மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் II

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 336

நீ மாம்சமாகிய தேவனை ஒப்புக்கொள்கிறாய் என்றும், மாம்சத்தில் தோன்றும் வார்த்தையை ஒப்புக்கொள்கிறாய் என்றும் சொல்கிறாய், ஆனாலும் நீ அவருடைய முதுகுக்குப் பின்னால் சில விஷயங்களைச் செய்கிறாய், அவர் உன்னை செய்யச் சொல்வதற்கு எதிரான விஷயங்கள், மேலும் உன் இருதயத்தில் நீ அவரைக் கண்டு பயப்படுவதும் இல்லை. இது தான் தேவனை ஒப்புக்கொள்வதா? அவர் சொல்வதை நீ ஒப்புக்கொள்கிறாய், ஆனால் உன்னால் முடிந்ததை நீ கடைப்பிடிப்பதும் இல்லை, அவருடைய வழியை நீ பின்பற்றுவதும் இல்லை. இதுதான் தேவனை ஒப்புக்கொள்வதா? நீ அவரை ஒப்புக் கொண்டாலும், உனது மனநிலை அவரை நோக்கிப் போர்க்குணத்தோடு மட்டுமே பார்க்கிறது, ஒருபோதும் பயபக்தியுடன் பார்ப்பதில்லை. நீ அவருடைய கிரியையைக் கண்டு, ஒப்புக்கொண்டு, அவர்தான் தேவன் என்று நீ அறிந்திருந்தாலும், நீ சற்றே சூடாகவும், முற்றிலும் மாறாமலும் இருக்கிறாய் என்றால், நீ இன்னும் ஜெயங்கொள்ளப்படாத ஒருவன்தான். ஜெயங்கொள்ளப்பட்டவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும், மேலும் அவர்களால் உயர்ந்த சத்தியங்களுக்குள் நுழைய முடியாவிட்டாலும், இந்தச் சத்தியங்கள் அவர்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும், இதுபோன்றவர்கள் இதை அடைய தங்கள் இருதயத்தில் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கடைப்பிடிக்கக்கூடியவற்றுக்கு எல்லைகளும் வரம்புகளும் உள்ளன, அதேபோல அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவற்றிற்கும் வரம்புகள் உள்ளன. எவ்வாறாயினும், குறைந்த பட்சம், அவர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும், உன்னால் அதை அடைய முடிந்தால், இது ஜெயங்கொள்ளும் கிரியையின் காரணமாக அடையப்பட்ட ஒரு விளைவாக இருக்கும். ஒருவேளை நீ, “மனுஷனால் முன்வைக்க முடியாத பல வார்த்தைகளை தேவனால் முன்வைக்க முடியும் என்று வைத்துக் கொள்வோம், அப்படியும் அவர் தேவன் இல்லையென்றால், வேறு யார் தான் தேவன்?” என்று சொல்லலாம். இத்தகைய சிந்தனைக்கு நீ தேவனை ஒப்புக்கொள்கிறாய் என்று அர்த்தமல்ல. நீ தேவனை ஒப்புக்கொண்டால், அதை உனது உண்மையான செயல்களின் மூலம் நீ நிரூபிக்க வேண்டும். நீ நீதியைக் கடைப்பிடிக்கவில்லை என்றாலும், நீ ஒரு திருச்சபையை வழிநடத்தினால், பணத்திற்கும் செல்வத்திற்கும் ஏங்கினால், திருச்சபையின் நிதியை எப்போதும் நீயே எடுத்துக்கொண்டால், இதுதான் தேவன் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதா? தேவன் சர்வவல்லவர், அவர் பயபக்திக்கு தகுதியானவர். ஒரு தேவன் இருப்பதாக நீ உண்மையாக ஒப்புக் கொண்டால் நீ எப்படி பயப்படாமல் இருக்க முடியும்? நீ இத்தகைய இழிவான செயல்களைச் செய்ய வல்லன் என்றால், நீ அவரை உண்மையிலேயே ஒப்புக்கொள்கிறாயா? நீ தேவனையா விசுவாசிக்கிறாய்? நீ ஒரு தெளிவற்ற தேவனைத்தான் விசுவாசிக்கிறாய்; அதனால்தான் நீ பயப்படுவதில்லை! தேவனை உண்மையாக ஒப்புக்கொண்டு அவரை அறிந்தவர்கள் அனைவரும் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள், அவரை எதிர்க்கும் அல்லது தங்கள் மனசாட்சியை மீறும் எதையும் செய்ய பயப்படுகிறார்கள்; குறிப்பாக, தேவனின் சித்தத்திற்கு எதிரானது என்று அவர்கள் அறிந்த எதையும் செய்ய அவர்கள் பயப்படுகிறார்கள். இது மட்டுமே தேவன் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதாகக் கருத முடியும். உனது பெற்றோர் நீ தேவனை விசுவாசிப்பதைத் தடுக்க முயற்சிக்கும்போது நீ என்ன செய்ய வேண்டும்? உனது விசுவாசமற்ற கணவன் உனக்கு நல்லவராக இருக்கும்போது நீ எவ்வாறு தேவனை நேசிக்க வேண்டும்? சகோதர சகோதரிகள் உன்னை வெறுக்கும்போது நீ எவ்வாறு தேவனை நேசிக்க வேண்டும்? நீ அவரை ஒப்புக் கொண்டால், இந்த விஷயங்களில் நீ சரியான முறையில் செயல்பட்டு யதார்த்தமாக ஜீவிப்பாய். நீ உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், ஆனால் தேவன் இருக்கிறார் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று மட்டுமே கூறினால், நீ வெறுமனே பேசுபவன் மட்டுமே! நீ அவரை விசுவாசிக்கிறாய், அவரை ஒப்புக்கொள்கிறாய் என்று நீ சொல்கிறாய், ஆனால் நீ அவரை எந்த வகையில் ஒப்புக்கொள்கிறாய்? நீ அவரை எந்த வகையில் விசுவாசிக்கிறாய்? நீ அவருக்கு பயப்படுகிறாயா? நீ அவரை பயபக்தியுடன் வணங்குகிறாயா? நீ அவரை உனக்குள்ளே ஆழமாக நேசிக்கிறாயா? நீ மன உளைச்சலுக்கு ஆளாகி, தோள்சாய்வதற்கு யாரும் இல்லாதபோது, தேவனின் அருமையை நீ உணர்கிறாய், ஆனால் அதன் பிறகு நீ அதை எல்லாம் மறந்து விடுகிறாய். அது தேவனை நேசிப்பது இல்லை, தேவனை நம்புவதும் இல்லை! இறுதியில், மனுஷன் எதை அடைய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்? உனது சொந்த முக்கியத்துவத்தால் ஈர்க்கப்படுவது, புதிய விஷயங்களை நீ விரைவாகப் புரிந்துகொண்டு அறிந்துகொள்வது, மற்றவர்களைக் கட்டுப்படுத்துவது, மற்றவர்களைக் குறைத்துப் பார்ப்பது, ஜனங்களை அவர்களின் தோற்றத்தைக் கண்டு தீர்மானிப்பது, கபடற்றவர்களைக் கொடுமைப்படுத்துவது, திருச்சபை பணத்தை விரும்புவது மற்றும் பல என நான் குறிப்பிட்டுள்ள அனைத்து நிலைகளும்—இந்தச் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலைகள் அனைத்தும் பகுதியாக உன்னிடமிருந்து அகற்றப்பட்டால் மட்டுமே, உனது ஜெயங்கொள்ளுதல் வெளிப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (4)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 337

உங்கள் மத்தியில் நான் இவ்விதமாய்க் கிரியை செய்து பேசினேன், நான் மிக அதிகமாக ஆற்றலையும் முயற்சியையும் செலவுசெய்தேன், இருப்பினும் நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறியதை எப்போது நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுள்ளீர்கள்? சர்வவல்லவரான எனக்கு எங்கே நீங்கள் தலைவணங்கினீர்கள்? நீங்கள் ஏன் என்னை இவ்விதமாக நடத்துகிறீர்கள்? நீங்கள் கூறும் மற்றும் செய்யும் எல்லாம் ஏன் என் கோபத்தைக் கிளறுகின்றன? உங்கள் இருதயம் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? நான் எப்போதாவது உங்களை விழத்தள்ளி இருக்கிறேனா? என்னைத் துயரமும் விசனமும் அடையச் செய்வதைத் தவிர வேறொன்றையும் நீங்கள் செய்யவில்லையே? யேகோவாவாகிய என் கோபாக்கினையின் நாள் உங்கள் மேல் வரட்டும் என்று நீங்கள் காத்திருக்கிறீர்களா? உங்கள் கீழ்ப்படியாமையால் தூண்டப்படும் கோபத்தை நான் அனுப்புவதற்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா? நான் செய்யும் ஒவ்வொன்றும் உங்களுக்காக இல்லையா? ஆனால் யேகோவாவான என்னை எப்போதும் நீங்கள் இந்த விதமாகத்தானே நடத்தியிருக்கிறீர்கள்: என் பலிகளைத் திருடி, என் பலிபீடத்தில் இருந்து காணிக்கைகளை எடுத்து ஓநாய்களின் குட்டிகளுக்கும் குட்டிகளின் குட்டிக்கும் உணவளிக்கத்தானே அதன் குகைக்கு எடுத்துச்செல்கிறீர்கள்; கோப முறைப்புடனும், வாள்களோடும், வேல்களோடும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுகின்றனர், சர்வவல்லவரான என் வார்த்தைகளை மலக்கழிவைப் போல அசுத்தமாக மாற கழிப்பறைக்குள் வீசி எறிகின்றார்கள். உங்கள் நேர்மை எங்கே? உங்கள் மனிதப்பண்பு விலங்குப்பண்பாக மாறிவிட்டது! உங்கள் இருதயங்கள் வெகுகாலத்திற்கு முன்னரே கல்லாக மாறிவிட்டன. சர்வவல்லவரான எனக்கு எதிராக இன்று நீங்கள் செய்யும் தீமைகளை வருகின்ற என் கோபாக்கினை நாளே நான் நியாயம் தீர்க்கும் நாள் என்று உங்களுக்குத் தெரியாதா? என் வார்த்தைகளைச் சேற்றில் வீசிவிட்டு அதற்குச் செவிகொடுக்காது என்னை இவ்விதமாக ஏமாற்றிவிட்டு, இவ்வாறு என் முதுகுக்குப் பின்னால் நடிப்பதன் மூலம் என் உக்கிரத்தின் பார்வையில் இருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? என் பலிகளைத் திருடி என் உடைமைகளை இச்சித்த போதே யேகோவாவாகிய என் கண்கள் உங்களைப் பார்த்துவிட்டதை நீங்கள் அறியவில்லையா? பலிகள் செலுத்தப்பட்ட பலிபீடத்துக்கு முன் என் பலிகளை எப்போது திருடினீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த வகையில் என்னை ஏமாற்ற நீங்கள் போதுமான அளவுக்குப் புத்திசாலிகள் என்று உங்களை நீங்கள் எவ்வாறு நம்ப முடிந்தது? உங்கள் கொடிய பாவங்களை விட்டு என் கோபாக்கினை எவ்வாறு விலக முடியும்? உங்கள் தீய செயல்களைக் கடந்து என் உக்கிர கோபம் எவ்வாறு செல்லும்? இன்று நீங்கள் செய்யும் தீமை உங்களுக்கு ஒரு வெளியேறும் வழியைத் திறக்காது, ஆனால் உங்களது நாளைய தினத்துக்காகத் தண்டனையைக் குவித்து வைக்கும்; அது உங்களுக்கு எதிராக சர்வவல்லவரான என் கடிந்துகொள்ளுதலைத் தூண்டுகிறது. உங்கள் தீய காரியங்களும் தீய வார்த்தைகளும் என் தண்டனையில் இருந்து எவ்வாறு தப்பிக்கும்? உங்கள் ஜெபங்கள் என் செவிகளை எவ்வாறு வந்தடையும்? உங்களை அநீதியில் இருந்து விடுவிக்க ஒரு வழியை எவ்வாறு நான் திறக்க முடியும்? என்னை மீறும் உங்கள் தீய செயல்களை நான் எவ்வாறு விட்டுவிட முடியும்? சர்ப்பத்தைப் போன்று விஷம் நிறைந்த உங்கள் நாவுகளை துண்டிக்காமல் நான் எவ்வாறு இருக்க முடியும்? உங்கள் நீதிக்காக நீங்கள் என்னைக் கூப்பிடவில்லை, ஆனால் பதிலாக உங்கள் அநீதியின் காரணமாக என் கோபாக்கினையைக் குவித்து வைக்கிறீர்கள். உங்களை நான் எவ்வாறு மன்னிக்க முடியும்? சர்வவல்லவரான என் கண்களில் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் அசுத்தமானவை. சர்வவல்லவராகிய என் கண்கள் உங்கள் அநீதியை இடைவிடாத தண்டனையாகக் காண்கிறது. எனது நீதியான கடிந்துகொள்ளுதலும் நியாயத்தீர்ப்பும் உங்களிடம் இருந்து எவ்வாறு விலக முடியும்? இதை நீங்கள் எனக்குச் செய்து, துன்பமும் கோபமும் உருவாக்குவதால், என் கையில் இருந்து உங்களை நான் எவ்விதம் தப்பவிடவும் யேகோவாவாகிய நான் உங்களை தண்டித்து சபிக்கும் நாளில் இருந்து விலகிச்செல்லவும் விட முடியும்? உங்களது எல்லா தீய சொற்களும் பேச்சுக்களும் என் செவிகளுக்கு ஏற்கெனவே எட்டிவிட்டது உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் அநீதி ஏற்கெனவே நீதி என்னும் என் பரிசுத்த அங்கியை களங்கப்படுத்திவிட்டதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் கீழ்ப்படியாமை ஏற்கெனவே என் உறுதியான கோபத்தைத் தூண்டிவிட்டுவிட்டதை நீங்கள் அறியவில்லையா? வெகுகாலத்துக்கு முன்னரே நீங்கள் என்னைக் குமுறவைத்ததுடன், வெகுகாலத்திற்கு முன்னரே என் பொறுமையைச் சோதித்து வருவதையும் நீங்கள் அறியவில்லையா? நீங்கள் ஏற்கெனவே என் மாம்சத்தைச் சிதைத்து அதைக் கந்தலாக்கிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? நான் என் கோபத்தை மட்டுப்படுத்தி இதுவரை பொறுமையாக இருந்தேன், இனிமேலும் உங்களைக் குறித்து நான் பொறுமையாக இருக்க மாட்டேன். நீங்கள் ஆற்றும் தீமைகள் ஏற்கெனவே என் கண்களை எட்டிவிட்டது, மேலும் என்னுடைய கூப்பிடுதல்கள் ஏற்கெனவே என் பிதாவின் காதுகளை எட்டியுள்ளது. நீங்கள் என்னை இவ்வாறு நடத்துவதற்கு அவர் எவ்வாறு அனுமதிக்க முடியும்? நான் உங்களில் செய்யும் எந்த கிரியையாவது உங்கள் பொருட்டானதாக இல்லாமல் இருக்கிறதா? இருப்பினும் யேகோவாவாகிய என் கிரியையை அதிகம் நேசிக்கிறவராக உங்கள் மத்தியில் மாறியிருப்பது யார்? நான் பலவீனமாக இருப்பதாலும் வேதனையை அனுபவித்ததன் காரணமாகவும் என் பிதாவின் சித்தத்துக்கு உண்மை இல்லாதவனாக நான் இருக்க முடியுமா? நீங்கள் என் இருதயத்தைப் புரிந்துகொள்ளவில்லையா? யேகோவா செய்தது போல நான் உங்களிடம் பேசுகிறேன்; உங்களுக்காக நான் அதிகமாக அர்ப்பணித்திருக்கவில்லையா? என் பிதாவின் கிரியைக்காக இந்தத் துன்பங்களை எல்லாம் நான் தாங்கிக்கொள்ள விரும்பினாலும், என் துன்பத்தின் விளைவாக நான் உங்கள் மேல் கொண்டுவரும் தண்டனையில் இருந்து உங்களை எவ்வாறு விடுவிக்க முடியும்? என்னால் நீங்கள் அதிகமாக அனுபவிக்கவில்லையா? இன்று, என் பிதாவால் நான் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளேன்; எனது ஏராளமான வார்த்தைகளைக் காட்டிலும் மிகவும் அதிகமாக நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் ஜீவனுக்காகவும் நீங்கள் அனுபவிக்கும் விஷயங்களுக்காகவும் என் ஜீவன் பரிமாற்றம் செய்யப்பட்டதை நீங்கள் அறியவில்லையா? என் பிதா என் ஜீவனைப் பயன்படுத்தி சாத்தானோடு யுத்தம் செய்து, உங்களுக்கு என் ஜீவனை வழங்கியதும், அதன் காரணமாக நீங்கள் நூறுமடங்கப் பெறுவதோடு, பல சோதனைகளை நீங்கள் தவிர்க்கவும் அனுமதித்ததை நீங்கள் அறியவில்லையா? என் கிரியையின் மூலமாக மட்டுமே நீங்கள் பல சோதனைகளில் இருந்தும் பல கடுமையான தண்டனைகளில் இருந்தும் விதிவிலக்கு பெற்றீர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? என் நிமித்தமாகவே பிதா இதுவரை உங்களை அனுபவித்து மகிழ அனுமதிக்கிறார் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் இருதயங்களில் காய்ப்பு உருவாகிவிட்டது போல உங்களால் இன்று கடினமாகவும் பிடிவாதமாகவும் எவ்வாறு இருக்க முடிகிறது. நான் பூமியில் இருந்து சென்ற பின்னர் தொடர்ந்து வரும் கோபாக்கினையின் நாளில் இருந்து நீங்கள் இன்று செய்யும் தீமை எவ்வாறு தப்பும்? மிகவும் கடினமாகவும் பிடிவாதமாகவும் இருப்பவர்களை யேகோவாவின் கோபத்தில் இருந்து எவ்வாறு நான் தப்புவதற்கு அனுமதிப்பேன்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 338

கடந்த காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்: எப்போது உங்களை நோக்கி என் பார்வை கோபமாகவும், என் குரல் கண்டிப்பாகவும் இருந்தது? அற்ப விஷயங்களைப் பற்றிய பிரச்சினைகளை உங்களிடம் நான் எழுப்பி இருக்கிறேனா? காரணமின்றி எப்போது நான் உங்களைக் கண்டித்துள்ளேன்? முகமுகமாக எப்போது நான் உங்களைக் கண்டித்திருக்கிறேன்? ஒவ்வொரு சோதனைகளில் இருந்தும் உங்களை விலக்கிக் காக்க என் கிரியையின் நிமித்தமாக அல்லவா நான் என் பிதாவைக் கூப்பிட்டேன்? நீங்கள் ஏன் என்னை இவ்வாறு நடத்துகிறீர்கள்? நான் உங்கள் மாம்சத்தை வீழ்த்த எப்போதாவது என் அதிகாரத்தைப் பயன்படுத்தி இருக்கிறேனா? நீங்கள் எனக்கு ஏன் இவ்வாறு திருப்பி அளிக்கிறீர்கள்? என்னைப் பொறுத்த வரையில் சில சமயம் அனலாகவும் சிலசமயம் குளிராகவும் உங்களைக் காட்டிக்கொண்டாலும் நீங்கள் அனலும் இல்லை குளிரும் இல்லாத நிலையில் இருந்து இனிமையாகப் பேசி என்னிடம் இருந்து விஷயங்களை மறைக்கிறீர்கள், மேலும் உங்கள் வாய்நிறைய அநீதியின் எச்சிலே நிறைந்துள்ளது. உங்கள் நாவுகளால் என் ஆவியை ஏமாற்ற முடியும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் நாவுகள் என் கோபாக்கினையில் இருந்து தப்ப முடியும் என்று எண்ணுகிறீர்களா? யேகோவாவான என் கிரியைகளின் மேல் உங்கள் நாவுகள் அவைகள் விரும்புகிற படியெல்லாம் நியாயந்தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? மனிதன் நியாயந்தீர்க்கும் தேவனாக நான் இருக்கிறேனா? இவ்வாறு என்னை தேவதூஷணம் கூற ஒரு சிறு முட்டைப்புழுவை என்னால் அனுமதிக்க முடியுமா? என் நித்திய ஆசீர்வாதங்களின் மத்தியில் இத்தகைய கீழ்ப்படியாமையின் பிள்ளைகளை எவ்வாறு நான் வைக்க முடியும்? உங்கள் வார்த்தைகளும் செயல்பாடுகளும் வெகுகாலத்திற்கு முன்னரே வெளிப்படுத்தப்பட்டு கண்டிக்கப்பட்டவை. நான் வானங்களை விரித்து எல்லாவற்றையும் படைத்தபோது, நான் எந்த சிருஷ்டியையும் அவைகள் விரும்பியபடி பங்கேற்க அனுமதிக்கவில்லை, அதுமட்டுமல்லாமல் எதுவும் அதன் இஷ்டப்படி என் கிரியைக்கும் நிர்வாகத்துக்கும் இடையூறு செய்ய அனுமதிக்கவுமில்லை. ஒரு மனிதனை அல்லது பொருளை நான் சகித்துக்கொள்ளவில்லை; என்னிடம் கொடூரமாகவும் மனிதத்தன்மையற்றும் நடந்தவர்களை நான் எப்படி விட்டுவைப்பேன்? என் வார்த்தைகளுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்? எனக்குக் கீழ்ப்படியாதவர்களை எவ்வாறு நான் தப்பவிட முடியும்? மனிதனின் முடிவு சர்வவல்லவரான என் கையில் இல்லையா? உனது அநீதியையும் கீழ்ப்படியாமையையும் பரிசுத்தமானது என்று நான் எவ்வாறு கருத முடியும்? உன் பாவங்கள் என் பரிசுத்தத்தை எவ்வாறு தீட்டுப்படுத்த முடியும்? அநியாயக்காரனின் அசுத்தத்தால் நான் தீட்டுப்படுவதில்லை, அல்லது அநியாயக்காரனின் காணிக்கைகளில் நான் பிரியப்படுவதும் இல்லை. யேகோவாவான என்னிடம் நீ உண்மையுள்ளவனாக இருந்தால் என் பலிபீடத்தில் இருக்கும் பலிகளை உனக்காக எப்படி உன்னால் எடுத்துக்கொள்ள முடியும்? என் பரிசுத்த நாமத்தை தூஷிக்க உன் விஷம்நிறைந்த நாவைப் பயன்படுத்த முடியுமா? இந்த வகையில் என் வார்த்தைகளுக்கு எதிராக உன்னால் கலகம் செய்ய முடியுமா? என் மகிமையையும் பரிசுத்த நாமத்தையும் ஒரு கருவியாகக் கொண்டு தீயவனான சாத்தானுக்குச் சேவைசெய்ய முடியுமா? பரிசுத்தவான்களின் மகிழ்வுக்காக என் ஜீவன் வழங்கப்பட்டிருக்கிறது. நீ விரும்பும்படி எல்லாம் என் ஜீவனை வைத்து விளையாடவும், அதை உங்கள் நடுவில் சண்டைக்கான கருவியாகப் பயன்படுத்தவும் நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்னைப் பொறுத்தவற்றில் நீங்கள் எவ்வாறு மிகவும் இதயமற்றவர்களாகவும், நன்மையின் வழியில் மிகவும் குறைபாடு கொண்டவர்களாகவும் இருக்கமுடியும்? இந்த ஜீவ வார்த்தைகளில் உங்கள் தீய செயல்களை நான் ஏற்கெனவே எழுதிவிட்டேன் என்பதை நீங்கள் அறியவில்லையா? நான் எகிப்தைத் தண்டிக்கும் கோபாக்கினையின் நாளின் போது நீங்கள் எவ்வாறு தப்பிக்க முடியும்? காலங்காலமாக இந்த விதமாக என்னை நீங்கள் எதிர்த்து மீறுவதை நான் எவ்வாறு அனுமதிக்க முடியும்? அந்த நாள் வரும்போது உங்கள் தண்டனை எகிப்தில் நடந்ததை விட சகிக்கமுடியாததாக இருக்கும் என்று நான் உங்களுக்கு வெளிப்படையாகக் கூறுகிறேன். என் கோபாக்கினை நாளில் இருந்து உங்களால் எவ்வாறு தப்பிக்க முடியும்? நான் மெய்யாகவே கூறுகிறேன்: என் பொறுமை உங்கள் தீய செயல்களுக்காக உருவாக்கப்பட்டு அந்த நாளின் தண்டனைக்காக நிலைத்திருக்கிறது. நான் என் பொறுமையின் முடிவை எட்டிவிட்ட பின்னர் கோபாக்கினையான நியாயத்தீர்ப்பால் துன்பம் அடையப்போவது நீங்கள்தாம் அல்லவா? எல்லா விஷயங்களும் சர்வவல்லவராகிய என் கையில் இருக்கவில்லையா? வானங்களின் கீழ் இவ்வாறு எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்க எவ்வாறு உங்களை நான் அனுமதிக்க முடியும்? அவர் வருவார் ஆனால் ஒருபோதும் வரவில்லை என்று கூறப்பட்ட மேசியாவை நீங்கள் சந்தித்துவிட்ட காரணத்தால் உங்கள் ஜீவன் மிகக் கடினமானதாக இருக்கும். நீங்கள் அவருடைய விரோதிகள் இல்லையா? இயேசு உங்களோடு நட்போடு இருந்தார், ஆனால் நீங்கள்தான் மேசியாவின் எதிரிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுவுடன் நட்பாக இருந்தும் உங்கள் தீய செயல்கள் வெறுக்கத்தக்கவர்களாக இருப்பவர்களின் பாத்திரங்களை நிரப்பிவிட்டது என்பதை நீங்கள் அறியவில்லையா? நீங்கள் யேகோவாவுக்கு நெருக்கமானவர்களாக இருந்தும் உங்கள் தீய வார்த்தைகள் யேகோவாவின் காதுகளை எட்டி அவருடைய உக்கிரத்தைத் தூண்டிவிட்டுள்ளதை நீங்கள் அறியீர்களா? அவர் எவ்வாறு உனக்கு நெருக்கமாக இருக்க முடியும், மேலும் தீய செயல்களால் நிரம்பி இருக்கும் உன்னுடைய அந்தப் பாத்திரங்களை அவர் எவ்வாறு எரிக்காமல் இருக்க முடியும்? அவர் எவ்வாறு உன் எதிரியாக இல்லாமல் இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “கோபாக்கினை நாளில் மாம்சமான ஒருவனும் தப்பிக்க முடியாது” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 339

இப்போது என்னை நயங்காட்டி ஏமாற்றும் உனது மென்மையான மாம்சத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன், மேலும் உனக்கு ஒரு சிறிய எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறேன், இருப்பினும் நான் உனக்கு சிட்சையைக் கொண்டு “சேவையை” செய்ய மாட்டேன். எனது கிரியையில் நீ என்ன பங்கு வகிக்கிறாய் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும், அதன் பின்னரே நான் திருப்தி அடைவேன். இதற்கு அப்பாற்பட்ட விஷயங்களில், நீ என்னை எதிர்த்தால் அல்லது எனது பணத்தைச் செலவிட்டால், அல்லது யேகோவாவாகிய எனக்கான பலிகளைப் புசித்தால், அல்லது புழுக்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் கடித்துக்கொண்டால், அல்லது நாய் போன்ற ஜீவன்களான உங்களுக்குள் மோதல்கள் இருந்தால் அல்லது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டால்—இப்படி எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் நான் கவலைகொள்வதில்லை. நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மட்டுமே நீங்கள் அறிந்திருக்க வேண்டும், அதன்மூலம் நான் திருப்தி அடைவேன். இவை அனைத்தையும் தவிர, நீங்கள் ஒருவருக்கொருவர் எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அல்லது ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் சண்டையிட விரும்பினால், அது ஒன்றும் பெரிய விஷயமல்ல; இதுபோன்ற விஷயங்களில் தலையிட எனக்கு விருப்பமில்லை, மேலும் மனுஷ விஷயங்களில் சிறிதளவிலும் நான் ஈடுபடுவதும் இல்லை. நான் இப்படி இருப்பதற்கு உங்களுக்கிடையேயான மோதல்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று அர்த்தமில்லை; நான் உங்களில் ஒருவன் இல்லை என்பதால் உங்களிடையே நடக்கும் விஷயங்களில் பங்கேற்பதில்லை என்று அர்த்தமாகும். நான் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் இல்லை, நான் உலகத்தைச் சேர்ந்தவனில்லை, எனவே ஜனங்களின் பரபரப்பான வாழ்க்கையையும் அவர்களுக்கு இடையேயான குழப்பமான, முறையற்ற உறவுகளையும் நான் வெறுக்கிறேன். நான் குறிப்பாகக் கூச்சலிடும் கூட்டங்களை வெறுக்கிறேன். இருப்பினும், ஒவ்வொரு ஜீவனின் இருதயங்களிலும் இருக்கும் அசுத்தங்களைப் பற்றி எனக்கு ஆழமான அறிவு உள்ளது, நான் உங்களை சிருஷ்டிப்பதற்கு முன்பு, மனுஷ இருதயத்தில் ஆழமாக இருந்த அநீதியை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன், மேலும் மனுஷ இருதயத்தில் இருக்கும் எல்லா ஏமாற்றுத்தனங்களையும் வஞ்சகத்தையும் நான் அறிந்திருக்கிறேன். ஆகையால், ஜனங்கள் அநீதியான காரியங்களைச் செய்யும்போது எந்தத் தடயங்களும் காணப்படுவதில்லை என்றாலும், உங்கள் இருதயங்களுக்குள் அடங்கியுள்ள அநீதியானது நான் உருவாக்கிய எல்லாவற்றின் செழுமையையும் மிஞ்சும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் பெருந்திரளான ஜனங்கள் என்னும் உச்சத்திற்கு உயர்ந்திருக்கிறீர்கள்; நீங்கள் வெகுஜனங்களின் மூதாதையர்களாக இருக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் தன்னிச்சையானவர்கள், மேலும் நீங்கள் எல்லாப் புழுக்களிடையேயும் வெறிகொண்டு ஓடுகிறீர்கள், எளிதான இடத்தைத் தேடுகிறீர்கள், உங்களை விட சிறியதாக இருக்கும் புழுக்களை விழுங்க முயற்சிக்கிறீர்கள். உங்கள் இருதயங்களில் நீங்கள் தீங்கிழைப்பவராகவும் மற்றும் கெட்டவராகவும் இருக்கிறீர்கள், சமுத்திரத்தின் அடிப்பகுதியில் மூழ்கியிருக்கும் பிசாசுகளைக் கூட மிஞ்சிவிடுகிறீர்கள். நீங்கள் குப்பையின் அடிப்பகுதியில் வசிக்கிறீர்கள், புழுக்களுக்கு அமைதி இல்லாமல் போகும்வரை உச்சி முதல் அடி வரை தொந்தரவு செய்கிறீர்கள், ஒருவருக்கொருவர் சிறிது நேரம் சண்டையிட்டுவிட்டுப் பின்னர் அமைதியடைகிறீர்கள். உங்களுக்கு உங்கள் இடம் எதுவென்று தெரிவதில்லை, ஆனாலும் நீங்கள் குப்பையில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறீர்கள். அத்தகைய போராட்டத்திலிருந்து உங்களால் எதை ஆதாயமாகப் பெற முடியும்? உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையிலேயே என்னிடம் பயபக்தியுடன் இருந்தால், என் முதுகிற்குப் பின்னால் நீங்கள் எப்படி ஒருவருக்கொருவர் சண்டையிட முடியும்? உங்கள் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீங்கள் இன்னும் குப்பையில் துர்நாற்றம் வீசும் சிறிய புழு தான், இல்லையா? உங்களால் இறக்கைகள் முளைத்து வானத்தில் புறாவாகப் பறக்க முடியுமா? துர்நாற்றம் வீசும் சிறிய புழுக்களான நீங்கள், யேகோவாவாகிய எனது பலிபீடத்திலிருந்து காணிக்கைகளைத் திருடுகிறீர்கள்; அவ்வாறு செய்யும்போது, உனது கெட்டுப்போன, தோல்வியுற்ற நற்பெயரை மீட்டு இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாக மாற முடியுமா? நீங்கள் வெட்கமே இல்லாத மோசமானவர்கள்! பலிபீடத்தின் மீது இருக்கும் அந்தக் காணிக்கைகள் என்னை வணங்குபவர்களின் தர்ம சிந்தனைகளின் வெளிப்பாடாக எனக்கு செலுத்தப்பட்டவை. அவை எனது கட்டுப்பாட்டிற்காகவும் எனது பயன்பாட்டிற்காகவும் உள்ளன, எனவே ஜனங்கள் எனக்குக் கொடுத்த சிறிய காட்டுப்புறாக்களை உன்னால் எப்படிக் கொள்ளையடிக்க முடியும்? யூதாஸாக மாறுவதற்கு நீ பயப்படவில்லையா? உனது தேசம் இரத்தக் களமாக மாறக்கூடும் என்று நீ பயப்படவில்லையா? வெட்கமில்லாத அற்பனே! ஜனங்கள் வழங்கும் காட்டுப்புறாக்களானது புழுவான உனது வயிற்றை வளர்ப்பதற்குத்தான் என்று நீ நினைக்கிறாயா? நான் உனக்குக் கொடுத்தது நான் மனநிறைவுடனும் விருப்பத்துடனும் உனக்கு கொடுத்ததாகும்; நான் உனக்குக் கொடுக்காதது எனது வசம் உள்ளது. நீ எனது காணிக்கைகளைத் திருடக்கூடாது. யேகோவாவும், சிருஷ்டிப்பின் கர்த்தருமான நானே கிரியை செய்பவர், ஜனங்கள் எனக்காகப் பலிகளைக் கொடுக்கிறார்கள். நீ செய்யும் எல்லாவற்றுக்கும் இது பிரதியுபகாரம் என்று நீ நினைக்கிறாயா? நீ உண்மையில் வெட்கமில்லாதவன்! நீ யாருக்காக ஓடுகிறாய்? அது உனக்காக அல்லவா? நீ எதற்காக எனது பலிகளைத் திருடுகிறாய்? எனது பணப்பையில் இருந்து பணத்தை ஏன் திருடுகிறாய்? நீ யூதாஸ்காரியோத்தின் குமாரன் இல்லையா? யேகோவாவாகிய எனக்குச் செய்யப்பட்ட பலிகளானது ஆசாரியர்கள் அனுபவிக்க வேண்டியவை. நீ ஓர் ஆசாரியனா? எனக்கான பலிகளை நீ மனநிறைவுடன் புசிக்கத் துணிகிறாய், மேலும் அவற்றை மேசைமீதும் வைக்கிறாய்; நீ எந்த மதிப்பும் இல்லாதவன்! நீ எதற்கும் பயனற்ற மோசமான ஒருவன்! எனது அக்கினி, அதாவது யேகோவாவின் அக்கினி, உன்னை எரித்துப்போடும்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உதிரும் இலைகள் அவற்றின் வேர்களுக்குத் திரும்பும்போது, நீ செய்த அனைத்துத் தீமைகளுக்கும் நீ வருத்தப்படுவாய்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 340

உங்கள் விசுவாசம் மிகவும் அழகானது; நீங்கள் உங்கள் முழு வாழ்நாட்களை என் கிரியைகளுக்காக செலவிட விருப்பப்படுகிறீர்கள் என்றும், அதற்காக உங்கள் வாழ்க்கைகளை அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள் என்றும் சொல்லுகிறீர்கள், ஆனால் உங்கள் மனநிலைகள் பெரிதாக மாறவில்லை. உங்கள் உண்மையான நடத்தை மிகவும் இழிவானதாக இருக்கும்போதிலும் நீங்கள் மிகவும் ஆணவத்துடன் பேசுகிறீர்கள். இது ஏதோ ஜனங்களின் நாவுகளும் உதடுகளும் பரலோகத்தில் இருப்பதாகவும், ஆனால் அவர்களின் பாதங்கள் பூமியை நோக்கி கீழே இருப்பதாகவும், இதன் விளைவாக, அவர்களின் சொற்களும் செயல்களும் அவர்களின் நன்மதிப்பும் இன்னும் கந்தைகளிலும் அழிவுகளிலும் உள்ளதாக இருக்கின்றன. உங்கள் மதிப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன, உங்கள் நடத்தைச் சீரழிந்துள்ளது, நீங்கள் பேசும் விதம் கீழ்த்தரமாக இருக்கிறது, உங்கள் வாழ்வுகள் வெறுக்கத்தக்கது; உங்கள் மனிதத்தன்மை முழுமையும் கூட மிகக் கீழ்த்தரமான தாழ்மையில் மூழ்கியுள்ளது. நீங்கள் மற்றவர்களிடம் குறுகிய எண்ணங்கொண்டு இருக்கிறீர்கள், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் நீங்கள் போராடுகிறீர்கள். நரகத்திலும், அக்கினிக்கடலிலும் இறங்க விரும்பும் அளவிற்கு, உங்கள் சொந்த நன்மதிப்புக்காகவும் அந்தஸ்துக்காகவும் சண்டையிடுகிறீர்கள். நீங்கள் பாவமுள்ளவர்கள் என்பதைத் தீர்மானிக்க உங்களின் தற்போதைய சொற்களும் செயல்களும் எனக்குப் போதுமானவையாகும். நீங்கள் அநீதியுள்ளவர்கள் என்பதைத் தீர்மானிக்க என் கிரியையைப் பற்றிய உங்கள் அணுகுமுறைகள் எனக்கு போதுமானவையாகும், மேலும் நீங்கள் அருவருப்புகள் நிறைந்த அசுத்த ஆத்துமாக்கள் என்பதைச் சுட்டிக்காட்ட உங்கள் எல்லாருடைய மனநிலைகளும் போதுமானவையாகும். உங்கள் வெளிப்பாடுகளும் நீங்கள் வெளிப்படுத்துகிறவைகளும் நீங்கள் அசுத்த ஆவிகளின் இரத்தத்தை நிரம்பக் குடித்த ஜனங்கள் என்று சொல்வதற்குப் போதுமானவையாகும். ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதைப் பற்றிப் பேசுகையில், உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்தவில்லை. என் பரலோகராஜ்யத்தின் வாசல் வழியாக நடந்து செல்ல நீங்கள் இப்போது இருக்கும் விதம் போதுமானது என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களுடைய சொந்த சொற்களும் செயல்களும் முதலில் என்னால் சோதிக்கப்படாமல், என் கிரியை மற்றும் வார்த்தைகளின் பரிசுத்தப் பூமியில் உங்களால் பிரவேசிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரால் என்னை வஞ்சிக்க முடியும்? உங்களுடைய வெறுக்கத்தக்க, தாழ்ந்த நடத்தைகள் மற்றும் உரையாடல்கள் என் பார்வையில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? உங்கள் வாழ்வுகள் அந்த அசுத்த ஆவிகளின் இரத்தத்தைக் குடித்து, அவைகளின் மாம்சத்தை உண்டு இருக்கும்படி நான் தீர்மானித்திருக்கிறேன், ஏனென்றால் நீங்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு முன்பாக அவைகளைப் பின்பற்றுகிறீர்கள். எனக்கு முன்பாக, உங்கள் நடத்தை அதிக மோசமாக இருந்தது, எனவே நான் உங்களை அருவருப்பாகப் பார்க்காமல் இருப்பது எப்படி? உங்கள் வார்த்தைகள் அசுத்த ஆவிகளின் அசுத்தங்களைக் கொண்டுள்ளன. சூனியத்தில் ஈடுபடுவோரைப் போலவும், துரோகிகளாகவும் அநீதியுள்ளவர்களின் இரத்தத்தைக் குடிக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களைப் போலவும் நீங்கள் வஞ்சித்து, மறைத்து, முகஸ்துதி செய்கிறீர்கள். மனிதனின் அனைத்து வெளிப்பாடுகளும் மிக அநீதியானவையாகும், எனவே நீதிமான்கள் இருக்கிற பரிசுத்த தேசத்தில் எல்லா ஜனங்களும் எவ்வாறு வைக்கப்பட முடியும்? உன்னுடைய இழிவான நடத்தையானது அநீதியானவர்களுடன் ஒப்பிடும்போது உன்னைப் பரிசுத்தமானவனாக வேறுபடுத்தக் கூடும் என்று நீ நினைக்கிறாயா? சர்ப்பம் போன்ற உன் நாவானது இறுதியில் அழிவை வெளிப்படுத்தும் மற்றும் அருவருப்புகளைச் செய்யும் உன் மாம்சத்தை அழித்துவிடும், மேலும் அசுத்தமான ஆவிகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும் உன் கைகளும் இறுதியில் உன்னுடைய ஆத்துமாவை நரகத்திற்கு இழுத்துவிடும். அப்படியானால் அசுத்தத்தால் மூடப்பட்டிருக்கும் உன் கைகளைச் சுத்தப்படுத்த நீ ஏன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அநீதியான சொற்களைப் பேசும் உன்னுடைய நாவை வெட்டிப் போடவில்லை? உன் கைகள், நாவு மற்றும் உதடுகளின் பொருட்டு நீ நரக அக்கினியில் துன்பப்படத் தயாராக இருப்பதா காரணம்? நான் ஒவ்வொருவருடைய இருதயத்தையும் என் இரண்டு கண்களாலும் கவனித்துக் கொண்டு வருகிறேன், ஏனென்றால் மனுக்குலத்தைச் சிருஷ்டிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர்களின் இருதயங்களை என் கரங்களுக்குள் அகப்படுத்திக்கொண்டேன். நான் வெகுகாலத்திற்கு முன்பாகவே ஜனங்களின் இருதயங்களூடாகப் பார்த்தேன், எனவே அவர்களின் எண்ணங்கள் எனது பார்வையில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? என் ஆவியால் எரிக்கப்படுவதில் இருந்து அவர்கள் தப்பிப்பது நடக்காத காரியம் போலில்லாமல் எப்படி இருக்கும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “குணத்தில் நீங்கள் அனைவரும் மிகவும் கீழ்த்தரமானவர்கள்!” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 341

உன்னுடைய உதடுகள் புறாக்களை விட கனிவானவை, ஆனால் உன்னுடைய இதயம் பழைய சர்ப்பத்தை விட மிகவும் கபாடானதாகும். உன்னுடைய உதடுகள் லீபனோன் பெண்களைப் போலவே மிக அழகாக இருக்கின்றன, ஆனாலும் உன்னுடைய இதயம் அவர்களுடையதை விட கனிவானது அல்ல, அது நிச்சயமாக கானானியர்களின் அழகுடன் ஒப்பிட முடியாது. உன்னுடைய இதயம் மிகவும் துரோகம் நிறைந்தது! நான் வெறுக்கிற விஷயங்கள் அநியாயக்காரர்களின் உதடுகள் மற்றும் அவர்களின் இருதயங்கள் மட்டுமே, மேலும் நான் ஜனங்களிடம் எதிர்பார்ப்பது நான் பரிசுத்தவான்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடக் கொஞ்சமும் அதிகமானவை அல்ல; அநீதியுள்ளவர்களின் தீயசெயல்களினால் நான் அதிவெறுப்பை உணர்கிறேன், அவர்கள் தங்கள் அசுத்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த அநீதியானவர்களிடமிருந்து விலகி நின்று, நீதிமான்களுடன் வாழ்ந்து பரிசுத்தமாக இருக்கும்படி, அவர்களின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நான் இருப்பதைப் போன்ற அதே சூழ்நிலைகளில் இருக்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அசுத்தத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள்; ஆரம்பத்தில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களின் உண்மையான ஒத்ததன்மையின் மிகச் சிறியத் துணுக்கு கூட உங்களிடம் இல்லை. மேலும், ஒவ்வொரு நாளும் நீங்கள் அந்த அசுத்த ஆவிகளின் ஒத்தத்தன்மையைப் பின்பற்றி, அவைகள் செய்வதைச் செய்து, அவைகள் சொல்வதைச் சொல்வதால், உங்களின் அனைத்து உறுப்புகளும்—உங்கள் நாவுகள் மற்றும் உதடுகள் கூட, நீங்கள் முழுவதுமாக இப்படிப்பட்ட கறைகளால் மூடப்பட்டு, உங்களின் ஓர் உறுப்பு கூட என்னுடைய கிரியைக்காக உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு, அவைகளின் நாற்றம் வீசுகிற நீரில் மூழ்கியிருக்கின்றன. இது மிகுந்த மனவேதனையை உண்டாக்குகிறது. நீங்கள் அத்தகைய குதிரைகள் மற்றும் கால்நடைகளின் உலகில் வாழ்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் உண்மையில் கலக்கமடைவதில்லை; நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், சுதந்திரமாகவும், சுகமாகவும் வாழ்கிறீர்கள். நீங்கள் அந்த நாற்றம் வீசுகிற நீரில் நீந்திக் கொண்டிருக்கிறீர்கள், ஆனாலும் நீங்கள் அத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் விழுந்து விட்டீர்கள் என்பதை உண்மையில் உணரவில்லை. ஒவ்வொருநாளும் நீங்கள் அந்த அசுத்த ஆவிகளுடன் கூட்டாக இணைந்து, “அசுத்தத்துடன்” உறவாடுகிறீர்கள். உன் வாழ்க்கை மிக இழிவாக இருக்கிறது, ஆனாலும், இந்த மனித உலகில் நீ முற்றிலும் இல்லை என்பதையும், உன் கட்டுப்பாட்டில் நீ இல்லை என்பதையும் கூட உண்மையில் நீ அறிந்திருக்கவில்லை. நீண்ட காலத்திற்கு முன்பே அந்த அசுத்த ஆவிகளால் உன்னுடைய வாழ்க்கை மிதிக்கப்பட்டதென்றோ அல்லது அந்த நாற்றம் வீசும் நீரில் உன்னுடைய இயற்பண்பு நீண்ட காலத்திற்கு முன்பே களங்கப்படுத்தபட்டதென்றோ உனக்குத் தெரியாதா? நீ பூமியின் பரதீசில் வாழ்கிறாய் என்றும், நீ மகிழ்ச்சியின் மத்தியில் இருக்கிறாய் என்றும் நினைக்கிறாயா? நீ அசுத்த ஆவிகளுடன் இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாய் என்பதும், அவைகள் உனக்காக ஆயத்தப்படுத்தின எல்லாவற்றோடும் இணைந்து வாழ்ந்தாய் என்பதும் உனக்குத் தெரியாதா? இவ்விதமான உன் வாழ்க்கைக்கு எப்படி ஓர் அர்த்தம் இருக்கும்? உன் வாழ்க்கைக்கு எப்படி ஒரு மதிப்பு இருக்கும்? நீ உன் பெற்றோருக்காக, அசுத்த ஆவிகளின் பெற்றோருக்காக ஓடிக்கொண்டிருக்கிறாய், ஆனாலும் உன்னைச் சிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் உன்னைப் பெற்றெடுத்து, உன்னை வளர்த்த அந்த அசுத்த ஆவிகளின் பெற்றோரே என்பதைப் பற்றி உண்மையில் உனக்கு எதுவும் தெரியவில்லை. மேலும், உன்னுடைய அசுத்தங்கள் அனைத்தும் உண்மையில் அவர்களாலேயே உனக்கு வழங்கப்பட்டன என்பதை நீ அறியல்லை. உனக்குத் தெரிந்தது எல்லாம், அவர்கள் உனக்கு “இன்பத்தைக்” கொடுக்க முடியும் என்பதே, அவர்கள் உன்னைச் சிட்சிப்பதில்லை, உன்னை நியாயந்தீர்ப்பதும் இல்லை, விசேஷமாக உன்னைச் சபிப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் உன்னிடம் கோபத்துடன் வெகுண்டெழாமல், உன்னை அன்போடும் பரிவோடும் நடத்துகிறார்கள். அவர்களின் வார்த்தைகள் உன் இருதயத்தைப் போஷித்து, உன்னைக் கவர்ந்திழுக்கின்றன, அதனால் நீ திசைதிருப்பப்பட்டு, அதை உணராமல், நீ சிக்கிக்கொண்டு அவர்களின் வடிகாலாகவும், ஊழியனாகவும் மாறி, அவர்களுக்கு ஊழியஞ்செய்ய விரும்புகிறாய். உனக்கு எந்த குறையும் இல்லை, ஆனால் நாய்களைப் போல, குதிரைகளைப் போல அவர்களுக்காக ஊழியஞ்செய்யத் தயாராக இருக்கிறாய்; நீ அவர்களால் வஞ்சிக்கப்படுகிறாய். இந்தக் காரணத்தினால் நான் செய்யும் கிரியையில் உனக்கு எவ்விதமான எதிர்வினையும் இல்லை. நீ எப்போதும் என் விரல்களிலிருந்து இரகசியமாக நழுவ விரும்புவதில் ஆச்சரியம் இல்லை, மேலும் நீ என்னிடமிருந்து வஞ்சகமாய்த் தயவைப் பெறுவதற்காக எப்போதும் இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்புவதில் ஆச்சரியம் இல்லை. அது மாறும்போது, ஏற்கனவே வேறொரு திட்டமும், வேறொரு ஏற்பாடும் உன்னிடத்தில் இருந்தது. சர்வவல்லமையுள்ள என்னுடைய கிரியைகளின் சிறிய அளவை நீ காணலாம், ஆனால் என்னுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையைக் குறித்து உனக்கு குறைந்தபட்ச அறிவுகூட இல்லை. என் சிட்சை எப்போது தொடங்கியது என்பதைப் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. உனக்குத் தெரிந்ததெல்லாம் என்னை எப்படி ஏமாற்றுவது என்பதே, ஆனாலும் மனிதனிடம் இருந்து வரும் எந்த மீறுதலையும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று உனக்குத் தெரியவில்லை. நீ ஏற்கனவே எனக்கு ஊழியஞ்செய்யத் தீர்மானங்களை எடுத்துள்ளதால் நான் உன்னைப் போக விடமாட்டேன். நான் எரிச்சலுள்ளதேவன், மனிதகுலத்தின் மீது எரிச்சலுள்ள ஒரு தேவன். நீ ஏற்கனவே உன் வார்த்தைகளைப் பலிபீடத்தின் மீது வைத்திருப்பதால், நீ என் சொந்தக் கண்களுக்கு முன்பாக விலகி ஓடுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன், இரண்டு எஜமான்களுக்கு நீ ஊழியம் செய்வதையும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். உன் வார்த்தைகளை என் பலிபீடத்தின் மீதும், என் கண்களுக்கு முன்பும் வைத்துவிட்ட பிறகு நீ இரண்டாவதாக வேறொரு அன்பைப் பெறலாம் என்று நினைத்தாயா? இவ்வாறு ஜனங்கள் என்னை முட்டாளாக்க நான் எப்படி அனுமதிக்க முடியும்? உன் நாவால் சாதாரணமாக என்னிடம் பொருத்தனைகளையும் பிரமாணங்களையும் செய்யலாம் என்று நீ நினைத்தாயா? மிகவும் உன்னதமானவரான என்னுடைய சிங்காசனமாகிய சிங்காசனத்தின்மேல் நீ எப்படி ஆணையிடுகிறாய்? உன் பிரமாணங்கள் ஏற்கனவே முடிந்து விட்டன என்று நீ நினைத்தாயா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுடைய மாம்சம் அழிந்து போனாலும், உங்களுடைய பொருத்தனைகள் அழிய முடியாது. முடிவில் உங்களுடைய பொருத்தனைகளின் அடிப்படையிலே உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பேன். இருப்பினும், உங்கள் வார்த்தைகளை எனக்கு முன் வைப்பதினால் நீங்கள் என்னைச் சமாளிக்க முடியும் என்றும், உங்கள் இருதயங்கள் அசுத்த ஆவிகளுக்கும், பொல்லாத ஆவிகளுக்கும் ஊழியஞ்செய்யலாம் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். என்னை வஞ்சிக்கும் நாய் போன்ற, பன்றி போன்றவர்களை என் கோபம் எவ்வாறு பொறுத்துக் கொள்ளும்? நான் என்னுடைய நிர்வாக ஆணைகளை நிறைவேற்ற வேண்டும், அசுத்த ஆவிகளின் கைகளிலிருக்கிற, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கும் “பக்தியுள்ளவர்களை” திரும்பவும் பிடுங்க வேண்டும், இதனால் அவர்கள் ஒழுங்குள்ள முறையில் எனக்காக “காத்திருக்கக்கூடும்,” என்னுடைய எழுத்துகளாக என்னுடைய குதிரைகளாக என்னுடைய திட்டத்தின்கீழ் இருப்பார்கள். உன்னுடைய முந்தைய தீர்மானத்தைச் செம்மைப்படுத்திக் கொண்டு, மீண்டும் எனக்கு ஊழியம் செய்ய வைப்பேன். என்னை ஏமாற்றும் எந்த சிருஷ்டிப்பையும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நீ ஒழுக்கமற்ற முறையில் என் முன் கோரிக்கைகளை விடுத்து, பொய் சொல்லி விடலாம் என்று நினைத்தாயா? உன் சொற்களையும் செயல்களையும் நான் கேட்கவோ அல்லது பார்க்கவோ இல்லை என்று நினைத்தாயா? உன் சொற்களும் செயல்களும் என் பார்வையில் எப்படி இல்லாமல் இருக்கக்கூடும்? ஜனங்கள் என்னை அப்படி ஏமாற்ற நான் எப்போதாவது அனுமதிக்க முடியுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “குணத்தில் நீங்கள் அனைவரும் மிகவும் கீழ்த்தரமானவர்கள்!” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 342

நான் பல காலங்களாக உங்கள் மத்தியில் உங்களோடு தொடர்பில் இருக்கிறேன். நான் உங்களிடையே நீண்ட காலமாக வாழ்ந்தேன், உங்களுடன் வாழ்ந்தேன். உங்களின் எத்தனை இழிவான நடத்தை என் கண்களுக்கு முன்பாகக் கடந்து போய்விட்டது? உங்களுடைய அந்த இதயபூர்வமான வார்த்தைகள் தொடர்ந்து என் காதுகளில் எதிரொலிக்கின்றன. எண்ணப்படவும் முடியாதவையான உங்களின் மில்லியன் கணக்கான அபிலாஷைகள் என் பலிபீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் நீங்கள் பயன்படுத்தும் காரியங்களைப் பொறுத்தவரை, நீங்கள் சொற்ப காரியத்தைக் கூட கொடுக்கவில்லை. நீங்கள் ஒரு சிறு துளி உண்மையைக் கூட என் பலிபீடத்தின் மீது வைக்கவில்லை. என் மேல் இருக்கும் உங்கள் விசுவாசத்தின் பலன்கள் எங்கே? நீங்கள் என்னிடமிருந்து அளவற்ற கிருபையைப் பெற்றிருக்கிறீர்கள், பரலோகத்திலிருந்து எண்ணற்ற இரகசியங்களைக் கண்டீர்கள். பரலோகத்தின் அக்கினிப் பிழம்புகளைக் கூட நான் உங்களுக்குக் காண்பித்துள்ளேன், ஆனால் உன்னை எரித்துப் போடுவதற்கு எனக்கு இதயம் இல்லை. ஆயினும்கூட, அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு என்ன திருப்பிக் கொடுத்தீர்கள்? நீங்கள் எனக்கு எவ்வளவு கொடுக்கத் தயாராக இருக்கிறீர்கள்? நான் உங்களுக்குக் கொடுத்த உணவை கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் எதிராகத் திரும்பிக்கொண்டு அதையே எனக்குக் கொடுக்கிறீர்கள், அதைக்காட்டிலும், அது உன்னுடைய சொந்த கடின உழைப்பின் வியர்வையின் பிரதிபலனாக நீ பெற்றுக்கொண்டது என்றும் உன்னிடத்தில் இருக்கிற எல்லாவற்றையும் எனக்குக் காணிக்கை கொடுக்கிறாய் என்றும் சொல்லுமளவிற்குப் போகிறாய். நீ எனக்குக் கொடுத்த “பங்களிப்புகள்” அனைத்துமே என் பலிபீடத்திலிருந்து திருடப்பட்டவை என்பதை நீ எப்படி அறியாமல் இருக்கிறாய்? மேலும் இப்போது அவற்றை எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறாய், நீ என்னை வஞ்சிக்கிறாயல்லவா? இன்று நான் அனுபவிப்பது எல்லாமே என் பலிபீடத்தின் மீதுள்ள காணிக்கைகள் என்றும் அவை உன்னுடைய கடின உழைப்பிலிருந்து நீ சம்பாதித்து, அதன் பின் எனக்குக் கொடுத்தது அல்ல என்றும் நீ எப்படி அறியாமல் இருக்கிறாய்? உண்மையில் இப்படி என்னை வஞ்சிப்பதற்கு உங்களுக்கு என்ன தைரியம், எனவே நான் உங்களை எப்படி மன்னிக்க முடியும்? இனிமேல் நான் இதைச் சகித்துக் கொள்வேன் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். நான் உங்களிடம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தினேன், உங்கள் தேவைகளை சந்தித்தேன், உங்கள் கண்களைத் திறந்தேன், ஆனாலும் நீங்கள் உங்கள் மனசாட்சிகளைப் புறக்கணித்து விட்டு இப்படி என்னை வஞ்சிக்கிறீர்கள். நீங்கள் பாடுபட்டாலும், நான் பரலோகத்தில் இருந்து கொண்டு வந்த அனைத்தையும் நீங்கள் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும்படி நான் தன்னலமின்றி எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்கினேன். அப்படி இருந்தும் உங்களிடம் எந்தவிதமான அர்ப்பணிப்பும் இல்லை, நீங்கள் ஒரு மிகச்சிறிய பங்களிப்பைச் செய்திருந்தாலும் கூட, அதன்பின் என்னுடன் “கணக்குப்பார்த்து தீர்த்துக்கொள்ள” முயற்சிக்கிறீர்கள். உன்னுடைய பங்களிப்பு ஒன்றும் இல்லை அல்லவா? நீ எனக்கு கொடுத்தது வெறும் மண் துகளாகும், ஆனாலும் நீ என்னிடம் கேட்டது ஒரு டன் தங்கம் ஆகும். நீ முற்றிலும் நியாயமற்றவனாக இருக்கிறாய் அல்லவா? நான் உங்களிடையே கிரியை செய்கிறேன். எனக்குக் கொடுக்கப்பட வேண்டிய பத்து சதவிகிதத்தில் எந்தச் சுவடும் முற்றிலும் இல்லை, எந்தவொரு கூடுதல் பலிகளும் இல்லை என்பது சொல்ல வேண்டுவதில்லை. மேலும் பக்தியுள்ளவர்களால் பங்களிக்கப்பட்ட அந்த பத்து சதவிகிதமும் துன்மார்க்கர்களால் கைப்பற்றப்படுகிறது. நீங்கள் அனைவரும் என்னிடமிருந்து சிதறிப் போகவில்லையா? நீங்கள் அனைவரும் என்னை எதிர்த்து நிற்கவில்லையா? நீங்கள் அனைவரும் என் பலிபீடத்தை அழித்துக் கொண்டிருக்கவில்லையா? அத்தகைய ஜனங்கள் என் பார்வையில் எவ்வாறு பொக்கிஷமாக பார்க்கப்படுவார்கள்? அவர்கள் நான் வெறுக்கிற பன்றிகளும் நாய்களும் அல்லவா? நான் எப்படி உங்கள் தீமைசெய்தலை ஒரு பொக்கிஷமாக குறிப்பிட முடியும்? என் கிரியை உண்மையில் யாருக்காக செய்யப்படுகிறது? என் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக உங்கள் அனைவரையும் தாக்குவது அதனுடைய நோக்கமாக இருக்க முடியுமா? என்னிடத்திலிருந்து வரும் ஒரு வார்த்தையின் மேல் உங்கள் வாழ்வுகள் சார்ந்து இருக்கிறதல்லவா? உங்களுக்கு அறிவுறுத்துவதற்கு நான் ஏன் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துகிறேன், என்னால் முடியும் என்றவுடன் உங்களைத் தாக்கி கீழே தள்ளும்படி என் வார்த்தைகளை நிகழ்வுகளாக நான் ஏன் மாற்றவில்லை? மனிதகுலத்தைத் தாக்கி கீழே தள்ளுவதா என் வார்த்தைகளின் நோக்கம் மற்றும் கிரியை? குற்றமற்றவர்களைக் கண்மூடித்தனமாக கொல்லுகிற தேவனா நான்? இப்போதே மனித வாழ்க்கையின் சரியான பாதையைத் தேடுவதற்கு உங்களில் எத்தனை பேர் உங்கள் முழு மனதுடன் என் முன் வருகிறீர்கள்? உங்கள் சரீரங்கள் மட்டுமே எனக்கு முன்னால் உள்ளன; உங்கள் இருதயங்கள் இன்னும் வெகு தூரத்தில், என்னைவிட வெகு தொலைவில் உள்ளன. என் கிரியை உண்மையில் என்னவென்று உங்களுக்குத் தெரியாததால், உங்களில் பலர் என்னிடமிருந்து விலகி, என்னை விட்டு தூரஞ்செல்ல விரும்பி, அதற்குப் பதிலாக, சிட்சையோ தீர்ப்போ இல்லாத ஒரு பரதீசில் வாழலாம் என்று நம்புகிறீர்கள். இதைத் தான் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் விரும்புகிறார்கள் அல்லவா? நான் நிச்சயமாக உன்னைக் கட்டாயப்படுத்த முயற்சிக்கவில்லை. நீ எந்த பாதையில் செல்ல வேண்டுமென்பது உன்னுடைய சொந்த விருப்பமாகும். இன்றைய பாதையானது தீர்ப்பு மற்றும் சாபங்களுடன் இணைந்திருக்கும் ஒன்றாகும், ஆனால் நான் உங்கள்மேல் வருவித்த, நியாயத்தீர்ப்புகளானாலும் சிட்சைகளானாலும், அவை நான் உங்களுக்காக கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த பரிசுகளும், உங்கள் அனைவருக்கும் அவசரமாகத் தேவைப்படும் காரியங்களுமாகும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “குணத்தில் நீங்கள் அனைவரும் மிகவும் கீழ்த்தரமானவர்கள்!” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 343

நான் பூமியில் ஒரு மிகப்பெரிய அளவிலான கிரியையைச் செய்திருக்கிறேன், நான் பல வருடங்களாக மனுக்குலத்தின் நடுவே நடந்திருக்கிறேன், ஆனாலும் ஜனங்கள் என் சாயல் மற்றும் என் மனநிலையைப் பற்றி அரிதாகவே அறிந்திருக்கிறார்கள், மேலும் நான் செய்யும் கிரியையை சிலராலேயே முழுமையாக விளக்க முடியும். ஜனங்கள் பல விஷயங்கள் இல்லாமலிருக்கின்றனர், நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிய புரிதல் எப்போதும் இருப்பதில்லை, எப்போதும் அவர்களின் இருதயங்கள் ஏதோ நான் அவர்களை வேறு சூழ்நிலையில் வைத்துவிடுவேன் என்றும் அதன்பின் அவர்களைக் கவனித்துக் கொள்ளவே மாட்டேன் என்பதைப் போல எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கின்றன. இப்படி, என்னைக் குறித்த ஜனங்களின் அணுகுமுறைகள் எப்பொழுதும் மிகுந்த எச்சரிக்கையான அளவுடன் அக்கறையின்றியே இருக்கின்றன. ஏனென்றால், நான் செய்யும் கிரியையைப் புரிந்து கொள்ளாமல் ஜனங்கள் நிகழ்காலத்திற்கு வந்துள்ளனர், குறிப்பாக, நான் அவர்களிடம் பேசுகிற வார்த்தைகளால் அவர்கள் குழம்பியுள்ளனர். அவர்கள் என் வார்த்தைகளை தங்கள் கைகளில் பிடித்திருக்கிறார்கள், அவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள தங்களையே அர்ப்பணிக்க வேண்டுமா அல்லது உறுதியின்மையைத் தேர்ந்தெடுத்து அவற்றை மறந்து விடலாமா என்று அறியாமல் இருக்கின்றனர். அவற்றை அவர்கள் கடைபிடிக்க வேண்டுமா, அல்லது காத்திருந்துப் பார்க்கலாமா, அவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டுத் தைரியமாகப் பின்பற்ற வேண்டுமா அல்லது முன்பைப் போலவே உலகத்திடம் நட்பைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஜனங்களின் உள் உலகங்கள் மிகவும் சிக்கலானவை, மேலும் அவை மிகவும் தந்திரமானவையாகும். என் வார்த்தைகளை ஜனங்கள் தெளிவாகவோ அல்லது முழுமையாகவோ பார்க்க முடியாததால், அவற்றைக் கடைபிடிப்பதில் பலரும் சிரமப்படுகின்றனர், அவர்களுடைய இருதயங்களை என் முன் வைப்பதில் சிரமங்கொள்கின்றனர். உங்கள் சிரமங்களை நான் ஆழமாகப் புரிந்து கொள்கிறேன். மாம்சத்தில் வாழும்போது பல பெலவீனங்கள் தவிர்க்க முடியாதவையாகும், மேலும் பல நிஜக் காரணங்கள் உங்களுக்குச் சிரமங்களை உருவாக்குகின்றன. நீங்கள் உங்கள் குடும்பத்தாரைப் போஷிக்கிறீர்கள், உங்கள் நாட்களைக் கடினமாக உழைப்பதில் செலவழிக்கிறீர்கள், மாதங்களும் வருடங்களும் கஷ்டத்தில் கடந்து செல்கின்றன. மாம்சத்தில் வாழ்வதில் பல சிரமங்கள் உள்ளன, நான் இதை மறுக்கவில்லை, நிச்சயமாக உங்களிடத்திலான எனது தேவைகள் உங்கள் சிரமங்களுக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன. நான் செய்யும் கிரியையின் தேவைகள் அனைத்தும் உங்கள் உண்மையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஒருவேளை கடந்த காலங்களில், தங்கள் கிரியைகளில் ஜனங்கள் உங்களிடம் முன்வைத்த தேவைகள் தகாத செயல்களின் அங்கங்களுடன் கலந்திருக்கலாம், ஆனால் நான் சொல்வதிலும் செய்வதிலும் உங்களிடம் எனக்கு அதிகப்படியான தேவைகள் இருந்ததில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அனைத்துத் தேவைகளும் மக்களின் சுபாவம், மாம்சம் மற்றும் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். மக்களிடம் இருக்கும் சில நியாயமான சிந்தனை முறைகளை நான் எதிர்க்கவில்லை, மனுக்குலத்தின் இயல்பான சுபாவத்தை நான் எதிர்க்கவில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும், மேலும் என்னால் அதை உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல முடியும். ஏனென்றால் நான் நிர்ணயித்த தரநிலைகள் உண்மையிலேயே என்ன என்பதை ஜனங்கள் புரிந்து கொள்ளாத காரணத்தினால், அல்லது என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் தான், ஜனங்கள் இதுவரை என் வார்த்தைகளை சந்தேகிக்கிறார்கள், மேலும் பாதிக்கும் குறைவான மக்களே என் வார்த்தைகளை விசுவாசிக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் அவிசுவாசிகள், மேலும் அதை விடப் பலரும் நான் “கதைகளைச் சொல்வதைக்” கேட்க விரும்புவோராக உள்ளனர். மேலும் இந்தக் காட்சியை ரசிக்கும் பலரும் உள்ளனர். நான் உங்களை எச்சரிக்கிறேன்: என்னை விசுவாசிப்பவர்களுக்கு என்னுடைய வார்த்தைகளில் பல ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன, மேலும் ராஜ்யத்தின் அழகிய காட்சியை ரசித்துக்கொண்டு ஆனால் அதன் வாயிலுக்கு வெளியே பூட்டப்பட்டவர்கள் ஏற்கனவே என்னால் புறம்பாக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் என்னால் வெறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் இருக்கிற வெறும் களைகள் அல்லவா? நான் போவதைக் கவனித்துக்கொண்டு அதன்பின் நான் திரும்பி வருவதை உங்களால் மகிழ்ச்சியுடன் எப்படி வரவேற்க முடியும்? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யேகோவாவின் கோபமான வார்த்தைகளை நினிவே ஜனங்கள் கேட்டபின், அவர்கள் உடனடியாக இரட்டுடுத்தி சாம்பலிலிருந்து மனந்திரும்பினர். ஏனென்றால் அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்ததால் தான் அவர்கள் பயத்தினாலும் திகிலாலும் நிறைந்து, அப்படி இரட்டிலும் சாம்பலிலும் இருந்து மனந்திரும்பினார்கள். இன்றைய ஜனங்களைப் பொறுத்தவரை, நீங்கள் என் வார்த்தைகளை விசுவாசித்தாலும் அதற்கும் மேலாக, இன்றைக்கு யேகோவா மீண்டும் உங்கள் மத்தியில் வந்துள்ளார் என்று விசுவாசிக்கிறீர்கள், நீங்கள் யூதேயாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகப் பிறந்த இயேசு இப்போது உங்கள் மத்தியில் இறங்கியுள்ளதை வெறுமனே உற்று நோக்குவது போல உங்கள் அணுகுமுறை அவபக்தியாய் இருக்கிறது. உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் வஞ்சகத்தை நான் ஆழமாகப் புரிந்துகொள்கிறேன்; உங்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வத்தினால் என்னைப் பின்தொடர்கிறீர்கள், வெறுமையின் காரணமாக என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். சமாதானமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான உங்கள் விருப்பமான உங்களின் மூன்றாவது ஆசை சிதறடிக்கப்பட்டபின், உங்கள் ஆர்வமும் சிதைந்துவிடுகிறது. உங்கள் ஒவ்வொருவரின் இருதயங்களுக்குள்ளும் இருக்கும் வஞ்சகத்தன்மை உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், நீங்கள் என்னைப்பற்றி வெறுமனே ஆர்வமாக உள்ளீர்கள், ஆனால் எனக்குப் பயப்படுகிறதில்லை; நீங்கள் உங்கள் நாவுகளை கட்டுப்படுத்துவதில்லை, அதைவிட உங்கள் நடத்தையில் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதில்லை. அப்படியானால் உண்மையில், உங்களுக்கு எப்படிப்பட்ட விசுவாசம் உள்ளது? அது உண்மையானதா? உங்கள் கவலைகளைப் போக்கவும் உங்கள் சலிப்புத் தன்மையை நீக்கவும், உங்கள் வாழ்க்கையிலுள்ள மீதமிருக்கும் வெற்றிடங்களை நிரப்பவுமே என் வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்களில் யார் என் வார்த்தைகளைக் கடைபிடித்தீர்கள்? யாருக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறது? தேவன் ஜனங்களுடைய இருதயங்களின் ஆழத்தினுள் பார்க்கும் தேவன் என்று தொடர்ந்து கூக்குரலிடுகிறீர்கள், ஆனால் உங்கள் இருதயத்தில் நீங்கள் கூக்குரலிடும் தேவன் என்னுடன் எப்படி ஒத்திருக்கிறார்? நீங்கள் இப்படி கூக்குரலிடுகிறீர்கள், பின் ஏன் நீங்கள் அப்படி நடந்து கொள்கிறீர்கள்? இதுதான் நீங்கள் எனக்கு திருப்பிச் செலுத்த விரும்பும் அன்பாக இருப்பதினாலேயா? உங்கள் உதடுகளில் ஒரு அளவு அர்ப்பணிப்பு உள்ளது, ஆனால் உங்கள் பலிகள் எங்கே மற்றும் உங்கள் நல்ல செயல்கள் எங்கே? உங்கள் வார்த்தைகள் மட்டும் என் செவிகளுக்கு எட்டவில்லை என்றால், எப்படி நான் உங்களை இந்த அளவிற்கு வெறுக்க முடியும்? நீங்கள் என்னை உண்மையாக விசுவாசித்திருந்தால், நீங்கள் எப்படி இப்படிப்பட்ட துன்ப நிலைக்குள் விழுந்திருக்க முடியும்? ஏதோ நீங்கள் பாதாளத்தில் விசாரணையில் நிற்பதுபோல உங்கள் முகங்களில் மனச்சோர்வான தோற்றங்கள் உள்ளன. உங்களிடம் ஒரு துளி உற்சாகம் கூட இல்லை, உங்கள் உள்குரலைப் பற்றி நீங்கள் பெலவீனமாகப் பேசுகிறீர்கள்; நீங்கள் இன்னும் அதிகமாகக் குறைகளாலும் சாபங்களாலும் முழுவதுமாய் நிறைந்திருக்கிறீர்கள். நீண்டகாலத்திற்கு முன்பாகவே நான் செய்வதில் உள்ள விசுவாசத்தை நீங்கள் இழந்து விட்டீர்கள் மேலும் உங்களின் உண்மையான விசுவாசம் கூட மறைந்துவிட்டது, ஆகையால் உங்களால் இறுதிவரை எப்படிச் சாத்தியமாகப் பின்பற்ற முடியும்? இது இப்படி இருப்பதால், உங்களால் எப்படி இரட்சிக்கப்பட முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கான வார்த்தைகள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 344

என் கிரியை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், இன்னும் என் வார்த்தைகள் எப்போதும் உங்களுக்குள் காணாமல்போய், உங்களுக்குள்ளேயே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. என்னால் பரிபூரணமாக்கப்படும் ஆட்களைக் கண்டுபிடிப்பது கடினம், இன்று நான் உங்கள் மீதான நம்பிக்கையைக் கிட்டத்தட்ட இழந்து விட்டேன். நான் பல வருடங்களாக உங்கள் மத்தியில் தேடினேன், ஆனால் என் நம்பிக்கைக்குரிய ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினமானது. உங்களில் தொடர்ந்து கிரியை செய்ய எனக்கு நம்பிக்கையில்லாததைப் போலவும், உங்களைத் தொடர்ந்து நேசிக்க எந்த அன்பும் இல்லாததைப் போலவும் உணர்கிறேன். ஏனென்றால் பல காலத்துக்கு முன்பாகவே மிகுந்த முக்கியத்துவமற்ற, பரிதாபமான உங்கள் “சாதனைகளால்” நான் வெறுப்படைந்திருக்கிறேன்; நான் உங்களிடையே ஒருபோதும் பேசியதில்லை போலும் உங்களில் ஒருபோதும் கிரியை செய்யாததைப் போலும் தோன்றுகிறது. உங்கள் சாதனைகள் மிகவும் குமட்டலாக உள்ளன. நீங்கள் எப்போதும் உங்கள் மீது அழிவையும் அவமானத்தையும் கொண்டு வருகிறீர்கள், மேலும் உங்களுக்கு கிட்டத்தட்ட எந்த மதிப்புமே இல்லை. உங்களில் மனிதச் சாயலை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை, ஒரு மனிதனுக்குரியச் சுவடுகளைக் கூட நுகர முடியவில்லை. உங்களின் புதிதான நறுமணம் எங்கே? பல ஆண்டுகளாக நீங்கள் செலுத்திய விலைக்கிரயம் எங்கே, முடிவுகள் எங்கே? நீங்கள் இதுவரையிலும் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லையா? எனது கிரியைக்கு இப்போது ஒரு புதிய துவக்கம் உண்டு, ஒரு புதிய ஆரம்பம் உண்டு. நான் பெரிய திட்டங்களை செய்து முடிக்கப் போகிறேன், நான் இன்னும் பெரிய கிரியைகளை நிறைவேற்ற விரும்புகிறேன், ஆனாலும் நீங்கள் முன்பைப் போலவே சேற்றில் உழன்று கொண்டிருக்கிறீர்கள், கடந்த காலத்தின் அருவருப்பான தண்ணீரில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், உங்களின் உண்மையான இக்கட்டான நிலையிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள நடைமுறையில் தவறி விட்டீர்கள். ஆகையால், நீங்கள் என் வார்த்தைகளிலிருந்து இன்னும் எதையும் பெறவில்லை. இன்னும் நீங்கள் உங்கள் உண்மையான இடமான சேற்றிலிருந்தும் அருவருப்பான தண்ணீரிலிருந்தும் உங்களை நீங்கள் விடுவித்துக் கொள்ளவில்லை, உங்களுக்கு என் வார்த்தைகள் மட்டுமே தெரியும், ஆனால் உண்மையில் என்னுடைய வார்த்தைகளுடைய விடுதலையின் எல்லைக்குள் நீங்கள் நுழையவில்லை, அதனால் என் வார்த்தைகள் உங்களுக்குத் திறக்கப்படவேயில்லை. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முத்திரையிடப்பட்ட தீர்க்கதரிசனப் புத்தகம் போன்றே இருக்கின்றன. நான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தோன்றுகிறேன், ஆனால் நீங்கள் எப்பொழுதும் அதைப்பற்றி அறியாதிருக்கிறீர்கள். நீங்கள் என்னை அடையாளம் கூட கண்டுகொள்வதில்லை. நான் சொல்லும் வார்த்தைகளில் கிட்டத்தட்ட பாதி அளவு உங்களை நியாயந்தீர்ப்பதில் உள்ளன, மேலும் உங்களுக்குள் ஆழ்ந்த பயத்தை ஏற்படுத்த வேண்டிய விளைவில் அவை பாதி அளவை மட்டுமே அடைகின்றன. மீதமுள்ள பாதி பாகமானது வாழ்க்கையைக் குறித்தும், உங்களையே நீங்கள் நடத்த வேண்டிய விதத்தைக் குறித்தும் உங்களுக்குக் கற்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், உங்களைப் பொறுத்தவரையில் இந்த வார்த்தைகள் இருப்பில் கூட இல்லை, அல்லது நீங்கள் குழந்தைகளின் வார்த்தைகளையும், ஒரு மறைமுகமான புன்னகையை மட்டும் நீங்கள் கொடுத்து, அவற்றைக் குறித்து எந்தச் செயலையும் செய்யாத வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது போலும் தோன்றும். நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை; எப்போதுமே நீங்கள் முக்கியமாக ஆர்வத்தின் பெயராலேயே என் கிரியைகளைக் கவனித்திருக்கிறீர்கள், இதன் விளைவாக இப்போது நீங்கள் இருளில் விழுந்து ஒளியைக் காண முடியாமல் போயிற்று, அதனால் நீங்கள் இருட்டில் பரிதாபமாக அழுகிறீர்கள். உங்கள் கீழ்ப்படிதல், உங்கள் நிபந்தனையற்ற கீழ்ப்படிதலையே நான் விரும்புகிறேன், இன்னும் அதிகமாக சொல்லவேண்டுமென்றால், நான் சொல்கிற எல்லாவற்றைக் குறித்தும் நீங்கள் முற்றிலும் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அலட்சியமான அணுகுமுறையைப் பின்பற்றக்கூடாது குறிப்பாக நான் சொல்லும் விஷயங்களை நீங்கள் வித்தியாசமாகக் கையாளக் கூடாது, எப்பொழுதும் உங்கள் பழக்கவழக்கம் போல என் வார்த்தைகள் மற்றும் எனது கிரியைகளைக் குறித்து அலட்சியமாகவும் இருக்கக்கூடாது. என் கிரியை உங்கள் நடுவில் செய்து முடிக்கப்பட்டது, மேலும் நான் என் வார்த்தைகளில் பலவற்றை உங்களுக்கு வழங்கியுள்ளேன், ஆனால் நீங்கள் என்னை இவ்வாறு நடத்தினால், நீங்கள் பெற்றுக்கொள்ளாத அல்லது கடைப்பிடிக்காத புறஜாதியார் குடும்பங்களுக்கு மட்டும் தான் என்னால் வெளிப்படுத்த முடியும். சிருஷ்டிக்கப்பட்ட உயிரினங்களில் என் கரங்களில் என்னால் கட்டுப்படுத்தப்படாமல் யார் இருக்கிறார்கள்? உங்களிலுள்ள பெரும்பாலானோர் “வயது முதிர்ந்து” இருக்கிறீர்கள், நான் கொண்டிருக்கும் இந்த வகையான கிரியையை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு ஆற்றல் இல்லை. நீங்கள் ஒரு ஹன்ஹாவ் பறவையைப் போன்றவர்கள்,[அ] வெறுமென முயற்சி செய்கிறீர்கள், நீங்கள் ஒருபோதும் என் வார்த்தைகளை முக்கியமானதாகக் கருதவில்லை. இளைஞர்களோ மிகவும் வீணானவர்களும் மற்றும் மனம்போன போக்கில் போகிறவர்களுமாக இருக்கின்றனர் மற்றும் எனது கிரியைக்குச் சரியான கவனத்தைச் செலுத்துவதில்லை. என் பெருவிருந்தின் சுவையானவற்றை உண்பதில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை; அவர்கள் தன் கூண்டிலிருந்து துணிந்து வெகு தூரமாய்த் தொலைதூர இடத்திற்குப் பறந்துபோன ஒரு சிறிய பறவையைப் போன்றவர்கள். இவ்வகையான இளைஞர்கள் மற்றும் முதியவர்களால் எனக்கு எப்படிப் பயனுள்ளவர்களாக இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கான வார்த்தைகள்” என்பதிலிருந்து

அடிக்குறிப்பு:

அ. ஒரு ஹன்ஹாவ் பறவையின் கதை ஈசாப்பின் எறும்பும் வெட்டுக்கிளியும் என்ற நீதிக்கதையை மிகவும் ஒத்திருக்கிறது. வானிலை வெப்பமாக இருக்கும்போது, அதன் அண்டை வீட்டுப் பறவையான மேக்பையின் தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கூடு கட்டுவதற்குப் பதிலாக ஹன்ஹாவ் பறவை தூங்க விரும்புகிறது. குளிர்காலம் வந்ததும், பறவை குளிரில் உறைந்து இறக்கிறது.


தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 345

இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் இளஞ்சிங்கங்களைப் போன்றவர்கள் என்றாலும், உங்கள் இருதயங்களில் உண்மையானப் பாதையை அரிதாகவேக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இளமை என் கிரியையைக்கான உரிமையை அதிகமாக உங்களுக்குத் தருவதில்லை; மாறாக, நீங்கள் எப்போதும் உங்களைக் குறித்ததான என் வெறுப்பைத் தூண்டுகிறீர்கள். நீங்கள் இளமையாக இருந்தாலும், உங்களுக்கு உயிர்ச்சக்தி அல்லது இலட்சியம் இல்லை, மேலும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்பொழுதும் அர்ப்பணிப்பற்று இருக்கிறீர்கள்; நீங்கள் அலட்சியமாகவும் மிகுந்த கவலையுற்றிருப்பது போன்றும் இருக்கிறது. இளைஞர்களிடம் காணப்படவேண்டிய உயிர்ச்சக்தி, இலட்சியங்கள் மற்றும் நிலைப்பாடு உங்களில் முற்றிலும் காணப்பட முடியாது என்று கூறலாம். இவ்வகையாயிருக்கும் இளைஞனர்களான நீங்கள், நிலைப்பாடில்லாமல் இருக்கிறீர்கள் மேலும் சரியானதற்கும் தவறானதற்கும், நல்லவைக்கும் தீமைக்கும், அழகிற்கும் அசிங்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியும் திறன் உங்களுக்கு இல்லை. புதியதாய் இருக்கிற உங்களுடைய எந்தக் காரியங்களையும் கண்டுபிடிக்க இயலவில்லை. நீங்கள் ஏறக்குறைய பழைய பாணியிலானவர்கள், இவ்வகையான இளைஞர்களாகிய நீங்கள் கூட்டத்தைப் பின்தொடரவும், பகுத்தறிவின்றி இருக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் ஒருபோதும் தவறிலிருந்து சரியானதைத் தெளிவாக வேறுபடுத்த முடியாது, உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது, சிறந்ததற்காகக் கடுமுயற்சி செய்ய முடியாது, மேலும் எது சரி எது தவறு, எது உண்மை எது பாசாங்குத்தனம் என்று கூட உங்களால் சொல்ல முடியாது. வயதானவர்களை விட உங்களிடத்தில் மதத்தின் கனமான மற்றும் மிகக் கடுமையான துர்நாற்றம் உள்ளது. இன்னும் அதிகமாக நீங்கள் திமிர் பிடித்தவர்களாகவும் நியயமற்றவர்களாகவும் இருக்கிறீர்கள், போட்டியிடுகிறவர்களாக இருக்கிறீர்கள், சண்டையின் மீதான உங்கள் விருப்பம் மிகவும் வலுவானது, இவ்வகையான இளைஞர்களால் எப்படி சத்தியத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரு நிலைப்பாட்டைக் கொள்ள முடியாத ஒருவரால் எப்படி சாட்சியாக இருக்க முடியும்? சரி, தவறு என்று வேறுபடுத்தும் திறன் இல்லாத ஒருவரை எப்படி இளைஞன் என்று அழைக்க முடியும்? ஒரு இளைஞனுடைய உயிர்ச்சக்தியும், வலிமையும், புத்துணர்ச்சியும், அமைதியும், உறுதியும் இல்லாத ஒருவரை என்னைப் பின்பற்றுபவன் என்று எப்படி அழைக்க முடியும்? சத்தியம் இல்லாத, நீதியின் உணர்வில்லாத, விளையாடவும் சண்டைப் போடவுமே விரும்பும் ஒருவர் எப்படி எனக்குச் சாட்சியாக இருக்கத் தகுதியானவராக இருக்க முடியும்? மற்றவர்கள் மீது வஞ்சகமும் பாரபட்சமும் நிறைந்த கண்கள் இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள் அல்ல, மேலும் இளைஞர்கள் அழிக்கக்கூடிய, அருவருப்பானச் செயல்களைச் செய்யக்கூடாது. அவர்கள் குறிக்கோள்கள், அபிலாஷைகள் மற்றும் தங்களை மேம்படுத்துவதற்கான ஆர்வமிக்க விருப்பம் இல்லாமல் இருக்கக்கூடாது; அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பற்றி அதைரியப்படக்கூடாது, மேலும் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையையும் அல்லது எதிர்காலத்தில் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது; எனக்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவிட வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை உணர, அவர்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற சத்தியத்தின் பாதையில் தொடர விடாமுயற்சியைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சத்தியம் இல்லாமல் இருக்கக்கூடாது, அவர்கள் பாசாங்குத்தனம் மற்றும் அநீதியை மறைத்து வைத்திருக்கக் கூடாது, அவர்கள் சரியான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அவர்கள் அப்படியே வீணாய்ச் சுற்றிக்கொண்டிராமல், துணிந்து தியாகங்களைச் செய்யவும், நீதிக்காக மற்றும் சத்தியத்திற்காகப் போராடவும் அவர்களுக்கு துணிச்சல் இருக்க வேண்டும். இளைஞர்கள் இருளின் வல்லமைகளினால் உண்டாகும் அடக்குமுறைக்கு அடிபணிந்து விடாமல் தாங்கள் ஜீவிப்பதன் முக்கியத்துவத்தை மறுரூபப்படுத்தும் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும். இளைஞர்கள் துன்பங்களுக்குத் தங்களை விட்டுக்கொடுக்காமல், வெளிப்படையாகவும் கபடமற்றும், தங்கள் சகோதர சகோதரிகளை மன்னிக்கும் மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். நிச்சயமாக, இவைகளே அனைவரிடத்திலுமான என் தேவைகளும், அனைவருக்குமான என் அறிவுரையும் ஆகும். ஆனால் அதைவிட, இவை அனைத்து இளைஞர்களுக்கான என் ஆறுதலான வார்த்தைகள் ஆகும். நீங்கள் என் வார்த்தைகளின்படி நடக்க வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் பிரச்சினைகளில் பகுத்தறிவை உபயோகப்படுத்தவும், நீதியையும் சத்தியத்தையும் தேடவும் தீர்மானம் இல்லாமல் இருக்கக்கூடாது. நீங்கள் அழகான மற்றும் நல்லதான எல்லாவற்றையும் பின்தொடர வேண்டும், மேலும் அனைத்து நேர்மறையான விஷயங்களின் யதார்த்தத்தையும் நீங்கள் அடைய வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையைக் குறித்து பொறுப்பாக இருக்க வேண்டும், அதை நீங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜனங்கள் பூமிக்கு வருகிறார்கள், என்னைச் சந்திப்பது மிகவும் அரிதாக இருக்கிறது, மேலும் சத்தியத்தைத் தேடுவதற்கும் பெறுவதற்குமான வாய்ப்பு கிடைப்பதும் கூட அரிதாகவே இருக்கிறது. இந்த அழகான நேரத்தை இந்த வாழ்க்கையில் தொடர்வதற்கான சரியானப் பாதையாக நீங்கள் ஏன் மதிப்பளிக்கக் கூடாது? நீங்கள் ஏன் சத்தியம் மற்றும் நீதியைக் குறித்து எப்போதும் அக்கறையின்றி இருக்கிறீர்கள்? மக்களுடன் கவனமின்றி செயல்படும் அந்த அநீதி மற்றும் அசுத்ததிற்காக நீங்கள் ஏன் எப்போதும் உங்களையே மிதித்துக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கிறீர்கள்? அநியாயக்காரர் செய்யும் செயல்களில் ஈடுபடும் வயதானவர்களைப் போல நீங்கள் ஏன் செயல்படுகிறீர்கள்? பழைய விஷயங்களின் பழைய வழிகளை நீங்கள் ஏன் பின்பற்றுகிறீர்கள்? உங்கள் வாழ்க்கை நீதி, உண்மை, மற்றும் பரிசுத்தம் நிறைந்ததாய் இருக்க வேண்டும்; நீங்கள் பாதாளத்தில் விழும்படியாய், உங்கள் வாழ்க்கை இந்த இளம் வயதிலேயே நடத்தைக்கெட்டு இருக்கக்கூடாது. இது ஒரு பயங்கரமான துரதிர்ஷ்டம் என்று நீங்கள் உணரவில்லையா? இது மிகவும் அநீதியானது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இளைஞர்கள் மற்றும் வயதானவர்களுக்கான வார்த்தைகள்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 346

இவ்வளவு கிரியைகளும், அநேக வார்த்தைகளும் உன்மேல் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால், தேவனின் கிரியையைப் பரப்ப வேண்டிய நேரம் வரும்போது நீ உன் கடமையைச் செய்ய இயலாமல் இருப்பாய், மேலும் வெட்கப்படுவாய் மற்றும் அவமானப்படுத்தப்படுவாய். அந்த நேரத்தில், நீ தேவனுக்கு மிகவும் கடன்பட்டிருப்பதாயும், தேவனைக் குறித்த உன் அறிவு மிகவும் மேலோட்டமானது என்பதையும் நீ உணருவாய். அவர் கிரியை செய்யும் போது, நீ இன்று தேவனைக் குறித்த அறிவைப் பின்தொடரவில்லை என்றால், பின்னர் அது மிகவும் தாமதமாகிவிடும். முடிவில், உனக்குப் பேசுவதற்கு எந்த அறிவும் இருக்காது. நீங்கள் ஒன்றுமில்லாமல் வெறுமையாக விடப்படுவாய். தேவனுக்கு ஒரு கணக்கொப்புவிக்க நீ எதைப் பயன்படுத்துவாய்? தேவனை நோக்கிப் பார்க்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? உன் முயற்சியில் நீ இப்போதே கடினமாக உழைக்க வேண்டும், இதன் மூலம் தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் மனிதனுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதையும், அவருடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல் மனிதன் இரட்சிக்கப்பட முடியாது என்பதையும் இந்தப் பாழான தேசத்தில் மிக ஆழமாக மூழ்கவும், சேற்றிற்குள் மிக ஆழமாக மூழ்கவும் தான் வேண்டும் என்பதையும், பேதுருவைப் போலவே நீ அறிந்து கொள்வாய். ஜனங்கள் சாத்தானால் பாழாக்கப்பட்டிருக்கிறார்கள், ஒருவருக்கொருவர் சதி செய்திருக்கிறார்கள், ஒருவரையொருவர் மிதித்துத் தள்ளுகிறார்கள், அவர்களின் தேவ பயத்தை இழந்துவிட்டார்கள். அவர்களின் கீழ்ப்படியாமை மிகப் பெரியது, அவர்களின் எண்ணங்கள் மிக அதிகம், மேலும் எல்லாம் சாத்தானுக்கு உரித்தானவை. தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் இல்லாமல், மனிதனின் பாழான மனநிலை சுத்திகரிக்கப்பட முடியாது, அவன் இரட்சிக்கப்படவும் முடியாது. தேவனின் மனுவுருவால் மாம்சத்தில் வெளிப்படுத்தப்படும் கிரியையானது துல்லியமாக ஆவியானவரால் வெளிப்படுத்தப்படுவதாகும், மேலும் அவர் செய்யும் கிரியை ஆவியானவரினால் செய்யப்படும் கிரியைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. இன்று, உனக்கு இந்த கிரியையைப் பற்றி எந்த அறிவும் இல்லையென்றால், நீ மிகவும் முட்டாளானவன், அதிகமாக இழந்து விட்டாய்! நீ தேவனின் இரட்சிப்பை ஆதாயப்படுத்தவில்லை என்றால், உன் நம்பிக்கை மத ரீதியான விசுவாசமே, நீ மதத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவனாக இருப்பாய். நீ செத்துப்போன கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதால், பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை இழந்திருக்கிறாய். தேவனின் அன்பைப் பின்தொடரும் மற்றவர்களால், சத்தியத்தையும் ஜீவனையும் ஆதாயம் செய்ய முடியும், நேர்மாறாக உன் விசுவாசமோ தேவனின் அங்கீகாரத்தை ஆதாயம் செய்ய இயலாததாக இருக்கிறது. அதற்கு பதிலாக, நீ, அழிவுண்டாக்குகிற மற்றும் வெறுக்கத்தக்க கிரியைகளைச் செய்கிற ஒருவனாய், ஒரு பொல்லாத செய்கைக்காரனாய் மாறியிருக்கிறாய். நீங்கள் சாத்தானின் கேலிக்கு இலக்காகவும், சாத்தானின் கைதியாகவும் மாறிவிட்டாய். தேவன் மனிதனால் விசுவாசிக்கப்பட அல்லாமல், அவனால் நேசிக்கப்பட, அவனால் பின்தொடரப்பட, ஆராதிக்கப்பட வேண்டும். நீ இன்று தொடரவில்லை என்றால், “முன்பு நான் ஏன் தேவனைச் சரியாகப் பின்பற்றவில்லை, அவரை சரியாகத் திருப்திப்படுத்தவில்லை, என் ஜீவனின் மனநிலையில் மாற்றங்களைத் தொடரவில்லை? அந்த நேரத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாமல் போனதையும், தேவனின் வார்த்தையைக் குறித்த அறிவைப் பின்பற்றாததையும் குறித்து நான் எப்படி வருந்தாமல் இருக்கிறேன். தேவன் அப்போது நிறைய சொன்னார்; நான் எப்படிப் பின்தொடராமல் இருந்தேன்? நான் மிகவும் முட்டாளாக இருந்திருக்கிறேன்!”, என்று நீ கூறும் நாள் வரும். நீ உன்னை ஓரளவு வெறுப்பாய். இன்று, நான் சொல்லும் வார்த்தைகளை நீ நம்பவில்லை, மற்றும் நீ அவற்றைக் குறித்து கவனம் செலுத்துவதில்லை. இந்தக் கிரியை பிரசித்தப்படுவதற்கான நாள் வரும்போது, நீ அதின் முழுமையையும் பார்க்கும்போது, நீ வருத்தப்படுவாய், அந்த நேரத்தில் நீ வாயடைத்துப்போவாய். ஆசீர்வாதங்கள் இருக்கின்றன, ஆனாலும் அவற்றை அனுபவிக்க உனக்குத் தெரியவில்லை, சத்தியம் இருக்கிறது, ஆனாலும் நீ அதைத் தொடராமல் இருக்கிறாய். உனக்கே நீ அவமானத்தை வருவித்துக் கொள்கிறாயல்லவா? இன்று, தேவனின் கிரியையின் அடுத்த கட்டம் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், உன்னிடம் செய்யப்படும் கோரிக்கைகளையும் மற்றும் நீ வாழும்படி கேட்கப்படுவதையும் குறித்து அதிகமாக எதுவும் இல்லை. அநேகக் கிரியை இருக்கிறது, மற்றும் அநேக சத்தியங்களும் இருக்கின்றன. அவை உன்னால் அறியப்படுவதற்குத் தகுதியற்றவையா? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உன் ஆவியை எழுப்ப இயலாததாய் இருக்கிறதா? தேவனின் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் உன்னை நீயே வெறுக்க வைக்க இயலாததாய் இருக்கிறதா? சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ், அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், கொஞ்சம் மாம்சத்திற்குரிய வசதியுடனும் வாழ நீ திருப்தியடைகிறாயா? நீ எல்லா மக்களையும் விடத் தாழ்ந்தவன் அல்லவா? இரட்சிப்பைக் கண்டும் அதைப் பெறத் தொடராதவர்களை விட வேறு யாரும் முட்டாள்கள் அல்லர்; இவர்கள் மாம்சத்தில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டு சாத்தானை அனுபவிக்கிறார்கள். தேவன் மீதான உங்கள் விசுவாசம் எந்த சவால்களையும் இன்னல்களையும் அல்லது சிறிதளவு கஷ்டங்களையும் ஏற்படுத்தாது என்று நீ நம்புகிறாய். நீ எப்போதும் பயனற்றக் காரியங்களையே பின்தொடர்கிறாய், மேலும் நீ ஜீவனுடன் எந்த மதிப்பையும் சேர்க்கவில்லை, அதற்குப் பதிலாக உன்னுடைய சொந்த ஆடம்பரமான எண்ணங்களை சத்தியத்தின் முன் வைக்கிறாய். நீ மிகவும் பயனற்றவனாய் இருக்கிறாய்! நீ ஒரு பன்றியைப் போல வாழ்கிறாய். உனக்கும் பன்றிகளுக்கும் மற்றும் நாய்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சத்தியத்தைத் தொடராதவர்களும், அதற்குப் பதிலாக மாம்சத்தை நேசிப்பவர்களும், எல்லாரும் மிருகங்கள் அல்லவா? ஆவிகள் இல்லாத மரித்தவர்கள் அனைவரும் நடைப்பிணங்கள் அல்லவா? எத்தனை வார்த்தைகள் உங்கள் மத்தியில் பேசப்பட்டிருக்கின்றன? உங்களிடையே ஒரு சிறிய கிரியை மட்டுமா செய்யப்பட்டிருக்கிறது? உங்கள் மத்தியில் நான் எவ்வளவு கொடுத்துள்ளேன்? நீங்கள் ஏன் அதை ஆதாயம் செய்யவில்லை? நீ எதைப் பற்றி புகார் செய்ய வேண்டும்? நீ மாம்சத்தை மிகவும் நேசிப்பதால் நீ எதையும் பெறவில்லை என்பதுதான் காரியம் இல்லையா? மேலும் அது உன் எண்ணங்கள் மிகவும் ஆடம்பரமாக இருப்பதால் அல்லவா? நீ மிகவும் முட்டாளாக இருப்பதால் அல்லவா? இந்த ஆசீர்வாதங்களைப் ஆதாயம் செய்ய உன்னால் இயலாது என்றால், உன்னைக் இரட்சிக்காததற்காக தேவனை நீ குறை கூற முடியுமா? உன் பிள்ளைகள் நோயிலிருந்து விடுபடவும், உன் கணவருக்கு நல்ல வேலை கிடைக்கவும், உன் மகன் ஒரு நல்ல மனைவியைக் கண்டுபிடிக்கவும், உன் மகள் ஒரு நல்ல புருஷனைக் கண்டுபிடிக்கவும், உன் எருதுகள் மற்றும் குதிரைகள் நிலத்தை நன்றாக உழுதிடவும், உன் பயிர்களுக்கு நல்ல வருட வானிலை கிடைக்கவும், நீ தேவனை விசுவாசித்த பிறகு சமாதானத்தை ஆதாயம் செய்யவும் மட்டுமே அவரைப் பின்பற்றுகிறாய். இதைத்தான் நீ நாடுகிறாய். உன் குடும்பத்திற்கு எந்தவிதமான விபத்துகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், காற்று உங்களை கடந்து செல்லாமலிருக்கவும், உன் முகம் மண்துகள்களால் தீண்டப்படாமல் இருப்பதற்காகவும், உன் குடும்பத்தின் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமல் இருப்பதற்காகவும், நீ எந்தவொரு பேரழிவிலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், தேவனின் அரவணைப்பில் வாழவும், வசதியான வீட்டில் வாழவும், இப்படியாக உன் நாட்டம் வசதியாக வாழ்வதற்கு மட்டுமே இருக்கிறது. எப்போதும் மாம்சத்தைப் பின்தொடர்கிற உன்னைப் போன்ற ஒரு கோழை—உனக்கு இருதயம் இருக்கிறதா, உனக்கு ஆவி இருக்கிறதா? நீ ஒரு மிருகம் அல்லவா? பதிலுக்கு எதையும் கேட்காமல் நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுக்கிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. தேவனை விசுவாசிக்கிறவர்களில் நீ ஒருவனா? உண்மையான மனித வாழ்க்கையை நான் உனக்கு வழங்குகிறேன், ஆனாலும் நீ தொடரவில்லை. நீ ஒரு பன்றி அல்லது நாயிலிருந்து வேறுபடவில்லையா? பன்றிகள் மனிதனின் வாழ்க்கையைத் தொடர்வதில்லை, அவை சுத்திகரிக்கப்படுவதைத் தொடர்வதில்லை, வாழ்க்கை என்னவென்று அவற்றுக்குப் புரியவில்லை. ஒவ்வொரு நாளும், அவை நிரம்ப சாப்பிட்ட பிறகு, அவை வெறுமனே தூங்குகின்றன. நான் உனக்கு உண்மையான வழியைக் கொடுத்தேன், ஆனாலும் நீ அதை ஆதாயப்படுத்தவில்லை. நீ வெறுங்கையனாய் இருக்கிறாய். இந்த ஜீவியமான பன்றியின் ஜீவியத்தைத் தொடர நீ விரும்புகிறாயா? அத்தகையவர்கள் உயிருடன் இருப்பதன் முக்கியத்துவம் என்ன? உன் வாழ்க்கை வெறுக்கத்தக்கது மற்றும் இழிவானது, நீ அசுத்தத்திற்கும் ஒழுக்கக்கேடிற்கும் மத்தியில் வாழ்கிறாய் மற்றும் நீ எந்த இலக்குகளையும் பின்தொடர்வதில்லை. எல்லாவற்றிலும் உன் வாழ்க்கை மிகவும் இழிவானது அல்லவா? தேவனை நோக்கிப் பார்க்க உனக்குத் தைரியம் இருக்கிறதா? இந்த வழியில் நீ தொடர்ந்து அனுபவித்தால், நீ ஒன்றுமின்மையைத் தான் பெறுவாயல்லவா? உண்மையான வழி உனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் நீ கடைசியில் அதை ஆதாயம் செய்ய முடியுமா இல்லையா என்பது உன் சொந்த முயற்சியைப் பொறுத்து இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 347

உங்கள் மாம்சம், உங்கள் ஆடம்பர விருப்பங்கள், உங்கள் பேராசைகள், மற்றும் உங்கள் காமம் யாவும் உங்களுக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த விஷயங்கள் தொடர்ந்து உங்கள் இருதயங்களை கட்டுப்படுத்திக்கொண்டு இருப்பதால் அந்தப் பழமையான மற்றும் சீர்குலைந்த சிந்தனைகளின் நுகத்தைக் களைந்துபோட நீங்கள் வலிமையற்றவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்களது தற்போதைய சூழலில் இருந்து விடுபடவோ அல்லது இருளின் பிடியில் இருந்து தப்பிக்கவோ தீவிரமாக விரும்பவில்லை. அந்த விஷயங்களால் ஒட்டுமொத்தமாகக் கட்டுண்டு கிடக்கிறீர்கள். இந்த வாழ்க்கை வேதனையானது மற்றும் மனிதர்களின் இந்த உலகம் மிக இருண்டது என நீங்கள் யாவரும் அறிந்திருக்கும் போதிலும் உங்களில் ஒருவருக்குக் கூட உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்கிற துணிவில்லை. இந்த வாழ்க்கையின் எதார்த்தத்தில் இருந்து தப்பிக்கவும், ஆத்துமாவின் ஆழ் உயர் நிலையை அடையவும், மேலும் அமைதியான, மகிழ்ச்சியான, பரலோகம் போன்ற சூழலில் வாழவும் மட்டுமே விரும்புகிறீர்கள். உங்கள் தற்போதைய வாழ்க்கையை மாற்றுவதற்காகக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை; நீங்கள் செல்ல வேண்டிய வாழ்க்கைக்காக இந்த நியாயத்தீர்ப்புக்குள்ளும் கடிந்துகொள்ளுதலுக்குள்ளும் தேடவும் நீங்கள் விரும்பவில்லை. மாறாக, நீங்கள் மாம்சத்துக்கு அப்பால் இருக்கும் அழகான உலகைப் பற்றிய முற்றிலும் உண்மையற்ற கனவுகளைக் காண்கிறீர்கள். நீங்கள் விரும்பும் இந்த வாழ்க்கை முயற்சியின்றி எந்த வேதனையும் இன்றி நீங்கள் அடையக்கூடிய ஒன்றே. அது முற்றிலும் எதார்த்தமற்றது! மாம்சத்தில் ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து வாழ்க்கைக் காலத்தில் சத்தியத்தை அடைவதற்காக, அதாவது சத்தியத்திற்காக வாழ்ந்து நியாயத்திற்காக நிற்பதற்காக நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நீங்கள் ஒரு பிரகாசமான, ஒளிவீசும் வாழ்க்கை எனக் கருதுவது இதை அல்ல. இது ஒரு கவர்ச்சிகரமான அல்லது அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்காது என்று நீங்கள் உணர்வீர்கள். உங்கள் பார்வையில், இத்தகைய வாழ்க்கையை வாழ்வது ஓர் அநீதியைப் போல் உணரப்படும்! இன்று நீங்கள் இந்தக் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டாலும்கூட நீங்கள் தேடிக்கொண்டிருப்பது சத்தியத்தை அடைவதற்காகவோ அல்லது இப்போது சத்தியத்தை வாழ்ந்து காட்டுவதற்காகவோ அல்ல, மாறாக பின்னர் மாம்சத்திற்கு அப்பால் ஒரு மகிழ்ச்சியான வாழ்விற்குள் நுழைய முடிவதற்காகவே. நீங்கள் சத்தியத்திற்காகத் தேடவில்லை, சத்தியத்திற்காக நிற்கவுமில்லை, மேலும் நீங்கள் நிச்சயமாக சத்தியத்திற்காக இருக்கவுமில்லை. இன்று பிரவேசிப்பதை நீங்கள் தேடவில்லை, ஆனால் உங்கள் சிந்தனைகள் எதிர்காலத்தாலும், என்றோ ஒரு நாள் வருவதைக் குறித்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது: நீங்கள் நீல வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறீர்கள், கசப்பான கண்ணீரைச் சிந்துகிறீர்கள், மேலும் என்றோ ஒரு நாள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவதை எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் சிந்திக்கும் முறை ஏற்கெனவே உண்மைக்குப் புறம்பானதாகிவிட்டதை நீங்கள் அறியவில்லையா? எல்லையற்ற கருணையும் இரக்கமும் கொண்ட இரட்சகர் ஒருநாள் சந்தேகமின்றி வந்து இந்த உலகத்தில் கஷ்டங்களையும் துன்பங்களையும் பொறுத்துகொண்ட உன்னைத் தம்மோடு கொண்டுசெல்வார் என்றும், அவர் உன் குறைகளைத் தீர்ப்பார் மற்றும் வஞ்சிக்கவும் ஒடுக்கவும்பட்ட உன் சார்பாக அவர் பழிவாங்குவார் என்றும் தொடர்ந்து நீங்கள் சிந்தித்துக்கொண்டு வருகிறீர்கள். நீ முற்றிலும் பாவம் நிறைந்தவன் இல்லையா? இந்த உலகத்தில் துன்பப்பட்டவன் நீ மட்டும்தானா? நீ சாத்தானின் ஆதிக்க எல்லைக்குள் நீயாகவே விழுந்து துன்பப்பட்டாய்—தேவன் உண்மையில் இன்னும் உன் குறைகளைத் தீர்க்க வேண்டுமா? தேவனின் எதிர்பார்ப்புகளை திருப்திப்படுத்த முடியாதவர்கள்—அவர்கள் அனைவரும் தேவனின் எதிரிகள் இல்லையா? தேவனின் அவதாரத்தை நம்பாதவர்கள்—அவர்கள் அந்திக்கிறிஸ்து இல்லையா? உன் நற்கிரியைகள் எதற்காக எண்ணப்படுகின்றன? தேவனை ஆராதிக்கும் ஓர் இருதயத்தின் இடத்தை அவைகளால் நிரப்ப முடியுமா? சில நற்கிரியைகளைச் செய்வதனால்மட்டும் நீ தேவ ஆசிர்வாதத்தைப் பெற முடியாது, மேலும் நீ வஞ்சிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதனால் மட்டுமே தேவன் உன் குறைகளைத் தீர்க்க மாட்டார் மற்றும் உனக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காக பழிவாங்க மாட்டார். தேவனை நம்பியும் இன்னும் தேவனை அறியாமல், ஆனால் நற்காரியங்களை செய்பவர்கள்—அவர்கள் யாவரும் கடிந்துகொள்ளப்படவில்லையா? நீ வெறுமனே தேவனை நம்புகிறாய், உனக்கு எதிராக இழைக்கப்பட்டத் தவறுகளை தேவன் நிவிர்த்திசெய்து பழிவாங்க வேண்டும் என்று வெறுமனே விரும்புகிறாய், மேலும், இறுதியாக உன்னால் தலையை நிமிர்த்திக் கொள்ளக்கூடிய ஒரு நாளாகிய உனது நாளை தேவன் உனக்கு அளிக்கவேண்டும் என்று விரும்புகிறாய். ஆனால் நீ சத்தியத்தில் கவனம் செலுத்த மறுக்கிறாய் மேலும் சத்தியத்தின் படி வாழும் தாகமும் உனக்கில்லை. அதைவிட, இந்தக் கடினமான, வெற்று வாழ்க்கையில் இருந்து தப்பிக்கவும் உன்னால் முடியவில்லை. அதற்குப் பதிலாக, உன் மாம்ச வாழ்க்கையையும் உன் பாவ வாழ்க்கையையும் வாழும்போதே உன் குறைகளை நேர்செய்ய வேண்டும் என்றும் உன் இருப்பைக் கவிழ்ந்திருக்கும் மூடுபனியை நீக்க வேண்டும் என்றும் தேவனிடம் நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறாய். ஆனால் இது சாத்தியமா? உன்னிடம் சத்தியம் இருந்தால் நீ தேவனைப் பின்பற்றலாம். நீ உன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் நீ தேவ வார்த்தையின் வெளிப்பாடாய் இருக்கலாம். உன்னிடம் வாழ்க்கை இருந்தால், நீ தேவ ஆசிர்வாதத்தை அனுபவிக்கலாம். சத்தியத்தைப் பெற்றிருக்கிறவர்கள் தேவ ஆசிர்வாதத்தை அனுபவிக்கலாம். தேவன் தம்மில் முழு இருதயத்தோடு அன்பு செலுத்திக் கஷ்டங்களையும் துன்பங்களையும் பொறுத்துக்கொண்டவர்களுக்குப் பரிகாரத்தை உறுதியளிக்கிறாரே தவிர தங்களை மட்டுமே நேசிக்கிறவர்களுக்கும் சாத்தானின் வஞ்சகத்தில் வீழ்ந்துபட்டவர்களுக்கும் அல்ல. சத்தியத்தை நேசிக்காதவர்களிடம் நன்மை எவ்வாறு இருக்க முடியும்? மாம்சத்தை மட்டுமே நேசிக்கிறவர்களிடத்தில் நீதி எவ்வாறு இருக்க முடியும்? நீதி நன்மை ஆகிய இரண்டும் சத்தியத்தின் சம்பந்தமாக மட்டும் அல்லவோ பேசப்படுகின்றன? அவைகள் முழு இருதயத்தோடும் தேவனில் அன்பு கூருகிறவர்களுக்கு அல்லவா ஒதுக்கப்பட்டுள்ளன? சத்தியத்தை நேசிக்காதவர்கள் மற்றும் அழுகிய சடலமாக மட்டுமே இருக்கிறவர்கள்—இந்த ஜனங்கள் எல்லாம் தீமையைக் கொண்டிருக்கவில்லையா? சத்தியத்தின்படி வாழ முடியாதவர்கள்—அவர்கள் எல்லாம் சத்தியத்துக்கு எதிரிகள் அல்லவா? மேலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரிபூரணப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 348

மனிதனை நிர்வகிப்பது எப்போதுமே என் கடமையாக இருக்கிறது. மேலும், உலகத்தைச் சிருஷ்டித்தபோதே நான் மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கு உத்தரவிட்டேன். கடைசி நாட்களில் நான் மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவேன் என்பதையோ, அல்லது மனிதகுலத்தின் மத்தியிலுள்ள கலகக்காரர்களை ஜெயங்கொள்ளுவதே நான் சாத்தானைத் தோல்வியடையச் செய்வதற்கான சான்றாக உள்ளது என்பதையோ மக்கள் அறியாதிருக்கலாம். ஆனால், என் விரோதியானவன் என்னுடன் போரிட வந்தபோது, சாத்தான் சிறைப்படுத்தி, தனது பிள்ளைகளாக்கி தனது வீட்டைக் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமைகளாக வைத்திருப்பவர்களை ஜெயங்கொள்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். தோல்வியுறச் செய்வது, அவமானத்திற்கு ஆளாக்குவது என்பதே ஜெயங்கொள்ளுதல் என்பதன் மெய்யான அர்த்தமாக உள்ளது; இஸ்ரவேலரின் மொழியில், இது எனக்கு எதிரான முற்றிலுமான தோல்வி, அழிவு மற்றும் பிற எதிர்ப்பைக் காட்டக்கூடாதவனாக்குதல் என்று அர்த்தப்படுகிறது. ஆனால் இன்று, உங்களிடையே பயன்படுத்தப்படுகிறபோது, ஜெயங்கொள்ளுதல் என்பது இதன் அர்த்தமாக உள்ளது. மனிதகுலத்தின் பொல்லாங்கானவர்களை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவருதலும் அதைத் தோற்கடிப்பதுமே எப்பொழுதும் என் நோக்கமாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறிய வேண்டும், இதனால் அவர்கள் இனி எனக்கு எதிராகக் கலகம் செய்ய முடியாது, மேலும் என் கிரியையில் குறுக்கிடவோ அல்லது தொந்தரவு செய்யவோ முடியாது. இவ்வாறு, மனிதனைப் பொறுத்தவரை, இந்த வார்த்தையானது ஜெயங்கொள்ளுதல் என்று அர்த்தப்படலாயிற்று. இந்த வார்த்தையின் வெளிப்படையான அர்த்தங்கள் என்னவாக இருப்பினும், மனிதர்களைத் தோற்கடிப்பதே எனது கிரியையாக உள்ளது. ஏனெனில், மனிதகுலம் எனது ஆளுகையுடன் இணைந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், மனிதர்கள் என் விரோதிகளே தவிர வேறில்லை. மனிதர்கள் என்னை எதிர்க்கிற மற்றும் எனக்குக் கீழ்ப்படியாதிருக்கிற பொல்லாதவர்களாவர். மனிதர்கள் வேறு யாருமல்லர், என்னால் சபிக்கப்பட்ட பொல்லாங்கின் சந்ததிதான் அது. மனிதர்கள் வேறு யாருமல்ல, என்னைக் காட்டிக் கொடுத்த பிரதான தூதனின் சந்ததியினர் தான். மனிதர்கள் வேறு யாருமல்லர், நீண்ட காலத்திற்கு முன்பு என்னால் முறியடிக்கப்பட்டவர்களும், அன்றிலிருந்து சரிசெய்யப்பட இயலாத எனது விரோதியாக இன்றும் இருக்கிற பிசாசின் மரபுவழி வந்தவர்களே. மனிதகுலம் யாவற்றிற்கும் மேலாக உள்ள வானம் கொந்தளிப்பாகவும் இருட்டாகவும், தெளிவின் அறிகுறி சிறிதும் இல்லாமலும் இருக்கிறது, மனித உலகம் கார் இருளில் மூழ்கியுள்ளது, இதனால் அதில் வாழும் ஒருவன் தனது தலையை உயர்த்தும்போது, முகத்திற்கு முன்னாக வெளிநீட்டப்பட்ட கையையோ அல்லது சூரியனையோ கூடக் காணக் கூடாதவனாக இருக்கிறான். அவனது பாதங்களுக்குக் கீழே உள்ள சாலை, சேறும் சகதியுமாகக் குழிகளுடன், கோணல்மாணலான வளைவுகள் கொண்டுள்ளது; முழு நிலமும் பிரேதங்களால் குப்பையாக்கப்பட்டுள்ளது. இருண்ட மூலைகள் மரித்தவர்களின் எச்சங்களால் நிரப்பப்பட்டுள்ளன, அத்துடன் குளிர்ந்த மற்றும் நிழலான மூலைகளை பிசாசுகளின் கூட்டங்கள் வாசம்பண்ணும் இடங்களாக்கிக் கொண்டுள்ளன. மனிதர்களுடைய உலகின் எல்லா இடங்களிலும் பிசாசுகள் சேனைகளாக வந்து போகின்றன. அசுத்தத்தால் மூடப்பட்ட எல்லா வகையான மிருகங்களின் சந்ததியும், களமிறக்கப்பட்ட யுத்தத்தில் பூட்டப்பட்டுள்ளன, அதன் இரைச்சலானது இருதயத்தைப் பயங்கரமாகத் தாக்குகிறது. இப்படிப்பட்ட வேளைகளில், இத்தகையதொரு உலகில், இப்படிப்பட்டதொரு “பூமிக்குரிய பரதீசில்” வாழ்வின் சந்தோஷங்களைத் தேட ஒருவன் எங்கே செல்வான்? அவனுடைய வாழ்வின் இலக்கைக் கண்டறிய ஒருவன் எங்கே செல்ல முடியும்? நெடுங்காலத்திற்கு முன் சாத்தானின் கால்களின்கீழ் மிதிக்கப்பட்ட நாளில் இருந்தே, மனிதகுலம், சாத்தானின் சாயலைப் பூண்டிருக்கும் ஒரு நடிகன் போலவே முதலாவது இருந்துள்ளது—இதற்கும் மேலாக, மனிதகுலமானது சாத்தானின் உருவகமாகவே ஆகி, சாத்தானுக்கு உரத்த குரலில் தெளிவாகச் சாட்சியளிக்கும் ஆதாரமாகவே பணியாற்றுகிறது. இத்தகையதொரு மனிதகுலம், இப்படிச் சீரழிந்த கறைபடிந்த ஒரு கும்பல், இவ்வாறு சீர்கேடு நிறைந்த மனிதக் குடும்பத்தின் சந்ததி, தேவனுக்கு எப்படி சாட்சியளிக்கக் கூடும்? என் மகிமை எங்கிருந்து வருகிறது? எங்கிருந்து என் சாட்சியைப் பற்றி ஒருவர் பேசத் தொடங்குவார்? மனிதகுலத்தைச் சீர்கெடுத்து எனக்கு எதிராக நிற்கும் விரோதியானவன், ஏற்கனவே மனிதகுலத்தை எடுத்துக்கொண்டு—அதாவது நீண்டகாலத்திற்கு முன்பே நான் சிருஷ்டித்ததும் எனது மகிமையாலும் எனது ஜீவனாலும் நிரப்பப்பட்டதுமாக இருக்கிற மனிதகுலத்தைக் கறைப்படுத்தினான். இது என் மகிமையைப் பறித்துவிட்டது, மற்றும் இவையெல்லாம் மனிதனைச் சாத்தானின் அவலட்சணத்துடன் பெரிதும் இணைக்கப்பட்ட விஷத்தினாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியிலிருந்து பெற்ற சாறினாலும் மனிதனை ஊக்குவித்துள்ளது. ஆதியிலே, நான் மனிதகுலத்தைச் சிருஷ்டித்தேன்; அதாவது, மனிதகுலத்தின் மூதாதையரான ஆதாமை நான் சிருஷ்டித்தேன். அவன் ஒரு சாயலும் ரூபமும் அருளப்பட்டவனான், பெலன் நிறைந்தவனாயிருந்தான், சத்துவம் நிறைந்தவனாயிருந்தான், மேலும் அவன் எனது மகிமையிலும் பங்கேற்றான். நான் மனிதனைச் சிருஷ்டித்தபோது அது மகிமையான நாளாக இருந்தது. அதன்பிறகு, ஆதாமின் சரீரத்தில் இருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள், அவளும் மனிதனின் மூதாதையாக இருந்தாள், அதனால் நான் சிருஷ்டித்த ஜனங்கள் என் சுவாசத்தால் நிரப்பப்பட்டு எனது மகிமை பொங்கி வழிபவர்கள் ஆனார்கள். ஆதாம் ஆதியிலே எனது கரங்களிலிருந்து பிறந்தான் மற்றும் அவன் எனது சாயலின் பிரதிபலிப்பானான். இவ்வாறு, “ஆதாம்” என்பதன் மெய்யான பொருள் என்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஓர் உயிரினமாக, என் உயிர்நிலையான ஆற்றலைக்கொண்டு நிரப்பப்பட்ட, என் மகிமையைக்கொண்டு நிரப்பப்பட்ட, சாயலும் ரூபமும் கொண்ட, ஆவியும் சுவாசமும் உள்ளவனானான் என்பதாகும். ஆவியைக்கொண்ட, என்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற, எனது சாயலைத் தாங்கியிருக்கிற மற்றும் எனது சுவாசத்தைப் பெற்றிருக்கிறதான சிருஷ்டிக்கப்பட்ட ஒரே உயிரினம் அவன் மட்டுமே. ஆதியிலே, நான் சிருஷ்டித்த இரண்டாவது மனிதப் படைப்பாக ஏவாள் இருந்தாள், அந்த சிருஷ்டிக்கு நான் என் சுவாசத்தை வழங்கி நியமித்திருந்தேன், எனவே “ஏவாள்” என்பதன் மெய்யான அர்த்தம், எனது மகிமையைத் தொடருகிற ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியும், எனது ஜீவனால் நிரப்பப்பட்டவளும் மற்றும் எனது மகிமையைப் பெற்றுக்கொண்டவள் என்பதாகும். ஏவாள் ஆதாமிலிருந்து வந்தாள், அதனால் அவளும் என் சாயலைத் தரித்துள்ளாள், ஏனென்றால் அவள் என் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட இரண்டாவது மனிதப் படைப்பு ஆவாள். “ஏவாள்” என்பதன் மெய்யான அர்த்தம் ஆவி, சதை மற்றும் எலும்பு ஆகியவற்றைக் கொண்ட, மனிதகுலத்திற்குள் எனது இரண்டாவது சாயலும் மற்றும் எனது இரண்டாவது சாட்சியுமாக இருக்கிற ஓர் உயிருள்ள மனுஷி என்பதாகும். இவர்களே மனிதகுலத்தின் மூதாதையர்கள், மனிதனின் தூய்மையான மற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷமும், மற்றும் தொடக்கத்திலிருந்தே, ஆவி அருளப்பட்ட உயிரினங்களும் ஆவார்கள். இருப்பினும், பொல்லாங்கன், மனிதகுலத்தின் முன்னோர்களுடைய சந்ததியை மிதித்து சிறைப்பிடித்தான், மனித உலகத்தை முழுமையான அந்தகாரத்தில் மூழ்கடித்தான், மேலும் சந்ததியினர் நான் இருப்பதை இனியும் நம்பாதபடிக்குச் செய்தான். பொல்லாங்கன் ஜனங்களை சீர்கெடுத்து, அவர்கள் அனைவரையும் மிதிக்கிற நிலையிலும், அது என் மகிமையையும், என் சாட்சியத்தையும், நான் அவர்களுக்கு அளித்த உயிர்ச்சக்தியையும், நான் அவர்களுக்குள் ஊதிய சுவாசம் மற்றும் ஜீவனையும், மனித உலகினுள் எனது மகிமையையும், நான் மனிதகுலத்தின் மீது செலவிட்ட எனது இருதயத்தின் இரத்தம் யாவற்றையும் கொடூரமாகப் பறிக்கிறான் என்பது இன்னும் அருவருப்பானதாக இருக்கிறது. மனிதகுலம் இனியும் வெளிச்சத்தில் இருப்பதில்லை, நான் அவர்களுக்கு அருளிய அனைத்தையும் ஜனங்கள் இழந்துவிட்டார்கள், நான் கொடுத்த மகிமையை அவர்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் நானே கர்த்தராயிருக்கிறேன் என்பதை அவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? பரலோகத்தில் நான் இருப்பதை அவர்கள் எப்படித் தொடர்ந்து நம்புவார்கள்? பூமியின்மீது என் மகிமையின் வெளிப்பாடுகளை அவர்கள் எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்? இந்தப் பேரன்கள் மற்றும் பேத்திகள், தங்கள் சொந்த முன்னோர்களைச் சிருஷ்டித்தவர் என்ற வகையில் அவர்கள் வணங்கிய தேவனை எவ்விதம் எடுத்துக்கொள்வார்கள்? இந்தப் பரிதாபமான பேரன்கள் மற்றும் பேத்திகள், பொல்லாங்கனுக்கு மகிமையையும், உருவத்தையும், ஆதாம் மற்றும் ஏவாளுக்கு நான் அருளிய சாட்சியத்தையும், மனிதகுலம் தங்கள் இருப்பிற்குச் சார்ந்துள்ளதான அவர்கள் மீது நான் அருளிய ஜீவனையும்கூட தாரளமாக “வழங்கி” இருக்கின்றனர்; மற்றும் இவர்கள் அந்தப் பொல்லாங்கன் இருத்தல் பற்றி முற்றிலும் கவலையற்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் எனது மகிமையை அதற்குக் கொடுக்கின்றனர். இது “அழுக்கு” என்ற தலைப்பின் ஆதாரமாக இருக்கிறதல்லவா? அத்தகைய ஒரு மனிதகுலம், அத்தகைய பொல்லாத பிசாசுகள், அத்தகைய நடைப்பிணங்கள், அத்தகைய சாத்தானின் உருவங்கள், அத்தகைய என்னுடைய எதிரிகள் எப்படி என் மகிமையைக் கொண்டிருக்கக்கூடும்? நான் என் மகிமையை மீண்டும் மீட்டுக் கொள்ளுவேன், மனிதர்களிடையே இருக்கும் என் சாட்சியத்தை மறுபடியும் மீட்டுக்கொள்ளுவேன், மற்றும் ஒரு காலத்தில் எனக்குச் சொந்தமாயிருந்தவற்றையும், நீண்ட காலத்திற்கு முன்பே நான் மனிதகுலத்திற்குக் கொடுத்தவற்றையும்—மனிதகுலத்தையும் நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவேன். இருப்பினும், நான் சிருஷ்டித்த மனிதர்கள் எனது சாயலையும் எனது மகிமையையும் பெற்றுக்கொண்ட பரிசுத்தவான்களாக இருந்தனர் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். அவர்கள் சாத்தானுக்குரியவர்கள் அல்ல, அல்லது அதன் மிதித்தலுக்கு உட்பட்டவர்களும் அல்ல, ஆனால் அவர்கள் முற்றிலுமாக எனது வெளிப்பாடாயிருந்தனர், சாத்தானுடைய விஷத்தின் இலேசான தடயம்கூட இல்லாதவர்களாக இருந்தனர். எனது கரத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட, நான் நேசிக்கிற மற்றும் வேறு எவருக்கும் உரியவர்களாயிராத மனிதகுலத்தை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதை மனிதகுலத்திற்கு நான் தெரிவிக்கிறேன். மேலும், அவர்களில் நான் சந்தோஷம் அடைந்து அவர்களை எனது மகிமையாகக் கருதுவேன். இருப்பினும், நான் விரும்புவது இன்றைய நாளில் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, சாத்தானுக்குச் சொந்தமான, இனியும் எனது அசல் சிருஷ்டிப்பாயிராத மனிதகுலத்தை அல்ல. மனித உலகில் நிலவும் என் மகிமையை மீட்டெடுக்க நான் நோக்கம் கொண்டுள்ளதால், சாத்தானைத் தோற்கடிப்பதில் என் மகிமைக்குச் சான்றாக, மனிதர்களிடையே தப்பிப்பிழைத்தவர்களை நான் முழுமையாக ஜெயங்கொள்வேன். எனது சாட்சியை மட்டுமே எனது சுத்தத் தெளிவான தன்மையாக, எனது சந்தோஷத்தின் நோக்கமாக எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சித்தமாக உள்ளது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 349

மனிதகுலம் இன்று இருக்கும் இடத்தை அடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கடந்துள்ளது, ஆயினும் ஆரம்பத்தில் நான் சிருஷ்டித்த மனிதகுலம் சீரழிவில் மூழ்கி நீண்ட காலமாகிவிட்டது. மனிதகுலம் இனியும் நான் விரும்பும் மனிதகுலமாக இருப்பதில்லை, இதனால், என் பார்வையில், ஜனங்கள் இனி மனிதகுலம் என்ற பெயருக்குத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். மாறாக அவர்கள் சாத்தான் சிறைபிடித்து வைத்துள்ள மனிதகுலத்தின் அழுக்காக, சாத்தான் குடியிருக்கப் பயன்படுத்தும் அழுகிய நடைப்பிணங்களாக மற்றும் சாத்தான் தன்னையே உடுத்திக்கொள்ளப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். நான் இருப்பதை ஜனங்கள் நம்பவில்லை, என் வருகையை அவர்கள் வரவேற்கவில்லை. என் கோரிக்கைகளுக்கு மனிதகுலம் அதிருப்தியான வகையிலேயே பதில் கொடுக்கிறது, அவற்றைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறது மற்றும் வாழ்வின் மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் என்னுடன் உண்மையாகப் பகிர்ந்து கொள்ளாதிருக்கிறது. ஜனங்கள் என்னை ஆராயப்படக் கூடாதவர் என்று காண்பதால், அவர்கள் எனக்கு வெறுப்பான புன்னகையைத் தருகிறார்கள், அவர்களின் முதலாம் அணுகுமுறை அதிகாரத்தில் இருக்கும் ஒருவரிடம் ஒத்துழைப்பதாக உள்ளது, ஏனென்றால் ஜனங்களுக்கு என் கிரியையைப் பற்றி எந்த அறிவும் இல்லை, தற்போது எனது சித்தம் பற்றி மிகக்குறைவாகவே அறிந்துள்ளனர். நான் உங்களுக்கு நேர்மையாக இருப்பேன்: நாள் வரும்போது, என்னைத் தொழுதுகொள்கிற எவர் ஒருவருடைய துன்பங்களும் சுமப்பதற்கு உங்களுடைய துன்பங்களைவிட எளிதாக இருக்கும். என்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் அளவு உண்மையில் யோபுவின் விசுவாசத்தைக்காட்டிலும் அதிகமில்லை—யூதப் பரிசேயர்களின் விசுவாசம் கூட உங்களுடையதை விட மிஞ்சியதாய் உள்ளது—எனவே, அக்கினி இறங்கும் நாளில், உங்கள் துன்பம், இயேசுவால் கண்டிக்கப்பட்ட பரிசேயர்களை விடவும், மோசேயை எதிர்த்த 250 தலைவர்களை விடவும், மற்றும் அக்கினிப் பிழம்புகளால் சுட்டெரித்து எரிக்கப்பட்ட சோதோமை விடவும் அதிக கடுமையானதாக இருக்கும். மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவனது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? என்னில் விசுவாசம் கொண்டிருந்தும் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இந்த உலகத்தாலும் புறக்கணிக்கப் பட்டிருக்கவில்லையா? என் வார்த்தைக்குப் புறம்பே வாழ்பவர்கள், சோதனையின் துன்பத்திலிருந்து தப்பி ஓடுகிறார்கள், அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் அதன்போக்கில் இழுக்கப்பட்டுச் செல்வதில்லையா? அவர்கள் இங்கும் அங்கும் பறக்கடிக்கப்படும் இலையுதிர்கால இலைகளைப்போல், இளைப்பாற இடமின்றி, ஆறுதல் அளிக்கும் என் வார்த்தைகளை மிகக்குறைவாகவே பெற்றவர்களாய் உள்ளனர். என் சிட்சையும் புடமிடுதலும் அவர்களைப் பின்தொடரவில்லை என்றாலும், அவர்கள் இடம்விட்டு இடம் நகர்கிற பிச்சைக்காரர்கள்போல் பரலோக ராஜ்யத்திற்குப் புறம்பே வீதிகளில் அலைந்து திரிவதில்லையா? உலகம் உண்மையில் உனக்கு இளைப்பாறும் இடமாக உள்ளதா? என் சிட்சையைத் தவிர்ப்பதனால், உன்னால் உண்மையிலேயே, உலகத்திலிருந்து மனநிறைவின் மயக்கமான புன்னகையைப் பெற்றுக்கொள்ள முடியுமா? உன் இருதயத்தில் உள்ள மறைக்க முடியாத வெறுமையை மூட, விரைந்தோடி வரும் உனது சந்தோஷத்தை நீ உண்மையிலேயே பயன்படுத்த முடியுமா? உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீ முட்டாளாக்கலாம், ஆனால் உன்னால் என்னை முட்டாளாக்க ஒருக்காலும் முடியாது. உன் விசுவாசம் மிகவும் அற்பமானது என்பதால், நீ இந்தநாள் வரையிலும், வாழ்க்கை தருகிற மகிழ்ச்சி எதையும் கண்டறிய வல்லமையற்று இருக்கிறாய். நான் உன்னைக் கேட்டுக்கொள்வது: உன் முழு வாழ்வையும், மாம்சத்திற்காக இரண்டாந்தரமாக சுறுசுறுப்பாக செலவிடுவதைக் காட்டிலும், உன் வாழ்நாளில் பாதியை எனக்காக உண்மையுடன் செலவிட்டு, ஒரு மனிதன் அரிதாகவே சுமக்கக்கூடிய பாடுகளைச் சகித்திருத்தல் மேன்மையானது. இவ்வளவு அதிகமாய் உங்களைப் பாதுகாத்து எனது சிட்சையில் இருந்து விலகி ஓடுவதில் என்ன நோக்கம் இருக்கிறது? நித்திய வேதனையையும், நித்திய சிட்சையையும் மாத்திரமே அறுவடை செய்ய எனது கணநேரச் சிட்சிப்பிலிருந்து உன்னை ஒளித்துக்கொள்வதில் என்ன நோக்கம் இருக்கிறது? உண்மையில், நான் என் சித்தத்திற்கு ஏற்ப யாரையும் வளைக்கவில்லை. எனது எல்லா திட்டங்களுக்கும் யாராவது உண்மையிலேயே கீழ்ப்படிய விரும்பினால், நான் அவர்களை மோசமாக நடத்த மாட்டேன். ஆனால், யேகோவாவாகிய என்னை, யோபு விசுவாசித்தது போலவே எல்லா ஜனங்களும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விசுவாசம் தோமாவின் விசுவாசத்தை விட அதிகமாக இருந்தால், உங்கள் விசுவாசம் எனது பாராட்டைப் பெறும், உங்கள் பற்றுறுதியில் நீங்கள் என் ஆனந்தத்தைக் காண்பீர்கள், மற்றும் உங்கள் நாட்களில் நீங்கள் நிச்சயமாக என் மகிமையைக் காண்பீர்கள். இருப்பினும், உலகத்தை நம்புகிற மற்றும் பிசாசை நம்புகிற ஜனங்கள், சோதோம் நகரத்தின் ஜனங்களைப் போலவே, காற்றினால் அடிக்கப்பட்ட மணல் துகள்களைத் தங்கள் கண்களிலும், பிசாசிடமிருந்து பெற்ற காணிக்கைகளைத் தங்கள் வாய்களிலும் கொண்டவர்களாய்த் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தியுள்ளனர், அவர்களின் மரத்துப்போன சிந்தைகள் உலகைக் கைப்பற்றிய பொல்லாங்கனால் நெடுங்காலத்திற்கு முன்பே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் சிந்தனைகள் ஏறக்குறைய முற்றிலும், பழைய காலத்துப் பிசாசுக்கு அடிமைப்பட்டு விழுந்துள்ளன. எனவே, மனிதகுலத்தின் விசுவாசம் காற்றோடு போய்விட்டது, அவர்கள் என் கிரியையைக் கவனிக்கக்கூட இயலாதவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் செய்யக்கூடியது என்னவென்றால், எனது கிரியையைச் சரியான முறையில் நடத்துவதில் பலவீனமான முயற்சியை மேற்கொள்வது அல்லது தோராயமாகப் பகுப்பாய்வு செய்வதாகும், ஏனென்றால் அவர்கள் நெடுங்காலமாகவே சாத்தானின் விஷத்தினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 350

நான் மனிதகுலத்தை ஜெயங்கொள்வேன், ஏனென்றால் ஜனங்கள் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், மேலும், நான் சிருஷ்டித்த ஏராளமான பொருட்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் ஜனங்கள் என்னைப் புறக்கணிக்கின்றனர்; நான் அவர்களின் இருதயங்களில் இல்லை, அவர்கள் என்னைத் தங்கள் வாழ்விலுள்ள ஒரு சுமையாகவே பார்க்கிறார்கள், உண்மையாகவே என்னைப் பார்க்கும்போது, அவர்கள் இன்னும் என்னைப் புறக்கணிக்கிறார்கள், என்னைத் தோல்வியடையச் செய்வதற்குச் சாத்தியமான எல்லா வழிகளையும் நினைத்து அவர்களின் மூளைகளைச் சேதப்படுத்திக் கொள்கிறார்கள். ஜனங்களைத் தீவிரமாக நடத்துவதற்கோ அல்லது அவர்களிடம் கண்டிப்பான கோரிக்கைகளை வைப்பதற்கோ அவர்கள் என்னை அனுமதிப்பதில்லை, அல்லது அவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது அவர்களின் அநீதியைச் சிட்சிக்கவோ அவர்கள் என்னை அனுமதிப்பதில்லை. இந்த ஆர்வத்தைக் கண்டறிவது வெகுதூரத்தில் உள்ளதால், இதை எரிச்சல் மூட்டுவதாகக் காண்கின்றனர். எனவே, எனக்குள் போஜன பானம் பண்ணி, மகிழ்ந்திருக்கிற, ஆனால் என்னை அறியாமல் இருக்கிற மனிதகுலத்தை எடுத்து அவர்களைத் தோற்கடிப்பதே எனது கிரியையாக இருக்கிறது. நான் மனிதகுலத்தை நிராயுதபாணியாக்குவேன், பின்னர், என் தூதர்களை அழைத்து, என் மகிமையைப் பெற்று, நான் என் வாசஸ்தலத்திற்குத் திரும்புவேன். ஏனென்றால், ஜனங்களின் செயல்கள் நீண்ட காலமாக என் இருதயத்தை நொறுக்கி, என் கிரியையைத் துண்டு துண்டாக்கியுள்ளன. நான் மகிழ்ச்சியுடன் விலகிச் செல்வதற்கு முன்பு பொல்லாங்கன் எடுத்துச் சென்ற மகிமையை மீட்டெடுக்கவும், மனிதகுலம் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை வாழ அனுமதிக்கவும் விரும்புகிறேன், அவர்கள் தொடர்ந்து “அமைதியிலும் மனநிறைவிலும் வாழ்ந்து உழைக்க வேண்டும்,” அவர்கள் தொடர்ந்து, “தங்கள் சொந்த நிலங்களில் வேளாண்மை செய்யவேண்டும்,” மற்றும் இனி நான் அவர்களின் வாழ்க்கையில் தலையிடமாட்டேன். ஆனால் இப்போது நான் என் மகிமையை பொல்லாங்கனின் கையிலிருந்து மீட்டு உரிமையாக்கிக்கொள்ளவும், உலகைப் படைக்கும் போது மனிதனுக்குள் நான் கொடுத்திருந்த மகிமையை முழுவதுமாக திரும்பப் பெறவும் விரும்புகிறேன். மீண்டும் அதைப் பூமியில் உள்ள மனித இனத்திற்கு நான் இனி ஒருபோதும் வழங்க மாட்டேன். ஏனென்றால், ஜனங்கள் என் மகிமையைக் காக்கத் தவறியது மட்டுமல்லாமல், அதைச் சாத்தானின் சாயலுக்கு மாற்றாகக் கொடுத்திருக்கிறார்கள். என் வருகையை ஜனங்கள் பொக்கிஷமாகக் கருதுவதில்லை, அல்லது அவர்கள் என் மகிமையின் நாளை உயர்த்துவதில்லை. என் சிட்சையைப் பெறுவதில் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, என் மகிமையை என்னிடம் திருப்பித் தரவோ அல்லது பொல்லாங்கனின் விஷத்தைத் தூக்கி எறியவோ அவர்கள் தயாராக இல்லை. மனிதகுலம் தொடர்ந்து அதே பழைய வழியில் என்னை வஞ்சிக்கிறது, ஜனங்கள் இன்னும் பிரகாசமான புன்னகையையும் மகிழ்ச்சியான முகங்களையும் அதே பழைய வழியில் அணிந்துகொள்கிறார்கள். என் மகிமை அவர்களை விட்டு விலகியபின் மனிதகுலத்தின் மீது இறங்கும் இருளின் ஆழத்தை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். குறிப்பாக, என் நாள் மனிதகுலம் முழுவதற்கும் வரும்போது, நோவாவின் காலத்தில் இருந்த ஜனங்களைவிட இது அவர்களுக்கு இன்னும் கடினமாகிவிடும் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஏனென்றால் என் மகிமை இஸ்ரவேலை விட்டுவிலகியபோது, அது எவ்வளவு அந்தகாரமாயிற்று என்பது அவர்களுக்குத் தெரியாது, ஏனெனில் காரிருள் கொண்ட இரவைக் கடந்து செல்வது எவ்வளவு கடினமானது என்பதை அதிகாலையில் மனிதன் மறந்துவிடுகிறான். சூரியன் மீண்டும் மறைந்து இருள் மனிதனின் மீது இறங்கும்போது, அவன் மீண்டும் புலம்புவான், மற்றும் இருளில் தனது பற்களைக் கடித்துக் கொள்வான். என் மகிமை இஸ்ரவேலிலிருந்து விலகியபோது, இஸ்ரவேலர்கள் அந்த நாட்களின் துன்பங்களை சகித்துக்கொள்வது எவ்வளவு கடினமாயிருந்தது என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இப்போது நீங்கள் என் மகிமையைக் காணும் நேரமாக உள்ளது, இது நீங்கள் என் மகிமையின் நாளைப் பகிர்ந்து கொள்ளும் நேரமாகவும் உள்ளது. அசுத்தமான நிலத்தைவிட்டு என் மகிமை வெளியேறும்போது மனிதன் இருளின் மத்தியில் புலம்புவான். இப்போது நான் என் கிரியையைச் செய்யும் மகிமையின் நாளாக உள்ளது, மற்றும் இது பாடுகளில் இருந்து மனிதகுலத்தை விலக்கிக் கொள்ளும் நாளாகவும் உள்ளது, ஏனென்றால் நான் அவர்களுடன் வேதனையான மற்றும் உபத்திரவம் நிறைந்த காலங்களைப் பகிர்ந்து கொள்ளப்போவதில்லை. மனிதகுலத்தை முழுவதுமாக ஜெயங்கொள்ளவும், மனிதகுலத்தின் பொல்லாங்கானவர்களை முற்றிலுமாக தோற்கடிக்கவும் மட்டுமே நான் விரும்புகிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 351

நான் என்னைப் பின்பற்றுபவர்களாக இருக்க பூமியில் பலரைத் தேடினேன். இந்தப் பின்பற்றுபவர்கள் எல்லோருக்கும் மத்தியில் ஆசாரியர்களாக ஊழியம் செய்பவர்கள், வழிநடத்துபவர்கள், தேவனுடைய புத்திரர்கள், தேவ ஜனங்கள், மற்றும் ஊழியக்காரர்கள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் என்னிடம் காட்டும் விசுவாசத்தின் அடிப்படையில் நான் அவர்களை வகைப்படுத்துகிறேன். அனைவருமே வகையின்படி வகைப்படுத்தப்பட்டிருக்கும் போது, அதாவது, ஒவ்வொரு வகையான நபரின் சுபாவமும் தெளிவுபடுத்தப்படும் போது, மனுக்குலத்தை நான் இரட்சிக்கும் இலக்கை அடைவதற்கு நான் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் சரியான வகைக்குள் கணக்கிட்டு, ஒவ்வொரு வகையினரையும் அவர்களுக்கான பொருத்தமான இடத்தில் வைப்பேன். நான் இரட்சிக்க விரும்புவோரை கூட்டம் கூட்டமாக எனது வீட்டிற்கு அழைக்கிறேன், அதன்பின் அவர்கள் அனைவரும் என்னுடைய கடைசிக் காலக் கிரியையை ஏற்றுக்கொள்ளச் செய்கிறேன். அதே நேரத்தில், நான் அவர்களை அவரவர் வகைக்கு ஏற்ப பிரித்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்கைக்குத் தக்கப் பலனை அல்லது தண்டனையை வழங்குகிறேன். இவையே என் கிரியையை உள்ளடக்கிய படிநிலைகளாகும்.

இன்று, நான் பூமியில் வாழ்கிறேன். மனிதருக்கு மத்தியில் நான் வாழ்கிறேன். மனிதர்கள் என்னுடைய கிரியையை அனுபவிக்கிறார்கள். என் பேச்சுக்களைக் கவனிக்கிறார்கள், இதனுடன் என்னைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் என் சத்தியங்களை அளிக்கிறேன் அதனால் அவர்கள் என்னிடமிருந்து ஜீவனைப் பெறுவார்கள், இதன் மூலம் தாங்கள் நடக்கக்கூடிய ஒரு பாதையைப் என்னிடமிருந்து பெறுவார்கள். ஏனென்றால் நான் தேவன், ஜீவனைக் கொடுக்கிறவர். பல ஆண்டுகளாக நான் செய்த கிரியைகளினால், மனிதர்கள் அதிகமாக ஆதாயம் அடைந்துள்ளனர், அதிகமாகக் கைவிட்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் என்னை உண்மையாக விசுவாசிக்கவில்லை என்று நான் இன்னும் சொல்கிறேன். ஏனென்றால், ஜனங்கள் வெறுமனே தங்கள் வாயால் என்னை தேவன் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பேசுகிற சத்தியங்களுடன் அவர்கள் உடன்படவில்லை, அதுமட்டுமின்றி நான் அவர்களிடம் கடைப்பிடிக்குமாறு கேட்கும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதாவது, ஜனங்கள் தேவன் இருப்பதை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய சத்தியத்தை அல்ல. ஜனங்கள் தேவன் இருப்பதை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய ஜீவனை அல்ல. ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மட்டுமே ஒப்புக்கொள்கிறார்கள், அவருடைய சாராம்சத்தை அல்ல. அவர்களின் வைராக்கியத்திற்காக நான் அவர்களை வெறுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் என்னை ஏமாற்றுவதற்காக மட்டுமே இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் யாரும் என்னை உண்மையாக ஆராதிப்பதில்லை. உங்கள் வார்த்தைகளில் சர்ப்பத்தின் சோதனை உள்ளது. மேலும், அவை தீவிர இறுமாப்புள்ளவைகளாகவும், பிரதான தூதனின் உண்மையான அறிவிப்புமாக இருக்கின்றன. மேலும் என்னவென்றால், உங்கள் செயல்கள் சிதைக்கப்பட்டு அவமானகரமான அளவிற்கு கிழிந்திருக்கின்றன. உங்கள் அளவற்ற ஆசைகளும் பேராசை நோக்கங்களும் கேட்பதற்கே அருவருப்பாக இருக்கின்றன. நீங்கள் அனைவரும் என் வீட்டில் அந்துப்பூச்சிகளாகிவிட்டீர்கள், அப்புறப்படுத்தப்பட வேண்டிய வெறுக்கத்தக்க பொருட்களாகிவிட்டீர்கள். ஏனெனில் உங்களில் யாரும் சத்தியத்தை நேசிப்பதில்லை. அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட விரும்புகிறீர்கள். பரலோகத்திற்கு ஏறிப்போக வேண்டும் என்றும், கிறிஸ்து பூமியில் தமது வல்லமையைப் பயன்படுத்தும் அற்புதமான காட்சியைக் காணவேண்டும் என்றும் விரும்புகிறீர்கள். ஆனால் உங்களைப் போன்ற, மிகவும் சீர்கேடான, தேவன் யார் என்று தெரியாத ஒருவர் தேவனைப் பின்பற்றுவதற்குத் தகுதியானவரா என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? உங்களால் எப்படிப் பரலோகத்திற்கு ஏறிப்போக முடியும்? முன்னெப்போதும் நடந்திராத அத்தகைய அற்புதமான காட்சிகளைப் பார்க்க நீங்கள் எவ்வாறு தகுதியுடையவர்களாக இருக்க முடியும்? உங்கள் வாயில் வஞ்சனையும் அசுத்தமுமான வார்த்தைகளும், துரோகமும் ஆணவமும் நிறைந்த வார்த்தைகளும் நிறைந்துள்ளன. நீங்கள் ஒருபோதும் என்னிடம் உண்மையான வார்த்தைகளைப் பேசவில்லை. என் வார்த்தையை அனுபவித்த பின்னும் உங்களிடம் பரிசுத்தமான வார்த்தைகளும் இல்லை, எனக்குக் கீழ்ப்படியும் வார்த்தைகளும் இல்லை. இறுதியில், உங்கள் விசுவாசம் தான் என்ன? உங்கள் உள்ளங்களில் ஆசை மற்றும் பணம் தவிர்த்து வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதில் பொருள் காரியங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும், என்னிடமிருந்து எதையாவது பெறுவது எப்படி என கணக்கிடுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், நீங்கள் என்னிடமிருந்து எவ்வளவு செல்வம் பெற்றிருக்கிறீர்கள் என்றும் எத்தனைப் பொருட்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும் எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகமான ஆசீர்வாதங்கள் உங்கள் மீது இறங்க காத்திருக்கிறீர்கள், இதனால் நீங்கள் இன்னும் அதிகமான அளவிலும், உயர்ந்த தரத்திலும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள். ஒவ்வொரு கணத்திலும் உங்கள் எண்ணங்களில் இருப்பது நான் இல்லை, என்னிடமிருந்து வரும் சத்தியமும் இல்லை, மாறாக உங்கள் கணவன் அல்லது மனைவி, உங்கள் மகன்கள், மகள்கள், நீங்கள் புசிக்கும் ஆகாரங்கள், அணியும் பொருட்கள் என இவைகளே உள்ளன. நீங்கள் எப்போதுமே மிகப் பெரிய, உயர்ந்த இன்பத்தை எவ்வாறு பெற முடியும் என்றே நினைக்கிறீர்கள். ஆனால் இவ்வாறு உங்கள் வயிற்றை நிரப்பி வெடிக்கச் செய்த பின்னும், நீங்கள் இன்னும் ஒரு சடலமாக இல்லையா? வெளிப்புறமாக, நீங்கள் அழகான ஆடைகளில் உங்களை அலங்கரிக்கும் போது கூட, நீங்கள் இன்னும் ஜீவனற்ற ஒரு நடைப்பிணமாக இல்லையா? உங்கள் தலைமயிர் நரைக்கும் வரை, உங்கள் வயிற்றின் பொருட்டு நீங்கள் உழைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் யாரும் என் கிரியைக்காக ஒரு தலைமயிரையும் தியாகம் செய்வதில்லை. நீங்கள் தொடர்ந்து பயணத்தில் இருக்கிறீர்கள். உங்கள் சொந்த மாம்சத்திற்காகவும், உங்கள் மகன்கள் மற்றும் மகள்களுக்காகவும் உங்கள் உடலுக்கு அதிகப் பாடுகளைக் கொடுத்து, உங்கள் மூளையைக் கசக்குகிறீர்கள். ஆனால் இன்னும் உங்களில் ஒருவர் கூட என் சித்தத்தின் மீது எந்தக் கவலையும் அக்கறையும் காட்டவில்லை. என்னிடமிருந்து நீங்கள் இன்னும் எதைப் பெறுவீர்கள் என்று நம்புகிறீர்கள்?

நான் கிரியை செய்யும் போது ஒருபோதும் அவசரப்படுவதில்லை. மனிதர்கள் என்னை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், எனது திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு படிநிலைக்கும் ஏற்ப, நான் எனது கிரியையைச் செய்கிறேன். ஆகவே, நீங்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்த போதிலும், நான் இன்னும் இடைவிடாமல் கிரியை செய்துகொண்டு நான் பேச வேண்டிய வார்த்தைகளைத் தொடர்ந்து பேசுகிறேன். என் வார்த்தைகளைக் கேட்கும்படிக்கு, நான் முன்குறித்தவர்களை என் வீட்டிற்கு அழைக்கிறேன். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களையும், என் வார்த்தைகளுக்காக ஏங்குகிறவர்களையும், நான் என் சிங்காசனத்தின் முன் கொண்டுவருகிறேன். என் வார்த்தைகளுக்குச் செவிகொடாமல், எனக்குக் கீழ்ப்படியாமல், என்னை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் அனைவரையும், அவர்களின் இறுதித் தண்டனைக்காகக் காத்திருக்க ஒருபுறமாக அவர்களை வைக்கிறேன். ஜனங்கள் அனைவரும் சீர்கேட்டுக்கு மத்தியிலும், பொல்லாங்கனின் கரத்தின் கீழும் வாழ்கிறார்கள், எனவே என்னைப் பின்பற்றுபவர்களில் பலரும் சத்தியத்திற்காக ஏங்குவதில்லை. அதாவது, பெரும்பாலானவர்கள் என்னை உண்மையாக ஆராதிப்பதில்லை. அவர்கள் என்னைச் சத்தியத்தோடு ஆராதிப்பதில்லை. ஆனால் சீர்கேடு மற்றும் கலகம் மூலமாகவும், வஞ்சக வழிமுறைகளாலும் என் நம்பிக்கையைப் பெற முயற்சிக்கிறார்கள். இந்தக் காரணத்தினால்தான் நான் சொல்கிறேன்: அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர். அழைக்கப்பட்டவர்கள் ஆழமாக சீர்கெடுக்கப்பட்டிருக்கின்றனர், அனைவரும் ஒரே காலத்தில் வாழ்கின்றனர், ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் அவர்களில் ஒரு பகுதியினர், அவர்கள் சத்தியத்தை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்பவர்கள் மற்றும் சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இந்த ஜனங்கள் மொத்தத்தில் மிகச் சிறிய பகுதியினரே. அவர்களிடமிருந்து நான் அதிக மகிமையைப் பெறுவேன். இந்த வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்கிறீர்களா என்று உங்களுக்குத் தெரியுமா? உங்கள் முடிவு எவ்வாறு இருக்கும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 352

நான் சொன்னது போல், என்னைப் பின்தொடர்பவர்கள் பலர், ஆனால் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் சிலரே. ஒருவேளை சிலர், “நான் உம்மை நேசிக்காவிட்டால் நான் இவ்வளவு பெரிய விலைக்கிரயம் செலுத்தியிருப்பேனா? நான் உம்மை நேசிக்காவிட்டால் நான் இந்த நிலை வரையிலும் பின்பற்றி வந்திருப்பேனா?” என்று கூறலாம். நிச்சயமாக, உன்னிடம் பல காரணங்கள் உள்ளன, உன் அன்பு, நிச்சயமாக, மிகச் சிறந்தது, ஆனால் என் மீதான உன் அன்பின் சாராம்சம் என்ன? “அன்பு” அது அழைக்கப்படுவது போலவே, தூய்மையான மற்றும் களங்கமில்லாத ஓர் உணர்ச்சியைக் குறிக்கிறது, இங்கு நீங்களோ உங்கள் மனதை நேசிக்கவும், உணரவும், சிந்தனைமிக்கதாய் இருக்கவும் பயன்படுத்துகிறீர்கள். அன்பில் எந்த நிபந்தனைகளும் இல்லை, தடைகளும் இல்லை, இடைவெளியும் இல்லை. அன்பில் எந்த சந்தேகமும் இல்லை, வஞ்சகமும் இல்லை, தந்திரமும் இல்லை. அன்பில் வர்த்தகம் இல்லை மற்றும் தூய்மையற்றது எதுவும் இல்லை. நீ நேசித்தால், நீ ஏமாற்றவோ, குறைகூறவோ, துரோகம் செய்யவோ, கலகம் செய்யவோ, பெற்றுக்கொள்ள நிர்பந்திக்கவோ, எதையாவது பெற்றிடவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறவோ முயலமாட்டாய். நீ நேசித்தால், நீ மகிழ்ச்சியுடன் உன்னை அர்ப்பணிப்பாய், மகிழ்ச்சியுடன் கஷ்டங்களை அனுபவிப்பாய். நீ என்னுடன் ஒத்துப்போவாய், எனக்காக உன்னிடம் உள்ள அனைத்தையும் கைவிடுவாய், உன் குடும்பம், உன் எதிர்காலம், உன் இளமை மற்றும் உன் திருமணம் என அனைத்தையும் கைவிடுவாய். இல்லையென்றால், உன் அன்பு அன்பாகவே இருக்காது, வஞ்சகமும் துரோகமுமாய் இருக்கும்! எத்தகையது உன்னுடைய அன்பு? அது உண்மையான அன்பா? அல்லது பொய்யானதா? நீ எவ்வளவு கைவிட்டிருக்கிறாய்? நீ எவ்வளவு வழங்கியிருக்கிறாய்? உன்னிடமிருந்து நான் எவ்வளவு அன்பைப் பெற்றுள்ளேன்? உனக்குத் தெரியுமா? உங்கள் இருதயங்கள் பொல்லாப்பினாலும், துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறு இருப்பதால், உங்கள் அன்பு எவ்வளவு தூய்மையற்றதாயிருக்கிறது? நீங்கள் ஏற்கனவே எனக்காகப் போதுமானதை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள். என் மீதான உங்கள் அன்பு ஏற்கனவே போதுமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் வார்த்தைகளும் செயல்களும் ஏன் எப்போதும் கலகத்தனமாகவும் வஞ்சகமாகவும் இருக்கின்றன? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என் வார்த்தையை ஏற்கவில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விலக்கிவைக்கிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனால் உங்களால் நான் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனாலும் நான் யார் என்பதற்கேற்ப என்னை நடத்துவதில்லை, மேலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எனக்குக் காரியங்களைக் கடினமாக்குகிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் என்னைப் பின்பற்றுகிறீர்கள், ஆனாலும் நீங்கள் என்னை முட்டாளாக்கி ஒவ்வொரு காரியத்திலும் என்னை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் எனக்கு ஊழியம் செய்கிறீர்கள், ஆனால் நீங்கள் எனக்குப் பயப்படுவதில்லை. இது அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் எல்லா வகையிலும் எல்லாவற்றிலும் என்னை எதிர்க்கிறீர்கள். இதெல்லாம் அன்பாகக் கருதப்படுமா? நீங்கள் அதிகம் அர்ப்பணித்திருக்கிறீர்கள், அது உண்மைதான், ஆனாலும் நான் உங்களிடம் கேட்பதை நீங்கள் ஒருபோதும் கடைபிடிப்பதில்லை. இதை அன்பாகக் கருத முடியுமா? நீங்கள் கவனமாகக் கணக்கிட்டுச் செயல்படுவது எனக்கான அன்பின் சிறிதளவு அடையாளமும் உங்களுக்குள் இல்லை என்பதைக் காட்டுகிறது. பல ஆண்டுகளான என் கிரியைக்குப் பிறகும், நான் வழங்கிய பல வார்த்தைகளுக்குப் பிறகும், நீங்கள் உண்மையில் எவ்வளவு பெற்றுக் கொண்டீர்கள்? கவனமாகத் திரும்பிப் பார்ப்பதற்கு இது தகுதியற்றதா? நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்: நான் என்னிடம் அழைப்பவர்கள் அனைவரும் ஒருபோதும் சீர்கெடுக்கப்படாதவர்கள் அல்ல; மாறாக, நான் தெரிந்துகொள்பவர் அனைவரும் என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஆவர். ஆகையால், உங்கள் சொற்களிலும் செயல்களிலும் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் உங்கள் நோக்கங்களையும் எண்ணங்களையும் எல்லை மீறாதபடி அவற்றை ஆராய வேண்டும். கடைசி நாட்களில், என் கோபம் உங்களிடமிருந்து விலகி இருக்கும்படிக்கு, எனக்கு முன் உங்கள் அன்பைச் செலுத்த உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 353

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரது செயல்களும் எண்ணங்களும் ஒருவரானவரின் கண்களால் பார்க்கப்படுகின்றன, அதே நேரத்தில், அவர்களின் நாளைய தினத்திற்காக ஆயத்த நிலையிலும் இருக்கின்றன. இதுவே ஜீவனுள்ள அனைவரும் செல்ல வேண்டிய பாதையாகும்; இதுவே நான் அனைவருக்காகவும் முன்குறித்துள்ள பாதையாகும், எவரும் இதிலிருந்து தப்பிச் செல்லவோ இதிலிருந்து விலக்களிக்கப்படவோ முடியாது. நான் கூறியுள்ள வார்த்தைகள் எண்ணிலடங்காதவை, மேலும், நான் செய்துள்ள கிரியைகள் அளவிடப்பட முடியாதவை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த சுபாவம் மற்றும் அவர்களின் சுபாவத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப செய்ய வேண்டியவற்றை இயல்பாகவே மேற்கொள்ளும்போது நான் பார்க்கின்றேன். ஏற்கனவே பலர், தங்களை அறியாமலேயே, வெவ்வேறு வகையான ஜனங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக நான் வகுத்துள்ள “சரியான பாதையில்” பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வெவ்வேறு வகையான ஜனங்களை நான் நீண்ட காலத்திற்கு முன்னரே வெவ்வேறு சூழ்நிலைகளில் வைத்துள்ளதுடன், அவர்களுக்குரிய இடங்களிலிருந்து, ஒவ்வொருவரும் தங்களின் இயல்பான குணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைக் கட்டுவதற்கு யாருமில்லை, அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டுவதற்கு யாருமில்லை. அவர்கள் முழுமையாக விடுதலையோடு இருப்பதுடன், அவர்கள் வெளிப்படுத்துபவை இயல்பாகவே வருகின்றன. ஒரே ஒரு விஷயம்தான் அவர்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கிறது: என் வார்த்தைகள். இதனால், சிலர் எனது வார்த்தைகளை மனவெறுப்புடன் வாசிக்கின்றனர், ஒருபோதும் அவற்றைக் கடைபிடிப்பதில்லை, மரணத்தைத் தவிர்ப்பதற்காக மாத்திரமே இவ்வாறு செய்கின்றனர்; ஏனையோர், அதே வேளையில், அவர்களுக்கு அளிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் எனது வார்த்தைகளின்றி நாட்களைப் பொறுத்துக் கொள்வதற்குக் கஷ்டப்படுகின்றனர், எனவே இயல்பாகவே எல்லா நேரங்களிலும் எனது வார்த்தைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றனர். காலப்போக்கில், மனித வாழ்வின் இரகசியத்தையும், மனிதகுலத்தின் இலக்கையும் மனிதனாக இருப்பதன் மதிப்பையும் அவர்கள் கண்டறிகின்றனர். என் வார்த்தைகளின் பிரசன்னத்தில், மனித குலம் இவ்வாறே உள்ளது என்பதுடன் நான் வெறுமனே காரியங்களை அவற்றின் போக்கில் செல்வதற்கு அனுமதிக்கிறேன். என் வார்த்தைகளைத் தங்கள் ஜீவிதத்தின் அஸ்திவாரமாக ஆக்குமாறு மக்களை நிர்ப்பந்திக்கும் எந்தக் கிரியையையும் நான் செய்வதில்லை. எனவே எப்போதும் மனசாட்சியுடன் இல்லாதோர், மற்றும் அவர்களின் ஜீவிதத்திற்கு எப்போதுமே ஏதேனும் மதிப்பு கொண்டிராதோர், என் வார்த்தைகளைத் துணிச்சலுடன் ஒதுக்கி வைத்து, விஷயங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதை அமைதியாக கவனித்த பின்னர் அவர்கள் விரும்பியவாறு செய்கின்றனர். சத்தியத்தையும் என்னிடமிருந்து வரும் எல்லாவற்றையும் அவர்கள் வெறுக்க ஆரம்பிக்கின்றனர். மேலும், எனது வீட்டில் தங்கியிருப்பதைக் குறித்தும் அவர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். இந்த ஜனங்கள் ஊழியம் செய்தாலும், அவர்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்காகவும், தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும் எனது வீட்டினுள் சிலகாலம் தங்கியிருக்கின்றனர். ஆயினும், அவர்களின் நோக்கங்களும் செயல்களும் ஒருபோதும் மாறுவதில்லை. ஆசீர்வாதங்களுக்கான அவர்களின் விருப்பத்தை இது அதிகரிப்பதுடன் ராஜ்யத்தினுள் ஒரு தடவை பிரவேசித்து—நித்திய பரலோகத்தினுள் பிரவேசிப்பதற்கும் கூட, அதன் பின்னர் அங்கேயே தங்குவதற்கான விருப்பத்தையும் அதிகரிக்கின்றது. எனது நாள் விரைவில் வரவேண்டுமென அவர்கள் எவ்வளவு அதிகமாக ஏங்குகிறார்களோ, சத்தியம் ஒரு தடையாகவும், தங்களின் பாதையில் ஒரு தடைக்கல்லாகவும் இருப்பதாக அவர்கள் அவ்வளவு அதிகமாக உணர்கின்றனர். பரலோக ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை எப்போதும் அனுபவிப்பதற்காக—சத்தியத்தைப் பின்பற்ற வேண்டிய அல்லது நியாத்தீர்ப்பு மற்றும் சிட்சையை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமின்றி, எல்லாவற்றிற்கும் மேலாக, என் வீட்டினுள் பணிந்திருந்து நான் கட்டளையிடும்படி செய்ய வேண்டிய அவசியமின்றி—ராஜ்யத்தினுள் காலடியெடுத்து வைப்பதற்கு அவர்களால் காத்திருக்க முடிவதில்லை. இந்த ஜனங்கள் சத்தியத்தைக் கண்டடைவதற்கான தங்களின் ஆர்வத்தைத் திருப்தி செய்வதற்காகவோ, எனது ஆளுகைக்கு ஒத்துழைப்பதற்காகவோ எனது வீட்டினுள் பிரவேசிப்பதில்லை: வரப்போகும் காலத்தில் அழிக்கப்படாதோர் மத்தியில் இருப்பது மாத்திரமே அவர்களின் இலக்கு. இதனால், அவர்களின் இருதயங்கள் சத்தியத்தையோ, சத்தியத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்பதையோ எப்போதும் அறிந்திருக்கவில்லை. அத்தகைய ஜனங்கள் எப்போதும் சத்தியத்தைக் கடைப்பிடிக்காமைக்கும் தங்களின் சீர்கேட்டின் ஆழத்தை உணராதிருந்தமைக்கும், இன்னும் முழுவதுமாக எனது வீட்டில் “ஊழியக்காரர்களாக” தங்கியிருந்தமைக்குமான காரணம் இதுவே. அவர்கள் எனது நாளின் வருகைக்காகப் “பொறுமையுடன்” காத்திருப்பதுடன் எனது கிரியை செய்யப்படும் விதத்தினால் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டும் சோர்வின்றிக் காணப்படுகின்றனர். அவர்களின் முயற்சி எவ்வளவு பெரியதாக இருப்பினும் அல்லது என்ன விலையை அவர்கள் கொடுப்பினும், யாரும் சத்தியத்திற்காக துன்பப்பட்டதையோ எனது நிமித்தம் எதையேனும் அளித்ததையோ எவரும் எப்போதும் கண்டதில்லை. தங்கள் இருதயங்களில், முதிர்வயதிற்கு நான் முடிவுகட்டும் நாளைப் பார்ப்பதற்கு அவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர், மேலும், எனது வல்லமையும் அதிகாரமும் எத்துணை சிறந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஆவலாக உள்ளனர். அதனால், அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்காவும் சத்தியத்தைப் பின்தொடர்வதற்காகவுமே அவர்கள் ஒருபோதும் விரைந்து செயல்படுவதில்லை. நான் வெறுப்பதை அவர்கள் நேசிக்கின்றனர், நான் நேசிப்பவற்றில் அவர்கள் வெறுப்புக் கொண்டுள்ளனர். நான் வெறுப்பவற்றிற்காக அவர்கள் ஏங்குகின்றனர், ஆனால் நான் அருவருப்பவற்றை இழப்பது குறித்துப் பயப்படுகின்றனர். இவர்கள் இந்தப் பொல்லாத உலகில், அதனை எப்போதும் வெறுக்காது வாழ்கின்றனர், ஆயினும், நான் இதனை அழித்துவிடுவேன் என மிகுந்த அச்சமுடையவர்களாக உள்ளனர். அவர்களின் முரண்பாடான நோக்கங்களுக்கு மத்தியில், நான் அருவருக்கும் இவ்வுலகத்தை அவர்கள் நேசிக்கின்றனர், ஆனால் அழிவின் வேதனையிலிருந்து அவர்கள் தப்புவிக்கப்பட்டு அடுத்த சகாப்தத்தின் பிரபுக்களாக மாற்றப்படும்படி, சத்தியத்தின் வழியிலிருந்து அவர்கள் வழிதப்பிச் செல்வதற்கு முன்னர் நான் இவ்வுலகை உடனடியாக அழிக்க வேண்டுமெனவும் அவர்கள் ஏங்குகின்றனர். ஏனெனில் இவர்கள் சத்தியத்தை நேசிப்பதில்லை என்பதுடன், என்னிடமிருந்து வரும் எல்லாவற்றைக் குறித்தும் வெறுப்படைந்துள்ளனர். அவர்கள் ஆசீர்வாதங்களை இழக்காதிருக்க வேண்டும் என்பதன் நிமித்தம் குறுகிய காலத்திற்கு “கீழ்ப்படியும் ஜனங்களாக” ஆகலாம், ஆனால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும் அழிவடைந்து எரியும் அக்கினிக் குளத்தில் பிரவேசிப்பதன் மீதான பயமும் ஒருபோதும் மூடி மறைக்கப்பட முடியாது. எனது நாள் நெருங்கும்போது, அவர்களின் விருப்பம் மேலும் வலுவாக வளர்கின்றது. பேரழிவு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, என்னை மகிழ்விப்பதற்கும் அவர்கள் நீண்டகாலமாக ஏங்கியுள்ள ஆசீர்வாதங்களை இழப்பதைத் தவிர்ப்பதற்குமாக எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை அறியாமல் அவர்களை அது அவ்வளவு அதிகமாக நிராதரவாக்குகின்றது. எனது கையானது அதன் கிரியையை ஆரம்பித்த உடனே முன்னணிப் படையாக செயல்படுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இத்தகைய மக்கள் ஆவலாக உள்ளனர். நான் அவர்களைப் பார்க்க மாட்டேன் என மிகவும் பயந்து, படைகளின் முன்வரிசைக்கு சென்றுவிட வேண்டும் என்பதை மாத்திரமே அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் செய்யும் செய்கைகளும் செயல்களும் சத்தியத்திற்கு எப்போதுமே இணக்கமாக இருப்பதில்லை எனவும், அவர்களின் செயல்கள் என் திட்டத்தைக் குழப்பி இடையூறு விளைவிக்கின்றன எனவும் அறியாது, அவர்கள் சரியானது என எண்ணுபவற்றை செய்கின்றனர் மற்றும் கூறுகின்றனர். அவர்கள் பெரிய அளவில் முயற்சி செய்திருக்கலாம், அத்துடன் துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் அவர்களின் சித்தத்திலும் நோக்கத்திலும் அவர்கள் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர்கள் செய்யும் எவையும் என்னுடன் தொடர்புடையவை அல்ல, ஏனெனில் அவர்களின் கிரியைகள் நல்ல நோக்கங்களிலிருந்து வருவதை நான் ஒருபோதும் கண்டதில்லை, எனது பீடத்தின் மீது எதனையும் அவர்கள் வைத்ததையும் கண்டதுமில்லை. இத்தகையக் கிரியைகளையே அவர்கள் எனக்கு முன்னர் இத்தனை வருடங்களாக செய்திருக்கின்றார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 354

முதலில், நான் உங்களுக்கு அதிக சத்தியங்களை வழங்க விரும்பினேன், ஆனால் சத்தியத்தை நோக்கிய உங்கள் சிந்தை மிகவும் உணர்ச்சியற்றதாகவும் அலட்சியமாகவும் இருப்பதால் நான் இதை தவிர்க்க வேண்டியிருந்தது; எனது முயற்சிகள் வீணாகப் போவதை நான் விரும்பவுமில்லை, ஜனங்கள் எனது வார்த்தைகளைப் பற்றிக் கொண்டாலும், எல்லா விதங்களிலும் என்னை எதிர்ப்பதை, என்னை அவதூறு செய்வதை மற்றும் என்னைத் தூஷிப்பதைப் பார்ப்பதற்கு நான் விரும்பவுமில்லை. உங்கள் சிந்தை மற்றும் உங்கள் மனிதத்தன்மை காரணமாக, மனிதகுலத்தின் மத்தியில் என் சோதனை கிரியையாக செயல்படுகின்ற என் வார்த்தைகளின் மிக முக்கியமான பகுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன், சிறிய பகுதியை மட்டுமே உங்களுக்கு வழங்குகிறேன். நான் செய்த தீர்மானங்களும், திட்டமும் உங்கள் தேவைகளுக்குப் பொருந்துகின்றன என்பதையும், மேலும், மனிதகுலத்தின் மீதான எனது அணுகுமுறை சரியானது என்பதையும் இப்போதுதான் நான் மெய்யாகவே உறுதிப்படுத்தினேன். எனக்கு முன்பாக உங்களின் பல ஆண்டுகால நடத்தை முன்னெப்போதும் பெற்றிராத பதிலொன்றை எனக்கு வழங்கியுள்ளது, இந்தப் பதிலுக்கான கேள்வி: “சத்தியம் மற்றும் மெய்யான தேவன் முன் மனிதனின் சிந்தை என்ன?” நான் மனிதனுக்கு அர்ப்பணித்த முயற்சிகள், மனிதன் மீதான என் அன்பின் சாராம்சத்தை நிரூபிக்கின்றன, மற்றும் எனக்கு முன்பாக மனிதனின் ஒவ்வொரு செயலும் சத்தியத்தை நோக்கிய அருவருப்பினையும் என் மீதான எதிர்ப்பினையும் காட்டுகிறது. எல்லா நேரங்களிலும், என்னைப் பின்பற்றும் எல்லோரையும் குறித்து நான் அக்கறை கொண்டுள்ளேன், ஆயினும், எந்தவொரு நேரத்திலும் என்னைப் பின்பற்றுவோர் எனது வார்த்தைகளை பெற்றுக் கொள்ள முடிவதில்லை; அவர்களால் எனது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்குக் கூட முடியாதுள்ளனர். இதுவே எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. எனது சிந்தை நேர்மையானதாகவும், எனது வார்த்தைகள் மென்மையானவையாகவும் இருக்கின்றபோதும், என்னை எவராலும் எப்போதும் புரிந்துகொள்ள முடிவதில்லை, மேலும் என்னை எவராலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளவும் முடிவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் சொந்த யோசனைகளுக்கு ஏற்ப நான் அவர்களுக்கு கையளித்த வேலையை செய்ய முயற்சி செய்கிறார்கள்; அவர்கள் என் நோக்கங்களை நாடுவதில்லை, நான் அவர்களிடம் என்ன கேட்கிறேன் எனவும் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் வேளையில், இன்னும் எனக்கு விசுவாசமாக ஊழியம் செய்ததாக அவர்கள் கூறுகின்றனர். அநேகர், அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது அவர்கள் கடைப்பிடிக்க முடியாத சத்தியங்களைச் சத்தியங்களே அல்ல என நம்புகின்றார்கள். அத்தகைய ஜனங்களிடம், என் சத்தியங்கள் மறுக்கப்பட்டு, ஒதுக்கிவிடப்படுபவையாக ஆகின்றன. அதே நேரத்தில், ஜனங்கள் வார்த்தையில் என்னை தேவனாக அங்கீகரிக்கின்றனர், ஆயினும் என்னைச் சத்தியம், வழி அல்லது ஜீவனாக இல்லாத வெளியாள் ஒருவர் எனவும் நம்புகின்றனர். இந்தச் சத்தியம் ஒருவருக்கும் தெரியாது: என் வார்த்தைகள் எப்போதும் மாறாத சத்தியமாய் இருக்கின்றன. நான் மனிதனுக்கு ஜீவனை அளிப்பதுடன் மனிதகுலத்தின் ஒரே வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எனது வார்த்தைகளின் மதிப்பும் அர்த்தமும் மனிதகுலத்தினால் அவை அங்கீகரிக்கப்படுகின்றனவா அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா என்பதனால் அல்ல, ஆனால் வார்த்தைகளின் சாராம்சத்தினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வுலகிலுள்ள ஒரு மனிதர் கூட எனது வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, எனது வார்த்தைகளின் மதிப்பும் மனிதகுலத்திற்கு அவற்றின் உதவியும் எந்த மனிதனாலும் மதிப்பிடப்பட முடியாதது. ஆகவே, என் வார்த்தைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும், மறுதலிக்கும், அல்லது முற்றிலும் வெறுக்கும் அநேக ஜனங்களை எதிர்கொள்ளும் போது, என் நிலைப்பாடு இது மாத்திரமே: காலமும் உண்மைகளும் எனது சாட்சிகளாகி எனது வார்த்தைகளே சத்தியம், வழி மற்றும் ஜீவன் எனக் காட்டட்டும். நான் கூறியவை எல்லாம் சரி எனவும், இதுவே மனிதனுக்குத் தரப்பட வேண்டும் எனவும், மேலும், மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவை காட்டட்டும். என்னைப் பின்பற்றும் அனைவருக்கும் இந்த உண்மையை நான் தெரியப்படுத்துவேன்: எனது வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளைக் கடைபிடிக்க முடியாதோர், எனது வார்த்தைகளினால் இலக்கைக் கண்டறிய முடியாதோர் மற்றும் எனது வார்த்தைகளின் நிமித்தமான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியாதோர், எனது வார்த்தைகளினால் கண்டிக்கப்பட்டோர், மேலும், எனது இரட்சிப்பை இழந்தோர் ஆகிய இவர்களிடமிருந்து எனது கோல் என்றும் விலகிச் செல்லாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உங்களின் செய்கைகளை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 355

மனுக்குலம் சமூக அறிவியலைக் கண்டுபிடித்தது முதல், மனிதனின் மனம் அறிவியலாலும் அறிவாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அறிவும் மனுக்குலத்தை ஆட்சி செய்யும் கருவிகளாக மாறியுள்ளன. மேலும் தேவனைத் தொழுதுகொள்வதற்கு மனுஷனுக்குப் போதுமான இடமோ, தேவனைத் தொழுதுகொள்வதற்கான சாதகமான சூழ்நிலைகளோ இல்லை. தேவனுடைய நிலை மனிதனின் இருதயத்தின் அடியில் எப்போதும் மூழ்கிப்போய்விட்டது. மனுஷனுடைய இருதயத்தில் தேவன் இல்லாமல், அவனுடைய உள் உலகம் இருண்டதாகவும், நம்பிக்கையற்றதாகவும் மேலும் வெறுமையானதாகவும் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல சமூக விஞ்ஞானிகளும், வரலாற்றாசிரியர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் மனுஷர்களின் இருதயங்களையும் மனதையும் நிரப்புவதற்காக சமூக அறிவியல் கோட்பாடுகள், மனிதப் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகள் மற்றும் தேவன் மனுஷனைச் சிருஷ்டித்தார் என்ற உண்மைக்கு முரணான பிற கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்விதமாக, தேவனே சகலத்தையும் சிருஷ்டித்தார் என்று நம்புகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது, அதேநேரத்தில் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெரும்பாலானவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்திலுள்ள தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய வார்த்தைகளின் பதிவுகளைப் புராணங்களாகவும் புராணக்கதைகளாகவும் கருதுகிறார்கள். தேவனுடைய மேன்மையையும் மகத்துவத்தையும் குறித்தும், தேவன் ஜீவிக்கிறார் மற்றும் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற நம்பிக்கையைக் குறித்தும் ஜனங்கள் தங்கள் இருதயங்களில் அலட்சியத்துடன் காணப்படுகிறார்கள். மனுக்குலத்தின் ஜீவியமும், நாடுகளின் மற்றும் தேசங்களின் தலைவிதியும் அவர்களுக்கு ஒருபோதும் முக்கியமானதாக இல்லை. புசித்துக் குடித்து, இன்பத்தை நாடுவதில் மாத்திரமே அக்கறை கொண்ட ஒரு வெற்று உலகில் மனுஷன் வாழ்கிறான். … தேவன் இன்று எங்கு தனது கிரியையைச் செய்கிறார் என்பதை நாடியோ அல்லது அவர் மனுஷனுடைய தலைவிதியை எவ்வாறு அடக்கி ஆள்கிறார் மற்றும் ஒழுங்குபடுத்துகிறார் என்பதை நாடியோ கொஞ்சப்பேர் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். இவ்விதமாக, மனுஷனுக்குத் தெரியாமலே, மனித நாகரிகமானது மனிதனின் ஆசைகளைத் துண்டிக்கக்கூடியதாக மாறுகிறது. மேலும் இதுபோன்ற உலகில் வாழ்வதில், ஏற்கனவே மரணித்தவர்களைக் காட்டிலும் குறைவாகவே சந்தோஷமாகக் காணப்படுவதாகக் கருதும் பலரும் உள்ளனர். மிகவும் நாகரிகமாக இருக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூட இதுபோன்ற மனவருத்தங்களை வெளிப்படுத்துகிறார்கள். தேவனுடைய வழிகாட்டுதல் இல்லாமல், ஆட்சியாளர்களும் சமூகவியலாளர்களும் மனித நாகரிகத்தைப் பாதுகாக்க எவ்வளவு மூளையைக் கசக்கினாலும், அதில் பிரயோஜனமில்லை. யாரும் மனுஷனின் ஜீவனாக இருக்க இயலாது என்பதனால், மனுஷனுடைய இருதயத்திலுள்ள வெறுமையை யாராலும் நிரப்ப இயலாது. எந்தவொரு சமூகக் கோட்பாடும் மனுஷனை அவன் அவதிப்படும் வெறுமையிலிருந்து விடுவிக்க இயலாது. அறிவியல், அறிவு, சுதந்திரம், ஜனநாயகம், ஓய்வு, சௌகரியம் ஆகியவை மனுஷனுக்கு ஒரு தற்காலிக ஆறுதலை மாத்திரமே கொண்டுவருகின்றன. இந்தக் காரியங்கள் மூலமாகவும் கூட, மனுஷன் இன்னும் தவிர்க்க முடியாமல் பாவம் செய்து, சமுதாயத்தின் அநீதிகளை எண்ணிப் புலம்புகிறான். இந்த காரியங்களால் ஆராய்வதற்கான மனுஷனின் வாஞ்சையையும் ஆசையையும் தடுக்க இயலாது. ஏனென்றால், மனுஷன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான், மேலும் மனுஷனின் அறிவில்லாத தியாகங்களும் ஆராய்ச்சிகளும் மனுஷனின் எதிர்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது முன்னால் உள்ள பாதையை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அதிகத் துயரத்திற்கு மாத்திரமே வழிவகுக்கும் மற்றும் மனுஷனை ஒரு நிலையான பயத்தில் மாத்திரமே வைத்திருக்கும். மனுஷன் அறிவியலையும் அறிவையும் பார்த்துக்கூட பயப்படுகிறான், மேலும் வெறுமை உணர்வினால் இன்னும் அதிகமாகப் பயப்படுவான். இந்த உலகில், நீ ஒரு சுதந்திர நாட்டில் வாழ்ந்தாலும் அல்லது மனித உரிமைகள் இல்லாத ஒரு நாட்டில் வாழ்ந்தாலும், நீ மனுக்குலத்தின் தலைவிதியிலிருந்து முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது. நீ ஆள்பவனாக இருந்தாலும் அல்லது ஆளப்படுபவனாக இருந்தாலும், மனுக்குலத்தின் தலைவிதி, மர்மங்கள் மற்றும் போய்ச்சேருமிடம் ஆகியவற்றை ஆராய்வதற்கான பிரயாசத்திலிருந்து உன்னால் முற்றிலும் தப்பித்துக்கொள்ள இயலாது, மேலும் வெறுமை என்னும் குழப்பமான உணர்விலிருந்து உன்னால் தப்பித்துக்கொள்ள இயலாது. மனுக்குலம் முழுவதிற்கும் பொதுவான இதுபோன்ற நிகழ்வுகள் சமூகவியலாளர்களால் சமூக தோற்றப்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, ஆனாலும் இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க எந்த ஒரு பெரிய மனுஷனும் முன்வர இயலவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷன் எப்படியானாலும் மனுஷன்தான். தேவனுடைய நிலையையும் ஜீவனையும் எந்த மனுஷனாலும் ஈடு செய்ய முடியாது. அனைவரும் நன்கு புசித்தும், சமமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் வாழும் ஒரு நியாயமான சமூகம் மனுக்குலத்திற்கு தேவைப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய இரட்சிப்பும், அவர்களுக்கு அவர் அருளும் ஜீவனும் மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. தேவன் அருளும் ஜீவனையும் அவரது இரட்சிப்பையும் பெறும்போது மாத்திரமே, தேவைகள், ஆராய்வதற்கான வாஞ்சை மற்றும் மனுஷனின் ஆவிக்குரிய வெறுமை ஆகியவற்றுக்கு தீர்வுகாண இயலும். ஒரு நாட்டின் அல்லது ஒரு தேசத்தின் ஜனங்களால் தேவனுடைய இரட்சிப்பையும் கவனிப்பையும் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், இதுபோன்ற ஒரு நாடோ அல்லது தேசமோ வீழ்ச்சியையும், இருளையும் நோக்கிச்செல்லும் சாலையில் காலடி எடுத்து வைக்கும், மேலும் தேவனால் நிர்மூலமாக்கப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 2: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 356

வெளிச்சமில்லாத உலகத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதனால், உன் இருதயத்தில் ஒரு மிகப்பெரிய இரகசியம் இருக்கின்றதை உன்னால் அறிய முடியவில்லை. பொல்லாங்கனால் உன் இருதயமும் ஆவியும் பிடுங்கப்பட்டுள்ளன. உன் கண்கள் இருளடைந்திருப்பதால், வானத்தின் சூரியனையும், இரவில் மின்னும் நட்சத்திரத்தையும் உன்னால் காணமுடியவில்லை. உன் காதுகள் வஞ்சகம் நிறைந்த வார்த்தைகளினால் அடைக்கப்பட்டிருப்பதினால், யேகோவாவின் இடிமுழக்கம்போன்ற குரலையும், அவருடைய சிங்காசனத்தில் இருந்து பாயும் தண்ணீர்களின் சத்தத்தையும் உன்னால் கேட்க முடியவில்லை. சர்வவல்லவர் உனக்கு அளித்த எல்லாவற்றையும், உனக்கு உரிமையுள்ளதாய் இருக்கும் எல்லாவற்றையும் நீ இழந்துவிட்டாய். முடிவில்லாத பெருந்துன்பக் கடலுக்குள் நீ பிரவேசித்துவிட்டாய், உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ளும் வலிமை இல்லாமல், தப்பிக்கும் வழி தெரியாமல், இப்போது இங்கும் அங்கும் அலைந்து துடித்துக்கொண்டிருக்கின்றாய். அந்தக் கணம் முதல் நீ பொல்லாங்கனால் வாதிக்கப்பட விதிக்கப்பட்டாய், சர்வவல்லவரின் ஆசீர்வாதங்களில் இருந்து மிகத்தொலைவான இடத்திற்கு, சர்வவல்லவர் வழங்குபவை உன்னை வந்தடைய முடியாத தூரத்திற்கு, திரும்பிவரமுடியாத சாலையில் நீ போய்விட்டாய். இப்போது இலட்சோபலட்சம் அழைப்புகளினாலும் உன் இருதயத்தையும், ஆவியையும் எழுப்பமுடியவில்லை. திசையும், வழிகாட்டியும் இல்லாத எல்லையில்லாத பகுதிக்கு உன்னை நயங்காட்டி அழைத்து வந்த பொல்லாங்கனின் கைகளில் நீ அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கின்றாய். அன்றிலிருந்து நீ உன் களங்கமின்மையையும், தூய்மையையும் இழந்தாய், சர்வவல்லவரின் கரிசனையையும் விட்டு விலக ஆரம்பித்தாய். உன் இருதயத்தில் இருக்கும் பொல்லாங்கன் தான் இப்போது உன்னை எல்லாக் காரியங்களிலும் வழிநடத்துகின்றான். உன் வாழ்க்கையாகவே அவன் மாறிவிட்டான். இப்போது நீ அவனுக்குப் பயப்படுவதில்லை, அவனைத் தவிர்ப்பதில்லை, அவனை சந்தேகப்படுவதுமில்லை, மாறாக, நீ அவனை இப்போது உன் இருதயத்தில் தேவனாக மதிக்கின்றாய். நீ அவனை ஆராதிக்கவும் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்துவிட்டாய், உடலும், நிழலும் போல நீங்கள் வாழ்விலும், சாவிலும் பிரிக்கமுடியாதவர்களைப் போல மாறிவிட்டீர்கள். நீ எங்கிருந்து வந்தாய் என்றோ, ஏன் பிறந்தாய் என்றோ, ஏன் மரிப்பாய் என்றோ அறியாமல் இருக்கின்றாய். நீ சர்வவல்லவரை அந்நியனைப்போலப் பார்க்கின்றாய். அவருடைய துவக்கம் எதுவென்றோ, அவர் உனக்குச் செய்தவைகள் என்னவென்றோ கூட உனக்குத் தெரியாது. அவரிடமிருந்து வருகின்ற எல்லாவற்றையும் நீ வெறுக்கின்றாய். நீ அதை மதிக்கவுமில்லை, அதன் மதிப்பை அறியவுமில்லை. சர்வவல்லவர் வழங்கியவற்றை நீ பெற்ற நாள் முதல் பொல்லாங்கனோடு நடக்க ஆரம்பித்தாய். நீ பொல்லாங்கனோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் புயலையும், காற்றையும் சகித்துவிட்டாய், ஆனாலும் அவனோடு சேர்ந்து உன் வாழ்க்கையின் ஆதாரமான தேவனை எதிர்க்கின்றாய். மனம்திரும்புதலைக் குறித்தோ, உன் அழிவின் விளிம்பிற்கு நீ வந்துவிட்டதைக் குறித்தோ நீ இன்னும் அறியவில்லை. பொல்லாங்கன் உன்னை நயமாக இழுத்துக்கொண்டதையோ, உன்னை வாதித்ததையோ நீ அறியவில்லை, நீ உன் துவக்கங்களை மறந்துபோய்விட்டாய். இன்றுவரை உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவன் உன்னை வாதித்துள்ளான். உன் இருதயமும், ஆவியும் உணர்விழந்து, அழிந்துவிட்டன. இப்போதெல்லாம், நீ மனித உலகின் பாடுகளைக் குறித்து குறைகூறுவதை நிறுத்திவிட்டாய். இந்த உலகம் அநீதி நிறைந்தது என்று நீ இனி ஒருபோதும் நம்புவதில்லை. சர்வவல்லவர் என்று ஒருவர் இருக்கின்றாரா என்று கூட நீ கவலைப்படுவதில்லை. அதன் காரணம், நீ வெகுகாலத்திற்கு முன்பே பொல்லாங்கனை உன்னுடைய மெய்யானத் தகப்பனாக ஏற்றுக் கொண்டாய், இப்போது அவனில்லாமல் உன்னால் இருக்க முடியவில்லை. இதுதான் உன்னுடைய இருதயத்தில் உள்ள இரகசியம்.

பொழுது விடியும்போது, கிழக்கில் ஒரு விடிவெள்ளி மின்னுகிறது. முன் இருந்திராத இந்த நட்சத்திரம், மினுமினுக்கும் அமைதியான வானங்களை வெளிச்சமடையச் செய்து மனிதர்களின் இருதயங்களில் அணைக்கப்பட்ட வெளிச்சத்தை மீண்டும் ஜொலிக்கச் செய்கிறது. உன்மேலும் மற்றவர்கள்மேலும் ஒன்றுபோல வீசும் இந்த வெளிச்சத்தினால் இப்போது மனுக்குலம் தனிமையில் இருக்கவில்லை. ஆனாலும், இருண்ட இரவில் இப்போது நீ மட்டுமே அயர்ந்து உறங்குகிறாய். நீ சத்தத்தையும் கேட்கவில்லை, வெளிச்சத்தையும் காணவில்லை. உன் தகப்பன் உன்னிடம், “என் பிள்ளையே, இன்னும் நேரமாகவில்லை, இப்போது எழுந்திருக்கவேண்டாம். குளிராக இருப்பதினால் வெளியே போகாதே. உன் கண்களைப் பட்டயமும் ஈட்டியும் குத்திவிடும்,” என்று சொல்வதினால் நீ புதிய வானமும், பூமியும், புதிய காலமும் துவங்கியதை அறியாமல் இருக்கின்றாய். உன் தகப்பன் உன்னை மிகவும் நேசிப்பதினாலும், அவன் உன்னைவிட மூத்தவன் என்பதினாலும், அவன் சொல்வதுதான் சரி என்று நீ விசுவாசிப்பதினாலும், உன் தகப்பனுடைய கடிந்துகொள்ளுதல்களை மட்டுமே நீ நம்புகிறாய். இந்த உலகத்தில் வெளிச்சம் உண்டு என்னும் கூற்றை அப்படிப்பட்ட எச்சரிக்கைகளும், அன்பும் உன்னை நம்ப விடாமல் செய்கின்றன. இந்த உலகத்தில் சத்தியம் இருக்கின்றதா என்று கவனிக்கக்கூட உன்னை அவை விடுவதில்லை. சர்வவல்லவர் உன்னை விடுவிப்பார் என்று நம்பவும் உனக்கு இப்போது தைரியமில்லை. நீ இப்போதுள்ள நிலைமையிலேயே திருப்தியடைந்திருப்பதினால், முன்னுரைக்கப்பட்டது போல வெளிச்சத்தின் வருகையையோ, சர்வவல்லவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதில்லை. உன்னைப் பொறுத்தவரை, அழகானவைகளை எல்லாம் புதுப்பிக்க முடியாது, அவை இருக்க முடியாது. உன் கண்களில், மனுக்குலத்தின் நாளையதினம், மனுக்குலத்தின் எதிர்காலம் மறைந்து ஒழிந்துபோகிறது. தூரப்பிரயாணத்தின் திசையையும், உன் பயணத் தோழனையும் இழந்துவிடுவாய் என்று நீ பயப்படுவதால், உன் தகப்பனுடைய வஸ்திரங்களை முழு பெலத்தோடு இறுகப் பிடித்துக்கொண்டு அவனுடைய கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாய். மனிதர்களின் பரந்து விரிந்த, தெளிவற்ற இந்த உலகம் உங்களில் அநேகரை உலகத்தின் பல்வேறு வேடங்களை அணிந்துகொள்ள தைரியம் உள்ளவர்களாக மாற்றியுள்ளது. மரணத்தைக் குறித்து பயமில்லாத பல “வீரர்களை” அது உருவாக்கியுள்ளது. அதைவிடவும் மேலாக, தாங்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை உணராத விறைத்தும், மரத்தும் போன ஏராளமான மனிதர்களையும் அது உருவாக்கியுள்ளது. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மனுக்குலத்தின் ஒவ்வொரு மனிதனையும் சர்வவல்லவரின் கண்கள் கண்காணிக்கின்றன. துயரப்படுகிறவர்களின் கூக்குரலை அவர் கேட்கிறார், பாதிக்கப்பட்டவர்களின் வெட்கமின்மையை அவர் காண்கிறார், இரட்சிப்பென்னும் கிருபையை இழந்துபோன மனுக்குலத்தின் திகிலையும், ஆற்றாமையையும் அவர் உணர்கிறார். மனிதகுலமோ அவருடைய ஆதரவைத் தள்ளிவிட்டு, தன்னுடைய பாதையிலே நடக்கிறது, அவருடைய கண்களின் பார்வைத் தன்மேல் விழுவதைத் தவிர்க்கிறது. சத்துருவின் துணையோடு ஆழ்கடலின் கசப்பைக் கடைசி சொட்டுவரை ருசிபார்க்கவும் விரும்புகிறது. சர்வவல்லவருடைய பெருமூச்சை இப்போது மனிதகுலம் கேட்பதில்லை. சர்வவல்லவருடைய கரங்களும் இந்தப் பரிதாபமான மனுக்குலத்தைத் தழுவ விரும்பவில்லை. திரும்பத்திரும்ப அவர் மனுக்குலத்தைத் தம்பக்கம் இழுக்கின்றார், திரும்பவும் விட்டுவிடுகின்றார். இப்படியே, அவருடைய கிரியை ஒரு சுழற்சியாக நடக்கின்றது. அந்தத் தருணம் முதல், அவர் சோர்ந்து களைப்படைய ஆரம்பிக்கிறார். அப்போது அவர் தம்முடைய கரத்தின் கிரியையையும், மனிதர்களிடையே உலாவுவதையும் நிறுத்துகிறார்…. மனிதகுலம் இந்த மாற்றங்களையும், சர்வவல்லவருடைய போக்கையும், வருகையையும், அவருடைய துக்கத்தையும் சலிப்பையும் உணராமல் இருக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “சர்வவல்லவரின் பெருமூச்சு” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 357

தேவனுடைய நிர்வகித்தல் ஆழமானது என்கிறபோதிலும், அது மனிதனின் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது அல்ல. ஏனென்றால், தேவனுடைய கிரியைகள் அனைத்தும் அவருடைய நிர்வகித்தலுடனும் மனிதகுலத்தை இரட்சிப்பதற்கான அவரது கிரியையுடனும் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் மனிதகுலத்தின் ஜீவன், வாழ்க்கை மற்றும் போய்ச் சேருமிடம் குறித்து அக்கறை கொண்டுள்ளன. தேவன் மனிதனுக்கிடையிலும் மனிதன் மீதும் செய்யும் கிரியையானது மிகவும் நடைமுறையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது என்று கூறலாம். இதை மனிதனால் காணவும் மற்றும் அனுபவிக்கவும் முடியும், மேலும் இது கோட்பாட்டளவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. தேவன் செய்கின்ற எல்லா கிரியைகளையும் ஏற்றுக்கொள்ள மனிதனால் இயலாது என்றால், பிறகு அவருடைய கிரியையின் முக்கியத்துவம் என்ன? இத்தகைய நிர்வகித்தல் மனிதனின் இரட்சிப்புக்கு எவ்வாறு வழிவகுக்கும்? தேவனைப் பின்பற்றுபவர்களில் பலர் எப்படி ஆசீர்வாதங்களைப் பெறுவது அல்லது பேராபத்துக்களைத் தடுப்பது குறித்து மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர். தேவனுடைய கிரியை மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடப்பட்டவுடன், அவர்கள் அமைதியாகி அனைத்து ஆர்வத்தையும் இழக்கிறார்கள். இத்தகைய கடினமான சிக்கல்களைப் புரிந்துகொள்வது அவர்களுடைய வாழ்க்கை வளருவதற்கு அல்லது எந்த நன்மையையும் அளிப்பதற்கு உதவாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதன் விளைவாக, தேவனுடைய நிர்வகித்தலைப் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அதற்கு அவர்கள் கொஞ்சம் கவனத்தை மட்டுமே கொடுக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டிய விலைமதிப்பற்ற ஒன்றாக அவர்கள் அதைப் பார்க்கவில்லை, மேலும் அவர்கள் அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பெறுகிறதுமில்லை. அத்தகையவர்களுக்கு தேவனைப் பின்பற்றுவதில் ஒரே ஒரு எளிய நோக்கம் மட்டுமே உள்ளது, அந்த நோக்கம் என்னவெனில் ஆசீர்வாதங்களைப் பெறுவது ஒன்றேயாகும். இந்த நபர்களால் இந்த நோக்கத்துடன் நேரடியாக சம்பந்தப்படாத வேறு எதிலும் கவனம் செலுத்துவதற்குக் கவலை கொள்ள முடிவதில்லை. ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக தேவனை நம்புவதை விட வேறே நியாயமான குறிக்கோள் எதுவும் அவர்களுக்கு இல்லை—அதுதான் அவர்களுடைய விசுவாசத்தின் மதிப்பு. இந்த நோக்கத்திற்கு ஏதேனும் பங்களிப்பு செய்யாவிட்டால், அவர்கள் அதில் முழுவதுமாக அசைவற்று இருப்பார்கள். இன்று தேவனை நம்புகிற பெரும்பாலானோரின் நிலை இதுதான். அவர்களின் நோக்கமும் விருப்பமும் நியாயமானதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அவர்கள் தேவனை நம்புவதால், அவர்கள் தேவனுக்காகச் செலவு செய்கிறார்கள், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்கிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் இளமையைத் துறக்கிறார்கள், குடும்பத்தையும் வாழ்க்கையையும் கைவிடுகிறார்கள், வீட்டிலிருந்து தொலைவில் பல வருடங்கள் தங்களைத் தாங்களே மும்முரமாக அலுவல் உள்ளவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய இறுதி இலக்கின் பொருட்டு, அவர்கள் தங்கள் சொந்த நலன்களையும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தையும், அவர்கள் தேடும் திசையையும் கூட மாற்றுகிறார்கள்; ஆயினும் அவர்கள் தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் நோக்கத்தை மாற்ற முடியாது. அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை நிர்வகிப்பதற்காக ஓடுகிறார்கள்; சாலை எவ்வளவு தூரம் இருந்தாலும், வழியில் எத்தனை கஷ்டங்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், அவர்கள் விடாமுயற்சியுடன் மரணத்திற்கும் பயப்படாமல் இருக்கின்றனர். இந்த வழியில் தங்களைத் தொடர்ந்து அர்ப்பணிக்க என்ன வல்லமை அவர்களைத் தூண்டுகிறது? அது அவர்களின் மனசாட்சியா? இது அவர்களின் சிறந்த மற்றும் உன்னதமான தன்மையா? இது தீய சக்திகளை இறுதிவரை எதிர்த்துப் போராடுவதில் அவர்களுக்கு இருக்கும் உறுதியா? இது வெகுமதியைத் தேடாமல் தேவனுக்குச் சாட்சி கொடுக்கும் அவர்களின் நம்பிக்கையா? இது தேவனுடைய விருப்பத்தை அடைய எல்லாவற்றையும் விட்டுவிட தயாராக இருக்கும் அவர்களின் விசுவாசமா? அல்லது இது ஆடம்பரமான தனிப்பட்ட கோரிக்கைகளை எப்போதும் கைவிடுகின்ற அவர்களின் பக்தியின் ஆவியா? தேவனுடைய நிர்வாகக் கிரியையை ஒருபோதும் புரிந்துகொள்ளாத ஒருவருக்கு இன்னும் அதிகமாகக் கொடுப்பது என்பது ஒரு அதிசயம்! இப்போதைக்கு, இந்த மக்கள் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றி விவாதிக்க வேண்டாம். எவ்வாறாயினும், அவர்களின் நடத்தை நம்முடைய பகுப்பாய்விற்கு மிகவும் தகுதியானதாக இருக்கிறது. அவர்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய நன்மைகளைத் தவிர, தேவனைப் புரிந்துகொள்ளாத ஜனங்கள் அவருக்காக இவ்வளவு கொடுப்பதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்க முடியுமா? இதில், முன்பே அடையாளம் காணப்படாத ஒரு பிரச்சனையை நாம் கண்டுபிடிக்கிறோம்: தேவனுடனான மனிதனின் உறவு வெறும் அப்பட்டமான சுயநலத்தில் ஒன்றாகும். இது ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்பவருக்கும் கொடுப்பவருக்கும் இடையிலான ஒரு உறவாகும். தெளிவாகச் சொல்வதானால், இது தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையிலான உறவுக்கு ஒத்ததாகும். முதலாளி வழங்கும் வெகுமதிகளைப் பெறுவதற்கு மட்டுமே தொழிலாளி வேலை செய்கிறார். அத்தகைய உறவில் எந்த பாசமும் இல்லை, மாறாக பரிவர்த்தனை மட்டுமே உள்ளது. நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் அங்கு இல்லை, மாறாக தர்மமும் கருணையும் மட்டுமே உள்ளது. எந்தப் புரிந்துகொள்ளுதலும் இல்லை, மாறாக அடக்கிவைத்துள்ள கோபமும் வஞ்சனையுமே உள்ளது. எந்த நெருக்கமும் இல்லை, மாறாக ஒரு கடந்து செல்லமுடியாத ஒரு இடைவெளி மட்டுமே உள்ளது. இப்போது காரியங்கள் இந்த நிலைக்கு வந்துவிட்டதால், அத்தகைய போக்கை மாற்றக்கூடியவர் யார்? இந்த உறவு எவ்வளவு மோசமாகியிருக்கிறது என்பதை உண்மையிலேயே புரிந்துகொள்ள எத்தனை பேர் உள்ளனர்? ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியில் ஜனங்கள் மூழ்கும்போது, தேவனுடனான இத்தகைய உறவு எவ்வளவு சங்கடமானதாகவும், கூர்ந்துபார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று நான் நம்புகிறேன்.

தேவன் மீதான மனிதகுலத்தினுடைய நம்பிக்கையின் மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், மனிதன் தேவனுடைய நிர்வகித்தலுக்கு செவிசாய்க்காமல், தேவனுடைய கிரியைக்கு இடையில் தன்னுடைய சொந்த நிர்வகித்தலைக் கொண்டிருக்கிறான் என்பதே ஆகும். தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவரை ஆராதிக்க முற்படும் அதே வேளையில், மனிதன் தனது சொந்த இலட்சியத்தின் இலக்கைக் கட்டமைத்து, அதனால் மிகப் பெரிய ஆசீர்வாதத்தையும் சிறந்த இடத்தையும் எவ்வாறு பெறுவது என்று சதி செய்கிற இந்த செயலில்தான் மனிதனின் மிகப்பெரிய தோல்வி அடங்கியிருக்கிறது. அவர்கள் எவ்வளவு பரிதாபத்திற்குரிய, வெறுக்கத்தக்க, பரிதாபகரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை ஒருவர் புரிந்துகொண்டாலும், எத்தனை பேர் தங்கள் கொள்கைகளையும் நம்பிக்கையையும் உடனடியாக கைவிட முடியும்? தங்கள் சொந்த நடவடிக்கைகளை நிறுத்தி, தங்களை மட்டுமே நினைப்பதை நிறுத்தக்கூடியவர்கள் யார்? தேவனுடைய நிர்வகித்தலை பூர்த்தி செய்யும்படிக்கு அவருடன் நெருக்கமாக ஒத்துழைப்பவர்கள் தேவனுக்கு தேவைப்படுகின்றனர். தங்களுடைய முழு மனதையும் சரீரத்தையும் தேவனுடைய நிர்வாகக் கிரியைக்கு அர்ப்பணிப்பதன் மூலம் அவருக்குக் கீழ்ப்படிவோர் அவருக்குத் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து பிச்சை எடுக்கக் கைகளைப் பிடித்துக் கொள்ளும் நபர்கள் அவருக்குத் தேவையில்லை, இன்னும் குறைவாக, கொஞ்சம் கொடுத்து பின்னர் வெகுமதி பெறக் காத்திருப்பவர்கள் அவருக்குத் தேவையில்லை. அற்பமான பங்களிப்பைச் செய்து பின்னர் அவர்களின் வெற்றிகளில் ஓய்வெடுப்பவர்களை தேவன் வெறுக்கிறார். அவருடைய நிர்வாகக் கிரியையை வெறுக்கும் மற்றும் பரலோகத்திற்குச் செல்வதையும் ஆசீர்வாதங்களைப் பெறுவதையும் பற்றி மட்டுமே பேச விரும்பும் அந்தக் கொடூரமான ஜனங்களை அவர் வெறுக்கிறார். மனிதகுலத்தை இரட்சிப்பதில் அவர் செய்யும் கிரியையால் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோர் மீது அவர் இன்னும் அதிக வெறுப்பைக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், தேவன் தமது நிர்வாகக் கிரியை மூலம் எதை அடைய மற்றும் பெற விரும்புகிறார் என்பதைப் பற்றி இந்த ஜனங்கள் ஒருபோதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. தேவனுடைய கிரியையால் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதில் மட்டுமே அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர். அவர்கள் தேவனுடைய இருதயத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, தங்கள் சொந்த வாய்ப்புகள் மற்றும் தலைவிதி ஆகியவற்றின் மீதே முழுமையாக அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய நிர்வாகக் கிரியையை வெறுக்கிறவர்கள் மற்றும் தேவன் மனிதகுலத்தை எவ்வாறு இரட்சிக்கிறார் என்பதில் சிறிது கூட ஆர்வம் இல்லாதவர்கள் மற்றும் அவருடைய விருப்பம் தேவனுடைய நிர்வாகக் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்ட வழியில் தங்களை மகிழ்விக்கும் விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களின் நடத்தை தேவனால் நினைவில் வைக்கப்படவுமில்லை அங்கீகரிக்கப்படவுமில்லை—இது தேவனால் சாதகமாகப் பார்க்கப்படுவதுமில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பிற்சேர்க்கை 3: தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 358

மிக விரைவில் எனது கிரியை முடிவடையும், மேலும் ஒன்றாக இருந்த பல ஆண்டுகள் தாங்கமுடியாத நினைவாக மாறிவிட்டது. நான் இடைவிடாமல் எனது வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து எனது புதிய கிரியைகளை வெளிப்படுத்தியிருக்கிறேன். நிச்சயமாக, நான் செய்யும் கிரியையின் ஒவ்வொரு சிறு விஷயத்திற்கும் எனது ஆலோசனையானது அவசியமான ஓர் அங்கமாக இருக்கிறது. எனது ஆலோசனையின்றி, நீங்கள் அனைவரும் வழிதப்பி அலைந்து திரிந்து, நீங்களே உங்களை முழுமையாக இழந்துபோனவர்களாக இருப்பதைக் கூட காண்பீர்கள். எனது கிரியையானது இப்போது முடிவடைய இருக்கிறது, அது தன் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. நான் இன்னும் ஆலோசனை வழங்கும் கிரியையைச் செய்ய விரும்புகிறேன், அதாவது, நீங்கள் கேட்கும் விஷயங்களுக்கான அறிவுரைகளை வழங்க விரும்புகிறேன். நான் அனுபவித்த வேதனையை நீங்கள் வீணடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், மேலும், நான் எடுத்துள்ள கவனமுள்ள அக்கறையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றும், மேலும் மனுஷராக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதன் அஸ்திபாரமாக எனது வார்த்தைகளை நீங்கள் கருதுவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். அவை நீங்கள் கேட்க விரும்பும் வார்த்தைகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறீர்களோ இல்லையோ, அல்லது அவற்றை அசௌகரியத்துடன் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடிகிறது என்றாலும், நீங்கள் அவற்றைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்கள் சாதாரண மற்றும் அக்கறையற்ற மனநிலைகளும் நடத்தைகளும் என்னைத் தீவிரமாக வருத்தப்படுத்தும், உண்மையில் என்னை வெறுப்புகொள்ள வைக்கும். நீங்கள் அனைவரும் எனது வார்த்தைகளை மீண்டும் மீண்டும்—ஆயிரக்கணக்கான முறை—வாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன், மேலும் நீங்கள் அவற்றை இருதயத்தில் அறிந்து கொள்வீர்கள் என்றும் கூட நான் நம்புகிறேன். இவ்வாறாக மட்டுமே உங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்புகளை உங்களால் தோல்வியடையச் செய்ய இயலாது. இருப்பினும், நீங்கள் யாரும் இப்போது இப்படி ஜீவிப்பதில்லை. இதற்கு மாறாக, நீங்கள் அனைவரும் ஒரு மோசமான ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், உங்கள் இருதயம் திருப்தியடையும் அளவிற்குப் புசித்துக் குடிக்கும் ஒரு ஜீவிதத்தில் மூழ்கியிருக்கிறீர்கள், மேலும் உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் வளப்படுத்த நீங்கள் யாரும் என் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. இந்த காரணத்திற்காக, மனுக்குலத்தின் உண்மையான முகம் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்: மனுஷனால் எந்த நேரத்திலும் எனக்குத் துரோகம் செய்ய முடியும், எனது வார்த்தைகளுக்கு ஒருவராலும் முற்றிலும் விசுவாசமாக இருக்க முடியாது.

“மனுஷனானவன் இனியும் தனது தோற்றத்தைக் கொண்டிராத வகையில் சாத்தானால் மிகவும் சீர்கெடுக்கப்பட்டுவிட்டான்.” பெரும்பான்மையான ஜனங்கள் இப்போது இந்த வாக்கியத்தை ஓரளவிற்கு அங்கீகரிக்கின்றனர். நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நான் குறிப்பிடும் “அங்கீகாரம்” என்பது மெய்யான அறிவுக்கு மாறாக ஒரு வகையான மேலோட்டமான ஒப்புதலாக மட்டுமே இருக்கிறது. உங்களில் எவராலும் உங்களையே துல்லியமாக மதிப்பீடு செய்யவோ அல்லது உங்களையே முழுமையாக ஆராயவோ முடியாது என்பதால், நீங்கள் எனது வார்த்தைகளுக்கு ஒன்றுக்கும் மேலான அர்த்தத்தைக் கொண்டவர்களாகவே இருக்கிறீர்கள். ஆனால் இந்த நேரத்தில், உங்களுக்குள் இருக்கும் ஒரு மிக மோசமான பிரச்சனையை விளக்க நான் உண்மைகளைப் பயன்படுத்துகிறேன். அந்த பிரச்சினைதான் துரோகம். நீங்கள் அனைவரும் “துரோகம்” என்ற வார்த்தையை நன்கு அறிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் கணவன் தன் மனைவிக்குத் துரோகம் செய்வது, மனைவி தன் கணவனுக்குத் துரோகம் செய்வது, மகன் தன் தந்தைக்குத் துரோகம் செய்வது, மகள் தன் தாய்க்குத் துரோகம் செய்வது, அடிமை தன் எஜமானனுக்குத் துரோகம் செய்வது, நண்பர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது, உறவினர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது, விற்பனையாளர்கள் வாங்குபவர்களுக்குத் துரோகம் செய்வது போன்ற இன்னொருவருக்குத் துரோகம் செய்யும் விஷயத்தைப் பெரும்பாலானவர்கள் செய்திருக்கிறார்கள். இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் துரோகத்தின் சாராம்சத்தைக் கொண்டுள்ளன. சுருக்கமாக, துரோகம் என்பது ஒரு வாக்குறுதியை மீறும், தார்மீகக் கொள்கைகளை மீறும் அல்லது மனுஷ நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும், மனுஷத்தன்மையின் இழப்பை நிரூபிக்கும் ஒரு நடத்தை ஆகும். பொதுவாக, இந்த உலகில் பிறந்த ஒரு மனுஷனாக, நீ சத்தியத்திற்குத் துரோகம் செய்யும் ஒரு செயலைச் செய்திருப்பாய், நீ வேறொரு நபருக்குத் துரோகம் செய்ததையோ அல்லது இதற்கு முன்பு பல முறை நீ மற்றவர்களுக்குத் துரோகம் செய்ததையோ நினைவில் வைத்திருக்கிறாயா இல்லையா என்பது முக்கியமில்லை. நீ உனது பெற்றோருக்கோ நண்பர்களுக்கோ துரோகம் செய்யும் திறன் கொண்டவன் என்பதால், நீ மற்றவர்களுக்கும் துரோகம் செய்யும் திறன் கொண்டவனாகத்தான் இருக்கிறாய், மேலும் நீ எனக்குத் துரோகம் செய்வதற்கும் நான் வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கும் திறன் கொண்டவனாக இருக்கிறாய். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், துரோகம் என்பது வெறும் மேலோட்டமான ஒழுக்கக்கேடான நடத்தை இல்லை, ஆனால் சத்தியத்துடன் முரண்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதுவே எனக்கு எதிரான மனுக்குலத்தின் எதிர்ப்பிற்கும் கீழ்ப்படியாமைக்கும் மூல காரணமாக இருக்கிறது. இதனால்தான் நான் அதைப் பின்வரும் அறிக்கையில் சுருக்கமாகக் கூறியிருக்கிறேன்: துரோகம் என்பது மனுஷனின் சுபாவமாக இருக்கிறது, மேலும் இந்தச் சுபாவமானது ஒவ்வொருவனும் என்னுடன் உடன்படுவதற்கான பெரிய சத்துருவாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 359

துரோகம் என்பது எனக்கு முற்றிலும் கீழ்ப்படிய முடியாத நடத்தையாக இருக்கிறது. துரோகம் என்பது எனக்கு விசுவாசமாக இருக்க முடியாத நடத்தையாக இருக்கிறது. என்னை ஏமாற்றுவதும், என்னை ஏமாற்ற பொய்களைப் பயன்படுத்துவதும் துரோகம்தான். பல கருத்துக்களை வளர்ப்பதும் அவற்றை எல்லா இடங்களுக்கும் பரப்புவதும் துரோகம்தான். எனது சாட்சியங்களையும் விருப்பங்களையும் நிலைநிறுத்த முடியாமல் இருப்பதும் துரோகம்தான். இருதயத்தில் என்னிடமிருந்து தொலைவில் இருக்கும்போது பொய்யாகப் புன்னகைப்பதும் துரோகம்தான். இவை அனைத்துமே உங்களால் எப்போதும் திறமையாகச் செய்யக்கூடிய துரோகச் செயல்கள், மேலும் இவை உங்களிடையே பொதுவானவையாக இருக்கின்றன. உங்களில் யாரும் இதை ஒரு பிரச்சினையாக நினைக்காமல் போகலாம், ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. நீ எனக்குத் துரோகம் செய்வதை ஓர் அற்பமான விஷயமாக என்னால் கருத முடியாது, நிச்சயமாக என்னால் அதைப் புறக்கணிக்கவும் முடியாது. இப்போது, நான் உங்களிடையே கிரியை செய்யும் போது, நீங்கள் இவ்வாறாக நடந்துகொள்கிறீர்கள்—உங்களைக் கவனிக்க யாரும் இல்லாத நாள் ஒன்று வந்தால், தங்களைத் தங்கள் சொந்த சிறிய மலைகளின் ராஜாக்கள் என்று அறிவிக்கும் கொள்ளைக்காரர்களாக நீங்கள் இருக்க மாட்டீர்களா? அவ்வாறு நிகழும்போது நீங்கள் ஒரு பேரழிவை ஏற்படுத்தினால், அவற்றை யார் சுத்தம் செய்ய இருப்பார்கள்? துரோகத்தின் சில செயல்களானது வெறுமனே அவ்வப்போது நடக்கும் சம்பவங்கள்தான் என்றும் அவை உங்கள் தொடர்ச்சியான நடத்தை இல்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள், மேலும் உங்கள் பெருமையைப் புண்படுத்தும் வகையில், இதுபோன்ற தீவிரத்தோடு அந்த விஷயம் விவாதிக்கப்படத் தேவையில்லை என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே அவ்வாறு நினைத்தால், உங்களுக்குப் புத்தி இல்லை என்று அர்த்தம். அவ்வாறு நினைப்பது கலகத்தின் ஒரு மாதிரியாகவும், முன்மாதிரியாகவும் இருக்கிறது. மனுஷனின் சுபாவமானது அவனது ஜீவிதமாக இருக்கிறது; அது அவன் ஜீவிக்க சார்ந்திருக்கும் ஒரு கொள்கையாக இருக்கிறது, அதை அவனால் மாற்ற முடியாது. துரோகச் சுபாவத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள். உன்னால் உனது உறவினர் அல்லது நண்பனுக்குத் துரோகம் செய்ய முடிந்தால், அது உனது ஜீவிதத்தின் ஒரு பகுதிதான் என்பதையும், நீ பிறக்கும்போதே உன்னுடன் பிறந்த உனது சுபாவம்தான் என்பதையும் அது நிரூபிக்கிறது. இது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. உதாரணமாக, சிலர் மற்றவர்களிடமிருந்து திருடுவதை அனுபவித்து மகிழ்ந்தால், அவர்கள் சில சமயங்களில் மட்டும் திருடினாலும், சில சமயங்களில் திருடாமல் இருந்தாலும் இந்தத் திருடுவதை அனுபவித்து மகிழ்வது என்பது அவர்களின் ஜீவிதத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள் திருடினாலும் திருடாவிட்டாலும், அவர்கள் திருடுவது ஒரு வகை நடத்தைதான் என்பதை அதனால் நிரூபிக்க முடியாது. மாறாக, அவர்கள் திருடுவது அவர்களின் ஜீவிதத்தின் ஒரு பகுதி—அதாவது அவர்களின் சுபாவம் தான் என்பதை இது நிரூபிக்கிறது. சிலர் கேட்பார்கள்: அது அவர்களின் சுபாவம் என்பதால், ஏன் அவர்கள் நல்ல திருடக்கூடிய பொருட்களைக் காணும்போது சில சமயங்களில் அவற்றைத் திருடுவதில்லை? பதில் மிகவும் எளிதானது. அவர்கள் திருடாததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. கண்காணிக்கும் கண்களின் பார்வையில் பெரிதாக இருக்கும் பொருட்களைப் பறிப்பது சிரமம் என்பதால், அல்லது திருட சரியான நேரம் கிடைக்கவில்லை என்பதால், அல்லது அதிக விலையுள்ள பொருளாக இருந்து அது கவனமாகப் பாதுகாக்கப்படுவதால், அல்லது ஒருவேளை அவர்களுக்கு அதில் குறிப்பிட்ட ஆர்வம் இல்லை என்பதால், அது அவர்களுக்கு என்ன பயன் தரும் என்று தெரியாமல் இருப்பதால், மற்றும் இன்னும் பல காரணங்களுக்காகக் கூட அவர்கள் திருடாமல் இருக்கலாம். இந்தக் காரணங்கள் அனைத்தும் சாத்தியமானவைதான். ஆனால் எதுவாக இருந்தாலும், அவர்கள் எதையாவது திருடினாலும் திருடாவிட்டாலும், இந்த எண்ணம் தற்காலிகமானதுதான் என்பதையும், விரைவாகக் கடந்து செல்லும் விஷயம்தான் என்பதையும் அதனால் நிரூபிக்க முடியாது. மாறாக, அது அவர்களின் சுபாவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது, நல்லதுக்காக அதை மாற்றுவது கூட கடினம். அப்படிப்பட்டவர்கள் ஒருமுறை மட்டும் திருடுவதில் திருப்தி அடைவதில்லை; அவர்கள் நல்ல அல்லது பொருத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போதெல்லாம் மற்றவர்களின் உடைமைகளை அவர்கள் சொந்தமாகக் கோருவது போன்ற எண்ணங்கள் எழுகின்றன. அதனால்தான் இந்தச் சிந்தனையின் தோற்றமானது இப்போதெல்லாம் வெறுமனே இப்போதோ அப்போதோ தோன்றுவது இல்லை, ஆனால் அந்த நபரின் சொந்தச் சுபாவத்திலேயே இருக்கிறது என்று நான் சொல்கிறேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 360

எவரும் தங்கள் உண்மையான முகத்தை பிரதிநிதித்துவப்படுத்த தங்கள் சொந்த வார்த்தைகளையும் செயல்களையும் பயன்படுத்தலாம். இந்த உண்மையான முகம் என்பது நிச்சயமாக அவர்களின் சுபாவத்தைத்தான் குறிக்கிறது. நீ வஞ்சகமான முறையில் பேசும் ஒருவன் என்றால், நீ ஒரு வஞ்சக சுபாவத்தைக் கொண்டிருக்கிறாய். உனது சுபாவம் தந்திரமானதாக இருந்தால், நீ ஒரு நயவஞ்சகமான முறையில் செயல்பட்டு, மற்றவர்கள் உன்னால் ஏமாறுவதை நீ மிகவும் எளிதாக்குகிறாய். உனது சுபாவம் கெட்டதாக இருந்தால், உனது வார்த்தைகள் கேட்க இனிமையாக இருந்தாலும் உனது செயல்களால் உனது கெட்ட தந்திரங்களை உன்னால் மறைக்க முடியாது. உனது சுபாவம் சோம்பேறித்தனமானதாக இருந்தால், நீ சொல்வது அனைத்தும் உனது செயலற்ற தன்மை மற்றும் சோம்பேறித்தனத்திற்கான பொறுப்பைக் கைவிடுவதாக இருக்கும், மேலும் உனது நடவடிக்கைகள் மெதுவாகவும், செயலற்றதாகவும், உண்மையை மறைப்பதில் மிகவும் திறமையானதாகவும் இருக்கும். உனது சுபாவம் அனுதாபம் மிக்கதாக இருந்தால், உனது வார்த்தைகள் நியாயமானதாக இருக்கும், மேலும் உங்கள் செயல்களும் சத்தியத்துடன் நன்கு ஒத்துப்போகும். உனது சுபாவம் விசுவாசமானதாக இருந்தால், உனது வார்த்தைகள் நிச்சயமாக நேர்மையானதாக இருக்கும், மேலும் நீ செயல்படும் விதம் பண்புள்ளதாகவும் உனது எஜமானனைக் கவலையடையச் செய்யாததாகவும் இருக்கும். உனது சுபாவமானது சிற்றின்ப வேட்கையோ அல்லது பணத்தாசை கொண்டதாகவோ இருந்தால், உனது இருதயம் பெரும்பாலும் இவற்றால் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும், மேலும் நீ அறியாமலே ஜனங்கள் எளிதாக மறக்க முடியாத, ஜனங்களை வெறுக்க வைக்கும் மாறுபட்ட, ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்வாய். நான் சொன்னது போலவே, நீ துரோகத்தின் தன்மையைக் கொண்டிருந்தால், உன்னால் அதிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. நீ மற்றவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை என்றால், உனக்குத் துரோகத்தின் சுபாவம் இல்லை என்று சவால் விட வேண்டாம். நீ அப்படி நினைத்தால், உண்மையிலேயே, நீ கலகம் செய்கிறாய் என்று அர்த்தம். ஒவ்வொரு முறையும் நான் பேசும்போது எனது எல்லா வார்த்தைகளும் ஒரு நபரை அல்லது ஒரு வகையான நபரை மட்டுமல்ல, எல்லா ஜனங்களையும் குறிவைத்துப் பேசப்படுகின்றன. ஒரு விஷயத்தில் நீ எனக்குத் துரோகம் செய்யவில்லை என்பதால், எந்த விஷயத்திலும் நீ எனக்குத் துரோகம் செய்ய மாட்டாய் என்பது நிச்சயமல்ல. சிலர் தங்கள் திருமணத்தில் ஏற்படும் பின்னடைவுகளின் போது சத்தியத்தைத் தேடுவதில் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். சிலர் குடும்பப் பிரச்சனைகளின் போது என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டிய கடமையைக் கைவிடுகிறார்கள். சிலர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தேடுகையில் என்னைக் கைவிடுகிறார்கள். சிலர் வெளிச்சத்தில் ஜீவித்து பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் மகிழ்ச்சியைப் பெறுவதை விட இருண்ட பள்ளத்தாக்கிலும் விழத் தயாராக இருக்கிறார்கள். சிலர் செல்வத்தின் மீதான சிற்றின்ப வேட்கையைத் திருப்திப்படுத்துவதற்காக நண்பர்களின் ஆலோசனையைப் புறக்கணிக்கிறார்கள், இப்போது கூட தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டு தங்கள் போக்கை அவர்கள் மாற்றுவதில்லை. சிலர் எனது பாதுகாப்பைப் பெறுவதற்காகத் தற்காலிகமாக மட்டுமே எனது நாமத்தில் ஜீவிக்கிறார்கள், மற்றவர்கள் என்னிடம் வலுக்கட்டாயத்தினால் கொஞ்சமாக மட்டுமே தங்களை அர்ப்பணிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஜீவிதத்தில் ஒட்டிக்கொண்டு, மரணத்திற்கு அஞ்சுபவர்களாக இருக்கிறார்கள். மேலும், இவைகளும் மற்ற ஒழுக்கக்கேடான செயல்களுமான நேர்மையில்லாத நடத்தைகள், ஜனங்கள் நீண்ட காலமாக எனக்குத் தங்கள் இருதயங்களில் ஆழமாகச் செய்த துரோக நடத்தைகள் அல்லவா? நிச்சயமாக, ஜனங்கள் எனக்குத் துரோகம் செய்ய முன்கூட்டியே திட்டமிடுவதில்லை என்பது எனக்குத் தெரியும்; அவர்களின் துரோகமானது அவர்களது சுபாவத்தின் இயல்பான வெளிப்பாடாக இருக்கிறது. யாரும் எனக்குத் துரோகம் செய்ய விரும்புவதில்லை, எனக்குத் துரோகம் செய்யும்படிக்கு அவர்கள் ஏதேனும் செய்திருந்தாலும் அவர்கள் அதை எண்ணி மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மாறாக, அவர்கள் பயத்தால் நடுங்குகிறார்கள், இல்லையா? எனவே, இந்தத் துரோகங்களை எவ்வாறு மீட்பது, மேலும் தற்போதைய நிலைமையை எவ்வாறு மாற்றுவது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 361

மனுஷனின் சுபாவமானது எனது சாராம்சத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது, ஏனென்றால் மனுஷனின் சீர்கெட்டச் சுபாவமானது முற்றிலும் சாத்தானிடமிருந்துதான் உருவாகிறது; மனுஷனின் சாராம்சமானது சாத்தானால் நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டு சீர்கெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனுஷன் சாத்தானின் பொல்லாப்பு மற்றும் அசிங்கத்தினுடைய செல்வாக்கின் கீழ் ஜீவிக்கிறான். மனுஷன் சத்தியத்தின் உலகிலோ அல்லது பரிசுத்தமான சூழலிலோ வளருவதில்லை, மேலும் அவன் வெளிச்சத்திலும் ஜீவிப்பதில்லை. ஆகையால், பிறந்த தருணத்திலிருந்தே யாரும் தங்கள் சுபாவத்தினுள் சத்தியத்தை வைத்திருப்பது சாத்தியமில்லை, மேலும் தேவனுக்கு அஞ்சும் மற்றும் கீழ்ப்படியும் ஒரு சாராம்சத்துடன் யாரும் பிறக்க முடியாது. மாறாக, தேவனை எதிர்க்கும், தேவனுக்குக் கீழ்ப்படியாத, சத்தியத்தின் மீது அன்பு இல்லாத ஒரு சுபாவத்தை ஜனங்கள் கொண்டிருக்கிறார்கள். துரோகம் எனும் இந்தச் சுபாவம்தான் நான் விவாதிக்க விரும்பும் பிரச்சினை ஆகும். தேவனுக்கு எதிரான ஒவ்வொருவரின் எதிர்ப்பின் ஊற்றே துரோகம் ஆகும். இது மனுஷனில் மட்டுமே இருக்கும் ஒரு பிரச்சினை, என்னுள் இருப்பதில்லை. சிலர் கேட்பார்கள்: எல்லா மனுஷரும் கிறிஸ்துவைப் போலவே உலகில் ஜீவிக்கிறார்கள் என்பதால், கிறிஸ்துவைத் தவிர எல்லா மனுஷரும் தேவனுக்குத் துரோகம் செய்யும் சுபாவங்களைக் கொண்டிருப்பது ஏன்? இது உங்களுக்குத் தெளிவாக விளக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை ஆகும்.

ஆத்துமாவின் தொடர்ச்சியான மறு மனுவுருவாதலே மனுக்குலம் இருப்பதன் அடிப்படையாக இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு மனுஷனும் தனது ஆத்துமா மறுபடியும் மனுவுருவாகும்போது மாம்சத்தில் ஒரு மனுஷ ஜீவிதத்தைப் பெறுகிறான். ஒருவனின் சரீரம் பிறந்த பிறகு, அந்த மாம்சமானது இறுதியில் அதன் வரம்புகளை அடையும் வரை அதன் ஜீவிதம் தொடர்கிறது, இறுதி வரம்பு என்பது ஆத்துமா அதன் சரீரத்தை விட்டு வெளியேறும் இறுதித் தருணம் ஆகும். இந்தச் செயல்முறையானது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, ஒருவனின் ஆத்துமா காலப்போக்கில் வந்து செல்கிறது, இவ்வாறாக மனுக்குலம் இருப்பது பராமரிக்கப்படுகிறது. மாம்சத்தின் ஜீவிதமானது மனுஷனுடைய ஆத்துமாவின் ஜீவிதமாகவும் இருக்கிறது, மேலும் மனுஷனின் ஆத்துமாவானது மனுஷ மாம்சத்தின் இருப்பை ஆதரிக்கிறது. அதாவது, ஒவ்வொருவனின் ஜீவிதமும் அவனது ஆத்துமாவிலிருந்து வருகிறது, மேலும் ஜீவிதமானது மாம்சத்திற்கு உள்ளார்ந்த விஷயமும் இல்லை. இவ்வாறு, மனுஷனின் சுபாவமானது ஆத்துமாவிலிருந்து வருகிறது, மாம்சத்திலிருந்து வருவதில்லை. சாத்தானின் சோதனைகள், துன்பங்கள் மற்றும் சீர்கேடுகளை மனுஷன் எவ்வாறு அனுபவித்தான் என்பது ஒவ்வொருவனின் ஆத்துமாவுக்கு மட்டுமே தெரியும். இந்த விஷயங்கள் மனுஷனின் மாம்சத்திற்குத் தெரியாது. ஆகையால், மனுக்குலமானது அறியாமலே இன்னும் இருட்டாகி, இன்னும் அசுத்தமாகி, இன்னும் பொல்லாப்பு கொண்டதாக மாறுகிறது, அதே நேரத்தில் மனுஷனுக்கும் எனக்கும் இடையிலான தூரம் இன்னும் அதிகமாகி, மனுக்குலத்திற்கு ஜீவிதம் என்பது மேலும் இருட்டாகிறது. சாத்தான் மனுக்குலத்தின் ஆத்துமாக்களை அவனது பிடியில் வைத்திருக்கிறான், ஆகவே, மனுஷனின் மாம்சமும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய மாம்சமும் அத்தகைய மனுக்குலமும் தேவனை எவ்வாறு எதிர்க்காமல் இருக்க முடியும்? அவர்கள் தேவனுடன் எவ்வாறு இயல்பாக ஒத்துப்போக முடியும்? சாத்தான் எனக்குத் துரோகம் செய்ததால்தான் நான் சாத்தானை நடுவானில் தூக்கி வீசியிருக்கிறேன். இப்படியிருந்தால், மனுஷர் தங்களது ஈடுபாட்டிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்? இதனால்தான் துரோகமானது மனுஷ இயல்பாக இருக்கிறது. இந்தப் பகுத்தறிவை நீங்கள் புரிந்துகொண்டவுடன், நீங்கள் கிறிஸ்துவின் சாராம்சத்திலும் சிறிதளவு விசுவாசம் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சமானது தேவனின் சொந்த மாம்சமாகும். தேவனுடைய ஆவியானவர் உயர்ந்தவராக இருக்கிறார்; அவர் சர்வவல்லவராக, பரிசுத்தராக, நீதியுள்ளவராக இருக்கிறார். அதேபோல், அவருடைய மாம்சமும் உயர்ந்ததாக, சர்வவல்லமைமிக்கதாக, பரிசுத்தமானதாக, நீதியுள்ளதாக இருக்கிறது. அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மனுக்குலத்திற்கு நீதியும் நன்மையும் வழங்க முடியும், அதுவே பரிசுத்தமானதாக, மகிமைகொண்டதாக, வல்லமை பொருந்தியதாக இருக்கிறது; சத்தியத்தை மீறும், ஒழுக்கத்தையும் நீதியையும் மீறும் எதையும் அவரால் செய்ய இயலாது, மேலும் தேவனுடைய ஆவியானவருக்குத் துரோகம் செய்யும் எதையும் அவரால் செய்ய முடியாது. தேவனுடைய ஆவியானவர் பரிசுத்தமானவர், ஆகவே அவருடைய மாம்சமானது சாத்தானால் சீர்கெட்டுப்போகாது; அவருடைய மாம்சமானது மனுஷனின் மாம்சத்தை விட வித்தியாசமான சாராம்சத்தைக் கொண்டது. ஏனென்றால் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டுப்போனது மனுஷன்தான், தேவன் இல்லை; தேவனின் மாம்சத்தைச் சாத்தானால் சீர்கெட்டுப்போக வைக்க முடியாது. ஆகவே, மனுஷனும் கிறிஸ்துவும் ஒரே இடத்திலேயே ஜீவிக்கிறார்கள் என்ற போதிலும், மனுஷன்தான் சாத்தானால் உடைமையாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு சிக்கவைக்கப்படுகிறான். இதற்கு நேர்மாறாக, கிறிஸ்து சாத்தானின் சீர்கேட்டின் தாக்கத்திற்கு நித்தியமாக உள்ளாகாதவராய் இருக்கிறார், ஏனென்றால் சாத்தான் ஒருபோதும் மிக உன்னதமான இடத்தில் ஏறுவதற்கான திறம்மிக்கவனாக இருக்க மாட்டான், மேலும் அவனால் ஒருபோதும் தேவனிடம் நெருங்கவே முடியாது. இன்று எனக்குத் துரோகம் செய்வது, சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கும் மனுக்குலம் மட்டும்தான் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். துரோகம் என்பது ஒருபோதும் கிறிஸ்துவை உள்ளடக்கிய ஒரு பிரச்சினையாக இருக்காது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 362

சாத்தானால் சீர்கெட்டுப்போன அனைத்து ஆத்துமாக்களும் சாத்தானின் ஆதிக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் மட்டுமே தனியாகப் பிரிக்கப்பட்டு, சாத்தானின் முகாமிலிருந்து இரட்சிக்கப்பட்டு, இன்றைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். இந்த ஜனங்கள் இனியும் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் ஜீவித்திருக்க மாட்டார்கள். அப்படியிருந்தும், மனுஷனின் சுபாவமானது இன்னும் மனுஷனின் மாம்சத்தில் வேரூன்றியிருக்கிறது, அதாவது உங்கள் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் சுபாவமானது முன்பைப் போலவே இருக்கிறது, மேலும் நீங்கள் எனக்குத் துரோகம் செய்ய நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. உங்களது சுபாவம் கட்டுப்படுத்த முடியாததாக இருப்பதால்தான் எனது கிரியை நீண்ட காலம் நீடிக்கிறது. இப்போது, நீங்கள் உங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது உங்கள் திறனுக்கு ஏற்றவாறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்கள், ஆனாலும் நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு துரோகம் செய்து, சாத்தானின் ஆதிக்கத்திற்கு, அவனது முகாமுக்குத் திரும்பி, உங்கள் பழைய ஜீவிதத்திற்கு திரும்பும் திறன் கொண்டவர்களாக இருக்கிறீர்கள்—இது மறுக்க முடியாத உண்மை. அந்த நேரத்தில், நீங்கள் இப்போது செய்வது போல, சிறிதளவும் மனிதத்தன்மையையோ அல்லது மனித சாயலையோ முன்வைப்பது உங்களுக்கு சாத்தியமாக இருக்காது. கடுமையான சந்தர்ப்பங்களில், நீங்கள் அழிக்கப்படுவீர்கள், மேலும், நித்தியமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் மறு மனுவுருவாகாதபடிக்குக் கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள். இதுவே உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள பிரச்சினை. முதலாவதாக, எனது கிரியை வீணாகாதபடிக்கும், இரண்டாவதாக, நீங்கள் அனைவரும் வெளிச்சத்தின் நாட்களில் வாழும்படிக்கும் நான் உங்களுக்கு இவ்வாறாக நினைவூட்டுகிறேன். உண்மையில், எனது கிரியையானது வீணானதா என்பது முக்கியமான பிரச்சினை இல்லை. நீங்கள் மகிழ்ச்சியான ஜீவிதத்தையும் அற்புதமான எதிர்காலத்தையும் பெற முடிகிறது என்பது தான் முக்கியமானதாக இருக்கிறது. ஜனங்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பதே எனது கிரியையாக இருக்கிறது. உனது ஆத்துமா சாத்தானின் கைகளுக்குள் விழுந்தால், உனது சரீரம் நிம்மதியாக ஜீவிக்காது. நான் உனது சரீரத்தைப் பாதுகாக்கிறேன் என்றால், உனது ஆத்துமாவும் நிச்சயமாக என் பராமரிப்பில்தான் இருக்கும். நான் உன்னை மெய்யாகவே வெறுக்கிறேன் என்றால், உன் சரீரமும் ஆத்துமாவும் ஒரே நேரத்தில் சாத்தானின் கைகளில் விழும். அதற்குப் பிறகான உனது நிலைமையை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு நாள் எனது வார்த்தைகள் உங்கள் மீது செயல்படவில்லை என்றால், நான் உங்களைச் சாத்தானிடம் ஒப்படைப்பேன், அதன் மூலம் எனது கோபம் முற்றிலுமாகக் கலைந்து போகும்வரை நீங்கள் கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவீர்கள், அல்லது, உங்களது இருதயம் எனக்குத் துரோகம் செய்வதில் இருந்து மாறாது என்பதற்காக மீட்க முடியாத மனுஷரான உங்களை நான் தனிப்பட்ட முறையில் தண்டிப்பேன்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 363

எனக்கான துரோகங்கள் உங்களுக்குள் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க நீங்கள் இப்போது உங்களால் முடிந்தவரை விரைவாக உங்களையே உற்று நோக்குங்கள். உங்கள் பதிலுக்காக நான் வாஞ்சையோடு காத்திருக்கிறேன். என்னைக் கையாள்வதில் அக்கறையில்லாதவர்களாக இருக்காதீர்கள். நான் ஒருபோதும் ஜனங்களுடன் விளையாடுவதில்லை. நான் ஏதாவது செய்வேன் என்று சொன்னால் நான் நிச்சயமாக அதைச் செய்வேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனது வார்த்தைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுபவராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், மேலும் இந்த வார்த்தைகளை அறிவியல் புனைக்கதைகளாக எண்ண வேண்டாம். உங்களிடமிருந்து உறுதியான நடவடிக்கையை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன், உங்கள் கற்பனைகளை எதிர்பார்க்கவில்லை. அடுத்து, நீங்கள் எனது கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளிக்க வேண்டும்:

1. நீ உண்மையிலேயே ஓர் ஊழியனாக இருந்தால், உன்னால் எந்தவிதமான தளர்வு அல்லது எதிர்மறையின்மையும் இல்லாமல் எனக்கு விசுவாசமாகச் சேவையை வழங்க முடியுமா?

2. நான் உன்னை ஒருபோதும் பாராட்டுவதில்லை என்பதை நீ அறிந்துகொண்டால், உன்னால் இன்னும் இங்கேயே தங்கியிருந்து ஜீவிதம் முழுமைக்கான சேவையை எனக்கு உன்னால் வழங்க முடியுமா?

3. நீ அதிக முயற்சி செய்யும்போதும் நான் உன்னிடம் கடுமையாக நடந்துகொண்டால், உன்னால் தெளிவற்ற நிலையில் எனக்காகத் தொடர்ந்து பணியாற்ற முடியுமா?

4. நீ எனக்காகச் செலவினங்களைச் செய்தபின்பும், உனது சிறிய கோரிக்கைகளை நான் பூர்த்தி செய்யவில்லை என்றால், நீ அதற்காக சோகமாக ஏமாற்றத்துடன் இருப்பாயா, அல்லது கோபமடைந்து துஷ்பிரயோகம் செய்வாயா?

5. நீ எப்போதுமே மிகவும் விசுவாசமாக இருந்து, என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும், நீ நோய், வறுமை போன்ற துன்பங்களை அனுபவித்து, உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு, அல்லது ஜீவிதத்தில் வேறு ஏதேனும் துரதிர்ஷ்டங்களை நீ சகித்தால், என்மீதான உனது விசுவாசமும், அன்பும் இன்னும் தொடருமா?

6. உனது இருதயத்தில் நீ கற்பனை செய்த எதுவும் நான் செய்திருப்பதுடன் பொருந்தவில்லை என்றால், நீ உனது எதிர்காலப் பாதையில் எவ்வாறு நடந்துசெல்வாய்?

7. நீ பெற நினைத்த எந்தவொரு பொருளையும் நீ பெறவில்லை என்றால், தொடர்ந்து என்னைப் பின்பற்றுபவனாக உன்னால் இருக்க முடியுமா?

8. எனது கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் உன்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால், தன்னிச்சையாக நியாயத்தீர்ப்புகளை வழங்காத மற்றும் முடிவுகளை எடுக்காத கீழ்ப்படிதலுள்ளவனாக உன்னால் இருக்க முடியுமா?

9. மனுக்குலத்துடன் நான் ஒன்றாக இருந்தபோது நான் சொன்ன எல்லா வார்த்தைகளையும், நான் செய்த எல்லாக் கிரியைகளையும் உன்னால் பொக்கிஷமாக வைத்திருக்க முடியுமா?

10. நீ எதையும் பெறாவிட்டாலும், எனது விசுவாசமுள்ள சீஷனாக, ஜீவிதம் முழுவதும் எனக்காகத் துன்பங்களை அனுபவிக்க நீ தயாராக இருக்கிறாயா?

11. எனக்காக, உன்னால் உனது எதிர்கால உயிர்பிழைக்கும் பாதையைக் கருத்தில்கொள்ளவோ, திட்டமிடவோ அல்லது தயார்படுத்தவோ முடியுமா?

இந்தக் கேள்விகள் உங்களுக்கான எனது இறுதி தேவைகளைக் குறிக்கின்றன, மேலும் உங்கள் அனைவராலும் எனக்குப் பதில்களை வழங்க முடியும் என்று நம்புகிறேன். உன்னிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விகளில் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை நீ பூர்த்தி செய்திருந்தால், நீ தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இந்தத் தேவைகளில் ஒன்றைக் கூட உன்னால் நிறைவேற்ற முடியாவிட்டால், நீ நிச்சயமாக நரகத்தில் தள்ளப்படும் மனுஷர் வகையைச் சேர்ந்தவனாகத்தான் இருப்பாய். அத்தகையவர்களுக்கு, நான் மேலும் எதுவும் சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக என்னுடன் ஒத்துப்போகக்கூடியவர்கள் இல்லை. எந்தவொரு சூழ்நிலையிலும் எனக்குத் துரோகம் செய்யக்கூடிய ஒருவனை நான் எப்படி எனது வீட்டில் வைத்திருக்க முடியும்? பெரும்பாலான சூழ்நிலைகளில் எனக்குத் துரோகம் செய்யக் கூடியவர்களைப் பொறுத்தவரை, மற்ற ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு அவர்களின் செயல்திறனைக் கவனிப்பேன். இருப்பினும், எனக்குத் துரோகம் செய்யும் திறன் கொண்ட அனைவருமே, எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்; நான் அவர்களை எனது இருதயத்தில் நினைவுகொண்டு, அவர்களுடைய பொல்லாத காரியங்களுக்குத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். நான் எழுப்பிய தேவைகள் அனைத்தும் நீங்கள் உங்களுக்குள்ளேயே ஆராய வேண்டிய பிரச்சினைகள் ஆகும். உங்கள் அனைவராலும் அவற்றைத் தீவிரமாகப் பரிசீலிக்க முடியும் என்றும், எனது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். எதிர்காலத்தில், எனது தேவைகளுக்கு எதிராக நீங்கள் எனக்கு அளித்த பதில்களை நான் சரிபார்ப்பேன். அந்த நேரத்தில், நான் உங்களிடமிருந்து வேறு எதுவும் எதிர்பார்க்கமாட்டேன், மேலும் அதிக உற்சாகமான அறிவுறுத்தலையும் உங்களுக்கு வழங்க மாட்டேன். அதற்குப் பதிலாக, நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்துவேன். வைக்கப்பட வேண்டியவர்கள் வைக்கப்படுவார்கள், வெகுமதி வழங்கப்பட வேண்டியவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும், சாத்தானிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவர்கள் சாத்தானிடம் ஒப்படைக்கப்படுவார்கள், கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள், அழிந்துபோக வேண்டியவர்கள் அழிக்கப்படுவார்கள். இதனால், எனது நாட்களில் என்னைத் தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். நீ எனது வார்த்தைகளை விசுவாசிக்கிறாயா? நீ பழிவாங்கலை விசுவாசிக்கிறாயா? என்னை ஏமாற்றித் துரோகம் செய்யும் பொல்லாதவர்கள் அனைவரையும் நான் தண்டிப்பேன் என்று நீ விசுவாசிக்கிறாயா? அந்த நாள் விரைவில் வரும் அல்லது அது பின்னர் வரும் என்று நீ நம்புகிறாயா? நீ தண்டனையை எண்ணி பயங்கொள்பவனா, அல்லது தண்டனையைத் தாங்க வேண்டும் என்று தெரிந்தும் என்னை எதிர்க்கிறவனா? அந்த நாள் வரும்போது, நீ உற்சாகத்துக்கும் சிரிப்பிற்கும் மத்தியில் ஜீவித்திருப்பாயா, அல்லது அழுதுகொண்டும் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டும் இருப்பாயா என்று உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? நீ எந்த வகையான முடிவை சந்திக்க விரும்புகிறாய்? நீ என்னை நூறு சதவிகிதம் விசுவாசிக்கிறாயா அல்லது நூறு சதவிகிதம் சந்தேகிக்கிறாயா என்பதை நீ எப்போதாவது தீவிரமாகக் கருத்தில் கொண்டதுண்டா? உனது செயல்களும் நடத்தைகளும் உனக்கு எந்த வகையான விளைவுகளையும் பலன்களையும் ஏற்படுத்தும் என்பதை நீ எப்போதாவது கவனமாகக் கருதியதுண்டா? எனது வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்று நீ உண்மையிலேயே நம்புகிறாயா, அல்லது எனது வார்த்தைகள் நிறைவேறிவிடும் என்று நீ பயப்படுகிறாயா? எனது வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக நான் விரைவில் புறப்பட்டுச் செல்வேன் என்று நீ நம்பினால், உனது சொந்த வார்த்தைகளையும் செயல்களையும் நீ எவ்வாறு நடத்துவாய்? நான் புறப்பட்டுச் செல்வதை நீ விரும்பவில்லை என்றால், மேலும் எனது வார்த்தைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நீ விரும்பவில்லை என்றால், நீ எதற்காக என்னை விசுவாசிக்கிறாய்? நீ எதற்காக என்னைப் பின்பற்றுகிறாய் என்பது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? உனது காரணமானது உனது எல்லைகளை விரிவுபடுத்துவதாக இருந்தால், நீ உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நீ ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்பதும், வரவிருக்கும் பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்பதும் காரணமாக இருந்தால், உனது சொந்த நடத்தை குறித்து நீ ஏன் கவலைப்படவில்லை? எனது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று நீ ஏன் உன்னையே கேட்பதில்லை? வரவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பெற நீ தகுதியுள்ளவனா என்று நீ ஏன் உன்னையே கேட்பதில்லை?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மிகத் தீவிரமான ஒரு பிரச்சினை: துரோகம் (2)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 364

எனக்கு முன் ஊழியம் செய்யும் என் ஜனங்கள் அனைவரும் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்: என் மீதான உங்கள் அன்பு தூய்மையற்றதாக இருந்ததா? என்னிடத்தில் உங்கள் விசுவாசம் தூய்மையானதாகவும் முழு மனதுடனும் இருந்ததா? என்னைப் பற்றிய உங்கள் அறிவு உண்மையாக இருந்ததா? உங்கள் இருதயங்களுக்குள் நான் எவ்வளவு இடத்தைப் பிடித்திருந்தேன்? நான் உங்கள் இருதயங்களை முழுவதுமாக நிரப்பினேனா? என் வார்த்தைகள் உங்களுக்குள் எந்தளவிற்கு நிறைவேறின? என்னை ஒரு முட்டாள் என்று கருதாதீர்கள்! இந்த விஷயங்கள் எனக்கு முற்றிலும் தெளிவாகப் புலப்படுகின்றன! இன்று, என் இரட்சிப்பின் குரல் உச்சரிக்கப்படுவதால், என் மீதான உங்கள் அன்பு சிறிதளவேனும் அதிகரித்துள்ளதா? என்மீதான உங்கள் விசுவாசத்தின் ஒரு பகுதி தூய்மையடைந்துள்ளதா? என்னைப் பற்றிய உங்கள் அறிவு ஆழமடைந்துள்ளதா? கடந்த காலத்தில் வழங்கப்பட்ட புகழ் இன்று உங்கள் அறிவுக்கு உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்ததா? உங்களுக்குள் எந்தளவிற்கு என் ஆவி ஆக்கிரமித்துள்ளது? எனது உருவம் உங்களுக்குள் எவ்வளவு இடம் பிடித்துள்ளது? எனது வார்த்தைகள் உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா? உங்கள் அவமானத்தை மறைக்க உங்களுக்கு எங்கும் இடமில்லை என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? நீங்கள் என் ஜனங்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? மேலே உள்ள கேள்விகளை நீங்கள் முற்றிலும் பொருட்படுத்தவில்லை எனில், நீ கலங்கிய நீரில் மீன்பிடிக்கிறாய் என்பதையும், எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே நீ இருக்கிறாய் என்பதையும், நான் முன்னரே தீர்மானித்த நேரத்தில் நீ நிச்சயமாக புறம்பாக்கப்பட்டு, இரண்டாவது முறையாக பாதாளத்திற்குள் தள்ளப்படுவாய் என்பதையும் இது காட்டுகிறது. இவை எனது எச்சரிக்கை வார்த்தைகள், இவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளும் எவரும் எனது நியாயத்தீர்ப்பால் தாக்கப்படுவார்கள், மேலும் நியமிக்கப்பட்ட நேரத்தில் பேரழிவை சந்திப்பார்கள். இது அப்படித்தானே அல்லவா? இதை விளக்குவதற்கு நான் இன்னும் உதாரணங்களை வழங்க வேண்டுமா? உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வழங்க நான் இன்னும் தெளிவாகப் பேச வேண்டுமா? சிருஷ்டிக்க துவங்கிய காலத்திலிருந்து இன்று வரை, அநேகர் என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல், எனது மீட்பின் பாதையிலிருந்து நீக்கப்பட்டு புறம்பாக்கப்பட்டிருக்கிறார்கள்; இறுதியில், அவர்களின் சரீரங்கள் அழிந்து, அவர்களின் ஆவிகள் பாதாளத்திற்குள் வீசப்படுகின்றன, இன்றும் அவை கடுமையான சிட்சிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அநேகர் என் வார்த்தைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் என் ஞானத்திற்கும் வெளிச்சத்திற்கும் எதிராகச் சென்றுவிட்டனர், இதனால் என்னால் ஒதுக்கித் தள்ளப்பட்டு, சாத்தானின் ஆதிக்கத்திற்குள் விழுந்து, என்னை எதிர்ப்பவர்களில் ஒருவராக மாறிவிட்டார்கள். (இன்று என்னை நேரடியாக எதிர்ப்பவர்கள் அனைவரும் என் வார்த்தைகளின் ஆழமற்ற விஷயங்களை மட்டுமே கடைப்பிடித்து, என் வார்த்தைகளின் சாராம்சத்திற்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.) நேற்று நான் பேசிய வார்த்தைகளை வெறுமனே கேட்டவர்கள் மட்டும் இருக்கிறார்கள், அவர்கள் கடந்த காலத்தின் “குப்பைகளை” கைகளில் கொண்டு இன்றைய “விளைபொருட்களை” பொக்கிஷமாகக் கருத மறுக்கிறார்கள். இந்த ஜனங்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், நித்திய பாவிகளாகவும், என் சத்துருக்களாகவும் மாறிவிட்டார்கள், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கிறார்கள். அத்தகையவர்கள் என் கோபத்தின் உச்சத்தில் என் நியாயத்தீர்ப்பின் பொருள்களாக இருக்கிறார்கள், இன்றும் அவர்கள் குருடர்களாக, இருண்ட நிலவறைகளுக்குள் இருக்கிறார்கள் (அதாவது, அத்தகைய ஜனங்கள் சாத்தானால் கட்டுப்படுத்தப்படும் அழுகிய, உணர்வற்றுப்போன பிரேதங்களாக இருக்கிறார்கள்; அவர்களது கண்கள் என்னால் மறைக்கப்பட்டுள்ளதால், நான் அவர்களைக் குருடர்கள் என்கிறேன்). உங்கள் சான்றாதாரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு வழங்குவது நல்லது, இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

பவுலின் குறிப்பின் படி, நீங்கள் அவனுடைய வரலாற்றையும், அவனைப் பற்றிய சில கதைகளையும் துல்லியமற்றவை என்றும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் நினைப்பீர்கள். அவன் சிறு வயதிலிருந்தே அவனது பெற்றோரால் கற்பிக்கப்பட்டான், என் ஜீவனைப் பெற்றான், என் முன்குறித்தலின் விளைவாக அவன் எனக்குத் தேவையான திறமையைப் பெற்றிருந்தான். அவனுடைய 19 வயதில், அவன் வாழ்க்கையைப் பற்றிய பல்வேறு புத்தகங்களைப் படித்தான்; ஆகவே, அவனுடைய திறமை காரணமாகவும், என் தெளிவுபடுத்தல் மற்றும் வெளிச்சத்தின் காரணமாகவும், அவன் ஆன்மீக விஷயங்களைப் பற்றி சில நுண்ணறிவால் பேச முடிந்தது மட்டுமல்லாமல், எனது நோக்கங்களையும் புரிந்துகொள்ள முடிந்தது என்பதைப் பற்றி நான் விரிவாகப் பேசத் தேவையில்லை. நிச்சயமாக, இது உள் மற்றும் வெளிப்புற காரணிகளின் கலவையை தவிர்க்கவில்லை. ஆயினும்கூட, அவனது ஒரு குறைபாடு என்னவென்றால், அவனது திறமைகள் காரணமாக, அவன் பெரும்பாலும் வாய்சொல் வீரனாகவும் தற்புகழ்ச்சி கொண்டவனாகவும் இருந்தான். இதன் விளைவாக, அவனது கீழ்ப்படியாமை காரணமாக—கீழ்ப்படியாமையின் ஒரு பகுதி பிரதான தூதரை நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தியதாகும். நான் முதல் முறையாக மாம்சமாக மாறியபோது, அவன் என்னை மீறுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்தான். என் வார்த்தைகளை அறியாதவர்களில் அவனும் ஒருவனாக இருந்தான், அவனுடைய இருதயத்தில் இருந்து என் இடம் ஏற்கனவே மறைந்துவிட்டது. அத்தகையவர்கள் என் தெய்வீகத்தன்மையை நேரடியாக எதிர்க்கிறார்கள், என்னால் தாக்கப்படுகிறார்கள், மேலும் இறுதியில் தலை குனிந்து தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்கிறார்கள். ஆகையால், அவனுடைய வலுவான விஷயங்களை நான் பயன்படுத்தியபின், அதாவது, அவன் ஒரு குறிப்பிட்ட காலம் எனக்குக் கிரியை செய்தபின், அவன் மீண்டும் தனது பழைய வழிகளுக்குச் சென்றான், மேலும் அவன் என் வார்த்தைகளுக்கு நேரடியாகக் கீழ்ப்படியாமல் இருக்கவில்லை என்றாலும், அவன் என் உள் வழிகாட்டுதலுக்கும் தெளிவுபடுத்துதலுக்கும் கீழ்ப்படியவில்லை, இதனால் அவன் கடந்த காலத்தில் செய்ததெல்லாம் பயனற்றதாகியது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவன் பேசிய மகிமையின் கிரீடம் வெற்றுச் சொற்களாக மாறியது, இது அவனது சொந்தக் கற்பனையின் விளைவாகும், ஏனென்றால் இன்றும் அவன் என் நிபந்தனைகளின் சிறைப்பிடிப்பிற்குள் என் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுகிறான்.

மேலேயுள்ள எடுத்துக்காட்டில் இருந்து பார்த்தோமேயானால், யார் என்னை எதிர்க்கிறார்களோ (என் மாம்ச உருவத்தை மட்டுமல்ல, மிக முக்கியமாக, என் வார்த்தைகளையும், என் ஆவியையும்—அதாவது, என் தெய்வீகத்தன்மையை எதிர்ப்பது), அவர்கள் என் நியாயத்தீர்ப்பை அவர்களின் மாம்சத்தில் பெறுகிறார்கள். என் ஆவி உன்னை விட்டு விலகும்போது, நீ கீழ்நோக்கிச் சரிந்து, நேரடியாகப் பாதாளத்திற்குள் இறங்குகிறாய். உன் மாம்ச உடல் பூமியில் இருந்தாலும், நீ மனநோயால் பாதிக்கப்பட்டவனைப் போன்றவன்: நீ உன் நியாயத்தை இழந்து, உடனடியாக ஒரு பிரேதமாக உணர்கிறாய், அதாவது உன் மாம்சத்தைத் தாமதமின்றி முடித்துக்கட்ட என்னிடம் கெஞ்சுகிறாய். ஆவியைக் கொண்டிருக்கிற உங்களில் அநேகர் இந்தச் சூழ்நிலைகளைப் பற்றி ஆழ்ந்த புரிதலைக் கொண்டுள்ளீர்கள், மேலும் விரிவாக நான் சொல்லத் தேவையில்லை. கடந்த காலத்தில், நான் சாதாரண மனிதத்தன்மையில் கிரியை செய்தபோது, அநேகர் ஏற்கெனவே என் கோபத்திற்கும் மகத்துவத்திற்கும் எதிராகத் தங்களை அளவிட்டுக் கொண்டனர், ஏற்கெனவே எனது ஞானத்தையும் மனநிலையையும் சிறிதளவு அறிந்திருக்கிறார்கள். இன்று, நான் தெய்வீகமாக நேரடியாகப் பேசுகிறேன், செயல்படுகிறேன், இன்னும் சிலர் என் கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் தங்கள் கண்களால் பார்ப்பார்கள்; மேலும், நியாயத்தீர்ப்பின் யுகத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய கிரியை என்னவென்றால், என் ஜனங்கள் அனைவருமே மாம்சத்தில் என் கிரியைகளை நேரடியாக அறிந்து கொள்வதும், உங்கள் அனைவரையும் என் மனநிலையை நேரடியாகப் பார்க்க வைப்பதும் ஆகும். ஆயினும், நான் மாம்சத்தில் இருப்பதால், நான் உங்கள் பலவீனங்களை எண்ணிப்பார்க்கிறேன். நீங்கள் உங்கள் ஆவி, ஆத்மா மற்றும் சரீரத்தை விளையாட்டுப் பொருளாகக் கருதி, எந்தச் சிந்தனையும் இல்லாமல் அவற்றைச் சாத்தானுக்கு அர்ப்பணிக்க மாட்டீர்கள் என்பதே என் நம்பிக்கை ஆகும். உங்களிடம் உள்ள அனைத்தையும் பொக்கிஷமாக வைத்திருப்பது நல்லது, அவற்றை ஒரு விளையாட்டாகக் கருதக்கூடாது, ஏனென்றால் இதுபோன்ற விஷயங்கள் உங்கள் தலையெழுத்துடன் தொடர்புடையவை. என் வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை உங்களால் உண்மையில் புரிந்துகொள்ள முடிகிறதா? என் மெய்யான உணர்வுகளை உங்களால் கருத்தில் கொள்ள இயலுமா?

பரலோகத்திலுள்ள ஆசீர்வாதங்களுக்கு ஒத்திருக்கிற பூமியிலுள்ள என் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் அர்த்தமுள்ள விஷயங்களாக என்னைப் பற்றிய புரிதலையும், என் வார்த்தைகளின் இன்பத்தையும், என்னைப் பற்றிய அறிவையும் பொக்கிஷமாக வைத்திருக்க உங்களுக்கு விருப்பமா? உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளை எண்ணிச் சிந்திக்காமல், உங்களால் மெய்யாகவே உங்களை என்னிடம் முழுமையாகச் சமர்ப்பிக்க இயலுமா? ஓர் ஆடு போல என்னால் நீங்கள் வழிநடத்தப்படவும், கொல்லப்படவும் உங்களால் மெய்யாகவே உங்களை அனுமதிக்க இயலுமா? இதுபோன்ற விஷயங்களை அடையக்கூடிய திறன் கொண்டவர்கள் உங்களில் யாராவது இருக்கிறார்களா? என்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, என் வாக்குத்தத்தங்களைப் பெறுபவர்கள் அனைவரும் என் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள் என்று இருக்குமோ? இந்த வார்த்தைகளிலிருந்து நீங்கள் எதையேனும் புரிந்துகொண்டீர்களா? நான் உங்களைச் சோதித்தால், நீங்கள் மெய்யாகவே உங்களை என் தேவ திட்டத்தில் ஈடுபடுத்த இயலுமா, மேலும் இந்தச் சோதனைகளுக்கு மத்தியில், என் நோக்கங்களைத் தேடி, என் இருதயத்தைப் புரிந்துகொள்ள முடியுமா? நீ உருக்கமான பல சொற்களைப் பேசவேண்டும் என்றோ அல்லது பல உற்சாகமான கதைகளைச் சொல்லவேண்டும் என்றோ நான் விரும்பவில்லை; மாறாக, உன்னால் எனக்குச் சிறந்த சாட்சி கொடுக்க முடியும் என்றும், உன்னால் முழுமையாகவும் ஆழமாகவும் யதார்த்தத்திற்குள் நுழைய முடியும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். நான் நேரடியாகப் பேசவில்லை என்றால், உன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நீ கைவிட்டு, நான் உன்னைப் பயன்படுத்திக்கொள்ள நீ என்னை அனுமதிப்பாயா? எனக்குத் தேவைப்படும் உண்மை இது அல்லவா? என் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை யார் புரிந்துகொள்ள முடியும்? ஆயினும்கூட, இனியும் என் வார்த்தைகளின் தவறான புரிதலினால் நீங்கள் பாரமடையக் கூடாது என்றும், உங்கள் பிரவேசத்தில் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றும், என் வார்த்தைகளின் சாராம்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது எனது வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்தும், என் அர்த்தம் குறித்துத் தெளிவாகத் தெரியாமலிருப்பதிலிருந்தும், இதனால் எனது ஆளுகைக் கட்டளைகளை மீறுவதிலிருந்தும் உங்களைத் தடுக்கும். உங்களுக்கான எனது நோக்கங்களை என் வார்த்தைகளில் இருந்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளைப் பற்றி மேலும் சிந்திக்காதீர்கள், எல்லாவற்றிலும் தேவனின் திட்டங்களுக்குக் கீழ்படிய நீங்கள் எனக்கு முன்பாகத் தீர்மானித்தபடி செயல்படுங்கள். என் வீட்டுக்குள் நிற்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரைச் செய்ய வேண்டும்; பூமியில் எனது கிரியையின் கடைசிப் பகுதிக்கு நீ உன்னில் சிறந்ததை வழங்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களை கடைபிடிக்க நீ மெய்யாகவே விரும்புகிறாயா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 4” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 365

பூமியில், எல்லா விதமான பொல்லாத ஆவிகளும் ஓய்வெடுப்பதற்கான இடத்தை நிரந்தரமாகத் தேடுகின்றன, மேலும் அவை உட்புகக்கூடிய மனுஷ பிரேதங்களை முடிவில்லாமல் தேடுகின்றன. என் ஜனமே! நீங்கள் என் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். ஒருபோதும் கட்டுப்பாடற்றுப்போகாதீர்! ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளாதீர்! எனது வீட்டில் உன் விசுவாசத்தை நீ வழங்கு, விசுவாசத்தினால் மட்டுமே பிசாசின் தந்திரத்திற்கு எதிராக எதிர்குற்றஞ்சாட்ட முடியும். எந்தவொரு சூழ்நிலையிலும், நீங்கள் கடந்த காலத்தில், ஒரு காரியத்தை எனக்கு முன்பாகவும், இன்னொன்றை என் முதுகுக்குப் பின்னாலும் செய்ததைப் போலத் தற்போதும் நடந்து கொள்ளாதீர்; இந்த வழியில் செயல்பட்டால், நீங்கள் ஏற்கெனவே மீட்பிற்கு அப்பாற்பட்டவர் ஆவீர்கள். இது போன்ற போதுமான வார்த்தைகளை நான் அதிகமாக உச்சரிக்கவில்லையா? மனுஷரின் பழைய இயல்பைத் திருத்த முடியாது என்பதால், ஜனங்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டல்களை நான் கொடுக்க வேண்டியிருக்கிறது. சலிப்படைய வேண்டாம்! நான் சொல்வது எல்லாம் உங்கள் தலையெழுத்தை உறுதி செய்வதற்காகத்தான்! ஒரு வெறுக்கத்தக்க மற்றும் இழிவான இடம்தான் சாத்தானுக்குத் தேவை; நீங்கள் எந்தளவிற்கு நம்பிக்கையற்ற முறையிலும், ஒழுக்கமற்ற முறையிலும் இருக்கிறீர்களோ, கட்டுப்பாட்டுக்கு கீழ்ப்படிய மறுக்கிறீர்களோ, அந்தளவிற்கு அந்த அசுத்த ஆவிகள் உங்களை ஊடுருவுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் பெறும். நீங்கள் இந்த நிலைக்கு வந்திருந்தால், உங்கள் விசுவாசம் வெறுமனே உரையாடலைத் தவிர வேறொன்றுமில்லை, அதற்கு எந்தவொரு மெய்மையும் இல்லாமல், அசுத்த ஆவிகள் உங்கள் தீர்மானத்தைத் தகர்த்து அதனை எனது கிரியையைச் சீர்குலைக்கப் பயன்படும் கீழ்ப்படியாமை மற்றும் சாத்தானுடைய சதிகளாக மாற்றுகின்றன. அங்கிருந்து, நீங்கள் எந்த நேரத்திலும் என்னால் அடித்து நொறுக்கப்படுவீர்கள். இந்தச் சூழ்நிலையின் கனம் பற்றி யாருக்கும் புரிவதில்லை; ஜனங்கள் அனைவரும் அவர்கள் கேட்கும் விஷயங்களை நோக்கிச் செவிட்டுக் காதைத் திருப்புகிறார்கள், கொஞ்சமும் எச்சரிக்கையாக இருப்பதில்லை. கடந்த காலத்தில் என்ன செய்யப்பட்டது என்பது எனக்கு நினைவில் இல்லை; மீண்டும் ஒரு முறை நான் “மறப்பேன்” என்றும் அதன்மூலம் உன்னிடம் மென்மையாக இருப்பேன் என்றும் நீ இன்னும் காத்திருக்கிறாயா? மனுஷர் என்னை எதிர்த்திருந்தாலும், நான் அவர்களை எதிர்க்க மாட்டேன், ஏனென்றால் அவர்கள் மிகவும் சிறிய சரீர வளர்ச்சி கொண்டவர்கள், ஆகவே நான் அவர்களிடம் அதிகக் கோரிக்கைகளை வைப்பதில்லை. எனக்குத் தேவையானது எல்லாம் அவர்கள் ஒழுக்கங்கெட்டுப் போகக்கூடாது என்பதும், கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதுமே ஆகும். நிச்சயமாக இந்த ஒரு நிபந்தனையைப் பூர்த்தி செய்வது உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டது, இல்லையா? தங்கள் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் பல இரகசியங்களை நான் வெளிப்படுத்த வேண்டும் என அநேக ஜனங்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், பரலோகத்தின் அனைத்து இரகசியங்களையும் நீ புரிந்து கொண்டாலும், அந்த அறிவைக் கொண்டு உன்னால் என்ன செய்ய முடியும்? அது என் மீதான உன் அன்பை அதிகரிக்குமா? என் மீதான உன் அன்பைத் தூண்டுமா? நான் மனுஷரைக் குறைத்து மதிப்பிடுவதும் இல்லை, அவர்களைப் பற்றிய ஒரு முடிவை நான் எளிதாக எடுப்பதுமில்லை. இவை மனுஷரின் உண்மையான சூழ்நிலைகள் இல்லையென்றால், நான் இவ்வளவு எளிதாக அவர்களை அவ்வாறு முடிசூட்ட மாட்டேன். கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள்: நான் உங்களை எத்தனை முறை அவதூறாகப் பேசியுள்ளேன்? நான் உங்களை எத்தனை முறை குறைத்து மதிப்பிட்டுள்ளேன்? உங்கள் உண்மையான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நான் உங்களை எத்தனை முறை பார்த்திருக்கிறேன்? முழு மனதுடன் உங்களை வெல்ல என் சொற்கள் எத்தனை முறை தவறியுள்ளன? உங்களுக்குள் ஆழமாக ஒத்ததிர்வு ஏற்படுத்தாமல் நான் எத்தனை முறை பேசியிருக்கிறேன்? உங்களில் யார் என் வார்த்தைகளை அச்சமின்றி, நடுங்காமல் படித்திருக்கிறீர், நான் உங்களைப் பாதாளத்திற்குள் அடித்துத் தள்ளுவேன் என்ற ஆழ்ந்த பயம் யாருக்கு இருக்கிறது? என் வார்த்தைகளிலிருந்து சோதனைகளைத் தாங்காதவர் யார்? என் சொற்களுக்குள் அதிகாரம் இருக்கிறது, ஆனால் இது மனுஷருக்குச் சாதாரண நியாயத்தீர்ப்பை வழங்குவதற்காக அல்ல; மாறாக, அவர்களின் உண்மையான சூழ்நிலைகளை நினைவில் கொண்டு, என் வார்த்தைகளில் இருக்கும் உள்ளார்ந்த அர்த்தத்தை நான் தொடர்ந்து அவர்களுக்கு வெளிப்படுத்துகிறேன் என்பதற்காக. உண்மையில், என் சர்வ வல்லமையுள்ள வல்லமையை என் வார்த்தைகளில் கண்டுணரக்கூடியவர் எவரேனும் இருக்கிறாரா? பசும்பொன்னால் தயாரிக்கப்பட்ட என் வார்த்தைகளைப் பெற யாராவது இருக்கிறார்களா? நான் எத்தனை வார்த்தைகள் பேசியிருக்கிறேன்? யாராவது அவற்றை எப்போதாவது பொக்கிஷமாக்கி இருக்கிறீரா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 10” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 366

ஒவ்வொரு நாளும் நான் பிரபஞ்சத்தைக் கவனித்து வருகிறேன், நான் தாழ்மையுடன் என் வாசஸ்தலத்தில் ஒளிந்திருக்கிறேன், மனித ஜீவிதத்தை அனுபவித்து, மனிதர்களின் ஒவ்வொரு செயலையும் நெருக்கமாக ஆய்வு செய்கிறேன். யாரும் உண்மையாகத் தங்களை எனக்கு ஒப்புக்கொடுக்கவில்லை; யாரும் சத்தியத்தைப் பின்தொடரவில்லை. யாரும் என்னிடத்தில் மனசாட்சியுடன் இருந்ததில்லை அல்லது எனக்கு முன் தீர்மானங்களை எடுத்ததில்லை, பின்னர் அதனைத் தங்கள் கடமையாகக் கொள்ளவில்லை. நான் அவர்களிடம் வாழ அவர்களில் யாரும் என்னை அனுமதிக்கவில்லை, ஜனங்கள் தங்கள் சொந்த உயிர்களை மதிப்பதுபோல என்னை மதிக்கவில்லை. நடைமுறை யதார்த்தத்தில், என் தெய்வீகம் அனைத்தையும் யாரும் இதுவரை பார்த்ததில்லை; நடைமுறை தேவனுடன் தொடர்பு கொள்ள யாரும் இதுவரை தயாராக இல்லை. மனிதர்களைத் தண்ணீர் முழுவதுமாக விழுங்கும்போது, நான் தேங்கி நிற்கும் அந்த நீரிலிருந்து அவர்களைக் காப்பாற்றி, புதிதாக வாழ அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். ஜனங்கள் வாழ்வதற்கான தங்கள் நம்பிக்கையை இழக்கும்போது, நான் அவர்களை மரணத்தின் விளிம்பிலிருந்து மேலே இழுக்கிறேன், அவர்கள் உயிர்வாழ என்னை ஓர் அஸ்திபாரமாகப் பயன்படுத்திக்கொண்டு, இதனால் அவர்கள் வாழ்க்கையில் மேலே செல்லத் தைரியத்தை அளிக்கிறேன். ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாதபோது, அவர்கள் கீழ்ப்படியாமையிலிருந்து என்னை அறிந்து கொள்ளுமாறு செய்கிறேன். மனிதர்களின் பழைய சுபாவத்தின் வெளிச்சத்திலும், என் இரக்கத்தின் வெளிச்சத்திலும், மனிதர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பதை விட, அவர்கள் மனந்திரும்பி ஒரு புதிய தொடக்கம் காண நான் அனுமதிக்கிறேன். அவர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும்போது, அவர்கள் உடலில் கடைசி மூச்சு மட்டுமே இருந்தாலும், சாத்தானின் தந்திரத்திற்கு இரையாகாமல் தடுத்து, நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறேன். ஜனங்கள் பலமுறை என் கரத்தைக் கண்டிருக்கிறார்கள், பல முறை அவர்கள் என் கனிவான முகத்தோற்றத்தையும் புன்னகை புரியும் முகத்தையும் பார்த்திருக்கிறார்கள், பலமுறை அவர்கள் என் மகத்துவத்தையும் கடுங்கோபத்தையும் பார்த்திருக்கிறார்கள். மனிதர்கள் என்னை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாலும், வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதற்கான வாய்ப்புகளாக அவர்களின் பலவீனங்களை நான் பயன்படுத்தவில்லை. நான் மனிதர்களின் கஷ்டங்களை அனுபவிப்பது மனித பலவீனத்தின்மீது அனுதாபம் கொள்ள எனக்கு உதவியது. ஜனங்களின் கீழ்ப்படியாமை மற்றும் நன்றியுணர்வு அற்ற நிலைக்குப் பதிலளிக்கும் விதமாக மட்டுமே நான் பல்வேறு அளவுகளில் சிட்சைகளை விதிக்கிறேன்.

ஜனங்கள் பரபரப்பாக இருக்கும்போது நான் என்னை மறைத்துக்கொள்கிறேன், அவர்களின் ஓய்வு நேரத்தில் என்னை வெளிப்படுத்துகிறேன். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஜனங்கள் என்னைக் கற்பனை செய்கிறார்கள்; எல்லா வேண்டுதல்களுக்கும் இணங்குகிற தேவனாக அவர்கள் என்னைக் கருதுகிறார்கள். ஆகவே, பெரும்பாலானவர்கள் தேவனின் உதவியை நாடுவதற்காக மட்டுமே எனக்கு முன்பாக வருகிறார்கள், என்னை அறிந்து கொள்வதற்கான எந்தவொரு விருப்பத்தினாலும் அல்ல. நோயால் அவதியுறும் நிலையில், ஜனங்கள் அவசரமாக என் உதவியைக் கோருகிறார்கள். துன்பம் ஏற்படும் காலங்களில், அவர்கள் தங்கள் சிரமங்களைக் கூறி அவர்களுடைய துன்பங்களைத் போக்க வேண்டும் என்று தங்கள் முழு வல்லமையுடனும் என்னிடம் தெரிவிக்கிறார்கள். இருப்பினும், சௌகரியமான நிலையில் இருக்கும்போது ஒரு மனிதனால் கூட என்னை மேலும் நேசிக்க முடியவில்லை; அவர்கள் சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்போது அவர்களின் சந்தோஷத்தில் நான் பங்கெடுக்க வேண்டும் என்று ஒரு மனிதன்கூட என்னைக் கேட்டதில்லை. அவர்களுடைய சிறிய குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் நன்றாகவும் இருக்கும்போது, ஜனங்கள் நீண்ட காலமாகவே அவர்கள் தங்கள் குடும்பங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, என்னை ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள் அல்லது நான் உள்ளே நுழைவதைத் தடுக்க எனக்குக் கதவை மூடியிருக்கிறார்கள். மனித மனம் மிகவும் குறுகியது; என்னைப் போன்ற அன்பான, இரக்கமுள்ள, அணுகக்கூடிய ஒரு தேவனை வைத்துக்கொள்ளக் கூட முடியாத அளவுக்கு மிகக் குறுகியது. மனிதர்கள் மகிழ்ச்சியாகச் சிரிக்கும் காலங்களில் நான் பல முறை அவர்களால் நிராகரிக்கப்பட்டேன்; மனிதர்கள் தடுமாறும்போது பல முறை ஓர் ஊன்றுகோலாக என்மீது சாய்ந்திருக்கிறார்கள்; நோயால் பாதிக்கப்பட்ட ஜனங்களால் நான் பல முறை மருத்துவரின் பாத்திரத்துக்குத் தள்ளப்பட்டேன். மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்! அவர்கள் முற்றிலும் நியாயமற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள். மனிதர்களிடம் பொருந்தி இருக்க வேண்டும் என்று கருதக்கூடிய உணர்வுகள் கூட அவர்களிடம் அறியப்படவில்லை; அவர்களிடம் மனித அம்சத்தின் எந்தத் தடயமும் முற்றிலுமாக இல்லை. கடந்த காலத்தைச் சிந்தித்து, அதை நிகழ்காலத்துடன் ஒப்பிடுங்கள்: உங்களுக்குள் ஏதேனும் மாற்றங்கள் நடைபெறுகிறதா? உங்கள் கடந்த காலத்திலிருந்து சில விஷயங்களை நீங்கள் ஒழித்துவிட்டீர்களா? அல்லது அந்தக் கடந்த காலம் இன்னும் மாற்றீடு செய்யப்படவில்லையா?

நான் மலைத்தொடர்களையும் நதியின் பள்ளத்தாக்குகளையும் கடந்து, மனிதர்களின் உலகின் ஏற்றத் தாழ்வுகளை அனுபவித்து உணர்கிறேன். அவர்களின் மத்தியில் நான் சுற்றித் திரிந்தேன், பல ஆண்டுகளாக அவர்களின் மத்தியில் வாழ்ந்திருக்கிறேன், இருப்பினும் மனிதர்களின் மனநிலையில் கொஞ்சம்கூட மாற்றம் இல்லை என்று தெரிகிறது. ஜனங்களின் பழைய இயல்பு வேரூன்றி அவற்றிலேயே புதிதாக முளைவிட்டதுபோலத் தோன்றுகிறது. அந்தப் பழைய சுபாவத்தை அவர்களால் ஒருபோதும் மாற்ற இயலாது; அதன் அசல் அஸ்திபாரத்தின் மீது வெறுமனே ஓரளவு மேம்படுத்துகிறார்கள். ஜனங்கள் சொல்வது போல், சாராம்சம் மாறவில்லை, ஆனால் வடிவம் மிகவும் மாறிவிட்டது. ஜனங்கள் அனைவரும் பொய் வார்த்தைகளைக் கூறி என் பாராட்டுக்களைப் பெறலாம் என்று நினைத்து என்னை முட்டாளாக்கவும், என்னைத் திகைக்க வைக்கவும் முயற்சிக்கிறார்கள். மனித தந்திரங்களைப் பார்த்து நான் வியக்கவும் இல்லை, அதன்மீது கவனம் செலுத்துவதும் இல்லை. ஆத்திரத்தில் கோபம் கொள்வதைவிட, கண்டும் காணாது இருக்கும் மனப்பான்மையை நான் பின்பற்றுகிறேன். மனிதகுலத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சுதந்திரத்தை வழங்க நான் திட்டமிட்டுள்ளேன், அதன் பிறகு, எல்லா மனிதர்களையும் ஒன்றாகக் கையாளுவேன். மனிதர்கள் அனைவரும், தங்களைத் தாங்களே நேசிக்காத தங்களைத் தாங்களே மதிக்காத, எதற்குமே லாயக்கற்றவர்களாக இருப்பதால், அவர்கள் நான் மீண்டும் ஒருமுறை அவர்களிடம் இரக்கம் மற்றும் அன்பைக் காட்ட வேண்டும் என்று ஏன் விரும்புகிறார்கள்? விதிவிலக்கு இல்லாமல், மனிதர்கள் தங்களைத் தாங்களே அறியவில்லை, மேலும் அவர்கள் எவ்வளவு மதிப்புடையவர்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் தங்களைத் தாங்களே எடைபோட ஒரு தராசில் நிற்க வேண்டும். மனிதர்கள் எனக்குச் செவிசாய்ப்பதில்லை, எனவே நானும் அவர்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் என்மீது கவனம் செலுத்துவதில்லை, எனவே நானும் அவர்கள்மீது எந்தக் கடினமான கிரியையும் செய்யவேண்டிய அவசியமில்லை. இது இரு உலகங்களிலும் சிறந்தது அல்லவா? என் ஜனமே, இது உங்களை விவரிக்கவில்லையா? என் முன்பாகத் தீர்மானங்களை எடுத்து, பின்னர் அவற்றைக் கைவிடாதவர் உங்களில் யார்? பல விஷயங்களில் அடிக்கடி மனதை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக என் முன்பாக நீண்டகால தீர்மானங்களை எடுத்தவர் யார்? எப்பொழுதும், மனிதர்கள் எனக்கு முன்பாகச் சௌகரியமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்கிறார்கள், பின்னர் அவை அனைத்தையும் துன்பம் ஏற்படும் நேரத்தில் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; பிற்பாடு, கொஞ்சம் கழித்து, அவர்கள் தங்கள் தீர்மானத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு எனக்கு முன் அமைக்கிறார்கள். குப்பைக் குவியலிலிருந்து மனிதகுலம் எடுத்த இந்தக் குப்பைகளை நான் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நான் மிகவும் மரியாதை அற்றவனா? சில மனிதர்கள் தங்கள் தீர்மானங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்கிறார்கள், சிலர் தூய்மையானவர்கள், சிலர் எனக்குப் பலியிடுவதற்கு அவர்களுக்கு மிகவும் விலைமதிப்பற்ற விஷயங்களாக உள்ளவற்றை வழங்குகிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரேமாதிரியாக இருக்கிறீர்கள் அல்லவா? ராஜ்யத்தில் என் ஜனங்களின் உறுப்பினர்களாக உங்கள் கடமைகளை நீங்கள் கடைப்பிடிக்க முடியாவிட்டால், நீங்கள் என்னால் வெறுக்கப்படுவீர்கள், நிராகரிக்கப்படுவீர்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 14” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 367

மனிதர்கள் அனைவரும் சுய அறிவு இல்லாத ஜீவன்கள், அவர்களால் தங்களைத் தாங்களே அறிய முடியவில்லை. இருந்தபோதிலும், தங்கள் புறங்கைகளை அறிந்திருப்பது போல, மற்றவர்கள் செய்தது, சொன்னது ஆகியவை எல்லாம், அவை செய்யப்படுவதற்கு முன்பு முதலில் அவர்களுக்கு முன்னால் அவர்களால் “பரிசோதிக்கப்பட்டன,” மேலும் அவர்களின் ஒப்புதலைப் பெற்றன என்பது போல மற்றவர்கள் எல்லோரையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் மற்ற எல்லோரையும் அவர்களின் உளவியல் நிலைகள்வரை முழு அளவில் எடுத்துக்கொண்டது போலத் தோன்றுகிறது. மனிதர்கள் எல்லாம் இப்படிப்பட்டவர்கள். அவர்கள் இன்று ராஜ்யத்தின் காலத்திற்குள் நுழைந்தாலும்கூட, அவர்களின் சுபாவம் மாறாமல் உள்ளது. இப்போதும், அவர்கள் எனக்கு முன்னால் நான் என்ன செய்கிறேனோ அதைச் செய்கிறார்கள், அதேசமயம் எனக்குப் பின்னால் அவர்கள் தங்களுக்கே சொந்தமான தனித்துவமான “தொழிலை” செய்யத் தொடங்குகிறார்கள். எனினும், பின்னர், அவர்கள் எனக்கு முன்பாக வரும்போது, வெளிப்படையாக அமைதியாகவும், அச்சமின்றியும், தணிவான முகத்தோற்றத்துடனும் ஒரு நிலையான நாடித்துடிப்புடனும், அவர்கள் முற்றிலும் மாறுபட்ட மனிதர்களைப் போல இருக்கிறார்கள். இது துல்லியமாக மனிதர்களை மிகவும் வெறுக்கத்தக்கவர்களாக்குகிறது அல்லவா? அநேகர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு முகங்களை அணிந்துகொள்கிறார்கள்—ஒன்று எனக்கு முன்னால் இருக்கும்போது, மற்றொன்று என் பின்னால் இருக்கும்போது. அவர்களில் அநேகர் எனக்கு முன்பாக இருக்கும்போது பிறந்த ஆட்டுக்குட்டிகளைப் போலச் செயல்படுகிறார்கள், ஆனால் எனக்குப் பின்னால் இருக்கும்போது, அவர்கள் கொடூரமான புலிகளாக மாறி, பின்னர் மலைகளைச் சுற்றி மகிழ்ச்சியுடன் சிறகடிக்கும் சிறிய பறவைகள்போல நடிக்கிறார்கள். அநேகர் என் முகத்தின் முன்னே, நோக்கத்தையும் தீர்மானத்தையும் காட்டுகிறார்கள். அநேகர் தாகத்துடனும் ஏக்கத்துடனும் என் வார்த்தைகளைத் தேடுவதற்கு எனக்கு முன்பாக வருகிறார்கள், ஆனால் என் முதுகுக்குப் பின்னால், என் வார்த்தைகள் வில்லங்கமானது என்பதுபோல் அவற்றின்மீது சலிப்படைந்து அவற்றை அவர்கள் கைவிடுகிறார்கள். அநேகந்தரம், என் எதிரியால் மனித இனம் சீர்கெடுவதைக் கண்டதும், மனிதர்களிடம் என் நம்பிக்கையை வைப்பதை நான் விட்டுவிட்டேன். அநேகந்தரம், அவர்கள் எனக்கு முன்பாகக் கண்ணீருடன் மன்னிப்பு கோருவதற்கு வருவதைக் காண்கிறேன், இருந்தபோதிலும், அவர்களுடைய சுய மரியாதையின்மை மற்றும் பிடிவாதமான திருத்த முடியாத தன்மை காரணமாக, அவர்களின் இருதயங்கள் உண்மையானவை மற்றும் அவர்களின் நோக்கங்கள் நேர்மையானவை என்றாலும் கூட, கோபத்தில் அவர்கள் செய்யும் செயல்களுக்கு என் கண்களை மூடிக்கொண்டேன். அநேகந்தரம், என்னுடன் ஒத்துழைக்கும் அளவுக்கு ஜனங்கள் நம்பிக்கையுடன் இருப்பதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன், அவர்கள் எனக்கு முன்பாக, என் அரவணைப்பின் கனிவைச் சுவைப்பதுபோலத் தெரிகிறது. அநேகந்தரம், நான் தேர்ந்தெடுத்த ஜனங்களின் அப்பாவித்தனம், ஜீவிதத்தன்மை மற்றும் அபிமானத்தைக் கண்டிருக்கிறேன், இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு நான் எப்படி மிகுந்த மகிழ்ச்சியைப் பெறாமல் இருக்க முடியும்? மனிதர்களுக்குத், தங்களின் முன்குறித்த ஆசீர்வாதங்களை என் கைகளில் எப்படி அனுபவிப்பது என்று தெரியவில்லை, ஏனென்றால் “ஆசீர்வாதங்கள்” மற்றும் “துன்பம்” ஆகிய இரண்டின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் காரணத்தினால், மனிதர்கள் என்னைத் தேடுவதில் நேர்மைக்கு மிக அப்பால் இருக்கிறார்கள். நாளை என்பதில்லையென்றால், எனக்கு முன்பாக நிற்கும் உங்களில் யார் முற்றிலும் கால் பதிக்காத பனிபோலவும் களங்கமற்ற மாணிக்கமாகவும் இருப்பீர்கள்? ஒரு சுவையான உணவு, ஓர் உன்னதமான ஆடை, அல்லது அருமையான ஊதியம் கொண்ட ஓர் உயர் அலுவலகப் பணி ஆகியவற்றிற்குப் பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒன்றாக என்மீதான உங்கள் அன்பு இருக்க முடியுமா? மற்றவர்கள் உன்மீது வைத்திருக்கும் அன்பிற்காக இதைப் பரிமாறிக்கொள்ள முடியுமா? சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது, ஜனங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பைக் கைவிடத் தூண்டுமா? துன்பங்களும் இன்னல்களும் எனது ஏற்பாடுகள் குறித்து அவர்கள் குறைகூறும்படிச் செய்ததா? என் வாயில் இருக்கும் கருக்குள்ள பட்டயத்தை யாரும் உண்மையிலேயே பாராட்டவில்லை: அது என்ன என்பதை உண்மையிலேயே புரிந்து கொள்ளாமல் அதன் மேலோட்டமான பொருளை மட்டுமே அவர்கள் அறிவார்கள். என் பட்டயத்தின் கருக்கை மனிதர்களால் உண்மையாகக் காண முடிந்தால், அவர்கள் எலிகள் தங்கள் வளைகளுக்குள் ஒடுவதுபோல தலைதெறிக்க ஓடுவார்கள். அவர்களின் உணர்வின்மை காரணமாக, மனிதர்கள் என் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளவில்லை, ஆகவே எனது வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதையோ அல்லது அவை மனித சுபாவங்களை எவ்வளவு வெளிப்படுத்துகின்றன என்பதையும், அந்த வார்த்தைகளால் அவர்களுடைய சொந்தச் சீர்கேடுகள் எவ்வளவு மதிப்பிடப்பட்டன என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்தக் காரணத்திற்காக, நான் சொல்வதைப் பற்றிய அவர்களின் அரைவேக்காட்டுக் கருத்துக்களின் விளைவாக, பெரும்பாலான ஜனங்கள் வெதுவெதுப்பான அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 15” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 368

காலங்கள் முழுவதும், அநேகர் இந்த உலகத்திலிருந்து ஏமாற்றத்தோடும், தயக்கத்தோடும் புறப்பட்டுவிட்டார்கள், அநேகர் நம்பிக்கையோடும் உண்மையோடும் பூமிக்கு வந்துள்ளனர். அநேகர் வர நான் ஏற்பாடு செய்திருக்கிறேன், பலரை அனுப்பிருக்கிறேன். எண்ணற்ற ஜனங்கள் என் கைகளை கடந்துபோயிருக்கிறார்கள். அநேக ஆவிகள் பாதாளத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன, அநேக ஆவிகள் மாம்சத்தில் வாழ்ந்திருக்கின்றன, அநேக ஆவிகள் மரித்துப் பூமியில் மறுபிறப்பை எடுத்திருக்கின்றன. ஆயினும்கூட அவற்றில் எதற்கும் இன்று ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் மனுஷனுக்கு நிறைய கொடுத்திருக்கிறேன், ஆனாலும் அவன் கொஞ்சமாகத்தான் அடைந்திருக்கிறான், ஏனென்றால் சாத்தானின் படைகளின் தாக்குதலால் அவனுக்கு என் செல்வங்கள் அனைத்தையும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. அவன் அவற்றைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெற்றிருக்கிறான், ஆனால் அவற்றை ஒருபோதும் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. வானத்தின் செல்வத்தைப் பெற மனுஷன் தனது உடலில் உள்ள புதையலை ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை, அதனால் நான் அவனுக்கு அளித்த ஆசீர்வாதங்களை அவன் இழந்துவிட்டான். மனுஷனின் ஆவிக்கு அவனை என் ஆவியுடன் இணைக்கும் திறனில்லையா? மனுஷன் ஏன் என்னை ஒருபோதும் தன் ஆவியுடன் ஈடுபடுத்தவில்லை? மனுஷன் ஆவியால் என்னை நெருங்க இயலாதபோது மாம்சத்தில் என்னை ஏன் நெருங்குகிறான்? என் உண்மையான முகம் மாம்சத்தின் முகமா? என் சாராம்சத்தை மனுஷன் ஏன் அறியவில்லை? உண்மையிலேயே மனுஷனின் ஆவியில் என்னைப் பற்றிய தடயம் ஏதாவது ஒருபோதும் இருந்ததில்லையா? மனுஷனின் ஆவியிலிருந்து நான் முற்றிலும் மறைந்துவிட்டேனா? மனுஷன் ஆவிக்குரிய ராஜ்யத்திற்குள் நுழையவில்லை என்றால், அவன் என் நோக்கங்களை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? மனுஷனின் பார்வையில், ஆவிக்குரிய ராஜ்யத்தில் நேரடியாக ஊடுருவக்கூடியது ஏதேனும் இருக்கிறதா? என் ஆவியின் மூலம் நான் மனுஷனை பல முறை அழைத்துள்ளேன், ஆனால் மனுஷனை நான் வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்வேன் என்ற பயத்தில், ஏதோ நான் அவனை முட்களால் குத்தியது போல, தூரத்திலிருந்தே என்னைப் பார்க்கிறான். மனுஷனின் ஆவியை நான் பலமுறை விசாரித்திருக்கிறேன், ஆனாலும் அவன் முற்றிலும் மறந்துவிட்டான், நான் அவனுடைய வீட்டிற்குள் நுழைந்து அவனுடைய உடைமைகள் அனைத்தையும் பறிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன் என்று ஆழ்ந்த பயம் கொண்டிருக்கிறான். இவ்வாறு, அவன் என்னை வெளியே தள்ளிவிட்டு, குளிர்ந்த, இறுக்கமாக மூடிய கதவைத் தவிர வேறு எதையும் பார்க்க விடாமல் செய்கிறான். மனுஷன் பலமுறை வீழ்ந்திருக்கிறான், நான் அவனைப் பலமுறை காப்பாற்றியிருக்கிறேன், ஆனால் எழுந்தபின் அவன் உடனடியாக என்னை விட்டு வெளியேறுகிறான், என் அன்பால் தீண்டப்படாமல், விருப்பமில்லாத பார்வையை என் மீது வீசுகிறான்; நான் ஒருபோதும் மனுஷனின் இதயத்தைக் கதகதப்பாக்கவில்லை. மனுஷன் உணர்ச்சியற்ற, குளிர்ந்த இரத்தமுள்ள ஒரு மிருகம். என் அரவணைப்பால் அவன் கதகதப்பாக இருந்தாலும், அவன் ஒருபோதும் அதனால் தூண்டப்படவில்லை. மனுஷன் ஒரு மலைவாழ் காட்டுமிராண்டி போன்றவன். மனுஷர் மீதான என் நேசத்தை அவன் ஒருபோதும் பொக்கிஷமாகக் கருதவில்லை. அவன் என்னை அணுக விரும்பவில்லை, மலைகளுக்கு மத்தியில் வசிக்க விரும்புகிறான், அங்கு அவன் மிருகங்களின் அச்சுறுத்தலைத் தாங்குகிறான்—ஆனாலும் அவன் எனக்குள் அடைக்கலமாக விரும்பவில்லை. நான் எந்த மனுஷனையும் கட்டாயப்படுத்தவில்லை: நான் என் கிரியையை மட்டுமே செய்கிறேன். மனுஷன் வலிமைமிக்க சமுத்திரத்தின் நடுவில் இருந்து என் பக்கமாக நீந்தி வரும் நாள் வரும், அதனால் அவன் பூமியில் உள்ள அனைத்து ஐசுவரியங்களையும் அனுபவித்து, சமுத்திரத்தினால் விழுங்கப்படும் அபாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 20” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 369

அநேக ஜனங்கள் என்னை உண்மையாக நேசிக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுடைய இருதயங்கள் அவர்களுடையதாக இல்லை என்பதால், அவர்கள் மீதே அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை; நான் கொடுத்த சோதனைகளை அனுபவிக்கும் போது அநேகர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் நான் உண்மையிலேயே இருக்கிறேன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை, வெறுமனே என்னை வெறுமையாய் நேசிக்கிறார்கள், என் உண்மையான இருப்பு காரணமாக அல்ல; அநேகர் தங்கள் இருதயங்களை எனக்கு முன்பாக வைக்கின்றனர், பின்னர் தங்கள் இருதயங்களில் கவனம் செலுத்த மறுக்கின்றனர், இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களுடைய இருதயங்கள் சாத்தானால் பறிக்கப்படுகின்றன, பின்னர் அவர்கள் என்னை விட்டு விலகுகிறார்கள்; நான் என் வார்த்தைகளை வழங்கும்போது பலர் என்னை உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனாலும் என் வார்த்தைகளை அவர்களின் ஆவிகளில் சிந்தையில் வைக்க மறுக்கின்றனர், அதற்குப் பதிலாகச் சாதாரணமாக அவற்றைப் பொதுச் சொத்து போலப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் விரும்பும் போதெல்லாம் அவை எங்கிருந்து வந்ததோ அங்கேயே திரும்பத் தூக்கி எறிகிறார்கள். மனுஷன் வேதனையின் மத்தியில் என்னைத் தேடுகிறான், சோதனையின்போது என்னைக் காண்கிறான். சமாதான காலங்களில் அவன் என்னை ரசிக்கிறான், ஆபத்து நேரத்தில் என்னை மறுக்கிறான், அலுவலாக இருக்கும்போது என்னை மறந்துவிடுகிறான், அவன் தனியே இருக்கும்போது என் இயக்கங்களை கடந்து செல்கிறான்—ஆனாலும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் யாரும் என்னை நேசித்ததில்லை. மனுஷன் எனக்கு முன்பாக அக்கறையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: அவன் எனக்கு எதையும் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை, ஆனால் எல்லா ஜனங்களும் என்னைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதால் மட்டுமே, என்னை வாக்குவசீகரம் செய்வதற்குப் பதிலாக, மனுஷனின் நேர்மையை மீண்டும் கொண்டு வர அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள். எனது பிரகாசம், ஒளியூட்டல் மற்றும் எனது முயற்சிகளுக்கான செலவு அனைத்து ஜனங்களையும் வியாபிக்கின்றன, ஆனால் மனுஷனின் ஒவ்வொரு செயலின் உண்மையும் எல்லா ஜனங்களையும் வியாபிக்கிறது, அதேபோல் அவர்கள் என்னை ஏமாற்றுகிறார்கள். இது மனுஷனின் ஏமாற்றுவதற்கான பொருட்கள் கருவறையிலிருந்து அவனுடன் இருப்பதைப் போலவும், பிறந்ததிலிருந்தே இந்தச் சிறப்புத் தந்திரங்களை அவர் பெற்றிருப்பதைப் போலவும் இருக்கிறது. மேலும், அவன் ஒருபோதும் ஆட்டத்தை விட்டுக் கொடுக்கவில்லை; இந்த வஞ்சகமான திறன்களின் பிறப்பிடத்தை யாரும் இதுவரை பார்த்ததில்லை. இதன் விளைவாக, மனுஷன் அதை உணராமல் ஏமாற்றத்தின் மத்தியில் வாழ்கிறான், அது அவன் தன்னையே மன்னிப்பதைப் போலவும், என்னை வேண்டுமென்றே ஏமாற்றுவது என்பதை விட தேவனுடைய ஏற்பாடுகள் போலவும் இருக்கிறது. மனுஷன் என்னை ஏமாற்றுவதற்கான ஆதாரம் இதுவல்லவா? இது அவனது தந்திரமான திட்டம் அல்லவா? மனுஷனின் தணிவான மற்றும் வஞ்சகமான பேச்சுக்களால் நான் ஒருபோதும் குழப்பமடையவில்லை, ஏனென்றால் அவனுடைய சாரத்தை நான் நீண்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடித்துவிட்டேன். அவனது இரத்தம் எவ்வளவு தூய்மையற்றதாக இருக்கிறது, அவனது மஜ்ஜையில் சாத்தானின் விஷம் எவ்வளவு உள்ளது என்பது யாருக்குத் தெரியும்? கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் மனுஷன் அதற்குப் பழக்கமாகி விடுகிறான், அதாவது சாத்தானால் செய்யப்பட்டத் தீங்கை அவன் உணர்வதில்லை, இதனால் “ஆரோக்கியமான இருப்புக்கான கலையைக்” கண்டுபிடிப்பதில் அக்கறை அவனுக்கு இருப்பதில்லை.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 21” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 370

மனுஷன் வெளிச்சத்தின் மத்தியில் வாழ்கிறான், ஆனாலும் வெளிச்சத்தின் விலைமதிப்பற்ற தன்மையை அவன் அறியவில்லை. வெளிச்சத்தின் பொருள் பற்றியும், அதன் மூலத்தைப் பற்றியும், மேலும், அது யாருடையது என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை. நான் மனுஷனிடையே வெளிச்சத்தை வழங்கும்போது, மனுஷனிடையேயான நிலைமைகளை உடனடியாக ஆராய்கிறேன்: வெளிச்சத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் மாறிக்கொண்டேயும் வளர்ந்தும், இருளை விட்டு நீங்கியும் விட்டார்கள். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் நான் பார்க்கிறேன், மலைகள் மூடுபனியில் மூழ்கியுள்ளன என்பதையும், தண்ணீர் குளிரில் உறைந்திருப்பதையும் பார்க்கிறேன், வெளிச்சம் வருவதால் ஏதோ விலைமதிப்பற்ற ஒன்றைக் கண்டுபிடிக்கப்போகிறோம் என்றெண்ணி ஜனங்கள் கிழக்கு நோக்கிப் பார்க்கிறார்கள்—ஆனாலும் மனுஷன் மூடுபனிக்குள் ஒரு தெளிவான திசையை அறிய இயலாமல் இருக்கிறான். முழு உலகமும் மூடுபனி என்ற போர்வையால் மூடியிருப்பதால், மேகங்களின் ஊடே நான் பார்க்கும்போது, என் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஒரு மனுஷன் கூட இல்லை. மனுஷன் பூமியில் எதையோ தேடுகிறான்; அவன் தேடுவது போலத் தோன்றுகிறது; அவன் என் வருகைக்காகக் காத்திருக்க விரும்புது போல தோன்றுகிறது, ஆனால் அவனுக்கு எனது நாள் பற்றி தெரியவில்லை, மேலும் கிழக்கில் தெரியும் வெளிச்சத்தின் மங்கிய ஒளியை மட்டுமே அடிக்கடி பார்க்க முடிகிறது. எல்லா ஜனங்களிடையேயும், என் சொந்த இருதயத்தோடு உண்மையாக ஒத்துப்போகிறவர்களை நான் தேடுகிறேன். நான் எல்லா ஜனங்களிடையேயும் நடக்கிறேன், எல்லா ஜனங்களிடையேயும் வாழ்கிறேன், ஆனால் பூமியில் மனுஷன் பாதுகாப்பாக இருக்கிறான், ஆகவே, என் சொந்த இருதயத்தோடு உண்மையாக ஒத்துப்போகிறவன் யாரும் இல்லை. என் சித்தத்தை எவ்வாறு கவனிப்பது என்று ஜனங்களுக்குத் தெரியவில்லை, அவர்களால் என் செயல்களைப் பார்க்க முடியவில்லை, மேலும் அவர்களால் வெளிச்சத்திற்குள் செல்ல முடியவில்லை, வெளிச்சத்தால் பிரகாசிக்க முடியவில்லை. மனுஷன் என் வார்த்தைகளை எப்போதும் பொக்கிஷமாகக் கருதினாலும், சாத்தானின் வஞ்சகத் திட்டங்களை அவனால் பார்க்க முடியவில்லை; மனுஷனின் வளச்சி மிகச் குறைவாக இருப்பதால், அவனது இருதயம் விரும்பியபடி அவனால் செயல்பட முடியவில்லை. மனுஷன் என்னை ஒருபோதும் நேர்மையாக நேசித்ததில்லை. நான் அவனை உயர்த்தும்போது, அவன் தன்னைத் தகுதியற்றவன் என்று உணர்கிறான், ஆனால் இது என்னைத் திருப்திப்படுத்த அவனை முயற்சி செய்ய வைக்காது. நான் அவனுக்குக் கொடுத்த “நிலையை” அவன் கையில் வைத்துக் கொண்டு அதை ஆராய்ந்து பார்க்கிறான்; என் அருமையை அவனால் உணரமுடியவில்லை, அதற்குப் பதிலாக தனது நிலையின் ஆசீர்வாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான். இது மனுஷனின் குறைபாடு அல்லவா? மலைகள் நகரும்போது, உன் நிலைக்காக ஒரு மாற்றுப்பாதையை அவற்றால் உருவாக்க முடியுமா? தண்ணீர் பாயும் போது, அவை மனுஷனின் நிலைக்கு முன் நிற்க முடியுமா? மனுஷனின் நிலையால் வானங்களையும் பூமியையும் தலைகீழாக்க முடியுமா? ஒருகாலத்தில் நான் மனுஷனிடம் அநேக முறை இரக்கமுள்ளவனாக இருந்தேன், ஆனால் அதை யாரும் மதிக்கவில்லை, பொக்கிஷமாகப் பார்க்கவில்லை. அவர்கள் அதை ஒரு கதையாகக் கேட்டார்கள், அல்லது அதை ஒரு புதினமாகப் படித்தார்கள். என் வார்த்தைகள் உண்மையில் மனுஷனின் இருதயத்தைத் தொடவில்லையா? எனது சொற்கள் உண்மையில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லையா? என் இருப்பை யாரும் நம்பவில்லை என்பதாக இருக்குமா? மனுஷன் தன்னை நேசிப்பதில்லை; அதற்குப் பதிலாக, அவன் என்னைத் தாக்கச் சாத்தானுடன் ஒன்றுபடுகிறான், மேலும் எனக்கு ஊழியம் செய்யச் சாத்தானை ஒரு “சொத்தாகப்” பயன்படுத்துகிறான். நான் சாத்தானின் எல்லா வஞ்சகத் திட்டங்களிலும் ஊடுருவி, பூமியின் ஜனங்கள் சாத்தானின் வஞ்சனைகளை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பேன், அதனால் அதன் இருப்பால் அவர்கள் என்னை எதிர்க்காமல் இருப்பர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 22” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 371

என் பார்வையில், மனுஷனே எல்லாவற்றிற்கும் அதிபதி. நான் அவனுக்குச் சிறிய அளவிலான அதிகாரத்தை வழங்கவில்லை, பூமியிலுள்ள எல்லாவற்றையும் நிர்வகிக்க அனுமதிக்கிறேன்—மலைகள் மீதுள்ள புல், காடுகளில் இருக்கும் மிருகங்கள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன்கள் என எல்லாவற்றையும். ஆயினும்கூட இதன் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பதிலாக, மனுஷன் பதற்றத்தில் மூழ்குகிறான். அவனது முழு ஜீவிதமும் வேதனையாகவும் அவசரமாகவும், வெறுமையுடன் இணைந்த வேடிக்கையாகவும் இருக்கிறது; அவனது முழு ஜீவிதத்திலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகள் எதுவும் இல்லை. இந்த வெற்று ஜீவிதத்திலிருந்து யாராலும் தங்களைத் தாங்களே பிரித்துக் கொள்ள முடியாது, அர்த்தமுள்ள ஜீவிதத்தை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை, உண்மையான ஜீவிதத்தை யாரும் அனுபவித்ததில்லை. இன்றைய ஜனங்கள் அனைவரும் என் பிரகாசிக்கும் வெளிச்சத்தில் ஜீவிக்கிறார்கள் என்றாலும், அவர்களுக்குப் பரலோக ஜீவிதம் பற்றி எதுவும் தெரியவில்லை. நான் மனுஷனிடம் இரக்கமில்லாமல் நடந்து, மனுஷகுலத்தைக் காப்பாற்றாவிட்டால், எல்லா ஜனங்களும் வந்தது வீணாகும், பூமியில் அவர்களின் ஜீவிதம் அர்த்தமற்றதாகும், அவர்கள் பெருமைப்பட ஒன்றுமில்லாமல் வீணாகப் புறப்படுவார்கள். ஒவ்வொரு மதத்தின் ஜனங்களும், சமூகத்தின் ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு பிரிவினரும் பூமியில் உள்ள வெறுமையை அறிவார்கள், அவர்கள் அனைவரும் என்னைத் தேடுகிறார்கள், என் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்—ஆனாலும் நான் வரும்போது என்னை அறிந்து கொள்ளும் திறன் கொண்டவர் யார்? எல்லாவற்றையும் உருவாக்கியது நான், மனுஷகுலத்தைச் சிருஷ்டித்தது நான், இன்று நான் மனுஷர்களிடையே இறங்குகிறேன். இருப்பினும், மனுஷன் என்னைப் பழிவாங்குகிறான். மனுஷன் மீது நான் செய்யும் கிரியையால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லையா? மனுஷனைத் திருப்திப்படுத்த நான் உண்மையில் தகுதியற்றவனா? மனுஷன் என்னை ஏன் நிராகரிக்கிறான்? மனுஷன் ஏன் என்னிடம் அன்பு காட்டாமலும், அலட்சியமாகவும் இருக்கிறான்? பூமி ஏன் சடலங்களால் மூடப்பட்டுள்ளது? இது உண்மையில் நான் மனுஷனுக்காக உருவாக்கிய உலகின் நிலைதானா? மனுஷன் பதிலுக்கு எனக்கு இரண்டு வெற்றுக் கைகளை அளிக்கும்போதும் நான் ஏன் மனுஷனுக்கு ஒப்பிடமுடியாத செல்வத்தைக் கொடுக்கிறேன்? மனுஷன் ஏன் என்னை உண்மையாக நேசிப்பதில்லை? அவன் ஏன் எனக்கு முன்பாக வருவதில்லை? என் வார்த்தைகள் அனைத்தும் உண்மையில் ஒன்றுக்கும் உதவாததா? என் வார்த்தைகள் தண்ணீரிலிருந்து வரும் வெப்பத்தைப் போல மறைந்துவிட்டனவா? என்னுடன் ஒத்துழைக்க மனுஷன் ஏன் விரும்பவில்லை? எனது நாளின் வருகை உண்மையில் மனுஷன் மரிப்பதின் தருணமா? என் ராஜ்யம் உருவாகும் நேரத்தில் என்னால் உண்மையில் மனுஷனை அழிக்க முடியுமா? எனது முழு மேலாண்மைத் திட்டத்தின் போது, எனது நோக்கங்களை யாரும் இதுவரைப் புரிந்து கொள்ளவில்லையா? ஏன், என் வாயிலிருந்து வரும் சொற்களைப் போற்றுவதற்குப் பதிலாக, மனுஷன் அவற்றை வெறுக்கிறான், நிராகரிக்கிறான்? நான் யாரையும் கண்டிக்கவில்லை, ஆனால் எல்லா ஜனங்களும் அமைதிக்குத் திரும்பி, சுயமாகப் பிரதிபலிக்கும் கிரியையைச் செய்ய வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 25” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 372

மனிதன் என் அரவணைப்பை அனுபவித்திருக்கிறான், மனிதன் விசுவாசத்துடன் எனக்குச் சேவை செய்திருக்கிறான், என் சமூகத்தில் எனக்காக எல்லாவற்றையும் செய்து, மனிதன் என் முன் விசுவாசத்துடன் கீழ்ப்படிந்திருக்கிறான். ஆயினும்கூட இது இன்றைய மக்களால் அடைய முடியாதது; பசியுள்ள ஓநாய்களால் பறிக்கப்பட்டதைப் போல அவர்கள் ஆவிகளுக்குள் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய மாட்டார்கள், அவர்கள் உதவியற்றவர்களாக இடைவிடாமல் என்னிடம் கதறிக்கொண்டு என்னைப் பார்க்க மட்டுமே முடியும். ஆனால் முடிவில், அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். மக்கள் என் சமூகத்தின் முன்பாக வாக்குறுதிகளை அளித்ததையும், என் வாஞ்சையை அவர்களின் பாசத்தினால் திருப்பிச் செலுத்துவதாகக் கடந்த காலங்களில் என் சமூகத்தின் முன்பாக வானத்தின் மீதும் பூமியின் மீதும் எப்படி சத்தியம் செய்துகொடுத்தார்கள் என்பதை நான் திரும்பவும் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் சமூகத்தின் முன்பாகத் துக்கத்துடன் அழுதார்கள், அவர்களுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டால் மனம் உடைந்துபோகும், தாங்க முடியாது. அவர்களின் மன உறுதிப்பாடு காரணமாக, நான் அடிக்கடி மக்களுக்கு உதவி செய்வேன். எண்ணற்ற முறை, மக்கள் என் சமூகத்திற்குக் கீழ்ப்படிதலுக்காக வந்திருக்கிறார்கள், அவர்களின் அற்புதமான நடத்தைப் பாங்கு மறக்க முடியாதது. எண்ணற்ற முறைகள், அவர்களது விசுவாசத்தில் தடுமாற்றம் இன்றி அவர்கள் என்னை நேசித்திருக்கிறார்கள், அவர்களின் விசுவாசம் போற்றத்தக்கது. எண்ணற்ற முறைகள், அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் அளவுக்கு என்னை நேசித்திருக்கிறார்கள், அவர்கள் தங்களைவிட அதிகமாக என்னை நேசித்தார்கள், அவர்களின் நேர்மையைப் பார்த்து, நான் அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டேன். எண்ணற்ற முறைகள், அவர்கள் என் சமூகத்தின் முன்பாக தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள், என் பொருட்டு மரணத்தை அலட்சியம் செய்திருக்கிறார்கள், நான் அவர்களின் புருவங்களில் தெரியும் கவலையை எளிதாக்கினேன், அவர்களின் முகத்தோற்றங்களைக் கவனமாகப் பரிசீலித்திருக்கிறேன். நெஞ்சார நேசிக்கும் பொக்கிஷத்தைப் போல நான் அவர்களை நேசித்த எண்ணற்ற நேரங்களும் இருந்துள்ளன, என் சொந்தச் சத்துருவாக நான் அவர்களை வெறுத்த எண்ணற்ற நேரங்களும் இருந்துள்ளன. ஆயினும்கூட, என் மனதில் இருப்பது மனிதன் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டது. மக்கள் சோகமாக இருக்கும்போது, நான் அவர்களை ஆறுதல்படுத்த வருகிறேன், அவர்கள் பலவீனமாக இருக்கும்போது, அவர்களுக்கு ஏதுவாக உதவுவதற்கு வருகிறேன். அவர்கள் தொலைந்து போகும்போது, நான் அவர்களை வழிநடத்துகிறேன். அவர்கள் அழும்போது, நான் அவர்களின் கண்ணீரைத் துடைக்கிறேன். ஆனால் நான் சோகமாக இருக்கும்போது, யார் தங்கள் இதயங்களால் என்னை ஆறுதல்படுத்த முடியும்? நான் மிகுந்த கவலையில் இருக்கும்போது, என் உணர்வுகளில் யார் அக்கறை காட்டுகிறார்கள்? நான் துக்கப்படுகையில், என் இதயத்தில் உள்ள காயங்களை யார் சரிசெய்ய முடியும்? எனக்கு யாராவது தேவைப்படும்போது, என்னுடன் ஒத்துழைக்க முன்வருபவர் யார்? என்மீது மக்கள் கொண்டிருந்த முந்தைய அணுகுமுறை இப்போது தொலைந்துவிட்டது, அது ஒருபோதும் திரும்பி வராதா? அவர்களின் நினைவுகளில் அது எதுவும் ஏன் மிஞ்சாமல் போய்விட்டது? மக்கள் இதையெல்லாம் எப்படி மறந்துபோனார்கள்? இவை அனைத்துக்கும் காரணம் மனிதனை அவனது சத்துரு சீரழித்ததனால்தான் இல்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 27” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 373

தேவன் மனிதகுலத்தைப் படைத்தார், ஆனால் அவர் மனித உலகத்திற்கு வரும்போது, ஜனங்கள் ஏதோ, அவர் உலகம் முழுவதும் அலைந்து திரிகிற சில அனாதைகளைப் போலவும் அல்லது ஒரு நாடு இல்லாத உலக மனுஷனைப் போலவும் அவரை எதிர்த்து, தங்கள் பிரதேசத்திலிருந்து அவரைத் துரத்த முற்படுகிறார்கள். யாரும் தேவனுடன் இணைந்திருப்பதாக உணர்வதில்லை, யாரும் அவரை மெய்யாகவே நேசிப்பதில்லை, அவருடைய வருகையை யாரும் ஒருபோதும் வரவேற்கவில்லை. மாறாக, தேவனுடைய வருகையைப் பார்க்கும்போது, திடீரென்று ஒரு புயல் வருவதைப் போலவும் அல்லது தங்களது குடும்பங்களின் மகிழ்ச்சியை தேவன் எடுத்துவிடுவார் என்பது போலவும், மற்றும் தேவன் ஒருபோதும் மனுஷர்களை ஆசீர்வதித்ததே இல்லை, மாறாக, அவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை மட்டுமே கொண்டு வந்திருக்கிறார் என்பது போலவும், கண் இமைக்கும் நேரத்தில் மேகங்கள் மகிழ்ச்சியான முகங்களை நிழலால் மறைக்கின்றன. எனவே, மனுஷர்களின் மனதில், தேவன் ஒரு வரமாக அல்ல, மாறாக அவர்களை எப்போதும் சபிப்பவராக இருக்கிறார். இதன் காரணமாக, ஜனங்கள் அவருக்குச் செவிசாய்ப்பதில்லை அல்லது அவரை வரவேற்பதில்லை; அவர்கள் எப்பொழுதும் அவரிடத்தில் அக்கறையில்லாதவர்களாய் இருக்கிறார்கள், இது எப்பொழுதும் வழக்கத்தில் இருந்து வருகிறது. மனுஷர்கள் தங்கள் இருதயங்களில் இந்த விஷயங்களைக் கொண்டிருப்பதால், மனிதர்கள் நியாயமற்றவர்கள், ஒழுக்கக்கேடானவர்கள். மனிதர்களிடம் பொருந்தி இருக்க வேண்டும் என்று கருதக்கூடிய உணர்வுகள் கூட அவர்களிடம் அறியப்படவில்லை என்றும் தேவன் கூறுகிறார். மனுஷர்கள் தேவனுடைய உணர்வுகளுக்கு எந்தக் கரிசனையும் காட்டுவதில்லை, மாறாக தேவனுடன் இடைபடுவதற்கு பெயரளவிலான “நீதியைப்” பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறார்கள், இதனால்தான், அவர்களின் மனநிலைகள் மாறியிருக்கவில்லை என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஒரு கையளவு இறகுகளைத் தவிர வேறெந்த பொருளும் அவர்களிடத்தில் இல்லை என்பதை இது காட்டப்போகிறது. மனுஷர்கள் தங்களைத் தாங்களே பொக்கிஷமாகக் கருதாததால், அவர்களை மதிப்பற்ற மோசமானவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் தங்களைக் கூட நேசிப்பதில்லை, மாறாக, தங்களைத் தாங்களே மிதித்துக்கொள்கிறார்கள் என்றால், அப்போது, அது அவர்களின் மதிப்பற்ற தன்மையைக் காட்டுவதில்லையா? மனுக்குலமானது, தன்னுடனே விளையாடி, மற்றவர்களைக் கெடுக்க அவர்களுக்குத் தன்னை மனமுவந்து கொடுக்கிற ஓர் ஒழுக்கக்கேடான ஸ்திரீயைப் போன்றதாகும். அப்படி இருந்தும் ஜனங்கள் தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை இன்னும் கண்டுணர்வதில்லை. அவர்கள் மற்றவர்களுக்காகக் கிரியை செய்வதில் அல்லது மற்றவர்களுடன் பேசுவதில், மற்றவர்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் தங்களை வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்; இது துல்லியமாக மனித இனத்தின் அசுத்தம் இல்லையா? நான் மனுக்குலத்தின் மத்தியில் ஒரு வாழ்க்கையை அனுபவித்திருக்கவில்லை என்றாலும், மனித வாழ்க்கையை மெய்யாகவே அனுபவித்திருக்கவில்லை என்றாலும், மனுஷர்கள் செய்யும் ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு செயலையும், ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு கிரியையையும் பற்றிய மிகத் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறேன். மனுஷர்கள் தங்கள் சொந்த வஞ்சகத்தை வெளிப்படுத்தவோ அல்லது அவர்களின் இச்சைக்கு இடமளிக்கவோ இனி துணியாதபடி, அவர்களுடைய ஆழ்ந்த அவமானத்தை அவர்களுக்கு நான் வெளிப்படுத்தவும் இயலும். தங்கள் ஓடுகளுக்குள் பின்வாங்கும் நத்தைகளைப் போல, அவர்கள் தங்கள் சொந்த அசிங்கமான நிலையை ஒருபோதும் வெளிப்படுத்தத் துணிவதில்லை. மனுஷர்கள் தங்களைத் தாங்களே அறியாத காரணத்தால், தங்களது அசிங்கமான முகபாவனைகளைக் காண்பித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு முன்பாக தங்கள் அழகை அணிவகுத்துச் செல்லச் செய்வதற்கான விருப்பமே, அவர்களின் மிகப்பெரிய குறைபாடாகும். இது தேவன் மிகவும் வெறுக்கும் ஒரு விஷயமாகும். ஏனென்றால், ஜனங்களிடையே உள்ள உறவுகள் அசாதாரணமானவை, மேலும் ஜனங்களுக்கு இடையே இயல்பான தனிப்பட்ட உறவுகள் இல்லை, அவர்களுக்கும் தேவனுக்கும் இடையிலும் கூட இயல்பான உறவுகள் இல்லை. தேவன் அநேகக் காரியங்களைச் சொல்லியிருக்கிறார், அவ்வாறு செய்வதன் மூலம், அவருடைய முக்கிய நோக்கம் ஜனங்களின் இருதயங்களில் ஓர் இடத்தைப் பிடிப்பதாகும், இதனால் அவர்களால் அங்கு குடிகொண்டிருக்கும் அனைத்து விக்கிரகங்களிலிருந்தும் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள முடியும். அதன்பிறகு, தேவனால் முழு மனிதகுலத்தின் மீதும் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும், மேலும், பூமியின் மீதான அவரது இருப்பின் நோக்கத்தை நிறைவேற்றவும் முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகளின் மறைபொருட்களைப் பற்றிய விளக்கங்கள், அத்தியாயம் 14” என்பதிலிருந்து

முந்தைய: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் I

அடுத்த: ஜீவனுக்குள் பிரவேசித்தல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக