ஜீவனுக்குள் பிரவேசித்தல் (1)
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 389
பேதுரு எனக்கு பல ஆண்டுகளாக உண்மையுள்ளவனாக இருந்தான், ஆனாலும் அவன் ஒருபோதும் முணுமுணுக்கவுமில்லை, எந்த மனக்குறையும் கொண்டிருக்கவுமில்லை; யோபு கூட அவனுக்கு சமமானவன் அல்ல, யுகங்கள் முழுவதும், பரிசுத்தவான்கள் அனைவரும் பேதுருவைக் காட்டிலும் மிகக் குறைவுபட்டவர்களாகப் போனார்கள். அவன் என்னை அறிந்துகொள்ள முயன்றது மட்டுமல்லாமல், சாத்தான் அவனுடைய வஞ்சகத் திட்டங்களை மேம்படுத்திக் கொண்டிருந்த காலத்திலும் என்னை அறிந்துகொண்டான். இது பேதுருவை பல ஆண்டுகளாக எப்போதும் என் சித்தத்திற்கு ஏற்ப எனக்கு ஊழியம் செய்ய வழிவகுத்தது, இந்தக் காரணத்தினாலேயே, அவன் ஒருபோதும் சாத்தானால் அவனது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை. பேதுரு யோபுவினுடைய விசுவாசத்திலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டான், அதேவேளையில் யோபுவின் குறைபாடுகளையும் தெளிவாக உணர்ந்துகொண்டான். யோபு மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தவனாக இருந்தபோதிலும், ஆவிக்குரிய உலகிலுள்ள காரியங்களைப் பற்றிய அறிவு அவனுக்கு இல்லாதிருந்தது, எனவே அவன் யதார்த்தத்துடன் பொருந்தாத பல வார்த்தைகளைக் கூறினான்; இது யோபுவினுடைய அறிவு ஆழமற்றது மற்றும் முழுமையற்றது என்பதைக் காண்பிக்கிறது. ஆகையால், பேதுரு எப்போதுமே ஆவியின் உணர்வைப் பெறுவதில் கவனம் செலுத்தினான், மேலும் ஆவிக்குரிய உலகத்தின் செயல்பாட்டை கூர்ந்து கவனிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தினான். இதன் விளைவாக, அவன் என் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை அறிந்துகொள்ள முடிந்தது என்பது மட்டுமின்றி, சாத்தானின் வஞ்சகத் திட்டங்களைப் பற்றி சிறிதளவு அறிவையும் கொண்டிருந்தான். இதன் காரணமாக, என்னைப் பற்றிய அவனது அறிவு யுகங்கள் முழுவதும் வேறு எவரையும் விட அதிகமாக வளர்ந்தது.
பேதுருவினுடைய அனுபவத்திலிருந்து, மனிதர்கள் என்னை அறிந்துகொள்ள விரும்பினால், அது அவ்வளவு கடினமான காரியமாகப் பார்க்க முடியாது, அவர்கள் தங்கள் ஆவிகளுக்குள் கவனமாகப் பரிசீலனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நீ ஒரு குறிப்பிட்ட தொகையை எனக்கு புறநிலையாக “அர்ப்பணிக்குமாறு” நான் கேட்கவில்லை; இது இரண்டாம் பட்சமானது. நீ என்னை அறியவில்லை என்றால், நீ பேசுகின்ற நம்பிக்கை, அன்பு, மற்றும் விசுவாசம் யாவும் மாயைகள் மட்டுமே; அவை குமிழிகளாக இருக்கின்றன, எனக்கு முன்பாக பெருமை பேசும், அதேவேளையில் தன்னைக் குறித்து அறியாத ஒருவனாக நீ மாறுவது உறுதி. இப்படி இருக்கும்போது, நீ மீண்டும் ஒரு முறை சாத்தானின் பிடிக்குள் சிக்கிக்கொள்வாய், பிறகு உன்னை நீயே விடுவித்துக் கொள்ள முடியாது; நீ கேட்டின் மகனாகவும் அழிவின் பொருளாகவும் மாறிவிடுவாய். இருப்பினும், நீ பாராமுகமாக என் வார்த்தைகளைக் கவனிக்காமல் இருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி நீ என்னை எதிர்க்கிறாய். இது உண்மை, நீ என்னால் தண்டிக்கப்பட்ட பல்வேறு மற்றும் பலதரப்பட்ட ஆவிகளை ஆவிக்குரிய உலகின் வாயில் வழியாகப் பார்க்க வேண்டும். அவற்றில் என் வார்த்தைகளை எதிர்கொண்டது, செயலற்றது, அக்கறையற்றது, மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் குறைகாணாதது எது? அவற்றில் என் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடிக்க முயற்சிக்காதது எது? அவற்றில் தங்களைப் “பாதுகாத்துக்கொள்ள” என் வார்த்தைகளை “தற்காப்பு ஆயுதங்களாக” பயன்படுத்தாது எது? அவர்கள் என் வார்த்தைகளின் உள்ளடக்கங்களை என்னை அறிந்துகொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தவில்லை, மாறாக விளையாடுவதற்கான பொம்மைகளாக மட்டுமே பயன்படுத்தினார்கள். இதில், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கவில்லையா? என்னுடைய வார்த்தைகள் யார்? என்னுடைய ஆவி யார்? இதுபோன்ற கேள்விகளை நான் உங்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன், ஆனாலும் நீங்கள் அவைகளைப் பற்றிய உயர்ந்த மற்றும் தெளிவான நுண்ணறிவுகளைப் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே அவற்றை அனுபவித்திருக்கிறீர்களா? நான் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்: நீங்கள் என் வார்த்தைகளை அறியவில்லை என்றால், அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவற்றை கடைபிடிக்காவிட்டால், பிறகு நீங்கள் தவிர்க்க முடியாதபடிக்கு என்னுடைய தண்டனைக்குரிய பொருட்களாக மாறிப்போவீர்கள்! நீங்கள் மெய்யாகவே சாத்தானுக்கு பலியாகிப்போவீர்கள்!
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள் என்பதன் “அத்தியாயம் 8” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 390
அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துக்கொள்கிறார்கள். ஏனென்றால், “தேவன்” என்ற வார்த்தையையும் “தேவனின் கிரியை” போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான சர்வவல்லமையைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்று அழைக்கலாம். ஆயினும், ஜனங்கள் பெரும்பாலும் தேவனிடத்திலான விசுவாசத்தை ஒரு எளிமையான மற்றும் அற்பமான விஷயமாகவே பார்க்கிறார்கள். இவ்வழியில் தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனை விசுவாசிப்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டிருக்கிறார்கள், கடைசி வரை அவர்கள் தொடர்ந்து விசுவாசித்தாலும், அவர்கள் ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறப்போவதில்லை, ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். எழுத்துக்களின் படியும், வெற்றுக் கோட்பாட்டிலும் தேவனை விசுவாசிப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவனிடத்திலான விசுவாசத்தின் சாராம்சம் அவர்களிடம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. அப்படியிருப்பினும் அவர்கள் இரட்சிப்பிற்கான ஆசீர்வாதங்களுக்காகவும், போதுமான கிருபைக்காகவும் தேவனிடம் ஜெபிக்கிறார்கள். நாம் நிதானித்து, நம் இருதயங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: தேவனை விசுவாசிப்பது என்பது உண்மையில் பூமியில் எளிதான விஷயமாக இருக்க முடியுமா? தேவனை விசுவாசிப்பது என்பது தேவனிடமிருந்து அதிக கிருபையைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருக்க முடியுமா? தேவனை அறியாமலேயே அவரை விசுவாசிப்பவர்களும் அல்லது தேவனை நம்புகிறவர்களும் அவரை எதிர்த்தால், அவர்களால் உண்மையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 391
மனிதன் தேவனை விசுவாசிக்க தொடங்கியதிலிருந்து எதை மனிதன் தனக்கென்று ஆதாயப்படுத்தியுள்ளான்? நீ தேவனைக் குறித்து என்ன தெரிந்துக் கொண்டிருக்கிறாய்? நீ தேவனை விசுவாசித்ததினால் எவ்வளவு மாறியிருக்கிறாய்? இன்றைக்கு, மனிதன் தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது அவனது ஆத்துமாவின் இரட்சிப்பிற்காகவும், அவனது உடல் நன்றாக இருப்பதற்காகவும், அல்லது தேவனை நேசிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையினைச் செழிப்பாக்கிக் கொள்வான் என்பதற்காகவும் அல்ல என இப்படி அநேகமானவற்றை நீங்கள் யாவரும் அறிந்து இருக்கிறீர்கள். இப்படியாக இருக்கும் வேளையில், நீ உன்னுடைய உடல் சார்ந்தவை நன்றாக இருப்பதற்காக அல்லது தற்காலிகச் சுகத்திற்காகத் தேவனை நேசிக்கிறேன் என்றும், இதற்கு மேல் நான் எதனையும் கேட்க மாட்டேன் என்கிற அளவிற்கு தேவனிடத்தில் கொண்டிருக்கும் உன் அன்பு அதனின் உச்சத்தைத் தொட்டு விட்டதாக இருந்தாலும், நீ தேடும் அந்த அன்பு அவ்வேளையிலும் கலப்படமான அன்பாக, தேவனுக்குப் பிரியமில்லாத ஒன்றாகவே காணப்படும். அவர்களது மந்தமான வாழ்க்கை அல்லது அவர்கள் இருதயத்தில் இருக்கின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காக, தேவனுக்காகத் தாங்கள் கொண்டிருக்கின்ற அன்பைப் பயன்படுத்துபவராகக் காணப்படுபவர்கள், எளிதான வாழ்க்கை வாழ பேராசைக் கொண்டவர்களாகவும், தேவனிடத்தில் மெய்யான அன்புக்கூரும்படி தேவனை உண்மையாகத் தேடாத ஜனக் கூட்டத்தாரில் ஒருவராகவும் காணப்படுவார்கள்.இந்தவித அன்பு கட்டாயத்தின் பேரில் உண்டாவது, இது மனதின் நிறைவிற்காகத் தேடிப் பின் செல்வது, மற்றும் தேவனுக்கு இப்படிப்பட்ட அன்பு தேவையில்லை. அப்படியென்றால், உன்னுடைய அன்பு எப்படிப்பட்டது? எதற்காக தேவனைத் தேடுகிறாய்? தேவனுக்காக மெய்யான அன்பை எவ்வளவு தற்பொழுது உனக்குள் கொண்டிருக்கிறாய்? உங்களில் அநேகமானவரின் அன்பு மேற்சொல்லிய அன்பைப் போன்றே காணப்படுகின்றது. இந்த விதமான அன்பினால் முன்பிருந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் அவ்வளவே; அது மாற்ற முடியாத நிலையை அடைய முடியாது அல்லது மனிதனுக்குள் ஆழமாக வேர்க் கொள்ள முடியாது. இந்த விதமான அன்பு எப்படி இருக்கின்றது என்றால், மலரும் பூ ஒன்று மலர்ந்து கனி கொடுக்காமல் உதிர்ந்து விடுவதைப் போல் இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனை நேசிக்கின்றதாக இருந்து ஒருவர் உன்னை வழி நடத்தும்படியாக இல்லாதிருக்கும் போது, நீ மனம் உடைந்து போவாய். தேவனை நேசிக்கும் போது மட்டும் நீ தேவனை நேசிக்கின்றதாக காணப்படுமானால், அதற்குப் பின் உன் இயற்கையான குணம் மாற்றம் பெறாமல் இருக்கின்றது என்றால், நீன் அந்தகாரத்தின் ஆதிக்கத்தின் மூடுதலில் இருந்து தப்பிக்க முடியாமல், சாத்தானின் கட்டு மற்றும் மோசடியில் இருந்து விடுபட முடியாதவராக அப்படியே நின்று விடுவாய். இது போன்ற எவரையும் தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக் கொள்ள முடியாது; இறுதியில், அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இன்னும் சாத்தானுக்கு சொந்தமானதாகவே இருக்கும். இது குறித்து எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. தேவனால் முழுமையாக இப்படிபட்டவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாமல், ஆரம்பத்தில் இருந்த இடத்திற்கு, அதாவது, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்கு நேராக, தேவனிடத்தில் இருந்து வருகிற அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக் கொள்ளும்படி அவர்கள் ஆழமாகச் சென்று விடுவார்கள். சாத்தானை உதறி தள்ளி விட்டு அவனது ஆளுகையில் இருந்து தப்பி வருபவர்களே தேவனால் சொந்தமாக்கிக் கொள்ளப்படுபவர்கள். அவர்கள் அதிகாரப் பூர்வமாக இராஜ்யத்தின் மக்கள் மத்தியில் எண்ணப்பட்டிருக்கிறார்கள். இராஜ்யத்தின் மக்கள் இப்படித்தான் வருகிறார்கள். இந்த வகையான மனிதராக நீயும் மாற விரும்புகிறாயா? நீயும் தேவனால் சொந்தமாக்கப்பட விரும்புகிறாயா? நீயும் சாத்தானின் ஆளுகை வரம்பில் இருந்து தப்பித்து தேவனிடம் திரும்ப விரும்புகிறாயா? இப்பொழுது நீ சாத்தானுக்குரியவரா அல்லது இராஜ்யத்தின் ஜனங்களில் எண்ணப்பட்டவர்களில் ஒருவராக இருக்கின்றாயா? இந்த விஷயங்கள் உனக்கு ஏற்கெனவே தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும், மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 392
கடந்த காலத்தில், அநேகர் தங்கள் சொந்த நம்பிக்கைகளின் விளைவாகத் தேடினர், கட்டுப்பாடற்றக் குறிக்கோள்களுடன் தனிப்பட்டக் கொள்கைகளுடன் தேடினர். இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சற்று அப்படியே இப்போதைக்கு ஒதுக்கி வைப்போம்; நாம் தேவனுக்கு முன்பாக ஒரு சாதாரணமான நிலையினைக் கொண்டிருக்க வேண்டும், படிப்படியாக சாத்தானின் ஆளுகைப்பிடியில் இருந்து விடுதலைப் பெற்று அதனால் தேவன் உங்களை தமக்கென ஆதாயப்படுத்தி, நீங்கள் தேவன் எதிர்பார்க்கின்றபடியான வாழ்க்கையை இந்த உலகில் வாழ உதவும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பதே-இப்போதைய முக்கியமான தேவையாயிருக்கிறது. இந்த வழியாகத் தான் தேவனுடைய யோசனைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும். அநேகர் தேவனை நம்புகிறார்கள், ஆனாலும் தேவன் எவற்றை விரும்புகிறார் அல்லது சாத்தானின் விருப்பம் எவை என்பதையும் அறியாது இருக்கின்றனர். அவர்கள் மதியீனமான, குழப்பமான ஒரு வழியை நம்பி, அது செல்லும் வழியிலேயே செல்வதினால், ஒரு இயல்பான கிறிஸ்தவ வாழ்க்கையை ஒருக்காலும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் இயல்பான தனிப்பட்ட உறவுகளையும் பெறவில்லை; இன்னும் அதிகமாக, தேவனுடன் கொண்டிருக்கும் உறவில் பெற்றிருக்க வேண்டிய இயல்பான உறவினையும் பெற்றிருக்கவில்லை. தேவனுடைய சித்தத்திற்கு மனிதனின் கஷ்டங்கள், மீறுதல்கள் என மேலும் பல காரணங்கள் தடையாக உள்ளன என்பதை இதிலிருந்து கண்டுக் கொள்ள முடியும். மனிதன் தேவனை விசுவாசிப்பதில் செல்ல வேண்டிய சரியான பாதையில் இன்னும் செல்லவில்லை மனித வாழ்க்கையில் மெய்யான அனுபவத்திற்க்குள் செல்லவில்லை என்பதை நிரூபிக்க இது மட்டுமே போதுமானது. தேவனை விசுவாசிக்கும் ஒழுங்கான வழித்தடத்தில் செல்ல வேண்டும் என்பது எதைக் குறிக்கிறது? தேவனுக்கு முன்பாக உன் இருதயத்தை எப்பொழுதும் அமைதலாக்கி தேவனுடன் ஓர் இயல்பான தொடர்பினை ஏற்படுத்த முடியும், படிப்படியாக மனிதனில் என்னக் குறை இருக்கின்றது என்பதை அறிந்து வரும் வேளையில் தேவனைக் குறித்து ஆழமான அறிவையும் அதிகமாக பெற்றுக் கொள்வது என்பதையே சரியான வழித்தடத்தில் செல்வது குறிக்கின்றது. இதன் மூலமாக, உன் ஆவி புதிய நுண்ணறிவையும் புதிய பிரகாசிப்பித்தலையும் அனுதினமும் பெற்றுக் கொள்கிறது. உன் ஆர்வம் வளர்கின்றது, நீ சத்தியத்திற்குள் நுழையத் தேடுகிறாய், ஒவ்வொரு நாளும் புதிய வெளிச்சம் மற்றும் புதிய புரிந்துக் கொள்ளுதல் உண்டாகிறது. இந்த வழியின் ஊடாகச் செல்லும் போது, படிப்படியாக நீ சாத்தானின் ஆளுகையில் இருந்து வெளியேறி வாழ்க்கையில் வளருகிறாய். இப்படிப்பட்ட மக்கள் சரியான வழித்தடத்தில் நுழைந்து விட்டனர். உன்னுடைய நடைமுறை அனுபவங்களையும், நீ சென்ற உன் விசுவாசப் பாதையையும் சோதித்துப் பார். உன்னை கீழ்க்காண்பவற்றின் பிண்ணனியில் வைத்துப் பார்: நீ சரியான வழித்தடத்தில் சென்றுக் கொண்டு இருக்கிறாயா? சாத்தானின் ஆளுகைப்பிடியிலிருந்தும் சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்தும் எந்த காரியங்களில் விடுதலைப் பெற்று இருக்கிறாய்? இன்னும் சரியான வழித்தடத்தில் ஓட நீ ஆரம்பிக்கவில்லை என்றால் சாத்தானோடு நீ கொண்டிருக்கும் உறவு இன்னும் வேரோடு வெட்டப்படவில்லை என்றுதான் அர்த்தம். இப்படியாக உன் நிலை இருக்குமானால், நீ தேவனிடம் அன்புக் கூறுவேன் எனத் தேடுவது உங்களை நம்பகமான, ஒரே நோக்கமுடைய மற்றும் சுத்தமான அன்பிற்கு நேராக வழி நடத்துமா? நீ சாத்தானுடையத் தொடர்பில் இருந்து உன்னை விடுவித்துக் கொள்ளாதவராக இருக்கும்பட்சத்தில் நீ தேவனுக்காகக் கொண்டிருக்கும் அன்பு தடுமாற்றம் இல்லாததும் இருதயபூர்வமானதும் என்று சொல்லுவீரானால் நீ தேவனை முட்டாளாக்க முயற்சிக்கவில்லையா? தேவனுக்காக நீ கொண்டிருக்கும் அன்பு கலப்படமில்லா நிலைக்கு வர வேண்டும் எனவும், தேவனின் உடைமையாக நான் மாற வேண்டும் எனவும் ராஜ்யத்தின் மக்களின் எண்ணிக்கைக்குள் வர வேண்டும் எனவும் நீ விரும்புவீரானால், தேவனை விசுவாசிப்பதன் சரியான வழித்தடத்தில் ஓடும்படி, நீயே உன்னை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 393
எல்லா மக்களிடமும் இருக்கின்ற பொதுவான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் சத்தியத்தை புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதை நடைமுறைப்படுத்தத் தவறிவிடுகிறார்கள். ஏனென்றால், ஒருபுறம், அவர்கள் அதற்கான விலையைக் கொடுக்கத் தயாராக இல்லை, மறுபுறம், அவர்களின் விவேகம் மிகவும் போதாததாக உள்ளது; அன்றாட வாழ்க்கையில் உள்ள பல சிரமங்களை அவர்களால் பார்க்க முடியவில்லை, அதை எப்படி சரியாக பயிற்சி செய்வது என்று தெரியவில்லை. ஏனென்றால், மக்களின் அனுபவங்கள் மிகவும் ஆழமற்றவை, அவர்களின் திறமை மிகவும் குன்றி உள்ளது, மேலும் அவர்கள் சத்தியத்தை எந்த அளவிற்கு புரிந்துகொள்கிறார்கள் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சிரமங்களைத் தீர்க்க அவர்களுக்கு வழி இல்லை. அவர்கள் தேவனை வார்த்தையில் மட்டுமே நம்புகிறார்கள், மேலும் தேவனை தங்கள் அன்றாட வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியவில்லை. அதாவது, தேவன் என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு, மக்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுடன் எந்த உறவும் இல்லை என்றாகிறது. எல்லோரும் அதைத்தான் நினைக்கிறார்கள். இவ்வாறு தேவனை நம்பினால், மக்கள் உண்மையில் அவரால் அடையப்பெற்று பரிபூரணமடைய மாட்டார்கள். உண்மையில், தேவனின் வார்த்தை முழுமையாக உணரப்படவில்லை என்பதல்ல, மாறாக, அவருடைய வார்த்தையைப் பெறுவதற்கான மக்களின் திறன் மிகவும் குறைவு. தேவனின் அசலான சித்தத்தின்படி யாரும் செயல்படுவதில்லை என்று ஒருவர் கூறலாம்; மாறாக, கடந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த மதக் கருத்துக்கள் மற்றும் காரியங்களைச் செய்வதற்கான அவர்களின் சொந்த வழி தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் அவர்களின் சொந்த சித்தத்தின்படி இருக்கிறது, தேவனின் வார்த்தையை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி, அவருடைய சித்தத்திற்கு ஏற்ப செயல்படத் தொடங்குபவர்கள் மிகக் குறைவு. மாறாக, அவர்கள் தவறான நம்பிக்கைகளில் நிலைத்திருக்கிறார்கள். மக்கள் தேவனைத் நம்பத் தொடங்கும் போது, மதத்தின் வழக்கமான விதிகளின் அடிப்படையில் அவர்கள் அவ்வாறு செய்கின்றார்கள், மேலும் முற்றிலும் அவர்களுக்கு சொந்தமான வாழ்வதற்கான தத்துவத்தின் அடிப்படையில் மற்றவர்களுடன் வாழ்கிறார்கள், தொடர்பு கொள்கிறார்கள். ஒவ்வொரு பத்து பேரிலும் ஒன்பது பேர் இப்படித்தான் என்று கூறலாம். தேவனைத் நம்பத் தொடங்கியபின், மற்றொரு திட்டத்தை வகுத்து, ஒரு புதிய நிலைக்கு திரும்புகிறவர்கள் மிகக் குறைவு. தேவனின் சத்தியத்தை உண்மையெனக் கருதுவதில் மனிதகுலம் தவறிவிட்டது, அல்லது அதை சத்தியமாக எடுத்துக் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதில் தவறிவிட்டது.
உதாரணமாக, இயேசுவின் மீதான விசுவாசத்தை, எடுத்துக்கொள்வோம். யாராவது இப்போது விசுவாசிக்க ஆரம்பித்திருந்தார்கள் என்றாலும் அல்லது மிக நீண்ட காலமாக அவ்வாறு செய்தார்கள் என்றாலும், அனைவருமே தங்களிடம் இருந்த திறமைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்தினர். மக்கள் எளிதாக தங்கள் வழக்கமாக உள்ள வாழ்க்கையில் “தேவன் மீதான விசுவாசம்” என்ற இந்த மூன்று வார்த்தைகளையும் சேர்த்தனர் ஆயினும் அவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, தேவன் மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசம் சிறிதளவும் வளரவில்லை. அவர்களின் பின்தொடர்தல் அனலாகவோ குளிராகவோ இல்லை.அவர்கள் தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவதாகச் சொல்லவில்லை, ஆனால் அனைத்தையும் தேவனுக்கென்று பரிசுத்தப்படுத்தவும் இல்லை. அவர்கள் ஒருபோதும் தேவனை மெய்யாக அன்புகூர்ந்ததில்லை அல்லது அவருக்கு கீழ்ப்படிந்ததில்லை.தேவன் மீதான அவர்களின் விசுவாசம் என்பது உண்மை மற்றும் போலியின் கலவையாகும், அவர்கள் ஒரு கண்ணைத் திறந்து கொண்டும் மறு கண்னை மூடிக்கொண்டும் அதை அணுகினர். அவர்கள் விசுவாசத்தைக் நடைமுறைப் படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் குழப்பமான நிலையில் தொடர்ந்தனர், கடைசியில் ஒரு குழப்பமான மரணம் அடைந்தனர். அவை எல்லாவற்றிலும் என்ன பயன்? இன்று, நடைமுறைக்குரிய தேவனை விசுவாசிக்க, நீ சரியான பாதையில் கால்பதிக்க வேண்டும். நீ தேவனை விசுவாசித்தால், நீ ஆசீர்வாதங்களைத் தேடுவது மட்டுமல்லாமல், தேவனை நேசிக்கவும், தேவனை அறிந்து கொள்ளவும் வேண்டும். அவருடைய பிரகாசத்தின் மூலமும், உன் தனிப்பட்ட தேடலின் மூலமும், நீ அவருடைய வார்த்தையைச் ருசிக்கலாம், குடிக்கலாம், தேவனைப் பற்றிய உண்மையான புரிதலை வளர்த்துக் கொள்ளலாம், மேலும் உன் உள்ளான மனதிலிருந்து வரும் தேவனின் உண்மையான அன்பைப் பெறலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் மீதான உன் அன்பு மிகவும் உண்மையானது என்றால், மேலும், அவர்மீது நீ வைத்திருக்கும் அன்பின் வழியில், எவரும் உன்னை அழிக்கவோ, எதிராக நிற்கவோ முடியாது, இந்த நேரத்தில் நீ தேவன் மீதுள்ள உங்கள் விசுவாசத்தில் சரியான பாதையில் செல்கிறாய். இது, நீ தேவனைச் சார்ந்தவன் என்பதை நிரூபிக்கிறது, ஏனென்றால் உன் இதயம் ஏற்கனவே தேவனின் வசம் உள்ளது, வேறு எதுவும் உன்னைக் கைப்பற்ற முடியாது. உன் அனுபவத்தின் மூலமும், நீ கொடுத்த விலையின் மூலமாகவும், தேவனின் வேலையின் மூலமாகவும், தேவன் மீது தடையில்லாத அன்பை வளர்த்துக் கொள்ள முடியும்—நீ அவ்வாறு செய்யும்போது, நீ சாத்தானின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, தேவனின் வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ்ந்து வருவாய். இருளின் தாக்கத்திலிருந்து நீ விடுபட்டுவிட்டால்தான் நீ தேவனைக் கொண்டிருக்கிறாய் என்று கூற முடியும். தேவன் மீதான உன் நம்பிக்கையில், நீ இந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். இது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். நீங்கள் யாரும் தற்போதைய விவகாரத்தின் நிலைமைகளில் திருப்தி அடையக்கூடாது. தேவனின் கிரியையைக் குறித்து உங்களுக்கு இரண்டு மனங்கள் இருக்க முடியாது, அதை நீங்கள் லேசானதாகக் கருதவும் முடியாது. நீங்கள் எல்லா வகையிலும், எல்லா நேரங்களிலும் தேவனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், எல்லாவற்றையும் அவர் பொருட்டுச் செய்ய வேண்டும். நீங்கள் பேசும்போதும் அல்லது செயல்படும்போதும், முதலில் தேவனுடைய வீட்டின் நலன்களை முன்னிறுத்த வேண்டும். இதன் மூலம் தேவனின் இருதயத்திற்கு ஏற்றவராக நீங்கள் இருக்க முடியும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 394
மக்களின் மிகப்பெரிய தவறு என்னவென்றால், தேவன் மீதுள்ள விசுவாசத்தில், அவர்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே விசுவாசிக்கிறார்கள் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். எல்லா மக்களும், தேவன் ஜீவித்திருப்பதை நம்புகிறார்கள், ஆனால் தேவன் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. மக்களின் வாய்கள் தேவனிடம் அநேக ஜெபங்களை ஏறெடுக்கிறது, ஆனால் தேவனுக்கு அவர்களின் இதயங்களில் இடமில்லை, எனவே தேவன் அவர்களிடம் இடம்பெற மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறார். ஏனெனில் மக்கள் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள், இதனால் அவர்கள் வெட்கப்படவும் இந்த சோதனைகளுக்கு மத்தியில், தங்களை அறிந்து கொள்ளவும் செய்வதைத் தவிர தேவனுக்கு வேறு வழியில்லை. இல்லையென்றால், மானுடம் பிரதான தூதரின் சந்ததியினராக மாறும், அல்லாமல் மிகவும் தீமை நிறைந்ததாக மாறும். தேவன் மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் செயல்பாட்டில், ஒவ்வொரு நபரும் தேவனின் இடைவிடாத சுத்திகரிப்பின் கீழ் தங்களின் பல தனிப்பட்ட நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விலக்குகிறார்கள். இல்லையென்றால், தேவன் யாரையும் பயன்படுத்துவதற்கான வழி இருக்காது, மேலும் அவர் செய்ய வேண்டிய வேலையை மக்களிடையே செய்ய முடியாது. தேவன் முதலில் மக்களை சுத்தப்படுத்துகிறார், இந்த செயல்முறையின் மூலம், , தேவன் அவர்களை மாற்றக்கூடும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளலாம். அப்போதுதான் தேவன் தம்முடைய வாழ்க்கையை அவர்களுக்குள் செயல்படுத்துகிறார், இதனால் மட்டுமே அவர்களின் இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்ப முடியும். எனவே நான் சொல்கிறேன், தேவனை நம்புவது மக்கள் சொல்வது போல் எளிதானது அல்ல. தேவன் அதைப் பார்க்கிறார், உனக்கு அறிவு மட்டுமே உண்டாயிருந்து, ஆனால் அவருடைய வார்த்தையை ஜீவனாக கொண்டிருக்கவில்லை என்றால், மேலும் நீ உன் சொந்த அறிவுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், சத்தியத்தை கடைப்பிடிக்கவோ அல்லது தேவனுடைய வார்த்தைப்படி வாழவோ முடியாவிட்டால், தேவனை நேசிக்கும் இதயம் உன்னிடம் இல்லை என்பதற்கு இதுவே சான்றாகும், உன் இதயம் தேவனுக்கு உரியதல்ல என்பதை இது காட்டுகிறது. ஒருவர் தேவனை விசுவாசிப்பதின் மூலம் அவரை அறிந்து கொள்ள முடியும்: இதுவே இறுதி இலக்கு மனிதனின் நாட்டத்தின் குறிக்கோள். தேவனுடைய வார்த்தைகளைச் செயல்படுத்துவதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும், இதனால் அவை உனக்கு நடைமுறையில் பலனளிக்கும். உன்னிடம் கோட்பாட்டு அறிவு மட்டுமே இருந்தால், தேவன் மீதான உன் விசுவாசம் வீணாகிவிடும். நீ அவருடைய வார்த்தையை கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே, உன் விசுவாசம் முழுமையானதாகவும், தேவனின் விருப்பத்திற்கு இணங்கவும் இருக்கமுடியும். இந்த வழியில், மக்கள் அதிகமாக அறிவு சார்ந்ததைப் பற்றி பேசலாம், ஆனால் அவர்கள் இறக்கும் போது, அவர்களின் கண்கள் கண்ணீரால் சூழ்ந்துக் கொள்கின்றன, மேலும் அவர்கள் வாழ்நாளை வீணடித்ததற்காக தங்களை வெறுக்கிறார்கள், முதிர் வயதில் வீணாக வாழ்ந்தார்கள். அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் உண்மையை நடைமுறைக்குக் கொண்டுவரவோ அல்லது தேவனுக்கு சாட்சி கொடுக்கவோ முடியாது; அதற்கு பதிலாக, அவர்கள் வெறுமனே அங்கும் இங்கும் ஓடுகிறார்கள், ஒரு தேனீ போல சுறுசுறுப்பாக இருக்கிறார்கள், மரணத்தின் விளிம்பில் மட்டுமே அவர்கள் உண்மையான சாட்சியம் இல்லாததையும் அவர்கள் தேவனை அறியவில்லை என்பதையும் காண்கிறார்கள். இது மிகவும் தாமதமானதாக இல்லையா? நீ ஏன் இன்றைய நாளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நீ விரும்பும் சத்தியத்தைத் தொடரக்கூடாது? நாளை வரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாழ்க்கையில் நீ சத்தியத்திற்காகக் கஷ்டப்படாவிட்டால் அல்லது அதைப் பெற முயற்சிக்கவில்லை என்றால், நீங்கள் மரிக்கும் நேரத்தில் நீ வருத்தப்பட விரும்புகிறாயா? அப்படியானால், ஏன் தேவனை விசுவாசிக்கிறாய்? உண்மையாக, மக்கள், சிறிதளவு முயற்சி செய்தால், சத்தியத்தை நடைமுறைப்படுத்தினால், அதன் மூலம் தேவனை திருப்திப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. மக்களின் இருதயங்கள் எப்போதுமே சாத்தானால் பிடிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தேவனுக்காக செயல்பட முடியாமல் போகிறது, மேலும் அவர்களின் மாம்சத்திற்காக தொடர்ந்து விரைந்து செய்லபடுகின்றனர், இறுதியில் அதைக்காட்ட எதுவும் இல்லை. இந்தக் காரணத்திற்காக, மக்கள் தொடர்ந்து தொல்லைகள் மற்றும் சிரமங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை சாத்தானின் உபத்திரவம் அல்லவா? இது மாம்சத்தின் கெடுதல் அல்லவா? நீ உதட்டளவில் பேசி தேவனை முட்டாளாக்க முயற்சிக்கக்கூடாது. மாறாக, நீ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னையே நீ ஏமாற்ற வேண்டாம், அதன் பயன் என்ன? உன் மாம்சத்திற்காக வாழ்வதன் மூலமும், லாபத்துக்காகவும் புகழுக்காகவும் போராடுவதன் மூலம் நீ என்ன பெற முடியும்?
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 395
இப்போது, நீங்கள் தேவனுடைய ஜனங்களாக மாறுவதை நாட வேண்டும் மற்றும் முழு பிரவேசத்தையும் சரியான பாதையில் தொடங்க வேண்டும். தேவனுடைய ஜனங்களாக இருப்பதற்கு, ராஜ்யத்தின் யுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்பது பொருளாகிறது. இன்று, நீங்கள் அதிகாரப்பூர்வமாக ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் எதிர்கால ஜீவிதம் முன்பு இருந்ததைப் போலவே மந்தமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருக்கும். அவ்வாறு ஜீவிப்பதால், தேவனால் எதிர்பார்க்கப்படும் தரங்களை அடைவது சாத்தியமற்றதாக இருக்கிறது. எந்த அவசரத்தையும் நீ உணரவில்லை என்றால், அது உன்னை மேம்படுத்திக் கொள்வதற்கான விருப்பம் உனக்கு இல்லை என்பதையும், உன் பின்பற்றுதல் குழப்பமானதாகவும் புரியாததாகவும் இருப்பதையும், தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதையும் காட்டுகிறது. ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது என்பது தேவனுடைய ஜனங்களின் ஜீவிதத்தைத் தொடங்குவதாகும்—இதுபோன்ற பயிற்சியை ஏற்க நீ தயாராக இருக்கிறாயா? முக்கியமானவற்றை உணர நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய ஒழுக்கத்தின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய சிட்சையின் கீழ் ஜீவிக்க நீ தயாராக இருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகள் உன்னிடம் வந்து உன்னை சோதிக்கும்போது, நீ எவ்வாறு செயல்படுவாய்? எல்லா விதமான உண்மைகளையும் எதிர்கொள்ளும்போது நீ என்ன செய்வாய்? கடந்த காலத்தில், உங்கள் கவனம் ஜீவிதத்தில் இல்லை. இன்று, நீங்கள் ஜீவிதத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் மற்றும் உங்கள் ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். இதைத்தான் ராஜ்யத்தின் ஜனங்கள் அடைய வேண்டும். தேவனுடைய ஜனங்களாகிய அனைவரும் ஜீவனைக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களுடைய ஜீவித மனநிலையில் மாற்றங்களை நாட வேண்டும். ராஜ்யத்தின் ஜனங்களிடம் தேவன் எதிர்பார்ப்பது இதுதான்.
ராஜ்யத்தின் ஜனங்களிடமான தேவனுடைய எதிர்பார்ப்புகள் பின்வருமாறு இருக்கின்றன:
1. அவர்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்க வேண்டும். அதாவது, கடைசி நாட்களில் தேவனுடைய கிரியையில் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. அவர்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்க வேண்டும்.
3. தங்கள் இருதயங்கள் தேவன் தொடும்படியாக அவர்கள் பின்பற்ற வேண்டும். உன் இருதயம் முழுவதுமாக தேவனிடமாய் திரும்பி, உனக்கு ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கும்போது, நீ சுதந்திரத்தின் உலகில் ஜீவிப்பாய், அதாவது தேவனுடைய அன்பின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் நீ ஜீவிப்பாய். நீ தேவனுடைய கவனிப்பிலும் பாதுகாப்பிலும் ஜீவிக்கும்போது தான் நீ தேவனுக்கு சொந்தமானவனாக இருப்பாய்.
4. அவர்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும்.
5. அவர்கள் பூமியில் தேவனுடைய மகிமையின் ஒரு வெளிப்பாடாக மாற வேண்டும்.
இந்த ஐந்து காரியங்களும் உங்களுக்கான எனது ஆணைகளாக இருக்கின்றன. என் வார்த்தைகள் தேவனுடைய ஜனங்களிடம் பேசப்படுகின்றன. இந்த ஆணைகளை நீ ஏற்க விரும்பவில்லை என்றால், நான் உன்னை நிர்ப்பந்திக்க மாட்டேன்—ஆனால் நீ அவற்றை உண்மையாக ஏற்றுக்கொண்டால், உன்னால் தேவனுடைய சித்தத்தைச் செய்ய முடியும். இன்று, நீங்கள் தேவனுடைய ஆணைகளை ஏற்கத் தொடங்குகிறீர்கள் மற்றும் ராஜ்யத்தின் ஜனங்களாக மாறி, ராஜ்யத்தின் ஜனங்களாக இருக்கத் தேவையான தரங்களை அடைகின்றீர்கள். இது பிரவேசத்தின் முதல் படியாக இருக்கிறது. தேவனுடைய சித்தத்தை நீங்கள் முழுமையாக செய்ய விரும்பினால், இந்த ஐந்து ஆணைகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை உன்னால் அடைய முடிந்தால், நீ தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாய் இருப்பாய் மற்றும் நிச்சயமாக தேவன் உன்னைப் பெரிதளவில் பயன்படுத்துவார். இன்று முக்கியமானது என்னவென்றால், ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது தான். ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிப்பது ஆவிக்குரிய ஜீவிதத்தை உள்ளடக்கியது. முன்னதாக, ஆவிக்குரிய ஜீவிதத்தைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை, ஆனால் இன்று, நீங்கள் ராஜ்யத்தின் பயிற்சிக்குள் பிரவேசிக்கத் தொடங்குகையில், நீங்கள் அதிகாரப்பூர்வமாக ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிக்கிறீர்கள்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 396
ஆவிக்குரிய ஜீவிதம் எத்தகைய ஜீவிதம்? ஆவிக்குரிய ஜீவிதம் என்பது உன் இருதயம் முழுவதுமாக தேவனிடம் திரும்பியிருக்கிறதும், உன்னால் தேவனுடைய அன்பை நினைக்கிறதற்கும் முடியும் என்பதும் ஆகும். இது, தேவனுடைய வார்த்தைகளில் நீங்கள் ஜீவிப்பதும், வேறு எதுவும் உங்கள் இருதயத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பதும், இன்று நீங்கள் தேவனுடைய சித்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் உங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக பரிசுத்த ஆவியானவரின் ஒளியால் இன்று வழிநடத்தப்பட முடிகிறது என்பதும் ஆகும். மனிதனுக்கும் தேவனுக்கும் இடையிலான அத்தகைய ஜீவிதம் ஆவிக்குரிய ஜீவிதமாக இருக்கிறது. இன்றைய ஒளியை உன்னால் பின்பற்ற முடியவில்லை என்றால், தேவனுடனான உன் உறவில் ஒரு தூரம் உருவாகி உள்ளது—அது துண்டிக்கப்பட்டிருக்கலாம்—என்றாலும் நீ சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இல்லாமல் இருக்கிறாய். தேவனுடனான ஒரு சாதாரண உறவு என்பது இன்று தேவனுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கான அஸ்திபாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. உன்னிடம் சாதாரண ஆவிக்குரிய ஜீவிதம் இருக்கிறதா? உன்னிடம் தேவனுடனான சாதாரண உறவு இருக்கிறதா? நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுகிறவனா? இன்று நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றவும், தேவனுடைய சித்தத்தை அவருடைய வார்த்தைகளுக்குள் புரிந்துகொள்ளவும், இந்த வார்த்தைகளில் பிரவேசிக்கவும் முடிந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தைப் பின்பற்றுகிற ஒருவராக இருக்கிறீர்கள். நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தைப் பின்பற்றவில்லை என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி சத்தியத்தைப் பின்பற்றாத ஒருவனாக நீ இருக்கிறாய். தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பாதவர்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் செயல்பட வாய்ப்பில்லை, இதன் விளைவாக, அத்தகையவர்களால் ஒருபோதும் தங்கள் பெலனை வரவழைக்க முடியாது மற்றும் அவர்கள் எப்போதும் செயலற்றவர்களாக இருப்பார்கள். இன்று, நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தைப் பின்பற்றுகிறாயா? நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறாயா? நீ ஒரு செயலற்ற நிலையில் இருந்து வெளிவந்திருக்கிறாயா? இன்று, தேவனுடைய வார்த்தைகளை நம்புகிற அனைவரும், தேவனுடைய கிரியையை அஸ்திபாரமாக எடுத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரின் ஒளியைப் பின்பற்றுகிற அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகள் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையானவை மற்றும் சரியானவை என்று நீ நம்பினால், தேவன் எதைச் சொன்னாலும் அவருடைய வார்த்தைகளை நீ நம்பினால், நீ தேவனுடைய கிரியைக்குள் பிரவேசிப்பதை நாடும் ஒருவனாக இருக்கிறாய், இவ்வாறு நீ தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறாய்.
பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தினுள் பிரவேசிக்க, நீங்கள் தேவனோடு ஒரு சாதாரண உறவைக் கொண்டிருக்க வேண்டும். முதலில் உங்கள் செயலற்ற நிலையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் கூட்டத்தைப் பின்தொடர்கிறார்கள், அவர்களுடைய இருதயங்கள் தேவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. அத்தகையவர்களுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள விருப்பமில்லை. அவர்கள் பின்பற்றும் தரங்களும் மிகவும் தரம் தாழ்ந்தவை. தேவனை நேசிப்பதில் உள்ள நாட்டமும், தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதும் மட்டுமே தேவனுடைய சித்தமாக இருக்கிறது. தேவனுடைய அன்பைத் திருப்பிச் செலுத்த தங்கள் மனசாட்சியை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் உள்ளனர். ஆனால் தேவனுடைய சித்தத்தை அதனால் பூர்த்தி செய்ய முடியாது. நீ பின்பற்றும் தரநிலைகள் எவ்வளவு உயர்வாக இருக்கிறதோ, அவ்வளவாக அது தேவனுடைய சித்தத்திற்கு உகந்ததாக இருக்கும். இயல்பானவராகவும், தேவனுடைய அன்பைப் பின்பற்றுபவராகவும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராகவும் மாறுவதற்கு ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதே உங்கள் உண்மையான எதிர்காலமாக இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த, மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதமாக இருக்கிறது. உங்களை விட அதிகமாக வேறு எவரும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதில்லை. நான் ஏன் இதைச் சொல்கிறேன்? ஏனென்றால், தேவனை நம்பாதவர்கள் மாம்சத்திற்காக ஜீவிக்கிறார்கள் மற்றும் அவர்கள் சாத்தானுக்காக ஜீவிக்கிறார்கள். ஆனால் இன்று நீங்கள் தேவனுக்காக ஜீவிக்கிறீர்கள் மற்றும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய ஜீவிக்கிறீர்கள். அதனால்தான் உங்கள் ஜீவிதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் சொல்கிறேன். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட இந்த ஜனக் கூட்டத்தால் மட்டுமே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜீவிதத்தை ஜீவிக்க முடிகிறது: பூமியில் வேறு எவராலும் அத்தகைய மதிப்பு மற்றும் அர்த்தமுள்ள ஜீவிதத்தை ஜீவிக்க முடியவில்லை. ஏனென்றால், நீங்கள் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள், தேவனால் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும், தேவன் உங்களிடம் அன்பு காட்டியிருக்கிறார் என்பதால், நீங்கள் உண்மையான ஜீவிதத்தை புரிந்துகொண்டிருக்கிறீர்கள் மற்றும் மிக உயர்ந்த மதிப்புள்ள ஜீவிதத்தை எவ்வாறு ஜீவிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டிருக்கிறீர்கள். இது உங்களது பின்தொடர்தல் நல்லது என்பதால் அல்ல, ஆனால் தேவனுடைய கிருபையால் அவ்வாறு இருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தவர் தேவன், உங்கள் இருதயத்தைத் தொட்டவர் தேவனுடைய ஆவியானவர்தான் மற்றும் அவருக்கு முன்பாக வருவதற்கான நல்ல அதிர்ஷ்டத்தை அவரே உங்களுக்குத் தருகிறார். தேவனுடைய ஆவி உங்களுக்கு அறிவொளி அளிக்கவில்லை என்றால், உங்களால் தேவனைப் பற்றிய அழகான காரியங்களைக் காண இயலாது மற்றும் தேவனை நேசிப்பதும் உங்களுக்கு சாத்தியமற்றதாகும். தேவனுடைய ஆவியானவர் ஜனங்களுடைய இருதயங்களைத் தொட்டதால் மட்டுமே அவர்களுடைய இருதயங்கள் தேவனிடம் திரும்பியுள்ளன. சில நேரங்களில், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்கும்போது, உங்கள் ஆவி தொடப்படும்போது தேவனை நேசிப்பதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதாகவும், உங்களுக்குள் பெரும் பெலன் இருப்பதாகவும், நீங்கள் ஒதுக்கி வைக்க முடியாத எதுவும் இல்லை என்பதாகவும் நீங்கள் உணர்கிறீர்கள். நீ இப்படி உணர்ந்தால், நீ தேவனுடைய ஆவியால் தொடப்பட்டிருக்கிறாய், உன் இருதயம் முற்றிலுமாக தேவனிடம் திரும்பிவிட்டது. “தேவனே! நாங்கள் உண்மையிலேயே முன்னரே தீர்மானிக்கப்பட்டு உம்மால் தெரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறோம். உமது மகிமை எனக்குப் பெருமையைத் தருகிறது மற்றும் உம் ஜனங்களில் ஒருவனாக இருப்பது எனக்கு மகிமையைத் தருகிறது. உமது சித்தத்தைச் செய்ய நான் எதையும் செலவழிப்பேன் மற்றும் எதையும் கொடுப்பேன் மற்றும் என் வருடங்கள் மற்றும் என் ஜீவ கால முயற்சிகள் அனைத்தையும் உமக்காக அர்ப்பணிப்பேன்,” என்று ஜெபித்து நீ தேவனிடம் சொல்வாய். நீ இப்படி ஜெபிக்கும்போது, தேவனுக்கான முடிவில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதலும் உன் இருதயத்தில் இருக்கும். இது போன்ற ஒரு அனுபவம் எப்போதாவது உனக்கு இருந்திருக்கிறதா? ஜனங்கள் பெரும்பாலும் தேவனுடைய ஆவியானவரால் தொடப்படும்போது, அவர்கள் குறிப்பாக தங்கள் ஜெபங்களில் தேவனுக்கு தங்களை அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள்: “தேவனே! உமது மகிமையின் நாளைக் காண நான் விரும்புகிறேன், உமக்காக ஜீவிக்க விரும்புகிறேன்—உமக்காக ஜீவிப்பதை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அர்த்தமுள்ளதாகவோ இல்லை மற்றும் சாத்தானுக்காகவும் மாம்சத்துக்காகவும் ஜீவிக்க எனக்கு சிறிதும் விருப்பமில்லை. இன்று உமக்காக ஜீவிக்க எனக்கு உதவுவதன் மூலம் நீர் என்னை உயர்த்துகிறீர்.” நீ இவ்வாறு ஜெபிக்கும்போது, உன் இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பத்தைத் தவிர வேறு எதையும் உன்னால் செய்ய முடியாது. அதாவது ஜீவனுடன் இருக்கும்போது தேவனைப் பெறாமல் மரணித்து, பின் அதை நீ வெறுக்காதபடிக்கு, நீ தேவனைப் பெற வேண்டும். அத்தகைய ஜெபத்தை ஏறெடுத்தப் பிறகு, உங்களுக்குள் ஒரு விவரிக்க முடியாத பெலன் இருக்கும். அது எங்கிருந்து வருகிறது என்பதை நீ அறியாமல் இருப்பாய். உன் இருதயத்தில் எல்லையற்ற வல்லமை இருக்கும் மற்றும் தேவன் மிகவும் அழகானவர், அவர் அன்புக்குரியவர் என்பதையும் நீ உணர்வாய். இப்படித்தான் நீங்கள் தேவனால் தொடப்பட்டிருப்பீர்கள். அத்தகைய அனுபவத்தைப் பெற்ற அனைவருமே தேவனால் தொடப்பட்டிருக்கிறார்கள். தேவனால் அடிக்கடி தொடப்படுவோருக்கு, அவர்களுடைய ஜீவிதத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்களால் தீர்மானத்தை எடுக்க முடிகிறது மற்றும் அவர்கள் தேவனை முழுமையாக அடைய தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இருதயங்களில் தேவன் மீதுள்ள அன்பு வலுவாக இருக்கிறது. அவர்களுடைய இருதயங்கள் முழுமையாக தேவனிடம் திரும்பியுள்ளன. குடும்பம், உலகம், சிக்கல்கள் அல்லது தங்கள் எதிர்காலம் ஆகியவற்றை அவர்கள் பொருட்படுத்துவதில்லை மற்றும் அவர்கள் ஜீவகாலம் முழுமைக்குமான தங்கள் முயற்சிகளை தேவனுக்காக அர்ப்பணிக்க தயாராக இருக்கிறார்கள். தேவனுடைய ஆவியானவரால் தொடப்பட்டிருக்கிறவர்கள் அனைவரும் சத்தியத்தைப் பின்பற்றும் ஜனங்களாக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கிறார்கள்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 397
தேவனைப் பின்தொடர்வதில் பிரதானமான முக்கியத்துவம் என்னவென்றால், இன்றைய தேவனுடைய வார்த்தைகளின்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதே: நீங்கள் ஜீவிதத்தில் பிரவேசிப்பதைத் தொடர்கிறீர்களா அல்லது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறீர்களா என்பதல்லாமல், எல்லாம் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். நீ பேசுவதும் பின்பற்றுவதும் இன்று தேவனுடைய வார்த்தைகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை என்றால், நீ தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியனாக இருப்பாய் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை முற்றிலுமாக இழந்துவிடுவாய். தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்களை தேவன் விரும்புகிறார். நீ முன்பு புரிந்துகொண்டது எவ்வளவு அற்புதமானதாக மற்றும் தூய்மையானதாக இருந்தாலும், தேவன் அதை விரும்புவதில்லை. இதுபோன்ற விஷயங்களை உன்னால் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் உன் பிரவேசத்துக்கு அவை மிகப்பெரிய தடையாக இருக்கும். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய ஒளியைப் பின்பற்றக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். கடந்த கால ஜனங்கள் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றியபோதிலும், அவர்களால் இன்று வரை அவற்றைப் பின்பற்ற முடியவில்லை. இது கடைசி நாட்களின் ஜனங்களுடைய ஆசீர்வாதமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றக்கூடியவர்கள், தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றக்கூடியவர்கள், தேவன் அவர்களை வழிநடத்தும் இடங்களிலெல்லாம் அவற்றைப் பின்பற்றுகிறார்கள்—இவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய கிரியையைப் பின்பற்றாதவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் கிரியையில் பிரவேசித்திருக்கவில்லை. அவர்கள் எவ்வளவு கிரியை செய்தாலும் அல்லது அவர்களுடைய துன்பங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அல்லது அவர்கள் எவ்வளவாக ஓடுகிறார்கள் என்றாலும், இவை எதுவும் தேவனுக்கு ஒரு பொருட்டாகாது. அவர் அவர்களைப் பாராட்ட மாட்டார். இன்று, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறார்கள். இன்று தேவனுடைய வார்த்தைகளுக்கு அந்நியர்களாக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்துக்கு வெளியே இருக்கிறார்கள். அத்தகையவர்கள் தேவனால் பாராட்டப்படுவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளிலிருந்து விலகிச் செல்லும் ஊழியம் என்பது மாம்சமும் கருத்துகளும் கொண்ட ஊழியமாகும் மற்றும் அது தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ப இருப்பதற்கு சாத்தியமில்லை. ஜனங்கள் மதக் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவித்தால், அவர்களால் தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற எதையும் செய்ய இயலாது மற்றும் அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்தாலும், அவர்கள் கற்பனைகளுக்கும் கருத்துக்களுக்கும் நடுவே ஊழியம் செய்கிறார்கள் மற்றும் அவர் சித்தத்திற்கு ஏற்ப ஊழியம் செய்ய அவர்களால் ஒருபோதும் இயலாது. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்ற முடியாதவர்களுக்கு தேவனுடைய சித்தம் புரிவதில்லை. தேவனுடைய சித்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் தேவனைச் சேவிக்க முடியாது. தேவன் தனது சொந்த இருதயத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கும் ஊழியத்தை விரும்புகிறார். கருத்துக்கள் மற்றும் மாம்சங்களைக் கொண்ட ஊழியத்தை அவர் விரும்புவதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் படிகளைப் பின்பற்ற ஜனங்களால் இயலாது என்றால், அவர்கள் கருத்துக்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்கள். அத்தகையவர்களின் ஊழியம் குறுக்கிட்டு, தொந்தரவு செய்கிறது. அத்தகைய ஊழியம் தேவனுக்கு முரணானது. இவ்வாறு தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்களால் தேவனைச் சேவிக்க இயலாது. தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முடியாதவர்கள் நிச்சயமாக தேவனை எதிர்க்கிறார்கள் மற்றும் அவர்களால் தேவனுடன் ஒத்துப்போக இயலாது. இன்றைய தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்வதும், தேவனுடைய தற்போதைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட திறனுடன் இருப்பதும், இன்றைய தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்ற திறனுடன் இருப்பதும், தேவனுடைய புதிய வார்த்தைகளுக்கு ஏற்ப பிரவேசிப்பதும் என இவை “பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுதல்” என்பதற்கு அர்த்தமாகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றி பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருப்பவன் இவன் தான். அத்தகையவர்கள் தேவனுடைய புகழ்ச்சியைப் பெறுவது, தேவனைப் பார்ப்பது மட்டுமல்லாமல், அவர்களால் தேவனுடைய சமீபத்திய கிரியைகளிலிருந்து தேவனுடைய மனநிலையையும் அறிந்து கொள்ள முடியும் மற்றும் மனிதனுடைய கருத்துக்கள் மற்றும் கீழ்ப்படியாமை மற்றும் மனிதனுடைய இயல்பு மற்றும் சாராம்சம் ஆகியவற்றை அவருடைய சமீபத்திய கிரியையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். மேலும், அவர்கள் தங்கள் ஊழியத்தின் போது படிப்படியாக அவர்களுடைய மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும். இது போன்றவர்கள் மட்டுமே தேவனை அடையக்கூடியவர்கள் மற்றும் உண்மையான வழியை உண்மையாகக் கண்டுபிடித்தவர்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் அகற்றப்படுபவர்கள் தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பின்பற்றத் தகுதியற்றவர்கள் மற்றும் தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள். அத்தகையவர்கள் தேவனை வெளிப்படையாக எதிர்ப்பது தேவன் புதிய கிரியையைச் செய்ததாலும், தேவனுடைய உருவம் அவர்களுடைய கருத்துக்களில் இருப்பதைப் போன்றதல்ல என்பதாலும்—இதன் விளைவாக, அவர்கள் பகிரங்கமாக தேவனை எதிர்க்கிறார்கள், தேவன் மீது நியாயத்தீர்ப்பை வழங்குகிறார்கள். இதன் விளைவாக தேவன் அவர்களை வெறுக்கிறார் மற்றும் நிராகரிக்கிறார். தேவனுடைய சமீபத்திய கிரியையைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் தேவனுடைய கிரியையைக் கடைப்பிடிப்பதற்கும் தேவனுடைய கிரியையைத் தேடுவதற்கும் ஜனங்கள் மனம் வைத்திருந்தால், தேவனைப் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் புதிய வழிகாட்டுதலைப் பெற வாய்ப்பு கிடைக்கும். தேவனுடைய கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பவர்களால் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தையோ அல்லது தேவனுடைய வழிகாட்டலையோ பெற முடியாது. ஆகவே, தேவனுடைய சமீபத்திய கிரியையை ஜனங்கள் பெறலாமா இல்லையா என்பது தேவனுடைய கிருபையைப் பொறுத்தது, அவர்களுடைய நாட்டத்தைப் பொறுத்தது மற்றும் அவர்களுடைய நோக்கங்களைப் பொறுத்தது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 398
பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் அல்லது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் எவ்வாறு கிரியை செய்தார் என்பதல்லாமல், தேவனுடைய சமீபத்திய கிரியையை அடைந்த அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர். இன்றைய சமீபத்திய கிரியையைப் பின்பற்ற முடியாதவர்கள் அகற்றப்படுகிறார்கள். புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களை தேவன் விரும்புகிறார். அவருடைய சமீபத்திய கிரியைகளை ஏற்றுக்கொண்டு அறிந்தவர்களை அவர் விரும்புகிறார். நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாக இருக்க வேண்டும் என்று ஏன் கூறப்படுகிறது? ஒரு கற்புள்ள கன்னிகையால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவும், புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், மேலும், பழைய கருத்துக்களை ஒதுக்கி வைத்து, இன்றைய தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படியவும் முடிகிறது. இன்றைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும் இந்த ஜனக்கூட்டம், யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் அவர்கள் ஜனங்களுள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் தேவனுடைய சத்தத்தை நேரடியாகக் கேட்கிறீர்கள், தேவனுடைய தோற்றத்தைக் காண்கிறீர்கள். ஆகவே, வானத்திலும் பூமியிலும், யுகங்களிலும், உங்களைவிட, இந்த ஜனக்கூட்டத்தை விட வேறு எவரும் ஆசீர்வதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் தேவனுடைய கிரியை காரணமாகவும், தேவனுடைய முன்குறித்தல் மற்றும் தேர்வு காரணமாகவும், தேவனுடைய கிருபையின் காரணமாகவும் இருக்கின்றன. தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசவில்லை, சொல்லவில்லை என்றால், உங்களால் இன்றைய நிலைகளில் இருக்க முடியுமா? ஆகவே, எல்லா மகிமையும் துதியும் தேவனுக்கே உரியது, ஏனென்றால் தேவன் உங்களை உயர்த்துகிறார். இந்த விஷயங்களை மனதில் கொண்ட பின்பும் உன்னால் செயலற்றவனாக இருக்க முடியுமா? இன்னும் உன் பெலனால் எழும்ப முடியவில்லையா?
தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, அடி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, மேலும், தேவனுடைய ஆணைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. நீ சிட்சிக்கப்படும்போது மிகவும் துன்பப்படக்கூடாது என்பதற்காக யுகங்களுக்கு முன்பே தேவனால் இது முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. உங்களில் செய்யப்பட்டுள்ள கிரியையையும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் யாராலும் பறிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் எவரும் பறிக்க முடியாது. மத ஜனங்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. நீங்கள் வேதாகமத்தில் பெரிய நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல, மதக் கோட்பாட்டில் வல்லவர்கள் அல்ல, ஆனால் தேவன் உங்களுக்குள் கிரியை செய்ததால் யுகங்கள் முழுவதிலும் உள்ள அனைவரையும்விட நீங்கள் அதிகமாக அடைந்திருக்கிறீர்கள்—ஆகவே இது உங்களுக்கான மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் தேவனிடம் இன்னும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவனிடம் இன்னும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். தேவன் உன்னை எழுப்புவதால், நீ உன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய ஆணைகளை ஏற்றுக்கொள்ள உன் நிலையை ஆயத்தம் செய்ய வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த இடத்தில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராக மாற வேண்டும், ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனால் பெறப்பட வேண்டும் மற்றும் இறுதியில் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாற வேண்டும். இந்தத் தீர்மானங்கள் உன்னிடம் இருக்கின்றனவா? அத்தகையத் தீர்மானங்கள் உன்னிடம் இருந்தால், இறுதியில் நீ தேவனால் நிச்சயமாக அடையப்படுவாய் மற்றும் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவாய். பிரதானமான ஆணையானது தேவனால் பெறப்பட்டு தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறி வருகிறது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 399
இன்றைய பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வல்லமை ஆகும். இந்த காலகட்டத்தில் மனிதனுக்கான பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான அறிவொளி என்பது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு ஆகும். இன்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் போக்கு என்னவாக இருக்கிறது? இது இன்று தேவனுடைய கிரியையிலும், ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதத்திலும் ஜனங்களுடைய தலைமையாக இருக்கிறது. ஒரு சாதாரண ஆவிக்குரிய ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கு பல படிகள் உள்ளன:
1. முதலில், நீ தேவனுடைய வார்த்தைகளுக்குள் உன் இருதயத்தை ஊற்ற வேண்டும். நீ கடந்த காலங்களின் தேவனுடைய வார்த்தைகளைப் பின்பற்றக்கூடாது, அவற்றைப் படிக்க அல்லது இன்றைய வார்த்தைகளுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் உன் இருதயத்தை முழுமையாக ஊற்ற வேண்டும். இன்று பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளைப் பின்பற்றாத மற்றும் தேவனுடைய வார்த்தைகளை, ஆவிக்குரிய புத்தகங்களை அல்லது கடந்த காலத்தில் பிரசங்கிக்கப்பட்ட பிற விவரங்களை இன்னும் படிக்க விரும்பும் ஜனங்கள் இருந்தால், அவர்களே ஜனங்களில் மிகவும் முட்டாள்தனமானவர்கள். அத்தகையவர்களை தேவன் வெறுக்கிறார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் ஒளியை ஏற்கத் தயாராக இருந்தால், இன்று உன் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றிவிடு. நீ சாதிக்க வேண்டிய முதல் விஷயம் இதுதான்.
2. இன்று தேவன் பேசும் வார்த்தைகளுடைய அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீ ஜெபிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளில் பிரவேசிக்க மற்றும் தேவனோடு உரையாட வேண்டும் மற்றும் நீ எந்தத் தரங்களை அடைய விரும்புகிறாய் என்பதை நிலைநாட்டும் விதமாக உன் தீர்மானங்களை தேவனுக்கு முன்பாக உருவாக்க வேண்டும்.
3. பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் நீங்கள் சத்தியத்தில் ஆழமாக பிரவேசிப்பதை நாட வேண்டும். கடந்த காலத்தின் காலாவதியான வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் பிடித்துக் கொள்ளாதீர்கள்.
4. நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட வேண்டும், தேவனுடைய வார்த்தைகளுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
5. இன்று பரிசுத்த ஆவியானவர் நடந்த பாதையில் நீங்கள் பிரவேசிப்பதை நாட வேண்டும்.
பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுகிறத்தை நீங்கள் எவ்வாறு தேடுகிறீர்கள்? தேவனுடைய தற்போதைய வார்த்தைகளில் ஜீவிப்பதும், தேவனுடைய எதிர்பார்ப்புகளின் அஸ்திபாரத்தில் ஜெபிப்பதும் முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன. இவ்வாறு ஜெபிக்கையில், பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னைத் தொடுவார். இன்று தேவன் பேசும் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் நீ ஒரு அடிப்படையை நாடவில்லை என்றால், அது பயனற்றதாக இருக்கும். “தேவனே! நான் உம்மை எதிர்க்கிறேன், நான் உமக்கு கடன்பட்டிருக்கிறேன், நான் மிகவும் கீழ்ப்படியாதவன் மற்றும் என்னால் உம்மை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. தேவனே, நீர் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடைசிவரையில் உமக்கு ஊழியம் செய்ய நான் விரும்புகிறேன். உமக்காக மரிக்க நான் விரும்புகிறேன். நீர் என்னை நியாயம் விசாரித்து, என்னை சிட்சியும். எனக்கு எந்த புகாரும் இல்லை. நான் உம்மை எதிர்க்கிறேன் எனவே நான் இறப்பதற்கு தகுதியானவன். இவ்வாறு என் மரணத்தில் உமது நீதியுள்ள மனநிலையை எல்லா ஜனங்களும் காணக்கூடும்,” என்று ஜெபத்தில் நீ தேவனிடம் சொல்ல வேண்டும். இவ்வாறு நீ உன் இருதயத்திலிருந்து ஜெபிக்கும்போது, தேவன் உனக்குச் செவிகொடுப்பார் மற்றும் உனக்கு வழிகாட்டுவார். இன்று நீ பரிசுத்த ஆவியானவரின் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் ஜெபிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னைத் தொடுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை. நீ தேவனுடைய சித்தத்தின்படி ஜெபித்தால், இன்று தேவன் செய்ய வாஞ்சையாய் இருப்பதன் அடிப்படையில், நீ சொல்வாய்: “தேவனே! உமது ஆணைகளை ஏற்றுக் கொள்ளவும், உமது ஆணைகளுக்கு உண்மையாக இருக்கவும் விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதையும் உமது மகிமைக்காக அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன். இதன் விளைவாக நான் செய்யும் சகலக் காரியங்களிலும் என்னால் தேவனுடைய ஜனங்களுடைய தரத்தை அடைய முடியும். என் இருதயம் உம்மால் தொடப்படட்டும். உம்முடைய ஆவியானவர் எப்பொழுதும் எனக்கு அறிவூட்ட வேண்டும் என்றும், நான் செய்யும் சகலக் காரியங்களிலும் சாத்தானுக்கு அவமானத்தைத் தர வேண்டும் என்றும், இறுதியில் உம்மால் நான் ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.” தேவனுடைய சித்தத்தை மையமாகக் கொண்ட வழியில், நீ இவ்வாறு ஜெபித்தால், பரிசுத்த ஆவியானவர் தவிர்க்க முடியாமல் உன்னில் செயல்படுவார். உன் ஜெபங்களின் வார்த்தைகளின் எண்ணிக்கை எத்தனை என்பது முக்கியமல்ல—தேவனுடைய சித்தத்தை நீ புரிந்துகொள்கிறாயா இல்லையா என்பதே முக்கியமாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பின்வரும் அனுபவம் இருந்திருக்கலாம்: சில நேரங்களில், ஒரு சபையில் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வல்லமை உச்சத்தை எட்டுகிறது. இதனால் அனைவரின் பெலனும் உயருகிறது. சிலர் ஜெபிக்கும்போது மிகவும் அதிகமாக அழுகிறார்கள் மற்றும் கண்ணீர் விடுகிறார்கள், தேவனுக்கு முன்பாக மனஸ்தாபம் கொள்கிறார்கள், சிலர் தங்கள் தீர்மானத்தைக் காட்டுகிறார்கள் மற்றும் சபதம் செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையால் அடைய வேண்டிய விளைவு இதுதான். இன்று, எல்லா ஜனங்களும் தங்கள் இருதயங்களை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவது முக்கியமானதாக இருக்கிறது. முன்பு பேசிய வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டாம். நீ இன்னும் முன்பு வந்ததையே பிடித்துக் கொண்டால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்பட மாட்டார். இது எவ்வளவு முக்கியமானது என்பதைக் காண்கிறாயா?
இன்று, பரிசுத்த ஆவியானவர் நடந்து செல்லும் பாதையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மேலே உள்ள பல காரியங்கள் பரிசுத்த ஆவியானவரால் இன்றும் எதிர்காலத்திலும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன. அவை பரிசுத்த ஆவியானவரால் எடுக்கப்பட்ட பாதையாக இருக்கின்றன. அவை மனிதனால் பின்பற்றப்பட வேண்டிய பிரவேசமாக இருகின்றன. ஜீவிதத்தில் நீங்கள் பிரவேசிக்கும் போது, குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் ஊற்ற வேண்டும் மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளும் திறனிருக்க வேண்டும். உங்கள் இருதயம் தேவனுக்காக ஏங்க வேண்டும், நீங்கள் சத்தியத்தில் ஆழமாக பிரவேசிப்பதற்காக மற்றும் தேவனால் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களையும் பின்பற்றுவதற்காக ஏங்க வேண்டும் வேண்டும். நீ இந்த பெலனைக் கொண்டிருக்கும்போது, நீ தேவனால் தொடப்பட்டிருக்கிறாய் மற்றும் உன் இருதயம் தேவனிடம் திரும்பத் தொடங்கியிருக்கிறது என்பவற்றை இது காட்டுகிறது.
ஜீவிதத்தில் பிரவேசிப்பதற்கான முதல் படியாக உங்கள் இருதயத்தை தேவனுடைய வார்த்தைகளில் முழுமையாக ஊற்றுவதும், இரண்டாவது படியாக பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்ளுவதுமாக இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவரால் தொடப்படுவதை ஏற்றுக்கொள்வதன் மூலம் அடைய வேண்டிய விளைவு என்னவாக இருக்கிறது? இது மிகவும் ஆழமான உண்மைக்காக ஏங்க, அதைத் தேட, ஆராய திறனுடன் இருப்பதும், தேவனுடன் நேர்மறையான முறையில் ஒத்துழைக்கும் திறனுடன் இருப்பதுமாக இருக்கின்றன. இன்று, நீங்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறீர்கள். அதாவது உங்கள் பின்பற்றுதலுக்கு, உங்கள் ஜெபங்களுக்கு மற்றும் தேவனுடைய வார்த்தைகளின் ஐக்கியத்துக்கு ஒரு குறிக்கோள் உள்ளது என்று கூறி, தேவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் கடமையை நீங்கள் செய்கிறீர்கள் என்றால் அதுவே, நீங்கள் தேவனுடன் ஒத்துழைக்கிறீர்கள் என்பதாக இருக்கிறது. தேவனைக் கிரியை செய்ய விடுவதைப் பற்றி மட்டுமே நீ பேசுகிறாய், ஆனால் நீ எந்த கிரியையும் செய்யவில்லை, ஜெபிக்கவோ தேடவோ இல்லை என்றால், இதை ஒத்துழைப்பு என்று அழைக்கலாமா? உங்களிடம் ஒத்துழைப்பின் எந்த தடயமும் இல்லை மற்றும் ஒரு குறிக்கோளைக் கொண்ட பிரவேசத்துக்கான நடைமுறை இல்லாமல் இருக்கிறது என்றால், நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்பதாகும். “எல்லாம் தேவனுடைய முன்குறித்தலைப் பொறுத்தது. இவை அனைத்தும் தேவனால் செய்யப்படுகின்றன. தேவன் அதைச் செய்யவில்லை என்றால், மனிதனால் எப்படி அது சாத்தியமாகும்?” என்று சிலர் சொல்கிறார்கள். தேவனுடைய கிரியை இயல்பானது, சிறிதளவும் இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல மற்றும் உன் உற்சாகமுள்ள தேடுதலால் தான் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறார். ஏனென்றால், தேவன் மனிதனை நிர்பந்திப்பதில்லை—தேவன் கிரியை செய்ய அவருக்கு நீ வாய்ப்பளிக்க வேண்டும். நீ பின்பற்றவில்லை அல்லது பிரவேசிக்கவில்லை என்றால் மற்றும் உன் இருதயத்தில் சிறிதளவு ஏக்கம் இல்லை என்றால், கிரியை செய்ய தேவனுக்கு வாய்ப்பு இல்லாதிருக்கும். நீங்கள் எந்த பாதையினால் எவ்வாறு தேவவனால் தொடப்படும்படிக்கு தேட முடியும்? ஜெபத்தின் மூலமாக தேவனிடம் நெருங்கி வருவதால் மட்டுமே அது முடியும். ஆனால் மிக முக்கியமாக, அது தேவன் பேசும் வார்த்தைகளின் அஸ்திபாரத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீ அடிக்கடி தேவனால் தொடப்படும்போது, கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் பணம் ஆகியவற்றால் நீ மாம்சத்தால் அடிமைப்படுத்தப்படுவதில்லை—உன்னைத் திணறடிக்கின்ற திறன் அவற்றுக்கு இல்லாதிருக்கும் மற்றும் நீ சத்தியத்தைப் பின்பற்றவும், தேவனுக்கு முன்பாக ஜீவிக்கவும் மட்டுமே விரும்புவாய். இந்த நேரத்தில், நீ சுதந்திர உலகில் ஜீவிக்கும் ஒருவனாக இருப்பாய்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 400
மனுஷனைப் பரிபூரணப்படுத்துவதற்கு தேவன் தீர்மானித்துள்ளார், அவர் எந்தக் கண்ணோட்டத்தில் பேசினாலும், அவை அனைத்தையும் ஜனங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே பேசுகிறார். ஆவியானவரின் கண்ணோட்டத்தில் பேசப்படும் வார்த்தைகளை ஜனங்கள் புரிந்துகொள்வது கடினம்; அதன்படி நடப்பதற்கான பாதையை கண்டுபிடிப்பதற்கான வழி அவர்களுக்கு இல்லை, அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக உள்ளது. தேவனின் கிரியை வெவ்வேறு தாக்கங்களை அடைகிறது, மற்றும் கிரியையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதில் அவருக்கு அவருடைய நோக்கம் இருக்கிறது. மேலும், அவர் வெவ்வேறு கோணங்களிலிருந்துப் பேசுவது கட்டாயமாகும், ஏனென்றால் அவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே அவரால் மனுஷனைப் பரிபூரணப்படுத்த முடியும். ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே அவர் தனது குரலை எழுப்பினால், தேவனின் கிரியையின் இந்த நிலையைப் பரிபூரணப்படுத்த எந்த வழியும் இருக்காது. அவர் பேசும் தொனியில் இருந்து, இந்த நபர்களை பூரணப்படுத்துவதில் அவர் உறுதியாக இருப்பதை நீ காணலாம். ஆகவே, பரிபூரணப்படுத்த விரும்பும் ஒவ்வொருவருக்கும் முதல் படி என்னவாக இருக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தேவனின் கிரியையை அறிந்திருக்க வேண்டும். இன்று, தேவனின் கிரியையில் ஒரு புதிய முறை தொடங்கியிருக்கிறது; யுகம் மாறியுள்ளது, தேவன் கிரியை செய்யும் முறையும் மாறியுள்ளது, தேவன் பேசும் முறையும் விசேஷித்த விதமாக உள்ளது. இன்று, அவருடைய கிரியையின் முறை மட்டும் மாறாமல், யுகமும் மாறியுள்ளது. இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இது அன்பான தேவனின் யுகமாகவும் உள்ளது. இது ஆயிரவருட அரசாட்சியின் யுகத்தின் முன்னறிவிப்பாகும்—இது வார்த்தையின் யுகமும்கூட, இதில் தேவன் பரிபூரண மனுஷனுடன் பேசுவதற்கு பல வழிகளைப் பயன்படுத்துகிறார், மேலும் மனுஷனுக்கு வழங்குவதற்காக வெவ்வேறு கோணங்களில் பேசுகிறார். ஆயிரவருட அரசாட்சியின் யுகத்திற்குள் நுழைந்தவுடன், தேவன் மனுஷனைப் பரிபூரணமாக்க வார்த்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குவார், மனுஷனை வாழ்வின் யதார்த்தத்திற்குள் நுழைய அனுமதிப்பார், அவனைச் சரியானப் பாதையில் கொண்டுச் செல்வார். தேவனின் கிரியையின் பல படிகளை அனுபவித்த மனுஷன், தேவனின் கிரியை மாறவில்லை, ஆனால் அது இடைவிடாமல் உருவாகி, ஆழமடைகிறது என்பதைக் கண்டிருக்கிறான். ஜனங்கள் நீண்ட காலமாக அதனை அனுபவித்த பிறகு, கிரியைத் தொடர்ந்து சுழன்று, மீண்டும் மீண்டும் மாறுகிறது. அது எவ்வளவு மாறினாலும், மனிதகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கான தேவனின் நோக்கத்திலிருந்து அது ஒருபோதும் விலகாது. பத்தாயிரம் மாற்றங்களின் மூலம் கூட, அது ஒருபோதும் அதன் உண்மையான நோக்கத்திலிருந்து விலகாது. தேவனின் கிரியையின் முறை எவ்வாறு மாறினாலும், இந்தக் கிரியை ஒருபோதும் சத்தியத்திலிருந்து அல்லது ஜீவனிலிருந்து விலகாது. கிரியையை மேற்கொள்ளும் முறையில் செய்யப்படும் மாற்றங்கள், கிரியையின் வடிவம், மற்றும் தேவன் பேசும் கண்ணோட்டம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுவதைத்தான் உள்ளடக்கியிருந்தாலும், தேவனின் கிரியையின் மைய நோக்கம் மாறாது. ஒரு பலனை அடைவதற்காக தேவனின் குரலில் மற்றும் அவரது கிரியையின் முறை ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. குரலின் தொனியில் மாற்றம் என்பது கிரியையின் பின்னால் உள்ள நோக்கம் அல்லது மாற்றத்தை குறிக்கவில்லை. ஜீவனைத் தேடுவதற்காகவே ஜனங்கள் தேவனைப் பிரதானமாக விசுவாசிக்கிறார்கள்; நீ தேவனை விசுவாசித்த போதிலும், ஜீவனைத் தேடவில்லை அல்லது சத்தியத்தையோ அல்லது தேவனின் அறிவையோ நாடவில்லை என்றால், அது தேவன் மீதான விசுவவாசம் அல்ல! ராஜாவாக இருப்பதற்கு ராஜ்யத்திற்குள் நுழைய இன்னும் முற்படுவது யதார்த்தமானதா? ஜீவனைத் தேடுவதன் மூலம் தேவன் மீதான உண்மையான அன்பை அடைவது—இது மட்டுமே யதார்த்தம்; சத்தியத்தின் நாட்டம் மற்றும் நடைமுறை—இவை அனைத்தும் யதார்த்தம். தேவனின் வார்த்தைகளை வாசிப்பதால், இந்தச் சொற்களை அனுபவிப்பதால், நிஜமான அனுபவத்தின் மத்தியில் நீங்கள் தேவனைப் பற்றிய அறிவைப் பெறுவீர்கள், உண்மையிலேயே பின்தொடர்வது என்றால் இதுதான் அர்த்தம்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 401
இப்போது இருப்பது ராஜ்யத்தின் யுகம். இந்த புதிய யுகத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாய் என்பது தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நீ நுழைந்திருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது வாழ்வின் யதார்த்தத்தை மாற்றியிருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது. தேவனின் வார்த்தைகள் ஒவ்வொரு நபருக்கும் தெரியப்படுத்தப்படுகின்றன, இதன் மூலம், இறுதியில், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளின் உலகில் வாழ்வார்கள், மற்றும் அவருடைய வார்த்தைகள் ஒவ்வொருவரையும் உள்ளிருந்து தெளியச் செய்யும் மற்றும் பிரகாசமாக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் அக்கறையற்றவனாகவும், அவருடைய வார்த்தைகளில் ஆர்வம் காட்டாமலும் இருந்தால், உனது நிலை தவறானது என்பதையே இது காட்டுகிறது. உன்னால் வார்த்தையின் யுகத்திற்குள் நுழைய முடியாவிட்டால், பரிசுத்த ஆவியானவர் உன்னுள் கிரியை செய்ய மாட்டார்; நீ இந்த யுகத்திற்குள் நுழைந்திருந்தால், அவர் தம்முடைய கிரியையைச் செய்வார். பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறுவதற்கு வார்த்தையின் யுகத்தின் தொடக்கத்தில் நீ என்ன செய்ய முடியும்? இந்த யுகத்திலும், உங்களுக்கு மத்தியில், தேவன் பின்வரும் உண்மையை நிறைவேற்றுவார்: ஒவ்வொரு மனுஷனும் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ்வார்கள், சத்தியத்தைக் கடைபிடிக்க அவர்களால் முடியும், தேவனை ஆர்வத்துடன் நேசிப்பார்கள்; எல்லா ஜனங்களும் தேவனுடைய வார்த்தைகளை ஒரு அஸ்திவாரமாகவும், அவர்களின் யதார்த்தமாகவும் பயன்படுத்துவார்கள், மேலும் தேவனை ஆராதிக்கும் இருதயங்களைக் கொண்டிருப்பார்கள்; தேவனின் வார்த்தைகளைக் கடைபிடிப்பதன் மூலம், மனுஷன் தேவனுடன் சேர்ந்து ராஜரீக வல்லமையைப் பயன்படுத்துவான். இது தேவனால் அடைய வேண்டிய கிரியை. தேவனின் வார்த்தைகளை வாசிக்காமல் நீ இருக்க முடியுமா? இன்று, அவருடைய வார்த்தைகளை வாசிக்காமல் ஓரிரு நாட்கள் கூட இருக்க முடியாது என்று நினைக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும், நேரம் அனுமதிக்கவில்லை என்றால், அவற்றைக் கேட்பது போதுமானதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு அளிக்கும் உணர்வு இதுதான், மற்றும் அவர்களை ஏவத் துவங்கியிருக்கும் வழியும் இதுதான். அதாவது, தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழையும்படி அவர் வார்த்தைகளின் மூலம் ஜனங்களை ஆளுகிறார். தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் ஒரேயொரு நாள் கழிந்தால், நீங்கள் இருட்டையும் தாகத்தையும் உணர்வீர்கள், அதைத் தாங்க முடியாது, இது நீ பரிசுத்த ஆவியானவரால் ஏவப்படுகிறாய் என்பதையும், அவர் உன்னிடமிருந்து விலகவில்லை என்பதையும் காட்டுகிறது. அப்போதுதான் நீ இந்த பிரவாகத்தில் இருப்பவனாவாய். இருப்பினும், தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் ஓரிரு நாட்கள் இருந்தப் பிறகு, நீ எதையும் உணரவில்லை என்றால், உனக்குத் தாகம் இல்லை, மற்றும் நீ ஏவப்படவே இல்லை, பரிசுத்த ஆவியானவர் உன்னிடமிருந்து விலகிவிட்டார் என்பதை இது காட்டுகிறது. இதன் அர்த்தம், உனக்குள் உள்ள நிலையில் ஏதோ தவறு இருக்கிறது; நீ வார்த்தையின் யுகத்திற்குள் நுழையவில்லை, பின்மாற்றமடைந்தவர்களில் நீயும் ஒருவனே. ஜனங்களை ஆள்வதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்; நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துக் குடித்தால், நன்றாக உணர்வாய், நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ பின்பற்றுவதற்கு வழி இல்லை. தேவனின் வார்த்தைகள் ஜனங்களின் போஜனமாகவும், அவர்களை இயக்கும் சக்தியாகவும் மாறும். “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று வேதாகமம் சொல்கிறது. இன்று, தேவன் இந்தக் கிரியையை செய்து முடிப்பார், இந்த உண்மையை அவர் உங்களிடம் நிறைவேற்றுவார். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் வாசிக்காமல் பல நாட்கள் இருந்திருக்கலாம், ஆயினும் அவர்களால் வழக்கம் போல் புசிக்கவும் வேலை செய்யவும் முடியும், ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை? இந்த யுகத்தில், தேவன் அனைவரையும் ஆள பிரதானமாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் மூலம், மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு பரிபூரணமாக்கப்படுகிறான், பின்னர் இறுதியாக ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படுகிறான். தேவனின் வார்த்தைகளால் மட்டுமே மனுஷனின் ஜீவனை வழங்க முடியும், மேலும் தேவனின் வார்த்தைகளால் மட்டுமே, குறிப்பாக ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷனுக்கு வெளிச்சத்தையும் கடைபிடிப்பதற்கான ஒரு பாதையையும் வழங்க முடியும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திலிருந்து நீ விலகிச் செல்லாத வரை, ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துக்கொண்டும், அருந்திக்கொண்டும் இருந்தால், தேவனால் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 402
வாழ்வின் நாட்டம் என்பது அவசரப்பட வேண்டிய ஒன்றல்ல; நம் வாழ்வின் வளர்ச்சி என்பது ஓரிரு நாட்களில் நடந்துவிடாது. தேவனின் கிரியை இயல்பானது மற்றும் நடைமுறைக்குரியது, மேலும் அது கட்டாயமாக ஒரு செயல்முறைக்கு உள்ளாகும். சிலுவையில் அறையப்பட்ட தனது கிரியையை நிறைவு செய்வதற்கு மனுஷ ரூபமெடுத்த இயேசுவுக்கு முப்பத்து மூன்றரை ஆண்டுகள் ஆனது—ஆகவே மனுஷனைச் சுத்திகரித்து, அவனுடைய வாழ்வை மாற்றியமைப்பது, மிகவும் கடினமான வேலையா? தேவனை வெளிக்கொணரும் ஒரு சாதாரண மனுஷனை உருவாக்குவதென்பது எளிதான காரியமல்ல. சிவப்புநிற வலுசர்ப்பத்தின் தேசத்தில் பிறந்தவர்கள், மோசமானத் திறமை வாய்ந்தவர்கள் மற்றும் தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியை நீண்டகாலத்திற்குத் தேவைப்படும் ஜனங்களுக்கு இது குறிப்பாகப் பொருந்தும். எனவே முடிவுகளைப் பார்க்க பொறுமையிழக்காதீர்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் குடிப்பதிலும் நீ ஆர்வமுடன் இருக்க வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளில் அதிக முயற்சி எடுக்க வேண்டும். நீ அவருடைய வார்த்தைகளை வாசித்து முடித்ததும், அவற்றை நீ உண்மையாகக் கடைபிடிக்க முடியும், தேவனுடைய வார்த்தைகளில் அறிவு, நுண்ணறிவு, விவேகம் மற்றும் ஞானம் ஆகியவற்றில் வளர வேண்டும். இதன் மூலம், நீ உனக்கே தெரியாமல் மாறிவிடுவாய். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது, அருந்துவது, அவற்றை வாசிப்பது, அவற்றை அறிந்து கொள்வது, அவற்றை அனுபவிப்பது மற்றும் அவற்றை கடைபிடிப்பது ஆகியவற்றை நீ உனது கொள்கையாக எடுத்துக் கொள்ள முடிந்தால், நீ உனக்கே தெரியாமல் முதிர்ச்சியடைவாய். தேவனின் வார்த்தைகளைப் படித்த பிறகும் அவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்று சொல்பவர்களும் உண்டு. உனக்கு என்ன அவசரம்? நீ ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது, நீ அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வயது குழந்தைத் தனது பெற்றோரை ஆதரிக்கவோ கனப்படுத்தவோ முடியாது என்று கூறுமா? உனது தற்போதைய நிலை எவ்வளவு பெரியது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். உன்னால் கடைபிடிக்க முடிந்தவற்றைக் கடைபிடி, தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் ஒருவனாக இருப்பதைத் தவிர்த்திடு. தேவனின் வார்த்தைகளைப் புசி, அருந்து. இனிமேல் அதனை உனது கொள்கையாக எடுத்துக் கொள். தற்போதைக்கு தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்த முடியுமா என்பது பற்றி கவலைப்படாதே. அதை இன்னும் ஆராய வேண்டாம். தேவனின் வார்த்தைகள் உன்னிடம் வரும்போது அவற்றைப் புசித்துக் குடி, மேலும் தேவன் உன்னைப் பரிபூரணப்படுத்துவதில் உறுதியாக இருப்பார். இருப்பினும், அவருடைய வார்த்தைகளை நீ புசிப்பதற்கும் அருந்துவதற்கும் ஒரு கொள்கை உள்ளது. கண்மூடித்தனமாக அவ்வாறு செய்ய வேண்டாம். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதிலும் அருந்துவதிலும், ஒருபுறம், நீ தெரிந்து கொள்ள வேண்டிய சொற்களைத் தேடு—அதாவது, தரிசனங்களுடன் தொடர்புடையவற்றைத் தேடு—மறுபுறம், நீ எதை நிஜமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று தேடு—அதாவது நீ எதற்குள் நுழைய வேண்டும் என்று தேடு. ஒரு அம்சம் அறிவோடு தொடர்புடையது, மற்றொன்று நுழைவதோடு தொடர்புடையது. நீ எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் மற்றும் நீ எதை கடைபிடிக்க வேண்டும் என இரண்டையும் நீ புரிந்துகொண்டவுடன் தேவனின் வார்த்தைகளை எப்படி புசிப்பது மற்றும் அருந்துவது என்று உனக்குத் தெரியும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 403
முன்னோக்கிச் செல்லும்போது, தேவனின் வார்த்தைகளைப் பேசுவது என்பதே நீ பேசுவதன் கொள்கையாக இருக்க வேண்டும். சாதாரணமாக, நீங்கள் ஒன்றாக வரும்போது, தேவனின் வார்த்தைகளைப் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட வேண்டும், தேவனின் வார்த்தைகளை உங்கள் உரையாடல்களின் உள்ளடக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், அவற்றை எவ்வாறு கடைபிடிக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றி பேச வேண்டும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ இசைந்து இருக்கும்வரை பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். தேவனின் வார்த்தைகளின் உலகத்தை அடைய மனுஷனின் ஒத்துழைப்பு தேவை. நீ இதில் நுழையவில்லை என்றால், தேவனுக்கு கிரியை செய்ய வழி இருக்காது; நீ உனது வாயை மூடிக்கொண்டு, அவருடைய வார்த்தைகளைப் பற்றி பேசாவிட்டால், அவரிடம் உன்னைப் பிரகாசிக்கச் செய்ய வழி இருக்காது. நீ வேறுவிதமாக ஆக்கிரமிக்கப்படாத போதெல்லாம், தேவனின் வார்த்தைகளைப் பற்றி பேசு, வெறும் வெட்டி அரட்டையில் ஈடுபடாதே! உனது வாழ்வு தேவனின் வார்த்தைகளால் நிரம்பட்டும்—அப்போதுதான் நீ பக்தியுள்ள விசுவாசியாக இருப்பாய். உனது ஐக்கியம் மேலோட்டமாக இருந்தாலும் பரவாயில்லை. ஆழமற்ற தன்மை இல்லாமல் ஆழம் இருக்க முடியாது. ஒரு செயல்முறை இருக்க வேண்டும். உனது பயிற்சியின் மூலம், பரிசுத்த ஆவியின் பிரகாசத்தையும், மேலும் தேவனுடைய வார்த்தைகளை எவ்வாறு திறம்பட புசிப்பது, அருந்துவது என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஆய்வின் இடைவெளிக்குப் பிறகு, நீ தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் நுழைவாய். நீ ஒத்துழைக்கத் தீர்மானித்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பெற முடியும்.
தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் அருந்துதல் போன்ற கொள்கைகளில் ஒன்று அறிவுடன் தொடர்புடையது, மற்றொன்று பிரவேசிப்பதுடன் தொடர்புடையது. எந்த வார்த்தைகளை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்? தரிசனங்களுடன் தொடர்புடைய சொற்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் (அதாவது, தேவனின் கிரியை இப்போது எந்த யுகத்தில் நுழைந்துள்ளது, தேவன் இப்போது எதனை அடைய விரும்புகிறார், மனுஷ ரூபமெடுத்தல் என்றால் என்ன, மற்றும் பல; இவை அனைத்தும் தரிசனங்களுடன் தொடர்புடையவை). மனுஷன் நுழைய வேண்டிய பாதையின் பொருள் என்ன? மனுஷன் கடைபிடிக்க வேண்டிய, நுழைய வேண்டிய தேவனின் வார்த்தைகளை இது குறிக்கிறது. மேற்கூறியவை தேவனின் வார்த்தைகளைப் புசித்தல் மற்றும் அருந்துதலின் இரண்டு அம்சங்களாகும். இப்போதிலிருந்து, தேவனுடைய வார்த்தைகளை இந்த வழியில் புசியுங்கள். தரிசனங்களைப் பற்றிய அவருடைய வார்த்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெளிவான புரிதல் இருந்தால், எல்லா நேரத்திலும் தொடர்ந்து வாசித்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் இருதயத்தை தேவனை நோக்கி எப்படி திருப்புவது, தேவனுக்கு முன்பாக உங்கள் இருதயத்தை எவ்வாறு அமைதிப்படுத்துவது, மாம்சத்தை எப்படி விலக்குவது போன்ற பல வார்த்தைகளைப் புசிப்பதும் அருந்துவதும் முதன்மையானது. இந்த விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளை எப்படி புசிப்பது மற்றும் அருந்துவது என்று தெரியாமல், உண்மையான ஐக்கியம் என்பது சாத்தியமில்லை. தேவனின் வார்த்தைகளை எப்படி புசிப்பது மற்றும் அருந்துவது என்று உங்களுக்குத் தெரிந்தவுடன், முக்கியமானது எது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், ஐக்கியமானது விடுதலையாக மாறும், எந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டாலும், நீங்கள் யதார்த்தத்துடன் ஐக்கியப்படவும் அதனைப் புரிந்துக் கொள்ளவும் முடியும். தேவனின் வார்த்தைகளுடன் ஐக்கியப்பட்டிருக்கும்போது, உனக்கு எந்த யதார்த்தமும் இல்லை என்றால், முக்கியமானது எது என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை, இது தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும் உனக்குத் தெரியவில்லை என்பதைக் காட்டுகிறது. சிலருக்கு தேவனின் வார்த்தைகளை வாசிப்பது சோர்வடையச் செய்வதைக் காணலாம், இது சாதாரண நிலை அல்ல. இயல்பானது எதுவென்றால் தேவனின் வார்த்தைகளை வாசிப்பதில் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்பது, எப்போதும் அவற்றிற்காகத் தாகம்கொள்வது, மற்றும் எப்போதும் தேவனுடைய வார்த்தைகளை நன்மை செய்வதாகக் கண்டறிவது ஆகும். இப்படிதான் உண்மையிலேயே நுழைந்த ஒருவர் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும் செய்கிறார். தேவனின் வார்த்தைகள் நடைமுறைக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதாக மற்றும் மனுஷன் துல்லியமாக நுழைய வேண்டியது இதற்குள் தான் என்று நீ உணர்ந்தால்; அவருடைய வார்த்தைகள் மனுஷனுக்குப் பெரிதும் உதவிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக மற்றும் அவை மனுஷனின் வாழ்வின் ஏற்பாடாக இருப்பதாக நீ உணர்ந்தால்—பரிசுத்த ஆவியானவர் இந்த உணர்வை உங்களுக்குத் தருகிறார், உங்களை ஏவுகிறவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியைப் புரிகிறார் என்பதையும், தேவன் உன்னிடமிருந்து விலகிச் செல்லவில்லை என்பதையும் இது நிரூபிக்கிறது. சிலர், தேவன் எப்பொழுதும் பேசுவதைப் பார்த்து, அவருடைய வார்த்தைகளால் சோர்வடைந்து, அவற்றைப் வாசித்தாலும் இல்லாவிட்டாலும் எந்த விளைவும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள்—இது ஒரு சாதாரண நிலை அல்ல. யதார்த்தத்திற்குள் நுழைய தாகம் கொண்ட ஒரு இருதயம் அவர்களுக்கு இல்லை, அத்தகைய நபர்கள் பரிபூரணமடைவதற்குத் தாகம் கொண்டிருக்க மாட்டார்கள் மற்றும் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகம் கொள்ளாததை நீ காணும்போதெல்லாம், நீ ஒரு சாதாரண நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது. கடந்த காலங்களில், தேவன் உன்னிடமிருந்து விலகிவிட்டாரா என்பதை நீ உள்ளுக்குள் அமைதியாக இருக்கிறாயா, மற்றும் நீ இன்பத்தை அனுபவித்தாயா என்பதை வைத்து நீ தீர்மானிக்க முடியும். தேவனின் வார்த்தைகளுக்கு நீ தாகமாக இருக்கிறாயா, அவருடைய வார்த்தைகள் உனது யதார்த்தமாக இருக்கிறதா, நீ விசுவாசமுடையவனா, தேவனுக்காக உன்னால் முடிந்த அனைத்தையும் உன்னால் செய்ய முடிகிறதா என்பதே இப்போது முக்கியமானது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தால் மனுஷன் தீர்மானிக்கப்படுகிறான். தேவன் தம்முடைய வார்த்தைகளை மனிதகுலம் முழுவதற்கும் வழிநடத்துகிறார். நீ அவற்றைப் படிக்கத் தயாராக இருந்தால், அவர் உன்னைப் பிரகாசமாக்குவார், ஆனால் நீ தயாராக இல்லையென்றால், அவர் அவ்வாறு செய்ய மாட்டார். நீதிக்காக பசியும் தாகமும் உள்ளவர்களை தேவன் பிரகாசமாக்குகிறார், தன்னைத் தேடுகிறவர்களை அவர் பிரகாசமாக்குகிறார். தேவனுடைய வார்த்தைகளைப் வாசித்த பிறகும் தேவன் அவர்களைப் பிரகாசிக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நீ இந்த வார்த்தைகளை எவ்விதமாக வாசித்தாய்? குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் ஒரு மனுஷன் பூக்களைப் பார்ப்பதைப் போல் நீ அவருடைய வார்த்தைகளைப் படித்தால், மற்றும் யதார்த்தத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை என்றால், தேவன் உன்னை எவ்வாறு பிரகாசிக்கச் செய்வார்? தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாத ஒருவனை அவரால் எப்படி பரிபூரணப்படுத்த முடியும்? நீ தேவனின் வார்த்தைகளைப் பொக்கிஷமாகக் கருதாவிட்டால், உனக்கு சத்தியமும் இருக்காது யதார்த்தமும் இருக்காது. அவருடைய வார்த்தைகளை நீ பொக்கிஷமாகக் கருதினால், நீ சத்தியத்தைக் கடைபிடிக்க முடியும், அப்போதுதான் நீ யதார்த்தத்தைப் பெறுவாய். இதனால்தான் நீ அலுவலாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீ சோதிக்கப்பட்டாலும், சோதிப்படாவிட்டாலும் நீ எல்லா நேரங்களிலும் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும் வேண்டும். மொத்தத்தில், தேவனின் வார்த்தைகள் மனுஷனின் ஜீவிதத்திற்கான அடித்தளமாகும். அவருடைய வார்த்தைகளிலிருந்து யாரும் விலகிச் செல்ல முடியாது, ஆனால் அவர்கள் தினமும் புசிக்கும் மூன்று வேளை போஜனங்களைப் போலவே அவருடைய வார்த்தைகளையும் புசிக்க வேண்டும். தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு ஆதாயப்படுத்தப்படுவது அவ்வளவு சுலபமா? தற்போது நீ புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும், தேவனின் கிரியையைப் பற்றிய புரிதல் உனக்கு இருந்தாலும் இல்லையென்றாலும், நீ தேவனின் வார்த்தைகளை முடிந்தவரைப் புசிக்கவும் அருந்தவும் வேண்டும். இதுதான் முனைப்புடன் உட்பிரவேசிப்பதாகும். தேவனின் வார்த்தைகளை வாசித்த பிறகு, நீ உட்பிரவேசிக்கக்கூடியவற்றைக் கடைபிடிக்க துரிதப்படுத்து, உன்னால் முடியாத தருணத்திற்கு இப்போதைக்கு ஒதுக்கு. ஆரம்பத்தில் உன்னால் புரிந்து கொள்ள முடியாத தேவனின் வார்த்தைகள் பல இருக்கலாம், ஆனால் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒருவேளை ஒரு வருடம் கழித்து உனக்குப் புரியும். இது எப்படி சாத்தியம்? ஏனென்றால், ஓரிரு நாட்களில் தேவனால் ஜனங்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. பெரும்பாலும், நீ அவருடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, உனக்குச் சரியான வழியும் புரியாமல் போகலாம்; அந்த நேரத்தில், அவை வெறும் உரையாகத் தெரியுமே தவிர வேறெதுவாகவும் தெரியாது; நீ அவற்றைப் புரிந்துகொள்வதற்கு முன்பு அவற்றை ஒரு முறை அனுபவிக்க வேண்டும். தேவன் இவ்வளவு பேசியதால், அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும் நீ உன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும், பின்னர், நீ உனக்குத் தெரியாமலே, புரிந்துகொள்வாய், உனக்குத் தெரியாமலே பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் மனுஷனைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அது பெரும்பாலும் மனுஷனுக்குத் தெரியாமலேயே நடக்கிறது. நீ தாகமாக இருந்து, தேடும்போது அவர் உன்னைப் பிரகாசிக்கச் செய்து, வழிநடத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் செயல்படும் கொள்கை என்பது நீ புசிக்கும், அருந்தும் தேவனின் வார்த்தைகளை மையமாகக் கொண்டுள்ளது. தேவனின் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளுக்கு எப்போதும் மாறுபட்ட மனப்பான்மையைக் கொண்டிருப்பவர்கள்—அவர்களின் குழப்பமானச் சிந்தனையில், அவருடைய வார்த்தைகளை வாசித்தாலும் இல்லையென்றாலும் எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று நம்புகின்றனர்—இவர்கள் யதார்த்தத்தைக் கொண்டிராதவர்கள். அத்தகைய நபரில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையோ அல்லது அவருடைய பிரகாசத்தையோ காண முடியாது. இது போன்ற ஜனங்கள் திரு. நங்குவோ உவமையைப்[அ] போல எந்தவித முயற்சியும் எடுக்காமல் நிஜமானத் தகுதிகள் இல்லாமல் பாசாங்கு செய்கிறார்கள்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
அடிக்குறிப்பு:
அ. மூல உரையில் “உவமை” என்ற சொற்றொடர் இல்லை.
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 404
தேவனுடைய வார்த்தைகள் வெளிவருகையில், நீ உடனடியாக அவற்றைப் பெற்று, அவற்றைப் புசிக்கவும் அருந்தவும் வேண்டும். நீ எவ்வளவு புரிந்துகொண்டாலும் பரவாயில்லை, நீ வேகமாகப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் அவருடைய வார்த்தைகளை புசிப்பதுக் குடிப்பதும், தெரிந்துகொள்வதும் மற்றும் கடைபிடிப்பதுமேயாகும். இது உன்னால் செய்யக்கூடிய ஒன்றுதான். உனது வளர்த்தி எவ்வளவு பெரியதாக மாறும் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்; அவருடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும் அருந்துவதிலும் கவனம் செலுத்து. இதில் தான் மனுஷன் ஒத்துழைக்க வேண்டும். உனது ஆவிக்குரிய வாழ்க்கை முக்கியமாக தேவனின் வார்த்தைகளைப் புசிப்பது மற்றும் அருந்துவது மற்றும் அவற்றை கடைபிடிப்பது என்ற யதார்த்தத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகும். வேறு எதிலும் கவனம் செலுத்துவது உனது வேலையல்ல. திருச்சபையின் தலைவர்களால் அவர்களின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வழிகாட்ட இயல வேண்டும், இதனால் தேவனின் வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும் அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு திருச்சபையின் தலைவரின் பொறுப்பும் இதுதான். அவர்கள் இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும், அனைவரும் தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதையும் அருந்துவதையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும், மேலும் அவருடைய வார்த்தைகளை அவர்கள் இதயங்களில் வைத்திருக்க வேண்டும். இந்த யதார்த்தத்திற்குள் நுழைவது என்பது ராஜ்யத்தின் யுகத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது. இன்று, பெரும்பாலான ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் வாழ முடியாது என்று உணர்கிறார்கள், நேரத்தைப் பொருட்படுத்தாமல் அவருடைய வார்த்தைகள் புதியவை என்று உணர்கிறார்கள். இதன் பொருள் அவர்கள் சரியான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர் என்பதேயாகும். தேவன் தனது கிரியையைச் செய்வதற்கும் மனுஷனுக்கு வழங்குவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எல்லோரும் தேவனுடைய வார்த்தைகளுக்காக ஏங்கும்போது, தாகமாக இருக்கும்போது, மனிதகுலம் அவருடைய வார்த்தைகளின் உலகிற்குள் நுழைகிறது.
தேவன் மிகவும் அதிகமாக பேசியுள்ளார். நீ எவ்வளவு தெரிந்துக் கொண்டாய்? நீ எவ்வளவு நுழைந்திருக்கிறாய்? ஒரு திருச்சபைத் தலைவர் தனது சகோதர சகோதரிகளை தேவனின் வார்த்தைகளின் நிஜத்திற்குள் வழிநடத்தவில்லை என்றால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து விலகியிருப்பார்கள், மேலும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியிருப்பார்கள்! உனது புரிதல் ஆழமானதாக இருந்தாலும் அல்லது மேலோட்டமாக இருந்தாலும், உனது புரிதலின் அளவைப் பொருட்படுத்தாமல், அவருடைய வார்த்தைகளை எப்படி புசிக்கலாம், அருந்தலாம் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும், அவருடைய வார்த்தைகளில் நீ அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் அவற்றைப் புசிப்பது மற்றும் அருந்துவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் இவ்வளவு பேசியிருப்பதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும் அருந்தாமலும், அல்லது தேட முயற்சிக்காமலும், அல்லது அவருடைய வார்த்தைகளைக் கடைபிடிக்காமலும் இருந்தால், அதை தேவன் மீதான விசுவாசம் என்று சொல்ல முடியாது. நீ தேவனை நம்புவதால், நீ அவருடைய வார்த்தைகளைப் புசிக்கவும் அருந்தவும், அவருடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், அவருடைய வார்த்தைகளின்படி வாழ வேண்டும். இதை மட்டுமே தேவ நம்பிக்கை என்று அழைக்க முடியும்! நீ உனது வாயால் தேவனை நம்புகிறாய் என்று கூறினால், அவருடைய வார்த்தைகளில் எதையும் கடைபிடிக்கவோ அல்லது எந்த யதார்த்தத்தையும் உருவாக்கவோ முடியவில்லை என்றால், அது தேவனை நம்புவது என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, “பசியினைப் போக்க போஜனத்தைத் தேடுவதைப் போன்றது.” சிறிதளவு உண்மைநிலையைக்கூட சுதந்தரிக்காமல் அற்பமான சாட்சியங்கள், பயனற்ற விஷயங்கள், மற்றும் மேலோட்டமான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவது: இவை தேவன் மேலுள்ள நம்பிக்கையை உள்ளடக்கவில்லை. மேலும் தேவன் மேல் நம்பிக்கை வைப்பதற்கானச் சரியான வழியைப் புரிந்துக்கொள்ளவில்லை. ஏன் நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை முடிந்தவரைப் புசிக்கவும் அருந்தவும் வேண்டும்? நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் புசிக்காமலும், அருந்தாமலும் வெறும் பரலோகத்தை மட்டும் தேடுவது, தேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையாகுமா? தேவனை நம்புகிறவர் எடுக்கவேண்டிய முதற்படி என்ன தெரியுமா? எந்தப் பாதையின் மூலம் தேவன் மனுஷனைப் பூரணப்படுத்துகிறார் தெரியுமா? தேவனுடைய வார்த்தையைப் புசிக்காமல், அருந்தாமல் நீங்கள் பூரணமாக இருக்க முடியுமா? தேவனுடைய வார்த்தைகள் உங்களின் யதார்த்தமாக சேவை செய்யாமல் அவருடைய ராஜ்யத்தின் நபராகக் கருத முடியுமா? தேவனை நம்புவதன் அர்த்தம் என்ன? தேவனை விசுவாசிப்பவர்கள் வெளிப்புறத்திலாவது சாட்சியுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டவர்களாய் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவருடைய வார்த்தைகளிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகிச் செல்ல முடியாது. தேவனை அறிவது, அவரது உள்நோக்கங்களை நிறைவேற்றுவது என அனைத்தும் அவர் வார்த்தைகளின் மூலம் அடையப்படுகின்றன. இனிவரும் நாட்களில் ஒவ்வொரு தேசமும், இனமும், மதமும், துறையும் தேவனுடைய வார்த்தையினால் சுதந்தரிக்கப்படும். தேவன் நேரிடையாகப் பேசுவார், எல்லா ஜனங்களும் தேவனின் வார்த்தைகளைத் தங்கள் கரங்களில் கொண்டிருப்பர். இதன் மூலம் மனுக்குலம் பரிபூரணமாகும். உள்ளேயும், வெளியேயும் தேவனுடைய வார்த்தைகள் முழுவதுமாய் பரவும்: மனுக்குலத்தார் தேவனுடைய வார்த்தைகளைத் தங்கள் வாயால் பேசுவர், தேவனின் வார்த்தைகளின்படி நடப்பர், அவர்கள் உள்ளே தேவனின் வார்த்தைகளை வைத்திருப்பார்கள், மீதமிருப்போர் உள்ளேயும் வெளியேயும் தேவ வார்த்தைகளுக்குள் மூழ்கியிருப்பார்கள். இவ்விதமாய் மனுக்குலத்தார் பரிபூரணப்படுத்தப்படுவர். தேவனின் உள்நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவோர் மற்றும் அவருக்கு சாட்சியாக இருக்க்கூடியவர்கள், தேவனின் வார்த்தைகளை அவர்களின் யதார்த்தமாகக் கொண்டவர்கள் ஆவர்.
வார்த்தையின் யுகத்திற்குள்—தேவனின் ஆயிரவருட அரசாட்சிக்குள்—நுழைதல் என்னும் வேலை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுமுதல் தேவனின் வார்த்தைகள் பற்றிய ஐக்கியத்தில் ஈடுபட பழகிக் கொள்ளுங்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிப்பதாலும், குடிப்பதாலும் அனுபவிப்பதாலும் மட்டுமே உங்களால் தேவனின் வார்த்தைகளின்படி வாழ முடியும். மற்றவர்களை நம்பவைக்க நீ சில நடைமுறை அனுபவங்களை உருவாக்க வேண்டும். தேவனின் வார்த்தைகளின் யதார்த்தத்தின்படி உன்னால் வாழ முடியாவிட்டால், ஒருவரும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்! தேவனால் பயன்படுத்தப்படும் அனைவரும் தேவனின் வார்த்தைப்படி வாழ முடியும். உன்னால் இந்த யதார்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால் மற்றும் தேவனுக்கு சாட்சியாக இருக்க முடியவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உன்னில் செயல்படவில்லை என்பதையும், நீ தேவனில் பூரணப்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது. இதுவே தேவனின் வார்த்தைகளின் முக்கியத்துவம். தேவனின் வார்த்தைகளுக்காகத் தாகம் கொள்ளும் இதயத்தை நீ கொண்டிருக்கிறாயா? தேவனின் வார்த்தைகளுக்கு தாகம் கொண்டிருப்பவர்கள், சத்தியத்திற்காகத் தாகம் கொள்கிறார்கள், மற்றும் இது போன்ற ஜனங்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். எதிர்காலத்தில், தேவன் அனைத்து மதத்தினருக்கும் அனைத்து இனத்தவருக்கும் மேலும் பல வார்த்தைகளைக் கூறுவார். அவர் முதலாவது உங்கள் மத்தியில் தனது குரலைப் பேசி, உங்களைப் பரிபூரணப்படுத்துவார், பின்பு புறஜாதியினரை சுதந்தரிக்கும்படியாக அவர்கள் மத்தியில் தனது குரலைப் பேசுவார். அவருடைய வார்த்தைகளின் மூலம், அனைவரும் உண்மையோடும் முற்றிலுமாகவும் நம்பவைக்கப்படுகின்றனர். தேவனின் வார்த்தைகள் மற்றும் அவரின் வெளிப்பாடுகளின் மூலம் மனுஷனின் கெட்ட மனநிலை குறைகிறது. அவன் தேவனின் பிரசன்னத்தைப் பெறுகிறான், மற்றும் அவனுடைய கீழ்ப்படியாத மனநிலை குறைகிறது. இந்த வார்த்தைகள் மனுஷன் மீது அதிகாரத்தைச் செயல்படுத்தி, தேவனின் வெளிச்சத்திற்குள் மனுஷனை ஆட்கொள்ளும். தேவன் தற்போதைய யுகத்தில் மேற்கொள்ளும் கிரியையையும், அவரின் கிரியையின் திருப்புமுனைகளையும் அவருடைய வார்த்தைகளுக்குள்ளே கண்டடையலாம். நீ அவரின் வார்த்தைகளை வாசிக்கவில்லை என்றால், உனக்கு எதுவும் புரியாது. அவருடைய வார்த்தைகளை நீயே புசிப்பதன் மூலம் மற்றும் அருந்துவதன் மூலம், மற்றும் உனது சகோதரர்களுடனும் சகோதரிகளுடனும் ஐக்கியமாய் இருப்பதன் மூலம், நீ தேவனின் வார்த்தைகள் பற்றிய முழு அறிவைப் பெறுவாய். அப்போதுதான் உன்னால் அவற்றின் யதார்த்தத்தின்படி உண்மையாக வாழ முடியும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “ராஜ்யத்தின் யுகம் என்பது வார்த்தையின் யுகம்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
தேவனுடைய அனுதின வார்த்தைகள் பகுதி 405
“அடையாளங்களையும் அதிசயங்களையும் பார்ப்பதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் கைவிடப்படுவார்கள். அவர்கள் பரிபூரணர்களாக ஆக்கப்படுபவர்கள் அல்ல”, என்பது நான் முன்பு கூறியது. நான் அநேக வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன், ஆனாலும் மனிதனுக்கு இந்த கிரியையைப் பற்றி சிறிதளவு அறிவும் இல்லை, மேலும், இந்த இடத்திற்கு வந்தபோதும், ஜனங்கள் அறிகுறிகளையும் அதிசயங்களையும் கேட்கிறார்கள். தேவன் மீதான உன் விசுவாசம், அதிசயங்கள் மற்றும் அதிசயங்களைத் தேடுவதைத் தவிர வேறொன்றுமில்லையா, அல்லது வாழ்க்கையைப் பெறுவதற்காகவா? இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அவற்றில் சில இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இயேசு தேவன் இல்லை என்று நீ சொல்ல முடியுமா? அவர் கிறிஸ்து என்றும் தேவனின் அன்பான மகன் என்றும் தேவன் சாட்சி கொடுத்தார். இதை நீ மறுக்க முடியுமா? இன்று, தேவன் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், இதை நீ முழுமையாக அறியவில்லை என்றால், நீ உறுதியாக நிற்க முடியாது. அவர் தேவன் என்பதால் நீ அவரை விசுவாசிக்கிறாயா, அல்லது அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படுகின்றனவா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு அவரை விசுவாசிக்கிறாயா? நீ அறிகுறிகளையும் அதிசயங்களையும் விசுவாசிக்கிறாயா, அல்லது தேவனை விசுவாசிக்கிறாயா? இன்று, அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டவில்லை. அவர் உண்மையில் தேவனா? அவர் பேசும் வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவர் உண்மையில் தேவனா? அவர் பேசும் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதன் மூலம் தேவனின் சாரம் தீர்மானிக்கப்படுகிறதா? தேவனை விசுவாசிப்பதற்கு முன்பு சிலர் தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதற்காக எப்போதும் காத்திருப்பது ஏன்? அவர்கள் அவரை அறியவில்லை என்று அர்த்தமல்லவா? அத்தகைய கருத்துக்களைக் கொண்டவர்கள் அனைவரும் தேவனை மறுப்பவர்கள். தேவனை அளவிட அவர்கள் கருத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள். தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால், அவர்கள் அவரை விசுவாசிக்கிறார்கள், இல்லையென்றால் அவர்கள் அவரை விசுவாசிக்கமாட்டார்கள். அவர்கள் எப்போதும் அறிகுறிகளையும் அதிசயங்களையும் பின்பற்றுகிறார்கள். இந்த ஜனங்கள் நவீன காலத்தின் பரிசேயர்கள் அல்லவா? நீ உறுதியாக நிற்க முடியுமா இல்லையா என்பது நீ உண்மையான தேவனை அறிந்திருக்கிறாயா இல்லையா என்பதைப் பொறுத்தது. இது முக்கியமானது! உன்னில் தேவனின் வார்த்தையின் யதார்த்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, தேவனின் யதார்த்தத்தைப் பற்றிய உன் ஞானம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, சோதனைகளின் போது உன்னால் அவ்வளவு உறுதியாக நிற்க முடிகிறது. அறிகுறிகளையும் அதிசயங்களையும் பார்ப்பதில் நீ எவ்வளவு கவனம் செலுத்துகிறாயோ, உன்னால் அவ்வளவு குறைவாக உறுதியாக நிற்க முடிகிறது, மேலும் சோதனைகளுக்கு மத்தியில் நீ விழுந்து விடுவாய். அடையாளங்களும் அதிசயங்களும் அஸ்திபாரம் அல்ல. தேவனின் யதார்த்தம் மட்டுமே வாழ்க்கை. தேவனின் கிரியையால் அடைய வேண்டிய பலன்கள் குறித்து சிலருக்குத் தெரியாது. அவர்கள் தங்கள் நாட்களை கலக்கத்தில் செலவிடுகிறார்கள், தேவனின் கிரியையைப் பற்றிய அறிவைப் பின்தொடர்வதில்லை. அவர்கள் பின்தொடர்வதின் நோக்கம், தேவன் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதே ஆகும், அப்போதுதான் அவர்கள் தங்கள் விசுவாசத்தில் தீவிரமாக இருப்பார்கள். தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டால் தான் தங்கள் வாழ்க்கையைத் தொடருவார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அவர்கள் வாழ்க்கையைத் தொடர வாய்ப்பில்லை. தேவனை விசுவாசிப்பது என்பது அறிகுறிகளையும் அதிசயங்களையும் பார்ப்பதும், சொர்க்கத்திற்கும் மூன்றாவது சொர்க்கத்திற்கும் ஏறுவதற்கான நாட்டமும் என்று மனிதன் கருதுகிறான். அவர்கள் யாரும் தேவன் மீதான விசுவாசம் என்பது யதார்த்தத்திற்குள் நுழைவதும், வாழ்க்கையைப் பின்தொடர்வதும், தேவனால் பெறப்படுவதைப் பின்தொடர்வதும் என்று கூறவதில்லை. இது போன்ற நோக்கத்தின் மதிப்பு என்ன? தேவனைப் பற்றிய அறிவையும், தேவனின் திருப்தியையும் பின்பற்றாதவர்கள் தேவனை விசுவாசிக்காதவர்கள் ஆவர். அவர்கள் தான் தேவனை நிந்திக்கிறவர்கள்!
தேவன் மீதான விசுவாசம் என்ன என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? தேவன் மீதான விசுவாசம் என்பது அறிகுறிகளையும் அதிசயங்களையும் பார்ப்பதா? அது சொர்க்கத்திற்கு ஏறுவது என்று அர்த்தமா? தேவனை விசுவாசிப்பது சிறிதும் எளிதானது அல்ல. அந்த மத நடைமுறைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதையும், பேய்களை விரட்டுவதையும், அடையாளங்கள் மற்றும் அதிசயங்களில் கவனம் செலுத்துவதும், தேவனின் கிருபை, அமைதி மற்றும் மகிழ்ச்சியை அதிகம் விரும்புவது, மாம்சத்தின் வாய்ப்புகள் மற்றும் வசதிகளைப் பின்தொடர்வது ஆகிய இவையே மத நடைமுறைகள், அத்தகைய மத நடைமுறைகள் தெளிவற்ற ஒரு வகையான விசுவாசம் ஆகும். இன்று தேவன் மீதான உண்மையான விசுவாசம் என்பது என்ன? தேவனின் வார்த்தையை உன் வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதும், அவரைப் பற்றிய உண்மையான அன்பை அடைவதற்காக தேவனை அவருடைய வார்த்தையின் மூலமாய் அறிந்து கொள்வதும் ஆகும். தெளிவாக இருக்க, தேவன் மிதான விசுவாசம் என்பது நீ தேவனுக்குக் கீழ்ப்படிவதும், தேவனை நேசிப்பதும், தேவனின் ஒரு சிருஷ்டிப்பால் செய்யப்பட வேண்டிய கடமையைச் செய்யவதும் என்று கூறலாம். இது தேவனை விசுவாசிப்பதன் நோக்கம் ஆகும். தேவனின் அருமையைப் பற்றிய அறிவை நீ அடைய வேண்டும், தேவன் பயபக்திக்கு எவ்வளவு தகுதியானவராக இருக்கிறார், அவருடைய சிருஷ்டிப்புகளில், தேவன் எவ்வாறு இரட்சிப்பின் கிரியையைச் செய்கிறார், அவற்றை எவ்வாறு பரிபூரணமாக்குகிறார். இவை தேவன் மீதான உன் விசுவாசத்தின் அத்தியாவசியமானவை. தேவன் மீதான விசுவாசம் என்பது முக்கியமாக மாம்சத்திற்குரிய வாழ்க்கையிலிருந்து தேவனை நேசிக்கும் வாழ்க்கைக்கு மாறுவது ஆகும். அது சீர்கெட்ட வாழ்க்கையிலிருந்து தேவனின் வார்த்தைகளுக்குள் வாழ்வது வரை ஆகும். அது சாத்தானின் களத்தில் இருந்து வெளிவந்து தேவனின் கவனிப்பிலும் பாதுகாப்பிலும் வாழ்வது ஆகும். அது தேவனுக்குக் கீழ்ப்படிதலையும் மாம்சத்திற்கு கீழ்ப்படியாமையையும் அடைய முடிவது ஆகும். இது உன் முழு இருதயத்தையும் பெற தேவனை அனுமதிப்பது, உன்னை பரிபூரணமாக்க தேவனை அனுமதிப்பது, மேலும் சீர்கேடு நிறைந்த சாத்தானின் மனப்பான்மையிலிருந்து உன்னை விடுவிப்பதும் ஆகும். தேவனின் விசுவாசம் முக்கியமாக இருப்பதால், தேவனின் வல்லமையும் மகிமையும் உன்னிடத்தில் வெளிப்படும், இதனால் நீ தேவனுடைய சித்தத்தைச் செய்யவும், தேவனின் திட்டத்தை நிறைவேற்றவும், சாத்தானுக்கு முன்பாக தேவனுக்கு சாட்சி அளிக்கவும் முடியும். தேவன் மீதான விசுவாசம் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காணும் விருப்பத்தைச் சுற்றி இருக்கக்கூடாது, அது உன் சுய மாம்சத்திற்காகவும் இருக்கக்கூடாது. இது தேவனை அறிந்துகொள்வதையும், பேதுருவைப் போலவே தேவனுக்குக் கீழ்ப்படிவதையும், ஒருவர் இறக்கும் வரை தேவனுக்குக் கீழ்ப்படிவதையும் பற்றியதாக இருக்க வேண்டும். தேவனை விசுவாசிப்பதற்கான முக்கிய நோக்கங்கள் இவை. தேவனை அறிந்து அவரை திருப்திப்படுத்துவதற்காக ஒருவர் தேவனுடைய வார்த்தையைப் புசித்துக் குடிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையைப் புசிப்பதும் குடிப்பதும் உனக்கு தேவனைப் பற்றிய அதிக அறிவைத் தருகிறது, அதன்பின்தான் நீ அவருக்குக் கீழ்ப்படிய முடியும். தேவனைப் பற்றிய அறிவால் மட்டுமே நீ அவரை நேசிக்க முடியுமா? மேலும் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் மனிதன் கொண்டிருக்க வேண்டிய குறிக்கோள் இதுதான். தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ எப்போதும் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காண முயற்சிக்கிறாய் என்றால், தேவன் மீதான இந்த விசுவாசத்தின் கண்ணோட்டம் தவறானது. தேவன் மீதான விசுவாசம் என்பது தேவனின் வார்த்தையை வாழ்க்கையின் யதார்த்தமாக ஏற்றுக்கொள்வதாகும். தேவனின் வார்த்தைகளை அவருடைய வாயிலிருந்து நடைமுறைக்குக் கொண்டு வந்து அவற்றை உனக்குள் நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவனின் நோக்கமானது அடையப்படுகிறது. தேவனை விசுவாசிப்பதில், மனிதன் தேவனால் பரிபூரணமாகவும், தேவனுக்கு அர்ப்பணிக்கவும், தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படியவும் பாடுபட வேண்டும். நீ புகார் செய்யாமல் தேவனுக்குக் கீழ்ப்படிய முடிந்து, தேவனின் விருப்பங்களை கவனத்தில் கொண்டிருந்தால், பேதுருவின் அந்தஸ்தை அடையலாம், தேவனால் பேசப்படும் பேதுருவின் பாணியைக் கொண்டிருக்கிறாய் என்றால், நீ தேவன் மீதான விசுவாசத்தில் வெற்றியை அடைந்த்தையும், அதுதான் நீ தேவனால் பெறப்பட்டிருக்கிறாய் என்பதைக் குறிக்கும்.
மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருக்கும் “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது