையவற்றைப் பற்றிக்கொள்ளலாமா? இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தவில்லை: நீங்கள் நாளைக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தின்படி நடக்க விருப்பமாயிருக்கும் ஒருவரே இரட்சிப்பைப் பெறுகின்ற ஒருவராவார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 429

தேவனுடைய வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, அவற்றை வெட்கப்படாமல் விளக்குவதற்கான திறமையைப் பெற்றிருப்பதால், நீங்கள் யதார்த்தத்தை பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல; நீ கற்பனை செய்கிறது போல காரியங்கள் அவ்வளவு எளிதல்ல. நீ யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறாயா என்பது நீ பேசுவதை அடிப்படையாகக் கொண்டதல்ல; மாறாக, நீ வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. தேவனின் வார்த்தைகள் உன்னுடைய வாழ்க்கையாகவும், உன்னுடைய இயல்பான வெளிப்பாடாகவும் மாறும் போது மட்டுமே நீ யதார்த்தத்தைப் பெற்றிருப்பதாகக் கூற முடியும். அப்போதுதான் நீ உண்மையான புரிந்துகொள்ளுதலையும் உண்மையான வளர்ச்சியையும் பெற்றிருப்பதாகக் கருத முடியும். நீங்கள் நீண்ட காலத்திற்கு சோதனையில் நிலைநிற்கக்கூடியவராக இருக்க வேண்டும், அப்போது தேவன் எதிர்பார்க்கிற அவரது சாயலில் நீங்கள் வாழ முடியும். இது வெறும் தோரணையாக இருக்கக்கூடாது; அது உங்களிடமிருந்து இயற்கையாகவே பாய வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையிலேயே யதார்த்தத்தைப் பெற்றுக்கொள்வீர்கள், அப்போதுதான் நீங்கள் ஜீவனைப் பெற்றிருப்பீர்கள். அனைவருக்கும் தெரிந்த ஊழியம் செய்பவர்களுக்கான சோதனையின் உதாரணத்தை நான் பயன்படுத்துகிறேன்: ஊழியம் செய்பவர்கள் தொடர்பான மிக உயர்ந்த கோட்பாடுகளை யார் வேண்டுமானாலும் வழங்க முடியும். மேலும் அனைவருக்கும் இந்த விஷயத்தில் நல்ல புரிந்துகொள்ளுதல் இருக்கிறது; அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள், ஒரு போட்டியைப் போல, ஒவ்வொரு பேச்சும் முந்தையதை மிஞ்சுகிறதாயிருக்கிறது. இருப்பினும், மனுஷன் ஒரு பெரிய சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றால், அவன் பகருவதற்கு நல்ல சாட்சி இருக்கிறது என்று சொல்வது மிகவும் கடினம். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், மனுஷனின் வாழ்ந்து காட்டுதல் இன்னும் மிகக் குறைவாக இருக்கிறது, அது அவனுடைய புரிந்துகொள்ளுதலுக்கு முற்றிலும் முரணானது. எனவே, இது இன்னும் மனுஷனின் உண்மையான வளர்ச்சியாக மாறவில்லை, இது இன்னும் மனுஷனின் வாழ்க்கை அல்ல. மனுஷனின் புரிந்துகொள்ளுதல் யதார்த்தத்திற்குள் கொண்டு வரப்படாததால், அவனது அந்தஸ்து இன்னும் மணல் மீது, தள்ளாடுகிற மற்றும் சரிவின் விளிம்பில் கட்டப்பட்ட ஓர் அரண்மனை போன்றது. மனுஷன் யதார்த்தத்தின் மிக மிகக் குறைந்த அளவைப் பெற்றிருக்கிறான்; மனுஷனிடத்தில் எந்த ஒரு யதார்த்தத்தையும் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இயற்கையாகவே, மனுஷனிடமிருந்து மிகக் குறைவான யதார்த்தமே வெளிப்படுகிறது. அவர்கள் வாழ்ந்து காட்டும் அனைத்து யதார்த்தங்களும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மனுஷனுக்கு யதார்த்தம் இல்லை என்று நான் சொல்வதற்கான காரணம் இதுவே. தேவன் மீதான தங்கள் அன்பு ஒருபோதும் மாறாது என்று ஜனங்கள் கூறினாலும், அது எந்தவொரு சோதனைகளையும் எதிர்கொள்ளும் முன்பு அவர்களது வெறும் வார்த்தைதான். அவர்கள் ஒரு நாள் திடீரென்று சோதனைகளை எதிர்கொள்ளும்போது, அவர்கள் பேசிய விஷயங்கள் யதார்த்தத்துடன் ஒப்பிடுகையில் மீண்டும் ஒரு முறை எல்லைக்கு வெளியே சென்றுவிடுகிறது. மேலும் இது, மனுஷன் யதார்த்தத்தைப் பெற்றிருக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும். உன்னுடைய கருத்துக்களுடன் பொருந்தாத விஷயங்களை நீ சந்திக்கும் போதெல்லாம், உன்னுடைய சுயத்தை ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும். அந்த விஷயங்களை உன்னுடைய சோதனைகள் என்று கூறலாம். தேவனின் சித்தம் வெளிப்படுவதற்கு முன்பு, எல்லோரும் கடுமையான சோதனை மற்றும் அளவற்ற உபத்திரவத்தின் வழியாகக் கடந்து செல்கிறார்கள். இதை நீ புரிந்து கொள்ள முடிகிறதா? தேவன் ஜனங்களிடம் இதை முயற்சிக்க விரும்பும்போது, நிதர்சனமான உண்மை வெளிவருவதற்கு முன்பு அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தேர்வு செய்ய அவர் எப்போதும் அனுமதிக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், தேவன் மனுஷனை சோதனைகளுக்கு உட்படுத்தும்போது, அவர் ஒருபோதும் அவர்களுக்கு உண்மையைக் கூறமாட்டார்; ஜனங்கள் தங்களை வெளிப்படுத்துகிற விதம் இதுதான். இன்றைய தேவனை நீ அறிந்திருக்கிறாயா, அதோடு கூட நீ ஏதேனும் யதார்த்தத்தை பெற்றிருக்கிறாயா என்பதைப் பார்க்க, தேவன் தனது கிரியையைச் செய்வதற்கான ஒரு வழி இது. தேவனின் கிரியை குறித்த சந்தேகங்களிலிருந்து நீ உண்மையிலேயே விடுபட்டிருக்கிறாயா? ஒரு மிகப்பெரிய சோதனை உன் மீது வரும்போது நீ உண்மையிலேயே உறுதியாக நிற்க முடியுமா? “எந்த பிரச்சனையும் இருக்காது என்று நான் உத்தரவாதம் தருகிறேன்” என்று யார் சொல்லத் துணிகிறீர்கள்? “மற்றவர்களுக்கு சந்தேகம் இருக்கலாம், ஆனால் நான் ஒருபோதும் சந்தேகிக்க மாட்டேன்” என்று யார் உறுதியாக சொல்லத் துணிகிறீர்கள்? பேதுரு சோதனைகளுக்கு ஆளானதைப் போலவே இதுவும் இருக்கிறது. உண்மை வெளிவருவதற்கு முன்பே அவன் எப்போதும் பெருமையாகப் பேசினான். இது பேதுருவுக்கு மட்டும் தனித்துவமாக இருந்த தனிப்பட்ட குறைபாடு அல்ல; தற்போது ஒவ்வொரு மனுஷனும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிரமம் இதுதான். இன்றைய நாட்களில் தேவனின் கிரியை பற்றிய உங்கள் புரிந்துகொள்ளுதல் என்ன என்பதைக் காண நான் ஒரு சில இடங்களுக்குச் சென்றால் அல்லது ஒரு சில சகோதர சகோதரிகளைப் பார்வையிட்டால், நீங்கள் நிச்சயமாகவே உங்கள் அறிவைப் பற்றி அதிகம் கூற முடியும், மேலும் உங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லாதது போலத் தோன்றும். நான் உன்னிடம்: “இன்றைய நாட்களின் கிரியை தேவனால் செய்யப்படுகிறது என்பதை உன்னால் உண்மையில் தீர்மானிக்க முடியுமா? எந்தவித சந்தேகமும் இல்லாமல்?” என்று கேட்டால், நீ நிச்சயமாக: “எந்த சந்தேகமும் இல்லாமல், இது தேவ ஆவியானவரால் செய்யப்படும் கிரியை” என்று பதிலளிப்பாய். நீ அவ்வாறு பதிலளித்தவுடன், நிச்சயமாகவே, நீ துளியளவும் சந்தேகத்தை உணர மாட்டாய். மேலும் நீ கொஞ்சம் யதார்த்தத்தைப் பெற்றிருப்பதாக நினைத்து, நீ சற்று மகிழ்ச்சியடைவாய். இந்த வழியில் விஷயங்களைப் புரிந்துகொள்ள முற்படும் ஜனங்கள் குறைவான யதார்த்தத்தைப் பெற்றிருப்பவர்கள்; அதைப் பெற்றுக்கொண்டேன் என்று அதிகம் நினைக்கும் ஒருவன், சோதனைகளை எதிர்கொள்ளும்போது குறைவாகவே உறுதியாக நிற்க முடியும். கர்வம் மற்றும் மேட்டிமையானவர்களுக்கு ஐயோ; தங்களைப் பற்றிய அறிவில்லாதவர்களுக்கு ஐயோ; அத்தகையவர்கள் பேசுவதில் திறமையானவர்கள், ஆனால் தங்கள் வார்த்தைகளை செயல்படுத்தும்போது மிக மோசமானவர்கள். உபத்திரவத்தின் மிகச்சிறிய அறிகுறியில், இந்த ஜனங்களுக்கு சந்தேகம் வரத் தொடங்குகிறது, மேலும் அதிலிருந்து விலகுவதற்கான எண்ணம் அவர்களின் மனதில் ரகசியமாக ஊடுருவுகிறது. அவர்கள் எந்தவித யதார்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை; இப்போது தேவனால் கேட்கப்படும் எதற்கும், எந்தவொரு யதார்த்தமும் இல்லாமல், அவர்கள் மதத்திற்கும் மேலான கோட்பாடுகளைக் கொண்டுள்ளனர். எந்தவொரு யதார்த்தமும் பெற்றிருக்காமல் கோட்பாடுகளை மட்டுமே பேசுபவர்களால் நான் மிகவும் வெறுக்கப்படுகிறேன். அவர்கள் தங்கள் கிரியையைச் செய்யும்போது சத்தமாகக் கத்துகிறார்கள், ஆனால் அவர்கள் யதார்த்தத்தை எதிர்கொண்டவுடன், விழுந்துவிடுகிறார்கள். இந்த ஜனங்களுக்கு யதார்த்தம் இல்லை என்பதை இது காட்டவில்லையா? காற்று மற்றும் அலைகள் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், உன் மனதில் ஒரு துளியும் சந்தேகத்தை அனுமதிக்காமல் நீ நிற்க முடியுமென்றால், உறுதியாக நிற்கவும், மறுதலிப்பதிலிருந்து விடுபடவும் முடியும். வேறு யாரும் இல்லாதபோது கூட, நீ உண்மையான புரிந்துகொள்ளுதல் மற்றும் உண்மையான யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகக் கணக்கிடப்படும். நீ காற்று வீசுகிற பாதையை நோக்கித் திரும்புவாயானால், நீ பெரும்பான்மையைப் பின்பற்றி, மற்றவர்களின் பேச்சைக் கிளிப்பிள்ளை போல பேசக் கற்றுக் கொண்டால்—நீ எவ்வளவு சொற்பொழிவாற்றினாலும், நீ யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறாய் என்பதற்கு இது சான்றாக இருக்காது. எனவே, வெற்று வார்த்தைகளை மட்டும் கூச்சலிகிடுற பக்குவப்படாதவனாக இருக்கக்கூடாது என்று நான் உனக்குப் பரிந்துரைக்கிறேன். தேவன் என்ன செய்யப் போகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மற்றொரு பேதுருவைப் போல நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் மீது அவமானத்தை வரவழைத்து, உங்கள் தலையை நிமிரச் செய்யும் திறனை இழக்காதீர்கள்; அதினால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பெரும்பாலான ஜனங்களுக்கு யதார்த்தமான வளர்ச்சி இல்லை. தேவன் ஒரு மகத்தான கிரியையை செய்திருந்தாலும், அவர் யதார்த்தத்தை ஜனங்கள் மீது திணிக்கவில்லை; இன்னும் சரியாகச் சொல்வதானால், அவர் ஒருபோதும் தனிப்பட்ட முறையில் யாரையும் சிட்சித்ததில்லை. சிலர், தேவனுடைய நன்மையைப் பெறுவது எளிது என்று நினைத்து, தங்கள் பாவமான கரங்களால் தொலைதூரம் வரை எட்டுகின்றனர். அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்; அவர்கள் இத்தகைய உபத்திரவங்களால் வெளிப்படுத்தப்படுகிறார்கள். இந்த வகையான சோதனையைக்கூட அவர்களால் தாங்க முடியாததால், யதார்த்தத்தைப் பெற்றிருத்தல் போன்ற, சவாலான சோதனைகள் அவர்களுக்குக் கேள்விக்குறியாக உள்ளன. அவர்கள் தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? யதார்த்தத்தைப் பெற்றிருத்தல் போலியாக்கக்கூடிய ஒன்றல்ல; யதார்த்தம் நீ அறிந்து கொள்வதன் மூலம் அடையக்கூடிய ஒன்றும் அல்ல; இது உன் உண்மையான வளர்ச்சியைப் பொறுத்தது, அத்துடன் எல்லா சோதனைகளையும் நீ தாங்க முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. உனக்குப் புரிகிறதா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 430

யதார்த்தத்தைப் பற்றி பேசும் திறனை மட்டும் தேவன் ஜனங்களிடம் கேட்கவில்லை; அது மிகவும் எளிதாக இருக்கும், இல்லையா? அப்படியானால், ஜீவனுக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தேவன் ஏன் பேசுகிறார்? அவர் ஏன் மாற்றத்தைப் பற்றி பேசுகிறார்? யதார்த்தத்தைப் பற்றிய வெற்றுப் பேச்சுக்கு மட்டுமே ஜனங்கள் திறமையுள்ளவர்களாக இருந்தால், அவர்களுடைய மனநிலையில் ஒரு மாற்றத்தை அடைய முடியுமா? ராஜ்யத்தின் நல்ல போர்ச் சேவகர்கள் யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசக்கூடிய அல்லது பெருமை பேசக்கூடிய ஒரு குழுவாக இருக்க பயிற்சி பெறவில்லை; மாறாக, எல்லா நேரங்களிலும் தேவனுடைய வார்த்தைகளை வாழ்ந்து காட்டவும், அவர்கள் எந்த பின்னடைவுகளை எதிர்கொண்டாலும் இசைந்து கொடுக்காமல் இருக்கவும், தேவனின் வார்த்தைகளுக்கு ஏற்றபடி தொடர்ந்து வாழவும், உலகிற்குத் திரும்பாமல் இருக்கவும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். தேவன் பேசும் யதார்த்தம் இதுதான்; தேவன் இதைத்தான் மனுஷனிடத்தில் கோருகிறார். ஆகவே, தேவனால் வசனித்துச் சொல்லப்பட்டுள்ள யதார்த்தத்தை மிக எளிமையானதாகக் கருத வேண்டாம். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் போதனை யதார்த்தத்தைப் பெற்றிருத்தலுக்குச் சமமல்ல. இது மனுஷனின் வளர்ச்சி அல்ல—இது தேவனின் கிருபை, இதில் மனுஷனின் பங்களிப்பு ஏதுமில்லை. ஒவ்வொரு நபரும் தேவனுடைய கிரியையைப் பெற்றபின் அவர்கள் வாழ்ந்து காட்டும்படி பேதுருவின் துன்பங்களைச் சகித்துக்கொள்ள வேண்டும்; மேலும் இன்னும் அதிகமாக, பேதுருவின் மகிமையைக் கொண்டிருக்க வேண்டும். இதை மட்டுமே யதார்த்தம் என்று அழைக்க முடியும். நீங்கள் யதார்த்தத்தைப் பற்றி பேச முடியும் என்பதால் மட்டும், யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம்; அது ஒரு தவறான கருத்தாகும். இத்தகைய எண்ணங்கள் தேவனுடைய சித்தத்திற்கு ஒத்துப்போகிறதில்லை, அதற்கு உண்மையான முக்கியத்துவமும் இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லாதீர்கள்; இதுபோன்ற வார்த்தைகளை அவித்துப்போடவும்! தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய தவறான புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் அனைவரும் அவிசுவாசிகள். அவர்களுக்கு உண்மையான அறிவு இல்லை, எந்தவொரு உண்மையான வளர்ச்சியும் இல்லை; அவர்கள் யதார்த்தம் இல்லாத அறிவற்ற ஜனங்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்திற்கு வெளியே வாழ்பவர்கள் அனைவரும் அவிசுவாசிகள். ஜனங்களால் அவிசுவாசிகள் எனக் கருதப்படுபவர்கள் தேவனின் பார்வையில் மிருகங்கள், தேவனால் அவிசுவாசிகள் எனக் கருதப்படுபவர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாழ்க்கையாகக் கொண்டிருக்காதவர்கள். ஆகவே, தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தைக் கொண்டிருக்காதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளை வாழத் தவறியவர்கள் அவிசுவாசிகள் என்று கூறலாம். தேவனுடைய நோக்கம், ஒவ்வொருவரும் அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை வாழ்ந்து காட்ட வேண்டும். எல்லோரும் யதார்த்தத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, அதற்கும் மேலாக, அவருடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை வாழ்ந்து காட்ட அனைவருக்கும் உதவ வேண்டும். மனுஷன் உணர்கிற யதார்த்தம் மிகவும் மேலோட்டமானது; அதற்கு எந்த மதிப்பும் இல்லை. தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியாது. இது மிகவும் கீழ்த்தரமானது மற்றும் குறிப்பிடத் தகுந்ததல்ல. இது மிகவும் குறையுள்ளதும், மற்றும் தேவன் எதிர்பார்க்கிற தரத்திற்கு தூரமானதும் மிகக் குறைவானதுமாகும். பாதையை சுட்டிக்காட்ட முடியாமல் உங்கள் புரிதலைப் பற்றி பேசுவது உங்களில் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதற்கும், உங்களில் யார் பயனற்ற குப்பைத் துண்டுகள் என்பதைக் கண்டுபிடிப்பதற்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ஆய்வுக்கு உட்படுத்தப்படுவீர்கள். இப்போதிலிருந்து இதை நினைவில் கொள்க! வெற்று அறிவைப் பற்றி மட்டுமே பேசாதீர்கள்; நடைமுறையின் பாதை மற்றும் யதார்த்தத்தைப் பற்றி மட்டுமே பேசுங்கள். உண்மையான அறிவிலிருந்து உண்மையான நடைமுறைக்கு மாறுதல்; பின்னர் நடைமுறையில் இருந்து யதார்த்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டுதல். மற்றவர்களுக்கு உபதேசம் செய்யாதீர்கள், உண்மையான அறிவைப் பற்றி பேசாதீர்கள். உன்னுடைய புரிந்துகொள்ளுதல் ஒரு பாதை என்றால், உன்னுடைய வார்த்தைகளை அதன் மீது தாராளமாக போகவிடு; அப்படி இல்லையென்றால், தயவுசெய்து உன் வாயை மூடிக்கொண்டு பேசுவதை நிறுத்து! நீ பேசுவது பயனற்றது. தேவனை ஏமாற்றுவதற்கும் மற்றவர்கள் உன் மீது பொறாமைப்படுத்துவதற்கும் நீ புரிந்துகொள்ளுதலைப் பற்றி பேசுகிறாய். அதுவே உன்னுடைய லட்சியம் அல்லவா? நீங்கள் வேண்டுமென்றே மற்றவர்களுடன் விளையாடுகிறீர்கள் அல்லவா? இதில் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா? நீ அதை அனுபவித்த பிறகு புரிந்துகொள்ளுதல் பற்றி பேசினால், நீ பெருமை பேசுகிறவனாய் காணப்படமாட்டாய். இல்லையெனில், நீ அகங்கார வார்த்தைகளை உமிழ்கிற ஒருவனாக இருப்பாய். உன் உண்மையான அனுபவத்தில் நீ கடக்க முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன, மேலும் உன் சொந்த மாம்சத்திற்கு எதிராக நீ கிளர்ச்சி செய்ய முடிவதில்லை, எப்போதுமே நீ விரும்பியதைச் செய்கிறாய்; தேவனுடைய விருப்பத்தை ஒருபோதும் திருப்திப்படுத்தமாட்டாய்—ஆனாலும் தத்துவார்த்த புரிதலைப் பற்றி பேசுவதற்கான கசப்பை நீ இன்னும் கொண்டிருக்கிறாய். நீங்கள் வெட்கமில்லாதவர்கள்! தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய உன்னுடைய புரிந்துகொள்ளுதல் பற்றி பேசுவதற்கு நீ இன்னும் தைரியமாக இருக்கிறாய். நீங்கள் எவ்வளவு வெட்கங்கெட்டவர்கள்! பிரசங்கித்தல் மற்றும் பெருமைகொள்ளுதல் உங்கள் இயல்பாகிவிட்டது, நீங்கள் அவ்வாறு செய்யப் பழகிவிட்டீர்கள். நீங்கள் பேச விரும்பும் போதெல்லாம், நீங்கள் அதைச் சுலபமாகச் செய்கிறீர்கள். ஆனால் பயிற்சி செய்யும்போது, உங்கள் இஷ்டப்படி அதைச் சித்தரிக்கிறீர்கள். இது மற்றவர்களை முட்டாளாக்க ஒரு வழி அல்லவா? நீங்கள் மனுஷர்களை வஞ்சிக்க முடியும்; ஆனால் தேவனை ஏமாற்ற முடியாது. மானிடர் அதை அறியாதிருக்கிறார்கள், பகுத்தறிவும் இல்லை. ஆனால் இதுபோன்ற விஷயங்களில் தேவன் அதிகக் கவனத்துடன் இருக்கிறார்; அவர் உன்னைத் தப்ப விடமாட்டார். உன் சகோதர, சகோதரிகள் உனக்காகப் பரிந்துரைத்து வாதிடலாம்; உன் புரிந்துகொள்ளுதலைப் புகழ்ந்து, உன்னை மெச்சிக்கொள்ளலாம். ஆனால் நீ எந்த யதார்த்தத்தையும் பெற்றிருக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தப்ப விடமாட்டார். ஒருவேளை அனுபவமுள்ள தேவன் உங்கள் தவறுகளைத் தேட மாட்டார். ஆனால் தேவனுடைய ஆவியானவர் உன்னை அசட்டை பண்ணுவார். அது உனக்குப் பொருத்துக்கொள்ள முடியாததாக இருக்கும். இதை நீ விசுவாசிக்கிறாயா? நடைமுறைப்படுத்துதலின் யதார்த்தத்தைப் பற்றி மேலும் பேசு; நீ ஏற்கனவே மறந்துவிட்டாயா? நடைமுறைப் பாதைகளைப் பற்றி மேலும் பேசு; நீ ஏற்கனவே மறந்துவிட்டாயா? “உயரிய கோட்பாடுகளையும் பயனற்ற, புழக்கத்திலுள்ள பேச்சையும் குறைத்து வழங்குங்கள்; இப்போதே நடைமுறையைத் தொடங்குவது சிறந்தது”. இந்த வார்த்தைகளை நீ மறந்துவிட்டாயா? உனக்குக் கொஞ்சம்கூட புரியவில்லையா? தேவனுடைய சித்தத்தைக் குறித்து உனக்கு எந்தப் புரிந்துகொள்ளுதலும் இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சத்தியத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே யதார்த்தத்தைக் கொண்டிருப்பதாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 431

நீங்கள் மிகவும் யதார்த்தமான பாடங்களைக் கற்க வேண்டும். ஜனங்கள் ரசிக்கிற உயர்ந்தபட்சமான சத்தம், வெறுமையான பேச்சு ஆகியவற்றிற்கு அவசியம் இல்லை. அறிவைப் பற்றி பேசும்போது, ஒவ்வொரு நபரும் தங்கள் முன்பாக இருப்பவரைக்காட்டிலும் உயர்வானவராக இருக்கிறார், ஆனால் அவர்கள் இன்னும் நடைமுறைக்கான பாதையைக் கொண்டிருக்கவில்லை. நடைமுறையின் கொள்கைகளை ஜனங்களில் எத்தனை பேர் புரிந்துகொண்டுள்ளனர்? உண்மையான பாடங்களை எத்தனை பேர் கற்றுக்கொண்டுள்ளனர்? யதார்த்தத்துடன் யார் ஐக்கியமாயிருக்கக்கூடும்? தேவனுடைய வார்த்தைகளைப் பேசக்கூடிய வகையில் இருத்தல் என்பது நீ உண்மையான நிலையை உடையவனாக இருப்பதாக அர்த்தப்படாது; அது நீ திறமைசாலியாகப் பிறந்தாய், நீ வரம் பெற்றவனாக இருக்கிறாய் என்பதை மாத்திரம் காண்பிக்கிறது. உன்னால் பாதையைச் சுட்டிக்காட்ட முடியாவிட்டால், விளைவு ஒன்றுமிராது, மற்றும் நீ பயனற்ற குப்பையாக இருப்பாய்! நடைமுறைக்கான உண்மையான பாதை பற்றி நீங்கள் எதுவும் சொல்ல முடியாதென்றால், நீங்கள் போலியாக நடிக்கிறீர்கள் அல்லவா? மற்றவர்கள் அறியக்கூடிய வகையில் அல்லது அவர்கள் பின்பற்றக்கூடிய வகையில், நீங்கள் உங்களுக்குச் சொந்தமான உண்மை அனுபவங்களைப் பிறருக்கு வழங்க முடியாவிட்டால், நீங்கள் போலியாகச் செயல்படுபர் அல்லவா? நீங்கள் ஓர் உண்மையற்ற நபரல்லவா? உங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அத்தகைய நபர் “பொது உடைமைக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர்” என்ற பங்கை மட்டுமே வகிக்க முடியும், “பொது உடமையைக் கொண்டுவருவதற்குப் பங்களிப்பவர்” அல்ல. யதார்த்தமின்றி இருத்தல் என்பது சத்தியமில்லாது இருப்பதாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது என்பது ஒன்றுக்கும் பயனற்றதாக இருப்பதாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது நடைப் பிணமாயிருத்தலாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது என்பது குறிப்பு மதிப்பு இல்லாத “மார்க்சிச-லெனினிச சிந்தனையாளராக” இருப்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் கோட்பாட்டைப் பற்றி வாயை மூடிக்கொண்டு, நிஜமான, உண்மையான மற்றும் உறுதியான கட்டமைப்பு உடைய ஒன்றைப் பற்றி பேசும்படி வேண்டுகிறேன்; சில “நவீனக் கலைகளைப்” படியுங்கள், யதார்த்தமான சிலவிஷயங்களைச் சொல்லுங்கள், உண்மையான ஒன்றைப் பங்களியுங்கள், அர்ப்பணிப்பின் ஆவியைக் கொண்டவர்களாயிருங்கள். நீ பேசும்போது யதார்த்தத்தை எதிர்கொள்; ஜனங்களை மகிழ்ச்சியுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகவோ அல்லது அவர்கள் அமர்ந்து உன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவோ யதார்த்தமற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பேச்சில் ஈடுபட வேண்டாம். அதில் மதிப்பு எங்கே உள்ளது? ஜனங்கள் உன்னை இதமாக நடத்துவதைப் பெறுவதில் உள்ள கருத்து என்ன? நீங்கள் ஒரு மோசமான செல்வாக்காய் மாறிப்போகாதபடிக்கு, உங்கள் பேச்சில் கொஞ்சம் “கலைநயத்துடன்” இருங்கள், உங்கள் நடத்தையில் இன்னும் சற்றுக்கூடுதலான நியாயத்துடன் இருங்கள், நீங்கள் விஷயங்களைக் கையாளும் விதத்தில் இன்னும் சற்றுக்கூடுதலான அறிவிற்கு ஏற்புடைய வகையில் இருங்கள், நீங்கள் கூறும்வகையில் இன்னும் சற்று நடைமுறைக்குரியவராக இருங்கள், உங்கள் செயல் ஒவ்வொன்றினாலும் தேவனுடைய வீட்டிற்குப் பிரயோஜனம் கொண்டுவருதலைப் பற்றிச் சிந்தியுங்கள், நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது, உங்கள் மனச்சாட்சியைக் கவனியுங்கள், தயவுக்குக் கைமாறாக வெறுப்பைத் திருப்பித்தராதீர்கள் அல்லது தயவுக்குக் கைமாறாக நன்றியின்மையைக் காட்டாதீர்கள், மற்றும் ஒரு மாயக்காரரைப்போல் இருக்காதீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, அவற்றை யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இணைக்கவும், நீங்கள் பேசும்போது, யதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள். ஆணவத்துடன் இருக்காதீர்கள்; இது தேவனைத் திருப்திப்படுத்தாது. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில், இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடனும், சற்று அதிக பலந்தரும் வகையிலும், இன்னும் சற்று அதிகமாகக் கண்ணியத்துடனும் இருங்கள், மற்றும் “பிரதமரின் ஆவி”[அ] யிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மோசமான சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போது, மாம்சச்சிந்தையை அதிகமாகக் கைவிடப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் வேலைசெய்யும்போது, யதார்த்தமான பாதைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள், மற்றும் அதி உயர்ந்த நிலைக்குச் செல்லாதீர்கள், அப்படி நீங்கள் சென்றால் நீங்கள் பேசுவதன் கருத்து ஜனங்களைச் சென்றடையாது. குறைவாக மகிழ்வை அனுபவித்தல், அதிக பங்களிப்பு—இவை அர்ப்பணிப்புக்கான உங்கள் சுயநலமற்ற ஆவியைக் காண்பிக்கிறது. தேவனுடைய நோக்கங்களின்மீது அதிக கவனமாயிருந்து, உங்கள் மனசாட்சி கூறுவதை அதிகமாய்க் கவனியுங்கள், அதிக கவனத்துடன் இருங்கள், மேலும் தேவன் ஒவ்வொரு நாளும் உங்களிடம் பொறுமையாகவும் ஊக்கமாகவும் பேசுவதை மறந்துவிடாதீர்கள். “பழைய பஞ்சாங்கத்தை” அடிக்கடி வாசியுங்கள். மேலும் அதிகமாய் ஜெபியுங்கள், அடிக்கடி ஐக்கியம் கொள்ளுங்கள். அதிகமாய்க் குழப்பிக்கொள்வதை நிறுத்துங்கள்; நடைமுறை அறிவைக் காண்பித்து மனதினால் அறியும் திறனைச் சற்றே ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாவமான கை வெளியே வரும்போது, அதைப் பின்னால் இழுங்கள்; அதை அதிகதூரம் சென்றடைய விடாதீர்கள். இதனால், எந்தப் பயனும் இல்லை, சாபங்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் தேவனிடமிருந்து பெற இயலாது, எனவே கவனமாக இருங்கள். உங்கள் இதயம் மற்றவர்கள் மீது பரிதாபப்படட்டும், எப்போதும் கையில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு தாக்கிக்கொண்டிருக்க வேண்டாம். சத்தியத்தைப் பற்றி அறிகிற அறிவைப் பற்றி அதிகமாகப் பேசுங்கள், மற்றும் ஜீவனைப் பற்றி அதிகம் பேசுங்கள், மற்றவர்களுக்கு உதவும் ஆவியைப் பேணுங்கள். அதிகமாகச் செயல்படுங்கள், மற்றும் குறைவாகப் பேசுங்கள். நடைமுறையில் அதிகம் செயல்படுங்கள், மற்றும் ஆராய்ச்சி, பகுப்பாய்வு ஆகியற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினவரால் அதிகமாய் அசைக்கப்பட உங்களை அனுமதியுங்கள், மற்றும் அவர் உங்களைப் பரிபூரணப்படுத்த அதிகம் வாய்ப்பளியுங்கள். அதிகமான மனிதக்கூறுகளை நீக்கிப்போடுங்கள்; நீங்கள் மனிதரீதியாகச் செயல்படும் வழிகளை இன்னமும் அதிகமாய்க் கொண்டிருக்கிறீர்கள், மற்றும் விஷயங்களைச் செய்யும் உங்களின் மேலோட்டமான செயற்பாங்கும் நடத்தையும் இன்னும் பிறருக்கு வெறுப்புக்குரியதாக உள்ளது: இவற்றில் அதிகமானவற்றை நீக்கிப்போடுங்கள். உங்கள் மன நிலை இன்னும் வெறுக்கத்தக்கதாக உள்ளது; அதைத் திருத்துவதற்கு அதிக நேரம் செலவிடுங்கள். நீங்கள் இன்னும் ஜனங்களுக்கு அதிக அந்தஸ்தைக் கொடுக்கிறீர்கள்; தேவனுக்கு அதிக அந்தஸ்தைக் கொடுங்கள், நியாயமற்றவர்களாக இருக்காதீர்கள். “ஆலயம்” எப்போதும் தேவனுக்குச் சொந்தமானது, அதை மக்கள் கையகப்படுத்தக்கூடாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீதியில் அதிகமாகவும், உணர்ச்சிகளில் குறைவாகவும் கவனம் செலுத்துங்கள். மாம்சச்சிந்தையை நீக்கிப்போடுவது மிகச்சிறந்ததாகும். யதார்த்தத்தைப் பற்றி அதிகம் பேசுங்கள், அறிவைப் பற்றி குறைவாகப் பேசுங்கள்; எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறந்தது. நடைமுறையின் பாதையைப் பற்றி அதிகம் பேசுங்கள், பயனற்ற பெருமைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இப்போதே கைக்கொள்ளத் தொடங்குவது நல்லது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. பிரதமரின் ஆவி: பரந்த மனப்பான்மை மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட ஒருவரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தரமான சீன வழக்குச்சொல்.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 432

ஜனங்களிடம் தேவன் கேட்டுக்கொள்பவைகள் அவ்வளவு எட்டாதவைகள் அல்ல. ஜனங்கள் அக்கறையுடனும் கருத்துடனும் கடைபிடிக்கும் வரை, அவர்கள் “தேர்ச்சியின் தரத்தைப்” பெறுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சத்தியத்தைக் குறித்தப் புரிதலையும், அறிவையும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனையும் பெறுவது என்பது சத்தியத்தைக் கடைபிடிப்பதை விட மிகவும் சிக்கலானதாகும். முதலில் நீ எவ்வளவு புரிந்து கொள்கிறாயோ அவ்வளவு கடைபிடி, மேலும் உனக்குப் புரிந்திருப்பதைக் கடைபிடி. இவ்வாறு, நீ படிப்படியாக சத்தியத்தைக் குறித்த மெய்யான அறிவையும் புரிதலையும் அடைய முடியும். இவைகளே பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் படிகளும் வழிமுறைகளுமாகும். நீ இவ்வாறு கீழ்ப்படிதலைக் கடைபிடிக்கவில்லை என்றால், உன்னால் எதையும் சாதிக்க முடியாது. நீ எப்போதும் உன் சொந்த விருப்பப்படி செயல்பட்டு, கீழ்ப்படிதலைக் கடைபிடிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்வாரா? பரிசுத்த ஆவியானவர் உன் விருப்பப்படி கிரியை செய்கிறாரா? அல்லது உன் குறைகளுக்கு ஏற்றபடியும், தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையிலும் அவர் கிரியை செய்கிறாரா? இதில் நீ தெளிவற்றிருந்தால், சத்தியத்தின் யதார்த்த நிலைக்குள் உன்னால் பிரவேசிக்கக் கூடாமல் போய்விடுவாய். தேவனின் வார்த்தைகளைப் படிக்க பெரும்பாலான ஜனங்கள் அதிக முயற்சி செய்திருப்பதும், ஆனால் வெறும் அறிவைப் பெற்றுள்ளதும் அதன்பின்னர் உண்மையான பாதையைப்பற்றி எதுவும் கூறமுடியாத நிலையில் இருப்பதும் ஏன்? அறிவைக் கொண்டிருப்பது சத்தியத்தைக் கொண்டிருப்பதற்குச் சமம் என்று நீ நினைக்கிறாயா? அது ஒரு குழப்பமான பார்வை அல்லவா? ஒரு கடற்கரையில் உள்ள மணல் போல உன்னால் அதிக அறிவுடன் பேச முடிந்தாலும், அதில் எதுவுமே உண்மையான பாதையைக் கொண்டிருக்கவில்லை. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லையா? அதை ஆதரிக்க எந்த பொருளும் இல்லாமல், நீங்கள் ஒரு வெற்றுக் காட்சியை உருவாக்கவில்லையா? அத்தகைய நடத்தை அனைத்தும் ஜனங்களுக்கு தீங்குநிறைந்ததாக இருக்கிறது! கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அவ்வளவாய் அது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது, அவ்வளவாய் ஜனங்களை யதார்த்தத்திற்குள் கொண்டுச்செல்ல இயலாததாயிருக்கிறது; கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ, அவ்வளவாய் அது நீ தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அவரை எதிர்க்கவும் வைக்கிறது. ஆவிக்குரிய கோட்பாட்டிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம்—அதனால் எந்தப் பயனும் இல்லை! சிலர் பல தசாப்தங்களாக ஆவிக்குரிய கோட்பாட்டைப் பற்றிப் பேசி வந்திருகின்றனர், மேலும் அவர்கள் ஆவிக்குரிய அரக்கர்களாக மாறியிருக்கின்றனர், ஆனால் இறுதியில், அவர்கள் இன்னும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்திருக்கவோ அல்லது அனுபவித்திருக்கவோ இல்லை என்பதால், அவர்களுக்குக் கடைப்பிடிப்பதற்கான எந்தக் கொள்கைகளோ அல்லதுபாதைகளோ இல்லை. இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளாகவே சத்தியத்தின் யதார்த்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அப்படியிருக்கும் போது, அவர்களால் எப்படி தேவனை விசுவாசிப்பதற்கான சரியான பாதையில் மற்றவர்களைக் கொண்டுவர முடியும்? அவர்களால் ஜனங்களைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். இது மற்றவர்களுக்கும் தங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக இல்லையா? குறைந்த பட்சம், உன் முன் இருக்கும் யதார்த்தமான பிரச்சனைகளை நீ தீர்க்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அதாவது, நீ தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிக்கவும் அனுபவிக்கவும் கூடியவனாகவும், சத்தியத்தைக் கடைபிடிக்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். இது மட்டுமே தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும். நீ ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கும்போது மட்டுமே நீ தேவனுக்காகக் கிரியை செய்யத் தகுதியுடையவனாய் இருக்கிறாய், மேலும் நீ உண்மையாக தேவனுக்கு அர்ப்பணித்திருந்தால் மட்டுமே நீ தேவனால் அங்கீகரிக்கப்பட முடியும். எப்பொழுதும் மாபெரும் அறிக்கைகளையும் டம்பமான கோட்பாடுகளையும் பற்றிப் பேச வேண்டாம்; இது உண்மையல்ல. ஜனங்கள் உன்னைப் பாராட்டும்படி ஆவிக்குரிய கோட்பாட்டை எடுத்துரைப்பது தேவனுக்குச் சாட்சி கொடுப்பது அல்ல, மாறாக உன்னையே பறைசாற்றிக்கொள்வதாகும். இதனால் ஜனங்களுக்கு முற்றிலும் எந்தப் பயனுமில்லை, அவர்களுக்கு பக்திவிருத்தியை ஏற்படுத்துவதுமில்லை, மேலும் அவர்கள் ஆவிக்குரிய கோட்பாட்டை வழிபடுவதற்கும், சத்தியத்தைக் கடைபிடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் எளிதில் வழிநடத்தக் கூடும்—இது ஜனங்களைத் தவறாக வழிநடத்துவது இல்லையா? தொடர்ந்து இப்படிச் செய்வது, ஜனங்களைக் கட்டுப்படுத்தி சிக்க வைக்கும் எண்ணற்ற வெற்றுக் கோட்பாடுகளையும் விதிகளையும் தோற்றுவிக்கும்; அது உண்மையிலேயே இழிவானதாகும். எனவே உண்மையை அதிகமாகச் சொல்லுங்கள், உண்மையிலேயே இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள், யதார்த்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சத்தியத்தைத் தேட அதிக நேரம் செலவிடுங்கள்; இதுதான் மிக முக்கியமானது. சத்தியத்தைக் கடைபிடிக்கக் கற்றுக்கொள்வதற்குத் தாமதிக்க வேண்டாம்: இதுவே யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையாகும். மற்றவர்களின் அனுபவத்தையும் அறிவையும் உங்கள் சொந்தச் சொத்தாக எடுத்துக் கொண்டு, மற்றவர்கள் போற்றும் வகையில் அதைப் பற்றிக்கொள்ள வேண்டாம். ஜீவனுக்கான உன் சொந்தப் பிரவேசத்தை நீ பெற்றிருக்க வேண்டும். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் மட்டுமே ஜீவ பிரவேசத்தை நீ பெற்றிருப்பாய். ஒவ்வொரு நபரும் கடைப்பிடித்துக் கவனம் செலுத்த வேண்டியது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

உன்னோடு ஐக்கியப்பட்டிருத்தல் என்பது, ஜனங்கள் கைக்கொள்ள ஒருபாதையை வழங்க முடியுமென்றால், அது நீ கொண்டுள்ள யதார்த்தத்திற்கு இன்னும் அதிக மதிப்பைச் சேர்க்கிறது. நீ என்ன சொன்னாலும், நீ ஜனங்களை நடைமுறைபடுத்துகிறவர்களாக்க வேண்டும், மேலும் அவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு பாதையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களுக்கு அறிவைக்கொண்டிருத்தல் மாத்திரம் போதும் என்றிருக்க அனுமதிக்காதீர்கள். பின்பற்ற ஒருபாதை இருப்பது அதைவிட முக்கியமானதாகும். ஜனங்கள் தேவனை நம்புவதற்கு, அவர்கள் தேவனுடைய கிரியையில் தேவனால் நடத்தப்படும் பாதையில் நடக்க வேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் பாதையில் நடக்கும் செயல்முறையே தேவனில் நம்பிக்கை கொள்ளும் செயல்முறையாக உள்ளது. அதன்படி, நீங்கள் நடக்கக்கூடிய ஒரு பாதையைக் கொண்டிருக்க வேண்டும், என்ன நேர்ந்தாலும், தேவனால் பூரணப்படுத்தப்பட்ட பாதையில் நீங்கள் அடிவைத்தாக வேண்டும். மிகவும் பின்னாக வீழ்ந்துவிட வேண்டாம், பல்வேறு காரியங்களில் உங்களைப் பற்றி கவலை கொண்டிருக்க வேண்டாம். குறுக்கீடுகளை ஏற்படுத்தாமல் நீங்கள் தேவன் வழிநடத்துகிற பாதையில் நடந்தால் மட்டுமே, நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறவும் நுழைவின் பாதையை உடமையாகக் கொண்டிருக்கவும் முடியும். இது மாத்திரமே தேவனுடைய விருப்பங்களுக்கு ஏற்றவகையில் இருப்பதாகவும் மனிதகுலத்திற்குக் கடமையை நிறைவேற்றுவதாகவும் எண்ணக்கூடியதாக உள்ளது. இந்தப் பிரவாகத்தில் ஒரு தனிநபராக, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையைச் சரியாக நிறைவேற்ற வேண்டும், ஜனங்கள் எதைச் செய்யவேண்டுமோ அதையே அதிகமாகச் செய்ய வேண்டும், சுயவிருப்பத்தின்படி செயல்படக்கூடாது. ஊழியம் செய்கிறவர்கள் தங்கள் வார்த்தைகளைத் தெளிவுபடுத்த வேண்டும், பின்பற்றும் மக்கள் கஷ்டங்களைத் தாங்குவதற்கும் கீழ்ப்படிவதற்கும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும், மேலும் அனைவரும் தங்கள் இடத்திலேயே இருக்க வேண்டும், ஆனால் வரிசையில் இருந்து வெளியேறக்கூடாது. ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும், எந்தச் செயல்பாட்டை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் பாதையில் செல்லுங்கள்; தடம்மாறிப் போகாதீர்கள் அல்லது தவறாகப் போகாதீர்கள். இன்றைய வேலையை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியது என்னவென்றால், இன்றைய கிரியைக்கான வழிமுறையில் பிரவேசித்தல் என்பதேயாகும். இதுவே நீங்கள் பிரவேசிக்க வேண்டிய முதல் விஷயமாக உள்ளது. மற்ற விஷயங்களில் இனிமேலும் வார்த்தைகளை வீணாக்காதீர்கள். தேவனுடைய வீட்டின் இன்றைய ஊழியத்தைச் செய்தல் என்பது உங்கள் பொறுப்பாக உள்ளது, இன்றைய கிரியையின் செயல்முறைக்குள் பிரவேசித்தல் என்பது உங்கள் கடமையாக உள்ளது, மற்றும் இன்றைய சத்தியத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது உங்கள் பாரமாக உள்ளது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 433

தேவன் நடைமுறையான தேவனாக இருக்கிறார். அவருடைய கிரியைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் பேசுகிற வார்த்தைகள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன, அவர் வெளிப்படுத்துகிற சத்தியங்கள் எல்லாம் நடைமுறையானவையாக இருக்கின்றன. அவருடைய வார்த்தைகளாக இல்லாதவைகளெல்லாம் வெறுமையும், இல்லாதவையும், ஆதாரம் அற்றவையும் ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவர் மக்களைத் தேவனின் வார்த்தைகளுக்குள் வழிநடத்துகிறார். மக்கள் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமானால், அவர்கள் யதார்த்தத்தைத் தேட வேண்டும், யதார்த்தத்தை அறிந்துகொள்ள வேண்டும், அதன் பிறகு அவர்கள் யதார்த்தத்தை அனுபவித்து, யதார்த்தமாக வாழ வேண்டும். மக்கள் யதார்த்தத்தை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறார்களோ, அவர்களால் பிறரின் வார்த்தைகள் உண்மையானவையா என்பதை அவ்வளவு அதிகமாக அறிந்துகொள்ள முடிகிறது. மக்கள் யதார்த்தத்தை எவ்வளவு அதிகமாக அறிவார்களோ, அவர்களிடம் அவ்வளவு குறைவான கருத்துக்களே உள்ளன. மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தை அனுபவிக்கிறார்களோ, அவர்கள் யதார்த்தத்தைக் குறித்த தேவனின் கிரியைகளை அவ்வளவு அதிகம் அறிவார்கள், மேலும் அவர்களுடைய சீர்கேடான, சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து விடுதலையாவது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கிறது. மக்கள் எவ்வளவு யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை அறிவார்கள், மேலும் அவ்வளவு அதிகமாக அவர்கள் மாம்சத்தை வெறுக்கிறார்கள் மற்றும் சத்தியத்தை நேசிக்கிறார்கள். மேலும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக இருக்கிறார்களோ, தேவனின் தேவைகளின் தரநிலைகளுக்கு அவ்வளவு நெருக்கமாக வருகிறார்கள். தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் யதார்த்தத்தைப் பெற்றவர்களாகவும், யதார்த்தத்தை அறிந்தவர்களாகவும், தேவனின் உண்மையான கிரியைகளை யதார்த்தத்தை அனுபவிப்பதன் மூலம் அறிந்து கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். நீ ஒரு நடைமுறையான வழியில் எவ்வளவு அதிகமாக தேவனுக்கு ஒத்துழைத்து, உன் சரீரத்தை கீழ்ப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நீ பெற்றுக்கொள்வாய், அவ்வளவு அதிகமாக நீ யதார்த்தத்தைப் பெற்றுக்கொள்வாய், மேலும் நீ தேவனால் அவ்வளவு அதிகமாய் வெளிச்சத்தைப் பெறுவாய், இதனால் தேவனின் உண்மையான கிரியைகளைப் பற்றிய உனது அறிவு அவ்வளவு அதிகமாக பெருகும். உன்னால் பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வெளிச்சத்தில் வாழ முடிந்தால், உனக்கு நடைமுறைக்கான தற்போதைய பாதை தெளிவானதாகிவிடும், மேலும் உனக்கு கடந்தகால மதக் கருத்துக்கள் மற்றும் பழைய நடைமுறைகளிலிருந்து உன்னைப் பிரிக்க அதிக வாய்ப்பு இருக்கும். யதார்த்தம் தான் இன்றைய கவனமாயிருக்கிறது. மக்களிடம் எவ்வளவு யதார்த்தம் இருக்கிறதோ, சத்தியத்தைப் பற்றிய அவர்களின் அறிவு அவ்வளவு தெளிவாயிருக்கிறது, மேலும் அவர்களுக்கு தேவனுடைய சித்தத்தைக் குறித்து அவ்வளவு அதிக புரிதல் இருக்கும். யதார்த்தத்தால் எல்லா எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் மேற்கொள்ள முடியும், அது எல்லா கோட்பாடுகளையும் திறமைகளையும் மேற்கொள்ள முடியும், மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனை உண்மையாக நேசித்து, அவருடைய வார்த்தைகளுக்காக பசியும் தாகமுமாயிருக்கிறார்கள். எப்போதும் நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தினால், வாழ்க்கை, மதக் கருத்துக்கள் மற்றும் இயல்பான குணங்கள் குறித்த உன்னுடைய தத்துவம் இயல்பாகவே தேவனின் கிரியையைப் பின்பற்றி நீக்கப்படும். யதார்த்தத்தைப் பின்தொடராத, யதார்த்தத்தைக் குறித்த எவ்வித அறிவும் இல்லாதவர்களாகிய அவர்கள், இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவோ அதைப் பின்தொடருவார்கள், மேலும் அவர்கள் எளிதாக ஏமாற்றமடைவார்கள். இதுபோன்றோரில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கான வழியில்லை, எனவே அவர்கள் வெறுமையாக உணர்கிறார்கள், அதனால் அவர்களின் வாழ்க்கை அர்த்தமற்றதாயிருக்கிறது.

நீ உண்மையாக முயற்சித்து, உண்மையாகத் தேடி, உண்மையாக ஜெபித்து, சத்தியத்தைத் தேடுவதின் நிமித்தம் துன்பப்பட தயாராக இருக்கும் போது மட்டுமே, பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை செய்ய முடியும். சத்தியத்தைத் தேடாதவர்களிடம் இருப்பது எழுத்துக்களும், கொள்கைகளும் வெற்றுக் கோட்பாடுகளுமே அன்றி வேறொன்றும் இல்லை, சத்தியம் இல்லாதவர்களிடம் இயல்பாகவே தேவனைக் குறித்த பல கருத்துக்கள் உள்ளன. இதுபோன்றவர்கள் தேவனால் தங்கள் மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாற்றப்படுவதினால் மூன்றாம் வானத்திற்கு ஏறிச்செல்ல மட்டுமே ஏங்குகிறார்கள். இவர்கள் எவ்வளவு முட்டாள்கள்! இதுபோன்ற காரியங்களில் தேவனைக் குறித்தோ, யதார்த்தத்தைக் குறித்தோ ஞானமில்லை என்று சொல்லும் இதுபோன்றோரால் பெரும்பாலும் தேவனுடன் ஒத்துழைக்கவும் முடியாது, செயலற்று காத்திருக்க மட்டுமே முடியும். மக்கள் சத்தியத்தைப் புரிந்து கொண்டு, சத்தியத்தைத் தெளிவாகக் கண்டு, அதற்கும் மேல் அவர்கள் சத்தியத்திற்குள் பிரவேசித்து அதைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவர்கள் கண்டிப்பாக உண்மையாக முயற்சித்து, உண்மையாகத் தேடி, சத்தியத்தின் மீது பசியும் தாகமுமாய் இருக்க வேண்டும். நீ பசியும் தாகமுமாய் இருந்து, நீ உண்மையில் தேவனோடு ஒத்துழைக்கும் போது, தேவ ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொட்டு உனக்குள் கிரியை செய்வார், இது உனக்கு அதிக வெளிச்சத்தைத் தரும், மேலும் உனக்கு யதார்த்தத்தைப் பற்றிய அதிக அறிவைத் தந்து, உன் ஜீவனுக்கு பேருதவியாக இருக்கும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 434

மக்கள் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், தேவன் ஒரு நடைமுறையான தேவன் என்பதை அவர்கள் முதலில் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் அவர்கள் தேவனின் வார்த்தைகளையும், மாம்சத்தில் தேவனுடைய நடைமுறைத் தோற்றத்தையும், தேவனின் நடைமுறைக் கிரியைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனின் கிரியைகள் எல்லாம் நடைமுறையானவை என்பதை அறிந்த பின்புதான் உன்னால் தேவனுடன் உண்மையில் ஒத்துழைக்க முடியும், மேலும் இவ்வழியில் மட்டுமே நீ உன் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய முடியும். யதார்த்தத்தைப் பற்றிய அறிவில்லாதவர்கள் யாராலும் தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதற்கான எந்த வழியும் இல்லை, அவர்களின் கருத்துக்களில் மாட்டிக் கொண்டு, அவர்களின் கற்பனையில் வாழ்கிறார்கள், இதனால் அவர்களுக்கு தேவனின் வார்த்தைகளைப் பற்றிய அறிவேதும் இல்லை. யதார்த்தத்தைப் பற்றிய உன் அறிவு எவ்வளவு அதிகமோ, நீ தேவனோடு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறாய், மேலும் நீ அவருடன் மிகவும் அன்யோன்யமாக இருக்கிறாய். நீ தெளிவின்மை, கவனச் சிதறல் மற்றும் கோட்பாட்டை எவ்வளவு அதிகமாகத் தேடுகிறாயோ, நீ அவ்வளவு அதிகமாக தேவனிடமிருந்து விலகிச் செல்வாய், ஆகவே மேலும் தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதை மிகவும் சோர்வானதாகவும் கடினமானதாகவும், உன்னால் பிரவேசிக்க இயலாது என்றும் நீ அதிகமாக உணருவாய். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள்ளும், உன் ஆவிக்குரிய வாழ்க்கையின் சரியான பாதையிலும் நீ பிரவேசிக்க விரும்பினால், முதலில் நீ யதார்த்தத்தை அறிந்து, தெளிவில்லாத மற்றும் இயற்கைக்கு மாறான காரியங்களிலிருந்து உன்னை தனிமைப்படுத்து, அதாவது முதலில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு வெளிச்சமூட்டி உள்ளிருந்து உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை நீ கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இவ்விதமாக, மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான கிரியையை உன்னால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடிந்தால், தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கான சரியான பாதையில் நீ பிரவேசித்திருப்பாய்.

இன்று, எல்லாமே யதார்த்தத்திலிருந்து ஆரம்பமாகிறது. தேவனின் கிரியை மிக உண்மையானது, மேலும் மக்களால் தொடக்கூடியதாக இருக்கிறது. மக்கள் அதைத் தான் அனுபவிக்கவும் அடையவும் முடியும். மக்களில் உள்ள நிறைய தெளிவில்லாத மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்கள், தேவனின் தற்போதைய கிரியையை அவர்கள் தெரிந்துகொள்வதைத் தடுக்கிறது. இவ்வாறு, தங்கள் அனுபவங்களில் அவர்கள் எப்போதும் விலகி, காரியங்கள் கடினமானவை என்று எப்போதும் உணர்கிறார்கள், இவையெல்லாம் அவர்களின் கருத்துக்களாலேயே உண்டாகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் கொள்கைகளை மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை, யதார்த்தம் அவர்களுக்குத் தெரிவதில்லை, எனவே அவர்களின் பிரவேசிக்கும் பாதையில் அவர்கள் எப்போதும் எதிர்மறையாக இருக்கிறார்கள். அவர்கள் தூரத்திலிருந்தே தேவனின் தேவைகளைப் பார்க்கிறார்கள், அவற்றை அடைய முடிவதில்லை. தேவனின் வார்த்தைகள் உண்மையில் நல்லவை என்று மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள், ஆனால் பிரவேசிக்கும் வழியைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. பரிசுத்த ஆவியானவர் இந்தக் கொள்கையின்படி கிரியை செய்கிறார். மக்களின் ஒத்துழைப்பு மூலம், அவர்கள் மூலமாக தீவிரமாய் ஜெபிப்பது, தேடுவது மற்றும் தேவனிடம் நெருங்குவதன் மூலம், முடிவுகளை அடைய முடியும், மேலும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அறிவொளியூட்டப்பட்டு பிரகாசிக்கப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார், அல்லது மனிதன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறான் என்பதல்ல. இரண்டும் இன்றியமையாதவை, மேலும் மக்கள் எவ்வளவு அதிகமாக ஒத்துழைக்கிறார்களோ, மேலும் அவர்கள் தேவனின் தேவைகளின் தரத்தை அடைவதற்கு எவ்வளவு அதிகமாகப் பின்தொடருகிறார்களோ, அந்த அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் பெரியது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் இணைக்கப்பட்ட மக்களின் உண்மையான ஒத்துழைப்பு மட்டுமே உண்மையான அனுபவங்களையும் தேவனின் வார்த்தைகளைக் குறித்த அத்தியாவசியமான அறிவையும் உருவாக்க முடியும். படிப்படியாக, இவ்விதமாக அனுபவிப்பதால், இறுதியில் ஒரு பரிபூரண நபர் உருவாகிறார். தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்வதில்லை. மக்களின் கருத்துக்களில், தேவன் சர்வவல்லவர், மற்றும் எல்லாமே தேவனால் செய்யப்படுகிறது, இதனால் மக்கள் செயலற்ற முறையில் காத்திருந்து, தேவனின் வார்த்தைகளை வாசிக்காமலும் அல்லது ஜெபிக்காமலும், பரிசுத்த ஆவியானவரின் தொடுதலுக்காக மட்டுமே காத்திருக்கிறார்கள். இருப்பினும், சரியான புரிதலுடன் இருப்பவர்கள் இதை நம்புகிறார்கள்: எனது ஒத்துழைப்பு வரைக்கே தேவனின் செயல்கள் செல்ல முடியும், மேலும் என்னில் தேவனின் கிரியை ஏற்படுத்தும் விளைவு நான் எப்படி ஒத்துழைக்கிறேன் என்பதைப் பொறுத்ததாகும். தேவன் பேசும்போது, தேவனின் வார்த்தைகளை நாடித் தேடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்ய வேண்டும்; நான் இதைத்தான் அடைய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “யதார்த்தத்தை அறிந்துகொள்வது எப்படி” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 435

எத்தனை மதச் சடங்குகளை நீ கடைப்பிடிக்கிறாய்? எத்தனை முறை நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம் செய்து உன்னுடைய சொந்த வழியில் சென்றிருக்கிறாய்? தேவனுடைய பாரத்தை உண்மையிலேயே கருத்தில் கொண்டு, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நாட்டம் கொண்டு நீ தேவனுடைய வார்த்தைகளை எத்தனை முறை கடைப்பிடித்திருக்கிறாய்? நீ தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்து கொண்டு அதன்படியே நடக்க வேண்டும். உன்னுடைய செயல்கள் மற்றும் கிரியைகள் எல்லாவற்றிலும் கொள்கைப்பிடிப்புடன் இருக்கவேண்டும். இருப்பினும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு மன ஈடுபாடின்றி பிறர் காண வேண்டுமென எதையாவது செய்ய வேண்டுமென்று இதற்கு அர்த்தமில்லை; மாறாக சத்தியத்தைக் கடைப்பிடித்துத் தேவனுடைய வசனத்தின்படி வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இது போன்று நடப்பது மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்துகிறது. தேவனைத் திருப்திப்படுத்தும் எந்தச் செயல்முறையும் ஒரு விதிமுறை அல்ல; ஆனால் சத்தியத்தின்படி நடப்பதாகும். சிலர் மற்றவர்களுடைய கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் பெரும் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு முன்பாக தாங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறலாம்; ஆனால் அவர்களுக்குப் பின்னால் இவர்கள் சத்தியத்தைப் பின்பற்றாமல் முற்றிலும் வேறு மாதிரியாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் மதவாத பரிசேயர்கள் அல்லவா? எவர் ஒருவர் தேவனுக்கு உண்மையாக இருந்து வெளித்தோற்றத்தில் இப்படிப்பட்டவைகளைச் செய்யாமல் இருக்கின்றாரோ அவரே தேவனிடம் உண்மையாக அன்புகூர்ந்து சத்தியத்தைக் கொண்டிருப்பவர் ஆவார். இப்படிப்பட்ட ஒருவர் சூழ்நிலைகள் வரும்போது சத்தியத்தைப் பின்பற்ற விரும்புகிறார், மேலும் அவர் தனது மனசாட்சிக்கு விரோதமாக பேசுவதோ அல்லது செயல்படுவதோ இல்லை. இவ்வகையான நபர் சம்பவங்கள் நடைபெறும் போது ஞானத்தை வெளிப்படுத்துகிறார், மேலும் எந்தச் சூழ்நிலையிலும் தனது செய்கைகளில் கொள்கைப்பிடிப்புடன் இருக்கிறார். இவ்வகையான நபராலேயே உண்மையான ஊழியத்தைச் செய்ய முடியும். சிலர் தாங்கள் தேவனுக்குக் கடமைப்பட்டிருப்பதாக உதட்டளவில் சொல்கின்றனர். இவர்கள் தங்கள் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு கவலையில் ஆழ்ந்து நாட்களைக் கடத்துகிறார்கள். பாதிக்கப்பட்டது போல நடித்துக் கொண்டு, பரிதாபகரமாக இருப்பது போல பாசாங்கு செய்கிறார்கள். எவ்வளவு இழிவான செயல் இது! நீ இவர்களிடம், “நீ எந்த வகையில் தேவனுக்குக் கடமைப்பட்டிருக்கிறாய் என்று என்னிடம் சொல்ல முடியுமா?” என்று கேட்பாயானால், அவர்கள் வாயடைத்துப் போவார்கள். நீ தேவனுக்கு உண்மையாக இருப்பாயானால், மற்றவர்களிடம் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உண்மையாக நடப்பதன் மூலமாகவும் உத்தம இருதயத்துடன் தேவனிடம் ஜெபிப்பதன் மூலமாகவும் தேவன் மீதான உனது அன்பை நிரூபித்துக் காட்டு. தேவனுடன் உதட்டளவில் மற்றும் பெயரளவில் தொழுதுகொள்கிறவர்கள் அனைவரும் மாயக்காரர்கள் ஆவர். சிலர் தேவனிடம் ஒவ்வொரு முறையும் ஜெபிக்கும் போது தேவனுக்குக் கடமைப்பட்டிருப்பது பற்றி பேசுகின்றனர், மேலும் பரிசுத்த ஆவியானவரின் எந்த வழிநடத்துதலும் இல்லாமல் தங்கள் ஜெபத்தில் அழுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மதச் சடங்காச்சாரங்களை உடையவர்களாகவும், கருத்துக்களை உடையவர்களாகவும் இருக்கின்றனர். இது போன்ற செயல்களே தேவனைத் திருப்திப்படுத்துவதாகவும், மேம்போக்கான தேவ பக்தியையோ அல்லது துக்கம் நிறைந்த அழுகையையோதான் தேவன் விரும்புகிறார் என்றே எப்போதும் நம்பிக் கொண்டு அவர்கள் இத்தகைய சடங்காச்சாரங்களிலும் கருத்துக்களிலும் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட முட்டாள்தனமான மனிதர்களிடம் இருந்து என்ன நல்லது கிடைக்கும்? தாழ்மையைக் காட்டுவதற்காக பிறருக்கு முன்பாக பேசும் போது இரக்கக் குணம் இருப்பது போல நடிக்கின்றனர். சிலர் மற்றவர்கள் மத்தியில் இருக்கும் போது சிறிதளவு பெலமுமின்றி ஒரு ஆட்டுக் குட்டியைப் போல வேண்டுமென்றே தாழ்மையானவர்களைப் போல நடிக்கிறார்கள். தேவனுடைய ராஜ்யத்தின் மக்களாக இருப்பதற்கு இது சரியான முறையாக இருக்குமா? ராஜ்யத்தின் மக்கள் ஜீவனுள்ளவர்களாகவும் விடுதலையுள்ளவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் வெளிப்டையானவர்களாகவும் உண்மையானவர்களாகவும், நேசிக்கப்படத்தக்கவர்களாகவும், ஒரு சுதந்திரமான நிலையில் வாழுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் நேர்மையையும், மேன்மையையும் உடையவர்களாகவும் எங்குச் சென்றாலும் தேவனுக்குச் சாட்சியாக நிற்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும், இப்படிப்பட்டவர்கள் தேவனுக்கும் மனிதர்களுக்கும் பிரியமானவர்களாக இருக்கிறார்கள். யாரெல்லாம் விசுவாசத்திற்குப் புதியவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் அதிகமான வெளிப்புறச் சடங்குகளைக் கடைபிடிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் சில காலங்கள் நொறுங்குண்டவர்கள் ஆகும்படி கையாளப்பட வேண்டும். தேவனிடம் ஆழமான விசுவாசத்தைக் கொண்டவர்கள் வெளித்தோற்றத்தில் மற்றவர்களைவிட வித்தியாசமானவர்களாக இருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களுடைய செயல்களும் கிரியைகளும் பாராட்டும்படி இருக்கும். இப்படிப்பட்டவர்களை மட்டுமே தேவனுடைய வார்த்தையின்படி நடக்கிறவர்கள் என்று கருத முடியும். நீ பலதரப்பட்ட மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் போது முடிவில் அவர்கள் விதிமுறைகளையும், கோட்பாடுகளையும் கைக்கொண்டு வாழ்வார்களானால், உன்னால் தேவனுக்கு மகிமையைக் கொண்டு வர முடியாது. இப்படிப்பட்டவர்கள் மதவாதிகளாகவும் மாயக்காரர்களாகவும் இருக்கிறார்கள். இந்த மதவாதிகள் எப்போதெல்லாம் ஒரு சபை ஐக்கியத்திற்குள் கூடுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் ஒருவரைப் பார்த்து, “சகோதரியே, நீங்கள் இந்த நாட்களில் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்பார்களாயின், அதற்கு அந்தச் சகோதரி, “நான் தேவனுக்கு ஒரு கடனைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் ஆனால் அவரது சித்தத்தை நிறைவேற்ற முடியவில்லை என்று உணருகிறேன்” என்று கூறுவார். மற்றொருவரும், “நானும் தேவனுக்குக் கடன்பட்டு இருக்கிறேன், ஆனால் அவரைத் திருப்திப்படுத்த முடியவில்லை” என்று கூறுவார். இந்த ஒருசில வாக்கியங்களும் வார்த்தைகளும் அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கீழ்த்தரமான எண்ணங்கள் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வார்த்தைகள் மிகவும் அருவருக்கத்தக்கவையாகவும், மிகவும் அதிகமாக வெறுக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்டவர்களின் சுபாவம் தேவனுக்கு விரோதமானது. யாரெல்லாம் யதார்த்தத்தில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக ஐக்கியத்தில் கூறுகிறார்கள். அவர்கள் எந்த ஒரு தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இது போன்ற நாகரீக செயல்களையோ அல்லது வெற்று இன்பங்களையோ வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்கள் எப்போதும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள், உலகப்பிரகாரமான விதிமுறைகளைக் கடைபிடிக்க மாட்டார்கள். சிலர் முற்றிலும் அறிவில்லாத நிலை வரை கூட வெளிப்புறத் தோற்றங்களுக்கான ஒரு விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் பாட்டுப் பாடும்போது தங்கள் பானையில் சோறு ஏற்கனவே தீய்ந்துபோய்விட்டது என்பதைக் கூட அறியாமல் நடனம் ஆட ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவபக்தி உள்ளவர்களோ அல்லது கனத்திற்குரியவர்களோ அல்ல; இவர்கள் மிகவும் அற்பமானவர்கள். இவைகளெல்லாம் யதார்த்தமின்மையின் வெளிப்பாடுகளாகும். சிலர் ஆவிக்குரிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து ஐக்கியப்படும் போது, அவர்கள் தங்கள் தேவனுக்குச் செலுத்த வேண்டியது எதையும் பற்றி பேசாவிட்டாலும் இவர்கள் தேவனிடம் ஆழமான அன்பை எப்போதும் கொண்டுள்ளவர்களாக இருக்கிறார்கள். தேவனுக்கு கடன்பட்டிருக்கிறேன் என்கிற உன்னுடைய உணர்வுக்கும் மற்ற மனிதர்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை; நீ தேவனுக்கு மட்டுமே கடன்பட்டிருக்கிறாய் மனிதர்களுக்கு அல்ல. இதைக் குறித்து மற்றவர்களிடம் நீ தொடர்ச்சியாகப் பேசுவதால் என்ன பலன்? நீ யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், மற்ற எந்தவொரு வெளிப்புற வைராக்கியத்திற்கோ அல்லது வெளிக்காட்டுதலுக்கோ அல்ல. மனிதருடைய மேலோட்டமான நற்கிரியைகள் எதைக் குறிக்கின்றன? அவைகள் மாம்சத்தைக் குறிக்கின்றன, சிறந்த வெளிப்புற சடங்குகள் ஜீவனைக் குறிப்பதில்லை, அவைகளால் உன்னுடைய தனிப்பட்ட சொந்த மனோநிலையை மட்டுமே காண்பிக்க முடியும். மனிதர்களின் வெளிப்புறச் சடங்குகளால் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. நீ தொடர்ச்சியாக தேவனுக்குக் கடன்பட்டிருப்பதைக் குறித்து பேசிக் கொண்டே இருப்பாயானால் உன்னால் மற்றவர்களின் வாழ்வின் தேவைகளைச் சந்திக்க அல்லது அவர்களை தேவனை நேசிக்கும்படி ஊக்கப்படுத்த முடியாது. இப்படிப்பட்ட உன்னுடைய செயல்கள் தேவனைத் திருப்திப்படுத்தும் என்று நீ நம்புகிறாயா? உன்னுடைய செயல்கள் தேவனுடைய சித்தத்திற்கு இணக்கமாக உள்ளன என்றும், அவைகள் ஆவிக்குரியவைகள் என்றும் எண்ணுகிறாயா? ஆனால் உண்மையில் அவைகள் பொருத்தமற்றவைகளாக இருக்கின்றன. உன்னைத் திருப்திப்படுத்துபவைகளும் நீ செய்ய விரும்புகிறவைகளுமே தேவன் பிரியப்படுகிற காரியங்களாக இருப்பதாக நீ நம்புகிறாய். உன்னுடைய விருப்பங்கள் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துமா? ஒரு மனிதனுடைய குணம் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்துமா? உன்னை சந்தோஷப்படுத்தும் காரியங்களை தேவன் திட்டமாக வெறுக்கின்றார்; மேலும் உன் பழக்கவழக்கங்களைத் தேவன் வெறுத்துப் புறக்கணிக்கிறார். நீ தேவனுக்குக் கடன்பட்டிருப்பது உண்மையானால், தேவனுக்கு முன்பாகச் சென்று அவரிடத்தில் ஜெபம் செய். அதைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டிய அவசியமில்லை. நீ தேவனுக்கு முன்பாக ஜெபிக்காமல், மற்றவர்கள் மத்தியில் இருக்கும் போது அவர்கள் கவனத்தைத் தொடர்ச்சியாக உன் பக்கமாகத் திருப்ப எண்ணுவது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா? உன்னுடைய செயல்கள் எப்போதும் வெளிப்பார்வைக்காக மட்டுமே இருக்குமானால், நீ மிகவும் விருதாவானவன் என்று அர்த்தமாகும். மேலோட்டமான நற்கிரியைகளைச் செய்து கொண்டு யதார்த்தமில்லாமல் இருக்கும் மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கின்றனர்? இப்படிபட்டவர்கள் மாயக்காரராகிய பரிசேயரைப் போல் மதத்தலைவர்களாக இருகின்றனர். உங்களுடைய வேஷமான செயல்களை விட்டுவிடவும், மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை என்றால், இந்த மாய்மாலத்தின் காரணக்கூறுகள் மென்மேலும் வளரும். உங்களுடைய மாய்மாலம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ, தேவன் மீதான எதிர்ப்பும் அவ்வளவு அதிகமாக இருக்கும். முடிவில் இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக புறம்பாக்கப்படுவார்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தில் ஒருவர் யதார்த்தத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும்—மதச்சடங்குகளில் ஈடுபடுவது விசுவாசமல்ல” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 436

ஒரு சாதாரண மனுஷனின் சாயலை மீட்டெடுப்பதற்காக, அதாவது சாதாரண மனிதத் தன்மையை அடைவதற்கு, ஜனங்கள் தங்கள் வார்த்தைகளால் மட்டும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவிக்கிறார்கள். மேலும் அது அவர்களின் பிரவேசம் அல்லது மாற்றத்திற்கு பலனளிக்காது. எனவே, மாற்றத்தை அடைய, ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் மெதுவாகப் பிரவேசிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகத் தேட வேண்டும், ஆராய வேண்டும், நேர்மறையில் இருந்து பிரவேசிக்க வேண்டும், சத்தியத்தின் நடைமுறை வாழ்க்கையை வாழ வேண்டும்; அதாவது ஒரு புனித வாழ்க்கை. அதன்பிறகு, யதார்த்த விஷயங்கள், யதார்த்த நிகழ்வுகள் மற்றும் யதார்த்த சூழல்கள் மக்களுக்கு நடைமுறைப் பயிற்சி பெற அனுமதிக்கின்றன. ஜனங்கள் எந்தவித உதட்டளவிளான சேவையையும் செய்யத் தேவையில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் யதார்த்தமான சூழலில் பயிற்சி பெற வேண்டும். ஜனங்கள் முதலில் அவர்கள் திறமையில் பெலவீனமுள்ளவர்கள் என்பதை உணர்ந்து, பின்னர் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைச் சாதாரணமாகப் புசித்து, குடிக்கிறார்கள். மேலும் சாதாரணமாகப் பிரவேசித்து பயிற்சி செய்கிறார்கள்; இந்த வழியில் மட்டுமே அவர்கள் யதார்த்தத்தைப் பெற முடியும். மேலும் பிரவேசம் இன்னும் விரைவாக நிகழக்கூடும். ஜனங்களை மாற்றுவதற்கு சில நடைமுறைகள் இருக்க வேண்டும்; அவர்கள் யதார்த்தமான விஷயங்கள், யதார்த்தமான நிகழ்வுகள் மற்றும் யதார்த்தமான சூழல்களில் பயிற்சி செய்ய வேண்டும். சபை வாழ்க்கையை மட்டும் நம்பி ஒருவர் உண்மையான பயிற்சியைப் பெற முடியுமா? இந்த வழியில் ஜனங்கள் யதார்த்தத்தில் பிரவேசிக்க முடியுமா? இல்லை! ஜனங்கள் யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்க முடியாவிட்டால், அவர்களுடைய பழைய வாழ்க்கை முறையையும், விஷயங்களைச் செய்யும் வழிகளையும் மாற்ற முடியாது. இது முற்றிலும் ஜனங்களின் சோம்பேறித்தனம் மற்றும் அதிக அளவிலான சார்புநிலை காரணமாக இல்லை; மாறாக, ஜனங்கள் வாழ்வதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, மேலும், ஒரு சாதாரண மனுஷனின் சாயலைப் பற்றிய தேவனுடைய தரத்தைப் பற்றி அவர்களுக்கு எந்தவொரு புரிந்துகொள்ளுதலும் இல்லை என்பதையும் காட்டுகிறது. கடந்த காலங்களில், ஜனங்கள் எப்போதும் பேசிக் கொண்டிருந்தார்கள், உரையாடினார்கள், எடுத்துரைத்தார்கள்—அவர்கள் “சொற்பொழிவாளர்களாக” கூட மாறினர்—ஆனால் அவர்களில் எவரும் தங்கள் வாழ்க்கையில் மனநிலை மாற்றத்தைத் தேடவில்லை; மாறாக, அவர்கள் கண்மூடித்தனமாக ஆழ்ந்த கோட்பாடுகளைத் தேடினார்கள். ஆகவே, இன்றைய ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் மீதான இந்த மத நம்பிக்கைப் பாணியை மாற்ற வேண்டும். ஒரு நிகழ்வு, ஒரு விஷயம், ஒரு நபர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் நடைமுறையில் பிரவேசிக்க வேண்டும். அவர்கள் அதைக் குறிக்கோளாகக் கொண்டு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் விளைவுகளைப் பெற முடியும். ஜனங்களின் மாற்றம் அவர்களின் சாராம்சத்தின் மாற்றத்துடன் தொடங்குகிறது. இந்த வேலை ஜனங்களின் சாராம்சம், அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சோம்பல், சார்பு மற்றும் அடிமைத்தனத்தை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

சபை வாழ்க்கை சில பகுதிகளில் விளைவுகளைத் தரக்கூடும் என்றாலும், யதார்த்த வாழ்க்கையே ஜனங்களை மாற்றும் என்பதே முக்கியம். ஒருவரின் பழைய சுபாவத்தை யதார்த்த வாழ்க்கை இல்லாமல் மாற்ற முடியாது. உதாரணமாகக், கிருபையின் காலத்தில் இயேசுவின் கிரியையை எடுத்துக் கொள்வோம். இயேசு முந்தைய நியாயப்பிரமாணங்களை ஒழித்து, புதிய காலத்துக் கட்டளைகளை நிறுவியபோது, யதார்த்த வாழ்க்கையிலிருந்து உண்மையான உதாரணங்களைப் பயன்படுத்திப் பேசினார். இயேசு தம்முடைய சீஷர்களை ஓர் ஓய்வு நாளில் கோதுமை வயல் வழியாக அழைத்துச் செல்லும்போது, அவருடைய சீஷர்கள் பசியோடு, சாப்பிட தானியக் கதிர்களைப் பறித்தனர். இதைப் பார்த்த பரிசேயர்கள், அவர்கள் ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை என்று சொன்னார்கள். ஓய்வு நாளின் போது எந்த வேலையும் செய்யக்கூடாது என்றும், ஓய்வு நாளின் போது குழிக்குள் விழுந்த கன்றுகளைக் காப்பாற்ற ஜனங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினர். புதிய காலத்தின் கட்டளைகளைப் படிப்படியாக அறிவிக்க இந்தச் சம்பவங்களை இயேசு மேற்கோள் காட்டினார். அந்தச் சமயத்தில், அவர் புரிந்துகொள்ளவும் மாறவும் ஜனங்களுக்கு உதவக்கூடிய பல நடைமுறை விஷயங்களைப் பயன்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய கிரியையைச் செய்வதற்கான கொள்கை இதுதான், ஜனங்களை மாற்றக்கூடிய ஒரே வழி இதுவே ஆகும். நடைமுறை விஷயங்கள் இல்லாமல், ஜனங்கள் ஒரு தத்துவார்த்த மற்றும் அறிவார்ந்த புரிதலை மட்டுமே பெற முடியும்—இது மாறுவதற்கான சிறந்த வழி அல்ல. பயிற்சியின் மூலம் ஒருவர் ஞானத்தையும் நுண்ணறிவையும் எவ்வாறு பெறுகிறார்? ஜனங்கள் கவனித்தல், வாசித்தல் மற்றும் தங்கள் அறிவில் முன்னேறுதல் மூலம் ஞானத்தையும் நுண்ணறிவையும் பெற முடியுமா? அவ்வாறு எப்படி இருக்க முடியும்? யதார்த்த வாழ்க்கையில் ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும்! ஆகவே, ஒருவர் பயிற்சி பெற வேண்டும். மேலும் ஒருவர் யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலகக்கூடாது. ஜனங்கள் வெவ்வேறு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும், மற்றும் பல்வேறு அம்சங்களில் பிரவேசிக்க வேண்டும்: கல்வி நிலை, வெளிப்படுத்தும் தன்மை, விஷயங்களைக் காணும் திறன், பகுத்தறிதல், தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் திறன், பொது அறிவு மற்றும் மனிதத் தன்மையின் விதிகள், மற்றும் மனிதத் தன்மை தொடர்பான பிற விஷயங்களில் ஜனங்கள் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். புரிதலைப் பெற்றுக்கொண்ட பிறகு, ஜனங்கள் பிரவேசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் மாற்றம் அடைய முடியும். யாராவது புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருந்தாலும், அவர்கள் நடைமுறையைப் புறக்கணித்தால், மாற்றம் எவ்வாறு நிகழும்? தற்போது, ஜனங்கள் அதிகம் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்கள் யதார்த்தமாக வாழவில்லை. இவ்வாறு, தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அத்தியாவசியமான புரிதலை அவர்கள் கொண்டிருக்கவில்லை. நீ ஓரளவு மட்டுமே போதிக்கப்பட்டிருக்கிறாய்; நீங்கள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து ஒரு சிறிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறீர்கள்; ஆனாலும் உங்களுக்கு யதார்த்த வாழ்க்கையில் எவ்வித பிரவேசமும் இல்லை—அல்லது நீ பிரவேசிப்பதைப் பற்றி அக்கறை கூட கொள்ளாது இருந்திருக்கலாம். இப்படி, உன்னுடைய மாற்றம் குறைவுபட்டிருக்கிறது. இவ்வளவு காலம் கழித்து, ஜனங்கள் அதிகம் புரிந்துகொள்கிறார்கள். அவர்களது கோட்பாடுகளைப் பற்றிய அவர்களின் அறிவைப் பற்றி நிறைய பேச முடிகிறது. ஆனால் அவர்களின் வெளிப்புற மனநிலை அப்படியே இருக்கிறது; அவர்களின் அசல் பண்பும் அப்படியே இருக்கிறது; சிறிதளவும் முன்னேறவில்லை. இப்படி இருந்தால், நீ இறுதியாக எப்பொழுது தான் பிரவேசிப்பாய்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சபை வாழ்க்கை மற்றும் யதார்த்த வாழ்க்கையை விவாதித்தல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 437

சபை வாழ்க்கை என்பது தேவனுடைய வார்த்தைகளை ருசிக்க ஜனங்கள் கூடும் ஒரு வகையான வாழ்க்கை மட்டுமே; மேலும் இது ஒருவரது வாழ்க்கையின் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே. ஜனங்களின் யதார்த்த வாழ்க்கையும் அவர்களின் சபை வாழ்க்கையைப் போலவே இருக்க முடியுமானால், சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கை உட்பட, பொதுவாக தேவனின் வார்த்தைகளை ருசிப்பது, ஜெபிப்பது மற்றும் தேவனுடன் நெருக்கமாக இருப்பது, தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்தும் கொண்டு செல்லப்படும் ஒரு யதார்த்த வாழ்க்கையை வாழ்வது, எல்லாமே சத்தியத்திற்கு ஏற்றபடி நடக்கிற யதார்த்த வாழ்க்கை வாழ்வது; ஒரு யதார்த்த வாழ்க்கையை வாழ்தல் என்பது ஜெபத்தைப் பயிற்சி செய்தல், தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கப் பயிற்சி செய்தல், கீர்த்தனைப் பாடல்களைப் பாடுவதற்கும் நடனம் ஆடுவதற்கும் பயிற்சி செய்தல்—அப்படியானால், இதுதான் தேவனுடைய வார்த்தைகளின் ஜீவனுக்குள் கொண்டு வரும் ஒரு வாழ்க்கை. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் சபை வாழ்க்கையின் பல மணிநேரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அந்த மணிநேரங்களுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையை “கவனித்துக் கொள்ளாமல்,” அதில் அவர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லாதது போல் இருக்கிறார்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிக்கும்போது, பருகும்போது, கீர்த்தனைப் பாடல்களைப் பாடும்போது, அல்லது ஜெபிக்கும்போது மட்டுமே பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் பிரவேசிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அந்த நேரங்களுக்குப் பின்னர் தங்கள் பழைய நிலைக்குத் திரும்புகிறார்கள். இப்படி வாழ்வதால் ஜனங்களை மாற்ற முடியாது. தேவனை அறிந்து கொள்ள வைப்பது மிகக் குறைந்த அளவில் இருக்கும். தேவனை நம்புவதில், ஜனங்கள் தங்கள் மனநிலையில் மாற்றத்தை விரும்பினால், அவர்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து தங்களை விலக்கி வைக்கக்கூடாது. யதார்த்த வாழ்க்கையில், நீ உன்னை அறிந்து கொள்ள வேண்டும், உன்னை வெறுக்க வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அதேபோல், நீ படிப்படியாக மாற்றத்தை அடைவதற்கு முன்னர், எல்லாவற்றிலும் கொள்கைகள், பொது அறிவு மற்றும் சுய நடத்தை விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ தத்துவார்த்த அறிவில் மட்டுமே கவனம் செலுத்தி, யதார்த்த வாழ்க்கையில் ஆழமாகச் செல்லாமல், யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்காமல், மதச் சடங்குகளில் மட்டுமே வாழ்ந்தால், நீ ஒருபோதும் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கமாட்டாய். உன்னை, சத்தியத்தை, அல்லது தேவனை நீ ஒருபோதும் அறியமாட்டாய்; நீ என்றென்றும் குருடனாயும் அறியாமையிலுள்ளவனாயும் இருப்பாய். ஜனங்களை இரட்சிக்கும் தேவனுடைய கிரியை, குறுகிய காலத்திற்குப் பிறகு சாதாரண மனுஷ வாழ்க்கையை வாழ அனுமதிப்பதற்காக அல்ல; அவர்களின் தவறான கருத்துகளையும் கோட்பாடுகளையும் மாற்றுவதற்காகவும் அல்ல. மாறாக, அவருடைய நோக்கம் ஜனங்களின் பழைய மனநிலையை மாற்றுவது, அவர்களின் பழைய வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றுவது, மற்றும் அவர்களின் காலாவதியான சிந்தனை செய்யும் வழிகள் மற்றும் மனதின் நோக்கம் அனைத்தையும் மாற்றுவதாகும். சபை வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவது ஜனங்களின் பழைய வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை மாற்றாது, அல்லது நீண்ட காலமாக அவர்கள் வாழ்ந்த பழைய வழிகளை மாற்றாது. எதுவாக இருந்தாலும், ஜனங்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலக்கப்படக்கூடாது. சபை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், யதார்த்த வாழ்க்கையிலும் ஜனங்கள் சாதாரண மனித தன்மையுடன் வாழ வேண்டும் என்று தேவன் கேட்கிறார்; சபை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் யதார்த்த வாழ்க்கையிலும் அவர்கள் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்கள்; சபை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் யதார்த்த வாழ்க்கையிலும் அவர்கள் தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுகிறார்கள். யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க, ஒருவர் எல்லாவற்றையும் யதார்த்த வாழ்க்கையை நோக்கித் திருப்ப வேண்டும். தேவனை நம்புவதால், யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிப்பதின் மூலம் ஜனங்கள் தங்களை அறிந்து கொள்ள முடியாவிட்டால் யதார்த்த வாழ்க்கையில் சாதாரண மனித தன்மையுடன் வாழ முடியாவிட்டால், அப்பொழுது, அவர்கள் தோல்வியுற்றவர்களாக மாறுவார்கள். தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்க முடியாதவர்கள். அவர்கள் அனைவரும் மனிதத் தன்மையைப் பற்றி பேசும் ஜனங்கள். ஆனால் பிசாசின் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்தியத்தைப் பேசுகிற, ஆனால் அதற்குப் பதிலாகக் கோட்பாடுகளில் வாழ்கிற ஜனங்கள். யதார்த்த வாழ்க்கையில் சத்தியத்தைக்கொண்டு வாழ முடியாதவர்கள் தேவனை விசுவாசிப்பவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் அவரால் வெறுக்கப்படுகிறார்கள் மற்றும் நிராகரிக்கப்படுகிறார்கள். நீ யதார்த்த வாழ்க்கையில் உன்னுடைய பிரவேசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களது சொந்தக் குறைபாடுகள், கீழ்ப்படியாமை மற்றும் அறியாமை ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்; மேலும் உங்கள் விநோதமான மனிதத் தன்மையையும் பலவீனங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், உன் அறிவு உன்னுடைய யதார்த்த நிலை மற்றும் சிரமங்களுடன் ஒன்றிணைக்கப்படும். இந்த வகையான அறிவு மட்டுமே உண்மையானது மற்றும் உன் சொந்த நிலையை உண்மையாகப் புரிந்துகொள்ளவும், மனநிலையில் மாற்றத்தை அடையவும் உன்னை அனுமதிக்கும்.

இப்போது ஜனங்களைப் பூரணப்படுத்துவது முறையாக ஆரம்பமாகிவிட்டது. நீங்கள் யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்க வேண்டும். எனவே, மாற்றத்தை அடைய, நீங்கள் யதார்த்த வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதிலிருந்து தொடங்க வேண்டும். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். நீ சாதாரண மனுஷ வாழ்க்கையைத் தவிர்த்து, ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுவதால் மட்டுமே, விஷயங்கள் வறண்டு, பொருளற்றுப் போகின்றன; அவை நம்பத்தகாதவையாகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில், ஜனங்கள் எவ்வாறு மாற முடியும்? உண்மையான அனுபவத்திற்குள் பிரவேசிப்பதற்கான ஓர் அடித்தளத்தை அமைப்பதற்காக, நீ பயிற்சி பெற யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறாய். ஜனங்கள் செய்ய வேண்டியவற்றின் ஓர் அம்சம் இது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை முக்கியமாக வழிகாட்டுவதாகும். மீதமுள்ளவை ஜனங்களின் நடைமுறை மற்றும் பிரவேசித்தலைப் பொறுத்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதைகள் மூலம் யதார்த்த வாழ்க்கையின் பிரவேசத்தை அடையலாம். அதாவது அவர்கள் தேவனை யதார்த்த வாழ்க்கையில் கொண்டு வர முடியும். மேலும் உண்மையான சாதாரண மனிதத் தன்மையுடன் வாழ முடியும். அர்த்தமுள்ள ஒரு வகையான வாழ்க்கை இதுதான்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சபை வாழ்க்கை மற்றும் யதார்த்த வாழ்க்கையை விவாதித்தல்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 438

முன்னதாக, பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருத்தல் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருத்தல் ஆகிய இரண்டும் வேறுபட்டவை என்று கூறப்பட்டது. பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றிருப்பதன் சாதாரண நிலையானது சாதாரண எண்ணங்கள், சாதாரண பகுத்தறிவு மற்றும் சாதாரண மனிதத்தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பதில் வெளிப்படுகிறது. ஒரு நபரின் குணாதிசயமானது முன்பு இருந்தது போலவே இருக்கும்; ஆனால் அவர்களுக்குள் சமாதானம் இருக்கும், மேலும் வெளிப்புறமாக அவர்களுக்கு ஒரு பரிசுத்தவானுக்கான ஒழுக்கம் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருக்கும்போது அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தை ஒருவர் பெற்றிருக்கும்போது, அவர்களின் சிந்தனை சாதாரணமானதாக இருக்கும். அவர்கள் பசியாக இருக்கும்போது அவர்கள் புசிக்க விரும்புவார்கள், தாகமாக இருக்கும்போது தண்ணீர் குடிக்க விரும்புவார்கள். சாதாரண மனிதத் தன்மையின் இத்தகைய வெளிப்பாடுகள் பரிசுத்த ஆவியானவரின் போதனை அல்ல; அவை மக்களின் சாதாரண சிந்தனை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருத்தலின் சாதாரண நிலை ஆகியவையாகும். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றிருப்பவர்களுக்கு பசி தெரியாது என்றும், அவர்கள் களைப்பை உணர்வதில்லை என்றும், அவர்களுக்குக் குடும்பத்தைப் பற்றிய எந்த சிந்தனையும் இருப்பதில்லை என்றும், மாம்சத்திலிருந்து தங்களை முற்றிலும் விலக்கிக்கொள்கிறார்கள் என்றும் சிலர் தவறாக நம்புகிறார்கள். உண்மையில், எவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் சாதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்காகத் துன்பப்படுவதற்கும் காரியங்களை விட்டுக்கொடுப்பதற்கும், தேவனுக்காகத் தங்களை அர்ப்பணிப்பதற்கும், தேவனுக்கு நன்றி விசுவாசமாக இருப்பதற்கும் அறிவார்கள்; அதுமட்டுமின்றி, அவர்கள் உணவு மற்றும் ஆடைகளைப் பற்றியும் சிந்திக்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் கொண்டிருக்க வேண்டிய சாதாரண மனிதத் தன்மையில் ஒன்றையும் அவர்கள் இழந்து போகவில்லை; அதற்குப் பதிலாக, குறிப்பாக பகுத்தறிவைப் பெற்றுள்ளனர். சில சமயங்களில், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படித்து, தேவனுடைய கிரியையைப் பற்றி சிந்திக்கிறார்கள்; அவர்களின் இருதயங்களில் விசுவாசம் இருக்கிறது, அவர்கள் சத்தியத்தைப் பின்தொடர தயாராக இருக்கிறார்கள். இயற்கையாகவே, பரிசுத்த ஆவியானவரின் கிரியை இந்த அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜனங்களுக்கு சாதாரண சிந்தனை இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு எந்த பகுத்தறிவும் இருப்பதில்லை. இது சாதாரண நிலை அல்ல. ஜனங்களுக்கு சாதாரண சிந்தனை இருக்கும்போது மற்றும் பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருக்கும்போது, அவர்கள் நிச்சயமாக ஒரு சாதாரண நபரின் பகுத்தறிவைக் கொண்டிருக்கிறார்கள்; இவ்வாறு அவர்களுக்கு ஒரு சாதாரண நிலை இருக்கிறது. தேவனுடைய கிரியையை அனுபவிக்கும் போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியை எப்போதாவது நடக்கிறது; அதேசமயம் பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருப்பது கிட்டத்தட்ட இடைவிடாமல் காணப்படுகிறது. ஜனங்களின் பகுத்தறிவும் சிந்தனையும் சாதாரணமானதாக இருக்கும் வரை, அவர்களின் நிலைகள் சரியாக இருக்கும் வரை, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாகவே அவர்களுடன் இருக்கிறார். ஜனங்களின் பகுத்தறிவும் சிந்தனையும் சாதாரணமானதாக இல்லாதபோது, அவர்களின் மனிதத் தன்மை சாதாரணமானதாக இருக்காது. இந்தத் தருணத்தில், பரிசுத்த ஆவியானவரின் கிரியை உனக்குள் காணப்பட்டால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாகவே உன்னுடன் இருப்பார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் உன்னுடன் இருந்தால், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உனக்குள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தமல்ல. ஏனென்றால், பரிசுத்த ஆவியானவர் விசேஷித்த நேரங்களில் கிரியை செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைக் கொண்டிருப்பதால் மட்டுமே, ஜனங்களால் சாதாரண வாழ்க்கையைப் பராமரிக்க முடியும்; ஆனால் பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கிரியை செய்கிறார். உதாரணமாக, நீ ஒரு தலைவனாகவோ அல்லது ஊழியக்காரனாகவோ இருந்தால், நீ சபைக்குத் தண்ணீர் பாய்ச்சி ஆகாரம் அளிக்கும் போது, மற்றவர்களுக்குப் பக்தி விருத்தி உண்டாகும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் சில வார்த்தைகளை உனக்குப் போதிப்பார். மேலும் உங்களில் சில சகோதர சகோதரிகளின் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கக் கூடும். இதுபோன்ற சமயங்களில், பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார். சில நேரங்களில், நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, பரிசுத்த ஆவியானவர் உன்னுடைய சொந்த அனுபவங்களுக்கு மிகவும் பொருத்தமான சில வார்த்தைகளால் உன்னைப் போதிப்பார்; மேலும் நீ உன்னுடைய சொந்த நிலைகள் குறித்த அதிக அறிவைப் பெற உன்னை அனுமதிப்பார்; இதுவும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை தான். சில நேரங்களில், நான் பேசும்போது, நீங்கள் கவனிக்கிறீர்கள், உங்கள் சொந்த நிலைகளை என் வார்த்தைகளினால் அளவிட முடிகிறது, சில சமயங்களில் நீங்கள் தொடப்படுகிறீர்கள் அல்லது ஏவப்படுகிறீர்கள்; இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியை. பரிசுத்த ஆவியானவர் எல்லா நேரங்களிலும் அவர்களுக்குள் கிரியை செய்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். இது சாத்தியமற்றது. பரிசுத்த ஆவியானவர் எப்போதும் தங்களுடன் இருக்கிறார் என்று அவர்கள் கூறுவார்களானால், அது யதார்த்தமானதாக இருக்கும். தங்களின் சிந்தனையும் உணர்வும் எல்லா நேரங்களிலும் சாதாரணமானதாக இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்களானால், அதுவும் யதார்த்தமானதாக இருக்கும். மேலும் அது பரிசுத்த ஆவியானவர் அவர்களுடன் இருப்பதைக் காண்பிக்கும். பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் தங்களுக்குள் கிரியை செய்கிறார் என்றும், அவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்கள் என்றும், ஒவ்வொரு தருணத்திலும் பரிசுத்த ஆவியானவரானால் தொடப்பட்டவர்கள் என்றும், எல்லா நேரத்திலும் புதிய அறிவைப் பெறுவார்கள் என்றும் அவர்கள் கூறினால், இது எந்த வகையிலும் சரியல்ல! இது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டது! அத்தகையவர்கள் அசுத்த ஆவிகள் என்பதில் ஒரு சந்தேகத்தின் நிழல் கூட இல்லை! தேவனுடைய ஆவியானவர் மாம்சத்திற்குள் வரும்போது கூட, மனுஷர்களைப் பற்றி எதுவும் கூறாமல் அவர் சாப்பிட மற்றும் ஓய்வெடுக்க வேண்டிய தருணங்களும் உண்டு. அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவர்கள் மாம்சத்தில் பலவீனம் இல்லாமல் இருப்பது போலத் தெரிகிறது. அவர்கள் எல்லாவற்றையும் கைவிட்டு, விட்டு விட முடிகிறது, அவர்கள் உணர்ச்சியிலிருந்து விடுபடுகிறார்கள், வேதனையைத் தாங்கும் திறன் கொண்டவர்களாக, மாம்சத்தைக் கடந்ததைப் போல சிறிதளவு களைப்பையும் உணர்வதில்லை. இது மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்லவா? அசுத்த ஆவிகளின் கிரியை இயற்கைக்கு அப்பாற்பட்டது. எந்த மனுஷனும் அத்தகைய விஷயங்களை அடைய முடியாது! பகுத்தறியும் தன்மை இல்லாதவர்கள் அத்தகையவர்களைப் பார்க்கும்போது பொறாமைப்படுகிறார்கள்: அவர்கள் தேவன் மீதுள்ள நம்பிக்கையில் அத்தகைய பலம் இருப்பதாகவும், மிகுந்த விசுவாசம் வைத்திருப்பதாகவும், பலவீனத்தின் சிறிதளவு அடையாளத்தையும் ஒருபோதும் காட்ட மாட்டார்கள் என்றும் கூறுகிறார்கள்! உண்மையில், இவை அனைத்தும் ஓர் அசுத்த ஆவியின் கிரியையின் வெளிப்பாடுகள். ஏனெனில், சாதாரண ஜனங்கள் தவிர்க்க முடியாமல் மனித பலவீனங்களைக் கொண்டுள்ளனர்; பரிசுத்த ஆவியானவரின் சமுகத்தைப் பெற்றிருப்பவர்களின் சாதாரண நிலை இதுவாகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 439

ஒருவரது சாட்சியில் உறுதியாக நிற்பது என்பது எதைக் குறிக்கிறது? சிலர், இப்போது செய்வதைப் போலவே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்; மேலும் அவர்கள் ஜீவனை ஆதாயப்படுத்திக்கொள்ள வல்லவர்களா என்பதைப் பற்றி அக்கறை கொள்வதில்லை; அவர்கள் ஜீவனைப் பின்தொடருவதில்லை; ஆனால் அவர்கள் பின்வாங்குவதுமில்லை. இந்தக் கட்ட கிரியை தேவனால் செய்யப்படுகிறது என்பதை மட்டுமே அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது அவர்களின் சாட்சியில் தோல்வியடைதல் அல்லவா? அத்தகையவர்கள் ஜெயங்கொண்டதாக சாட்சி பகருவதில்லை. ஜெயங்கொண்டவர்கள் எதையும் பொருட்படுத்தாமல் பின்பற்றி, ஜீவனைப் பற்றிக்கொள்ள முடிகிறது. அவர்கள் நடைமுறைத் தேவனை நம்புவது மட்டுமல்லாமல், தேவனுடைய எல்லா திட்டங்களையும் பின்பற்றவும் அறிந்திருக்கிறார்கள். அத்தகையவர்கள் சாட்சி அளிப்பவர்கள். சாட்சி அளிக்காதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பின்தொடரவில்லை, இன்னும் குழப்பத்துடன் தொடர்கிறார்கள். நீ பின்பற்றலாம், ஆனால் நீ ஜெயங்கொண்டதாக அர்த்தமாகிவிடாது; ஏனென்றால் இன்று தேவனுடைய கிரியையைப் பற்றி உனக்குப் புரிதல் இல்லை. ஜெயங்கொள்ள சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். பின்தொடர்பவர்கள் அனைவரும் ஜெயங்கொள்ளவில்லை; ஏனென்றால் நீ இன்றைய தேவனை ஏன் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி உன்னுடைய இருதயத்தில் உனக்கு எந்தவித புரிதலும் இல்லை, நீ இன்று அதை எவ்வாறு எடுத்துக் கொண்டாய் என்பதும் உனக்குத் தெரியாது; இன்று வரை உன்னை ஆதரித்தது யார் என்பதும் உனக்குத் தெரியாது. தேவன் மீது விசுவாசம் கொண்ட சிலரின் பயிற்சி எப்போதும் சீரற்றதாகவும் குழப்பத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும்; எனவே, நீ பின்தொடர்கிறாய் என்பதால் சாட்சியளிக்கிறாய் என்று அர்த்தமல்ல. உண்மையான சாட்சி என்பது என்ன? இங்கே கூறப்படுகிற சாட்சி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: ஒன்று ஜெயங்கொள்ளுவதற்கான சாட்சியாகும், மற்றொன்று பரிபூரணப்படுத்தப்பட்டதற்கான சாட்சியாகும் (இது இயற்கையாகவே, பெரிய சோதனைகளையும் எதிர்காலத்தின் உபத்திரவங்களையும் தொடர்ந்து வரும் சாட்சியாக இருக்கும்). வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன்னால் உபத்திரவங்களிலும் சோதனைகளிலும் உறுதியாக நிற்க முடிந்தால், நீ சாட்சியின் இரண்டாவது கட்டத்தைப் பெற்றிருப்பாய். இன்று முக்கியமானது சாட்சியின் முதல் படியாகும்: சிட்சைக்கான உபத்திரவம் மற்றும் நியாயத்தீர்ப்பின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உறுதியாக நிற்கத் திறமையைப் பெற்றிருப்பதாகும். இது ஜெயங்கொள்வதற்கான சாட்சியாகும். ஏனென்றால், இப்போது ஜெயங்கொள்ளும் நேரம். (பூமியில் தேவன் கிரியை செய்யும் நேரம் இது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்; பூமியில் மாம்சமாகிய தேவனுடைய முக்கிய கிரியை, நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் அவரைப் பின்பற்றும் பூமியிலுள்ள இந்த ஜனங்கள் கூட்டத்தை ஜெயங்கொள்வதாகும்). வெற்றி சிறந்த சாட்சிகளைப் பெற்றிருப்பதற்கான திறனை நீ கொண்டிருக்கிறாயா இல்லையா என்பது, உன்னால் இறுதிவரை பின்பற்ற இயலுமா என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல; ஆனால், மிக முக்கியமாக, தேவனுடைய ஒவ்வொரு கட்ட கிரியையையும் நீ உணரும்போது, தேவனுடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய உண்மையான புரிதலுக்கு நீ தகுதியானவனா, இந்தக் கிரியையை நீ உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாயா என்பதைப் பொறுத்தது. இறுதிவரை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே உங்களால் ஒதுங்கிச் செல்ல முடியாது. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீ முழுமனதுடன் உன்னை அர்ப்பணிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும்; நீ அனுபவிக்கும் ஒவ்வொரு கட்ட கிரியையையும் உண்மையாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும்; மேலும் அறிவை அடைந்து கொண்டு, தேவனின் மனநிலைக்குக் கீழ்ப்படிகிறவனாயும் இருக்க வேண்டும்; இது ஜெயங்கொண்டதற்கான இறுதி சாட்சியாகும். உன்னிடத்திலிருந்து எதிர்பார்க்கப்படுகிற சாட்சி இதுவே. ஜெயங்கொண்டதற்கான சாட்சி முதன்மையாக தேவனுடைய மனுஷரூபமெடுத்தல் பற்றிய உன்னுடைய அறிவைக் குறிக்கிறது. முக்கியமாக, இந்த சாட்சியின் படியானது தேவனுடைய மனுவுருவெடுத்தலைப் பற்றியது. உலக ஜனங்கள் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு முன்பாக நீ என்ன செய்கிறாய் அல்லது கூறுகிறாய் என்பது முக்கியமல்ல; எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய வாயிலிருந்து வருகிற அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவருடைய கிரியைகளுக்கும் கீழ்ப்படிய முடியுமா என்பது தான் முக்கியம். ஆகையால், சாட்சியின் இந்தப் படியானது, இரண்டாவது முறை தேவன் மாம்சமாகி, இன்னும் மகத்தான காரியங்களைச் செய்ய வருவார் என்று விசுவாசிக்காத, சாத்தானுக்கும் மற்றும் தேவனுடைய அனைத்து சத்துருக்கள்—அதாவது பிசாசு மற்றும் பகையாளிகள் அனைவருக்கும், இன்னும் அதிகமாக, தேவன் மாம்சத்திற்குத் திரும்புகிற உண்மையை விசுவாசிக்காதவர்களுக்கும் சொல்லப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது எல்லா அந்திக்கிறிஸ்துகளுக்கும்—அதாவது தேவனுடைய மனுவுருவை விசுவாசிக்காத அனைத்து சத்துருக்களுக்கு எதிராகவும் கூறப்படுவதாகும்.

தேவனைப் பற்றி சிந்திப்பதும், தேவனுக்காக ஏங்குவதும் நீ தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கவில்லை; அவர் மாம்சமான வார்த்தை என்று நீ நம்புகிறாயா, வார்த்தை மாம்சமாகிவிட்டது என்று நீ நம்புகிறாயா, ஆவியானவர் வார்த்தையாகிவிட்டார் என்று நம்புகிறாயா, மற்றும் வார்த்தை மாம்சத்தில் தோன்றியதை நம்புகிறாயா என்பதைப் பொறுத்தது. இது முக்கியமான சாட்சியம். நீ எவ்வாறு பின்பற்றுகிறாய், அல்லது நீ உன்னையே எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பது முக்கியமல்ல; முக்கியமானது என்னவென்றால், இந்த சாதாரண மனிதகுலத்திலிருந்து வார்த்தை மாம்சமாகிவிட்டது என்பதையும், சத்தியத்தின் ஆவி மாம்சத்தில் உணரப்பட்டதையும் நீ கண்டுபிடிக்க முடியுமா—அதாவது எல்லா சத்தியமும், வழியும், ஜீவனும் மாம்சத்தில் வந்துவிட்டன, தேவனின் ஆவி மெய்யாகவே பூமியில் வந்துவிட்டது, ஆவியானவர் மாம்சத்தில் வந்துவிட்டார். இருப்பினும், மேலோட்டமாக, இது பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படுதலிருந்து வித்தியாசமாகத் தோன்றுகிறது; ஆவியானவர் ஏற்கனவே மாம்சத்தில் உணரப்பட்டிருப்பதையும் மற்றும், அதற்கும் மேலாக, வார்த்தை மாம்சமாகிவிட்டது, மேலும் வார்த்தை மாம்சத்தில் தோன்றியிருக்கிறது என்பதையும் இந்தக் கிரியையில் உங்களால் மிகவும் தெளிவாகக் காண முடிகிறது. இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” மேலும், இன்றைய வார்த்தை தேவன் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்; இதோ, வார்த்தை மாம்சமாகிவிட்டது. இதுவே நீ பகரக்கூடிய சிறந்த சாட்சி. இது மாம்சமாகியிருக்கிற தேவனைப் பற்றிய உண்மையான அறிவை நீ கொண்டிருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறது—அதாவது நீ அவரைத் தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், இன்று நீ நடக்கிற பாதை ஜீவ வழி, மற்றும் சத்திய வழி என்பதை அறிந்திருக்கிறாய். இயேசு செய்த கிரியையின் கட்டமானது “வார்த்தை தேவனிடத்தில் இருந்தது” என்ற சாராம்சத்தை மட்டுமே நிறைவேற்றியது: தேவனுடைய சத்தியம் தேவனிடத்தில் இருந்தது; மேலும், தேவனுடைய ஆவி மாம்சத்தினிடத்தில் இருந்தது; மேலும் அந்த மாம்சத்திலிருந்து பிரிக்க முடியாததாய் இருந்தது. அதாவது, மாம்சமாகிய தேவனுடைய சரீரம் தேவ ஆவியினிடத்தில் இருந்தது; இது மாம்சமாகிய இயேசு தேவனுடைய முதல் மனுவுருவெடுத்தல் என்பதற்கான மிகப்பெரிய சான்று. கிரியையின் இந்தக் கட்டமானது “வார்த்தை மாம்சமாகிறது” என்பதன் உள்ளான அர்த்தத்தை சரியாக நிறைவேற்றுகிறது, “அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்பதற்கு ஆழமான அர்த்தத்தைக் கொடுத்தது, மேலும், “ஆதியிலே வார்த்தை இருந்தது” என்ற வார்த்தைகளை உறுதியாய் விசுவாசிக்கச் செய்கிறது. அதாவது, சிருஷ்டிப்பின் போது தேவன் வார்த்தைகளை உடையவராய் இருந்தார், அவருடைய வார்த்தைகள் அவரிடத்தில் இருந்தன மற்றும் அவரிடமிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன, மேலும் இந்தக் கடைசி காலத்தில், அவருடைய வார்த்தைகளின் வல்லமையையும் அதிகாரத்தையும் இன்னும் தெளிவுபடுத்துகிறார்; மற்றும் மனுஷன் அவருடைய அனைத்து வழிகளையும் பார்க்க அனுமதிக்கிறார்—அதாவது அவருடைய எல்லா வார்த்தைகளையும் கேட்பதற்கு அனுமதிக்கிறார். இதுதான் கடைசி காலத்தின் கிரியை ஆகும். இந்த விஷயங்களை நீ முற்றிலும் புரிந்துகொள்ள வேண்டும். இது மாம்சத்தை அறிந்து கொள்வதைப் பற்றிய கேள்வி அல்ல; ஆனால் நீ மாம்சத்தையும் வார்த்தையையும் எவ்வாறு புரிந்துகொள்கிறாய் என்பதைப் பற்றியது. இதுவே நீங்கள் பகர வேண்டிய சாட்சி; ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றும் இதுவே. ஏனென்றால், இது இரண்டாவது மனுவுருவெடுத்தலுக்ககான கிரியை—தேவன் மாம்சமாகிற கடைசி நேரம்—இது மனுவுருவெடுத்தலின் முக்கியத்துவத்தை முழுமையாக நிறைவு செய்கிறது, இந்த நேரத்தில் மாம்சத்தில் தேவனுடைய அனைத்துக் கிரியைகளையும் தொடங்கி முழுமையாக நிறைவேற்றுகிறார், மேலும், மாம்சத்தில் இருப்பதற்கான தேவனுடைய யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறார். எனவே, நீ மனுவுருவெடுத்தலின் அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். நீ எவ்வளவு ஓடுகிறாய், அல்லது பிற வெளிப்புற விஷயங்களை எவ்வளவு சிறப்பாகச் செய்கிறாய் என்பது முக்கியமல்ல; முக்கியமானது என்னவென்றால், மாம்சமாகிய தேவனுக்கு முன்பாக உன்னை உண்மையிலேயே ஒப்புக்கொடுத்து, உன்னுடைய முழுமையையும் தேவனுக்கு அர்ப்பணித்து, அவருடைய வாயிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிய முடிகிறதா என்பது தான். நீ செய்ய வேண்டியதும் நிலைத்திருக்க வேண்டியதும் இதுவே.

சாட்சியின் கடைசிப் படியானது உன்னால் பரிபூரணராக்கப்பட முடிகிறதா இல்லையா என்பதற்கான சாட்சியாகும்—அதாவது, மாம்சமாகிய தேவனுடைய வாயிலிருந்து பேசப்பட்ட எல்லா வார்த்தைகளையும் புரிந்து கொண்டு, தேவனைப் பற்றிய அறிவைப் பெற்று, அவரைப் பற்றிய நிச்சயமுடையவனாகிறாய், நீ தேவனுடைய வாயிலிருந்து வருகிற எல்லா வார்த்தைகளையும் வாழ்ந்து காட்டுகிறாய்; மேலும் தேவன் உன்னிடத்தில் கேட்கிற பேதுருவின் பாணி மற்றும் யோபுவின் விசுவாசத்தைப் போன்ற நிலைகளை அடைகிறாய்—அதாவது உன்னால் மரணபரியந்தம் கீழ்ப்படிய முடியும், உன்னை முற்றிலுமாக அவருக்குக் கொடுத்து, இறுதியில் ஓர் தகுதியான நபரின் சாயலை அடைய முடியும், அதாவது தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையை அனுபவித்தபின் ஜெயங்கொண்டிருக்கிற மற்றும் பரிபூரணமாக்கப்பட்டிருக்கிற ஒருவரின் சாயலை அடைய முடியும். இது இறுதி சாட்சி—இது இறுதியில் பரிபூரணராக்கப்பட்ட ஒருவரால் பகரப்பட வேண்டிய சாட்சி. இவை நீ பகர வேண்டிய சாட்சியின் இரண்டு படிகள்; அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை; ஒவ்வொன்றும் இன்றியமையாதவை. ஆனால் நீ அறிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது: இன்று நான் உன்னிடத்தில் கேட்கிற சாட்சி உலக ஜனங்களிடமோ அல்லது எந்தவொரு தனி நபரிடமோ அல்ல, மாறாக, நான் அதை உன்னிடத்தில் கேட்கிறேன். உன்னால் என்னைத் திருப்திப்படுத்த முடிகிறதா, மற்றும் உங்கள் ஒவ்வொருவரைக் குறித்த எனது எதிர்பார்ப்பின் தரங்களை உங்களால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடிகிறதா என்பதன் மூலம் இது அளவிடப்படுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 440

ஆகவே நீங்கள் ஒரு சிறிய தடையோ அல்லது கஷ்டத்தையோ அனுபவிக்கும் போது அது உங்களுக்கு நல்லது; அதில் உங்களுக்குச் சுலபமான அனுபவம் வழங்கப்பட்டிருந்தால், நீங்கள் கெட்டுப் போயிருப்பீர்கள், பின்னர் நீங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுவீர்கள்? இன்று, நீங்கள் சிட்சிக்கப்பட்டு, நியாயந்தீர்க்கப்பட்டு, சபிக்கப்பட்டதால் உங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மிகவும் பாடுபட்டதால் பாதுகாக்கப்படுகிறீர்கள். இல்லையென்றால் நீங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே மோசமான நடத்தையில் விழுந்திருப்பீர்கள். இது வேண்டுமென்றே உங்களுக்குக் காரியங்களை கடினமாக்குவதற்காக அல்ல, மனிதனுடைய சுபாவம் மாற்றுவதற்கு கடினமாகையால், இப்படிச் செய்வது அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே. இன்று, பவுல் கொண்டிருந்த மனசாட்சியோ அல்லது உணர்வோ கூட நீங்கள் கொண்டிருக்கவில்லை, அவனுடைய சுய விழிப்புணர்வும் கூட உங்களிடம் இல்லை. உங்களுக்கு எப்போதும் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், உங்களுடைய ஆவிகளை எழுப்புவதற்கு, நீங்கள் எப்போதும் சிட்சிக்கப்பட்டும், நியாயத்தீர்ப்பளிக்கப்பட்டும் இருக்க வேண்டும். சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உங்கள் வாழ்க்கைக்குச் சிறந்தவையாகும். மற்றும் தேவைப்படும்போது, உங்கள் மீது உண்மைகளின் சிட்சையும் கடந்து வரவேண்டும்; அப்போதுதான் நீங்கள் முழுமையாக அர்ப்பணிப்பீர்கள். உங்கள் சுபாவங்கள் எப்படியென்றால், ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் சாபம் இல்லாமல், உங்கள் தலைகளை வணங்க நீங்கள் விரும்புவதில்லை, கீழ்ப்படிய விரும்புவதில்லை. உங்கள் கண்கள் முன்னே உண்மைகள் இல்லாமல், எந்தப் பலனும் இருக்காது. நீங்கள் பண்பில் மிகவும் தாழ்ந்தவர்கள் மற்றும் மதிப்பற்றவர்கள்! சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் உங்களை ஜெயங்கொள்ளுவது கடினம், உங்களின் அநீதியையும் கீழ்ப்படியாமையையும் மேற்கொள்வது கடினம். உங்களின் பழைய சுபாவம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. நீங்கள் சிங்காசனத்தில் வைக்கப்பட்டிருந்தால், உங்களுக்குப் பரலோகத்தின் உயரமும், பூமியின் ஆழமும் பற்றி ஒன்றும் தெரியாது, நீங்கள் சென்றிருக்கும் இடம் என்னவென்று தெரியாது. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்று கூட தெரியாது, எனவே சிருஷ்டிப்பின் கர்த்தரை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? இன்றைய சமயத்திற்கேற்ற ஆக்கினைத்தீர்ப்பும் சாபங்களும் இல்லாமல், உங்களின் இறுதி நாள் நீண்ட காலத்திற்கு முன்பே வந்திருக்கும். அதாவது உங்கள் விதியைப் பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை, அது இன்னும் உடனடி ஆபத்தில் இருக்குமல்லவா? இந்த சமயத்திற்கேற்ற சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், நீங்கள் எவ்வளவு திமிர்பிடித்தவர்களாக மாறுவீர்கள் அல்லது எவ்வளவு மோசமானவர்களாக ஆகிவிடுவீர்கள் என்று யாருக்குத் தெரியும்? இந்த சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உங்களை இன்றைய தினத்திற்குக் கொண்டு வந்துள்ளன, மேலும் அவை உங்கள் இருப்பைப் பாதுகாத்துள்ளன. உங்கள் “தந்தையின்” அதே முறைகளைப் பயன்படுத்தி நீங்கள் இன்னும் “படித்தவர்களாக” இருந்திருந்தால் நீங்கள் எந்த ராஜ்யத்தினுள் நுழைவீர்கள் என்பது யாருக்குத் தெரியும்! உங்களை நீங்களே கட்டுப்படுத்தவும் பிரதிபலிக்கவும் உங்களிடத்தில் நிச்சயமாக எந்தத் திறனும் இல்லை. உங்களைப் போன்றவர்களுக்கு, நீங்கள் எந்தவிதமான குறுக்கீடுகளும் இடையூறுகளும் ஏற்படுத்தாமல், பின்பற்றி கீழ்ப்படிய மட்டும் செய்தாலே, என்னுடைய நோக்கங்கள் அடையப்படும். இன்றைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக் கொள்வதில் நீங்கள் இன்னும் முன்னேற்றமடைய வேண்டாமா? உங்களுக்கு வேறு என்ன தெரிவுகள் உள்ளன?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (6)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 441

ஜீவனுக்கென்று உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்போது, நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் பானம்பண்ணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும், நீ தேவனைப் பற்றிய அறிவு, மனித வாழ்க்கை பற்றிய உன் பார்வைகள் மற்றும் குறிப்பாக, கடைசி நாட்களின் போது தேவனால் செய்யப்பட்ட கிரியை குறித்த உன்னுடைய அறிவு ஆகியவற்றைப் பற்றிப் பேசக் கூடியவனாக இருக்க வேண்டும். நீ ஜீவனைப் பின்தொடர்வதால், நீ இந்த விஷயங்களால் உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும் போது, அவைகளுக்கு எதிராக உன் சொந்த நிலையின் யதார்த்தத்தை நீ அளவிட வேண்டும். அதாவது, உன்னுடைய உண்மையான அனுபவத்தின் போக்கில் உன் குறைகளை நீ கண்டறியும்போது, நடைமுறைக்கு ஒரு பாதையைக் கண்டறியவும், உன் தவறான உந்துதல்கள் மற்றும் கருத்துக்களைப் புறக்கணிக்கவும் நீ திறமை உள்ளவனாக இருக்க வேண்டும். நீ எப்போதும் இந்த விஷயங்களுக்காகப் பாடுபட்டு அவற்றை அடைய மனதார செயல்பட்டால், அப்போது நீ பின்பற்ற ஒரு பாதை இருக்கும், நீ வெறுமையாக உணர மாட்டாய், இவ்வாறு, நீ இயல்பான நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்போதுதான் நீங்கள் உங்கள் சொந்த ஜீவனில் ஒரு பாரத்தை சுமப்பவராக, விசுவாசம் உடையவராக இருப்பீர்கள். தேவனுடைய வார்த்தைகளை வாசித்த பின்னர் ஏன் சில ஜனங்களால் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர முடியவில்லை? மிக முக்கியமான விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாததால் அல்லவா? அவர்கள் ஜீவனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளாததால் அல்லவா? முக்கியமான விஷயங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாததற்கும், நடைமுறைக்கான பாதையைப் பெற்றிராததற்கும் காரணம், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கும்போது, அவர்களால் தங்கள் சொந்த நிலைகளை அவைகளுடன் தொடர்புபடுத்தவும் முடிவதில்லை, அவர்கள் தங்கள் சொந்த நிலைகளில் தேர்ச்சி அடையவும் முடிவதில்லை. சில ஜனங்கள் சொல்கிறார்கள்: “நான் தேவனுடைய வார்த்தைகளை வாசித்து, என் நிலையை அவைகளுடன் தொடர்புபடுத்துகிறேன், நான் சீர்கெட்டு இருக்கிறேன் மற்றும் திறமையற்றவனாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், ஆனால், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற என்னால் இயலாது.” நீ மேலோட்டமாக மட்டுமே பார்த்திருக்கிறாய்; உனக்குத் தெரியாத அநேக உண்மையான விஷயங்கள் உள்ளன: மாம்சத்தின் இன்பங்களை எப்படி ஒதுக்கி வைப்பது, சுய-நீதியை எப்படி ஒதுக்கி வைப்பது, உங்களை எப்படி மாற்றுவது, இந்த விஷயங்களுக்குள் எப்படிப் பிரவேசிப்பது, எப்படி உங்கள் திறமையை வளரச் செய்வது, மற்றும் எந்த அம்சத்திலிருந்து தொடங்குவது போன்ற இவைகளேயாகும். நீ மேலோட்டமாக சில விஷயங்களை மட்டுமே புரிந்துகொள்கிறாய், உனக்குத் தெரிந்ததெல்லாம் நீ உண்மையில் மிகவும் சீர்கெட்டவன் என்பதுதான். நீ உன் சகோதர சகோதரிகளைச் சந்திக்கும் போது, நீ எவ்வளவாய் சீர்கேடு அடைந்திருக்கிறாய் என்பதைப் பற்றி பேசுகிறாய், மேலும் உன்னை நீயே அறிந்திருப்பதைப் போலவும், உன் வாழ்க்கைக்கான பெரும் பாரத்தைச் சுமப்பதைப் போலவும் தெரிகிறது. உண்மையில், உன் சீர்கெட்ட மனநிலை மாறியிருக்கவில்லை, இது நீ நடைமுறைப்படுத்துவதற்கான பாதையைக் கண்டுபிடிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. நீ ஒரு திருச்சபையை வழிநடத்துகிறாய் என்றால், நீ சகோதர சகோதரிகளின் நிலைகளைப் புரிந்துகொண்டு அவைகளைச் சுட்டிக்காட்டக் கூடியவனாக இருக்க வேண்டும். “நீங்கள் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் பின்மாற்றமடைந்த ஜனங்கள்!” என்று சொன்னால் மட்டும் போதுமா? போதாது, நீ அவர்களின் கீழ்ப்படியாமை மற்றும் பின்மாற்றத்தின் தன்மை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிக் குறிப்பாகப் பேச வேண்டும். நீ அவர்களின் கீழ்ப்படியாத நிலைகள், கீழ்ப்படியாத நடத்தைகள் மற்றும் அவர்களின் சாத்தானிய மனநிலைகளைப் பற்றி பேச வேண்டும், மேலும் உன் வார்த்தைகளில் உள்ள உண்மையை அவர்கள் முழுமையாக நம்பும் வகையில் நீ இந்த விஷயங்களைப் பேச வேண்டும். உன்னுடைய கருத்துக்களைச் சொல்ல யதார்த்தங்களையும் மற்றும் உதாரணங்களைப் பயன்படுத்து, மேலும் அவர்கள் கலகத்தனமான நடத்தையிலிருந்து எவ்வாறு விலகிச் செல்ல முடியும் என்பதைச் சரியாகச் சொல், மேலும் நடைமுறைக்கான பாதையைச் சுட்டிக்காட்டு—இப்படித்தான் ஜனங்களை நம்ப வைக்க வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் மட்டுமே மற்றவர்களை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள்; அவர்கள் மட்டுமே சத்திய யதார்த்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (7)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 442

தேவனுக்கு சாட்சி பகருவது என்பது முதன்மையாக தேவனுடைய கிரியைப் பற்றிய உன்னுடைய அறிவு, தேவன் ஜனங்களை எப்படி வெல்கிறார், அவர் ஜனங்களை எப்படி இரட்சிக்கிறார், அவர் ஜனங்களை எப்படி மாற்றுகிறார் என்பது பற்றி பேசுவது ஆகும்; சத்திய யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கவும், அவர்கள் அவரால் வெல்லப்படவும், பரிபூரணப்படுத்தப்படவும், அவரால் இரட்சிக்கப்படவும் அவர்களை அனுமதித்து, அவர் ஜனங்களை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப்பற்றி பேசுவதாகும். சாட்சி பகர்வது என்பது அவருடைய கிரியை மற்றும் நீ அனுபவித்த அனைத்தையும் பற்றிப் பேசுவதாகும். அவருடைய கிரியை மட்டுமே அவரைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும், மேலும் அவருடைய கிரியை மட்டுமே அவரது முழுமையில், அவரை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியும்; அவரது கிரியை அவருக்கு சாட்சிப் பகருகிறது. அவருடைய கிரியை மற்றும் பேச்சுக்கள் நேரடியாக ஆவியானவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன; அவர் செய்யும் கிரியை ஆவியானவரால் நிறைவேற்றப்படுகின்றன, அவர் பேசும் வார்த்தைகள் ஆவியானவரால் பேசப்படுகிறவைகளாய் இருக்கின்றன. இந்த விஷயங்கள் வெறுமனே மனுவுருவான தேவனுடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, ஆனால் உண்மையில், அவை ஆவியானவரின் வெளிப்பாடுகளாகும். அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளும் அவர் பேசும் அனைத்து வார்த்தைகளும் அவருடைய சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. மாம்சத்தினால் தன்னை உடுத்திக்கொண்டு, மனுஷர்களுக்கு மத்தியில் வந்த பின்பும், தேவன் பேசாமலும் அல்லது கிரியை செய்யாமலும் இருந்து, பின்னர் அவருடைய உண்மைத் தன்மை, சாதாரண நிலை மற்றும் அவரது சர்வ வல்லமையை அறிந்துகொள்ளும்படி கேட்டால், உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? ஆவியானவரின் சாரம் என்ன என்பதை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? அவருடைய மாம்சத்தின் பண்புகள் என்ன என்பதை உன்னால் அறிய முடியுமா? அவருடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் நீங்கள் அனுபவித்திருப்பதால் மட்டுமே, நீங்கள் சாட்சி பகரும்படி அவர் உங்களிடம் கேட்கிறார். நீங்கள் அத்தகைய அனுபவம் இல்லாமல் இருந்தால், நீங்கள் சாட்சி பகர வேண்டும் என்று அவர் வலியுறுத்த மாட்டார். இவ்வாறு, நீ தேவனுக்கு சாட்சி பகரும்போது, நீ அவருடைய இயல்பான மனிதத்தன்மையின் வெளிப்புறத்திற்கு மட்டுமல்லாமல், அவர் செய்யும் கிரியைக்கும் அவர் உன்னை வழிநடத்தும் பாதைக்கும் சாட்சி பகருகிறாய்; அவரால் நீ எவ்வாறு வெல்லப்பட்டாய், எந்த அம்சங்களில் நீ பரிபூரணமாக்கக்கப்பட்டாய் என்பதற்கு நீ சாட்சி பகர வேண்டும். நீ பகர வேண்டிய சாட்சி இவ்வகையானதேயாகும். நீ எங்கு சென்றாலும், நீ சத்தமிட்டு: “எங்கள் தேவன் கிரியை செய்ய வந்துவிட்டார், அவருடைய கிரியை உண்மையிலேயே நடைமுறைக்குரியது! இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்கள் இல்லாமல், முற்றிலும் அற்புதங்கள் மற்றும் அதிசயங்கள் எதுவும் இல்லாமல் அவர் எங்களை ஆதாயப்படுத்தி இருக்கிறார்!” என்று கூறினால், மற்றவர்கள் கேட்பார்கள்: “அவர் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யவில்லை என்று நீ சொல்வதன் அர்த்தம் என்ன? அற்புதங்கள் மற்றும் அதிசயங்களைச் செய்யாமல் அவர் உன்னை எப்படி வென்றார்?” மேலும் நீ சொல்கிறாய்: “அவர் பேசுகிறார், மேலும், எவ்வித அதிசயங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்தாமல், அவர் எங்களை வென்றார். அவருடைய கிரியை எங்களை வென்றது.” இறுதியில், நீ சாராம்சத்தைப் பற்றி எதையும் சொல்ல முடியாவிட்டால், நீ பிரத்தியேகமானவைகளைப் பற்றி பேச முடியாவிட்டால், இது உண்மையான சாட்சியா? மனுவுருவான தேவன் ஜனங்களை வெல்லும்போது, அவருடைய தெய்வீகத் தன்மையுள்ள வார்த்தைகள் அதைச் செய்கின்றன. மனிதத்தன்மையால் இதை சாதிக்க முடியாது; அழிந்து போகக் கூடிய எதுவும் இதை சாதிக்க முடியாது, சாதாரண ஜனங்களில் மிக உயர்ந்த திறமை உள்ளவர்கள் கூட இதற்குத் தகுதியற்றவர்கள், ஏனென்றால் அவருடைய தெய்வீகத்தன்மையானது சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினத்தையும் விட உயர்ந்ததாக இருக்கிறது. இது ஜனங்களுக்கு அசாதாரணமானது; சிருஷ்டிகர், எல்லாவற்றிற்கும் மேலாக, சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஜீவன்களையும் விட உயர்ந்தவர். சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் சிருஷ்டிகரை விடவும் உயர்ந்தவையாக இருக்க முடியாது; நீ அவரை விட உயர்ந்தவனாக இருந்தால், அவர் உன்னை வெல்ல முடியாது, மேலும் அவர் உன்னை விட உயர்ந்தவராக இருப்பதால் மட்டுமே உன்னை வெல்ல முடிகிறது. அனைத்து மனித இனத்தையும் வெல்லக்கூடியவரே சிருஷ்டிகர், அவரைத் தவிர வேறு யாராலும் இந்தக் கிரியையைச் செய்ய முடியாது. இந்த வார்த்தைகளே “சாட்சி”—நீ பகர வேண்டிய சாட்சியாகும். படிப்படியாக, நீ சிட்சை, நியாயத்தீர்ப்பு, புடமிடுதல், சோதனைகள், பின்னடைவுகள் மற்றும் உபத்திரவங்களை அனுபவித்திருக்கிறாய், மேலும் நீ ஜெயங்கொள்ளப்பட்டாய்; நீ மாம்சத்தின் வாய்ப்புகள், உன் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் மாம்சத்தின் மிக நெருக்கமான விருப்பங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துள்ளாய். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தைகள் உன் இருதயத்தை முழுமையாக வென்றுள்ளன. அவர் கேட்கும் அளவுக்கு உன் வாழ்க்கையில் நீ வளரவில்லை என்றாலும், இவை அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய், மேலும் அவர் என்ன செய்கிறார் என்பதில் நீ உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கிறாய். இவ்வாறு, இதையே சாட்சி என்று அழைக்கலாம், யதார்த்தமான மற்றும் உண்மையான சாட்சி இதுவே ஆகும். தேவன் செய்யும்படி வந்திருக்கிற கிரியையாகிய, நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கான கிரியை, மனுஷனை ஜெயங்கொள்வதற்காக, ஆனால் அவர் தமது கிரியையை முடித்து, காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நிறைவு செய்யும் கிரியையையும் செயல்படுத்துகிறார். அவர் முழுக் காலத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து, மனித இனம் முழுவதையும் இரட்சித்து, மனித இனத்தைப் பாவத்திலிருந்து முழுமையாக இறுதியில் விடுவிக்கிறார்; அவர் சிருஷ்டித்த மனித இனத்தை அவர் முழுவதுமாக ஆதாயப்படுத்திக்கொள்கிறார். இவை அனைத்திற்கும் நீ சாட்சி பகர வேண்டும். நீ தேவனுடைய கிரியையை அதிகம் அனுபவித்திருக்கிறாய், நீ அதை உன் சொந்தக் கண்களால் பார்த்துத் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறாய்; நீ இறுதி முடிவை நெருங்கியவுடன், உன் மீதான பொறுப்பிற்கான செயல்பாட்டை நீ செய்ய இயலாமல் போய்விடக்கூடாது. அது எவ்வளவு பரிதாபமாக இருக்கும்! எதிர்காலத்தில், சுவிசேஷம் பரவும் போது, நீ உன் சொந்த அறிவைப் பற்றி பேசவும், உன் இருதயத்தில் நீ ஆதாயப்படுத்திக் கொண்ட அனைத்திற்கும் சாட்சி பகரவும், மேலும் எந்த முயற்சியையும் விட்டுவிடாமலும் இருக்க வேண்டும். இதைத்தான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் அடைய வேண்டும். தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டத்தின் உண்மையான முக்கியத்துவம் என்ன? அதன் விளைவு என்ன? மேலும் அது மனுஷனில் எவ்வளவு நிறைவேற்றப்படுகிறது? ஜனங்கள் என்ன செய்ய வேண்டும்? மனுவுருவான தேவன் பூமிக்கு வந்ததிலிருந்து செய்த அனைத்து கிரியைகளையும் உங்களால் தெளிவாகப் பேசக் கூடுமானால், உங்கள் சாட்சி முழுமையானதாக இருக்கும். இந்த ஐந்து விஷயங்களாகிய: அவருடைய கிரியையின் முக்கியத்துவம்; அதன் உள்ளடக்கம்; அதன் சாரம்; அது பிரதிபலிக்கும் மனநிலை; மற்றும் அதன் கொள்கைகள் ஆகிய இவைகளை நீ தெளிவாகப் பேசக் கூடுமானால், அப்பொழுது நீ தேவனுக்கு சாட்சி பகரத் திறமை உள்ளவனாய் இருக்கிறாய் மற்றும் நீ உண்மையிலேயே அறிவைப் பெற்றுள்ளாய் என்பதை அது நிரூபிக்கும். உங்களிடமான எனது தேவைகள் மிக உயர்ந்தவை அல்ல, மேலும் உண்மையாகப் பின்தொடர்பவர்கள் அனைவராலும் அடையக் கூடியதாகும். தேவனுடைய சாட்சிகளில் ஒருவராக இருக்க நீ தீர்மானித்தால், தேவன் எதை வெறுக்கிறார் மற்றும் தேவன் எதை விரும்புகிறார் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். நீ அவருடைய பெரும்பாலான கிரியையை அனுபவித்திருக்கிறாய்; இந்தக் கிரியையின் மூலம், நீ அவருடைய மனநிலையை அறிந்து, அவருடைய சித்தத்தையும் மனுக்குலத்திற்கான அவரது தேவைகளையும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் இந்த அறிவைப் பயன்படுத்தி அவரைப் பற்றிச் சாட்சி பகர்ந்து உன் கடமையைச் செய்ய வேண்டும். நீ வெறுமனே சொல்லலாம்: “நாங்கள் தேவனை அறிவோம். அவரது நியாயத்தீர்ப்பும் தண்டனையும் மிகவும் கடுமையானவை. அவருடைய வார்த்தைகள் மிகவும் கண்டிப்பானவை; அவை நீதியுள்ளவை மற்றும் மகத்துவமானவை, மேலும் அவை எந்த மனுஷனாலும் இடறலுண்டாக்க இயலாதவை,” ஆனால் இந்த வார்த்தைகள் இறுதியில் மனுஷனுக்கு எதையாவது வழங்குமா? ஜனங்கள் மீது அவற்றின் தாக்கம் என்ன? இந்த நியாயத்தீர்ப்பு மற்றும் தண்டனையின் கிரியை உனக்கு மிகுந்த நன்மை தரக்கூடியது என்பதை நீ உண்மையில் அறிவாயா? தேவனுடைய நியாயத்தீர்ப்பும் தண்டனையும் உன்னுடைய கலகத்தனத்தையும் சீர்கேட்டையும் வெளிப்படுத்துகின்றன, இல்லையா? உனக்குள் இருக்கும் அந்த அசுத்தங்கள் மற்றும் சீர்கேடு நிறைந்த விஷயங்களை அவற்றால் சுத்தம் செய்து வெளியேற்ற முடியும், அல்லவா? நியாயத்தீர்ப்பும் தண்டனையும் இல்லாவிட்டால், உன்னுடைய நிலை என்னவாகும்? சாத்தான் உன்னை மிக ஆழமான அளவிற்குச் சீர்கேடு அடையச் செய்துவிட்டான் என்ற உண்மையை நீ உண்மையிலேயே உணர்கிறாயா? இன்று, நீங்கள் இந்த விஷயங்களால் உங்களை மேம்படுத்தி அவற்றை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பயிற்சி (7)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 443

இப்போது நீங்கள் எதைக்கொண்டு உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? கிரியையைப் பற்றிய தரிசனங்களில் அதன் ஓர் அம்சம் அடங்கியுள்ளது, மற்றும் அடுத்த அம்சம் உன் கடைப்பிடித்தல் ஆகும். நீ இந்த இரு அம்சங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உன் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தேடுவதில் உனக்கு தரிசனங்கள் இல்லை என்றால், பின்னர் உனக்கு அஸ்திபாரம் இருக்காது. உன்னிடம் சிறிதும் தரிசனம் இல்லாமல் கடைப்பிடிப்பதற்கான வழிகள் மட்டுமே இருந்தால், மேலும் ஒட்டுமொத்த நிர்வாகத் திட்டத்தின் கிரியை பற்றிய புரிதல் கொஞ்சமும் இல்லை என்றால், நீ ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறாய். தரிசனங்களை உள்ளடக்கியுள்ள சத்தியங்களை நீ புரிந்துகொள்ள வேண்டும், மற்றும் கடைப்பிடித்தலைப் பற்றிய சத்தியங்களைப் பொறுத்த வரையில், கடைப்பிடித்தலின் தகுந்த பாதைகளை புரிந்துகொண்ட பின்னர் நீ அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்; நீ வார்த்தைகளுக்கு ஏற்றபடி கடைபிடிக்க வேண்டும், மற்றும் உன் நிலைகளுக்கு ஏற்றபடி பிரவேசிக்க வேண்டும். தரிசனங்களே அஸ்திபாரங்களாகும், மேலும் இந்த உண்மையில் நீ கவனம் செலுத்தாவிட்டால், உன்னால் கடைசி வரை பின்பற்றி வர முடியாது; இந்த முறையிலான அனுபவம் உன்னை ஒன்று வழிவிலகச் செய்யும் அல்லது நீ கீழே விழுவதற்கும் தோல்வி அடைவதற்கும் வழிவகுக்கும். நீ வெற்றி அடைவதற்கு ஒரு வழியும் இருக்காது! பெரும் தரிசனங்களை அஸ்திபாரமாகக் கொண்டிராத ஜனங்கள் தோல்வியே அடைவார்கள்; அவர்களால் வெற்றிபெற முடியாது. உன்னால் உறுதியாக நிற்க முடியாது! தேவனை விசுவாசிப்பதில் என்ன அடங்கி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? தேவனைப் பின்பற்றுவது என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? தரிசனங்கள் இல்லாமல் நீ எந்தப் பாதையில் நடப்பாய்? இன்றைய கிரியையில் உனக்குத் தரிசனம் ஒன்றும் இல்லை என்றால் உன்னை நீ பரிபூரணப்படுத்திக் கொள்ளவே முடியாது. நீ யாரை விசுவாசிக்கிறாய்? நீ ஏன் அவரை விசுவாசிக்கிறாய்? நீ ஏன் அவரைப் பின்பற்றுகிறாய்? நீ உன் விசுவாசத்தை ஒரு வகையான விளையாட்டாய்ப் பார்க்கிறாயா? நீ உன் வாழ்க்கையை ஒரு விளையாட்டுப் பொருளாய்க் கையாளுகிறாயா? இன்றைய தேவன்தான் மாபெரும் தரிசனமாக இருக்கிறார். அவரைப் பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்? அவரை நீ எவ்வளவு கண்டிருக்கிறாய்? இன்றைய தேவனைக் கண்ட பின்னர், தேவனைப் பற்றிய உன் விசுவாசத்தின் அடித்தளம் திடமாக இருக்கிறதா? குழப்பமான வழியைப் பின்பற்றும் வரை உன்னால் இரட்சிப்பை அடைய முடியும் என்று நீ நம்புகிறாயா? கலங்கிய நீரில் மீன் பிடிக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? அது அவ்வளவு எளிதானதா? இன்று தேவன் பேசும் வார்த்தைகளைப் பற்றி எத்தனைக் கருத்துகளை ஒதுக்கி வைத்திருக்கிறாய்? இன்றைய தேவனைப் பற்றிய ஒரு தரிசனம் உனக்கு இருக்கிறதா? இன்றைய தேவனைப் பற்றிய புரிதல் எங்கு இருக்கிறது? அவரைப் பின்பற்றுவதன் மூலம் அல்லது அவரைப் பார்ப்பதன் மூலம் அவரை[அ] அடையலாம் என்றும் உன்னை யாரும் விட்டுவிட முடியாது என்றும் நீ நம்புகிறாய். தேவனைப் பின்பற்றுவது அவ்வளவு எளிதானது என்று நீ கருதாதே. அவரை நீ அறிய வேண்டும், நீ அவரது கிரியையை அறிய வேண்டும், அவர் நிமித்தம் நீ கஷ்டங்களை சகித்துக்கொள்ளும், அவருக்காக உன் வாழ்க்கையை தியாகம் செய்யும் விருப்பமும், அவரால் நீ பரிபூரணப்படுத்தப்பட வேண்டும் என்ற விருப்பமும் கொண்டிருப்பதுதான் முக்கியமானது ஆகும். உனக்கு இருக்க வேண்டிய தரிசனம் இதுதான். எப்போதும் கிருபையை அனுபவிக்க வேண்டும் என்று உன் சிந்தனைகள் லயித்திருந்தால் அது நடக்காது. ஜனங்களின் மகிழ்ச்சிக்காக அல்லது அவர்கள் மேல் கிருபையைப் பொழியவே தேவன் இங்கு இருக்கிறார் என்று எண்ணாதே. உன் எண்ணம் தவறாகப் போய்விடும்! ஒருவன் அவரைப் பின்பற்ற தனது ஜீவனைப் பணயம் வைக்காவிட்டால், ஒருவன் அவரைப் பின்பற்றுவதற்காக உலக உடைமைகள் ஒவ்வொன்றையும் விட்டுவிடாவிட்டால், பின் அவர்களால் கடைசிவரை அவரைப் பின்தொடர்ந்து வரமுடியாது. நீ தரிசனங்களை உன் அஸ்திபாரமாகக் கொள்ள வேண்டும். ஒரு நாள் துரதிர்ஷ்டம் உன் மேல் விழும்போது, உன்னால் என்ன செய்ய முடியும்? இன்னும் உன்னால் அவரைப் பின் தொடர முடியுமா? உன்னால் அவரைக் கடைசிவரை பின்பற்ற முடியும் என்று சாதாரணமாகக் கூறாதே. உன் கண்களை அகலத் திறந்து இப்போது என்ன காலம் என்று பார்ப்பது நல்லது. ஆலயத்தின் தூண்களைப் போல் இப்போது நீங்கள் இருந்தாலும், ஒரு காலம் வரும் அப்போது இத்தகைய எல்லா தூண்களையும் புழுக்கள் கடித்துத் துண்டாக்கி ஆலயத்தை நிலைகுலையச் செய்யும், ஏனெனில் தற்போது பல்வேறு தரிசனங்கள் இல்லாமலேயே நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய சொந்தச் சிறிய உலகங்களிலேயே கவனம் செலுத்துகிறீர்கள், மேலும் உங்களுக்கு மிகவும் நம்பகமான மற்றும் பொருத்தமான தேடும் வழி என்னவென்று தெரியவில்லை, இன்றைய கிரியையின் தரிசனத்தைக் காது கொடுத்துக் கேட்பதில்லை, மட்டுமல்லாது நீங்கள் இந்த விஷயங்களை உங்கள் இருதயங்களிலும் வைப்பதில்லை. ஒருநாள் உங்கள் தேவன் உங்களை மிகவும் பழக்கமில்லாத ஒரு இடத்தில் வைப்பார் என்று நீங்கள் எண்ணிப்பார்க்கவில்லையா? ஒரு நாள் உங்களிடம் இருந்து நான் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டால் உங்களுக்கு என்னவாகும் என்று உங்களால் கற்பனை செய்யமுடியுமா? உங்கள் ஆற்றல் இப்போது இருப்பது போலவே இருக்குமா? உங்கள் விசுவாசம் மறுபடியும் தோன்றுமா? தேவனைப் பின்பற்றுவதில் “தேவன்” தான் இந்த மாபெரும் தரிசனம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்: இதுவே மிக முக்கியமான விஷயம். மேலும், பரிசுத்தமாக்கப்படுவதற்காக உலக மனுஷர்களிடம் இருந்து பிரிந்துவிடுவதால் நீங்கள் தேவனின் குடும்பத்தில் இருப்பீர்கள் என்று கருத வேண்டாம். இந்நாட்களில், சிருஷ்டிகளின் மத்தியில் தேவன் தாமே கிரியை செய்கிறார்; தமது சொந்தக் கிரியையைச் செய்ய அவர் தாமே ஜனங்களின் மத்தியில் வந்திருக்கிறார்—பிரச்சாரங்கள் செய்வதற்காக அல்ல. உங்கள் மத்தியில், மாம்சமாக வந்திருக்கும் பரலோகத்தில் இருக்கும் தேவனின் கிரியையே இன்றைய கிரியை என்று ஒரு சிலரால் கூட அறிய முடியவில்லை. இது உங்களைத் திறமையில் தன்னிகரற்றவர்களாக உருவாக்குவதைப் பற்றியதல்ல: இது மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிவதற்கும், மனுஷர்கள் சென்றடையும் இடத்தை அறிவதற்கும் மேலும் தேவனையும் அவரது முழுமையையும் அறிந்துகொள்வதற்கும் உங்களுக்கு உதவுவதற்கும் ஆகும். நீ சிருஷ்டிகரின் கையில் இருக்கும் ஒரு சிருஷ்டிப்புப் பொருளே என்பதை நீ அறிய வேண்டும். நீ எதைப் புரிந்துகொள்ள வேண்டும், நீ எதைச் செய்ய வேண்டும், மேலும் நீ எவ்வாறு தேவனைப் பின்பற்ற வேண்டும்—ஆகியவையே நீ புரிந்துகொள்ள வேண்டிய சத்தியங்கள் அல்லவா? நீ பார்க்க வேண்டிய தரிசனங்கள் அவை அல்லவா?

ஒருகாலத்தில் ஜனங்களுக்குத் தரிசனங்கள் இருந்தன, அவர்களுக்கு ஓர் அஸ்திபாரம் இருந்தது. இந்த அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ நடக்கும்போது உன்னால் பிரவேசிப்பது எளிதாக இருக்கும். இப்படி இருக்க, உனக்குப் பிரவேசிப்பதற்கான ஓர் அஸ்திபாரம் இருக்கும்போது உனக்கு சந்தேகங்கள் இருக்காது, மேலும் பிரவேசிப்பது உனக்கு எளிதானதாக இருக்கும். தரிசனங்களைப் புரிந்துகொள்வதின் இந்த அம்சமும் தேவனின் கிரியையை அறிந்துகொள்வதும் முக்கியமானது; இது உங்கள் சேமிப்பகத்தில் இருக்க வேண்டும். சத்தியத்தின் இந்த அம்சத்தை நீ கொண்டிராமல், கடைப்பிடித்தலின் பாதைகளைப் பற்றி பேசுவது எப்படி என்றுமட்டும் அறிந்திருந்தால், பின்னர் நீ பெரும் குறைபாடு உடையவனாக இருப்பாய். உங்களில் பலர் சத்தியத்தின் இந்த அம்சத்தை வலியுறுத்துவதில்லை என்பதை நான் கண்டறிந்தேன், மற்றும் அதை நீங்கள் கேட்கும் போது, வார்த்தைகளையும் உபதேசங்களையும் மட்டுமே கவனிப்பவர்களாகத் தோன்றுகிறீர்கள். ஒருநாள் நீ இழப்பைச் சந்திப்பாய். இந்நாட்களில் நீ கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை மற்றும் ஏற்பதில்லை என்று சில பேச்சுக்கள் உள்ளன; இந்த மாதிரி வேளைகளில் நீ பொறுமையாகத் தேட வேண்டும் மேலும் நீ புரிந்து கொள்ளும் ஒரு நாள் வரும். படிப்படியாக மேலும் மேலும் தரிசனங்களால் உன்னையே ஆயத்தப்படுத்திக்கொள். ஒரு சில ஆவிக்குரிய உபதேசங்களை நீ புரிந்துகொண்டாலும், தரிசனங்களில் கவனமே செலுத்தாமல் இருப்பதை விட இது கொஞ்சம் நன்மையானதாக இருக்கும், மேலும் இது ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருப்பதை விட நன்மையாக இருக்கும். இவை எல்லம் உன் பிரவேசத்திற்கு உதவிகரமானவை, மற்றும் உன் சந்தேகங்களை எல்லாம் போக்கும். நீ கருத்துக்களால் நிரப்பப்படுவதை விட இது சிறப்பானது. இந்தத் தரிசனங்கள் உன் அஸ்திபாரமாக அமைந்தால் நீ இன்னும் சிறப்பாக இருப்பாய். உனக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்காது, மேலும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் நீ பிரவேசிக்கலாம். ஏன் எப்போதும் ஒரு குழப்பமான மற்றும் சந்தேகமான முறையில் தேவனை பின்பற்றி சிரமத்துக்குள்ளாகிறாய்? இது உன் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்வதைப் போல் இல்லையா? ராஜ்யத்துக்குள் பெருமையுடனும் தன்னம்பிக்கையுடனும் நுழைவது எவ்வளவு சிறப்பாக இருக்கும்? ஏன் இவ்வளவு சந்தேகங்களுடன் இருக்க வேண்டும்? நீ முற்றிலுமாக நரகத்துக்கு ஊடாக உன்னை ஆட்படுத்திக் கொள்ளவில்லையா? யேகோவாவின் கிரியை, இயேசுவின் கிரியை, மேலும் இந்தக் கட்டத்தின் கிரியை ஆகியவற்றைப் பற்றிய ஒரு புரிதலைப் பெற்றுவிட்டாய் என்றால் உனக்கு ஓர் அஸ்திபாரம் அமைந்துவிடும். இக்கணத்தில், நீ அது மிக எளிமையானது என்று கற்பனை செய்யக் கூடும். சில ஜனங்கள் கூறுகிறார்கள், “நேரம் வந்து பரிசுத்த ஆவியானவர் மாபெரும் கிரியையை தொடங்கும் போது, நான் இந்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி பேச முடியும். என்னால் இப்போது உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் என்னை அந்த அளவுக்கு தெளிவுபடுத்தவில்லை.” அது அவ்வளவு எளிதல்ல. இப்போது நீ சத்தியத்தை[ஆ] ஏற்றுக்கொள்ள விரும்புகிறாய், பின் அதை நீ நேரம் வரும்போது திறமையாகப் பயன்படுத்துவாய் என்பது போல் அல்ல அது. அது அவ்வாறு இருக்கத் தேவையில்லை. தற்போது நீ நல்ல முறையில் ஆயத்தமாகியிருப்பதாகவும், மேலும் அந்த மத ரீதியான ஜனங்கள் மற்றும் பெரும் கொள்கை வாதிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல் மறுப்பதற்கும் கூட உனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நம்புகிறாய். உன்னால் உண்மையில் அவ்வாறு செய்ய முடியுமா? உனது மேலோட்டமான அனுபவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு எந்தப் புரிதலைப் பற்றி நீ பேசுவாய்? சத்தியத்தைக் கொண்டு ஆயத்தமாவதும், சத்தியத்தின் யுத்தத்தை நடத்துவதும், மேலும் தேவனின் நாமத்துக்கு சாட்சி அளித்தலும் ஆகியவற்றை நீ சிந்திக்கவில்லை—தேவன் கிரியை செய்யும்போது அவை எல்லாம் நிறைவேற்றப்படும். அதற்குள், நீ சில கேள்விகளால் தடுமாற்றம் அடைவாய், மற்றும் பின்னர் நீ வாயடைத்துப்போவாய். இந்தக் கட்டத்தின் கிரியையைப் பற்றி உனக்குத் தெளிவான புரிதல் இருக்கிறதா இல்லையா, மேலும் அதைப் பற்றி உண்மையில் உனக்கு எவ்வளவு தெரியும் என்பதுதான் முக்கியமானது. விரோதியின் சக்திகளை உன்னால் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அல்லது மத சக்திகளைத் தோற்கடிக்க முடியவில்லை என்றால், பின்னர் நீ தகுதியற்றவனாக இருக்க மாட்டாயா? நீ இன்றைய கிரியையை அனுபவத்திருக்கிறாய், உன் சொந்தக் கண்ணால் பார்த்திருக்கிறாய், உன் சொந்தக் காதால் கேட்டிருக்கிறாய், ஆனால், இறுதியில், உன்னால் சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், அதன்பின்னும் தொடர்ந்து வாழும் முரட்டுத் தைரியம் உனக்கு இருக்குமா? யாரை உன்னால் எதிர்கொள்ள முடியும்? அது அவ்வளவு எளிதானதாக இருக்கும் என்று இப்போதே கற்பனை செய்யாதே; நீ கற்பனை செய்வது போல் எதிர்காலத்தின் கிரியை அவ்வளவு எளிதானதாக இருக்காது; சத்தியத்தின் யுத்தத்தில் யுத்தம் செய்வது அந்த அளவுக்கு எளிதானது அல்ல, அவ்வளவு நேரடியானதும் அல்ல. இப்போது நீ அதற்கு ஆயத்தப்பட வேண்டும்; சத்தியத்தால் நீ ஆயத்தப்படவில்லை என்றால், பின்னர் நேரம் வரும்போது மற்றும் பரிசுத்த ஆவியானவர் இயற்கைக்கு மாறான முறையில் கிரியை செய்யாவிட்டால், நீ இழந்துபோய் நிற்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிரியையைப் புரிந்துகொள்ள வேண்டும்—குழப்பத்தோடு பின்பற்றாதீர்கள்!” என்பதிலிருந்து

அடிக்குறிப்புகள்:

அ. மூல உரையில் “அவரை” என்ற வார்த்தை இல்லை.

ஆ. மூல உரையில் “சத்தியத்தை” என்ற வார்த்தை இல்லை.

முந்தைய: ஜீவனுக்குள் பிரவேசித்தல் I

அடுத்த: ஜீவனுக்குள் பிரவேசித்தல் III

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக